நம்மாழ்வார் பாசுரமும் இலங்கைத் தமிழும் (Post No.15,170)

Written by London Swaminathan

Post No. 15,170

Date uploaded in London –  10 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நான் லண்டனில் வாழும் வெம்பிளி பேட்டை, BRENT COUNCIL பிரென்ட் என்னும் நகரசபையின் கீழ் உள்ளது . இதை இலங்கைத்  தமிழர்கள் எழுதுகையில் பிரென்ற் என்று எழுதுவார்கள். அவர்கள் நடத்தும் பள்ளிக்கூட அளவிலான கிரிக்கெட் போட்டிகளை பாடசாலை கிரிக்கெற் போட்டி என்று அறிவிப்பார்கள்  . விக்கிப்பீடியாவுக்குப் போனால் அவர்கள் கனடா நாட்டிலுள்ள டொராண்டோ  , ஒண்டாரியோ பெயர்களை எப்படி எழுதுகிறார்கள் என்று காணலாம் . இதோ விக்கிப்பீடியா :

ரொறன்ரோToronto in Canada

தொராண்டோ (ஆங்கிலம்: Toronto; இலங்கை வழக்கம்:ரொறன்ரோ, தமிழக வழக்கம்: டொராண்டோ) . இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும், ஒன்ரோறியோ மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில் (ONTARIO ஒன்ட்டாரியோவில்), ஒன்ரோறியா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

***

இது பற்றி வியப்புடன், ஒரு இலங்கைத் தமிழரை இதை எப்படி உச்சரிப்பீர்கள் என்று கேட்டபொழுது டொரோண்டோ என்றார்

எழுதும்போது ஆங்கில “டி ” அல்லது தமிழ்ச் சபதத்திற்கு  “ற்” என்று எழுதுகிறார்கள். இது வேறு எங்கும் இல்லாத வினோத இலக்கணம் . தமிழில்  “ற்”  எண்டு முடியும் சொற்களைக் காண முடியாது. ஆனால் இடையில் வரும்போது “டி ” என்னும் ஒலி “ற்”  ஆக மாறுவதை நம்மாழ்வார் பாசுரங்களில் காணலாம் . பத்மநாபன் என்பதை ப”ற்”பானாபன் என்று  சொல்லி அவர் பாடுகிறார் .

தமிழ் இலக்கணப்படி கல், பல், சொல் என்பதெல்லாம் இடையில் வரும்போது கற்குவியல், பற்பொடி, சொற்கள் என்று மாறுவதைக் காண்கிறோம் ஆனால் துவக்கத்திலும் இறுதியிலும் காண முடியாது  எப்படி யாழ்ப்பாணத்தில் மட்டும் இப்படி வந்தது என்பது ஆராய்ச்சிக்குரியதே !

பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன்,

எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த

கற்பகம், என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்

வெற்பன், விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே. 2-7-11

***

கிறி உறி  மறி நெறி

கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே,

உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்,

மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை,

நெறி பட அதுவே நினைவது நலமே. 2-10-6

English translation of verse 2.10.6:

Desist from base deeds and remember

‘Tis good to think solely of traversing the road

Which leads to Māliruñ Cōlai where live together

Herds of deer and young ones and stays our Lord,

Who from hanging hoops ate up all the butter.

(From wisdomlib.org)

நம்மாழ்வாருக்கு மிகவும் பிடித்த சொற்கள் சில; இராப் பகல் என்பதை நிறைய பாசுரங்களில் உபயோகிக்கிறார் அது போல கிறி என்ற சொல்லும் அவருக்கு மிகவும் பிடித்த சொல்.

அகராதியில் இதற்குள்ள பொருள்:

பொய், வஞ்சம், தந்திரம், மாயாஜாலம், வழி, குழந்தைகளின் முன் கையில் அணியும் ஆபரணம்.

இங்கு வழி , நல்ல வழி என்ற பொருளில் வருகிறது.

தமிழில் பொருள்

நல்ல வழியை எண்ணுவதே சிறந்தது ; இதை வீட்டுக் கீழ்மையை எண்ணாதீர்கள் . அத்திருமாலிருஞ் சோலையில்தான் உறி வெண்ணையை எடுத்துண்டு கண்ணன் கோயில் கொண்டுள்ளான். பெண் மான்கள் தன் குட்டிகளோடு சேர்ந்து வாழும் சோலை மலைக்குச் செல்லும் வழியை நினைப்பதே நல்லது .

மறி என்றால் ஆடு என்றே பெரும்பாலும் பொருள் வருகிறது. இங்கு மான்கள் என்று வருவதும் நோக்கற்பாலது .

***

திருக்குறளுக்கு புதுப் பொருள்!

ஈரடியால் உலகளந்தவனும் மூவடியால் உலகளந்தவனும்

பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம் ; அந்த அவதாரத்தைச் சொல்லும்போதெல்லாம் நம்மாழ்வார், குறளா திருக்குறளா என்று பாடுகிறார் . அவர் மனத்தில் உள்ள கருத்தினை நாம் அறிய முடிகிறது ; மூன்று அடிகளால் உலகத்தினை அளந்து ஓங்கி உலகளந்த உத்தமன்- த்ரி விக்ரமன் – என்ற பெயர் பெற்றான் விஷ்ணு .

இரண்டே அடிகளால் (குறள்) உலகத்தினையே அளந்துவிட்டான் வள்ளுவன்; அவன் பேசாத பொருள் இல்லையே! 

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி

வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே

செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்

செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

குறளா என்று பல பாசுரங்களில் அழைத்தவர் இங்கு திருக்குறள் என்ற சொல்லையே பயன்படுத்துவத்தைக் கவனிக்க வேண்டும் . நம்மாழ்வார் திருக்குறளை நன்றாகக் கற்றவர் என்பதை பல பாசுரங்கள் மூலம் அறிய முடிகிறது . மாணிக்க வாசகரின் திருவாசகமும் அவர் பாசுரங்களில் எதிரொலிக்கிறது. அவற்றைத் தனியாகக் காண்போம் .

***

இதைத் திருவள்ளுவமாலையில் பரணரும் பாடியுள்ளார்.

மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்

ஞாலம் முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்

வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்

உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து

இந்த பரணர் பிற்கால பரணர் ஆவார்.

–subham—

Tags- திருக்குறளுக்கு, புதுப் பொருள், கிறி உறி  மறி நெறி, நம்மாழ்வார் இலங்கைத் தமிழ், திருக்குறளா

My Old Articles

இலங்கைத் தமிழும் இந்தியத் தமிழும்! கொஞ்சம் கதைப்போமா ? (Post No.13,659)

Post No. 13,659

Date uploaded in London – 12 September 2024         

பரிகரிஅரிநரிமறிகிரிசுரிவரி (Post No.6057)


Date: 10 FEBRUARY 2019


Post No. 6057

தமிழ் ஒரு அழகான மொழி. பழைய கால ஆநந்தவிகடன் அகராதி அல்லது அதற்கு முந்திய நிகண்டுகள் ஆகியவற்றை எடுத்துப் பார்த்தால் மிகவும் வியப்பாக இருக்கும். ஒரு சொல்லுக்கு இத்தனை பொருளா என்று ஒரு புறம் வியப்போம். ஒரே பொருளைச் சொல்ல இத்தனை சொற்களா என்று மறு புறம் வியப்போம். தாமரை என்பதற்கு பல சொற்கள் இருக்கும். அரி என்ற ஒரு சொல்லுக்கு பல வித அர்த்தங்கள் இருக்கும். மேலும் ஒருஎழுத்து,  இரு எழுத்துச் சொற்களைக் கொண்டே நிறைய விஷயங்களைச் சொல்ல முடியும்.

இந்தச் சொல்லையோ,சப்தத்தையோ வேறு மொழிகளில் பிரயோகித்தால் இன்னும் வியப்பான விஷயங்கள் வரும்.

உதாரணமாக அரி என்ற சொல்லுக்கு விஷ்ணு, பகைவன், சிங்கம் இன்னும் பல பொருள்கள் வரும். ஹீப்ரூ (Hebrew)  மொழியிலும் அரி என்றால் சிங்கம்  என்பதைக் கண்டு வியப்போம். கேஸரி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் (கேசம்/முடி உள்ள மிருகம்)  ஸீசர் என்று உச்சரிக்கப்பட்டு ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ் சீசர் என்ற பெயர்களில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே புகுந்தது.

ஒரே சப்தம் வரும் சொற்களைச் சொல்லுவதும் கவிதை போல இருக்கும். அதை நினைவு வைத்துக் கொள்வதும் எளிதாக இருக்கும். சொல் விளையாட்டுகளை விளையாடவும் ஏதுவாக இருக்கும்.

குறுக்கெழுத்துப் போட்டி, தமிழ் ஸ்க்ராபிள் (Tamil Scrabble) , சொல் போட்டி போன்றவை மூலமும் விடுகதைகள் மூலமும் மாணவர்களை டெலிவிஷன், வீடியோ கேம்ஸ் முதலியவற்றில் இருந்து திசை திருப்பலாம்.

நான் என் மகன்களுடன் ரயிலில் செல்லும்போது ஒரே சப்தத்தில் முடியும் ஆங்கிலச் சொற்களைச் சொல்லி விளையாடுவோம். ‘ஷன்’ (Tion or Sion)  என்று முடியும் சொற்கள் என்றால்

Consternation

Conflagration

Concentration

Condemnation

Education

Fruition

என்று நூற்றுக் கணக்கில் வரும்.

நாங்கள் மூவரும் சொன்ன சொற்களைக் கேட்டு ஆங்கிலேயர் ஒருவரே வியந்து பாராட்டினார். இன்னும் சிலர் மூக்கில் விரலை வைத்து வியக்காமல் கண்களால் வியந்தனர்.

தமிழிலும் இது போல அறிவு தொடர்பான விஷயங்கள்  பரவ வேண்டும்

யூ ட்யூப், You Tube, Social Media, சோஷியல் மீடியா (பேஸ் புக், வாட்ஸ் அப்), பத்திரிக்கைகள், சினிமா, நாடகங்களில் சில காட்சிகள், பள்ளிக்கூடங்களில் போட்டிகள் மூலம் இவைகளை வளர்க்கலாம்.

நான் சொல்லுவதை விளக்க ஒரே ஒரு உதாரணம்:–

“ரி” சப்தத்தில் முடிய வேண்டும்

விலங்கியல் பெயராக இருக்க வேண்டும் என்று போட்டி விதி வைத்துக் கொள்வோம். எனக்கு உடனே நினைவில் வரும் சொற்கள்

அரி- சிங்கம்

பரி-குதிரை

வரி-வண்டு

நரி- நரி,குள்ள நரி

மறி- ஆடு

கரி- யானை

கிரி-பன்றி

உரி– கடல் மீன் வகை

சுரி- ஆண் நரி

அரி-குரங்கு, சிங்கம்

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். குறுக்கெழுத்துப் போட்டிகள் பிரபலமான காலத்தில் வந்த ஆநந்தவிகடன் அகராதி போன்றவை இருந்தால், ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள வேறு பொருள்களும் வியப்பைத் தரும்

வியப்பான செய்தி

தமிழில் அகராதியே இல்லை!!! இப்போது நீங்கள் எந்தக் கடையில் சென்று எந்தப் பதிப்பக அகராதி வாங்கினாலும், ஆங்கில-தமிழ், இந்தி -தமிழ் என்று வைத்துக் கொள்ளுங்களேன். தமிழ் என்ற பெயரில், சம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும். தனித் தனியாக ஒவ்வொரு பக்கத்திலும் தமிழ்- ஸம்ஸ்க்ருத சொல் விகிதாசாரம் போட்டுப்  பார்த்தால் ஸமஸ்க்ருதச் சொற்களே அதிகம் இருக்கும்.

நம்  முன்னோர்கள்   தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் இரு கண்களாக   பார்த்ததால் தமிழ் அகராதி என்ற பெயரில் ஸம்ஸ்க்ருதச் சொற்களையும் சேர்த்தனர். ஆங்கிலத்திலும் இப்படித்தான். பிற மொழிச் சொற்களும் ஆங்கில அகராதியில் இருக்கும்.

(ஆக்ஸ்போர்டு அகராதியில் உள்ள ‘ஐயோ,’ ‘பறையா’ என்ற தமிழ் சொற்களை அகற்றக் கோரி நான் இயக்கம் நடத்தி வருகிறேன்.)

எடிமலாஜிகல் டிக்சனரி என்ற பெயரில் பர்ரோ, எமனோ போன்றோர் திராவிடச் சொற்களை மட்டும் கொண்டு சொற் பிறப்பியல் (Etymological)  அகராதி தொகுத்தனர்.

ஆனால் அதிலும் குறை கண்டேன். நீர் (Nereids=water nymphs) என்ற தமிழ்ச் சொல்

கிரேக்க மொழியிலும் உள்ளது அரிசி என்ற(Oryza) சொல் செமிட்டிக் மொழிகளிலும் கிரேக்கத்திலுமுளது. இவை தொடர்பின் மூலம் பரவியதா அல்லது மனித இனம் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தபோது பேசி, இப்போது மிச்சம் மீதியாக நிற்கின்றனவா  என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

எடுத்துக் காட்டாக சப்த=ஏழு என்ற சொல் செமிட்டிக், ஸம்ஸ்க்ருதம் போன்ற பல மொழிகளில் 3000 ஆண்டுகளாக இருக்கிறது. ஆக, சிந்து-ஸரஸ்வதி நாகரீகத்திலும் இது இருக்கவேண்டும். இப்படி அணுகினோமானால் பல புதிர்களுக்கு விடை  கிடைக்கும்.பிலோனிய தெய்வமான செப்பெத்து, யூதர்களின் சப்பத் (sabbath day= seventh day) ஆகியவை ஏழு தொடர்பானவை.

நிற்க.

சொல் ஆட்டம், சொற் சிலம்பாட்டம் விளையாடுவோம்.

தமிழை வளர்ப்போம்!!

–சுபம்–

TWO BOOKS ON AZVARS

ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

பொருளடக்கம்

1.நான் பெருந்தமிழன் :பூதத்தாழ்வார் பெருமிதம்

2. ஆழ்வார் தரும் அதிசயச் செய்தி: 7 மலை, 7 கடல், 7 முகில்;

காளிதாசர் தரும் அற்புதச் செய்தி

3. ஊர்வசியே வந்து ஆடினாலும் போகமாட்டேன் :ஆழ்வார் உறுதி

4. நம்மாழ்வாரும் ஆங்கிலக் கவிஞனும்

5. பொய்கை ஆழ்வாரின் அற்புதச் சொல் வீச்சு; பாணினியின் ஒப்பீடு

6. முடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம்

7. வேதத்திலும் ஆழ்வாரிலும் கருப்பு சிவப்பு! அப்பரும் ஆழ்வார்களும் – ஒரு ஒப்பீடு

8.நலம் தரும் சொல் – திருமங்கை ஆழ்வார் கண்டுபிடிப்பு

9.நோய்களுக்கு பெரியாழ்வார் கட்டளை

10.ஆழ்வார்கள் கேள்வி-பதில் குவிஸ்

11. கொக்கைப் போல இருப்பான், கோழி போல இருப்பான், 

உப்பைப் போல இருப்பான் பக்தன்

12. பாரதி – நம்மாழ்வார் – கிருதயுகம்

13. தமிழில் வைஷ்ணவ ஜனதோ -அசலாம்பிகையின் அற்புதக் கவிதை :

நாமக்கல் வெ .ராமலிங்கம் பிள்ளை

14.தமிழ் இலக்கியத்தில் ஓம்காரத்தின் பெருமை

15. கம்பன் கவிதையில் எட்டெழுத்து மந்திரம்

*****

தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!

(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

பொருளடக்கம்

1.திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்! ஆண்டாளும் நகைகளும்

2.பறை என்றால் என்ன ?

3.ஆண்டாளும் மொழியியலும்

4.ஆண்டாள் காலம் பற்றிக் குழப்பம்!

5.ஆண்டாள் போடும் மார்கழி மாதப் புதிர்!

6.பாவை என்பது என்ன? 

7.ஆண்டாள் பாடல்களில் இயற்கைக் காட்சிகள்! 

8.ஆண்டாள் பாடலில் உபநிஷத்தும் சன்யாசிகளும்!

9.திருப்பாவையின் அமைப்பு

10.திருவெம்பாவை- திருப்பாவை ஒப்பீடு!

11.முப்பத்து மூவர்

12.அம்பரமே தண்ணீரே சோறே!

13.‘அல்குல்’ பற்றி ஆண்டாள் பேசலாமா?

14.கம்பனுக்கும் ஆண்டாளுக்கும் பிளாக் ஹோல் எப்படித் தெரியும் ?

15.திருப்பாவை ராகங்கள்

16.ஆண்டாள் பொன்மொழிகள்

*****

17.வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை- 1; கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

18.வள்ளலார் முருக பக்தனா ? சிவ பக்தனா ?

19. தெய்வமணி மாலையில் உவமை நயம்

20. மேலும் பல உவமைகள்

21.வள்ளலார் பாடலில் கந்த புராணக் கதைகள் -5

22.வள்ளலார் பாடலில் பகவத் கீதையின் தாக்கம்- 6

23.தமிழ் வளர்த்த பாரதியாரும் வள்ளலாரும்

24.வள்ளலாரின் சிவ பக்தி!

25.வள்ளலாரும் மூலிகைகளும்!

26.வள்ளலாரின் கந்தர் சரணப்பத்து

27.அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

28.அரசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

29.நால்வர்க்கு வள்ளலார் போடும் பெரிய கும்பிடு!

30.வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்!

31.நாத்தீகர் மீது ஐந்து புலவர்கள் கடும் தாக்கு

32.ராமலிங்க சுவாமிகளின் 3 முக்கியப் பாடல்கள்

33.நான் ஏன் வடலூருக்குச் சென்றேன்?

வடலூர் வள்ளலாரின் சத்ய ஞான சபைக்கு விஜயம்

34. வள்ளலார் பொன்மொழிகள்

—subham—

அட்டையிலுள்ள ஆண்டாள் படம் , விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது; நன்றி . வடலூர் வள்ளலார் படம் லண்டன் சுவாமிநாதன் எடுத்தது.

Leave a comment

Leave a comment