ராமாயணத்தில் வரங்கள் (27) சூர்ய பகவான் மேரு மலைக்குத் தந்த வரம்! (Post No.14,030)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,030

Date uploaded in Sydney, Australia – 30 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (27)

ராமாயணத்தில் வரங்கள் (27) சூர்ய பகவான் மேரு மலைக்குத் தந்த வரம்!

ச. நாகராஜன்

.

கிஷ்கிந்தா காண்டத்தில் நாற்பத்திரண்டாவது ஸர்க்கமாக அமைவது ‘மேற்குத் திக்கில் ஸுஷேஸணனை அனுப்புதல்’ என்ற ஸர்க்கமாகும்.

சுக்ரீவன் சீதா தேவியைத் தேட தன் வீரர்கள் அனைவரையும் எல்லா திசைகளிலும் அனுப்புகிறான்.

மரீசியின் புத்திரனான மாரீசனையும் பெயர் பெற்ற வானரனான அர்ச்சிஷ்மானையும் மேற்குத் திக்கில் சீதையைத் தேட அனுப்புகிறான்.

அவர்களுக்கு மேற்குத் திசையில் உள்ள அனைத்து இடங்களையும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறான்.

ஸுராஷ்ட்ரம், பாஹ்லீகம், சூர தேசம் பீம தேசம் உள்ளிட்ட பல தேசங்களைச் சொல்லி விட்டு மேரு பர்வதத்தைப் பற்றி வர்ணித்து விளக்குகிறான் சுக்ரீவன்.

தேஷாம் மத்யே ஸ்திதோ ராஜா மேருருத்தரப்ர்வத: |

ஆதித்யேன ப்ரஸன்னேன ஷைலோ தத்தவர: புரா ||

தேஷாம் – அவைகளின்

மத்யே – நடுவில்

உத்தரபர்வத: – மிகச் சிறந்த பர்வதமும்

ராஜா – எல்லாவற்றிலும் பெரிதுமாகிய

மேரு: – மேரு என்னும் பர்வதம் (இது மகா மேரு பர்வதம் அல்ல; வேறொரு மேரு பர்வதம்)

ஸ்தித: – இருக்கிறது

புரா – முன்னொரு காலத்தில்

ஷைல: – அந்தப் பர்வதமானது

ப்ரஸன்னேன – உள்ளங்குளிர்ந்த

ஆதித்யேன – சூரிய பகவானால்

தத்தவர: – பின் கண்ட வரத்தைப் பெற்றது

தேனைவமுக்த: ஷைலேந்த்ர:  ஸர்வ ஏவ த்வதாஸ்ரயா |

மத்ப்ரஸாஜாத்பவிஷ்யந்தி திவா ராத்ரௌ ச காஞ்சனா: ||

ஷைலேந்த்ர: – மலையரசன்

தேன – அவரால்

ஏவம் – பின்கண்டபடி

உக்த: – வரமளிக்கப்பட்டது’

த்வதாஸ்ரயா – உன்னை அடைந்திருக்கும்

ஸர்வ ஏவ – எல்லோருமே

திவா ராத்ரௌ ச – பகலிலும் இரவிலும்

காஞ்சனா: – பொன்னாக

மத்ப்ரஸாஜாத் – என்னுடைய அருளினால்

பவிஷ்யதி – ஆகக் கடவன்

த்வயி யே சாபி வத்ஸ்யந்தி தேவகந்தர்வதானவா: |

தே பவிஷ்யந்தி ரக்தாஸ்ச ப்ரபயா காஞ்சனா இவ ||

யே – எந்த

தேவ கந்தர்வஸ்ச தானவா: ச – தேவர்களும் கந்தர்வர்களும் தானவர்களும்

த்வயி – உன் மீது

வத்ஸ்யந்தி அபி – வசிக்கின்றார்களோ

தே ச – அவர்களும்

ப்ரபயா – ஒளியால்

காஞ்சனா இவ – பொன்னென

ரக்தா: – சிவந்தவர்களாய்

பவிஷ்யந்தி – இருப்பார்கள்

–    42வது ஸர்க்கம், ஸ்லோகங்கள் 38,39,40

இப்படி மேரு மலை பெற்ற வரத்தை சுக்ரீவன் விளக்குகிறான். இந்த வரம் கேட்டுப் பெறப்பட்டதா சூரியபகவானால் அருளித் தரப்பட்டதா என்ற விளக்கம் தரப்படவிலை. என்றாலும் கூட மேரு மலை பெற்ற அற்புதமான வரத்தைப் பற்றி அறிய முடிகிறது.

**

My Visit to Bobin Head Near Sydney (Post No.14,029)

Written by London Swaminathan

Post No. 14,029

Date uploaded in Sydney, Australia – 29 DECEMBER 2024            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Ku-ring-gai Chase National Park

It is 35 kilometres from Sydney; it is a nature reserve, looking like Kodaikanal or Uthakamandalam (ooty) in Tamil Nadu. There is a big water source where tourists enjoy boating, angling , paddling etc. Since we went on a hot day we spent only half a day there.  There is lot of scope for walking and picnicking. Most of the tourists came with pack lunch and enjoyed it under shelters.

There is an entrance fee for the National Park; but you can buy an annual pass for the family which works out cheaper. There is also Car parking fee . if you want to hire a boat , you have to pay separately.

Even young children were practising fishing. In the salty water lake, we saw jelly fish and big fish.

Ku-ring-gai Chase National Park area was the living place of aboriginals 200 years ago. They lived in caves in the area and lived by fishing and hunting. Ku-ring-gai Chase means Smoky fog which can be seen in the morning over the water source. Though the aboriginal names are retained in every town of Australia, now the aboriginals  are rarely seen in these areas. The white migrants, of late Chinese and Indians, took over those places. Everywhere one can see more Chinese than any other community, particularly in Sydney.

****

Here is a description by the tourist authority of the area.

Located in the west of Ku-ring-gai Chase National Park, Bobbin Head is a large area offering lots of attractions and facilities. As well as being a great place to bushwalk, paddle or go fishing, Bobbin Head is the perfect waterfront picnic spot.

The area features barbecues, picnic tables, shelters and plenty of green space for an impromptu frisbee session or a spot of cricket. There’s also a children’s playground that’s sure to be a hit with kids and you can pick up a coffee at the Bobbin Head Inn Café or tuck into some contemporary Australian cuisine at Waterside Bistro.

Visit Empire Marina Bobbin Head to enjoy a coffee or leisurely meal by the water, or follow any of the number of walking tracks and collect maps and brochures from Bobbin Head Visitor Centre. Stroll the mangrove boardwalk behind the picnic area and see if you can spot some of the park’s many birds.

You can also learn more about connecting to Country at Bobbin Head through video stories which share our Aboriginal cultural heritage and the importance of protecting the natural environment in Ku-ring-gai Chase National Park.

****

Yesterday went to Merry lands Central Gardens which has animals, pythons, bandicoots, owls etc in cages. There is plenty of space for children to run around.

The Central Gardens Nature Reserve, also called Central Gardens, is a protected nature reserve and urban park located in the western suburbs of SydneyNew South Wales, Australia. Established in 1976, the 12-hectare (30-acre) reserve, garden and fauna and wildlife park is situated in the suburb of Merrylands and is managed by Cumberland Council. The park is regionally important and it attracts visitors outside the Cumberland local government area. The bushland contains remnants of Cumberland Plain Woodland and is approximately 3.5 hectares (8.6 acres)

Some of the animals in the park include kangaroos and wallabiesAustralian white ibisemuswaterfowlwombats, and native birds, including cockatoos and cockatielsCarps are found in the ponds, and also duck species such as the Pacific black duckblack swanEmden goosedusky moorhen and the Australian wood duck. The main habitat area within the gardens is the tree canopy, which is used by a range of bird specie

Places like Sydney and its suburbs have a park in almost all streets. Parents encourage their children to do outdoor activities. No wonder Australia is in top places in Olympics and Cricket.

—subham—

Tags- Merry lands, Central Gardens, Bobin head, boating

ஆண்டாள் பாடலில் உபநிஷத்தும் சன்யாசிகளும்! திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் -8 (Post.14,028)

Written by London Swaminathan

Post No. 14,028

Date uploaded in Sydney, Australia – 29 DECEMBER 2024            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கானகம் சென்ற சீதையும், கணவனை இழந்த கண்ணகியும் சன்யாசிகளுக்கு அன்னமிடும் அறிய வாய்ப்பினை இழந்து விட்டோமே என்று வருத்தப்படுவதை கம்பனும் இளங்கோவும் பாடிச் சென்றனர்

அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்

துறவோர்க்கு எதிர்தலும்,

தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”

(கொலைக்களக் காதை, சிலப்பதிகாரம், இளங்கோ)

ஆண்டாளும் இதே தொனியில் திருப்பாவையில் சந்யாசிகள் வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுகிறார் :

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத்துயின்ற பரமன் அடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக்கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது தீய செயல்களை மனதாலும் நினைக்கக்கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும்துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.

ஐயம் பிச்சை வேறுபாடு

ஐயம் என்பது தமிழ்ச் சொல்

பிச்சை என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்.

ஐயம் என்பது நாமாக விருந்தினர்கள் மற்றும் சன்யாசிகளுக்குப் படைக்கும் உணவு ; அதாவது அவர்களை அழைத்து உணவிடுதல்.

பிக்ஷை என்பது வீட்டு வாசலில் வந்து பவதி பிக்ஷாம் தேஹி என்று கேட்போருக்கு இடும் உணவாகும் இதிலிருந்தது வந்த சொல்லே பிக்ஷு,  பிக்ஷாவந்தனம்

மனு ஸ்ம்ருதியில் மூன்று ஜாதியினரும் பூணூல் போட்டுக்கொண்டவுடன் எப்படி வீட்டு வாசலில் நின்று பிக்ஷை கேட்கவேண்டும் என்று எழுதியிருக்கிறார் . பிராமணர்கள் , க்ஷத்ரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று ஜாதியினரும் பெர்முடேஷன் காம்பினேஷனில் permutation combination சொல்லவேண்டும் என்று விதித்திருக்கிறார் பவதி , பிக்ஷாம் தேஹி என்ற மூன்று சொற்களையும் வெவ்வேறு ஆர்டரில் சொல்லவேண்டும்

பவதி பிக்ஷாம் தேஹி

பிக்ஷாம் தேஹி பவதி

தேஹி பிக்ஷாம் பவதி

ஆக வீட்டு வாசலில் வந்து அம்மா தாயே பிச்சை போடுங்கள் என்று தற்காலத்தில் கேட்போரும் இந்த வகையினர்தான் .

நான் சிறுபயனாக இருந்தபோது மதுரையில் வேத பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் இப்படி எங்கள் வீட்டுக்கு வந்து குரல் எழுப்பியதை நானே பார்த்து இருக்கிறேன்; ராமேஸ்வரம் வேத பாடசாலையிலும் சேதுபதி உயர்நிலைப்பள்ளி அருகில் இருந்த வேத பாடசாலையிலும் தானப்ப முதலீத் தெரு வேத பாடசாலையிலும் மாணவர்கள் வேதம் படித்தார்கள்; இவை தவிர மதுரை பெருமாள் கோவில் அருகிலும் வேத பாடசாலை இருந்தது  திராவிட ஆட்சி வந்த பின்னர் இந்த வேத பாடசாலைகள் மூடப்பட்டன. திராவிட ஆட்சி மட்டும் காரணமல்ல; பிராமணர்களின் உதாசீனமும் மனப் போக்கு இதற்கு காரணங்கள் ஆகும் .

****

திருப்பாவையில் சந்யாசிகள் வருணனை

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.-14

பொருள்: எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கிதிருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!

காஷாய வஸ்திரத்தை — காவி உடையை — சந்யாசிகள் அணிவார்கள்; செங்கல்லைப்பொடி செய்து வெள்ளை வேட்டியை அதில் நனைத்து  காவி உடையைத் தயாரித்ததை ஆண்டாள் பாடுகிறாள். அது மட்டுமல்லாமல் வெண் பல் என்ற சொல்லையும் சேர்க்கிறான் ; ஏனெனில் சந்யாசிகள் வெற்றிலை பாக்கு போடமாட்டார்கள்; தூய சாத்வீக உணவையே உட்கொள்வார்கள் இதனால் அவர்களுக்கு வெள்ளை பற்கள் ; சமண சந்யாசிகள் பல் தேய்க்க மாட்டார்கள் இதனால் அவர்களை ஊத்தை வாய் சமணர்கள் என்னு சம்பந்தர் திட்டுவதைக் காண்கிறோம். புத்த சந்யாசிகள் மற்றவர்கள் கொன்ற மிருகங்களை சாப்பிடுவார்கள் ; அவர்களும், நாற்ற வாயர்களே ; இந்து சந்யாசிகள் வெள்ளைப் பற்களை உடையவர்கள் என்பதை ஆண்டாள் வேறுபடுத்திக் காட்டுகிறாள்.

அந்தக் காலத்தில் கோயில்கள் இருந்ததையும் அங்கு அதிகாலையில் சங்கு முழக்கம் எழுந்ததையும் ஆண்டாள் குறிப்பிடுகிறார் அவருக்கு முன்னர் வாழந்த அப்பர் பெருமான் எத்தனை வகைக் கோவில்கள் இருந்தன என்பதையும் பாடலில் பாடியிருக்கிறார்.

தவத்தவர் என்ற ஆண்டாள் சொல்லையும் கவனிக்க வேண்டும் அவர்களுடைய  ஒரே நிதி – செல்வம் – தபோ நிதி ஆகும்

தபஸ் = தவம்

ப = வ மொழியியல் குறிப்பையும் கவனிக்கவும்.

முல்லைப்பாட்டு என்னும் சங்க நூலிலும் கல் தோய்ந்து உடுத்த படிவ பார்ப்பான் என்ற வரி உண்டு .

*****

உபநிஷத் வரிகள்

ஆண்டாளுக்கு உபநிஷத்தும் அத்துப்படி .

ஆண்டாளும் திருவள்ளுவரும் உபநிஷத்துக்களைப் படித்து அதில் கரை கண்டவர்கள் .

காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்—.குறள் 360:

இதற்கு உரை எழுதிய பரிமேல் அழகர், ஞான யோகங்கள் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத் தீ முன்னர்ப் பஞ்சுத் தூசு போலுமாகலின் அம்மிகுதி தோன்ற இவை மூன்று நாமம் கெட என்கிறார் .

இதை ஆண்டாளும்

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5

பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

நெருப்பிலிட்ட பஞ்சு போல என்ற சொற்றோடர் உபநிஷத்தில் வருகிறது

ஆகையால் நெருப்பிலிடப்பட்ட த்ருண/ புல் விசேஷத்தின் பஞ்சானது எப்படி கொளுத்தப்படுகிறதோ அப்படியே இந்த உபாசகனுடைய சமஸ்தமான புண்ய பாபங்களும் கொளுத்தப்படுகின்றன என்பது சாந்தோக்ய உபநிடதம் 5-24-3 என்று ஒரு திருப்பாவை உரை கூறும்.  

तद्यथेषीकातूलमग्नौ प्रोतं प्रदूयेतैवंहास्य सर्वे पाप्मानः प्रदूयन्ते य एतदेवं विद्वानग्निहोत्रं जुहोति ॥ ५.२४.३ ॥

tadyatheṣīkātūlamagnau protaṃ pradūyetaivaṃhāsya sarve pāpmānaḥ pradūyante ya etadevaṃ vidvānagnihotraṃ juhoti || 5.24.3 ||

3. Just as the cotton fibres of the iṣīkā grass are totally consumed when thrown into the fire, similarly all sins are consumed of one who performs the Agnihotra sacrifice with the knowledge of the Vaiśvānara Self.

*****

திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல்

சந்திரனும் சூரியனும் உதித்தாற்போல அழகிய திருக்கண்கள் இரண்டினால் எங்களை ஆசீர்வதிப்பாயாக என்று ஆண்டாள் வேண்டுகிறாள்; இது பாவங்கள் அனைத்தையும் பொசுக்கிவிடும்.

இப்படி சந்திர சூரியர்களை இறைவனின் கண்களாக வருணிப்பதை ரிக் வேதம் முதல, விஷ்ணு சஹஸ்ரநாமம் வரை ரிஷி முனிவர்கள் பாடுகிறார்கள்

चन्द्रमा मनसो जातश्चक्षोः सूर्यो अजायत ।

मुखादिन्द्रश्चाग्निश्च प्राणाद्वायुरजायत ॥१३॥

Candramā ṃanaso Jātaś-Cakssoh Sūryo ājāyata |

ṃukhād-īndraś-Ca-āgniś-Ca Prānnād-Vāyur-ājāyata

||13||

The moon was born from his mind and the sun was born from his eyes, Indra and

agni (fire) were born from his mouth, and vayu (wind) was born from his breath.

சந்த்ரமா மன॑ஸோ ஜா॒த: । சக்ஷோர் ஸூர்யோ॑ அஜாயத ।

முகா॒²தி³ன்த்³ர॑ஶ்சா॒க்³னிஶ்ச॑ । ப்ரா॒ணாத்³வா॒யுர॑ஜாயத ॥ என்பது ரிக்வேத புருஷ சூக்த வரிகள்

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான

பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே

சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய் செய்த தாமரைப்பூப் போலே

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ!

திங்களும் ஆதித்யனும் எழுந்தார்ப்போல்

அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்

எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோரெம்பாவாய்.

*****

இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக் கிரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!

இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?

அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். (12)

இதற்கு முந்தைய பாசுரங்களில் பெண்ணின் தூக்கத்தினைப் பலவகையாக  வருணித்த ஆண்டாள் இறுதியில் இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்? என்று வினவி, தட்டி எழுப்புகிறாள்; இதற்கு உரை எழுதிய பெரியோர்கள் இது தினசரி உறக்கம் பற்றியதல்ல; அறியாமை என்னும் இருளில்  உறங்கும் ஆத்மாவைத் தட்டி எழுப்பும் வாசகம் இது என்பதை சுட்டிக்காட்டுகின்றனர்

Uthishtata, Jagrata, Prapya Varanibodhata” is a sloka from the Katha Upanishad that translates to “Arise, awake, and stop not till the goal is reached”. Swami Vivekananda popularized the slogan in the late 19th century as a message to people to break free from their hypnotized state of mind

சுவாமி விவேகானந்தருக்குப் பிடித்த உத்திஷ்ட ஜாக்கிரத ப்ராப்யவரான் நிபோதாத என்ற கடோபநிஷத்தின் எதிரொலி இது

எழுந்திரு விழித்திரு  (எழுமின் விழிமின் ) குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின்

उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत ।

क्शुरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तत्कवयो वदन्ति ॥ 1-3-14 ॥

uttiṣṭhata jāgrata prāpya varānnibodhata |

kśurasya dhārā niśitā duratyayā durgaṃ pathastatkavayo vadanti ||1-3- 14 ||

1-3-14. Arise, awake; having reached the great, learn; the edge of a razor is sharp and impassable; that path, the intelligent say, is hard to go by.

ஆண்டாள் திருப்பாவை இடைச்சியருக்குப் பாடிய சாதாரணப் பாடல்கள் அல்ல. அவர் பிறவி ஞானி என்பதால் தத்துவ முத்துக்களை உதிர்த்து இருக்கிறார்; அவரவர் அறிவின் நிலைக்கேற்ப அதன் பொருளை உய்த்துணரலாம்.

–subham—

TAGS- ஆண்டாள் ,உபநிஷத், சன்யாசி, திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் 8, காஷாய வஸ்திரம், காவி உடை, வெண் பற்கள்

மங்கையரே, உங்கள் அழகுக்கு மெருகூட்டிக் கொள்ளுங்கள்! (Post No.14,027)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,027

Date uploaded in Sydney, Australia – 29 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

kalkionline-ல் 23-12-24 அன்று பிரசுரமாகியுள்ள கட்டுரை

மஹாபாரத மர்மம்

மங்கையரே, உங்கள் அழகுக்கு மெருகூட்டிக் கொள்ளுங்கள்!

ச.நாகராஜன்

16 வித அலங்காரங்கள்

புராதனமான ஹிந்து சாஸ்திரங்கள் ஒவ்வொரு மங்கையும் பேரழகியாகத் திகழ வேண்டும் என்றும் அதற்கு அவர்கள் தங்கள் இயல்பான அழகுக்கு மெருகூட்டிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றன.

இது அவர்களின் ஆடம்பரத்திற்காக அல்ல என்றும் கணவர், தந்தை தாய், சுற்றத்தார், உறவினர் ஆகியோருக்காக மட்டுமல்ல என்றும் இது ஒரு சமுதாயக் கடமை என்றும் கூறுகின்றன.

அழகிய தேவதைகள் போல ஒவ்வொரு நாரீமணியும் உலகில் வலம் வந்தால் தேசம் செழிக்கும்.

ஆக இதற்காக 16 விதமான அலங்காரங்கள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு யுவதியும் இவற்றை அறிந்து தனது அழகை மெருகூட்டிக் கொள்ள வேண்டும்.

16 வித அலங்காரங்களைப் பற்றி வல்லப தேவர் தனது சுபாஷிதாவளி என்ற நூலில் விவரமாகக் குறிப்பிடுகிறார்.

அவையாவன:

1) ஸ்நானம்

2) அழகிய ஆடை

3) திலகம்

4) கண்ணுக்கு மை

5) காதணி

6) மூக்குத்தி

7) கூந்தல் அலங்காரம்

8) ரவிக்கை (மார்க்கச்சு)

9) சிலம்பணி (நூபுரம்)

10) நறுமணம் (உடல் முழுவதும் வீசும் சுகந்த மணம்)

11) வளையல்

12) பாத அழகு (கொலுசு உள்ளிட்டவை)

13) மேகலை

14) தாம்பூலம்

15) மோதிரம்

16) அலங்காரம் செய்யும் திறமை

இதே போல இந்த 16 வகைகளை ரஸ கௌமுதி என்ற நூலும் மிக விவரமாகக் குறிப்பிடுகிறது.

இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படும் (கதா) நாயகிகளின் அழகை இந்தப் பதினாறையும் சொல்லி விவரிப்பது இலக்கிய மரபாக இருந்தது.

எது அழகு?

எது க்ஷணத்திற்கு க்ஷணம் நூதனமான புதியதைக் காட்டி சோபிக்கிறதோ அதுவே அழகு. அந்த உருவமே அழகிய உருவமாகும். ரமணீயம் என்பதை இப்படி விவரிக்கிறது சிசுபாலவதம்.

க்ஷணே க்ஷணே யத் நவதாம் உபைதி தத் ஏவ ரூபம் ரமணீயம்

–    சிசுபாலவதம் 4-17

புதுப் புது விதமாக அழகுற

ஜொலிக்கும் ஒரு மங்கைக்கு எத்தனை உருவம் இருக்கும்? சொல்ல முடியாத அளவு எல்லையற்றதாக இருக்கும்.

அழகுற கிளியோபாட்ராவை தன் கதாபாத்திரமான எனோபார்பஸ் மூலம் வர்ணிக்கும் ஷேக்ஸ்பியர் கூறியதை இங்கு நினைவு கூறலாம்.

Age cannot wither her, nor custom stale
Her infinite variety:

    (Antony and Cleopatra)

அற்புதமான சொற்றொடர் இன்ஃபைனட் வெரைடி!

காலம் ஒருநாளும் அவள் அழகை அழிக்க முடியாது; அவளது அழகு முடிவற்ற வடிவங்களை எடுக்கக் கூடியது என்பதே இதன் திரண்ட பொருள்..

திரௌபதியின் பேரழகு

பாரதத்தில் கவிஞர்களால் இயற்றப்பட்ட காவியங்களில் வரும் கதாநாயகிகளை வர்ணிக்கும் கவிஞர்கள் நிச்சயமாக 16 வித அலங்காரங்களையும் மனதில் கொண்டே அவர்களை வர்ணிப்பர்.

எடுத்துக்காட்டாக திரௌபதி பற்றிய மஹாபாரத வர்ணனையையும் காலவரிடம் தரப்பட்ட யயாதியின் கன்னிப் பெண் மாதவியைப் பற்றிய வர்ணனையையும் இங்கு காணலாம். அழகிய உத்தமமான ஒரு மங்கை எப்படி இருப்பாள் என்பதற்கான இலக்கணமாக இதைக் கொண்டு ஒவ்வொரு மங்கையும் தன்னை செம்மையுற அழகு படுத்திக் கொள்ளலாம் இல்லையா?

 விராட தேசத்தில் மாறு வேடத்தில் ஸைரந்தரியாக மாறி அங்கு விராடனுடைய மனைவியான ராணி ஸுதேக்ஷ்ணைக்கு முன் வந்த திரௌபதியைப் பார்த்த அவள் அசந்து போகிறாள்.

அவள் அழகை வர்ணிக்கிறாள்:

“நீ யார்? நீண்டும் குறுகியும் இல்லாத மறைந்திருக்கும் கணுக்கால்களையும், சமமான இரண்டு தொடைகளையும், சப்தம், புத்தி, நாபி ஆகிய மூன்றிலும் ஆழ்ந்தவளும் மூக்கு, இரண்டு கண்கள், காது, நகங்கள், மார்பகங்கள், பிடரி ஆகிய ஆறு அங்கங்களில் உன்னதமாய் இருப்பவளும், சிவந்திருக்கும் உள்ளங்கை, உள்ளங்கால், கடைக்கண், உதடு, நாக்கு, நகம் ஆகிய ஐந்தில் பளபளப்புள்ளவைகளும் ஹம்ஸம் போல சுத்த ஸ்வரத்துடன் பேசுபவளும் அழகிய கூந்தலையும், குரலையும் உடையவளும், இளமைப் பருவத்தின்  மத்தியில் இருப்பவளும், பருத்திருக்கின்ற மார்பகங்களைக் கொண்டவளும், குடிலமான இமை மயிர்களும் கண்களையும் கொண்டவளும் கோவைப்பழம் போன்ற உதட்டை உடையவளும் மெலிந்த இடை, சங்கு போன்ற கழுத்து, மறைந்திருக்கும் நரம்புகள் ஆகியவற்றைக் கொண்டவளுமான நீ யார்?

இப்படி அவள் கேட்கும் போது திரௌபதியின் சௌந்தரியத்தை நம்மால் அறிய  முடிகிறது.

மாதவியின் அழகு

அடுத்து விஸ்வாமித்திரயர் அற்புதமான குதிரைகளைக் காலவரிடம் குரு தக்ஷிணையாக் கேட்க அவர், யயாதி மன்னனிடம் வந்து அவற்றைக் கேட்கிறார். யயாதி தன்னால் அதைக் கொடுக்க முடியாது என்று வருத்தத்துடன் கூறி தனது புதல்வி மாதவியைத் தருகிறான். மாதவியை அழைத்துக் கொண்டு சென்ற காலவர் அயோத்தி அரசனான ஹர்யஸ்வன் என்ற அரசனை அடைந்து குதிரைகளைக் கேட்கிறார்.  மாதவியைப் புத்திர வம்சம் பெற அவனுக்கு மணமுடித்துத் தருவதாகக் கூறுகிறார்.

பேரழகி மாதவியைப் பார்த்த அரசன் பிரமித்துப் போகிறான்.

அவளை வர்ணிக்கிறான்:

“இவள் ஆறு அங்கங்களில் உன்னதமாக இருக்கிறாள். பின் தட்டு, நெற்றி, தொடைகள், மூக்கு ஆகிய ஆறும் உயரமாய் உள்ளன.

சூட்சுமமாக இருக்க வேண்டிய ஐந்து அங்கங்களில் சூட்சுமமாக இருக்கிறாள்.விரல்களுடைய கணுக்கள், கேசம், ரோமம், நகம், தோல் ஆகிய ஐந்தும் சூட்சுமமாய் உள்ளன.

கம்பீரமாக இருக்க வேண்டிய மூன்று அங்கங்களில் கம்பீரமாக இருக்கிறாள்.குரல், மனம், நாபி ஆகிய மூன்றிலும் ஆழ்ந்தவளாய் உள்ளாள்.

சிவந்திருக்க வேண்டிய ஐந்து அங்கங்களில் சிவந்தவளாய் இருக்கிறாள். உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், இரண்டு கடைக்கண்கள் , நகங்கள் ஆகியவற்றில் சிறந்து உள்ளாள்.”

இவளை ஏற்றுக் கொள்ள என்ன தர வேண்டும் என்று கேட்டு அவளைப் பெறுகிறான்.

இப்படி ஒவ்வொரு காவியமும் அழகிய பெண்களின் அங்கங்களை வர்ணிக்கிறது! அவர்களின் குண லட்சணங்களையும் சுட்டிக் காட்டுகிறது.

இந்த அங்க லட்சணங்களை இப்போது அறிவியலும் ஆமோதிக்கிறது.

மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல பயாலஜிஸ்ட் ராபின் பேகர், “உடலின் சரியான அளவு விகிதம் லேசாக ஒதுக்கி விட முடியாதபடி அதிக அர்த்தமுள்ளது” என்கிறார்!

மனித நடத்தைகள் பற்றி சில வருடங்களுக்கு முன்பு வியன்னாவில் நடந்த மாநாட்டில் பேசிய போது அவர் சாமுத்ரிகா லட்சணம் சரியாக அமையப் பெற்றால் ஏற்படும் நலன்களை விவரித்தார்.

அவை நமது இதிஹாஸ அழகிகளின் அங்க வர்ணனையை ஆமோதிக்கின்றன.

ஆக பெண்ணாய் பிறந்த ஒவ்வொரு மங்கையும் சௌந்தர்ய சாஸ்திரத்தை நன்கு கற்று அது கூறும் வழிமுறைகளைக் கையாண்டு பேரழகிகளாகத் திகழ வேண்டும். சிறு சிறு வேறுபாடுகள் அங்கத்தில் இருந்தாலும் அவற்றை மெருகூட்டி அழகாக்கி உன்னத வாழ்க்கையை வாழலாம்!

வாழ்த்துவோம் நம் நாரீமணிகளை!

***

குறிப்பு : திரௌபதி அழகு – விராட பர்வம்  14ம் அத்தியாயம்

         மாதவி அழகு : உத்யாக பர்வம் 116ம் அத்தியாயம்

Hindu Crossword 281224 (Post No.14,026)

Written by London Swaminathan

Post No. 14,026

Date uploaded in Sydney, Australia – 28 DECEMBER 2024            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Across

6.Founder of Dwaita philosophy

8.Water in Rig veda (3 letter)

9.English word name is derived from this. (3 letter)

10.River where Lord Krishna played

Down

1.Founder of Visishtadwaita philosophy

2.Means almonds in Indian languages

3.Common name for God; mostly used with Lord Shiva

4.Life breath

5.Six Faced

7.This word is used for Other, lower rituals; also means West

 1  2  34
    5  
 67    
8     
9     
      
10     
      
R 1 B 2 I 3P 4
A AS 5SR
M 6A 7DHWA
A8PAAAN
N9AMNRA
UR MA 
J10AMUNA
A  K  

 –subham—

tags- Hindu Crossword 281224 (Post No.14,026)

GNANAMAYAM SUNDAY BROADCAST 29-12-2024

GNANAMAYAM SUNDAY BROADCAST 29-12-2024

29-12-2024 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி நிரல்

*****

TIME:  12 noon LONDON TIME; 5-30 PM IST; 11 PM Sydney Time

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London

***

Talk by Bengaluru Nagarajan Great Sanskrit Grammarian Panini

***

Talk by Brahannayaki Sathyanarayan on THIRUVALLIKKENI from Bengaluru

***

INTERVIEW WITH FAMOUS SINGER SRI MANIKKAM YOGESWARAN

COORDINATOR, SOUTH ASIAN MUSIC AT GLOBAL MUSIC ACADEMY, BERLIN

M.Yogeswaran is a classical musician trained in carnatic music which originates from South India. When he performs on the world stage, his ensemble of talented traditional artists and world-renowned orchestras accompany him.

During childhood he was trained in classical music under his teachers “Sangita Bhushanam” Sri P Muthukumarasamy and “Sangita Bhushanam” Sri S Balasingam. His Guru is the world-renowned musician and singer “Padma Bhushan” “Sangita Kalanidhi” Prof Sri T V Gopalkrishnan. Since then, his work as a live performer extends into different branches of music, film and contemporary music.

His popular accomplishments include; the movie soundtracks Migration for Eyes Wide Shut in 1999 directed by Stanley Kubrick this was achieved together with Jocelyn Pook, Spike Lee’s 25th Hour in 2002 for the song The Fuse and in 2007 again with Jocelyn Pook for the songs Quiet Joy Memories of a Summer and Love Blossoms in Sarah Gavron’s film Brick Lane and his song tribute The Bells for Queen Elizabeth II for her Diamond Jubilee celebrations in June 2012.

As a soloist he has played a role as Mahatma Gandhi in a musical celebrating the Bi centenary of the Norwegian constitution. The musical titled Stemmer  composed by the British composer  Orlando Gough and performed with the Bergen Philharmonic Orchestra in May 2014. The event was presided by His Highness The Crown Prince of Norway.

***

Tiruppugaz songs recorded by Kalyanji

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

JOIN US ON SUNDAYS.

—subham—

TAGS- SUNDAY 29- 12 2024 PROGRAMME, GNANAMAYAM BROADCAST

ஆண்டாள் பாடல்களில் இயற்கைக் காட்சிகள்!  திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்- 7 (14,025)

Written by London Swaminathan

Post No. 14,025

Date uploaded in Sydney, Australia – 28 DECEMBER 2024            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்பாவையிலுள்ள ஆன்மீக விஷயங்களையே நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால் ஆண்டாள் இயற்கைக் காட்சிகளையும் நேரில் காண்பது போல வருணிப்பதை பலரும் கவனத்தில் கொள்வதில்லை. இங்கே சில காட்சிகளைக் காண்போம் .

அவர் சிங்கத்தை வருணிக்கிறார். வங்காள விரிகுடாவில் கப்பல்கள்  சென்றதை வருணிக்கிறார். ஆனைச்சாத்தன் என்ற பறவையை வருணிக்கிறார். பறவைகளின் ஒலிகளைப் பாடுகிறார். வானத்தில் உதித்த மார்கழி பெளர்ணமி சந்திரனைப் பாடுகிறார். விடி வெள்ளி எழுந்து வியாழன் கிரகம் அஸ்தமித்தத்தைச் சொல்கிறார். காரிருள் மேகங்கள் சூழ மழை கொட்டுவதைப் பாடுகிறார். இவ்வாறு எல்லா பாடல்களிலும் ஏதோ ஒரு இயற்கை நிகழ்வினை வருணிக்கிறார். நவரத்தின மணிகள் பற்றியும் திருப்பாவையில் காண்கிறோம். முத்தும் பவளமும் அடங்கிய நவரத்தினங்களும் இயற்கையில் கிடைப்பதை இக்கால மக்கள் உணர்வதில்லை

புள்ளும் சிலம்பின் காண்- பாடல் 6

கீசு கீச்சென்று எங்கும் ஆனைச்சாத்தன்

கலந்து பேசின – பாடல் 7

வந்து எங்கும் கோழி அழைத்தன காண் பாடல் 18

இவ்வாறு அதிகாலைப் பொழுதின் அழகினை வருணிக்கிறார்.  முதலில் ஆனைச்சாத்தன் பறவை பற்றிக் காண்போம்.

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ?  பேய்ப்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

—-திருப்பாவை 7

மதுரைக் காஞ்சி என்னும் சங்க நூல் யானையங் குருகு என்று குறிப்பிடுகிறது –வரி 674

குறுந்தொகைப் பாடலிலும் ( 34 )இந்தச் சொல்லைக் காணலாம்.

ஆனைச்சாத்தன் பறவைக்கு வண்டாழ்ங்குருகு,  வலியன், பரத்வாஜ பக்ஷி என்ற பெயர்களும் உண்டு

அகநானூற்றில் குஞ்சரக் குரல குருகு என்ற சொல்லால் இதை அழைக்கிறார் புலவர் பாடல் 145

இப்பொழுது இந்தப் பறவையின் பெயரைச் சொன்னால் எத்தனை பேருக்குத்  தெரியும் ? அக்காலத்து தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்ததால் அன்றாடப் பேச்சிலும்  பழமொழிகளிலும்  பறவைகளையும் விலங்குகளையும் காண்கிறோம் யானையங்குருகு திருவோண நட்சத்திரத்துக்குரிய பறவை என்று ஜோதிட நூலார் கூறுவார்; யானை போன்ற குரலுடைய பறவை என்பதால் குஞ்சரக் குரல் உடைய பறவை என்று அகநானூற்றுப் புலவர் பாடினார்

குஞ்சரம்= யானை

*****

சிங்கம்

சிங்கம் என்னும் விலங்கு இப்பொழுது குஜராத்தில் கிர் வனக்காடுகளில் மட்டுமே உள்ளது; ஒரு காலத்தில் இது வட இந்தியா முழுதும் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் சிம்மேந்திரன் சிம்மாசனம், ம்ருகேந்திரன் போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இதை உறுதி செய்கின்றன. தமிழ் நாட்டில் புலிகள் மட்டுமே அதிகம். ஆயினும் அக்கால  ராஜாக்களின் தோட்டங்களிலும் மிருகக்காட்சி சாலைகளிலும் இதை மக்கள் பார்த்திருப்பார்கள் . அரி என்ற தமிழ்ச் சொல் இதைக் காட்டும். புலி சிங்கம் ஆகிய விலங்குகள் சோம்பல் முறிப்பதை   மூரி நிமிர்ந்து என்று ஆண்டாளும் பாடுகிறார். மனிதர்களும் தூங்கி எழுந்தவுடன் இரு கைகளையும் உயர்த்தி நிமிர்ந்து சோம்பல் முறிக்கிறோம். விலங்குகளை உற்று நோக்கிய ஆண்டாள் இதை ஒரு பாசுரத்தில் பாடுகிறார் :

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்

கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய

சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

—திருப்பாவை  23

மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, மூரி நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

மூரி நிமிர்ந்து :– இது சங்க காலச் சொல்வழக்கு; இதை புறநானூறு -52, பரிபாடல்-20 கம்பராமாயணம் பாலகாண்டம் உண்டாட்டுப்படலம் ஆகிய நூல்களிலும் காணலாம்

இது குகையிலிருந்து சிங்கம் புறப்படும் தத்ரூபக் காட்சி. விலங்குக் கூட காட்சி அல்ல. இதை எப்படி  ஆண்டாள் அறிந்தாள்? அந்தக் காலத்தில் பஞ்ச தந்திரக் கதைகள்  போன்றவை பெரு வழக்கில் இருந்திருக்க கூடும்.

*****

இன்னும் ஒரு இயற்கை வருணனை

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.—திருப்பாவை 14

பொருள்: எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே.

செங்கழு நீர் மலர ஆம்பல்  மலர்கள் தலை கவிழ்ந்தன என்பது ஆண்டாள் காணும் காட்சி

*****

அந்தக் காலத்தில் பெண்கள் சங்கு வளையல்களை அணிவார்கள் இபோது பிளாஸ்டிக், ரப்பர் ஆகியவற் றால் ஆன அல்லது கண்ணடியாலான வளையல்களையே பெரும்பாலும் அணிகின்றனர்

ஆண்டாளோ சங்கு முழக்கம் பற்றிக்  குறிப்பிடுகிறார்; இன்றும் வங்காளிப் பெண்கள் சங்கு வளையல்களை அணிகின்றனர்; திருமணங்களில் சங்கு ஓலி முழக்கம் செய்கின்றனர்

கம்பராமாயண பாலகாண்ட நாட்டுப்படலத்தில் இடைப்பெண்கள் தயிர் கடையும் காட்சி வருகிறது. அங்கு இடைப்பெண்கள் சங்கு வளையல் அணிந்து தயிர் கடையும் செய்தியை நமக்கு கமபர் அளிக்கிறார். ஆண்டாளும் தயிர் கடையும் காட்சியை ஏழாவது  பாசுரத்தில் பாடுகிறார். சங்கு வளையல் ஒலியை நாம் ஊகிக்கலாம்.

****

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்

ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (4)

கடல் நீரிலிருந்து மழை எப்படி உண்டாகிறது என்பதை இந்தப் பா சுரத்தில் படிக்கிறோம்

*****

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி -30

கடைசி பாசுரத்தில் கப்பல்கள் ஓடும் கடலைக் காட்டுகிறார் ஆண்டாள் .

அந்தக் காலத்தில் தமிழர்கள் தென்கிழக்கு ஆசியா முழுதும் சென்று வணிகம் செய்ததையும் பண்டபாட்டைப் பரப்பியதையும் பறைசாற்றும் கல்வெட்டுகளும் கோவில்களும் இன்று வியட்நாம், லாவோஸ் முதல் இந்தோனேஷியா வரை காண்கிறோம் . அதையும் கூடக் கடைசி பாசுரத்தில் தொட்டுக்காட்டிவிட்டாள் ஆண்டாள்.

காடு முதல் கடல் வரை பாடிய ஆண்டாள் ஒரு பெரும் இயற்கை ரசிகை என்பதில் ஐயமில்லை!!

****

என்னுடைய பழைய கட்டுரைகள்:-

திருப்பாவை அதிசயம் – விஷ்ணுவுக்கு 56 …

Tamil and Vedas

https://tamilandvedas.com › திர…

18 Jan 2021 — Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. திரு ப்பாவையில் உள்ள 30 …

திருப்பாவை அதிசயம் 2- ‘அல்குல்’ பற்றி ஆண்டாள் பேசலாமா? (Post.9175) January 222021

திருப்பாவை அதிசயம் 3- கம்பனுக்கும் ஆண்டாளுக்கும் பிளாக் ஹோல் எப்படித் தெரியும் ? (Post No.9186) January 252021

மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல் ! (Post No.10,486) December 25,2021

ஆண்டாளுடன் 60 வினாடி பேட்டி

Tamil and Vedas

https://tamilandvedas.com › ஆ…

20 Jan 2012 — ஆண்டாள் அம்மாள், அனந்த கோடி வணக்கங்கள். திருமாலையே கணவனாக வரித்த தாயே, …

சிலப்பதிகாரத்தில், ஆண்டாள் பாடலில் கனவுகள் …

Tamil and Vedas

https://tamilandvedas.com › சி…

·

15 Nov 2024 — Pictures are taken from various sources for spreading knowledge. this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.

–subham—

Tags- ஆண்டாள் பாடல், இயற்கைக் காட்சிகள்,  திருப்பாவை , ஆராய்ச்சிக் கட்டுரைகள்- 7 ஆனைச்சாத்தன், மூரி நிமிர்ந்து, சிங்கம், வங்கக் கடல்,  மழை

ராமாயணத்தில் வரங்கள் (24) இந்திரன் சீதைக்கு ஹவிஷ்யான்னம் கொடுத்தது! (Post No.14,024)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,024

Date uploaded in Sydney, Australia – 28 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (24)

ராமாயணத்தில் வரங்கள் (24) இந்திரன் சீதைக்கு ஹவிஷ்யான்னம் கொடுத்தது!

ச. நாகராஜன்

.

ஆரண்ய காண்டத்தில் சில பிரதிகளில் ஐம்பத்தி ஆறாவது ஸர்க்கத்தில் காணப்படும் ஒரு சம்பவம் இது.

பலாத்காரமாக சீதையைக் கொண்டு சென்ற ராவணன் சீதையை அசோக வனத்தில் கோரமான ராக்ஷஸிகளின் பாதுகாவலில் சிறை வைத்தான்.

அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதா தேவியார் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாததான அன்னத்தை உட்கொள்வதை விட்டு விட்டு அதை தியாகம் செய்தார்.

இதைக் கண்ட பிரம்மாவுக்குப் பெரும் கவலை உண்டாயிற்று. அவர் உடனே தேவேந்திரனை அழைத்து அவரை இலங்கைக்குச் சென்று சீதா தேவியாரை சமாதானப்படுத்தி உணவு உண்ணச் செய்யுமாறு கூறினார்..

தேவேந்திரன் உடனே தன்னுடன் நித்ரா தேவியை உடன் அழைத்துக் கொண்டு இலங்கைக்கு வந்தான். அங்கே நித்ரா தேவி அங்குள்ள அனைத்து ராக்ஷஸிகளையும் தன் வசப்படுத்தவே அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

உடனே தேவேந்திரன் சீதை அருகே சென்று தான் வந்த காரியத்தைத் தெரிவித்தான்.

சீதையிடம் சென்ற இந்திரன், “நான் தேவராஜன் இந்திரன். உங்களுடைய உத்தமமான காரியம் சித்தி அடைவதற்காக உதவி புரிய வந்துள்ளேன்.” என்கிறான்.

மத்ப்ரஸாத் சமுத்ர ஸ தரிஷ்யாதி பலை: சஹ |

–    ஸ்லோகம் 13

“எனது ப்ரஸாதத்தினால் அவர் (ராமர்) சமுத்திரத்தைக் கடந்து வருவார்.”

“நான் தான் இந்த ராக்ஷஸிகளை எனது மாயையால் நித்திரை வசப்படுத்தி இருக்கிறேன். நானே இந்த ஹவிஷ்யான்னம் எடுத்துக் கொண்டு நித்ரா தேவியுடன் உங்களிடம் வந்துள்ளேன்.”

ஏதத்த்ஸ்யஸி மத்தஸ்தாத்ர த்வாம் பாதிஷ்யதே சுபே |

ஸ்ருதா த் ருஷா வ ரம்போரு வர்ஷாணாமயுதைரபி ||

சுபமானவளே! என்னுடைய கையில் உள்ள இந்த ஹவிஷ்யான்னத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால் ஆயிரக்கணக்கான வருஷங்கள் வரை உங்களுக்கு பசி எடுக்காது; தாகமும் எடுக்காது!”  என்று இப்படி இந்திரன் கூற சீதா தேவி இவர் இந்திரன் தானா என்று நினைத்தாள்.

உடனே இந்திரன் தேவதைகள் எந்த லக்ஷணங்களை ராமர் மற்றும் லக்ஷ்மணரிடம் பார்க்கிறார்களோ அதை அப்படியே தத்ரூபமாகக் காட்டவே சீதை இந்திரன் கையிலிருந்த ஹவிஷ்யான்னத்தை எடுத்து உண்டாள்.

இது வர தானமா அல்லது இந்திரனுடைய பலத்தின் பிரபாவமா?

எது எப்படி இருந்தாலும் ஹவிஷ்யான்னம் சீதைக்கு வந்த அனுக்ரஹம் என்று எடுத்துக் கொள்ளலாம்!

**

My Visit to Wollongong Botanic Garden, Australia (Post No.14,023)

Written by London Swaminathan

Post No. 14,023

Date uploaded in Sydney, Australia – 27 DECEMBER 2024            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

As a botany student, I love plants. As soon as I see them , I try to identify them with the plants I already know. The plant varieties are immense and so it is not easy to identify them.I noticed White Shoe flower (semparuththi in Tamil; hibiscus rosasinensis).

On our way to Shell Harbour from Sydney, we visited the botanic garden for two hours. It is spread over 27 acres and we covered a small part of it. One good thing about it is, there is no entrance fee or car parking fee.  London Kew Gardens has an entrance fee. In London everything is ticketed except British Museum and V & A Museum.

“The Garden is also home to a range of native wildlife including Bower Birds, Ring Tail Possums, Kookaburras, native bees, and more. Escape with a walk through one of the largest rainforest collections in Australia, featuring a range of Illawarra rainforest species.

Open daily, this spectacular 27-hectare space is a serene and beautiful place to relax, celebrate, and learn more about plants and horticulture. Overlooking the city of Wollongong from its highest point at the Gleniffer Brae Manor House it features an impressive collection of native and exotic plants from around the world. The Garden has an exciting array of activities and experiences on offer for visitors of all ages. Regular activities include guided tours, garden workshops, nocturnal walks as well as the popular Sunset Cinema”.

I saw lot of workers watering the plants, clearing the rubbish. The garden is well maintained. Though there were boards indicating the types of gardens, I don’t find the names of individual plants. Perhaps the students are taught at schools.

SOLAR CLOCK IN THE GARDEN

–subham—

Tags-wollonggong, botanic garden, my visit, solar clock, white shoe flower

பாவை என்பது என்ன?  திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்-6 (Post.14,022)

Written by London Swaminathan

Post No. 14,022

Date uploaded in Sydney, Australia – 27 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மார்கழி மதம் வந்துவிட்டால் திருப்பாவை முப்பது பாடல்களும் திருவெம்பாவை இருபது பாடல்களும் எங்கும் ஒலிப்பதைக் கேட்கிறோம் . இந்த ஐம்பது பாடல்களிலும் பாவை என்ற சொல் வருவதை எல்லோரும் அறிவார்கள். ஆனால் பலருக்கும் ஏன் இப்படிப்    பாடல்கள் பாவை என்று முடிகின்றன என்று தெரியாது

பாவை என்பது மண்ணினால் செய்த தேவியின் உருவம் ஆகும்காத்தியாயனி தேவியின் உருவத்தை மணலில் செய்து வழிபடுவதே மார்கழி மாத நோன்பு ஆகும். இப்போது இந்த   வழக்கம் பின்பறற்றப்படாததால் பலருக்கும் பாவை பற்றித் தெரியாது.

திரு + பாவை = திருப்பாவை

இதில் திரு என்னும் அடை மொழி செல்வம், இலக்குமி, அழகு, மேன்மை, சிறப்பு என்னும் பொருள் உடைத்து.

பாவை என்பது பெண்கள் அல்லது பெண்கள் நோற்கும் பாவை நோன்பினைக் குறிக்கும்.

பாகவத புராணம் கிருஷ்ணின் சரிதத்தைக் கூறுகிறது. அதில் தசம ஸ்கந்தம் 22- ஆவது அத்தியாயம் கண்ணன், கோபியரின் துகில்க ளைக் (ஆடைகளைக்) கவர்ந்து மரத்தில் ஓளித்து வைத்த நிகழ்ச்சி வருகிறது . இது சங்க இலக்கிய நூலான அகநானூற்றில் வருவதால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ணன் பெருமை கன்னியாகுமரி வரை பரவி இருந்தததை அறிகிறோம். அதே அத்தியாயத்தில் மார்கழி நோன்பு பற்றியும் வருகிறது.

“அரசனே! கோகுலத்திலுள்ள பெண்கள் ஹேமந்த ருதுவின் முதல் மாதமான மார்கழியில் காத்யாயனி பூஜையாகிய  விரதத்தைத் துவங்கி அருணோதயத்தில் எழுந்து யமுனா நதியில் ஸ்நானம் பண்ணி, மணலால் காத்யாயனி உருவத்தைச் சமைத்து சந்தனம், மலர் தூபம், தளிர் பழம் மற்றும் சிறந்த நைவேத்யங்களால் தேவியைப் பூஜித்தனர்

காத்யயாயனீ ! ஹே மஹாமாயே ! ஹே மஹாயோகினீ ! ஹே    ஈஸ்வரி! உன்னை வணங்குகிறோம் ; எங்களுக்கு நந்தகோபர் மைந்தனாகிய கண்ணனை நாயகனாக அருள்வீராக ! என்ற மந்திரத்தை ஜபித்தவர்களாய் கண்ணனைத் தியானித்துக் கொண்டு ஒருமாத காலம் பூஜை செய்தனர்.

ஒருநாள் யமுனா நதியில்  ஸ்நானம் செய்வதற்காக அருணோதயத்தில் எழுந்திருந்து அவர்களுடைய தோழிமார்களின் பெயர்களை சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டும் ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக்கொண்டும்  கிருஷ்ண சரிதத்தைப் பாடிக்கொண்டும் நடந்தனர் . அப்பெண்கள் யமுனா நதியின் ஒருபக்கத்துக்குச் சென்று ஆடைகளைக் கரையில் அவிழ்த்து வைத்துவிட்டு கண்ணன் சரிதங்களை சொல்லி நீரில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர் ; பரம யோகிகளுக்கும் யோகியான , சர்வக்ஞானுமான கண்ணபிரான் கோப கன்னியர் நீர்விளையாட்டு நிகழத்துவதை அறிந்து  அப்பெண்களின் விரத பலனை அளிப்பதற்காக தனது நண்பர்கள் சூழ அவ்விடம் சென்றார் .

சென்ற பெருமான், கரையிலிருந்த மகளிர் துகில்களையெல்லாம் கவர்ந்துகொண்டு பக்கத்தில் இருந்த கடம்ப மரத்தில் ஏறி நிற்க , நீராடி முடிந்த பெண்கள் கையது கொண்டு மெய்யது பொத்திக் கண்ணனிடம் வந்து தங்களுடைய துகில்களைத் தருமாறு பிரார்த்தித்தபோது , பெருமாள் அவர்களுடைய அன்பைப் பலவகையில் சோதித்து, முடிவில் அவரவர் துகில்களை அளித்தார் சதிகளாகிய நீங்கள்  எந்த நோக்கத்தைக் கொண்டு காத்யாயனி விரதத்தை அனுஷ்டித்தீர்களோ  அந்த மனோரதம் இன்று இரவில் என்னுடன் கூடி விளையாடுவதால் நிறைவேறும்; எல்லோரும் கோகுலத்துக்குச் செல்லுங்கள்  என்று நியமித்தருளினார்.” 

கோபியர்கள் கண்ணனுடன் ஆடிய ஆட்டம் ராஸக்ரீடை எனப்படும். இதை சிலப்பதிகாரத்திலும் குரவைக்கூத்து என்ற பெயரில் காண்கிறோம்.

இன்றும் மலையாள தேசத்தில் பெண்கள் விரதம் அனுஷ்டித்து திருவாதிரை அன்று முடிப்பதால்  மிருக சீர்ஷ நடத்திரப் பெளர்ணமியில் துவங்கி திருவாதிரையில் முடிந்ததாகவே கொள்ளல் வேண்டும்.

பாவைகளை மண்ணினால் செய்யும் வழக்கம் சங்க நூலான பரிபாடலில் உள்ளது . அது வையை நதி/ பாண்டிய நாடு பற்றிய பாடல்; ஆக ஆண்டாளின் நோன்பு பாண்டிய நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நடந்ததும் உறுதியாகிறது. மேலும் அகநானூற்றில் (59) உள்ள தொழுனை நதி / யமுனா நதி சம்பவம் கண்ணன் பெருமை தமிழ் நாடெங்கிலும் பரவியிருந்ததைக் காட்டுகிறது

மார்கழி நோன்பு எவ்வளவு சீரும் சிறப்புடனும் முடிந்தது என்பதை ஆண்டாள் திருப்பாவையின் கடைசி பகுதியிலும் கேரள திருவாதிரைத் திருவிழாவிலும் இன்றும் காணலாம்

பரிபாடல், கலித்தொகை, ஐங்குறுநூறு முதலிய சங்க நூல்களில் தை நீராடல் பகுதி உள்ளது மார்கழியில் துவங்கி தை மாதத்தில் முடிவடைந்ததை அந்தப் பாடல்களும் உறுதி செய்கின்றன.

—subham—

Tags- பாவை நோன்பு, காத்தியாயனீ ,விரதம், பக்கவாதம், மணல், யமுனை , கோபியர் நீராடல்  நீ திருப்பாவரை ஆராய்ச்சி, கட்டுரை 6