ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 1 (Post.13,185)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.185

Date uploaded in London – — 28 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 1 

ச.நாகராஜன்

ஏசு கிறிஸ்து இந்தியாவில் இருந்தாரா என்ற சர்ச்சைக்குரிய விஷயம் பற்றி பல்லாண்டுகளாக விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது பற்றிப் பலரும் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்துள்ளனர்; நடத்தில் வருகின்றனர்.

ஜி.எம்.ஜகதியானி (G.M. Jagatiani)  என்பவர் 1983-ம் ஆண்டு ஒரு சிறிய புத்தகத்தை பிரசுரித்தார். அதில் அவர் கீழ்க்கண்ட விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

Jesus Christ’s Life in India

By

R.R.Sakesana M.A., LLb, DL, SC

டாக்டர் ராதாகிருஷ்ணன் தான் எழுதிய Easterm Religions And Western Thought என்ற நூலில் 165-ம் பக்கத்தில், “புதிய ஏற்பாடு ஏசுவின் வரலாற்றை 13-ம் வயது வரை தருகிறது. ஜான் தி பேப்டிஸ்ட் – ஐ உபதேசிக்கும் வரை அடுத்த 17 ஆண்டுகள் அவர் எங்கிருந்தார் என்பதைப் பற்றி மௌனம் சாதிக்கிறது. பல மரபு வழிச் செய்திகள் அவர் இந்த இடைப்பட்ட காலத்தில் கிழக்கே விஜயம் செய்தார் என்று குறிப்பிடுகின்றன. ஆனால் இவற்றிற்கு ஆதாரம் இல்லை.” என்று எழுதியுள்ளார்.

இந்த எழுத்தாளர் ராதாகிருஷ்ணன் பார்வைக்கு கிறிஸ்துவின் பயணங்கள் பற்றியும் அவர் இந்தியாவில் கல்வி கற்றதைப் பற்றியும் பல புத்தகங்கள் வெளி வந்துள்ளதைச் சுட்டிக் காட்டினார்.

தனது 25-2-1974 தேதியிட்ட கடிதத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவருக்கு இது பற்றிய ஆய்வுக்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பல புத்தகங்களில் குறிப்பிடத் தகுந்த ஒரு புத்தகம் :

The Mystical Life of Jesus

By

Spencer Lewis Ph.D.

Published by

The Supreme Grand Lodge of Amore,

San Jose,

California,

USA

அதில் சில பகுதிகள்:

சிறுவனாக இருந்த ஏசு கூட ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் பலருடன் கூட்டமாக ஜகந்நாத்திற்கு மிகக் குறுகிய வழியைத் தேர்ந்தெடுத்துச் செல்லலானார். அது இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்தது. அதன் இன்றைய பெயர் பூரி. பல நூற்றாண்டுகளாக அது புத்த மதத்தின் ஒரு மையமாகத் திகழ்ந்தது.

இந்தப் பயணத்திற்கான காலம் ஒரு வருடம்.

ஏசு பூரியில் ஒரு வருடம் கல்வி கற்கலானார்.  லாமாக்களின் உபதேசங்களில் அவர் நல்ல தேர்ச்சி பெற்றார். அவர்களை ஜெருசலத்திற்கு வருமாறும் அழைத்தார். (பக்கம் 181)

ஏசு கங்கை நதிக் கரையில் உள்ள வாரணாசியில் பல மாதங்கள் தங்கி இருந்தார். ஹிந்து மகானும் பெரிய சிகிச்சையாளருமான உத்ரகர் (Udrka) என்பவரிடம் ஹிந்து மருத்துவ சிகிச்சை முறைகளைக் கற்றார். பின்னர் ஏசு மீண்டும் பூரிக்கு வந்தார், அங்கு மதம் மற்றும் தத்துவம் பற்றி இரு வருடங்களுக்கும் மேலாகப் பயின்றார். அங்கு அவர் ஒரு ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

ஏசுவுக்கு ஒரு துயரமான செய்தி வந்தது. அவரது தந்தையார் கலீலியில் (Galilee) இறந்து விட்டதாகவும் அவரது தாயார் மிகவும் துயருற்று வருந்துவதாகவும் அவரை யாராலும் தேற்ற முடியவில்லை என்றும் வந்த செய்தியால் ஏசு துயரமுற்றார்.

இந்த காலகட்டத்தில் தான் இளம் ஜோசப் முதல் முறையாக தெளிவான வார்த்தைகளால் சொன்னவை ஆவணப் படுத்தப்பட்டது.

அது இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவர் ESSENE தூதுவர்களுக்கு ஆறுதல் செய்தியாக அனுப்பிய கடிதம் இது:-

 “அன்புள்ள அம்மா, வருத்தப்பட வேண்டாம். தந்தையும் நன்றாகவே இருப்பார். நீங்களும் நன்றாக இருப்பீர்கள். நான் வரும் வரை பொறுத்திருங்கள். தங்கத்தினாலும் ரத்தினங்களாலும் செய்யப்பட்டவற்றை நீங்கள் பார்த்திருப்பதை விட நான் கொண்டு வரும் சிறப்பான பரிசுகளைப் பார்க்கப்போகிறீர்கள். எனது சகோதரர்கள் உங்களை நன்கு கவனிப்பார்கள் என்றும் உங்கள் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்வார்கள் என்றும் நம்புகிறேன். உள்ளத்தாலும் உயிராலும் உங்களுடன் எப்போதும் இருக்கும் உங்கள் மகன் ஜோசப்

தொடரும்

Leave a comment

Leave a comment