ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 9 (14,117)

Written by London Swaminathan

Post No. 14,117

Date uploaded in Sydney, Australia – 19 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலிய பழங்குடிகள் மொழிகளில் தமிழ்ச் சொற்கள்

BASIC WORDS

ஆஸ்திரேலியாவில் 250 மொழிகள் இருப்பதால் எந்த மொழியில் தமிழ்ச் சொற்கள் அதிகம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் ; அதே மொழியில் உணவு, உறைவிடம் உடல் உறுப்புகள் , உறவு முறைகள் அப்பா, அம்மா, அண்ணா, தம்பி மற்றும் நீ, நான், அவன், அவள் , அது, இது, தண்ணீர், சூடு, குளிர், மழை  முதலியன ஒன்றாக இருக்கிறதா அல்லது மொழியியல் விதிகளின்படி மாறி இருக்கின்றனவா என்று பார்க்கவேண்டும் . இவைகளை 850 BASIC WORDS அடிப்படைச் சொற்கள் என்பார்கள் ;உண்மையைச் சொல்லப்போனால் ஆஸ்திரேலிய மொழிகளிடையேகூட நெருங்கிய ஒற்றுமைகள் இல்லை. ஏனெனில் ஆஸ்திரேலியா ஐரோப்பாவைவிட அதிகப் பரப்பினை உடையது; மேலும் மொழிகளின்  எண்ணிக்கையும் அதிகம் .

இவ்வளவு சொன்னபோதும் ஆங்காங்கே சில சொற்களில் தமிழ் ஓலியைக் கேட்கமுடிகிறது .

பிலா BILA  என்றால் நீரோடை, தண்ணீர் ; மலையாளத்தில் இன்றும் கூட நதிகளின் பெயரில் புழா , தமிழில் புழை என்று பெயர்கள் இருக்கின்றான.

ஆஸ்திரேலியா என்னும் நாட்டிற்கு ஒரே ஒரு மொழியில் மட்டும் அவர்கள் வாழுமிடத்தைப் பண்டையன் என்று அழைக்கின்றனர் இது பழைய என்ற தமிழ்ச் சொல்லை நினைவுபடுத்தும்.

பல மரங்கள், செடிகளின் பெயர்கள் ம/ ர்ரா , புர்ரா   என்று முடிவடையும் மொழியியல் விதிகளின்படி ம=ப இடம் மாறும் (உ.ம்.முழி= விழி; மேளா = விழா; கோமணம்= கோவணம் etc)

·         Winanga-Li

The Winanga-Li language uses words like mara for “hand”, “finger”, and “five” 

இதில் மரா= விரல் என்பதைக் காணலாம் .

(மரக்கிளைகளை போல கை விரல்கள்)

இப்படி மொழியியல் விதிகளை பயன்படுத்தினால் நிறைய சொற்களில் ஒற்றுமை கிடைக்கிறது . ஆனால் அதே மொழியில் அப்பா , அம்மா, தண்ணீர், நீ, நான் அவன், முதலியனவும் தமிழ் போல இருந்தால்தான் ஒற்றுமை என்று விளம்ப முடியும்.

இந்த 250 மொழிகளில் எந்த மொழியில் அடிப்படைச் சொற்களில்  அதிக ஒற்றுமை இருக்கிறது என்பதைக் காண வேண்டும்  அடிப்படைச் சொற்கள் எவை என்பதை மேலே காண்க.

****  

MOTHER

The word for “mother” in Aboriginal languages varies by language and community. For example, in Gurindji, the word for “mother” is ngamayi, while in Noongar, it is ngangk. 

Examples of words for “mother” in Aboriginal languages

  • Ngami: A word for “mother” in Gupapuyngu 
  • Ngangk: A word for “mother” in Noongar 
  • Ngambaa: A word for “mother” in Winanga Li, which may be related to the word ngamu meaning “breast” or “milk” 
  • Ngangk: A word for “mother” in Noongar, which is also the word for “sun” 

Other words related to family in Aboriginal languages 

  • Demban: A word for “grandfather” in Noongar
  • Dembart: A word for “grandmother” in Noongar
  • Maam bart/maaman/naan: A word for “father” in Noongar
  • Ngoony: A word for “brother” in Noongar
  • Djook: A word for “sister” in Noongar
  • Kongk: A word for “uncle” in Noongar

இதில் நங்கை அங்கை, , நம்பி என்ற ஒலிகளை அறிய முடிகிறது

சுராங்கனி என்ற சிங்களச் சொல்லை எடுத்துக்கொள்வோம்; இது தூய ஸம்ஸ்க்ருதச் சொல்; இதில் அங்கனி வருவதைக் காணலாம் 

Sanskrit dictionary

Surāṅganā (सुराङ्गना).—a celestial woman or damsel, an apsaras; प्रतिघाय समाधिभेदिनीं हरिरस्मै हरिणीं सुराङ्गनाम् (pratighāya samādhibhedinīṃ harirasmai hariṇīṃ surāṅganām) R.8.79.

surāṅganā (सुरांगना).—f (S) A woman of the gods, a courtesan of Swarga.

Surāṅganā is a Sanskrit compound consisting of the terms sura and aṅganā (अङ्गना).

******

FATHER

The word for “father” in Aboriginal languages varies by region and language group. Here are some examples: 

  • Buwadjarr: The word for “father” in Winanga Li 
  • Bubaa: A term for “dad” in Winanga Li 
  • Mama: A term for “father” in some parts of Australia, including Victoria, central and northern New South Wales, and the west of the continent 
  • Papa: A term for “father” in some parts of Australia, but can also mean “(elder) brother” or “mother” 
  • Kaku: A term for “father’s father” in Gurindji 
  • Galoonoordoo or Gooloo: A term for “paternal grandfather” 

இவைகளில் பாபா, மாமா, பாவா என்ற ஒலிகளை ஒப்பிட முடிகிறது. .

இவ்வாறு பார்த்துக்கொண்டே போகவேண்டும் ; இதற்கு நீண்ட ஆராய்ச்சி தேவை; மொழியியல் விதிகளின்படியான ஆராய்ச்சி தேவை .

உலகிலேயே ஆறாவது பெரிய நாடான ஆஸ்திரேலியாவில் ஏதோ சில சில மொழிகளில்  உள்ள சிற்சில சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டு இதோ பார் தமிழ்! அதோ பார் தமிழன்!!!! என்று சொல்லுவது அறிவுடைமை ஆகாது.

*****

நான் ஆஸ்திரேலியாவுக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறை  வந்து சென்ற பின்னர் எழுதிய கட்டுரைகளின் இணைப்பு

ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தமிழர்களா? (Post …

Tamil and Vedas

https://tamilandvedas.com › ஆ…

7 Feb 2016 — அதில் அவர் தனக்காக ஆஸ்திரேலிய கலைத்துறை ஏற்பாடு செய்த பழங்குடி மக்களின் நடனத்தைப் பார்த்தபோது குறைந்தது 25 தமிழ்ச் சொற்களையாவது எண்ண முடிந்தது என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. என்ன பொருத்தம்! இந்தப் பொருத்தம்!


ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் சுவையான …

Tamil and Vedas

https://tamilandvedas.com › ஆ…

10 Feb 2016 — ஆஸ்திரேலியப் பழங்குடி இன மக்கள் ஒரே மொழியைப் பேசவில்லை. 250 மொழிகளையும், கிளை மொழிகளையும் பேசுகின்றனர். கடல் என்பதற்குக் கூட ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல்! ஏன் இவ்வளவு மொழிகள் வந்தன என்பது ஆச்சரியமான விஷயமே.

உலக மொழிகளும் | Tamil and …

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·

27 Feb 2018 — … ஆஸ்திரேலியப் பழங்குடி (AUSTRALIAN ABORIGINES) மக்கள் 250 … உலகிலுள்ள பழைய மொழிகளில் சில சொற்கள் ஒன்றாகவே இருக்கும்; தமிழ் சொற்களான அப்பா.

உலக மொழிகள் தமிழில் இருந்து உதித்தனவா? …

Tamil and Vedas

https://tamilandvedas.com › உல…

19 Mar 2020 — உலகிலுள்ள பழைய மொழிகளை ஆராய்ந்தால் அவைகளின் சொற்கள் ஸம்ஸ்க்ருதத்தில் இருந்தோ தமிழில் இருந்தோ கிளைவிட்டுப் பரவியிருப்பதைக் காணலாம். சில அடிப்படை மொழி இயல் கொள்கைகளைப் பயன்படுத்தினால் அவை எப்படி மாறின என்பதையும் புரிந்து கொள்ளலாம் …


மொழிக் கொள்கைகளை தோற்கடிக்கும் நாடு …

Tamil and Vedas

https://tamilandvedas.com › ம…

12 Nov 2017 — தமிழ் மொழியில் ஆயிரக் கணக்கான ஆங்கிலச் சொற்கள் உள்ளன. … இவர்களுடன் தொடர்பில்லாத மொழி பேசும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் 250 வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர்.

—– subham—

Tags- ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம ,பாருங்கள்!- Part 9

ஆஸ்திரேலிய பழங்குடிகள், மொழிகளில், தமிழ்ச் சொற்கள்

 நால்வர்க்கு வள்ளலார் போடும் பெரிய கும்பிடு! வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-13 (Post No.14,116)

Written by London Swaminathan

Post No. 14,116

Date uploaded in Sydney, Australia – 19 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நால்வர்க்கு போடும் பெரிய கும்பிடு! வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-13

மாணிக்கவாசகரையும் திருவாசகத்தையும் புகழ்ந்து, ராமலிங்க சுவாமிகள் பாடியதை பலரும் அறிவார்கள் ஆனால் சைவப் பெரியார்  நால்வரையும் பாடிய வள்ளலாரின்  பாடலில் அது கடைசி செய்யுள் என்பது பலருக்கும் தெரியாது .

சம்பந்தர், அப்பர் ,சுந்தரர் மாணிக்கவாசகர் என்ற வரிசைக்கிரமத்தில் வள்ளலார் பாடிய திருவருட்பா பாடலை ஆராய்வோம். சைவம் தழைக்க வந்த தமிழ் நால்வருக்கும் வள்ளலார் ஒரு பெரிய கும்பிடு போடுகிறார்.

****

ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை

இது திருவருட்பாவில் நான்காம் திருமுறையில் இடம்பெறுகிறது

இதில் , முதலில் கவுண்டின்ய கோத்திரத்தில் பிறந்த சீர்காழி (சம்பை) திகழ்விளக்கே என்று  சம்பந்தரைப் போற்றுகிறார் ..

 சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே

தெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே

காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே

கரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே

ஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்

இன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே

பேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப்

பேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே.—

திருவருட்பா  நான்காம் திருமுறை .

****

அப்பருக்கும் அப்பூதி அடிகளுக்கும் கும்பிடு

010. ஆளுடைய அரசுகள் அருண்மாலை என்ற பாடலில் அப்பூதி அடிகள், அப்பர் ஆகியோரைப் போற்றுகிறார் .

1. திருத்தகுசீர் அதிகைஅருள் தலத்தின் ஓங்கும்

சிவக்கொழுந்தின் அருட்பெருமைத் திறத்தால் வாய்மை

உருத்தகுமெய் உணர்ச்சிவடி வாகிச் சைவ

ஒளிவிளங்க நாவரசென் றொருபேர் பெற்றுப்

பொருத்தமுற உழவாரப் படைகைக் கொண்ட

புண்ணியனே நண்ணியசீர்ப் புனித னேஎன்

கருத்தமர்ந்த கலைமதியே கருணை ஞானக்

கடலேநின் கழல்கருதக் கருது வாயே.

2. வாய்மையிலாச் சமணர்தர் பலகாற் செய்த

வஞ்சமெலாம் திருவருட்பேர் வலத்தால் நீந்தித்

தூய்மைபெறும் சிவநெறியே விளங்க ஓங்கும்

சோதிமணி விளக்கேஎன் துணையே எம்மைச்

சேம்மைவிடா தணிமைவிடத் தாள வந்த

செல்வமே எல்லையிலாச் சிறப்பு வாய்ந்துள்

ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ

அணியேசொல் லரசெனும்பேர் அமைந்த தேவே.

9. அருள்வழங்குந் திலகவதி அம்மை யார்பின்

அவதரித்த மணியெசொல் லரசே ஞானத்

தெருள்வழங்கும் சிவநெறியை விளக்க வந்த

செழுஞ்சுடர்மா மணிவிளக்கே சிறிய னேனை

இருள்வழங்கும் உலகியல்நின் றெடுத்து ஞான

இன்னருள்தந் தாண்டருள்வாய் இன்றேல் அந்தோ

மருள்வழங்கும் பவநெறியிற் சுழல்வேன் உய்யும்

வகைஅறியேன் நின்னருட்கு மரபன் றீதே.

10. தேர்ந்தஉளத் திடைமிகவும் தித்தித் தூறும்

செழுந்தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை

சார்ந்துதிகழ் அப்பூதி அடிகட் கின்பம்

தந்தபெருந் தகையேஎம் தந்தை யேஉள்

கூர்ந்தமதி நிறைவேஎன் குருவே எங்கள்

குலதெய்வ மேசைவக் கொழுந்தே துன்பம்

தீர்ந்தபெரு நெறித்துணையே ஒப்பி லாத

செல்வமே அப்பனெனத் திகழ்கின் றோனே.

****

சுந்தரருக்கு கும்பிடு

ஆளுடைய நம்பிகள் அருண்மாலை என்று தலைப்பிட்ட திருவருட்பா பாடலில் சுந்தரரைப் போற்றுகிறார்.

5. ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய

தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை

ஆழ்நினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்

தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தனையே.

6. வான்காண இந்திரனும் மாலையனும் மாதவரும்

தான்காண இறைஅருளால் தனித்தவள யானையின்மேல்

கோன்காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை

நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே.

7. தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத் தினந்தோறும்

நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ

ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்

தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே.

10. பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை

ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்என்த

தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய்

ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே —

என்று சொல்லி அந்தப் பாடலை முடிக்கிறார் வள்ளலார்

*****

மாணிக்கவாசகருக்கு கும்பிடு

இதையடுத்துவரும் 012. ஆளுடைய அடிகள் அருண்மாலை என்ற பாடலில் மாணிக்கவாசகரைப் போற்றுகிறார்.

ஆளுடைய நம்பிகள் அருண்மாலை

012. ஆளுடைய அடிகள் அருண்மாலை

1. தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க

வாசகனே ஆனந்த வடிவான மாதவனே

மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்

ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே.

2. கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற

பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர்

குருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்தனி

உருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே.

3. மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம்

என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்‘ரும் ஏமாக்க

அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர்

இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூர்இறையே.

4. உருஅண்டப் பெருமறைஎன் றுலகமெலாம் புகழ்கின்ற

திருஅண்டப் பகுதிஎனும் திருஅகவல் வாய்மலர்ந்த

குருஎன்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ

இருஎன்ற தனிஅகவல் எண்ணம்எனக் கியம்புதியே.

5. தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய்

ஆடுகின்ற சேவடிகக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே

நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்

வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கால் மாற்றுதியே.

6. சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்

மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும்

காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற

ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே.

7. வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்

ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.

8. வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்

ஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத்

தருமொழியாம் என்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன்

குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே.

9. பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல்

எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி

மண்சுமந்து நின்றதும்ஓர் மாறன் பிரம்படியால்

புண்சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்றோ புண்ணியனே .

10. வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசத்தைக்

கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்

வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான

நாட்டமுறும் என்னில்இங்கு நானடைதல் வியப்பன்றே.

 நால்வர் பற்றி ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்களில் தேவார,திருவாசக  வரிகள் வருவதைக் கண்டு, படித்து, ருசித்து, பேரின்பம் அடையலாம்.

—subham—Tags- திருவருட்பா, நால்வர், சம்பந்தர் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருவாசகம், தேவாரம் ,வள்ளலார் , கும்பிடு, வள்ளலார் ,ஆராய்ச்சிக் கட்டுரை-13

Hindu Crossword1912025  (Post No.14,115)

Written by London Swaminathan

Post No. 14,115

Date uploaded in Sydney, Australia – 19 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1912025

1 2   3 4 
          
  5   6   
          
7         8
          
   9      

Across

1.Tamil Nadu town where every 12 years a big bathing festival like Kumbhamela is held.

5.The snake, Lord Krishna drove out from the tank.

6.Goddess Parvati’s name

7.Bengali Brahmin’s surname Kriya Yoga Guru, also had this word in his name as Prefix.

8.  is a mantra that is part of the Durga Mantra and the Bija or Seed-Mantra of the Goddess Tripurasundari or Lalita (right to left)

9.Shiv’a formless shape; worshipped in 12 places in India. 

*****

Down

1.Name of Dasaratha’s country

2.Liberation, which Hindus aim.

3.Kerala Hindus’ great festival

4.Used in Tamil and Malayalam to mean a shrine. In Sri Lanka it means a resting/ meeting place.

1912025

K1UM2BAKO3NA4M
O O   N M 
S K5ALIA6MBA
A S   M A 
L7AHIRIMILK 8
A A     A 
   L9INGAM 

–subham—

Tags- Crossword19125

தமிழ் தெரியுமா19125 ? – (Post.14,114)


Written by London Swaminathan

Post No. 14,114

Date uploaded in Sydney, Australia – 19 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

கட்டத்தில் இந்தப் புலவர்களைக் கண்டுபிடியுங்கள்:

வில்லிப்புத்தூரார் ,புகழேந்தி ,ஒட்டக்கூத்தர் ,சேக்கிழார் ,அவ்வையார் ,அம்பலவாணர் ,பாரதியார் ,வள்ளலார் ,கபிலர் ,பரணர், நக்கீரர் ,மாமூலனார் ,திருமூலர், கம்பர் ,வள்ளுவர்

1912025

சேம்ம்
க்xர்வ்x
ர்க்கிxவைxவா
ராகீழாயாபு
தூட்xர்ர்
த்திxழேயா
புக்ருxபிந்தி
ப்கூமூமாதி
லித்ர்ளுபா
ல்ர்லாள்
விர்xx

 answers

1912025

சேம்ம்
க்xர்வ்x
ர்க்கிxவைxவா
ராகீழாயாபு
தூட்xர்ர்
த்திxழேயா
புக்ருxபிந்தி
ப்கூமூமாதி
லித்ர்ளுபா
ல்ர்லாள்
விர்xx

 —-subham—

Tags- தமிழ் தெரியுமா19125  

அந்தப் பேரழகியின் அழகு தான் அழகு;  ஸ்டைலு தான் ஸ்டைலு! (Post.14,113)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,113

Date uploaded in Sydney, Australia – –19 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கல்கி ஆன் லைனில் 10-1-25 அன்று பிரசுரிக்கப்பட கட்டுரை

TRENDING TALK OF THE WORLD

அந்தப் பேரழகியின் அழகு தான் அழகு;  ஸ்டைலு தான் ஸ்டைலு!

 ச. நாகராஜன் 

கோல்டன் க்ளோப் விருதுகள் அகில உலக திரைப்பட மற்றும் தொலைக்காட்சி  நடிக நடிகையர், கலைஞர்களுக்குத் தரப்படும் பெருமை மிக்க விருதாகும்.1944ல் தொடங்கப்பட்ட இது வருடா வருடம் ஜனவரி மாதம் வழங்கப்படுகிறது.

இதைப் பெற்றவர்களுக்கான  மதிப்பே தனி தான். 85 நாடுகளில் உள்ள 334 பொழுதுபோக்கு பகுதிகளை எழுதிவரும் பத்திரிகையாளர்கள் வெற்றி பெற்றவரைத் தேர்ந்தெடுப்பர். 2025 ஜனவரி 5ம் தேதி நடந்த விழாவை உலகமே கண்டு ரசித்தது. இந்த விழாவில் உலகில் உள்ளோர் அனைவரும் கவனிப்பது இதற்கு வரும் நடிகையர் மற்றும் பிரபலங்களின் ஸ்டைலைத் தான்.

இந்த வருடம் இந்தத் தருணத்தில் அனைவரின் நினைவிலும் தவழ்ந்தவர் ஸ்டைல் ராணி மர்லின் மன்ரோ தான். உலக பத்திரிகைகள் அனைத்தும் அவரை நினைவு கூர்ந்து அவரைப் பற்றி எழுதியுள்ளன.

ஒரு பெண்ணுக்கான நெருங்கிய தோழிகள் வைரமும் ஸ்டைலும் தான் என்பது உலகப் பழமொழி.

இந்த ஸ்டைலில் அதிசயமான உயரத்தில் ஏறி இறங்கவே இறங்காத ஒரே பேரழகி மர்லின் தான்.

மர்லினின் மரணத்தின் போது அவர் ஐந்து அடி ஐந்தரை அங்குல உயரம் இருந்தார். எடை 117 பவுண்டுகள். அவரது உடல் அளவு 37-23-36      

இது ஸ்டுடியோ தெரிவித்த அளவு அவரது ஆடை தயாரிப்பாளர் தந் அளவு : 35-22-35 இந்த அளவு இருக்கும் அழகியை ஹவர்க்ளாஸ் ஃபிகர் (hourglass figure) என்பார்கள். இப்படிப்பட்ட பேரழகி உலகிலேயே இல்லை!

மர்லின் மன்ரோ செவன் இயர் இட்ச் என்ற படத்தில் அணிந்த வெண்ணிற ஆடை 2011ஆம் ஆண்டு ஏலத்திற்கு விடப்பட்ட போது அதை டெபி ரெய்னால்ட்ஸ் நாற்பத்திமூன்று லட்சம் டாலர் (இன்றைய மதிப்பு 36 கோடியே 89 லட்சத்து 74,400 ரூபாய்) கொடுத்து வாங்கினார்.

நார்மா ஜீன் என்பது அவர் இயற்பெயர். (பிறப்பு 1-6-1926 மறைவு: 5-8-1962) இளம் வயதில் அவர் அரசை நம்பி வயிறு வளர்க்க வேண்டிய அனாதை ஆனார். அவரது பேரழகை பிரமிப்புடன் கண்ட சிலர், மன அடிமை ஆக்கும் மைண்ட் டாக்டர்களின் கட்டுப்பாட்டில் அவரை சிக்க வைத்தனர். அழகு சிகிச்சை ஒன்றை மேற்கொண்ட அவர் ‘அழகி’யிலிருந்து பேரழகியாக மாறினார். மர்லின் மன்ரோ என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஹாலிவுட்டையே அவர் வருகை ஒரு கலக்கு கலக்கி விட்டது..

‘ஜென்டில்மென் ப்ரிஃபெர் ப்ளாண்ட்ஸ்’ என்ற படத்தில் தன் அழகு மூலம் எதையும் சாதித்துக் கொள்ள விரும்பும் ஒரு அழகியாக மர்லின் தோற்றமளித்தார். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் அவர் இதையே செய்ய வேண்டும் என ‘மைண்ட் டாக்டர்கள்’ அவருக்குக் கூறி வந்தனர். இதனால் அவர் வாழ்க்கையே துயரமான ஒன்றாக மாறியது அவர் மரணம் எப்படி ஏற்பட்டது என்பது இன்று வரை யாருக்கும் நிஜமாகத் தெரியவில்லை.

 வருடா வருடம் ஸ்டைல் ராணிகள் வருவார்கள்; போவார்கள். ஆனால் என்றுமுள்ள ஒரே ஸ்டைல் ராணி மர்லின் தான். 

அவர் அழகு அழகு தான்; ஸ்டைலு ஸ்டைலு தான்! அதை விஞ்ச ஒருவரும் இன்று வரை இல்லை.

அதைத் தான்  க்ளோபல் அவார்டின் போது அனைவரும் பேசிக் கொண்டனர்.

**

தமிழ் தெரியுமா ?1812025 (14,112)

Written by London Swaminathan

Post No. 14,112

Date uploaded in Sydney, Australia – 18 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்

Across

1.சைவர்களுக்கு இதுதான் கோவில்

 3.இயற்பெயர் சித்தார்த்தன் right to left,

 4. இது இல்லாத உணவுப்பண்டம் குப்பையிலே right to left , 

5. சரஸ்வதி மஹாலைத் தஞ்சசையில் தோற்றுவித்தவர் 

 6. ஒளி , என்பதன் ஸம்ஸ்க்ருத்ச் சொல்; சபரி மலையில் பொங்கல் அன்று தோன்றும் right to left

Down

1. எட்டு வகை சித்திகளை அடைந்தோர்  

2. பிரம்மாவின் தொழில்

3. குதிரை

4. ஊட்டி go down 

4. நாம் வாழும் பெருநிலப்பரப்புArrow Symbol Clipart | Free Download ... ,  go up

5. சுஸ்ருதர் போல ஆயுர்வேத நூலை யாத்தவர் go up Arrow Symbol Clipart | Free Download ...,

6. ரத்தம் இல்லாவிடில் உடலில் ஏற்படும் நோய்Arrow Symbol Clipart | Free Download ... go up

18-1-25

 1      2  
       
       
     3    4Arrow Symbol Clipart | Free Download ...
       
       
  5Arrow Symbol Clipart | Free Download ...      6Arrow Symbol Clipart | Free Download ...

விடைகள்

சி 1 ம்ப2ம்
 த்  டை 
 த  ப் 
 ர்த்பு 3ப்உ4
 க   
 ர  வி கை
ச5 போஜிதிசோ 6

—subham—

Tags Tamil CW, 1812025

அரசே நான் வேண்டுதல் கேட்டு அருள்; வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-12 (Post.14,111)

Written by London Swaminathan

Post No. 14,111

Date uploaded in Sydney, Australia – 18 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும் – என்று துவங்கும்  ராமலிங்க சுவாமிகளின் பாடலைத் தொடர்ந்து ஆராய்வோம் .

ஐந்தாவது பாடலில் மூன்றாவது முறையாக இறந்து போனவர்களை உயிர்ப்பிக்கும் சக்தியை வள்ளலார் வேண்டுகிறார்; வள்ளுவர் போல வள்ளலாரும் கொல்லாமையை வலியுறுத்துகிறார்

வள்ளுவரையும் வள்ளலாரையும் பற்றிப்  பேசுவதற்கு வெஜிட்டேரியன் களுக்கு மட்டுமே உரிமை உள்ளது ; ஏனையோர் பாசாங்கு செய்யும், தன்னைத்தானே ஏமாற்றி உலகையும் ஏமாற்றும், கடையவர்கள் என்பதில் ஐயமில்லை.

5. அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்

வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்

மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்

புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்

பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்

உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்

ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.

*****

6. அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்

துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்

சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்

படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்

படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்

ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்

ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.

ஆறாவது பாடலில் தான் உருவாக்கிய சுத்த சிவ சன்மார்க்கத்தைப் பரப்பும் சக்தியை வள்ளலார் வேண்டுகிறார் ; சித்தர்களைப் போல படைக்கும் சக்தியையும் வேண்டுகிறார் .

பாம்பாட்டிச் சித்தர் பாடலின் தாக்கத்தினை இந்தச் செய்யுளில்  காணலாம் ; சொற்களில் கூட ஒற்றுமை இருப்பதால் அந்த சித்தர் பாடலினை எதிரொலிக்கும் பாடல் இது என்பதில் ஐயமில்லை ;இதோ அந்த சித்தர் பாடல் :

செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் னாக்குவோம்

செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்

இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்

எங்கள் வல்ல பங்கண்டுநீ யாடு பாம்பே.

32:

வேதன்செய்த சிருஷ்டிகள்போல் வேறுசெய்குவோம்

வேதனையு மெங்கள் கீழே மேவச் செய்குவோம்

நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்

நாங்கள் செய்யும் செய்கையிதென் றாடு பாம்பே.

33:

அறுபத்து நாலுகலை யாவு மறிந்தோம்

அதற்குமே லொருகலை யான தறிந்தோம்

மறுபற்றுச் சற்றுமில்லா மனமு முடையோம்

மன்னனே யாசானென் றாடு பாம்பே.

34:

சிறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச்

சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்

வீறுபெருங் கடவுளை எங்களுடனே

விளையாடச் செய்குவோமென் றாடு பாம்பே.– பாம்பாட்டிச் சித்தர்

*****

7. அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்

இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே

இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்

எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்

ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்

தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்

சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.

ஏழாவது பாடலில் தாயைக் குறிப்பிடுகிறார் ; அம்மா என்று ஜெகன் மாதாவை, ஜகஜ்ஜனனியை அழைத்து தீய குணங்களை மாய்க்க   வேண்டுகிறார் வள்ளலார்.

*****

8. அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்

எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்

எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்

இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்

உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்

உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.

எட்டாவது பாடலில் யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற திருமூலரின் கருத்தினைப் பார்க்கிறோம்.

****

9. அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்

செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்

சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்

எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்

எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்

பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்

பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.

ஒன்பதாவது பாடலில் மீண்டும் பாம்பாட்டிச் சித்தரின் கருத்தினை வள்ளலார் எதிரொலிக்கிறார் அபூர்வ சக்திகளை வேண்டுகிறார்.

****

10. அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்

மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான

மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்

இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்

திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்

பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்

புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.

பத்தாவது பாடலில் திருமூலர் மற்றும் பராதியாரைப் போல உலகம் முழுதும் வாழ வேண்டும்லோகா சமஸ்தா சுகினோ பவந்து என்று வள்ளலார் கூறுகிறார்.

*****

11. அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்

எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்

எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்

கமையாதி அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்

காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்

விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்

விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.

கடைசியாக வரும் பதினோராவது பாடலில் எல்லாம் செய்யும் திறனோடு சன்மார்க்கத்தைப் பரப்பும் சக்தியை வேண்டுகிறார். வள்ளலாரது கோரிக்கைகளில் சன்மார்க்கக் கோரிக்கை நிறைவேறியது என்றே சொல்ல வேண்டும்; இன்று நாம் எல்லோரும் வள்ளலாரைப் பற்றியும் சன்மார்க்கம் பற்றியும் பேசுகிறோம்; பாடுகிறோம்; போற்றுகிறோம்.

—SUBHAM—

Tags- அரசே,  அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்; வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-12

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 8 (Post No.14,110)

Written by London Swaminathan

Post No. 14,110

Date uploaded in Sydney, Australia – 18 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Boomerang

பழங்குடி மக்களின் வினோத ஆயுதங்களும் இசைக் கருவிகளும்

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 8

ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் ஒன்றுமறியாத அப்பாவிகள் ; குடியேறிய வெள்ளைக்காரர்கள் அவர்களைப் படுகொலை செய்து குவித்தனர். கொலைக் குற்றவாளிகளை விட மோசமாக நடத்தி கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி ஒருவரோடு ஒருவரை  சங்கிலியால் பிணைத்தனர். அவர்களுடைய நிலங்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டனர்.

இப்பொழுது ஆஸ்திரேலியாவில் எங்கு சென்றாலும் அவர்களுடைய பெயர்களை எழுதி  இது அவர்களுக்குச் சொந்தமானது என்பதை நாங்கள் நன்றியுடன் நினைவு கூறுகிறோம் என்று எழுதிப்போட்டுள்ளனர். எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் பொது இடங்களிலும், கட்டிடங்களிலும்பெரிய சூப்பர் ஸ்டோர்களிளிலும், ஷாப்பிங் மால்களிலும்  , இந்த மன்னிப்புக் கேட்கும் தொனியைக் காணலாம்; படிக்கலாம்.

அந்தமான் தீவு ஜாரவா இன மக்கள் அல்லது ஆப்ரிக்க காட்டுவாசிகள் போல மனிதர்களைத் தாக்கியதாக வரலாறு இல்லை; அவர்களுடைய நிலத்தில் வீடு கட்டி வசித்த போதும் பண்ணைகளை அமைத்தபோதும் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களைப் பற்றிய விநோதச் செய்திகள் :

·         Age

Aboriginal Australians are one of the oldest living populations in the world, having lived in Australia for over 65,000 years. 

·         Language

There are over 250 distinct language groups among Aboriginal Australians

வெவ்வேறு இனமக்கள் வெவ்வேறு 250 மொழிகளைப் பேசுகின்றனர் வெவ்வேறு பெயர்களைக் கொண்டுள்ளனர் இதிலிருந்து அவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்திலிருந்து குடியேறவில்லை என்று தெரிகிறது.

ஐரோப்பா கண்டத்தைவிட ஆஸ்திரேலியா பெரியது ; ஆகையால் பல மொழிகள் இருப்பதில்  வியப்பில்லை; அவர்களுக்கு எழுத்துக்கள் இல்லாததாலும் குறைவான ஜனத்தொகையாலும் பல மொழிகள் அழிந்துவிட்டன.

கதைகள் ,பாடல்கள் மூலம் இவர்கள் காலம் காலமாக பண்பாட்டினைப் பாதுகாத்து வருகின்றனர் ஆஸ்திரேலியா முழுதும் பேட்டைகளின் பெயர்களும் வீதிகளும் பழைய பழங்குடி இன மொழிகளில் இருக்கின்றன.  .

இவர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையினை நடத்தினார்கள்

அவர்கள் 40 முதல் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்துவிட்டனர்; வெள்ளைக்காரர்கள் வந்து 250 ஆண்டுகள்தான் ஆகிறது .

அவர்கள் உருவாக்கிய பூமராங் விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் போன்றது ; எதிரியைத் தாக்கிவிட்டுத் திரும்பி வந்துவிடும்!

அவர்கள் தனக்கென்று டிட்ஜரீடு என்ற இசைக் கருவிகளையும் உருவாக்கி ஆடிப்பாடி மகிழ்ந்தனர் ; காட்டு விலங்குகளை வேட்டையாடி புசித்தனர்.

பழங்குடி மக்களின் ஓவியங்கழும் வடிவங்களும் வேறு எதனுடனும் ஒப்பிட முடியாதவை. அவர்கள் உடலில் விபூதி போல வெள்ளைப் பொடிகளை வரி வரியாகப்  பூசுகின்ற்னர்.

சில வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் பார்க்கையில் இந்து மதத்துக்கு நெருங்கி வருகின்றனர் .

எண்ணிக்கையைப் பார்க்கையில் குடியேறிய வெள்ளைக்காரர்களை விட மிகவும் குறைவு.

·         Smoking ceremonies

Smoking ceremonies are used in rituals to cleanse people and areas of bad spirits. 

·         Marn Grook

Aboriginal Australians played Marn Grook, a game using possum hide as a ball, long before it inspired Australian Rules Football

இந்துக்களைப்போல தீ மூட்டி கெட்ட ஆவிகளை விரட்டுகின்றனர். இது இந்துக்களின் யாக யக்ஞங்களைப் போன்றது.

கால் பந்து போல ஒரு விளையாட்டினையும் கண்டுபிடித்தனர். போஸ்ஸம் என்னும் விலங்கின் தோலினைக்கொண்டு பந்துகளை செய்தனர் .இந்துப் பெண்களின் பூப்பந்து விளையாட்டினை இது நினைவு படுத்தும்.

இப்போது இந்த நாட்டிற்குள்ள ஆஸ்திரேலியா என்ற பெயர் வெள்ளை ஆக்கிரமிப்பாளர்கள் கொடுத்த பெயர் ஆகும். இந்தச் சொல்லுக்கு தெற்கேயுள்ள நிலப்பரப்பு என்பது பொருள் ஆகும்

Europeans called it ‘New Holland’—a name penned by Dutch seafarer Abel Tasman in 1644.The Latin term for ‘Australia’ is ‘Terra Australis Incognita,’ which means “unknown southern land,” but it had a respected name by First Nations peoples long before.

Western Australia’s Kimberley region uses the word ‘Bandaiyan’ to refer to the country.

பெரிய நிலப்பரப்பு என்பதால் ஒரே பெயர் முதலில் இல்லை; மேற்கு ஆஸ்திரேலிய கிம்பர்லி மக்கள் பண்டையன் என்ற பெயரைப் பயன்படுத்தினர் இது பழமை என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்து வந்திருக்கலாம்

பண்டைய = புராதன= பழமையான

தர்மம் ,புண்ணியம் போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாதோ அது போல பல பழங்குடி இன  மக்களின் சொற்களுக்கு ஆழமான பொருள் உண்டு; ஒரே ஆங்கிலச் சொல்லால் விளக்க முடியாது.

*******

My Old Article Attached

ஆஸ்திரேலியப் பழங்குடி கலாசாரத்தில் ‘அக்னி’ (Post No. 2523)

Research Article written by london swaminathan

Post No. 2523; Date: 9th February 2016

இந்துக்களின் வேதத்தில் இந்திரனுக்கு அடுத்தபடியாக, அதிகம் போற்றப்படுபவர் அக்னி பகவான். வேத காலத்தில் வீட்டிலும், அரண்மனைகளிலும், கோவில்களிலும் 400 வகையான யாக, யக்ஞங்கள் நடத்தப்பட்டன. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் அக்னி வழிபாடு செய்யாவிட்டாலும், இந்துக்களைப் போல, தீயை ஒரு புனிதப் பொருளாகவே கருதினர். மேலும் ஒரு ஒற்றுமை. வேத கால பிராமணர்கள், மந்திரம் சொல்லி, அரணிக்கட்டையை வைத்து தீயை மர ஓட்டைகளிலிருந்து கடைந்தெடுத்தது போலவே பழங்குடி மக்களும் செய்தனர். ஆயினும் இவ்வழக்கம் இந்தியா, ஆஸ்திரேலியா தவிர மாயா நாகரீகத்தில் கூட உள்ளது. ஆக, யார் யாரிடமிருந்து கடன் வாங்கினர் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயமே.

அக்னியை உண்டாக்க பழங்குடியினர், அரணியைப் போல வுள்ள கருவிகளையே பயன்படுத்தினர். அவர்கள், இதற்காகப் பலவகைக் கருவிகளைச் செய்து, தீக்குச்சி போலத் தோன்றும் பெரிய குச்சிகளையும் வைத்திருந்தனர். தீப்பொறி வந்தவுடன் அதைக் கொளுத்திக் கொள்வர்.

எதையும் வீணடிக்காதே

நான் சிட்னி மியூசியத்தில், ஆஸ்திரேலிய பிரிவை பார்த்துக் கொண்டிருக்கையில் எனது கவனத்தை ஈர்த்த மற்றொரு விஷயம் – எதையும் வீணடிக்காதே என்ற பழங்குடி மக்களின் வாசகமாகும்.

இந்துக்கள், எல்லா பொருள்களையும் கடவுளின் பொருளாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்கமாட்டார்கள். ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்’ – என்று உபநிஷதம் கூறுவதால், காலையில் படுக்கையிருந்து எழுந்து பூமி  மீது பாதங்களை வைக்கும் முன் ‘பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே’ (கால்களை உன் மீது வைக்கிறேன்; மன்னிப்பாயாக) என்று சொல்லித்தான் வைப்பர். கிணறு வெட்டுகையிலும், நிலத்தை உழும்போதும் பூமாதேவியிடம் மன்னிப்புக் கேட்பர். இப்படிக் காடு மலை, ஆறு, குளம், செடி கொடி, தோப்பு, துறவு எல்லாவற்றையும் ஈசனின் படைப்பாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்க மாட்டார்கள். அளவுக்கு அதிகமாகச் சுரண்ட மாட்டார்கள். மிருகங்களைக்கூட, நாட்டிற்குள் நுழைந்து தொல்லை கொடுக்கையில் மட்டுமே வேட்டையாடுவர். சிட்னி மியூசியத்தில் இந்தக் கருத்தை பழங்குடி மக்களும் எழுதிவைத்தது சிந்தனையின் ஒருமைப்பாட்டைக் காட்டி நின்றது.

நீ நாட்டைப் போற்று, அது உன்னைப் போற்றும்!

என் கவனத்தை ஈர்த்த மற்றொரு போர்டு, நீ நாட்டைக் கவனி, அது உன்னைக் கவனிக்கும் – என்பதாகும். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ( நீ அறத்தைக் காத்தால், அறம் உன்னைக் காக்கும்) என்ற இந்துமதக் கருத்தை இது பிரதிபலிக்கிறது. ஆஸ்திரேஇயப் பழங்குடி மக்கள், ‘நாடு’ என்று சொல்லுவது, அவர்களுடைய குழுக்களையாகும். ஆகநாம் மற்றவர்களைக் காப்பாற்றினால், அந்த  தர்மமே நம்மைக்  காக்கும் என்றும், இருக்கும் இயற்கை வளத்தை மிதமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.

ஒரு பழங்குடி மக்களிடையே இப்படி உயர்ந்த சிந்தனை இருப்பது அவர்களுடைய பழைய இந்துமத அடிப்படையைக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றியது. அதர்வண வேத பூமி சூக்தத்தில் மிக உயர்ந்த கருத்துக்கள் இருப்பதைக் காணலாம்.

அவர்களுடைய, மொழி, நடை உடை பாவனை போன்ற அனைத்தையும் காண்கையில் இது உறுதிப் படுகிறது.

இந்தியப் பழங்குடி மக்களிடையேயும் இப்படி இருப்பதைக் காணலாம். ஆயினும் 60,000 ஆண்டுகளாகத் தனித்து வாழ்ந்த இனங்கள் ஆகையால் பல வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்..

—subahm—

Tags-பழங்குடி மக்கள், வினோத ஆயுதங்கள், இசைக் கருவிகள், ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம், பாருங்கள்!- Part 8

முதல் அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாலி ரைட் பற்றிய திரைப்படம்! (Post No.14,109)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,109

Date uploaded in Sydney, Australia – –18 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

19-12-24 கல்கி ஆன் லைனில் வெளியான கட்டுரை

 விண்வெளி வீராங்கனை பற்றி சுடச்சுட ஒரு செய்தி

முதல் அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாலி ரைட் பற்றிய திரைப்படம்!

ச. நாகராஜன்

விண்வெளி ஆர்வலர்களுக்கு ஒரு குதூகலமான புத்தாண்டு நற்செய்தி வந்து விட்டது!

அமெரிக்காவின் முதல் விண்வெளிப் பெண்மணியான சாலி ரைட் பற்றிய ஒரு டாகுமெண்டரி திரைப்படம் 2025 சன்டான்ஸ் பிலிம் பெஸ்டிவலில் (Sundance Film Festival) இடம் பெறுகிறது. இது அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான உடாவின் தலைநகரான சால்ட் லேக் சிடியில் (Salt. Lake City, Utah) 2025 ஜனவரி 23 முதல் பிப்ரவரி 2ம் தேதி முடிய நடக்கவிருக்கும் திரைப்படத் திருவிழாவில் திரையிடப்படும்.

சன்டான்ஸ் இன்ஸ்டிடியூட் என்பது வளர்ந்து வரும் திரைப்படக் கலைஞர்களை உலகிற்கு இனம் காண்பிக்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு நிதி உதவி அளிக்கவும் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நிறுவனம்.

1981ல் ராபர்ட் ரெட்போர்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த லாப நோக்கமற்ற நிறுவனம் 1985 முதல் வளர்ந்து வரும் கலைஞர்கள் எடுத்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து இந்தத் திருவிழாவில் திரையிட்டு வருகிறது.

சுமார் 30 லட்சம் டாலர் (இந்திய ரூபாயில் இருநூற்றி ஐம்பத்து நாலரை கோடி ரூபாய்) நிதி உதவியை இது வரை இந்த நிறுவனம் வளர்ந்து வரும் திரைப்படக் கலைஞர்களுக்கு அளித்துள்ளது.

சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள் 2025ல் திரையிடப்படுகின்றன.

அவற்றில் சாலி ரைட் பற்றிய திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சாலியின் விண்வெளி மற்றும் பூமி வாழ்க்கையை சித்தரிக்கும் இதில் அவரது நெருங்கிய நண்பர்கள், சகாக்கள் ஆகியோரது பேட்டிகளும் இடம் பெறுகிறது.

உண்மையான சாலி ரைட் யார் என்பதை இந்தப் படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்வதோடு ஒரு உண்மையான ஹீரோயின் எதையெதையெல்லாம் தியாகம் செய்து தனது எல்லையைக் கடக்க முடியும் என்பதை இந்தப் படம் சித்தரிக்கும்.

இதில் இதுவரை வெளி உலகம் அறிந்திராத மறைக்கப்பட்ட  அவரது நீண்ட கால லெஸ்பியன் காதல் வாழ்க்கையும் இடம் பெறுகிறது.

 டாம் ஓஷாகுனெஸ்ஸி என்ற அவரது தோழியுடனான அவரது உறவு அவர் மறையும் வரை யாருக்கும் தெரியாது.

“தனது நெருங்கிய நண்பர்களிடமிருந்து கூட இவர் அதை மறைத்தார் – இதுவரை பார்த்திராத கோடிக் கணக்கான மக்களின் நலனுக்காக” என்கிறார் இந்தத் திரைப்படத்தை இயக்கிய கிறிஸ்டின் காஸ்டான்டினி. இந்தப் படமானது நேஷனல் ஜியாகிராபிக் டாகுமெண்டரி தயாரிக்கும் படம் என்பது குறிப்பிடத்தகுந்தது,


கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1951-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி பிறந்தார் சாலி ரைட்.

நல்ல சூழ்நிலையில் வளர்ந்த சாலி ரைட் டென்னிஸ் விளையாடுவதில் சிறந்து விளங்கியதோடு. அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். விண்வெளி என்றால் போதும் அடங்காத ஆர்வத்துடன் அனைத்துச் செய்திகளையும் கவனிப்பார்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா 1977ல் விண்வெளி செல்ல விரும்புவோருக்கு அழைப்பு விடுத்தது.

பெண்களையும் விண்வெளிக்கு நாஸா அனுப்ப இருக்கும் செய்தியைப் பார்த்தவுடன், அவர் நாஸாவிற்கு தனது விண்ணப்பத்தை அனுப்பி விட்டார்.

1977, ஜூன் மாத இறுதியில் நாஸா 8079 விண்ணப்பங்களைப் பெற்றது. அதில் 208 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இறுதித் தேர்வில் 35 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விண்கலத்தின் ரொபாட்டின் கரத்தை இயக்குவதில் அவர் நிபுணராகத் திகழ்ந்தார். இதற்கான காரணம் அவரது டென்னிஸ் விளையாட்டு தான். கண்ணுக்கும் கைகளுக்கும் இடையே உள்ள இசைவு டென்னிஸ் விளையாட்டில் மிக அதிகம் தேவைப்படும். அதுவே ரொபாட்டை இயக்க அவருக்குப் பெரிதும் உதவியாக ஆனது. சாலி குழுவாக இணைந்து செயல் படுவதிலும் நல்ல பெயரைப் பெற்றார்.

விண்வெளிக்குச் செல்ல நாஸா அவரைத் தேர்ந்தெடுத்து அறிவித்தது.

1983-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி சாலஞ்சர் விண்கலம்

விண்ணில் ஏவப்பட்ட போது அதில் பயணப்பட்ட சாலி ரைட் உலகில் விண்ணில் பறந்த முதல் அமெரிக்கப் பெண்மணி ஆனார். அவரே விண்ணில் பறந்த மிகக் குறைந்த வயதினர் என்ற பெருமையையும் பெற்றார்.

அவர் விண்ணில் பறந்த தினத்தன்று ஏராளமானோர் குதூகலத்துடன் “ரைட் சாலி ரைட்” (Ride Sally Ride) என்ற ஆங்கில வார்த்தைகளுடன் கூடிய ‘டி’ ஷர்ட்டுகளை அணிந்து அவரை வழியனுப்பி வைத்தனர். ஆறு நாட்கள், இரண்டு மணி 23 நிமிடங்கள் 59 விநாடிகள் இந்தப் பயணம் நீடித்தது.

உலகமே கொண்டாடும் சிறந்த விண்வெளி வீராங்கனை ஆகி விட்டார் சாலி ரைட்!

மீண்டும் 1984-ல் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி அவர் சேலஞ்சர் விண்கலத்தில் எட்டு நாட்கள் பறந்தார். 197.5 மணி நேரத்தில் சேலஞ்சர் 132 முறை பூமியை ஓடுபாதையில் சுற்றி வலம் வந்தது.

இந்த இரு பயணங்களிலும் சுமார் 343 மணி நேரங்கள் அவர் விண்வெளியில் பறந்திருந்தார்.

28-1-1986ல் விண்ணில் ஏவப்பட்ட சேலஞ்சர் விண்கலம் கிளம்பிய சில வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியதால் அவரது மூன்றாவது பயணம் திட்டமிட்டபடி நடக்கவில்லை.

சக விண்வெளி வீர்ரான ஸ்டீவ் ஹாலியை அவர் மணந்தார்.

என்றாலும், இளம் வயதுத் தோழியான டாம் ஓஷானெஸியுடன் அவர் ஒரு இரகசிய தொடர்பை நீண்ட காலம் கொண்டிருந்தார். இருவரும் இணைந்து டென்னிஸ் விளையாடுவது வழக்கம். இது அந்தரங்க ஓரினச் சேர்க்கை தொடர்பாக பின்னால் மாறி விட்டது அவர் இறந்த பின் அவரது மறைவுக் குறிப்பில் இடம் பெற்ற போது தான் உலகம் இந்த ரகசியத்தை அறிந்தது.   

அவர் கான்ஸர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார் கீமோதெராபி, ரேடியேஷன் தெராபி ஆகிய சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்ட போதிலும் கணையத்தில் ஏற்பட்ட புற்று நோயால் அவர் லா ஜொல்லா என்ற இடத்தில் உள்ள தனது இல்லத்தில் 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதி மரணமடைந்தார்.

61 வயது வாழ்ந்த சாலியின் வாழ்க்கை வரலாறு அனைத்துப் பெண்மணிகளுக்கும் விண்வெளி பற்றிய ஆர்வத்தை ஊட்டும். உலகமே அவரது வாழ்க்கை பற்றிய திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

*****

My Visit to Australian Museum in Sydney (Post.14,108)

Written by London Swaminathan

Post No. 14,108

Date uploaded in Sydney, Australia – 17 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I went to the Australian Museum in Sydney for the second time in ten years. There were hundreds of people on 16-1-2025, though we had very heavy rain in the morning and on the previous day.

When I visited it in 2015, I focussed only on aboriginal culture. Now they have added a big Mineral and Gem collection. Over 1800 minerals, gems, meteorites, fossils are included in the collection. You may collect at the entrance , a free map and booklet about the museum.

The admission is FREE. Photography is allowed. I am a Londoner. We have also the famous British Museum, Victoria and Albert Museum, Science Museum, Natural History Museum , art galleries  in London, where the admission is FREE. Each one is huge, and you need may hours to go around it.

Australian Museum in Sydney is not huge. You may finish it within three hours. But the mineral section makes a big difference. We can’t see so many verities of Gems and Minerals in any other museum. The reason being Australia is at the top of the list in Opal and Sapphire production. All kinds of precious and semi-precious stones are found in Australia.

What’s on display?

Minerals: The gallery features over 1,800 rare and spectacular minerals, including gemstones, rare earth minerals, and human-made minerals

Rocks: The gallery includes some of the oldest rocks on Earth

Meteorites: The gallery includes Australian meteorites and tektites

Ornamental minerals: The gallery includes minerals that can be carved, shaped, or polished into decorative objects.

***

They have several electronic board games in the museum to attract children. On the top floor they have the pictures of people who made Australia a great country. The Dinosaur section looks very interesting with the details of their discovery in Australia.

Another speciality is the display of Australian birds and animals. Like British Museum , this museum also organises special exhibitions for which one has to buy tickets. During this summer, Australian Museum has organised an exhibition titled Machu Picchu and the Golden Empire of Peru.

Students of Australia will greatly benefit by visiting the museum.   Researchers in Mineral Sciences and gemmolgy will also benefit .

The museum has easy access by bus and trains.

***

Getting to the Australian Museum

Travelling to the Sydney Museum is relatively easy by train. Get a train to Central Station and then jump onto a City Circle train get off at Museum or St James station and walk across Hyde Park.

****

The nearest train stations are St James, Museum and Town Hall. Each are of equal distance to us and are an easy seven-minute walk. All three of these stations have lift access.

Opening hours

General Admission

The Australian Museum is open everyday, except Christmas Day.

Open daily: 10am – 5pm

Wednesday late nights: 10am – 9 pm

General enquiries

Telephone: +61 2 9320 6000

Mail: 1 William Street, Sydney NSW 2010 Australia

Visitor information: visit@australian.museum

Feedback: feedback@australian.museum

–subham—

Tags, My visit, Australian Museum, Sydney