ஐன்ஸ்டைன் சொன்னது பாதி சரி, டார்வின் சொன்னது 100% சரி (Post.10,103)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,103

Date uploaded in London – 17 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சோம ரசம் பற்றி அபூர்வ தகவல்கள் ( Part 2

ஐன்ஸ்டைன் சொன்னது பாதி சரி, டார்வின் சொன்னது முழுதும் சரி

உலகப் புகழ் பெற்ற பெளதீக  விஞ்ஞானி ஐன்ஸ்டைன் (ALBERT EINSTEIN) என்ன சொன்னார்? ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் ; இதுதான் பிரபஞ்சத்தின் மிக வேகமான பொருள். இதை யாரும் மிஞ்ச  முடியாது ;அப்படி மிஞ்சும் ஒரு விண்கலம் தயாரித்தால் அதில் செல்வோர் என்றும் மார்க்கண்டேயன் போல வாழ்வான். அவனுக்கு மூப்பு என்பதே இல்லை. இதுவரை மனிதன் சென்ற விண்கலத்தின் (MANNED SPACECRAFT) அதிக வேகம் மணிக்கு 26,000 மைல்தான். வினாடிக்கு அல்ல. பிரபஞ்சத்தில் மனிதன் இல்லாத விண்கலம் (UNMANNED) அடைந்த வேகம் மணிக்கு 3 லட்சம் மைல்தான் . ஆனால் ரிக் வேதம் என்ன சொல்கிறதென் றால் பிரபஞ்சத்தின் அதிக வேகமான பொருள் மனதுதான் (MIND). மனத்தின் மூலமாக ஒரு வினாடிக்குள் லண்டனிலிருந்து டில்லிக்குச் சென்று திரும்பிவிடலாம். புளூட்டோ கிரகத்துக்கும் ஒரு வினாடியில் சென்று திரும்பிவிடலாம் ; அது சரி மனம் என்னும் வாகனம் உள்ளதா ? அதில் செல்ல முடியுமா? அப்படிச் செல்லுவதை யாராவது நம்புவார்களா ? இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள் இதை தினமும் நம்புகிறார்கள்

பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனக் கிரியையில் காயத்ரீ தேவியை இருதயத்துக்குள் வந்து அ மரும்படி  சைகை (முத்திரை) செய்கின்றனர். ஜபம் முடிந்தவுடன் “அன்புள்ள தாயே நீங்கள் வசிக்கும் பூமியிலுள்ள மிக உயர்ந்த மலை உச்சிக்கே திரும்பிச் செல்லுங்கள்” என்று வ ழி அனுப்பி வைக்கிறார்கள். ஆக எங்கிருந்தோ காயத்ரீ ஒரு வினாடிக்குள் வந்து விடுகிறாள்!

பூமிக்கு அப்பாலுள்ள , இறந்து போன முன்னோர்களையும் இப்படி வருடத்துக்கு 94 முறை அழைத்து எள்ளும் நீரும் இறைக்கின்றனர் . இதில் என்ன அதிசயம் என்றால் ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களிலும் தர்ப்பைப் புல்லில் அமரும்படி கடவுளர்களை ரிஷிகள் அழைக்கிறார்கள். அதே போல பிராமணர்கள் இன்றும் தர்ப்பைப் புல்லைத் தாம்பாளத்தில் வைத்து இறந்து போன முன்னோர்களை அதில் உட்கார வைக்கிறார்கள் ; கிரியை முடிந்தவுடன் எந்த ஆகாய வழியில் வந்தீர்களோ அந்தப் பாதையிலேயே திரும்பிச் செல்லுங்கள் என்று GOOD-BYE ‘குட் பை’ சொல்கிறார்கள். ஆக  அப்போதும் எங்கோ ஓரிடத்திலிருந்து பூமிக்கு அவர்கள் ஒரு நொடிப்பொழுதில் வருகிறார்கள்.ஆனால் கண்களால் காண முடிகிறதா? சிலருக்கு மட்டுமே முடியும்

 ஏன் என்றும்  சொல்கிறேன். ஒரு சின்னப் பையனைக் கூப்பிட்டு சந்திரனுக்கு மனிதன் போக முடியுமா? என்று கேளுஙகள் . ஓ போக முடியுமே ;நீல் ஆர்ம்ஸ்ட்ராங் NEIL ARMSTRONG போயிருக்கிறார் என்பான். ஆனால் அது போலச் சென்றவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே. அதுவும் அனைவரும் 50 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சென்றார்கள் . இதெல்லாம் அபூர்வாமாக நிகழக்கூடியவை. எல்லோராலும் செய்ய முடியாது. இது போலவே பல அபூர்வ சம்பவங்களை ராமாயணம், மஹாபாரதத்தில் படிக்கிறோம். மாதரி என்ற PILOT பைலட் செலுத்திய விண்கலத்தில் அர்ஜுனன், இந்திரலோகம் சென்று திரும்பியது, ராமாயணத்தில் இறந்து போன தசரதன் ராமன் முன்னர் தோன்றியது , புராணத்தில் ரேவதி நாட்சத்திரக் கதை இப்படி எத்தனையோ உண்டு .

ஒருவரை ஒளி வடிவில் மாற்றி ‘மனோ வேக’த்தில் அனுப்ப முடியும்

. இதை சோம ரசம் பற்றிய பாடல்களிலும் காண முடிகிறது. தேவ என்ற சொல்லுக்கே ஒளி என்றுதான் பொருள். அதீத சக்தி படைத்தோர் இப்படி ஒளியாக மாறி, ‘மனோ வேக’த்தில் செல்லலாம். த்ரி லோக சஞ்சாரியான நாரதர் இப்படிச் செல்லுவதை பழைய திரைப்படங்களில் காட்டுகிறார்கள். இப்போது மேலை நாடுகளில் விஞ்ஞான புனைக்கதை படங்களிலும் வெளிக் கிரஹ வாசிகள் இப்படி திடீரென்று ஒளி ரூபத்தில் வந்து செல்வதைக் காட்டுகிறார்கள். இது வெள்ளைக்காரன்  நம்மைக் ‘காப்பி’ (COPY CAT) அடித்து செய்யும் பல செயல்களில் ஒன்று.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஐன்ஸ்டைன் சொன்ன ஒளியின் வேகம் சரியே. அதை மிஞ்ச மனத்தால் முடியும். இதனால்தான் ராமாயண மஹாபாரதத்திலும் அதற்கு பல ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ரிக் வேதத்திலும் மனோ வேகம் (SPEED OF MIND) என்ற சொல் வருகிறது. இதனால் எங்கும் நொடிப் பொழுதில் செல்ல முடியும்; நமக்கு அருகிலுள்ள நட்சத்திரம் பிராக்சிமா செண்டாரை (PROXIMA CENTAURI) . 4.25 ஒளி ஆண்டு தொலைவில் (LIGHT YEAR) உளது. இதற்குப் போய்வர 9 ஒளி ஆண்டுகள் தேவை. அதாவது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் சென்றால் !

மனிதன் ஏறிய விண் கலமோ இதுவரை மணிக்கு 26000 மைல்கள்தான்  சென்றுள்ளது. ஆனால் மனோ சக்தி உடையோர் ஒரு நொடிப்பொழுதில் சென்று திரும்பி விடலாம். அங்கு ஏதெனும் செய்ய நினைத்தால் ஒளி ரூபத்தில் சென்று செய்யலாம். இப்படி ஒளி ரூபத்தில் மாறும் கடவுளர், சோமம் என்னும் மூலிகை முதலியன பற்றி ரிக் வேதம் நெடுகிலும் காணலாம்.

XXX

டார்வின் கொள்கை சரியே !

பரிணாமக் கொள்கை (THEORY OF EVOLUTION BY CHARLES DARWIN) இயற்றிய சார்ல்ஸ் டார்வின் நீரின் மூலமே உயிர் வாழ்வன தோன்றின என்கிறார். நாம் சொல்லும் மச்சாவதாரம் முதல் கல்கி அவதாரம் வரை இந்த பரிணாம வளர்ச்சியைக் காண்கிறோம் . ரிக் வேதத்தில் சோமம் பற்றிய இந்தப் பாடலிலும் நீர்தான் உயிர்வாழ்வனவற்றின் மூலம் என்ற வரிகள் வருகின்றன .

ஆகவே ஐன்ஸ்டைன் 50 சதம் வெற்றி; டார்வின் 100 சதம் வெற்றி என்று நான் சொல்லுவேன்

PART 2

FROM RIGVEDA 9-97

இனி ரிக் வேதத்தின் சோமம் பற்றிய துதிக்குத் திரும்புவோம் . இதோ இராண்டாம் பகுதி:–

வேகமாக, சுகத்தைக் கொடுக்கும், உணவைப் பெருக்கும் மழையைக் கொட்டுக ; அன்புள்ள குழந்தைகளை நாடும் உறவினன் போல் உன் சொந்தக்காரனானான காற்றுகளுடன் வருக

நீ சுத்தமாகும்போது என் பாவ முடிச்சுக்களையும்  அவிழ்த்து விடுக

பசுமை நிறமுள்ள நீ குதிரை போல கர்ஜிக்கிறாய் ;

நீ மனிதர்களின் நண்பன்; வருக

நீ நறுமணம் மிக்கவன்; ஆயிரம் தாரைகள் உடையோன்; போரில் கிடைக்கும் செல்வம் கிடைக்க பெருகுக .

ஒளிவீசும் சோமரசம் கட்டவிழ்த்து விடப்பட்ட குதிரை போல பாய் கின்றது

இந்துவே / சோமனே , வேள்விப் பாண்டங்களில் விண்ணிலிருந்து தண்ணீரைக் கொட்டுக

வீரப் புதல்வர்கள்  பெறுவதற்கு    ஆசி தருக

அரசர் புகழ் பாடும் புலவர்களைப் போல , பக்தர்கள் சோமனைப் படுகின்றனர்

அனைவரின் தலைவன் நீ; போற்றப்படுப்பன நீ; பசுக்களும் உனக்காக பாலைப் பொழிகின்றன

நீ வானத்தில் தோன்றியவன்; வள்ளல்; பேரறிஞன்

சத்தியமுள்ள இந்திரனுக்கு சத்திய ரசத்தைப் பொழிபவன்

நீ அரசன்; ஆற்றலை ஏந்துபவன்

பத்து விரல்களுக்கு வசப்படுகிறாய்

சோமம் அளிப்போரின் விருப்பத்தைப் த்தி செய்கிறாய்

மனிதர்களைக் காண்பவன் நீ; மானிடர்க்கும் தேவர்களுக்கும் உத்தம அரசன் .

செல்வங்களுக்கு அதிபதி

இந்திரனுக்கும் வாயு தேவனுக்கும் உணவை அளி ;

போரில் செல்லும் குதிரை போல எங்களுக்கு ஆயிரம் செல்வம் தருக

( இது பல ரிஷிகள் பாடியதால் சில வரிகள் திரும்ப திரும்ப வரும் ரிஷிகளின் பெயர்களும் தொகுப்பில் கூறப்பட்டுள்ளன. )

வீடுகளையும் வீரப் புதல்வர்களையும் எங்களுக்கு அருளவும்

அநுகூல மனத்தை எங்களுக்கு அளிக்கவும்

போரிலே சத்ருக்களை வெல்வோமாகுக

வானத்தையும் பூமியையும் எங்களுக்கு நல்ல , இனிய இருப்பிடங்களாகச் செய்குக

காளையால் இணைக்கப்பட்டு குதிரை போல கணைக்கிறாய்

நீ சிங்கத்தைப் போல பயங்கரமாய் இருக்கிறாய்,

நீ மனதை வீட வேகமானவன்.

நேரான வழிகளால்  எங்களுக்குச் சுகத்தைப் பொழிக

வானத்திலிருந்து  செல்வத்தைப் பொழி க

நீ மகத்தான செல்வத்துக்கு முன்னோடி

சூரிய கிரணங்களை போல சோமனுடைய தாரைகள் பொழிகின்றன.

சோமனே  உண்னைப் போல அறிஞனான அரசன் நண்பர்களைக் கைவிடான்

தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் மகனைப் போன்ற நீ

  இந்த ஜனங்களுக்கும் நன்மை செய்க .

நீ பிறந்தவுடன் உன்னுடைய ஒளியால்  சூரியனை நிரப்புகிறாய்

ஒளிமயமான நீ மத (SOMA EFFECT) த்தின் இடத்தில் பிரகாசிக்கிறாய்.

32 மந்திரங்கள் முடிந்தன; இந்த ஒரே பாட்டில் மொத்தம் 58 மந்திரங்கள்;!

XXXX

tags –  ஐன்ஸ்டைன் , டார்வின், சோம ரசம்-2, அபூர்வ தகவல்கள்-2,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: