லலிதா சஹஸ்ரநாமத்தில் புஷ்பங்கள் (Post.15,134)

Written by London Swaminathan

Post No. 15,134

Date uploaded in London –  30 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

முந்தைய கட்டுரைகளில் லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ரத்தினைக் கற்கள் , புனித நகரங்களின் பெயர்களைக் கடும். பூக்கள் இல்லாததை பூஜைகள் இல்லை  பூஜை என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலே புது வந்து விடுகிறது சங்க இலக்கியத்திலும்   பூஜை ப்பூக்கள் வருகின்றன . கபிலர் பாடிய புறநாநூற்றுப்படலில் பகவத் கீதை ஸ்லோகத்தை மொழிபெயர்த்துள்ளார்

புறநானூறு 106

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை

கடவுள் பேணேம் என்னா; ஆங்கு

மடவர் மெல்லியர் செல்லினும்,

கடவன், பாரி கை வண்மையே . . –கபிலர்

பொருள்

சூடும் மலர்களில் நல்லவை என்றும் தீயவை என்றும் உண்டு. ஆனால் குவிந்த பூங்கொத்தையும் இலையையும் கொண்ட எருக்கம் பூ எளிதில் கிடைக்கக்கூடியது ; (விலை கொடுத்து வாங்க வெண்ணடியது இல்லை.அப்பூவையோ புல்லையோ இலையையோ ஒருவன் சூட்டினாலும் கடவுள் வேண்டாம் என்று சொல்லமாட்டார் பக்தனின் அன்புதான் முக்கியம் அது போல பாரி வள்ளல் கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் வள்ளல்[ யார் சென்றாலும் பரிசைப் பெறலாம்.

இதில் புல்லிலை எருக்கம் என்பதை ஒரே செடிக்கு ஏனையோர் பயன்படுத்தினர் நான் புல், இலை , எருக்கம் என்று மூன்றாகப்பிரித்து உரை எழுதியுள்ளேன். காரணம் சங்க இலக்கியத்திலே அதிகப்பாடல்களை யாத்த பிராமணன் கபிலன்

ஸம்ஸ்க்ருதச் செய்யுட்களை அப்படியே தந்துள்ளான் இந்த மேற்கூறிய பாடலும்  பகவத் கீதையின் மொழிபெயர்ப்பே !

எனக்கு பக்தியுடன் கொடுக்கும் பச்சிலை, பூ, தண்ணீர், பழம் எதுவானாலும் — (பத்ரம், புஷ்பம், பலம், தோயம்) —- அதை நான் உண்கிறேன் (பகவத் கீதை 9-26) என்று கண்ண பிரான் கூறுவான்

இந்தப் பாடலுக்கு உரை கண்டவர்கள் எருக்கம் பூவை மட்டம் தட்டும் வகையில் மொழிபெயர்த்துள்ளனர் ஏனெனில் கணபதிக்கு மட்டுமின்றி சிவன் அம்பிகை ஆகியோருக்கும் எருக்கம் பூ பிரியமானது என்பதை தேவராப்பாடல்களும் சாம்ஸக்ரு த்த ஸ்லோகங்களும் சொல்கின்றன. இதற்குக் காரணம் வில்வம் துளசி போலா    அந்த  ந்தச் செடிக்கும் மருத்துவ குணம் உண்டு

இதோ சில ஸஹஸ்ரநாம குறிப்புகள்

தேவிக்குப் பிடித்த அஷ்ட புஷ்பங்கள்:

புன்னை , வெள்ளெருக்கு செண்பகம் , நந்தியாவட்டை பாதிரி/பாடலி, கருங்குவளை/நீலோற்பலம் , அரளி தாமரை .

இவைகளில் தாமரை இந்தியாவின் தேசீய மலர் மட்டுமல்ல எல்லா தெய்வங்களுடனும் ஏதேனும் ஒருவகையில் தொடர்புடையது. மலர் மேல் எகிவந்த பிரம்மாவை வள்ளுவனும் குறளில் மலர்மிசை ஏகினான் என்று போற்றுகிறார் . தேவியர் அனைவரும் தாமரையுடன் தொடர்புடையவர்கள் தான்

மந்தார குஸுமப்ரியா – மந்தார மலரில் விருப்பம் உடையவள்

விஷ்ணுக்ரந்தி விபேதினீ -விஷ்ணுக்ரந்தி மலர்

சஹஸ்ரார அம்புஜரூடா – சஹஸ்ராரம் என்னும் தாமரை

ராஜீவ லோசனா- தாமரைக் கண்ணுடையாள்

பாடலி குஸுமப்ரியா -பாதிரி மலரில் விருப்பம் உடையவள்

பத்ம – தாமரை என்ற சொல்லில் லலிதாம்பிகைக்கு பல பெயர்கள் வருகின்றன . நளினி என்ற

பெயரும் தாமரை மலரையே குறிக்கும்

தாடிமீ குஸுமப்ரியா – மாதுளம் பூவை விரும்புபவள்

சைதன்ய குஸுமப்ரியா- சைதன்ய  மலரில் விருப்பம் உடையவள் ; இப்படி ஒரு மலர் இல்லை. ஆனால் ஞானம் என்ற மலர் என்று உரைக்கார்கள் விளம்புகிறார்கள்.

சம்பக அசோக புன்னாக செளகந்திகா லஸத் கசா- செண்பகம் அசோகம் புன்னாகம் ஸெளகந்திகம் என்னும் செங்கழுநீர் ஆகிய மலர்களை அம்பாள் கூந்தலில் சூடுகிறாள். இதனால் அவள் அழகு அதிகரிக்கிறது

கதம்ப குஸுமப்ரியா கதம்ப வன வாஸினீ கதம்ப மஞ்சசரி க்ளிப்த்த கர்ணாபூர மனோகரா

– கடம்ப வனத்தில் வசிப்பவள் , கடம்பமலரில் பிரியம் கொண்டவள் ; மதுரையின் ஸ்தல விருட்சம் கடம்ப மரம்தான். ஒருகாலத்தில் கடம்ப வனக்காடாக இருந்த இடத்தில் நள்ளிரவில் இந்திரன் தேஜோமயமாக பூஜை செய்தபோது, அதை தனஞ்சயன் என்ற செட்டியார் பார்த்து மதுரை நகர பாண்டியனுக்கு அறிவிக்கவே தற்போது நாம் பார்க்கும் மீனாட்சி அம்மன் கோவிலும் மதுரை நகரமும் உருவானது.

அம்பாளுக்குப் பிரியமான மலர்கள் அனைத்தும் சிவபிராபினைப்போற்றும் தேவாரத்தில் சிவணுக்குகந்த மலராக வருவதையும் கண்டு மகிழலாம்

ஜபாகுஸும   நிபாக்ருதி – செம்பருத்தி மலர் போல சிவந்த செம்மேனி கொண்டவள்

இவை போல இன்னும் பல நாமங்களை நாம் காணலாம் அவைகளை செளந்தர்ய லஹரியில் சங்கராசார்யார் சொல்லும் பாடல்களுடன் ஒப்பிடும்போது இன்னும் ஆனந்தம் பெருகும்

****

காஞ்சிப்பெரியவர் (1894-1994)உரை

வடக்கே ஹிமாசலத்தில் பர்வத ராஜகுமாரியாகப் பிறந்தவள் தென்கோடியில் கன்யாகுமரியாக நிற்கிறாள். மலையாளத்தில் பகவதியாகவும், கர்நாடகத்தில் சாமுண்டேசுவரியாகவும், தமிழ்நாட்டில் தொண்டை மண்டலத்தில் காமாக்ஷியாகவும், சோழ தேசத்தில் அகிலாண்டேசுவரியாகவும், பாண்டிய நாட்டில் மீனாக்ஷியாகவும், ஆந்திர தேசத்தில் ஞானாம்பாளாகவும், மகாராஷ்டிரத்தில் துளஜாபவானியாகவும், குஜராத்தில் அம்பாஜியாகவும், பஞ்சாபில் ஜ்வாலாமுகியாகவும் காஷ்மீரத்தில் க்ஷீர பவானியாகவும், உத்திரப்பிரதேசத்தில் விந்த்ய வாஸினியாகவும், வங்காளத்தில் காளியாகவும், அஸ்ஸாமில் காமாக்யாவாகவும் – இப்படி தேசம் முழுவதிலும் பல ரூபங்களில் கோயில் கொண்டு, எப்போதும் அநுக்கிரஹம் பண்ணி வருபவள் அவளே!

***

உத்தம பெண்கள் தழுவினால் குரா / மருதோன்றி மலரும் என்று செளந்தர்ய லஹரி ஸ்லோகம் 96-ல் பாடுகிறார்

அசோக மரத்தை பெண்கள் உதைத்தால் அது பூக்கும்– ஸ்லோகம் 86-

அம்பாள் நாக்கின் நிறம் செம்பருத்திப்பூவின் நிறம் – ஸ்லோகம் 64-

காஷ்மீர்  வரை கால்நடையாகச் சென்ற சங்கரர் காஷ்மீர் குங்குமப்பூவைக் கூட  அம்பாளுக்கு  சாத்தி ஆனந்தம் அடைகிறார்.

***

சிவ பெருமானுக்குகந்த மலர்கள்

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள்.

கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் 

                                                    போதஞ்சி நெஞ்சமென்பாய்த்

                                                தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் 

                                                    டாய்தள ராதுவந்தி

                                                வளர்ந்துந்து கங்கையும் வானத் 

                                                    திடைவளர் கோட்டுவெள்ளை

                                                இளந்திங் களும் எருக் கும்இருக் 

                                                    குஞ்சென்னி ஈசனுக்கே  11.4.1

***

இளவெ ழுந்த இருங்குவ ளைம்மலர்

                                                பிளவு செய்து பிணைத்தடி யிட்டிலர்

                                                களவு செய்தொழிற் காமனைக் காய்ந்தவன்

                                                அளவு காணலுற் றாரங் கிருவரே 5.95.9

***

திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொணெய்தல்

குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னி

மருவமர் நீள்கொடி மாட மலிமறை யோர்கணல்லூர்

உருவமர் பாகத் துமையவள் பாகனை யுள்குதுமே 4.97.10

***

முந்திவட் டத்திடைப் பட்டதெல் லாமுடி வேந்தர் தங்கள்

                                                பந்திவட் டத்திடைப் பட்டலைப் புண்பதற் கஞ்சிக்கொல்லோ

                                                நந்திவட் டந்நறு மாமலர்க் கொன்றையும் நக்கசென்னி

                                                அந்திவட் டத்தொளி யானடிச் சேர்ந்ததென் னாருயிரே 4.84.8

****

ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்

                                                மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க

                                                ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்

                                                தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே  4.94.1

****

குரவங் குருக்கத் திகள்புன் னைகண்ஞாழல்

                                                மருவும் பொழில்சூழ் மறைக் காட் டுறைமைந்தா

                                                சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்

                                                அரவம் மதியோ டடைவித் தலழகே 2.37.3

—subham—-

Tags- லலிதா சஹஸ்ரநாமம்  புஷ்பங்கள் , பூக்கள் , செளந்தர்யலஹரி , சங்கரர்

Leave a comment

Leave a comment