லாபம்  தரும் லாவெண்டர் ஏற்றுமதி; மும்பை அருகில் மூலிகைப் பண்ணை (Post No.12,979)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,979

Date uploaded in London – –   2  FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

லாபம்  தரும் லாவெண்டர் சாகுபடியும் ஏற்றுமதியும்

லாவெண்டர் என்னும் வாசனைச் செடியின் எண்ணெயை ஏற்றுமதி செய்வதில் , உலகில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

வொல்சா புள்ளிவிவரம் Volza’s India Export data :

14,000 கப்பல்கள் சுமந்து சென்றன; இந்தியாவிலிருந்து 702 நிறுவனங்கள்  இதை கப்பலில் அனுப்பின; அதை 4335 நிறுவனங்கள் விலைக்கு வாங்கின.

As per Volza’s India Export data, Lavender oil export shipments from India stood at 14.1K, exported by 702 India Exporters to 4,335 Buyers.

உலகில் இதை ஏற்றுமதி செய்யும் நாடுகள் :

இந்தியா 14 ,140  கப்பல் லோட்/shipments

பிரான்ஸ் – 4410

ஜெர்மனி -3403 

The top 3 exporters of Lavender oil are India with 14,140 shipments followed by France with 4,410 and Germany at the 3rd spot with 3,403 shipments.

அமெரிக்கா, கனடா, பிரிட்டனுக்கு அதிக அளவு லாவெண்டர் எண்ணெயை இந்தியா அனுப்புகிறது .

XXXX

லாவெண்டர் தாவரம் பற்றிய அதிசய விஷயம் என்னவென்றால் அது 15 ஆண்டுகளுக்கு பலன் தருகிறது ஆகையால் அதை வளர்ப்பதற்கான செலவு மிகவும் குறைவு. Lavender plant gives flowers for 15 years .

xxxx

இந்தியா முழுதும் பயிர் செய்யலாமா ?

முடியாது. இது மித வெப்ப (Temperate) பிரதேச தாவரம். ஆகையால் இமயமலையை ஒட்டிய வட இந்தியாவில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது .

வட இந்திய மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் , உத்தரகண்ட் ஆகியன  இந்த செடிக்கு ஏற்ற பருவ நிலையைக் கொண்டுள்ளதால் அங்கே சாகுபடி செய்கின்றனர் .

பஞ்சாப் மாநிலத்தில் சில பகுதிகளில் இது வளர்கிறது . இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் The Indian Institute of Horticultural Research (IIHR) இந்திய பருவநிலைக்கு ஏற்ற புதிய வகைகளை உண்டாக்கியிருக்கிறது .

காஷ்மீர் மாநிலம்தான் மிகவும் உகந்த இடமாகக் கருதப்படுகிறது .

xxxx

பயன்கள் என்ன ?

இந்தச் செடியின் இலை தழைகள் எல்லாம் சுகந்த மனம் வீசுவதால் இதை  பெர்பியூம் (PERFUME)  எனப்படும் சென்ட்களிலும் , அரோமாதெரப்பி மருந்துகளிலும் பயன்படுத்துகின்றனர் ; இது தவிர சோப்பு, முகத்தில் பூசும் பவுடர் , வீடுகளில், கார்களில் வாசனை வீசும் பொருட்கள், மெழுகுவர்த்திகள், ஊதுபத்திகள் ஆகியவற்றிலும் இது பயன்படுகிறது.

Lavender is a versatile herb that is known for its distinct scent and medicinal properties. It is widely used in perfumes, cosmetics, and aromatherapy products.

இந்தச் செடியை சாகுபடி செய்வோர் தாமாக மேற்கூறிய சிறு தொழில்களையும் ஆரம்பிக்க வாய்ப்பு தருகிறது.

குறைந்த பாசனம் போதும்; மேலும் பூச்சிகள் இதை எளிதில் தாக்காது. ஆனால் தேனீக்களை மட்டும் கவர்ந்து இழுக்கும்; ஆகையால் எல்லா வகையிலும் இது புறச்சூழலின்  நண்பன்.

xxxx

சாகுபடிக்கு சவால் விடும் பருவ நிலை மாற்றம்

லாவெண்டர் செடிகள் வளருவதற்கு 60 -80  பாரன்ஹீட் வெப்ப நிலை போதும். Lavender grows well in temperatures ranging between 60-80 degrees Fahrenheit.   தற்காலத்தில் காற்றுமண்டல வெப்ப நிலை உயர்ந்து வருவது இதற்கு ஒரு சவாலாக விளங்குகிறது.

லாவெண்டர் சாகுபடி சுற்றுலாவுக்கு உதவுகிறது ; ஹாலந்தில் துலிப் மலர்களையும் ஜப்பானில் செர்ரி மலர் பூப்பதையும் காண வரும் சுற்றுலாப்  பயணிகளைப் போல காஷ்மீரில் லாவெண்டர் மலர்களை பூப்பதைக் காண சுற்றுலாப்பயணிகளும் வருகின்றனர் .

ஆண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கலாம் ?

மக்காச்  சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஹெக்டேருக்கு Rs. 40,000/- to Rs. 60,000/- per hectare கிடைத்தது.

அவர்களே லாவெண்டர் சாகுபடி செய்தவுடன் வருமானம் ஹெக்டேருக்கு  Rs. 3,50,000/- to Rs. 6,00,000/- ஆறு லட்சமாக உயர்ந்தது  .

xxxxx

HERB FARM NEAR MUMBAI

மும்பை அருகில் மூலிகைப் பண்ணை

மருத்துவத்தில் பயன்படும் 500  மூலிகைகளையும், செடி, கொடி , மரங்களையும் நட்டு வளர்க்க மும்பை நகரிலுள்ள டாடா நினைவு கேந்திரம் (Tata Memorial Centre) ஏற்பாடு செய்துள்ளது இந்தப் பண்ணை , நகருக்கு அருகில் அமைக்கப்படுகிறது . அங்கு 100  படுக்கை வசதி கொண்ட மருத்துவ மனையும் அமைக்கப்படும். மூலிகை மூலமாக  புற்றுநோயால் கஷ்டப்படும் நோயாளிகளை எந்த அளவுக்கு குணப்படுத்த இயலும் என்பதை ஆராயும் ஆராய்ச்சிக்கூடமும் அங்கே இருக்கும் . Tata Memorial Centre இந்தியாவில் புற்றுநோய் வந்தவர்களைக் குணப்படுத்தும் மருத்துவ மனைகளில் முதல் 5 இடங்களுக்குள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது .

–subham—

Tags- லாவெண்டர் , சாகுபடி, ஏற்றுமதி, மும்பை , மூலிகைப் பண்ணை

Leave a comment

Leave a comment