29-12-2024 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி நிரல்
*****
TIME: 12 noon LONDON TIME; 5-30 PM IST; 11 PM Sydney Time
VIA ZOOM, FACE BOOK, YOU TUBE
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES
***
World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London
***
Talk by Bengaluru Nagarajan Great Sanskrit Grammarian Panini
***
Talk by Brahannayaki Sathyanarayan on THIRUVALLIKKENI from Bengaluru
***
INTERVIEW WITH FAMOUS SINGER SRI MANIKKAM YOGESWARAN
COORDINATOR, SOUTH ASIAN MUSIC AT GLOBAL MUSIC ACADEMY, BERLIN
M.Yogeswaran is a classical musician trained in carnatic music which originates from South India. When he performs on the world stage, his ensemble of talented traditional artists and world-renowned orchestras accompany him.
During childhood he was trained in classical music under his teachers “Sangita Bhushanam” Sri P Muthukumarasamy and “Sangita Bhushanam” Sri S Balasingam. His Guru is the world-renowned musician and singer “Padma Bhushan” “Sangita Kalanidhi” Prof Sri T V Gopalkrishnan. Since then, his work as a live performer extends into different branches of music, film and contemporary music.
His popular accomplishments include; the movie soundtracks Migration for Eyes Wide Shut in 1999 directed by Stanley Kubrick this was achieved together with Jocelyn Pook, Spike Lee’s 25th Hour in 2002 for the song The Fuse and in 2007 again with Jocelyn Pook for the songs Quiet Joy , Memories of a Summer and Love Blossoms in Sarah Gavron’s film Brick Lane and his song tribute The Bells for Queen Elizabeth II for her Diamond Jubilee celebrations in June 2012.
As a soloist he has played a role as Mahatma Gandhi in a musical celebrating the Bi centenary of the Norwegian constitution. The musical titled Stemmer composed by the British composer Orlando Gough and performed with the Bergen Philharmonic Orchestra in May 2014. The event was presided by His Highness The Crown Prince of Norway.
***
Tiruppugaz songs recorded by Kalyanji
***
If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.
Date uploaded in Sydney, Australia – 28 DECEMBER 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்பாவையிலுள்ள ஆன்மீக விஷயங்களையே நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால் ஆண்டாள் இயற்கைக் காட்சிகளையும் நேரில் காண்பது போல வருணிப்பதை பலரும் கவனத்தில் கொள்வதில்லை. இங்கே சில காட்சிகளைக் காண்போம் .
அவர் சிங்கத்தை வருணிக்கிறார். வங்காள விரிகுடாவில் கப்பல்கள் சென்றதை வருணிக்கிறார். ஆனைச்சாத்தன் என்ற பறவையை வருணிக்கிறார். பறவைகளின் ஒலிகளைப் பாடுகிறார். வானத்தில் உதித்த மார்கழி பெளர்ணமி சந்திரனைப் பாடுகிறார். விடி வெள்ளி எழுந்து வியாழன் கிரகம் அஸ்தமித்தத்தைச் சொல்கிறார். காரிருள் மேகங்கள் சூழ மழை கொட்டுவதைப் பாடுகிறார். இவ்வாறு எல்லா பாடல்களிலும் ஏதோ ஒரு இயற்கை நிகழ்வினை வருணிக்கிறார். நவரத்தின மணிகள் பற்றியும் திருப்பாவையில் காண்கிறோம். முத்தும் பவளமும் அடங்கிய நவரத்தினங்களும் இயற்கையில் கிடைப்பதை இக்கால மக்கள் உணர்வதில்லை
புள்ளும் சிலம்பின் காண்- பாடல் 6
கீசு கீச்சென்று எங்கும் ஆனைச்சாத்தன்
கலந்து பேசின – பாடல் 7
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் பாடல் 18
இவ்வாறு அதிகாலைப் பொழுதின் அழகினை வருணிக்கிறார். முதலில் ஆனைச்சாத்தன் பறவை பற்றிக் காண்போம்.
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
—-திருப்பாவை 7
மதுரைக் காஞ்சி என்னும் சங்க நூல் யானையங் குருகுஎன்று குறிப்பிடுகிறது –வரி 674
குறுந்தொகைப் பாடலிலும் ( 34 )இந்தச் சொல்லைக் காணலாம்.
ஆனைச்சாத்தன் பறவைக்கு வண்டாழ்ங்குருகு, வலியன், பரத்வாஜ பக்ஷி என்ற பெயர்களும் உண்டு
அகநானூற்றில் குஞ்சரக் குரல குருகு என்ற சொல்லால் இதை அழைக்கிறார் புலவர் பாடல் 145
இப்பொழுது இந்தப் பறவையின் பெயரைச் சொன்னால் எத்தனை பேருக்குத் தெரியும் ? அக்காலத்து தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்ததால் அன்றாடப் பேச்சிலும் பழமொழிகளிலும் பறவைகளையும் விலங்குகளையும் காண்கிறோம் யானையங்குருகு திருவோண நட்சத்திரத்துக்குரிய பறவை என்று ஜோதிட நூலார் கூறுவார்; யானை போன்ற குரலுடைய பறவை என்பதால் குஞ்சரக் குரல் உடைய பறவை என்று அகநானூற்றுப் புலவர் பாடினார்
குஞ்சரம்= யானை
*****
சிங்கம்
சிங்கம் என்னும் விலங்கு இப்பொழுது குஜராத்தில் கிர் வனக்காடுகளில் மட்டுமே உள்ளது; ஒரு காலத்தில் இது வட இந்தியா முழுதும் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் சிம்மேந்திரன் சிம்மாசனம், ம்ருகேந்திரன் போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இதை உறுதி செய்கின்றன. தமிழ் நாட்டில் புலிகள் மட்டுமே அதிகம். ஆயினும் அக்கால ராஜாக்களின் தோட்டங்களிலும் மிருகக்காட்சி சாலைகளிலும் இதை மக்கள் பார்த்திருப்பார்கள் . அரி என்ற தமிழ்ச் சொல் இதைக் காட்டும். புலி சிங்கம் ஆகிய விலங்குகள் சோம்பல் முறிப்பதை மூரி நிமிர்ந்து என்று ஆண்டாளும் பாடுகிறார். மனிதர்களும் தூங்கி எழுந்தவுடன் இரு கைகளையும் உயர்த்தி நிமிர்ந்து சோம்பல் முறிக்கிறோம். விலங்குகளை உற்று நோக்கிய ஆண்டாள் இதை ஒரு பாசுரத்தில் பாடுகிறார் :
மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, மூரி நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.
மூரி நிமிர்ந்து :– இது சங்க காலச் சொல்வழக்கு; இதை புறநானூறு -52, பரிபாடல்-20 கம்பராமாயணம் பாலகாண்டம் உண்டாட்டுப்படலம் ஆகிய நூல்களிலும் காணலாம்
இது குகையிலிருந்து சிங்கம் புறப்படும் தத்ரூபக் காட்சி. விலங்குக் கூட காட்சி அல்ல. இதை எப்படி ஆண்டாள் அறிந்தாள்? அந்தக் காலத்தில் பஞ்ச தந்திரக் கதைகள் போன்றவை பெரு வழக்கில் இருந்திருக்க கூடும்.
*****
இன்னும் ஒரு இயற்கை வருணனை
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.—திருப்பாவை 14
பொருள்: எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே.
செங்கழு நீர் மலர ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன என்பது ஆண்டாள் காணும் காட்சி
*****
அந்தக் காலத்தில் பெண்கள் சங்கு வளையல்களை அணிவார்கள் இபோது பிளாஸ்டிக், ரப்பர் ஆகியவற் றால் ஆன அல்லது கண்ணடியாலான வளையல்களையே பெரும்பாலும் அணிகின்றனர்
ஆண்டாளோ சங்கு முழக்கம் பற்றிக் குறிப்பிடுகிறார்; இன்றும் வங்காளிப் பெண்கள் சங்கு வளையல்களை அணிகின்றனர்; திருமணங்களில் சங்கு ஓலி முழக்கம் செய்கின்றனர்
கம்பராமாயண பாலகாண்ட நாட்டுப்படலத்தில் இடைப்பெண்கள் தயிர் கடையும் காட்சி வருகிறது. அங்கு இடைப்பெண்கள் சங்கு வளையல் அணிந்து தயிர் கடையும் செய்தியை நமக்கு கமபர் அளிக்கிறார். ஆண்டாளும் தயிர் கடையும் காட்சியை ஏழாவது பாசுரத்தில் பாடுகிறார். சங்கு வளையல் ஒலியை நாம் ஊகிக்கலாம்.
****
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (4)
கடல் நீரிலிருந்து மழை எப்படி உண்டாகிறது என்பதை இந்தப் பா சுரத்தில் படிக்கிறோம்
*****
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி -30
கடைசி பாசுரத்தில் கப்பல்கள் ஓடும் கடலைக் காட்டுகிறார் ஆண்டாள் .
அந்தக் காலத்தில் தமிழர்கள் தென்கிழக்கு ஆசியா முழுதும் சென்று வணிகம் செய்ததையும் பண்டபாட்டைப் பரப்பியதையும் பறைசாற்றும் கல்வெட்டுகளும் கோவில்களும் இன்று வியட்நாம், லாவோஸ் முதல் இந்தோனேஷியா வரை காண்கிறோம் . அதையும் கூடக் கடைசி பாசுரத்தில் தொட்டுக்காட்டிவிட்டாள் ஆண்டாள்.
காடு முதல் கடல் வரை பாடிய ஆண்டாள் ஒரு பெரும் இயற்கை ரசிகை என்பதில் ஐயமில்லை!!
15 Nov 2024 — Pictures are taken from various sources for spreading knowledge. this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.
ஆரண்ய காண்டத்தில் சில பிரதிகளில் ஐம்பத்தி ஆறாவது ஸர்க்கத்தில் காணப்படும் ஒரு சம்பவம் இது.
பலாத்காரமாக சீதையைக் கொண்டு சென்ற ராவணன் சீதையை அசோக வனத்தில் கோரமான ராக்ஷஸிகளின் பாதுகாவலில் சிறை வைத்தான்.
அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதா தேவியார் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாததான அன்னத்தை உட்கொள்வதை விட்டு விட்டு அதை தியாகம் செய்தார்.
இதைக் கண்ட பிரம்மாவுக்குப் பெரும் கவலை உண்டாயிற்று. அவர் உடனே தேவேந்திரனை அழைத்து அவரை இலங்கைக்குச் சென்று சீதா தேவியாரை சமாதானப்படுத்தி உணவு உண்ணச் செய்யுமாறு கூறினார்..
தேவேந்திரன் உடனே தன்னுடன் நித்ரா தேவியை உடன் அழைத்துக் கொண்டு இலங்கைக்கு வந்தான். அங்கே நித்ரா தேவி அங்குள்ள அனைத்து ராக்ஷஸிகளையும் தன் வசப்படுத்தவே அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தனர்.
உடனே தேவேந்திரன் சீதை அருகே சென்று தான் வந்த காரியத்தைத் தெரிவித்தான்.
சீதையிடம் சென்ற இந்திரன், “நான் தேவராஜன் இந்திரன். உங்களுடைய உத்தமமான காரியம் சித்தி அடைவதற்காக உதவி புரிய வந்துள்ளேன்.” என்கிறான்.
மத்ப்ரஸாத் சமுத்ர ஸ தரிஷ்யாதி பலை: சஹ |
– ஸ்லோகம் 13
“எனது ப்ரஸாதத்தினால் அவர் (ராமர்) சமுத்திரத்தைக் கடந்து வருவார்.”
“நான் தான் இந்த ராக்ஷஸிகளை எனது மாயையால் நித்திரை வசப்படுத்தி இருக்கிறேன். நானே இந்த ஹவிஷ்யான்னம் எடுத்துக் கொண்டு நித்ரா தேவியுடன் உங்களிடம் வந்துள்ளேன்.”
ஏதத்த்ஸ்யஸி மத்தஸ்தாத்ர த்வாம் பாதிஷ்யதே சுபே |
ஸ்ருதா த் ருஷா வ ரம்போரு வர்ஷாணாமயுதைரபி ||
சுபமானவளே! என்னுடைய கையில் உள்ள இந்த ஹவிஷ்யான்னத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால் ஆயிரக்கணக்கான வருஷங்கள் வரை உங்களுக்கு பசி எடுக்காது; தாகமும் எடுக்காது!” என்று இப்படி இந்திரன் கூற சீதா தேவி இவர் இந்திரன் தானா என்று நினைத்தாள்.
உடனே இந்திரன் தேவதைகள் எந்த லக்ஷணங்களை ராமர் மற்றும் லக்ஷ்மணரிடம் பார்க்கிறார்களோ அதை அப்படியே தத்ரூபமாகக் காட்டவே சீதை இந்திரன் கையிலிருந்த ஹவிஷ்யான்னத்தை எடுத்து உண்டாள்.
இது வர தானமா அல்லது இந்திரனுடைய பலத்தின் பிரபாவமா?
எது எப்படி இருந்தாலும் ஹவிஷ்யான்னம் சீதைக்கு வந்த அனுக்ரஹம் என்று எடுத்துக் கொள்ளலாம்!
Date uploaded in Sydney, Australia – 27 DECEMBER 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
As a botany student, I love plants. As soon as I see them , I try to identify them with the plants I already know. The plant varieties are immense and so it is not easy to identify them.I noticed White Shoe flower (semparuththi in Tamil; hibiscus rosasinensis).
On our way to Shell Harbour from Sydney, we visited the botanic garden for two hours. It is spread over 27 acres and we covered a small part of it. One good thing about it is, there is no entrance fee or car parking fee. London Kew Gardens has an entrance fee. In London everything is ticketed except British Museum and V & A Museum.
“The Garden is also home to a range of native wildlife including Bower Birds, Ring Tail Possums, Kookaburras, native bees, and more. Escape with a walk through one of the largest rainforest collections in Australia, featuring a range of Illawarra rainforest species.
Open daily, this spectacular 27-hectare space is a serene and beautiful place to relax, celebrate, and learn more about plants and horticulture. Overlooking the city of Wollongong from its highest point at the Gleniffer Brae Manor House it features an impressive collection of native and exotic plants from around the world. The Garden has an exciting array of activities and experiences on offer for visitors of all ages. Regular activities include guided tours, garden workshops, nocturnal walks as well as the popular Sunset Cinema”.
I saw lot of workers watering the plants, clearing the rubbish. The garden is well maintained. Though there were boards indicating the types of gardens, I don’t find the names of individual plants. Perhaps the students are taught at schools.
SOLAR CLOCK IN THE GARDEN
–subham—
Tags-wollonggong, botanic garden, my visit, solar clock, white shoe flower
Date uploaded in Sydney, Australia – 27 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மார்கழி மதம் வந்துவிட்டால் திருப்பாவை முப்பது பாடல்களும் திருவெம்பாவை இருபது பாடல்களும் எங்கும் ஒலிப்பதைக் கேட்கிறோம் . இந்த ஐம்பது பாடல்களிலும் பாவை என்ற சொல் வருவதை எல்லோரும் அறிவார்கள். ஆனால் பலருக்கும் ஏன் இப்படிப் பாடல்கள் பாவை என்று முடிகின்றன என்று தெரியாது
பாவை என்பது மண்ணினால் செய்த தேவியின் உருவம் ஆகும். காத்தியாயனி தேவியின் உருவத்தை மணலில் செய்து வழிபடுவதே மார்கழி மாத நோன்பு ஆகும். இப்போது இந்த வழக்கம் பின்பறற்றப்படாததால் பலருக்கும் பாவை பற்றித் தெரியாது.
திரு + பாவை = திருப்பாவை
இதில் திரு என்னும் அடை மொழி செல்வம், இலக்குமி, அழகு, மேன்மை, சிறப்பு என்னும் பொருள் உடைத்து.
பாவை என்பது பெண்கள் அல்லது பெண்கள் நோற்கும் பாவை நோன்பினைக் குறிக்கும்.
பாகவத புராணம் கிருஷ்ணின் சரிதத்தைக் கூறுகிறது. அதில் தசம ஸ்கந்தம் 22- ஆவது அத்தியாயம் கண்ணன், கோபியரின் துகில்க ளைக் (ஆடைகளைக்) கவர்ந்து மரத்தில் ஓளித்து வைத்த நிகழ்ச்சி வருகிறது . இது சங்க இலக்கிய நூலான அகநானூற்றில் வருவதால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ணன் பெருமை கன்னியாகுமரி வரை பரவி இருந்தததை அறிகிறோம். அதே அத்தியாயத்தில் மார்கழி நோன்பு பற்றியும் வருகிறது.
“அரசனே! கோகுலத்திலுள்ள பெண்கள் ஹேமந்த ருதுவின் முதல் மாதமான மார்கழியில் காத்யாயனி பூஜையாகிய விரதத்தைத் துவங்கி அருணோதயத்தில் எழுந்து யமுனா நதியில் ஸ்நானம் பண்ணி, மணலால் காத்யாயனி உருவத்தைச் சமைத்து சந்தனம், மலர் தூபம், தளிர் பழம் மற்றும் சிறந்த நைவேத்யங்களால் தேவியைப் பூஜித்தனர்
காத்யயாயனீ ! ஹே மஹாமாயே ! ஹே மஹாயோகினீ ! ஹே ஈஸ்வரி! உன்னை வணங்குகிறோம் ; எங்களுக்கு நந்தகோபர் மைந்தனாகிய கண்ணனை நாயகனாக அருள்வீராக ! என்ற மந்திரத்தை ஜபித்தவர்களாய் கண்ணனைத் தியானித்துக் கொண்டு ஒருமாத காலம் பூஜை செய்தனர்.
ஒருநாள் யமுனா நதியில் ஸ்நானம் செய்வதற்காக அருணோதயத்தில் எழுந்திருந்து அவர்களுடைய தோழிமார்களின் பெயர்களை சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டும் ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக்கொண்டும் கிருஷ்ண சரிதத்தைப் பாடிக்கொண்டும் நடந்தனர் . அப்பெண்கள் யமுனா நதியின் ஒருபக்கத்துக்குச் சென்று ஆடைகளைக் கரையில் அவிழ்த்து வைத்துவிட்டு கண்ணன் சரிதங்களை சொல்லி நீரில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர் ; பரம யோகிகளுக்கும் யோகியான , சர்வக்ஞானுமான கண்ணபிரான் கோப கன்னியர் நீர்விளையாட்டு நிகழத்துவதை அறிந்து அப்பெண்களின் விரத பலனை அளிப்பதற்காக தனது நண்பர்கள் சூழ அவ்விடம் சென்றார் .
சென்ற பெருமான், கரையிலிருந்த மகளிர் துகில்களையெல்லாம் கவர்ந்துகொண்டு பக்கத்தில் இருந்த கடம்ப மரத்தில் ஏறி நிற்க , நீராடி முடிந்த பெண்கள் கையது கொண்டு மெய்யது பொத்திக் கண்ணனிடம் வந்து தங்களுடைய துகில்களைத் தருமாறு பிரார்த்தித்தபோது , பெருமாள் அவர்களுடைய அன்பைப் பலவகையில் சோதித்து, முடிவில் அவரவர் துகில்களை அளித்தார் சதிகளாகிய நீங்கள் எந்த நோக்கத்தைக் கொண்டு காத்யாயனி விரதத்தை அனுஷ்டித்தீர்களோ அந்த மனோரதம் இன்று இரவில் என்னுடன் கூடி விளையாடுவதால் நிறைவேறும்; எல்லோரும் கோகுலத்துக்குச் செல்லுங்கள் என்று நியமித்தருளினார்.”
கோபியர்கள் கண்ணனுடன் ஆடிய ஆட்டம் ராஸக்ரீடை எனப்படும். இதை சிலப்பதிகாரத்திலும் குரவைக்கூத்து என்ற பெயரில் காண்கிறோம்.
இன்றும் மலையாள தேசத்தில் பெண்கள் விரதம் அனுஷ்டித்து திருவாதிரை அன்று முடிப்பதால் மிருக சீர்ஷ நடத்திரப் பெளர்ணமியில் துவங்கி திருவாதிரையில் முடிந்ததாகவே கொள்ளல் வேண்டும்.
பாவைகளை மண்ணினால் செய்யும் வழக்கம் சங்க நூலான பரிபாடலில் உள்ளது . அது வையை நதி/ பாண்டிய நாடு பற்றிய பாடல்; ஆக ஆண்டாளின் நோன்பு பாண்டிய நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நடந்ததும் உறுதியாகிறது. மேலும் அகநானூற்றில் (59) உள்ள தொழுனை நதி / யமுனா நதி சம்பவம் கண்ணன் பெருமை தமிழ் நாடெங்கிலும் பரவியிருந்ததைக் காட்டுகிறது
மார்கழி நோன்பு எவ்வளவு சீரும் சிறப்புடனும் முடிந்தது என்பதை ஆண்டாள் திருப்பாவையின் கடைசி பகுதியிலும் கேரள திருவாதிரைத் திருவிழாவிலும் இன்றும் காணலாம்
பரிபாடல், கலித்தொகை, ஐங்குறுநூறு முதலிய சங்க நூல்களில் தை நீராடல் பகுதி உள்ளது மார்கழியில் துவங்கி தை மாதத்தில் முடிவடைந்ததை அந்தப் பாடல்களும் உறுதி செய்கின்றன.
—subham—
Tags- பாவை நோன்பு, காத்தியாயனீ ,விரதம், பக்கவாதம், மணல், யமுனை , கோபியர் நீராடல் நீ திருப்பாவரை ஆராய்ச்சி, கட்டுரை 6
இதில் ராவணனைச் சந்திக்கும் மாரீசன் ஶ்ரீ ராமரது மஹிமையை விரிவாக எடுத்துச் சொல்கிறான்.
அவன் ராவணனிடம் கூறுகிறான்:
“ஒரு காலத்தில் பராக்கிரமத்தோடு உலகங்களுக்கு பயத்தை உண்டுபண்ணுகிறவனாய் இந்த பூமியில் எங்கும் திரிந்தேன். தண்டகாரண்யத்தில் ரிஷி மாமிசங்களைப் புசிக்கின்றவனாகக் காலம் கழித்தேன்.
அப்போது என்னைக் கண்டு பயந்த விஸ்வாமித்திரர் தசரத மஹாராஜாவிடம் சென்று மாரீசனிடம் எனக்குப் பெரும் பயம் ஏற்பட்டிருக்கிறது. யக்ஞம் செய்யும் காலத்தில் ராமன் ஊக்கமுடையவனாக என்னைப் பாதுகாக்கட்டும் என்று வேண்டினார். அவரோ ராமன் பன்னிரெண்டு வயதே நிரம்பிய சிறு பையன். நான் வருகிறேன்: என்றார். ஆனால் விஸ்வாமித்திரரரோ ராமர் சிறு பையனாக இருந்தாலும் மாரீசனை ஒழிக்கும் விஷயத்தில் மஹா ஆற்றல் கொண்டவன். அவனை அழைத்துப் போகிறேன் என்றார்.
விஸ்வாமித்திரருடன் தண்டகாவனம் வந்த ராமர் அப்போதே உதித்த இளம்பிறைச் சந்திரனைப் போலக் காணப்பெற்றார்.
ததோஹம் மேகசங்காசஸ்தப்தகாஞ்சனகுண்டல: |
பலீ தத்தவரோ தர்பாதாஜகாம ததாஸ்ரமம் |\
மேக சங்காச: – மேகத்திற்கு நிகரானவனும்
தப்தகாஞ்சனகுண்டல: – சுத்த பொன் குண்டலங்களை அணிந்தவனும்
ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டவனாகிய நான் ஆலோசனையின்ரு புகுபவனாகவே அவனால் பார்க்கப்பட்டேன். அவன் தனுசில் நாணேற்றி ஒரு கூரிய பாணத்தை விடுத்தான். நான் சமுத்திரத்தில் நூறு யோசனை தூரம் தள்ளப்பட்டேன். பிரக்ஞை அற்றவனாக இருந்த நான் நெடுநேரம் கழித்து இலங்கையை அடைந்தேன்.”
இவ்வாறு கூறிய மாரீசன் ராவணனை உயிரைப் பாதுகாக்குமாறும் ராமனுடன் போர் செய்ய வேண்டாமென்றும் அறிவுறுத்துகிறான்.
இந்த இடத்தில் ‘வரங்களைப் பெற்றவனாகிய நான்’ என்று மாரீசன் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.
ஆனால் எப்போது என்ன வரங்களைப் பெற்றான் என்ற விவரங்கள் தரப்படவில்லை.
Date uploaded in Sydney, Australia – 26 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
After a 55 year gap, I did my third rain Forest visit. This time we, three families , climbed the steep mountains in the Minnamurra rain forest and saw the water falls at the top.
My previous two walks were done in India. As a botany student, we took coaches to Tenkasi Kutralam and Agumbe in Karnataka from Madura College, Madurai (Tamil Nadu) to collect different plants for submission at the B Sc Final Year Examination.
This time the trip was to enjoy the forest sceneries at Minnamurra. We breathed fresh air. But it was 4.2 kilometres walk up and down that took over two hours of continuous walking. As I was the oldest in the group, I was panting. Now and then I had to stop and take rest. The forest is full of Cicadas making unbearable, deafening noise. It must be made by at least million cicadas.
(There are more than 200 Australian species of cicadas, most of which belong to the one large family, the Cicadidae. Cicadas are sometimes known as locusts in Australia, but that term is more correctly applied to certain migratory species of grasshopper. Cicada adults die shortly after mating. Cicadas have an incomplete metamorphosis, meaning eggs hatch into nymphs, which then turn into adults.)
At certain places it was very steep, but the authorities have provided handrails. We saw Chinese and other foreigners were also walking along the narrow path. The scenery was awesome and breath taking. All the trees were very tall with tarzan film like wooden climbers (lianas). But we warned not to touch the wood because of poisonous insects and spiders. The lyre birds were the attraction of this forest. We saw the rarer bird two times.
The tall trees provided us enough shade. Since it was summer time in Australia, the weather was good. We saw hanging orchids from the branching trees. After reaching the top we saw the water falls with little water. But if it is rainy season, one could imagine the water flow.
Now and then the boards installed by the forest department gave us information about the plants and animals.
Here below are some details :
Vehicle day pass – 12 Australian dollars
Last visit 4 pm.
The amphitheatre shape of Minnamurra Falls gives a feeling of enclosure and escape from the outside world. This is one of the few places you can walk through a living forest.
Socket wood
The Illawara Socketwood belongs to an ancient Gondwanan family of trees. The endangered species is found only in the Illawara region, and is restricted to a few locations.
Upto 25 metres tall, with a broad and shady crown and small , pale greenish white flowers, this rain forest tree is especially interesting as it primarily reproduces by cloning itself by suckering from underground rhizomes or stems. Recent research have recorded trees 900 metres away from the parent tree.
Rare species
Threatened species in BUDDEROO NATIONAL PARK (Minnamurra is part of it) include the grey headed flying fox, the southern brown bandicoot, the spotted tailed quoll, the waterfall greenwood orchid, the illawara irene, the Illawarra socketwood and the lesser creeping fern.
(But we saw no animals in our route)
One good thing about this visit is No Entrance Fee; but car parking fee is there. The shop at the entrance sells good mementos.
Where is Minnamura Forest?
From Sydey: 1 hr 58 min (117.8 km) via M1
2 hr 2 min (150.0 km) via Hume Motorway/Remembrance Driveway/M31 and M1
Minnamurra Rainforest
A place where waterfalls tumble into a lush tangle of subtropical forest and vines, and where wallabies and elusive platypuses live alongside bowerbirds and king parrots, the Minnamurra Rainforest is like a Jurassic landscape that time forgot – with a distinct Australian twist. Located at the eastern edge of immense Budderoo National Park, Minnamurra is the gateway to all manner of nature-based activities, from family-friendly walks to clifftop treks.
Rainforest Loop Walk (1.6km, 1 hour)
Traversing a network of suspension bridges, the Rainforest Loop Walk offers an immersive snapshot of the national park, with viewing platforms and interpretive signs illuminating its rich flora and fauna – you’ll spot everything from cabbage palms to banksia, strangler figs to rare orchids. Then discover the animals, butterflies and birds; look out for the elusive lyrebird, practiced in mimicking other avian calls.
(We took the long route, not the loop walk) Waterfalls – 4.2 kilometer walk (Two hours)
Halfway through you’ll see signs to The Falls walk– a detour worth taking. You’ll pass cool streams lined with mossy rocks and feathered ferns, to reach a lookout offering stellar views over the lower and upper Minnamurra Falls.
From Sydney, the drive south toward the Illawarra region of the South Coast weaves along the Grand Pacific Drive, one of the most scenic stretches of road in Australia. Your trip to Minnamurra will take just under two hours. From here, it’s a 20-min drive on to Kiama or 10 mins to Jamberoo, with a wealth of attractions in between.
A rainforest is a forest that receives a lot of rainfall and is characterized by:
· Rainfall
Rainforests receive more than 80 inches of rainfall annually, and in some areas it rains every day
· Canopy
Rainforests have a dense canopy of trees that can form multiple layers
· Biodiversity
Rainforests are home to millions of species of plants and animals, making them some of the most biodiverse ecosystems on Earth
· Climate
Rainforests help regulate the global climate by storing carbon dioxide in the trees and soil, and by releasing water into the atmosphere through transpiration
· Location
Rainforests can be found on every continent except Antarctica, with the largest rainforests in South America and Africa
· Other features
Rainforests are also characterized by high humidity, a moist layer of leaf litter, and the presence of epiphytes and lianas .
Date uploaded in Sydney, Australia – 26 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;-1
மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்-26
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-4
Mārgaśīrṣa (मार्गशीर्ष).—m., [mārgaśīrṣaḥ] Name of the ninth month of the Hindu year (corresponding to NovemberDecember) in which the full moon is in the constellation मृगशिरस् (mṛgaśiras); शुक्ले मार्गशिरे पक्षे (śukle mārgaśire pakṣe) Bhāgavata 6.19.2; मासानां मार्गशीर्षोऽहम् (māsānāṃ mārgaśīrṣo’ham) Bhagavadgītā (Bombay) 1.35.
Mārgaśīrṣa (मार्गशीर्ष) or “Mārgaśīrṣa Paurṇamāsī” is the name of a festival that once existed in ancient Kashmir (Kaśmīra) as mentioned in the Nīlamatapurāṇa.—Mārgaśīrṣa Paurṇamāsī proceeds as follows: On this day, a fast to be broken at night after the worship of the moon with white garlands, grains, eatable offerings etc., and the worship of the Brāhmaṇas is prescribed. The Brāhmaṇa lady, the sister, the aunt and the wife of a friend, each is to be honoured with a pair of red clothes.
*****
தமிழ் மாதங்கள் என்று நாம் சொல்லும் எந்த மாதமும் தமிழ்ப் பெயர் இல்லை. ஸம்ஸ்ருத மாதங்களின் பெயர்களைத் தமிழ்ப் படுத்தியுள்ளோம்.
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி ஆவணி , புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாசி பங்குனி ஆகிய பன்னிரெண்டு மாதங்களும் அப்படி வந்தவையே. இதை காஞ்சிப் பெரியார் — மஹாசுவாமிகள் உரையில் அழகாக விளக்கியுள்ளார்
மார்கழி என்பது மார்க்க சீர்ஷ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபு; மருவு.
இதற்குச் சில பெருமைகள் உண்டு இதை தனுர் மாதம் என்றும் அழைப்போம். ஏனெனில் சூரியன் தானுர் ராசியில் பிரவேசிக்கும் காலம் இது .
மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் கண்ணன் சொன்னார்.இதையே தமிழ்த் திரைப்பாடல் ஒன்றின் முதல் வரியிலும் காண்கிறோம்.
அப்படி என்ன மார்கழிக்குச் சிறப்பு?
வருடத்தை உத்தராயணம் என்றும் தட்சிணாயனம் என்றும் இந்துக்கள் பிரித்தனர். இதில் தட்சிணாயணத்தின் கடைசி மாதம் மார்கழி. அதாவது உத்தராயணம் ஆரம்பிக்கும் தை மாதத்துக்கு முதல் மாதம். அப்படியானால் அது ஆறு மாத காலம் இரவினை அனுபவிக்கும், உறங்கிக்கொண்டிருந்த தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலம் மார்கழி.
சூரிய உதயத்துக்கு முன்னுள்ள பிரம்ம முகூர்த்த காலம் தியானத்துக்கும் இறை வழிபாட்டுக்கும் சிறந்தது . ரிஷி முனிவர்களும் அவர்களைப் போல வாழ்க்கை நடத்தும் நிறைய சன்யாசிகளும் பிரம்ம முகூர்த்தத்தில் உறங்குவதில்லை இதைப் பின்பற்றும் இந்துக்கள் மார்கழி முழுவதையும் புனித மாதமாக அனுசரிப்பதோடு அதிகாலையில் அனைவரையும் உசுப்பிவிடுகிறார்கள் தமிழ் நாட்டில் பல கோவில்களில் ஒலிபெருக்கி மூலம் பாடல்களும் — தெய்வீகப் பாடல்களும் –ஒலித்து அனைவரையும் எழுப்பிவிடுகின்றன.
மார்கசீர்ஷ என்பது மார்கழி ஆனது ; மிருகசீர்ஷ நடச்சத்திரம் சந்திரனுடன் கூடிய நாள் மார்க்க சீர்ஷ மாதம் ஆகும். சித்திரா நட்சத்திரத்துடன் சந்திரன் கூடும் மாதத்தை நாம் சித்திரை மாதம் என்பது போலவும் விசாக நட்சத்திரத்துடன் பெளர்ணமி நிகழும் மாதத்தை நாம் வைகாசி என்பது போலவும் ஏற்பட்ட மாதம் இது மிருக = மான் சீர்ஷ/ சிரஸ்= தலை ; இந்த நட்சத்திரத்தை தமிழ் நூல்கள் மான் தலை என்றே அழைக்கும்.
இரவு நேரத்தில் வானத்தை அண்ணாந்து பார்த்தால் நான்கு மூலைகளில் நான்கு பிரகாசமான விண்மீன்களும் கடுவில் கோடு போட்டது போல மூன்று புள்ளிகளையும் காணலாம். இதுவே மான் தலை அல்லது மிருக சீர்ஷம்.
****
ஆண்டாளின் புதிர்
மிருசுக சீர்ஷத்துடன் சந்திரன் பெளர்ணமி ஏற்படுத்தும் மாதம் மார்கழி. ஆனால் ராகவ அய்யாங்கார் போன்றோர் மார்கழித் திருவாதிரை நாட்சத்திரத்தில் ஆண்டாள் முதல் பாசுரத்தைப் பாடியதாகச் சொல்லுவது சரியா? சரியில்லை என்பதே என் கருத்து.
இன்னும் ஒரு புதிர்
மார்கழி மாதத்துக்கு மொத்தம் 29 நாட்கள்தான். ஆண்டாள் பாடியதோ முப்பது பாசுரங்கள் அவர் பெளர்ணமியில் பாடத்துவங்கினால், ஒரு நாளைக்கு ஒரு பாசுரம் என்று கொண்டால், அடுத்த பெளர்ணமி முப்பதாவது நாளன்று வந்து விடும் அது தை மாத பெளர்ணமி ஆக இருக்க வேண்டும். இப்போது நாம் தைப்பூசம் என்று கொண்டாடுகிறோம். ஒருவேளை முப்பதாவது பாடலை பல ஸ்துதி என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
சங்க இலக்கியத்தில் தை நீராடல் என்ற குறிப்பே அதிகம் உள்ளன. ஒருவேளை மார்கழிப் பெளர்ணமியில் துவங்கி தை மாத பெளர்ணமியில் விழா முடிந்திருக்காலாம். மார்கழிக்கு 29 நாட்களே இருப்பதால்தான் இந்தப் பிரச்சினை. ஒருவேளை ஆண்டாள் ஒரே நாளில் இரண்டு ,மூன்று பாடல்களையும் பாடியிருக்கலாம். ஏனெனில் அவர் 3 பாடல்களில் மார்கழியை குறிப்பிடுகிறார் ; தை பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.
காஷ்மீரி பிராமணர்களும் மார்கழி மாத நோன்பு அனுஷ்டித்ததை காஷ்மீரின் ஆதிகால வரலாற்றைச் சொல்லும் நீலமத புராணத்தில் காணலாம். ஆக காஷ்மீர் முதல் கன்யாகுமாரி வரை மஹாபாரத காலத்திலிருந்தே மார்கசீர்ஷ மாதம் புனிதமானது என்பது உறுதியாகிறது
ஆண்டாளின் காலத்தில் எப்படி கிரக நிலைகள் இருந்தன என்பதையும் கணக்கிற் கொள்ளவேண்டும். இந்துக்களின் பண்டிகைகள் சந்திரனின் நிலையை வாய்த்து அனுசரிக்கப்படுவதால் தீபாவளி கார்த்திகை போன்ற பண்டிகைகளின் காலம் மாறிக்கொண்டே வரும். சூரியனைஅடிப்படையாகக்கொண்ட மகரசங்கராந்தி/ பொங்கல் பண்டிகைகளின் நாட்கள் மாறாது (லீப் வருடம் தவிர)
திருவாதிரை என்பதை இன்றும் மலையாளிகள் ஓணம் பண்டிகை போல பெரிதாகக் கொண்டாடுகிறார்கள்.
ஓணம் எனபது விஷ்ணுவின் நட்சத்திரம் ;ஆதிரை என்பது சிவனின் நட்சத்திரம். இந்த இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழி உண்டு என்று காஞ்சிப் பெரியவர் (1894-1994) சொற்பொழிவில் குறிப்பிட்டதையும் குறிப்பிடுவது பொருத்தம் காஷ்மீர், தமிழ் நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் ஏதோ ஒருவகையில் கொண்டாடப்பட்ட இந்த மாதம் பீடுடை மாதம் என்பதால்தான் கண்ணனும் மாதங்களில் நான் மார்கழி என்றான் போலும்.
FROM MY 2022 ARTICLE
9.MARKAZI
Markazli (maarkali or maarkazi) is considered a very holy month by the Hindus. The month begins when the sun enters the Hindu zodiacal sign Dhanus (Sagittarius).
This is the ninth month in the Tamil calendar. All the South Indian temples open very early in the morning around 4 AM (Brahma Muhurtham) and start the Abhisheka and Aradhana.
Tamil saint poetess Andal’s Thiruppaavai and Tamil Saivite saint Mankikkavaasagar’s Thiruvempaavaai are sung by Tamil Hindus. Temples do broadcast them in the early morning. People get Ven Pongal (spicy rice) and Sarkkarai Pongal (sweet rice) as Prasad.
Bhajan groups go round the towns in the early morning.
My Experience
As a little boy I used to accompany my father in the Bhajan that goes round Madurai city. There were two women Mrs Raajammaal Sundararaajan and Mrs Seetaalakshmi Baalakrishnan who attracted many young girls and trained them in singing Thiruppaavai.
In front of all the Tamil houses one can see beautiful Kolams( rangolis). Kolaattam and Kummi, two Hindu folk dances are performed in public places by young Hindu girls. The belief is that young girls will get good and handsome husbands if they do practise vow/Vrata during this month.
People go to rivers and tanks to take early morning bath. In villages women make cow dung balls and place flowers of Pumpkin in it. It will be in the middle of the kolam/rangoli in front of the houses.
Since it is a cold month, there is a Tamil proverb saying it is not good for the cattle: Maarkali maathak kulir Maadu Makkalukku Peedai (the cold wind of the month Maarkazi gives distress and illness to cattle and people).
.மார்கழி மாதக் குளிர் மாட்டு மக்களுக்குப் பீடை மார்கழி மாதம் என்பது பீடை மாதம் அல்ல ; பீடுடைய = பெருமைமிக்க மாதம் என்ற விளக்கமும் உண்டு.
Maanikkavasagar festival is held in many Shiva temples. Arudra Darisanam of Nataraja /shiva and Vaikunda Ekaadasi are the most important festivals of this month .
All Shiva and Vishnu temples attract lakhs of people during these days.
End of the month comes Bhogi, festival when Hindus clear all unwanted old stuff and make bonfires. It is Pongal eve.
Tamil Hindus don’t celebrate any auspicious event in Purattasi or Markazi. NO marriages take place in this month.
In addition to festivals, Thyaagaraaja Aaaraadhanaa and Kanchi Paramaachaarya Aaaraadhanaa and Ramana Jayanthi are held during this month.
Dhanur Maatha puja in the temples finish on the last day. Some people celebrate Hanumath Jayanthi.
Vishnu temples celebrate 20 days of festival called Pakal Paththu and Raap Paththu ,meaning 10 Days of Day time Pujas and 10 Days of Night Time Puja.
During Arudra Shiva festival and 20 days of Vishnu festival, idols are taken round the town in processions.
Arudra festival, also known as Thiruvaathirai, is celebrated by Malayalees on a grand scale.
A special dish called sweet Kali accompanied with spicy Koottu is made on Arudra day. Hundreds of Pots of buttery Sweet Pongal/ Sarkkarai Pongal is made in Vishnu Temples on the Koodaarai valli day.
A Hindu Panchaangam (almanac) gives al these days in bold letters.
22-12-2024 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா – கதாம்ருதம் அளித்த மகான்! – 2
பரமஹம்ஸரது அறைக்குச் சென்றவுடன் அங்கிருந்த மாஸ்டர் மஹாஷய் எனப்படும் மகேந்திரநாதரை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் பரமஹம்ஸர். அவருடனான உரையாடல் ஆரம்பித்தது. பரமஹம்ஸரோ மௌனமாக இவர்களது உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தார். பின்னர் எம் அங்கிருந்து விடை பெற்றுச் சென்றவுடன் பரமஹம்ஸர் கூறினார்: “அவர் அத்தனை தேர்வுகளையும் பாஸ் செய்து என்ன பிரயோஜனம்? ஆசிரியர் ஒரு பெண்ணைப் போல வெட்கப்படுகிறார். அவரால் அழுத்தமாகவே பேச முடியவில்லை.”
இப்படியாக விவேகானந்தரை இன்னொருவருடன் மோத விட்டு பரமஹம்ஸர் வேடிக்கை பார்த்து மகிழ்ந்தார்.
ஏராளமான சுவையான சம்பவங்கள் எம் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு சங்கடமான தருணத்திலும் குரு தேவர் அவரைக் காப்பாற்றுவதை அவர் கண்கூடாகக் கண்டார். குருதேவர் மீது அவர் அளவிலா பக்தி கொண்டிருந்தார்.
ஒரு சம்பவம் இது.
ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நடத்திய ஷ்யாம் பஜார் கிளையான மெட்ரோபாலிடன் பள்ளியில் அவர் தலைமை ஆசிரியராக நான்கு வருடங்கள் பணியாற்றி வந்தார். 1886ல் ப்ரமஹம்ஸர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆனது. அதனால் அடிக்கடி அவரைப் பார்க்கச் செல்வது எம்மின் வழக்கமானது. இதனால் பள்ளியின் வருடாந்திர தேர்வு முடிவுகள் முந்தைய ஆண்டுகளில் வந்தது போல நன்றாக அமையவில்லை. இதை கவனித்த ஈஸ்வர சந்திர வித்யாசாகர் அவரிடம், “ இப்போது நீங்கள் அடிக்கடி பரமஹம்ஸரை தரிசிக்க காஸிபூர் தோட்டத்திற்குச் சென்று விடுகிறீர்கள். அதனால் தான் தேர்வு முடிவுகள் முன்பு போல இல்லாமல் போய் விட்டது” என்றார். குருதேவரைப் பற்றி அவர் கூறியது எம்மிற்குப் பிடிக்கவில்லை. உடனடியாக தன் வேலையை ராஜிநாமா செய்தார். பரஹம்ஸரிடம் நடந்ததைக் கூறினார். பரமஹம்ஸர், ‘நன்றாகச் செய்தாய் நன்றாகச் செய்தாய்’ என்று கூறினார்.
ஆனால் பதினைந்து நாட்களில் வேலையை விட்டதன் விளைவு அவருக்குத் தெரிந்தது. குடும்பத்தில் அடுப்பு பற்ற வைக்கக் கூட முடியாத சூழ்நிலை. இது பொறுக்காத எம் அங்கும் இங்குமாக தனது வீட்டில் முதல் மாடியில் இருந்த வாரந்தாவில் மூன்று மணி நேரம் நடந்து கொண்டிருந்தார். என்ன செய்வது? குழந்தைகளுக்கு எப்படி நான் சாப்பாடு போடுவேன் என்ற கவலை அவரை வாட்டியது. அப்போது கீழேஇருந்து ஒரு குரல் கேட்டது: மஹேந்திர பாபு இருக்கிறாரா?என்று!
கீழே வந்து வந்தவரைச் சந்தித்த போது அவர் சுரேந்திரநாத் பானர்ஜி கொடுத்த ஒரு கடிதத்தைத் தந்தார். ரிப்பன் காலேஜில் புரபஸராக அவரை நியமிக்க உள்ளதாகவும் அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் கடிதம் கூறியது. அவர் உடனே சென்று அதை ஏற்றுக் கொண்டார்.
இப்படி அவருக்கு அன்றாட பிரச்சனைகளான தீர்வுக்கும் குருதேவர் தான்; ஆன்மீக உபதேசங்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் குருதேவர் தான்.
ஒரு முறை குருதேவர் கீதையில் உள்ள மிதமான சாப்பாடு, மிதமான இயக்கம் பற்றிக் கூறி அதைப் பார் என்றார். சுத்த பக்தி கொண்ட எம் குருதேவர் கூறியதை எல்லாம் கடைப்பிடித்தார். மிக உயரிய நிலையை ஆன்மீகத்தில் அடைந்தார்.
ராமகிருஷ்ண கதாம்ருதம்
மகேந்திரநாதர் ராமகிருஷ்ண கதாம்ருதத்தை முதலில் GOSPEL OF SRI RAMAKRISHNA என்று ஆங்கிலத்தில் 1897ஆம் ஆண்டு வெளியிட்டார்.
வங்காள மொழியில் இதன் முதல் பாகம் 1902லும் இரண்டாம் பாகம் 1904லும் மூன்றாம் பாகம் 1908லும் நான்காம் பாகம் 1910லும் ஐந்தாம் பாகம் 1932லும் வெளியானது.
பின்னால் ஏராளமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது.
இந்த கதாம்ருதத்தை உலகிற்கு அளிப்பதற்காகவே அவர் பிறந்தார் போலும்!
ஐந்தாம் பாகத்தின் முடிவை இரவு ஒன்பது மணிக்கு அவர் எழுதி முடித்தார்.
உடனே அவருக்கு தலைவலி ஆரம்பித்தது.
அவருக்குப் பிடித்த பாட்டை அவர் வாய் முணுமுணுக்க ஆரம்பித்தது;
“ஓ! குருவே! அம்மா, என்னை உன் மடியில் ஏந்திக் கொள்”
1932ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் தேதி சனிக்கிழமையன்று அவர் சமாதி எய்தினார்.
எழுபதாவது வயது முதல் அவர் மிஹிஜம் என்ற இடத்தில் ஒரு குடிலில் வசித்து வந்தார். இரு அறைகள் அங்கு இருந்தன. ஒன்றில் எம் வசித்தார். இன்னொன்று ஸ்டோர் ரூம். வாரந்தாவில் இரு சிறிய அறைகள் இருந்தன. ஒன்று சமையலறை. இன்னொன்று குளியலறை.
இங்கு தனது வாழ்நாள் இறுதி வரை அவர் தன்னைச் சந்தித்த பக்தர்களுக்கெல்லாம் ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றியும் பல அரிய ஆன்மீக விளக்கங்களையும் தந்து வந்தார்.
அன்னை சாரதா தேவியார் 1853ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி அவதரித்தார். அவர் 1920ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் நாளில் சமாதி அடைந்தார்.
பரமஹஸருடனும் அன்னை சாரதா தேவியாருடனும் அருள் பெற்று வாழ்ந்த நாட்களை மஹேந்திரநாதர் புனிதமாகக் கருதினார்.
மிகுந்த வேதனையுடன் அவர் சில சமயம் புலம்புவதுண்டு இப்படி:
“ அடடா! அன்னை போய் விட்டார். 35 ஆண்டுகள் நம்மை பாதுகாத்தார். ஐந்தே வருடங்கள் தான் ஶ்ரீ ராமகிருஷ்ணரின் அற்புதமான தெய்வீக பாதுகாப்பில் இருந்தோம். ஆனால் அன்னை 35 ஆண்டுகள் நம்மை நன்கு வளர்த்தார். அடடா! அவரும் போய் விட்டாரே!”
இதனால் அவர் மனதளவிலும் உடல் அளவிலும் பாதிக்கப்பட்டார்.
தனிமையில் வாழ மிஹிஜம் நோக்கி வந்து அங்கு வாழலானார்.
மஹேந்திர நாதர் இங்கு தன்னைப் பார்க்க வந்த பக்தர்களிடம் பேசியதை எல்லாம் ஸ்வாமி நித்யாத்மனானந்தா M-The Apostle & the Evangelist என்று ஆங்கிலத்தில் இரு பாகங்களாக வெளியிட்டுள்ளார்.
அற்புதமான ஆன்மீக ரகசியங்களை மஹேந்திரநாதர் விளக்கியுள்ளதை இதில் காணலாம்.
எம் எழுதிய ராமகிருஷ்ண கதாம்ருதம் நூல் பரமஹம்ஸரைப் பற்றிய நுட்பமான விஷயங்களை நமக்குத் தரும் போது அவரைப் பற்றிய விவரங்களை ஸ்வாமி நித்யானந்தர் நூலில் நாம் காணலாம்.
பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் ஆகியோரைப் பற்றி நமக்கு எம் அளித்த இலக்கிய கொடையை ஒரு நாளும் நம்மால் மறக்க முடியாது.