QUIZ தேன் பத்து QUIZ (Post No.12,385)

QUIZ தேன் பத்து QUIZ

QUIZ SERIES No.62

1.தேன் என்ற சொல்லுக்கு நிகரான மூன்று தமிழ் சொற்களை சொல்ல முடியுமா?

XXXXXX

2.தேன்களில் பல வகை உண்டு குறைந்தது மூன்று தமிழ் சொற்களை சொல்ல முடியுமாபூக்கள்பழங்கள் பெயரைச்  சொல்லாதீர்கள் .

XXXXX

தேனுடன் தொடர்புடைய எல்லோருக்கும் தெரிந்த ஒரு பறவை எது?

XXXXXX

4.உலகிலேயே பழைய தேன் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது ?

Xxxx

5.காடுகளில் மக்களும் வேடர்களும் என்ன சாப்பிட்டனர் ? காடுகளில் முனிவர்கள் எல்லோரையும் உபசரிக்க என்ன கொடுத்தனர் ?

XXXXXX

6.பழைய நூலான சரக சம்ஹிதை சம்ஸ்க்ருத மொழியில் தேன் பற்றி என்ன சொல்கிறது?

XXXXX

7.சர்க்கரைக்கும் தேனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

xxxxx

8.தேனீக்கள் பூக்களிலிருந்து தேனைச் சேகரிப்பதை எல்லோரும் அறிவோம்வேறு எந்தப் பிராணி அல்லது பூச்சியாவது தேன் உற்பத்தி செய்கிறதா ?

xxxx

9.தேன் ஏன் கெடுவது இல்லை ?

xxxx

10.தேன் எப்படி உற்பத்தியாகிறது?.

Xxx

விடைகள்

1.கள் , பிரசம், நறவு, (மது)

xxxx

2.மலைத் தேன், கொம்புத் தேன், பொந்துத் தேன் , புற்றுத் தேன் , மனைத்  தேன்

xxxxx

3.தேன் சிட்டு 

xxxxx

4.எகிப்திய பிரமிடுகளில் பழைய தேன் கண்டுபிடிக்கப்பட்டது

xxxxx

5.மக்களும் வேடர்களும் சாப்பிட்ட உணவு:தேனும் தினைமாவும் ; முனிவர்கள் எல்லோரையும் உபசரிக்கமது பர்க்கம் கொடுத்தனர் — இதில் தேனுடன் தயிர், நெய் அல்லது பால் கலந்து கொடுப்பது பெரிய உபசாரம் என்று இதிஹாச புராணங்கள் கூறுகின்றன.

xxxx

6.சரகர் எடுத்திய நூலில் மக்ஷிக , பிரமர செளத்ர பைத்தக என்ற நான்கு வகித்த தேன் களைக் குறிப்பிட்டு  (Makshika, Bhramara, Kshaudra and Paittaka) செந்நிற தேனீக்கள் கொண்டுவரும் தேன்தான் மிகச் சிறந்தது என்கிறார். அது நல்லெண்ணெயின்  நிறத்தில் இருக்கும் என்றும் சொல்கிறார் .

xxxx

7.சர்க்கரை அல்லது சீனியில் உள்ள இனிப்பு சுக்ரோஸ்; ஆனால் தேனிலுள்ள இனிப்பு குளூக்கோஸ், ப்ரக்டொஸ் .

தேனிலுள்ள சத்துக்கள்

பிரக்டோஸ்:fRUCTOSE 38.2%

குளுக்கோஸ்:Glucose 31.3%

மால்டோஸ்: Maltose 7.1%

சுக்ரோஸ்Sucrose 1.3%

நீர்: Water 17.2%

சர்க்கரை: Sugar 1.5%

சாம்பல்: Ah 0.2%

மற்றவை : Other ingredients 3.2%

xxxxx

8.ஆம்; குளவி வகைகளில் சில தேனை சேகரிக்கின்றன. அவை தென் அமெரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் காணப்படுகின்றன Some wasp species, such as Brachygastra lecheguana and Brachygastra mellifica, found in South and Central America, are known to feed on nectar and produce honey.

xxxxx

9.அதில் எந்த கிருமிகள் அல்லது பாக்டீரியாக்கள் வளரமுடியாது ; அதனால் கெடுவது இல்லை ;தேன் கெடாமல்  இருப்பதற்குக்  தேநீக்கள் அதை செய்யும் முறையும்  ஒரு காரணம்.

xxxxx

10.தேனீக்களில் , பூக்களுக்குச் சென்று தேனை சேகரித்துக் கொண்டுவரும்  ஒரு பிரிவு (Forager Bees)  உண்டு. அவை .அதை தொழிலாளர் பிரிவு தேநீக்களிடம் (Worker Bees)  அளிக்கும்.

தொழிலாளர் பிரிவு தேனீக்கள் அதை குடிக்கும்; கொப்பளிக்கும் ; இவ்வாறு பலமுறை செய்து கொண்டே இருக்கும் . இதனால் அந்தத் தேனில் உள்ள நீர்ச் சத்து குறைந்துவிடும். இப்படிச்  செய்கையில் அவற்றின் வயிற்றில் உள்ள என்சைம்  தேனில் இருக்கும் குளுக்கோஸ் என்னும் சர்க்கரைச் சத்தை குளுகோனிக் அமிலமாக (Gluconic Acid)  மாற்றிவிடும் தே ன் இவ்வாறு அமில ச் சத்துடன் ஆக்கப்படும்போது ஹைட்ரஜன் பெராக்ஸைட் (Hydrogen Peroxide) என்ற வாயுவும் உற்பத்தியாகும் . அதுமட்டுமல்ல . தேன் அடைகளின் அறைகளில் தேனை வைத்து தனது  சிறகுகளால் விசிறிக் கொண்டே இருக்கும். இதனால் தண்ணீர் சத்து மேலும் ஆவியாகும் .மொத்தத்தில் அமிலத் தன்மையும் நீரின்மையும் இதைக் கெடாமல் பாது காக்கிறது. ஹைட்ரஜன் பெராக் ஸைட் வாயுவுக்கும் பாக்டிரீயா (Anti bacterial)  கிருமிகளைக் கொல்லு ம் சக்தி உண்டு . ஆகையால் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தேன் , பல ஆண்டுகள் ஆனாலும் கெடுவதில்லை .

XXXX

—subham—

Tags– தேன் , வகைகள், கெடுவதில்லை, உற்பத்தி ஆகும் விதம், குளவி , பெயர்கள், பழைய தேன்

Leave a comment

Leave a comment