
Date uploaded in London – – 5 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

Quiz Serial No.108
xxxxx
1.சிம்லா (Shimla) நகர் எங்கே இருக்கிறது ?
xxxxx
2.சிம்லா நகரின் பெயர் எப்படி ஏற்பட்டது ?
xxxx
3.சிம்லா நகரின் ஜாகு ஹனுமார் கோவிலின் சிறப்புக்கு காரணம் என்ன ?

xxxx
4.யுனெஸ்கோ UNESCO கலாசார சின்னமாக அறிவித்த ரயில் பாதையின் சிறப்பு என்ன ?
xxxx
5.ஜாகு மந்திர் தவிர வேறு என்ன கோவில்கள் உள்ளன?
xxxx
6.மியூசியங்கள் எத்தனை உள்ளன ?
xxxx
7.சிம்லாவில் எத்தனை குன்றுகள் இருக்கின்றன ? என்ன வாங்கலாம் ?
xxxx
8.இயற்கை ரசிகர்களுக்கு என்ன இருக்கிறது ?
xxxx
9.துணிகர விளையாட்டுகளுக்கு வசதிகள் உண்டா ?
xxxx
10.சிம்லாவில் ரிட்ஜ் Ridge என்பது என்ன ?

xxxxx
விடைகள்
1.ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தலை நகர் சிம்லா. இது இமய மலை வாசஸ்தலம்; இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரக்கூடிய நகரம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் கோடைகால தலைநகராக இருந்தது. சண்டீகர் நகரிலிருந்து 120 கி.மீ பஞ்சாபிலுள்ள சில நகர்களிலிருந்தும் வரலாம். KALKA கல்கா என்பது மிக அருகிலுள்ள புகழ்பெற்ற நகரம்.
xxxx
2.சியாமளா என்பது தேவியின் பெயர்களில் ஒன்று; அந்தக் கோவிலின் பெயர் மருவி சிம்லா என்று மாறிவிட்டது . ஷியாம்லாவின் இன்னும் ஒரு வடிவம் காளி. நகருக்குப் பெயர் வழங்கிய காளி பாரி கோவில் (Kali Bari is a temple dedicated to Goddess Kali’s fearless incarnation Shyamala ) இப்பொழுது வழிபாட்டில் உள்ளது .
Xxxx
3. சிம்லா நகரின் ஜாகு மந்திர் Jakhoo temple ஆலயம் 8000 அடி உயர ஜாகு குன்றில் இருக்கிறது . இதுதான் உயரமான சிகரம் இங்கிருந்து பனி படர்ந்த மற்ற இமயமலைச் சிகரங்களைக் காணலாம். 8500 அடி உயரத்தில் 108 அடி உயர ஹனுமான் சிலையை நிறுவியுள்ளனர் ; கோவில் மிகவும் பழைய கோவில் ; உயரமான சிலை தற்காலத்தில் நிறுவப்பட்டது . அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு வருவதற்கு கம்பி ரயில் சேவையும் உண்டு .
Xxxx
4.கல்கா என்னும் இடத்திலிருந்து மலை மீதுள்ள சிம்லாவுக்குச் செல்ல குறுகிய ரயில் பாதையை பிரிட்டிஷார் அமைத்தனர் ; இதை விளையாட்டு ரயில் (டாய் ட்ரெய்ன்) Kalka – Shimla Toy Train என்று அழைப்பார்கள் . 96 கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஏழு மணி நேரம் ஆகிறது. போகும் வழி முழுதும் இயற்கைக் காட்சிகளை ரசித்த வண்ணம் செல்லலாம்.
இந்த சின்ன ரயில் 102 சுரங்கப்பாதைகளைக் கடந்து செல்லும். மிகவும் நீளமான சுரங்கம் 3752 அடி நீளம் உடையது . போகும் வழியில் 200 க்கும் அதிகமான பாலங்கள் உள்ளன . ரயில் பாதையின் அகலம் இரண்டரை அடிதான் . இதை நேரோ காஜ் Narrow Gauge என்பார்கள்
xxxxx

5.இன்னும் ஒரு புகழ்பெற்ற கோவில் தாரா தேவி கோவில் . மேலும் சங்கட மோசன கோவில், திங்கு மாதா கோவில் , கமலா தேவி கோவில் ஆகியனவும் இருக்கின்றன .
xxxx
6. ஸ்டேட் மியூசியத்தில் இந்த வட்டார ஓவியங்கள், நகைகள், துணிமணிகள் ஆகியவற்றைக் காணலாம். 1974m ஆண்டில் அமைக்கப்பட்டது. ( A collection of paintings, jewellery, and textiles of the region can be found at the State Museum (built-in 1974)
.Johnnie’s Wax Museum ஜானிஸ் வேக்ஸ் மியூசியத்தில் இந்திய பிரமுகர்களின் மெழுகு பொம்மைகளைக் கண்டு ரசிக்கலாம். அவை மேடம் துஸாட்ஸ் போல தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன .
அன்னடேல் ராணுவ மியூசியம் Annadale has the Army Heritage Museum which is a notable tourist destination on its own, and also a golf course and a helipad .
xxxxx
7.சிம்லாவில் ஏழு குன்றுகள் உள்ளன.
சிம்லா வட்டாரரக்க காடுகளில் மரங்கள் மிகுதி; இங்கு மரத்தினால் ஆன பொம்மைகள் , அலங்காரப் பெட்டிகள், கூடைகள், ஆகியவற்றை சுற்றுலாப்பயணிகள் வாங்கிச் செல்வர் . மேலும் உலோகத்தால் ஆன, செயற்கை மணிக்கால ஆன நினைவுச் சின்னங்கள் நகைகளும் நிறைய விலைபோகின்றன. சால்வைகள், கம்பளங்கள் ஆகியன இந்த வட்டாரத்துக்குரிய பாணியில் செய்யப்படுவதால் அவைகளும் கடைகளில் அதிகமாக விற்கப்படுகின்றன .
xxxxx

CHADWICK FALLS
8.இங்கு தாவரவியல் பூங்கா, பறவைகள் பூங்கா ஆகியன உள்ளன அன்ன டேல் என்னும் பகுதியில் தேவதாரு , பைன் மரக்காடுகளைக் காணலாம் . குப்ரி Kufri என்னும் இடமும் இயற்ககைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கும் இடம் ஆகும் ; இது ஒரு காலத்தில் நேபாளத்தின் பகுதி! சாத்விக் நீர்வீழ்ச்சி , இமயமலை தேசிய பூங்கா ஆகியன குறிப்பிட தக்கன .
xxxxx
9.பனிச்சறுக்கு , மலைஏறுதல் , பனி க்கட்டி விளையாட்டுகள் , ஐஸ் ஸ்கேட்டிங், குதிரை சவாரி , Ice Skating , மலை சைக்கிள் ரேஸ் Mountain Biking என்று எல்லா வகை சாகசச் செயல்களையும் செய்யலாம்; ஆறு ஓடும் வேகத்தில் படகு சவாரி River Water Rafting , பாரா கிளைடிங் Paragliding ஆகியன குறிப்பிட தக்கன.
xxxxx
10.ரிட்ஜ் Ridge என்பது நகரிலுள்ள விசாலமான இடம். இங்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய கோடை விழா நடக்கும் .

KALKA-SHIMLA TOY TRAIN
—subham—-
Tags- சிம்லா, சியாமளா தேவி , கோவில், காளி, டாய் ட்ரெய்ன், Toy Train, Shimla , ஜாகு மந்திர் , அனுமன் சிலை , உயரமான




















