Post No. 13.194
Date uploaded in London – — 1 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 3
ச.நாகராஜன்
இன்னும் ஒரு முக்கியமான புத்தகம்
ACQUARIAN GOSPEL OF JESUS THE CHRIST
By
LEVI
Published by
DEVORREST & CO
Los Angeles , U.S.A
இதில் 21 முதல் 35 முடிய 15 அத்தியாயங்கள் இந்தியாவிலும் திபெத்திலும் ஏசு கிறிஸ்து வாழ்ந்த சரித்திரத்தை விரிவாக விளக்குகிறது.
இதுவரை நாம் மேலே இரு அத்தியாயங்களில் கூறியவற்றை அப்படியே இங்கு காணலாம்.
அதில் இல்லாத சில புதிய விவரங்களும் இதில் தரப்படுகிறது.
அவற்றில் சில:
ஏசு ஒரிஸாவின் அரசு இளவரசனான ராவணா என்பவருடன் இந்தியாவிற்கு வந்தார். ராவணா பாலஸ்தீனத்திற்கு வணிகம் சம்பந்த்மாகச் சென்றவர்.
ஏசுவின் குரு பரத அராபா (Barata Araba). இவர் ஏசுவை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
அவருக்கு ஹிந்து வேதங்கள் உள்ளிட்டவற்றைக் கற்பித்தார்.
வித்யாபதி என்பவர் கபிலவாஸ்து கோவிலின் தலைமை புரோகிதர் மற்றும் ஒரு பெரிய மகான் ஆவார். அவர் ஏசுவை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.
ஏசு அலெக்ஸாண்ட்ரியாவில் மகான்களின் சங்கத்தில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் இந்தியாவிலிருந்தும் கூடப் பல மகான்கள் கலந்து கொண்டனர்.
ஏசு ஹிந்து வேதங்களையும் அவெஸ்தாவையும் பெரிதும் விரும்பினார்.
The Bible In India – Hindu Origin of Hebrew and Christian Revealation
By
M. Louis Jacolliot
இந்தப் புத்தகமும் பல உண்மைகளைக் கூறுகிறது.
இந்தியப் பெரியார் ஆன சாது T.L. வாஸ்வானி
East and West Series No 91, January 1995 (Published by Mira Institute, Poona)-ல் ஏசு இந்திய யோகிகளுடன் இந்தியா வந்ததைக் குறிப்பிடுகிறார். இங்கு அவர் புத்தமதம் மற்றும் வேதங்களைக் கற்றார். அவர் பூரிக்கும் வந்தார். அங்கு கடலுக்கும் கோவிலுக்கும் இடையே உள்ள ஒரு பெரிய தோட்டத்தில் ஒரு நல்ல அமைதியான இடத்தில் தங்கினார்.
இது தவிர, இன்னும் பல அதிகாரபூர்வமான இந்தியாவில் வெளியிடப்பட்ட வெளியீடுகள் கிறிஸ்து இந்தியாவிற்கு வந்ததை உறுதிப் படுத்துகின்றன.
பவிஷ்ய மஹா புராணம் ஏசுவை யுஸ் யூசூப் (Yus Yusuf)
என்ற பெயரால் குறிப்பிடுகிறது. அவர் ராஜா சாலிவதனுடன் உரையாடல் நிகழ்த்தியதையும் அது குறிப்பிடுகிறது.
இந்த எழுத்தாளர் 11-11-1975 அன்று ஜகந்நாத் பூரிக்கு சென்றிருந்த சமயம் ஶ்ரீ சதா சிவ ரத்ன சர்மா, தலைவர், முக்தி மண்டல், பூரி,
அவரிடம் ஒரு சம்ஸ்கிருத கைப்பிரதியைக் காண்பித்தார். சாது டிப்னி என்ற அது பனை ஓலையில் எழுதப்பட்ட ஒன்று. கிறிஸ்டா என்று அது ஏசு கிறிஸ்துவைக் குறிப்பிடுகிறது.
அவரும் அவரது பக்தர் சாது சுந்தர் தாஸும் மோஹல்லா ஜெய் டோடா என்ற கோவிலில் வாழ்ந்து அங்கேயே படித்ததாகவும் ஓலைச் சுவடி குறிப்பிடுகிறது.
சாது வாஸ்வானி இவை அனைத்தையும் குறிப்பிடுகிறார்.
அது ஒரு சிதிலமான கட்டிடம். பழைய காலத்தில் அங்கு ஒரு பெரிய தோட்டம் இருந்தது. அங்கு பழங்காலத்து நாணயங்கள் வேறு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
உள்ளூர் கிறிஸ்தவர்களில் பலர், ஏசு அங்கு பூரியிலிருந்த போது தங்கியதாகவும் அந்த இடத்தில் இப்போது Sisters oldners blessed Sacraments Convent School Puri
கட்டப்பட்டிருப்பதாகவும் கருதுகின்றனர்.
ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு பெண்மணி அங்கு பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துகிறார். அதில் ஹிந்துக்களும் கூட கலந்து கொள்கின்றனர்.
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் திபெத்திய கைப்பிரதி இன்றும் லாமாக்களிடம் இருக்கிறது. அதனுடைய போட்டோ காபி
UNKNOWN LIFE OF JESUS CHRIST என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆதாரம் & நன்றி:
The Vedic Path – April 1976.
Reproduced in Ideas / Exchange, Jullunder, Issue no 197, 198 & 199.
*** இந்தத் தொடர் முற்றும்