செய்தியில் அடிபடும் மேலும் ஒரு புளியமரம் ! (Post No.14,597)

Written by London Swaminathan

Post No. 14,597

Date uploaded in London –  6 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 இதுவரை பல புளியமரக் கதைகளை சொல்லிவிட்டேன் ; நம்மாழ்வார் புளியமரம்,  சுந்தரம் ராமசாமியின் கதையில் வரும் புளியமரம், தான்ஸேனை இசை மேதை ஆக்கிய புளியமரம், கோரக்நாத் புளியமரம், கட்டபொம்மன் தூக்கில் தொங்கவிடப்பட்ட புளியமரம் , உறங்காப் புளிய மரங்கள், பேய்கள் வாழும் புளியமரம் ஆகிய கட்டுரைகளை எழுதினேன். அது நூலாகவும் வெளிவந்துவிட்டது.

இப்போது ஒரு புனித புளிய மரம் பற்றிய செய்தி பத்திரிகைகளில் அடிபடுகிறது . அமிர்தசரஸ் நகரிலுள்ள சீக்கியர்களின் புனிதக் கோவிலில் ஒளிந்துகொண்டிருந்த  சீக்கிய பயங்கரவாதிகளைத் தீர்த்துக்கட்ட அப்போதைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி ஆபரேஷன் ப்ளூஸ்டார் OPERATION BLUE STAR என்ற நடவடிக்கை எடுத்தார் ; அதில் பயங்கரவாதிகளுடன் ஒரு புளியமரமும் அழிந்தது  . அதை மீண்டும் வளர்க்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன ; அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன ; கடைசியாக செய்த முயற்சி வெற்றி பெற்று இப்போது அந்தப் புளியமரத்தின் இளம் கன்று பத்திரிக்கைகளில் படமாக வெளிவந்துள்ளது . அந்தப் புளிய மரத்துக்கு ஏன் அவ்வளவு முயற்சி எடுத்து வளர்த்தனர் என்றால் அது ஒரு புனித புளிய மரம் ; இதோ அதன் கதை:–

அகால் தக்ட் AKAL TAKHT என்னும்  இடத்தில் இந்தப் புளிய மரம் இருக்கிறது; ஒரு காலத்தில் இப்போது பொற்கோவில் இருக்கும் இடம் புளிய மரக்காடாக இருந்தது . அகால் தக்ட் என்னும் அமைப்பு நிறுவப்பட்ட  காலத்திலிருந்து அதற்கு சாட்சியாக நின்றது பழைய புளிய மரம். சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான ஹரிகோவிந்த சிங் தார்மீக , லோகாயுத விஷயங்களை முடிவு செய்வதற்காக கோவில் வளாகத்திலேயே இந்த அமைப்பினை நிறுவினார்; நானூறு ஆண்டுக்கால சீக்கிய வரலாற்றுக்கு சாட்சி பூதமாக இருந்த அந்த மரம் 1984-ம் ஆண்டு ராணுவ நடவடிக்கையில் அழிந்தது. இப்போது மீண்டும் புளிக் கன்று வைக்கப்பட்டு , அதைக் கவனமாக பாதுகாத்து வருகின்றனர் .இந்தப்  புளியமரம் சீக்கிய நூல்களிலும்  இடம்பெற்றுள்ளது மோரன் என்ற நடனக்காரியுடன் வைத்திருந்த தொடர்பைக் கண்டித்து, மஹாராஜா ரஞ்சித் சிங்கை, அகாலி ஜாதேதார் பூலா சிங் இந்த மரத்தில் கட்டிவைத்தார்

சீக்கிய வரலாற்று ஆசிரியர் கியானி சிங்கும் இந்த மரத்தினைக் குறி ப்பிட்டுள்ளார் . பிரிட்டிஷ் யுத்த ஓவியர் வில்லியம் சிம்சன் முதல் சுமார் இருபது ஓவியர்கள் வரை, இந்த வளாகத்தை படமாக வரைந்த பொது புளிய மரத்தையும் வரைவதற்கு மறக்கவில்லை; அப்போது அந்த மரம் 25 அடி வரை வளர்ந்ததை ஓவியங்கள் காட்டுகின்றன.

சீக்கிய சம்பிரதாயத்தில் மரங்களை சப்ஜ மந்திர் — பச்சை வண்ண ஆலயங்கள் — என்று சொல்லி வணங்குவர்; ஆகவே அழிந்து போன பழைய புளியமரம் ஒரு ஆலயம் போன்றதே என்று எண்ணி புதிய புளியமரத்தினை வைத்துள்ளனர் . பழைய முயற்சிகள் தோற்றதற்கு காரணம் குளிர்கால பனியாகும் ; இந்தப் புதிய மரம் வரப்போகும் குளிர்காலத்தைத் தாங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் .

My Old Articles:—

புளியமரத்தின் கதை மரங்களைப் பற்றிய புதிய செய்திகள் (Post No.11,904)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,904

Date uploaded in London – –  15 APRIL 2023                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

****

ஒரு புளிய மரத்தின் கதை என்ற தலைப்பில் சுந்தரம் ராமசாமி எழுதிய நாவல் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் கூறும் நல்லுலகிற்கு பெருமை சேர்த்ததை நாம் அறிவோம்.

உலகப்புகழ்பெற்ற வடஇந்திய பாடகர் தான்சேன், ஒரு புளியமரத்தின் இலைகளை சுவைத்து நல்ல சாரீரம் பெற்ற குவாலியர் நகர் புளியமரத்தின் கதையையும் நாம் அறிவோம்.16 ஆண்டுக்காலம் தவம் செய்து புளிய மரத்துக்கு அடியில் ஞானம் பெற்ற நம்மாழ்வாரால் புகழ்பெற்ற ஆழ்வார்திருநகரி உறங்காப்புளிய (Never Sleepinng Tamarind Tree) மரத்தின் கதையையும் நாம் அறிவோம்.

புத்தருடைய விக்கிரகத்தைத் திருடி, அதிலுள்ள தங்கத்தை புளியமரத்துக்கு அடியில் புதைத்து விட்டு  நீண்ட நேரம் தூங்கிப்போன, திருமங்கை ஆழ்வாரை இலைகளை உதிர்த்து எழுப்பிய புளியமரத்தின் கதையையும் நாம் அறிவோம்.

புகழ்பெற்ற சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் அவர்கள் வெளியிட்ட ஜய மங்கள ஸ்தோத்திரம் எட்டாவது பாகத்திலுள்ள பிராமணப் பேயின் கதையும் அது சொன்னபடி ஒருநாள் இரவில் புளியமரக்கிளையை ஒடித்து பரலோகம் சென்ற கதையையும் நாம் அறிவோம்.

இவை எல்லாம் என்னுடைய 2016-ம் ஆண்டுக் கட்டுரையிலும் தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ? என்ற நூலிலும் வெளியான விஷயங்கள் . மேலும் சில புளிய மரங்களைக் காண்போம்.

கோரக்நாத் புளிய மரம் Tamarind (Tamarindus indica)

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிராலா (Sirala) என்ற கிராமம் உள்ளது. இங்கு ஒரு பெரிய பூதாகார புளியமரம் இருக்கிறது. அதனுடைய அடிமரத்தில் விரிசல்களும் குழிகளும் உண்டு. அருகில் கோரக் நாத் (Gorakhnatha Shrine)  கோவில் இருக்கிறது. அவர் ஒரு குச்சியை பூமியில் ஊன்றியவுடன்  அது புளிய மரமாகி கிளைவிட்டுப் பெருகியதாம் இந்த ஊர்,  பத்திரிக்கைச் செய்தியில் மிகவும் அடிபட்ட இடம். ஆண்டுதோறும் நாக பஞ்சமி அன்று பாம்புகளைப்ப பிடித்து வழிபட்ட பின்னர் அதை மீண்டும் புதருக்குள் விடுவது வழக்கம் . பாம்புகளைத் துன்புறுத்தக்கூடாது என்று ஒரு இந்து விரோதக் கும்பல் கும்பல், கோர்ட்டுக்குப் போகவே பம்பாய் ஹைக்கோர்ட்டும் பாம்பு பிடி விழாவுக்குத் தடை விதித்தது . இப்போது ஆண்டு  தோறும் ட்ரோன்களை Drones இயக்கி பாம்புப்  பிடாரர்களை கண்காணிக்கிறது அரசு.கோரக்நாதர் நட்ட புளியமரத்தில் வாசிக்க முடியாத, புரியாத எழுத்துக்கள் இருப்பதாக ஒரு ஐதீகம்  ; இது அங்கு வரும் பக்தர்களின் பெயர் என்ற

நம்பிக்கை இருப்பதை மஹாராஷ்டிர அரசு கெஜட் செய்தி கூறுகிறது.

இதே ஊரில் இன்னும் ஒரு கதையும் உள்ளது. சிரால செட்டி என்பவர் ஒன்னேகால் மணி நேரத்துக்கு அரசனாக இருந்தாராம். அவர் நினைவாக ஆண்டுகோரும் ஆவணி மாத சுக்கில பட்ச சஷ்டி யன்று ஒரு விழா நடக்கிறது. . அவருடைய உருவத்தை மண்ணால் செய்து அதைச் சுற்றி பெண்கள் நடனம் ஆடுவர். பின்னர் மண் பொம்மையை ஆற்றில் கரைத்து விடுவார்கள்.

ஒரு காலத்தில் இது பெரிய புளியம் தோப்பாக இருந்தது. அங்கு ஏராளமான மயில்கள் வரும். அதற்கு கோரக்நாத மடத்திலுள்ளோர் தானியங்களைப் போட்டு அதைப் புனிதப் பறவைகளாக கருதுவர். மேலும் அந்தப் புளியமரத்தின் ஒவ்வொரு சுழிவும் நெளிவும் , விரிசலும் அங்கு வரும் பக்தர்களின் பெயர்கள் என்றும் அது மக்களுக்குப் புரியாத ஒரு எழுத்தில் எழுதப்படுகிறது என்றும் சொல்லுவார்கள். கோரக்நாத் , சிவனின் உருவம் என்று மக்கள் நம்புவதால் லிங்ககாயத் பிரிவினர் இங்கு பெருமளவில் வருவார்கள்

*****

இன்னும் ஒரு புளிய மரக்கதையைக் காண்போம்

ஒரு பெண்மணியின் கணவன், திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியை மனதிற்கொண்டு நீண்ட காலம் வெளிநாட்டுக்குப் போக திட்டமிட்டான். அன்பு மனைவியிடமும் அதைச் சொன்னான். மனைவிக்கு அவனை, நீண்ட காலம் பிரிந்துவாழ இஷ்டமில்லை . உடனே ஒரு ஜோதிடரைப் போய்ப் பார்த்தாள் . அந்தக் காலத்தில் ஜோதிடர்கள் மருத்துவ விஷயங்களையும் கதைப்பார்கள். அவர் சொன்னார்- உன் கணவனை அன்புடன் வழி  அனுப்பி வை. ஆனால் ஒரு கண்டிஷன் Condition  போடு; அன்பே , ஆருயிரே; போகும்போது புளிய மரத்துக்கு அடியிலும் வரும்போது வேப்ப மரத்துக்கு அடியிலும் நீங்கள் உறங்க வேண்டும். அது ஒன்றே என் நிபந்தனை என்று சொல் என்றார்  . அவளும் அப்படியே கண வனிடம் பகர்ந்தாள் ; கணவனும் புறப்பட்டான்;, அவள் சொன்னபடியே இரவில் புளிய மரத்துக்கு அடியில் உறங் குவதை வழக்கமாகக் கொண்டான். சில வாரங்களுக்குள் அவன் உ டல் நலம் குன்றவே பாதியில் பயணத்தைக் கைவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். கணவனின் விரைவான திரும்புதலுக்கு உதவிய புளிய மரத்தை அவளும் மனதார வாழ்த்தினாள். இந்த நாட்டுப்புற கதை , புளிய மரத்துக்கு அடியில் உறங்காதே என்பதை விளக்குகிறது .

xxxx

பேய்க்கு வாக்குப்பட்டால் புளிய மரத்தில் ஏறித்தான் ஆக வேண்டும் என்ற பழமொழியால், புளிய மரத்துக்கு பெரிய அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது . உண்மையில் மரங்கள் இரவு நேரத்தில் கார்பன் டை ஆக்சைட்  வாயுவை வெளியிடுகிறது. அது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும்  மேலும் புளிய மரத்தின் இலைகள் இரவு நேரத்தில் மூடிக்கொள்ளும். இதைத் தூங்குகிறது என்று சொல்லுவார்கள். இந்த குணமும் இதற்குப் பேயின் பெயரைக் கொடுத்துவிட்டது போலும்!

இன்னும் எங்கெங்கோ எத்தனை புளிய மரங்கள் இப்படிக் கதைகளுடன் உள்ளனவோ!  யார் அறிவார்?

புதிய கதை ஏதேனும் இருந்தால், உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்; அது எதிர்கால மரத்தடியர்களுக்கு , மர மண்டைகளுக்கு உதவும்.

மரத்தடியர் = மரங்களின்பால் பேரன்பு  கொண்ட அடியார்

மர  மண்டை= மரங்களைப் பாதுகாப்பதே கடமை என்ற சிந்தனையில் ஊன்றி நிற்போர்..

–subham—

புளியமரத்தில் பேய்கள் வசிப்பது ஏன்? ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை (Post No.2667

)Research Article by london swaminathan

Date: 27 March 2016

Post No. 2667

Research Article by london swaminathan

Date: 27 March 2016

Post No. 2667

தமிழர்களுக்கு பேய் என்றால் நிறையப் பிடிக்கும். “பேயாட்சி செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்” — என்ற பாரதியின் வரிதான் நினைவுக்கு வருகிறது. புளிய மரத்துக்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம் என்று ஆராயப் புகுந்தபோது புளியமரம், பேய்கள் பற்றி மேலும் சில சுவையான விஷயங்கள் கிடைத்தன.

1.புளியமரத்துக்கும் பேய்க்குமுள்ள தொடர்பு புகழ்மிகு சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் எழுதிய நூல் முகவுரையில் உளது. இதுவரை என் பிளாக்கில், அது தொடர்பான கட்டுரையைப் படிக்கவில்லையானால் இந்தக் கட்டுரையின் இறுதியில் உள்ள *தகவலைப் பார்க்கவும்.

2. மத்தியப் பிரதேச குவாலியர் நகரில், மொகலாய சாம்ராஜ்யத்தின் மாபெரும் இசை மேதை தான்சேனின் சமாதி/கல்லறை உள்ளது. அங்குள்ள ஒரு புளிய மரம் மிகவும் புகழ்பெற்றது. காரணம் – தன் இலைகளைச் சுவைத்தால் நல்ல குரல் வளம் எற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் இப்போது இந்த மரம் மொட்டையாக இருக்கிறது. “ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை” – என்ற சாமியார் பழமொழி நினைவுக்கு வருகிறது.

3.புளியமரத்துக்கும் பேயுக்குமுள்ள தொடர்புக்கு விஞ்ஞான விளக்கம் கிடைக்கவில்லை. ஆனால் புளிய இலைகளிலுள்ள அமிலச் சத்தானது அதன் கீழே வேறு தாவரங்களை வளரவிடுவதில்லை என்ற ஒரு விளக்கம் இருக்கிறது. அரசமரம் போன்றவை அதிக ஆக்சிஜனை வெளியிடுவதால், அதைச் சுற்றி வருவது நல்லது என்று எண்ணிய இந்துக்கள் அதனடியில் கோவில்களை அமைத்தனர். பறவைகளும் அத்தகைய ஆரோக்கிய மரங்களில்தான் பெரும்பாலும் கூடு கட்டுகின்றன.

4.தான்சேன் புளியமரம், வட நாட்டில் எவ்வளவு புகழ்படைத்ததோ அது போல தமிழ் நாட்டில் புகழ்படைத்தது திருக்குருகூர்/ ஆழ்வார் திருநகரி புளியமரம்தான். 16 ஆண்டுக் காலம் ஊமையாகக் கிடந்த மாறன் சடகோபனைப் பாட வைத்து, நம்மாழ்வார் என்று புகழ் ஈட்டித்தந்தது ஒரு புளிய மரமே! புத்தனுக்கு அரச மரத்தயில் ஞானம் கிடைத்தது; நம்மாழ்வாருக்குப் புளியமரத்தடியில் ஞானம் கிடைத்தது! வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வாழ்க!

5.திருமங்கை ஆழ்வாருக்கும் உதவியது ஒரு புளியமரமே! திருவரங்கப் பெருமானுக்குப் பெரிய கோவில் கட்ட ஆசை கொண்ட திருமங்கை மன்னனுக்கு பணம் தேவைப்பட்டது. மாணிக்க வாசகர், பாண்டிய மன்னனின் பணத்தை எடுத்துக் கோவில் கட்டினார்; கஷ்டப்பட்டார். திருமங்கை ஆழ்வாரோ நாகப்பட்டிண தங்க புத்தர் சிலையை ஒரு பாடலின் மூலம் உருக்கி, அதை ஈயச் சிலையாக வைத்துவிட்டு தங்கத்தை எடுத்துவந்தார் என்று வைணவப் பெரியோர்கள் சொல்லுவர். அப்படி வரும் வழியில் களைப்பு தீர உறங்கச் சென்ற அவர், தங்கத்தை மண்ணுக்கு அடியில் மறைத்துவிட்டு ஒரு புளியமரத்தடியில் படுத்தார். ஏ புளியமராமே! நீ தூங்காமலிருந்து என் செல்வத்தைக் காப்பாற்று என்று கட்டளையிட்டுவிட்டுத் தூங்கினார். பொழுதும் விடிந்தது; உழவர்களும் வயல் வேலைகளுக்கு வந்துவிட்டனர். புளியமரம் பார்த்தது. இந்த ஆளை எப்படி எழுப்புவது என்று யோசித்தது. தன் இலைகளையெல்லாம் அவர் மீது கொட்டவே அவர் விழித்தெழுந்தார். இது திருக்கண்ணன்குடியில் நடந்தது. உறங்காப்புளி வாழ்க!

6. தமிழ்நாட்டில் பல கோவில்களில் உறங்காப்புளிய மரங்கள் உள்ளன. அதாவது எல்லாப் புளிய மரங்களும் இரவில் இலைகளை மூடிக் குவித்து தூங்கும். சில புளிய மரங்கள் இப்படித் தூங்காததற்கு, அந்தந்த ஊர்க் கோவில்களில் பல கதைகள் உண்டு. இதற்கு விளக்கம் கூறுவோர், இருவகையில் இதை நோக்குவர்.1) உறங்காப்புளி என்பதே ஒரு வகை மரமாகும். அவைகள் , மற்ற வகை மரங்களைப் போல இலைகளை மூடா என்பர் 2) மற்றொரு விளக்கம், எல்லாம் இறைவனின் அற்புதத் திருவிளையாடல் என்பர். இது மேலும் ஆராயப்பட வேண்டிய விஷயம்.

7.ஸ்ரீ ராமனுஜரும், காஞ்சீபுரப் பேயும் என்று ஒரு சம்பவமும் உள்ளது. அதை வேறு ஒரு கட்டுரையில் காண்போம். ஒவ்வொரு பண்பாட்டிலும் மரங்களைப் பற்றி பல நம்பிக்கைகள் உள. இவையனைத்தும் முன்னோரின் அனுபவ அடிப்படையில் அமைந்தவை. எளிதில் அறிவியல் விளக்கம் பெறக்கூடியவை.

மரங்கள் வாழ்க! புளிய மரமும் வாழ்க!

—-SUBHAM—–

TAGS- புளிய மரம்,

Leave a comment

Leave a comment