Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜோதிட மஹரிஷிகள்!
ச.நாகராஜன்
ஜோதிடம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவோரும், அதைக் கற்போரும் தெரிந்துகொள்ள வேண்டிய மஹரிஷிகள், ஜோதிட அறிஞர்கள் மற்றும் சில சிறந்த நூல்களின் பட்டியல் இதோ:
1) வசிஷ்டர்
2) நாரதர்
3) சக்தி
4) பராசரர்
5) வியாஸர்
6) விஷ்ணுகுப்தர்
7) தேவலர்
8) மயன்
9) யவனர்
10) ஜைமினி
11) மனிதா
12) சத்யாசார்யர்
13) ஜீவசர்மா
14) மாண்டவ்யர்
15) பரத்வாஜர்
16) கார்கி
17) சங்கராசார்யர்
18) வித்யாரண்யர்
19) பட்டபாலர்
20) வராஹமிஹிரர்
21) காளிதாஸர்
22) காலாம்ருதர்
நூல்கள்
23) சர்வார்த்த சிந்தாமணி
24) மானஸகாரி
25) முஹூர்த்த தர்ப்பணம்
26) கோபாலரத்னாகரம்
27) சராவளி
28) நக்ஷத்ரசூடாமணி
29) ஜைனேந்த்ரமாலா
30) உடுதசாப்ரதீபிகா
31) ஜாதகாலங்காரம்
32) ஜாதக கலாநிதி
33) யோகாவளி
36) கேரளம்
37) ஜாதகசந்த்ரிகா
38) தைவக்ஞாபரணம்
39) தைவக்ஞவிலாஸம்
40) ஹோரப்ரதீபிகா
41) சூர்யசித்தாந்தம்
42) நவநீதார்ணவா
43) பராசரஹோரா
44) தைவக்ஞபூஷணம்
மேலே உள்ள அனைத்து மஹரிஷிகளின் வாக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர் புரபஸர் சூர்யநாராயண் ராவ்.
மேலே தரப்பட்ட நூல்கள் அனைத்தையும் அவர் கற்றுத் தேர்ந்தவர்.
ஜோதிடத்தை 18 மஹரிஷிகள் உலகிற்கு அளித்தனர்.
அந்த 18 மஹரிஷிகள்:
1) சூர்யன்
2) பிதாமஹர்
3) வியாஸர்
4) வசிஷ்டர்
5) அத்ரி
6) பராசரர்
7) கஸ்யபர்
8) நாரதர்
9) கார்க்யர்
10) மரீசி
11) மனு
12) ஆங்கீரஸ்
13) பௌலுஷர்
14) லோமசர்
15) சியவனர்
16) யவனர்
17) பிருகு
18) சனகர்
ஜோதிடம் என்பது ஜோதியின் விளைவுகளை ஆராயும் ஒரு விஞ்ஞான சாஸ்திரம்.
பல்வேறு கிரகங்களின் ஒளி பூமியை நோக்கி வருகிறது. அந்த ஒளி மனிதர், விலங்கினம் உள்ளிட்ட அனைத்தின் மீதும் தனது செல்வாக்கைச் செலுத்துகிறது.
ஜோதிட சாஸ்திரம் மூன்று முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளது.
முதலாவது கணித ஸ்காந்தம் – அதாவது கணிதத்தைக் கொண்டுள்ள பாகம்.
இரண்டாவது பாகம் ஹோரா ஸ்காந்தம் – அதாவது ஜாதகத்தின் பலன்களைச் சொல்லக் கூடியது.
மூன்றாவது ஸம்ஹிதா ஸ்காந்தம் -அதாவது உலகம் சார்ந்தது
கணித ஸ்காந்தம் ஜோதிடத்தில் செய்யப்பட வேண்டிய ஏராளமான கணிதம் பற்றிய விஷயங்களைச் சொல்லும் பாகம்.
ஹோரா ஸ்காந்தம் ஒரு மனிதன் வாழ்வில் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைக் கணித்துச் சொல்லும்.
ஸம்ஹிதா ஸ்காந்தம் மழை பெய்வது, பூகம்பம் நிகழ்வது, வெள்ளம் ஏற்படுவது, உற்பத்திப் பொருள்களின் உற்பத்தி, விலைகள் உள்ளிட்டவை பற்றிச் சொல்லும்.
ஜோதிடராக ஆக விரும்பும் ஒரு மனிதர் முதலில் இவை பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டும்.
நல்ல குருவை அணுகி அவரிடம் ஜோதிடக் கலையை உண்மையுடனும், சிரத்தையுடனும் கற்க வேண்டும்.
பணத்திற்காகப் பலன்களைச் சொல்ல ஆரம்பிக்கக் கூடாது.
இத்துடன் ஜோதிடரின் தகுதி பற்றிய எனது கட்டுரை, ஜோதிட மேதைகள் என்ற எனது புத்தகம், ஜோதிடம் உண்மையா என்ற எனது புத்தகம் உள்ளிட்டவற்றை இணைத்துப் படித்தால் ஜோதிடக் கலை பற்றிய பல அடிப்படை உண்மைகளை அறியலாம்.
Laws are not permanent. Indian constitution has been amended over hundred times by the parliament. Laws aren’t applicable to everyone. In India all castes except Brahmins are demanding that they should be declared lowest castes. They want more concessions in everything. Even Ambedkar was ignored who said that concessions should be given only for first 25 years. In the United States, you will be sentenced to death for a few crimes only in some states. I can give you umpteen examples like this.
In my younger days we used to enjoy some jokes. A few of my friends are in the habit of drinking liquor. In those days, my state Tamil Nadu had prohibition. So people who wanted to drink liquor will cross the state border and go to Kerala state, stand in front of Tamil police across the border and drink and dance mocking at them. Only if they cross the border in drunken condition, Tami l police can arrest them. Now everything is changed.
Even Kashmir had special status until Modi government boldly changed it.
Same sex marriage, abortion, drugs , prostitution, tax evasion are debated every day. Some countries allow these things. Indian politicians keep their money in remote islands or Switzerland to dodge taxes.
To cut it short, laws are changeable and it will be never same for every one. The wonder of wonder is that Manu Smrti and Mahabharata said it several thousand years ago.
In the Yaksha Prasna section of the Mahabharata, Yuthisthira makes it clear.
In the Mahabharata the Yaksha asks Yudhishthira about Dharma,
What is the path?
Yudhishthira answered “Arguments and futile revelations conflict. No single Rishi has told the whole truth . The truth of Dharma is mysteriously hidden inside the cave (of the heart). What great men have followed that is the path, Oh, Yaksha of the waters”
– Yaksha Prasna, Vana Parva, Mahabharata
Ancient India had many law books including Manu Smrti. Since Manu was the first law giver in the world, a pre Hammurabian, we always quote Manu. It has been amended and lot of unwanted materials have been interpolated. He makes it very clear in the very second chapter that the laws are enacted or decided by the scholars of that age. And he, beautifully conclude that your conscience will tell you what is wrong and what is right. We see the same basic virtues in all the religious books around the world. That is fundamental and cannot be questioned.
Be Honest, Speak the Truth, Don’t harm others, Don’t kill, Don’t covet others wealth are basic rules.
एतद्देशप्रसूतस्य सकाशादग्रजन्मनः ।
स्वं स्वं चरित्रं शिक्षेरन् पृथिव्यां सर्वमानवाः ॥ २.२०॥ Manu 2-20
All inhabitants (born) of this earth should learn about living and building character from the ancient sages and seers who took birth in this land.
Following is George Buhler’s translation
Manu 2-20. “From a Brahmana, born in that country, let all men on earth learn their several usages”.
विद्वद्भिः सेवितः सद्भिर्नित्यमद्वेषरागिभिः ।
हृदयेनाभ्यनुज्ञातो यो धर्मस्तं निबोधत ॥ २.१॥ Manu 2-1
Manu2.1. Learn that sacred law which is followed by men learned (in the Veda) and assented to in their hearts by the virtuous, who are ever exempt from hatred and inordinate affection.
वेदोऽखिलो धर्ममूलं स्मृतिशीले च तद्विदाम् ।
आचारश्चैव साधूनामात्मनस्तुष्टिरेव च ॥ २.६॥
Manu 2.6. The whole Veda is the source of the sacred law, next the tradition and the virtuous conduct of those who know the (Veda further), also the customs of holy men, and (finally) self-satisfaction/ your conscience..
In short, as Krishna says in the Bhagavad Gita, Kama, Krodha and Lobha are the three gateways to Hell.
In London I used to visit prisons to see Hindu prisoners. I used to chat with prisoners from other religions or atheists during those visits. I used to wonder how beautifully Krishna brought all these people under three categories. All the prisoners were suffering from Anger or Greediness or illegal Sex.
So, criticising Manu Smrti today is like beating a dead snake again and again. I see them as political jokers, not heroes.
xxxx
Let us see some more beautiful couplets,
“Changes of Time and Place and Circumstance always cause changes in the duties too. The law for men is one in time of peace and quite another in calamity .
“There is no single custom that holds good always.
Therefore Dharma depends on circumstances.
No special law and manner have ever been found
Which gives help to everyone and hurt to none.
Therefore, it is changed for one that seems better
More suited to the different conditions.
Hence do we see the great variety
In laws and customs of humanity
—–Mahabharata, Shanti Parva
In Sanskrit,
Desha Kaala nimittaanaam
Bhedair dharmo vibhidyate;
Anyah dharmah samasthasya
Vishama sthasya aparah
Na hi eva aikaantiko dharmah;
Dharmo hi aavasthikah smrtah
Na hi sarva hitah kaschid
Aachaarah Sam pravartate
Tasmaad anyah pra bhavati;
Sah aparam baadhate punah
Aachaaraanaam an aikaagryam
Tasmaat sarvatra lakshaye
Shanti Parva, Mahabharata
Xxx
And Manu says in one sloka
Anye krta Yuge dharmah , Tretaayaam Dvaapare apare
Anye Kali yuge nriinaam yuga hraas aanu ruupatah
As men change character and ways of life
So change the laws their elders make for them.
Both vary, side by side, from age to age
One law is for the Golden Age of Truth
And ready doing of loved elders words
Another for the Age of Infant Sin;
Yet another for the Age of Equal Strife
Twixt well grown Vice and Virtue; and a fourth
Is needed for the Time when Discord reigns
Manu banned overseas travel of Brahmins. But we see two great Brahmins Agastya and Kaundinya took a Pandya king named Thiru Maaran to Vietnam 2000 years ago and established the greatest Hindu Empire which lasted for 1500 years throughout South East Asia. Both of them violated the rules of Manu. Tamil women are banned going abroad by Tolkappiam , but we see Tamil women in 200 countries today.
So it is an accepted fact that laws are not static. Our forefathers knew that stagnant pools would stink. They allowed complete freedom to general public to change the rules within the framework of Dharma.
–subham—
Tags- Constitution, Amendments, Manu Smriti, Ambedkar, Mahabharata, Laws, Change,
மன்னர்களையே அல்லது தலைவர்களையே மக்களும் பின்பற்றுவார்கள் என்ற கருத்து மிகவும் புராதனமானது
சங்க இலக்கிய காலத்துக்கு முன்னர் வாழ்ந்த உலக மஹா கவிஞன் காளிதாசன் சொல்கிறார்,
உதயமான சூரியன் போல காண்பதனாலேயே ஜனங்களின் பாவத்தை அழித்தான் (மன்னன் அதிதி). உண்மைப்பொருளைச் சொல்லுவதால் மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றினான். இதனால் மக்கள் தன்னிச்சைப்படி நடக்க வாய்ப்பு கொடுத்தான் .
இந்தப் பாடலில் ‘ஸ்வதந்த்ர யாஞ் சக்ரே‘ என்பதை வேறு சில உரைகாரர்கள் ஜனங்களைத் தன வசத்தில் இருப்பவர்களாகச் செய்தான்;அதாவது மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதாகும்
XXXX
ரகுவம்சம் 15-98 முதல் வரும் மூன்று ஸ்லோகங்களில் ராமர் தனது மகன்களான குச , லவர்களை ஆட்சியில் அமர்த்திவிட்டு வடக்கு நோக்கி நடந்தார். . அவரை அயோத்தி மக்களும் பின்தொடர்ந்தனர். அவர் சரயூ நதியில் மூழ்கி சுவர்க்கம் செல்வதற்கு முன்னர் எல்லோரையும் மூழ்கச் செய்து அவர்களுக்காக சாந்தாநிகம் என்ற புதிய சுவர்க்கத்தை ஏற்படுத்தினார். சரயூ நதியானது , சுவர்க்கத்தின் ஏணிப்படியாகத் திகழ்ந்தது என்று காளிதாசர் சொல்கிறார். இதேபோல கோப்பெருஞ்சோழன் வடக்கு நோக்கி தவமிருந்து உயிர்நீத்த போது அவரை முன்பின் பார்த்திராத புலவர் பிசிராந்தையாரும் வந்து அவருடன் அமர்ந்து உயிர்நீத்தார். அவரோடு மட்டுமில்லாமல் வேறு பல புலவர்களும் இறந்தனர். பொத்தியார் என்னும் புலவரை மட்டும் புதல்வர் பிறந்த பின்னர் வா என்று திருப்பி அனுப்பியதை புறநானூற்றில் காண்கிறோம். மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதை இந்த நிகழ்ச்சிகள் உறுதி செய்கின்றன.
Xxxxx
திரு வள்ளுவரும் யதா ராஜா ததா ப்ரஜா –என்ற கருத்தைக் குறைந்தது இரண்டு குறள்களிலாவது கொண்டு வந்து விடுகிறார் :–
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு- திருக்குறள் 544
பொருள்
குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு.
இது முறைமை செய்யும் அரசன்கண்ணதாம் உலகு என்றது.
XX
இன்னொரு குறளில் (542)
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.–542
பொருள்
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
நம்முடைய உயிர் உய்வதற்கு முதலில் உதவி செய்வது நம்முடைய உடல் ஆகும். சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும். அடுத்தாற் போல நமக்கு துணையாக நிற்பது பெரியோர்கள் நமக்களித்துள்ள வழி முறைகள்; கேள்வி என்பது ச்ருதி என்பதன் தமிழாக்கம். அதாவது வேதம்.. அல்லது வேத வழிவதை நடைமுறைகள். இதை மனுவும் வேதமே தர்மத்தின் ஆணிவேர் என்று சொன்னார்.
Xxxx
மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி; மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி
From my old articles
யதா ராஜா ததா பிரஜா = மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி
வால்மீகி
யதா ஹி குருதே ராஜா ப்ரஜாஸ்தமனுவர்ததே – ராமாயணம்
ராஜா எப்படிச் செய்கிறாரோ மக்களும் அப்படியே செய்வர் என்று வால்மீகி யும் கூறியுள்ளார்
XXXXX
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை; வாழிய நிலனே! (ஔவையார், புறம் 187)
(பொருள்: மக்கள் நல்லவராக இருந்தால் நிலமும் நல்லதாக இருக்கும்!!)
XXXX
சாணக்யன்
யதா ராஜா ததா ப்ரஜா:- சாணக்ய நீதி தர்பணம்
யதா ராஜா ததா ப்ரஜாஹா (As the Ruler, So the Ruled) என்பது ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள இணையான பழமொழி.
சாணக்கியன் நுவல்வதும் அஃதே!
ராக்ஞி தர்மிணி தர்மிஷ்டாஹா பாபே பாபாஹா ஸமே ஸமாஹா
ராஜானம் அனுவர்தந்தே யதா ராஜா ததா ப்ரஜாஹா- 13-7
பொருள்
அரசன் நேர்மையாளனாக இருந்தால் மக்களும் அப்படியே இருப்பர்; அவன் பாபம் செய்தால், மக்களும் பாவம் செய்வர்; அவன் நடு வழியில் சென்றால் அவர்களும் நடு வழியில் செல்லுவர்; மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி.- 13-7
மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி – என்பதைப் பொது வாழ்விலும் காணலாம். ஆட்சியாளர்களே ஊழல் செய்தால் மக்களும் கெட்டுப் போவார்கள்.
Xxx
மோசிகீரனார் சொல்கிறார் மன்னர் உயிர்த்தே மலர்தலை உலகம்
நெல்லும் உயிர் அன்றே! நீரும் உயிர் அன்றே!
” நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால் யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே.”–(புறநானூறு : பாடல் : 186
பாடியவர் : மோசிகீரனார்)
பொருள்
பரந்துகிடக்கும் நாட்டுக்கு அரசனே உயிர்; நெல்லோ, நீரோ அல்ல ; வேற்படையுடைய மன்னனும் இதை அறிந்து செயல்படுவது கடமை ஆகும் , மோசிகீரனார் எனும்புலவர் வெளியிட்ட கருத்து இது
மன்னன் என்பவன் மக்கலுக்குத் தலைவன் என்ற கருத்தும், அவன் குடிமக்களை தன்னுயிர் போல காக்கவேண்டும் என்றும் நாம் அறிகிறோம். மன்னன் எப்படியோ, அப்படியே மக்களின் வாழ்வும் இருக்கும் என்ற கருத்தும் தொனிக்கும்.
அறப்பளீசுர சதகம் பாடிய அம்பலவாணர் சித்திரை முதல் ஆவணி வரை எந்த மாதத்தில், எந்த நாட்களில், மழை பெய்தால் அதிக விளைச்சல் ஏற்படும் என்ற அபூர்வ தகவலை பாடுகிறார்.
பாடல் 78-ல் யாருக்கு எது இல்லாமற்போகும் என்று ஒரு பட்டியல் தருகிறார். உடனே நமக்கு நினைவுக்கு வருவது பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்னும் பாடலும் கருமமே கண்ணாயினார் என்ற பாடலும்தான் .
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்
மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு, தானம், தவம், உயர்வு, தாளாண்மை/முயற்சி, காமம்– பறந்து போகும்; இது ஔவையார் பாடிய ‘நல்வழி’ ப்பாடல்.
Starvation destroys these ten: honour, dignity,learning, honesty, knowledge liberality, nobility, penance, application to business, and the love of women, whose tongue utters words as sweet as honey.
NAL VAZI- PART 2 – Tamil and Vedas
XXX
பாடல் 78 பாடலை குமர குருபரர் எழுதிய பாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். நீதி நெறி விளக்கத்தில் 53ஆவது பாடலாக இது மலர்கிறது.
இதன் பொருள்: ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று முனைப்புடன் இறங்கியவர்கள் தனது உடலில் உண்டாகும் நோவைப் பொருட்படுத்தமாட்டார்; பசியைப் பார்க்க மாட்டார், தூங்க மாட்டார், யார் தீங்கு செய்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்,காலத்தின் அருமையைப் பற்றியும் கவலைப்படமாட்டார். அடுத்தவர் கூறும் அவமதிப்பான சொற்களைக் கேட்கமாட்டார் தங்கள் காரியத்திலேயே கண்ணாயிருந்து அதில் வெற்றி பெறுவதிலேயே கவனமாக இருப்பார். (QUOTED BY s Nagarajan in this blog)
xxx
மழை பற்றி அம்பல வாணர் சொல்லும் தகவலுக்கு ஆதாரம் எங்கு உள்ளது என்று தெரியவில்லை . சுவாதி நட் சத்திரத்தன்று மழை பெய்தால் முத்துக்கள் அதிகம் கிடைக்கும் என்ற செய்தி தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்களில் உள்ளது மழை பற்றிய பழமொழிகள் கூட நமக்குத் தகவல் தருகிறது
1.மழைக்குக் குடையா இடிக்குக் குடையா?
2. மழைக்குக் கூட பள்ளியில் ஒதுங்கியிருக்கமாட்டான்
3.மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் யார் ?
4.மழை முகம் காணாத பயிரும் தாய் முகம் காணாத பிள்ளையும்
5.மழையும் பிள்ளைப்பேறும் மகாதேவர்க்கும் தெரியாது
6.மழைவிட்டும் தூவானம் விடவில்லை
7.நினைத்த நேரம் நெடு மழை பெய்யுமா ?
8.கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப் பின்பு கொடையும் இல்லை
9.ஐப்பசி மாதம் அழுகைத் தூற்றல், கார்த்திகை மாதம் கனத்த மழை
10.ஐப்பசி, கார்த்திகை அடைமழைக் காலம்
11.ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
12.எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை பெய்யும்.
Xxx
பாடல் 80-ல் பயனில்லாதவை பற்றிப் பாடுகிறார். உட னே நமக்கு விவேக சிந்தாமணி பாடல் நினைவுக்கு வருகிறது
கடன், பிச்சை எடுத்தல், முதுமை, விபசாரம் , திருட்டுத்தனம் , ஏழ்மை, பிணி, எச்சிலை சாப்பிடும் நிலைமை ஆகிய இவை எட்டும் வரக்கூடாத கஷ்டங்கள் . எனவே இவை ஏற்படாத வகையில் வாழ வேண்டும் .
Xxxx
மக்ஷிகா மாருதோ வேச்யா ஹா யாசகோ மூக்ஷகஸ் ததா
கிராமணீர் கணகஸ் சைவ ஸப் தைதே பரபாதகாஹா
பொருள்
ஈக்கள்/ கொசுக்கள், காற்று, வேசி, பிச்சைக்காரன், எலி, கிராமாதிகாரி, , கணக்கர் ஆகிய இவர்கள் ஏழு பெரும் எப்போதும் பிறரை பீடிப்பவர்கள், அதாவது தொல்லை தருவார்கள் .
Xxx
இதோ அம்பலவாணர் பாடிய 3 பாடல்கள் ; தமிழ் வர்ச்சுவல் யுனிவர்சிட்டி (TAMIL VU WEBSITE) இணைய தளத்திலிருந்து :-
78. ஏது?
பொன்னாசை உள்ளவர்க் குறவேது? குருவேது?
பொங்குபசி யுள்ள பேர்க்குப்
போதவே சுசியேது? ருசியேது? மயல்கொண்டு
பொதுமாதர் வலைவி ழியிலே
எந்நாளும் அலைபவர்க் கச்சமொடு வெட்கமே
தென்றென்றும் உறுகல் விமேல்
இச்சையுள பேர்க்கதிக சுகமேது? துயிலேது?
வெளிதாய் இருந்து கொண்டே
பன்னாளும் அலைபவர்க் கிகழேது? புகழேது?
பாரிலொரு வர்க்க திகமே
பண்ணியிடு மூடருக் கறமேது மறமலால்?
பகர்நிரயம் ஒன்று ளதுகாண்!
அன்னாண வருகரி உரித்தணியும் மெய்யனே!
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அல்நாண் வருகரி உரித்து அணியும் மெய்யனே – இருள்
நாணுமாறு (கருநிறத்துடன்) வந்த யானையின் தோலை உரித்து அணியும்
மேனியனே!, அமலனே – குற்றம் அற்றவனே!, அருமை …… தேவனே!,
ருசிஏது – மிகுதியான பசியுடையோர்க்கு நிறைந்த தூய்மையும்
உணவினிமையும் பார்த்தல் இயலாது. பொதுமாதர் விழிவலையிலே எந்நாளும்
அலைபவர்க்கு அச்சமொடு வெட்கம் ஏது – பொதுப் பெண்களின் கண்வீச்சில் எப்போதும் அகப்பட்டு உழல்பவர்க்கு அச்சமும் நாணமும் இல்லை.
என்றென்றுசுகம்ஏது துயில்ஏது – எப்போதும் சிறந்த கல்வியின் மேல் விருப்பம் உடையோர்க்கு மிக வசதியிலும் தூக்கத்திலும் மனம் நாடாது, எளிதாய் இருந்துகொண்டே பலநாளும் அலைபவர்க்கு இகழ்ஏது புகழ்ஏது – எளிய வாழ்வில் இருந்து பலநாளும் திரிபவர்க்கு இகழ்ச்சியும் புகழ்ச்சியும் இல்லை,
பாரில் ஒருவர்க்கு அதிகமே பண்ணியிடும் மூடருக்கும் மற்ற அலால் அறம்
ஏது – உலகில் ஒருவருக்குத் துன்பத்தையே செய்யும் பேதையருக்குப்
பாவமன்றிப் புண்ணியம் இல்லை, பகர்நிரயம் ஒன்று உளது – கூறப்படும்
நரகம் ஒன்று இருக்கிறது.
XXXX
79. மழைநாள் குறிப்பு
சித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல்நல்ல
சீரான பரணி மழையும்,
தீதில்வை காசியிற் பூரணை கழிந்தபின்
சேரும்நா லாநா ளினில்
ஒத்துவரு மழையும், அவ் வானியில் தேய்பிறையில்
ஓங்கும்ஏ காத சியினில்
ஒளிர்பரிதி வீழ்பொழுதில் மந்தார மும் மழையும்,
உண்டா யிருந்தாடியில்
பத்திவரு தேதி ஐந்தினில் ஆதி வாரமும்
பகரும்ஆ வணிமூ லநாள்
பரிதியும் மறைந்திடக் கனமழை பொழிந்திடப்
பாரில்வெகு விளைவும் உண்டாம்;
அத்தனே! பைங்குவளை மாலையணி மார்பன் ஆம்
அண்ணல் எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அத்தனே – தலைவனே!, பைங்குவளை மாலை அணி
மார்பன் ஆம் அண்ணல் எமது அருமை மதவேள் -ம் உறுகல்விமேல் இச்சையுள பேர்க்கு அதிக
பசிய குவளை மலர்மாலை அணிந்த மார்பனாகிய பெருமை மிக்க எம் அரிய
மதவேள், அனுதினமும் ….. தேவனே!, சித்திரை திங்கள் பதின்மூன்றுக்குமேல்
நல்ல சீரான பரணி மழையும் – சித்திரைத் திங்களிற் பதின்மூன்று
நாட்களுக்குமேற் புகழ்பெற்ற பரணிநாளிற் பெய்யும் மழையும், தீது இல்
வைகாசியிற் பூரணை கழிந்தபின் சேரும் நாலாம் நாளினில் ஒத்துவரும்
மழையும் – குற்றம் அற்ற வைகாசித் திங்களில் முழுமதிக்குப் பிறகு வரும் நாலாம் நாளிற் சரியாகி வரும் மழையும், அ ஆனியில் தேய் பிறையில்
ஜோதிடம் கற்க வேண்டுமென்று விரும்புவோர் ஏராளம், ஏராளம். இவர்களுக்கு என அறிவுரைகளை வழங்குகிறார் புரபஸர் பி. சூர்யநாராயண் ராவ்.
இவரைப் பற்றிய அறிமுகமே தேவை இல்லை. உலகளாவிய அளவில் புகழ் பெற்ற ஜோதிடர் பி.வி.ராமனின் பாட்டனார் தான் இவர்.
‘Valuable Instructions to the Students of Astrology’ – ‘ஜோதிடம் கற்கும் மாணவர்களுக்கு மதிப்புள்ள அறிவுரைகள்’ என்ற தலைப்பில் ‘The Astrological Primer’ என்ற தனது நூலில் அவர் 24 முக்கியமான விஷயங்களை அறிவுரைகளாகக் கூறுகிறார்.
அவையாவன:
1) ஜோதிடம் கற்க விரும்பும் மாணவர்கள் ராசிகள், கிரகங்கள், நக்ஷத்திரத் தொகுதிகள், நல்ல மற்றும் தீய கிரகங்கள், கிரகங்களின் பார்வைகள், கிரகங்களில் ஒன்றுக்கொன்று உள்ள தொடர்புகள் (நட்பு, பகை ஆகிய விவரங்கள், கிரகங்களில் ஆண், பெண் கிரகங்கள், கிரகங்களின் இயற்கை, கிரகங்களின் வர்ணங்கள், கிரகங்களின் திசைகள், கிரகங்கள் உச்ச, நீச நிலைகள், இடங்கள், கிரகங்களின் சஞ்சாரங்கள், கிரகங்களின் 10 நிலைகள், கிரகங்களின் குணாதிசயங்கள், கிரகங்களின் 27 தொழில்கள், கிரகங்களின் காலம், ராசிகளின் அடையாளக் குறிகளும் அவற்றின் பிரிவுகளும், வர்கங்கள், ஒரு நாளில் 12 ராசிகளின் நேரங்கள், ராசிகளும் கால புருஷனும், ஹோரை, த்ரேக்காணம், நவாம்சம், த்வாதசாம்சம், த்ரிம்சாம்சம், ராசிகளின் குணாதிசயங்கள், ராசிகளை சொந்த உரிமையாகக் கொண்ட கிரகங்கள், 12 வீடுகளின் முக்கியத்துவம் ஆகிய இவற்றை முதலில் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மனதில் அப்படியே பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இது தான் முதல் படி.
2. கேந்திரங்கள், த்ரிகோணம், பனபரா, கிரக சேர்க்கைகள் ஆகியவை பொதுவாக லக்னத்திலிருந்தே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
3. கிரகங்களில் சொந்த வீடு நிலையான ஒரு விஷயம் தான். அது மாறவே மாறாது.
4. கிரகங்கள் சேர்வது எவ்வளவு சக்தி படைத்ததோ அதே அளவு சக்தி
அவற்றின் பார்வைக்கும் உண்டு.
5.ஒரு ஜாதகத்தில் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் நீசத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு அநேக துர்பாக்கியங்கள் நேரும்.
6. ‘எல்லா கிரகங்களும்’ – என்று சொல்லப்படும் போதெல்லாம், ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. ராகு, கேது உள்ளிட்ட நவ கிரகங்கள் என்று சொன்னால் மட்டுமே ஒன்பது கிரகங்களையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
7. நல்ல மற்றும் தீய கிரகங்கள் தங்கள் தசா காலத்திலும் புக்தி காலத்திலும் தங்கள் விளைவுகளைத் தருகின்றன.
8. நன்கு ஆராயாமல் ஒருவரது ஆயுள் காலத்தைச் சொல்லவே கூடாது.
9. சந்திரனிலிருந்து பார்த்து சேர்க்கைகளைப் பார்ப்பதும் சக்தி உள்ளதே. இதை வைத்தும் கணிப்புகளைக் கூறலாம்.
10. தீய கிரகங்கள் சேர்ந்தால் அவை உடல்நலத்தைப் பாதிக்கும், (அவற்றை நல்ல கிரகங்கள் பார்த்தாலொழிய).
11. கிரகங்களின் நிலையான நட்புகள் முதலியவை தற்காலிகமான உறவுகளால் சிறிது மாறும்.
12. ஒரு ராசியை இரண்டாகப் பிரித்தால் வருவது ஹோரா. மூன்று சம பிரிவுகளாகப் பிரித்தால் வருவது த்ரேக்காணம். ஒன்பது பிரிவுகளாக ஆக்கினால் வருவது நவாம்சம். அதை 12ஆகப் பிரித்தால் வருவது த்வாதசாம்சம். 30 பிரிவுகளாக ஆக்கினால் வருவது த்ரிம்சாம்சம். அறுபது பிரிவுகள் என்றால் ஷஷ்டியாம்சம்.
13. லக்னத்தை முதலில் சரியாகக் கணிக்க வேண்டும். இது இல்லாமல் ஒரு வித கணிப்பையும் பலனையும் கூற முடியாது. கூறக்கூடாது.
14. ஒரு குழந்தையின் பாலாரிஷ்ட சேர்க்கைகளை முதலில் பார்த்த பின்னரே மற்றவற்றைச் சொல்ல ஆரம்பிக்க வேண்டும்.
15. பெற்றோர்களின் பாவங்கள் குழந்தைகளின் மீது படியும். ஆகவே குழந்தைக்கான ஆயுள் மற்றும் இதர பலன்களைச் சொல்லும் போது இதை மனதில் கொள்ள வேண்டும்.
16. எல்லா ஜோதிட விஷயங்களையும் அத்துபடியாகக் கொள்ளாமல் தன்னை ஒரு பெரிய ஜோதிட மேதையாக நினைத்துக் கொண்டு பலன்களைச் சொல்ல ஆரம்பிக்கக் கூடாது.
17. பார்வைக்குத் தோன்றும் முரண்பாடுகள், மாறுபாடுகள் ஆகியவை எல்லாம் ஒரு ஜாதகத்தை நன்கு ஆராயும் போது மறைந்து விடும்.
18. நல்ல பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டு முதலில் கிரக நிலைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் கொடுத்த ஜாதகத்தை வைத்துக் கொண்டு பலன் சொல்லக் கூடாது.
19. ஒரு ஜோதிட சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதை நன்கு பயில வேண்டும். அதுவே இதர சித்தாந்தங்களை நன்கு அறிய வழி வகுக்கும். சாயனா மற்றும் நிராயணா பற்றிக் குழப்பம் கொள்ளக் கூடாது.
20. தன்னை ஒரு ஜோதிட மேதை என்று நினைத்துக் கொள்பவன் அதில் முன்னேறவே முடியாது.
21. பாரத தேசத்தில் உதித்த மஹான்களின் பெருமை சொல்லி மாளாது. எல்லாவித சந்தேகங்கள், கஷ்டங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் நன்கு அறிவர். அவர்களின் நூல்களைப் படிக்கப் படிக்க அவர்கள் எவ்வளவு பெரியவர்கள், மேதைகள் என்பது புலப்பட ஆரம்பிக்கும்.
22. சில நாட்கள் உழைத்தால் அது மட்டுமே, பெரிய நிலைக்கு கொண்டு வந்து சாதனைகளைப் படைக்க வழி வகுக்காது. தொடர்ந்து கற்றல் வேண்டும்.
23. முதலில் உங்கள் ஜாதகத்தையும் உங்களுக்கு நன்கு தெரிந்த நண்பர்கள் ஆகியோரின் ஜாதகங்களையும் பாருங்கள். நீங்கள் கற்ற ஜோதிடத்தின் படி, உங்களின் கணிப்பின் படி, அந்த ஜோதிட பலன்கள் அவர்களின் குணாதிசயங்களுடன் ஒத்துப் போகிறதா என்று பாருங்கள்.
24. உங்கள் ஜோதிடப் படிப்பில் உண்மை இருக்க வேண்டும், ஆர்வம் இருக்க வேண்டும், கவனக் குவிப்பு இருக்க வேண்டும். இவை எல்லாம் இருந்தால் நீங்கள் ஒரு வெற்றிகரமான ஜோதிட நிபுணர் தான்!
***
மேற்கண்ட அறிவுரைகளை அவர் எழுதிய The Astrological Primer என்ற நூலில் அவர் தந்துள்ளார்.. புத்தகம் வெளியிடப்பட்ட ஆண்டு -1905
தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் மரபியலில் வரும் சூத்திரம் (சூத்திர எண் 1592)ஆகும் .
இது பகவத் கீதையில் கண்ணனும் மனு ஸ்ம்ருதியில மனுவும் சொன்னதாகும் ; பின்னர் சாணக்கியரும் இதைச் சொல்லுகிறார். வால்மீகியும் , காளிதாசனும், அவ்வையாரும் மன்னர் என்ற பெயரில் இதைச் சொல்லி இருக்கிறார்கள் .
முதலில் தொல்காப்பியர் பற்றி நமக்கு இரண்டே பேர்தான் ‘பெர்சனல்’ விஷயங்களைச் PERSONAL DETAILS சொல்கிறார்கள். ஒருவர் அவருடைய கிளாஸ்மேட் CLASSMATE ; அதாவது சக மாணவர்; அவர் பெயர் பனம்பாரனார் ; தொல்காப்பியருக்கு ஐந்திரம் தெரியும் என்றும் அவர் நிலம் தரு திரு வில் பாண்டியன் சபையில் அதங்கோட்டு ஆச்சார்யன் என்னும் நான்கு வேதம் படித்த பிராமணன் சர்ட்டிபிகேட் CERTIFICATE கொடுத்தவுடன் அதை மன்னர் சபை ஏற்றதாகவும் கூறினார். சுருங்கச் சொன்னால் அய்யர் அக்மார்க் AGMARK SEAL குத்தினார். சபையில் எல்லோரும் கைதட்டி மாலை போட்டார்கள்
அடுத்தாற்போல் தகவல் தருபவர் உரை மன்னன், உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் ஆவார் . நச்சி. தான் அதிக, சிறந்த உரைகளை எழுதியவர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. அவர் மதுரை நகர பாரத்வாஜ கோத்ர பிராமணர். அவர் தொல்காப்பியர் என்பவர் பெயர் த்ருண தூமாக்கினி என்றும் அவர் ஜமதக்னி முனிவரின் புதல்வர் என்றும் எழுதியுள்ளார். இது திராவிடங்களுக்குப் பிடிக்காததால் பொய்யுரை என்று ஒதுக்குவர். பழ மையான காப்பியக்குடியில் இவர் பிறந்ததால் தொல் + காப்பிய என்று இவர் அழைக்கப்பட்டதாக இளம்பூரணரும் நச்சி. யும் கூறுவர். அதுவும் திராவிடங்களுக்குப் பிடிக்காததால் இரு உரைகார்களுக்கும் பொய்யர் பட்டம் கட்டி, திராவிடங்கள் ஒதுக்கின. அதுமட்டுமல்லாமல் தொல்காப்பியருக்கு மீசை வைத்து படம் வரைந்து ஊர் ஊராக சிலைகளும் வைத்தன திராவிடங்கள்.
ஆனால் தொல்காப்பியரோ முழுக்க முழுக்க — அதாவது மூன்று அதிகாரங்களிலும் வள்ளுவனைப் போலவே கூசாமல் ஸம்ஸ்க்ருதச் சொற்களை பயன்படுத்தியுள்ளார். இதை எல்லாம் தமிழ்ப் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை பட்டியல் போட்டுக்காட்டினார் . இந்தப் பின்னணி தெரிந்தால்தான் நான் சொல்லும் பகவத் கீதை விஷயம் புரியும்.
வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான — சூத்திரத்துக்கு உரை பின் வருமாறு ,
“ஆன்றவிந்து அடங்கிய சான்றோர்களின் ஆணையால் உலக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆதலால் உலக வழக்கு என்பது சான்றோரது நெறியாகும். இழிசினர் ஒழுக்கம், வழக்கு உலக வழக்கு எனக்கொள்ளப்படாது”.
Xxxx
மஹாபாரத ஸ்லோகம் இதோ:
ச்ருதிர் விபின்னா ஸ்ம்ருதி ரேவ பின்னா
நை கோ முனிர் யஸ்ய வசம் பிரமாணம்
தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம்
மஹா ஜனோ யேந கத ஹ ஸ மார்க்கஹ
வேதம் பல பிரிவுடையது ; ஸ்ம்ருதியும்/ சட்ட புஸ்தகங்கள் கூட பல வகையானது.
இதைக் கூறிய முனிவரோ ஒருவரல்ல. பல முனிவர்கள் அறநெறி விதிகளைக் கூறியுள்ளனர்.
யாருடைய சொல் சான்று ? யார் சொன்னதைக் கை விடுவது? அறத்தினுடைய உண்மைப்பொருள் மறைவாக வைக்கப்பட்டுள்ளது .எனவே பெரியோர்கள், எந்த வழியில் சென்றார்களோ , அதையே நாமும் பின்பற்றி நடப்போமாக.
In the Mahabharata the Yaksha asks Yudhishthira about Dharma, What is the path?
Yudhishthira answered “Arguments and futile revelations conflict. No single Rishi has told the whole truth . The truth of Dharma is mysteriously hidden inside the cave (of the heart). What great men have followed that is the path, Oh, Yaksha of the waters”
All inhabitants (born) of this earth should learn about living and building character from the ancient sages and seers who took birth in this land…
Following is George Buhler’s translation
Manu 2-20. From a Brahmana, born in that country, let all men on earth learn their several usages.
xxxxxxx
विद्वद्भिः सेवितः सद्भिर्नित्यमद्वेषरागिभिः ।
हृदयेनाभ्यनुज्ञातो यो धर्मस्तं निबोधत ॥ २.१॥ Manu 2-1
வித்வத்பிஹி ஸேவிதஹ ஸத்பிர் நித்யம த்வேஷராகிபிஹி
ஹ்ருதயே நாப்யனுக்ஞாதோ யோ தர்மஸ்தம் நிபோதத
Manu2.1. Learn that sacred law which is followed by men learned (in the Veda) and assented to in their hearts by the virtuous, who are ever exempt from hatred and inordinate affection.
2-1 வேதத்தை நன்றாக அறிந்த பெரியோர்களிடமிருந்து விதிகளை அறிய வேண்டும் . விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு,குணவான்களாக விளங்குவோரே அத்தகைய பெரியோர்கள் . அவர்கள் அங்கீகரித்தால் போதும்.
Xxxxxx
वेदोऽखिलो धर्ममूलं स्मृतिशीले च तद्विदाम् ।
आचारश्चैव साधूनामात्मनस्तुष्टिरेव च ॥ २.६॥
வேதோகிலோதர்ம மூலம் ஸ்ம்ருதி சீலே ச தத்விதாம்
ஆசாரஸ் ச்சைவ ஸாதூனாம் ஆத்மனஸ்துஷ்டிரேவ ச- Manu
Manu 2.6. The whole Veda is the (first) source of the sacred law, next the tradition and the virtuous conduct of those who know the (Veda further), also the customs of holy men, and (finally) self-satisfaction.
வேதம்தான் புனித விதிகள் அடங்கிய தர்மத்தின் ஆணிவேர் ; அதற்கு அடுத்தபடியாக காலா காலமாக பின்பற்றப்படும் சம்பிரதாயம் முக்கியம்; அதற்கடுத்தாற் போல அந்த சம்பிரதாய நெறி முறைகளை அறிந்தோர் சொல்லுவதே சட்டம்; இறுதியாக உங்கள் மனச்சாட்சியை நம்புங்கள் . (எது அறம் , எது மறம் என்பது உங்கள் மனச்சாட்சிக்குத் தெரியும்.)- Manu 2-6
மனு எவ்வளவு பெரியவர், எந்த அளவுக்கு மனிதனின் நல்ல குணத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று இதிலிருந்தே விளங்கும். இதே போல உண்மை சொல்லுவது பற்றியும் அவர் பொன்மொழிகளை உதிர்த்து இருக்கிறார். கசப்பான உண்மைகளை சொல்லாதே. இனிமையாக, ஆனால் உண்மை மட்டுமே விளம்பு என்பார் . பெண்களை அழ வைத்தால் அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும் என்கிறார்.
ஆக தர்மம் சட்ட விதிகள் எல்லாம் மாறுபடும். நாமும் அம்பேத்கார் சொன்னதை ஏற்காமல் அவ்வப்போது பார்லிமென்டில் விதிகளைத் திருத்தி (Constitutional amendments) வருகிறோம். ஆனால் அரசியல் சாசன அடிப்படை மாறாது. அது போல வேதமும் மாறாது.
இதைத் தொல்காப்பியர் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார்
வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான — சூத்திரம் 1592
xxxx
‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’
என்று இதனை , சேந்தன் திவாகர நிகண்டும் – (மக்கட் பெயர்த் தொகுதியின் (17-ஆம்) பாடல் குறிப்பிடும்
இரண்டு மூன்று இடங்களில் திருக்குறள் போலவே தர்ம அர்த்த காம = அறம், பொருள், இன்பம் என்று தொல்காப்பியரும் சொல்லுவதால் அவர் மஹாபாரதத்தைப் பின்பற்றுவதும் தெரிகிறது. மகாபாரதத்தின் ஒரு பகுதிதான் கீதை என்பது அனைவரும் அறிந்ததே.
புதன் கிழமையானால் — மாசில் பல கலை பயில்வர் மேன்மையாம்; அதாவது நன்றாகக் கல்வி கற்று நிறைய பட்டங்கள் பெறுவார்கள்.
வியாழக் கிழமையானால் – ஆடை நன்மையுடனே வந்திடும்; அதாவது புத்தாடைகள் நிறைய குவியும்.
வெள்ளிக் கிழமையானால் — பெண்கள் எல்லாம் உங்களை வந்து மொய்ப்பார்கள். நாரியருடன் போகம் மிகவும் உண்டு!!!!!!!!!!!!!
சனிக் கிழமையானால்– சுகப்படாது. சுகபோகம் இல்லை.
நான் முன்னர் எழுதியதை நினைவு படுத்துகிறேன்; உலகிலுள்ள பல கோடிப்பேரை இப்படி 7 வகையாகப் பிரித்துப் பலன் சொல்லுதல் சரியாக இராது; அதாவது துல்லியமாக இராது. ஆகையால் யாரவது ஒரு ஆராய்ச்சியாளர், குறைந்தது கிழமைக்கு 1000 பேர் வீதம் தேர்ந்தெடுத்து புள்ளிவிவரம் திரட்டி சரிபார்க்க வேண்டும். அதுவரை இதை நம்பவும் வேண்டாம்; உதாசீனம் செய்யவும் வேண்டாம்.
நான் சில பேர் திட்டுவதை கேட்டு இருக்கிறேன் : பயல் ராகுகாலத்தில் பிறந்திருப்பான் போல என்று.
அப்படிப் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று புள்ளிவிவரம் திரட்டி ஆராயும் வரை அவை எல்லாம் பொருளற்ற வசை மொழிகள் என்றே கருத வேண்டும் .
அட சனியனே — என்று ஒருவரைத் திட்டுகிறோம். அதற்கு சனிக் கிரகமா காரணம்?
நமது தேசத்தின் அடித்தளம் மற்றும் முக்கியப் பெருமையே, அதன் கலாச்சாரமும், பண்பாடும் தான். அவற்றின் வெளிப்பாடுதான், நாம் கொண்டாடும் பல்வேறு பண்டிகைகள்.
ஒவ்வொரு பண்டிகையும் மகிழ்ச்சியும், உற்சாகத்தையும் கொடுப்பதுடன், வாழ்வியல் நெறிகளையும், கற்றுக் கொடுக்கிறது என்றால் மிகை ஆகாது. பண்டிகைகளின் சிறப்பு என்பது, மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் மட்டுமல்ல, இயற்கையைப் போற்றி, வணங்கி, பாதுகாத்து, வேளாண்மை மற்றும் உயிரினங்களை வாழ்த்தி வணங்கும் நிகழ்வும் ஆகும். இந்த வரிசையில் மிக முக்கியமான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை.
இந்திய நாட்டில் விவசாயம் பல்கிப் பெருகப் பெருந்துணை புரிவன நம் நாட்டில் ஓடும் வற்றா ஜீவ நதிகள் ஆகும். விவசாயத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் காரணமாக,
“இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணறும் பெரு நாடு
கனியும் கிழ்ங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு”
எனும் பாரதியின் கூற்றை மெய்ப்பித்துள்ளனர் நம் நாட்டு விவசாயிகள்.
காவிரி தென்பெண்ணை பாலாறு பொருள்
கண்டதோர் வையை பொருனை நதி என
மேவிய ஆறு பல ஓடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு
என்று மஹாகவியால் பாடப்பெற்ற தமிழ் நாடும் இந்தியாவில் விவசாயத்தில் சிறந்து விளங்கும் முக்கியப் பகுதியாகும்.பொங்கல் பண்டிகை என்பது வேளாண்மை சார்ந்த ஒரு கொண்டாட்டம் என்பதே உண்மை.
பொங்கல் பண்டிகை – வரலாற்றுக் காலம்
சங்க காலமான கி.மு 200 – கி.மு. 300 களில் பொங்கல் என்பது சமஸ்க்ருத புராணத்தில் திராவிட அறுவடை பண்டிகையாக குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று முன்னோர்கள் பொங்கல் சங்க காலத்தில் தை நீராடல் என்ற பெயரில் கொண்டாடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பாவை நோன்பு சங்கக் காலத்தில் கொண்டாடப்பட்ட தை நீராடல் தான் இன்று பொங்கலாக கொண்டாடப்படுகிறது என்றும். அந்த காலத்தில் பெண்கள் தை நீராடலின் போது பாவை நோன்பு விரதத்தை கடைப்பிடித்து வந்தனர் என்றும் கூறப்படுகிறது.
பல்லவர் காலத்தில் பல்லவர்களின் காலமான கி.பி 400 – கி.பி 800 க்கு இடையில், பொங்கல் மிகவும் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. மழையும், வளமும் செழிக்க வேண்டி வணங்கி இளம் பெண்கள் விரதம் இருந்து வந்தனர். ஈர மண்ணில் செய்யப்பட்ட கட்யாயணி என்ற பெண் கடவுளை வணங்கி, தை மாதத்தின் முதல் நாளன்று விரதத்தை முடித்துக் கொள்வார்கள். மரபும், சடங்குகளும் நிறைந்த இந்த பொங்கல் கொண்டாட்டம். திருப்பாவை குறிப்பு ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஆகியவற்றில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் திருவள்ளூர் வீரராகவ கோவிலில் உள்ள கல்வெட்டிலும் கூட இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப பண்டிகை, இஸ்லாமியப் படைஎடுப்பு, ஆங்கில ஆட்சி, எல்லாக் காலங்களிலும், பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வந்தது. மேலும், இந்தப் பண்டிகை, குறிப்பாக, இந்த மண்ணின் மாண்பை, விவசாயத்தை, நீர் மேலாண்மையை இணைத்து இருப்பதால், தொடர்ந்து கொண்டாடப்பட்டது.
பொங்கல் பண்டிகை – 50 வருடங்கள் முன்னால்
1970களில் எங்கள் ஊரான தென்காசியில் (ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம்) திருவிழாக்கள், பண்டிகைகளுக்கு பஞ்சமே இல்லை. மொத்த ஊரே விழாக் கோலம் பூண்டிருக்கும். இந்தக் கொண்டாடத்தில், நான் பள்ளி மாணவன். ஜாதி, இனம், பணக்காரர், இல்லாதார் என்ற வேறுபாடு நாங்கள் பார்த்ததேயில்லை. மார்கழி மாதம் பஜனையில் இருந்தே எதிர்பார்ப்பு ஆரம்பித்துவிடும். பள்ளிகளும் குறைந்தது ஒரு வாரம் விடுமுறை இருக்கும். ஜனவரி முதல் வாரத்திலேயே வீடுகள் எல்லாம் வெள்ளை அடிக்கப்பட்டு, காவி, வண்ணங்கள் பூசப்படும். பெரும்பாலும்,வீட்டில் உள்ளவர்களே, சுண்ணாம்புக்கல் வாங்கி, வீட்டின் கொல்லைபுறத்தில் வெள்ளாவி வைத்து, நீலம் சேர்த்து, வெள்ளை அடிப்பார்கள். தெருக்களே பளிச்சென்று இருக்கும்.
ஒரு வாரம் முன்னாலேயே, மஞ்சள்குலை, கரும்பு, கடைவீதி மட்டுமல்லாமல், வீதியிலும் வைக்கப்படும், எனது தந்தையின் நண்பர் திரு பழனியாண்டி முதலியார் என்பவர், குறைந்தது 6 கரும்புகள், மஞ்சகுளை, கிழங்குகள் என வீட்டில் கொண்டு வைத்துவிடுவார். வீட்டின் முற்றத்தில் அவை வைக்கப்பட்டிருக்கும். ஆனால் பொங்கல் மறுநாள் தான் கரும்பு வெட்டப்படவெண்டும், அதாவது மறுநாள் காகத்திற்குப் படைத்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டும் என்பது சாஸ்திரம் என்பார்கள் வீட்டில். மறுநாள் விடியலுக்கு காத்துக்கொண்டிருப்போம். எவ்வளவு தான் தந்தாலும், உடன் பிறப்புக்களுடன் (என் உடன் பிறந்தவர்கள் தான்) சண்டை உண்டு. நண்பர்களிடம் ஒப்பீடு என்ற பெயரில் சண்டையும் உண்டு.
அம்மாவின் வெங்கலப்பானை (வெறும் பானையைத் தூக்குவதேற்கே, 10 டம்ளர் ஆர்லிக்ஸ் குடிக்கவேண்டும்). சர்க்கரைப்பொங்கல், அவியல், வடை என அன்று முழுவதும் , உள்ளே போய்க்கொண்டிருக்கும்.
மறுநாள் யானைகள் வரும் – கரும்பின் தோகை மற்றும் கரும்பு, சொளகு நிறைய அரிசி, வெல்லம் என கொடுப்போம். அன்றைய ஒன்றுபட்ட காங்கிரஸ் கட்சியின் சின்னமான இரட்டைக் காளை என்பதை உணர்த்தும் விதமாக, நீண்ட வரிசையாக, இரட்டைக் காளைகள் கொம்புகளில் அன்றைய காங்கிரஸ் கொடியுடன் நடைபோடும். மாலை நேரத்தில் அதை பார்த்து ரசிப்பதே தனி அழகு.
இல்லம் முழுவதும் மக்கள். தெரு முழுவதும் மக்கள். எல்லாரது வீடுகளும் திறந்தே இருக்கும், பாவுள், குச்சில் என்று பொருட்கள் வைத்திருக்கும் அறைகள் இருந்தன. தனியாக எனக்கு தெரிந்து privacy என்று பகலில் மெத்தையுடன், படுக்கை அறை பார்த்த நினைவில்லை. எந்த வேறுபாடும் இல்லாமல் மகிழ்ந்து கொண்டாடிய தருணங்கள் அவை. இனி வருமா – காலம் தான் பதில் கூறவேண்டும்.
தொடர்ந்து, எனது மனைவி, மகன்கள் மற்றும் உறவு, நட்புக்களுடன், இது தொடர்கிறது. குறிப்பாக, காஞ்சிபுரத்தில் நாங்கள் இருந்த 10 வருடங்களிலும், பாரம்பரியமான மற்றும் விமர்சையான பொங்கல் விழாவைப் பார்த்து இருக்கிறோம்.
பொங்கல் பண்டிகை – இன்று
இன்றும் பொங்கல் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது என்பதில் இரு கருத்துகள் இல்லை. மகிழ்ச்சி, பண்டிகை, சாப்பாடு, உறவுகள் (கொஞ்சமாக என்றாலும்), ஏதோ ஒன்று குறையாகவே நெருடுகிறது. அதற்கு காரணம் காலத்தின் ஓட்டமா, பணிச்சுமையா, பணம் தேடும் வேகமா, தொலைகாட்சி மற்றும் கைப்பேசிகளின் பாதிப்பா – பதில் தெரியவில்லை , பண்டிகை, நாட்களாக கொண்டாடப்பட்டது , நாள் என்று வந்து விட்டது. இருப்பினும , அந்தப் பண்பாடு தொடர்வது மகிழ்ச்சியே.
பொங்கல் பண்டிகை – என்றென்றும்
கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது
ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது?
மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு
கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வம் இன்று சேராதோ?
தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ?
என்ற உலக மாகலைஞன் நடிகர் திலகம் நடித்த பழனி படத்தில் வரும் கவியரசின் வரிகளுகேற்ப நாம்கொண்டாடும் பண்டிகைகள் எல்லாமே இயற்கை மற்றும் மக்கள் வாழ்வு சார்ந்து இருப்பதால், இந்தப் பண்டிகைகள் நிச்சயம் எல்லாக் காலத்திற்கும் தொடரும். நமது கலாச்சாரம், பண்பாடு தொடரும், இது தான் உண்மை,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
எந்த ராசிக்காரர்களுக்கு எந்த எந்த வர்ணங்கள் பலன் தரும்?
ச.நாகராஜன்
நமது முன்னோர்கள் உலக இயற்கைய அனைத்தையும் மிகத் தீவிரமாக, தெளிவாக ஆராய்ந்தவர்கள்.
மரம், செடி, கொடி, பறவைகள், புழு, பூச்சிகள், வர்ணங்கள், நேரம், காலம், இரவு, பகல், வெளி, விண்வெளியில் உள்ள கிரகங்கள், நக்ஷத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை அவர்கள் கூர்ந்து கவனித்ததோடு அந்த உலக இயற்கைக்கும் மனிதனுக்குமான சம்பந்தத்தையும் ஆராய்ந்து முடிவுகளை சாஸ்திரங்களாக அமைத்துத் தந்தனர்.
இவற்றில் பல, இன்றைய நவீன அறிவியல் ஆராய்ச்சி ஆராய்ந்து தரும் முடிவுகளோடு ஒத்திருப்பது ஆச்சரியத்திற்குள்ள ஒரு விஷயமாகும்.
ஸ்வாமி விவேகானந்தர் கூறினார்: “நமது ரிஷிகள் காலத்திற்கு முற்பட்டவர்கள். அவர்கள் கூற்றெல்லாம் மெய் என்பதை உலகம் உணர பல காலமாகும்”
இதோ இங்கு ராசிகளுக்கு உகந்த வர்ணங்கள் கீழே தரப்படுகின்றன.