அதிசய திருப்புனித்துரா- TIME TRAVEL கோவில்- கேரளத்தின் புகழ்பெற்ற – part 4 (Post No.12,719)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,719

Date uploaded in London – –  –  15 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 PICTURES ARE FROM WIKIPEDIA; THANKS

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 4

கோவில் எண் 3  திருப்புனித்துரா  பூர்ணத்ரயீசா கோவில்

இது கொச்சி நகர கோவில் ; கொச்சி ராஜ வம்சத்தினரின் எட்டு கோவில்களில் ஒன்று.

எங்கே இருக்கிறது?

எர்ணாகுளம் ஜங்ஷனிலிருந்து  பத்து கி.மீ . தூரத்தில் உள்ள பெரிய கோவில் இது.; சுமார் 1000 ஆண்டுகள் பழமை உடைத்து; . எல்லா வற்றுக்கும் மேலாக  உலகப் புகழ்பெற்ற EINSTEIN ஐன்ஸ்டைன் கூறிய சித்தாந்தத்தை உடைக்கும், H G WELLS எச். ஜி.வெல்ஸை  ஆதரிக்கும் நம்மாழ்வார் பாடலை ருசுப்பிக்கும்கோவில் இது

ஐன்ஸ்டைன் என்ன சொன்னார் ? ஒளி LIGHT ஒரு வினாடிக்கு 1,86,000 மைல்  வேகத்தில் பயணம் செய்கிறது. இதை மிஞ்சவும் முடியாது. அந்த வேகத்தில் போகவும் முடியாது  அப்படி  ஒருவர் சென்றால் அவர் என்றும் மார்கண்டேயனாக, அதாவது அதே  வயதில் இருப்பார் என்றார் ; அப்போது பூமியில் உள்ள மார்கண்டேயனின் அப்பாவுக்கு பல நூறு  ஆண்டுகள் வயதாகி இருக்கும்!!

எச். ஜி.வெல்ஸ் என்ன சொன்னார் காலப் பயணம் செய்வதாக கற்பனைக் கதை எழுதினார் 1895ல் அவர் எழுதிய டைம் டிராவல்  புஸ்தகம் விஞ்ஞா ன புனைக்கதை The Time Machine, first novel by H. G. Wells, published in book form in 1895.

திரிபுனித்துரா  கோவில் இந்த TIME TRAVEL INCIDENT டைம் டிராவல் எனப்படும் கதையைச் சொல்கிறது

காலப்பயணம் செய்ய முடியாது என்பது மேலை நாட்டு விஞ்ஞானிகளின் கூற்று. அப்படிப் போனால், காலத்தில் பின்னே பயணம் செய்து , ராஜ ராஜ சோழனை ஒருவர் கொலை செய்துவிட்டால்  ராஜேந்திர சோழனே பிறக்க முடியாதே ; வரலாறே பொய்யாகுமே!  நான் காலப்பயணம் போய் , என் தாத்தைவைக் கொன்றுவிட்டால் நானே பிறந்திருக்க முடியாதே (GRANDFATHER PARADOX) என்பது அறிஞர்களின் கேள்வி ; இந்துக்கள் சொல்கிறார்கள் :

காலப்பயணம் செய்ய முடியும்; ஆனால் அனாவசியமாக வெள்ளைக்காரன் போல யாரையும் கொல்ல  மாட்டார்கள். ஏற்கனவே கொல்லப்பட்டவர்களும் சாகவில்லை. அவர்கள் மற்றும் ஒரு பிரபஞ்சத்தில் (PARALLEL UNIVERSE) வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள். மிகப்பெரிய மகான்கள் அந்த உயிர்களை  காலப்பயணம் செய்து மீண்டும் கொன்ற முடியும் என்று . 

காலப்பயணம் TIME TRAVEL பற்றி திருஞான சம்பந்தரின் பூம்பாவை சம்பவம், சுந்தரரின் முதலை கொன்ற சிறுவனின் உயிர் மீட்ட சம்பவம் , நம்மாழ்வார் பாடிய இறந்த குழந்தைகளை கிருஷ்ணன் மீட்ட சம்பவம், ரேவதிக்கு மாப்பிள்ளை பார்க்க சுவர்க்கம் சென்ற சம்பவம், மஹாபாரத வனபர்வத்தில் மாதலி என்ற விண்வெளி PILOT பைலட் அர்ஜுனனை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்று SPACE SHUTTLE ஸ்பேஸ் ஷாட்டிலில் திரும்பி வந்த சம்பவம் முதலியன எல்லாம் காலப்பயணத்தை TIME TRAVEL IS POSSIBLE ருசுப்பிக்கிறது . இந்த எல்லா சம்பவங்களிலும் இறந்த பையன்களும் பெண்களும் வேறு ஒரு பிரபஞ்சத்தில் (PARALLEL UNIVERSE) வளர்ந்து பூமிக்கு நிகரான வயதில் திரும்பி வந்ததையும் காட்டுகிறது. அப்படியானால் அவர்கள் ஒளியை விட அதி பயங்கர வேகத்தில் சென்றனரா அல்லது குறுக்குப்பாதை (WORM HOLES) ஏதேனும் உள்ளதா என்பதை புராணங்கள் விளக்கவில்லை.

காலப் பயணம் பற்றி நம்மாழ்வார்

3107 திவ்வியப் பிரபந்தம் TIME TRAVEL STORY IN DIVYA PRABANDHA

இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா

      உலகும் கழிய

படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற

      திண் தேர் கடவி

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்

      வைதிகன் பிள்ளைகளை

உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி

      ஒன்றும் துயர் இலனே (5)

பொருள்

அர்ஜுனனையும் வைதீக அந்தணனையும் கண்ணன் தன்னுடைய தேரில் ஏற்றிக்கொண்டு வைகுண்டம் சென்றான்.. (EINSTEIN BEATING  SPEED OF SPACE SHUTTLE)  ஒரு நாளில், ஒரு முகூர்த்த நேரத்துக்குள்ளாகவே தேரைச் செலுத்தி  பரமபதம் சென்று , அங்குள்ள அந்தணன் பிள்ளைகளை உடலோடு பூமிக்கு கொண்டுவந்து கொடுத்தான் . இப்படிப்பட்ட ஆற்றல் படைத்த எம்பெருமானை நான் அடைக்கலமாகப் பற்றிவிட்டதால் எனக்கு கொஞ்சமும் துயர் இல்லை — என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

அந்தக் கதையை அடிப்படையாக வைத்து எழுந்ததே திருப்புனித்துறை கோவில்  இந்தக்கோவிலை பூரணி என்ற பெயரில் பல நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஸ்ரீ பூர்ணத்ரயீஸ்வரர் :என்பதற்கு மும்மூர்த்தி என்று பொருள் ; இங்கு ஸ்ரீ கிருஷ்ணன் குழந்தை வடிவில், சந்தான கிருஷ்ணன் வடிவில் அருள் புரிவதால் குழந்தை பாக்கியம் வேண்டியும் நிறைய பக்தர்கள் வருகிறார்கள்

ஒரு பிராமணனின் இறந்த  பத்து குழந்தைகளுக்கு மறுபிறவி கொடுக்க  அர்ஜுனன் இறைவனின் உதவியை நாடியபோது , விஷ்ணு பகவான் அர்ஜுனனுக்கு பூர்ணதீஸ்வரர் சிலையை அளித்ததாக புராணம் கூறுகிறது .பத்து குழந்தையும் ,புனிதமான அந்த சிலையையும் அர்ஜுனன் தன் தேரில் ஏற்றிச்சென்றான் , குழந்தைகளை பிராமணனிடம் ஒப்படைத்தார் , இந்த நிகழ்வின் நினைவாகவே இக்கோவிலானது தேர் வடிவ கருவறை யுடன்  கட்டப்பட்டது. இது TIME TRAVEL டைம் ட்ராவல் என்பதும் காலப்பயணத்தை நினைவு கூற சிற்பிகள் வடிவமைத்த கோவில்

கம்பீரமான ராஜ கோபுரம் , துவஜஸ்தம்பம், தீப ஸ்தம்பம் முதலியன உள்பட  பெரிய பரப்பில் அமைந்துள்ள அழகான கோவில்  கோவிலின் மேற்கேயுள்ள அரண்மனையில் விஷ்ணு சிலை முன்னர் இருந்தது. கணபதியும் இங்கே சந்நிதி கொண்டுள்ளார்  கர்ப்பக்கிரகம் பித்தளை, செம்பு, தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது

திருவிழாக்கள் :

விருச்சிக உற்சவம் : நாற்பதுக்கும் மேலான யானைகள் பவனி வரும் விழா விருச்சிக மாதத்தில் (நவம்பர்- டிசம்பர்) நடைபெறுகிறது. இது மிகப்பெரிய உற்சவம் .அம்பலம் கதி என்னும் விழா துலா மாதத்தில் நடக்கும். அப்போது கோவிலைச் சுற்றி பக்கதர்கள் சூடத்தை ஏற்றுவார்கள் .இவை தவிர ஆண்டுதோறும் விளக்கு உற்சவமும்  கொண்டாடப்படுகிறது

WHERE TO FIND US :The Devaswom Officer, Thrippunithura Devaswom, Thrippunithura . Pin: 682301.

EMAIL US AT sreepoornathrayeesatemple@gmail.com

CALL US AT  Phone – 0484 2774007

ஐன்ஸ்டைன் சொன்னது தப்பு:நம்மாழ்வாரும் …

Swami’s Indology Blog

https://swamiindology.blogspot.com ›

இதில் காலப் பயணம் பற்றிய இரண்டு விஷயங்கள் தவிடு பொடியாகின்றன . 1.காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்ய முடியும் ; ஓளியின் வேகத்தை மிஞ்சி …

ஐன்ஸ்டைன் சொன்னது பாதி சரி, டார்வின் …

Tamil and Vedas

https://tamilandvedas.com › ஐன்…

17 Sept 2021 — ஆகவே ஐன்ஸ்டைன் 50 சதம் வெற்றி; டார்வின் 100 சதம் வெற்றி என்று நான் சொல்லுவேன்.

—-SUBHAM—TAGS- திருப்புனித்துரா, TIME  TRAVEL,   கோவில், பூர்ணத்ரயீசா கோவில், சந்தான கிருஷ்ணன் , நம்மாழ்வார், 

Leave a comment

Leave a comment