புதிய கோவில்கள் , பெரிய சிலைகள் தேவையா? (Post No.11,790)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,790

Date uploaded in London – –  10 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தமிழ் நாட்டிலுள்ள சில சைவக் கோவில்கள் மிகவும் பாழடைந்த, பரிதாப நிலையில் உள்ளன. வைணவக் கோவில்களை வைணவர்களே நன்கு பராமரிக்கிறார்கள்; அல்லது அந்த மடாதிபதிகள் (ஜீயர்கள் ) நன்கு  நிர்வகிக்கின்றனர். பட்டாசார்யார்களின் வாட்ட சாட்டமான உடல் அமைப்புகளே இதற்கு சான்று.

நான் பிப்ரவரி 2023ல் சென்ற கோவில்களில் உண்டியலில்  காசு போடவில்லை. அவை திராவிட திருடர்களுக்கு, இந்து தெய்வங்களைத் திட்டும் அயோக்கியர் கைகளில் சிக்கிவிடும் என்ற அச்சத்தால் இப்படிச் செய்கிறேன். பத்திரிக்கைச் செய்திகளும் என் அச்சத்தை நியாயப்  படுத்துகின்றன. இன்னொரு விஷயமும் எனக்குப் புரியவில்லை. புதிய கோவில்களை ஏன் கட்டுகிறார்கள்?

கோவிந்தபுரத்தில் விட்டல் மந்திர் என்ற பெயரில் பிரமாண்டமான புதிய கோவிலை நிர்மாணித்து இருக்கிறார்கள். அதற்குச் செல்ல லிப்ட் LIFT  இல்லை. வெய்யில் காலத்தில் சலவைக்கல் படிகளில் ஏறிச்  சென்று தரிசிக்க வயதான பெரியோர்களால் இயலாது.

இந்தக் கோவில் எங்கள் லண்டனிலுள்ள நீஸ்டன் சுவாமி நாராயண் கோவில் NEASDEN SWAMINARAYAN TEMPLE IN LONDON போலத்தான் உள்ளது. அதாவது பொம்மைக் கண்காட்சி. ஆகமக் கோவில்கள் போல புனித வைப்ரேஷன்கள் DIVINE VIBRATIONS  அங்கு இராது. ஆயினும் அப்படியே இளமை முதல், பார்த்துப்  பழக்கப்பட்டவர்களுக்கு உதவக் கூடும். நம்பிக்கைதானே முக்கியம்! சூட , தீபாராதனை, அபிஷேக ஆராதனை அல்லவே!! என்னுடைய சுவாமி நாராயண் நண்பர்கள் பூண்டு, வெங்காயம் வாசனை கூட அறியாதவர்கள்; தூய STRICT VEGETARIANS வெஜிட்டேரியன்கள் .இதுவல்லவோ பெருமை!!

xxxx

என் மனதில் எழுந்த கேள்விகள்????????????????????????

பழைய கோவில்கள் பாழடைந்து போகும் நிலையில் புதிய கோவில்கள் அவசியமா?

50, 60 அடி உயரத்தில் மார்பிள் / சலவைக்கல் படிகள் அமைத்தால் கிழவர்கள், கிழவிகள் ஏற முடியுமா?

லிப்ட் lift வைத்தால் புனிதமும் போய்விடும்; வீண் செலவும் ஏற்படும்.

புதிய கோவில்களுக்குத் தடை விதிக்க சாமியார்கள் மகாநாடு அறிவுரை சொல்லக்கூடாதா?

அதே கோவிந்தபுரத்தில் எல்லா சாமியார்களும் போட்டி போட்டுக்கொண்டு மடங்கள் அமைப்பது அவசியமா?

பிரம்மாண்டமான சிவன், ஆஞ்சனேயர் , ராமானுஜர், வீர சிவாஜி, பேனா சிலைகள் தேவையா?

அவர்கள் பெயரில் மிகப்பெரிய கல்யாண மஹால்கள், கூட்டம் நடத்தும் மண்டபங்கள்; மருத்துவ மனைகள், பள்ளிக்கூடங்களைக் கட்டலாமே ; அவர்கள் பெயரில் சிறந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் கொடுக்கலாமே , ஆராய்ச்சிசாலைகளை  அமைக்கலாமே ; தபால்தலைகள், நாணயங்களை வெளியிடலாமே ஏனைய நாடுகள் இத்தகைய வீண் செலவுகளைச் செய்கிறார்களா? என்று சிந்திக்கலாமே?

XXX

எனது யோஜனைகள் MY SUGGESTIONS

எந்தக் கோவில் உண்டியலிலும் காசு போடாதீர்கள்.

திராவிட திருடர்களுக்கு, திராவிட கமிசன் ஏஜெண்டுகளுக்குத் தெரியாமல் பட்டர்களிடம் காசு கொடுங்கள்.

சில இடங்களில் இத்தகைய ஏஜெண்டுகள் பட்டர் தட்டில் விழும் பணத்தை பைகளில் நிரப்பிக் கொள்வதைக் கண்டேன் (பெரிய வரும்படி கோவில்களில், அல்லது திருவிழாக் காலங்களில் இப்படி நடக்கிறது.)

எந்தக் கோவிலுக்கும் பூ , தேங்காய் பழம் என்ற வடிவத்தில் செலவு செய்தால், சிறு வியாபாரிகளும் வயிற்றுப பிழைப்பை நடத்தலாம்.

xxxxx

நல்லதொரு காட்சியும் கண்டேன் ; 1000 பசுக்கள்

1000 COWS; BIG GO SAALAA

விட்டல் மந்திருக்கு எதிராக பெரிய கோ சாலா / பசு மடம் இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 1000 பசுக்களை வளர்க்கிறார்கள். அதற்கு நன்கொடை கொடுத்தபோது ரசீதும் கொடுத்தார்கள். கண்ணுக்கு முன்னால்  காணும் காட்சிக்கு பணம் கொடுத்து உதவுவது மகிழ்ச்சியும்  திருப்தியும்/ மன நிறைவும் தந்தது . இந்தப் பசும்பால் நல்ல இடங்களுக்கு அனுப்பப்படுகிறது

இதை எல்லாம் பார்த்துவிட்டு சென்னைக்கு வந்து ஒரு பத்திரிக்கையைத் திறந்தபோது கோவிந்தபுரத்தில் மனைகள் விற்கப்படும் என்ற விளம்பரத்தையும் கண்டேன். கொஞ்ச காலத்தில் இந்த கிராமம் கமர்ஷியல்  சென்டர் ஆகிவிடுமே என அச்சமும் மனதை ஆக்ரமித்தது .

நான் முதல் முதலில், ரிஷி கேஷ் சென்றது 1977ல்; கங்கை நதியைக் கண்டேன். ஆனந்தம் கொண்டேன். ரிஷிகேஷ் சிவானந்தர் ஆஸ்ரமத்தில் ஒரு பெளர்ணமி இரவில் தங்கி எளிமையான சாப்பாட்டையும் சாப்பிட்டேன் . மதுரைக்குத் திரும்பியவுடன், சிவானந்தர் புகழ் பரப்பும் தெய்வ நெறிக்கழகத்தினரிடம் இது பற்றி சொல்லி வியந்தேன்.

சாமிநாதா ! இப்போது நீ காணும் காட்சி உண்மையல்ல; 10, 15 ஆண்டுகளுக்கு முன்னர் இதை நீ பார்த்திருக்கவேண்டும்; அதுதான் இமய மலை முனிவர்களின் தபோவனம் என்றனர்.

எனக்குக் கொஞ்சசம் ஏமாற்றம்தான். ஆனால் அ  எல்லாம்  மறைக்கும் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது .

ஆண்டு நினைவில்லை; 2003 என்று நினைக்கிறேன். என் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு, ரிஷிகேஷ், ஹரித்வார் முதலிய இடங்களுக்குச் சென்றேன். அங்கு கங்கை நதியைக் காண முடியவில்லை!!! கங்கை நதியின் இருபுறங்களிலும் கடைகள், கடைகள், கடைகள்!!! கங்கா தேவி மறைந்துவிட்டாள் . என்னுடன் வந்த ஹிந்தி பேசும் உறவினர்களிடம் படித்துறை எங்கே இருக்கிறது என்று கேளுங்கள் என்றேன். அவர்களும் ஒரு சிறிய குறுகிய படித்துறையைக் காட்டினார்கள். அங்கே விலைக்கு வாங்கிய கேன்களில் water cans வேண்டுமளவுக்கு ஒரிஜினல் கங்கா ஜலத்தை நிரப்பிக்கொண்டோம் . அதற்கு முன்னதாக கங்கையின் புனித நீரைத் தலையில் ப்ரோக்ஷ்சித்துக் கொண்டோம்.

இதே அனுபவம் புட்டபர்த்தியிலும் எங்களுக்குக் கிடைத்தது. 1962 அல்லது 1963 என்று நினைவு. குடும்பத்துடன் சத்ய சாய் பாபாவைத் தரிசிக்க காரில் சென்றோம். பெண்கள் தங்குவதற்கு மட்டும் ஒரு ஷெட் உள்ளது. ஆண்கள் ஆங்காங்கே படுத்துக் கொள்ளலாம் என்றனர்நாங்கள் சிலர் கார் சீட்டிலும் சிலர் கட்டாந் தரையில் போதைய விரித்தும் படுத்தோம் . நல்ல குளிர். போதுமான ஸ்வெட்டர்களுடன் சென்றோம்.காலையில் அருகிலுள்ள கூரைக் கொட்டகைகலில்  குளிப்பதற்காக   வெந்நீர் விலைக்கு வாங்கலாம்  என்றனர். ஆளுக்கு ஒரு வாளி வெந்நீர் விலைக்கு வாங்கி குளித்தோம். அது நவம்பர் மாதம்.

கூட்டமே இல்லாத பிரசாந்தி நிலையத்துக்குள் எளிதில் சென்று பஜனையில் அமர்ந்தோம். காலையில் நல்ல கெட்டித்தயிர் மண் கலயத்தில் விலைக்குக் கிடைத்தது.

30, 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே புட்டபர்த்திக்குச் சென்றபோது மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் தென்பட்டன. பிரசாந்தி நிலையத்துக்குள் நுழைய லாட்டரி லக்கி பிரைஸ் முறை. வரிசை ஒவ்வொன்றுக்கும் Number எண் கொடுப்பார்கள்  . குலுக்கலில் எந்த நம்பர் NUMBER வருகிறதோ அந்த வரிசை முதலில் செல்லும். பிரசாந்தி ஹாலுக்குள் நுழைவதற்கு முன்னர் எலெக்ட்ரானிக் கேட். மொபைல் போன், காமெரா முதலிய சாதனங்களுக்கு அனுமதி இல்லை.

உலகமும் தர்மமும் தலை கீழாக மாறிவிட்டது .

xxxx

கடைசி யோஜனை:– LAST SUGGESTION

கூட்டம் இல்லாத கோவிலுக்கு இப்போதே போய்விடுங்கள்

பள்ளி, கல்லூரி பரிட்சை நடக்கும் நேரத்தில் தலங்களுக்குப் போங்கள் .கூட்டம் இராது .

கூட்டம் வராத, திரைபோடாத நேரத்தை அறிந்து செல்லுங்கள்.

xxxxx

காஞ்சி மஹா சுவாமிகள் பிஸினஸ் !!!

காஞ்சி புரத்தில், ஓரிருக்கையில் காஞ்சி மகா சுவாமிகள் அதிஷ்டானம், மணி மண்டபம் இருப்பதில் பொருள் உண்டு. ஆனால் ஊருக்கு ஊர் அவர் பெயரில் மணி மண்டபம், கோவில் கட்டுவதில் அர்த்தமில்லை. அவர் பெயரில் வேத பாட சாலைகள் , ஸம்ஸ்க்ருதக் கல்வி நிலையங்களை அமைக்கலாம். இப்படி ஒரு புதிய மஹாசுவாமிகள் மணி மண்டபம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது. கட்டிடத்தைக் கட்டி பராமரிப்பதற்குப் பதிலாக வேத பாட சாலைகளை பராமரிப்பது, அவர்களுக்காக தங்கும் வசதிகளை செய்து கொடுப்பது புண்ணியமாக ருக்கும். அங்கு சிறிய அளவில் படங்களுடன்  சந்நிதிகள் இருப்பது போதுமானது .

ஒரு 50, 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இவைகளை யார் நிர்வகிப்பர்? அவர்களுக்கு நமக்குத் தெரிந்த அளவுக்கு மதிப்பும், மரியாதையும் தெரியுமா?  மஹா ஸ்வாமிகள் மணி மண்டபத்தை இதே பக்தி சிரத்தையுடன் பராமரிப்பாளர்களா ?

இது போன்ற விஷயங்களில் மடாதிபதிகள் தங்கள் கருத்துக்களைப் பட்டவர்த்தனமாகத் தெரிவிக்க வேண்டும்; காசியிலோ அயோத்தியிலோ, மதுராவிலோ, செட்டியார்கள் தங்கும் விடுதிகளைக் கட்டுவதில் பொருள் உண்டு. தமிழ்நாட்டில் மணி மண்டபங்கள், சிலைகள் தேவையா? சிந்திக்க வேண்டும். அவர்களுடைய சொற்பொழிவுகளை சிறிய பிரசுரங்களாக பல மொழிகளில் வெளியிடலாமே. இலவசமாக விநியோகிக்கலாமே

xxxx

ஒரு சுவையான கான்வர்சேஷன் INTERESTING COVERSATION

2022ல் ஒரு முறை இந்தியாவுக்குச் சென்றேன். அப்போது திருவண்ணா மலை கோவிலுக்குச் சென்றேன். கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருந்தது; இரண்டு குடும்பங்களின் அபூர்வ சந்திப்பு அங்கே வாயிலில் TEMPLE GATE நடந்தது. அதை நான் ஓட்டுக் கேட்காமலேயே என் காதில் சம்பாஷணை விழுந்தது.

என்ன குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்திருக்கிறீர்கள்?– முதல் குடும்பம்

ஓ அதுவா? பையன்களுக்கு இன்றுதான் கடைசி விடுமுறை நாள்;; பையன்களின் நச்சரிப்புத் தாங்கவில்லை; விடுமுறைக்கு எங்கும் கூட்டிச் சொல்லவில்லையே என்று இங்கு அழைத்து வந்தேன்.– இரண்டாம் குடும்பம்.

என் மனதில் தோன்றிய எண்ணம்:

அடக் கடவுளே! வண்டலூர் மிருகக் காட்சி சாலையும் இந்தக் கோவிலும் ஒன்றுதானோ!

கோவில் என்பது ஒரு மியூசியமோ!

எப்படியாகிலும் இருக்கட்டும்; பிஞ்சு உள்ளங்களுக்கு இந்தக் கடவுள்களை அறிமுகம் செய்துவைத்த குடும்பங்களைப் பாரட்டத்தானே வேண்டும்?

 –சுபம்— 

tags-புதிய கோவில்கள், சிலைகள், தேவையா, விட்டல் மந்திர் , கோவிந்தபுரம், கோ சாலை, 1000 பசுக்கள், என் யோஜனைகள் , மஹா ஸ்வாமிகள் , மணி மண்டபம், , பிஸினஸ் 

சொறி நாய் சிங்கமான கதை! வாரியார் சொன்ன 2 குட்டிக் கதைகள்-part 2 (Post No.11,789)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,789

Date uploaded in London – –  10 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 2

சொறி நாய் சிங்கமான கதை

ஒரு காட்டில் ஒரு முனிவரின்  ஆஸ்ரமம் இருந்தது. அவர் கருணையே வடிவானவர். அந்த ஆஸ்ரமத்துக்கு  வெளியே ஒரு சொறி நாய் வசித்தது. அது ஒரு சோனி நாய்; எலும்பும் தோலுமாகக் காட்சி அளித்தது. ஒருநாள் ஒரு ஓநாய் திடீரென்று தோன்றியது. அதைச் சாப்பிட இருந்த நேரத்தில் முனிவர் பார்த்துவிட்டார். உடனே தனது மந்திர சக்தியால் அதை பெரிய ஓநாய் ஆக்கினார். உடனே ஓநாயாக மாறிய அந்த நாய், காட்டிலிருந்து வந்த ஓநாயை விரட்டி அடித்தது.

நாட்கள் உருண்டோடின. ஒரு நாள் திடீரென்று ஒரு சிறுத்தை தோன்றியது. அது ஒநாயைத் தாக்க வரும் தருணத்தில் முனிவர் பார்த்துவிட்டார். உடனே சொறிநாயாகஇருந்து ஓநாயாக மாறிய பிராணியை நீ வலிமையான சிறுத்தை ஆகக்கடவது என்றார் . அந்த ஓநாயும் பெரிய சிறுத்தைப் புலியாக மாறி, காட்டிலிருந்து வந்த சிறுத்தையை விரட்டி அடித்தது.

வாரங்கள், மாதங்கள் சென்றன. ஒருநாள் காட்டிலிருந்து ஓரு மதயானை பிளிறல் சப்தத்துடன்  ஒடி வந்தது. உடனே ஆஸ்ரமத்துக்கு வெளியே நின்ற சிறுத்தை அதன் மீது பாய்ந்தது. ஆனால் மத யானையை அதனால் சமாளிக்க முடியவில்லை. உடனே யானையின் எதிரி சிங்கம் என்பதால் முனிவர் அந்த சிறுத்தைப் புலியை சிங்கம் ஆக்கினார்.

யானைக்கு சிம்ம சொப்பனம் என்பது பழமொழி. அந்த சிங்கம் யானையை எளிதில் விரட்டி அடித்தது.

சிங்க ராஜா காட்டில் எதிர்க்கட்சி இன்றி உலவி வந்தார். பதவி மோகம் தலைக்கு ஏறியது. அது நினைத்தது-  சொறிநாயாக இருந்த என்னை இன்று சிங்க ராஜா  நிலைக்கு உயர்த்திய முனிவருக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும். அவரையே சாப்பிட்டால் அது நமக்கு முனிவரின் அபூர்வ தவ வலிமையைக்  கொடுத்துவிடும் என்று எண்ணியது.

இந்த தீய எண்ணத்துடன் ஆஸ்ரமத்தை அணுகியது. முனிவரோ தியானத்தில் அமர்ந்து இருந்தார். ஆனால் அவர் முக்காலமும் உணர்ந்த த்ரிகால ஞானி. சிங்கத்தின் தீய நோக்கம் அவருக்கு ஞான த்ருஷ்டியில் தெரிந்தது.

ஆஸ்ரமத்துக்குள் சிங்கம் நுழைவதைக் கண்டார்.

சீ நாயே !

ஓ நாயே !

வா நாயே !

போ நாயே !!!

என்று சொன்ன மாத்திரத்தில் அது ஓநாயாகி , சீ நாய் என்று சொல்லும்படி மீண்டும் சொறி நாயாகியது .

அவர் போ நாயே என்று சொன்னபோது அது போயாகிவிட்டது.

XXX

MY COMMENT’S

கீழ் மக்களை உயர் மட்டத்தில் வைத்தாலும் அவர்களின் நாய்க்குணம் மாறாது..

ஆன்மீகத்தில் உயர் நிலையை அடைந்த மாணிக்க வாசகர், அவரது திருவாசகத்தில் நூற்றுக்கும் மேலான இடங்களில் தன்னை நாயேன் என்று சொல்லி பாடுகிறார். உண்மையில் அவர் தன்னைச் சொல்லவில்லை  .நாய்க்குணம் உடைய மனிதர்களின் பிரதிநிதியாக தன்னை முன்னிலைப்படுத்தி பாடுகிறார். நாய்க்கு சிம்மாசனம் கொடுத்தது போல என்னையும் உயர்த்தினாயே என்று பாடுகிறார். இந்தக் கதைக்குப் பொருத்தமான வரி அது.

பாடல் எண் : 28 
கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான்
    கிளையிலான் கேளாதே எல்லாங் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே
நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே
காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங்
    கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை
மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்
    எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே . பொருள்ஒருவராலும் கேட்டு அறியாதவனும், தனக்கு ஒரு கேடில்லாதவனும், உறவு இல்லாதவனும், கேளாமலே எல்லாம் கேட்பவனும் ஆகிய இறைவன், என் சிறுமை நோக்காது நாய்க்குத் தவிசிட்டாற் போலத் (தவிசு – இருக்கைஆசனம்) தன் அருகில் இருத்தி, காட்டுதற்கரிய தன் உண்மை நிலையைக் காட்டி, நான் எக் காலத்திலும் கேட்காத வேத சிவாகமங்களின் பொருள்களைக் கேட்பித்து, மீட்டும் நான் பிறவாமல் என்னைத் தடுத்து ஆட் கொண்டான். இது ஒரு விந்தையாகும்.

XXXX

கீழ் மக்களை ஆட்சியில் அமர்த்தினால் அவர்கள் குணம் மாறாது, தீய செயல்களை செய்வார்கள். இதை  தசாவதாரக் கதைகளிலும் காண்கிறோம்.

தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் அது கொட்டிக்கொண்டே இருக்கும், நாயைக் குளி ப்பாட்டி  நடு வீட்டில் வைத்தாலும் அது வாலைக் குழைத்துக் கொண்டு ——— தின்னத்தான் போகும்  என்ற பழ மொழிகளை நினைவுபடுத்தும் கதை இது .

—-SUBHAM—–

Tags-  நாய், ஓநாய், சிங்கம், முனிவர், கீழ்மக்கள், நாய்க்கு தவிசு , சிம்மாசனம்

ஏழை கோடீஸ்வரனாகி செய்த அற்புத சேவை! (Post No.11,788)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,788

Date uploaded in London –   10 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஏழை கோடீஸ்வரனாகி செய்த அற்புத சேவை!

ச.நாகராஜன்

ஒருவேளை உணவுக்கு வழி இன்றித் தெருவில் பிச்சை எடுக்க மனமின்றித் தவித்த ஒரு சிறு பையன் மனதில் உழைக்க உறுதி பூண்டு அனாதைகளைக் காப்பாற்றுவேன் என்று சபதம் செய்து அதில் வெற்றி பெற்றான் என்றால் ஆச்சரியமாக இல்லை?

உண்மை இது, வெறும் பொய்யுரை இல்லை.

ஸ்காட்லாந்தில் க்ளாஸ்கோவில் பிரம்மாண்டமாக இன்று விளங்கும் அனாதை விடுதிகளுக்கு ஒரு ஆச்சரியமான மூல கதை உண்டு.

அதன் ஹீரோ வில்லியம் க்வாரியர் (William Quarrier)

வில்லியம் க்வாரியர் 1829ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி க்ரீன்நாக் என்னுமிடத்தில் பிறந்தார். ஆனால் அவர் பின்னால் மூன்றாம் வயதிலேயே க்ளாஸ்கோவிற்கு இடம் பெயர்ந்தார். 1903ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி அவர் மறைந்தார்.

அவரது தந்தையார் அவரது மூன்றாம் வயதிலே மனைவியை விதவையாக்கி மூன்று குழந்தைகளை ஆதரவற்று விட்டு விட்டு மரணமடைந்தார். ஒரே ஏழ்மை நிறைந்த குடும்பம். சாப்பிடவே வழியில்லை. பள்ளிப் படிப்பை நினைக்கக் கூட முடியாது.

ஒரு சமயம் 36 மணி நேரம் எந்த உணவும் இல்லாமல் வாடி வதங்கிய அவர் தெருவிளக்கின் அடியில் வந்து நின்றார். யாராவது உதவி செய்வார்களா என்று பார்த்தார். ஒருவரும் வரவில்லை.

பிச்சை எடுக்கவோ மனம் கூசியது. பின் தயாரிக்கும் வேலையில் சேர்ந்த அவர் வாரத்திற்கு ஒரு ஷில்லிங் சம்பாதித்தார். கூடவே தானாகவே படிக்க ஆரம்பித்தார்.

மிகக் கடுமையாக உழைக்க ஆரம்பித்த வில்லியம் ஷூ தயாரிக்க ஆரம்பித்தார். தனது குடும்பத்தையும் தனது வருமானத்தை வைத்துக் காப்பாற்றினார்.

இன்னும் அதிக உழைப்புத் தேவையாக இருந்தது. இன்னும் உழைத்தார். 23ஆம் வயதில் ஒரு சிறிய கடையை வைத்தார். கடை பெரிதானது.

பணம் சற்று சேர்ந்தது. ஆனால் 2000 ஷில்லிங் அவருக்குத் தேவையாக இருந்தது – ஒரு அனாதை இல்லத்தை ஆரம்பிக்க.

சில நண்பர்கள் உதவினர். 3 அனாதைச் சிறுவர்களை வைத்து ஒரு அனாதை இல்லத்தை ஆரம்பித்தார். நாளடைவில் அது பெரிதாக வளர்ந்து 2000 அனாதைக் குழந்தைகளுக்குப் புகலிடத்தைத் தந்தது.

1872ஆம் ஆண்டில் தனது 43ஆம் வயதில் ஓரளவு வெற்றி பெற்ற போது அவர் தான் பட்ட கஷ்டத்தை இப்படிக் கூறினார்:

“When a little boy, I stood in the High Street of Glasgow, barefoot, bareheaded, cold and hungry, having tasted no food for a day and a half, and, as I gazed at each passer-by, wondering why they did not help such as I, a thought passed through my mind that I would not do as they when I would get the means to help others. “

1890களில் அவர் பெயரால் ஒரு கிராமமே உருவானது. க்வாரியர்’ஸ் கிராமத்தில் (Quarrier’s Village) 34 விடுதிகள் உருவாயின. கூடவே ஒரு பள்ளி, ஒரு தீயணைப்பு நிலையம், ஒரு தேவாலயம் உருவாயின.

உலகம் அவரை வியப்புடன் பார்க்க, அரிய சேவை செய்த அவர் 1903இல்  மறைந்தார். தனது மனைவியின் அருகேயே அடக்கமாக விரும்பினார். அப்படியே க்வாரியர் கிராமத்தில்,  மவுண்ட் ஜியான் சர்ச்சில் உள்ள கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

இன்றும் க்வாரியர் அனாதை இல்லங்கள் தம் சேவையைத் தொடர்கின்றன.

உத்வேகம் ஊட்டும் உன்னத சேவா மனப்பான்மை கொண்டோரில் ஒருவர் க்வாரியர்!

***

Trees, Herbs, Shrubs and Climbers in Vedic Literatures – Part 5 (Post No.11,787)

Kustha- Costus Plant

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,787

Date uploaded in London – –  9 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Abbreviations used:-

SB= SATAPATA BRAHMANA, AV=ATHARVANA VEDA, RV= RIGVEDA, SAM= SAMHITA, BR=  BRAHMANA, UPA= UPANISHAD, TAI= TAITTRIYA, MAIT= MAITRAYANI, VAJA= VAJASNEYI, KAT= KATHAKA, AIT= AITARENYA

64.KUSTHA

Costus specious

C.arabicus

Sausaeria auriculata

AV5-4;6-10219-39-1 grows in mountains along with Soma

4-12-8;19-39-1 as a remedy highest place among herbs

Cures headache,diseases of the eyes,bodily affection

5-5-4-10 fever and consumption, Yaksma

All healing- Visva besaja

aromatic 19-39-9

Classed with salve,/anjana and Nalada/nard 6-102-3

All the above from atharva veda

Medicinal, drug

Xxx

65.LAKSMANA

A plant having red spots upon its leaves

AV 2-25-3 against abortion

Xxx

66.MADAAVATI

Grape wine?

Intoxicating plant,creeper

AV 6-16-2;4-7-4

May be grape wine

Xxxx

67.MADHUGA

Honey plant,sweet herb, a fruit?

AV 1-34-4;6-122-3

Mashup-dugha occurs in RV 6;70-1-5

Xxxx

68.MADHUKA

Bastia latifolia

AV 1-34-5- a love spell with this plant

Intoxicating drink is made from its flowers .

Xxx

69.MANJISTHA

Rubin cordifolia

Ait.bra.3-2-4

Sank.bra 7-7

Dye stuff

Xxx

70.MASAPARNI

Teramnus labialis

AV 2-25-3

Xxx

71.MASURA

Lens esculenta

Vaj.sam 18-12

Brha.Upanishad 6-3-22

Pulse,cereal

Xxxx

72.MASUSYA

A grain of the north country

Taittiriya.bra.3-8-14-6

Xxxx

73.Nada

Phragmatis maxima

RV.1-32-8;179-9;2-34-3;8-69-2;10-11-2;106-9

Nirukta 5-2

Nada is reed boat according to Pischel-1-32-8 in RV

Another is whip made up of Nada in 2-34-3

Max Muller also read it as reed in 10-11-2

But in RV10-105-4 and 10-11-2 idea of a river is clearly indicated.

In bengal and other places palmyra is used for such purposes.

Use Boats, furnitures

Xxx

74.Nalada

Naladi

Nardostachys jatamansi

AV 6-102-3

In aranyakas used for garland.

Xxxx

75.Naraaci

A poisonous plant

AV 5-31-4

Xxx

76.Nilakalasala

Neelagalasala

Grain creeper

AV 6-16-4 according to Whitney

Xxx

77.Nispava

See under Khalsa

Xxx

78.Nivara

A variety of wild paddy

Kath sam.12-4

Maitrayini.sam.2-4-10

Vajasneyi sam.18-12

SB.5-1-4-14;3-3-5

Also Taittiriya br.1-3-6-7 etc

Cereal

Xxx

79.Nyagrodha

A huge tree with hanging roots

Ficus bengalensis

RV 1-24-7;Pischel 1-113,114

AV 4-37-4;5-5-5

Aitareya Brahmana 7-30-31

SB.5-3-5-13;8-2-7-3

Chandogya Upanishad 6-12-1

Also Taittiriya, Vajasneyi samhitas

Sacrificial

Xxx

 To be continued……………………………

Tags- Vedic Plants, Part 5, Costus, Kustha

Story to illustrate Vyasa’s Golden Saying Paropakaaraaya: Punyaaya (Post No.11,786)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,786

Date uploaded in London – –  9 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Vyasa was the greatest writer and compiler in the world. No one in the world of literature comes closer to him. He is credited with the world’s longest epic Mahabharata and 18 Puranas. He compiled all these along with his original mater. They run to millions of pages with billions of words. Mahabharata itself has 200,000 lines with over million words.

No one in his or her life can easily read and understand the real meaning of all his writings. He lived just before the beginning of Kali Yuga in 3102 BCE. He knew that in the Age of Iron/ Kali Yuga , no one will have time to read them in Sanskrit or in translations. So he summarised the message of the Eighteen Puranas in two lines:

अष्टादशपुराणानां सारं व्यासेन कीर्तितम् |

परोपकार: पुण्याय पापाय परपीडनम् ||

Ashtaadasa puraanaanaam saaram vyaasena keerthitham

Paropakaaraayah punyaaya paapaaya paapeedanam

The meaning of the above couplet is

Helping others earns good merits (Punyam)

Harming others is Sin (Paapam); that is the gist of the contents conveyed by Vyasa in his 18 Puranas.

Purana is translated as Mythology by half baked westerners. That is wrong. Sumerian, Egyptian, Greek and Babylonian stories are rubbish myths. But Hindu Puranas are ancient lore, ancient history. They follow a structure. It is defined as the Pancha Lakshana (Five Principles) It has History, Geography, Morals etc.

Xxxx

Coming back to Vyasa’s message, ‘Help others’, we are told a story by famous religious speaker Sri Kripananda variar (kripaananda vaariyaar).

There was a king in a country who had 12 wise ministers. The king announced a big feast on a particular date, may be his birth day or his coronation day. All the government servants including the ministers were eagerly waiting for the day. Their imagination went wild. They thought of all the tastiest dishes in the country. The very thought made their mouths to water.

The big day came. The king took them to the dining hall. Their expectation was proved true. They were not disappointed. The tastiest dishes in the cookery book were all there. Hundreds of  dishes were arranged in order. All the invitees were seated.

The king made a big announcement. No, it was an order by the king.

No one should eat with their hands bent. If anyone sees bending their hands while eating, the hands will be cut off. Here are my soldiers who will keep an eye on you to execute my orders.

Enjoy your meals, saying this, he went out.

All were surprised and shocked; dumbfounded and stunned. One of the wisest ministers stopped panicking and thought laterally. His lateral thinking helped all in the hall.

He announced,

Please stretch your hand and mix the food as we do it at home; but don’t take it to your mouth; with the stretched hand feed the nearby person. Every one heaved a sigh of relief and did what he said. They enjoyed the meals fully without leaving a single bit on their plates. The king entered the hall to see how they were coping with his order. He felt very happy to see everyone enjoying the meal.

He said ‘Stop Eating and Listen to me’.

I want everyone in the country to help his neighbour this way. That is the message I wanted to convey. Now you can eat normally with your hands.

This is what Vyasa also conveyed through his Eighteen Puranas. If everyone in the country help others, the world will be a paradise.

Xxx

Before finishing this story ,Sri Variar added one more illustration.

When you use your Index finger to say something, the other three fingers except thumb are folded and they point towards you.

If you say YOU ARE A FOOL pointing to someone the other three fingers say the same to you.

If you say YOU ARE A WISE MAN, the other three fingers say the same to you.

If you help one person, and many will help you or your family.

So helping others is Good and earns Punya.

(Hindus believe that earning Punya is like depositing money in your bank account in the heaven. Accumulating Paap/ sin is taking loan from the Bank of Heaven. Your bank balance will decide your fate after you die.)

— subham—

Tags- Paropakaraya, Vyasa, helping others, Punyaya, Papa, Sin, Harming others, Kripananda Vaiyar, King, Feast, Dining

வாரியார் சொன்ன 2 குட்டிக் கதைகள் (Post No.11,785)- Part 1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,785

Date uploaded in London – –  9 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.பெரிய விருந்து படைத்த ராஜா கதை

தமிழ் கூறு நல்லுலகத்தில் திருமுருக கிருபானந்தவாரியாரை அறியாதோர் எவருமிலர். நகைச்சுவை ததும்ப ஆன்மீக சொற்பொழிவுகள் ஆற்றி மக்களின் மனதில் நீங்காத இடம்பெற்றவர். அவருடைய மதுரை நகர சொற்பொழிவுகளை பல முறை நேரில் கேட்ட அனுபவம் எனக்கு உண்டு. அவைகளை மீண்டும் நினைவுகூறுவதற்காக  யூ ட்யூப் You Tube உதவியை நாடினேன். இதோ அவர் சொன்ன இரண்டு குட்டிக்கதைகள்

xxxx.

வியாச முனிவருக்கு தீர்க்க தரிசனம் உண்டு. கலியுகம் துவங்குவதற்கு சற்று முன்னர் வாழ்ந்தவர் அவர். கலியுகத்தில் மக்களை திசை திருப்பும் ஏராளமான விஷயங்கள் வரும் என்பதை உணர்ந்து, தன்  காலத்தில் நிலவிய அத்தனை விஷயங்களையும்  சம்ஸ்க்ருத மொழியில் தொகுத்தார். அதாவது அவர் எழுதிய விஷயங்களோடு ஏனைய விஷயங்களையும் தொகுத்து நமக்கு அளித்தார். உலகிலேயே நீண்ட இதிகாசமான மஹா பாரதத்தை ஒரு லட்சம் ஸ்லோகங்களாகத் தொகுத்தார். அதன் பிறகு 18 புராணங்களையும் தொகுத்தார். இவ்வளவையும் படிப்பதற்கு ஒரு  வாழ்நாள் போதாது..

அடடா, எனக்கு இவ்வளவற்றையும் ஸம்ஸ்க்ருதத்திலோ அதன் தமிழ் மொழிபெயர்ப்புகளையோ படிக்க வாய்ப்பில்லையே என்று வருத்தம் உருவோருக்கு அவரே 18 புராணங்களின் சாரத்தை இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார் . இதோ அந்தப் பாடல்

अष्टादशपुराणानां सारं व्यासेन कीर्तितम् |

परोपकार: पुण्याय पापाय परपीडनम् ||

அஷ்டாதச புராணானாம் ஸாரம் வ்யாஸேன கீர்த்திதம்

பரோபகாராய: புண்யாய பாபாய பரபீடனம்

பதினெட்டு புராணங்களின் ஒட்டுமொத்த கருத்தை வியாச முனிவரே விளம்பிவிட்டார்.

பிறருக்கு உதவி செய்வதே புண்ணியம்  தரும் செயல்;

பிறருக்கு தீங்கு செய்வதே பாபம்  தரும் செயல்.

இதை எல்லோரும் கடைப்பிடித்தால் உலகமே சொர்க்க லோகம் ஆகிவிடும் .

xxxx

இதை விளக்க வாரியார் சுவாமிகள், கிழ்கண்ட கதையைக் கூறினார் . அதைச் சுருக்கமாக என் சொற்களில் வடிக்கிறேன் .

ஒரு நாட்டில் ஒரு ராஜா  இருந்தான்; அவனுக்கு 12 மந்திரிகள். அவன் ஒரு பெரிய விருந்துக்கான தேதியை அறிவித்தான். ராஜா  விருந்து கொடுக்கிறார் என்றால் கேட்கவா வேண்டும்? முதல் நாள் முதல் யாரும் சாப்பிடாமல் வயிற்றைக் காயப்போட்டனர். சிலர் முன்னதாகவே இஞ்சி கஷாயம் முதலியன சாப்பிட்டு உடலைத் தயார் செய்தனர். எல்லோர் கற்பனையும் சிறகடித்துப் பறந்தது . நாட்டிலுள்ள சுவையான பண்டங்களை நினைக்க நினைக்க அமைச்சர்கள் நாவில் உமிழ்நீர் சுரந்தது.

மறு  நாளும் வந்தது . அமைச்சர்கள் அனைவரும் மற்ற ஊழியர்களுடன் சாப்பிடும் அறையான  Dining Hall டைனிங் ஹாலுக்கு வந்தனர். நாட்டின் புகழ் மிக்க சுவையா பண்டங்கள் அங்கே இருந்தன. கல்கத்தா ரசகுல்லா, பாம்பே ஹல்வா, திருப்பதி லட்டு, பல வகையான பாயசங்கள் , மெதுவடை, மசால் வடை, அப்பளம், பல வகையான கூட்டுகள்,கறிகள் , பாசுமதி அரிசியில் சோறு, தயிர் வடை, சாம்பார், ரசம் , கெட்டித் தயிர் எல்லாம் காணப்பட்டன. சமையல் வாசனை அனைவரையும் தூக்கிச் சென்றுவிடும்போல இருந்தது. தலை வாழை இலையில், அடி முதல் நுனி வரை, அனைத்தும் பரிமாறப்பட்டன .

ராஜா உரத்த குரலில் ஒரு உத்தரவு போட்டான்

சாப்பிடும்போது யாரும் கைகளை மடக்கக் கூடாது. அப்படி மடக்கிச் சாப்பிட்டால் கைகளை வெட்ட இதோ சேவகர்கள் நிற்கிறார்கள்.

அனைவரும் உண்டு மகிழ்க !!!

என்று சொல்லிவிட்டு வெளியே போனான் .

அனைவரும் திரு, திரு என்று முழித்தனர் . அந்த 12 அமைச்சர்களில் ஒரு புத்திசாலி இருந்தான். கையை மடக்காமல் சாப்பிட வழி ஒன்றுண்டு. ஒவ்வொருவரும் கையை நீட்டி சாதத்தைப் பிசைந்து மற்றவருக்கு ஊட்டுங்கள் என்றார் . உடனே அனைவரும் தன இலையில் இருப்பதை  எடுத்து மற்றவர்களுக்கு ஊட்டினர் . ராஜாவும் உள்ளே வந்து பார்த்து மகிழ்ந்தான்.

இதுதான் நான் சொல்ல வந்த செய்தி.

நாட்டு மக்கள் அனைவரும் மற்றவர்களுக்கு இது போல உதவி செய்ய வேண்டும்– என்றான்.

மந்திரிகள் அனைவரும் ராஜாவின் புத்திசாலித்தனத்தை மெச்சினார்கள்.

வியாசரும் இதையே சொல்கிறார். 18 புராணங்களும் இதைத்தான் காட்டுகின்றன; போதிக்கின்றன; பிறருக்கு உதவி செய்யுங்கள்; அதுவே மஹா புண்யம்.

XXX

இதைச் சொல்லிவிட்டு வாரியார் சுவாமிகள் வேறு ஒரு விளக்கமும் கொடுத்தார். பிறருக்கு தீங்கும் செய்யக்கூடாது; குறையும் சொல்லக்கூடாது. நீங்ககள் உங்கள் ஆள்காட்டி விரலால் மற்றொருவனை

நீ ஒரு முட்டாள் என்று திட்டினால் , அப்போது மூன்று விரல்கள் மடங்கிய நிலையில் உங்களை நோக்கி இருப்பதைக் காண்பீர் கள் ; அதன் பொருள் வேறு மூன்று பெயர்கள் உங்களை முட்டாள் என்று திட்டுகிறார்கள் என்பதாகும். அதையே இப்படி மாற்றி யோஜியுங்கள்

நீ ஒரு புத்திசாலி என்று ஒருவனை நோக்கிச் சொன்னால், அப்போது மடங்கிய மூன்று விரல்களும் உங்களை ,

நீ ஒரு புத்திசாலி, மேதாவி, அறிவாளி என்று சொல்லுகின்றன.

ஆகவே நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் ஒன்பது பேர் உங்களுக்கோ உங்கள் பிள்ளைகளுக்கோ உதவி செய்வார்கள் என்று சொல்லி , வாரியார் சுவாமிகள் பிரசங்கத்தை முடித்தார்.

XXXX

சொறி நாய் சிங்கமான கதை

கீழ்மக்களை உயர்த்தி ஆட்சியில் அமர்த்தினால் என்ன  நிகழும் என்பதை விளக்கும் வகையில் இந்தக் கதை அமைந்துள்ளது

தொடரும்………………………………….Tags- வாரியார்,குட்டிக் கதைகள், பெரிய விருந்து, ராஜா ,கதை, பரோபகாராய: புண்யாய, 18 புராணங்கள், சாரம், வியாசர் 

கிருஷ்ண சைதன்யரின் தியாகம்! (Post No.11,784)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,784

Date uploaded in London –   9 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கிருஷ்ண சைதன்யரின் தியாகம்!

ச.நாகராஜன்

கிருஷ்ண சைதன்யரின் கிருஷ்ண பக்தியைப் பற்றிக் கேள்விப் படாதவர் இருக்க முடியாது.

இளமையில் இவர் நிமாயி என்றே அறியப்பட்டார்.

நவத்வீபத்தில் இவர் வாழ்ந்து வந்தார்.

மிகப் பெரும் அறிவாளியான இவர் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார். பதினாறே வயதில் இலக்கணத்தைக் கற்றுத் தேர்ந்த பின் அவர் நியாய சாஸ்திரத்தைக் கற்க ஆரம்பித்தார்.

அதில் தேர்ந்த பின் அதைப் பற்றிய ஒரு நூலை எழுத ஆரம்பித்து முடித்தார்.

அவரது இளமைப் பருவ நண்பராகவும் வகுப்பில் இணைந்து படித்தவராகவும் இருந்தவர் பண்டிட் ஶ்ரீ ரகுநாதர்.

அவரும் பேரறிஞர். அவரும் நியாய சாஸ்திரம் பற்றிய ஒரு நூலை எழுதலானார்.

ரகுநாதருக்கு நிமாயியும் நியாய சாஸ்திரம் பற்றி ஒரு நூல் எழுதியது தெரிய வந்தது.

நிமாயி எழுதிய நூலை அவர் பார்க்க விரும்பினார்.

ரகுநாதர் தனது விருப்பத்தை நிமாயியிடம் கூறினார்.

மறு நாள் வகுப்பிற்குச் செல்லும் போது தனது நூலை எடுத்து வந்தார் நிமாயி.

அக்கரைக்குச் செல்ல இருவரும் படகில் அமர்ந்தனர்.

நிமாயி தனது நூலை எடுத்து ரகுநாதருக்கு வாசித்துக் காண்பிக்க ஆரம்பித்தார்.

பொருள் செறிவும் சொற் செறிவும் நிறைந்த அந்த நூலைக் கேட்ட ரகுநாதர் ஓவென்று அழ ஆரம்பித்தார்.

அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நிமாயி, “ரகுநாதரே! என்ன ஆயிற்று? எதற்காக அழ வேண்டும் இப்படி?“ என்று வியப்புடன் கேட்டார்.

“எனது நியாய சாஸ்திரம் நூலைப் படித்தவர்கள் இது மட்டுமே நியாய சாஸ்திரத்தில் ஒப்பற்ற நூல் என்று சொல்வார்கள் என்று இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் நூலைக் கேட்டவர்கள் இதை சீண்டக் கூட  மாட்டார்களே! எனது நம்பிக்கை சிதைந்து வீணாகி விட்டதே! அதை நினைத்து வருந்தி அழுதேன்” என்று மனம் திறந்து வெளிப்படையாகத் தான் அழுத காரணத்தை ரகுநாதர் விளக்கினார்.

“அட, இந்த சின்ன விஷயத்திற்காகவா அழுகை?” என்று கேட்ட நிமாயி கடகடவென்று சிரித்தார்.

ரகுநாதருக்கு ஒன்றும் புரியவில்லை.

“இதோ இந்த நூல் எனது நண்பருக்கு இப்படி ஒரு வேதனையைத் தரும் என்றால் அது தேவையற்ற ஒன்று தான்” என்று கூறிய நிமாயி அதைக் கிழித்து கங்கை ஆற்றில் தூக்கி எறிந்தார்.

ரகுநாதர் விக்கித்துப் போய் பிரமித்தார்.

நிமாயியின் காலைப் பிடித்து வணங்கினார்.

நிமாயியோ சிரித்தவாறே அவரைக் கட்டித் தழுவினார்.

கிருஷ்ண சைதன்யரின் வாழ்வில் பக்தி, சேவை, தியாகம் இதெல்லாம் சர்வ சாதாரணமாக அமைந்திருந்தது.

***

Trees, Herbs, Shrubs and Climbers in Vedic Literatures – Part 4 (Post No.11,783)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,783

Date uploaded in London – –  8 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Abbreviations used:-

SB= SATAPATA BRAHMANA, AV=ATHARVANA VEDA, RV= RIGVEDA, SAM= SAMHITA, BR=  BRAHMANA, UPA= UPANISHAD, TAI= TAITTRIYA, MAIT= MAITRAYANI, VAJA= VAJASNEYI, KAT= KATHAKA, AIT= AITARENYA

51.KAARSMAARYA

Gmelina arborea

Tait sam. 5-2-7-3 etc

Maitra. Sam.3-2-6-7 etc

SB.3-4-1-6 and four more places

xxxx

52.KAASA

Saccharum spontaneum,

RV. 10-100-10

Used for mats etc.

Furniture

xxxx

53.KHADIRA

Acacia catechu

RV.3-53-19

AV.3-6-1; 5-5-5;

And several more places in other sahitas

Arundhati climbs on it ; AV.5-5-5

Medicinal, timber

xxx

54.KALAKHULVA

Dolichos biflorus

Brhad. Upa.

Pulse , fodder

xxxx

55.KHALVA

Canaka nispaava

Phaseolus radiatus

AV. 2-1; 5-23-8

Brhad. Upa. 6-3-32

Xxxx

56.KHARJURA

Phoenix sylvestus

Tait. Sam. 2-4-9-2

Katha. Sam.11-10-36-7

xxxx

57.KIMSUKA

Butea frondose, B.monospera

RV.10-85-20 wedding mantra; bridal car adorned with its flowers; 5-97-5 leaves

AV.3-5-4-8 amulets; cover of sacrificial dishes.

Other samhitas as well

xxxx

58.KIYAMBHU

RV 10-6-13

AV. 18-3-6

Planted in the place where dead bodies are burnt; also in tait.sam

xxx


59.KRSNALA

Abrus precatorius

Seeds used as standard units for currency

Kathaka and Taittri bra.

xxx

60.KULMAASA

Phaseolus mumgo or variatus

Chandogya Upanishad 1-10-2-7

xxxx

61.KUMUDA

Nymphaea lotus

Mentioned with other plans in AV. 4-34-5 and in several other places.

Flower

xxxx

62.KUSA

Eragrosis cynosuroides

SB.2-5-2-15

Sacrificial

xxxx

63.KUSARA

Saccharum officinarum

Only once mentioned in the RV. 1-191-3

It is sugarcane; Bengalis use this name.

Use- production of sugar

to be continued…………………………………………

tags- Vedic Plants, Part 4, Lotus, Kusa, Sugarcane

Snake Wonders of Tamil Nadu (Post No.11,782)

Parrot sitting at top (Please enlarge it to see), Tirumeeyachur

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,782

Date uploaded in London – –  8 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

8.3 feet long snake skin on Shivalinga found on 16-5-2002

7.5 foot long snake skin found on 21-5-2002 at goddess shrine

snake skin is framed and kept in the shrine

I visited over 40 Temples, Ashrams and Adhistanams (Samadhis) during my February 2023 India Trip. Of the 40++ places some are remarkable for their architecture , statues and miracles. I have written in detail in Tamil. I will just list only the miracles here.

Around Kumbakonam in Tamil Nadu, we have Nava Graha temples. I visited Tirupaampuram (Tiru+ Paampu+ Puram= Mr Snake Town). It is famous for Rahu and Ketu (Chaayaa Grahas= Shadows of Earth and Moon). Sanskrit word Graha means celestial objects with Gravity. English words Gravity, Grip, Grab etc came from Graha in Sanskrit. So it is not Nine “Planets”. It is Nine “celestial objects” with Gravitational Power.

xxxx

In Tiru Pampuram, we see Rahu and Ketu in special sanctum sanctorum. Siva is the main deity. All Hindu Gods and Goddesses are associated with SNAKES. English words Snake and Serpent are Sanskrit words (S+naaka=Snake; Sarppa= Serpent)

In Tiru Paampuram, Shiva Sannidhi (Sanctum sanctorum= Graba Graha) has two Pictures framed with glass. One shows the snake skin 8 foot long that was found in the Goddess Shrine. Another was found on Shiva Linga as garland in 2002. Both are displayed there.

Hindus look at snakes from two different angles. When Shiva wears it as his belt or garland, it means He controls all the Five senses like a Yogi/ saint. So the Five headed Snakes found in sculptures and Thevaram hymns represent Five Senses. If one controls them or channelise them one becomes a saint.

From another angle Snake represents Kundalini Power. Westerners do not know the A B C D of such a mighty power. If one can raise it from the bottom of mental body to the top, one gets liberation (from the cycle of birth and death); Half way through the body, one gets miraculous powers. This will distract many and push them downwards in life. That is why we see many BABAS in jails today.

Snake Towns from Kashmir to Kanyakumari

To teach proper Hinduism, our forefathers constructed SNAKE TEMPLES from Kashmir o Kanyakumari. We see

it in Ananta Nag (snake) district of Kashmir where we have Sesha Nag ( snake) lake and Nagerkoil in Tamil Nadu very near the land’s southern most tip. In between, we see thousands of SNAKE TOWNS in India- from Nagpur in Maharashtra to Nagoor in Tamil Nadu.

I visited three Snake Temples during this Indian Visit. One of them is above mentioned Tiru Paampu Puram = Holy Snake Town or Mr Snake god Town.

You will see huge snake statues erected at the back of the temple. The reason is Hindus associate Snake and Child birth. If one has killed a snake in one’s previous birth, he or she may not have a child in the next birth. So astrologers advise them to go to Snake Temples (Rahu and Ketu Grahas) and pacify the snakes with Pujas and other rituals.

Xxx

 I went to another snake temple Tiru Naeswaram ( Holy or Mr Snake God Town). Here Rahu  Graha (shadow Planet which cause Grahanas/eclipses by its shadow. It is believed even the milk that was poured on the statue becomes blue. The blue colour represents poison.

Xxx

In Kumbakonam, we have another Shiva temple named Nageswarar Temple. Nageswarar is Shiva with snake as belt or garland. One of the famous 12 Jyotir Lingas also has this name Nagesam.

Kumbakonam temple has an architectural wonder. There we see the Nataraja Mandapa designed as a SUN CHARIOT. One will be reminded of such Sun Chariots in Konark and Hampi. Four elephants and two horses pull that enormous chariot where Goddess Sivakami (consort of Nataraja/ Shiva) plays rhythmic beats and Lord Vishnu play music on his flute.

Kumbakonam Nageswaraar Temple Stone Chariot (This picture is used from another blog; thanks)

Xxx

All these SHIVA temples are portrayed in Thevaram Hymns. That means they are at least 1500 years old.

Xxxx

Tirumeeyachur Goddess Temple

In between Snake Temples we made it a point to visit Lalithaambikai Temple at Tiru Meeyachur. There we saw the beautiful goddess Lalitha Ambikai. This temple is famous because devotees believe that Lalithaa Sahasra Naamam (1000 name of Goddess) originated here. Hayagreeva ( neck as long as of a Horse) gave the 1000 names to Saint Agastya. Today millions of women recite this hymn everyday.

We saw some unusual things there. It is a Shiva temple. Goddesss’ right leg is folded, and left leg is left downward. Devotees offer bangles and sliver or gold anklets as offerings in the temple for fulfilling their vows. 11 or eleven and a half inch long anklet (Kolusu in Tamil) is accepted when it is brought with a proper tax paid receipt. Around Rs 4000 will be the fees for Abhisheka (bathing) and Prasad in Anklet Puja. Three-day advance notice is required for such a ritual. It will be done in the morning for 3 to 4 hours. We got some glass bangles as Prasad.

PARROT WONDER at TIRU MEEYACHUR

After we had the Darshan (Viewing of God) of Shiva we circumambulated the Prakara/ corridor. The priest in the Shiva shrine came running towards us and pointed out a parrot sitting at the mini tower of the shrine (Vimaanam in Sanskrit). He told us that it is a good and auspicious sign to see the sitting parrot which whispers the messages at the ear of Gods in the temple. He advised us to think about all the good things in the world so that they will be fulfilled by the Goddess Lalitha. Whether one believes in such miracles or not, thinking of Good things and praying for them is a positive sign. We did it as we are told.

—- subham—-

 Tags- Tirupampuram, Tirunageswaram, Snake miracles, sepent, wonders, snake skin, on god, Tiru meeyachur, Lalitha Sahasranamam, Kolusu, Anklet

நாகேஸ்வரன்- பாம்புகளை ஆட்டிப் படைக்கும் சிவ பெருமான் (Post No.11,781)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,779

Date uploaded in London – –  8 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

நாகேஸ்வரன் = பாம்பு ஈஸ்வரன் என்பது சிவ பெருமானின் திரு நாமங்களில் ஒன்று . 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்று நாகேசம். அது  தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ளது .

.தமிழ்நாட்டில் குடந்தையிலும் நாகேஸ்வரன் குடிகொண்டுள்ளார்.

பிப்ரவரி 2023 இந்தியப் பயணத்தில் கும்பகோணத்திலுள்ள நாகேஸ்வரன் கோவிலுக்கும் சென்றுவந்தோம். முன்னதாக திருப்பாம்புரம், திரு நாகேஸ்வரம் தலங்களைத் தரிசித்தோம்.

இன்று  நாகேஸ்வரர் கோவிலை தரிசிப்போம்

கும்பகோணம் நாகேஸ்வரன்  கோவில் பாடல்பெற்ற க்ஷேத்திரங்களில் ஒன்று. அப்படியானால் குறைந்தது 1500 ஆண்டுப் பழமை உடையது. இந்தக் கோவிலை நரகாசுரன், சூரியன் ஆகியோர் பூஜித்ததாக கோவில் வரலாறு சொல்லும். அதை மெய்ப்பிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மூன்று நாட்களில் சூரிய கிரணங்கள், மூலவர் சிலை மீது விழுகிறது. பல கோவில்களில் கர்ப்பக் கிரகத்துக்குள் சூரிய ஒளி புகும் வண்ணம் பிரம்மாண்டமான கோபுரங்களை எழுப்பிய தமிழர்களின் பொறியியலைக் கண்டு வியக்காதோர் எவருமில்லை . சில கோவில்களில் சந்திரனின் ஒளியும் இவ்வாறு விழுகிறது; அற்புதத்திலும் அற்புதம். இது இந்துக்களின் வானவியல் அறிவுக்கும் சான்று பகர்கிறது .

இந்தக் கோவில் அப்பர் பெருமானால் தேவார பாடலில் போற்றப்படுகிறது. அவர் இந்தக் கோவிலைக் குறிப்பிட்டு பாடுகையில் குடந்தைக் கீழ்க்கோட்டம் என்று சொல்லுவதால் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதிக்கு இருந்த பெயரையும் நாம் அறிய முடிகிறது. இது வில்வத்தில் தோன்றிய லிங்கம் என்ற நம்பிக்கையும் உளது (ஒருவேளை, வில்வ மரக் காட்டில் தோன்றியதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது என் சொந்தக் கருத்து ; இதே போல சூரிய ஒளி விழுவதால் சூரியன் பூஜித்த தலம் என்கிறார்கள் போலும்!)

சிவனின் திருநாமம் – நாகேஸ்வரர்

அம்மனின்  திருநாமம்- பெரிய நாயகி

இந்தப் பெயருக்கு ஏற்றவாறு பெரிய கோபுரங்களை உடையது இந்தக் கோயில்.

தல மரம் – வில்வம்

தீர்த்தம் : சிங்கமுக தீர்த்தம். தீர்த்தக் கிணற்றில் படிகள் இறங்கிச் செல்ல வேண்டும்இறங்கு வாயிலில் கல்லில் இரு சிங்கங்கள் சுதையில் உள்ளன.

xxx

சிற்பக் கலைச் சிறப்பு – சூரிய ரதம்

இந்தக் கோவிலின் நடராஜ மண்டபம் , ஒரு தேர் போலவும் அதை 2 குதிரைகளும் 4 யானைகளும்  இழுப்பது போலவும் அற்புதமாக  அமைக்கப்பட்டுள்ளது. இது சூரிய தேவன் ஆகும். இதைப்  பார்த்தவுடன்  கொனாரக்கிலுள்ள சூரிய ரதம் நினைவுக்கு வரும். குடந்தை ரதத்தில் பிரமாண்டமான சக்கரத்தைக் காணலாம். அதன் 12 ஆரங்கள் 12 ராசிகள் ஆகும். இந்த நடராஜ மண்டபத்தில் நட ராஜன் டான்ஸுக்கு / நடனத்துக்கு சிவகாமி அம்மை தாளம் போடுகிறார்; விஷ்ணு மியூசிக் Music தருகிறார்; அதாவது குழல் Flute ஊதுகிறார்.

அறம் வளர்த்தாள் தாளம் ஏந்த நடம்புரியும் சித்திரப் பொற் பொது உடையான் கோலம் போற்றி, என்று குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் பாடியதற்கு ஏற்ப அமைந்த சிலை வடிவோ என்னும்படி மிக்க அழகாக இருந்தது என்று வேங்கடம் முதல் குமரி வரை என்ற நூலில் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமே.

மகாமக உற்சவத்தின் போது இந்தக் கோவில் மூர்த்தியும் மகாமக குளத்திற்கு தீர்த்தவாரிக்குச் செல்லுவார்.

Xxx

பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள்

பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள் என்னும் மகான்; புதர் மண்டிக்கிடந்த இத் திருக்கோயிலைச் சீர்த்திருத்தித் திருப்பணிகள் செய்வித்து 1923-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார். ராஜகோபுரம், மேற்குக் கோபுரம், நடராஜ சபை, சுற்றுச் சுவர்கள், சிங்கமுக  தீர்த்தக்கிணறு முதலிய திருப்பணிகள் அவரால் செய்யப்பட்டவை. இதற்காக இம் மகான்,  தம் கழுத்தில் பித்தளைச் சொம்பு ஒன்றை உண்டிக் கலயமாகக் கட்டிக் கொண்டு தெருக்கள்தோறும் சென்று பிச்சையெடுப்பது போல நிதி திரட்டினார் .

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இவ்வாலயத்தின் உட்பிரகாரத்தில் ஆறுமுகப் பெருமானின் சந்நிதி உள்ளது. ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது தேவியர் இருவருடன காட்சி தருகிறார்.

xxxxx

அப்பர் தேவாரம் – ஆறாம் திருமுறை (Please go to thevaram.org for full meaning)

பாடல் எண் : 1

சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்

    சொற்பொருளுங் கடந்த சுடர்ச் சோதி போலும்

கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்

    கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்

மன்மலிந்த மணிவரைத்திண் தோளர் போலும்

    மலையரையன் மடப்பாவை மணாளர் போலும்

கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்

    குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே

பாடல் எண் : 2  

கானல்இளங் கலிமறவ னாகிப் பார்த்தன்

    கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்

ஆனல்இளங் கடுவிடையொன் றேறி யண்டத்

    தப்பாலும் பலிதிரியும் அழகர் போலும்

தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்

    செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்

கூனல்இளம் பிறைதடவு கொடிகொள் மாடக்

    குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே

பாடல் எண் : 3  

நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்

    நிலாஅலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை

ஆறலைத்த சடைமுடியும் அம்பொன் தோளும்

    அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்

ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையர் போலும்

    ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலும்

கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்

    குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே-3

Ratha/ Chariot at Hampi

பாடல் எண் : 4  

தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்

    சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்

செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி

    செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்

மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி

    மிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங்

கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்

    குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே- 4

பாடல் எண் : 7  

காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்

    கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்

சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்

    சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்

பாரிலங்கு புனல்அனல்கால் பரமா காசம்

    பரிதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலும்

கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்

    குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே

பாடல் எண் : 8  

பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்

    புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு

மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்

    மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல

தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து

    திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்

கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்

    குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

பாடல் எண் : 10 

ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை

    யிப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே

கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்

    குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும்

தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை

    சரசுவதிபொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க்

கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த

    குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே

Ratha/ Chariot at Konark

பாடல் எண் : 11 

செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்

    தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்

நெறிகொண்ட குழலியுமை பாக மாக

    நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்

மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்

    மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீழிட்டுக்

குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலும்

    குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே

–subham—

TAGS- குடந்தைக் கீழ்க்கோட்டம் , கும்பகோணம், நாகேஸ்வரர் கோவில், பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், கல் ரதம் , பெரியநாயகி , சூரிய ஒளி, கர்ப்பக்கிரகம் , அப்பர் தேவாரம்

.