
Post No. 13.188
Date uploaded in London – — 29 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 2
ச.நாகராஜன்
மேலே கண்ட கடிதத்தில் உள்ள வாசகங்கள் பூரி ஜகந்நாத்திலிருந்து கலிலியில் உள்ள தனது அம்மாவிற்கு ஏசு எழுதியவை. இரு பக்கங்கள் கொண்ட இந்தக் கடிதம் நூலில் பக்கம் 184-185இல் அப்படியே தரப்பட்டுள்ளது.
இன்னொரு கடிதத்தில், “ஜோஜப் தனது புத்த போதனைகள் மற்றும் ஹிந்து கொள்கைகள் பற்றிய கல்வியை இந்தியாவில் முடித்த பின்னர்
அவர் திபெத்தில் உள்ள லாஸாவிற்குச் சென்றார் என்கிறது. அங்கு அவர் பிரசித்தி பெற்ற புத்த துறவியான மெங்கெட்ஸேயை (Mengtse) தரிசித்தார் என்றும் கூறுகிறது.
புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கிறிஸ்துவின் கடிதமும் அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களும் அப்படியே பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் அவை பதிவும் செய்யப்பட்டுள்ளது என்கிறார். அவர் குறிப்பிட்ட ஆவணங்களை சரி பார்க்கும் விதமாக ரோஸிக்ரூசியன் ஆர்டரில் உள்ள பழைய ஆவணங்களுடன் ஒப்பிடுகிறார்.
இந்த ஆவணங்கள் மிகப் பழங்கால தேவாலயங்களில் உள்ளன.
Essene Brotherhood – ன் Essene Records (page 178) 1500 ஆண்டுகள் பழமையான குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய ஆவணங்கள் இவை.
சத்திய பிரமாணம் செய்யப்பட்டு வெளியில் யாருக்கும் சொல்லக் கூடாது என்று ரகசியமாகக் காக்கப்பட்டவை இவை.
இதே போலவே UNKNOWN LIFE OF JESUS CHRIST BY Prof. G.L. Christie of Paris University and V.R.Gandhi (published by Indo American Book Co, Chicago, U.S) கீழ்க்கண்ட விஷயங்களைக் குறிப்பிடுகிறது:
Notovitech நோடோவிட்ச் என்ற ஒரு ரஷியர் 1880-ல் லடாக்கிற்கும் திபெத்திற்கும் சென்றார். அங்குள்ள லாமாக்கள் மத்தியில் ஜீஸஸ் என்ற பெயர் கூறப்படுவதைக் கண்டு அவர் வியந்தார்.
விசாரித்துப் பார்த்ததில் ஏசு ஆன்மீகக் கல்வியை அங்கு கற்றது பற்றிய விவர்ங்கள் அடங்கிய பதிவுகளை அங்குள்ளவர்கள் அவருக்குக் காண்பித்தனர். இருபதாம் வயதில் அவர் அங்கு இருந்ததையும் பின்னர் இந்தியாவில் 5 அல்ல்து 6 வருடங்கள் இருந்ததையும் அவை சுட்டிக் காட்டின.\
சில பக்கங்களின் போட்டோகாப்பிகளை எடுத்த அவர் தன்னுடன் அதைக் கொண்டு சென்றார். ஹிமிஸ் வம்சத்தைச் சேர்ந்த அந்த ஆவணங்களை தனது புத்தகத்தில் தந்துள்ளார்.
ஹிந்து கொள்கைகளில் அறிவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு ஏசு தனது 13-ம் வயதில் இந்தியாவை நோக்கி வந்தார். தத்துவம், ஆன்மீகம், சாஸ்திரங்கள் பற்றி, ஹிந்து மதம் அந்தக் காலத்திலேயே மிக பிரபலமாக இருந்தது. திருமணத்தைத் தவிர்த்து (பக் 64) சிந்து வழியே செல்லும் ஒரு கூட்டத்துடன் சேர்ந்து அவர் பயணப்பட்டார்.
மிகுந்த புத்திகூர்மை உடைய ஏசு பாலி மொழியைக் கற்றார். (பக் 70) அவர் இமயமலைப் பகுதிக்குச் சென்றார்.
நூலில் 58 முதல் 98 பக்கங்கள் முடிய அவர் இந்தியாவில் இருந்தது பற்றிய ஏராளமான விவரங்கள் தரப்படுகின்றன.
பூரி ஜகந்நாத்தில் உள்ள மடாலயத்தில் அவர் ஐந்து வருடங்கள் புத்தரின் போதனைகளை நன்கு கற்றார்.
இதில் பல புத்தகங்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.
ஏசு ராஜ்கீரிலும் வாரணாசியிலும் கூட கல்வி கற்றார்.
அடுத்து இன்னும் ஒரு முக்கியமான புத்தகத்தைப் பற்றிப் பார்ப்போம்
*** தொடரும்