முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 25
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
மூலிகை Part 25
xxxx
255. கை
காமாலை
கையாந்தகரை அல்லது கரசனாங் கண்ணியாம்
பொற்றலைக் கையாந்தகரை பொன்னி மரமாக் கும் உடலை
சுத்தமுறக்கட்டும் சுரங் கெடுக்கும் — சிற்றிடையாய்
சிந்தூரம் செலவாகும் சிந்தைதனைத் துலக்கும்
முந்திவரு குன்மமொழிக்கும்
கையாந்தகரை தும்பை, அம்மான் பச்சரிசி வகைக்கு ஒரு பிடியெடுத்து இடித்து சாறு பிழிந்து அதில் பனிரெண்டு மிளகு எண்ணிஎடுத்து அரைத்துக் கலக்கி அத்துடன் வெள்ளாட்டுப் பாலாவது ஆவின் பாலாவது கால் படி விட்டுக் கலக்கி சீனி சக்கரை ஒரு விராகநிடை போட்டுக் கொடுக்கவும். இப்படி ஆறு நாள் கொடுக்க காமாலை நிவர்த்தியாகும் .
XXXX
கொ
வாய்வினாலுண்டான உடம்புக் குத்தலுக்கு
கொடிவேலி வேரின் பட்டை, பரங்கிப்பட்டை பிரப்பங்கிழங்கு – மிளகு வகைக்கு விராகநிடை 3 எடுத்து , இடித்து 4 படி ஜலத்தில் போட்டு அரைப்படி கிஷாயமாக இறக்கி நாளொன்றுக்கு மூன்று தரம் அரிக்கால் (அரைக்கால்) படி வீதம் கொடுத்தால் மேற்படி வியாதி தீரும் .
XXXX
பித்த மூல கிராணிக்கு
கொட்டக்கரந்தையும் சீரகமும் சரியிடையாய் எடுத்து அரைத்து வில்லை தட்டி நல்லெண் ணெயில் வேகவைத்துத் தின்றால் மலம் வெண்மையாயும் உத்திரமாயும் கழித்தல் காத்து பரிதல் இவை தீரும் .
XXXX
சுளுக்கு சுரத்திற்கு
கொத்தமல்லி சுக்கு மிளகு திப்பிலி பேராமுட்டி – வகைக்கு விராகநிடை 3 எடுத்து ஒன்றிரண்டாயிடித்து அரைப்படி ஜலத்தில் போட்டு அரைக்கால் படியாக இறக்கி ஒரு நாளைக்கு மூன்று தடவை கொடுக்கவும் .
XXXX
அக்கி முதலிய சிறு விஷத்திற்கு
கொல்லன் கோவைக்கிழங்கை (ஆகாசக்கருடன் கிழங்கு ???) வஸ்திரகாயம் செய்து சரியிடை சீனி கூட்டி திருகடிப் பிரமாணம் இரு வேளையும் தின்று வந்தால் அக்கி அரிப்பு குடல் நோய் கண்டமாலை கிரந்தி சில்லறை விஷங்கள் யாவும் தீரும் .
XXXX
கிருமி பேதி
கொண்ணைக் கொழுந்தை உப்பில்லாமல் வெவித்து இரவில் படுக்கப்போகும்போது தின்றுவிட்டு காலையில் கொஞ்சம் சித்தாமணக்கெண்ணெய் புசித்தால் பேதியாகும் திமிர் பூச்சிகள் வந்துவிடும்.
XXXX
மலச்சிக்கலுக்கு
கொண்ணைக்காய், கொழுந்து இவைகளைக் கிஷாயம் வைத்து அருந்தினால் வயிற்று வலி வாய்வு தீரும்; மலச்சிக்கலைக் கண்டிக்கும்; சமமாயெடுத்து கிஷாயம் செய்து அந்தி சந்தியில் கொடுத்து வரவும் ; பால் அன்னம் புசிக்கவும்
(அதை பின்னங்காய் என்றும் கூறுவார்கள் “குண்டு விளையாடுவதற்கு பயன்படும்,அதன் ஓடு காய்ந்தபின் “பிரவுன்”கலரில்”அக்குரூட்”போலவும் இருக்கும் ஓடு ஓங்கி தட்டினால் உடைந்துவிடும், )
xxxx
வெள்ளைக்கு
கொடிக்கள்ளிக் கொழுந்தை அரைத்து எலுமிச்சங்காயளவு எடுத்து அத்துடன் 32 மிளகு அரைத்து கலந்து வைத்துக்கொண்டு ஒரு வேளைக்கு கொட்டைப்பாக்களவு கொடுக்கவும். இப்படி 3 நாள் கொடுத்து பசும் மோரும் சாதமும் கொடுக்கவும்; உப்பாகாது
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலரில் சமீபத்தில் வெளியான கட்டுரை இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
ஹென்றி போர்டு – ஆர்வம், உழைப்பு, பொறுமை இருந்தால் வெற்றி நிச்சயம்! – 2
எடிஸனின் கடைசி மூச்சு
எடிஸன் மீதான அவரது பக்தி அளப்பரியது. ஒரே ஒரு அதிசயமான எடுத்துக்காட்டைக் கூறலாம்.
எடிஸன் மரணப்படுக்கையில் இருக்கிறார், இறக்கப்போகிறார் என்பதை அறிந்தவுடன் போர்டு அவரது மகனிடம் ஓடோடிச் சென்று ஒரு சின்ன டெஸ்ட் டியூப் குழாயைக் கொடுத்தார். “எடிஸனின் கடைசி மூச்சை இதில் எனக்குப் பிடித்துக் கொடுங்கள்” என்று வேண்டினார்.
விசித்திரமான இந்த வேண்டுகோளை எடிஸனின் மகனும் ஏற்றார். அவரது கடைசி மூச்சு அந்த டெஸ்ட் டியூப் குழாயில் பிடிக்கப்பட்டது. எடிஸனின் மகன் உடனடியாக ஒரு கார்க்கை மேலே வைத்து அதை சீலிட்டார்.
போர்டு அதை தான் அமைத்த ‘தி ஹென்றிபோர்டு” என்ற மியூஸியத்தில் பாதுகாப்பாக வைத்தார்.
அதை இன்றும் அந்த மியூஸியத்தில் காணலாம்.
சோயா பீன்ஸ் தகடினால் ஆன கார்!
போர்டுக்கு அரசியலிலும் ஆர்வம் உண்டு. அமெரிக்க ஜனாதிபதியான உட்ரோ வில்ஸன் அவரை செனட்டுக்கு நிற்குமாறு வற்புறுத்த அவரும் போட்டியிட்டார். ஆனால் 4500 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார்.
சமாதானத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர் உலக அமைதிக்காகப் பாடுபட்டார்.
இறக்கும் போது அவர் தன் பெயரில் 161 பேடண்ட் காப்புரிமைகளைக் கொண்டிருந்தார்.
சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பில் பெரும் அக்கறை கொண்டவர் அவர். காரின் வெளிப்புறத் தகடுகளை சோயா பீன்ஸினால் செய்து காரின் எடையை வெகுவாகக் குறைக்க வேண்டும் என்பது அவரது ஆசை.
இரண்டாம் உலகப் போர் குறுக்கிடவே அவரால் தனது சோயாபீன்ஸினால் ஆன தகடுகள் கொண்ட காரை உற்பத்தி செய்ய முடியவில்லை.
மறுபிறப்பில் நம்பிக்கை
தான் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று தீவிரமாக நம்பினார் போர்டு. இதற்குக் காரணம் மறுபிறப்பில் அவருக்கு இருந்த நம்பிக்கை. ஆர்வமும் உழைப்பும் வெற்றி தரும். இருக்கவே இருக்கிறது புனர்ஜென்மம். பொறுமையுடன் இருந்தால் அடுத்த ஜன்மத்திலாவது வெற்றி வராமலா போய்விடும் என்பது அவரது எண்ணம்.
தன் வெற்றிக்குக் காரணம் ஏதோ ஒரு மகத்தான சக்தி தான் என்று அவர் கூறினார். “மகத்தான சக்தி ஒன்று தனது அலைகளை என் மீது வீசிக் கொண்டிருக்கிறது. சொந்தமாக நான் ஒன்றுமே செய்யவில்லை. மறைந்திருக்கும் ஆற்றல் சக்திகளே என்னை முன்னுக்குத் தள்ளி வழி நடத்துகின்றன” என்றார் அவர்.
தனது 26ஆம் வயது முதலே மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவரே சான்பிரான்ஸிஸ்கோ எக்ஸாமினர் (San Francisco Examiner) என்ற பத்திரிகைக்கு 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் இப்படி:
“26ஆம் வயதில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையைக் கொள்ள ஆரம்பித்தேன். மதம் ஒன்றும் தர முன்வரவில்லை. வேலை கூட பூரண திருப்தியைத் தரவில்லை.
ஒரு பிறப்பில் நாம் பெற்ற அனுபவத்தை இன்னொரு பிறவியில் நாம் பயன்படுத்த முடியவில்லை எனில் அது மிக மோசம். மறுபிறப்பு பற்றி நான் கண்டுபிடித்த போது ஒரு பிரபஞ்ச திட்டத்தை கண்டு கொண்டது போல இருந்தது. எனது கருத்துக்களை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்தேன். காலம் என்பது இனி ஒரு எல்லைக்குட்பட்டதாக இல்லை. கடிகாரத்தின் முள்களுக்கு நான் இனி அடிமை இல்லை.
மேதைத் தனம் என்பது அனுபவம். சிலர் அதை ஒரு பரிசு என்றோ அல்லது ஒரு திறமை என்றோ நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது பல ஜென்மங்களில் ஏற்பட்ட அனுபவங்களின் விளைவே. சிலர் மற்ற ஆன்மாக்களை விட முதியவர்கள். ஆகவே அவர்களுக்கு அதிகம் தெரியும். மறுபிறப்பைக் கண்டுபிடித்ததிலிருந்து எனது மனம் தெளிவாக இருக்கிறது.
இந்த உரையாடலை நீங்கள் பாதுகாத்தீர்கள் என்றால் இது மனித மனங்களை தெளிவாக இருக்கச் செய்கிறது என்று எழுதுங்கள். நான் மற்றவர்களுக்குச் சொல்ல விரும்புவது வாழ்க்கை பற்றிய நீண்ட நோக்கு நமக்குத் தரும் அமைதியைப் பற்றியே”
போர்டு கூறியதில் ஒரு சிறிய பகுதியையே மேலே நாம் படித்தோம்.
இன்னும் ஏராளமாக அவர் மறுபிறப்பு பற்றிக் கூறியிருக்கிறார்.
மனித வாழ்வில் ஒரு ஆறுதலையும் அர்த்தத்தையும் தரும் மறுபிறப்பு நம்பிக்கையே தன் வெற்றிக்குக் காரணம் என்று அவர் கூறியிருப்பது பொருள் பொதிந்த ஒன்று.
மறைவு
பெருமூளையில் ஏற்பட்ட இரத்த ஒழுக்கினால் 1947-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அவர் தனது 83-ம் வயதில் அவர் மரணமடைந்தார்.
வரலாறு கண்ட மாமனிதர்
சாதாரண கடிகார ரிப்பேர் செய்து கடிகார பாகங்களைக் கழட்டி அதை மறுபடியும் பூட்டி தனது வாழ்க்கைப் பாதையை ஆரம்பித்த போர்டு 200 பில்லியன் டாலருக்குச் சொந்தக்காரராக ஆனது எதைக் குறிக்கிறது? அவரது ஆர்வம், உழைப்பு, பொறுமை ஆகியவற்றையே குறிக்கிறது.
ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி. 200 பில்லியன் என்றால் 200 நூறு கோடி டாலர். ஒரு டாலரின் மதிப்பு 83 ரூபாய் என்றால் இன்றைய இந்திய மதிப்பின் படி அவரது சொத்தை நாமே கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டியது தான்!
வரலாற்றில் நாம் காணும் அதிசய மனிதராகத் திகழும் இவரது பொன்மொழி:
செய்யும் ஒரு வேலையில் வெற்றி காணவேண்டுமெனில்!
, எந்த ஒரு அமைப்பையும், வழிமுறையையும் எப்போதும் சீர்திருத்தவோ, அல்லது அடியோடு நீக்கவோ, ஒழிக்கவோ தயாராக இருங்கள்,
எல்லாமே உங்களுக்கு எதிராகத் திரும்பி விட்டது எனில், ஆகாய விமானம் காற்றுக்கு எதிராகவே தனது பறக்கும் வேலையைத் தொடங்குகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
திருவனந்தபுரம் பாலஸ் மியூசியத்தை ஒட்டி சித்ராலயம் மியூசியம் இருக்கிறது; அங்கு போட்டோ எடுக்க அனுமதி கிடையாது ; அங்குள்ள அதிசயங்களில் ஒன்று வினோத சித்திரங்கள் ஆகும் . ஒரு காகிதத்தில் எலிகள் படங்களாக இருக்கும். அதன் மீது கூம்பு வடிவ கண்ணாடியை வைத்தால் அந்த கண்ணாடிக்குள் கணபதியைக் காணலாம். இதே போல வண்ணத்தைக் கொட்டிய பேப்பரில் கூம்பு வடிவ கண்ணாடியை வைத்தால் மஹாத்மா காந்தி தெரிவார். இது போல 10, 15 சித்திரங்களைக் காணலாம். இந்த உத்தியை அனமார்ப்பிக் ஆர்ட் ANAMORPHIC ART என்பார்கள்.இது கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து உருவான சொல். அன என்றால் மீண்டும், பின்னே என்று பொருள் மார்ப்பிக் என்றால் உருவம். அதாவது ஒரு படத்தைச் சிதைத்துவிட்டு அதை மீண்டும் நல்ல உருவத்தில் சித்திரமாகப் பார்ப்பதாகும். இத்தாலிய மேதை லியர்னாடோ டாவின்சி இதைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினார் 1485 ஆம் ஆண்டில் அவர் உருவாக்கிய கண் சித்திரம்தான் இவ்வகையில் முதன்மையானது.
அடுத்த 300 ஆண்டுகளில் இது மிகவும் வேகமாகப் பரவியது. ரகசியச் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும், அரசியல் பரப்புரைகள் செய்யவும், ஆபாசப் படங்களை அனுப்பவும் இந்த சிதைக்கப்பட்ட சித்திர உத்தி கையாளப்பட்டது. ஒரு கூம்பு அல்லது பிரமிட் அல்லது உருளை/ சிலிண்ட்ரிகல் கண்ணாடியை வைத்தால்தான் உண்மையில் அது என்ன என்பது தெரியும்.
எட்டாவது ஹென்றி மன்னரின் ஆஸ்தான ஓவியர் HANS HOLBEIN ஹோல்பேய்ன் என்பவர்தான் மிகவும் புகழ்பெற்ற சிதைந்த சித்திரத்தை உருவாக்கியவர் . கீழை நாடுகளில் பின்னர் இது பரவியது .
சித்ராலயா மியூசியத்தில் உள்ள வினோத வி/ சித்திரங்களை உருவாக்கியவர் கேரள மாநில திருஸ்சூரைச் சேர்ந்த பள்ளிசேரி வின்சென்ட் ஆவார். இவர் கலைப் பள்ளியில் பயின்றவர் . தற்போது கொச்சி கல்லூரியில் ஆசிரியரா உள்ளார். இந்தியாவில் இந்தக் கலையைப் பின்பற்றுவோர் மிகச் சிலர்தான்.
இவரது வி/ சித்திரங்களை லண்டனில் பக்கிங்ஹாம் அரண் மனை, அபுதாபி அரண் மனை, வங்க தேச தலை நகர் டாக்கா , திருச்சூர் சர்ச் , திருவனந்தபுரம் சித்திராலயம் ஆகியவற்றில் காணலாம் .
xxxx
கத்தி கபடாக்கள், துப்பாக்கிகள் பெரிய நிலைக் கண்ணாடிகள் , சீனா ஜப்பானிலிருந்து வந்த ஊறுகாய் ஜாடிகள், வண்ணக் கோப்பைகள், பொம்மைகள் பீங்கான் பொருட்களையும் பாலஸ் மியூசியத்தில் காணலாம். ஒவ்வொரு பொருளின் பின்னாலும் ஒரு கதை இருக்கும். யார் கொடுத்தார்கள், எப்போது, எதற்காகக் கொடுத்தார்கள் என்பனவெல்லாம் ஆராய்ச்சியாளருக்கு முக்கியமான தகவல் ஆகும். அதே போல கத்தி கபடாக்கள் , துப்பாக்கிகள் ஆகியன போர்ச்சுகீசிய, டச்சு, ஆங்கில ஆக்கிரமி ப்பாளருடன் , திருவாங்கூர் மன்னர்கள் செய்த யுத்தங்களின் கதைகளை சொல்லும் .
ஒரு யானையின் தோலை, தந்தங்களை அப்படியே எடுத்து உயிருடன் இருக்கும் யானை போலவே வைத்துள்ளதை மியூசியத்துக்கு வெளியே வருகையில் காணலாம்.
அனைவரும் காண வேண்டிய மியூசியம் இது . நான் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளேன் .
இத்துடன் இந்த 9 பகுதி படக்கட்டுரை நிறைவு பெறுகிறது .
—சுபம்—
TAGS- ANAMORPHIC ART, TRIVANDRUM, PALLISERY VINCENT, DA VINCI, PALACE MUSEUM, PART 9, வினோத (வி) சித்திரங்கள் திருவனந்தபுரம், பாலஸ் மியூசிய அதிசயங்கள் 9
33.சர்பகந்தா (rauvolfia serpentina; பாம்புக்களா / பாம்பு கலா, சிவன் அமல் பொடி) ரவூல்பியா சர்பென்டினா
2400 ஆண்டுகளுக்கு முன்னரே சரகர் சொன்ன இந்த மருந்தை இன்று வெள்ளைக்காரர்கள் இருதய நோய்க்கு மருந்தாக விற்று வருகின்றனர். 18ம் நூற்றாண்டில் இந்த ரகசியத்தை இந்துக்களிடமிருந்து ஐரோப்பியர்கள் கற்றார்கள்
ஸர்ப்ப , நாக என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள் சர்ப்பென்ட, ஸ்நேக் என்று ஆங்கிலத்தில் உருமாறின .
இந்தியா முழுதும் இந்தத் தாவரத்தின் இல்லை, தண்டு, வேர் ஆகியவற்றைப் பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர் பாலில் அரைத்து களிம்பை காயங்களில் சப்புவது ஒரு முறை; கிழங்கு வேரின் கஷா யத்தை குடிக்கக் கொடுப்பது இன்னும் ஒரு சிகிச்சை முறை . வேரினை நசுக்கி பாம்பு கடித்த இடங்களில் காட்டுவதும் உண்டு
Rauwolfia alkaloids work by controlling nerve impulses along certain nerve pathways. As a result, they act on the heart and blood vessels to lower blood pressure.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் , இருதய நோய்களுக்கு மருந்தாகவும் ரவூல்பியா செடியிலுள்ள ரசாயனப் பொருட்கள் பயன்படுகின்றன.
XXXX
34. Rauvolfia tetraphylla L. ரவூல்பியா டெட்ராபில்லா
ஓரிஸ்ஸா மாநில சுந்தர்கர் வட்டார மக்கள் பாதாள கருடி என்ற பெயரில் இந்தச் செடியின் வேரின் பசையை உபயோகிக்கின்றனர் . சர்ப்பகந்தா மூலிகையின் வகையைச் சேர்ந்தது இது.
XXXX
35. Rhazya stricta Decne. ரைஸியா ஸ்ட்ரிக்ட்டா
பாகிஸ்தானில் இதை பயன்படுத்துகின்றனர் .சைன்வர் என்பது வட்டார மொழிச் சொல்
XXXX
நந்தியாவட்டை
36. Tabernaemontana divaricata (L.) R. Br. ex Roem. & Schult.
டேபர்னோமோன்டனா டைவேரிக்காடா / நந்தியாவட்டை
நந்தி பட்டலு என்று கர்நாடக மக்கள் இதை அழைக்கின்றனர். வேரினை நசுக்கி மோரில் கலந்து கொடுக்கின்றனர்
கர்நாடக பிடார் வட்டார மக்கள் இதை ஆடுமுட்டாத பல்லி (வள்ளி) என்பார்கள். பாம்பு கடித்தவரின் மூத்திரத்தில் இதன் இலைகளை நசுக்கி மூக்கு வழியாக ஓரிரண்டு துளி களை விடுகிறார்கள்
Tamil -Naippalai, Nancaruppan, Nangilaippiraptai, Nangilaippirattai, Paalaaikeerai, Paalai Keerai,
XXXX
38. Willughbeia edulis Roxb.
வில்லுக்பெய்யா எடுலிஸ்
வங்க தேச சக்மா பழங்குடி மக்கள் இதை சூரஜ் முகி என்ற பெயரில் பயன்படுத்துகின்றனர் .
XXXX
F8. Family: Araceae
39. Arisaema jacquemontii Blume
F8. Family: Araceae குடும்பம் ஏரேசி
அரிசேமா ஜாக்மொன்டிலி
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் கார்வால் இமயமலைப் பகுதி மக்கள் இதன் பழத்தை கஷாயம் வைத்துக் கொடுக்கின்றனர் ; கப்ரியா அல்லது சபேரி மவுசி என்பது வட்டாரப் பெயர்.
XXXX
40. Arisaema tortuosum (Wall.) Schott
அரிசேமா டார்ச்சுவோசம்
கார்வால் இமயமலை மக்கள் இதன் கிழங்கை நசுக்கி காயம்பட்ட இடத்தில் வைத்துக் கட்டுகின்றனர்
இதை சம்பூஸ் , பாக் முங்க்ரி என்று சொல்கிறார்கள் .
XXXX
41. Sauromatum venosum (Aiton) Kunth
செளரோமேட்டம் வெனோசம் .பாகிஸ்தான் மக்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள்
XXXX
F9. Family: Arecaceae
42. Nypa fruticans Wurmb
குடும்பம்- அரிகாசியே ;நீபா பிரக்டியன்ஸ்
ஒரிஸ்ஸா மக்கள் இதை நீபா என்ற பெயரில் பாம்புக்கடிக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.
XXXX
F10. Family: Aristolochiaceae
43. Aristolochia bracteata Retz.
குடும்பம்- அரிஸ்டோலோகியேசி
அரிஷ்டலோகியா ப்ராக்டியேடா
தமிழ் நாட்டில் சேலம் வட்டார மக்கள் , ஆடு தின்னா பாலை ,ஆடுதீண்டாப்பாளை என்னும் இந்தச் செடியின் இலையை நசுக்கி பாம்பு கடித்த இடத்தில் வைத்துக் கட்டுகின்றனர்.
நெல்லை ஜில்லா மலைவாழ் மக்கள் இதன் கிழங்கு, இலைகளை சாறாகப் பிழிந்து மேற்கண்ட மாப்பாஞ்சான் கிழங்குடன் 40 நாட்களுக்கு காயப்பட்ட இடத்தில் வித்துக் கட்டுவார்கள் . வேறு சில பாம்புக்கடி மூலிகைகளையும் சேர்ப்பர் .
XXXX
46. Aristolochia tagala Cham.
அரிஷ்டலோகியா தகலா
வாங்க தேச சிட்டகாங் மலைப்பகுதி மக்கள் வேரைப் பசையாக்கி பாம்பு கடித்த இடத்தில் கட்டுகின்றனர் ; இலையைச் சாறுபிழிந்து குடிக்க வைக்கின்றனர்
கர்நாடக மக்கள் இதை ஹலவு மக்கள பேரு என்றும் பஹுமூல என்றும் சொல்லுவர் செடியின் இலையைச் சாறு பிழிந்து பாம்பு கடித்த இடங்களில் தடவுகின்றனர் .
Following is from Wikipedia:
சாத்தாவாரி அல்லது தண்ணீர் விட்டான் (Asparagus racemosus) என்பது இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும் அஸ்பராகஸ் இனத் தாவரம்.
இது தண்ணீர்விட்டான், சதாவேரி, சதாவரி, நாராயணி, உதகமூலம், சீக்குவை, பறணை, பீருதந்தி ஆகிய பல்வேறு பெயர்களைக் கொண்டது ஆகும். இதன் ஊசி போன்ற இலைகளும் கிளைகளும் வரிவரியாக மேலேறுவதால் ‘வரிவரி’ எனும் பெயரும் உண்டு. இந்தக் கொடியில் இருந்து கிடைக்கும் கிழங்கானது வெப்பத்தைக் குறைக்கும் குளிர்ச்சித் தன்மைக் கொண்டது என்பதால், ‘நீர்’விட்டான், ‘நீர்’வாளி ஆகிய பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம். நூறு (சதா) நோய்களைத் தீர்க்கும் மூலம் (வேர்) என்பதால் ‘சதாமூலம்’ என்ற பெயரும் இதற்குண்டு.
xxxx
48. Muscari commutatum Guss.
48. Muscari commutatum Guss.முஸ்கரி கம்யூடேட்டம்
மணிப்பூர் மாநில மக்கள் இலையின் சாற்றை பாம்புக்கடி மருந்தாக உபயோ கிக்கிறார்கள் .
ஆந்திரப்பிரதேச கோண்ட் இன பழங்குடி மக்கள் இலையையும் வேரையும் நசுக்கிப் பசையாக்கி பாம்பு கடித்த இடத்தில் ஒரு நாளைக்கு மூன்று தடவை வீதம் மூன்று நாட்களுக்கு அப்புகிறார்கள். அவர்கள் இதை தும்பரசு ஓஸோ என்கிறார்கள் Dumparasu ossoh
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலரில் சமீபத்தில் வெளியான கட்டுரை இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
ஹென்றி போர்டு – ஆர்வம், உழைப்பு, பொறுமை இருந்தால் வெற்றி நிச்சயம்! – 1
ஹிட்லர் புகழ்ந்த ஒரே ஒரு அமெரிக்கர்
கடிகாரத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மீண்டும் அதை அசெம்பிள் செய்து வேடிக்கை பார்த்த ஒரு சிறுவன், உலகின் ஆகப் பெரிய கார் அசெம்பிளி லைனை – 24 விநாடிகளில் கார் பாகங்களை ஒன்று சேர்த்து ஒரு காராக உருவாக்கும் – நுட்பத்தைச் செய்து காட்டினான் என்றால் பிரமிப்பாக இல்லை?
அமெரிக்கர்களையும் பிரிட்டிஷாரையும் வெறுக்கும் ஹிட்லர் தன் வாழ்நாளில் அனைவரும் அறியும்படி “உத்வேகம் ஊட்டுபவர்” என்று கூறிப் புகழ்ந்த ஒரே ஒரு அமெரிக்கர் இவர் தான் என்றால் ஆச்சரியமாக இல்லை?
யார் இவர்?
அவர் தான் ஹென்றி போர்டு.
பிறப்பும் இளமையும்
அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் வில்லியம் என்பவருக்கும் மேரி போர்டுக்கும் 1863-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி பிறந்தார் ஹென்றி போர்டு. தாயின் விருப்பதிற்கிணங்க பண்ணையில் வேலை பார்த்த அவர் 1876-ல் தாயார் மறையவே பண்ணையிலிருந்து வெளியே வந்தார்.
தந்தையார் அவருக்கு ஒரு பாக்கட் கடிகாரத்தைப் பரிசாகத் தந்தார். அடுத்த கணமே அதை அக்கக்காகப் பிரித்த போர்டு, மீண்டும் அதை கடிகாரமாக அசெம்பிள் செய்து அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கினார்.
இதிலிருந்து அனைவரது கடிகாரங்களையும் வாங்குவது, பிரிப்பது மீண்டும் அதை பழையபடி ஒன்று சேர்த்து ஓட வைப்பது அவரது பொழுதுபோக்கானது. ரிப்பேர் செய்வதற்கென்றே கடிகாரங்களை அனைவரும் அவரிடம் தர ஆரம்பித்தனர்.
அசெம்பிள் செய்வது என்பது அவரது மனதில் ஆழப் பதிந்து விட்டது.
15 வயதில் முதல் எஞ்ஜின்
1878-ல் தனது 15-ம் வயதில் தனது முதல் நீராவி எஞ்ஜினை அவர் உருவாக்கினார். எடிஸனின் நிறுவனமான எடிஸன் இல்லுமினேடிங் கம்பெனியில் சேர்ந்த அவர் தனது திறமையால் 1893-ல் தலைமைப் பொறியாளராக ஆனார்.
கையில் சிறிது பணம் சேரவே சொந்தமாக தனது கேஸொலைன் எஞ்சின்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்.
“குதிரை இல்லாமல் ஓடும் வண்டியான”, தனது காரை 1896இல் – 33-ம் வயதில் உருவாக்கினார்; அனவரும் பிரமித்தனர். ‘’க்வாட்ரி சைக்கிள்’ என்று அவர் அதற்குப் பெயர் சூட்டினார்.
எடிஸன் மீது அளவில்லாத பக்தி அவருக்கு ஏற்பட்டது. எடிஸன் அவரைக் கார் தயாரிக்குமாறு ஊக்குவித்தார்.
போர்டு மோட்டார் கம்பெனி
1903-ம் ஆண்டு போர்டு மோட்டார் கம்பெனியை 28000 டாலர் முதலீட்டுடன் அவர் தொடங்கினார். ஆனால் உரிய லைசென்ஸ் இல்லாத காரணத்தால் அது மூடப்பட்டது. நீதிமன்றம் சென்ற போர்டு முதலில் தோற்றாலும் 1911-ல் வெற்றி பெற்றார். மீண்டும் தொழிற்சாலை தொடங்கியது.
600 டாலர் விலையில் ‘மாடல் என்’ என்ற ஒரு காரை அவர் அறிமுகப்படுத்தினார். அதன் விலை கூட என்பதை அவர் உணர்ந்தார். ஆகவே அனைவரும் வாங்கும் விலையில் ஏராளமான கார்களை உற்பத்தி செய்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
முதலில் 950 டாலருக்கு விற்பனையான அவரது ‘மாடல் டி’ கார்,
1927-ல் கடுமையான உழைப்பு, ஆர்வம். ஆகியவற்றின் விளைவாக 290 டாலராகக் குறைக்கப்பட்டது.
தனது புதிய செயல் முறையான அசெம்பிளி லைனை அவர் 1913-ல் ஆரம்பித்தார். கார் பாகங்கள் வரிசையாக வைக்கப்பட்டு இருக்க 723 நிமிடங்களில் அதை ஒரு காராக ஆக்கிய அசெம்பிளி லைனை முதலில் அவர் உருவாக்கினார். பின்னர் தனது கடும் உழைப்பால் 93 நிமிடங்களில் ஒரு காரை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்தார். இன்னும் அதிக ஆராய்ச்சியும் , அதிக உழைப்பும் சேர அனைவரும் பிரமிக்கும் வண்ணம் 24 விநாடிகளில் அசெம்பிளி லைனிலிருந்து காரை வெளியே கொண்டு வந்தார்.
உலகமெங்கும் பிரசித்தமான மாடல் டி கார் உருவாகவே அவர் பெயர் பிரபலமானது.
அமெரிக்க சந்தையில் புகுந்த அவர் மக்களிடம் காரை விற்கத் தொடங்கினார். அமெரிக்காவில் பாதி கார்கள் அவர் தயாரித்த கார்களாகவே இருந்தன.
உலகமே அதிசயதித்த அந்த கால கட்டத்தில் ஹிட்லரே அவரை “ஊக்கமூட்டும் ஒருவர்” என்று புகழ்ந்தார்.
மாடல் டி காரின் விற்பனை
மாடல் டி கார் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. 165 லட்சம் கார்கள் விற்கப்பட்டன. 1908லிருந்து 1927 முடிய தயாரிக்கப்பட்ட இந்தக் கார்கள் 2012ஆம் ஆண்டிலும் கூட அமெரிக்காவின் டாப்-டென் கார்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.
குடும்பம்
க்ளாரா ஜேன் பைரண்ட் என்பவரை அவர் 1888-ம் ஆண்டு மணந்தார்.
அவருக்கு எட்ஸல் போர்டு என்று ஒரு மகன் உண்டு.
வாழ்நாளில் அவரைத் தேடி ஏராளமான விருதுகள் வந்து குவிந்தன.
அமெரிக்காவை உருவாக்கிய முக்கியமான ஒருவராக அவர் கருதப்பட்டார். 1999-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மார்டின் லூதர் கிங், மதர் தெரஸா ஆகியோர் அடங்கிய 18 பேர் பட்டியலில் அவரும் ஒருவராக அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் உருவம் பொறித்த தபால்தலை அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
மனிதப் பண்புகள்
தனது நிறுவனத்தில் 20% பணியை மாற்றுத்திறன் கொண்ட ஊனமுற்றோருக்காக அவர் தந்தார்;
அந்தக் காலத்தில் மற்றவர்கள் தரும் சம்பளத்தை விட இரு மடங்கு ஊதியத்தை அவர் தனது தொழிலாளர்களுக்கு வழங்கியதோடு, நிறுவனத்தில் தனக்குக் கிடைத்த லாபத்தை ஆறுமாதத்திற்கும் மேலாகப் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் அவர் பிரித்துக் கொடுத்தார்.
திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்களில் இன்னுமொரு குறிப்பிடத்தக்க பொருள் பீரங்கிக் கடிகாரம் ஆகும். அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் நண்பகல் நேரத்தைக் குறிக்க இதை பயன்படுத்தியதால் இதை நண்பகல் பீரங்கி NOON CANON என்றும் அழைத்தனர். இது சூரிய ஒளியால் இயங்குவது. சூரியஒளியானது நடுப்பகல் நேரத்தில் லென்ஸ் என்னும் பூதக்கண்ணாடி மீது விழும் வகையில் ஆடிகள் இருக்கும். அப்பொழுது விழும் ஒளி குவியும் இடத்தில் வெப்பம் அதிகரிக்கும். அது பீரங்கிக் குண்டு மீது விழுந்து அதை வெடிக்கச் செய்யும் (படத்தில் காண்க )
அங்குள்ள மார்பிள் / சலவைக்கல் சிலைகளும் அழகானவை . நம்முடைய நவராத்ரி கொலு பொம்மைகளைப் போல காட்சி தருகின்றன. அரண்மனை முழுதும் காணப்படும் மரவேலைகளைப் பார்த்து ரசிக்கும்போது, இவைகளை செய்ய எவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பதை ஊகித்தறியலாம்.
பலவிதமான விளக்குகளும் காட்சியில் உள்ளன. இவைகளைப் பார்த்தபோது கொழும்பு மியூசியம் என் நினைவுக்கு வந்தது . இப்பொழுதும் மலையாளக் கோவில்களில் தீபங்கள் மிகவும் புகழ்பெற்றவை. கோவில் வாசலில் விளக்குகள் இருப்பதோடு பிரகார சுவர்களிலும், மரச் சட்டங்களிலும் விளக்குகளை வைத்து லட்ச தீப விழாக்களைக் கொண்டாடுகிறார்கள் .
காட்சிக்கு வைத்துள்ள அரண்மனை மியூசியம் தவிர உண்மையில் மன்னர் குடும்பம் வசிக்கும் அரண்மனைகளும் உள்ளன. அவை திருவனந்தபுரம் கோவில் ரகசியங்கள் போல மறைந்து இருக்கின்றன.
தற்காலத்தில் தந்தத்திலான பொருட்கள் தடை செய்யப்பட்டுவிட்டன. யானைகள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உலக நாடுகள் இதை அமல்படுத்தியுள்ளன. ஆயினும் அரண்மனை மியூசியத்தில் பழங்கால தந்தங்களும், தந்த சிம்மாசனங்களும் அப்படியே இருக்கின்றன. சங்கத் தமிழ் இலக்கியம், காளிதாசன் காவியங்களில் தந்த சிம்மாசனம், தந்த உலக்கை பற்றியெல்லாம் காணலாம்.
விக்ட்டோரியா மஹாராணிக்கு திருவாங்கூர் மன்னர் தந்த சிம்மாசனம் ஒன்றை அனுப்பினார்.
—subham—
Tags- பாலஸ் அதிசயங்கள் 8 , மார்பிள் சிலைகள் , பீரங்கிக் கடிகாரம், தந்த சிம்மாசனம், Palace Museum, Rare objects, Part 8, Thiruvananthapuram, Ivory, Noon Canon
தமிழ்நாட்டின் கல்ராயன் , சேர்வராயன் மலைப்பகுதி மக்கள் கோலமாவு மரத்தின் பட்டையை
Vernacular names: Kolamavu (Kalrayan and Shervarayan hills, Eastern Ghats, Tamil Nadu, India); பட்டையைப் பாம்புக்கடிக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்
XXXX
20. Mangifera indica L.
மாக்னீபெரா இண்டிகா (மா மரம்)
உத்தர பிரதேச தேராய் காட்டுவாசிகள் மா மரப் பூவை அரைத்து கைகளில் தடவிக்கொள்கின்றனர். இதனால் பாம்பு கடிக்காது என்பது அவர்கள் நம்பிக்கை
XXXX
21. குடும்பம்- அந்நோனேசி
F6. Family: Annonaceae
21. Annona squamosa L.அன்னோனா ஸ்க்வாமோசா
நிகோபார், கார் நிகோபார் தீவு மக்கள், பாம்பு கடித்த இடத்தை இந்த தாவரத்தின் சாற்றைக் கொண்டு கழுவி சுத்தப்படுத்திவிட்டு, கரு ஊமத்தை வகை தாவரத்தின் Datura metel leaf paste இலைப்பசையை அப்புகின்றனர்
IXXXX
22. Miliusa eriocarpa Dunn.மிலியுசா எரியோ கார்பா (சாக்கடை மரம் என்றும் அழைக்கிறார்கள் )
திருநெல்வேலி பகுதியில் இதை கரு நாரை என்று அழைப்பார்கள் இதன் இலையை கஷாயம் வைத்து அத்தோடு தான்றிக்காய், கொ ட்டை இலந்தை கருவேப்பிலை மரப்பட்டை ஆகியவற்றுடன் கொதிக்கவைத்து பாம்பு கடித்தோரைக் குடிக்கவைக்கினறனர்
Vernacular name: Karu naarai (Tirunelveli hills, Tamil Nadu, India)
Leaf decoction along with stem bark of Murraya koenigii, leaves of Terminalia bellirica and Zizyphus xylopyra is heated first and then taken internally to treat snakebite by the tribals of Tirunelveli hills, Tamil Nadu, India (Ayyanar and Ignacimuthu, 2005).
XXXX
குடும்பம் அபோசயனேசி Family: Apocynaceae
23. Alstonia scholaris (L.) R. Br.ஆல்ஸ்டோனியா ஸ்காலரிஸ்
கர்நாடக சிக்மகளூர் வட்டார மக்கள் இதன் மரப்பட்டையை கடித்து மெல்லச் செய்கின்றனர் .
இதன் பாலை பாம்பு கடித்த இடத்தில் விட்டு ரத்தத்தை வெளியேற்றுகின்றனர் . இதை இந்திய, பாகிஸ்தான், வங்கதேச மக்கள் பயன்படுத்துகின்றனர்
சேலம் ஜில்லா குமரகிரியில் போதைப்பொடி செய்து மிளகுடன் தருகின்றனர் . இதன் வேர், இலைகளை மற்ற பல இடங்களில் பயன்படுத்துகினறனர்
XXXX
26. Cryptolepis buchananii Schult.
கிரிப்டோலெனிஸ் பூச்சநானி
உத்தர கன்னட மக்கள் இதை கரி பந்தன பல்லி என்பர். ஆடு மாடுகளைப் பாம்புக்கடித்தால் 100 கிராம் இலையை மோரில் அரைத்து இரண்டு முறை கொடுக்கிறார்கள்
xxxx
27. Ervatamia coronaria (Jacq.) Stapf
27. ஏர்வடாமியா கரோனரியா
மேற்குத் தொடர்ச்சி மலை மலாண்ட் வட்டார மக்கள் இந்த மரத்தின் வேரையும் பட்டையையும் கஷாயம் வைத்து வேறு மூன்று பட்டை வேர் இலைகள் , வெண்ணெய், பால் ஆகியவற்றுடன் கலந்து வடிகட்டி மருந்தாகக் கொடுக்கின்றனர்
Root and bark infusion of the plant and Leucas aspera தும்பைl eaves with roots of Ocimum adscendens நாய்த்துளசி, புனத்துளசி, கஞ்சங்குல்லை, குல்லை ( and bark of Artocarpusபலாவினக்காய் mixed with milk and butter are filtered and used in snakebite by the local medicine men of Bhadra wildlife sanctuary, Maland region of Western Ghats, India (Parinitha et al., 2004).
xxxx
28. Hemidesmus indicus (L.) R. Br.
28 ஹெமிடெஸ்மஸ்இன்டிகஸ்
மேற்கு வங்க புரூலியா வட்டார மக்கள் அனந்த மூல என்ற பெயரில் இதன் வேரை அரைத்து பயன்படுத்துகிறார்கள் காயம்பட்ட இடத்தில் அதை அப்புகிறார்கள்
xxxx
29. Holarrhena antidysenterica (L.) Wall. ex A. DC.
29. ஹோலரீனா ஆன்டிடீசென்ட்ரிகா
ஒரிஸ்ஸா மாநில சுந்தர்கர் வட்டார மக்கள் இதன்பட்டையைப் பயன்படுத்துகிறார்கள்..இன்னும் சிலர் இதன் வேரை அரைத்து உள்ளுக்கும் கொடுத்துவிட்டுப்பாம்பு கடித்த இடத்திலும் அப்புகிறார்கள்
Vernacular name: Kurai (Sundargarh District, Orissa, India)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலரில் சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
மேரி கே ஆஷ் – பெண்களே அழகுடன் முன்னேறுங்கள், சமுதாயத்தை முன்னேற்றுங்கள்! – 2
ச. நாகராஜன்
அழகுக்கு அழகூட்டுங்கள்
பெண்கள் எப்போதுமே இல்லத்திலும் சரி, வெளியிலும் சரி அழகுடன் விளங்க வேண்டும் என்று நமது நூல்கள் சொல்கின்றன. பகட்டிற்காகவோ அல்லது ஆடம்பரத்திற்காகவோ அல்ல; அது ஒரு உற்சாகமான மேம்பாடுடன் கூடிய சமுதாயத்தின் அடையாளம் என்பதற்காக!
சௌந்தரியம் எனப்படும் அழகு என்பது தான் என்ன? கணம் தோறும் கணம் தோறும் புதுமையைக் கொள்வது சௌந்தர்யம்.- கணம் தோறும் வியப்பு! கணம் தோறும் புதுமை. இதுவே சௌந்தர்யம்!
இதை இயற்கை முறையில் எளிமையாக அதிகம் செலவின்றி செய்ய உதவுவது காஸ்மெடிக்ஸ் எனப்படும் ஒப்பனைப் பொருள்கள் –
பெண் என்பவள் யார்? அன்றாடம் குளித்து, அழகிய ஆடை அணிந்து, நெற்றியில் சித்திரம் கூடிய திலகம் இட்டு, கண்ணுக்கு மை ‘எழுதி’, காதணி பூட்டி, மூக்கணி புனைந்து, கூந்தலைச் சீவி சிங்காரித்து மலர் சூடி, அழகுற உடை அணிந்து, கால் ஆபரணம் அணிந்து, உடலுக்கு சுகந்த வாசனை சேர்த்து, அழகிய வளையல்களை அணிந்து, பாதங்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பு தீட்டி, மேகலை அணிந்து, வாய் சிவக்க தாம்பூலம் தரித்து, மோதிர விரலில் மோதிரம் அணிந்து, சாதுரியத்துடன் இதர அலங்கார வகைகளையும் செய்து கொண்டு இல்லத்திற்கும் சமுதாயத்திற்கும் நலம் சேர்த்து அனைவரையும் மேலே உயர்த்துபவளே பெண் என்று நம் நூல்கள் பெருமையுறக் கூறுகின்றன!
மேரி காஸ்மெடிக்ஸ் தயாரிப்புகள்
இந்த வகையில் பெண்களுக்குரிய லிப்ஸ்டிக், மேனி பளபளப்பாக இருக்க உதவும் க்ரீம்கள், சருமத்தை மென்மையாகக் காட்ட வல்ல ஒப்பனைப் பொருள்கள் என ஏராளமானவற்றைத் தயாரித்தார் மேரி.
உலகில் பெண்களுக்கான பத்து சிறந்த கம்பெனிகளுள் ஒன்று என்ற பாராட்டைப் பெறும் அளவில் தன் நிறுவனத்தை உயர்த்தினார் மேரி. இன்று மேரி காஸ்மெடிக்ஸ் 200 தயாரிப்புகளைக் கொண்டுள்ளது.
அதை விற்பதற்கென உலகெங்கும் 30 லட்சம் பெண்கள் ஆலோசகர்களாக உள்ளனர்.
ஆலோசகர்கள் இரு விதமாக சம்பாதிக்க முடியும். ஒன்று தன்னால் சில பெண்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களையும் விற்பனை ஆலோசகர் ஆக்குவது. இன்னொன்று – பொருள்களை விவரித்து அதை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து அதன் லாபத்தில் ஒரு பகுதியைப் பெறுவது.
ஊக்கமூட்டும் பரிசுகள்
தனது நிறுவனத்தில் வேலை பார்த்தோருக்கு வெறும் சம்பளத்தை மட்டும் தரவில்லை மேரி. ஜெனரல் மோட்டார்ஸ் தனது நிறுவனத்திற்கென பிரத்யேகமாக தயாரித்த அழகிய கார்களையே பரிசாக வழங்கினார். 1969இல் அதன் விலை 5900 டாலர்கள். ஐந்து பேருக்கு ஐந்து கார்களை பரிசாக வழங்கினார் அவர்.
தனது பையில் கொண்டு செல்லும் வண்ணத்தட்டின் வண்ணத்தையும், உதட்டுச் சாய வண்ணமான இளஞ்சிவப்பையும் தனது நிறுவனத்தின் சார்பில் வாங்கும் கார்களுக்கு வண்ணமாகப் பூசச் செய்தார்.
கெடில்லாக், செவர்லெட் கார்களில் மூன்று மாடல்களை உருவாக்கி அந்த மூன்று வகை கார்களை அவரவர் விற்பனை சாதனைக்குத் தக்கபடி பரிசளிக்க ஆரம்பித்தார் மேரி. சாலைகளில் இந்தக் கார்கள் அடிக்கடி ஓடும் போது அது அனைவருக்கும் பரவசத்தை ஊட்டியது. இந்தப் பரிசளிப்பு இன்றளவும் தொடர்கிறது. 2016ஆம் ஆண்டு வரை விலை மதிப்புள்ள 6032 கார்கள் பரிசாக அளிக்கப்பட்டிருப்பதிலிருந்தே இந்த நிறுவனத்தின் சாதனையை புரிந்து கொள்ளலாம்.
அது மட்டுமின்றி விற்பனை சாதனையாளர்கள் அனைவருக்கும் தாராளமாக வைர மோதிரங்கள், மேலே அணியும் கோட்டுகள் உள்ளிட்ட பல பரிசுப் பொருள்கள் அவரால் வழங்கப்பட்டன. இவரது நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 150 பெண்மணிகள் பத்து லட்சம் டாலருக்கு மேல் சம்பாதித்து மற்றவரை வியக்க வைத்தனர்.
சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு
தான் வாழ்கின்ற சமுதாயத்திற்கென என்ன செய்வது என்று யோசித்த மேரி, சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்காக முதன் முதலாக மறு சுழற்சிப் பொருள்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்.
1995ஆம் ஆண்டு தனது நிறுவனத்தின் உலகத் தலைமையகத்தை டெக்ஸாஸில் அவர் கட்டி முடித்தார். 34 ஏக்கர் பரப்பளவில் ஆறு லட்சம் சதுர அடியில் 13 மாடிக் கட்டிடமாக அமைந்த இதை அண்ணாந்து பார்த்து அனைவரும் வியந்தனர்!
அறக்கட்டளை
பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தனி ஒரு அறக்கட்டளையை தன் செலவில் மேரி ஆரம்பித்தார். இது பெண்களை இல்லங்களில் கொடுமைப்படுத்துவதிலிருந்து காப்பதற்கும் பெண்கள் கான்ஸரால் பாதிக்கப்பட்ட போது உதவுவதற்கும் முன் வந்தது.
மறைவு
வயது மூப்பின் காரணமாக 83ம் வயதில் டெக்ஸாஸில் தனது இல்லத்தில் 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் நாள் அவர் மறைந்தார்.
வாழ்ந்த காலத்திலும், வாழ்நாளுக்குப் பிறகும் அவரைத் தேடி பல விருதுகள் வந்து குவிந்தன.
ஊக்கமூட்டும் பொன்மொழிகள்
அவரது ஊக்கமூட்டும் பொன்மொழிகள் பெண்களுக்கு புது வாழ்வையே காண்பித்தது.
அவற்றில் சில:
ஒப்பனைப் பொருள்களை விற்பதை மட்டும் நாம் செய்யவில்லை. நாம் வாழ்க்கையையே மாற்றுகிறோம்.
ஒவ்வொருவரும் மற்றவர் கண்ணுக்குத் தெரியாதபடி, “என்னை முக்கியமானவனாக உணரச் செய்யுங்கள்’’ என்று பொறிக்கப்பட்ட ஒரு போர்டைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டிருக்கிறார். மற்றவருடன் பணியாற்றும் போது இதை மறந்து விடாதீர்கள்.
வெற்றியாளருக்கும் மற்றவருக்கும் உள்ள வித்தியாசம் அசாதாரணமான மன உறுதி தான்!
கடவுள் உன்னைத் திறனுடையவரா அல்லது திறனற்றவரா என்று கேட்கவில்லை. நீ செயல்புரியத் தயாராக இருக்கிறாயா என்று தான் கேட்கிறார்.
உலகில் மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு காரியத்தை முடிப்பவர், ஒரு காரியம் முடிக்கப்படுவதைப் பார்ப்பவர், அட, அது எப்படி முடிந்தது என்று வியப்பவர்! இந்த மூவரில் நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே தேர்ந்தெடுங்கள். நான் முதலாவது வகையைச் சேர்ந்தவளாக இருக்கத் தீர்மானித்தேன்.
ஒருபோதும் மனம் தளர்ந்து பாதியில் விட்டு விடாதீர்கள். அடுத்த முயற்சி வெற்றியைத் தரும் ஒன்று தான் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.
பாரதியார் காட்டிய பெண்!
“திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்”
என்ற மகாகவி பாரதியாரின் வார்த்தைகளை மெய்ப்பித்தவர் மேரி ஆஷ் கே என்றால் அது மிகையாகாது!
During my visit to India in March- April 2024, I had a busy Wedding schedule. I attended one wedding in Chennai and celebrated another wedding in Kovalam beach near Thiruvananthapuram in Kerala.
Though I was not supposed to enter temples before December 2024, I made it a point to take pictures from outside without entering the temple. This way I covered the Richest Temple in the world of Sri Ananthapadmanabha Swami in Thiruvananthapuram, Azhimala Shiva Temple, Chenkal Shivalinga on 31st March and 5th April, 2024. Car driver gave us a bonus by taking us to Light House in Vizinjam. Adani is developing the port to beat Singapore Harbour.
(Since I have written about all these temples in my TAMIL book 108 Famous Temples in Kerala, I give the details only in English)
Tallest Shivalinga Near Trivandrum (Thiru Anantha Puram)
Kerala now has one of the tallest Shiva lingams in the country after the India Book of Records certified the 111.2-feet structure of Maheshwaram Sri Shiva Parvathy Temple at Chenkal in Thiruvananthapuram district.
The cylindrical structure has eight floors, six of which represent chakras or energy centres of the human body. Temple authorities are now hoping the shiva lingam will enter the Limca and Guinness Book of Records.
Pilgrims would be able to see a ‘kailasam’, a replica of Himalayas, and idols of Shiva and Parvati from the top of the shiva lingam. The pathway is adorned with murals and statues with 108 shiva lingams on the base floor.
It is the only temple in the world, where devotees can worship 12 Jyothirlingam of Lord Shiva and 32 forms of Lord Ganesha at one place.
(Which is the tallest Shivalinga in the world?
Maha Mrityunjay Temple is a Hindu Temple dedicated to Hindu God Shiva, situated in Nagaon, Assam, India. This Temple is special in its architectural sense as it is built in a form a Shivling. It is the World’s largest Shivalinga, at the height of 126 foot.)
xxxx
Aazhimala Shiva Temple
The Aazhimala Shiva Temple is a Hindu temple located on the coast of the Arabian Sea near Vizhinjam in the Thiruvananthapuram district of Kerala, India. Dedicated to Shiva, the temple is known for the 18 m tall Gangadhareshwara sculpture, which is the tallest Shiva sculpture in Kerala
Address: Mulloor PO, Poovar to vizhinjam road before Pulinkudi jn then, Azhimala Temple Road, Kerala 695501, India
The temple is dedicated to Lord Shiva and is believed to have mythological connections with the Pandavas. According to local beliefs, this was the place where the Pandavas, the five brothers from the Indian epic Mahabharata, spent some time during their exile.
According to folklore, when Panchali was thirsty, Bheema created a freshwater stream by making a hole in a rock with his knees to quench her thirst.
The massive structure with Shiva’s hair flowing in the wind and holding Goddess Ganga has a charm of its own and lends a magnificent appeal to the temple. The sculpture was created by a 29-year-old artist P. S. Devadathan who is a native of Azhimala.
The sculpture of Lord Shiva in the Gangadhareshwara figure, with his hair flying in the wind and holding Goddess Ganga, in the Azhimala Siva Temple in the district of Thiruvananthapuram is a sight to behold.
The temple is noted for its 58-ft-tall statue of Lord Shiva in the Gangadhareswara form, all made in concrete. Construction of the sculpture started on 2 April 2014 and was completed and opened to the public on 31 December 2020
xxxx
Vizhinjam Lighthouse (Kovalam Lighthouse)
Vizhinjam Lighthouse or Trivandrum Lighthouse is situated near Kovalam beach in Kerala. It started functioning on 30 June 1972. Vizhinjam was a busy seaport in the eighteenth and nineteenth centuries. Before the current light was installed, there were no lighthouses at this location.
Potential to compete with Singapore’: How Adani Group’s Vizhinjam Port is a maritime game changer for India
The port can handle megamax container ships with a capacity of over 24,000 TEUs that are used for long-haul international shipping routes
The tower is cylindrical with a height of 36 meters. The paint markings are red and white bands. The lighthouse is equipped with metal halide lamps and direct drive mechanism.[4] The light source was modified on 30 April 2003.
Vizhinjam Port is set to transform the country’s port infrastructure by creating the capacity to handle ultra-large ships.
Currently, the major transshipment hubs are the ports of Singapore, Shanghai, Busan, and Jebel Ali near Dubai
In 2022–23, India’s exports reached $770.18 billion, with imports at $892.18 billion.
—subham—
Tags- My visit, Chenkal, Tallest Shivalinga, Azhimala, Large Shiva statue, Vizhinjam, Light House, Thiruvanantha puram, Temple, Kerala visit, Adani port