English தமிழ் Tamil हिन्दी Hindi Words for Important Food Items -3 (Post No.11695 )

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,695

Date uploaded in London – –  21 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

 THIRD  PART

Knol kohl

Ghand gobi गांठ गोभी

Nool khol நூல்கோல்

Xxxx

Lady’s finger —Hibiscus esculantes

Bhindi, Okra भिण्डी

Vendaik kaay வெண்டைக்காய்

Xxx

 Lemon

Nimbuनींबू

Elumichcham pazam எலுமிச்சம் பழம்

Xxx

Lentil— see dhal பருப்பு

Xxx

Mace

Jaavitri जावित्री

Jaathi badri ஜாதி பத்ரி

Xxxx

 Maize

Makkaa – मक्का

Makkaa cholam மக்காச் சோளம்

Xxxx

 Black night shade. 

Makoi  मकोय

மணத்தக்காளி

Xxx

Mint leaves

Puthinaaपुदीना

pudeena புதினா

Xxx

Mushroom

Kukur  muththaa  कुकुरमुत्ता

fungus, mushroom, fungi

छत्रक

beehive, mushroom, summerhouse

गगन-धूलि

Kaalaan காளான்

 Xxx

Mustard Mustard

Saarcho सरसों  sarason

Kadugu கடுகு

Xxxx

 Nutmeg

Joyfal जायफल

Jaathik kaay ஜாதிக்காய்

 Xxx

onion, allium cepa, allium ceppa

Piyaaj प्याज

Vengaayam வெங்காயம்

xxxx

Orange, mandarin Orange

Naarangi, i नारंगियां

santhraa  संतरा

Aaranju ஆரஞ்சு नारंगी

Xxxx

 Papaya

Papeethaa पपीताकुल: Caricaceae

Pappaali பப்பாளி

Xxxx

Peas

Matar मटर

Pattaaani பட்டாணி

 Xxx

 Pineapple

Anaa naas  अनानास

Annasip pazamஅன்னாசிப்பழம்

Xxx

Plantain flower, stem

Kele kaa pool केले का फूल

Kele kaa thanaa

Vaazaip puu, vaazaith thandu

केले का तना

வாழைப்பூ , வாழைத்தண்டு

Xxx

Pomegranate

Anaar अनार

anaar

Maathulam pazam மாதுளம்பழம்

Xxx

Potato

Aaloo   आलू

Urulaik kizangu உருளைக்கிழங்கு

Xxx

Pumpkin

kaddu कद्दू

Parangik kaay பறங்கிக்காய்

Xxx

Radish

Mooli  मूली

moolee

Mullangi முள்ளங்கி

Xxxx

Ragi

Raagi

Kez varagu

Xxx

Raisin- see grapes

Kismis , sultaanaa

Xxx

Red gram- see Dhal

Xxx

Finger millet, Eleusine coracana

Raagi रागी

Kezvaragu or Kurakkan கேழ்வரகு (இலங்கை வழக்கு: குரக்கன்,

To be continued…………………………….

Tags- Spices, Food items, in Hindi, Tamil

 ‘தீராக் கோபம் போராய் முடியும்’: அம்பலவாணர் எச்சரிக்கை (Post No.11,694)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,694

Date uploaded in London – –  21 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

கோபத்தைப் பற்றி எச்சரிக்காத தமிழ், ஸம்ஸ்க்ருதப் புலவர்கள் எவரும் இல்லை. வியாசர் முதல் பாரதி வரை எச்சரித்துள்ளனர் ; கோபத்தை வென்றால் அபூர்வ சக்திகள் உண்டாகும் என்று புலவர்கள் கூறுகின்றனர்.

இந்த ‘பிளாக்’ blog கில் கோபம் பற்றி நிறைய கட்டுரைகள் உள்ளதால் அவற்றின் லிங்க் links மற்றும் கீழே கொடுத்துள்ளேன். நான் முன்னரே எழுதியது போல நரகத்தின் மூன்று வாசல்களில் ஒன்று கோபம் ; இதை பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். காம, க்ரோதம்/கோபம், லோபம்/பேராசை மூன்றும் நரகத்துக்கு இட்டுச் செல்லும் வாசல்.

பத்திரிக்கைகளில்  Crime News கிரைம் நியூஸ் படிப்பவர்கள், எல்லா குற்றவாளிகளையும் இந்த மூன்று வகையில் பிரித்து விடலாம். அதுவும் குடி போதை அல்லது கஞ்சா போதையில் இருந்தால் கோபம் அவர்களை சிறைக்கு இழுத்துச் செல்லும் என்பது திண்ணம். இதோ பழைய கோபக் கட்டுரைகள்


கோபம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

அதர்வண வேதம் முதல் பாரதி வரை!!(Post No.10,405) … கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் …

ராதே உனக்கு கோபம் ஆகாதடி! அதர்வண வேதம் …

https://tamilandvedas.com › ராத…

·

3 Dec 2021 — அதர்வண வேதம் முதல் பாரதி வரை!!( … கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் …

சினம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

 அதர்வண வேதம் முதல் பாரதி வரை!!(Post No.10,405) … கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் …

கோபம் வந்தால் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

9 Aug 2018 — கோபம் வந்தால் பத்து அடி பின்னே நட! திருக்குறள் கதை!! (Post No.5302) · Written by London swaminathan.

பாரதி | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

·27 Dec 2021 — கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறைய …

4 வகை கோபம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › 4-…

8 Jul 2016 — DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). fight-scenes- …

XXXX

அறப்பளீசுர சதகம் 87. சீற்றத்தின் கொடுமை

கோபமே பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை!

     கோபமே குடிகெ டுக்கும்!

  கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது!

     கோபமே துயர்கொ டுக்கும்!

கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு!

     கோபமே உறவ றுக்கும்!

  கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி!

     கோபமே கருணை போக்கும்!

கோபமே ஈனமாம் கோபமே எவரையும்

     கூடாமல் ஒருவ னாக்கும்!

  கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர

     கக்குழி யினில்தள் ளுமால்!

ஆபத்தெ லாந்தவிர்த் தென்னையாட் கொண்டருளும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆபத்து எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டருளும்

அண்ணலே – இடையூறுகளை யெல்லாம் நீக்கி என்னை

ஏற்றுக்கொண்டருளும் பெரியோனே!, அருமை…..தேவனே!, கோபமே

பாவங்களுக்கு எல்லாம் தாய்தந்தை – சினமே எல்லாப் பாவங்களுக்கும்

அன்னையும் அப்பனும் ஆகும், கோபமே குடிகெடுக்கும் – சினமே குடியைக் கெடுக்கும், கோபமே ஒன்றையும் கூடிவரவொட்டாது – சினமே எதனையும்அடைய விடாது, கோபமே துயர்கொடுக்கும் – சினமே துயரந்தரும்கோபமே  பொல்லாது – சினமே கெட்டது, கோபமே சீர்கேடு – சினமே புகழைக் கெடுப்பது, கோபமே உறவு அறுக்கும் – சினமே உறவைத் தவிர்க்கும், கோபமே பழி செயும் – சினமே பழியை யுண்டாக்கும்கோபமே பகையாளி,– சினமே மாற்றான், கோபமே கருணை போக்கும் – சினமே அருளைக் கெடுக்கும், கோபமே ஈனம் ஆம் – சினமே இழிவாகும், கோபமே எவரையும் கூடாமல் ஒருவன் ஆக்கும் – சினமே ஒருவரையும் சேர்க்காமல் தனியனாக்கும், கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீய நரகக்குழியில் தள்ளும் – சினமே காலன்முன் இழுத்துச்சென்று கொடிய நரகக் குழியிலே வீழ்த்தும்.

     (வி-ரை.) ஆல் : அசை. ‘ஆறுவது சினம்‘ என்றார் ஒளவையார்.

தீராக் கோபம் போராய் முடியும்’ என்றார் நறுந்தொகையார்..

—subham—

Tags– ஆறுவது ,சினம்தீராக் ,கோபம்

நான்கு வித புத்திகள்! நான்கு வித போகங்கள்! (Post No.11,693)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,693

Date uploaded in London –  21 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நான்கு வித புத்திகள்! நான்கு வித போகங்கள்!

ச.நாகராஜன் 

நான்கு வித புத்திகள்

புத்தி நான்கு வகைப்படும்.

1) ஆத்மபுத்தி-சுகா – ஒருவருடைய ஸ்வயமான புத்தி – சந்தோஷத்திற்கானது

2) குருபுத்தி விசேஷ – குருவின் புத்தி – விசேஷமானவற்றிற்காக.

3) பரபுத்தி விநாச – மற்றவர்களின் புத்தி – நாசத்திற்கானது

4) ஸ்தீரி புத்தி – ப்ரளயா – பெண்களின் புத்தி – சர்வ நாசத்திற்கானது.

ஆத்மபுத்தி: சுகாயைவகுருபுத்திர்விசேஷத: |

பரபுத்திர்விநாஷாய ஸ்தீரிபுத்தி: ப்ரளயாவஹா ||

–    சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் 155/94

நான்கு வித ப்ரமாணங்கள்

ப்ரமாணங்கள் – அதாவது ஏற்கக்கூடிய அறிவானது – நான்கு வகைப்படும்.

1) ஸ்மிருதி – வேதத்தின் மூலம் அடையப்படுவது

2) ப்ரத்யக்ஷம் – நேரடியாக அடைவது

3) இதிஹாஸம் – ராமாயண, மஹாபாரத இதிஹாஸத்தினால்

                 பெறப்படுவது

4) அனுமானம் – ஊகத்தினால் பெறப்படுவது

ஸ்மிருதி: ப்ரயத்க்ஷமைதிஹ்ரம் | அனுமானஸ்சதுஷ்டயம் ||

–    தைத்ரீய ஆரண்யகம் I.2.1

நான்கு வித போகங்கள்

போகங்கள் நான்கு வகைப்படும்.

1) ஸ்தூலம் – மொத்தமாக அடையும் சுகம்

2) ப்ரவிபக்த – தனித்து அடைவது

3) ஆனந்தம் – ஆனந்தம்

4) ஆனந்தாவபாஸ: – ஆனந்தத்தின் தோற்றம்

ஸ்தூலஸ்ச ப்ரவிபக்த: | ஆனந்தஸ்சானந்தாவபாஸ: |

சத்வாரோ போகா தேஹஷ: பவந்தி ||

–    தாஸபோதம் 17.9.3 

நான்கு வித பயங்கள்

பயங்கள் நான்கு வகைப்படும்.

1) ஜன்ம பயம் – பிறப்பினால் வருவது

2) ம்ருத்யு பயம் – இறப்பினால் வருவது

3) ஜரா பயம் – வயது முதிர்ந்தவுடன் மூப்பினால் வருவது

4) வியாதி பயம் – நோய்களினால் வருவது

ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-பயம் நைவோபஜாயதே |

–    விஷ்ணு சஹஸ்ர நாமம் – பல ஸ்ருதி

நான்கு வித நண்பர்கள்

நண்பர்கள் நான்கு விதம்.

1) ஔரஸம் – ஒரே பெற்றோர்களிடம் பிறந்தவர்கள்

2) க்ருதசம்பந்தம் – திருமணத்தினால் வருவது

3) வம்ச சம்பந்தம் – வம்சத்தினால் வருவது

4) ரக்ஷக சம்பந்தம் – துயரப்படும் போது ரக்ஷிப்பவரால் வருவது

ஔரஸம் க்ருதசம்பந்தம் ததா வம்சக்ரமாகதம் |

ரக்ஷகம் வ்யஸனேப்யஸ்ச ஞேயம் சதுர்விதம் ||

–    காமந்தகீய நீதி ஸார: IV- 74

முக்தி பெற நான்கு வழிகள்

நான்கு வழிகளில்  முக்தியை அடையலாம்.

1) ப்ரஹ்ம ஞானம் – ப்ரஹ்மனை அறிவதன் மூலமாக முக்தி பெறலாம்.

2) கயா சிரார்த்தம் – கயாவில் சிரார்த்தம் செய்வதன் மூலமாக முக்தி

                    பெறலாம்.

3) கோக்ரஹ மரணம் – கோசாலையில் – பசு தொழுவத்தில் – மரணம்

                      அடைவதன் மூலம் முக்தி பெறலாம்.

4) குருக்ஷேத்ர நிவாஸம் – குருழக்ஷேத்ரத்தில் வசிப்பதன் மூலமாக

                           முக்தி பெறலாம்.

ப்ரஹ்மஞானம் கயாச்ரார்த்தம் கோக்ருஹே மரணம் ததா |

வாஸ: பும்ஸாம் குருக்ஷேத்ரே முக்திரேஷா சதுர்விதா ||

நரகத்திற்குச் செல்ல நான்கு வழிகள்

நரகத்திற்குச் செல்ல நான்கு வழிகள் உண்டு.

1) காமம் – காமம்

2) க்ரோதம் – கோபம்

3) லோபம் – பேராசை

4) தம்பம் – தற்பெருமை

இவையே நரகத்திற்குச் செல்லும் நான்கு வழிகள்.

காமோ லோபஸ்ததா க்ரோதோ தம்பஸ்சத்வார் இத்யமி | 

*** 

tags- நான்கு , புத்திகள், போகங்கள்

English தமிழ் Tamil हिन्दी Hindi Words for Important Food Items -2 (Post No.11,692 )

suran- elephant yam–senaik kizangu

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,692

Date uploaded in London – –  20 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

second part

Cluster beans

ganvaar phalee गँवार फली

Koththavarai கொத்தவரைக் காய்

 Xxx 

Coconut

Naariyal नारियल

Thengaay தேங்காய்

Xxx

Colacasia

Arvi अरबी ,अरवी

Seppang kizangu சேப்பங் கிழங்கு

Xxx

Coriander leaves

Haraa dhaniyaa धनिए के पत्ते, धनिया पत्ती dhanie ke patte

Koththamalli கொத்தமல்லி

Xxxx

Corn flour

Makkaa kaa aattaa मक्के का आटा

Makkaa chola maavu மக்காச்சோள மாவு

Xxx

Cow gram

Lobiaa लोबिया

Kaaraamani காராமணி

Thattai payaru தட்டைப் பயறு

kheera

Xxxx

Cucumber

Kakri ककड़ी, खीरा

Vellari kkaay வெள்ளரிக்காய்

Xxx

Curry leaves

करी पत्ते, karee patte ,

Kari veppilai கருவேப்பிலை

Xxx

Curds

dahee दही Dahi

Thayir தயிர்

Xxx

Custard apple

Sharpaa शरीफा, सीताफल

shareepha சீத்தாப்பழம்

Seethaa pazam

Xxx

Dates

Kanjur खजूर। khajoor.

Pereecham pazam பேரீச்சம் பழம்

Xxxx

Dhal

Dhal दाल

Paruppu பருப்பு

मसूर की दाल, masoor kee daal

Pigeon peas तूर दाल , अरहर की दाल துவரம் பருப்பு தூர் தால்

xxxx

Drum sticks

Saijan ki palli ढोल का छड़ी/ dhol ka chhadee

Sajjan Ki Phalli / Saigan / Shinga / Segva / Sehijjan

ढोल का छड़ी, नगाड़े की डंडी, ढोल की छड़ी

Murungaik kaay முருங்கைக் காய்

 Xxxx

Elephant Yam

Suuran/ Jam gandh सूरन

Senaik kizangu சேனைக்கிழங்கு

Xxx

Fenu Greek

Methi मेंथी ,menthee

Venthayam வெந்தயம்

Xxx

Fennel

Badi somf सौंफ, saumph,

Perunj jeerakam பெருஞ்ஜீரகம்

Xxxx

FigsAnjur अंजीर, anjeer

Aththippazam அத்திப்பழம்

Xxxx

Garlic

Lahsan लहसुन lahasun

Poondu பூண்டு

Xxxx

Gingelly

Til तिल

El எள் 

Xxxx

Ginger

Adahrak, अदरक

Inji  இஞ்சி

Xxxx

Gogu

Gonguraa गोंगुरा

Pulicha keerai கோங்கூரா

Xxx

Gooseberry Phyllanthus emblica ,

Amla/ Aamalaka in Sanskrit आँवला in Hindi

Nellikkaay நெல்லிக் காய்

Xxx

Grapes

Drakshai, Kodimunthiri pazam திராட்சைப் பழம் / கொடிமுந்திரி

Angur अंगूर angoor

Xxx

Green gram-  phaseolus mungo

Moong dhal मूँग

Payaththam paruppu பாசிப்பயறு, பயத்தம் பருப்பு

Or paasip paruppu

Xxxx

 Green Banana

Kachaa/ Haraa kelaa कचा केला , कच्चे केले,

Vaazaik kaay

Xxxx

Ground nut

Moong bali मूंगफली

peanut, peanuts, groundnut, earthnut

Verkkdalai or Nilakkadalai நிலக்கடலை , வேர்க்கடலை

Xxxx

Guava fruit

Amrut अमरूद,amarood

Koyyap pazam, கொய்யாப்பழம்

Xxxx

Honey

Sahad, Madhu शहद, मधु

Then தேன்

Xxxx

Horse gram

Kuthlee, कुलथी की दाल

Kollu கொள்ளு

Xxxx

Jack fruit

Kadhal कटहल

jackfruit, jack-fruit, indian jack tree

पनस,indian jack tree, jackfruit

Palaap pazam பலாப்பழம் ,

Xxxxx

Jaggery

Gud गुड

Vellam வெல்லம்

Xxxx

 Jambu fruit Syzygium cumini

Jaamunजामुन 

Navaappazam, நவாப்பழம்

 Xxxx

Jowar

Jowaaar ज्वार

Solam சோளம்

Xxx 

To be continued…………………………….

tags- food items, in hindi, in tamil, second part

தமிழர்களின் சிறந்த நிர்வாகம்: அம்பலவாணர் தகவல் (Post.11,691)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,691

Date uploaded in London – –  20 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 தமிழர்களின் தலை சிறந்த நிர்வாகத்தை விளக்கும் இரண்டு சொற்கள் எண்பேராயம்ஐம்பெருகுங் குழு ஆகும் . உலகம் முழுதும் பிரதமர் அல்லது ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் வைக்கப்படுபவர் உட்துறை அமைச்சராகும் . பழங்காலத்தில் அவர் பெயர் அமைச்சர் அல்லது தலைமை அமைச்சர்.. அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர் நிதி மந்திரி. அதற்கடுத்த நிலையில் உள்ளவர் பாதுகாப்பு அமைச்சர். அந்தக் காலத்தில் அவர் பெயர் படைத்தலைவர் அல்லது சேனாதிபதி. இவர்கள் அடங்கிய குழு எண்பேராயம் அல்லது ஐபெருங் குழு ஆகும்.

சிவாஜி அமைச்சரவையிலும் , கிருஷ்ண தேவராயர் அமைச்சரவையிலும் இவ்வாறு எட்டு பேர் கொண்ட அஷ்டப் பிரதான், அஷ்ட திக்கஜங்கள்  இருந்தனர் ; அவர்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே விக்ரமாதித்யன் சபையில் நவரத்னங்கள்  ( 9 அறிஞர்கள்) இருந்தனர்.. மஹாபாரத, ராமாயண காலங்களில் அமைச்சர்கள் இருந்ததையும் அவர்கள் அறிவுரை வழங்கியதையும் இதிஹாச புராணங்கள் மூலம் அறிகிறோம்

xxxxxx

ஐம்பெரும் காப்பியங்கள் சொல்லும் எண்பேராயம் ஐம் பெருங்குழு

தமிழர்களின்  ஆலோசனைக் குழு (சிலப்பதிகாரம் மணி மேகலை,  சொல்லும் எண்பேராயம்)

சிலப்பதிகாரம் 26-38

மணி மேகலை 1-17

1.கரணத்தியலாவர்- கணக்கர்

2.கருமக்காரர்- செயலர்

3.கனகச் சுற்றம் – கருவூல ஆதிகாரி

4.கடைக் காப்பாளர்- அரண்மனைக் காவலர்

5.நகர மாந்தர் – முதியோர்

6.படைத்தலைவர் – காலாட்படைத் தளபதி

7.யானைவீரர் – யானைப்படையின் தலைவர்

8.இவுளி மறவர் – குதிரைப்படையின் தலைவர்

Xxx

ஐம்பெரும் காப்பியங்கள் சொல்லும் ஐம்பெருங் குழு

சிலப்பதிகாரம்- 3-126

மணி மேகலை—1-172-684-895-527-148929-4330-190

ஐம்பெருங் குழு

1.மந்திரி/ அமைச்சன்

2.புரோகிதன்

3.தூதன்

4.ஒற்றன்/ சாரணர்

5.சேனாபதி/ படைத் தலைவர்

Xxxxx

இந்தப் பொறுப்பு வகிப்பவர்களின்  முக்கியப்பணிகளை அறப்பளீசுர சதகம் பாடிய அம்பல வாணர் சற்று விரிவாகவே பாடுகிறார்

85. தானாபதி, அமைச்சன், படைத்தலைவன் Defence Minister and Home Minister, Commander in Chief

தன்னரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,

     சாலமேல் வருக ருமமும்

  தானறிந் ததிபுத்தி உத்தியுண் டாயினோன்

     தானாதி பதியா குவான்;

மன்னவர் மனத்தையும், காலதே சத்தையும்,

     வாழ்குடி படைத்தி றமையும்,

  மந்திரா லோசனை யும்எல்லாம் அறிந்தவன்

     வளமான மதிமந் திரி;

துன்னிய படைக்குணம் கரிபரி பரீட்சையே,

     சூழ்பகைவர் புரிசூழ்ச் சியும்,

  தோலாத வெற்றியும் திடமான சித்தியுள

     சூரனே சேனா திபன்

அன்னையினும் நல்லமலை மங்கைபங் காளனே!

     அனகனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அன்னையினும் நல்ல மலைமங்கை பங்காளனே – தாயினும்

நல்லருள் புரியும் மலைமகளை யிடப்பாகத்திற் கொண்டவனே!, அனகனே –

தூயவனே!, தன் அரசன் வலிமையும் பரராசர் எண்ணமும் சால மேல்வரு

கருமமும் தான் அறிந்து – தன் அரசனுடைய ஆற்றலும் மாற்றரசர் நினைவும் நன்றாகப் பின்வரும் அலுவலும் ஆராய்ந்து, அதி புத்தி உத்தி

உண்டாயினோன் தான அதிபதி ஆகுவான் – சிறந்த அறிவும் சூழ்ச்சியும்

பொருந்தியவன் தானைத்தலைவன் எனப்படுவான், மன்னவர் மனத்தையும்,

கால தேசத்தையும், வாழ்குடி படைத் திறமையும், மந்திர ஆலோசனையும்

எல்லாம் – அரசர்களின் கருத்தையும்காலத்தையும், இடத்தையும், வாழ்கின்ற குடிபடைகளின் ஆற்றலையும், ஆராய்ச்சித் திறனையும், அறிந்தவன் வளமான

மதி மந்திரி – தெரிந்தவன் தேர்ச்சிபெற்ற அறிவுடைய அமைச்சனாவான்,

துன்னிய படைக்குணம் – செறிவான படைகளின் இயல்பும், கரி பரி

பரீட்சையே – யானை குதிரைகளின் தேர்ச்சியும்சூழ்பகைவர் புரி சூழ்ச்சியும்

– சூழந்துள்ள மாற்றலர் செய்யும் சூழ்ச்சியும், தோலாத வெற்றியும் –

பின்வாங்காத வெற்றியும், திடமான சித்தி(யும்) உறுதியான சித்தியும்,

உளசூரனே சேனாதிபன் – உடைய வீரனே படைத்தலைவன் ஆவான்.

     (வி-ரை.) துன்னுதல் – நெருங்குதல். ஆகவே செறிவாயிற்று. சித்தி

– நினைத்தது முடித்தல். சூர் – அச்சம். சூரன் – அஞ்சத்தக்கவன் (வீரன்).

xxxxxxxxxxxxxxxxxxxxxxx

86. அரசவைக் கணக்கர் Finance Minister

வரும்ஓலை உத்தரத் தெழுதிவரு பொருளினால்

     வரவிடுப் போன்ம னதையும்,

  மருவிவரு கருமமும் தேசகா லத்தையும்

     வருகர தலாம லகமாய்

விரைவாய் அறிந்தரசர் எண்ணில்எண் ணினையள

     விடஎழு தவாசிக் கவும்

  வெற்றிகொண் டேபெரிய புத்தியுடை யோன்புவி யின்

     மேன்மைரா யசகா ரன்ஆம்;

கருவாய் அறிந்து தொகை யீராறு நொடியினிற்

     கடிதேற் றிடக்கு றைக்கக்

  கடுகையொரு மலையாக மலையையொரு கடுகுமாக்

     காட்டுவோன் கருணீ கன்ஆம்;

அருவாகி உருவாகி ஒளியாகி வெளியாகும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருஆகி உருஆகி ஒளிஆகி வெளிஆகும் அண்ணலே –

அருவமாகவும், உருவமாகவும், ஒளியாகவும், வெளியாகவும் உள்ள

பெரியோனே!, அருமை …. தேவனே!, வரும் ஓலை உத்தரத்து எழுதிவரு

பொருளினால் – வருகின்ற ஓலையின் புறத்திலே எழுதிவிட்ட பொருளைக்

கொண்டு, வரவிடுப்போன் மனதையும் – ஓலையை விட்டவன் உள்ளத்தையும்,

மருவி வரு கருமமும் – அவன் விரும்பிய தொழிலையும்தேச காலத்தையும்

– இடத்தையும் காலத்தையும், வரு கரதல ஆமலகம் ஆய்விரைவாய் அறிந்து

உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனியாக நொடியில் உணர்ந்து, அரசர்

எண்ணில் எண்ணினை அளவு இட எழுத வாசிக்கவும் – அரசருடைய

கருத்தில்உள்ள கருத்தை மதிப்பிடவும் எழுதவும் வாசிக்கவும், வெற்றி கொண்டே

பெரிய புத்தியுடையோன் புவியின் மேன்மை ராயச காரன் ஆம் – தேர்ச்சி

பெற்றுப் பேரறிவு உடையோன் உலகிலே பெருமை பெற்ற அரசாங்க

எழுத்தாளன் ஆவான், தொகை வருவாய் அறிந்து ஈராறு நொடியினில்

கடிது ஏற்றிடக் குறைக்க – ஒரு தொகை  மனத்தில் உணர்ந்து பன்னிரு

விநாடியில் விரைவாகக் கூட்டவும் குறைக்கவும், கடுகை ஒரு மலை ஆக

மலையை ஒரு கடுகும் ஆ(க)க் காட்டுவோன் கருணீகன் ஆம் – கடுகை

மலை போலவும் மலையைக் கடுகுபோலவும் ஆக்கிக் காண்பிக்க வல்லவன் அரசாங்கக் கணக்கன் ஆவான்.

     (வி-ரை.) உத்தரம் – பின். எனவே ஓலையின் புறம். எழுத்தாளரும்

கணக்குப் பார்ப்போரும் கணக்கர் எனவே வழங்கப்படுகின்றனர். ஆமலகம்

– நெல்லி. கரதலாமலகம் என்பது வெளிப்படை என்பதை விளக்கும் உவமச்

சொல். கையில் வைத்திருக்கும் பொருள் தெரிவதைப் போலத் தெளிவித்தல், என்பதே அதனால் விளக்கப்படும் பொருள்.

SATAKAM VERSES ARE TAKEN FROM TAMIL VIRTUAL UNIVERSITY WEBSITE.

XXXX

MY OLD ARTICLE

தமிழர்களின் எண்பேராயம் (Post No.7046)

https://tamilandvedas.com › தமிழ…

2 Oct 2019 — மார்பு, நெஞ்சு, தலை, நாவின் அடிப்பாகம், ,பல், மூக்கு, உதடு, அண்ணம். இதைக் கூறும் …

—-subham—-

Tags– அஷ்டப் பிரதான், அஷ்டதிக்கஜங்கள்,நவரத்னங்கள்,  எண்பேராயம், ஐம்பெருகுங் குழு, ஐம்பெருங் குழு ,சிலப்பதிகாரம், கணக்கர், எழுத்தர், அமைச்சர், தானாதிபதி.

வையாவிக்கோப் பெரும் பேகன்! (Post No.11,690)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,690

Date uploaded in London –  20 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம்  பாடல் 44

வையாவிக்கோப் பெரும் பேகன்!

ச.நாகராஜன்

இன்று நாம் வழங்கி வரும் பழனித் திருத்தலத்தின் பெயர் பழைய காலத்தில் வையாபுரி என்று வழங்கப்பட்டு வந்தது.

அதை பேகன் என்னும் பெரும் வள்ளல் ஆண்டு வந்தான். இவன் வேளிர் தலைவரில் ஒருவனான ஆவியர் குடியில் பிறந்ததனால் வையாவிக்கோப் பெரும் பேகன் என அழைக்கப்பட்டான்,

கடைச் சங்க காலத்தில் இருந்த ஏழு வள்ளல்களில் இவனும் ஒருவன்.

‘ஒரு நாள் பேகன் மலை வழியே சென்று கொண்டிருந்தான்.  அங்கு ஒரு மயில் தன் சிறகை விரித்து ஆடிக் கொண்டிருந்ததைக் கண்டான்.

அது குளிருக்கு ஆற்றாமல் வருந்துவதாக நினைத்த பேகன் தன் மீது போர்த்திக் கொண்டிருந்த போர்வையை எடுத்து அந்த மயில் மீது போர்த்தி மகிழ்ந்தான்.

இந்தக் கொடை மடத்தைக் கண்ட புலவர்கள் அவனைப் போற்றினர்.

கண்ணகி என்ற கற்புடைய மங்கையோடு வாழ்ந்து வந்த போது ஒரு சமயம் பரத்தையர் வலையில் சிக்கி மயங்கி இருந்தான் அவன்.

இதனை அறிந்த கபிலரும் அரிசில் கிழாரும் பெருங்குன்றூர்க் கிழாரும் பேகனைக் கண்டு, ‘நாங்கள் பரிசில் பெற உன்னைப் பாட வரவில்லை. மனதிலே துயர் கொண்டு தனித்து வாழ்கின்ற உனது மனைவியுடன் நீ கூடி வாழ வேண்டும்’  என்றே பாடினோம் என்றனர்.

இதைக் கேட்ட பேகன் மனம் திருந்தி தன் மனைவியோடு வாழத் தொடங்கினான்.

இந்தச் சம்பவம் பெரிதும் பேசப்பட்டது.

இவன் வாழ்ந்து வந்த நாடு வையாபுரி நாடு என்ற பெயரையும் பெற்றது.

“உடா அ போரா ஆகுத லறிந்தும்

படா அ மஞ்ஞைக் கீந்த்த எங்கோ

கடா அ யானைக் கலிமான் பேகன்”  என பரணரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

“மடத்தகை மாமயில் பனிக்கு மென்றருளிப்

படா அ மீத்த கெடாஅ நல்லிசைக்

கடா அ யானைக் கலிமான் பேக!” என்று வன்பரணர் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

“வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்

கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய

அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்

பெருங்கன் னாடன் பேகன்” என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

“முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் – தொல்லை

இரவாம லீந்த இறைவர்போ னீயுங்

கரவாம லீகை கடன்”  என்று இப்படி ஐயனாரிதனார் கூறுவதைப் பார்க்கலாம்.

அருணகிரிநாதர் தனது திருப்புகழில்,

ஆதி யந்தவு லாவா சுபாடிய

   சேரர் கொங்குவை காவூர் நனாடதில்

      ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே”

என்று பாடுவதையும் நாம் காண்கிறோம்.

(பாடல் எண் 170 ‘நாத விந்து கலாதி நமோ நம’ என்று தொடங்கும் பாடல்)

 இப்படிப்பட்ட பழம் பெருமையைக் கொண்ட திருத்தலமான பழனிக்கு மிக அருகில் ஆய்க்குடி என்னும் ஊர் இருக்கிறது.

(தென்காசி அருகேயும் ஆய்க்குடி என்ற பெயரில் பிரசித்தமான ஒரு ஊர் இருக்கிறது)

 இது பல ஊர்களைத் தன்னுள் அடக்கியுள்ள ஒரு ஜமீனின் தலைநகரம்.

ஜமீந்தார் வேட ஜாதி, ஆய் எயினன் என பாணர் முதலியோர் அகநானூற்றில் கூறும் ஆய்க்கும், இந்த ஆய்க்குடிக்கும் அதை ஆள்வோருக்கும் ஏதேனும் பொருத்தம் இருக்குமோ என அறிஞர்கள் ஐயம் எழுப்புகின்றனர்.

 இப்படிப்பட்ட வையாவிக்கோப் பெரும் பேகன் வாழும் மண்டலம் கொங்கு மண்டலமே தான் என கொங்குமண்டல சதகம் தனது 44ஆம் பாடலில் புகழ்ந்து கூறுகிறது.

 பாடல் இதோ:

 கையாரக் கான மயிலுக் கிரங்கிக் கலிங்கமருள்

செய்யாண் டகைகரு ணைக்குவைப் பாகத் திகழ்தருமவ்

வையாவிக் கோப்பெரும் பேக னெனும்பெரு வள்ளறங்கு

வையா புரியெனுங் கோநக ருங்கொங்கு மண்டலமே   

 இப்பாடலின் பொருள் :

 காட்டில் ஆடிக் கொண்டிருக்கும் மயில், குளிருக்கு ஆற்றாமல் நடுங்குகிறது என்று நினைத்து, தான் மேலே போர்த்திருந்த உயர்ந்த ஆடையை அதன் மேல் சார்த்திய, வையாவிக்கோப் பெரும் பேகன் வசிக்கும் வையாவிபுரி என்னும் ஊரும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்த ஊரே தான் என்பதாம்.

 வாழ்க பேகன் புகழ்!

***

Tags- பேகன், கொங்குமண்டல சதகம்  , வையாவி

More English Books from London Swaminathan (Post No.11,689)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,689

Date uploaded in London – –  19 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Please read the books and support the author.

1000 Hindu Quotations for Speakers and Students (book title)

Contents

1.Gandhiji on Hinduism

2. Beautiful Quotations of Sri Ramakrishna Paramahamsa

3.Beautiful Quotations from Philosopher Dr Radhakrishnan

4.Quotations on Religion and Philosophy from DR S Radhakrishnan’sBooks

5.What is Religion? What is Philosophy?  Dr S. Radhakrishnan explains

6.Is Hinduism a Museum of Beliefs, Medley of Rites, Name Without any Content?

7.Upanishad Quotes in Good Thoughts Calendar April 2014 

8.Forty Important Quotations from the Atharva Veda!

9.More Gems from the Atharva Veda

10.Good Thoughts on Character

11.Great Men Think Alike about Rebirth

12.Great Men Think Alike about Wealth

13.Hindu Quotations on Food

14.Hindu Thinker on Marxism, Jesus and Advaita

15.One Hundred Quotations on God!

16.God forgives sins, otherwise heaven would be empty!

17.One Hundred Quotations on Love, Affection and Kindness—Part 1

18.One Hundred Quotations on Love, Affection and Kindness—Part 2

19.Quotations from Rig Veda- Fourth Mandala

20.Quotations on Fame and Honour

21.More Quotations on Love

22.An Ounce of Mother is worth a Ton of Priest!

23.Quotes on Time

24.More Beautiful Quotations from Mahatma Gandhi

25.Beautiful Quotes on Omkara (Aum)

26.Good Quotations on Wife!

27.Beautiful Quotations from Kalhana’s Rajatarangini

28.Quotes on Pride and Self Respect

29.Quotes on Purity

30.Swami Chinmayananda Quotations

31.Golden Sayings from Kautilya’s Artha Shastra

32.More Quotations from Poet Kalhana

33.Quotations from Tirukkural of Tiruvalluvar

34.Fortune, Fate, Fear, Fatality- Valluvar and Kalhana Agree!

35. Quotations from Tamil Epic Silappadikaram

**************

Beautiful Hindu Women and

Wonderful Weddings (book title)

Contents

1.HUSBAND IS ELEVENTH CHILD! – SAYS RIG VEDA

2.MARRIAGE CEREMONY MANTRA IN RIG VEDA

3.A Wife is a Gift from the Gods- Manu Smrti

4.A WIFE IS HALF THE MAN: STATUS OF WOMEN IN HINDUISM

5.RIG VEDIC WEDDING SCENE IN TURKEY

6.Three Beautiful Tamil Hindu Weddings

7.Kannaki and Andal Weddings

8.Kannaki praised Seven Tamil Women before Burning Madurai City

9.Beautiful Names of Ancient Kashmiri Women!

10.Beautiful Commentary on Five Day Brahmin Wedding! in 1903!!

11.Five Day Hindu Marriage- Part 1

12.FIVE DAY HINDU MARRIAGE – PART 2

13.FIVE DAY HINDU WEDDING- Part 3

14.FIVE DAY HINDU MARRIAGE- PART 4

15.Most Intelligent Woman in the Ancient World

16.TWO TYPES OF VEDIC WOMEN

17.GREAT WOMAN SCHOLAR AVANTI SUNDARI

18.Eastern and Western View of Women

19.GREAT HINDU HEROINES PADMINI & RANI SAMYUKTA

20.LET US ENTER FIRE BEFORE MUSLIMS TOUCH US- HEROIC SPEECH BY RANI BHAI

21.CHANAKYA ON WOMEN’S MIGHTY POWER!!!

22.UGLY GIRL IS OK- CHANAKYA

23.WOMAN AND YOGI- CHANAKYA

24.Definition of a Woman by a Tamil Poet!

25.Gems of Women: Varahamihirar’s Definition

26.Stri Rajya- Kingdom of Women in India!

27.Wonderful Syllabus for Women!

28.Hindu Women’s Education 2700 Years Ago!

29.Fifty-one Interesting Hindu Couples;

Four Types of Women

30.Sita’s Famous Quotes: I would Follow Eleven Women

****************

Amazing and Unknown Names of Hindu Gods,

Himalaya, Water and Sea!!! (book title)

Contents

1.Thirty four Names of Agni, Fire God!

2.Fire Simile: from Rig Veda to Ramayana!

3.Science behind Hindu God Brahma!

4.Twenty nine  Names of Brahma!

5.‘KA’ is Brahma – Interesting Info. from Panini and Kautilya

6.Seventeen Names of Kubera in Amarakosa

7.Lamps in Tamil and Sanskrit Literature

8.Confusion over Date of Buddha: Why did they ‘Kill him 20 times’?

9.Mirror Images in Hindu Literature

10.Hindu God with 1000 Heads

11.Hindus Worship Ten Directions!

12.Aristophanes, Vashistha and the Frog Song in the Rig Veda

13.Amazing Encyclopaedia Brhat Samhita!

14.Comets: Shakespeare also believed Hindu Views

15.Hindu Dhruva in Shakespeare!

16.Hindu Beliefs in Shakespeare: Moon, Eclipse, Ghosts

17.Story of Vedic Sunahsepha in Greece as Cynosure!

18.Thuban is Wrong, Dhruva is Right!

19.Nature’s Orchestra in the Forest: Sanskrit Tamil Poets’ Chorus

20.Tamils Knew River Ganga but not Sindhu!

21.Himalayas in the Rig Veda and Tamil Sangam Literature -1

22.Himalayas in the Rig Veda and Tamil Sangam Literature -2

23.Himalayas in the Rig Veda and Tamil Sangam Literature -3

24.Sea in Brahmin’s’ Daily Prayer!

25.Seventy Words for Water in Sanskrit!

26.Swami Vivekananda on Omkara!

27.Pilgrim’s Lodge – The Inns of Old Tamil Nadu

28.Tamil’s Cruel Cock Fight!

29.Story behind Kammavar Naicker Proverb!

30.Interesting Information about Indian Washerman (Dhoby)

31.No Toilet, No Electric Light 150 year ago! What did they do?

*********************

 Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—Tags- My english books, london swaminathan

Tamil Hindu Encyclopaedia- 47; Tamil Phantoms, Spectres, Apparitions தமிழ் பூதம் , பிசாசு (11,688)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,688

Date uploaded in London – –  19 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Let us continue with Tamil Ghosts, Spectres, Apparitions, Devils and Evil spirits:

Bhutam, Pisasam are Sanskrit words. We see Brahma Rakshas (Brahmin ghosts), Yakshas and Yakshis in Sanskrit literature.

Any brahmin who commits sins, or who is killed untimely becomes a Brahmin ghost according to Hindu scriptures. We don’t see any caste based ghosts in Sangam Tamil literature.

Ancient Tamils used Kazuthu, Kooli for different types of evil spirits and ghosts. We find Ghoul in Arabic. I don’t know who borrowed this word from whom.

ghoul (Arabic: غول, ghūl) is a demon-like being or monstrous humanoid. The concept originated in pre-Islamic Arabian religion,[1] associated with graveyards and the consumption of human flesh. Modern fiction often uses the term to label a certain kind of monster.- says Wikipedia.

xxx

Mangudi Marunthanaar and Maamulanaar described the ghosts in their verses. They are of different sizes; short and tall. They are under  the control of Kotravai, Tamil word for Goddess Durga. The ghosts even play with their boss Durga.  They are educated ones and they use riddles and puzzles to make goddess happy. It is told by Kalittokai and Perumpaanaatruppadai. We see a learned Yaksha in Yaksha Prasna of Mahabharata where he puts 123 questions to Yuthisthira.

Tamils believed that there are male ghosts and female ghosts. In Kalittokai an old  Brahmin, threatens a girl saying  that he is a male ghost.

Two names are very familiar to Tamils, one is Karaikkaal Ammaiyar (Madam Karaikkal). She belongs to Chettiyar community. When her husband saw her doing miracles, he divorced her saying she was a divine woman. She assumed ghostly appearance and called herself Peyaar meaning Miss Ghost. Her real  name was Punithavathy, a Sanskrit name.

Another female ghost was notorious one called Neeli. She took revenge on 70 people and all were dead. Her name became proverbial in Tamil. In Sanskrit also we see both male and female ghosts.

xxxx

Perunchoru = Big Feast in Sangam Literature

Uthiyan Cheralathan arranged a Big Feast in memory of the departed souls where the ghosts enjoyed the feast according to Mamulanar. This word Perunchoru= Big feast is misinterpreted by many Tamil “Scholars”. They misinterpreted it as Chera king offered food to both Kauravas and Pandavas during Mahabharata war. Actually, this is a feast arranged to satisfy the departed souls. Saivites arrange Guru Puja feast for all the departed Saivite saints even today. When it is arranged for War Dead it is called Perunchoru= Big feast. At that time even the spirits and ghosts enjoy the blood smeared rice balls thrown into sky.

In my Madurai town in Tamil Nadu, they offer such blood smeared rice balls and meat to goddess Chellaththamman. On that day the city council will switch off all the street lights in that area (my area where I lived) and volunteers will guard the streets so that no one approach that temple. And in the next morning one can see the blood and rice. Such rites are called Perun Choru.

xxx

Here are the Tamil references from Sangam Tamil literature:

(From சங்கத் தமிழரின் வழிபாடுகளும் சடங்குகளும் , மு.சண்முகம் பிள்ளை)

பானாள்‌ கொண்ட கங்குல்‌ இடையது

பேயும்‌ அணங்கும்‌ உருவு கொண்டு, ஆய்கோல்‌

கூற்றக்  கொல்தேர்‌, கழுதொடு கொட்ப”

(மதுரை. 631-533) Madurai Kaanchi

Here we see Pey, Anaangu, Kazuthu

Most famous Tamil commentator Nachchinaarkiniyar commented that there are different types of ghosts with different shapes and different activities; They are not visible in day time. They act during midnight.

Xxxxx

Here Maamuulanaar describes the great Feast offered by the Chera king Uthiyan Cheral

‘துறக்சம்‌ எய்திய தொய்யா நல்‌இசை

முதியர்ப்‌ பேணிய, உதியஞ்‌ சேரல்‌

பெருஞ்சோறு கொடுத்த ஞான் றை , இரும்பல்

கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு

குறியவும்‌ நெடியவும்‌ குன்று தலை மணந்த ்‌

சுரன்  (௮௧.233:7-12) Akam 233

Xxxx

துணங்கை அம்‌ செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு

(பெரும்‌. 459) perum. line 459

பெருங்காட்டுக்‌ கொற்றிக்குப்‌ பேய்‌ நொடித்தாங்கு

(கலி.89:8) kali. verse 89

Two Sangam poets described the games that ghosts played with Durga. They used riddles in the games.

Xxxx

An old brahmin threatening a girl posing himself as a male ghost:

கைப்படுக்கப்‌ பட்டாய்‌, சிறுமி! நீ: – மற்றுயான்‌

ஏனைப்‌ பிசாசு ; அருள்‌: என்னை நலிதரின்‌

இவ்‌ ஊர்ப்‌ பலி நீபெறாமல்‌ கொள்வேன்‌” (கலி. 65:16-18)kali. Berse 65

To be continued…………………………………………..

Tags- Tamil ghosts, Ghoul, Perunchoru, Big feast, departed souls

English தமிழ் Tamil हिन्दी Hindi Words for Important Food Items -1 (Post No.11,687)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,687

Date uploaded in London – –  19 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I have compiled a three language mini dictionary for over 100 food items and vegetables. There may be different names in different localities for them. Please add them in the comment columns so that it will be useful to others. For some items, I have given the botanical names.

I will give the same in Telugu, Malayalam, and Kannada later.

xxxx

First Part

Agathi Sesbania grandiflora

Agassi अगस्ति 

Akaththi அகத்தி

Xxxx

Almonds Prunus amygdalussyn. Prunus dulcis

Badaam बादाम

Baadaam paruppu பாதாம் பருப்பு , வாதுமை பருப்பு 

Xxx

Amaranth leaves / Spinach ( lot of varieties are in this category)

Solai- Hindi Amaranthus cruentus, Chaulai  Hindi

Mulaikkeerai முளைக்கீரை (Amaranthus viridis)

அறைக்கீரை Amaranthus dubius, पालक பசளி

Xxx

Amaranth stem

Solai ki Randal- Hindi

Keeraith thandu கீரைத்தண்டு

Xxx

Arrowroot –Maranta arundinacea,

Aroroot आरारूट

Kuuvakkizangu கூவக் கிழங்கு ; அரரூட்டு மாவு

Xxxx

Asafoetida

Hing  (हींग)

Perungkaayam பெருங்காயம்

Xxxx

Ash gourd

Petha  पेठा

Kalyana poosanikkay கல்யாணப்பூசணி

Xxxx

Bajra

Baajraa बाजरा கம்பு

Kambu  கம்பு

Xxxx

Banana red

Laal kela लाल केळ

Sevvaazaip Pazam செவ்வாழை

Xxxx

Barley (Hordeum vulgare),

Jav जौ ஜவ்

Barli பார்லி

Xxx

Basil Ocimum basilicum

Tulsi துள்சி Hindi

Thulasi துளசி

Xxx

Bay leaves Bay laurel leaves (Laurus nobilis)

Tej paat तेज पत्ता

Punnai Ilai புன்னை இலை

Xxx

Broad beans(Vicia faba)

Sem சேம்-Hindi

Avarai தட்டை மொச்சை/ அவரை வகை

xxxx

Beet root

Sukantharचुकंदर

Beet roo tபீட் ரூட்

Xxxx

Bengal gram

Sane ki dhal or chana dhalचना

Kadalaip paruppu கடலைப் பருப்பு

Xxx

Bitter gourd- Momordica charantia

Karela करेला 

Paakar kaay பாகற்காய்

Xxxx

Black gram Vigna mungo

Urad dhal उरद या उड़द 

Ulunthu உளுந்து

Xxx

Black pepper Piper nigrum

Kaali mirch काली मिर्च 

Milagu மிளகு

Xxxx

Ber Ziziphus mauritiana)

Ber बेर  ,badri

Ilanthai pazam இலந்தைப்  பழம்

Xxx

Brinjal, Egg plant, Aubergine Solanum melongena

Baingan बैगन 

Kaththarikkaay கத்தரிக்காய்

Xxxx

Butter milk

Mattaa मट्ठाछाछमक्खनिया दूध,

Mor மோர்

Xxx

Cabbage

Bandh gobi पत्तागोभी, करमकल्ला

Muttaik kosu முட்டைக் கோசு

Xxx

Calabash cucumber Lagenaria siceraria , Bottle gourd

Lavukki, Kaddu लौकीकुम्हड़ा या कद्दू

Suraikkaay

Xxx

Cauliflower

Pool gobi फूलगोभी, फूलदार गोभी

Kaali pilavar காலி பிளவர்

Xxxx

Capsicum

Pahaadi mirch शिमला मिर्च, पहाड़ीमिर्च 

Koda milakaay கொட/ குடை  மிளகாய்

Xxx

Cardamom

Ilaachi इलायची 

Elam ஏலம்

Xxxx

Carrot

Kaajar गाजर 

Kaarat காரட்

Xxxx

Cashew nut Anacardium occidentale

Kaaju काजू

Munthirip paruppu முந்திரிப் பருப்பு

Xxx

Chilli

Mirch ,मिर्च

Milakaay மிளகாய்

Xx x

Chow Chow

Vilaathi baingan, चाउ चाउ

Seemai kaththarikkaay சீமைக் கத்தரிக்காய், செள  செள

Xxx

Cloves

Lavang लौंग

Kiraampu கிராம்பு

Xxxto be continued…………………………..

Tags- Food Items, Vegetables, in Hindi, in Tamil, in English, Part 1

நான்கு ஜாதிகளின் குணங்கள் பற்றி அம்பலவாணர் (Post No.11,686)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,686

Date uploaded in London – –  19 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பிராமணர், அரசர் , வணிகர், வேளாளர் ஆகிய நான்கு ஜாதிகளையும் புகழ்ந்து எழுதிய 4 பாடல்கள் இவை.

உடனே நமக்கு விவேக சிந்தாமணி பாடலும், திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முது மொழியும் நினைவுக்கு வரும். அதுமட்டுமல்ல உழவரின் பெருமையை திருவள்ளுவர் போற்றியது போல எவரும் போற்றியதில்லை.அந்தக் குறள்களும் வேளாளர் பெருமையை பறை சாற்றும் .

கீழ்கண்ட பாக்களை 4 ஜாதிகளின் குணங்களுடன் ஒப்பிடலாம்.

அந்தணர் அறம் மாறினால்..

இந்திரன் பதங்கள் குன்றும் இறையவர் பதங்கள் மாறும்,

மந்திர நிலைகள் பேரும் மறுகயல் வறுமை யாகும்,

 சந்திரன் கதிரோன் சாயும் தரணியிற் றேவு மாளும்,

அந்தணர் கருமம் குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில்.

—-விவேக சிந்தாமணி

அந்தணர்கள் செய்கின்ற இறைவழிபாடுகள், யாகங்கள் குறைந்து போனால் இந்திராதி தேவர்களின் அருள் குறைந்துபோகும், அரசனின் நல்லாட்சி மாறும், மந்திரங்களின் சக்தி குறையும், நாட்டில் வறுமையும் தீமையும் உண்டாகும், சந்திரனின் சூரியனின் இயல்பு நிலை மாறி கெடுதி உண்டாகும். இவ்வாறு நிகழ்ந்தால் மண்ணில் யார் தான் வாழ முடியும்?-  —-விவேக சிந்தாமணி

வள்ளுவனும் சொல்லுவான்

மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் (134)

ஐயா, இந்த ஐயர்கள் வேதத்தை மறந்தால் கூடப் போனால் போகட்டும் என்று விட்டு விடலாம். காரணம்—திருப்பியும் படித்து மனப்பாடம் செய்து விடலாம். ஆனால் அவர்கள் பிறந்த காலத்திலேயே அவர்களிடம் சில ஒழுக்கங்கள் எதிர் பார்க்கபடுகின்றன. அது ஒரு முறை கெட்டுவிட்டாலும் ஆபத்து என்கிறார் வள்ளுவர்.

XXXX

க்ஷத்ரியர்கள்

திரு வள்ளுவரும் அரசர்களின் சிறப்பைச் சொல்லுகையில்  யதா ராஜா ததா  ப்ரஜா –என்ற கருத்தைக் குறைந்தது இரண்டு குறள்களிலாவது  வைத்து விடுகிறார் :–

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு- திருக்குறள் 544

பொருள்

குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு.

XX

இன்னொரு குறளில் (542)

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி.–542

பொருள்

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

XXXX

வணிகர் சிறப்பு

வணிகர் சிறப்பு பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதில் வந்து விடுகிறது ; சங்க இலக்கியம் முழுதும் பொருள் தேடிச் செல்லும் காதலர்கள், கார் காலத்துக்கு முன்னர் வந்து சேர வேண்டுமே என்ற கவலையைக் காட்டுகிறது.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முது மொழி, வணிகர்களுக்காகவே  சொல்லப்பட்டுள்ளது

XXX

விவசாயிகள் வாழ்க

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்—குறள் 1033

பொருள்

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா

தெழுவாரை எல்லாம் பொறுத்து—குறள் 1032:

உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

இதைவிட அருமையாகச் சொல்ல முடியாது உழவர்கள்தான் உலகத்திற்கே அச்சாணி

Xxxx

தமிழ் இணைய பல்கலைக்கழகத்திலிருந்து (Tamil VU)  கிடைத்த 4 பாடல்கள் இதோ :-

        81. மறையோர் சிறப்பு

ஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதி

     ஒன்றுதப் பாது புரிவார்;

  உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்

     ஒருமூன்றி னுக்கும் மறவா

தாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்

     அதிதிபூ சைகள்பண் ணுவார்;

  யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்

     இன்றியே செய்து வருவார்;

பேராசை கொண்டிடார்; வைதிகநன் மார்க்கமே

     பிழையா திருக்கும் மறையோர்

  பெய்யெனப் பெய்யும்மு கில்;அவர்மகி மையெவர்களும்

     பேசுதற் கரித ரிதுகாண்!

ஆரார் நெடுஞ்சடில அமலனே! எனையாளும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆர் ஆர் நெடுஞ் சடில அமலனே – ஆத்திமாலை தரித்த

நீண்ட சடையை உடைய தூயவனே!, எனை ஆளும் அண்ணலே – என்னைக்

காக்கும் பெரியோனே!, அருமை …… தேவனே!, வைதிக நல்மார்க்கமே

பிழையாது இருக்கும் மறையோர் – மறைநெறியாகிய நல்ல வழியிலே தவறாது

செல்லும் மறையவர்கள், ஓர் ஆறு தொழிலையும் கைவிடார் – (தமக்கு உரிய)

ஆறு தொழில்களையும் விடமாட்டார், சௌசவிதி ஒன்று தப்பாது புரிவார் –

தூய்மை விதிகளை ஒன்றேனும் விடாமற் செய்வார், உதய ஆதியில் சென்று

நீர் படிகுவார் – வைகறையிலே போய் நீராடுவார், காலம் ஒரு மூன்றினுக்கும்

மறவாதுஆராய்ந்து காயத்திரியது செபிப்பார் – முக்காலத்தினும் மறவாமல் காயத்திரி மந்திரத்தைத் தெரிந்து ஓதுவார்நாளும் அதிதி பூசைகள் பண்ணுவார் –

எப்போதும் விருந்தினரை ஓம்புவார், யாகாதி கருமங்கள் மந்திர

கிரியாலோபம் இன்றியே செய்துவருவார் – வேள்வி முதலிய தொழில்களை மந்திரமும் செயலும் குறைவு இல்லாமற் செய்துவருவார், பேராசை

கொண்டிடார் – பேராசை கொள்ளமாட்டார், பெய்யென முகில் பெய்யும் –

(இவர்கள்) பெய் என்று கூறியவுடன் மழை பெய்யும், அவர் மகிமை

எவர்களும் பேசுதற்கு அரிது, அரிது – அவருடைய மேன்மை யாவராலும்

கூற இயலாதது! இயலாதது!

     (வி-ரை.) காண் : முன்னிலை அசைச்சொல். ஆறு தொழில் : ஓதல்,

ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல். (வேட்டல் – வேள்வி

செய்தல். வேட்பித்தல் – வேள்வி செய்வித்தல்.) உதயம் – கதிரவன்

தோன்றும் காலம். உதயாதி என்பது அதற்கும் முற்காலம். ஆகவே,

வைகறை. வைதிகம் வேத சம்பந்தமானது (தத்திதாந்த நாமம்.)

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

          82. அரசர் சிறப்பு

மனுநீதி முறைமையும், பரராசர் கொண்டாட

     வரும்அதிக ரணவீ ரமும்,

  வாள் விசய மொடுசரச சாதன விசேடமும்,

     வாசிமத கரியேற் றமும்,

கனமாம் அமைச்சரும், பலமான துர்க்கமும்,

     கைகண்ட போர்ப்ப டைஞரும்,

  கசரத பதாதியும், துரகப்ர வாகமும்

     கால தேசங்க ளெவையும்

இனிதாய் அறிந்ததா னாபதிக ளொடுசமர்க்

     கிளையாத தளகர்த் தரும்,

  என்றும்வற் றாததன தானிய சமுத்திரமும்,

     ஏற்றம்உள குடிவர்க் கமும்,

அனைவோரும் மெச்ச இங்கிவையெலாம் உடையபேர்

     அரசராம்! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருமை ……. தேவனே!, மனுநீதி முறைமையும் – மனுவினால்

ஏற்படுத்தப்பெற்ற அரசநெறி ஒழுங்கும், பரராசர் கொண்டாட வரும் அதிக

ரணவீரமும் – மற்ற மன்னர்கள் புகழுமாறு காணப்படும் சிறந்த போர்

வீரமும், வாள் விசயமொடு சரசசர் தனவிசேடமும் – வாள்கொண்டு

வெற்றிபெறுவதுடன் இனிய முறையிலே தொழிலை முடித்துக்கொள்ளும்

சிறப்பும், வாசி மதகரி ஏற்றமும் – குதிரை யேற்றம் யானையேற்றங்களில்

பயிற்சியும், கனம்ஆம் அமைச்சரும் – பெருமை மிக்க மந்திரிகளும், பலமான

துர்க்கமும் – உறுதியான அரணும், கைகண்ட போர்ப்படைஞரும் – பயிற்சி

பெற்ற போர் வீரரும், கசரத பதாதியும் – யானை தேர் காலாட்களும்,

துரகப்ரவாகமும் – குதிரை வெள்ளமும், காலதேசங்கள் எவையும் இனிதாய்

அறிந்த தானாபதிகளோடு – காலம் இடம் முதலானவற்றையெல்லாம் நன்றாக

உணர்ந்த தானத் தலைவருடனே, சமர்க்கு இளையாத தளகர்த்தரும் –

போர்க்குப் பின்னடையாத படைத்தலைவரும், என்றும் வற்றாத தனதானிய

சமுத்திரமும் – எப்போதும் குறையாத பொன்னும் தானியமும் ஆகிய

பெருக்கும், ஏற்றம் உளகுடிவர்க்கமும் – (வெளிநாட்டில் இருந்தும்) வந்து

சேரும் இயல்புடைய பலவகைக் குடிகளும், இங்கு இவையெலாம்

அனைவோரும் மெச்ச உடைய பேர் அரசர் ஆம் – இங்குக் கூறப்பட்ட

இவற்றையெல்லாம் யாவரும் புகழப் பெற்றவர்களே அரசராவர்.

     (வி-ரை.) இரணம் – புண். புண்படும் வீரம் போர்க்கள வீரம்

வாள்விசயம் – போரில் வெற்றிபெறுதல் (தண்டம்) சரச சாதனம் – சாமபேத

தானங்கள். எனவே நால்வகைச் சூழ்ச்சிகளாயின. அரண் : மதில், நீர், காடு,

மலை என்னும் நால்வகை அரண்கள். ஏற்றம் : மேன்மை யென்பதைவிடக்

(குடி) யேற்றத்தைக் குறிப்பதே சிறப்பாகும்.

XXXXXXXXXXXXXXXXXXXXX

 83. வணிகர் சிறப்பு

நீள்கடல் கடந்திடுவர்; மலையாள மும்போவர்!

     நெடிதுதூ ரந்தி ரிந்தும்

  நினைவுதடு மாறார்கள்; சலியார்கள்; பொருள்தேடி

     நீள்நிலத் தரசு புரியும்

வாளுழவ ரைத்தமது கைவசம் செய்வார்கள்;

     வருமிடம் வராத இடமும்

  மனத்தையும் அறிந்துதவி ஒன்றுநூ றாயிட

     வளர்ப்பர்;வரு தொலைதொ லைக்கும்

ஆள்விடுவர்;மலிவுகுறை வதுவிசா ரித்திடுவர்

     அளவில்பற் பலச ரக்கும்

  அமைவுறக் கொள்வர்;விற் பார்கணக் கதிலணுவும்

     அறவிடார்; செலவு வரிலோ

ஆளியொத் தேமலையின் அளவும் கொடுத்திடுவர்

     அருள் வைசியர்! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருமை …….. தேவனே!, அருள் வைசியர் – அருளுடைய

மனத்தவரான வணிகர், நீள் கடல் கடந்திடுவர் – (வணிகத்திற்கு)ப்

பெருங்கடலையும் கடந்து செல்வர், மலையாளமும் போவர் –

மலைநாடுகளையும் சுற்றுவர், நெடிது தூரம் திரிந்தும் நினைவு தடுமாறார்கள்

– நீண்ட தொலைவு அலைந்தாலும் எண்ணத்திலே கலக்கம் அடையார்,

சலியார்கள் – சோர்வு அடையார், பொருள்தேடி நீள் நிலத்து அரவுபுரியும்

வாள் உழவரைத் தமது கைவசம் செய்வார்கள் – பொருளையீட்டி

வைத்துக்கொண்டு பெரிய நாட்டை ஆளும் வாளேந்திய அரசர்களைத் தம்கையிற் போட்டுக்கொள்வார்கள், வரும் இடம் (உம்) வராத இடமும்

மனத்தையும் அறிந்து உதவி – (பொருள்) வரும் இடத்தையும் வராத

இடத்தையும் (பொருள்வாங்குவோர்) உள்ளத்தையும் தெரிந்து (பொருள்)

கொடுத்து, ஒன்றுநூறா ஆயிட வளர்ப்பார் – ஒரு பொருள் நூறாக வளரும்படி யீட்டுவர்,

வரு தொலை தொலைக்கும் ஆள்விடுவர் – (பொருள்) வரக்கூடிய நீண்ட

தொலைவுக்கும் ஆளைச் செலுத்துவர், மலிவு குறைவது விசாரித்திடுவர் –

(பொருள்) மிகுதியையும் குறைவையும் கேட்டறிவர், அளவு இல் பற்பல

சரக்கும் அமைவுறக்கொள்வர் – எல்லை அற்ற பலவகையான

பொருள்களையும் பொருத்தம் அறிந்து வாங்குவர், விற்பார் – விற்பார்கள்,

கணக்கதில் அணுவும் அற விடார் – கணக்கினில் இம்மியும் பிசக விட

மாட்டார்கள், செலவு வரிலோ ஆளி யொத்தே மலையின் அளவும்

கொடுத்திடுவர் – (ஒழுங்கான) செலவு வந்தாலோ சிங்கம் போல அஞ்சாமல் மலையளவாயினும் செலவழிப்பார்கள்.

     (வி-ரை.) வாள் உழவர் : அரசர், (வாளினாலே தமது முயற்சியைச்

செய்வோர்.)

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

        84. வேளாளர் சிறப்பு

யசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்

     இயற்றிநல் லேர்பெ றுவதும்,

  இராச்யபா ரஞ்செய்து முடிமன்னர் வெற்றிகொண்

     டென்றும்நல் லேர்பெ றுவதும்,

வசனாதி தப்பாது தனதா னியந் தேடி

     வசியர்நல் லேர்பெ றுவதும்,

  மற்றுமுள பேரெலாம் மிடியென்றி டாததிக

     வளமைபெற் றேர்பெ றுவதும்,

திசைதோறும் உள்ளபல தேவா லயம்பூசை

     செய்யுநல் லேர்பெ றுவதும்,

  சீர்கொண்ட பைங்குவளை மாலைபுனை வேளாளர்

     செய்யும்மே ழிப்பெ ருமைகாண்

அசையாது வெள்ளிமலை தனில்மேவி வாழ்கின்ற

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

(இ-ள்.) வெள்ளிமலைதனில் அசையாது மேவி வாழ்கின்ற அண்ணலே

– வெள்ளிமலையில் எப்போதும் பொருந்தி வீற்றிருக்கும் பெரியோனே!,

அருமை …… தேவனே!, வேதியர் யசனம்ஆதி கருமமும் தப்பாமல் இயற்றி

நல்ஏர் பெறுவதும் –மறையவர் வேள்வி முதலிய தொழில்களைத் தவறாமற்

செய்து பேரழகு பெறுவதும், முடிமன்னர் என்றும் வெற்றிகொண்டு இராச்சிய

பாரம் செய்து நல் ஏர் பெறுவதும் – முடியரசர் எப்போதும் பகைவரை

வென்றிகொண்டு, ஆட்சி புரிந்து பேரழகடைவதும், வசியர் வசனம் ஆதி

தப்பாது தனதானியம் தேடி நல் ஏர் பெறுவதும் – வணிகர் சொல் முதலிய

பிறழாமல் பொன்னும் தானியமும் ஈட்டிப் பேரழகு பெறுவதும், மற்றும் உள

பேரெலாம் மிடி என்றிடாது அதிக வளமை பெற்று ஏர் பெறுவதும் – மேலும்

உள்ள யாவரும் வறுமை என்று கூறாமல் மிக்க வளம் பெற்று அழகுறுவதும்,

திசைதோறும் உள்ள பல தேவாலயம் பூசை செய்யும் நல் ஏர் பெறுவதும் –

எல்லாத் திக்கினும் இருக்கும் பல திருக்கோயில்களும் வழிபாடு பெற்று

நல்லழகு பெறுவதும், சீர் கொண்ட பைங்குவளை மாலை புனை வேளாளர்

செய்யும் மேழிப் பெருமை – புகழ் பெற்ற பசிய குவளை மாலை அணிந்த வேளாளர் புரியும் உழவின் பெருமையாகும்.

     (வி-ரை.) யசனம் – வேள்வி. வைசியர் என்பது வசியர் எனச் செய்யுள்

விகாரம் பெற்றது.

—–SUBHAM—–

Tags– ஜாதிகள், பிராமணர் , க்ஷத்ரியர் , வைசியர் , வேளாளர்