Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷிதச் செல்வம்!
கோடி காரியங்களை ஒதுக்கி விட்டு ஹரி பஜனை செய்க!
ச. நாகராஜன்
நல்லோர்களின் குணங்கள் கஸ்தூரி மணம் போல!
சந்த; ஸ்வத ப்ரகாஷாந்தே குணா ந பரதோ ந்ருணாம் |
ஆமாதோ நஹி கஸ்தூர்யாம் சபதேன விபாவ்யதே ||
சந்த புருஷர்கள் (நல்லோர்) தனது சொந்த குணங்களினாலேயே பிரகாசிக்கின்றனர். பிறருடைய குணங்களினால் அல்ல. கஸ்தூரியின் மணம் சொந்தமாகவே உறுதிப்படுத்தப்படும்.
கெட்டவர்களுடன் சேராதே!
யதி சத்ஸங்கவிரதோ பவிஷ்யஸி பவிஷ்யஸி |
அத: துர்ஜனசம்ஸர்கே பதிஷ்யஸி பதிஷ்யஸி ||
சத்புருஷர்களுடன் (நல்லோருடன்) ஒருவன் சேராவிட்டால், அவன் இன்னும் கூட தன்னால் வாழ்க்கையை நடத்த முடியும். ஆனால் ஒருவன் தீயோருடன் சேர்ந்தால் அவனும் தீயவனாகவே ஆகி விடுவான்.
சந்தனமரத்தைச் சுற்றிய பாம்புகளால் மரம் பாதிக்கப்படாது!
விக்ருதிம் நைவ கச்சந்தி சங்கதோஷேன சாதவ: |
ஆவேஷ்டிதம் மஹாசர்ப்பைஸ்ஸந்தனம் ந விஷாயதே ||
மற்றவர்களுடன் சேர்ந்திருந்தாலும் கூட நல்லவர்கள் கெட்டுப் போக மாட்டார்கள். சந்தன மரத்தைச் சுற்றி பாம்புகள் இருந்தாலும் கூட அது சர்ப்பவிஷத்தால் பாதிக்கப்படமாட்டாது.
கோடி காரியங்களை ஒதுக்கி விட்டு ஹரி பஜனை செய்க!
சதம் விஹாய போக்தவ்யம் சஹஸ்ரம் ஸ்த்ரானமாசரேத் |
லக்ஷம் விஹாய தாதவ்யம் கோடி த்யக்த்வா ஹரி பஜேத்
|\
நூறு செயல்களை ஒதுக்கி விட்டு ஒருவன் உண்ண வேண்டும்.
ஆயிரம் காரியங்களை விட்டு விட்டு குளிக்க வேண்டும்.
லக்ஷம் காரியங்களை விட்டு விட்டு ஒருவன் தானம் வழங்க வேண்டும்.
கோடி செயல்களை ஒதுக்கி விட்டு ஒருவன் ஹரி பஜனை செய்ய வேண்டும்.
Date uploaded in Sydney, Australia – 10 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Ancient Tamil Encyclopaedia -Part 50; One Thousand Interesting Facts -Part 50
Puranānūru 23, Poet Kallādanār sang to Pandiyan Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan,
Item 346
Most celebrated battle in Sangam Tamil literature is Thalaliaalnkaanam battle. Pandya King Neduncheziyan defeated Chera, Choza and five chieftains. It is sung in over 13 poems.
Puranānūru 18, 19, 23, 24, 25, 26, 76, 77, 78, 79, 371 and 372 were written for this king, who wrote poem 72
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான்.
347
There is a big difference in the wars fought in previous Yugas and Kaliyuga. Ramayana and Mahabharata show us Dharma Yuddha where people were not killed or villages, towns and houses were not targeted.
Tamils are very clear about the destructions that happened in wars. They cut down the Totem trees in every place and set fire to the houses. We may guess that people ran away and escaped.
348
Poet Kalladanar mentioned that happened in the forest where the male deer was killed by a tiger; probably tiger is compared to the Pandya king.
349
Lord Skanda (Murukan in Tamil) was the Head of Divine army and so he is called Deva Senapati (Commander).
Puranānūru 23, Poet Kallādanār sang to Pandiyan Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan,
1
Like the warriors of Murukan who killed Soor, who wear garlands with green kadampam leaves with
2
Protected trees in the groves have been chopped with sharp axes in every town. Fires have been set and beautiful homes in large cities are consumed by flames.
3
You stood like the god of death and ruined your enemies at Thalaiyālankānam.
4
after her mate with antlers was killed by a male tiger.
வெளிறில் நோன் காழ்ப் பணை நிலை முனைஇக் களிறு படிந்து உண்டெனக் கலங்கிய துறையும், கார் நறுங்கடம்பின் பாசிலைத் தெரியல்
1 சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின் கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் 5 கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில் கொள் பதம் ஒழிய வீசிய புலனும், வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும் கடி மரம் துளங்கிய காவும், நெடுநகர் வினை புனை நல் இல் வெவ்வெரி நைப்பக் 10 கனை எரி உரறிய மருங்கும், நோக்கி நண்ணார் நாண நாள்தொறும் தலைச்சென்று, இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும் துன்னல் போகிய துணிவினோன் என,
2 ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை15 ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட கால முன்ப நின் கண்டனென் வருவல்,
3 அறு மருப்பு எழிற் கலை புலிப்பால் பட்டெனச் சிறுமறி தழீஇய தெறி நடை மடப்பிணை பூளை நீடிய வெருவரு பறந்தலை 20 வேளை வெண்பூக் கறிக்கும் ஆள் இல் அத்தம் ஆகிய காடே.
****
Item 350
Strange obsolete verbal forms
Mankudi Kizar used UNTHU for UM in three verbs. We don’t see such forms after Sangam age. But it is allowed by Tolkappiam
Bangles worn by Tamil women are mentioned by the poet in many palves.
Puranānūru 24, Poet Mānkudi Kizhār sang to Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan,
…………………………..
flowers from trees with ocean sprays, embrace women donning bright bangles, and in the cool, fragrant seashore groves where bees swarm around flowers, women wearing shining bangles and mundakam flower garlands mix the juices from young fruits ……………………………..
352 Astrology
May the stars of your enemies not endure! Your efforts are praised by your warriors who live by the sword and are long linked to your clan as your long life is linked to your body.
(Kings’ birth stars are celebrated on a grand scale; Sathayam Festival of Raja Raja Choza is celebrated even today; prisoners were released on such days)
Those who come to you in need praise your generosity, and you drink cool, fragrant liquor served in golden bowls by women with glittering bangles.
***
353 Swami Vivekananda
May you live with joy! Scholars say that only those who have lived like you have truly lived. There are many in this ancient, wide world who have not lived like you, and they are considered as not living, but dead!
Swami Vivekananda’s Famous quote
They alone live who live for others, the rest are more dead than alive.
புறநானூறு 24, பாடியவர்: மாங்குடி கிழார், பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்,
1
நெல் அரியும் இருந்தொழுவர் செஞ்ஞாயிற்று வெயில் முனையின், தெண்கடல் திரை மிசைப் பாயுந்து, திண் திமில் வன் பரதவர் வெப்புடைய மட்டுண்டு 5 தண் குரவைச் சீர் தூங்குந்து, தூவற் கலித்த தேம் பாய் புன்னை மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் எல் வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து,
வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் 10 முண்டகக் கோதை ஒண்தொடி மகளிர் இரும் பனையின் குரும்பை நீரும், பூங்கரும்பின் தீஞ்சாறும், ஓங்கு மணல் குவவுத் தாழைத் தீ நீரோடு உடன் விராஅய், 15 முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும், தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய ஒம்பா ஈகை மாவேள் எவ்வி புனலம் புதவின் மிழலையொடு கழனிக் கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும், 20 பொன்னணி யானைத் தொன் முதிர் வேளிர் குப்பை நெல்லின் முத்தூறு தந்த கொற்ற நீள் குடைக் கொடித்தேர்ச் செழிய!
2 நின்று நிலைஇயர் நின் நாள்மீன்! நில்லாது படாஅச் செலீஇயர் நின் பகைவர் மீனே!25 நின்னொடு தொன்று மூத்த உயிரினும் உயிரொடு நின்று மூத்த யாக்கையன்ன, நின் ஆடு குடி மூத்த விழுத்திணைச் சிறந்த வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த, இரவன்மாக்கள் ஈகை நுவல 30 ஒண்தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய தண் கமழ் தேறல் மடுப்ப மகிழ் சிறந்து,
3 ஆங்கு இனிது ஒழுகுமதி பெரும, ஆங்கது வல்லுநர் வாழ்ந்தோர் என்ப, தொல் இசை மலர்தலை உலகத்துத் தோன்றிப் 35 பலர் செலச் செல்லாது, நின்று விளிந்தோரே.
***
354
Sad condition of Tamil War Widows
What women did when they lost their beloved husbands is described by the poet of Pandya king Nedunchezian’s victory
***
Puranānūru 25, Poet Kallādanār to Pandiyan Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan,
………………………………….
In that fearless battlefield, you crushed them and took their drums tied with straps.
But O Chezhiyan! The joints of your spear were saved from breaking and shattering being hurled at enemies around you, when you saw the women with bright brows, anguished widows, losing their senses and beating their full breasts and making them warm, wailing endlessly, cutting off their pretty, thick, dark hair as bright as sand!
(Vaidehi Herbert’s translation is used; thanks)
***
புறநானூறு 25, பாடியவர்: கல்லாடனார், பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
மீன் திகழ் விசும்பின் பாய் இருள் அகல ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது, உரவுச் சினம் திருகிய உருகெழு ஞாயிறு, நிலவுத் திகழ் மதியமொடு நிலஞ் சேர்ந்தாஅங்கு, உடலருந்துப்பின் ஒன்றுமொழி வேந்தரை 5 அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப், பிணியுறு முரசம் கொண்ட காலை நிலை திரிபு எறியத் திண் மடை கலங்கிச் சிதைதல் உய்ந்தன்றோ, நின் வேல் செழிய! முலை பொலி ஆகம் உருப்ப நூறி, 10 மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல் ஒண்ணுதல் மகளிர் கைம்மை கூர, அவிர் அறல் கடுக்கும் அம் மென் குவை இருங்கூந்தல் கொய்தல் கண்டே.
—Subham—-
Tags- Purananuru Wonders 10; Ancient Tamil Encyclopaedia – Part 50
One Thousand Interesting Facts -Part 50, Birth Star, Tamil War Widows, Arson, Vivekananda
* பாற்கடல் கடைந்தபோது வாசுகி என்ற நாகம் கயிறாக உதவியது. அதனால் புண்பட்ட நோய் நீங்க, வாசுகி திருத்தணிகைக்கு வந்து முருகனைப் பூஜிக்க நோய் தணிந்த வரலாறு இங்கு கூறப்பட்டுள்ளது.
உள்ள நீலோத்பல மலர் மலர்வது என்றும் தவறாத திருத்தணிகைக்குக் காவலனே, வீரனே,
கருணை மேருவே தேவர் பெருமாளே. … கருணையில் மேரு மலை
போன்றவனே, தேவர்களின் பெருமாளே.
* துரியை என்பது ஜாக்ரம் (விழிப்பு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்) என்ற மூன்று நிலைகளையும் கடந்த நிலையாகும்.
** திருத்தணியின் தாமரைக்குளத்தில் இருக்கும் வாளை மீனின் ஆற்றல், ‘மடல் அறாத’ முதல் ‘மலர்வாவி’ வரை உள்ள ஆறு அடிகளில், கூறப்படுகிறது.
முருகனின் தம்பியும் தூதுவரும் ஆன வீரபாகுத் தேவர் தூதுசெல்லும் வழியில் அரக்கர்களைக் கொன்று, கடல்நடுவில் உள்ள வீரமஹேந்திரம் சென்று போர் புரிந்து வெற்றியுடன் மீண்டு வந்ததையும் இது குறிப்பால் காட்டுகின்றது.
– கந்த புராணம்.
வாளை மீன் என்பது உலகம் முழுவதும் உள்ள வெப்ப கடல்களில் காணப்படும் மீன் இனம் ஆகும். இது பார்ப்பதற்கு சற்று நீளமாக இருக்கும். தென் இந்திய கடற்கரையில் இது கிடைக்கும். உதாரணமாக, கன்னியாகுமரி பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. இதன் மீது ‘செள்’ என்று சொல்லப்படுகிற செதில்கள் கிடையாது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்களில் 30% வாளை மீன் ஆகும்
SCABBARD FISH, RIBBON FISH
The silver scabbardfish, also known as the frostfish or beltfish is a benthopelagic cutlassfish of the family Trichiuridae found throughout the temperate seas of the world. It grows to over 2 metres in length.
A long, thin fierce looking deep-sea fish found as far down as1,000 metres in both cold and warm waters. There are two main species of Scabbard – black and silver – and it is sometimes known as Sabre Fish (and incorrectly as Ribbon Fish or Cutlass Fish).
***
யாதவர்கள் அழிந்த கதை
உலக்கை ராவி நடுக்கடல் விட்டவன் மருகோனே … இரும்பு உலக்கையைப் பொடிப்பொடியாக்கி நடுக்கடலில் கரைத்தவனும்* ஆகிய திருமாலின் மருகனே,
வலிக்க வேதனை குட்டி … வலி உண்டாகும்படியாக வேதப் பிரமனை சிரங்களில் குட்டினவனே,
நடித்து ஒரு செகத்தை யீனவள் பச்சைநிறத்தியை … நடனம் செய்து ஒப்பற்ற உலகத்தை ஈன்ற தாயான பச்சை நிறப் பார்வதியை
* யாதவர்கள் தங்களுள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணி வேஷமிட்டு, துர்வாச முனிவரை இவளுக்குப் பிறப்பது ஆணோ பெண்ணோ எனக் கேட்க, கோபமடைந்த துர்வாசர் ஓர் இரும்பு உலக்கை பிறக்கும், அதுவே யாதவர் குலத்தை அழிக்கும் என்று சபித்தார். இதை அறிந்த கண்ணன், பிறந்த உலக்கையைப் பொடியாக்கி நடுக்கடலில் கரைக்கச் செய்தான். பின்னர் உலக்கைப் பொடி கரையிலே வந்து கோரைப்புல்லாக முளைக்க, யாதவர் தம்முள் கலகம் மூண்டதும் அப்புல்லைப் பிடுங்கி ஒருவரை மற்றவர் குத்தி இறந்தனர். இரும்புத் துண்டு ஒன்று மீனின் வயிற்றில் வளர, அம்மீனைப் பிடித்த ஒரு வேடன் வயிற்றிலிருந்த துண்டைத் தன் அம்புநுனியில் வைத்தான். கண்ணனின் இறுதி நாளன்று தூக்கி வைத்திருந்த கண்ணனின்
பாதத்தைப் பறவையென எண்ணி வேடன் அந்த அம்பை எய்தான். யாதவகுலத்தில் கடைசியாக எஞ்சிய கண்ணனும் பரமபதம் அடைந்தான்.
பாரதியார் பாடல்
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;
பலர்புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன், காண்பீர்!
மலிவுகண்டீரிவ்வுண்மை, பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானு டர்க்கே,
நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்.
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை 6
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்;
மிச்சத்தைப் பின்சொல்வேன், சினத்தை முன்னே
வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை;
—Subham—
Tags– திருத்தணி ,திருப்புகழ் , வாளை மீன் , யாதவர்கள் கதை – Part 16 , அருணகிரிநாதர் ,அரிய செய்திகள் , சொல் அழகு, பொருள் வளம்
அடுத்து சுந்தரகாண்டத்தில் லங்கா தேவியை ஜெயித்தல் என்ற மூன்றாம் அத்தியாயத்தில் லங்கா தேவிக்கு பிரம்மா வரம் அருளிய செய்தியைப் பார்க்கிறோம்.
ஹனுமான் இரவில் லங்கையில் புகுதலுற்றார்.அவர் மதில் சுவரின் மேல் வேகமாக ஏறினார்.
அப்போது லங்கா நகரைக் காக்கும் நகர தேவதை உள்ளே போகும் ஹனுமானைக் கண்டாள். கோரமான தோற்றத்துடன் வாயுகுமாரரின் எதிரில் வந்து நின்றாள்.
“யார் நீ? குரங்கே! உன்னால் இங்கு வர முடியாது” என்று சொல்ல ஹனுமான் இந்த நகரைப் பார்ப்பதற்கே வந்தேன் என்று பதிலிறுத்தார்.
உடனே அந்த நிசாசரி ஹனுமானைக் கையால் அறைந்தாள்.
உடனே ஹனுமான் தனது இடது கை முஷ்டியால் அவளை குத்தினார். பெண் என்பதால் அதிக வலிமையைக் காட்டவில்லை. அவளோ அந்த ஒரு குத்திலேயே நிலை குலைந்து கீழே விழுந்தாள். நாத்தழுதழுக்க ஹனுமானிடம் தன்னைக் காத்தருள வேண்டினாள்.
பின்னர் கீழ் வருமாறு கூற ஆரம்பித்தாள்;
அஹம் து நகரீ லங்கா ஸ்வயமேவ ப்லவங்கம |
நிர்ஜிதாஹம் த்வயா வீர் விக்ரமேண மஹாபல ||
சுந்தரகாண்டம், மூன்றாம் அத்தியாயம், ஸ்லோக எண் 46
மஹாபல – மிக வலிமையுடைய
ப்லவங்கம – வானரரே!
அஹம் து – நானோ
ஸ்வயம் லங்கா – ஸ்வயமான லங்கா என்ற
நகரீ – நகர தேவதை;
வீர் – வீரரே!
அஹம் – நான்
த்வயா ஏவ – உம்மாலே தான்
விக்ரமேண – பராக்கிரமத்தால்
நிர்ஜிதா – ஜெயிக்கப்பட்டேன்
இதம் து தத்யம் ஸ்ருணு வை ப்ருவந்த்யா மே ஹரீஸ்வர |
ஸ்வயம் ஸ்வயம்புவா தத்தம் வரதானம் யதா மம ||
சுந்தரகாண்டம், மூன்றாம் அத்தியாயம், ஸ்லோக எண் 47
ஹரீஸ்வர – வானரேஸ்வரரே
ஸ்வயம்புவா – பிரம்மாவால்
மம – எனக்கு
ஸ்வயம் து – தானாகவே
தத்தம் – கொடுக்கப்பட்ட
வரதானம் – வரப்பிரதானம்
யதா வை – எப்படியோ அப்படியே
தத்யம் – உண்மையான
இதம் – பின் சொல்லும் விஷயத்தை
ப்ருவந்த்யா – சொல்லுகிற
மே – என்னிடத்திலிருந்து
ஸ்ருணு – கேளும்
யதா த்வாம் வானர: கஸ்சித்விக்ரமாத்ஷ்மானயேத் |
ததா த்வயா ஹி விக்ஞேயம் ரக்ஷஸாம் பயமாகதம் ||
சுந்தரகாண்டம், மூன்றாம் அத்தியாயம், ஸ்லோக எண் 48
த்வாம் – உன்னை
கஸ்சித் வானர: – ஒரு வானரன்
விக்ரமாத் – பராக்ரமத்தால்
யதா – எப்பொழுது
வஷம் – வசமாக
ஆனயேத் – செய்து கொள்கிறானோ
ததா – அப்பொழுதே
ரக்ஷசாம் – ராக்ஷஸர்களுக்கு
பயம் ஆகதம் – கேடு வந்தது என்று
த்வயா விக்ஞேயம் – உன்னால் அறிந்து கொள்ளப்பட வேண்டியது
ஹி – சந்தேகமில்லை
இப்படிக் கூறிய லங்கா தேவி ஹனுமானை லங்கைக்குள் புகுந்து கொள்ள அனுமதித்தாள். ஹனுமானும் லங்கைக்குள் புகுந்தார்.
பிரம்மாவிடம் லங்கா தேவி எப்போது எதற்காக வரம் பெற்றாள் என்ற விவரம் இங்கு தரப்படவில்லை.
பிரம்மாவிடமிருந்து லங்கா தேவி வரம் பெற்ற செய்தி மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
Date uploaded in Sydney, Australia – 9 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கிரீன்லாந்து என்னும் மிகப்பெரிய தீவுப் பகுதி ஐரோப்பாவிலுள்ள டென்மார்க் நாட்டிற்குச் சொந்தமான பகுதி. கடந்த சில மாதங்களாக இந்தப் பெயர் செய்தியில் அடிபடுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதற்குச் சொந்தம் கொண்டாடினார் ; எப்போதும் அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் ஐரோப்பிய நாடுகளும் கூட அமெரிக்காவின் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ட்ரம்ப் பின்வாங்கியிருக்கிறார் ; குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக முடிந்திருக்கிறது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் .
கிரீன்லாந்து, ஐஸ்லாந்து என்னும் பெயரே ஏமாற்று வேலை. பசுமைவளமே இல்லாத , பனிக்கட்டி மட்டுமே நிறைந்த மிகப்பெரிய பகுதிக்குத் தவறாக கிரீன்லாந்து என்று பெயர் சூட்டினார்கள். ஐஸ் கட்டியே இல்லாத எரிமலைகள் நிறைந்த வெந்நீர் ஊற்றுகள் நிரம்பிய நாட்டுக்கு ஐஸ்லாந்து என்று பெயர் சூட்டினார்கள். மக்களை இழுப்பதற்காக இப்படி ஒரு திட்டம் .
கிரீன்லாந்தின் மீது அமெரிக்கா ஆசைப்பட்டதற்குக் காரணம் அங்கே பனிக்கட்டிக்குக் கீழே நிறைய கனிம வளம் உள்ளது . அதுமட்டுமல்ல பல பாதுகாப்பு, ராணுவ திட்டங்களுக்கு உகந்த பகுதி அது.
அண்டார்ட்டிகா என்னும் பிரம்மாண்டமான பனிக்கட்டி கண்டம் பூமியின் தென் துருவத்தில் உள்ளது. அதற்கு அடுத்த பெரிய பனிக்கட்டி பரப்பு வட துருவத்திலுள்ள கிரீன்லாந்து ஆகும்.
இந்தப் பிரதேசத்திலுள்ள பனிக்கட்டி முழுதும் உருகினால் கடல் நீர்மட்டம் உலகம் முழுதும் 24 அடி உயரும். அவ்வளவும் ஒரே நேரத்தில் உருகாது ஆயினும் அவை இப்போது உருகும் வேகம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து பல பகுதிகள் உருகி வருகின்றன. மேலும் அங்குள்ள பனிக்கட்டி ஆறுகளும் சிறிதாகி வருகின்றன
பனிக்கட்டி பாறைகளைக் குடையும் பெரிய எந்திரங்களுடன் பல வாரங்களுக்கு ஆராய்ச்சி செய்த குழுவில் ஒன்பது பேர் இருந்தனர் அவர்கள் ஐஸ் பாறைகளைக் குடைந்து எடுத்த சாம்பிள்களை- மாதிரிகளை– உலகின் ஏனைய பகுதியில் எடுத்த பவளப்பாறைகள், மரங்களில் உள்ள வளையங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டத்தில் பருவ நிலை வெப்பமாகி வருவது உறுதியாகியுள்ளது. வளி மண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைட் அதிகரித்துள்ளது.
இந்தத் தீவு பற்றிய சுவையான விஷயங்களையும் காண்போம் .
உலகிலேயே பெரிய தீவு இது ; இதன்பரப்பளவு 2,166,086 km2 (836,330 sq mi)
மக்கட் தொகை 56,000
(இந்தியாவின் பரப்பளவு 3,287,263 square kilometers (1,269,219 sq mi)
இது டென்மார்க்கின் சுயாதிக்கப் பகுதி இதன் தலை நகர் நூக் . The capital and largest city is Nuuk.
பேசும் மொழி – கிரீன்லாந்திக்
இதன் உண்மைப்பெயர்– கலாலித் நுனாத் -Kalaallit Nunaat, ‘land of the Kalaallit.
இங்கு அடிக்கடி பனிப்புயல் வீசும் ; எப்போதும் உறைநிலைக்குக் கீழ்தான் வெப்பம்; அதாவது குளிர் SUB ZERO TEMPERATURE.
இதன் அருகிலுள்ள பெரிய நாடு கனடா ; ஒரு காலத்தில் நார்வே நாட்டுக்குச் சொந்தமான இப்பகுதி பின்னர் டென்மார்க்குக்குக் மாற்றப்பட்டது இங்குள்ள மக்கள் இனுயிட் Most residents of Greenland are Inuit. என்னும் எஸ்கிமோ மக்கள் ஆவர்.
இங்கு வசிக்கும் மிருகங்கள்
சடை எருமை MUSK OX , துருவ நாய்கள், துருவக் கரடிகள், ரெயின்டியர் எனப்படும் மான்கள், கடலில் திமிங்கிலங்கள்
இங்கு அபூர்வ தாதுக்கள் எனப்படும் உலோகங்கள், மூலகங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் இதுவரை தோண்டி எடுக்கப்படவில்லை. இதுவரை சீனாவே 95 சதம் அபூர்வ தாதுக்களை சப்ளை செய்கிறது. சிவப்பு ரத்தினக் கல்லான மாணிக்கம் RUBY இங்கே அதிகம் கிடைக்கிறது. இரும்பு, செம்பு, தங்கம், பிளாட்டினம், யுரேனியம் அலுமினியம், டைட்டேனியம், நிக்கல், டங்ஸ்டன் கிடைக்கின்றன ; ஆயினும் முழு அளவில் தோண்டி எடுக்கப் படவில்லை; அமெரிக்கா, இதன் மீது கண் வைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
அருள் புதல்வோனே … அம்மை, உமாவாகிய பார்வதி, தேவி, திரி
புரத்தை எரித்தவள், துர்க்கை, அழகிய மாதாகிய பார்வதி அருளிய மகனே,
குரவு அணி பூஷண சரவண தேசிக குக கருணா நிதி
அமரேசா … குரா மலரை அணிகின்ற ஆபரணமாகக் கொண்டவனே,
சரவணனே, குரு மூர்த்தியே, குகனே, கருணை நிதியே, தேவர்களுக்கு
ஈசனே,
குற மகள் ஆனை மின் மருவிய பூரண குரு கிரி மேவிய
பெருமாளே. … குறப் பெண்ணாகிய வள்ளி, (ஐராவதம் என்ற)
யானையால் வளர்க்கப்பட்ட மின்னல் போன்ற தேவயானை (ஆகிய இருவரும்) சேர்ந்துள்ள முழுப் பொருளே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* டாகினி, காகினி, லாகினி, ஹாகினி, ராகினி, சாகினி என்பன தேவியைக் குறிப்பனவாகும்.
***
DACCA- Capital of Bangladesh – This name is derived from the goddess temple. Dhakeshwari Temple: The name is derived from the Dhakeshwari temple (Goddess of Dhaka) built by King Ballal Sena in the 12th century.
வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா. இது லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் டாகினி, டாகேஷ்வரி தேவியின் கோவிலால் ஏற்பட்ட பெயர்.
லலிதா சஹஸ்ரநாமத்தில் டாக்கா
டாகினீஸ்வரி – டாக்கா -484; நாமத்தின் எண்
டாக்கா நகர டாகேஸ்வரி கோவில் படங்கள்
For more please read my article- லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் புண்ணிய நகரங்கள் (Post.15,124)
***
காக்கைக்கு ஏன் ஒரு கண் ?
பாதி மதிநதி போதும் … பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும்,கொன்றை மலரையும்
காது மொருவிழி காகமுற அருள் … பிரிக்கப்பட்ட ஒரு விழியை*
காகாசுரன் என்னும் காகம் அடையும்படி அருளிய
மாயன் அரி திரு மருகோனே … ஸ்ரீராமர் மாய ஹரிக்கும்,
லக்ஷ்மிக்கும் மருமகனே,
காலனெனை யணுகாமல் … யமன் என்னை அணுகாத வகைக்கு
உனதிரு காலில் வழிபட அருள்வாயே … உன் இரு திருவடிகளில்
வழிபடும் புத்தியை அருள்வாயாக.
ஆதி யயனொடு தேவர் … ஆதி பிரமனோடு அமரர்கள் அனைவரும்
சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா … தேவலோகத்தை
ஆளும்படி சிறையினின்று அவர்களை மீட்டவனே,
ஆடு மயிலினி லேறி … நடனம் ஆடும் மயில் மீது ஏறி
அமரர்கள் சூழ வர … தேவர்கள் உன்னைச் சூழ்ந்துவர
வரும் இளையோனே … வருகின்ற இளையவனே,
சூத மிகவளர் சோலை … மாமரங்கள் மிகுந்து வளர்ந்த சோலைகள்
மருவு சுவாமிமலைதனில் உறைவோனே … நிறைந்த
சுவாமிமலையில் வீற்றிருப்பவனே,
சூர னுடலற … சூரனின் உடல் வீழ,
வாரி சுவறிட … கடல் வற்றிப்போக,
வேலை விடவல பெருமாளே. … வேலினைச் செலுத்தவல்ல
பெருமாளே.
***
* சீதையின் மார்பை தன் அலகால் கொத்தின காகத்தின் மீது புல்லையே படையாக்கி ஸ்ரீராமர் செலுத்த, அப்படைக்கு அஞ்சி, காப்பவர் யாருமின்றி,ஸ்ரீ ராமரையே காகம் சரணடைய, அவர் அக்காகத்திற்கு அருளி, காகத்தின் ஒரு கண்மணியைப் பிரித்து, கண்களிரண்டிற்கும் ஒரு மணியேயென தண்டித்தார். காகாசுரனாக சாபத்தினால் வந்தது தேவேந்திரனது குமாரன் ஜயந்தன் ஆகும்.
ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் காகாசுரன் கதை
ராமாயணத்தில், சித்திரகூடத்தில் சீதையின் மார்பில் காக உருவில் வந்து அம்பு எய்த இந்திரனின் மகன் ஜெயந்தன் (காகாசுரன்), சீதையைத் துன்புறுத்தியதற்காக ராமர் தன் புல்லில் பிரம்மாஸ்திரம் ஏவி துரத்தினார். மூன்று உலகங்களிலும் உதவி கிடைக்காத ஜெயந்தன், ராமரிடமே சரணடைந்தான். கருணை கொண்ட ராமர், பிரம்மாஸ்திரத்தின் மூலம் அவனது ஒரு கண்ணை மட்டும் குருடாக்கி, அவனது உயிரைக் காப்பாற்றினார்.
சம்பவம்: ராமர், சீதையின் மடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது, இந்திரனின் மகனான ஜெயந்தன் காக்கை உருவம் எடுத்து, சீதையின் மார்பில் கொத்தி, குருதி சிந்த வைத்தான்.
ராமரின் கோபம்: இதனால் கோபமடைந்த ராமர், தர்ப்பைப் புல்லில் பிரம்மாஸ்திரத்தை மந்திரித்து, காகாசுரனின் மீது ஏவினார்.
சரண்: அந்த அம்பு காகாசுரனைத் துரத்தியது, அவன் தன் தந்தை இந்திரன், முனிவர்கள், தேவர்கள் என யாரிடமும் அடைக்கலம் கிடைக்காமல், இறுதியில் ராமரிடமே வந்து மன்னிப்பு கேட்டு சரணடைந்தான்.
தண்டனை: ராமர் அவனது உயிரைக் காப்பாற்றினாலும், அவனுக்குத் தண்டனையாக ஒரு கண்ணைக் குருடாக்கினார்.
சீதையின் நம்பிக்கை: இந்த சம்பவத்தைச் சீதை, அனுமனிடம் கூறி, ராமரின் கருணைத் தன்மையை விளக்குகிறார்.
இந்தக் கதை, சரணடைந்தவர்களைக் காக்கும் ராமரின் கருணையையும், தவறு செய்தால் அதற்கான தண்டனை கிடைக்கும் என்பதையும் உணர்த்துகிறது.
***
மீண்டும் வியாதிகள் பட்டியல்
அருணகிரி நாதர் பல பாடல்களில் நோய்களின் பட்டியலைத் தருகிறார். இதோ சுவாமிமலை திருப்புகழ்
வாதமொடு சூலை கண்டமாலை குலை நோவு சந்து மா வலி
வியாதி குன்மமொடு காசம் … வாத நோய், வயிற்றுளைவு நோய்,
கழுத்தைச் சுற்றி வரும் புண் கட்டி, மார்பு எரிச்சல், எலும்புருக்கி நோய், பெரிய இழுப்பு நோய், மகோதரத்துடன், கோழை நோய்,
வாயுவுடனே பரந்த தாமரைகள் பீனசம் பின் மாதர் தரு
பூஷணங்கள் என ஆகும் … வாயுவினால் உண்டாகும் படர்தாமரை
போன்ற சொறி, படை, மூக்கடைப்பு, பின்னும் ஒழுக்கம் கெட்ட
விலைமாதர்களுடன் இணைவதால் கிடைக்கும் ஆபரணங்கள்
என்று சொல்லத்தக்க புண் வகைகள்,
பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து பாயலை
விடாது மங்க … பாவ நோய்ப் புண்கள் ஆகிய இவை உடனே
என்னைப் பீடிப்பதால், படுக்கையை விடாது கிடந்து, உடல்
நலம் குறைந்து, இவையால் நின் பாத மலரானதின் கண் நேயம் அறவே
மறந்து பாவ மதுபானம் உண்டு வெறி மூடி … இக்காரணத்தால்
உனது திருவடி மலர்களில் அன்பு என்பதை முற்றும் மறந்து, பாவம்
நிறைந்த கள்ளைக் குடித்து, அதனால் மயக்கம் மிகுந்து,
ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று ஈனம் மிகு
சாதியின் கண் அதிலே … குற்றம் தரும் பந்த பாசக் கட்டுகளான
வலையில் அகப்பட்டு அலைந்து, இழிவான என் ஜாதித்
தொழில்களிலே ஈடுபட்டு,
நான் ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு
உன் ஈர அருள் கூர வந்து எனை ஆள்வாய் … நான் வலிமை
அற்று அழிந்த பின், இவன் ஒரு முட்டாள் எனப் பிறர் கூறுவர்.
(அங்ஙனம் பிறர்) சொல்லுவதற்கு முன்பு உனது கருணை நிறைந்த
திருவருள் மிக்கு வந்து என்னை ஆட் கொள்வாயாக.
****
திருமாலின் வராக அவதாரக் கதை
சூகரத்தொடு அம்பு தான் எடுத்து வந்த சூதனுக்கு
இசைந்த மருகோனே … பன்றியின் உருக்கொண்டு (வராக
அவதாரத்தில்)* அழகிய பூமியை மேலே எடுத்து வந்த தந்திரம்
வாய்ந்த திருமாலுக்கு உகந்த மருகனே,
ஏர் எதிர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று தான் இறைக்க
வந்தது ஒரு சாலியே மிகுத்து உயர்ந்த மா வயற்கள்
மிஞ்சும் ஏரகத்து அமர்ந்த பெருமாளே. … ஏர் எதிர்த்து வர
பெருகி உயர்ந்து வளர்ந்த சிறந்த வயல்கள் நிறைந்துள்ள
சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* திருமால் வராகாவதாரம் எடுத்த வரலாறு:
இரணியாக்ஷன் என்னும் அசுரன் பூமியைப் பாய் போல் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதாளத்தில் மறைந்து கொண்டான். திருமால் பன்றி உருவம் கொண்டு, பாதாளத்திற்குச் சென்று, தன் கொம்பினால் அவனைக் கொன்று, பூமியைக் கொம்பினால் தாங்கி மேலே கொண்டு வந்தார்.
***
லட்சுமியின் குணம் – ராஜஸ குணம்
ஏர் அணி நல் குழலைக் ககனச் சசி மோகினியை புணர்ச்சி
சித்த ஒரு அற்புத வேட அமுதச் சொருபத்த குறத்தி மணம்
கொள்வோனே … அழகுள்ள சிறந்த கூந்தலை உடையவளும்
விண்ணுலகத்தில் உள்ள இந்திராணி பெற்ற பேரழகியுமாகிய
தேவயானையைச் சேர்ந்த சித்தனே*, ஒப்பற்ற அற்புதமான வேடர்
குலத்தில் உதித்த அமுத சொரூபியான குறமகள் வள்ளியை
மணம் கொண்டவனே,
ஏரக(ம்) வெற்பு எ(ன்)னும் அற்புத மிக்க சுவாமி மலைப்
பதி நிற்கும் இலக்ஷண … திருவேரக மலை என்னும் அற்புதம்
மிகுந்த சுவாமி மலைப் பதியாகிய தலத்தில் நிற்கும் அழகனே,
ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் தம்பிரானே. …
லக்ஷ்மி போன்ற ராஜத** குணம் படைத்த பார்வதி பெற்றருளிய
தம்பிரானே.
* சித்தன் முருகனுக்கு ஒரு பெயர் – மனத்தைக் கொள்ளை கொள்பவன்.
** ஸத்வம், ராஜஸம், தாமசம் என்ற முக்குணங்களில் லக்ஷ்மிக்கு ராஜஸ குணம் ஏற்பிக்கப்படுகிறது. லக்ஷ்மி அருள் மழை பொழிந்து செல்வங்களை வலியக் கொடுக்கும் தெய்வம்.
***
ராமனின் சாகசங்கள்
வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா
மரமும் நிகர் ஒன்றும் இல் வலிய திறல் வாலி உரமும் நெடும்
கடல் அவை ஏழும் மற நிருதர் சேனை முழுதும் … அழகுடைய
(மாரீசன் என்னும்) பொன்மானும், பகைத்து வந்த கரன் என்னும்
அரக்கனும், விளங்கிய ஏழு வகையான மரா மரங்களும், ஒப்பு
ஒன்றுமே இல்லாத வலிமை வாய்ந்த வாலி என்னும் குரங்கு
அரசனின் மார்பும், பெரிய ஏழு கடல்களும், வீரமுள்ள அசுரர்களின்
படைகள் முழுதும்,
இலங்கை மன் வகை இரவு போலும் அணியும் அலங்க்ருத
மணி மவுலியான ஒரு பதும் விஞ்சு இரு பது தோளும் அடை
வலமும் மாள … இலங்கை அரசன் ராவணனுடைய சிறப்புற்ற சூரியன் போல் ஒளி வீசி அணிந்த அலங்காரமான ரத்ன கிரீடம் விளங்கும் தலைகள் பத்தும், மேம்பட்டு விளங்கும் இருபது தோள்களும்,
Tags- திருப்புகழ் , பங்களாதேஷ், டாக்கா கோவில், டாகினி காகத்துக்கு ஏன் ஒரு கண்?- Part 15 , அருணகிரிநாதர் , அரிய செய்திகள். சொல் அழகு, பொருள் வளம், டாக்கா,டாகேஸ்வரி கோவில் படங்கள்
அடுத்து சுந்தரகாண்டத்தில் முதல் அத்தியாயத்தில் இன்னொரு வரம் பற்றிய விவரத்தைப் பார்க்கிறோம்.
மைநாக மலையிடமிருந்து விடை பெற்ற ஹனுமார் வேகமாகப் பறந்து செல்லலானார்.
அப்போது தேவர்கள் சர்ப்பங்களுக்குத் தாயான சுரஸையைப் பார்த்து,
“நீ கோரமான ராக்ஷஸ உருவத்தை எடுத்துக் கொண்டு ஒரு முகூர்த்த நேரம் ஹனுமாருக்கு இடைஞ்சல் செய்; உன்னை அவர் உபாயத்தினால் வெல்கிறாரா அல்லது துன்பத்தை அடைகிறாரா என்று பார்க்க விரும்புகின்றோம். அவரது வலிமையையும் ஆண்மையையும் மறுபடியும் பார்க்க விரும்புகிறோம்” என்றனர்.
உடனே சுரஸா தேவி பயங்கரமான ராக்ஷஸ வடிவை எடுத்துக் கொண்டு ஹனுமார் முன்னால் தோன்றினாள்.
இதைக் கேட்ட ஹனுமார் கோபம் கொண்டார். எப்படி விழுங்க நினைக்கிறாயோ அப்படியே வாயைத் திறந்து கொள் என்றார். பிறகு அவர் பத்து யோஜனை அளவு வளர்ந்தார். சுரஸையோ தனது வாயை இருபது யோஜனை அகன்றதாகச் செய்தாள். ஹனுமார் உடனே முப்பது யோஜனை அளவு வளர்ந்தார். சுரஸையோ தனது வாயை நாற்பது யோஜனை அகன்றதாகச் செய்தாள். இருவரும் இப்படி மாறி மாறி பெரிய உருவை எடுக்க ஸுரஸை நூறு யோஜனையாக மாறிய அளவில் ஹனுமார் திடீரென்று சுருங்கி அங்குஷ்ட பிரமாண வடிவை எடுத்து அவள் வாயில் புகுந்து மீண்டு வெளியில் வந்தார்.
உடனே சுரஸா தேவி தன் சுய ரூபத்தை எடுத்து ஹனுமாரை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தாள்.
சுரஸா எப்படி எப்போது எதற்காக பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றாள் என்ற விவரம் இங்கு சொல்லப்படவில்லை;
ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே. … ஒப்பற்ற
குருமூர்த்தி என்று முக்தி நிலை பெற்ற பெரியோர் புகழ்கின்ற தம்பிரானே.
முருகன் ஒரு வளையல் வியாபாரி!
chetti vadivaik kodu thinaippunam adhiR siRu kuRappeN: In the disguise of a bangle merchant, You went to the millet-field to woo the pretty little damsel of the KuRavAs, VaLLi,
amaLikkuL magizh chetti: and enjoyed her company in her bed, Oh Lord!
(TANSLATION BY SRI GOPALA SUNDARAM IN KAUMARAM.COM)
சங்கப் புலவர் கலகம் தீர்த்த திருவிளையாடல் புராண நிகழ்ச்சியில் செட்டி வீட்டுப் பிள்ளை ருத்திரசர்மனாக முருகனே வந்தார் என்றும் அருணகிரி பாடியிருக்கிறார்
***
பறக்கும் மலைகள் = குட்டி கிரகங்கள்
GEOLOGY IN TIRUPPUGAZ
கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்னால், பூமியை பெரிய விண்கற்களும் குட்டி கிரகங்களும் (METEORITES AND ASTEROIDS) தாக்கி பெரிய பள்ளங்களை உண்டாக்கின . ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால், டைனோஸரஸ் என்னும் இராட்சத மிருகங்கள் அழி ந்ததற்கும்இதுவே காரணம்; இந்தியாவிலும் இப்படி ஒரு பெரிய குட்டி கிரகம் மோதி புனே நகருக்கு அருகில் லோனார் ஏரியை உருவாக்கியது. இன்றும் சுற்றுலாப்பயணிகள் மொய்க்கும் இடம் இது. இதையே இந்திரன் செய்கையாகப் புராணங்கள் வருணிக்கின்றன ; அனுமன் இலங்ககைக்குச் சென்றபோது சந்தித்த கடல் அடி மலைகள்SUB MARINE MOUNTAINS பற்றிய (மைநாக மலை) கதைகளும் இவைதான்.
Lonar Lake, located in Maharashtra’s Buldhana district, is a unique, 50,000-year-old saline and alkaline crater lake formed by a meteorite impact in basalt rock. It is a renowned eco-tourism spot featuring ancient temples (like Gomukh), diverse wildlife, and a 1.8 km diameter, making it a significant National Geo-heritage Monument.
சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த … கற்பகச்சோலையில் உள்ள பூ இதழால் சக்ரவாள கிரி ஆகிய பெரிய மலைகளின்(சிறகுகளை)* வெட்டித்தள்ளிய
வஜ்ரபாணியர் தொழும் திருக் கை வடி வேலா … வஜ்ராயுதம் கொண்ட கைகளை உடைய இந்திரன் வணங்கும் திருக்கை வடிவேலனே,
சூர் முதிர் க்ரவுஞ்ச வெற்பும் வேலை நிலமும் பகைத்த சூரன் உடலும் துணித்த பெருமாளே. … அச்சத்தை நிரம்பத் தரும் கிரெளஞ்ச மலையையும், கடலிடத்தையும், பகைத்து வந்த சூரனுடைய உடலையும் அழித்த பெருமாளே.
* முன்பு ஒரு காலத்தில் மலைகள் எல்லாம் பறவைகள்போல் இறகுகள்உடையவவைகளாக இருந்தனவாம். எங்கும் பறந்து விழுந்து, உயிர்களுக்குத்தீங்கு செய்ததால், இந்திரன் கோபித்து அந்த மலைகளின் இறகுகளைஅறுத்துத் தள்ளினான்.
***
முருகன் ஒரு புலவன்
அருமறை தமிழ்நூல் அடைவே … அருமையான வேதங்களையும் தமிழ் நூல்களையும் முழுமையாக
தெரிந்துரைக்கும் புலவோனே … கேட்பவரின் தரம் அறிந்து விரித்து உரைத்தருளும் ஞான பண்டிதா,
1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம்
வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டுபணிதல். இது ‘தாத மார்க்கம் – சாலோகம்‘.
2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது ‘புத்ர மார்க்கம் – சாமீபம்‘.
3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது ‘சக மார்க்கம் (தோழ நெறி) – சாரூபம்‘.
4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது ‘சன்மார்க்கம் – சாயுஜ்யம்‘.
. . . சிவஞான சித்தியார் சூத்திரம்.
***
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
சுந்தர காண்டத்தில் நாம் ஐந்து வரங்கள் பற்றிய விஷயங்களைக் காண்கிறோம்.
முதலாவதாக முதல் அத்தியாயத்தில் இந்திரன் மைநாக மலைக்கு அருளிய வரத்தைக் காண்கிறோம்.
லங்கைக்குச் செல்வதற்காக ஆகாயத்திலிருந்து சமுத்திரத்தைப் பார்த்த ஹனுமானைப் பார்த்த சமுத்திர ராஜன் ஹனுமாருக்கு உதவி செய்வதற்காக தன்னுள்ளே மறைந்திருந்த சுவர்ணமயமான மைநாக மலையைப் பார்த்து மலையைச் சற்று மேலே எழும்புமாறு கூறினான். இதனால் ஹனுமார் மலையின் மீது அமர்ந்து சற்று ஓய்வு எடுக்கலாம் என்பது சமுத்திர பகவானின் எண்ணம்.
இதற்கிணங்க மைநாக மலை கடலிலிருந்து மேலே எழும்பியது.
கடலிலிருந்து பொன்மயமாக மேலெழும்பிய மைநாக மலையைக் கண்ட ஹனுமார் அதை ஒரு இடையூறாகக் கருதினார். அதைத் தனது மார்பினால் தள்ளி வீழ்த்தினார்.
அவரது சாமர்த்தியத்தைக் கண்டு மகிழ்ந்த மைநாகம் ஒரு மானிட ரூபத்தை எடுத்து ஹனுமாரை நோக்கி, “யாராலும் செய்ய முடியாத காரியத்தை நீர் செய்தீர். என்னுடைய சிகரத்தில் சற்று தங்கி இளைப்பாறும். வானரர்களில் சிறந்தவராக உம்மை மதிக்கிறேன். நீர் என்னால் பூஜை செய்யத் தக்கவர். அத்தோடு இன்னொரு விஷயமும் உண்டு. முன்பு கிருத யுக காலத்தில் எல்லா மலைகளும் பறக்கக்கூடிய படி இறக்கைகளுடன் இருந்தன. அவைகள் அங்கும் இங்கும் பறப்பதால் ரிஷிகள் உள்ளிட்டவர்கள் பெரிதும் பயந்தனர். இதனால் கோபம் கொண்ட இந்திரன் மலைகளின் இறகுகளை ஆயிரம் துண்டங்களாக வெட்டினான். அப்போது மஹாத்மாவான வாயுதேவரால் நான் விரைவாக தள்ளி விடப்பட்டேன், இந்த உப்பு நீர்க் கடலில் ஆழ்ந்து அமுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டேன். ஆகவே உமக்கும் எனக்கும் சம்பந்தமுண்டு. என்னிடம் களைப்பாறும்; எனது பூஜையை ஏற்றுக் கொள்ளும்” என்று கூறியது.
உடனே ஹனுமார், “நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறென். ஆனால் நடுவில் தங்கி நிற்பதில்லை என்ற பிரதிக்ஞையை நான் செய்திருக்கிறேன்.” என்று கூறி விட்டு மலையை ஆரத் தழுவி விட்டுப் புறப்படலானார்.
இதைப் பார்த்த அனைத்து சித்தர்களும் தேவர்களும் சந்தோஷமடைந்தனர். ஹனுமாரைப் புகழ்ந்தனர். இந்திரனும் மகிழ்ந்து மைநாகத்தைப் பார்த்துக் கூறலானன்:
ஹிரண்யநாபசைலேந்த்ர பரிஷ்டோஸ்மி தே ப்ருஷம் |
அபயம் தே ப்ரயச்சாமி திஷ்ட சௌம்ய யதாசுகம் |
சுந்தர காண்டம் முதல் அத்தியாயம் ஸ்லோக எண்கள் 149,150
ஹிரண்யநாப – பொன்முடிகளை உடைய
சைலேந்த்ர – மலையரசனே!
தே – உன்னிடத்து
ப்ருஷம் – மிகவும்
பரிதுஷ்ட: – சந்தோஷமுடையவன்
அஸ்மி – ஆகிறேன்
சௌம்ய – சௌம்ய
தே அபயம் – உனக்கு அபயம்
ப்ரயச்சாமி – கொடுத்தேன்
யதா சுகம் திஷ்ட – சுகமாக வாழ்ந்திரு
என்று இப்படி இந்திரன் கூறவே மைநாகமும் சந்தோஷம் அடைந்தது.
ச வை தத்தவர: ஷைலோ பபூவாவஸ்திஸ்ததா!
சுந்தர காண்டம் முதல் அத்தியாயம் ஸ்லோக எண்: 154
தத்தவர: – வரத்தைப் பெற்ற
ச: ஷைல: வை – அந்த மலையும்
ததா – அப்போது
அவஸ்தித: – மேலே நிலைத்து நிற்பதாக
வபூ: – ஆயிற்று
ஹனுமாரும் மலையக் கடந்து சென்றார்.
இப்படியாக இந்திரன் மைநாகத்திற்குக் கொடுத்த வரத்தை சுந்தர காண்டத்தில் காண்கிறோம்.