Three Beautiful Temples that I Visited in Bangkok, Thailand! (Post No.15,349)

Teenage Girls taking video film by dancing in front of the Bangkok Hindu Temple

Bangkok Buddha Temple pictures

Goddess Mother Earcth in Buddhist temple

Description of the Buddhist temple with lot of golden coloured Buddha Statues

Goddess Mother Earth worshipped in Road Junctions.

Written by London Swaminathan

Post No. 15,349

Date uploaded in Sydney, Australia –  21 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Three Beautiful Temples that I Visited in Bangkok, Thailand! (Post No.15,349)

I visited three beautiful temples in Bangkok, capital city of Thailand, on 6th and 7th of January, 2026. They are

Sri Maha Mariamman Temple

Buddha Temple and

Mother Earth Temple

***

Sri Maha Mariamman Temple is a Hindu temple on Silon Road in the heart of Bangkok city. It is about 220 years old started by the Tamil Immigrants. Vaithi Padaiyachi constructed it in a shed and slowly extended it. His son expanded it and now it looks very modern with all Hindu Gods including Brahma. The main shrine accommodates Maha Mariamman, a form of Goddess Shakti. Village God Kaththavarayan, popular gods Siva, Vishnu, Uma, Lakshmi, Sarasvati, Ganesh , Muruga/Skanda and Buddha are all worshipped there.

Sri Kannappa Kurukkal of Mariamman Temple in Bangkok.

Thai Students worshipping Goddess Mari Amman/ Shakti

Two Surprises

When I entered the temple I saw a lot of Thai students in school uniform, mostly girls, worshipping with utmost devotion. Probably they are on their way to examinations. I find more Thail devotees than Tamils in the temple. They came with plates full of fruits and garlands to offer to different Gods.

Another surprise was teenage girls were taking video film with song and dance in front of the temple. They had Kunkum/tilak on their forehead establishing their identity. Probably they wanted to do a presentation about the temple or Hinduism.

Sri Kannappa Kurukkal of Vedaranyam is the chief priest there. I got his telephone number from Vellore Sri Kalyana Sundara Sivacharya, who took me around the temple and did the temple honours to me. He told me that Vedic students from Madurai, Coimbatore and Tirunelveli are appointed as priest there. They are all young.

***

Mother Earth Temple

On my way to the Grand Palace, I saw youngsters, mostly Thai, Chinese and Vietnamese gathering in front of the Goddess Mother Earth in a road junction and lighting incense sticks. I saw the same Goddess in two more places.

All the names of Mother Goddess are from Vedic Sanskrit, only the spellings are corrupted. It was an echo of Atharva Veda where we have the oldest hymn on Mother Earth in the name of Bhumi/ Prithvi Suktas. Bhumi, Prithvi, Dharani, Ma/mother, Vaudhara and Vasundhara are used in the description of Goddess Mother earth.

But Buddhists added a new story for the worship of Mother Earth through out South- East Asian countries.

When Buddha was meditating under the Bodhi tree, Maran, the evil demon, tried to distract him and foil his attempt to attain enlightenment. But Buddha summoned Mother Earth through his Bhumi Sparsa Mudra (a hand gesture) where the fingers touch or point towards Bhumi/Earth.

Immediately Mother Earth came and twisted her long hair where from the water flew and washed away the evil Maran. These Mother Earth statues are in specially erected Mandapas, or in the gardens and in the Buddhist temples. She is on the left hand and holding Kalasha.Devotees go there to offer flowers, light up incense sticks and worship.

My Comments

Hindus are the first race in the world  to describe the land, country and earth as Mother.

Since we have no reference to Mother Earth with reference to Buddha in ancient Pali scriptures, it is actually a corrupted story of Mother Ganga and Bhumi Sukta of Atharva Veda; the proof lies in the pure Sanskrit words describing the earth.

Earth in Sanskrit words

Vasundharā -Wathondare (ဝသုန္ဓရေor Wathondara

Sri Dharaṇī=Preah Thoroni

Anangu in Tamil Nanga in Sanskrit= Nang Thorani (นางธรณี))

Kanishta Nanga= Neang Konghing (នាងគង្ហីង)

Evil Mara= Another name of Kaama/ Desire/ Manmatha

Atharva veda says

” Mata Bhumi putroham prithivyah ”  (माता भूमि पुत्रोहं पृथिव्या🙂 Meaning “Earth is my mother I am her son”. 

There are scores of other verses that glorify Mother Earth. The hymn of these verses is known as “Prithivi Sukta ” in AtharvaVeda .In these verses, prithi is described as vasudhara or vasudha (Possessor of wealth).

***

Buddha Temple with huge Golden coloured Buddha

In the heart of Bangkok city, there is a beautiful Buddha temple with serene atmosphere.

Buddhist Temple,Wat Thepthidaram, Samran Road, Bangkok

Rama III commissioned it in honour of his elder daughter Krommameaun Apson Suda Thep

52 cast figures of female monks made from tin, in meditative pose.

It is a monastic living quarters , with village atmosphere.

Great poet Sunthorn Phu resided here.

The huge temple has a big Buddha in golden colour. On the both sides the corridors have more golden Buddhas. When I went there on 7-1-2026, about fifty Buddhist monks, young and old were reciting the Pali scriptures; it sounded like the Vedic recitation in Hindu Veda Patasalas/schools. But only five devotees were there.  Whoever enters the building will go into meditation. The complex has Mother Earth Statue as well. The walls have the paintings depicting Buddha Charita.

***

Sanskrit Everywhere

When one travels in car one can notice Sanskrit words everywhere. Indra, Sri, Nagara are very common. If one studies the names of Thai people, one would find them of Sanskrit origin. Description of Mother Earth has nothing but Sanskrit. Moreover, we find Indra Festival as water festival, Makara Sankranti and Tamil New Year day corresponding with Thai New Year day, Brahmin Priests officiating Royal Thai ceremonies, recitation of Tamil Tiruvempavai of Manikkavasagar etc in Thailand. Hindu Gods including Brahma are worshipped in different temples. Ayodhya (corrupted as Ayuthaya) was the ancient capital and Kings are named Rama. Statues of Airavata Elephant with four heads are in road junctions. All these points to Hindu origin rather than Buddhist origin of Mother Earth.

Atharvana Veda has the oldest song on Mother Earth with a long and beautiful description.

Evil Mara attacking Buddha with temptations of Desire

Mother Earth in Politics and  Water Board of Thailand

— Subham—

Tags – Bangkok, Temples, Mother Earth, Brahma, Hindu Gods, Maha Mariamman Temple,  Buddha Temple, Airavata, Sanskriit everywhere, London swaminathan visit, Thai students

தாய்லாந்து நாட்டுக் கோவில்களில் நான் கண்ட அதிசயக் காட்சிகள் (Post No.15,348)

தாய்லாந்து கோவில் படங்கள் 

Hindu Girls taking video film

Sri Kannappa Kurukkal of Vedaranyam in Bangkok Temple திருமறைக்காடு கண்ணப்ப குருக்கள்

Written by London Swaminathan

Post No. 15,348

Date uploaded in Sydney, Australia –  20 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Sri Maha Mariamman Temple, Silom Road, Bangkok

எந்த நாட்டுக்குப் போவதற்கு முன்னரும் அந்த நாட்டிலுள்ள இந்து சமயக் கோவில்களைக் கூகிள் செய்து கண்டு பிடிப்பேன். தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக் கரில் மூன்று இரவு தங்குவதற்கு ஹோட்டல் அறை  எடுத்திருந்தோம்; ஏமாற்றமளிக்கும் விஷயம் டாக்சி, ஆட்டோ டிரைவர்களுக்குச் சுத்தமாக ஆங்கிலம் தெரியவில்லை. ஆனால் கடைக்காரர்களும் ஹோட்டல்காரர்களும் ஆங்கிலம் பேசுகின்றனர். எங்கள் டாக்சி டிரைவர் அவரது மொபைல் போனில் ஆங்கிலத்தில் கேள்வியைப் பதிவு செய்தார். அடுத்த நொடியில் அது தாய்லாந்து  மொழியில் வந்தவுடன் பதிலையும் அவரது போனில்  பதிவு செய்யவே அதை நாங்கள் படித்தோம் பயனுள்ள பணி.

முதல் காட்சி !

ஒருவழியாக நகரின் நடுவில் சிலான் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலை அடைந்தோம். வாசலில் முதல் அதிசயச் காட்சி!  மூன்று இளம் பெண்கள்  கோவிலின் பெயருள்ள போர்டு எழுதப்பட்டதை பின்னணியாக வைத்துக்கொண்டு ஆடியும் பாடியும் வீடியோ எடுத்தனர்; நெற்றியில் நல்ல குங்குமப் பொட்டு; ஆகையால் கோவில் பக்தர்கள் என்று தெரிகிறது வெள்ளைச் சீருடை. அருகில் செல்லத் தயங்கியதால் தொலைவிலிருந்து அவர்களை போட்டோ எடுத்தேன்

***

இரண்டாவது  காட்சி!

கோவிலுக்குள் நுழைந்தோம் இரண்டாவது அதிசயக் காட்சி! சீனர் போன்ற மகோலாய்ட் Mongoloid  முகம் உடையவர்கள் தாய் மக்கள்; பத்து அல்லது 15 தாய்லாந்து மாணவ மாணவியர் ஊதுபத்தி ஏற்றி பய பக்தியுடன்  வணங்கினார்கள். பள்ளிக்கூட சீரு டையில் இருந்ததால் பரீட்சைக்கு முன்னாலு;ள்ள பக்தி போலும். ஏனெனில் அவர்களை ஒரு தாய் ஆசிரியை புகைப்படம் எடுத்தார் அதைப்  பார்த்து நானும் போட்டோ எடுத்தேன்

தமிழர்களை விட அதிகமான தாய்லந்து பக்த்ர்கள் ; தட்டு தட்டாக பூ பழம் வாங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் கொடுத்தனர் அவர்ருடைய தீவாராதனைத் தட்டில் நிறைய தாய் கரன்சி நோட்டுகள் ஆனால் அத்தனையும் கோவில் உண்டியலுக்குள் போய்விடுமாம்.

***

திருமறைக்காடு கண்ணப்ப குருக்கள்

வேலூர் கல்யாணா சுந்தர சிவாச்சார்யார் உதவியால் நான் மாயவரம் வேத பாடசாலை அதிபர் சுவாமிநாதன் மூலம் பெற்ற கண்ணப்பர் என்ற பெயருடைய குருக்களை சந்த்தித்தோம் அவர் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் எல்லா கடவுள் சந்நிதிகளும் அழைத்துச் சென்று தக்க மரியாதை செய்தார் . கொடுத்த தட்சிணையைத் தொட மறுத்து உண்டியலுக்குள் போட்டுவிடுங்கள் என்றார்

கோவில் சுமார் 200 அல்லது 300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மலேசியத் தொழிலாளர்களால்  துவங்கப்பட்டது. வைத்தி படையாச்சி என்பவர் 1879 ஆம் ஆண்டில் கோவிலை நிர்மாணித்தார்; பின்னர் அவருடைய  மகன் இதை பெரிய அளவில் விரிவாக்கினார். மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி போன்ற  இடங்களில் வேத பாட சாலையில் படித்த பிரம்மச்சாரிகள்  கோவிலில் ஒவ்வொரு சந்நிதியிலும் பணியில் உள்ளனர்.

கோவிலுக்குள் இல்லாத தெய்வம் இல்லை; பிரம்மாவுக்குக்கூட தங்க வர்ண சிலை உள்ளது ;  பார்வதி/ உமா, சிவன், முருகன், கணபதி மஹா மாரியம்மன், காத்தவராயன், சரஸ்வதி, லெட்சுமி ஆகியோர்   முக்கிய சந்நிதிகள் ஆகும். கோவிலில் புத்தரும் இருக்கிறார் 

***

கோவிலில் காலை நேரத்தில் 9 மணிக்கு இவ்வளவு கூட்டம் வருவது எப்படி? என்று கேட்டபோது அன்னை மஹா மாரியம்மன்  மிகவும் சக்தி வாய்ந்த தேவி என்று கண்ணப்ப குருக்கள் விளக்கினார் . கோவிலுக்குள் மிகப்பெரிய சக்கரம் தமிழ் எழுத்துக்களுடன் பெரிய உருவத்தில் வரையப்பட்டுள்ளது. அதுதான் ஆகர்ஷண சக்திக்கும் காரணம் போலும். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று போர்டு உள்ளதால் அதைப்  படம் எடுக்கவில்லை.

தமிழ் வெஜிட்டேரியன் உணவு பற்றிக் கேட்டபோது அருகில் சென்னை உணவகம் இருப்பதாகச் சொன்னார்.

****

தாய்லாந்து கோவில் படங்கள் 

மஹா மாரியம்மன் கோவில்

மாணவிகள் வழிபாடு 

மாணவிகள் வீடியோ படம் எடுக்கும் காட்சி 

தங்க வர்ண  புத்தர் கோவில்

நாங்கள் சென்ற இரண்டாவது பெரிய கோவில்- தங்க வர்ணமுள்ள புத்தர் சிலை உள்ள கோவில். பிரம்மண்டமான கோவில்;

நாங்கள் தங்கிய VILLA DE KHAOSAN அருகில் இருபுறமும் தெரு ஒரக் கடைகள் உள்ள Street Market, உணவு விடுதிகள், ஏராளமான மசாஜ் கடைகள் (Massage Parlours) உள்ளன. எதிர்த்தாற்போல ஒரு பெரிய புராதன புத்தர் கோவில் உள்ளது.

Address

Buddhist Temple,Wat Thepthidaram, Samran Road, Bangkok பாங்காக்.

பெரிய புத்தர் சிலைக்கு முன்னால் ஐம்பது , அறுபது புத்த துறவிகள் பாலி மொழியிலுள்ள புத்த சமயக் கிரந்தங்களை வேத முழக்கம் போல படித்துக்கொண்டிருந்தார்கள் . பெரிய புத்தர் விக்ரகமுள்ள மண்டபத்தில்ன்  இரு புறங்களிலும் ஏராளமான தங்க நிற புத்தர் சிலைகள்! வெளியே தாழ்வாரத்தில் ஐந்து ஆறு பக்தர்கள் மட்டுமே இருந்தனர். மிகவும் அமைதியான, மனோரம்யமான சூழ்நிலை. தியானம்  என்பதையே அறியாதவர்களும் தியானத்தில் ஈடுபடச்  செய்யும் சூழ்நிலை! கிராமப்புற வேத பாடசாலைகளில் வேத முழக்கம் கேட்பதைப்  போல ஒரு தெய்வீகக் காட்சி ; அனைவரும் பார்க்க வேண்டிய தலம்.

மன்னர் மூன்றாவது ராமா  அவருடைய மூத்த புதல்வி சுதா தேப்- ஜக் கெளரவிக்க இந்த கோவிலை நிர்மாணித்தார்; பாங்காக்  நகரின் மத்தியில்  இருந்தாலும் உள்ளே சென்றால் கிராமீய சூழ்நிலை நிலவுகிறது . 52  பெண் துறவிகளின் சிலைகள் தியானம் செய்யும் நிலையில் இருப்பது கோவிலின் தனிச் சிறப்பு ஆகும். ஒருகாலத்தில் தாய்லந்தின் புகழ்பெற்ற புலவர் சுந்தரன் புது வசித்த இடம் இது

சுவர்களில் புத்தரின் வாழ்க்கைச் சரிதக் காட்சிகளை பெரிய ஓவியங்களாக வரைந்துள்ளனர். அதன் அடியில் ஆங்கிலத்தில் விளக்கத்தையும் எழுதியுள்ளனர்

***

தாய் மொழி பக்தி

தாய்லாந்து மக்கள் அவர்களின் மொழி மீது மிகவும் பற்று கொண்டவர்கள் பெரும்பாலான போர்டுகளும் அறிவிப்புகளும் அவர்களுடைய மொழியிலேயே உள்ளன.

—-Subham—

Tags- தாய்லாந்து நாட்டுக் கோவில்கள், மஹா மாரியம்மன் கோவில், பாங்காக் நகரம், நான் கண்ட அதிசயக் காட்சிகள் , பாங்காக் புத்தர் கோவில், புத்தமத துறவிகள், தங்க புத்தர்

12 வயது வானவியல் “விஞ்ஞானி” கண்டு பிடித்திருக்கும் இரண்டு புதிய குறுங்கோள்கள்! (Post No.15,347)

சித்தார்த் தனது அப்பா, அம்மாவுக்கு தனது கண்டுபிடிப்பை விளக்கும் காட்சி!

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,347

Date uploaded in London – 20 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

6-11-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

12 வயது வானவியல் “விஞ்ஞானி” கண்டு பிடித்திருக்கும் இரண்டு புதிய குறுங்கோள்கள்! 

ச. நாகராஜன்

கனடாவைச் சேர்ந்த சித்தார்த் படேலுக்கு வயது 12. டோரோண்டோவிற்கு மேற்கில் உள்ள ஒண்டாரியோவில் வசிக்கும் சித்தார்த் வானவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். 

அவன் புதிதாக 2024RX69   மற்றும் 2024RH39 என்ற இரு புதிய குறுங்கோள்களைக் கண்டுபிடித்துள்ளான். இண்டர்நேஷனல்

அஸ்ட்ரானமிகல் யூனியனின் ஒரு கிளையான மைனர் ப்ளானட் செண்டரில் அவனது கண்டுபிடிப்பு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 

“சிறு வயதிலிருந்தே எனக்கு வானவியலில் ஆர்வம் உண்டு. ஒரு டெலஸ்கோப்பை வைத்து ஐந்து வயதிலிருந்தே வானத்தில் உள்ள கிரகங்களையும் நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டிருப்பேன். விண்வெளி பற்றி பள்ளிக்கூடத்தில் ஒன்றும் சொல்லித் தருவதில்லை. பள்ளியை விட்டு வந்தவுடன் “எனது வேலையை” ஆரம்பித்து விடுவேன்” என்கிறான் சித்தார்த். 

இந்த இரண்டு குறுங்கோள்களும் தங்கள் சுற்று வட்டப் பாதையில் பத்து வருடம் சுற்றும் என்பதால் சித்தார்த் இன்னொரு பெரிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளான்.

ஒரு விண்வெளி வீரராக ஆவது என்பது தான் அது! 

எப்படி விமானத்தை இயக்குவது என்பதைக் கற்க ராயல் கனடியன் ஏர் காடட்ஸ்- இல் அவன் சேர்ந்துள்ளான். 

இங்கு தான் ஜெர்மி ஹான்ஸன் என்ற விண்வெளி வீரர் உள்ளார். இவர் அடுத்த ஆண்டு நாஸாவின் ஆர்டிமிஸ் 2  திட்டத்தின் கீழ் சந்திரனைச் சுற்றிப் பறக்க இருக்கிறார். இன்னொரு வீரரன கிறிஸ் ஹட்ஃபீல்ட் என்பவர் தான் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை இயக்கும் முதல் கனடிய குடிமகன் ஆவார். 

இண்டர்நேஷனல் அஸ்ட்ரானமிகல் செர்ச் கொலாபரேஷன் திட்டத்தில் சேர்ந்து இந்த இரு குறுங்கோள்களை சித்தார்த் கண்டான். இந்த இரு குறுங்கோள்களும் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழ கிரகத்திற்கும் இடையே உள்ளன. 

இந்தச் சாதனை தான் சித்தார்த்தின் முதல் சாதனை என்பதில்லை. இதற்கு முன்னமேயே பால் வீதி எனப்படும் மில்கி வே – இல் அவன் ஒரு வால்மீனைப் (காமட்) படம் பிடித்து புகைப்படப் போட்டியில் பரிசு பெற்றுள்ளான்.

“டெலஸ்கோப் மூலமாகப் போட்டொ பிடிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. நிறைய நட்சத்திரங்களைப் பார்த்து விட்டால் எனது ஆச்சரியம் எல்லையைக் கடந்து விடும். விண்வெளி என்பது எவ்வளவு மர்மம் நிறைந்தது என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்கிறான் சித்தார்த்.

 வாழ்த்துவோம் 12 வயது வானவியல் விஞ்ஞானியை – எதிர்கால விண்வெளி வீரரை! 

***

My visit to Grand Palace in Bangkok, Thailand (Post No.15,346)

Lodon Swaminathan in Bangkok Palace

Five headed Snake

Lodon swaminathan

Apsaras and Mythical Birds

Written by London Swaminathan

Post No. 15,346

Date uploaded in Sydney, Australia –  19 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

My visit to Grand Palace in Bangkok, Thailand (Post No.15,346)

On 6th of January this year (2026), I went to the Grand Palace in Bangkok. The main attraction in the palace is the Emerald Buddha. Though it is called emerald Buddha, it is made up of semi -precious Jade stone. The height of the image is 66 CMS including the wooden base. Now the pamphlet published by the palace says it is of 15th century Thai workmanship. But the old story is that it was made in India and was taken to many countries including Sri Lanka, Laos and Cambodia. The interesting story about the image is the King of Thailand changes its attire thrice a year on a particular day. Buddha wears three different gem studded golden attires in Rainy, Summer and Winter seasons.

The Hall that houses the image is visited by millions of people every year. It is the holiest Buddha image in the country; apart from this one, there are two more gold plated large Buddha images of 3 metres height.

The grand palace was constructed in 1782 by one of the kings of Chakri dynasty. The Kings took the title of Rama and there have been ten Ramas so far. Now the present ruler is called Rama X. Each king added some new constructions or statues. It is on the banks of Chao Praya River like the previous capitals.

***

The entrance fee is 500 Baht. But one must be decently dressed to go into the palace. Many westerners with exposed body parts and not decently dressed are stopped at the entrance and are asked to change the dress or fully cover the exposed parts. This is a good rule, also followed in the Mysuru palace in Karnataka, where even shoes are not permitted. They must walk bare footed inside the palace.

***

The Bangkok palace is divided into many parts and all the buildings are shining in golden colour. Only statues are gold plated but the buildings used specially made golden mosaics from Italy.

***

New statues excavated

In 2021 new statues were discovered when the road construction workers were digging the earth near the palace. Subsequent archaeological excavations revealed more sculptures. Historians say they came from China. Now they are placed in the courtyards of the temple of emerald buddha.

***

Another interesting coincidence is the Tamil new year day and the Thai new year day is celebrated on the same day in April every year. This establishes the Hindu cultural connections.

One can see lot of images of Garuda, vahana of Vishnu, nagas/snakes, concrete replica of Angkor wat temple of Cambodia; there are golden coloured images of Asura Pakshi, Apsaras, Kinnara and Gandharva etc.

Annual royal ploughing ceremony is held with the help of Brahmin priests.

178 episodes of Ramayana !

The cloisters that include the temple buildings have walls that are painted with 178 episodes of Ramakien story as composed by Rama I and follows prince Rama’s story in clockwise progression from the north door of the cloister opposite the Phra vihara chapel. Its scenes depict gods and humans, monkeys and demons, life inside and outside the palace and cities while four legged animals, birds and mythical animals of the Himavanta forest abound in jungles, plains and oceans.

Ramayana Paintings in the Grand Palace

***

MY OLD ARTICLES ON THAILAND

Sanskrit in Thailand (Post No.12,265)

Sanskrit in Thailand –2 (Post No.12,270)

in Thailand | Tamil and Vedas

tamilandvedas.com

https://tamilandvedas.com › tag › in-thailand

7 May 2018 — Thailand has got lot of Hindu sculptures from Ganesh to Kubera. Vedic gods Indra, Yama, Vishnu, Shiva and Brahma are also found in different …

§ 

Thailand | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › thailand

Thailand and Laos have different stories associated with it. In Thailand there lived a wise man who can speak with birds. His name was Dharmabarn (Dharma …

RAMA IS GREEN, LAKSHMANA IS GOLDEN & HANUMAN …

tamilandvedas.com

https://tamilandvedas.com › 2018/05/06 › rama-is-gre…

6 May 2018 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. RAMA IS GREEN, LAKSHMANA IS GOLDEN & …

Sanskrit in Thailand – Part 3 (Post No.12,281)July 16, 2023

–subham—

Tags- Emerald Buddha, Grand Palace, Bangkok, Thailand, King Rama X, Ramayana Paintings, London Swaminathan visit

தாய்லாந்து மன்னர் அரண்மனை பற்றிய சுவையான தகவல்கள் (Post No.15,345)

London swaminathan in Bangkok, in front of palace.

Written by London Swaminathan

Post No. 15,345

Date uploaded in Sydney, Australia –  19 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தாய்லாந்து மன்னர் அரண்மனை பற்றிய சுவையான தகவல்கள் (Post No.15,345)

லண்டன் சுவாமிநாதன் நேரில் கண்டவை

ஜனவரி 2026 ஐந்தாம் தேதி பெங்களூரிலிருந்து புறப்பட்டு ஆறு ஏழு தேதிகளில் தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக் நகரில் முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்த்தோம் . அங்குள்ள கண்கவரும் இடங்களில் ஒன்று பிரமாண்டமான அரண்மனை ஆகும். நாங்கள் தங்கிய வில்லா  தி  கசோன் VILLA DE KHAOSAN  ஹோட்டலிலிருந்து  15  நிமிடத்தில் நடந்தே சென்றோம் . அரண்மனைக்குள் நுழைவதற்கு டிக்கெட் உண்டு . டிக்கெட் கட்டணம் 500  பாட் BAHT (தாய் கரன்சி ; சுமார் 13 பிரிட்டிஷ் பவுண்ட் அல்லது 1500 ரூபாய் ). பாட் என்னும் பணம் நூறு சதங்களாக பிரிக்கப்பட்டுள்ளது

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அரண்மனைஅருகில் சாலைகள் அமைக்க பூமியைத் தோண்டியபோது பல சிலைகள் கிடைத்தன அவை சீனாவிலிருந்து வந்தவையென்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர் அவைகளும் நுழைவு வாசலிலேயே வைக்கப்பட்டுள்ளன

***

மரகத புத்தர்

அங்குள்ள மிக முக்கியமான புனிதமான சிலை மரகத புத்தர் ஆகும். உண்மையில் அது ஜேட் JADE என்னும் பச்சைக் கல்லினால் ஆனதுதான். மரகதக் கல் அளவுக்கு விலை மதிப்பில்லை என்றாலும் மிகப்பெரிய வரலாறு உடையது; இதன் உயரம் பீடம் உள்பட 66  செ..மீ  இதைப் பற்றிய இரண்டு செய்திகள்

1.இது தாய்லாந்தில் 15  ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாக ஒரு செய்தி;

2.இன்னும் ஒரு செய்தி இது இந்தியாவில் செய்யப்பட்டது.

மிகவும் சுவையான விஷயம்- அது இந்தியாவிலிருந்து இலங்கை சீனா, லாவோஸ், கம்போடியா என்று பல நாடுகளுக்குச் சென்ற பின்னர், தாய்லாந்து அதைக் கைப்பற்றியதாகும். இப்போது பாங்காக் அரண்மனையில் உள்ளது அந்த மண்டபத்தில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. வெளியிலிருந்து எடுக்கலாம்.

***

ஒரு நல்ல விஷயம் உடலின் பல பாகங்கள் தெரியும் படி உடை அணிந்தவர்களுக்கும், பேஷனுக்காக கிழிந்த டிரவுசர் போட்டுவரும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் அனுமதி இல்லை; வெளியே உடைகளை மாற்றிய பின்னர்தான் உள்ளே வரலாம் மைசூர் அரண்மனையிலும் இந்த விதி உண்டு. தாய்லாந்து அரண்மனையிலாவது செருப்பு அணிந்து செல்லலாம் மைசூர் அரண்மனையில் காலணிகளையும் கழட்டிய பின்னர்தான் உள்ளே செல்ல முடியும்

***

தாய்லாந்து (பாங்காக் ) அரண்மனை முழுதும் வேலூர் ஸ்ரீபுரம் தங்க  கோவில் போல தங்க நிறத்தில் ஜொலிக்கிறது ஆனால் வேலூர் ஸ்ரீபுரம் கோவிலில் இருப்பது சொக்கத் தங்கம் ; பாங்காக் அரண்மனையில் இருப்பதோ இத்தாலியில் செய்யப்பட தங்க நிற மொசைக் கல்தான் ; இருந்த போதிலிலும் ஜொலிப்பதில் குறைவில்லை!

நிறைய புத்தர் சிலைகள் ஆங்காங்கே உள்ளன; தங்க நிறத்தில் கருடன்கள், நாகங்கள் ஆகியனவும் உண்டு. எல்லோரையும் கவர்வது தங்க நிறத்தில் ஆளுயரம் உள்ள அசுர பக்ஷி, அப்சரஸ், கின்னர கந்தர்வ உருவங்கள்; எல்லாம் தங்க வர்ண சிலைகள் .

***

Grand Palace Entrance, Bangkok, Thailand

ராமாயணக் காட்சிகள் 

சுவர் முழுதும் ராமாயணக் காட்சிகள்

இந்த அரண்மனை நீண்ட வரலாறு உடையது அல்ல; சுமார் 250  ஆண்டு வரலாறு உடையதுதான். என்னை மிகவும் கவர்ந்தது- சுவர் முழுதும் தீட்டப்பட்டுள்ள ராமாயணக் காட்சிகள்தான் ; சுமார் 180 ராமாயணக் காட்சிகளை ஓவியங்களாக தீட்டியுள்ளனர் காரணம் என்னவெனில் தாய் மன்னர்கள் அனைவரும் ராம பக்தர்கள் இப்போது ஆளுபவரா பத்தாவது ராமன் கடந்த 250 ஆண்டுகளில் ராமன் 1 முதல் ராமன் பத்து வரை  மன்னர்களாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்துள்ளனர் இதற்கு முன்னர் இருந்த தலைநகர் அயோத்யா ; இது பாங்காக்கிலிருந்து சுமார் இரண்டு மணி தொலைவில் இருக்கிறது; பர்மாவுக்கும் சயாமுக்கும் நடந்த சண்டையில் பழைய அரண்மனை சேதமானது. சயாம் என்பது இந்த நாட்டின் பழையபெயர். அதற்குப் பின்னர் சாவோ பிரயா நதிக்கரையில் உள்ள பாங்காக் நகருக்கு மன்னர் முதலாம் ராமா 1782 – ஆம் ஆண்டில் இந்த அரண்மனையைக் கட்டி, குடியேறினார் ; பின்னர் ஆண்ட ராமக்கள் ஒவ்வொரு பகுதியாகக் கட்டி அரண் மனையை விரிவுபடுத்தினார்கள்.

இப்போது நாட்டை ஆளும் மன்னர் பத்தாவது ராமா ஆவார்

அரண்மனையில் கோல்டன் காபி கடை உள்ளது மிகவும் அருமையான காப்பி அங்கே கிடைக்கிறது

அரண்மனைக்குள் சின்ன மியூசியங்களும் உள்ளன இதில் நாட்டின் ஜவுளி, கைத்தறி முதலியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன

***

இந்த இடத்திலிருந்து 700 மீட்டர் தொலைவில் படுத்த நிலையிலுள்ள நீண்ட மிகப்பெரிய புத்தர் சிலை உள்ளது அதைப்  பார்ப்பதற்கு தணிக் கட்டணம் கொடுக்க வேண்டும்.

மரகத புத்தருக்கு பல விலை உயர்ந்த, தங்கத்தினால் செயப்பட்ட பலவகை அங்கிகள் உள்ளன. இந்துக்கள் கோவிலில், தேவி சிலைகளுக்கு வெவ்வேறு அங்கிகளை சார்த்துவது போல மரகத புத்தருக்கும் ஆண்டில் குறிப்பிட்ட தினங்களில் உடைகளை மாற்றுகிறார்கள் அதில் வைரம் முதலிய ரத்தினைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் நடக்கும் அரசர் நிலத்தை உழும் தினத்தில் பிராமண புரோகிதர்கள் சடங்குகளை நடத்துகிறார்கள் . திருவெம்பாவை ஓதப்படுவது பற்றி பல அறிஞர்கள் முன்னரே எழுதியுள்ளனர்.

***

எங்கும் சம்ஸ்க்ருதம்

தாய்லாந்தில் சாலை மார்க்கமகாப் பயணம் செய்தால் ஸ்ரீநகர், இந்திரா, மஹா , ராஜ போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை நிறையவே காணலாம்.

அரண்மனையில் நடைபெறும் விழாக்கள்:

ஏப்ரல் மாதம் – புத்தாண்டு ; தமிழ்ப் புத்தான்டு தினத்தில்;

இது தவிர மன்னர்கள் பதவி ஏற்ற தினங்கள்

***

அப்சரஸ் அழகிகள் 

ஐந்து தலை நாகம் 

கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோவில் மாடல்/மாதிரி 

தாய்லாந்து அரண்மனையில் லண்டன் சுவாமிநாதன் 

மரகத புத்தர் உள்ள மண்டபம் 

கம்போடியாவில் உள்ள புகழ்பெற்ற அங்கோர் வாட் MODEL மாதிரி ஒன்று இங்கே உள்ளது

அரண்மனைக்குள் நுழையும் போது அது பற்றிய துண்டுப் பிரசுரத்தை வாங்கிவைத்துக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

—subham—

TAGS– ராமாயணக் காட்சிகள் ,சம்ஸ்க்ருதம், தாய்லாந்து மன்னர், பாங்காக், அரண்மனை, சுவையான தகவல்கள்,பத்தாவது ராமா, மரகத புத்தர்

விமானத்திற்குள் வந்த மின்னல் பந்து! (Post No.15,344)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,344

Date uploaded in London – 19 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கல்கிஆன்லைன் இதழில் 2025 நவம்பரில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை! 

விமானத்திற்குள் வந்த மின்னல் பந்து! 

ச. நாகராஜன் 

விஞ்ஞானிகளையே திகைக்க வைத்த ஒரு சம்பவம் நியூயார்க்கிலிருந்து பறக்க ஆரம்பித்த ஒரு விமானத்தில் ஏற்பட்டது.

நடந்தது இது தான்: 

தேதி : 1963ம் வருடம் மார் மாதம் 19ம் நாள். 

நள்ளிரவு 12.05 மணிக்கு ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஃபிளைட் நம்பர் 539 நியூயார்க்கிலிருந்து வாஷிங்டன் நோக்கிப் பறக்க ஆரம்பித்தது. 

ஆகாயம் இருள் மயம். சந்திரனைப் பார்க்க முடியாதபடி இருள். ஒரே இடி மின்னல். திடீரென்று விமானத்தை ஒரு மின்சக்தி தாக்கியது. 

கெண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய ரோஜெ ஜென்னிஸன் அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

திடீரென்று எட்டு அங்குலம் குறுக்களவு உள்ள ஒரு பந்து விமானத்தின் பைலட் காபினில்லிருந்து வெளியே வருவதைப் பார்த்தார்.

சுமார் முப்பது அங்குல உயரத்தில் அந்தப் பந்து மின்னியவாறே பயணிகள் நடக்கும் நடைபாதையில் மெதுவாக வந்தது. அந்தப் பந்தின் வண்ணம் வெள்ளையும் நீலமும் கலந்த கலவையாக இருந்தது. 

நல்ல வேளையாக அது யாரும் மீதும் மோதவில்லை. ஒரு அசம்பாவிதமும் நேரவில்லை.

 விமானம் ஒருவழியாக வாஷிங்டனில் வந்து இறங்கியது. 

விஞ்ஞானிகள் இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு தங்கள் ஆய்வைத் தொடங்கினர். இதை பால் லைடனிங் (Ball Lightening) – மின்னல் பந்து – என்று கூற ஆரம்பித்தனர். 

இயற்பியல் வல்லுநர்களுக்கு இந்தப் பந்தின் தோற்றம் சவாலாக இருந்தது. 

கொலொரோடாவில் பவுல்டரில் இருந்த நேஷனல் செண்டர் ஃபார் அட்மாஸ்பெரிக் ரிஸர்ச் என்னும் நிறுவனத்தைச் சேர்ந்த எம்.டி. அத்ஷுலெர், எல். ஹூஸ், ஈ.ஹில்ட்னர் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் ஒரு கருத்தை முன்வைத்தனர்.

 இடியுடன் கூடிய மின்னல்கள் ஒரு பிரம்மாண்டமான இயற்கையான பார்டிகிள் ஆக்ஸிலரேட்டராக இருந்து புரோடான்களை மிகப் பெரும் ஆற்றலுடன் வெளியிட்டிருக்க வேண்டும்.  இந்த புரோடான்கள் வளிமண்டலத்தில்  உள்ள அணுக்கூறுகளுடன் மோதி ஆக்ஸிஜனையும் ஃப்ளோரினையும் உருவாக்கி இருக்க வேண்டும். இவை போஸிட்ரான் மற்றும் காமா கதிர்களை ஆற்றலுடன் வெளிப்படுத்தவே ,மின்னல் பந்துகள் உருவாகி இருக்கின்றன.

 இது சரிதானா என்று இதர விஞ்ஞானிகள் ஆராய ஆரம்பித்தனர். இது உண்மை தான் என்றால் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் இனி ஏற்பட்டால் மனிதர்களைக் கொல்லுகின்ற ஒரு சிறிய கதிர் இயக்கத்தை நாம் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

 அபூர்வமான ஏற்பட்ட இந்த சம்பவத்தால் கதிர் இயக்கம் பற்றிய ஒரு புதிய சிந்தனை ஏற்பட்டு விட்டது என்னவோ உண்மை தான்! 

**

மைசூர் அரண்மனையில் நான் கண்ட வெள்ளிக் கதவு! (Post No.15,343)


Written by London Swaminathan

Post No. 15,343

Date uploaded in Sydney, Australia –  18 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மைசூர் அரண்மனையில் நான் கண்ட வெள்ளிக் கதவு

கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர் நகரில் அமைந்துள்ள அரண்மனை தசரா என்னும் விஜய தசமி பண்டிகை மூலம் உலகப் புகழ் பெற்றது; வருடத்தில் பல நாட்களுக்கு ஜகஜ்ஜோதியாக மின்சார விளக்கு அலங்காரத்துடன் ஜொலிக்கும் கட்டிடம் இது. வெள்ளைக்காரர்களுக்கு ‘ஜால்ரா அடித்த’ உடையார் வம்சத்தின் வசிப்பிடம் இது. வெள்ளைக்காரர்களுக்கு ‘ஜே’ போட்டதால் இந்த அரண்மனை தப்பித்தது; திப்பு சுல்தான், வீர பாண்டிய கட்டபொம்மன் போன்று வெள்ளைக்காரர்களை எதிர்த்து இருந்தால் இது எரிக்கப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டிருக்கும் .

இந்த அரண்மனைக்கு மூன்றாவது முறையாக ஜனவரி (4-1-2026)  நான்காம் தேதி செல்லும் வாய்ப்பு கிட்டியது . உள்ளே நுழைந்தவுடன் வலது புறத்தில் வராகசாமி கோவில் கோபுரம், இதன் புனிதத்துவத்தை அதிகரிக்கிறது .

உள்ளே நுழைய கட்டணம் ரூ 120.

இது மூன்று மாடி கருங்கல் கட்டிடம்; பொது மக்கள் சில பகுதிகளை மட்டுமே காண முடியும்.

காலணிகளை கழற்றி வைத்து விட்டுத்தான் உள்ளே செல்ல முடியும்; காசு வாங்காமலே அவர்களே இந்த காலணிகளைப் பாதுகாக்கும் சேவையை அளிக்கிறார்கள்; சென்ற முறை போலவே இந்த முறையும் மேல் மாடிக்குச் செல்ல அனுமதி இல்லை; அது ராஜ குடும்பத்தின் வசிப்பிடம். ஆனால் பிரம்மாண்டமான கட்டிடங்களுடனும், சுற்றிலும் பரந்த தோட்டங்களுடனும் அமைந்த அரண்மனை பார்ப்போரின் மனதைவிட்டு அகலாது ; நடக்கும் இடமெல்லாம் ரத்தினக் கம்பளம் விரித்தாற்போல வழ வழப்பான மொசைக் தரை . மிகப்பெரிய ஹால்/ மண்டபங்களில் வர்ண, வர்ண தூண்கள் . . இது ஆங்கிலேய மற்றும் இஸ்லாமிய கலைகளின் கல ப்புடன் சுமார் 200  ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது . ராஜஸ்தான், மஹாராஷ்டிர , டில்லி அரண்மனைகளைப்  போல பழமையோ வரலாறோ கிடையாது ; காரணம் முந்தைய அரண்மனை மரத்தால் ஆனதால் ஒரு விபத்தில் எரிந்து அழிந்துபோனது.

***

மனதை விட்டு அகலாத காட்சிகள்

ஒரு பெரிய வெள்ளிக் கதவு , இறந்து போன யானையின் முகத்துடன் தந்தங்களுடன் உள்ள சுவரில் பதித்த யானை , இவை தவிர யானைந் தந்தங்கள், மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சாமுண்டீஸ்வரி, காயத்ரி படங்கள், ராம லட்சுமண, பரத, சத்ருக்னரின் பெரிய கொலு பொம்மைகள், அதே போல சரஸ்வதி, லெட்சுமி தேவி பொம்மைகள் , வரிசையாக வைக்கப்பட்டுள்ள சிம்மாஸனங்கள், ராஜ தர்பார் மண்டபம், மல்யுத்த மைதானம் , சுவர் முழுதும் ராஜ வம்ச ஓவியங்கள், இளவரசனின் பூணுல் /உபநயனம் கல்யாண படம், ராஜ வம்சப் பெண்கள் புடவை அணிந்து மிகவும் சாதாரண குடும்பப் பெண்கள் போலக் காட்சி தரும் வரைபடங்கள்.– இவை போன்றவை நமக்கு வியப்பை உண்டாக்கும் .

திரைப்படங்களில் , டெலிவிஷன் தொடர்களில் நாம் காணும் படாடோப மஹாராணிகளைப் போல ஆடம்பரத்தைக் காணவில்லை!

உடையார் வம்ச மன்னர்கள்  சாமுண்டீஸ்வரி தேவியின் பக்தர்கள்; ஒரு காலத்தில், யானை மீது தங்க அம்பாரியில் அவர்கள் பவனி வந்தனர் ; இப்போதெல்லாம் அந்த இடத்தில் தசாரா பண்டிகையில் தேவிதான் வலம்  வருகிறாள்.

மஹாபாரத கால தங்க சிம்மாசனம் கூட இந்த அரண்மனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது .

இவர்களுடைய செல்வ வளத்துக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். புகழ்பெற்ற பழைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் அம்மா சந்தியா . அவருடைய நகைகள் அப்படியே ஜெயலலிதாவாவுக்குக் கிடைத்தன ; கோர்ட்டில் அளவுக்கு அதிகமான நகைகள் இருப்பது பற்றிக் கேள்வி எழுந்தபோது அவை மைசூர் மஹாராஜா தனது தாயார் சந்தியாவுக்கு கொடுத்தவை என்று அவரே கூறினார் . இதைப் பார்க்கையில் ராஜ வம்சத்திட்டம் உள்ள நகைகளின் அளவினை நாமே யூகித்தறியலாம்.

***

, இளவரசர் உபநயனம், படங்கள் ,

 லண்டன் சுவாமிநாதன்

வெள்ளிக் கதவு, 

புல்லட் பாயிண்ட்டில் அரண்மனை புள்ளி விவரங்கள்

கட்டப்பட்ட ஆண்டு -1912

கட்டுவதற்கு ஆன காலம் – 15 ஆண்டு

அரண்மனைக்கு வடிவம் கொடுத்த கட்டிடக் கலை வல்லுநர்- ஆங்கிலேயர் ஹென்றி இர்வின் Henry Irwin

மொத்தமுள்ள வாசல்கள் -3

மிக உயர்ந்த கோபுரம்- 145 அடி

அரசின் குறிக்கோள் சம்ஸ்க்ருத மொழியில் எழுதப்பட்டுள்ளது: “न बिभॆति कदाचन” ( ந பிபேதி கதாசன = ஒருபோதும் பயப்பட வேண்டாம்).

அறைகளின் எண்ணிக்கை -175

***

யோகாவும் ராஜாவும்

மைசூர் மகாராஜாவின் வேண்டுகோளின்   பேரில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல யோகா ஆசிரியர் கிருஷ்ணமாசார்யா , அரண்மனைக்குள் யோகா கற்பித்தார் . பி.கே எஸ் அய்யங்கார், பட்டாபி ஜோஷி அவரிடம் மாணவர்களாக இருந்தனர் . முன்காலத்தில் ஒரு மைசூர் மஹாராஜா 112  ஆசன படங்களுடன் ஒரு புஸ்தகத்தை எழுதி வெளியிட்டதே இதற்கு மூல காரணம். 

***

ஒலி-ஒளிக் காட்சி Sound and Light Show

வாரத்தில் சில நாட்கள் ஆங்கிலத்திலும், சில நாட்கள் கன்னடத்திலும் அரண்மனை பற்றிய  ஒலி-ஒளிக் காட்சி நடைபெறுகிறது ; அவைகளை அரண்மனை ‘வெப்சைட்’டிலிருந்து அறியலாம் ; வாசலில் ஒலிபெருக்கி மூலமும் இதை அறிகின்றனர் .

இருப்பிடம் – மைசூர் நகரின் நடுப்பகுதி; பெங்களூருரிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் மைசூருக்கு வரலாம் .

***

யானைத் தந்தம், 

மைசூர் நகரில் மேலும் நிறைய குட்டி அரண்மனைகள் உண்டு ;அவை எல்லாம் இப்போது அரசாங்கத்துறை கட்டிடங்களாக மாறிவிட்டன .

எங்களுக்கு கார் ஓட்டிவந்த டிரைவர் எந்த, எந்த இலாகா இப்போது எந்த,எந்த க் கட்டிடங்களில் இருக்கின்றன என்று காட்டிக்கொண்டே வந்தார்; போலீஸ் அதிகாரிகள் ஒய்வு பெறும் முன்னால் கடைசி இரண்டு மாதங்கள் தங்கி அனுபவிக்கும் பெரிய அரண்மனைக் கட்டிடத்தைப் பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தையும் சொன்னார்; ஒரு போலீஸ் அதிகாரிக்கு கார் ஓட்டியதால் அவருக்கு வாய்ப்பு கிடைத்ததாம்.

—subham—

Tags– மைசூர் அரண்மனை , மஹாராஜா, உடையார் வம்சம் , வெள்ளிக் கதவு, யானைத் தந்தம், இளவரசர் உபநயனம், படங்கள் , லண்டன் சுவாமிநாதன்

அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பு – ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை! (Post No.15,342)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,342

Date uploaded in London – 18 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

11-11-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பு – ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!

ச. நாகராஜன் 

ஒரு நாள் சுபத்ரையிடம் அர்ஜுனன் போர்க்கலை பற்றியும் பத்மவியூகம் பற்றியும் கூற ஆரம்பித்தான். அவள் எதிர்காலத்தில் பிறக்கப்போகும் அபிமன்யுவை கர்ப்பத்தில் கொண்டிருந்ததை அவன் அறியவில்லை. சுபத்ரையின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை, அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கிருஷ்ணர் சுபத்திரை கர்ப்பிணியாக இருக்கிறாள் என்றும் அவன் கூறுவது குழந்தையின் மீது பெரும் செல்வாக்கை ஏற்படுத்தும் என்றும் கூறினார். 

பாரதத்தில் கர்ப்பமாக உள்ள பெண்மணிகளிடம் வீரரர்கள், மகான்களைப் பற்றிச் சொல்வது பண்டைய கால வழக்கமாகும். இதனால் அந்த நல்ல கதைகளினால் நல்ல அதிர்வுகளைப் பெறும் தாயிடமிருந்து அவற்றை கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளும் பெறுவார்கள். இதை பழங்கால ரிஷிகள் நன்கு அறிந்திருந்தனர்.

மார்க்கண்டேயர், துருவன், ப்ரஹ்லாதன் போன்ற அருமையானவர்களைப் பற்றி கர்ப்பிணிகளிடம் சொல்வது வழக்கம்.

.இன்று என்ன நடக்கிறது? கர்ப்பிணிகள் டெலிவிஷன்,, சினிமா மற்றும் அபத்தமானவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் குற்றங்களும் செக்ஸும் தான் இருக்கின்றன.  இதனால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் தேவையற்ற போக்கைக் கொள்கிறார்கள்.

இன்று மேலை நாட்டு விஞ்ஞானிகள் மஹாபாரதம் சொன்னதை அப்படியே ஆமோதிக்கிறார்கள்.  அமெரிக்காவில் கரோலினா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இன்ஸ்டிடியூட் ஆஃப் சைல்ட் ஹெல்த் அண்ட் ஹ்யூமன் டெவலப்மெண்ட் குழந்தைகள் எதனால் செல்வாக்குக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டது.  அந்தோணி கேஸ்பர் (Anthony Casper)

என்னும் ஒரு திறமையான விஞ்ஞானி பல்வேறு சோதனைகளை மேற்கொண்டார். அவர் கிருஷ்ணர் சொன்னது அனைத்தும் உண்மை என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார். கிருஷ்ணரின் உபதேசங்களை நமது கெட்ட வாசனைகளைக் கொண்ட மனங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.

அந்தோணி கேஸ்பர் 1984ம் ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி தனது கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகளின் மாநாட்டில் அறிவித்தார்.  ஒரு கர்ப்பிணி உண்ணும் உணவும் அவள் கேட்கும் வார்த்தைகளும், எண்ணும் எண்ணமும் அவள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் உள்ள உண்மைகளை இன்றைய விஞ்ஞானிகள் ஆராய முன்வந்திருப்பது வரவேற்க வேண்டிய ஒரு அம்சமாகும்.

இதற்கு நேர் மாறாக பெரும் பண்பாட்டைக் கொண்ட இந்த மாபெரும் தேசத்தில் பிறந்தவர்கள் இந்த இலட்சியத்திற்கு எதிராக நடந்து கொண்டு தங்கள் வாய்ப்புகளை வீணடிக்கிறார்கள்.

 அமெரிக்க விண்வெளிவீரரான  மிட்செல் (Mitchell)  சந்திரனில் இறங்கியவுடன் அங்கிருந்து பூமியைப் பார்த்தார். அவர் பூமியை நீல வெல்வெட் கம்பளத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஜொலிக்கும் பெரிய வைரமாகக் கண்டார். இந்த அற்புதக் காட்சியைக் கண்ட அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அவர் உணர்ச்சி வசப்பட்டார்.

“இந்த அற்புதமான பூமியில் பிறந்தோர் ஏன் இப்படி ஒன்றும் அறியாமல் கெட்ட மனதுடன் இருக்கிறார்கள்? ஒரு வைரத்திலிருந்து தான் இன்னொரு வைரம் உருவாகும். ஒரு கல்லிலிருந்து அல்ல. புனிதமான மண்ணைக் கொண்ட அன்னை பூமியிடமிருந்து ஏன் இப்படி கெட்ட மனிதர்கள் உருவாக வேண்டும்”  என்று இப்படி அவர் கேட்டார்.

 அவர் தனது கேள்விக்கான விடையை மனிதர்கள் நல்ல பண்புகளைக் கொள்ளாமல் உலோகாயத வேடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதே காரணம் என்று அறிந்து கொண்டார்.

எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் சரி, தர்மத்துடன் கூடிய நடத்தை வேண்டும். இல்லையேல் மற்ற அனைத்தும் வீண் தான்.

உண்மையான கல்வி நல்ல இதயத்தைப் பண்படுத்துவதாக இருத்தல் வேண்டும்.

அப்படிப்பட்ட ஒருங்கிணைந்த வாழ்க்கையைக் கொண்ட மனிதர்களே இந்த தேசத்தின் இன்றைய தேவையாகும்.

** 

22-11-1985 அன்று ஶ்ரீ சத்யசாயி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் லேர்னிங்-இல் நான்காவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைகழக வேந்தரான ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரையின் ஒரு பகுதி.

சோமநாத்பூரில் நான்  கண்ட அற்புத சிற்பற்பங்கள் (Post No.15,341)

London Swaminathan standing with a bag , Somnathpur

Written by London Swaminathan

Post No. 15,341

Date uploaded in Sydney, Australia –  17 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 சோமநாத்பூரில் நான்  கண்ட அற்புத சிற்பற்பங்கள் (Post No.15,341)

Lodon Swaminathan in Somnathpur

1

சோம்நாத்பூர் எங்கே உள்ளது ?

கர்நாடக மாநிலத்தில் மைசூர் நகரிலிருந்து 35  கிலோமீட்டர் தொலைவில் சோம்நாத்பூர் இருக்கிறது. அதைப்பார்த்துவிட்டுத் திரும்புவதற்கு அரை நாள் போதும் .

2

அங்கே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது ?

ஹொய்சாளர் கட்டிடக்  கலையை ஒரே இடத்தில் கண்டுகளிக்க முடியும் . ஹலபேடு , பேலூர் போன்ற இடங்களில் பரந்த வெளியில்  காணும் சிற்பங்களை இங்கே ஒரே கட்டிடத்தில் காண முடியும். ஏனெனில் அவைகளை ஒப்பிடும்போது சின்னது.

இது சென்ன கேசவர் கோவில் ஆகும்; ஆயினும் இப்போது வழிபாடு இல்லை ; தெய்வங்களுடைய சந்நிதிகள் வழி பாடில்லாமல் உள்ளன  கோவில் என்பதால் காலணிகளை வெளியே  வைத்துவிட்டு உள்ளேசெல்ல வேண்டும்.

நட்சத்திர வடிவ மேடையில் அமைக்கப்பட்டுள்ள கோவிலை வலம் வருவதற்கு பாதை உள்ளது; அதில் நடந்து சென்று வெளிப்புறச் சுவரில் உள்ள இந்து தெய்வங்களைக் காணலாம் .

கேசவர், ஜனார்த்தனர்,  வேணுகோபாலர் என்ற மூன்று சந்நிதிகள் உள்ளன; கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகளில் இராமாயண, மஹாபாரத பாகவத புராணக் கதைகளை சித்தரித்துள்ளனர்  . கோவில் கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது

ராமாயண, மஹாபாரதக் காட்சிகளை சிற்பங்களாக வடித்துள்ளார்கள்; அங்கு என்ன இருக்கிறது என்பதைப் படிக்காமல் போனால் எல்லா சிற்பங்களும் ஒன்று போலவே தெரியும் .ஆகையால் படித்துவிட்டுப் போவது நல்லது. அல்லது அங்குள்ள கைடுகளுக்குக் காசு கொடுத்து அமர்த்திக்கொள்ள வேண்டும்.

3

நான் ஏன் சென்றேன் ?

ஏறமுடியாத சிரவணபெலகொலா மலை, பேலூர், ஹளபேடு போன்ற இடங்களை பார்த்துவிட்ட எனக்கு மைசூருக்கு மிக அருகிலுள்ள சோம்நாத்பூரினைக் காணாதது ஒரு குறையாக இருந்தது .நான் பார்த்த மதுரை மீனாட்சி கோவிலையே நூறு முறைக்கும் மேலாகப் பார்த்த எனக்கு இனிமேல் ஒவ்வொரு தடவை ஒரு ஊருக்குப் போகும்போதும் புது இடங்களைக் காண வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது ; அவ்வாறே  சங்கல்பம் செய்துகொண்டேன் . இந்த முறை கர்நாடக மாநிலத்துக்குச் சென்றபோது மேலுக்கோட்டை , ஸ்ரீரங்கப்பட்டணம் (3-1-2026), சோம்நாத்பூர் (4-1-2026) என்ற இடங்களை முதல் முறையாகக் கண்டேன்; ஏற்கனவே பார்த்த மைசூர் அரண்மனையையும் சாமுண்டீஸ்வரி கோவிலையும் மீண்டும் மூன்றாவது முறையாகப் பார்த்தேன்.

4

கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்ன?

எந்த இடத்துக்குப்  போகும் முன்னர் திறக்கும் நேரம், மூடும் நேரத்தை அறிய வேண்டும் . சோம்நாத்பூர்  சிற்பக் களஞ்சியம், தொல்  பொருட் துறைக் கட்டுப்பாட்டில் இருப்பதால் காலை   பத்து மணிக்குத்   திறந்து மாலை ஐந்து மணிக்குப்  பூட்டி விடுவார்கள்.

 5

கட்டணம் எவ்வளவு ?

உள்ளே நுழைவதற்கு கட்டணம் இருபது ரூபாய் தான் . ஆனால் Google Pay கூகுள் பே மூலம் கொடுக்க வேண்டும் என்பதால் கொஞ்சம்  கஷ்டப்பட்டோம். வெளிநாட்டுப் போன்களில் அந்த வசதி இல்லை. பின்னர் பிறரிடம் பணத்தைக் கொடுத்து கூகுள்  பே  செய்தொம் ; இரண்டு மணி நேரத்தில் முடிந்தவரை சுற்றிப்பார்த்து போட்டோ எடுத்துத் திரும்பினோம்.

6

வரலாறு என்ன ?

ஹொய்சாள மன்னர் மூன்றாவது நரசிம்மன் பிராமணர்களுக்கு கொடுத்த நிலத்தில் அமைக்கப்பட்ட  விஷ்ணு கோவில் இது ; சுமார் 750 ஆண்டுகள் பழமையானது.

கோவிலுக்கு வெளியே மிக உயரமான கருட ஸ்தம்பம் இருக்கிறது அதன் உச்சியில் கருடன் உருவம் இப்போது இல்லை .

மாலிக்காபூர், முகமது பின் துக்ளக் போன்ற மத வெறி பிடித்த முஸ்லீம்கள் இதைச் சுற்றியுள்ள பல கோவில்களை இடித்துத் தள்ளிவிட்டனர். இது தப்பிப் பிழைத்தது அதிசயமே.

மூன்றாவது நரசிம்மரின் படைத்தளபதி சோமநாத தண்டநாயக அமைத்த  அக்ரரஹாரம் (பிராமணர் குடியிருப்பு) இது.

முக்கியக் கோவிலுக்கு வெளியே தூண்களுள்ள பிரகாரங்கள் உள்ளன. அதில் இந்து மத, சமண மத சந்நிதிகளில் பல தெய்வங்களைக் காணலாம்.

பேலூர் , ஹளபேடு ஆகிய கோவில்களுடன் இதையும் யுனெசுகோ உலக பாரம்பர்ய தலங்களில் ஒன்றாக அறிவித்ததுள்ளது.

7

சுவர்களில் காண வேண்டிய சிற்பங்கள்:

ராமாயண காட்சிகளில் சில:

தசரதர் செய்த புத்ர காமேஷ்டி யாகம், குழந்தைகள் பிறந்து தொட்டிலில் ஆட்டியது, , தாடகை வதம், சீதை திருமணம்,  விராடன், சூர்ப்பனகை , மாய பொன் மான் சம்பவங்கள், ஹனுமான், ஜடாயு சுக்ரீவன் உருவங்கள் .

***

பாகவத புராண காட்சிகளில் சில:

பாற்கடலில் பள்ளிகொண்ட விஷ்ணு, கிருஷ்ண ஜனனம், யமுனை நதியைக் கடத்தல்,  கிருஷ்ணரின் பால்ய லீலைகள்

கோவர்த்தன மலையைத் தூக்கிப்பிடித்தது, பூ தனை, கம்சன் போன்றோரை வதம் செய்தது

**

மஹாபாரதக் காட்சிகள்

திருதராஷ்டிரன் சபை, பாண்டவர் வனவாசம், பீமன்- ஹிடும்பி திருமணம், கடோத்காஜன் பிறப்பு,

அர்ஜுனன் அம்பு விட்டு மீனை அடித்தல்; திரெளபதி திருமணம் , சூதாட்டம், போர்க்களக் காட்சிகள், பாண்டவர் வெற்றி.

**

பொது சிற்பங்கள்

தாண்டவமாடும் கணேசர்,

நடனம் ஆடும் சரஸ்வதி

கிருஷ்ணரின் பல வடிவங்கள்

தசாவதாரங்கள்

லட்சுமி நடனம் ஆடுதல்

பிரம்மா

ஹரிஹரன் (சிவன் +விஷ்ணு)

துர்கா

மஹிஷாசுரமர்த்தனி i

நடனம் ஆடும் விஷ்ணு

8

தூண்களும் கூரையும்

கோவிலுக்குள் உள்ள குடை வடிவக் கூரைகள் அற்புத வேலைப்பாடுகள் உடையவை . அவைகளை அண்ணாந்து பார்த்து ரசிக்க வேண்டும்.

தூண்கள் ‘லேத்’ என்னும் கடைசல் எந்திரக்  கருவிகள் மூலம் கடைந் தெடுக்கப்பட்டவை.

ஒவ்வொரு சிலை மீதுள்ள நகைகளையும் கவனிக்க வேண்டும்; யானை மீது கூட அலங்காரம் இருக்கிது சிலைகளின் கைகளில் உள்ள பொருட்களும் அவை யாருடையவை என்பதைக் காட்டும்

9

கன்னட கல்வெட்டு 

அருமையான அற்புதக் கல்வெட்டு!

பழைய கன்னட மொழியில் 2 மன்னர் செய்த தானங்கள் மற்றும் பணிகளைக் கூறும் கல்வெட்டு கோயிலுக்குள் நுழைந்தவுடன் தென்படும்; ஆங்கிலத்திலும் விளக்கம் உள்ளது.

கல்வெட்டுப் பலகையின் உயரம் சுமார் மூன்று மீட்டர் ; இதில் நான்கு செய்திகள் உள்ளன மூன்றாவது நரசிம்மர் கால தானங்கள் இரண்டும் மூன்றாவது வல்லாள மன்னனின் தானங்கள் இரண்டும் உள்ளன கல்வெட்டின் மேல்புறத்தில் கோவிலின் மூன்று தெய்வங்களும் செதுக்கப்பட்டுள்ளன. முதல் கல்வெட்டில் 91  வரிகள் பழைய கன்னட லிபியில் செதுக்கப்பட்டுள்ளன. அதிலுள்ள மொழி கன்னடமும் சம்ஸ்கிருதமும் ஆகும் .கோவிலிலுள்ள தெய்வங்களின் வழிபாட்டிற்காக மூன்றாவது நரசிம்ம மன்னன்  3000  பொற்காசுகள் அளித்தையும் சோமைய தண்ட நாயக்கன்பேரில் அக்ரஹாரம் அமைக்கப்பட்டதையும் இது தெரிவிக்கிறது. அவனுடைய உறவினர்கள் மல்லிதேவ, சிக்க கேடய தண்ட நாயகர்கள் கோவிலின் பராமரிப்புக்கு நிதி  உதவிய செய்தியும் உளது. கல்வெட்டின் காலம் பொது ஆண்டு 1268 CE  மற்றும் 1276  CE.

அடுத்த கல்வெட்டில் 42 வரிகள் அதன் காலம் 1281 . ஆசார்யர்கள், வைஷ்ண வர்கள் நம்பிகள்  ஆகியோருக்கு மூன்றாவது நரசிம்ம மன்னன் கொடுத்த நிலங்கள் , கிராமங்கள் ஆகியவற்றில் கிடைக்கும் பலன்களை , வருவாய்களை கோவிலுக்குச் செலவழித்தது போக மீதியுள்ளவற்றை அவர்கள் அனுபவிக்கலாம் என்ற செய்தி உள்ளது.

கன்னட மொழியிலுள்ள மூன்றாவது கல்வெட்டு மன்னன் மூன்றாவது வல்லாளன் செய்த தானம் பற்றியது அதிலுள்ள வரிகள் 52 ; அதன் காலம் 1300 CE . சோமநாதபுர மக்கள் அங்குள்ள வைஷ்ணவ , சைவ கோவில்களில் எவ்வித வழிப்பாட்டினைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அரச  கட்டளை இது .ஒவ்வொரு கோவிலுக்கும் ஒதுக்கப்பட்ட நிலபுலன்கள், செலவழிக்க வேண்டிய நிதி முதலிய விவரங்களை இது தெரிவிக்கிறது.

கன்னட மொழியிலுள்ள நாலாவது கல்வெட்டு மன்னன் மூன்றாவது வல்லாளன் செய்த தானம் பற்றியது அதிலுள்ள வரிகள் 34 ; அதன் காலம் 1326 CE. இந்தக் கல்வெட்டு ஆறு தட்டின மஹாஜனங்களுக்கும் வைஷ்ணவ மஹாஜனங்களுக்கும் இடையேயுள்ள உடன்பாட்டினைக் கூறுகிறது; கால்வாய் மற்றும் குளத்தினைப் பராமரிக்க வைஷ்ணவ மஹாஜனங்கள் ஆண்டுக்கு ஆறு பொற்காசுகளை அளிக்க வேண்டும் என்பது உடன்படிக்கை.

இரண்டு மன்னர்களின் நான்கு செய்திகளை இப்படி ஒரே கல்வெட்டில் காண்பது ஒரு அதிசயமே . ஒவ்வொன்றும் வெவ்வேறு தேதி உடையவை என்பதும் குறிப்பிட்ட தக்கது.

–subham—

Tanks–சோமநாதபுரம், கர்நாடகம், ஹொய்சாளர் கலை, நரசிம்ம மன்னன், வல்லாள மன்னன், கல்வெட்டுச் செய்திகள்  , கன்னட கல்வெட்டு சென்ன கேசவர் கோவில் , ப டங்கள், சோம்நாத்பூர், London Swaminathan 

உலகையே மாற்றும் மனித ரொபாட்! (Post No.15,340)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,340

Date uploaded in London – 17 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

27-10-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!

உலகையே மாற்றும் மனித ரொபாட்!

ச. நாகராஜன் 

நாளுக்கு நாள் உலகில் அதிக வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறதே என்று இளைஞர்கள் கவலைப்படுகின்றனர்.

“இடைவிடாமல் எங்களுக்கு உதவி செய்ய யார் இருக்கிறார்கள்?” என்று முதியவர்களும் கவலைப்படுகிறார்கள். 

இதற்கு ஒரு தீர்வு தான் என்ன?

வேலைப் பளு தாங்காமல் வேலைக்குப் போகும் பெண்மணிகள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இதற்கும் தீர்வு உண்டா? 

இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் மனித ரொபாட் என்பது தான்.

 ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் மனிதர்களுக்கு வீட்டில் உதவி செய்ய சின்னச் சின்ன இயந்திரங்கள் வர ஆரம்பித்தன.

 இன்றோ மலைக்க வைக்கும் அளவிற்கு மனித ரொபாட் அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்.

 மனிதனைப் போலவே அதே உயரம், அதே அழகிய அமைப்புடன் டைனிங் டேபிளுக்கு வந்து, “இதோ, காப்பி” என்று காப்பி கோப்பையைத் தரும் காட்சி கண் கொள்ளாக் காட்சி தானே

உலகில் ஜப்பானிய கம்பெனிகளும், பெரிய அமெரிக்க நிறுவனங்களும் இப்போது விதவிதமான மனித ரொபாட்டுகளைத் தயார் செய்ய ஆரம்பித்து விட்டன.

வீட்டு உதவி ரொபாட்டுகள், வாக்குவம் க்ளீனரில் ஆரம்பித்து பெப்பர் என்ற பர்ஸனல் கம்பேனியன் ரொபாட் நம்முடன் ஜாலியாகப் பேசி நமது அன்றாட ஷெட்யூல்களில் உதவி செய்கிறது. இதை சாஃப்ட் பேங்க் ரொபாடிக்ஸ் என்ற நிறுவனம் தயார் செய்திருக்கிறது.

 மெடிகல் ரொபாட்டுகள் அறுவைச் சிகிச்சையில் உதவி செய்கின்றன. ரொபாட்டின் கரங்கள் நுட்பமாகச் செயல்படுகின்றன.

 வயதானவர்களுக்கு பெப்பர் ரொபாட் உதவி செய்வதோடு அவர்களின் நேரத்தை இனிமையாகப் போக்க அரட்டை அடிக்கவும் செய்கிறது!

 தொழிலகங்களை எடுத்துக் கொண்டால் ஆடோமேடட் கைடட் வெஹிகிள் இப்போஒது தயார். குகா என்ற நிறுவனம் இதை இப்போது தயார் செய்கிறது. தேர்ந்தெடுத்து நிர்ணயிக்கப்பட்ட சாலை வழிகளில் இது பத்திரமாக உங்களைச் சேர வேண்டிய இடத்தில் சேர்ப்பிக்கும்.

 கல்வித் துறையிலோ ஹ்யூமனாய்ட் ரொபாட்டுகள் மாணவர்களுக்கு பலவித புதிய உத்திகளைக் கற்றுத் தருகின்றன.

 விவசாயத்துறையில் அறுவடைக்கு ரொபாட்டுகள் தயார்.

 ட்ரோன்கள் கல்யாண வீடுகளில் உயரப் பறந்து கண்காணிப்பதையும் போட்டோ எடுப்பதையும் அனைவரும் பார்த்து வருகிறோம்            ட்ரோன்கள் டெலிவரி செய்யும் விதமே தனி. ஒவ்வொரு வீட்டிற்கும் இனி டெலிவரி ட்ரோன்களினால் தான்!

 இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்ட குண்டுகள் முழுதுமாக இன்னும் அகற்றப்படவில்லை. இப்போது பாம் டிஸ்போஸல் ரொபாட் ரெடி. இவை பயமில்லாமல் வெடி குண்டுகளை அகற்றி விடும்.

அடுத்து நெடுங்காலமாகப் பேசப்பட்டு வரும் மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதா என்ற சர்ச்சைக்கு ஒரு முடிவு வந்து விட்டது. மனிதர்கள் முகத்தைச் சுளிக்கும் வேலைகளில் ரொபாட்டுகள் இறங்கி நொடியில் கழிவுகளை அகற்றி விடும்!

 முதுகெலும்பில் அடி,  பக்கவாதம் – நடக்கவே முடியவில்லை. கவலை வேண்டாம். ரீ ஹாபிலிடேஷன் ரொபாட்டுகள் இப்படி அங்கங்களில் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும். அவர்களை நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லும். எக்ஸோ பயானிக்ஸ் என்ற நிறுவனம் இந்த வகை ரொபாட்டுகளைத் தயார் செய்கிறது.

 சுற்றுப்புறச்சூழலையும் காலநிலையையும் கண்காணித்து உதவ மரைன் ரொபாட்டுகள் ரெடி.

 கடைகளில் சென்று சாமான்களை வாங்குகிறீர்களா? அசோனொமஸ் ஷாப்பிங் கார்ட் என்னும் வண்டிகள் உங்கள் சாமான்களைச் சேகரித்து பில் கவுண்டரில் கொடுத்து விடும். உங்கள் கார் வரைக்கும் வந்து சாமான்களை பத்திரமாக இறக்கி விடும்.

அன்றாட ரொடீன் வேலைகளுக்கு உதவி செய்ய ஸ்மார்ட் ஹோம் ஹப்ஸ் என்ற ரொபாட்டுகள் ரெடி. இவை அன்றாட வேலைகளை நிகழ்ச்சி நிரலாக்கி உங்களுக்கு எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று சொல்லி உதவும்.

 இன்னும் தானே டிரைவ் செய்யும் கார்கள், ஹோட்டலில் பரிமாறும் ரொபாட்டுகள், திருடர்கள் வருகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் விசேஷ ரொபாட்.. அடடா…. பட்டியல் நீளமாகப் போகிறது….

 எதிர்கால உலகம் இனிமையான உலகம். சோம்பேறிகளாக மனிதர்கள் ஆகி விடாமல் இருந்தால் சரி தான்!

எல்லாம் ரொபாட்டே பார்த்துக் கொள்ளும் என்றால் மனிதனுக்கு இனி என்ன தான் வேலை!

***