திருக்கடையூர் தலம்–ஆலயம் அறிவோம்! (Post No.14,169)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14,169

Date uploaded in Sydney, Australia — 3 February 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

2-2-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

தனம் தரும்கல்வி தரும்ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும்தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும்நல்லன எல்லாம் தரும்அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள்அபிராமிகடைக்கண்களே,

அபிராமி பட்டர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது அட்டவீரட்டதலங்களில் ஒன்றாக அமையும் திருக்கடையூர் திருத்தலமாகும்.

தமிழ்நாட்டில் மயிலாடுதுறை – தரங்கம்பாடி நெடுஞ்சாலையில் இது 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலிலிருந்து வடக்கில் 15 கிலோமீட்டர் தொலைவிலும் இது உள்ளது/

இறைவர் : அமிர்த கடேஸ்வரர், அமிர்த லிங்கேஸ்வரர்

இறைவி :  அபிராமி

தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்,  சிவகங்கை,  தீர்த்தம்,

தல விருக்ஷம் : பிஞ்சிலம் என்னும் ஜாதிமல்லிகைக் கொடி

திருமால் உள்ளிட்ட தேவர்கள் தூய இடத்தில் உண்ண வேண்டும் என்று அமுத கடத்தை இங்கு கொண்டு வந்து வைத்தனர். அதனால் இது கடபுரி அல்லது கடவூர் என்ற பெயரைப் பெற்றது.

இத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.

மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என்பதை அவர் தனது தந்தையார் மிருகண்டு முனிவர் மூலம் அறிய தலந்தோறும் சென்று சிவபிரானைத் தொழுது வந்தார். பதினாறு வயதாகும் போது 108வது தலமாக திருக்கடவூரில் அவர் சிவனைத் தொழும் சமயம் காலம் முடிந்ததால் எருமை வாகனத்தில் ஏறி வந்த எமன் மார்க்கண்டேயரை அவர் பூசிக்கும் சிவபிரானுடன் பாசக் கயிறை வீசி சேர்த்து இழுத்தார். உடனே சிவபிரான் கால சங்கார மூர்த்தியாக வெளிப்பட்டு எமனை உதைத்து தள்ளினார். மார்க்கண்டேயருக்கு சிரஞ்சீவியாய் என்றும் பதினாறாய் இருப்பாயாக என்று அருள் பாலித்தார்.

இங்கு ஞான உபதேசம் பெற விரும்பிய பிரம்மா சிவனை வழிபட அவர் ஒரு வில்வ விதையினைக் கொடுத்து, ‘இது விதைத்தவுடன் ஒரு முகூர்த்த காலத்தில் எங்கு விளைகின்றதோ அங்கு எம்மை வழிபடுவாயாக’ என்று கூறி அருளினார். இத்தலத்தில் விதை முளைக்க இங்கேயே இருந்து பிரம்மா வழிபட சிவன் அவருக்கு ஞானோபதேசம் செய்தருளினார். ஆகவே இத்தலத்திற்கு வில்வ வனம் என்ற பெயர் ஏற்பட்டது.

அடுத்து மார்க்கண்டேயர் அமிர்தகடேசருக்கு பிஞ்சிலம் எனப்படும் ஜாதிமல்லிகையுடன் கங்கை நீரைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்ததால் இது பிஞ்சிலவனம் என்னும் பெயரைப் பெற்றது.

இது அஷ்ட வீரட்டான க்ஷேத்ரத்தில் ஒன்று.

திருக்கண்டியூர்  – பிரமன் சிரம் கொய்த தலமாகும்.

திருக்கோவிலூர் – அந்தகாசுரனை சம்ஹரித்த தலமாகும்.

திரு அதிகை – திருபுரத்தை எரித்த தலமாகும்.

திருப்பறியலூர் – தக்ஷனின் சிரத்தைக் கொய்த தலமாகும்.

திருவிற்குடி – ஜலந்தராசுரனை சம்ஹரித்த தலமாகும்.

வழுவூர் -யானையை உரித்த தலமாகும்.

திருக்குறுக்கை – காமனை எரித்த தலமாகும்.

திருகடவூர் – யமனை உதைத்த தலமாகும்.

அமிர்தலிங்கத்தினை பூசித்த பிரமன் உள்ளிட்டோர் அமிர்தத்தைக் காணாமல் திகைத்தனர். உடனே சிவபிரான் விநாயகப் பெருமானைத் துதியுங்கள் என்று அருள் பாலிக்க ஒளிந்து இருந்த கணபதி அவர்களுக்குக் காட்சி தந்து அருள் பாலித்தார். அவர்களும் அமுதப் பெருக்கினை உண்டனர். இங்குள்ள கணபதி சோர கணபதி அல்லது கள்ள வாரணப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.

புலத்திய மஹரிஷி இங்கு மார்க்கண்டேயரைக் காண வந்தார். அப்போது அமிர்தலிங்கேஸ்வரரை பூஜித்து ஒரு விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார். இவரை பூஜித்தவர்கள் புண்ணியமடைவர் என்பதால் இவருக்கு புண்ணியவர்த்தனர் என்ற பெயர் ஏற்பட்டது.

அகத்திய முனிவர் இங்கு பூஜித்து பாவத்தைப் போக்க அருளியதால் இறைவனுக்கு பாப விமோசனர் என்ற பெயர் ஏற்பட்டது.

இங்கு எமனுக்கு உற்சவத் திருமேனி – சந்நிதி உள்ளது.

இங்கு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரப் பாடலகளைப் பாடி அருளியுள்ளனர். அப்பரும் திருஞானசம்பந்தரும் ஒரு சேர இங்கு எழுந்தருளியது இன்னொரு சிறப்பாகும். இன்னும் பல அருளாளர்களும் பாடல்களைப் படைத்துள்ளனர்.

இத்தலமே மிருகண்டு மஹரிஷி அவதரித்த தலமாகும்.

இங்கு தான் குங்குலிய கலய நாயனார், மற்றும் காரி நாயனார் ஆகியோரும் அவதரித்தனர். அவர்களுக்கு இங்கு திருவுருவச் சிலைகள் உள்ளன.

இந்தத் தலத்தின் அம்பிகையின் பெருமையை உலகிற்கு உணர்த்தியவர் அபிராமி பட்டர் ஆவார். தஞ்சையை ஆண்டு வந்த முதலாம் சரபோஜி மன்னர் ஒரு தை அமாவாசை தினத்தன்று இத்தலத்திற்கு வந்தார். அங்கு அம்பிகையின் நினைவில் இருந்த அபிராமி பட்டரிடம் இன்று என்ன திதி என்று கேட்க அவர் பௌர்ணமி என்று பதில் கூறினார். இதனால் வெகுண்ட அரசன் திரும்பிச் செல்ல பின்னர் நடந்ததை அறிந்த அபிராமி பட்டர் மனம் வருந்தி அம்மனின் முன் ஒரு ஆழமான குழியை வெட்டி அதில் விறகை அடுக்கித் தீ மூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டம் அமைத்து நூறு கயிறுகளால் உறி ஒன்றையும் கட்டி அதில் ஏறி அமர்ந்து அபிராமி அந்தாதியை இயற்றிப் பாடலானார். ஒவ்வொரு பாடலை முடித்தவுடன் ஒரு கயிறை அறுக்கலானார். எழுபத்தொன்பதாவது பாடலை அவர் பாட அன்னை அவருக்குக் காட்சி அளித்தாள். கோடி நிலா சேர்ந்தது போல் ஒளி வெள்ளம் பெருக, “நீ சொன்னதை மெய்ப்பித்து விட்டேன்” என்று கூறி அம்பிகை அருள் பாலித்தாள். அபிராமி பட்டரின் நூறு பாடல்களும் அற்புதமான பாடல்களாகும்.

இந்தத் திருக்கோவிலில் 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அமிர்த கடேஸ்வரரும் அபிராமி அம்மையும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

First place for London ;Tenth place for Sydney -2 (Post No.14,168)

Written by London Swaminathan

Post No. 14,168

Date uploaded in Sydney, Australia – 3 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

6

What to do in Hobart

Tasmania’s capital Hobart has been pressed into shape by nature.

The city is framed by the rugged figure of kunanyi / Mount Wellington and the flow of the wide River Derwent, with wilderness lingering nearby – just beyond the mountain. This is  Australia’s second-oldest city. The underground Museum of Old and New Art, aka Mona, looms large in global art circles .

The famed Salamanca Market has been a Saturday tradition for more than 50 years. Other attractions include a dinosaur fossil, Tasmanian Museum and Art Gallery (TMAG),

No visit to Hobart can be complete without a trip to Mount Wellington. Mount Wellington is part of the kunanyi/Mt Wellington Explorer Bus- Return Tour (2.5 hours).

One of the most remarkable landmarks a short distance from the heart of Hobart and on the banks of the Derwent River, is the Royal Tasmanian Botanical Gardens.

Tasmania has long been associated with the sea, ships, and ship building, and the Maritime Museum of Tasmania is the ideal place to relive this histo-ry.

One of the famous landmarks in Hobart that any visitor is likely to come across is Tasman Bridge. It is among the world’s first box-girder cantilever bridges to have been built.

Located a mere 30 minutes away from Hobart, the Bonorong Wildlife Sanc-tuary is one of the top tourist attractions in the area and for good reason. The sanctuary is home to an eclectic and very impressive collection of flora and fauna. This includes wombats, birds, koalas etc

Tasmania is known for its natural beauty, wildlife, history, and food.

National parks: Tasmania has over 40% national parks and world heritage wil-derness

Rainforests: Tasmania has dense rainforests that are home to many endemic species

Tasmanian Devil: Tasmania is home to the Tasmanian Devil, a unique species of wildlife . Platypuses are found in eastern Australia, from Tasmania to far north Queensland. They are also occasionally found in South Australia.Peacocks: Tasmania has peacocks that wander freely in reserves .

Unorthodox place names: Tasmania has place names that have taken on new modern interpretations

7

What  to do in Adeleide

Top attractions in Adeleide include Adelaide Botanic Garden, Adelaide Central Market, Barossa Valley Wineries and Fleurieu Peninsula.

Kangaroo Island, 13km (8mi) off the coast of South Australia, is one of the best places in Australia to see wild animals like koalas, kangaroos, sea lions and seals.

Head to the Adelaide Oval and embark on an adventure as you scale the roof of this iconic structure.

Three days on board The Ghan train

Travel through the vast outback from the south to the north of Australia (or vice versa) on the world’s longest north-south train journey.

One of the world’s greatest rail journeys, The Ghan, (named after the Afghan

Cameleers). On the way, you can explore the famous outback towns of Alice Springs and Katherine on whistlestop tours.

Time: 3-4 days, 2-3 nights

Distance: 2,979 kilometres (1,851 miles)

Nearest major city: Adelaide, Alice Springs, Darwin.

8

What  to do in Darwin

Visit Crocosaurus Cove, Museum and Art Gallery of the Northern Territory, Flea & Street Markets, Water Parks.

Nearby attractions:–

Litchfield National Park and Jumping Crocodile Cruise (Seven Hours)

Nitmiluk National Park /Katherine Gorge Cruise & Edith Falls Day Trip from Darwin.

Kakadu National Park Scenic Flight &Yellow Water Cruise (by plane).

9

What  to do in Brisbane

Without spending a cent or a penny, you can see the whole of Brisbane.

Yes, the City Hopper ferry service in Brisbane, Australia is free. The City Hopper is a free inner-city ferry that runs along the Brisbane River.

How to use the City Hopper ferry:

Look for a red sign on the front and side of the ferry to identify it as a free City Hopper

The City Hopper runs every 36 minutes from 6 AM to midnight, seven days a week

The City Hopper stops at eight locations, including Eagle Street Pier, Kangaroo Point, and South Bank Parklands

You can use the Translink Journey Planner to plan your trip

Other free transportation options in Brisbane:

City Loop and Spring Hill Loop bus services: These bus services run every 10 minutes on weekdays between 7 AM and 6 PM

Free off-peak travel for seniors: Eligible seniors can travel for free on CityCats, ferries, and Brisbane City Council buses during off-peak times

You can contact Translink on 13 12 30 or visit the Translink website for more information about public transport in Brisbane.

Science Museum and Art Gallery are good places to visit.

 Brisbane has the largest city hall in the country. 

Brisbane, the capital city of Queensland, is a fabulous place to visit in Australia. It’s packed with history, culture, and entertainment, and it’s home to the country’s largest city hall! Brisbane City Hall was built in the early 1900s and comprises around two acres, complete with 573 rooms and the largest copper dome in Australia. It was the second-largest construction project of its time (second only to the Sydney Harbour Bridge).

****

Brisbane, Queensland, Australia was announced as the host city for the 2032 Summer Olympics .

Brisbane River Cruise with entry to Lone Pine Koala Sanctuary.

Stroll along the Brisbane Riverwalk. This tranquil boardwalk runs parallel to the Brisbane River and takes in some of the most idyllic suburbs and Brisbane city views. The official route takes you from New Farm to the historic Howard Smith Wharves.

If you find yourself in Brisbane between June and November, catch all the action of the annual humpback whale migration with Brisbane Whale Watching Tours in Moreton Bay.

Moreton Island Day Trip (Kayak, Snorkel & Sandboard) from Brisbane or Gold Coast.

Springbrook and Tamborine Rainforest Tour including Natural Bridge and Glow Worm Cave.

—subham—

Tags- Cities in Australia, what to see, what to do, Brisbane, Sydney, Hobart, Adelaide, Darwin, Tasmania, population,

—subham—

S Nagarajan Article Index January 2025 (Post No.14,167)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,167

Date uploaded in Sydney, Australia – –3 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

1-1-25 14038 மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் போட்டி!  23-12-24

             KALKIONLINEல் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை.

2-1-25 14042 ராமாயணத்தில் வரங்கள் (25) குருஜனங்கள் ஆசியால் சபரி

           ஸ்வர்க்கம் ஏகியது!

3-1-25 14045 காஸுமா ததேய்ஷி – வியத்தகு மாமனிதர்! -1 (26-12-24

           மாலைமலர் கட்டுரை)

4-1-25 14048 காஸுமா ததேய்ஷி – வியத்தகு மாமனிதர்! -2 (26-12-24

           மாலைமலர் கட்டுரை)

5-1-25 14051 மஹரிஷி பாணினி! – 1 (29-12-2024 அன்று ஒளிபரப்பான

           ஞானமயம் உரை)

6-1-25 14054 மஹரிஷி பாணினி! – 2 (29-12-2024 அன்று ஒளிபரப்பான

           ஞானமயம் உரை)

7-1-25 14059 S Nagarajan Article Index December 2024

8-1-25 14064 புத்திகூர்மை அதிகரிக்க சில புதிர்கள்! (9-12-24 KALKIONLINE-ல்

                    வெளியாகியுள்ள கட்டுரை)

9-1-25 14068 மனிதக் கணினி : கணித மேதை சகுந்தலா தேவி – 1 (2-1-2025

            மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)

10-1-25 14072 மனிதக் கணினி : கணித மேதை சகுந்தலா தேவி – 2 (2-1-2025

            மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

11-1-25 14076 திருமூலர் – 1 (5-1-25 ஞானமயம் உரை)

12-1-25 14080 திருமூலர் – 2 (5-1-25 ஞானமயம் உரை)

12-1-25 14081 ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் சில சுவையான

           சம்பவங்கள்!

13-1-25 14084 விண்வெளி ஆர்வலர்களே, சந்திர வாட்சை  

            அணியலாம், இப்போது!      (19-12-24 கல்கி ஆன் லைன் இதழில்

             பிரசுரிக்கப்பட்ட கட்டுரை)

13-1-25 14086 தக்ஷிணேஸ்வர் – பவதாரிணி காளி கோவில் (ஞானமயம் 12-2-25

           உரை)

14-1-25 14088 உலக சாதனையை முறியடித்த சீன விண்வெளி வீரர்கள்! (21-12-24   

            kalkionline கட்டுரை)

15-1-25 14095 ஸ்வாமி விவேகானந்தர் – 1 (12-1-25 ஞானமயம் உரை)

16-1-25 14100 ஸ்வாமி விவேகானந்தர் – 2 (12-1-25 ஞானமயம் உரை)

17-1-25 14104 சகல நலன்களையும் அருளும் சூரிய வழிபாடு! (13-1-25 kalkionline

           கட்டுரை)

18-1-25 14109 முதல் அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாலி ரைட் பற்றிய

             திரைப்படம்! (19-12-24 kalkionline கட்டுரை)

19-1-25 14113 அந்தப் பேரழகியின் அழகு தான் அழகு; ஸ்டைலு தான் ஸ்டைலு!

            (10-1-25 kalkionline கட்டுரை)

20-1-25 14118 ஶ்ரீ வேதாந்த தேசிகர் – 1 (19-1-25 ஞானமயம் உரை)

20-1-25 14119 அயோத்யா ராம ஜென்ம பூமி மந்திர் – 1 (19-1-25 ஞானமயம் உரை)

21-1-25 14122 ஶ்ரீ வேதாந்த தேசிகர் – 2 (19-1-25 ஞானமயம் உரை)

22-1-25 14125 துறவிக்குத் துப்பாக்கி தேவை இல்லை! (ஸ்வாமி

             விவேகானந்தரும் இரண்டு  மன்னர்களும்!) – (12-1-25 kalkionline

            கட்டுரை)

23-1-25 14130 கவலை வேண்டாங்க! பூமியின் அடியில் இருக்குது

             போதுமான ‘பவர்’! (14-1-25 kalkionline கட்டுரை)

24-1-25 14133 நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 12

         (ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்!)

25-1-25 14137 நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 13

             ரிலேடிவிடி என்றால் என்ன, மிஸ்டர் ஐன்ஸ்டீன்?      

26-1-25 14142 சௌபாக்யம் அடைய, சங்கடங்கள் விலக, மஹாபாதகம் நசிய ஒரு

            எளிய வழி இதோ!

27-1-25 14146 மாற்றி யோசிக்கும் திறன் கொண்டவரா நீங்கள்? இதோ சில

            கேள்விகள்! (16-1-25 kalkionline கட்டுரை)

27-1-25 14147 ஆலயம் அறிவோம் – தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம்

28-1-25 14149 பட்டினத்தார் – 1 (26-1-25 ஞானமயம் உரை)

29-1-25 14152 பட்டினத்தார் – 2 (26-1-25 ஞானமயம் உரை)

30-1-25 14155 Gandhiji’s quotes on God, Prayer, Truth…. 

31-1-24 14158 செரிண்டிபிடி கண்டுபிடிப்பு: லஸ்காக்ஸ் குகை! (உலகின் அதிசய

           இடங்கள் – kalkionline கட்டுரை)

**

First place for London ;Tenth place for Sydney -1 (Post No.14,166)


Sydney Opera House

Written by London Swaminathan

Post No. 14,166

Date uploaded in Sydney, Australia – 2 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

The top 10 best cities in the world for 2025

The 2025 World’s Best Cities report, compiled by marketing consultancy Resonance with market research company Ipsos, ranks cities around the world on what it defines as their livability, lovability and prosperity, all totting up to an overall score.

Alongside other data, it includes a survey of 22,000 people in 30 countries.

Among the top 10 are a handful of cities in western Europe, a famous US city and one lucky Australian location.

1.London, 2.New York ,3.Paris, 4.Tokyo, 5.Singapore, 6.Rome, 7.Madrid, 8.Barcelona, 9.Berlin, 10.Sydney

Why  Sydney?

Sydney, the capital of NSW and second most populus city in Australia, just scraped into the top 10 list of world’s best cities.

Attractions such as the iconic Harbour Bridge, Sydney Opera House and stunning beaches such as Bondi and Balmoral were listed as reasons Sydney is so beloved both locally and globally.

****

Famous Australian Cities

Canberra-Capital of Australia

NSW New South Wales – Sydney (state capital)

Northern Territory- Darwin (territory capital)

Queensland- Brisbane (state capital), Cairns, Gold Coast

South Australia- Adelaide (state capital)

Tasmania- Hobart (state capital)

Victoria- Melbourne (state capital)

Western Australia- Perth (state capital)

Population

1          Greater Sydney      (New South Wales)           5,450,496   

2          Greater Melbourne           (Victoria)     5,207,145   

3          Greater Brisbane    ( Queensland)                     2,706,966  

4          Greater Perth          ( Western Australia)          2,309,338   

5          Greater Adelaide    (South Australia)   1,446,380   

6          Australian Capital Territory –(Canberra)         466,566       

7          Greater Hobart       (Tasmania)  253,654       

8          Greater Darwin      (Northern Territory)         150,736       

****

1

What to do in Canberra, Capital City of Australia

As Australia’s purpose-built capital, Canberra preserves national treasures within iconic institutions such as Australian Parliament House the Australian War MemorialNational Gallery of Australia and National Museum of Australia. The National Portrait Gallery showcases the people who have shaped our nation, and the Australian Institute of Sport highlights Australia’s sporting achievements.

Conveniently located within a three-hour drive from Sydney or a one-hour flight from Melbourne, Canberra stands as a must-visit destination to uncover the spirit of the nation.

More attractions include National Dinosaur Museum,  Tidbinbilla Nature Reserve , National Library of Australia ,  Lake Burley Griffin and many markets .

****

2

What to do in Sydney

Sydney’s cultural landscape is adorned with esteemed institutions like the Art Gallery of New South WalesBangarra Dance Theatre, the Australian National Maritime Museum, the country’s national opera company Opera Australia and the world renowned Sydney Opera House.

Adding to the iconic Sydney Opera House, are the city’s cultural institutions, Aboriginal heritage and sacred sites, and annual cultural festivals Sydney Harbour Bridge, Balmoral and Darling Harbour are other tourist attractions.

****

3

What to do in Melbourne

Melbourne is famous for its cultural and sporting events such as Cricket Matches and Open Tennis Tournament; the The National Gallery of Victoria (NGV) houses the nation’s largest permanent collection of Australian art, while the Melbourne Cricket Ground has the most seats in the Southern Hemisphere.

This city finds inventive ways to turn spaces into wine bars and hip restaurants. Its more than 5000 cafes and restaurants can be found in intriguing laneways, basements and even beneath bridges. Wherever it is, Melbourne’s food and wine scene nourishes its cultural appetite.

Long considered Australia’s cultural capital, Melbourne has a high concentration of contemporary art galleries and is one of the world’s leading street art cities. Walking tours are an ideal way to explore the city’s cultural heart.

The city proudly hosts major international annual events such as the Melbourne Cup horse race, the Australian Open Tennis Championships, and the Formula One Australian Grand Prix. Numerous cultural festivals take place in Melbourne each year.

****

4

What to see in Cairns

cable car over rain forest

One of the best things to do in Cairns is to take to the skies on a helicopter tour; the 45-minute journey with Nautilus Aviation will show you the city’s most beautiful offerings, from the rainbow colours of the Great Barrier Reef to Barron Falls and the canopy of the Daintree Rainforest.

Visiting The Great Barrier Reef in glass bottomed boats is a memorable one.

This is the world’s largest coral reef system, a collection of just under 3000 individual reefs and 900 islands across near 350,000 square kilometres.

Journey north-west of Cairns and into the mountains to find Kuranda.

 Make your way up the ridge via the famed steam train on the Kuranda Scenic Railway;, it navigates 15 tunnels, 93 curves and difficult bridges across dense rainforest, waterfalls and steep ravines in just under two hours. On the way down, jump aboard the Skyrail Rainforest Cableway.

****

5

What to do in Perth

Wave Rock Near Perth

Perth has something for everyone. Beautiful wine region, spectacular coastline, and a bustling city – Perth has plenty to offer. ‘There are treetop walks, Swan River cruises, science museums, arts, crafts, and sports to be enjoyed. Experience the beauty of the Swan River on a scenic cruise from Perth for  a 2 hour and 45 minute to visit the historic port city of Fremantle A 20-metre high suspension bridge provides spectacular views . Other attractions include  Kings Park and Botanic Garden,  Rottnest Island , Wave Rock, Pinnacles Desert and the Margaret River wine region.

Country’s largest Hindu temple is in Perth.

****

to be continued………………………….

Tags- Cities in Australia, capital, what to see, what to do, Canberra, Brisbane, Sydney, Melbourne, Hobart, Adelaide, Darwin, Cairns, Perth, Tasmania, population

தமிழ் தெரியுமா222025 ? (Post No.14,165)

Written by London Swaminathan

Post No. 14,165

Date uploaded in Sydney, Australia – 2 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்; 27 சொற்களைக் கண்டுபிடிக்க அம்புக்குறிகளைப் பின்பற்றுக.

குறுக்கே

1. ஆம்பல் மலர்; பிரபல வாரப் பத்திரிக்கையின் பெயர்

2. இரும்பினைப் பிடிக்கும் சனி

5.அருள்பெற்ற புலவர்

8. ஒரு ஆண் மகன்  80 ஆம் ஆண்டு முடிந்து எட்டாவது மாதம் ஜன்ம நட்சத்திரத்தன்று  செய்யப்படுகிறது. கணவனையும் மனைவியையும் அல்லது ஒரு சந்நியாசியை உட்காரவைத்து மந்திர ஸ்னானம் செய்து தங்கக்காசுகளால் அபிஷேகம் செய்வது .

13. கிளி அல்லது அதுபோன்ற பறவை; இதன் பெயரில் உபநிஷத் இருக்கிறது 

14 மன்மதனின் மனைவி 

3. ரத்தினைக் கற்களை நிறுத்துப் பார்க்க இந்துக்கள் பயன்படுத்தும் குந்துமணி எடை

15. அக்காளுக்கு அடுத்துப் பிறந்தவள்

17 தசை என்பதன் மருவு

18. மூஞ்சி என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்

19. தேனுக்கு அலையும் காட்டு மிருகம்; கருப்பு அல்லது பழுப்பு நிறம்; ஜாம்பவான் வம்சம்  

19. குடித்தால் போதை தரும்

20. மரை (antelope) மான்(deer) ஆடு(sheep) – இவற்றின் ஆண் ஏறு  

17. பொருட்கள் , பண்டங்களை விற்பனைக்காகக் கொண்டு செல்லும்போது பயன்படும் சொல் 

******

கீழே

1. தாவித் தாவி செல்லும்; வண்டியிலும் ரேஸ் பந்தயத்திலும் பயன்படும் மிருகம்

4. ஆண்களின் பெயர்களுக்கு முன்னால் வரும் மரியாதைச் சொல் Arrow Symbol Clipart | Free Download ...

8. சூர சம்ஹாரத்துக்கு முன் முருக பக்தர்கள் கடைப்பிடிக்கும் விரதம்

9. பெண், அலங்காரம் , உரை

19. பாக்கு மரம் Arrow Symbol Clipart | Free Download ...

6. கை Arrow Symbol Clipart | Free Download ...

10. இறந்து போன முன்னோர்கள் ,

14.. குடித்தால் போதை தரும் Arrow Symbol Clipart | Free Download ...

7. ஊன்றினால் முளைக்கும் Arrow Symbol Clipart | Free Download ...

11. தலம் என்பதற்குள்ள இன்னுமொரு சொல்

12. இலங்கைத் தமிழர்கள் நாற்காலி என்பதற்குப் பயன்படுத்தும் சொல்; , கதிர்காமம்

20. Arrow Symbol Clipart | Free Download ... ஆடுகளின் கூட்டம்

16 காடுகளில் சிங்கம் , புலி வசிக்கும் இடம்Arrow Symbol Clipart | Free Download ...

 1   2  
   3 4 
 5 67Arrow Symbol Clipart | Free Download ...  
8 9101112 
     1314
15      
  16Arrow Symbol Clipart | Free Download ...  17 
  18    
  19   20

*************

விடைகள்

கு 1மும்து2ரு 
தி  ர3த்தி4Arrow Symbol Clipart | Free Download ... 
ரைவ5க6வி7Arrow Symbol Clipart | Free Download ...  
க8கா9பி10ஷே11க12ம்
ந் ரிதித்தி13ர14
த15ங்கைருதிரை 
 கு16Arrow Symbol Clipart | Free Download ...க்ச17தை
ஷ் மு18ம் ந்
டிக19Arrow Symbol Clipart | Free Download ...ள் றிம20

—subham—

Tags- தமிழ் தெரியுமா222025

போஜன குதூகலம் – 2 (Post No.14,164)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,164

Date uploaded in Sydney, Australia – –2 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஹெல்த்கேர் ஜனவரி 2025 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 போஜன குதூகலம் – 2

ச. நாகராஜன் 

நூலில் உள்ள சில அருமையான செய்திகளைக் கீழே காணலாம். முழு விவரத்திற்கும் நூலைப் படிப்பதே சாலச் சிறந்தது.

நெல்

பழைய நெல் எளிதில் செரிக்கும். உடலுக்கு இதமானது.

யவம் (பார்லி)

கருஞ்சிவப்பு கலந்த யவம் இனிப்புள்ளது. குளிர்ச்சியுள்ளது. இது சிறுநீர் சம்பந்தமான நோய்களைப் போக்க வல்லது.

சோளம்

நல்ல வலிமை தரும். வாதம் முதலிய மூன்று குறைகளையும் போக்கும்.

தோலுள்ள தானியம்

பயறு, துவரை, மொச்சை ஆகியவை தோலுள்ள தானியங்கள். இவை மலத்தைக் கட்டும்.  சுவையுள்ளது. காம உணர்ச்சியைத் தூண்டும் தன்மையுள்ளவை.

உளுந்து

உளுந்து பசையுள்ளது. மலத்தை அதிகரிக்கச் செய்வது. வரட்சி தரும்

வீரியத்தை அளிக்கும். உடலில் பளபளப்பையும் நல்ல நிறத்தையும் தரும்.

கடலை

இனிப்புள்ளது. சிறுநீர் பற்றிய நோயையும் வாயுவையும் பித்தத்தையும் வெல்லும்.

புல்வகை தானியங்கள்

தினை, சாமை, வரகு, நிவாரம் முதலிய புல் வகையைச் சேர்ந்த தானியங்கள் குளிர்ச்சி பொருந்தியவை. இலேசானவை. இவற்றால் வாயு அதிகரிக்கும். ஆனால் கபமும் பித்தமும் போகும்.

பத்து வகை காய்கறிகள்

மூலம் (வேர்), பத்ரம் (இலை), கரீரம் (மூளை), அக்ரம் (தளிர்), பலம் (பழம்), காண்டம் (தண்டு),அதிரூடம் (கொழுப்பு), த்வக் (தோல்), புஷ்பம் (பூ), கவசம் (பட்டை) என காய்கறிகள் பத்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

பால்

முற்பகலில் பால் குடித்தால் உற்சாகமும் செரிமானமும் அதிகரிக்கும். நண்பகலில் குடித்தால் வலிமை வளரும். களைப்பு நீங்கும். இரவில் குடிக்கப்பட்டால் பல நோய்களைப் போக்கும். ஆகவே இது எப்பொழுதுமே உட்கொள்ளத் தகுந்ததாகும்.

நதிகளில் ஓடி வரும் நீரின் பயன்கள்

இந்தப் பகுதியில் கங்கை, யமுனை, நர்மதை, சந்திரபாகா, சோணபத்ரா, காவேரி உள்ளிட்ட பல நதிகளின் நீரின் தன்மை தரப்படுகிறது. ஒவ்வொரு நதியின் நீரும் தரும் நன்மைகளும் விளக்கப்பட்டுள்ளது.

நீரைப் பருகுதல்

இரவில் உட்கொள்ளப்படும் வெந்நீர் வாயுவைப் போக்கும். கபத்தை விரைவில் அகற்றும் சுவை இன்மையை நீக்கும். உணவைச் செரிக்கச் செய்யும். செரிமானத்தை அதிகமாக்கும்.

செரிமானத்தை அதிகரித்துக்கொள்ள அடிக்கடி குறைவாக நீர் குடித்தல் வேண்டும். 

உணவுக் கலங்கள்

தங்கப் பாத்திரம் தோஷங்களைப் போக்கிக் கண்ணுக்கு நன்மை தரும்.

வெள்ளி கண்ணுக்கு நன்மை தரும். பித்தம், கபம், வாதம் ஆகியவற்றைப் போக்கும். வெண்கலம் அறிவையும் சுவையையும் தரும். இரத்த நோயையும், பித்தத்தையும் தெளிய வைக்கும்.

பித்தளை வாதத்தையும் உஷ்ணத்தையும் தரும். வரட்சி தரும். கிருமிகளையும் கபத்தையும் போக்கும்

இரும்பு சங்குப் பாத்திரங்களில் உண்டால் செரிக்கும். வீக்கம், பாண்டு ஆகியவற்றையும் போக்கும். வலிமை தரும். காமாலையை அகற்றும்.

வாழை இலையில் உணவு உட்கொண்டால் மனதுக்கு திருப்தி ஏற்படும். சுவை மிகும். காமம் அதிகரிக்கும். வலிமையும் செரிமானமும் தோன்றும். நஞ்சு, களைப்பு வாயு, இரத்த நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு உகந்தது. பாண்டு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரங்களும் அவற்றை உண்ணக் கூடாதென்பதும்.

அசுவினி முதல் உள்ள நட்சத்திரங்களின் வரிசையில் கீழ்க்கண்டவற்றின் தொடர்பைக் கண்டு கொள்க. (அசுவினிக்கு விஷத்ரு, பரணிக்கு நெல்லி என்று வரிசைப்படுத்திக் கொள்க)

விஷத்ரு,  நெல்லி, அத்தி, நாவல், கருங்காலி, பாதிரி, மூங்கில், அரசு, நாகமென்ற பெருமுத்தம், ஆல், பலாசம் எனப்படும் முள்ளுமுருங்கை, பிலட்சம் என்ற கல்லொளி மரம், அம்பஷ்டம், வில்வம், அர்ஜுனம் என்ற மருத மரம், நருமுருங்கை, சுரபுன்னை,எலி, ஆல், தேக்கு, வஞ்சுளம் என்கிற தினிசி மரம், பலா, எருக்கு, வன்னி மரம், கடம்பம், மா, வேம்பு, இலுப்பை ஆகிய மரங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரியனவாகும்.

தன் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மரங்களை ஒருவன் கண் மூடித்தனமாக மருந்து முதலியவற்றுக்காக உபயோகப்படுத்தினால் அவனது ஆயுள், செல்வம்,  மனைவி மக்கள் அனைத்தும் அழியும். இவற்றை வளர்த்தல் முதலியன செய்தால் வளரும்., (இங்கு முதலியவற்றுக்காக என்பதற்கு வெட்டுதல், உண்ணுதல் என்று பொருள் கொள்க)

சாப்பிட்ட பின் எப்படி இருக்க வேண்டும்?

சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே இருந்தால் தொந்தி அதிகரிக்கும். படுத்தால் உடல் பருக்கும். நடப்பவனுக்கு ஆயுள் வளரும். ஓடுபவனைக் கண்டு மரணம் ஓடும்.

எப்படிப் படுக்க வேண்டும்?

மல்லாந்து படுப்பவன் எட்டு பங்கு மூச்சையும், வலது புறம் ஒருக்களித்துப் படுப்பவன் அதன் இரண்டு பாகங்களை (பதினாறு மடங்கு) மூச்சை இழக்கிறான். ஆகையால் இரட்டைப் பங்கு மூச்சை செலவாக்கும் வகையில் சுகமாகப் படுக்க வேண்டும். எல்லாப் பிராணிகளுக்கும் தொப்புளுக்கு மேல் இடப்புறத்தில் செரிமானத்திற்குரிய உஷ்ணமுள்ளது. ஆகையால் செரிமானத்தை அதிகரிக்க இடது பக்கத்தில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.

தெய்வ பூஜை செய்வது எப்படி?

தெய்வங்களைப் பூஜித்தல், சாப்பாடு, தூக்கம் ஆகியவற்றை வெளிப்படையாகச் செய்தல் கூடாது. இருட்டிலும், சந்தியா காலங்களிலும் மேல் கூரையற்ற இடங்களிலும் செய்யலாகாது.

சாப்பிடும் முன்

சாப்பிடும் முன் இஞ்சியையும் உப்பையும் உட்கொள்ளுவது மிகவும் நன்மை தரும். உப்பு கடலுப்பாக இருத்தல் வேண்டும்.

உண்ணும் போது நினைக்க வேண்டிய தெய்வங்கள்

உணவு உட்கொள்ளும் போது பிரமன் முதலியோரை நினைக்க வேண்டும்.

உணவு பிரம்மா, அதன் சுவை திருமால் உண்பவன் சிவன் என எண்ணி உண்பவனுக்கு திருஷ்டி தோஷம் ஏற்படாது.  திருஷ்டியினால் உண்டாகும் துன்பங்களைத் தீர்க்கும் படி கோரி நான் நினைக்கிறேன் என்று அனுமனையும் நினைக்க வேண்டும்.

இறைச்சி

சைவ உணவு மட்டுமே இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

அசைவ உணவு வகைகள் பற்றிய ஏராளமான விஷயங்களை  இந்த நூலில் காணலாம். மீனிலிருந்து ஆரம்பித்து பன்றி இறைச்சி முடிய அனைத்து இறைச்சி வகைகளையும் பற்றி நூல் அலசி ஆராய்கிறது.

அசைவப் பிரியர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்.

முயல் இறைச்சி, மீன் இறைச்சி, லாவக இறைச்சி என்று நூலின் பின்னால் உள்ள உணவுப் பொருள்களின் அகர வரிசைப் பட்டியலில் தேடிப் பார்த்தால் குறிப்பிட்ட பக்கத்தில் அது பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.

அருமையான ஆராய்ச்சி நூல்

இது உணவு வகைகளைப் பற்றிய ஒரு கலைக் களஞ்சியம். கையேடு.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான விஷயங்களை நவீன ஆய்வு உபகரணங்களைக் கொண்டு ஆய்வு செய்து அதில் கிடைக்கும் முடிவுகளை நூல் குறிப்பிடும் பயன்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

இதற்காக ஆகும் பொருள் செலவை அரசே ஏற்க முன் வர வேண்டும். இதில் ஈடுபட ஆர்வமுள்ள அறிஞர்களை ஊக்குவிக்க வேண்டும். சமூக ஊடகங்கள் இதற்குப் பெரும் முக்கியத்துவம் தர வேண்டும்.

ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை உருவாக்க அறிவுக் களஞ்சியமாகத் திகழும் இந்த நூலையும் இது போன்ற நூல்களையும் தமிழ் உலகம் மனமார வரவேற்க வேண்டும்.

சரஸ்வதி மகால் நூல்நிலையம் போன்ற நிறுவனங்களை ஆதரித்துப் போற்றி அதில் பணியாற்றும் அறிஞர்களை வாழ்த்தி அவர்களுக்கு உரிய விதத்தில் இந்தியத் திருநாட்டின் மக்கள் ஆதரவு தர வேண்டும்.

குதூகலமாக வாழ்வோம் – போஜன குதூகலத்தைப் படித்து!

***

நன்றி : சரஸ்வதி மகால் நூல் நிலையம்

,போஜன குதூகலம்

—subham—-

Tags- ,போஜன குதூகலம், part 2

GNANAMAYAM 2-2-2025 BROADCAST PROGRAMME


GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

பிப்ரவரி இரண்டாம் தேதி

2-2-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

Prayer by Mrs Jayanthi Sundar Team

***

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London

***

Bengaluru Nagarajan speaks on Tamil Saint Abhirami Bhattar

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on  Tirukkadavur Temple .

***

Singapore Dr Lakshmi continues her talk on Vaihnavite Saints Alvars

***

Kalyanji  anchoring from India.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

Prayer by Mrs Jayanthi Sundar Team

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – திருக்கடவூர் அம்மன் கோவில்.

***

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு — அபிராமி பட்டர்

***

சிங்கப்பூர் டாக்டர் லெட்சுமி ஆழ்வார்கள் பற்றி சிறப்பு சொற்பொழிவு

****

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

 tags- GNANAMAYAM ,2-2-2025 BROADCAST, PROGRAMME

My Trip to Nelson Bay to Watch Dolphins (Post.14,163)


Written by London Swaminathan

Post No. 14,163

Date uploaded in Sydney, Australia – 1 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Australia has ten thousand beaches and wherever you turn in the Eastern Coast you will see a board leading to a beach. But Nelson Bay has some unique features of watching Dolphins and bathing in the mid sea from inside the ship.

When you buy the ticket for a ferry ride, you spend nearly two hours in the ferry. While you are travelling in the ferry the live commentary will tell you to look at the direction the dolphins appear.  We saw four dolphins during our trip on 31st January 2025. All the passengers were waiting in the three decks to take pictures of the dolphins. But I was not lucky to see the jumping dolphins; I saw only the swimming dolphins.

After going to some distance, the commentator announces that all the passengers who wish to take a dip in the sea, come to the deck. The ship has got a big net attached to the ship. When its lowered it is filled with sea water. One by one jumps into the net where the sea water is over knee deep. They can bathe and swim and remain there for half hour or so. Children are accompanied by elders. The passengers come with swimsuits, extra towels etc for this enjoyable mid sea bathing. It is the Pacific Ocean and the bay is called Nelson Bay.

We hired a house just ten minutes away and stayed there for two days. Every day we went to the nearby Shoal Bay and spent hours on the shore. Children swam, picked up sea -shells and built sandcastles. All the beaches have several restaurants to cater to different tastes. A ticket for a ferry ride will cost you 40 Australian Dollars.

London Swaminathan in Nelson Bay, Australia 

Where is Nelson Bay?

By car, Nelson Bay is conveniently located just two hours and 45 minutes north of Sydney, making it an accessible getaway for travellers. Alternatively, visitors can fly into Newcastle Airport, which is approximately a 30-minute drive from Nelson Bay. Upon arrival, various transportation options are available, including car rentals, limousines, and door-to-door shuttle buses that facilitate easy travel to Port Stephens and its surrounding areas. Bus services also connect Nelson Bay with nearby towns such as Shoal Bay.

The nearest city is Newcastle.

Whale Watching

Dolphin watching is possible all year around. But for watching the whales one must go in specific months.

More than 100 dolphins live in the pristine blue waters of the Port Stephens – Great Lakes Marine Park. Dolphin watching cruises depart all year from the busy marina in Nelson Bay with Imagine Cruises and Moonshadow-TQC Cruises. For a truly unique experience, during the warmer months, you can swim among wild dolphins with Dolphin Swim Australia.

Whale watching boat tours operate between May and November, when thousands of humpback and southern right whales migrate along the NSW North Coast. Just east of Nelson Bay, go snorkeling at Fly Point – Halifax Aquatic Reserve, and discover an underwater world teeming with sponge gardens, soft corals, sea turtles and a colorful array of fish.

—subham—

Tags- My Trip , Nelson Bay , Watch Dolphins, whale watching, ferry trip, mid s

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 18 (Post.14,162)

Written by London Swaminathan

Post No. 14,162

Date uploaded in Sydney, Australia – 1 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 18

டால்பின் பார்க்க வாருங்கள் ;

அது போல ஆனந்தமாக குதியுங்கள்

நெல்சன் வளைகுடாவுக்கு எனது பயணம்

Nelson Bay, Port Stephens –

A vibrant coastal gem in the Port Stephens area, Nelson Bay serves as a launchpad for nature adventures. Port Stephens is home to over 150 bottlenose dolphins that reside in the bay year-round. During the migration season, from May to November, humpback whales make their way along Australia’s east coast, providing spectacular opportunities for sightings.

ஆஸ்திரேலியாவில் பத்தாயிரம் கடற்கரைகள் இருப்பதை முன்னம் ஒரு கட்டுரையில் பார்த்தோம் .கிழக்குக் கடற்கரையை ஒட்டி வசிப்போருக்குத் திரும்பிய இடமெல்லாம் கடற்கரைதான். பசிபிக் மகா சமுத்திரம் அலை வீசும் கிழக்கு கடற்கரையை ஒட்டியே பெரும்பாலான மக்கள் வசிக்கிறார்கள். ஆகையால் இப்பகுதியிலுள்ள கடற்கரைகளை நன்றாக வளர்ச்சி அடைய வைத்துள்ளார்கள்.

ஜனவரி 2025 கடைசி இரண்டு நாட்களில் நாங்கள் சிட்னி நகரிலிருந்து நெல்சன் வளைகுடாவுக்கு Nelson Bay சென்றோம் அங்கு கடலில் சென்று டால்பின்களைப் பார்க்க வசதிகள் உண்டு; இது நிறைய சுற்றுலாப்   பய ணிகளை ஈர்க்கிறது. அத்தோடு கூடுதல் கட்டணம் உடைய பெரி FERRY கப்பலில் ஏறினால் நடுக்கடலில் கப்பலில் இருந்தவாறே கடற்குளியல் செய்யவும் வாய்ப்புகள் கொடுக்கிறார்கள்.

நாங்கள் ஆளுக்கு நாற்பது டாலர் கொடுத்து அத்தகைய கப்பலில் ஏறினோம் . கப்பலை ஓட்டுபவர் நேர்முக வருணனை செய்து கொண்டே வருகிறார். டால்பின்கள் வரும்போது உரத்த குரல் பேசி  நம்மை உற்சாகப் படுத்துவார் அது மூன்று அடுக்கு THREE DECKS  உடைய பெரி; அதில் 200 பேர் வரை ஏறலாம். எல்லா அடுக்குகளிலும் வெயில் அடிக்காத கூரை உடைய இடங்களில்    ஆசனங்கள் உள்ளன. வெளியே நிற்க விரும்பினாலும் நிற்க நிறைய இடம் உண்டு. மேல் அடுக்குக்குப் போனால் முழுவதும் திறந்த வெளி; ஆனால் முழுக்க முழுக்க வெயிலும் அடிக்கும்.

நாங்கள் எங்கள் பயணத்தில் 31-1-2025 அன்று நான்கு டால்பின்களைப் பார்த்தோம். முன்னரே கடற்கரையிலுள்ள ரெஸ்டாரண்ட்டில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஏறினோம். இரண்டு மணி நேரத்துக்குள் கப்பலில் திரும்பி வந்தோம்.

THE DOLPHIN WE SAW FROM THE FERRY

போகும் வழியெல்லாம் அலைவீசும் பசிபிக் சமுத்திரத்தையும் நூற்றுக்கணக்கான கப்பல்களையும் , பெரி FERRY படகுகளையும் பார்த்துக் கொண்டே போனோம். பெரி கப்பல் ஓரிடத்தை அடைந்தவுடன் கடலில் குளிக்க விரும்புவோர் திறந்த வெளி டெக்குக்கு வாருங்கள் என்று  அறிவித்தார்கள் ; எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இளவெட்டுகளும் பேரக் குழந்தைகளும் கடலில் குளிக்க ஆயத்த மாயினர். கப்பலின் பின்புறத்தில் பெரிய வலையைக் கட்டியுள்ளனர். அது மூன்று அடி வேலி உடையது . அதில் குதித்தவுடன் முழங்கால் அளவு கடல் நீர் இருக்கும் ; அதில் ஒரே நேரத்தில் பத்து அல்லது பதினைந்து பேர் இறங்கிக் கொட்டமடிப்பார்கள் . நடுக்கடலில் கப்பலிலே கடல் நீரில் மிதக்க, நீந்த, குளிக்க அற்புதமான ஏற்பாடு! பாதுகாப்புக்காக இரண்டு ஊழியர்கள் அருகிலேயே நிற்பார்கள்[ எல்லோரும் குளித்து முடிந்தவுடன் மேல் டெக்குக்குப் போய் வெய்யிலில் நின்றால் கப்பல் திரும்பும் முன்னர்  நீச்சல் உடைகள் காய்ந்து விடும்.

ஆக ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்!!!

1.பெரி FERRY கப்பல் பயணம் – பசிபிக் மஹா சமுத்திர தரிசனம்

2.டால்பின் என்னும் கடல் வாழ் மிருகங்களின் காட்சி

3.நடுக்கடலில் கப்பலி ல் உள்ள வலைக்குள் குளிக்கும் அரிய வாய்ப்பு

****

நெல்சன் பே என்னும் இடம் எங்கே உள்ளது ?

சிட்னியிலிருந்து புறப்பட்டு 220 கிலோமீட்டர் பயணம் செய்ய இரண்டரை மணி ஆகும்; வழியில் காப்பிக்கு நிறுத்தினால் அரை மணி நேரத்தைக் கூட்டிக் கொள்க . நியூகாஸில் என்னும் நக ரினைக் கடந்த ஒரு மணி நேரத்தில் Nelson Bay நெல்சன் வளைகுடாவில் இருப்போம். நாங்கள் போர்ட் ஸ்டிவன் என்னும் ஊரில் தங்கினோம். பத்து நிமிடத்தில் கப்பல் துறையை அடைந்தோம். போர்ட் ஸ்டிவன்ஸ் ஊரை ஒட்டி நிறைய கடற்கரைகள் உள;  மணிக்கணக்கில் கடல் அலையில் காலை நினைத்தோம் அலைந்தோம்; பேரக் குழந்தைகளும் இளம் சிட்டுகளும் நீச்சல், மணல் வீடு கட்டல், சங்கு கிளிஞல் சேகரித்தல் முதலியவற்றில் இறங்கினர். எதிர்ப்புறமுள்ள காப்பிக் கடைகளில் TAKE AWAY டேக் அவே வாங்கி வாடகை வீட்டில் சாப்பிட்டோம். 

நெல்சன் வளைகுடா வட்டாரத்தில் bottlenose dolphins 150   பாட்டில்னோஸ் டால்பின்கள் வசிக்கின்றன. வருடம் முழுவதும் பார்க்கலாம்.

திமிங்கிலங்களைப் , humpback whales பார்க்க வேண்டுமானால்  மே  மாதம் முதல் நவம்பர் மாதம் வரை  உள்ள சீசனில் போக வேண்டும் அப்போது அவை இடம் விட்டு இடம் போகும் குடியேற்ற காலம் ஆகும்.

LONDON SWAMINATHAN IN NELSON BAY, AUSTRALIA

கடற் குளியல்,   பீச்சில் உலாவுதல், டால்பின்/ திமிங்கில காட்சிகளை விரும்புவோர் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்  நெல்சன் பே.

பையில் கனம் (பணம்)  இருந்தால் பயணம் செய்க.

—subham—

Tags- டால்பின் ,நெல்சன் வளைகுடா, எனது பயணம்,

ஆஸ்திரேலியா, அதிசயம் , பாருங்கள்! Part 18

போஜன குதூகலம்! – 1 (Post No.14,161)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,161

Date uploaded in Sydney, Australia – –1 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஹெல்த்கேர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை 

அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல்

போஜன குதூகலம்! – 1 

ச .நாகராஜன் 

போஜன குதூகலம்

நீண்ட காலம் ஆரோக்கிய வாழ்வுடன் வாழ உணவு மற்றும் அதை உண்ணும் முறை பற்றியும் கூடவே வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் முறைகள் பற்றியும் அறிய வேண்டியது அவசியம்.

இதற்கு ஆதாரமாக உள்ள நுட்பமான விஷயங்களை விளக்கும் ஒரு அபூர்வமான நூல் போஜன குதூகலம் என்னும் நூல்.

இதை இயற்றியவர் இரகுநாதஸூரி என்னும் அறிஞர் ஆவார். வடமொழியில் அவர் இயற்றிய நூலின் ஒரு பகுதியான திரவியகுண தகனம் என்னும் பகுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு போஜன குதூகலம் என்ற பெயரில் சரஸ்வதி மஹால் வெளியீடாக வந்துள்ளது.

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர்.

அறச்செயலுக்கு உற்ற தலையாய கருவி உடலே ஆகும் என்றார் கவிஞர் காளிதாஸன்.

உணவுப் பொருள்களின் தன்மைகள், உணவுப் பண்டங்களைச் சமைக்கும் முறை, அவற்றைத் தூய்மைப் படுத்தும் முறை ஆகியவை மிகத் தெளிவாக இந்த நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இரகுநாதஸூரி

இரகுநாதஸூரி என்பவர் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் ஆசானாக விளங்கிய ஸ்வாமி ராமதாஸருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். இவர் கிருஷ்ணா நதியின் கிளை நதிகளில் ஒன்றான மான் நதிக் கரையில் ஸ்வாமி ராமதாஸரால் கட்டப்பட்ட ரகுபதி கோவிலின் பொறுப்பாளராகப் பல ஆண்டுகள் இருந்து வந்தார். கி.பி. 1678-ல் ஏகோஜி மன்னரால் தஞ்சாவூரில் மராட்டிய அரசு நிறுவப் பட்ட போது அவர் தஞ்சாவூருக்கு வந்து விட்டார்.

நரகவர்னணம் என்ற மராட்டிய நூலில் மன்னர் ஏகோஜியின் மனைவியான ராணி தீபாம்பிகை என்பவர் தனக்கு உதவி அனைத்தும் செய்து வந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

இவரது தந்தையார் பெயர் ஹரிஹர பட்டர். இவரது ஆசிரியர் அனந்த தேவர். இதை அவரது பிரயோக ரத்தின பூஷா என்ற நூல் மூலம் அறிய முடிகிறது.

இவர் மராத்திய்ல் கார்ஹாடே இனத்தவர் என்றும் இவரது குடும்பத்தின் பட்டப் பெயர் நவஹஸ்தா என்றும் அறிய முடிகிறது.

நூல் தரும் விவரங்கள்

இந்த நூலில்

1) தானியங்கள் 2) தோலுள்ள தானியங்கள் 3) புல் வகை தானியங்கள் 4) தானியங்களின் பொதுத் தன்மைகள் 5) வெந்த உணவு 6) காய்கறிகள் 7) வற்றல் 8) ஊறுகாய் முதலியன 9) மசாலைப் பொருள்கள் 11) நெய் – செயற்கை 12) சர்க்கரை 13) பானகம் 14) கஞ்சி 15) பால் 16) தயிர், மோர் 17) வெண்ணெய் 18) நெய் 19) எண்ணெய் 20) கரும்பு 21) கரும்புச் சாற்றின் மாற்றங்கள் 22) தேன் 23) மது 24) மாமிசம் 25) நீர் 26) நஞ்சுள்ள உணவின் அறிகுறிகள் 27) விரோதமுள்ள பொருள்கள் 28) உணவு மாற்றம் 29) பத்தியத்தையும் அபத்தியத்தையும் மாற்றல் 30) இயல்பாகவே தன்மை தருபவை 31) இயல்பாகவே தீமை தருபவை 32) செயற்கையால் தீயவை 33) சாப்பிடும் வேளை 34) உணவுக் கலங்கள் 35) இலைகள் 36) உண்ணும்போது நினைக்கப்பட வேண்டிய தெய்வங்கள் 37) உண்ணும் முறை 38) உணவுக்குப் பின் 39) வெற்றிலை போடும் முறை 40) அரசர் வெற்றிலை போடும் முறை 41) உண்டபின் மேற்பூச்சு 42) உடை 43) முதற்பகுதியின் முடிவு

ஆகிய அத்தியாயங்கள் உள்ளன.

மேலே கூறப்பட்டுள்ள அத்தியாயத் தலைப்புகள் மூலமாகவே நாம் அறிய வேண்டிய அபூர்வமான விஷயங்களைப் பற்றி அறிகிறோம்.

பிள்ளையார், குரு, தன்வந்தரி ஆகியோரை வணங்கி விட்டு நூலாசிரியர் நூலை ஆரம்பிக்கிறார்.

அவர் தரும் முதல் ஐந்து அத்தியாயங்களில் கூரிய முனையுள்ள தானியங்கள் (நெல்), கோதுமை, பார்லி, சோளம், தோலுள்ள தானியம், உளுந்து, பயறு, கடலை, துவரை, கொள்ளு, மொச்சை, காட்டுப் பயறு, எளி, நாட்டாளி விதை, கடுகு, புல்வகை தானியங்கள், சாமை, வரகு, ஆகியவை பற்றிய நுட்பமான விஷயங்களை விளக்கமாகத் தருகிறார்.

 பொரி, சத்துமாவு, அவல். வெந்த உணவு வகைகள், பால் பாயசம். தேங்காய் பாயசம், பருப்பு. பலகாரங்கள் பற்றிய விளக்கத்துடன் வடை, மோர்க்குழம்பு உள்ளிட்டவற்றைச் செய்யும் முறையும் தரப்படுகிறது.

அடுத்து கறிகாய்கள் என்ற அத்தியாயத்தில் ஆரம்பித்து இறுதி அத்தியாயம் வரை ஏராளமான விஷயங்கள் தரப்படுகின்றன.

700 உணவுப் பொருள்கள்

இறுதியில் அட்டவணையில் சுமார் 700 உணவுப் பொருள்கள் பற்றிய பட்டியலைக் காண்கிறோம். இத்தனை உணவுப் பொருள்களை இந்த நூல் விளக்குகிறது என்பது ஆச்சரியப்படும் விஷயம் தானே!

நூலில் கிரியா சாரம், ஜனார்தன மஹோதயம், தன்வந்தரீய நிகண்டு, பாரிஜாதம், பாவப்ரகாசம், இராஜ நிகண்டு, விஷ்ணு புராணம், ஹ்ருதய தீபம் ஆகிய நூல்களிலிருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன.

கேய தேவர், போஜன், வாக்படர், வ்ருத்த ஸூஸ்ருதர், வியாசர்,

ஸூச்ருதர், ஸுஷேணர், ஜெர்ஜெடர் ஆகிய அறிஞர்கள் மற்றும் மகான்கள் கூறியவையும் தரப்பட்டுள்ளன.

நூலை மொழிபெயர்த்தவர்

264 பக்கங்கள் உள்ள இந்த நூலை சரஸ்வதி மஹால் நூலகம் தனது வெளியீடாக 2005-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. விலை ரூ 90/

இதை மொழிபெயர்த்திருப்பவர் வண்டுவராபதி சக்கரவர்த்தி சே.ந. இராகவன் (மன்னார்குடி) என்பவர். 1974-ல் இந்த மொழிபெயர்ப்பை அவர் செய்திருக்கிறார்.

மிக மிக கடினமான ஒரு பணியை மிக அற்புதமாகச் செய்திருக்கும் இவர் அனைவரது பாராட்டுக்கும் உரியவர். வடமொழியில் தரப்பட்டிருக்கும் அத்தனை உணவுப் பொருள்களையும் தமிழ் வழக்கில் உள்ளபடி தருவது ஒரு கடினமான காரியம். இதை அவர் சிறப்புறச் செய்திருப்பதோடு எளிமையான நடையில் தந்திருப்பதும் பாராட்டுக்குரிய விஷயமாகும். படிப்பதற்குக் குதூகலமான நூல் இது!

இதை சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர்-லிருந்து பெறலாம். அல்லது https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM3kZpy.TVA_BOK_0008542/page/n1/mode/2up

என்ற இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நூலில் உள்ள சில அருமையான பகுதிகளை அடுத்துப் பார்ப்போம்.

–    தொடரும்  

 tags–போஜன குதூகலம்!