திருமந்திரத்தில் லென்ஸூம் கண்ணாடியும்: ஆராய்ச்சிக் கட்டுரை- 20 (Post No.13,313)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,313

Date uploaded in London – 7 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண் -20

திருமூலர் பெரிய விஞ்ஞானிதான்.  திருமந்திரத்தில் நிறைய பூதக்கண்ணாடி /லென்ஸ்( MAGNIFYING GLASS) சூரியகாந்தக் கல்,கண்ணாடி/ MIRROR பாடல்கள் வருகின்றன. இதிலிருந்து தமிழ்நாட்டில் பல வீடுகளில் முகம் பார்க்கும் கண்ணாடி, லென்ஸ்LENS முதலியன  இருந்தது தெரிகிறது. . சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆண்டாளும் திருப்பாவையில் தட்டொளி என்று  முகம் பார்க்கும் கண்ணாடியை வருணிக்கிறார்.

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
      
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
      
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
      
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் MIRROR தந்து உன் மணாளனை
      
இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய்–திருப்பாவை

XXXX

இனி திருமந்திரப் பாடல்களைக் காண்போம் 

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே

சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா

சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்

சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.–திருமந்திரப் பாடல்

117: At His Glance, Impurities Vanish

The sunstone sleeps in cotton enclosed,

The sunstone burns not the fragile stuff;

Let but the sun’s rays fall! How it shrivels and flames!

Even so the impure wilts before the Lord’s cathartic glance.

சூரியன் எனும் கதிரவனின் கதிர் ஒளியை ஏற்று வெளியிடும் கல் சூரிய காந்தக் கல். இக்கல் தான் ஈர்க்கும் கதிரொளியை வெளிப்படுத்தி எதிரே உள்ள பொருளை எரிக்கும் ஆற்றல் உடையது. கதிரவன் இதன் முன்னே இல்லாவிட்டால் தானாகவே இக்கல் எதனையும் சுட்டெரிக்க இயலாது. கதிரவன் இல்லாவிட்டால் தன்னைச் சுற்றியுள்ள பஞ்சு போன்ற எளிய பொருளையும் இதனால் சுட இயலாது. இதற்குச் சுடும் ஆற்றலை வழங்குவது கதிரவனே. சூரியனும் பஞ்சு போன்ற எளிய பொருளையும் நேரடியாகச் சுட்டு எரிக்காது.சூரிய காந்தக் கல் அக்கதிரவனின் ஒளியை உள்வாங்கி ஒருமுகப் படுத்தவே அச்சூரிய காந்தக் கல்லின் வழியாகச் சூரியன் பஞ்சினை எரிக்க இயலுகின்றது. இது போன்றே உயிர்களையும் அவற்றைப் பற்றியுள்ள அழுக்குகளான ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் இறைவனையும் திருமூலர் உருவகப் படுத்துகின்றார்.

பசுக்கள் எனப்படும் உயிர்களைச் சூரிய காந்தக் கல்லுக்கும் உயிர்களைப் பற்றியுள்ள அழுக்குகளான ஆணவம், கன்மம், மாயை என்பனவற்றைப் பஞ்சிற்கும் சூரியனை இறைவனுக்கும் ஒப்புமை காட்டுகின்றார்

xxxx

ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்

தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்

ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு

வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே.

Hara Stands Revealed to Truly Learned
To them that search the Holy Books, Hara stands revealed;
Out of the sublimed Fire, sparks of pure knowledge fly;
Those who, thus, the Samadhi’s Moon can reach,
To them it’ll be a ladder leading to Wisdom high.

அகத்தே ஆராய்வார்க்கு அரனாகிய சிவபெருமான் அங்கு அப்பொழுதே வெளிப்பட்டருள்வன். அது கதிர்க்கல்லானது (சூரிய காந்தக்கல்)கதிரோன் முன்னிலையில் அக்கதிரை வெளியில் வரச் செய்யும் தன்மையினை யொக்கும். திங்கள் (இளமதி) புருவநடுவிற் காணப்படும் மதிமண்டலமாகும். அம்மண்டலத்தை அங்கண் நின்று கூடற்குரிய பயிற்சி வல்லார்க்கு அந்த மனமே  மேலே செல்வதற்குரிய ஏணி ஆகும்.

xxxx

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்

கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை

உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கிற்

கண்ணாடி போலக் கலந்துநின் றானே.

603: Look Within in Dhyana
Well may they practise Yoga eight-thousand year
Still they see not Lord,
Sweet as ambrosia
And dear unto apple of eye;
But if within you seek Him enlightened
He within you is,
Even unto reflection in the mirror.

8000 ஆண்டுகள் தவம்  இருந்தாலும் கண்ணுள் மணியும், அம் மணியுணர் அமிழ்தும் போன்ற  சிவபெருமானைக் கண்டறியவொண்ணாது. அகத்தே நாடி அருள் ஒளிபெற்று நோக்கினால் சிவபெருமான் தோன்றுவான். கண்ணாடியைப் பார்க்குங்கால் நாம், நம்மையும்  கண்ணை யும் காணலாம் . அதுபோல் ஆருயிர் பேருயிராகிய சிவபெருமானைக் காணும் வாயிலாகவே தன்னையும் காணும். எண்ணாயிரத்தாண்டு என்பது யோக  உ றுப்புகள் எட்டினைக் குறிக்கும் .

 கண்ணாடிபோல – கண்ணாடியில் தோன்றும் பாவைபோல (ஆடிப்பாவை – நிழலுரு) நெஞ்சத்தில் சிவனை நினைந்தால் சிவன் விளங்குவன்.

xxxxxx

கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம்
சதிர்கொண்ட சாக்கி சரியன் வடிவாம்
எதிர்கொண்ட ஈசன் எழில்வடி வாமே.

God is Beauty

Form within Sun-Stone is red hot ember,

Form within Moon-Stone is pearly drop of water,

Form within Fire-Stone is crackling fire,

Form of Lord that holds fire aloft

Is Beauty Surpassing.

ஞாயிற்றின் கதிர்கண்டு அக் கதிரொளியை ஏற்று வெளிப்படுத்துங் கல் சூரியகாந்தக் கல், திங்களின் ககிரையேற்றுக் குளிர்நீரை வெளிப்படுத்துங் கல் சந்திரகாத்தக் எல் எனவும் அறிவோம்., தீயினைக் காண அதன் சதிரை வெளிப்படுத்துங் கல் தீக் கல் எனவும் அறிவோம்.,. இக் கல்லைச் சக்கிமுக்கிக் கல் என்பர், கதிர் கண்டவுடன் கதிர்க்கல் கனலைக் கக்கும் மதி கண்ட வுடன் நிலாக் கல் குளிர்ச்சியைக் கக்கும். தீத்தட்டுங் கருவியாகிய சதியினைக்கொண்ட சக்கி.சாக்கி என்னும் தீக்கல் தீயினைக் கக்கும். மழுவாகிய தீயினை இடத்திருக்கையில் கொண்டருளிய சிவபெருமானை அருள் துணையால் அவன் இயற்கை எழில்வடிவில் காணலாம்.

xxxxxx

மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனில் நிழலையும் காணார்
வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.

They seek Worldly Pleasures

From out of mind, mirror of illusion rises

Think of it, even its shadows they see not

And nothing they do for the fruits of Karma to drop;

The temptations of the backyard drain, they go after.

இறைவன் அருளால்தான் உண்மையான குருவைப் பெற இயலும். நம்முடைய மனப்பக்குவமே இறைவனுடைய அருளுக்கு எடுத்துக்காட்டாகும். நமது மனமானது மாயையாகிய கண்ணாடி போன்றது. பக்குவம் பெறாதபோது அந்தக் கண்ணாடியானது ஆணவ மலத்தால் பொருள்களைப் பெரிதாகக் காட்டி நம்மை ஏமாற்றும் வஞ்சனை கண்ணாடியாக உள்ளது. கல்வி, கேள்வி இவற்றால் நமது அறிவை வளர்த்துக்கொண்டு இந்த வஞ்சனையைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும். பக்குவ உள்ளங்கள் இதை உணர்ந்து கொள்ளும். பக்குவமில்லாத உள்ளங்கள் பிறர் விளக்கிச் சொன்னாலும் இதை ஏற்றுக்கொள்ளா. அந்த நிலையில் உண்மைக் குரு இவர்களுடைய வாழ்வில் திருவடி எடுத்து வைக்க மாட்டார். இவர்கள் இன்னும் வினைப்பயனை அனுபவிக்க வேண்டி உள்ளது.

xxx

உள்நாடும் ஐவர்க்கு மண்டை ஓதுங்கிய

விண்நாட நின்ற வெளியை வினவுறில்

அண்ணாந்து பார்த்துஐவர் கூடிய சந்தியில்

கண்நாடி காணும் கருத்ததுஎன் றானே

God is Inward Where the Five Sense Controlled Meet

If you ask,

How the Heavenly Space within the cranium is,

Where the inward looking Five abide,

Verily it is,

Unto gazing upward into a mirror

(Seeing the self-reflected in crystal purity)

At a junction

Where the Five, in control, meet.

ஐம்புலன்களும் உள்நோக்கி சிந்திக்கும்போது,உச்சிவரை செல்லும்.அவ்வாறு நாடும் இடம் அருள்வெளி எனப்படும்.அதை அண்ணாந்து பார்த்தால் மனம் கடந்த ஆனந்த நிலை தோன்றும். அப்பொழுது ஆன்மா, தூய கண்ணாடியில் பார்ப்பது போலத் தெரியும்.

xxxx

2944. பூதக்கண் ணாடியிற் புகுந்திலன் போதுளன்

வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும்

நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்

கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனன்றே.

He is Seen in the Mind-Mirror

He appears not in the glasses of the fleshly eye;

He is in the Lotus of the Heart;

He appears in the glass of Vedic Jnana;

He is in the mind-glass of the righteous that think of Him,

Him I saw in the glass of songs

Listening to that Divine Music,

I enraptured stand.

சிவனை நாம் பார்க்கும் கண்ணாடியில் உருப்பெருக்கி காண முடியாது. மனக் கண்ணாடியில் காணலாம்.ஞானம் என்னும் வேதக் கண்ணாடியிலும் , அவனை உள்ளத்தே உருகி நாடும்  மனக் கண்ணாடியிலும், தத்துவஞானம். என்னும் நீதிக்கண்ணாடியிலும் , இசையால் துதிபாடும் கீதக்  கண்ணாடியிலும் , இருதயத் தாமரையிலும் காணலாம்..

பூதக்கண்ணாடி – தூலக்கண் ,

வேதக்கண்ணாடி – ஞானக்கண்.

நீதிக்கண்ணாடி – தத்துவஞானம்.

கீதக்கண்ணாடி – இசை.

–subham—

Tags- பூதக் கண்ணாடி , முகம் பார்க்கும், கண்ணாடி, மாய , திருமந்திரத்தில் லென்ஸூம் கண்ணாடியும்,  ஆராய்ச்சிக் கட்டுரை- 20

விண்ணில் பறந்த முதல் பெண்மணி – வாலண்டினா தெரஷ்கோவா! – 2 (Post No.13,312)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.312

Date uploaded in London – 7 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

29-5-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது. 

விண்ணில் பறந்த முதல் பெண்மணி – வாலண்டினா தெரஷ்கோவா! – 2 

ச .நாகராஜன்

விண்வெளிப் பயணத்திற்குப் பின்! 

விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பி வந்த முதல் விண்வெளி வீராங்கனைக்கு யாரும் எதிர்பார்க்காத அளவு உலகம் வரவேற்பு கொடுத்தது.

முக்கியமாக பெண்மணிகள் ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடி ஆனந்தமாகக் கொண்டாடினர்.

ஏராளமான இசைத் தட்டுகள் வெளியாகின. உலகெங்கிலுமிருந்து அவருக்கு பாராட்டுச் செய்திகள் மலையெனக் குவிந்தன.

டெல்லியில், “பெண்களின் அடிமைத் தளையை உடைக்கப் பிறந்த பெண்மணி” என்று அவர் கொண்டாடப்பட்டார்.

குடும்பம் 

வாலண்டினா 1963-ம் வருடம் நவம்பர் மாதம் 3-ம் தேதி ஆண்ட்ரியன் நிலோலயெவ் என்பவரை மணந்தார். திருமணத்திற்கு ரஷிய அதிபர் நிகிதா குருஷேவ் தலைமை தாங்கினார்.  1964, ஜூன் எட்டாம் தேதி எலினா என்ற பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். ஆண்ட்ரியனும் விண்வெளி வீரர் என்பதால் விண்வெளி தம்பதிகளுக்குப் பிறந்த முதல் குழந்தை என்ற பெருமையை இந்தக் குழந்தை பெற்றது.

1977-ல் திருமண உறவு ஒரு முடிவுக்கு வர 1982இல் ஆண்ட்ரியனை விவாகரத்து செய்தார் வாலண்டினா. தனது கணவரைப் பற்றி விவாகரத்து ஆனதற்குப் பின்னர் ஒரே ஒரு முறை தான் அவர் விமரிசனம் செய்து கூறினார் இப்படி : “வேலையில் அவர் தங்கம்; வீட்டில் அவர் சர்வாதிகாரி!”

பின்னர் யூலி ஷபோஷ்னிகோவ் என்பவரை மணந்தார். 1999-ல் யூலி மறைந்தார்.

 அரசியல் பிரவேசம்

 1966-ல் அவர் அரசியல்வாதியாக ஆனார். சோவியத் பெண்கள் கமிட்டிக்குத் தலைவராக ஆணார். ரஷிய சுப்ரீம் கவுன்சிலுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது உடை அணியும் பாணியும், அவர் அணிந்து கொள்ளும் உடைகளும் அனைத்துப் பெண்மணிகளையும் கவர்ந்தன. உலகெங்கும் அவர் செல்ல வேண்டி இருந்ததால் ஆங்காங்குள்ள பெண்மணிகள் ஆடைகள் பற்றி அவரிடம் டிப்ஸ் கேட்டு வாங்கி மகிழ்ந்தனர்.’

அறக்கட்டளை 

1966-ல் அவர் உலக அமைதிக் குழுவில் ஒரு உறுப்பினராக ஆனார்.

தொடர்ந்து பல முக்கிய பொறுப்புகள் அவருக்கு வந்தன; கூடவே ஏராளமான விருதுகளும் வந்து குவிந்தன.

2015-லிருந்து அறக்கட்டளைப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். பென்ஷன் பெறும் வயது வரம்பை உயர்த்த அவர் 2018-ல் பாடுபட்டார்.

 அரசியல்சட்டத் திருத்தம் 

2020-ல் ரஷிய ஜனாதிபதி தேர்வு சம்பந்தமாக ரஷிய அரசியல் சட்டத்தில் சில மாறுதல்களை அவர் கொண்டுவர பரிந்துரை செய்தார். இது ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் இறுதியில் அது நிறைவேறியது. 85 வயதிலும் கூட ரஷிய சட்ட மாமன்றமான ‘டுமா’வில் (DUMA) அவர் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். 

ரஷிய அதிபர் புடினின் பாராட்டு

வாலண்டினாவும் ரஷிய அதிபர் புடினும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பு பாராட்டுபவர்கள். வாலண்டினா மீது பெரும் மதிப்பு கொண்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் 2017-ல் வாலண்டினாவின் பிறந்த நாள் அன்று, “ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று சொல்ல, வாலண்டினா, “ நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். நன்றி” என்று பதில் கூறினார்.

புடின், “நமது தந்தையர் நாட்டிற்கு நீங்கள் ஆற்றிய பணி மிகவும் மகத்தானது. நீங்கள் எப்படி நம் நாட்டை நேசுக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்” என்று நீண்ட பாராட்டைத் தெரிவித்தார். அத்தோடு ரஷிய உயரிய விருதான ‘ஆர்டர் ஃபார் ஸர்வீசஸ் டு தி ஃபாதர்லேண்ட்’- ஐ அவருக்கு அளித்தார்.

வாலண்டினாவின் செய்தி

வாலண்டினா தனது விண்வெளி அனுபவத்தின் மூலமாக உலக மக்களுக்கு ஏராளமான செய்திகளைத் தந்துள்ளார். 

“விண்வெளிக்குச் சென்று ஒருவர் சிறிது நேரம் கழித்தால் கூடப் போதும் அவர் விண்வெளியை ஆயுள் முழுவதும் நேசிப்பார். வானம் பற்றிய எனது இளமைக் கால கனவை நான் சாதித்து விட்டேன்”

 “விண்வெளிக்கு நீங்கள் சென்று விட்டீர்கள் என்றால் பூமி எவ்வளவு சிறியது, சுலபமாக நொறுங்கக் கூடியது என்பதை அறிவீர்கள்”

 “பெண்கள் ரஷியாவில் ரயில் தண்டவாளம் அமைப்பதில் பணி செய்கிறார்கள் என்றால், அவர்கள் ஏன் விண்வெளிக்குச் செல்லக் கூடாது?” என்று கேட்டார் அவர்.

 பெண்களுக்கு அவர் கூறும் முக்கிய செய்தி இது:

ஒரு பெண்ணானவள் என்றுமே பெண்ணாகவே இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவள் நான். பெண்மையைப் போற்றும் எதுவும் அவளுக்கு அந்நியமாக இருக்கக் கூடாது. அதே சமயம் விஞ்ஞானத்திலோ, பண்பாட்டுத்துறையிலோ எதில் அவள் ஈடுபட்டிருந்தாலும் சரி எவ்வளவு கடுமையாக, தீவிரமாக அதில் அவள் உழைத்தாலும் சரி,, அது அவளது புராதனமான பழம்பெரும் ஆச்சரியகரமான உயரிய குறிக்கோளான “அன்பு பாராட்டு; அன்பைக் கொள் – என்ற அவளது தாய்மைக்காக ஏங்கும் ஆனந்தத்திற்கு முரணாக அமைந்து விடக் கூடாது.

பெண்மையைப் போற்றி உலகப் பெண்மணிகளுக்கு ‘வானளவு’ நம்பிக்கையைத் தந்த வாலண்டினா ‘விண்ணளந்த வீராங்கனை’ என்ற சிறப்புப் பெயருக்கு உரியவர் தானே!

***

Tamil Veda Tirukkural in Vishnu Sahasranama -1 (Post No.13,311)

Tamil Veda Tirukkural in Vishnu Sahasranama -1 (Post No.13,311)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,311

Date uploaded in London – 6 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Tirukkural in Tamil with 1330 couplets(Kural) was written by great Tamil poet Tiruvalluvar 1500 years ago. The poets who sung in praise of Tirukkural say it is equal to Vedas. It is very true like the Four Vedas, all that is said by Valluvar is accepted by the Hindus.

When one reads the commentary of Aadi Shankaraa on Vishnu Sahasranama (VS), one would find amazing similarities.

My research in the VS found out the following similarities:

Ksaminaam Varah- Word No. in the VS 919

The greatest among the patient ones, because He is more patient than all Yogis noted for patience; and also because He is most noted among those who patiently bear the weight of the earth and all heavenly bodies.

Vaalmiiki says about Raama ‘ksamayaa Prithvi samah– He is equal to earth in the matter of patience.

Or though He bears all the three worlds, He does not feel their heaviness like the earth. As He is thus superior to the in the quality of patience , He is called the greatest among the patient beings. Or the word Ksamii can mean the strong one. As the Lord is omnipotent and is capable of doing everything He is called by that epithet.

xxx

All Hindu scriptures compare Earth with Patience. And Tiru Valluvar is a great Hindu, he also used the simile.

Here is the relevant Kural/Couplet:

Just like the earth which supports the men who dig it

Men of virtue bear with thse who heap scorn on them-Kural 151

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.- 151

A patient man is compared to the Goddess Earth.

Robert Browning’s line

Good to forgive, best to forgive conveys the same idea.

xxx

Bhuumi Suuktam (Hymn to Mother Earth) in the Atharva Veda says,

I call to earth, the purifier

The patient earth growing strong through  spiritual might

May we recline on thee O Earth

Who bearest power, plenty, our share of food and molten butter- Suukta 29

xxx

Kalidasa (kaalidaasa) also in his Raghuvamsa Kavya says,

स क्षेमधन्वानममोघधन्वा
पुत्रम् प्रजाक्षेमविधानदक्षम्।
क्ष्माम् लम्भयित्वा क्षमयोपपन्नम्
वने तपः क्षान्ततरश्चचार॥ १८-९

sa kṣemadhanvānamamoghadhanvā
putram prajākṣemavidhānadakṣam |
kṣmām lambhayitvā kṣamayopapannam
vane tapaḥ kṣāntataraścacāra || 18-9

sa kShemadhanvAnamamoghadhanvA
putram prajAkShemavidhAnadakSham |
kShmAm lambhayitvA kShamayopapannam
vane tapaH kShAntatarashcacAra || 18-9

That king puNDarIka whose bow was never ineffectual made his son kshema-dhanva, who was fully endowed with forgiveness and was ever on the alert about the welfare of the subjects accept the sovereignty of the earth; and being himself capable of great endurance puNDarIka undertook ascesis after retiring into the forest. [18-9]

Here earth is used for patience.

18-9. amogha-dhanvA saH= of unfailing bow, he that king puNDarIka; prajA kShema vidhAna dakSham= one who is ever on the alert about the welfare of the subjects; kShamayA upapannam= one who is endowed with forgiveness; kShema-dhanvAnam putram= kShema-dhanva named, son; kShmAm lambhayitvA= earth – kingdom, causing to take care of it; kShAm tataraH = being himself capable of great endurance; vane tapaH cacAra= in forest, ascesis, he undertook.

We find such comparisons throughout Sanskrit and Tamil literature.

—subham—

Tags- Earth, Patience, Kural, Vishnu Sahasranama,Valmiki, Kalidasa, Robert Browning, Tiru Valluvar, Atharva Veda, Bhumi Suktam

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் -1 (Post No.13,310)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,310

Date uploaded in London – 6 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள் , ரகசியங்கள் , மேற்கோள்கள்-1 (Post No.13,310)

Part 1

விஷ்ணு சஹஸ்ரநாம (வி.ச.)த்திலுள்ள அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்களை  இந்தக் கட்டுரைத் தொடர் வரிசையில் காண்போம்.

(ஆங்கிலத்தில் 30 கட்டுரைகளில் தந்தேன்.)

வி.ச. வை பக்தியுடன் பாராயணம் செய்யும்போது அதிலுள்ள பல கடவுளர்கள், வரலாற்று, அறிவியல் விஷயங்கள்,தாவர  பிராணி விஷயங்கள் , பிரபஞ்சத் தோற்றம் பற்றிய வான சாஸ்திர உண்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. ஆகையால் புதிய கோணத்தில் அணுகுவதே இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம்

முதலில் மேற்கோள்களைக் காண்போம். ஸம்ஸ்க்ருத்த்திலுள்ள எல்லா சாத்திரங்களையும் கற்று அதில் கரைகண்ட ஆதிசங்கரர் காட்டும் மேற்கோள்கள் இவை.

 xxxx

ஆதிசங்கரர் காட்டும் அற்புதப் பொன்மொழிகள்

இந்துமதத்தில் எல்லா முக்கியக் கடவுளருக்கும் சஹஸ்ரநாமம் (ஆயிரம் பெயர்கள்) உண்டு; ஆயினும் மஹாபாரதத்திலுள்ள விஷ்ணு சஹஸ்ரநாமம் ( வி.ச.)தான் மிகவும் பழையது. அதிலுள்ள சிபிவிஷ்ட, வ்ருஷாகபி என்ற பெயர்கள் வேத காலப்பெயர்கள். மேலும் வி.ச.வில் கணபதி முருகன் முதல் சாஸ்தா ஐயப்பன் பெயர் வரை எல்லா பெயர்களும் வருகின்றன.அதைவிட விந்தையான விஷயம் நந்த வம்சம் , மெளரிய பேரரசு, குப்தப் பேரரசு உள்பட தென்கிழக்காசிய ஸ்ரீ விஜயப் பேரரசு வரை எல்லா பேரரசுகளின் பெயர்களும் வி.ச.வில் வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக சூத்திரர்கள் சுகமாக வாழ வேண்டும் என்றும் பல ச்ருதியில் வேண்டப்படுகிறது. தென் குமரி முதல் வட இமயம் வரை, தென் துருவம் முதல் வட துருவம் வரையுள்ள   கோடிக்கணக்கான இந்துக்கள் (லண்டன் சுவாமிநாதன் உள்பட) அனுதினமும் படிக்கும் துதி இது. அதில் வரும் சில வரிகள் பணத்தை வேண்டுவோருக்கு செல்வம் தருகிறது; குழந்தை இல்லாதோருக்கு மகப்பேற்றை அளிக்கிறது ; அறிவு வேண்டுவோருக்கு அறிவும் ஆயுள், நோயற்ற வாழ்வு வேண்டுவோருக்கு அவைகளும் கிடைக்க வழிசெய்கிறது. இவை நான் சொல்லும் வார்த்தைகள் அல்ல. வி.ச.வின் பலச்ருதியில் வரும் செய்திகள். அறிவியல் முறையில் அணுகினால் பிளாக் ஹோல், பிக் பேங், காலம் BLACK HOLE, BIG BANG, BIG CRUNCH, TIME DILATION பற்றிய செய்திகளும் வருகின்றன. (இவை அனைத்தையும் ஆங்கிலக் கட்டுரைகளில் மிக விரிவாக விளக்கியுள்ளேன் )

இந்தக் கட்டுரை வரிசையில் ஆதி சங்கரர் காட்டும் 85++++ மேற்கோள்களை மட்டும் எனது வியாக்கியானத்துடன் அளிக்கிறேன். ஆதி சங்கரர் ஏ ன் வி.ச.வுக்கு பாஷ்யம் எழுதினார் என்று பலருக்கும்  தெரியும். சிஷ் யன் ஒருவனைக் கூப்பிட்டு புஸ்தக அலமாரியிலிருந்து ஒரு புஸ்தகத்தை எடுத்து வா என்றவுடன் அவன் வி.ச.வைக் கொண்டு வந்தான். அவர் பாஷ்யம் எழுதுவதற்காக ஒரு புஸ்தகம் வேண்டும் என்ற எண்ணத்துடன் இதைச் சொன்னார். வேத உபநிஷத்துக்களுக்கும் பகவத் கீதைக்கும் பாஷ்யம் எழுதிய அந்த மஹானுக்கு வி.ச. பெரிதாகப்படவில்லை . ஆகவே இன்னொரு சிஷயனை அ ழைத்து , சீடா , ஒரு புஸ்தம் ஒன்றை அலமாரியிலிருந்து கொண்டு வா என்கிறார் . அவனும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையே (வி.ச.) கொண்டுவந்தான் ; ஓகோ , இது இறைவனின் கட்டளை என்று எழுதத்துவங்கினார் . உபநிஷத்துக்களை அவர் மேற்கோள் காட்டும் சில வரிகளை விட்டுவிட்டேன். ஏனெனில் அவைகளுக்கு முழு விளக்கம் இல்லாமல் புரியாது. அதை சங்கரரோ உலக மஹா மேதை. வேதங்களின் கரை கண்டவர். உலகிலேயே அதிக பாஷ்யங்கள் (உரைகள்) எழுதியவர் உலகின் மிகப்பெரிய தத்துவ ஞானி. அவர் எழுதிய பாஷ்யங்களில் எல்லா புராண இதிஹாச உபநிஷத்து க்களையும் காணலாம்.

உலகில் சாதனைப் புஸ்தகத்தில் இட்டம்பெறும் தகுதி பெற்றவர்கள் மூவரே. முதல்  இடத்தைப் பெறுபவர் வேத வியாசர். ஒரு லட்சம் சோளக்கங்களுடைய மஹாபாரதத்தை இயற்றினார். 18 புராணங்களையும் தொகுத்து அளித்தார். இவை அனைத்தும் 10 லட்சம் ஸ்லோகங்களை உடையவை. அதாவது 20 லட்சம் வரிகள் அதாவது ஒரு கோடி சொற்களுக்கும் மேல்.

இதற் கு அடுத்த இடத்தைப் பெறுபவர் ஆதி சங்கரர். அவரது காலம் கி.மு என்று காஞ்சிப் பெரியவர் (1894-1994) நீண்ட உபன்யாசம் செய்துள்ளார். ஆதி சங்கரர்  பாஷ்யம் எழுதாத இந்து மத நூல்  இல்லை  என்று சொல்லலாம். இவை தாவிய நூற்றுக் கணக்கான துதிகளும் அவர் பெயரில் உள்ளன.

மூன்றாவது சாதனைப் புஸ்தக ஆள், மதுரை நகர பாரத்வாஜாக் கோத்திரப் பார்ப்பான் உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியன் . அவர் சங்கத் தமிழ் நூல்களுக்கு எழுதிய உரைதான் ஆதாரம். அவை இல்லாவிடில் சங்கத்தமிழ் நூல்களின் அர்த்தம் தெரியாமல் தினறுவோம். நிற்க.

இதோ ஆதிசங்கரர் காட்டும் மேற்கோள்கள் :–

சுலப – நாமத்தின் எண் 817

பச்சிலையோ, பூவோ பழமோ பக்தியுடன் கொடுத்தால் எளிதில் அடையக்கூடியவர். இதற்கு சங்கரர் காட்டும் மேற்கோள் ,

பத்ரேஷு புஷ்பேஷு பலேஷு தோயே

ஷ்வக்ரீட  லப்யேஷு சதைவசத்ஷு

பக்த்யேக லப்யே புருஷே புராணே

முக்த்யை கதம் ந க்ரியதே பிரயத்னாஹா — மஹாபாரதம்.

இதன் பொருள் :

கடவுளை அடைய எளிதில் கிடைக்கும் இலைகளும் பூக்களும் பழங்களும் தண்ணீரும் உள்ளன. இவைகளைக் கொண்டு பக்தி செய்வதன் மூலமே அவனை அடை யலாம் ; அப்படியிருந்தும் மனிதர்கள் முக்தியை நாடாமல் இருப்பது ஏனோ !

அதே மஹாபாரதத்திலுள்ள பகவத் கீதையும் இதைச் சொல்கிறது,

पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति |

तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मन: || BG 9-26||

பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் யோ மே ப⁴க்த்யா ப்ரயச்ச²தி |

தத³ஹம் ப⁴க்த்யுபஹ்ருதமஸ்²நாமி ப்ரயதாத்மந: || 9- 26||

ய: ப⁴க்த்யா = எவர் அன்புடனே

பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் = இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும்

மே ப்ரயச்ச²தி = எனக்கு அளிப்பவன் ஆயின்

ப்ரயதாத்மந: = முயற்சியுடைய அவர்

ப⁴க்த்யுபஹ்ருதம் = அன்புடன் அளித்த

தத் அஹம் அஸ்²நாமி = அவற்றை நான் உண்கிறேன்

இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.

FROM —  https://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-9

இதை சங்க இலக்கியத்தில் அதிகம் பாடல்களை இயற்றிய பார்ப்பனப் புலவன் , புலன் அழுக்கற்ற அந்தணாளன்  கபிலன்  மொழிபெயர்த்துப் புற நானூற்றில் கொடுத்துவிட்டார்

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

புல் இலை எருக்கம் ஆயினும்,உடையவை

கடவுள் பேணேம் என்னா; ஆங்கு,

மடவர் மெல்லியர் செல்லினும்

கடவன் பாரி கை வண்மையே– கபிலர் (புறம் 106)

பொருள்

“குவிந்த பூங்கொத்து உடைய எருக்கம் பூவையும் அருகம் புல்லையும் பூஜையில் போட்டு வணங்கிகினாலும் கடவுள் எனக்கு இது வேண்டாம் / பிடிக்காது என்று சொல்லமாட்டார்”

XXXX

பகவான் – நாமத்தின் எண் 558

இந்த நாமத்தின் பொருளை விளக்க சங்கரர் இரண்டு பொன்மொழிகளைத் தருகிறார்.

ஐஸ்வர்யஸ்ய சமக்ரஸ்ய தர்மஸ்ய யஸஹ ச்ரியஹ

வைராக்யஸ்ய ச மோக்ஷஸ்ய ஷண்ணாம் பக  இதீரினா

ऐश्वर्यस्य समग्रस्य धर्मस्य (वीर्यस्य)यशसः श्रियः

ज्ञान-वैराग्ययोश् चापि षण्णां भग इतीङ्गना

விஷ்ணு புராணத்தில் 6-5-47 வரும் ஸ்லோகம் இது.

பொருள்

ஐஸ்வர்யம், தர்மம், கீர்த்தி/புகழ் , செல்வம், வைராக்கியம் , மோக்ஷம் ஆகிய ஆறு குணங்கள் பக எனப்படும். அவற்றை உடையவரை பகவான் என்போம்.

இன்னும் ஒரு விளக்கம்

உத்பத்திம் பிரளயம் சைவ பூதானாமாகதிம் கதிம்

வேத்தி – வித்யாமவித்யாஞ் ச வபுச்யோ பகவான் இதி

இதுவும்  விஷ்ணு புராணத்தில் 6-5-78 வரும் ஸ்லோகம்.

பொருள்

உலகின் தோற்றம், மறைவு, பந்தபாசம், முக்தி, அறிவு, அறியாமை ஆகிய ஆறு குணங்களுக்கும் அதிபதி என்பதால் அவனை பகவான் என்கிறோம்.

to be Continued…………………..

tags- விஷ்ணு சஹஸ்ரநாமம் , அதிசயங்கள் , ரகசியங்கள் , மேற்கோள்கள்-, ஆதி சங்கரர் , Part 1

விண்ணில் பறந்த முதல் பெண்மணி – வாலண்டினா தெரஷ்கோவா! – 1 (Post No.13,309)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.309

Date uploaded in London – 6 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

29-5-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

விண்ணில் பறந்த முதல் பெண்மணி – வாலண்டினா தெரஷ்கோவா! – 1

ச .நாகராஜன்

ஒரு பெண்ணினால் எதையும் சாதிக்க முடியும்; அதிலும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த சாதாரண பெண்மணி முன்னேறி உயர்ந்து விண்ணில் பறக்க முடியும் என்பதை நிரூபித்தவர் வாலண்டினா தெரஷ்கோவா என்ற ரஷ்ய பெண்மணி!

உலகப் பெண்களின் ஆதர்ச நாயகியாக கொண்டாடப்படும் இவருக்கு இப்போது வயது 87. இன்னும் அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டு வாழும் இவரது வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கை!

பிறப்பும் இளமையும்

ரஷியாவின் பிரசித்தி பெற்ற வோல்கா நதிக்கரையில் அமைந்துள்ள போல்ஷோவ் மஸ்லென்னிகோவோ என்ற கிராமத்தில் 6-3-1937 அன்று எளிய உழைக்கும் வர்க்க குடும்பத்தில பிறந்தார் வாலண்டினா தெரஷ்கோவா.

அவரது தந்தை விளாடிமிர் தெரஷ்கோவ் ஒரு விவசாயி. டிராக்டர் டிரைவராக பணி புரிந்தார். வாலண்டினாவிற்கு இரண்டு வயதாக இருக்கும் போதே அவர்      ஃபின்னிஷ் விண்டர் போரில் சோவியத் படையின் சார்பாகப் போரிட்டு இறந்தார். தாயார் சின்னக் குழந்தையை தூக்கிக் கொண்டு யரோஸ்லவ் என்ற ஊருக்கு இடம் பெயர்ந்து ஒரு பஞ்சாலையில் வேலை பார்க்க ஆரம்பித்தார்.

எட்டு வயதில் பள்ளியில் சேர்ந்த வாலண்டினா 16 வயதில் படிப்பை முடித்தார். முதலில் ஒரு டயர் தொழிற்சாலையிலும் பின்னர் பஞ்சாலை ஒன்றிலும் வேலை பார்க்க ஆரம்பித்தார். தபால் மூலம் அவரது படிப்பு தொடர்ந்தது.

ஸ்கை டைவிங்

இயல்பாகவே அவருக்கு ஸ்கை- டைவிங்கில் ஆர்வம் ஏற்பட்டது. 22-ம் வயதில் 21-5-̀1959-ல் தனது முதல் பயிற்சியாக வானத்திலிருந்து குதித்தார். பாராசூட்டிலிருந்து குதிப்பது அவருக்கு எளிதில் கை வந்த கலையாக ஆனது.

அத்தோடு கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு உறுப்பினராகவும் அவர் 1962-ல் சேர்ந்தார்.

விண்வெளியில் பறந்த யூரி ககாரின்

1961-ல் யூரி ககாரின் விண்வெளியில் பறந்து உலகையே பரபரப்புக்குள்ளாக்கினார்.

இந்தப் பரபரப்பை மேலும் அதிகமாக்க ரஷியா விரும்பியது. ஒரு பெண்மணியை விண்வெளியில் பறக்க வைத்தால் என்ன என்ற யோசனை ரஷிய உயர்மட்ட அதிகாரிகளிடம் தோன்றவே அதை நிறைவேற்ற தகுந்த ஒரு பெண்மணியை அவர்கள் தேடலாயினர்.

பெண்மணிக்கு வாய்ப்பு

80000 பெண்மணிகள் விண்ணில் பறக்க விரும்பி விண்ணப்பம் செய்தனர். 30 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும், 70 கிலோ எடைக்குள்ளாக இருக்க வேண்டும், உயரம் 170 செண்டிமீட்டரைத் தாண்டக் கூடாது, விண்ணில் பறக்கும் திறன் இருக்க வேண்டும் – ஆகிய இவை அடிப்படைத் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டன.

ஏராளமான கடுமையான பயிற்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்குத் தரப்பட்டது. அதில் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஐவர் இறுதிச் சுற்றுக்குத் தயாராயினர்.

வாலண்டினா 126 முறை பாராசூட்டிலிருந்து குதித்து நல்ல திறமையைப் பெற்றிருந்ததால் அவர் இந்த ஐவரில் ஒருவராக இருந்தார். சோவியல் விமானப்படையில் சேர்க்கப்பட்டு பயிற்சியும் அவருக்குத் தரப்பட்டது.

எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டார்

இவருடன் போட்டியிட்ட ஐவரில் சோலோவ்யெவா என்பவர் 700 முறை பாராசூட்டிலிருந்து குதித்திருக்கிறார். பாராசூட் ஜம்பிங்கில் மாஸ்டர் என்ற பெயர் எடுத்திருக்கிறார். ஆனால் இவரையும் மீறி வாலண்டினா எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அவரது குடும்பப் பின்னணி அவருக்கு உதவி செய்தது. சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்மணியாக அவர் இருந்ததால் ரஷிய அதிபரான குருஷேவ் அவரைத் தேர்ந்தெடுத்தார். மக்களின் பெண்மணியாக அவர் திகழ்வார் என்று அவர் நம்பினார். ஆகவே அவரே விண்வெளிப் பெண்மணியாக அறிவிக்கப்பட்டார்.

அத்துடன் மட்டுமின்றி மற்ற பெண்மணிகள் விண்ணிலிருந்து வந்த பின்னர் அவர்கள் விண்வெளித் துறையில் மட்டுமே ஈடுபடுத்த வல்லவராக இருப்பார்கள். ஆனால் வாலண்டினாவோ நல்ல மன உறுதி வாய்ந்தவர், ஒவ்வொருவரிடமும் பழகும் போதும் மிக நல்ல பெயரை எடுக்கிறார்,  நாட்டின் பெருமையை உயர்த்த வல்ல  பேச்சுத் திறனுடன் சமுதாயத்தில் நன்கு பழகக் கூடியவர். ஆகவே சமூகத்தில் சிறப்புடன் பணியாற்ற முடியும். இப்படிப்பட்ட காரணங்களை அவரது கமாண்டர் நிகோலய் கமானின் தனது குறிப்பேட்டில் பதிவு செய்தார். ஆகவே இவையும் அவருக்குச் சாதகமாக அமைந்தது.

விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி

1963-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் நாள் வோஸ்டாக் 6 என்ற விண்கலத்தில் விண்ணில் பறந்தார் வாலண்டினா. 48 முறை அவர் பூமியைச் சுற்றினார். மூன்று நாட்கள் அவர் விண்வெளியில் இருந்தார். விண்வெளியில் தனியாகப் பறந்த பெண்மணி என்ற பெயரையும் பெருமையையும் அவர் பெற்றார். 26-ம் வயதிலேயே விண்வெளி வீராங்கனை ஆனதால் விண்ணில் பறந்ததிலேயே இளமையானவர் என்ற பெயரும் அவருக்குக் கிடைத்தது.

அவருக்குப் பின்னால் 19 வருடங்கள் கழிந்த பின்னரே, 1982-ல் தான் ஸ்வெட்லான ஸவிட்ஸ்கயா என்ற ரஷிய பெண்மணி அடுத்ததாக விண்ணில் பறந்தார்.

பல அபாயங்கள்

விண்ணில் இருந்த போது அவர் நெடுநேரம் மௌனமாகவே இருந்தார். நிர்ணயிக்கப்பட்டிருந்த அனைத்து சோதனைகளையும் அவரால் முடிக்க முடியவில்லை. களைப்பினால் ஒரு சமயம் அவர் விண்கலத்தில் தூங்கி விட்டார். பூமியிலிருந்து வரும் தகவல்களுக்குச் சில சமயம் அவர் பதில் சொல்லவே இல்லை. ஒரு வழியாக அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பினர்.

ஆனால் ஏராளமான அபாயங்களுக்கு ஈடு கொடுத்து அவர் விண்ணிலிருந்து மீண்டார்.

சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் தான், ஒரு பேட்டியில் நடந்தது என்ன என்பதை அவர் குறிப்பிட்டார்.

வோஸ்டாக் – 6 என்ற அவரது விண்கலம் தவறான கோ- ஆர்டினேட்டுகளை கணினியில் கொண்டிருந்தது. அதைக் கண்டுபிடித்து, சரி செய்து பூமியில் இறங்கும் தருணம் வந்த போது விண்கலம் நேர் எதிர் திசையில் செல்ல ஆரம்பித்தது. இதைப் பார்த்து திடுக்கிட்ட வாலண்டினா உடனடியாக கணினி இயக்கத்தை நிறுத்தி விட்டு நேரடியாக தானாகவே விண்கல இயக்கத்தை சரியான ஓடு பாதையில் ஓடும்படி சரி செய்தார்.

பூமிக்கு வந்து இறங்கியதும் அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளிலிருந்து சிறிது விலகினார். அவரது மீட்புக் குழு அவரிடம் வந்து சேரும் முன்னர், விண்ணில் சோதனைக்காக எடுத்துச் சென்றிருந்த உருளைக்கிழங்கினால் ஆன பசைபோன்ற உணவின் ஒரு பகுதியை அங்குள்ள உள்ளூர் மக்களுக்கு விநியோகித்து ஆனந்தித்தார்.

இதைக் கேள்விப்பட்ட உயர் அதிகாரியான கோரொலெவ், “ஐயோ! போதும், போதும் இன்னொரு பெண்மணியை எனது ஆயுள் காலத்தில் விண்வெளிக்கு அனுப்பமாட்டேன்” என்று ஜோக் அடித்தார்.

*****

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—41(Post No.13,308)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,308

Date uploaded in London – 5 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

xxxxx

மி

505. மிளகு வைத்தியம்

மிளகை சூரணித்து அப்போது கறந்த பசும்பாலில் போட்டு அருந்தி வந்தால் குளிர் சுரம்- பாண்டு- கபம்- கிராணி -குன்மம்- வாய்வு- மூலம் – பித்தம்- இருமல்- பிரமேகம் இவை தீரும் .

xxxxx

அஸ்தி சூட்டுக்கு

மின்னைக் கீரையை மிளகு தூளிட்டு கிரமப்படி குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் அஸ்தி சூடு- வேட்டை- இதுகள் சாந்தியாகும் – கண் குளிர்ச்சியுண்டாம் .

xxxxx

குளிர் சுரத்திற்கு

மிளகை கஷாயம் வைத்து எட்டுக்குக்கொரு பா கமாய் இறக்கி வடிகட்டிக்கொடுத்து சக்திக்கிசைந்தபடி லங்கணம் போட சாந்தியாகும் .

xxxxx

இருமல் சாந்தி

மிளகரணையை  சூரணித்து இந்த சூரணத்திற்கு அரை பாகம் (திப்பிலி- கடுக்காய் தோல் – சுக்கு) இம்மூன்றும் சேர்த்து இடித்த சூரணம் கூட்டிக் கலந்து திருகடிப்பிரமாணம் சாப்பிட்டு வர இருமல்- ஈளை – கபம்- பித்தம் சாந்தியாகும் .

xxxxx

மு

ரத்த கிராணிக்கு

முள்ளிலவம் பிசினியை தயிரில் அரைத்து மூன்று நாள் காலையில்  கொட்டடைப்பாக்களவு கொடுத்து வரத் தீரும் .

xxxxx

நீர்ச்சுருக்குக்கு

முள்ளங்கிக் கிழங்கை இடித்து சாறு பிழிந்து வெள்ளைச் சக்கரை கலந்து சாப்பிடத்  தீரும். மூன்று வேளை சாப்பிடவும் .

xxxxx

அரையாப்புக்கட்டி கரைய

முருங்கை வேர்ப்பட்டையும் புழுங்கலரிசியும் உப்பும் சமன்  கூட்டி அரைத்து கட்டி மேல் வைத்துக்கட்ட கரையும் ; மூன்று நாள் கட்டவும்.

xxxxx

காது செவுட்டுக்கு

முருங்கைவேரும்  கொன்னை வேரும் சமன் கொண்டுஇடித்து  சாறு பிழிந்து காதில் ஒரு துளி விடவும். இப்படி மூன்று நாள் விடத் தீரும்.

xxxxx

தாது புஷ்டிக்கு

முருங்கை வித்தைப் பாலில்   போட்டுக் காய்ச் சியுண்டுவந்தால் இந்திரியம் கட்டுப்படும். தாது புஷ்டியுண்டாம் .

xxxxx

ஸ்தனமில்லாதவர்க்கு

முத்தெருக்கன் செவி மூலத்தைப் பாலில் அரைத்துக் கலக்கியுண்டு வந்தால் சிறிதாயுள்ள ஸ்தனங்கள் பெருத்து விம்மும் .கரப்பான் புருவு பிளவை தீரும் .

xxxxx

உமிழ்நீர் சுரப்புக்கு

முசுமுசுக்கையைக் கஷாயம் வைத்து நாலுக்கொன்றாய் இறக்கி குடி நீராகக்கொடுத்து வந்தால் பித்தவுபரி உமிழ்நீர் சுரப்பு இவை தீரும்.

xxxxx

மூ

அரையாப்புக்கு

மூக்குரட்டை  வேரை அரைத்து புன்னைக்காயளவு எடுத்து காலாழாக்கு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும். மீன் கருவாடு புளி புகை லாகிரி ஆகாது .இப்படி மூன்று நாள் கொள்ளத் தீரும்.

xxxxx

இரத்த பித்தத்திற்கு

மூங்கில் வித்தைப் பாலில் கொள்ள இரத்த பித்தம் கண்ணோய் இவைகள் தீரும் .

xxxxx

எட்டு வகைக் குன்மம் நரை திரை மாற

மூக்கரணைச் சாரணை வேரை ஆவின் பாலில் அரைத்துக் கலந்துண்டு வந்தால் ஒரு மண்டலத்தில் நரை திரை மாறும் . உடல் இருகும் . பகலில் நட்சத்திரம் தெரியும் .எட்டு வகைக் குன்மம் சாந்தியாகும் .

xxxxx

to be continued………………………………

tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள், Part 41

London Swaminathan’s Article Index for May 2024 (Post 13,307)

London Swaminathan with his brother Prof. Suryanarayanan in front of  Buckingham Palace in London, May 2024

London Swaminathan’s Article Index for May 2024 (Post 13,307)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,307

Date uploaded in London – 5 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Index No.138

More Secrets from Vishnu Sahasranama! – Part 1 (Post.13,196) 1-5-2024

To

More Secrets from Vishnu Sahasranama! – Part 17 20/5

(seventeen parts; then continued in June)

xxxx

75 Beautiful Quotations from Vishnu Sahasranama Commentary- Part 1 (Post No.13,262) 21/5

To

75 Beautiful Quotations from Vishnu Sahasranama Commentary- Part 10/ 30/5

(ten parts;finito)

xxxx

London Swaminathan’s Article Index for April 2024 (Post No.13,212) 6/5

xxxx

PURI JAGANNATH TEMPLE MYSTERY -MODI RAISES THE ISSUE AGAIN 24/5 from newspapers

xxxx

June 2024 Calendar- More Shirdi Sai Baba Golden Sayings (Post No.13,287) 30/5

Welcome to London : Try lifting 13 Kilo Gold Bar in London Museum (Post No.13,292) 31/5

xxxx

London Swaminathan with world famous detective Sherlock Holms in Baker Street in London, May 2024

Tamil Articles

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் – Part 6 (Post No.13,195)6/5

to

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் – Part 12/last part

(seven parts)

xxxx

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 28 (Post No.13,198) 2/5

To

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 40- (31/5)

xxxx

அதிசய தாவரங்கள்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள்—1 (Post.13,201) 3/5

To

திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள்—18- (29/5)

xxxx

பூரி ஜெகநாதர் கோவில் ரத்ன கருவூல சாவி எங்கே? 24/5 News Paper cutting.

—subham—

Tags- London Swaminathan’s ,Article Index for May 2024 , Index 138

S.Nagarajan Article Index: MAY  2024 (Post No.13,306)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.306

Date uploaded in London – 5 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

SNR Article Index: MAY  2024

MAY  2024

1-5-2024 13194  ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 3                                  2-5-2024 13197 அர்தேஷிர் கோத்ரெஜ் – அனைத்தையும் பத்திரமாய் பாதுகாக்க நன்னெறி நடைமுறைகளுடன் கூடிய வணிக நிறுவனம் தந்தவர்! – 1 (24-4-2024  மாலைமலர் கட்டுரை)                        3-5-2024 13200  அர்தேஷிர் கோத்ரெஜ் – அனைத்தையும் பத்திரமாய் பாதுகாக்க நன்னெறி நடைமுறைகளுடன் கூடிய வணிக நிறுவனம் தந்தவர்! – 1 (24-4-2024  மாலைமலர் கட்டுரை)                        4-5-2024 13203 SNR Article Index: APRIL  2024.                                                                            5-5-2024 13207 சிவபிரானின் ஊர்வஸ்திரம்வாகனம் அடங்கிய ஒரு. பாட்டு!                                                                                                                                                     6-5-2024 13210 திரு கணேஷ் ராஜா அவர்களின் THE JAMBU ISLAND புத்தக அறிமுகம்                                                                7-5-2014 13213 பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு – உத்வேகம் ஊட்டும் கண்டுபிடிப்பாளர்! – 1 (1-5-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை)                                                                 8-5-2014 13217  ‘பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு – உத்வேகம் ஊட்டும் கண்டுபிடிப்பாளர்! – 2     (1-5-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை)                                                                                                                                       9-5-2024 13221 கிருஷ்ணருக்குப் பிடித்த கிருஷ்ண பஞ்சமியும் அக்ஷய த்ரிதியையும்!                                                                                                                                      10-5-2024  13225ஆசார்ய சுஸ்ருதரின் அபூர்வமான 122 சஸ்த்ர சிகிச்சை கருவிகள்! ஹெல்த்கேர் மே மாத கட்டுரை)                             11-5-2024 13229 பார்க்க வேண்டிய ஒரு ஹிந்தி திரைப்படம்   ஆர்டிகிள் 370!                                                                                                                      12-5-2024 13233  கால் பந்து மன்னன் பீலே! -1 (8-5-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.).                                                                          13-5-2024 13236 கால் பந்து மன்னன் பீலே! –2  (8-5-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.).                                                                                   14-5-2024 13240

ராமாயணத்தில் சாபங்கள் (1) – ராமாயணம் எழுந்த கதை!                                                                                                                                                                 15-5-2024 13242 ராமாயணத்தில் சாபங்கள் (2)                                                                 16-5-2024 13245 ராமாயணத்தில் சாபங்கள் (3,4,5)                                                        17-5-2024 13248 ராமாயணத்தில் சாபங்கள் (6                                                                 18-5-2024 13251 விடாது போராடி பல்லாயிரம் உயிர்களைக் காத்த பெண்மணி ராக்கேல் கார்ஸன்! – 1 மாலைமலர் 15-5-2024 இதழ் கட்டுரை   19-5-2024 13254 விடாது போராடி பல்லாயிரம் உயிர்களைக் காத்த பெண்மணி ராக்கேல் கார்ஸன்! – 1 மாலைமலர் 15-5-2024 இதழ் கட்டுரை 20-5-2024 13257 ஒரு அதிசய பிரதம மந்திரிஒரு அதிசய முதல் மந்திரி! 21-5-2024 13260 ராமாயணத்தில் சாபங்கள் (7,8) – சுபாஹு பெற்ற சாபமும், குசகன்யா- வாயு சாபமும்                                                                                    22-5-2024 13263 ராமாயணத்தில் சாபங்கள் (9,10) – உமா தேவியின் சரித்திரம்                                                                                                                                           23-5-2024 13266 ராமாயணத்தில் சாபங்கள் (11) – கங்காவதரணமும்சாப    நிவர்த்தியும்!                                                          24-5-2024 13269 அயோத்தியில் ராமருக்கு சூர்யாபிஷேகம்பக்தர்கள் ஆனந்தம்!                                                                                                                                                  25-5-2024 13272 மூளை நினைவாற்றல் திறனை முழுதுமாக  ஆராய்ந்த ப்ரெண்டா மில்னெர் (Brenda Milner) – 1 (22-5-24 மாலைமலர் கட்டுரை)                      26-5-2024 13275 மூளை நினைவாற்றல் திறனை முழுதுமாக  ஆராய்ந்த ப்ரெண்டா மில்னெர் (Brenda Milner) – 2 (22-5-24 மாலைமலர் கட்டுரை)                      27-5-2024 13278 ராமாயணத்தில் சாபங்கள் (12) – கௌதமர் இந்திரனுக்கு தந்த சாபம்!                                                                                                                                       28-5-2024 13280 ராமாயணத்தில் சாபங்கள் (13) – கௌதமர் அகல்யைக்கு தந்த சாபம்!                                                                                                                              29-5-2024 13283  ராமாயணத்தில் சாபங்கள் (14) –  வசிஷ்ட புத்திரர்கள் திரிசங்குவிற்குத் தந்த சாபம்!                                                                                                 30-5-2024 13286 ராமாயணத்தில் சாபங்கள் (15) – வசிஷ்ட புத்திரர்களுக்கு விஸ்வாமித்திரர் தந்த சாபம்!                                                                                           31-5-2024 13290 ராமாயணத்தில் சாபங்கள் (16) – விஸ்வாமித்திரரின் சாபத்திற்கு பயந்த ரிஷிகள்!

–subham—

Welcome to London -Tower Bridge will Open for You!(Post No.13,305)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,305

Date uploaded in London – 4 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Picture of Tower of London

(Welcome to London : Try lifting 13 Kilo Gold Bar in London Museum (Post No.13,292) was posted here on 31 May 2024)

There was a surprise waiting for us in London on 15th May 2024. The Tower Bridge opened for us during our cruise on Thames. Having lived in London for over 37 years, I don’t go round the city very often; only when relatives or friends visit London, I take them to all spots of scenic beauty . when I took my brother and his wife to the Tower Bridge, I told them the bridge would open when ships come on Thames like our Pamban Bridge in Tamil Nadu. They showed great interest and asked the Bridge authorities what time that would open on that day. They told them that it would open after 5.30 pm on that day. We didn’t wait and came back home.  Next day we took the Thames River ride. It is a must for every tourist.

If you take the boat up to Greenwich (Pronunciation- greenich- W is silent. If you say greenWhich, they will know that you are a stranger. When I lived in Madurai 37 years ago, during weekend I and Mr Ganesan, now Governor of Nagaland state in India , took a town bus/city bus to go to a place very near for RSS work,I asked the bus conductor for two tickets to Airaavatha Nallur. When I said Airaavathanalloor, many people stared at me. Then Ganeshji told me you have to say Ailaanoor like local villagers. When I went to Trichy for an RSS camp at Tiruppaithurai, I saw the board in the bus with that name. I asked the bus conductor whether the bus goes there just to double check. The bus conductor told me to get down from the bus. Then came the second bus with the name Tirupparaiithurai. I boarded the bus and asked the same question. Bus conductor shouted at me saying  ‘Get Down Get Down’. I was surprised. Then a Trichyman, local guy, who watched this drama, called me and said “I understand you are a visitor from another town and here you have to say TiruPPLAAthurai”. And then the third bus came I asked for a ticket t to TiruPPLAAthurai and he said “come on, board the bus quickly”. So it is important to say the word with local pronunciation. Or show it in writing.

xxxx

While we were on the boat, there was a running commentary in English explaining the importance of famous buildings or land marks on both sides of the Thames. Suddenly he announced over microphone, “Guys! you are all lucky today, the bridge is opening for a ship”. Actually a boat with tall mast was coming. All in the boat took their cameras, videos, mobile phones etc and clicking and clicking for ten minutes .

A few years ago ,when I went there just to see the bridge opening, I waited for hours to see it. The height of the road bridge is NOT fit for big and tall ships. So they have to open the bridge. It consists of two parts. All the buses and vehicles will be stopped when both parts are lifted.

The Tower Bridge is an engineering marvel. Tower Hill is the nearest underground station. After getting down there, you have to cross the road and walk along the London Tower Fort where our Kohinoor Diamond and other Royal Jewellery are on show. If you buy the ticket and enter the Tower you can see where the crows are carefully kept with a special care taker. The British believe if the crows fly away the Royalty will face big dangers. And the guide inside the Tower will tell you a lot of stories about the execution of famous queens and traitors on the rampart . Henry VIII sent many of his queens to be executed there. On those days the whole of London came thereto watch the Death Sentence of the queens. They did not show any sympathy but enjoyed with joyful shouts.

After passing the Tower,  you go along the river banks and climb the Tower Bridge. Half way through you can see the division or parting where the Bridge is divided into two. There is a ticket office where you get tickets to see the Story of Tower Bridge and its wonderful engineering work.

Everything is FREE unless you wanted to see Tower and Royal Jewellery, unless you want to see the engineering work. Sometimes there may be a long Queue in front of the Safe Room where the Royal Crown on display.

xxxx

Tickets for Boat Trip

You must pay for the boat trip. There are many types of tickets. I bought £12 ticket to go half way and come back to Westminster. Some people bought tickets up to Greenwich. If You want to come back, you will have to pay more. But many people go to Greenwich observatory where zero-degree longitude is marked; the earth is divided into two with those imaginary lines. You may now about GMT.

The tickets can be bought in many piers. But the big pier is very near Big Ben Clock or Westminster Underground. To go up to Greenwich it would take 45 minutes or one hour.

What is Tower Bridge?

An iconic London landmark and one of Britain’s best loved historic sites, Tower Bridge is open to the public 363 days a year. Within the Bridge’s iconic structure and magnificent Victorian Engine rooms, the Tower Bridge Exhibition is the best way of exploring the most famous bridge in the world! (To see the exhibition you have to buy tickets; but walking on the bridge is FREE. You can see boats ad ferries on both sides of the River Thames.

The modern concrete and steel structure we know today was opened to traffic in 1973. Tower Bridge was built in 1894.

Tower Bridge is a Grade I listed combined bascule, suspension, and, until 1960, cantilever bridge in London, built between 1886 and 1894, designed by Horace Jones and engineered by John Wolfe Barry with the help of Henry Marc Brune

London Bridge and Tower Bridge look very different, yet both are famous bridges in their own right, and both are must-see attractions in the city. Both bridges are free to walk across, and they’re both in great locations surrounded by other amazing attractions.

You can walk across the bridge for free or for a slight fee you can walk up inside the bridge, take in the breathtaking skyline and walk across the glass bottom walkway.

(The Pamban Bridge in India, also called as Cantilever Scherzer Rolling Lift Bridge; was named after the German engineer Scherzer, who built the Pamban viaduct; has a road bridge that was constructed parallel to the original rail bridge back in 1988 which connects National Highway 49 with the island of Rameshwaram.)

–subham—

Tower Bridge, Thames Cruise, Greenwich, Tower, Royal Jewellery , Crows, Execution of Queens, Pamban Bridge

வியப்பூட்டும் தவளைச் சிகிச்சை: மன நோய்க்கு மருந்து! (Post No.13,304)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,304

Date uploaded in London – 4 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

லண்டனிலிருந்து வெளியாகும் மெட்ரோ Metro பத்திரிகையில் நேற்று (3-6-2024) ஒரு வியப்பான செய்தி வெளியாகியுள்ளது. தவளை , தேரை எல்லாம் ஒரே வகைப் பிராணிகள். ஒரு வாரத்திற்கு முன்னர் முனிசாமி முதலியார் 1899-ம் ஆண்டில் வெளியிட்ட மூலிகை மர்ம நூலில் வந்த தவளைச்  சிகிச்சை பற்றி வெளியிட்டேன். அதில் பச்சைத் தவளை மாமிசம் சாப்பிட்டு பாம்பு விஷத்தைக் குணப்படுத்துவது, அஸ்தி சுரத்தைத் தீர்ப்பது, உயிருள்ள தவளையைக் கட்டிவைத்து பிளவைக் கட்டிகளை குணப்படுத்துவது முதலிய செய்திகளை வெளியிட்டேன். இப்பொழுது அமெரிக்க பாலைவனத்துத்  தேரை (Toad) யைப் பிடித்து அதன் விஷம் மூலம் மன நோயைத் தீர்க்கலாம் என்ற செய்தி  வெளியாகியிருக்கிறது.

அமெரிக்கா- மெக்சிகோ எல்லைப்பகுதியில் உள்ள பாலை வனத்துக்குப் பெயர் சொனோரன் பாலை வனம் Sonoran Desert (California,USA and  Mexico). அங்கு வசிக்கும்  ஒரு தேரையின் தோல் விஷத்தைச் சுரக்கிறது. அதை நாக்கினால் நக்கினால் போதை ஏற்படும். அப்போது மாயாஜால உலகிற்குள் போவது போல இன்ப உணர்ச்சி ஏற்படும். ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் செய்தி அமெரிக்க பத்திரிகைகளில் முக்கிய இடத்தைப் பிடித்தது. அந்தத் தேரை வசிக்கும் பகுதிகளில் யாரும் தவளையை நக்காதீர்கள் அது விஷம் என்று பெரிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது. ஆயினும் ஆயிரக்கணக்கானோர்  ஏராளமான பணம் கொடுத்து போதை இன்பம் அனுபவிக்கச் சென்றனர்.

இப்பொழுது வெளியாகும் செய்திகள் இது போதை இன்பத்தைத் தரும் கெடுதியான பொருள் என்றாலும் இதன் மூலம் மன நோய்களைத் தீர்க்க முடியும் என்று கூறுகிறது

லண்டனில் ஆராய்ச்சி

லண்டனில் புகழ்பெற்ற கல்லூரி  இம்பீரியல் காலேஜ் Imperial College

ஆகும். அங்கு மருத்துவப் படிப்புடன் மருத்துவ ஆராய்ச்சிக் கூடமும் இருக்கிறது. அதில்  ஒருவருக்கு இந்த விஷத் தேரையின் விஷத்தை ஏற்றி மூளையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று கண்டறிந்துள்ளனர். இந்தத் தேரையின் தோலில் சுரக்கும் பொருளை5-MeO- DMT என்பார்கள். பெக்லி சைடெக் Beckley Psytech  என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்தப் பொருளை செயற்கையாகத் தயாரித்து BPL-003 என்று பெயரிட்டுள்ளனர்

இந்த ஆராய்ச்சி பற்றி அறிவித்தவுடன் 20 தொண்டர்கள் Volunteers

முன் வந்தனர். அதில் முதல் ஆளுக்கு மருந்து ஏற்றப்பட்டது அப்போது மூளையை ஸ்கேன் Scan கருவியில் கண்டு என்னே மின்சார அதிர்வுகள் ஏற்படுகிறது என்பதை வெளியிட்டுள்ளனர் . இதை மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கலாமா என்பதே ஆராய்ச்சியின் நோக்கம். 20 தொண்டர்களுக்கும் ஏற்றப்பட்டு முடிவுகள் 2026ம் ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்பீரியல் கல்லூரியில் மாயத்தோற்ற மருந்துகளை Psychedelic

ஆராயும் பிரிவு இருக்கிறது அதன்தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் திம்மர்மான் Dr . Christopher Timmermaan பேசுகையில் 20 மருத்துவ தொண்டர்களுக்கும் உண்மையான விஷத்தையும் பொய்/ போலி  மருந்தையும் (Placebo) ஒருமாத இடைவெளியில் கொடுத்து ஆராய்வோம் என்றார். (ஆராய்ச்சிக்கு வரும் தொண்டர்களுக்கு எது உண்மை , எது போலி மருந்து (Placebo ) என்று சொல்ல மாட்டார்கள். அது டாக்டர்களுக்கு மட்டுமே தெரியும்.  இந்த அராய்ச்சியில் மாயத் தோற்ற மருந்துகளால் மூளையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து அதன் மூலம் மன நலத்தை உண்டாக்கலாமா என்று ஆராய்வார்கள்

வட அமெரிக்காவில் வசிக்கும் இந்த சோனோரன் பாலைவனத் Sonoran Desert (California, USA and  Mexico) தேரைகள் ஏழு அங்குலம் /18 செ .மீ வரை வளரக்கூடியவை.மதுபானத்துக்கு அடிமையானவர்கள், மனத் தொய்வுக்கு (Alcohol addiction ,Depression ) ஆளானவர்கள் ஆகியோருக்கு இத்தகைய சைக்கிடெலிக் மருந்துகளைக் கொடுத்தும் ஆராய்ந்து வருகிறார்கள். மாயத்தோற்றம் உண்டாக்கும் மருந்து வகைகளை Psychedelic சைக்கிடெலிக் என்பார்கள்.

xxxx

Toad Ceremony in America

தவளையை நக்கினால் இளவரசன் தோன்றுவான்

நம் நாட்டில் பஞ்ச தந்திரக் கதைகள், கதா சரித் சாகரக் கதைகள் இருப்பது போல மேலை  நாட்டில்  ஜெர்மானிய கிரிம் பிரதர்ஸ் Grimm Brothers எழுதிய கதைகள் உண்டு. அதில் ஒரு கதை The Frog Prince தவளை இளவரசன் என்பதாகும். ஒரு இளவரசியின் தங்கப் பந்து  குளத்தில் விழுந்துவிடுகிறது. ஒரு தவளை நான் அதை எடுத்துத் தருவேன் ஆனால் நீ எனக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று. நிபந்தனை விதிக்கிறது; பந்தையும் எடுத்துக் கொடுக்கிறது . ஆனால் இளவரசி முத்தம் கொடுக்க மறுக்கிறாள். தவளை,  நாட்டின் மன்னரிடம் முறையிட்டவுடன் முத்தம் கொடு என்று கட்டளை இடுகிறார். அவள் அப்படிச் செய்தவுடன் அந்தத் தவளை உன்னுடன் படுக்க ஆசை என்று சொல்கிறது. இளவரசி கோபத்தில் அதை சுவற்றின் மீது வீசி எறிகிறாள் ; உடனே அது இளவரசனாக மாறிவிடுகிறது .

இதை, ஜெர்மானியர்கள் மஹாபாரத தவளைக் கதையிலிருந்து திருடியுள்ளனர் மஹாபாரதத்தில் ஆயு என்ற தவளை அரசன், சுசோபனா என்ற ராணியின் கதை வருகிறது.

விஷத் தேரையின் தோலை நக்கி மாயாஜால உலக இன்பம் அனுபவிக்கும் அமெரிக்க முகாம்களில் இந்தக் கதையும் பெரிதாக அடிபடுகிறது. தேரையை நக்குங்கள் – இளவரசன் ஆகுங்கள் என்று.

இந்த முகாமில் பங்குகொண்டு மாயத் தோற்ற/ தற்காலிக இன்பம் அனுபவிக்க 250 டாலர் முதல் 8000 டாலர் வரை வசூலிக்கப்படுகிறது.

 –சுபம்—

வியப்பூட்டும், தவளைச் சிகிச்சை, மன நோய்க்கு மருந்து, தேரை , தோல்  விஷம் , மாயாஜால , போதை , Frog Prince