
Date uploaded in London – – 10 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

PART-9
F35. Family: Lauraceae
126. Litsea ligustrina Hook. f.
126.லிஸ்டியா லீகுஸ்ட்ரீனா / காட்டு செண்பகம்
திருநெல்வேலி மலைவாழ் மக்கள், பாம்பு கடித்தால் இதன் இலை, பட்டை, பூ ஆகியவற்றைப் பொடி செய்து வெந்நீரில் கலக்கி மேலும் 3 தாவரங்களுடன் குடிக்கின்றனர் .
Powder of leaf, stem bark and flower along with leaves of Vitex altissima, Hygrophylla auriculata and Pavetta indica is mixed and heated with water and taken internally by the tribals of Tirunelveli hills, Tamil Nadu, India (Ayyanar and Ignacimuthu, 2005).
XXXX
F36. Family: Lecythidaceae
127. Barringtonia racemosa (L.) Spreng.
குடும்பம் லெசிதிடேசி
பாரிங்டோ னியா ரேசிமோசா
வங்க தேச மக்கள் இதன் இலைகளை பயன்படுத்துகின்றனர்.
XXXX
F37. Family: Loganiaceae
128. Strychnos nux-vomica L.
குடும்பம்- லோகனியேசி
ஸ்ட்ரைக்னோஸ் நக்ஸ் வாமிகா
ஒரிஸ்ஸா மக்கள் விதைகளை நசுக்கி சாறாக்கி பயன்படுத்துகிறார்கள். வேரின் மசியலையும் பயன்படுத்துகிறார்கள்
XXXX
F38. Family: Malvaceae
129. Althaea officinalis L.
குடும்பம் மால்வேசி
129.ஆல் தேயியா அஃபிசினாலிஸ்
பாகிஸ்தானில் விஷக்கடி சிகிச்சையில் பயன்படுத்துகிறார்கள்
XXXX


130. Bombax ceiba L.
130.பாம்பக்ஸ் செய்பா / இலவு
கேரளத்தில் வயநாடு பழங்குடி மக்களும், மிஜோரம், உத்தரபிரதேச மக்களும் இலவ மரத்தின் இலைகளையும் பழங்களையும் பயன்படுத்துகிறார்கள்
XXXX
131. Grewia gamblei J.R. Drumm.
131.கிரிவியா காம்பலை / கரடி கசவு
திருநெல்வேலி ஜில்லா மலைவாழ் மக்கள் இல்லை மரப்பட்டை சாற்றை வேறு சில தாவரங்களுடன் சேர்த்து 5 நாட்களுக்கு கொடுக்கிறார்கள் (பாம்பு கடித்தால்).
XXXX
132. Helicteres isora L.
132.ஹெலிக்ட்டரிஸ் ஐஸோரா
வேரின் கஷாயத்தை உத்தர பிரதேச சோன்பஹ்ரா வட்டார மக்கள் குடிக்கிறார்கள்.
XXXX
133. Malva sylvestris L.
மால்வா சில்வெஸ்டரிஸ்
மேற்குத் தொடர்ச்சி மலை மலாண்ட் வாட்டர் மக்கள், இதன் இலையின் சாற்றை எலுமிச்சம் பழம் சாற்றுடன் கலந்து கொடுக்கிறார்கள்.
XXXX
134. Sida acuta Burm. f.
சிடா அக்யூடா
ரேவா ஜில்லா பழங்குடி மக்கள் இலைகளை உபயோகிக்கிறார்கள்.
XXXX

135. Sida cordifolia L.
135.சிடா கார்டிபோலியா
நிலத்துத்தி .சித்தாமுட்டி அல்லது சிற்றாமுட்டி (Sida cordifolia)
கன்யாகுமரி ஜில்லா மக்களும் ராஜஸ்தான் ஆள்வார் ஜில்லா மக்களும் இலையின் சாற்றை பாம்பு கடித்த இடத்தில் தட வுகிறார்கள்
XXXX
136. Sida rhombifolia L.
136.சிடா ராம்பிபோலியா
மேகாலயா காசி, ஜயந்தியா பழங்குடி மக்கள் இலைகளையம் வேரையும் அரைத்து மிளகுடன் சேர்த்து உபயோகிக்கிறார்கள் .
XXXXX
137. Urena lobata L. subsp. lobata (L.) Bross. Wal.
137.யுரீனா லோபாட்டா / கொடி துத்தி
நெல்லை ஜில்லா பழங்குடி மக்கள் வேரின் கஷாயத்தை வேறு இரண்டு தாவரங்களுடன் சேர்த்து குடிக்கக் கொடுக்கிறார்கள்.
XXXX
F39. Family: Meliaceae
138. Aglaia roxburghiana var. courtallensis Gamble
குடும்பம் – மெலியேசி
அக்லையா ராக்ஸ்பார்கை யானா / சொக்கலை
நெல்லை ஜில்லா மக்கள் இல்லை, விதைகளின் கஷாயத்தை வேறு சில தாவரங்களுடன் சேர்த்துக் கொடுக்கிறார்கள்.
XXXX
.

139. Cipadessa baccifera (Roth.) Miq.
139.சிபடெக்ஸா பாக்சிபெரா / மரமல்லி
நெல்லை ஜில்லா பழங்குடி மக்கள் இலையின் கஷாயத்தை வேறு சில மூலிகைகளுடன் சேர்த்து 41 நாட்களுக்கு குடிக்கிறார்கள்
XXXX
.140. Melia azadirach L. (Azadirachta indica A. Juss.)
140.மெலியா அசாதிராக்
மத்திய பிரதேச மக்கள் பயன்படுத்தும் மூலிகை இது
XXXXX
TO BE CONTINUED………………………………..
tags- பாம்புக் கடி , 200 மூலிகை மருந்துகள் , பகுதி 9