
Post No. 12,313
Date uploaded in London – – 23 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

Quiz Number 49
1.மொத்தமுள்ள உபநிஷத்துக்கள் எத்தனை ?
xxxxxx
2.உபநிஷத் என்றால் என்ன?
xxxx
3.நசிகேதன் என்ற சின்னப்ப பையன் எமதருமனை சந்த்தித்து கேள்விகள் கேட்டான். இது எந்த உபநிஷத்தில் வருகிறது ?
4. உபநிஷத்துக்களில் மிகப் பழைய நூல் எது ?
XXX
5.ஐ.நா. சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடுவதற்கு காஞ்சி சங்கராச்சாரியார் அளித்த, மாதிரீம் பஜதா பாடலில் உள்ள த, த, த – கதை எந்த உபநிஷத்தில் வருகிறது?
Xxxx
6.பழைய பத்து உபநிஷத்துக்களுக்கு மட்டுமே ஆதிசங்கரர் பாஷ்யம் (உரை) செய்தார். அவையாவன ?
Xxxx
7. T.S.Eliot டி.எஸ். எலியட் என்ற அமெரிக்க எழுத்தாளரைப் போல அய்ரலாந்தில் ஒரு எழுத்தாளர், நமது உபநிஷத்தில் ஆர்வம் காட்டினார். யார் அவர்?
Xxxxx
8.சத்யமேவ ஜயதே / வாய்மையே வெல்லும் எந்த உபநிஷத்தில் வருகிறது ?
xxxx
9.மஹாத்மா காந்திக்குப் பிடித்த உபநிஷத் எது?
Xxxxx
10.உபநிஷத்துக்களை சம்ஸ்க்ருத மொழியிலிருந்து பாரசீக மொழிக்கு மாற்றிய முஸ்லீம் மன்னர் யார்?
–subham—

விடைகள்
1.பொதுவாக 108 உபநிஷத்துக்கள் என்று சொல்லுவார்கள் .( இதே பிளாக்கில் பட்டியல் உள்ளது). சிலர் 120 என்று சொல்லி தற்கால விஷயங்களையும் சேர் ப்பார்கள்
XXXXXX
2.‘உப-நி-ஸத’ என்றால் பக்கத்திலே உட்கார்ந்து கொள்வது என்று அர்த்தம். சிஷ்யனை இப்படி உட்கார்த்திவைத்துக் கொண்டு குருவானவர் செய்த உபதேசம்தான் உபநிஷத்துக்கள். ‘பிரம்மத்துக்குப் பக்கத்திலேயே போய்ச் சேரும்படியாகச் செய்வது’ என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம் (காஞ்சி பரமாச்சாரியார் 1894-1994 சொன்னது)
Xxxxxx
3.கடோபநிஷத்;இதில் தான் நசிகேதன் என்ற சின்னப் பையன் கதை வருகிறது.
Xxxx
4.பிருஹத் ஆரண்யக உபநிஷத்
மிகவும் பழைய உபநிடதம் இதுதான். கி.மு 800 என்பது வெளி நாட்டினர் கணிப்பு. மிகவும் பெரியதும் இதுதான். இதில் 400 பாடல்கள் உள்ளன. பிற்கால உபநிஷதத்தில் காணப்படும் எல்லா கருத்துகளும் இதில் விதை ரூபத்தில் இருப்பதை உணரலாம்..
xxxx
5.த…..த…..த….. என்ற மூன்று எழுத்துக்களை (சொற்களை) பிரபலமாக்கியோர் மூவர். ஒருவர் நமது காலத்தில் வாழ்ந்து, நமக்கு எல்லாம் அருள் புரிந்து சிவமயமாகிவிட்டவர்-காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994). மற்றொருவர் ஆங்கில இலக்கிய பாடம் படிக்கும் எல்லோருக்கும் தெரிந்த அமெரிக்க ஆங்கில மொழிக் கவிஞர்– நாடக ஆசிரியர் டி.எஸ்.எலியட் (1888—1965). மூன்றாவது மனிதர் , 3000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த ஒரு ரிஷி. பிருஹத் ஆரண்யக (பிருஹத்= பெரிய, ஆரண்யக= காடு) உபநிஷத்தில் த….த…த…..கதையை முதலில் நமக்குச் சொன்னவர். அதாவது வேத கால ரிஷிகள்.தாம்யத! தத்த! தயத்வம்
(த…..த…..த….. உபநிஷத் கதை இதே பிளாக்கில் உள்ளது)
xxxxx
6.“தசோபநிஷத்” என்று பத்தைப் பொறுக்கி ஸ்ரீ சங்கரர் அத்வைத பரமாக பாஷ்யம் பண்ணினார். பின்னால் வந்த விசிஷ்டாத்வைதம், த்வைதம் முதலியவற்றை சேர்ந்த பெரியவர்களும் இதே பத்துக்குத் தங்கள் தங்கள் ஸித்தாந்தப் பிரகாரம் பாஷ்யம் செய்தார்கள். இந்த பத்தையும் சுலபமாக ஞாபகத்தில வைத்துக் கொள்வதற்காகப் பெயர்களை ஒரு ச்லோக ரூபத்தில் கோத்துச் செல்வதுண்டு.
ஈச-கேன-கட-ப்ரச்ன-முண்ட-மாண்டூக்ய-தித்திரி|
ஐதரேயம் ச சாந்தோக்யம் ப்ருஹதாரண்யகம் தச||
ச்லோகத்தில் சொல்லியிருக்கிற order (வரிசைக் கிரமப்) படித்தான் ஆசார்யர்கள் பாஷ்யம் பண்ணியிருக்கிறார்கள். (காஞ்சி பரமாச்சாரியார் 1894-1994 சொன்னது)
சம்ஸ்க்ருத சந்தி விதிகளின் படி அ + உ = ஓ
ஈச + உபநிஷத் = ஈச + உபநிஷத் – ஈசோபனிஷத் ; ஈசாவாஸ் யோபநிஷத்
கேன+ உபநிஷத் = கேனோபநிஷத்
கட+ உபநிஷத் =கடோபநிஷத்
ப்ரச்ன+ உபநிஷத் =ப்ரச்னோ பநிஷத்
முண்டக + உபநிஷத் =முண்டகோ பநிஷத்
மாண்டூக்ய+ உபநிஷத் =மாண்டூக்யோ பநிஷத்
தைத்திரி|ய + உபநிஷத்= தைத்திரீ யோ பநிஷத்
ஐதரேய+ உபநிஷத் = ஐதரேயோ நிஷத்
சாந்தோக்ய+ உபநிஷத் = சாந்தோக்யோ பநிஷத்
ப்ருஹதாரண்யக+ உபநிஷத் = ப்ருஹதாரண்யகோபநிஷத்
Xxxxxx
7.அயர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற நாடக ஆசிரியர், கட்டுரையாளர், கவிஞர் வில்லியம் பட்லர் யேட்ஸ் WILLIAM BUTLER YEATS ஆவார்.
புராண, புராதன விஷயங்களில் ஆர்வம் கொண்ட அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசும் கிடைத்தது. அழகான ஐரிஷ் நடிகையைத் திருமணம் செய்துகொண்ட அவர், புரோஹித் சுவாமி PUROHIT SWAMI என்பவருடன் சேர்ந்து இந்து மதத்தின் உயர்ந்த தத்துவ நூல்களான பத்து உபநிஷதங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1938-ம் ஆண்டு வெளியிட்டார்.
xxxxxxxx
8.முண்டகோபநிஷத்தில் வருகிறது.
xxxxxx
9.ஈசோபநிஷத் அல்லது ஈசாவாஸ் யோபநிஷத் ; இது பற்றி அவர் 2, 3 பிரசாங்கங்களில் நீண்ட உரையாற்றியுள்ளார்.
xxxxxx
10.தாரா ஷிகோஷ் ; அவர் ஷாஜஹானின் மூத்த மகன்; அவுரங்கசீப்பின் சகோதரன் ; அவரை அவங்க சீப் கொன்றுவிட்டான் Dara Shikoh, was the eldest son ஒப்பி fifth Mughal emperor Shah Jahan and the brother of Aurangzeb.
——— subhan———
Tags- உபநிஷத், கேள்வி பதில், என்றால் என்ன, பாரசீக மொழி பெயர்ப்பு , தச , 108, சங்கரர் பாஷ்யம்