அதிசய தாவரங்கள்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள்—2 (Post No.13,204)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,204

Date uploaded in London – –   4 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part 2

வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது

புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது

தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்

முழுதும் பழுத்தது வாழைக் கனியே.”

இதை அப்படியே பொருள் கொண்டால்” தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன்.அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது. அதில் பூசணி பூத்தது. அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து,  தொழுது கொண்டு ஓடினார்கள்.  அதன் பின் அக்கொடியில் வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது”

இந்தப் பாடலுக்கு பல விளக்கங்கள் தரப்படுகின்றன.அனைத்துப் பாடல்களும் வேதம் போல மறைவாகப் பேசுகின்றன. அதாவது உண்மைப்பொருளை மறைத்துப் பேசுகின்றன.

இதோ ஒரு விளக்கம் ,

வழுதலை  விதை= யோகப் பயிற்சி ,

பாகற்காய் – வைராக்கியம்,

புழுதியைத் தூண்டினேன் – தத்துவ ஆராய்ச்சி செய்தேன் ,

பூ சணி பூத்தது –  சிவம் வெளிப்பட்டது ,

தோட்டக்  குடிகள் – புலன் இன்ப வேட்கை ,

வாழைக்கனி – ஆன்ம லாபம்

சுருக்கமாகச் சொன்னால் யோகப் பயிற்சி மூலம் ஆன்மீக முன்னேற்றம் கண்டேன் .

இதற்கு குண்டலிணி சக்தியை எழுப்புதல் போன்ற விளக்கங்களும் உண்டு.

I sowed the seed of brinjal

And the shoot of bitter gourd arose;

I dug up the dust;

And the pumpkin blossomed;

The gardner-gang prayed and ran;

Full well ripened the fruit of plantain.

xxxx

யஜுர் வேதத்தில் ருத்ரம் என்றது துதியில் வரும் ம்ருத்யுஞ்ஜய மந்திரம் மிகவும் பிரபலமானது சக்தி வாய்ந்ததுமரண பயத்தை நீக்குவது முக்தி என்னும்  மோட்சத்தைத் தரவல்லது .

இந்த மந்திரத்தை திருமூலர் அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அந்த மந்திரத்தில் வரும் வெள்ளரிப் பழ உவமையை திருமூலரும் ஒரு பாடலில் பயன் படுத்திக்கிறார்.

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம்

உர்வாருகம் இவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

 त्र्यम्बकं यजामहे
सुगन्धिं पुष्टिवर्धनम् 
उर्वारुकमिव बन्धनान्
मृत्योर्मुक्षीय मामृतात् 


Om Try-Ambakam Yajaamahe
Sugandhim Pushtti-Vardhanam
Urvaarukam-Iva Bandhanaan
Mrtyor-Mukssiiya Maa-[A]mrtaat ||

இதன் பொருள்

ஓம் முக்கட் பெருமானே ! உன்னை வணங்குகிறோம் (முக்கட்= 3 கண்கள்);

நறுமணம் (ஆன்மீக) படைத்தோய் ! உடல் ஆரோக்கியத்தை (ஆன்மீக வலு) தருவோயே!

வெள்ளரிப்பழம் போல பல பந்தங்களிலிருந்து என்னை விடுவிப்பாயாக;

மரணத்திலிருந்து விடுவித்து மோட்சத்தினை அருள்வாயாக

இதில் முக்கியமான உவமை உருவாருகம் இவ =  வெள்ளரிப் பழம் போல .

உலகில்  இந்துக்களைப் போல இயற்கையை ரசித்தவரும் இல்லை; மதித்தவரும் இல்லை ;

வெள்ளரிப்பழம் தரையில்தான் இருக்கும்; கொடியின் உச்சியில் இராது; பழம் முற்றியவுடன் அதைப் பிடித்திருக்கும் பந்தம்/ காம்பு தானாக விலகிவிடும் ; இது போல அமைதியாக பழம் தனித்து விலகுவது வெள்ளரி ஒன்றில்தான். அது போல நம்மைச் சுற்றியுள்ள பந்த பாசங்களிலிருந்து நாமும் ஸ்மூத் smooth தாக விடுதலை பெறவேண்டும் என்று இந்த ருத்திர மந்திரம் வேண்டுகிறது .

இதைத் திருமூலர் எப்படிச் சொல்லுகிறார் என்று காண்போம் :

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனித்

திரிக்கின்ற ஓட்டம் சிக்கெனக் கட்டி

வரிக்கின்ற நல் ஆன் கறவையைப் பூட்டினேன்

விரிக்கின்ற வெள்ளரி வித்தும்வித் தாமே.

பொருள்

சுவாசப் பயிற்சி மூலம் முக்தி / விடுதலை/ மோட்சம் பெறலாம் .

நாற்றங்கால் நிறைந்த கழனி / வயல் போன்றது இந்த உடல்; இதில் ஓடுகின்ற சுவாசத்தை பிராணாயாமப் பயிற்சி மூலம் வசப்படுத்தினால் ,மனம் என்னும் மாட்டினைப் பூட்டினால் , வெள்ளரி கிடைக்கும்

வெள்ளரி என்பதைத் தாவரம் என்று கொள்ளாமல் சுக்கிலம் என்று பொருள் சொல்லுவாரும் உண்டு. அதாவது வெண்மை நிற சுக்கிலம் புலன் இன்பத்தில் வீணாகாமல் மோட்சம் பெறுவதற்கு வித்து/ விதையாக அமையும் .

ஆனால் நான் சொல்லும் பொருள் — சுவாசத்தைப் பயிற்சி மூலம் மனம் என்னும் மாட்டினைப் பூட்டி வசமாக்கினால் உர்வாருகம் இவ == வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விலகுவது போல முக்தி கிடைக்கும் .

திரயம்பக மந்திரத்தின் பொருளையும் திருமந்திரப் பாடலின் பொருளையும் பலமுறை மீண்டும் மீண்டும் படித்தால் நான் சொல்லுவதே சரியென்றுபடும்.

திருமூலர் சுமார் 60 பாடல்களில் தாவரங்கள் மூலம் இந்துமத தத்துவங்களை எடுத்தியம்பும் பின்னணியில் இதை பார்க்க வேண்டும் .

xxxx

to be continued……………………………………

tags-  வெள்ளரிப்பழம் ம்ருத்யுஞ்ஜய மந்திரம்த்ரயம்பகம் யஜாமஹேவழுதலை வித்திடப் பாகல் முளைத்தது, அதிசய

 தாவரங்கள்,  திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள் 2 

Leave a comment

Leave a comment