Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஒரு சுவையான சம்பவத்துடன் மீண்டும் பிளாக் படைப்புகளைத் துவங்குகிறேன்.
கடவுள் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்துவிட்டேன் . அவர் நம்முடைய பாஸ்போர்ட் வைக்குமிடத்தில் இருக்கிறார்! மார்ச் 12- ஆம் தேதி ஆஸ்திரேலியாயாவில் மூன்று மாத சுக வாசத்தை முடித்துக்கொண்டு சிட்னியிலிருந்து புறப்பட்டு இரண்டு நாட்கள் மலேசியாவின் தலை நகர் கோலாலம்பூரில் தங்கினேன். அப்போது நானும் என் மனைவியும் பத்துமலை என்று அழைக்கப்படும் பாட்டு கேவ்ஸ் BATU CAVES குகைக்கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தோம் . நான் வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் என் மனைவி தங்க வர்ண முருகப்பெருமான் உருவம் படைத்த எட்டு கீ செயின்களை KEY CHAINS வாங்கினாள் . அதற்குப்பின்னர் காரடையான் நோன்பினை அனுஷ்டிக்க இந்தியாவுக்குச் சென்று எங்கள் அண்ணன் வீட்டில் தங்கினோம். மறுநாள் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள குலதெய்வம் வைத்தீச்வரனைத் தரிசித்து விட்டு அங்கு அக்ஷர்தாம் விடுதியில் தங்கினோம்.
சென்ற முறை குலதெய்வ தரிசனத்துக்குச் சென்ற போது என் மனைவியை எச்சரித்து இருந்தேன்; பை த்தியம் போல சாமி படங்களை வாங்காதே; வீட்டில் உள்ள சாமி படங்களே போதும் என்று. அர்ச்சனைகள் முடிந்து குருக்களுக்குத் தட்சிணை கொடுக்கும்போது அவர் சொன்ன வாக்கியம் — நீங்கள் வேண்டாம் என்று சொல்லாமல் இதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று வைத்திய நாதசுவாமி படத்தைக் கொடுத்தார் . என் உடலில் புல்லரிப்பு ஏற்பட அதை வாங்கிக் கொண்டேன் . இதைத்தான் அசரீரி என்று சொல்லுகிறோம். இந்த முறை சென்றபோது பட்டருக்குத் தட்சிணை கொடுக்கும்போது கோவில் செக்யூரிட்டி என் சட்டைப் பையில் வைத்தியநாத சுவாமி படத்துடன் உள்ள விபூதி குங்குமப் பொட்டலத்தைச் சொருகினார் . இதைத் தான் கும்பிடப்போனத் தெய்வம் குறுக்கே வந்தது என்று சொல்லுகிறோம்.
****
சுவாமி மலை சுவாமிநாதனும் லண்டன் சுவாமிநாதனும்
எனக்கு என் அப்பாவும் அம்மாவும் சுவாமிநாதன் என்று பெயர்வைத்ததற்குக் காரணம் சுவாமிமலை கோவில் உறை கடவுள்தான் . வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து புறப்பட்டு கும்பகோணம் ஸ்ரீவத்சம் விடுதியில் தங்கி அங்கிருந்த நண்பர் சீனிவாசனையும் காரில் ஏற்றிக்கொண்டு சுவாமிமலை, கும்பகோணம் ராமசுவாமிகோவில், கும்பேஸ்வரர் கோவில் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். அப்போது பாஸ்போர்ட் பையில் மலேசியா பத்துமலை முருகன் கோவில் தங்க வர்ண கீ செயின் இரண்டினை நண்பர்களுக்கு கொடுக்க வைத்திருந்தேன். கும்பேஸ்வரர் கோவிலில் சிவன் மற்றும் அம்பாள் சந்நிதிகளில் மஹா தீவாராதனை நடந்து கொண்டிருந்தது . அப்போது என் பாஸ்போர்ட் பையை யாரோ பிக் பாக்கெட் அடித்துவிட்டனர். அது எனக்குத் தெரியாது நாங்கள் எங்கு போனாலும் விடுதியில் தங்கவும் வெளிநாட்டுப் பணம் மாற்றவும் பாஸ்போர்ட்டு தேவை . ஆகையால் நான் எடுத்துச் செல்வேன்.
மறுநாள் முரளீதர சுவாமிகளை தரிசனம் செய்வதற்கு ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியிலுள்ள மஹாரண்யம் சென்று அவரைத் தரிசித்து சீடரிடம் நன்கொடையும் கொடுத்தேன். அப்போது அவர் சீடர் உங்கள் முக வரியைக் கொடுங்கள் ரசீதும் அனுப்புகிறோம் என்றார் . பையில் பாஸ்போர்ட் பையில் எப்போதும் என் முகவரி ஸ்டிக்கர்கள் இருக்கும் அதைத்தேடினேன். பாஸ்போர்ட் பை இல்லை.பகீர் என்றது .காரில் சிட்டாக பறந்து சென்னைக்கு வந்து என்னுடைய மூன்று பெட்டிகளையும் மும்மூன்றுமுறை புரட்டி எடுத்தேன் பாஸ்போர்ட் இல்லை.
சரி; மறுநாள் ப்லைட்டில் FLIGHT என் மனைவியை மட்டும் லண்டனுக்கு அனுப்பிவிட்டு சென்னையில் பிரிட்டிஷ் ஹைகமிஷனுக்குக் காவடி எடுத்து புதிய பிரிட்டிஷ் பாஸ்போர்ட் அல்லது டிராவல் பேப்பர்ஸ் TRAVEL DOCUMENTS வாங்குவோம் என்ற பதற்றத்துடன் இருந்தேன் . அப்போது என் ஐ போனில் பிளாஷ் மெஸேஜ் மின்னியது !என் அண்ணன் நாகராஜன் உன்னுடைய பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதா ? என்று ஒரு கேள்வி கேட்டிருந்தார் . உடனே பெங்களூருக்கு மெஸேஜ்கள் பறந்தன. என்னுடை 135 புஸ்தகங்களை வெளியிட்ட புஸ்தக . காம் அதிபர் திரு ராஜேஷ் தேவதாஸ் என் அண்ணனைக் கூப்பிவிட்டு உங்கள் தம்பி பாஸ்போர்ட் கும்பகோணம் கோவில் குருக்களிடம் இருக்கிறது என்று சொன்னார் .அவரைத் தொடர்புகொண்டு கும்பகோணம் குருக்களின் முகவரியை வாங்கினேன் . அவரைத் தொடர்புகொண்டேன்.
நான் கோவிலுக்குச் சென்ற நாளில் இரவில் அவர் அம்பாள் சந்நிதியில் பூஜை செய்திருக்கிறார், இரவில் பூக்களை எல்லாம் அகற்றிச் சுத்தம் செய்கையில் பாஸ்போர்ட் பை கிடைத்துள்ளது அதை எடுத்த பிக்பாக்கெட் பேர்வழி அதில் பணம் இல்லை ஆனால் பட்டு கேவ்ஸ் முருகன் கீ செயின்களும் பாஸ்போர்ட் , ஓ சி ஐ ஆகியன மட்டும் இருக்கக்கண்டு அதைச் சந்நிதி பூக்குவியலில் போட்டுச் சென்றுவிட்டான்!
Batu Caves Murugan on Key Chain
அதிலுள்ள முருகன் படம் அவனுக்குப் பயத்தை உண்டாக்கி க்கியிருக்கவேண்டும். ஏனெனில் அதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் சுவாமிமலை முருகனையும் அதற்குச் சில நாட்களுக்கு முன்னர் மலேசியாவில் பத்துமலை முருகனையும் தரிசித்துள்ளேன்.
குருக்களின் மனைவி மிகவும் புத்திசாலி . அவர் நான் மதுரைக்காரன் என்று ஓ சி ஐ யில் இருப்பதைப்பார்த்து மதுரையிலுள்ள நபர்களை கேட்டிருக்கிறார்[ அவருக்கு துப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றவுடன் கூகுள் செய்த்தபோது நான் எழுதிய புஸ்தகங்கள் அனைத்தும் பளிச்சிட்டன ; உடனே அதை வெளியிட்ட புஸ்தக. காம் அதிபர் திரு ராஜேஷ் தேவதாஸை த் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொல்லி இருக்கிறார் ; அவர் உடனே என் அண்ணனிடம் விஷயத்தைச் சொல்லவே முன்னர் சொன்ன மெஸேஜ் வந்தது
மறுநாள் லண்டனுக்கு பயணம் செய்ய இருக்கும் தருணத்தில் இது எல்லாம் நடந்தது; ராஜேஷ் தேவதாசுக்குப் பல முறை நன்றி சொல்லிவிட்டு உடனே குருக்களுக்குப் போன் செய்து இரவு பதினோரு மணிக்கு முன்னதாக தக்க ஐ.டி. யுடன் வந்து பாஸ்போர்ட்டுகளைப் பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்லி விட்டு மாலை ஐந்து மணிக்கு நானும் என்னனுடைய அண்ணன் மகன் சங்கரனும் சென்னையில் டாக்சியில் ஏறினோம். இரவு 11 மணிக்கு பாஸ்போர்ட்டினைப் பெற்றுக்கொண்டு பனத்தை அன்புப்பரிஸாகக் கொடுத்தோம் ;பணத்தை தொடக்கூட குருக்களும் அவரது மனைவியும் மறுத்துவிட்டனர். காப்பி முதலியவற்றைக் கொடுக்க தயாரானபோது நாங்கள் இரவில் தொந்தரவு செய்யக்கூடாது என்று வேண்டாம் என்றோம்] நாங்கள் ஏதாவது செய்ய விரும்பினால் கோவில் கும்பிபாபிஷேகத்துக்கு பணம் அனுப்புங்கள் அதுவும் இப்போது வேண்டாம் ; பத்திரிக்கைவரும்போது கும்பேஸ்வரர் கோவிலுக்குச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்கள் .
நல்ல மனிதர்கள் உலகெங்கிலும் உள்ளனர் ; வாழ்க அவரது குடும்பம்
மறுநாள் காலை ஐந்து மணிக்குச் சென்னை வந்து சேர்ந்தோம்; இரவில் ட்ரைவர் தூங்கிவிடக்கூடாதே என்ற பயத்தில் அலற அலற சினிமாப்பாட்டுக்களை வைக்கச் சொல்லி ஆங்காங்கே அவரை TEA டி சாப்பிடச் சொல்லி மறுநாள் காலை 5 மணிக்கு சென்னைக்கு வந்தோம் 12 மணி நேர இடைவிடாப்பயணம். அது பாஸ்போர்ட் பயணம்!
****
இன்னும் ஒரு அதிசயம்
பிரிட்டிஷ் பாஸ்போர்ட் பையில் இருந்த பத்துமலை முருகன் படம் என்னைக் காப்பாற்றியது ஒருபுறம் இருக்க, நாங்கள் வந்து இறங்கிய மறுநாளைக்கு ஹீத்ரோ விமான நிலைய தீ விபத்து காரணமாக ஆயிரக்கணக்காக FLIGHTகள்/ விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டன, ரத்தாகின; நாங்கள் முதல் நாளே லண்டனுக்கு வந்ததால் தப்பித்தோம்..
சுவாமி மலை முருகனுக்கு அரோஹரா
பத்துமலை முருகனுக்கு அரோஹரா
–சுபம்—
Tags- பாஸ்போர்ட், முருகன் கீ செயின், பிக் பாக்கெட், சுவாமி மலை, பத்துமலை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஹெல்த்கேர் மார்ச் 2025 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
நல்ல ஆரோக்கியம் என்றால் என்ன?
ச. நாகராஜன்
நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பது மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருடைய ஆசையாகவும் இருக்கிறது.
ஆனால் நல்ல ஆரோக்கியம் என்றால் என்ன என்பதை முதலில் நன்கு அறிந்து கொள்ள வேண்டுமல்லவா?
2017ம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா ஆரோக்கியத்திற்காக செலவழித்தது 306,160,477,903,740 ரூபாய்கள் ஆகும்.
ஆனாலும் கூட அங்கு ஆயுள் எல்லை மற்ற நாடுகளை விடக் குறைவாகவே இருந்தது; இருக்கிறது!
ஆரோக்கியம் என்றால் என்ன?
ஆரோக்கியம் என்றால் என்ன என்பதை வொர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் (World Health Organisation WHO) இப்படி விவரிக்கிறது.
Health is a state of complete physical, mental, and social well-being and not merely the absence of disease or infirmity
“நல்ல ஆரோக்கியம் என்பது வியாதிகள் இல்லாத நிலை மட்டுமல்ல. அது உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், சமூகத்தில் நலமுடன் வாழ்வது என்பது அனைத்தையும் முழுவதுமாகக் கொண்ட நிலையாகும்.”
அது மேலும் கூறுகிறது இப்படி:
A resource for everyday life, not the objective of living. Health is a positive concept emphasizing social and personal resources, as well as physical capacities.”
அன்றாட வாழ்க்கைக்கான ஆதாரமே நல்ல ஆரோக்கியம் தான். வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டும் இல்லை அது.
சமுக மற்றும் தனிப்பட்ட நபருக்கான ஆதாரங்கள் மற்றும் உடல்தகுதியின் திறன்களையும் வலியுறுத்தும் ஒரு ஆக்கபூர்வமான கொள்கை அது.
இப்படி உலக சுகாதார நிறுவனம் தெளிவாகக் கூறுகிறது.
உடல் ஆரோக்கியம்
உடலில் எந்த வியாதியும் இல்லாமல் அனைத்து இயக்கங்களையும் செய்யும் உடல் வலிமையையே உடல் ஆரோக்கியம் குறிக்கிறது.
வேலை செய்யும் இடத்தில் விபத்துக்கள் ஏற்படாத பாதுகாப்புகள்.
தாம்பத்ய உறவில் எச்சரிக்கையுடன் இருப்பது.
நல்ல உணவுத்திட்டத்தை மேற்கொள்வது.
நல்ல உடல் சுகாதாரத்தைப் பேணிக் காப்பது.
மது, சிகரட், போதைப் பொருள்களைத் தவிர்ப்பது.
தடுப்பூசிகளைத் தேவைக்குத் தகப் போட்டுக் கொள்வது.
மேற்கண்டவை நல்ல உடல் ஆரோக்கியம் பெற மேற்கொள்ளவேண்டிய செயல்களாகும்.
மன ஆரோக்கியம்
உணர்வு பூர்வமாகவும், சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும்
(emotional, social and psycological well-being) உள்ள நல்ல ஆரோக்கியமான நிலையே மன ஆரோக்கியம் ஆகும்.
கவலை, மனத்தளர்ச்சி, மனச்சோர்வு இல்லாத நிலை மட்டுமல்ல. மன ஆரோக்கியம் என்பது.
வாழ்க்கையை நன்கு அனுபவித்தல்.
கஷ்டமான அனுபவத்தையும் துன்பங்களையும் எதிர்கொண்டு ஏற்று வென்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புதல்.
குடும்பம், நிதி நிலைமை இவற்றில் ஒரு சமச்சீர்த்தன்மையை உருவாக்கி நடந்து கொள்ளல்.
எப்போதும் பாதுகாப்பாகவும் அனைத்து விதத்திலும் பத்திரமாகவும் இருத்தல்.
தன்னால் முடிந்த அளவு திறன்களைப் பயன்படுத்தி மென்மேலும் உயருதல்.
இது தான் நல்ல மன ஆரோக்கியத்தின் அடையாளங்கள்.
மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் ஒன்றுகொன்று நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சரி நல்ல ஆரோக்கியத்தை எப்படிப் பெறுவது?
மரபணு சார்ந்த விஷயங்கள்
மனிதன் பிறக்கும் போது பல மரபணுக்களால் உருவாக்கப்படுகிறான். இதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
சூழ்நிலை சார்ந்த விஷயங்கள்
நல்ல சுற்றுப்புறச் சூழலானாது நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.
காற்று மாசு, நீர் மாசு, மோசமான இடத்தில் வாழ்வது, உஷ்ணநிலை அதிகமாக இருக்கும் இடத்தில் வாழ்வது போன்றவை வியாதிகளையும் மன அமைதியின்மையையும் தரும்.
ஆகவே இவற்றில் வாழ நேர்ந்தால் உடனடியாக தக்க மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.
எங்கே நீங்கள் வாழ்கிறீர்கள்?
சுற்றுப்புறச் சூழல் எப்படி உள்ளது?
மரபணு எப்படி உள்ளது?
தனக்குத் தரப்பட்ட கல்வியின் தரம் என்ன?
வேலை வாய்ப்பும் உரிய சம்பளமும் எவ்வளவு?
இவற்றைச் சிந்தித்து தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
சமூக பொருளாதார சூழ்நிலை
உடல் தகுதியிலான சூழ்நிலை
தனிமனிதனின் குணாதிசயம் மற்றும் நடத்தை
இவை நல்ல முறையில் மேம்பட மேம்பட உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் மேம்படும்.
ஓரிடத்தில் ஓய்வான நிலையில் உட்கார்ந்து ,மேலே உள்ள விஷயங்களை நன்கு சிந்திது ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஒவ்வொருவருடைய வாழ்வும் சிறக்கும் என்பதில் ஐயமில்லை.
நிலையான இலக்கண இலக்கிய முறையறிந்து கூறும் வல்லமையுள்ள கவியே கவியெனத் தக்கவன், – நன்மையைத் தரும் மருத்துவ நூல்களையும்
எழுவகைத் தாதுக்களின் நிலையையும் அறிந்த (அறிவால்) முதியவனே மருத்துவன்,
நானெனும் செருக்கின்றி உண்மையறிந்து ஐந்து
பொறிகளையும் அடக்கிவிட்டவனே உண்மை யறிஞன் எனப்படுவான்.
****
இந்துக்களின் கணக்கில் மாவீரன் யார்?
மஹா வீரன் யார்? இந்தியாவில் இருவருக்குத்தான் மஹாவீர் என்று பெயர். ஒருவன் அநுமன். மற்றொருவர் சமண தீர்தங்கரர் மஹாவீரர்.
யார் வீரன்? என்று மேலை நாட்டில் கேள்வி கேட்டால் ஏகே 47 துப்பாக்கியால் நூற்றுக் கணக்கான பெயர்களைச் சுட்டுத் தள்ளியோரின் பெயரைக் கூறுவார்கள். திரைப்படம் பார்க்கும் படிப்பறிவு இல்லாதவர்கள் தமிழ் இந்தி திரைப்பட கதாநாயகன் ,வில்லன்கள் பெயர்களைக் கூறுவார்கள். படித்திருந்து ஆங்கிலப் படம் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இண்டியானா ஜோன்ஸ் நினைவுக்கு வரலாம். பயங்கரவாதிகள் என்று ஒரு நாடு முத்திரை குத்துவோரையும் அவருடைய கொள்கையில் நம்பிக்கை கொண்டோர் மாவீரன் என்று கொண்டாடுவார்கள். ஆனால் வியப்பிலும் வியப்பான கொள்கை– இந்தியக் கொள்கை புலன்களை வென்றவனே மஹாவீரன்.
ஒன்றாகக் காண்பதே காட்சி, புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்
என்பது ஆன்றோர் வாக்கு. வள்ளுவனும்” பிறன் மனை நோக்காத பேராண்மை” என்று பெரும் வீரத்தைப் புகழ்கிறான்.
எப்படி துளசிதாசரின் ஹனுமான் சாலீஸா இந்தியர்களைத் தட்டி எழுப்புகிறதோ அதே போல மஹவீரரின் சிலையும் கொள்கைகளும் சிரவணபெளஹோலாவில் உள்ள பாஹுபலியின் சிலையும் நம்மை எல்லாம் புத்துணர்ச்சி பெற வைக்கிறது.
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு” ஆகியவற்றை அந்தச் சிலைகளில் காண முடிகிறது. புலன்களை வென்றதாலேயே மஹாவீரர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். இது பாரத நாட்டுக்கே உரிய ஒரு கொள்கை. உலகில் வேறு எங்கும் காணமுடியாதது.
“கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், உரும் உடன்று எரியினும், ஊறு பல தோன்றினும், பெரு நிலம் கிளறினும், திரு நல உருவின் மாயா இயற்கைப் பாவை என்று கொல்லிப் பாவையை நற்றிணைப் புலவர் பரணர் வருணித்தது மஹாவீரர், பாஹுபலி போன்ற புனிதர்களுக்கும் பொருந்தும்.
அனுமன் ஜயந்தியும் மஹாவீர் ஜயந்தியும் அருகருகே ஏப்ரல் மாதத்தில் வருவதால் இரண்டையும் இணைத்தேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத்தாவி,
அஞ்சிலே ஒன்று ஆறாக, ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.
xxxxx
ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்
வென்றான்தன் வீரமே வீரம்-என்றானும்
சாவாமற் கற்பதே கல்வி தனைப்பிறர்
ஏவாமல் உண்பதே ஊண்—-ஔவையார்
“அனைத்தையும் இறைவனின் சொரூபம் என்றபடி ஒன்றாகக் காண்பதே மெய்க் காட்சியாகும். ஐம்புலன்களையும்அடக்கி வென்றவனுடைய வீரமே உண்மையான வீரமாகும். எக் காலத்தாயினும் சோம்பி மடிந்து போகாமல் உயிருள்ள வரைக்கும் அயராது கற்பதே கல்வியாகும். தன்மைப் பிறர் ஏவிப் பணிகொள்ளுகின்ற நிலைக்கு உட்படாமல், தன் உழைப்பினால் விளைவித்துப் பெற்றதனை உண்பதே சிறந்த உணவாகும்” என்பது பொருள்.
அமைச்கர் பற்றி வள்ளுவர் கூறிய கருத்தையும் இங்கே காணலாம் .
****
முக்காலமும் உணர்ந்தோனே கவி என்று வேத நூல்கள் விளம்புகின்றன ; ரிக்வேத உஷனஸ் கவி இதற்கு முன்னுதாரணமானவர் ; பகவத் கீதையில் கிருஷ்ணனும் கவிகளுள் தான் உஷனஸ் என்று பகர்கிறார்
*****
மனு என்ன சொல்கிறார்?
மூத்தவர் என்ற தகுதி நரைமுடியாலோ, செல்வத்தாலோ, பரம்பரையாலோ வருவதில்லை. இது ரிஷிகள் வகுத்த சட்டம்; வேதங்களையும் வேதத்தின் அங்கங்களையும் கற்றவனே நம்மில் உயர்ந்தோன் (2-154 மனு).
பிராமணர்களில் மூத்தவன் வேதம் கற்றோன்;
க்ஷத்ரியர்களில் மூத்தவன், வீரம் மிக்கவன்;
வைஸ்யர்களில் மூத்தவன், அதிக தானியம் வைத்திருப்பவன்.
சூத்திரர்களில் மூத்தவன், வயதில் பெரியவன்! (மனு 2-155)
–SUBHAM—
TAGS– குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை 4, டாக்டர் , புலவர் , அறிஞன் யார்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் ஒளிபரப்பில் 9-3-2025 அன்று ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.
வில்லிப்புத்தூரார்! – 2
வில்லிப்புத்தூரார் வைணவராகப் பிறந்தாலும் சமயப் பொதுமைக் கருத்தைக் கொண்டவர்.
வில்லியும் சிவனும் என்ற தனது ஆய்வு நூலில் வில்லிப்புத்தூரார் 270 பாடல்களில் சிவனைப் பற்றிக் கூறுவதைத் தொகுத்துத் தந்துள்ளார் திரு ராய.சொக்கலிங்கம் அவர்கள். இவற்றில் 199 பாடல்கள் கவிக்கூற்றாக அமைபவை. 71 பாடல்களில் அர்ஜுனன் முதலிய பாத்திரங்கள் வாயிலாக சிவபிரானைக் குறிப்பிடுகிறார்.
எடுத்துக்காட்டிற்காக ஒரே ஒரு பாடலை மட்டும் இங்குக் காண்போம்:
நீற்று ஒளி பரந்து நிலவு எழு வடிவும், நிலா, வெயில், அனல் உமிழ் விழியும்,
ஆற்று அறல் பரந்த கொன்றைவார் சடையும், அல்லதை யாவையும் கருதான்:
மாற்றம் ஒன்று இன்றி நின்றனன், வரைபோல் வச்சுராயுதன் திரு மகனும்.
இந்திரன் மகனான அர்ஜுனன் சிவனைத் தொழுததை இப்படி வில்லிப்புத்தூரார் குறிப்பிடுகிறார்.
வில்லிப்புத்தூரார் வியாஸ பாரதத்தை முதல் நூலாகக் கொண்ட போதிலும் கூட பாத்திரப்படைப்பு, உவமைகள், அணி நயம், சந்த நயம், பொருள் நயம் ஆகியவற்றால் தனித்துவம் பெறுகிறார்.
அறுசீர் ஆசிரிய விருத்தங்களில் மட்டும் அவர் பத்து சந்த வேறுபாடுகளைக் காண்பிக்கிறார்.
சந்தத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு இது:
மதித்துமதங்களேழினு மெய் வனப்புறு கொண்டல் மானுவன
கதித்து நெஉங்கை வீசியுடுகணத்தை முகந்து வாருவன
மிதித்துரகன்பருமணிகள் விழித்து வெகுண்டு வாவுவன
சொத்திருகண்களாலுமெரி கும்ப வாரணம்
இப்படி போர்க்களத்தில் யானைகள் போர் செய்யும் காட்சியை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் வில்லிப்புத்தூரார்.
ஒரு கவிதை என்பது சொற்களின் மூலமாக ஒரு காட்சியை நம் மனக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.
கவிதையின் ஓசை நயத்தால் அதைப் படிக்கும் போது செவிக்கு இன்பம் தர வேண்டும்.
கவிதை நம் மனக் கண் முன் வருவதால் கண்ணுக்கு இன்பம் தர வேண்டும்.
சிந்தையைக் கவர்தலால் ஐம்பொறிகளுக்கும் இன்பம் தருதல் வேண்டும்.
இந்த கவிதை இலக்கணத்தை நன்கு அறிந்த வில்லிப்புத்துரார் தனது படைப்பால் நம்மை பிரமிக்க வைக்கிறார்..
ஒரே பாடலில் பல உவமைகளை அடுக்குவது இவரது தனிச் சிறப்பு! வில்லியிடம் ஊறும் உவமைகளைப் படித்தால் கற்றனைத்தூறும் அறிவு சிறக்கும்!
மனிதப் பண்புகளைவிளக்குவதில் தனிச் சிறப்பைக் கொண்டதாக அமைகிறது வில்லி பாரதம்,
அத்தினாபுரம் சென்ற பாண்டவர் தனது பெரிய தாயார் ஆன காந்தாரியை வெறுப்பின்றி வணங்குகின்றனர்.
பீஷ்மர் தன் தந்தைக்காகப் பெரும் தியாகத்தைச் செய்து மணம் முடிக்காமல் இருக்கிறார்.
பாண்டவர் ஐவரில் மூத்தவரான தர்மரை இதர நால்வரும் வணங்கிப் போற்றுகின்றனர்.
அனைவரும் மாபெரும் அவதாரமான கிருஷ்ணரைப் போற்றித் துதிக்கின்றனர்.
பாரதப் போர் வராமல் தடுப்பது எப்படி என்பதை கண்ணபிரான் சகாதேவனைத் தனியாக அழைத்துச் என்று கேட்கிறான். அதற்கு சகாதேவன் பதில் கூறும் இடம் மிகவும் அருமையான ஒரு இடம்!
நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கிப பூபாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல்வண்ணா
கர்ணனுக்கு நாட்டைத் தந்து விட வேண்டும். அதற்கு முன் அர்ஜுனனைக் கொல்ல வேண்டும். திரௌபதியின் குழலைக் களைய வேண்டும். உன்னைக் கட்டிப்போட வேண்டும். இப்படிச் செய்தால் போர் வராமல் காக்கலாம் என்றான் சகாதேவன்.
இதைக் கேட்ட கண்ணன் எங்கே என்னைக் கட்டு என்று கூறி பதினாறாயிரம் வடிவம் கொண்டான். ஆனால் சகாதேவன் மூலமாம் தோற்றம் உணர்ந்து எவ்வுலகும் தா ய அடி இணையினைக் கருத்தினால் பிணித்தான் அதாவது மூலத் தோற்றத்தை தியானித்து அவனது இரு பாதங்களைப் பிடித்தான் என்கிறார் வில்லிப்புத்தூரார். .700 ஸ்லோகங்கள் கொண்டது பகவத் கீதை. வில்லிபுத்தூரார் தனது பாரதத்தில் பகவத்கீதையை ஆறே ஆறு பாடல்களில் அருமையாகத் தந்துள்ளார்.
வில்லிப்புத்தூராரின் கிருஷ்ண பக்திக்கு ஈடு இணையில்லை; எடுத்துக் காட்டிற்கு ஒரு பாடலைப் பார்ப்போம்:
ஆக இப்படி வில்லி பாரதத்தின் பெருமையையும் வில்லிப்புத்துராரின் மாண்பையும் சொல்லிக் கொண்டே போகலாம். நமது நேரத்தில் சிறிது நேரத்தை அவ்வப்பொழுது இந்த வில்லி பாரதத்தைக் கற்பதில் கருத்தை ஊன்றிச் செலவிட்டால் நமது வாழ்வு சிறக்கும் என்பதில் ஐயமில்லை.
வில்லிப்புத்தூரார் புகழ் வாழ்க! கண்ணனை என்றும் தியானிப்போம் என்று கூறி என் உரையை முடிக்கிறேன். நன்றி வணக்கம்.
Date uploaded in Sydney, Australia – 11 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Hindu Crossword11325 (Post.14,291)
11325
1
2
3
G
4
5
6
7
R
8
9
10
11
12
13
13
↑ 15
↑ 16
Across
1.word for monkey in Valmiki Ramayana(7 LETTERS)
6. 1) [noun] the body of a human being. 2) [noun] essence; substance. 3) [noun] a good physique. 4) [noun] beauty of the body (4)
7.English word tree is derived from this Sanskrit word(3)
8. “now, then, therefore, moreover, so much the more, and, partly; beginning of scriptures (4)
9.Entire, undivided (7)
12.Fire, Agni; comes with Vishnu in the Vedas (4)
13.wild, born in a forest; savage; in Sanskrit (5)
14Science of Cooking (10)
Down
1. One of the three sons of Agni and his first wife Svāhā. Agni is one of the most important Vedic gods and represents divine illumination. (8 LETTERS)
2.small quantity (4)
10. a nomadic group of warriors, likely originating from Central Asia, who invaded and terrorized Europe in the 4th and 5th centuries AD, famously known for their military prowess and ruthlessness, contributing to the decline of the Western Roman Empire. (4)
3. second-highest mountain in India, after Kangchenjunga, (9)
4.Only woman in 12 Alvars of Tamil Nadu (5)
11.refers to bathing in Siva Purana (4)
5.Blessing in Sanskrit (8)
16.channel ↑ (3)
15.Node in Tamil; eye in Kannada; Canoe in Nepali ↑ (4)
Date uploaded in Sydney, Australia – 11 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆசைக்கு வெட்கமில்லை! யாருக்கு எதில் நினைப்பு ? குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை மூன்று
யாருக்கு எதில் நினைப்பு?
9. இவர்க்கு இதில் நினைவு
ஞானநெறி யாளர்க்கு மோட்சத்தி லேநினைவு
நல்லறிவு ளோர்தமக்கு
நாள்தோறும் தருமத்தி லேநினைவு மன்னர்க்
கிராச்சியந் தன்னில்நினைவு
ஆனகா முகருக்கு மாதர்மே லேநினைவு
அஞ்சாத் திருடருக்கிங்
கனுதினம் களவிலே நினைவுதன வணிகருக்
காதாய மீதுநினைவு
தானமிகு குடியாள ருக்கெலாம் வேளாண்மை
தனில் நினைவு கற்பவர்க்குத்
தருகல்வி மேல்நினைவு வேசியர்க் கினியபொருள்
தருவோர்கள் மீதுநினைவு
மானபர னுக்குமரி யாதைமேல் நினைவெற்கு
மாறாதுன் மீதுநினைவு
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
விளக்கம்
ஞானிகளுக்கு – மோட்சம்/ வீடுபேறு ;
அறிவாளிகளுக்கு – தர்மம் ;
மன்னர் களுக்கு- நாட்டின் நலம்;
காமவெறியார்க்கு – பெண்கள்;
திருடர்களுக்கு – மோசடி, ஏமாற்று, திருட்டு
வணிகர்களுக்கு – லாபம் அடித்தல்;
விவசாயிகளுக்கு – பயிரிடுதல்;
மாணவர்களுக்கு – படிப்பு/ கல்வி;
வேசியார்க்கு – பணமுள்ள ஆட்கள்;
மானமுள்ளவர்களுக்கு – மதிப்பு, மரியாதை ;
எனக்கு – முருகா, உன் மீது மாறாத பக்தி
. ‘அற்றது பற்று எனில் உற்றது வீடு.’ — அதாவது ஆசையை விட்டால் மோட்சம் கிடைக்கும். எந்த ஆசையை ? காமினி -காஞ்சன ஆசையை என்பார் ராமகிருஷ்ண பரமஹம்சர்
காமினி- பெண்ணாசை; காஞ்சன- பொன் ஆசை/ பணத்தின் மீது ஆசை
எதை எப்படி டையலாம் ?
வேண்டுதல் வேண்டாமை இலான் உடைய திருவடிகளை, அதாவது பற்றற்றவன் பாதங்களை பிடித்தால் பற்று ஓடிப்போகும் என்பான் வள்ளுவன்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.—-குறள் 350
****
கயமை எனும் அதிகாரத்தில் திருடர்களைக் கண்டு பிடிப்பது கடினம் என்கிறார் வள்ளுவர்
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில—.குறள் 1071
பரிமேலழகர் உரை: மக்களே போல்வர் கயவர் – வடிவான் முழுதும் மக்களை ஒப்பர் கயவர்; அவர் அன்ன ஒப்பாரி யாம் கண்டது இல் – அவர் மக்களை யொத்தாற்போன்ற ஒப்பு வேறு இரண்டு சாதிக்கண் யாம் கண்டதில்லை.
*****
விலைமாதர்கள் பற்றி வள்ளுவர் சொன்னது
அன்பின் விழைவார் பொருள்விழைவு மாய்தொடியா
ரின்சொல்லிழுக்குத் தரும்.-911
அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.
****
ஆசை வெட்கம் அறியாது
10. இவர்க்கு இது இல்லை
வேசைக்கு நிசமில்லை திருடனுக்கு குறவில்லை
வேந்தர்க்கு நன்றியில்லை
மிடியர்க்கு விலைமாதர் மீதுவங் கணம்இலை
மிலேச்சற்கு நிறையதில்லை
ஆசைக்கு வெட்கம்இலை ஞானியா னவனுக்குள்
அகம்இல்லை மூர்க்கன்தனக்
கன்பில்லை காமிக்கு முறையில்லை குணம்இலோர்க்
கழகில்லை சித்தசுத்தன்
பூசைக்கு நவில் அங்க சுத்தியிலை யாவும்உணர்
புலவனுக் கயலோர்இலை
புல்லனுக் கென்றுமுசி தானுசிதம் இல்லைவரு
புலையற்கி ரக்கமில்லை
மாசைத் தவிர்த்தமதி முகதெய்வ யானையொடு
வள்ளிக் கிசைந்த அழகா
மயிலேறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
யாரிடத்தில் எது இருக்காது என்று குருபாததாசர் ஒரு பட்டியலே தருகிறார்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் ஒளிபரப்பில் 9-3-2025 அன்று ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.
வில்லிப்புத்தூரார்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
மஹாபாரதத்தை அழகுறத் தமிழிலே தந்த வில்லிப்புத்தூரார் பற்றி இன்று சிந்திப்போம்.
நடுநாடென்று சொல்லப்படுகின்ற திருமுனைப்பாடி நாட்டில் சனியூரில் அந்தணர் குலத்தில் ஒரு வைணவ குடும்பத்தில் வீரராகவாசாரியார் என்பவருக்குத் திருக்குமாரராய் வில்லிப்புத்தூரார் அவதரித்தார்.
இவர் பதினான்காம் நூற்றாண்டில் இடைப்பகுதியில் வாழ்ந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இளமையில் வடமொழியிலும் தமிழிலும் நல்ல தேர்ச்சி பெற்று கவி பாடும் ஆற்றலை இவர் பெற்றார்.
சேர சோழ பாண்டியர் ஆகிய மூவேந்தர்களையும் சந்தித்து பாக்கள் புனைந்து அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார் வில்லிப்புத்தூரார்.
திருமுனைப்பாடிநாட்டில் வக்கபாகை என்னும் இடத்தில் இருந்து செங்கோல் செலுத்திய கொங்கர் குலத்து மன்னனான வரபதியாட்கொண்டான் என்பவன் இவரைப் பெரிதும் ஆதரித்து வந்தான். இவரை தனது ஆஸ்தான பண்டிதராகவும் அவன் நியமித்தான்.
ஒரு நாள் இவரை நோக்கி அவன், “வடமொழியிலே வேத வியாசர் இயற்றிய மஹாபரததத்தைத் தமிழில் நூலாக யாத்தருள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தான்.
ஶ்ரீ கிருஷ்ணனுடைய சரித்திரம் என்பதால் இதற்கு இணங்கிய வில்லிப்புத்தூரார் நல்ல அழகிய தமிழ் நடையில் சொற்சுவையும் பொருட்சுவையும் தோன்றுமாறு பாரதத்தைப் பாடினார்.
இவர் பாடிய பாரதத்தில் 49 சர்க்கங்களில் 4337 பாடல்கள் உள்ளன. வியாசர் இயற்றி அருளிய மஹாபாரதத்தில் 18 பர்வங்கள் உள்ளன. ஆனால் வில்லிப்புத்தூரார் பத்து பர்வங்களையே பாடினார். கிருஷ்ணரது மறைவைக் குறித்து வரும் செய்திகளை இவர் பாட விருப்பம் கொண்டிருக்கவில்லை என்பதை இதனால் நாம் அறிய முடிகிறது.
தன்கவித் திறமையினால் ஆங்காங்கே கர்வத்துடன் இருந்த பல புலவர்களை வாதுக்கு அழைத்த இவர் அவர்கள் தோற்றுப் போனால் எப்போதும் தன் கையில் வைத்திருந்த ஒரு துறட்டுக்கோலால் அவர்களின் காதுகளை மாட்டி இழுத்து அறுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் பால் பெரிதும் அன்பு கொண்டிருந்த மன்னர்கள் இந்தச் செயலைத் தடுக்கவில்லை.
இவர் இப்படி காதை அறுத்து வந்ததை ஒரு தனிப்பாடல் நன்கு விளக்குகிறது.
இரண்டொன்றா முடிந்து தலையிறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை
விளையாட்டாகக் கவிதைதனை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே
என்ற பாடல் இவர் தம் செயலை விளக்குகிறது.
ஒரு சமயம் இவரது இந்தச் செயலைக் கேள்விப்பட்ட அருணகிரிநாதர் மன வருத்தமுற்றார். தான் அவருடன் வாதுக்கு வருவதாக அறிவித்தார். ஆனால் ஒரு எதிர் நிபந்தனையும் விதித்தார். வாதில் வில்லிப்புத்தூரார் தோற்றுவிட்டால் அவர் செய்தது போலவே அவர் காதும் அறுக்கப்படும் என்றார். இதை வில்லிப்புத்தூரார் ஏற்றுக் கொண்டார். அருணகிரிநாதர் முருகனைப் போற்றும் கந்தர் அந்தாதியைப் பாட ஆரம்பித்தார். உடனுக்குடன் வில்லிப்புத்தூரார் பொருள் சொல்லி வந்தார். 54ம் பாடலை ஒரே எழுத்தைக் கொண்டுள்ள ஏகாக்ஷரி பாடலாக அருணகிரிநாதர் அமைத்து இப்படிப் பாடினார்.
இதற்குப் பொருள் சொல்ல முடியாமல் வில்லிப்புத்தூரார் திகைத்து விழித்தார்.
அருணகிரிநாதர் பாடலுக்கு பொருளை விளக்கமாகக் கூற வில்லிப்புத்தூராரின் தோல்வி உறுதியானது.
பாடலின் பொருள் இது தான்: நடராஜ மூர்த்தியாகிய சிவபெருமானும் பிரம்மனும் இடைச்சேரியில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேஷனையும் பாயலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த முதலே!, தேவயானையின் தாசனே! ஜனன மரணத்திற்கு இடமாய் சப்த தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை தீயினால் தகிக்கப்படும் பொழுது உன்னை துதித்து வந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும்.
ஆனால் அருணகிரிநாதர் வில்லிப்புத்தூராரின் காதுகளை அறுக்கவில்லை. “இந்தப் பழக்கத்தை இன்றோடு கைவிட வேண்டும்” என்று வில்லிப்புத்தூராரை அருணகிரிநாதர் கேட்க அவரும் மனம் நெகிழ்ந்து ஒப்புக் கொண்டார். அன்றிலிருந்து அவரது புலமைக் கர்வம் அகன்றது!
வில்லிப்புத்தூரார் படைத்த வில்லி பாரதத்திற்கு வரந்தருவார் என்ற அவரது மகனே சிறப்புப் பாயிரம் என்று 23 பாடல்களைத் தந்து சிறப்பித்தார்.
தென்னர் சேரலர் செம்பியர் எனப்பெயர் சிறந்த
மன்னர் மூவரும் வழங்கிய வரிசையால் உயர்ந்தோன்;
முன்னர் எண்ணிய முத்தழிழ்ப் பாவலர் எவரும்
பின்னர் வந்தொரு வடிவுகொண் டனரெனப் பிறந்தோன்
என்று இவர் வில்லிப்புத்தூராரின் சிறப்பைப் பெருமிதத்துடன் கூறுகிறார்.
அதுமட்டுமல்ல
“ஐந்து பாவுடை நால்வகைக் கவிக் கதிபதியாய்” என்று கூறுவதால் வில்லிப்புத்தூரார் வெண்பா, ஆசிரியப்பா, கலிபா, வஞ்சிப்பா, மருட்பா ஆகிய ஐந்து பாவினங்களிலும் ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் ஆகிய நால்வகைக் கவிகளிலும் சிறந்து விளங்கியவர் என்பதையும் நமக்கு அவர் கூறுகிறார்.
வடமொழிச் சொற்களை அழகுறத் தமிழ்ப் படுத்திப் பாடியது வில்லிப்புத்தூராரின் தனிச் சிறப்பாகும்.
இவர் அகஸ்திய கவி இயற்றிய பாலபாரதம் என்னும் இருபது சருக்கங்கள் கொண்ட நூலைப் பின்பற்றித் தன் பாரதத்தைப் படைத்தார் என்று சிலர் சொல்வர். ஆனால் வியாஸ பாரதத்தையே இவர் முதல் நூலாகக் கொண்டார். சுருக்கமாகப் பாடுவது என்ற ஒரே ஒரு கருத்தினை மட்டும் அகஸ்திய முனிவரிடமிருந்து எடுத்துக் கொண்டார் என்று சொல்லலாம்.
ஆங்காங்கே வியாஸ பாரதத்திலிருந்து சிறிது மாறுபட்டுத் தன் வழியில் இன்னும் சிறப்பாக இவர் பாக்களை இயற்றினார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இந்த நூலில் உண்டு.
Date uploaded in Sydney, Australia – 10 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கணவனே கண்கண்ட தெய்வம்: குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை 2
சைவ வேளாளர் குலத்தில் பிறந்த குருபாததாசர் இயற்றிய குமரேச சாதகத்தில் பெண்களுக்கு, கணவனே தெய்வம், சூத்திரர்களுக்கு பிராமணனே தெய்வம் குடிமக்களுக்கு அரசனே தெய்வம் என்ற பழங்காலக் கருத்துக்கள் உள்ளன பழங்காலத்தில் எகிப்தியர்களும் இந்துக்களும் அரசனை தெய்வம் என்று வணங்கினார்கள்; கோ என்றால் அரசன் அவன் இருக்கும் இல்லம் கோயில்; தேவன் என்றால் அரசன், கடவுள்; தேவி என்றால் இறைவி, மஹாராணி . இந்த சொற் பிரயோகம் பழங்காலத்தில் அரசனைத் தெய்வம் என்று நம்பியதைக் காட்டுகின்றன.
உலகில் கணவனை தெய்வம் என்று கருதியது இந்தியாவில் மட்டுமே. இதைத் திருவள்ளுவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். கணவனைத் தோலும் பத்தினிகள் மழையைக்கூட உண்டாக்க முடியும் என்கிறார்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.–குறள் 55
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.
இன்னொரு பாடலில் சத்தியத்தின் பெருமையைக் கூறுகிறார். இதுவும் இந்துக்களின் பண்பாட்டினில் மட்டுமே உளது. மாதா பிதா குரு தெய்வம், சத்தியமேவ ஜெயதே என்பன இந்துமத வேதத்தில் உள்ளன இவைகளைத் தமிழ்ப்புலவர்களும் அப்படியே பாடியுள்ளனர்.
கணவன் தெய்வம், ஒரே கணவன் மறுமையிலும் கணவனாக வரவேண்டும் என்ற கருத்துக்களை சங்கத் தமிழ் பாடல்களிலும் காளிதாசனின் பாடல்களிலும் காணலாம்.
சத்தியத்தைக் கடைப்பிடிப்போரிடம் லெட்சுமி இருப்பாள்; அவர்களிடத்தில் செல்வம் கொழிக்கும் அவர்களிடத்தில் விஷ்ணுவின் அம்சமும் இருக்கும்; முகத்தில் களை/ தேஜஸ் ஒளிவீசும் ; அவர்கள் மற்றவர்களிடத்தில் அருளைப் பொழிவார்கள் ; அதாவது கருணையுடன் இருப்பார்கள்
அடுத்தபடியாக பக்தி;
இறைவனிடத்தில் பக்தி செலுத்துவோரிடத்தில் கருணை, மற்றும் நூல்களில் கண்ட தருமம்/ அறம் விளங்கும். இதனால் அவர்களைக் கண்டு பகைவர்கள் நடுங்குவார்கள் சத்ரு பயம் இல்லாத இடத்தில் உயிரினங்கள் செழித்தோங்கும் புல் வயல் என்னும் ஊரில் உறையும் மயில் மீதமர்ந்த குமரேசனை வணங்கிப் போற்றுவோம்
கடைசி வரிகளை இப்பொழுது திராவிடர்கள் திருத்தி விட்டனர் பழைய பதிப்புகளில்
மாதையையினார் சூத்திரற்கு மறையியற்றியோர் தெய்வம் என்று உளது .
உயர்சாதி பற்றிக்கூறிய குருபாத தாசர் அடுத்தபடியாக சூத்திரர் பற்றிக் கூறியதே சரி என்பதைக் கற்றோர் அறிவர் ; இது போல பல பல நூல்களில் சூத்திரர் பற்றி வரும் வரிகளை இப்பொழுது திராவிடர்கள் திருத்தி வருகின்றனர் ஆகையால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பதிப்புகளை நோக்குவது நலம். வரலாற்றினை மாற்ற முயலும் திராவிடர்களை நம்பாமல் இணைய தளத்திலுள்ள 1928–ஆம் ஆண்டுப் பதிப்பினைப் பின்பற்ற வேண்டும்.
****
गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः ।
गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः ॥
gururbrahmā gururviṣṇuḥ gururdevo maheśvaraḥ .
guruḥ sākṣāt parabrahma tasmai śrī gurave namaḥ
.
குருர் பிரம்மா குருர் விஷ்ணுர் குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாஃஷாத் பரம்பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ
(நிறைய இணைய தளங்களில் சம்ஸ்க்ருதம் அறியாதோர், இந்த மந்திரத்தைத் தவறாக அச்சிட்டுள்ளனர் ) இங்கே வெளியிட்டுள்ள ஸ்லோகத்தைப் பின்பற்ற வேண்டுகிறேன்.