

Post No. 15,316
Date uploaded in London – 28 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

நாம் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் திருப்புகழ் முதலிய பக்திப் பாடல்களைப் படிக்கையில், பக்தியில் மூழ்கி விடுவதால் அவர்கள் சொல்லும் பல அதிசய விஷயங்களைத் தவற விட்டு விடுகிறோம்; முன்னர் எழுதிய கட்டுரைகளில் விண்வெளிப் பயணம், மனு நீதி நூல் பற்றிய தகவல் , தேவியர்கள் பெயர்கள், நரகத்துக்குப் போகும் குண்டர்கள் பட்டியல், நாயாகப் பிறக்கும் துஷ்டர்கள் பெயர்கள் ஆகியவற்றை எழுதினேன்.
தமிழ்ப் பத்திரிக்கைகளின் பெயர்கள் எல்லாம் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதை நாம் அறிவோம் ; குறிப்பாக தினம் என்ற சொல் நாளேடுகளில் உள்ளது. இந்த நோக்கில் பாடல்களை பயில்கையில் நினைவு வைத்துக்கொள்வது எளிதாக இருக்கும். அருணகிரிநாதர் நமக்கு வழங்கிய சந்தம் மிகு திருப்புகழ் பாடல்களில் வரும் சில சுவையான செய்திகளைக் காண்போம்.
***
தினமணி = சூரியன்
தினகரன் = சூரியன்


தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால
தினகர னேய்ந்த மாளி …… கையிலாரஞ்
செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல்
வயிரியர் சேர்ந்து பாட …… இருபாலும்
இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை
புழுககில் சாந்து பூசி …… யரசாகி
இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய
மொருபிடி சாம்ப லாகி …… விடலாமோ
வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை
மயிலொடு பாங்கி மார்க …… ளருகாக
மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி
மலைமிசை தோன்று மாய …… வடிவோனே
கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு
கருணைகொள் பாண்டி நாடு …… பெறவேதக்
கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய
கவுணியர் வேந்த தேவர் …… பெருமாளே.
****
பொருள்
தினமணி சார்ங்க பாணி யென
சூரியன், சாரங்கம் என்ற வில்லைக் கையில் ஏந்திய திருமால் என்று சொல்லும்படியான பெருமையுடன்,
மதிள் நீண்டு சால தினகரன் ஏய்ந்த மாளிகையில்
மதில் நீளமுடையதாக, மிகுந்த சூரிய ஒளியைப் பெற்றிருக்கும் மாளிகையில்…………………….

*****

குமுதம்- அல்லி மலர்
அமுதினை மெத்தச் சொரிந்து மாவின
தினியப ழத்தைப் பிழிந்து பானற
வதனொடு தித்தித் தகண்ட ளாவிய …… விதழாராய்
அழகிய பொற்றட் டினொண்டு வேடையின்
வருபசி யர்க்குற் றவன்பி னாலுண
வருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர் …… மயல்தீரக்
குமுதம் விளர்க்கத் தடங்கு லாவிய
நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய
குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண …… தனபாரக்
குவடிள கக்கட் டியுந்தி மேல்விழு
மவர்மய லிற்புக் கழிந்த பாவியை
குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற …… அருள்வாயே
பொருள்
குமுதம்- தமிழில் அல்லி மலர் – நிலவு உதித்தவுடன் குளத்தில் மலரும்
குமுதம் விளர்க்கத் தடம் குலாவிய நிலவு எழு முத்தைப்
புனைந்த பாரிய குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண தன பாரக்
குவடு இளகக் கட்டி உந்தி மேல் விழும் … (அதரபானத்தால்) வாய் வெளுத்த வேசையர்களின், இடம் பரந்த நிலவொளி வீசும் முத்து மாலையை அணிந்த, பருத்து விளங்கும், அழகுடன் மிக்கெழுந்த, நிறைந்த பாரமான மார்பாம் மலை இளகும்படி அணைத்து, வயிற்றின் மேல் விழுகின்ற
அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை குரை கழல் பற்றிப்
புகழ்ந்து வாழ்வு உற அருள்வாயே … அந்த விலைமாதர்களின்
மோக வலையில் பட்டு அழிந்த பாவியாகிய என்னை, ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியைப் பற்றிப் புகழ்ந்து நல் வாழ்வை அடைய அருள் செய்வாயாக.
*****

தந்தி= தந்தம் உடையவன் (கணபதி/ ஏகதந்தன்)
நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் …… படியாதே
நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப் …… பதமீவாய்
வாட்டங் கண்டுற் றண்டத் தமரப் …… படைமீதே
மாற்றந் தந்துப் பந்திச் சமருக் …… கெதிரானோர்
கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப் …… பொருவோனே
கூற்றன் பந்திச் சிந்தைக் குணமொத் …… தொளிர்வேலா
வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக் …… கிளையோனே
வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப் …… பெருமாளே.
பொருள்
வேட்டம் தொந்தித் தந்திப் பரனுக்கு இளையோனே …
அடியார்களின் விருப்பத்தை (நிறைவேற்றும் பெருமானும்), தொப்பையை உடையவனும் (ஆகிய) யானைமுகப் பெருமானுக்குத் தம்பியே,
***
தினத் தந்தி என்பது லண்டனில் உள்ள டெய்லி டெலிக்ராப் என்ற பத்திரிகையைப் பர்த்து துவங்கப்பட்ட பத்திரிகை அதன் பொருள் தந்தி = டெலிகிராப் என்பதாகும் .
அருணகிரிநாதர் மேலும் பல பாடல்களில் தினமணி, தினகரன், தந்தி போன்ற சொற்களை பயன்படுத்தியுள்ளார்
***
மலர்= தாமரை

மலர் என்றால் தாமரை என்றும் பொதுவாகப் பூ என்றும் பொருள் ; தின என்ற சொல் இல்லாமல் பல இடங்களில் திருப்புகழில் மலர் வருகிறது.
முதல் பாடலிலேயே மலர் வந்து விடுகிறது !
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் – அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!
கற்பகம் எனவினை – கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய – மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு – பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய – முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த – அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புனம் அதனிடை – இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் – பெருமாளே.
பொருள்
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு – பணிவேனே
மத்தளம் போன்ற பெரிய வயிற்றை உடையவனே! உத்தமியான பார்வதி தேவியின் புதல்வனே! தேன் சொட்டும் நறுமணம் மிக்க (தாமரை) மலர்களால் உன்னை நான் பணிந்து வணங்குவேன்.
kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி
—subham—
Tags – திருப்புகழ் , பத்திரிகை பெயர்கள், தினமணி , தினகரன், குமுதம், தந்தி, மலர்