
Compiled BY KATTUKKUTY
Post No. 9055
Date uploaded in London – – 20 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
www.tamilandvedas.com சஇல் வெளிவந்த ச.நாகராஜன் தொகுத்த பாரதி போற்றி ஆயிரம், இதோ தொடர்கிறது, இதோ kattukutty மிகப் பழைய தமிழ் இதழ்களிலிருந்து தொகுத்துத் தரும் சில புதுக் கவிதைகள்!
பாரதியே மீண்டும் பிறந்து வா!!!
(என் கவிதை தொகுப்பிலிருந்து) –
By Kattukutty
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையை கொளுத்துவோம்
என்ற பாரதியே!!!
அழகிப் போட்டிகளில் தங்கள் “தங்க”
அடையாளங்களைக் காட்டி
பரிசு பெறும் பெண்களைப் பார்!!!
நாகரீகம் என்ற பெயரில் நடை,உடைகளை
மாற்றித்திரியும் நங்கைகளைப்பார்!!!
அழகு என்ற பெயரில் அரை குறையாய்
திரியும் பேதைகளைப் பார்………
பணத்திற்காக தன் உடலை விற்கும்
பெண் பாவைகளைப் பார்……….
ஆபாசப் பொருள் ஆக்காதே என
கூக்குரலிட்டு அரைகுறை உடைகளுடன்
அழகிப்போட்டிகள் நடத்தும்
மாதர் சங்கங்களைப் பார்……..
இவ்வளவையும் பார்த்த பின்பும் கூடவா
உனக்கு மனமில்லை மீண்டும்
பிறக்க பாரதியே????
மீண்டும் பிறந்து வா
இங்கு மாதர் தம்மை இழிவு செய்வோரை
கொளுத்த அல்ல…….
இழிவு செய்யும் அந்த
மாதரையே கொளுத்த……………. என். வீர விஜயன் கோவை

பாரதியே…….நீ இல்லை என்றால்
காந்தி இல்லை என்றால்
அஹிம்சை தெரிந்திருக்காது………….
புத்தன் இல்லை என்றால் வாழ்வின்
தத்துவம் தெரிந்திருக்காது…….
இயேசு இல்லை என்றால் அன்பின்
அர்த்தம் புரிந்திருக்காது……….
ஹிட்லர் இல்லையென்றால் சர்வாதிகார
கொடுமை தெரிந்திருக்காது……….
பாரதியே நீமட்டும் இல்லையென்றால்
புரட்சிக் கவிதையே பிறந்திருக்காது!!!
டி.சந்திரசேகரன்அய்யம்பாளையம்
Xxx

மீசை முளைக்காத பாரதிகள்
உண்ணாமல், உறங்காமல்,சம்பாதித்து
அள்ளிக் கொடுத்து எங்களைத் தள்ளி விட்டீர்கள்…….
அன்று முதல் இன்று வரை சுவற்றில் அடித்த பந்து போல
பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும்
வந்து வந்து போகின்றோம்
நீங்கள் எங்களை உருவாக்கவில்லை,
நாங்களும் உருப்படவில்லை
பெற்றோர்களே இனிமேல் நாங்கள்
மீசை முளைக்காத பாரதிகள்…….
பாரதியே உங்களின் வார்த்தைகளே
எங்கள் நெஞ்சுக்கு உரங்கள்…………
சகோதரிகளே நமது ஒவ்வொரு வீட்டிலும்
மீசை முளைக்காத பாரதிகளை
உருவாக்கிட வேண்டும்…….
நாம் ஒவ்வொருவரும் அவர்களின் தாய்
என மார் தட்டிட வேண்டும்!!!
சி. மரகதம்,சமத்தூர்
xxxxx

“மீசைக்காளி”பாரதியே !!!
பாரதியே, ஏழு வயதில் பாட்டெழுதிய
இலக்கிய தீபமே!!!
விதையிலேயே விழுது விட்ட
ஆல மரம் நீ!!!
கயமையைக்கண்டு
கனலாய் எழுந்த மீசைக்காளியே!!!!
மீசை மட்டுமா பெரியது, உனது
ஆசை கூட பெரியது தான்!!!
நீ காணி நிலத்தினுள் சொர்க்கத்தையே
அல்லவா கேட்டாய்???
எமன் கூட உன்னிடம் எருமையில்
வரப் பயந்து மாறுவேடமிட்டு
யானை உருவில் வந்தான்!!!
உனது சவ ஊர்வலத்தில்
ஜனங்கள் திரளாததே சரி எனப்படுகிறது!!!
இறப்பில்லாதவனுக்கு
இறுதி ஊர்வலம் எதற்கு???? அ. பால முருகன், பாகாயம்
***
tags- பாரதி, பிறந்து வா,