Date uploaded in London – 6 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள் , ரகசியங்கள் , மேற்கோள்கள்-1 (Post No.13,310)
Part 1
விஷ்ணு சஹஸ்ரநாம (வி.ச.)த்திலுள்ள அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்களை இந்தக் கட்டுரைத் தொடர் வரிசையில் காண்போம்.
(ஆங்கிலத்தில் 30 கட்டுரைகளில் தந்தேன்.)
வி.ச. வை பக்தியுடன் பாராயணம் செய்யும்போது அதிலுள்ள பல கடவுளர்கள், வரலாற்று, அறிவியல் விஷயங்கள்,தாவர பிராணி விஷயங்கள் , பிரபஞ்சத் தோற்றம் பற்றிய வான சாஸ்திர உண்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. ஆகையால் புதிய கோணத்தில் அணுகுவதே இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம்
முதலில் மேற்கோள்களைக் காண்போம். ஸம்ஸ்க்ருத்த்திலுள்ள எல்லா சாத்திரங்களையும் கற்று அதில் கரைகண்ட ஆதிசங்கரர் காட்டும் மேற்கோள்கள் இவை.
xxxx
ஆதிசங்கரர் காட்டும் அற்புதப் பொன்மொழிகள்
இந்துமதத்தில் எல்லா முக்கியக் கடவுளருக்கும் சஹஸ்ரநாமம் (ஆயிரம் பெயர்கள்) உண்டு; ஆயினும் மஹாபாரதத்திலுள்ள விஷ்ணு சஹஸ்ரநாமம் ( வி.ச.)தான் மிகவும் பழையது. அதிலுள்ள சிபிவிஷ்ட, வ்ருஷாகபி என்ற பெயர்கள் வேத காலப்பெயர்கள். மேலும் வி.ச.வில் கணபதி முருகன் முதல் சாஸ்தா ஐயப்பன் பெயர் வரை எல்லா பெயர்களும் வருகின்றன.அதைவிட விந்தையான விஷயம் நந்த வம்சம் , மெளரிய பேரரசு, குப்தப் பேரரசு உள்பட தென்கிழக்காசிய ஸ்ரீ விஜயப் பேரரசு வரை எல்லா பேரரசுகளின் பெயர்களும் வி.ச.வில் வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக சூத்திரர்கள் சுகமாக வாழ வேண்டும் என்றும் பல ச்ருதியில் வேண்டப்படுகிறது. தென் குமரி முதல் வட இமயம் வரை, தென் துருவம் முதல் வட துருவம் வரையுள்ள கோடிக்கணக்கான இந்துக்கள் (லண்டன் சுவாமிநாதன் உள்பட) அனுதினமும் படிக்கும் துதி இது. அதில் வரும் சில வரிகள் பணத்தை வேண்டுவோருக்கு செல்வம் தருகிறது; குழந்தை இல்லாதோருக்கு மகப்பேற்றை அளிக்கிறது ; அறிவு வேண்டுவோருக்கு அறிவும் ஆயுள், நோயற்ற வாழ்வு வேண்டுவோருக்கு அவைகளும் கிடைக்க வழிசெய்கிறது. இவை நான் சொல்லும் வார்த்தைகள் அல்ல. வி.ச.வின் பலச்ருதியில் வரும் செய்திகள். அறிவியல் முறையில் அணுகினால் பிளாக் ஹோல், பிக் பேங், காலம் BLACK HOLE, BIG BANG, BIG CRUNCH, TIME DILATION பற்றிய செய்திகளும் வருகின்றன. (இவை அனைத்தையும் ஆங்கிலக் கட்டுரைகளில் மிக விரிவாக விளக்கியுள்ளேன் )
இந்தக் கட்டுரை வரிசையில் ஆதி சங்கரர் காட்டும் 85++++ மேற்கோள்களை மட்டும் எனது வியாக்கியானத்துடன் அளிக்கிறேன். ஆதி சங்கரர் ஏ ன் வி.ச.வுக்கு பாஷ்யம் எழுதினார் என்று பலருக்கும் தெரியும். சிஷ் யன் ஒருவனைக் கூப்பிட்டு புஸ்தக அலமாரியிலிருந்து ஒரு புஸ்தகத்தை எடுத்து வா என்றவுடன் அவன் வி.ச.வைக் கொண்டு வந்தான். அவர் பாஷ்யம் எழுதுவதற்காக ஒரு புஸ்தகம் வேண்டும் என்ற எண்ணத்துடன் இதைச் சொன்னார். வேத உபநிஷத்துக்களுக்கும் பகவத் கீதைக்கும் பாஷ்யம் எழுதிய அந்த மஹானுக்கு வி.ச. பெரிதாகப்படவில்லை . ஆகவே இன்னொரு சிஷயனை அ ழைத்து , சீடா , ஒரு புஸ்தம் ஒன்றை அலமாரியிலிருந்து கொண்டு வா என்கிறார் . அவனும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையே (வி.ச.) கொண்டுவந்தான் ; ஓகோ , இது இறைவனின் கட்டளை என்று எழுதத்துவங்கினார் . உபநிஷத்துக்களை அவர் மேற்கோள் காட்டும் சில வரிகளை விட்டுவிட்டேன். ஏனெனில் அவைகளுக்கு முழு விளக்கம் இல்லாமல் புரியாது. அதை சங்கரரோ உலக மஹா மேதை. வேதங்களின் கரை கண்டவர். உலகிலேயே அதிக பாஷ்யங்கள் (உரைகள்) எழுதியவர் உலகின் மிகப்பெரிய தத்துவ ஞானி. அவர் எழுதிய பாஷ்யங்களில் எல்லா புராண இதிஹாச உபநிஷத்து க்களையும் காணலாம்.
உலகில் சாதனைப் புஸ்தகத்தில் இட்டம்பெறும் தகுதி பெற்றவர்கள் மூவரே. முதல் இடத்தைப் பெறுபவர் வேத வியாசர். ஒரு லட்சம் சோளக்கங்களுடைய மஹாபாரதத்தை இயற்றினார். 18 புராணங்களையும் தொகுத்து அளித்தார். இவை அனைத்தும் 10 லட்சம் ஸ்லோகங்களை உடையவை. அதாவது 20 லட்சம் வரிகள் அதாவது ஒரு கோடி சொற்களுக்கும் மேல்.
இதற் கு அடுத்த இடத்தைப் பெறுபவர் ஆதி சங்கரர். அவரது காலம் கி.மு என்று காஞ்சிப் பெரியவர் (1894-1994) நீண்ட உபன்யாசம் செய்துள்ளார். ஆதி சங்கரர் பாஷ்யம் எழுதாத இந்து மத நூல் இல்லை என்று சொல்லலாம். இவை தாவிய நூற்றுக் கணக்கான துதிகளும் அவர் பெயரில் உள்ளன.
மூன்றாவது சாதனைப் புஸ்தக ஆள், மதுரை நகர பாரத்வாஜாக் கோத்திரப் பார்ப்பான் உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியன் . அவர் சங்கத் தமிழ் நூல்களுக்கு எழுதிய உரைதான் ஆதாரம். அவை இல்லாவிடில் சங்கத்தமிழ் நூல்களின் அர்த்தம் தெரியாமல் தினறுவோம். நிற்க.
இதோ ஆதிசங்கரர் காட்டும் மேற்கோள்கள் :–
சுலப – நாமத்தின் எண் 817
பச்சிலையோ, பூவோ பழமோ பக்தியுடன் கொடுத்தால் எளிதில் அடையக்கூடியவர். இதற்கு சங்கரர் காட்டும் மேற்கோள் ,
பத்ரேஷு புஷ்பேஷு பலேஷு தோயே
ஷ்வக்ரீட லப்யேஷு சதைவசத்ஷு
பக்த்யேக லப்யே புருஷே புராணே
முக்த்யை கதம் ந க்ரியதே பிரயத்னாஹா — மஹாபாரதம்.
இதன் பொருள் :
கடவுளை அடைய எளிதில் கிடைக்கும் இலைகளும் பூக்களும் பழங்களும் தண்ணீரும் உள்ளன. இவைகளைக் கொண்டு பக்தி செய்வதன் மூலமே அவனை அடை யலாம் ; அப்படியிருந்தும் மனிதர்கள் முக்தியை நாடாமல் இருப்பது ஏனோ !
அதே மஹாபாரதத்திலுள்ள பகவத் கீதையும் இதைச் சொல்கிறது,
पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति |
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मन: || BG 9-26||
பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் யோ மே ப⁴க்த்யா ப்ரயச்ச²தி |
தத³ஹம் ப⁴க்த்யுபஹ்ருதமஸ்²நாமி ப்ரயதாத்மந: || 9- 26||
ய: ப⁴க்த்யா = எவர் அன்புடனே
பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் = இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும்
மே ப்ரயச்ச²தி = எனக்கு அளிப்பவன் ஆயின்
ப்ரயதாத்மந: = முயற்சியுடைய அவர்
ப⁴க்த்யுபஹ்ருதம் = அன்புடன் அளித்த
தத் அஹம் அஸ்²நாமி = அவற்றை நான் உண்கிறேன்
இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.
FROM — https://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-9
இதை சங்க இலக்கியத்தில் அதிகம் பாடல்களை இயற்றிய பார்ப்பனப் புலவன் , புலன் அழுக்கற்ற அந்தணாளன் கபிலன் மொழிபெயர்த்துப் புற நானூற்றில் கொடுத்துவிட்டார்
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும்,உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு,
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கை வண்மையே– கபிலர் (புறம் 106)
பொருள்
“குவிந்த பூங்கொத்து உடைய எருக்கம் பூவையும் அருகம் புல்லையும் பூஜையில் போட்டு வணங்கிகினாலும் கடவுள் எனக்கு இது வேண்டாம் / பிடிக்காது என்று சொல்லமாட்டார்”
XXXX
பகவான் – நாமத்தின் எண் 558
இந்த நாமத்தின் பொருளை விளக்க சங்கரர் இரண்டு பொன்மொழிகளைத் தருகிறார்.
ஐஸ்வர்யஸ்ய சமக்ரஸ்ய தர்மஸ்ய யஸஹ ச்ரியஹ
வைராக்யஸ்ய ச மோக்ஷஸ்ய ஷண்ணாம் பக இதீரினா
ऐश्वर्यस्य समग्रस्य धर्मस्य (वीर्यस्य)यशसः श्रियः
ज्ञान-वैराग्ययोश् चापि षण्णां भग इतीङ्गना
விஷ்ணு புராணத்தில் 6-5-47 வரும் ஸ்லோகம் இது.
பொருள்
ஐஸ்வர்யம், தர்மம், கீர்த்தி/புகழ் , செல்வம், வைராக்கியம் , மோக்ஷம் ஆகிய ஆறு குணங்கள் பக எனப்படும். அவற்றை உடையவரை பகவான் என்போம்.
இன்னும் ஒரு விளக்கம்
உத்பத்திம் பிரளயம் சைவ பூதானாமாகதிம் கதிம்
வேத்தி – வித்யாமவித்யாஞ் ச வபுச்யோ பகவான் இதி
இதுவும் விஷ்ணு புராணத்தில் 6-5-78 வரும் ஸ்லோகம்.
பொருள்
உலகின் தோற்றம், மறைவு, பந்தபாசம், முக்தி, அறிவு, அறியாமை ஆகிய ஆறு குணங்களுக்கும் அதிபதி என்பதால் அவனை பகவான் என்கிறோம்.
to be Continued…………………..
tags- விஷ்ணு சஹஸ்ரநாமம் , அதிசயங்கள் , ரகசியங்கள் , மேற்கோள்கள்-, ஆதி சங்கரர் , Part 1