லாவெண்டர் என்னும் வாசனைச் செடியின் எண்ணெயை ஏற்றுமதி செய்வதில் , உலகில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
வொல்சா புள்ளிவிவரம் Volza’s India Export data :
14,000 கப்பல்கள் சுமந்து சென்றன; இந்தியாவிலிருந்து 702 நிறுவனங்கள் இதை கப்பலில் அனுப்பின; அதை 4335 நிறுவனங்கள் விலைக்கு வாங்கின.
As per Volza’s India Export data, Lavender oil export shipments from India stood at 14.1K, exported by 702 India Exporters to 4,335 Buyers.
உலகில் இதை ஏற்றுமதி செய்யும் நாடுகள் :
இந்தியா 14 ,140 கப்பல் லோட்/shipments
பிரான்ஸ் – 4410
ஜெர்மனி -3403
The top 3 exporters of Lavender oil are India with 14,140 shipments followed by France with 4,410 and Germany at the 3rd spot with 3,403 shipments.
அமெரிக்கா, கனடா, பிரிட்டனுக்கு அதிக அளவு லாவெண்டர் எண்ணெயை இந்தியா அனுப்புகிறது .
XXXX
லாவெண்டர் தாவரம் பற்றிய அதிசய விஷயம் என்னவென்றால் அது 15 ஆண்டுகளுக்கு பலன் தருகிறது ஆகையால் அதை வளர்ப்பதற்கான செலவு மிகவும் குறைவு. Lavender plant gives flowers for 15 years .
xxxx
இந்தியா முழுதும் பயிர் செய்யலாமா ?
முடியாது. இது மித வெப்ப (Temperate) பிரதேச தாவரம். ஆகையால் இமயமலையை ஒட்டிய வட இந்தியாவில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது .
வட இந்திய மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் , உத்தரகண்ட் ஆகியன இந்த செடிக்கு ஏற்ற பருவ நிலையைக் கொண்டுள்ளதால் அங்கே சாகுபடி செய்கின்றனர் .
பஞ்சாப் மாநிலத்தில் சில பகுதிகளில் இது வளர்கிறது . இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் The Indian Institute of Horticultural Research (IIHR) இந்திய பருவநிலைக்கு ஏற்ற புதிய வகைகளை உண்டாக்கியிருக்கிறது .
காஷ்மீர் மாநிலம்தான் மிகவும் உகந்த இடமாகக் கருதப்படுகிறது .
xxxx
பயன்கள் என்ன ?
இந்தச் செடியின் இலை தழைகள் எல்லாம் சுகந்த மனம் வீசுவதால் இதை பெர்பியூம் (PERFUME) எனப்படும் சென்ட்களிலும் , அரோமாதெரப்பி மருந்துகளிலும் பயன்படுத்துகின்றனர் ; இது தவிர சோப்பு, முகத்தில் பூசும் பவுடர் , வீடுகளில், கார்களில் வாசனை வீசும் பொருட்கள், மெழுகுவர்த்திகள், ஊதுபத்திகள் ஆகியவற்றிலும் இது பயன்படுகிறது.
Lavender is a versatile herb that is known for its distinct scent and medicinal properties. It is widely used in perfumes, cosmetics, and aromatherapy products.
இந்தச் செடியை சாகுபடி செய்வோர் தாமாக மேற்கூறிய சிறு தொழில்களையும் ஆரம்பிக்க வாய்ப்பு தருகிறது.
குறைந்த பாசனம் போதும்; மேலும் பூச்சிகள் இதை எளிதில் தாக்காது. ஆனால் தேனீக்களை மட்டும் கவர்ந்து இழுக்கும்; ஆகையால் எல்லா வகையிலும் இது புறச்சூழலின் நண்பன்.
xxxx
சாகுபடிக்கு சவால் விடும் பருவ நிலை மாற்றம்
லாவெண்டர் செடிகள் வளருவதற்கு 60 -80 பாரன்ஹீட் வெப்ப நிலை போதும். Lavender grows well in temperatures ranging between 60-80 degrees Fahrenheit. தற்காலத்தில் காற்றுமண்டல வெப்ப நிலை உயர்ந்து வருவது இதற்கு ஒரு சவாலாக விளங்குகிறது.
லாவெண்டர் சாகுபடி சுற்றுலாவுக்கு உதவுகிறது ; ஹாலந்தில் துலிப் மலர்களையும் ஜப்பானில் செர்ரி மலர் பூப்பதையும் காண வரும் சுற்றுலாப் பயணிகளைப் போல காஷ்மீரில் லாவெண்டர் மலர்களை பூப்பதைக் காண சுற்றுலாப்பயணிகளும் வருகின்றனர் .
ஆண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கலாம் ?
மக்காச் சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஹெக்டேருக்கு Rs. 40,000/- to Rs. 60,000/- per hectare கிடைத்தது.
அவர்களே லாவெண்டர் சாகுபடி செய்தவுடன் வருமானம் ஹெக்டேருக்கு Rs. 3,50,000/- to Rs. 6,00,000/- ஆறு லட்சமாக உயர்ந்தது .
xxxxx
HERB FARM NEAR MUMBAI
மும்பை அருகில் மூலிகைப் பண்ணை
மருத்துவத்தில் பயன்படும் 500 மூலிகைகளையும், செடி, கொடி , மரங்களையும் நட்டு வளர்க்க மும்பை நகரிலுள்ள டாடா நினைவு கேந்திரம் (Tata Memorial Centre) ஏற்பாடு செய்துள்ளது இந்தப் பண்ணை , நகருக்கு அருகில் அமைக்கப்படுகிறது . அங்கு 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவ மனையும் அமைக்கப்படும். மூலிகை மூலமாக புற்றுநோயால் கஷ்டப்படும் நோயாளிகளை எந்த அளவுக்கு குணப்படுத்த இயலும் என்பதை ஆராயும் ஆராய்ச்சிக்கூடமும் அங்கே இருக்கும் . Tata Memorial Centre இந்தியாவில் புற்றுநோய் வந்தவர்களைக் குணப்படுத்தும் மருத்துவ மனைகளில் முதல் 5 இடங்களுக்குள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது .
–subham—
Tags- லாவெண்டர் , சாகுபடி, ஏற்றுமதி, மும்பை , மூலிகைப் பண்ணை
மிகக் குறைந்த வயது வாழ்ந்தாலும் நிறைந்த புகழைப் பெற்று உலகை பிரமிக்க வைக்க முடியும் என்று நிரூபித்தவர் ப்ரூஸ் லீ. மின்னல் வேக மன்னன் என்று உலகம் இவரைக் கண்டு பிரமித்தது இவரது அபாரமான வேகத்தினால் தான்.
அவரைப் பற்றிய அனைத்து ஆய்வுகளும் வியப்பது அவரது ‘ஒன் இன்ச் பஞ்ச்’ என்பது பற்றித் தான். ஒரு அங்குல தூரத்தில் இருந்து அவர் எதிராளியின் மீது விடும் ஒரு குத்து இடியெனப் பாய்ந்து எதிரிலிருப்பவரை வீழ்த்தும். இந்த ஒரு அங்குல இடைவெளியிலிருந்து பாயும் மின்னல் குத்துக்கு காரணம் அவரது மூளையில் விசேஷமான அமைந்திருந்த வெண் பொருள் (White matter) என்ற முடிவிற்கு மூளை இயல் நிபுணர்கள் இப்போது வந்திருக்கின்றனர். இந்த ஒரு இஞ்ச் குத்தின் வேகத்தை ஒருவாறாகக் கணக்கிட்ட நிபுணர்கள் அது மணிக்கு 190 கிலோமீட்டர் இருந்ததாகக் கூறினர். (மிகக் கொடூரமான புயலின் வேகம் கூட அதிக பட்சம் மணிக்கு 117 கிலோமீட்டர் தான்!)
பிறப்பும் இளமையும்
அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் சைனா டவுனில் உள்ள ஒரு சீன மருத்துவமனையில் 1940ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி லீ ஹோய்-சூன் மற்றும் கிரேஸ் ஹோ ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் ப்ரூஸ் லீ.
சீன பஞ்சாங்கத்தின்படி அவர் பிறந்த வருடம் டிராகன் வருடம். அதே போல பிறந்த நேரமும் கூட காலையில் வரும் (7 முதல் 9 மணி வரை வரும்) டிராகன் நேரம் தான். அதிர்ஷ்டமான நேரத்தில் பிறந்த அவருக்கு இளமையில் பெயர் – லிட்டில் டிராகன்!
இளம் வயதிலேயே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அவர் தோற்றமளித்தார்.
குழந்தையுடன் பெற்றோர் ஹாங்காங் நகருக்கு குடி பெயர்ந்தனார்.
இளம் வயதிலேயே தற்காப்புக் கலையில் ஆர்வம் கொண்டிருந்த
ப்ரூஸ் லீ ஹாங்காங் நகரில் அந்தக் காலத்தில் மிக சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்த தெருச்சண்டைகளில் ஈடுபட்டார். வீட்டுக் கூரைகளிலும் இது நடைபெறுவது வழக்கம்,
நகரத்தையே அச்சுறுத்திய ஒரு பிரபல ரௌடியின் மகனை தெருச்சண்டை ஒன்றில் வீட்டுக்கூரை மீது புரட்டி எடுத்தார் ப்ரூஸ் லீ.
அவனுக்கு கைமுறிவு ஏற்பட்டது; பல் தெறித்து விழுந்தது.
போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற ப்ரூஸ்லீயின் தாயார் இது போல நடைபெறாதவாறு தான் பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்து அவரை வெளியே மீட்டு வந்தார்.
அமெரிக்கா திரும்பல்
அமெரிக்காவில் பிறந்த காரணத்தினால் அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்பதால் பெற்றோர் ப்ரூஸ் லீயை அமெரிக்காவிற்கே அனுப்பத் தீர்மானித்தனர். சியாட்டிலில் குடியேறிய ப்ரூஸ் லீ அங்கு குங் பூ பயிற்சிக்கூடம் ஒன்றை ஆரம்பித்தார்.
தற்காப்புக்கலையில் விசேஷ கவனம் செலுத்திய அவர் தனது திறமையினால் ஜீத் குனோ டோ என்ற புதிய முறையை வகுத்தார். இந்த முறை ஒரு புதிய பரிமாணத்தை உலகிற்குக் காண்பிக்கவே ப்ரூஸ் லீயின் புகழ் தற்காப்புக் கலை வட்டாரத்தில் பெரிதாகப் பரவியது.
கல்லூரியில் சேர்ந்த ப்ரூஸ்லீ படிப்பை விட தனது குத்துச்சண்டையில் அதிக கவனம் செலுத்தினார். கல்லூரியிலிருந்து வெளியேறினார்.
தொலைக்காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தொலைக்காட்சித் தொடர்
‘தி க்ரீன் ஹார்னெட்’ என்று ஒரு தொடர். அதில் கடோ என்ற பாத்திரத்தில் நடித்த ப்ரூஸ் லீ ஒரு காட்சியில் பாட்மேனுடனான சண்டையில் தோற்க வேண்டும். முடியாது என்று மறுத்து விட்டார் லீ. பின்னர் பேட்மேனும் இவரும் டிரா செய்வதாக கதை திருத்தப்பட்டது. அவ்வளவு தன்மானம் உள்ளவர் ப்ரூஸ் லீ.
என்றும் வெற்றி; எவருடனும் வெற்றி!
ப்ரூஸ் லீயின் உயரம் 172 செண்டிமீட்டர். எடை 64 கிலோ.
கடுமையான பயிற்சியின் மூலம் அவர் தனது இரு விரல்களைக் கீழே பூமியில் வைத்து உடலைத் தூக்கி நிறுத்துவார். இதைப் பார்த்த மற்றவர்கள் வியந்தனர்.
சியாட்டிலில் இருந்த போது யோய்ச்சி நகாசி என்ற ஜப்பானிய கராத்தே நிபுணர் ப்ரூஸ் லீயை வலுக்கட்டாயமாக சண்டைக்கு அழைத்தார். முதலில் அவரை அலட்சியமாக ஒதுக்கிய லீ ஒரு கட்டத்தில் அவரது சவாலை ஏற்க வேண்டியிருந்தது. சரியாக பதினோரு விநாடிகளில் இரண்டே அடிகளில் அவரை வீழ்த்தினார் ப்ரூஸ் லீ. பிரக்ஞையை இழந்து தள்ளிப் போய் விழுந்த நகாசிக்கு மண்டையில் பலத்த காயம் பட்டது. இப்படி சில விநாடிகளில் எதிராளியை வீழ்த்தும் அவரது கை முஷ்டிக்கும் அதன் வீச்சிற்கும் அனைவரும் பயந்தனர்; வியந்தனர்.
சக் நாரிஸ் என்ற பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள் அவருடன் நட்பு பாராட்டினர்.
ஒரு முறை சக் நாரிஸிடம், “ நீங்களும் ப்ரூஸ் லீயும் சண்டை போட்டால் யார் ஜெயிப்பார்கள்?” என்று கேட்ட போது, “சந்தேகம் என்ன, ப்ரூஸ் லீ தான்!” என்று பதிலளித்தார் அவர்.
மனைவியும் மக்களும்
1964, ஆகஸ்ட் 17ஆம் நாளன்று லிண்டா என்ற பெண்ணை லீ திருமணம் செய்து கொண்டார். ப்ரண்டன் லீ என்ற மகனும் ஷானன் லீ என்ற மகளும் அவருக்கு உண்டு.
ப்ரண்டன் லீ பிற்காலத்தில் ஒரு படப்பிடிப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் மரணமடைந்தார். ஷானன் லீ நடிகையானார்.
திரைப்படங்களில் நடிக்க ஆர்வம்
வாழ்நாளில் ஐந்தே ஐந்து திரைப்படங்களில் தான் நடித்தார் ப்ரூஸ் லீ.
தி பிக் பாஸ் (The Big Boss – 1971)
ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி (Fist of Fury – 1972)
வே ஆஃப் தி ட்ராகன்(Way of the Dragon – 1972)
எண்டர் தி ட்ராகன்(Enter the Dragon – 1973)
கேம் ஆஃப் டெத் Game of Death – 1978)
உலகப் புகழ் பெற்ற படமான ‘எண்டர் தி ட்ராகன்’
அவர் மறைந்த சில நாட்களுக்குப் பின்னாலேயே திரைக்கு வந்தது.
‘கேம் ஆஃப் டெத்’ படமோ’ அவர் மறைந்த பிறகே முடிக்கப்பட்டது. திடீரென அவர் மறைந்ததால் கதையும் மாற்றப்பட்டது. இதில் அவரது பிரேத ஊர்வலம் அப்படியே எடுக்கப்பட்டு காண்பிக்கப்பட்டது.
இவர் நடித்த ஐந்து திரைப்படங்களே எதிர்காலத்தில் மற்றவர்கள் 168 படங்களை எடுக்க உத்வேகம் ஊட்டியது!
எண்டர் தி ட்ராகன்
உலகத்தின் கவனத்தையே ஈர்த்த ‘எண்டர் தி ட்ராகன்’ திரைப்படம் ப்ரூஸ் லீ மறைந்த சில தினங்களுக்குப் பிறகு 1973ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
99 நிமிடங்களே ஓடும் இந்த திரைப்படத் தயாரிப்பின் போது அவர் பட்ட கஷ்டம் அதிகம். ஏராளமான காயங்கள், ஒரு காட்சியில் பாம்பு ஒன்று அவரைக் கடித்து விட்டது. ஷூட்டிங்கை நிறுத்த கூடாது என்று சொல்லி உரிய காலத்தில் படப்பிடிப்பை முடிப்பது அவர் வழக்கம். மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டவாறே நடித்துக் கொண்டே இருந்தார் அவர்.
3500 லட்சம் அமெரிக்க டாலரை ஈட்டியது இந்தப் படம்.
தற்காப்புக் கலை பற்றி வெளி வந்த படங்களில் உலகின் தலையாய படமாக இன்றளவும் திகழ்வது இந்தப் படமே!
மறைவு
ப்ரூஸ் லீயின் மறைவு எவ்வளவு அகாலமானதோ அவ்வளவு சோகமானதும் கூட. 1973ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி அவர் மறைந்தார்.
இயல்பாகவே அதிக உஷ்ணத்தை அவர் உடலால் தாங்க முடியவில்லை. அவரது உடலிலிருந்து வியர்வைச் சுரப்பிகள் அகற்றப்பட்டன. அவருக்கு வலிப்புகள் வருவதுண்டு. தலைவலி வேறு உண்டு.
1973, மே 10ஆம் தேதி ஹாங்காங்கில் கோல்டன் ஹார்வெஸ்ட் ஸ்டுடியோவில் ப்ரூஸ் லீ திடீரென மயங்கி விழுந்தார்.மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் வீக்கம் ஏற்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டு, மனிடால் என்ற மாத்திரையைத் தந்து மூளை வீக்கத்தை சரி செய்தனர்.
இதே மூளை வீக்கமும் தலைவலியும் திரும்பவும் 1973 ஜூலை 20ஆம் தேதி அவருக்கு ஏற்பட்டது. தலை வலிப்பதாக ப்ரூஸ் லீ சொல்லவே தைவான் நடிகையான பெட்டி டிங் பெய் ஒரு வலி நிவாரண மாத்திரையை கொடுத்தார். சிறிது ஓய்வு எடுக்கச் சென்ற லீ எழுந்திருக்கவே இல்லை. ஆம்புலன்ஸில் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது லீ இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். மறைந்த போது அவருக்கு வயது 32.
உடல் பரிசோதனையைச் செய்த டாக்டர் 1400 கிராம் இருக்க வேண்டிய மூளை 1575 கிராமாக வீங்கி இருப்பதைச் சொல்லி மூளை வீக்கத்தினால் அவர் இறந்து விட்டதாக தனது முடிவை தெரிவித்தார்.
ஆனால் இன்றளவும் அவர் மரணம் பற்றிய விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.
அவரது உடல் சியாட்டிலில் லேக் வியூ சிமெட்ரியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வெற்றி பெற ப்ரூஸ் லீ தரும் அறிவுரை
“சிரஞ்சீவியாக இருக்க ஒரே வழி, அனைவரும் எப்போதும் நினைவில் இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்வது தான்!” என்று கூறிய ப்ரூஸ் லீ, தான் கூறியபடியே அனைவரின் நினைவிலும் இன்றளவும் இருக்கிறார்; எப்போதும் இருப்பார்.
இந்த நிலையை அடைய எளிய வழிகளையும் அவர் கூறி இருக்கிறார். அவற்றில் முக்கியமானவை இதோ:
1. “பத்தாயிரம் உதைகளைப் பயிற்சி செய்த ஒருவரைக் கண்டு ஒருபோதும் நான் பயந்ததில்லை; ஆனால் ஒரே உதையை பத்தாயிரம் முறை பயிற்சி செய்பவரைப் பார்த்துத் தான் நான் பயப்படுகிறேன்” என்றார் அவர்.
“ஒரு குத்து அல்லது ஒரு உதை, அதை எடுத்துக் கொள்; அதைப் பயிற்சி செய்; அதில் கவனம் செலுத்து; அது உன் திறமையை அதிகரிக்கும். உனது திறனைக் கூட்டுவிக்கும்” என்றார் அவர்.
தற்காப்புக் கலைக்கு மட்டுமல்ல; வாழ்க்கையில் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் உதவும் அறிவுரை இது. அகல உழுவதை விட ஆழ உழு; என்றும் பத்து இடங்களில் பத்து அடி தோண்டுவதை விட ஊற்று இருக்கும் இடத்தை நிர்ணயித்து நூறு அடி தோண்டு என்றும் தமிழில் முன்னோர்கள் கூறியுள்ளதை நினைவு கூரலாம்.
2. தண்ணீர் போல நெகிழ்வுடன் இருங்கள்! எந்தத் தடையையும் எதிர் கொண்டு நெகிழ்வுடன் சென்று அதை மீறி தனது இயல்பாக இருக்கும் தண்ணீரிலிருந்து ஏராளமான பாடத்தைக் கற்கலாம்.
3. வேரை அறிந்து கொள்ள முயலுங்கள். எது இலை, எது கிளை, எது அழகான மலர் என்ற விவாதத்தில் இறங்க முயல வேண்டாம். வேரை அறிந்து கொண்டால் மலர் மலரும் விதம் உங்களுக்குத் தானே புரிந்து விடும்!
4. அறிவது மட்டும் போதாது; அறிவதைச் செயலில் கொண்டு வர வேண்டும். விருப்பப்பட்டால் மட்டும் போதாது. அதை அடைய செயலில் இறங்க வேண்டும்..
5. ஒரு நாளைக்கு ஒரு சிறிது முன்னேற்றமாவது அடையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
பயிற்சியே வெற்றி தரும் என்று நிரூபித்த அதிசய மனிதர் ப்ரூஸ் லீ!
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
XXXXX
சில்லரை விஷத்திற்கு
31. ஆடுதீண்டாப்பாளை வேர், கவுத்தும்பை வேர், வெள்ளெருக்கு வேர் , மருக்காறை வேர், இவைகளை சமநிடை எடுத்து அறைத்து , உடம்பில் பூசி முருக்கித் துவட்டினால் , கருவழலை- தண்ணிப்பாம்பு முதலிய சில்லறை விஷங்கள் தீரும்
xxxx
32 . ஆனை நெருஞ்சியிலையை சிறுநீர் விட்டறைத்து இடித்து சாறு பிழிந்து சுமார் அரைக்கால்படி உள்ளுக்கு கொடுத்தால் மேற்படி விஷங்கள் நிவர்த்தியாகும் ; பார்வதி பரணீயம் என்னும் சாஸ்திரத்தில் சகலவித சர்ப்பத்திற்கும் ஜாதி, நிறம், குறி, அடையாளமும் அதற்கு அனுபோகமான மருந்துகளும் வெகு விபரமாய்ச் சொல்லியிருக்கிறது .
xxxx
முள்ளு வெளிப்பட
33 . ஆத்து நண்டைப்பிடித்துஇடித்து முத்தையாக்கி காலில் முள்ளு தைத்த இடத்தில் வைத்துக்கட்டி மறுதினம் அவிழ்க்க முள்ளு வெளியில் வந்துவிடும் .
xxxxx
குதிக்கால் வெடிப்புக்கு
34 . ஆத்து நண்டைப்பிடித்துஇடித்து பில்லைதட்டிக் காயவைத்துச் சுட்டு அந்த சாம்பலை தேன்விட்டிழைத்து, குதிக்கால் வெடிப்பு, ஆசன வெடிப்பு இதுகளுக்கு இரண்டு வேலை தடவ வெடிப்புகள் மாறிவிடும் .
xxxx
வயிற்றுக்கடுப்புக்கு
35.ஆலம் விழுதை எருமைத்தயிர் விட்டரைத்து ஒரு பலம் எடுத்து எலுமிச்சம்பழ ரசம் ஒரு பலம் விட்டுக் கலந்து கொடுக்கவும். இப்படி இரண்டு மூன்று வேளை கொடுக்க வயிற்றுக்கடுப்பு தீரும் .
xxxxx
36 . ஆசனக்கடுப்புக்கு புகை
ஆமையோட்டையிடித்து பொடிசெய்து நெருப்பில் தூவி அந்தப்புகையை அபானத் துவாரத்திற் பிடிக்க . ஆசனக்கடுப்பு உடனே தீரும் .
ஆனைத்தந்தத்தை சுட்டுப் பொடியாக்கி தேனில்குழைத்து புழுவெட்டினாலாவது மற்ற எவ்விதத்தாலாவது மயிர் உதிர்ந்துபோன இடத்தில் எட்டுநாள் தடவி வந்தால் மயிர் முளைக்கும் .
xxxxx
39 .மயிர் கருப்பாகத் தைலம்
ஆனைத்தந்தத்தின் பொடி பலம் ஐந்து — எட்டு படி தண்ணீரில் போட்டு ஒருபடியாய்க் காய்ச்சி அதில் ஒரு படி நல்லெண்ணெய் விட்டு சவுரிக்கொடி அவுரித் தழை , கரணங் கண்ணி சிவந்த ஆலம் விழுது இவைகளின் சாறு வகைக்குப்படி கால் – ஒன்றாய்க்கலந்து பதமாய்க் காய்ச்சி, வடித்து சிரசில் பதமிட்டுவந்தால் மூன்று மாதத்தில் எப்பேர்க் கொற்ற நகையும் மாறிவிடும் .
தைலபதம், எண்ணெய் பதம், மெழுகுபதம் இவைகளை பார்வதி பரணீயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது .
xxxxx
40 .ஒக்காளத்திற்கு
ஆளிவிரை ஒரு பலம் எடுத்து 4 பலம் ஜலத்தில் ஒரு ராத்திரி ஊறவைத்து காலையில் எடுத்து மல் துணியில் கொட்டிப்பிழிந்து ஒரு பலம் வெள்ளை சக்கரைபோட்டுக் கலக்கி சாப்பிடவும். பத்து நாலா சாப்பிட அழலை, ஒக்காளம், நரம்புக்குத்து, வலி,வாந்தி, வீக்கம், விரைவாதம் தீரும்.
14.How did Two Japanese Cities escape from American Atom bombs?
15.Englishman mocking at ‘Lazy’ Dravdidans!
16.Gemmology in Brhat Samhita
17.Kohinoor Diamond: Interesting Anecdote by Hallam Murray
18.Diamond hunting in Anantapur, Kurnool regions on in monsoon season
19.Eight Types of Pearls in Varahamihira’s book; 20 Types of Pearls in Tamil Book
20.Hindus’ belief in Gem Stones
21.Pearl in Foreign Languages
22.Nagaratna/ Cobra Jewel, Rubies and Emeralds in Brhat Samhita
23.How did Shakespeare know about the Indian Co-bra Jewel-Nagaratnam?
24.Dheeran Chinnamalai, a fighter to the last!
25.Strange Stories about 50 Ganesh Temples in Tamil Nadu – 1
26.Ganesh who ate the Prasad: Strange Stories from Tamil Temples-Part 2
27.Strange Stories from Ganesh Temples in Tamil Nadu -3
28.Vatapi Ganapathim Bhaje!
29.World’s Largest Shivalinga Temple opened in Assam
30.My Visit to Kukke Subrahmanya Temple
31.My Visit to Selaiyur Skandhashram Temple
32.My Trip to Thirukkadavur Shiva Temple
33.My Visit to Udupi Sri Krishna Temple
34.Hampi -Hindu Wonder destroyed by Muslim Invaders
35.Two Hindu Wonder Ovens
36.Mirror Temples! Hindu Wonders!!
37. Saraswati Statue in Saudi Arabia
38. Unique Hindu Temple in Mauritius
39.Sound of Indian Pungi Music Does Wonders- Report Swiss Scientists
40.Hide and Seek Game in Sangam Tamil literature
41.Albert Einstein on Cluttered Desk!
42.Patriotism: Bismarck and Californians!
43.Names Make it or Mar it
44.The Man Who ‘Discovered’ Yosemite!
*****************
Strange Stories about Hindu Saints Temples and
Historical Atrocities
Foreword
This book has a collection of articles to cater to the needs of people with different tastes. They can be classified under five broad categories. 1) Temples, 2) Saints and Miracles, 3) Stories about Gem Stones , 4) Historical incidents and 5) Anecdotes . I struggled a lot to find a common title to the book and at last decided at the current title after several additions, commissions, and omissions.
The story of diamonds in Hindu literature starts with Bhagavata Purana. During Lord Krishna’s days, the Syamantaka diamond caused murder and mayhem. I have written about it under the title Hope Diamond in another book published already. Since these are written as separate articles for my blog over a period of 12 years, one can open any chapter and read it. There are over 40 topics dealing with the subjects mentioned above. In some articles I have added my personal experience as well. Hope our readers also find them interesting.
London swaminathan
October 2023
swami_48 @ yahoo.com
—– SUBHAM—
TAGS- BOOK ON SAINTS, HISTORICAL ATROCITIES, FESTIVALS.
1.வைஷ்ணவ தேவி கோவில் எங்கே இருக்கிறது? எப்படிப் போகவேண்டும்?
xxxx
2.வைஷ்ணவ தேவி கோவிலின் சிறப்பு என்ன?
xxxxx
3.கோவிலுக்குச் செல்ல காட்டுப்பாடுகள் உண்டா ?
xxxx
4.கோவிலுக்குப் போவதற்கு குறுகிய குகை வழியாகச் செல்ல வேண்டுமா ?
xxxx
5.கோவிலுக்குள் யாரைத் தரிசனம் செய்யலாம் ?
xxxx
6.திருப்பதி மலை ஏறுவோர் கோவிந்தா கோஷம் போடுவார்கள்; சபரிமலை ஏறுவோர் சரணம் ஐயப்ப கோஷம் எழுப்புவார்கள்; வைஷ்ணவி தேவி கோவிலுக்குச்செல்லும் கோடிக்கணக்கான பக்தர் எழுப்பும் கோஷம் என்ன ?
xxxxx
7.பாண கங்கா ஆறு எங்கே இருக்கிறது? அதற்கும் தேவிக்கும் என்ன தொடர்பு ?
XXXX
8.பைரவன் காட்டிக்கும் ஐரோன்கட்டி BHAIRON GHATTI க்கும் வைஷ்ணவ தேவிக்கும் என்ன தொடபு?ர்
XXXX
9.அர்த்தகுமாரி / குவாரி குகைArdhkumari cave என்பது என்ன?
XXXX
10.கோவில் எப்போதும் திறந்திருக்குமா ?
XXXX
விடைகள்
1.இந்தியாவின் வடகோடி மாநிலமான ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு பிரதேசத்தில் திரிகூட மலையின் மேல் வைஷ்ணவ தேவி குகைக்கோயில் (VAISHNO DEVI TEMPLE) அமைந்துள்ளது . கத்ரா KATRA என்பது அடிவார ஸ்தலம்; இங்கிருந்து கால்நடையாகவும் யாத்திரை செல்லலாம். தற்காலத்தில் ஹெலிகாப்டர் வசதி, பாட்டரியால் இயங்கும் கார் வசதிகள் வந்துவிட்டன. அந்தக் காலத்தில் கால் நடையாக செல்ல முடியாதவர்கள் குதிரை மீதும், பல்லக்கிலும் சவாரி செய்வார்கள். இதற்கான வசதிகள் அங்கே உண்டு . ஒவ்வொன்றுக்கும் கட்டணம் உண்டு.
.ஜம்மு நகரிலிருந்து 42 கி.மீ தொலைவில் கத்ரா உள்ளது .
5200 அடி உயரத்தில் கோவில் இருப்பதால் 14 கி.மீ பல ஏறுவதற்கு மணி நேரம் ஆகும். மிகவும் கடினமான ஏற்றம்
ஹெலிகாப்டர், பாட்டரி கார் வேண்டியோர் கோவிலின் அதிகாரபூர்வ வெப்சைட்டில், ஆன் லைன் வழியாக டிக்கெட்டும் வாங்கலாம்.
பாட்டரி காரில் ஏறுவதற்கு ஆறு கி.மீ செல்ல வேண்டும் .மேலும் எட்டு கிலோமீட்டரில் கார் மூலம் கோவிலை அடையலாம் ; இது வயதான பயணிகளுக்கு பாதி தூரம் உதவும் சர்வீஸ்.
Helicopter services start from Katra on the foothills and the flight will drop you at Sanjhichatt. This visit to the sacred Shrine, enveloped by the clouds is the beginning of a breathtaking heli-hop.
The flight from Katra to Sanjichhat takes a total of approx. 08 minutes.
One way fare from Katra to Sanjichhat or Sanjichhat to Katra (Fare Rs.1830/- ) per passenger and Katra-Sanjichhat-Katra (Fare Rs.3660/-) per passenger.
Vaishnodevi Bhawan/temple is approx. 2.5 Km. from Helipad Sanjichhat.
xxxxx
2.நாட்டிலேயே அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்கள் பட்டியலில் வைஷ்ணவ தேவி கோவில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது , அதிக சொத்து மதிப்பையும் கொண்ட கோவில்களில் ஒன்றாகவும் உள்ளது வருடத்திற்கு ரூ.500 கோடி வருமானம் வருகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இருக்கும் இந்த குகை கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தின் மதிப்பு மட்டும் 1 .2 டன்னுக்கும் அதிகமாக இருக்கும்.
xxxx
3.உண்டு. கத்ரா நகரில் பதிவு செய்து அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும் .
விமானப்பயணம் போல கத்தி கபடா , சிகரெட் முதலியவற்றுக்கு அனுமதி இல்லை ; முஸ்லீம் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் இந்தக் கட்டுப்படுகள். மேலும் இந்திய பாதுகாப்புப்படைகள் 24 மணி நேரமும் இந்த இடத்தைப் பாதுகாக்க நிறுத்தப்பட்டுள்ளன . உடைக் (Dress Code) கட்டுப்பாடுகளும் உண்டு.
xxxx
4.முன்னர் இப்படி குகை வழியாகச் செல்ல வேண்டியிருந்தது . இப்போது இரண்டு செயற்கை சுரங்கப் பாதைகள் கட்டப்பட்டுவிட்டன. உள்ளே, வெளியே என இரண்டு வழிகள்; கோவில் தொடர்பான சம்பிரதாய சடங்குகளுக்கு மட்டுமே குகைப் பாதை திறக்கப்படுகிறது. ஒவ்வொரு பயணியும் இதன் வழியாகச் சென்றால் அதைக்கடக்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது .இதனால் சுரங்க வழிகள் கட்டப்பட்டன.
xxxxx
5.கோவிலுக்குள் சக்தியை / தேவியை தரிசிக்கலாம். துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரின் இருப்பிடமாக கருவறை கருதப்படுகிறது
மனித உருவில் ஒரு பக்தனுக்கு அருள்பாலித்த தேவி தனது உருவத்தை மறைத்து, ஐந்தரை அடி உயரம், மூன்று தலைகள் (பிண்டி) உள்ள பாறையாக மாறினாள்; இதுவே குகையில் உள்ள மூலவர். இது தவிர உற்சவ மூர்த்திகள் இருக்கின்றன.
Meanwhile, Vaishnavi decided to shed off her human form and assuming the face of a rock she immersed her self into meditation forever. Thus Vaishnavi, in the form of a five and a half feet tall rock with three heads or the Pindies on the top is the ultimate destination of a devotee. These Pindies constitute the Sanctum Sanctorum of the holy cave known as the shrine of Shri Mata Vaishno Devi Ji, which is revered by one and all.
xxxx
6.,“ஜெய் மாதா தி” Glory/Victory to Mother. அன்னையின் நாமம் வாழ்க/ வெல்க!
xxxxx
7.கத்ரா நகரிலிருந்து புறப்படும் யாத்ரீகர்கள் முதலில் சந்திப்பது இந்த ஆறுதான். சுமார் 2 கி.மீ. தொலைவு.
தேவியானவள் திரிகூட மலைக்குச் செல்லுகையில் அவருடன் வந்தவருக்கு தாகம் எடுக்கவே தேவி ஒரு அம்பு விட்டு இந்த ஆற்றை உருவாக்கினாள் என்பது ஐதீகம். பெரும்பாலான யாத்ரீகர்கள் இங்கே குளித்துவிட்டு மலை ஏறத்துவங்குகிறார்கள் .
XXXXX
8.திரிகூட பர்வதத்தின் மற்றொரு சிகரத்தின் உச்சியில் இருப்பது பைரவர் கோவில். இதுதான் அதிக உயரமான இடம் . தேவியைத் தரிசித்த பின்னர் இங்கும் வந்து சிவனை தரிசிக்கவேண்டும் என்பது சம்பிரதாயம். ஆனால் மூன்று கி.மீ பாதை மிகவும் ஏற்றம் கொண்டது. இப்போது கம்பி வழி ரயில் பாதை ROPE CAR போட்டுவிட்டதால் ஐந்தே நிமிடத்தில் கோவிலை அடையலாம்.
xxxxx
9.பவன் என்று அழைக்கப்படும் கோவிலை அடைவதற்கு முன்னால் அர்த்த குமாரி / குவாரி குகை இருக்கிறது . இங்கு ஒரு மகானுக்கு தேவி தரிசனம் தந்தாள் ; மேலும் பவனை அடையும் முன்னர் ஒன்பது மாதங்களுக்கு இந்தக் குகையில் தங்கி இருந்தாள் என்பதால் புனித இடமாகக் கருதப்படுகிறது . இது 15 அடி நீள குகை ; இதை கர்ப்பா ஜூன் என்பர்.
XXXX
10.ஆண்டு முழுதும் கோவில் திறந்திருக்கும். ஆயினும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை பருவ நிலை நன்றாக இருக்கும்.; போகும் வழி முழுவதும் நல்ல வசதிகளை செய்து இருக்கிறார்கள்; சாப்பிடுவதற்கு, தங்கி ஓய்வு எடுப்பதற்கு, மின்சார விளக்குகள் ஆகிய அனைத்தும் உண்டு . ஆகையால் எந்த நேரமும் பயணம் செய்யலாம்.
வீரியத்தை இழந்த ஒருவனே விதிக்கு வசப்படுவான். ஏற்ற பிறவிக்குணங்களை உடைய வீரர்கள் விதிக்கு வசப்படமாட்டார்கள்.
அகஸ்மாத்தாய் ஒரு கஷ்டம் ஒருவனுக்கு சம்பவிக்குமாயின் அது நிவாரணமாய்ச் செய்ய வேண்டியவற்றை நிச்சயிக்க திறமையற்று சிந்தை கலங்கியவனாய் அந்த கஷ்டத்தை விலக்குவதற்கு வேண்டியதாகிய சக்தி இல்லாதவனாயிருக்கிறவன் எவனொருவனோ, அவன், அகஸ்மாத்தாய் நேர்ந்த கஷ்டத்தை அனுபவிக்கின்றான்; ஏற்ற பிறவிக் குணங்களையுடைய வீரர்கள் அகஸ்மாத்தாய் நேர்ந்த ஓர் கஷ்டத்திற்கு ஆட்படமாட்டார்கள்.
இங்கு வீர்ர்கள் என்ற சொல் வருகிறது.
வீரர்கள் யார்?
ஒரு காரியத்தை மேற்கொண்ட போது, காரியங்களை வீணாக்காத வண்ணம் முடிக்கும் குணமாகிய “பராக்ரமம்” என்பதையும், சரியாய் ஓர் தொழிலை நிச்சயிக்கும் குணமாகிய “விக்ரமம்’ அல்லது ‘மனோபலம்’ என்பதையும் எதையும் எப்போதும் தரும விதி வழுவாது செய்யும் குணமாகிய ‘தர்மசீலத்வம்’ என்பதையும் எவர்கள் கொண்டிருக்கிறார்களோ அவர்களே வீரர்கள் ஆவர்.
அயோத்யா காண்டம் 23 – 16
**
கணவனை விட்டுப் பிரிதல் சுமங்கலிக்கு கொடிய பாதகம்!
பர்து: கில பரித்யாகோ ந்ருசம்ஸ: கேவலம் ஸ்த்ரியா:
ஒரு பெண்ணுக்கு (சுமங்கலிக்கு) கணவனைப் பிரிதல் என்பது பாரம்பரியமாக முற்றிலும் விலக்கத்தக்கதான கொடிய பாதகம்.
அயோத்யா காண்டம் 24 – 12
**
கணவனே சுமங்கலிக்கு தெய்வம்
ஜீவந்த்யாஹி ஸ்த்ரியா பர்தா தைவதம் ப்ரபுரேவ ச |
உயிரோடிருக்கும் ஒரு சுமங்கலிக்கு அவளது கணவனே பிரபு. ஏன் அவனே தெய்வம்.
அயோத்யா காண்டம் 24 – 21
**
கணவனுக்கு பணிவிட செய்பவள் ஸ்வர்க்கம் செல்கிறாள்!
பர்து: சுஷ்ருஷயா நாரீ லபதே ஸ்வர்கமுத்தமம் |
கணவனின் மனதிற்கு இசைந்தபடி ஏவல் செய்வதால் ஒரு சுமங்கலி உத்தமமான ஸ்வர்க்கத்தை அடைகிறாள்.
கணவனுக்கு மனம் கோணாமல் ஹிதம் விளைவிப்பதில் ஊக்கமுடையவளாய் சுஷ்ருஷை (பணிவிடை) செய்வதையே ஒருத்தி செய்து வர வேண்டும். இந்த தர்மம் உலகின் அனாதியான அனுஷ்டானம். வேதத்தில் பிரசித்தியாக உள்ளது. ஸ்மிருதியிலும் விதிக்கப்பட்டுள்ளது.