Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2-2-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசரிக்கப்படுகிறது.
அபிராமி பட்டர் – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருக்கும் திருமதி லக்ஷ்மி அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
அற்புதமான எல்லாம் வல்ல பராசக்தியின் மகிமையை தன் வாழ்நாளிலே உணர்ந்ததோடு அதை உலகிற்கும் பாக்கள் வாயிலாகத் தந்த அபிராமி பட்டரைப் பற்றி இன்று சற்று சிந்திப்போம்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் அபிராமி பட்டர்.
இவரது இயற் பெயர் சுப்ரமண்ய ஐயர்.
சோழநாட்டில் உள்ள திருக்கடையூரில் அந்தணர் குலத்திலே பிறந்தவர் இவ\ர்.
ஶ்ரீ வித்யா உபாசகராக இருந்த இவர் திருக்கடையூரில் அருள் பாலித்து வந்த அபிராமி தேவியைத் தவறாது வழிபட்டு வந்தார்.
இவரது வாழ்விலே ஒரு அரிய சம்பவம் நடைபெற்றது.
அந்தக் காலத்தில் தஞ்சையை மகராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி நன்கு ஆண்டு வந்தார். சிறந்த தெய்வ பக்தி கொண்ட அவர் ஒரு முறை திருக்கடையூருக்கு வருகை புரிந்தார். தை மாதத்தில் அவர் வந்தது ஒரு அமாவாசை தினத்தன்று. மன்னரின் வருகையால் பரபரப்புடன் இருந்த திருக்கோவிலில் அன்னையின் பக்தியில் மூழ்கி பரவசமாக இருந்த அபிராமி பட்டர் மன்னரைக் கவனிக்கவில்லை. இதைப் பார்த்த சரபோஜி மன்னர், இவர் யார் என்று கேட்க, இவர் தெய்வ பக்தியில் மூழ்கிய ஒரு பித்தர் என்று அங்கிருந்தோர் பதில் உரைத்தனர்.
தரிசனம் முடிந்த வேளையில் அபிராமி பட்டரை நோக்கிய மன்னர்.”இன்று என்ன திதி என்று கேட்டார். அம்பிகையை ஒளி வெள்ளமாகவே வழிபட்டு வந்த பட்டர் எதிரில் இருந்த ஜோதிமயமான அன்னையின் திவ்ய சொரூபத்தில் மூழ்கியவாறே, “இன்று பௌர்ணமி” என்றார்.
இதைக் கேட்டுத் திடுக்கிட்ட மன்னர் அங்கிருந்து செல்லும் போது, ‘இன்று பௌர்ணமி நிலவை நான் காணவில்லையெனில் இவர் தண்டிக்கப்படுவார்” என்று கூறி விட்டு அங்கிருந்து அகன்றார்.
மன்னர் சென்றவுடன் சுய நினைவு திரும்பியவுடன் நடந்த அனைத்தையும் அறிந்தார் அபிராமி பட்டர்.
சொல்லவொண்ணா வேதனையில் ஆழ்ந்த அவர் தன்னை ஊரும் உலகமும் பித்தர் என்று எண்ணி அப்படியே சொல்கின்றனரே என்று எண்ணினார். இப்படித் தவறாகக் கருதப்படும் தன்னை அம்பிகையே காத்தருள வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவர் அம்பிகைக்கு முன்னால் ஒரு பெரிய குழியை வெட்டச் சொன்னார். அதில் விறகுகளை அடுக்கி தீயை மூட்டினார். தீ கனல் விட்டு கொழுந்தெரிந்தது. குழிக்கு மேல் ஒரு விட்டத்தைக் கட்டி நூறு கயிறுகளால் கட்டப்பட்ட உறி ஒன்றையும் அவர் நிறுவினார்.
அம்பிகையின் சந்நிதிக்கு எதிரில் இருந்த அந்த உறியில் அமர்ந்த அவர் செந்தமிழ் துதிப் பாடல்களைப் பாடலானார். அம்பிகையின் தரிசனம் தரும் வரை பாடுவது இல்லையேல் உயிரை விடுவது என்ற முடிவில் அவர் உதிக்கின்ற செங்கதிர் என்று முதல் பாடலைத் தொடங்கினார்.
ஒவ்வொரு பாடல் முடிவிலும் அம்பிகை தரிசனம் தரவில்லை எனில் நூறு கயிறுகளில் ஒன்றை அவர் அறுத்தார்.
நூறு பாடல்களிலும் அம்பிகை தரிசனம் தரவில்லை எனில் எரிதழல் புகுவதென்ற அவர் நிலைப்பாட்டைக் கண்ட அனைவரும் திகைத்தனர்.
இப்படி ஒவ்வொரு பாடலாக அவர் பாட அம்பிகையின் தரிசனம் கிடைக்காத நிலையில் அவரும் ஒவ்வொரு கயிறாக அறுத்து வந்தார்.
எழுபத்தொன்பாவது பாடல் மலர ஆரம்பித்தது.
விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே
என்ற பாடலை அவர் பாடிய உடன் அபிராமி அம்மை பட்டருக்குக் காட்சி அளித்தாள். வானமெங்கும் ஒளி வெள்ளம் பரவ அந்த அமாவாசை தினமானது அம்பிகையின் அருளால் பௌர்ணமியைப் போலத் திகழ்ந்தது.
நடந்தது அனைத்தையும் அறிந்த மன்னர் ஆச்சரியப்பட்டு அபிராமி பட்டரின் மன்னிப்புக் கோரினார். அத்துடன் மட்டுமின்றி தனது மானியமாக நிலம் உள்ளிட்டவற்றை அவருக்கு அளித்தார். அது இன்று வரை அவரது சந்ததியினரிடம் இருந்து வருகிறது.
‘அந்தாதியைத் தொடர்ந்து பாடுக’ என்று அருளி அன்னை மறையவே நூறு பாடல்களையும் பாடி முடித்தார் பட்டர்.
அது அபிராமி அந்தாதி என்ற பெயரைக் கொண்டு உலகில் பரவ ஆரம்பித்தது.
Date uploaded in Sydney, Australia – 3 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல் 2-2-2025 (Post No.14,170)
(Collected from popular newspapers and edited by me)
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைவாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ; பிப்ரவரி இரண்டாம் தேதி ; 2025-ம் ஆண்டு
முதலில் மஹா கும்பமேளா செய்திகள்
மகா கும்பமேளா நடைபெறும் பகுதியை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றும் வரும் கும்பமேளாவில் கலந்துகொள்ள நாளுக்குநாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் மேற்கொள்ளப் பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.
மகா கும்பமேளாவில், மவுனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராட, பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஜனவரி 29 ஆம் தேதி நாளான மவுனி அமாவாசை மிக முக்கிய நாளாகும் ; அன்று அளவுக்கு அதிகமான கூட்டம் ஒரே இடத்தில் கூடியதால் ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்திய நாத் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் வீதம் உதவித்தொகை அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர் .
ஜனவரி 29 ஆம் தேதி வரை மொத்தம் 20 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் நீராடியுள்ளதாகவும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
பக்தர்கள் திரிவேணி சங்கமத்தை நோக்கி வராமல், அருகிலுள்ள நீர்நிலைகளிலேயே புனித நீராடுமாறும் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட்டார். அதன்பின், அங்குள்ள படித்துறையில் அமர்ந்து பூஜை செய்தார். இதையடுத்து, தன் குடும்பத்தினருடன் துறவியரை சந்தித்து ஆசி பெற்றார்.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடும் திரிவேணி சங்கமம் பகுதியில் கடந்த 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது. இது, அடுத்த மாதம் 26ம் தேதி நிறைவடைகிறது.
விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா NATIONAL AEROMAUTICS AND SPACE ADMINISTRATION என்னும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விண்வெளி வீரரான டான் பெட்டிட் பகிர்ந்துள்ளார். இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
*****
திருப்பரங்குன்றம் மலையை காக்க இந்து முன்னணி போராட்டம்!
திருப்பரங்குன்றம் மலையை காக்க இந்து முன்னணி போராட்டம்!
திருப்பரங்குன்றம் மலையை காக்க, வரும் 4ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு, உடன்குடியில் தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்து வரும் 4-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினர் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு, உடன்குடியில் இந்து முன்னணியினர் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்தும் துண்டுபிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
******
நடிகை மம்தா குல்கர்னி துறவறம்; பாபா ராம்தேவ் அதிருப்தி!
பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, மகா கும்பமேளாவில் துறவறம் ஏற்றது குறித்து கருத்து தெரிவித்த யோகா குரு ராம்தேவ், தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் மம்தா குல்கர்னி, 50. இவர், தமிழில் ஷோபா சந்திரசேகரன் இயக்கிய ‘நண்பர்கள்’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். ஹிந்திப் படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்த அவர் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளும் இருந்தன.
போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க வெளிநாட்டில் இருந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பினார். சில தினங்களுக்கு முன், இவர் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு துறவறம் ஏற்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.அது மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட அகாராவின் மகா மண்டலேஸ்வர் பதவியும் வழங்கப்பட்டது. இது பற்றி யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது:
‘இதுநாள் வரை உலக இன்பங்களை எல்லாம் அனுபவித்தவர்கள், திடீரென ஒரே நாளில் துறவிகளாக மாறி விட்டார்கள். மகா மண்டலேஸ்வர் பட்டமும் பெற்று விட்டார்கள். ”துறவி ஆவதற்கு, பல ஆண்டுகள் ஆன்மிகம் குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரே நாளில் யாரும் புனிதராக முடியாது– என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறினார்.
****
இந்துக்கள் விழா பற்றி காங்கிரஸ் கட்சி கிண்டல் , கேலி
உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா கும்ப மேளாவில் கோடிக்கணக்கானோர் புனித நீராடி வரும் நிலையில், அரசியல் தலைவர்களும் புனித நீராடி வருகின்றனர். மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் புனித நீராடியுள்ளனர். இதற்கிடையே, பாஜக தலைவர்கள் மகா கும்ப மேளாவில் புனித நீராடுவதை விமர்சிக்கும் வகையில், கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேகேள்வியெழுப்பினார்.மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கார்கேவின் கருத்து தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யும் அதன் தேசிய செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது;ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சனாதன நம்பிக்கையின் அடையாளமாக இருந்து வரும் மகா கும்பமேளாவுக்கான மக்களின் மரியாதையை காங்கிரஸ் கேலி செய்கிறது. கங்கைத் தாய் பற்றிய கார்கேவின் கருத்துகளால் கோடிக்கணக்கான மக்கள் வேதனையடைந்துள்ளனர். சனாதனத்துக்கு எதிரான இத்தகைய கருத்துக்கள் வெட்கக்கேடானது. கருத்துக்களுக்காக நாட்டிடமும், சனாதனத்தை நம்பும் ஒவ்வொரு நபரிடமும் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்ற மதங்களுக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்களை உங்களால் வெளியிட முடியுமா? இப்தார் விருந்தில் பங்கேற்பதன் மூலம் வறுமை ஒழிந்துவிடுமா என்று நீங்கள் கேட்க முடியுமா? காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவரும் எப்படி இதுபோன்ற சனாதன எதிர்ப்பு சிந்தனையை கொண்டிருக்க முடியும் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் ” என்று பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யும் அதன் தேசிய செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா கூறினார். *******
அயோத்தி வருகையை ஒத்தி வையுங்கள்: ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள்
அயோத்தி ராமர் கோவில் வருவதற்கு திட்டமிடும் பக்தர்கள், தங்கள் பயணத்தை 15 முதல் 20 நாட்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அயோத்தி ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள், அயோத்தி ராமர் கோவிலுக்கும் வருவதால், கூட்டம் அதிகரித்துள்ளது. நெரிசல் தவிர்க்க, அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் நீண்ட துாரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது
.நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள், சிரமம் இன்றி பாலராமரை தரிசிப்பதற்காக, அருகேயுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், தங்கள் அயோத்தி வருகையை, 15 முதல் 20 நாள் தள்ளிப்போட வேண்டும். வசந்த பஞ்சமிக்கு பிறகு வந்தால் சிரமம் இன்றி தரிசனம் பெறலாம்.இவ்வாறு அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
*****
கைலாஷ் – மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம் – இந்தியா, சீனா முடிவு!
இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை மற்றும் கைலாஷ் – மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்தாண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் சந்தித்து கொண்டதாகவும், அப்போது இருநாட்டு தலைவர்களும் மேற்கொண்ட ஒப்பந்தத்தை தற்போது அமல்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவைகளை தொடங்க இருநாடுகளும் முடிவெடுத்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தொடர்ந்து, 2025 கோடை காலம் முதல், கைலாஷ் – மானசரோவர் யாத்திரை தொடங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
இதுதொடர்பாக இரு நாடுகளை சேர்ந்த நிபுணர் குழுவும் விரைவில் சந்தித்து நடைமுறைகளை வகுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*****
தைப்பூச விழாவில் இலவச தரிசனம்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான சிறப்பு கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளதாக தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் 2025ம் ஆண்டிற்கான தைப்பூச திருவிழாவின் 7ம் நாள், தைப்பூச திருநாளான பிப்ரவரி 11ம் தேதி அன்று தங்க தேரோட்டம் நடைபெறும். பிப்ரவரி 12ம் தேதி தங்க குதிரை வாகன ஊர்வலமும், பிப்ரவரி 14ம் தேதி தெப்ப உற்சவமும் நடத்தப்பட்டு, தைப்பூச திருவிழா நிறைவு செய்யப்படும்.
*****
கோயில்களை நிர்வகிக்க சனாதன வாரியம் — விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு
புதுடெல்லி: ஜன. 26: நாடு முழுவதிலும் உள்ள கோயில்களை நிர்வாகிக்க சனாதன வாரியம் அமைக்க வேண்டும் எனத் துறவிகள் கோரியுள்ளனர். அகில இந்திய அகாடாக்கள் பரிஷத்தின்(ஏஐஏபி) இந்த கோரிக்கைக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் (V H P) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வஃக்பு வாரியம் போல், சனாதன வாரியம் அனைத்து மாநிலங்களிலும் அல்லது தேசிய அளவில் அமைக்க வேண்டும் எனத் துறவிகள் கோரியுள்ளனர்.
பாஜகவின் தோழமை அமைப்பான விஹெச்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது உள்ள முறைப்படி கோயில்களின் நிர்வாகக் குழுக்களே போதுமானவை என விஹெச்பி கருதுகிறது.
.இது குறித்து விஹெச்பியின் தேசியத் தலைவரான அலோக் குமார் கூறுகையில், நம் நாட்டில் வஃக்பு வாரியமும், சனாதன வாரியமும் தேவை இல்லை. கோயில்களை எந்த அரசும் கட்டுப்படுத்தக் கூடாது என்பதே எங்கள் கொள்கை ஆகும்” எனத் தெரிவித்தார்.
****
பாரதத்தில் சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை: கவர்னர் பெருமை
:”பாரதத்தில் சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை,” என, கவர்னர் ரவி தெரிவித்தார்.
சுப்பு சுந்தரம் எழுதிய, ‘காசி கும்பாபிஷேகம்’ நுால் வெளியிட்டு விழா, சென்னை மயிலாப்பூரில் நடந்தது. கவர்னர் ரவி நுாலை வெளியிட்டு பேசியதாவது:
ஆயிரம் ஆண்டுகளாக, பாரத நாடு ஆன்மிக தலமாக இருந்து வருகிறது. கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்பு, முஸ்லீம் படையெடுப்பாளர்களால் காசிக்கு அச்சுறுத்தல்இருந்தது. ஆன்மிகப் பணிகளில் நகரத்தார் சமூகம் முக்கிய பங்காற்றுகிறது. நாட்டின் பல ஆன்மிக தலங்களில், அவர்களின் சேவை இன்றளவும் தொடர்கிறது.
பொருளாதாரத்தை வளர்ப்பதில், நாட்டில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது. தார்மீக வழியில் பொருளாதாரம் வந்ததாக இருக்க வேண்டும்.
சுய நலத்திற்காக மட்டுமே பொருளாதாரம் என, இருந்து விடக் கூடாது. பாரதத்தில் சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை. சுதந்திரத்துக்கு பின்பு தான் நாம் குடும்பமாக இருக்கிறோம். பாரத ராஷ்ட்ரா என்பது தார்மீக கொள்கைகளால் ஆனது என்று கவர்னர் ரவி கூறினார்.
விழாவில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
****
தை அமாவாசை; முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு
தை அமாவாசையை முன்னிட்டு ஏராமான பக்தர்கள் தமிழகம் முழுவதும், தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
தை அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் காவேரி சங்கமத் துறையில் ஏராளமானோர் புனித நீராடினர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அரிசி, காய்கறிகள், தானியங்களை தானமாக கொடுத்து வழிபாடு நடத்தினர்.
· திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் திரண்ட பக்தர்கள் முக்குளத்தில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
· திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
· கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் கடலில் நீராடினர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
*****
சபரிமலை நடை பிப்ரவரி 12-ஆம் தேதி திறப்பு
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு, ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் மகரஜோதி தரிசனம் நிறைவடைந்து ஜன., 20ல் நடை அடைக்கப்பட்டது. மாசி மாதாந்திர பூஜை பிப்., 12ல் நடை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை திறந்திருக்கும். இந்த நாட்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கி உள்ளது. பக்தர்கள் sabrimalaonline.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
xxxxxx
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை – தரங்கம்பாடி நெடுஞ்சாலையில் இது 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலிலிருந்து வடக்கில் 15 கிலோமீட்டர் தொலைவிலும் இது உள்ளது/
தல விருக்ஷம் : பிஞ்சிலம் என்னும் ஜாதிமல்லிகைக் கொடி
திருமால் உள்ளிட்ட தேவர்கள் தூய இடத்தில் உண்ண வேண்டும் என்று அமுத கடத்தை இங்கு கொண்டு வந்து வைத்தனர். அதனால் இது கடபுரி அல்லது கடவூர் என்ற பெயரைப் பெற்றது.
இத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என்பதை அவர் தனது தந்தையார் மிருகண்டு முனிவர் மூலம் அறிய தலந்தோறும் சென்று சிவபிரானைத் தொழுது வந்தார். பதினாறு வயதாகும் போது 108வது தலமாக திருக்கடவூரில் அவர் சிவனைத் தொழும் சமயம் காலம் முடிந்ததால் எருமை வாகனத்தில் ஏறி வந்த எமன் மார்க்கண்டேயரை அவர் பூசிக்கும் சிவபிரானுடன் பாசக் கயிறை வீசி சேர்த்து இழுத்தார். உடனே சிவபிரான் கால சங்கார மூர்த்தியாக வெளிப்பட்டு எமனை உதைத்து தள்ளினார். மார்க்கண்டேயருக்கு சிரஞ்சீவியாய் என்றும் பதினாறாய் இருப்பாயாக என்று அருள் பாலித்தார்.
இங்கு ஞான உபதேசம் பெற விரும்பிய பிரம்மா சிவனை வழிபட அவர் ஒரு வில்வ விதையினைக் கொடுத்து, ‘இது விதைத்தவுடன் ஒரு முகூர்த்த காலத்தில் எங்கு விளைகின்றதோ அங்கு எம்மை வழிபடுவாயாக’ என்று கூறி அருளினார். இத்தலத்தில் விதை முளைக்க இங்கேயே இருந்து பிரம்மா வழிபட சிவன் அவருக்கு ஞானோபதேசம் செய்தருளினார். ஆகவே இத்தலத்திற்கு வில்வ வனம் என்ற பெயர் ஏற்பட்டது.
அடுத்து மார்க்கண்டேயர் அமிர்தகடேசருக்கு பிஞ்சிலம் எனப்படும் ஜாதிமல்லிகையுடன் கங்கை நீரைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்ததால் இது பிஞ்சிலவனம் என்னும் பெயரைப் பெற்றது.
அமிர்தலிங்கத்தினை பூசித்த பிரமன் உள்ளிட்டோர் அமிர்தத்தைக் காணாமல் திகைத்தனர். உடனே சிவபிரான் விநாயகப் பெருமானைத் துதியுங்கள் என்று அருள் பாலிக்க ஒளிந்து இருந்த கணபதி அவர்களுக்குக் காட்சி தந்து அருள் பாலித்தார். அவர்களும் அமுதப் பெருக்கினை உண்டனர். இங்குள்ள கணபதி சோர கணபதி அல்லது கள்ள வாரணப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.
புலத்திய மஹரிஷி இங்கு மார்க்கண்டேயரைக் காண வந்தார். அப்போது அமிர்தலிங்கேஸ்வரரை பூஜித்து ஒரு விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார். இவரை பூஜித்தவர்கள் புண்ணியமடைவர் என்பதால் இவருக்கு புண்ணியவர்த்தனர் என்ற பெயர் ஏற்பட்டது.
அகத்திய முனிவர் இங்கு பூஜித்து பாவத்தைப் போக்க அருளியதால் இறைவனுக்கு பாப விமோசனர் என்ற பெயர் ஏற்பட்டது.
இங்கு எமனுக்கு உற்சவத் திருமேனி – சந்நிதி உள்ளது.
இங்கு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரப் பாடலகளைப் பாடி அருளியுள்ளனர். அப்பரும் திருஞானசம்பந்தரும் ஒரு சேர இங்கு எழுந்தருளியது இன்னொரு சிறப்பாகும். இன்னும் பல அருளாளர்களும் பாடல்களைப் படைத்துள்ளனர்.
இத்தலமே மிருகண்டு மஹரிஷி அவதரித்த தலமாகும்.
இங்கு தான் குங்குலிய கலய நாயனார், மற்றும் காரி நாயனார் ஆகியோரும் அவதரித்தனர். அவர்களுக்கு இங்கு திருவுருவச் சிலைகள் உள்ளன.
இந்தத் தலத்தின் அம்பிகையின் பெருமையை உலகிற்கு உணர்த்தியவர் அபிராமி பட்டர் ஆவார். தஞ்சையை ஆண்டு வந்த முதலாம் சரபோஜி மன்னர் ஒரு தை அமாவாசை தினத்தன்று இத்தலத்திற்கு வந்தார். அங்கு அம்பிகையின் நினைவில் இருந்த அபிராமி பட்டரிடம் இன்று என்ன திதி என்று கேட்க அவர் பௌர்ணமி என்று பதில் கூறினார். இதனால் வெகுண்ட அரசன் திரும்பிச் செல்ல பின்னர் நடந்ததை அறிந்த அபிராமி பட்டர் மனம் வருந்தி அம்மனின் முன் ஒரு ஆழமான குழியை வெட்டி அதில் விறகை அடுக்கித் தீ மூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டம் அமைத்து நூறு கயிறுகளால் உறி ஒன்றையும் கட்டி அதில் ஏறி அமர்ந்து அபிராமி அந்தாதியை இயற்றிப் பாடலானார். ஒவ்வொரு பாடலை முடித்தவுடன் ஒரு கயிறை அறுக்கலானார். எழுபத்தொன்பதாவது பாடலை அவர் பாட அன்னை அவருக்குக் காட்சி அளித்தாள். கோடி நிலா சேர்ந்தது போல் ஒளி வெள்ளம் பெருக, “நீ சொன்னதை மெய்ப்பித்து விட்டேன்” என்று கூறி அம்பிகை அருள் பாலித்தாள். அபிராமி பட்டரின் நூறு பாடல்களும் அற்புதமான பாடல்களாகும்.
இந்தத் திருக்கோவிலில் 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அமிர்த கடேஸ்வரரும் அபிராமி அம்மையும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Date uploaded in Sydney, Australia – 3 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
6
What to do in Hobart
Tasmania’s capital Hobart has been pressed into shape by nature.
The city is framed by the rugged figure of kunanyi / Mount Wellington and the flow of the wide River Derwent, with wilderness lingering nearby – just beyond the mountain. This is Australia’s second-oldest city. The underground Museum of Old and New Art, aka Mona, looms large in global art circles .
The famed Salamanca Market has been a Saturday tradition for more than 50 years. Other attractions include a dinosaur fossil, Tasmanian Museum and Art Gallery (TMAG),
No visit to Hobart can be complete without a trip to Mount Wellington. Mount Wellington is part of the kunanyi/Mt Wellington Explorer Bus- Return Tour (2.5 hours).
One of the most remarkable landmarks a short distance from the heart of Hobart and on the banks of the Derwent River, is the Royal Tasmanian Botanical Gardens.
Tasmania has long been associated with the sea, ships, and ship building, and the Maritime Museum of Tasmania is the ideal place to relive this histo-ry.
One of the famous landmarks in Hobart that any visitor is likely to come across is Tasman Bridge. It is among the world’s first box-girder cantilever bridges to have been built.
Located a mere 30 minutes away from Hobart, the Bonorong Wildlife Sanc-tuary is one of the top tourist attractions in the area and for good reason. The sanctuary is home to an eclectic and very impressive collection of flora and fauna. This includes wombats, birds, koalas etc
Tasmania is known for its natural beauty, wildlife, history, and food.
National parks: Tasmania has over 40% national parks and world heritage wil-derness
Rainforests: Tasmania has dense rainforests that are home to many endemic species
Tasmanian Devil: Tasmania is home to the Tasmanian Devil, a unique species of wildlife . Platypuses are found in eastern Australia, from Tasmania to far north Queensland. They are also occasionally found in South Australia.Peacocks: Tasmania has peacocks that wander freely in reserves .
Unorthodox place names: Tasmania has place names that have taken on new modern interpretations
7
What to do in Adeleide
Top attractions in Adeleide include Adelaide Botanic Garden, Adelaide Central Market, Barossa Valley Wineries and Fleurieu Peninsula.
Kangaroo Island, 13km (8mi) off the coast of South Australia, is one of the best places in Australia to see wild animals like koalas, kangaroos, sea lions and seals.
Head to the Adelaide Oval and embark on an adventure as you scale the roof of this iconic structure.
Three days on board The Ghan train
Travel through the vast outback from the south to the north of Australia (or vice versa) on the world’s longest north-south train journey.
One of the world’s greatest rail journeys, The Ghan, (named after the Afghan
Cameleers). On the way, you can explore the famous outback towns of Alice Springs and Katherine on whistlestop tours.
Time: 3-4 days, 2-3 nights
Distance: 2,979 kilometres (1,851 miles)
Nearest major city: Adelaide, Alice Springs, Darwin.
8
What to do in Darwin
Visit Crocosaurus Cove, Museum and Art Gallery of the Northern Territory, Flea & Street Markets, Water Parks.
Nearby attractions:–
Litchfield National Park and Jumping Crocodile Cruise (Seven Hours)
Nitmiluk National Park /Katherine Gorge Cruise & Edith Falls Day Trip from Darwin.
Kakadu National Park Scenic Flight &Yellow Water Cruise (by plane).
9
What to do in Brisbane
Without spending a cent or a penny, you can see the whole of Brisbane.
Yes, the City Hopper ferry service in Brisbane, Australia is free. The City Hopper is a free inner-city ferry that runs along the Brisbane River.
How to use the City Hopper ferry:
Look for a red sign on the front and side of the ferry to identify it as a free City Hopper
The City Hopper runs every 36 minutes from 6 AM to midnight, seven days a week
The City Hopper stops at eight locations, including Eagle Street Pier, Kangaroo Point, and South Bank Parklands
You can use the Translink Journey Planner to plan your trip
Other free transportation options in Brisbane:
City Loop and Spring Hill Loop bus services: These bus services run every 10 minutes on weekdays between 7 AM and 6 PM
Free off-peak travel for seniors: Eligible seniors can travel for free on CityCats, ferries, and Brisbane City Council buses during off-peak times
You can contact Translink on 13 12 30 or visit the Translink website for more information about public transport in Brisbane.
Science Museum and Art Gallery are good places to visit.
Brisbane has the largest city hall in the country.
Brisbane, the capital city of Queensland, is a fabulous place to visit in Australia. It’s packed with history, culture, and entertainment, and it’s home to the country’s largest city hall! Brisbane City Hall was built in the early 1900s and comprises around two acres, complete with 573 rooms and the largest copper dome in Australia. It was the second-largest construction project of its time (second only to the Sydney Harbour Bridge).
****
Brisbane, Queensland, Australia was announced as the host city for the 2032 Summer Olympics .
Brisbane River Cruise with entry to Lone Pine Koala Sanctuary.
Stroll along the Brisbane Riverwalk. This tranquil boardwalk runs parallel to the Brisbane River and takes in some of the most idyllic suburbs and Brisbane city views. The official route takes you from New Farm to the historic Howard Smith Wharves.
If you find yourself in Brisbane between June and November, catch all the action of the annual humpback whale migration with Brisbane Whale Watching Tours in Moreton Bay.
Moreton Island Day Trip (Kayak, Snorkel & Sandboard) from Brisbane or Gold Coast.
Springbrook and Tamborine Rainforest Tour including Natural Bridge and Glow Worm Cave.
—subham—
Tags- Cities in Australia, what to see, what to do, Brisbane, Sydney, Hobart, Adelaide, Darwin, Tasmania, population,
Date uploaded in Sydney, Australia – 2 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
The top 10 best cities in the world for 2025
The 2025 World’s Best Cities report, compiled by marketing consultancy Resonance with market research company Ipsos, ranks cities around the world on what it defines as their livability, lovability and prosperity, all totting up to an overall score.
Alongside other data, it includes a survey of 22,000 people in 30 countries.
Among the top 10 are a handful of cities in western Europe, a famous US city and one lucky Australian location.
Sydney, the capital of NSW and second most populus city in Australia, just scraped into the top 10 list of world’s best cities.
Attractions such as the iconic Harbour Bridge, Sydney Opera House and stunning beaches such as Bondi and Balmoral were listed as reasons Sydney is so beloved both locally and globally.
Conveniently located within a three-hour drive from Sydney or a one-hour flight from Melbourne, Canberra stands as a must-visit destination to uncover the spirit of the nation.
Adding to the iconic Sydney Opera House, are the city’s cultural institutions, Aboriginal heritage and sacred sites, and annual cultural festivals Sydney Harbour Bridge, Balmoral and Darling Harbour are other tourist attractions.
****
3
What to do in Melbourne
Melbourne is famous for its cultural and sporting events such as Cricket Matches and Open Tennis Tournament; the The National Gallery of Victoria (NGV) houses the nation’s largest permanent collection of Australian art, while the Melbourne Cricket Ground has the most seats in the Southern Hemisphere.
This city finds inventive ways to turn spaces into wine bars and hip restaurants. Its more than 5000 cafes and restaurants can be found in intriguing laneways, basements and even beneath bridges. Wherever it is, Melbourne’s food and wine scene nourishes its cultural appetite.
Long considered Australia’s cultural capital, Melbourne has a high concentration of contemporary art galleries and is one of the world’s leading street art cities. Walking tours are an ideal way to explore the city’s cultural heart.
The city proudly hosts major international annual events such as the Melbourne Cup horse race, the Australian Open Tennis Championships, and the Formula One Australian Grand Prix. Numerous cultural festivals take place in Melbourne each year.
****
4
What to see in Cairns
cable car over rain forest
One of the best things to do in Cairns is to take to the skies on a helicopter tour; the 45-minute journey with Nautilus Aviation will show you the city’s most beautiful offerings, from the rainbow colours of the Great Barrier Reef to Barron Falls and the canopy of the Daintree Rainforest.
Visiting The Great Barrier Reef in glass bottomed boats is a memorable one.
This is the world’s largest coral reef system, a collection of just under 3000 individual reefs and 900 islands across near 350,000 square kilometres.
Journey north-west of Cairns and into the mountains to find Kuranda.
Make your way up the ridge via the famed steam train on the Kuranda Scenic Railway;, it navigates 15 tunnels, 93 curves and difficult bridges across dense rainforest, waterfalls and steep ravines in just under two hours. On the way down, jump aboard the Skyrail Rainforest Cableway.
****
5
What to do in Perth
Wave Rock Near Perth
Perth has something for everyone. Beautiful wine region, spectacular coastline, and a bustling city – Perth has plenty to offer. ‘There are treetop walks, Swan River cruises, science museums, arts, crafts, and sports to be enjoyed. Experience the beauty of the Swan River on a scenic cruise from Perth for a 2 hour and 45 minute to visit the historic port city of Fremantle A 20-metre high suspension bridge provides spectacular views . Other attractions include Kings Park and Botanic Garden, Rottnest Island , Wave Rock, Pinnacles Desert and the Margaret River wine region.
Country’s largest Hindu temple is in Perth.
****
to be continued………………………….
Tags- Cities in Australia, capital, what to see, what to do, Canberra, Brisbane, Sydney, Melbourne, Hobart, Adelaide, Darwin, Cairns, Perth, Tasmania, population
Date uploaded in Sydney, Australia – 2 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்; 27 சொற்களைக் கண்டுபிடிக்க அம்புக்குறிகளைப் பின்பற்றுக.
குறுக்கே
1. ஆம்பல் மலர்; பிரபல வாரப் பத்திரிக்கையின் பெயர்
2. இரும்பினைப் பிடிக்கும் சனி
5.அருள்பெற்ற புலவர்
8. ஒரு ஆண் மகன் 80 ஆம் ஆண்டு முடிந்து எட்டாவது மாதம் ஜன்ம நட்சத்திரத்தன்று செய்யப்படுகிறது. கணவனையும் மனைவியையும் அல்லது ஒரு சந்நியாசியை உட்காரவைத்து மந்திர ஸ்னானம் செய்து தங்கக்காசுகளால் அபிஷேகம் செய்வது .
13. கிளி அல்லது அதுபோன்ற பறவை; இதன் பெயரில் உபநிஷத் இருக்கிறது
14 மன்மதனின் மனைவி
3. ரத்தினைக் கற்களை நிறுத்துப் பார்க்க இந்துக்கள் பயன்படுத்தும் குந்துமணி எடை
15. அக்காளுக்கு அடுத்துப் பிறந்தவள்
17 தசை என்பதன் மருவு
18. மூஞ்சி என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்
19. தேனுக்கு அலையும் காட்டு மிருகம்; கருப்பு அல்லது பழுப்பு நிறம்; ஜாம்பவான் வம்சம்
19. குடித்தால் போதை தரும்
20. மரை (antelope) மான்(deer) ஆடு(sheep) – இவற்றின் ஆண் ஏறு
17. பொருட்கள் , பண்டங்களை விற்பனைக்காகக் கொண்டு செல்லும்போது பயன்படும் சொல்
******
கீழே
1. தாவித் தாவி செல்லும்; வண்டியிலும் ரேஸ் பந்தயத்திலும் பயன்படும் மிருகம்
4. ஆண்களின் பெயர்களுக்கு முன்னால் வரும் மரியாதைச் சொல்
8. சூர சம்ஹாரத்துக்கு முன் முருக பக்தர்கள் கடைப்பிடிக்கும் விரதம்
9. பெண், அலங்காரம் , உரை
19. பாக்கு மரம்
6. கை
10. இறந்து போன முன்னோர்கள் ,
14.. குடித்தால் போதை தரும்
7. ஊன்றினால் முளைக்கும்
11. தலம் என்பதற்குள்ள இன்னுமொரு சொல்
12. இலங்கைத் தமிழர்கள் நாற்காலி என்பதற்குப் பயன்படுத்தும் சொல்; , கதிர்காமம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஹெல்த்கேர் ஜனவரி 2025 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
போஜன குதூகலம் – 2
ச. நாகராஜன்
நூலில் உள்ள சில அருமையான செய்திகளைக் கீழே காணலாம். முழு விவரத்திற்கும் நூலைப் படிப்பதே சாலச் சிறந்தது.
நெல்
பழைய நெல் எளிதில் செரிக்கும். உடலுக்கு இதமானது.
யவம் (பார்லி)
கருஞ்சிவப்பு கலந்த யவம் இனிப்புள்ளது. குளிர்ச்சியுள்ளது. இது சிறுநீர் சம்பந்தமான நோய்களைப் போக்க வல்லது.
சோளம்
நல்ல வலிமை தரும். வாதம் முதலிய மூன்று குறைகளையும் போக்கும்.
தோலுள்ள தானியம்
பயறு, துவரை, மொச்சை ஆகியவை தோலுள்ள தானியங்கள். இவை மலத்தைக் கட்டும். சுவையுள்ளது. காம உணர்ச்சியைத் தூண்டும் தன்மையுள்ளவை.
உளுந்து
உளுந்து பசையுள்ளது. மலத்தை அதிகரிக்கச் செய்வது. வரட்சி தரும்
வீரியத்தை அளிக்கும். உடலில் பளபளப்பையும் நல்ல நிறத்தையும் தரும்.
கடலை
இனிப்புள்ளது. சிறுநீர் பற்றிய நோயையும் வாயுவையும் பித்தத்தையும் வெல்லும்.
புல்வகை தானியங்கள்
தினை, சாமை, வரகு, நிவாரம் முதலிய புல் வகையைச் சேர்ந்த தானியங்கள் குளிர்ச்சி பொருந்தியவை. இலேசானவை. இவற்றால் வாயு அதிகரிக்கும். ஆனால் கபமும் பித்தமும் போகும்.
பத்து வகை காய்கறிகள்
மூலம் (வேர்), பத்ரம் (இலை), கரீரம் (மூளை), அக்ரம் (தளிர்), பலம் (பழம்), காண்டம் (தண்டு),அதிரூடம் (கொழுப்பு), த்வக் (தோல்), புஷ்பம் (பூ), கவசம் (பட்டை) என காய்கறிகள் பத்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
பால்
முற்பகலில் பால் குடித்தால் உற்சாகமும் செரிமானமும் அதிகரிக்கும். நண்பகலில் குடித்தால் வலிமை வளரும். களைப்பு நீங்கும். இரவில் குடிக்கப்பட்டால் பல நோய்களைப் போக்கும். ஆகவே இது எப்பொழுதுமே உட்கொள்ளத் தகுந்ததாகும்.
நதிகளில் ஓடி வரும் நீரின் பயன்கள்
இந்தப் பகுதியில் கங்கை, யமுனை, நர்மதை, சந்திரபாகா, சோணபத்ரா, காவேரி உள்ளிட்ட பல நதிகளின் நீரின் தன்மை தரப்படுகிறது. ஒவ்வொரு நதியின் நீரும் தரும் நன்மைகளும் விளக்கப்பட்டுள்ளது.
நீரைப் பருகுதல்
இரவில் உட்கொள்ளப்படும் வெந்நீர் வாயுவைப் போக்கும். கபத்தை விரைவில் அகற்றும் சுவை இன்மையை நீக்கும். உணவைச் செரிக்கச் செய்யும். செரிமானத்தை அதிகமாக்கும்.
செரிமானத்தை அதிகரித்துக்கொள்ள அடிக்கடி குறைவாக நீர் குடித்தல் வேண்டும்.
உணவுக் கலங்கள்
தங்கப் பாத்திரம் தோஷங்களைப் போக்கிக் கண்ணுக்கு நன்மை தரும்.
வெள்ளி கண்ணுக்கு நன்மை தரும். பித்தம், கபம், வாதம் ஆகியவற்றைப் போக்கும். வெண்கலம் அறிவையும் சுவையையும் தரும். இரத்த நோயையும், பித்தத்தையும் தெளிய வைக்கும்.
இரும்பு சங்குப் பாத்திரங்களில் உண்டால் செரிக்கும். வீக்கம், பாண்டு ஆகியவற்றையும் போக்கும். வலிமை தரும். காமாலையை அகற்றும்.
வாழை இலையில் உணவு உட்கொண்டால் மனதுக்கு திருப்தி ஏற்படும். சுவை மிகும். காமம் அதிகரிக்கும். வலிமையும் செரிமானமும் தோன்றும். நஞ்சு, களைப்பு வாயு, இரத்த நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு உகந்தது. பாண்டு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.
பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரங்களும் அவற்றை உண்ணக் கூடாதென்பதும்.
அசுவினி முதல் உள்ள நட்சத்திரங்களின் வரிசையில் கீழ்க்கண்டவற்றின் தொடர்பைக் கண்டு கொள்க. (அசுவினிக்கு விஷத்ரு, பரணிக்கு நெல்லி என்று வரிசைப்படுத்திக் கொள்க)
விஷத்ரு, நெல்லி, அத்தி, நாவல், கருங்காலி, பாதிரி, மூங்கில், அரசு, நாகமென்ற பெருமுத்தம், ஆல், பலாசம் எனப்படும் முள்ளுமுருங்கை, பிலட்சம் என்ற கல்லொளி மரம், அம்பஷ்டம், வில்வம், அர்ஜுனம் என்ற மருத மரம், நருமுருங்கை, சுரபுன்னை,எலி, ஆல், தேக்கு, வஞ்சுளம் என்கிற தினிசி மரம், பலா, எருக்கு, வன்னி மரம், கடம்பம், மா, வேம்பு, இலுப்பை ஆகிய மரங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரியனவாகும்.
தன் பிறந்த நட்சத்திரத்திற்குரிய மரங்களை ஒருவன் கண் மூடித்தனமாக மருந்து முதலியவற்றுக்காக உபயோகப்படுத்தினால் அவனது ஆயுள், செல்வம், மனைவி மக்கள் அனைத்தும் அழியும். இவற்றை வளர்த்தல் முதலியன செய்தால் வளரும்., (இங்கு முதலியவற்றுக்காக என்பதற்கு வெட்டுதல், உண்ணுதல் என்று பொருள் கொள்க)
சாப்பிட்ட பின் எப்படி இருக்க வேண்டும்?
சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே இருந்தால் தொந்தி அதிகரிக்கும். படுத்தால் உடல் பருக்கும். நடப்பவனுக்கு ஆயுள் வளரும். ஓடுபவனைக் கண்டு மரணம் ஓடும்.
எப்படிப் படுக்க வேண்டும்?
மல்லாந்து படுப்பவன் எட்டு பங்கு மூச்சையும், வலது புறம் ஒருக்களித்துப் படுப்பவன் அதன் இரண்டு பாகங்களை (பதினாறு மடங்கு) மூச்சை இழக்கிறான். ஆகையால் இரட்டைப் பங்கு மூச்சை செலவாக்கும் வகையில் சுகமாகப் படுக்க வேண்டும். எல்லாப் பிராணிகளுக்கும் தொப்புளுக்கு மேல் இடப்புறத்தில் செரிமானத்திற்குரிய உஷ்ணமுள்ளது. ஆகையால் செரிமானத்தை அதிகரிக்க இடது பக்கத்தில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.
தெய்வ பூஜை செய்வது எப்படி?
தெய்வங்களைப் பூஜித்தல், சாப்பாடு, தூக்கம் ஆகியவற்றை வெளிப்படையாகச் செய்தல் கூடாது. இருட்டிலும், சந்தியா காலங்களிலும் மேல் கூரையற்ற இடங்களிலும் செய்யலாகாது.
சாப்பிடும் முன்
சாப்பிடும் முன் இஞ்சியையும் உப்பையும் உட்கொள்ளுவது மிகவும் நன்மை தரும். உப்பு கடலுப்பாக இருத்தல் வேண்டும்.
உண்ணும் போது நினைக்க வேண்டிய தெய்வங்கள்
உணவு உட்கொள்ளும் போது பிரமன் முதலியோரை நினைக்க வேண்டும்.
உணவு பிரம்மா, அதன் சுவை திருமால் உண்பவன் சிவன் என எண்ணி உண்பவனுக்கு திருஷ்டி தோஷம் ஏற்படாது. திருஷ்டியினால் உண்டாகும் துன்பங்களைத் தீர்க்கும் படி கோரி நான் நினைக்கிறேன் என்று அனுமனையும் நினைக்க வேண்டும்.
இறைச்சி
சைவ உணவு மட்டுமே இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
அசைவ உணவு வகைகள் பற்றிய ஏராளமான விஷயங்களை இந்த நூலில் காணலாம். மீனிலிருந்து ஆரம்பித்து பன்றி இறைச்சி முடிய அனைத்து இறைச்சி வகைகளையும் பற்றி நூல் அலசி ஆராய்கிறது.
அசைவப் பிரியர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்.
முயல் இறைச்சி, மீன் இறைச்சி, லாவக இறைச்சி என்று நூலின் பின்னால் உள்ள உணவுப் பொருள்களின் அகர வரிசைப் பட்டியலில் தேடிப் பார்த்தால் குறிப்பிட்ட பக்கத்தில் அது பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.
அருமையான ஆராய்ச்சி நூல்
இது உணவு வகைகளைப் பற்றிய ஒரு கலைக் களஞ்சியம். கையேடு.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான விஷயங்களை நவீன ஆய்வு உபகரணங்களைக் கொண்டு ஆய்வு செய்து அதில் கிடைக்கும் முடிவுகளை நூல் குறிப்பிடும் பயன்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
இதற்காக ஆகும் பொருள் செலவை அரசே ஏற்க முன் வர வேண்டும். இதில் ஈடுபட ஆர்வமுள்ள அறிஞர்களை ஊக்குவிக்க வேண்டும். சமூக ஊடகங்கள் இதற்குப் பெரும் முக்கியத்துவம் தர வேண்டும்.
ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை உருவாக்க அறிவுக் களஞ்சியமாகத் திகழும் இந்த நூலையும் இது போன்ற நூல்களையும் தமிழ் உலகம் மனமார வரவேற்க வேண்டும்.
சரஸ்வதி மகால் நூல்நிலையம் போன்ற நிறுவனங்களை ஆதரித்துப் போற்றி அதில் பணியாற்றும் அறிஞர்களை வாழ்த்தி அவர்களுக்கு உரிய விதத்தில் இந்தியத் திருநாட்டின் மக்கள் ஆதரவு தர வேண்டும்.