ஊத்துக்காடு வேங்கட கவி (Post No.15,272)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,272

Date uploaded in London –   15 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

14-12-2025 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை! 

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே

நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.

 மக்களின் நெஞ்சங்களை அலை பாய வைத்து கிருஷ்ணரின் நர்த்தனங்களிலும் கானங்களிலும் ஈடுபடுத்தி உன்னதமான ஒரு பரவச நிலையை ஏற்படுத்தியவர் யார்?

இந்தக் கேள்விக்கு உடனடியாக பதில் வரும் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் என்று.

 ஊத்துக்காடு வேங்கட கவி என்றும் அறியப்படும் இவர் 1715ம் ஆண்டு ராமசந்திர ஐயர் – கமலநயனி தம்பதிகளுக்கு  மன்னார்குடியில் பங்குனி மாதம் மக நட்சத்திரத்தில் பிறந்தார்.

இவர் ஊத்துக்காடு என்னும் ஊரில் வாழ்ந்தார்.

 ஊத்துக்காடு கிராமம் கும்பகோணத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, கும்பகோணம், பட்டீஸ்வரம் வழியாக கோவிந்தகுடி, ஆவூர் வழியாக ஊத்துக்காடு கிராமத்தை அடையலாம்.

 பழைய காலத்தில் இந்த ஊர் கோவூர் என்ற பெயருடன் விளங்கியது. ஆனால் தண்ணீரே இல்லாமலிருந்த இடத்தில் ஶ்ரீ கிருஷ்ணர் தனது லீலையைச் செய்து ஒரு ஊற்றை உருவாக்கியதால் ஊத்துக்காடு என்ற பெயரைப் பெற்றது.

 பிரசித்தி பெற்ற காளிங்க நர்த்தன பெருமாள் கோவில் இங்கு உள்ளது. ஆகவே இதற்கு தென் கோகுலம் என்ற பெயரும் உண்டு.

 இந்த ஊரில் தான் வேங்கடகவி வாழ்ந்து வந்தார். இளமையிலேயே தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஆழ்ந்த புலமையை இவர் பெற்றார்.

 நீடாமங்கலத்தில் வாழ்ந்த ராஜா பாகவதர் என்பவரிடம் முறையாக இசையைப் பயின்றார்.

 இவரது தாயின் அறிவுரையின் படி ஶ்ரீ கிருஷ்ணனையே குருவாகக் கொண்டு உபாசனை செய்ய ஆரம்பித்தார்.

இவரது தமையனார் காட்டு கிருஷ்ண ஐயர் என்பவர் தஞ்சையை ஆண்ட பிரதாபசிம்மன் அரசவையில் புலவராகத் திகழ்ந்தார்.

அவரே இவரது பாடல்களை ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்தார்.

 ‘இது ஒரு திறமாமோ’ என்ற பேகடா ராகப் பாடலே இவர் முதலாவதாக இயற்றிய கீர்த்தனை ஆகும். பிறகு அற்புதமான எளிய தமிழில் மளமளவென்று இனிய ராகங்களில் சொற்கள் விளையாட ஏராளமான கீர்த்தனைகளைப் புனைய ஆரம்பித்தார்.

சுமார் 246 பாடல்களை இவர் கிருஷ்ணர் மீது இயற்றியுள்ளார். அத்தோடு முருகன் மீது 9, விநாயகர் மீது 6, சிவன் மீது 5, அம்பிகை மீது 12, ராமன் மீது 5, ராதா மீது 4 அனுமன் மீது 1, சரஸ்வதி மீது 1 என்று பாடல்களை இயற்றியுள்ளார்.

அத்துடன்  வால்மீகி, ஜெயதேவர் உள்ளிட்டவர்கள் மீதும் இவர் பாடல்களை இயற்றியுள்ளார்.

 கானடா ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்துள்ள இவரது அலைபாயுதே கண்ணா பாடலைக் கேட்டு ரசிக்காதவர் யாரும் இருக்கமாட்டார்கள். திரைப்படத்தில் கூட இந்தப் பாடல் இடம் பெற்று ஆயிரக்கணக்கானோர மகிழ்வித்தது.

 தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த என்ற ஹம்சத்வனி ராக ஆதி தாளப் பாடலையும்

ஆடாது அசங்காது வா கண்ணா என்ற  மத்யமாவதி ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்த பாடலையும் கேட்காத பக்தர்களே இருக்க முடியாது.

 மிக பிரபலமான ஸ்வாகதம் கிருஷ்ணா மோஹன ராகத்தில் அனைவரையும் மயக்கும் பாடலாகும்.

பால்வடியும் முகம் என்ற பாடல் நாட்டக்குறிஞ்சி ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்த பாடல்.

அசைந்தாடும் மயில் ஒன்று, மாடு மேய்க்கும் கண்ணே என்று இவரது புகழ் பெற்ற பாடல்கள் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 ஹிந்தோளம், ஆரபி போன்ற ஜனரஞ்சகமான ராகங்களில் இவர் பெரும்பாலான பாடல்களை அமைத்த போதும் நீலாம்பரி ராகத்திலும் இவர் பாடல் உண்டு. அபூர்வ தாளமான சங்கீர்ண மட்டிய தாளத்திலும் இவர் பாடல் உண்டு.

ஊத்துக்காடில் உள்ள உற்சவ விக்ரஹமான காளிங்க நர்த்தன கிருஷ்ண விக்ரஹம் அபூர்வமான வியக்க வைக்கும் அமைப்பைக் கொண்டதாகும். இதன் உயரம் சுமார் 30 அங்குலம். காளிங்கனின் தலை மீது கிருஷ்ணர் நடனமாடும் கோலத்தில் இது அமைந்துள்ளது. இந்த விக்ரஹத்தில் கிருஷ்ணரின் இடது கால் காளிங்கனின் தலையைத் தொடவில்லை.  கிருஷ்ணரின் இடது பாதத்திற்கு காளிங்கனின் தலைக்கும் ஒரு நூலை விட்டு எடுக்கும் அளவு மட்டுமே இடைவெளி உள்ளது. கிருஷ்ணர் வலது காலைத் தூக்கியபடி நர்த்தன கோலத்தில் காட்சி அளிக்கிறார். கிருஷ்ணரின் இடது கை கட்டைவிரல் மட்டுமே காளிங்கனின் வாலைத் தொடுகிறது..

 இங்கு தான் கிருஷ்ணரின் அருளைப் பெற்றார் வேங்கட சுப்பையர்.

 வேங்கட சுப்பையரின் ஒரு பாடல் குறிப்பிடத்தகுந்த ஒரு கருத்தை வெளிப்படுத்துகிறது. ‘குரு பாதாரவிந்தமு கோமளமு’ என்ற பாடலில் அவர் கூறுகிறார்: “தான் யாரிடமும் கற்கவில்லை; அனைத்தும் கிருஷ்ணரின் அருளே” என்று குறிப்பிடுகிறார்.

இப்படி இவர் குறிப்பிடுவதால் இவருக்கு அனைத்தையும் அருளியது கிருஷ்ணர் தான் என்பது பக்தர்களின் கருத்தாகும்.

 ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின்  பாடல்களைத் தொகுத்து நீடாமங்கலம் ஶ்ரீ கிருஷ்ணமூர்த்தி பாகவதர் மூன்று பாகங்களாக வெளியிட்டுள்ளார்.

கே.ராஜம்மாள் (நீடாமங்கலம் ஶ்ரீ கிருஷ்ணமூர்த்தி பாகவதரின் மனைவி)

5. எல்லையம்மன் கோவில் தெரு, மேற்கு மாம்பலம் சென்னை 600003

என்ற முகவரியில் இது பற்றிய விவரங்களை அறியலாம்.

இதிலிருந்து 105 பாடல்களைத் தொகுத்து www.projectmadurai.org

இணையதளம் வெளியிட்டுள்ளது. டிஜிடல் பிரதியை இதில் பார்க்கலாம்.

 இவரது பாடல்களில் உள்ள இனிமையான தமிழ் வார்த்தைகளின் இணைப்பையும் அவை தரும் பரவசத்தையும் விளக்க வார்த்தைகளே இல்லை.

ஊத்துக்காடு வேங்கடசுப்பையரைப் போற்றுவோம்; அவர் பாடல்களைக் கேட்டும் பாடியும் இறைவன் திருவருளைப் பெறுவோம்.

நன்றி. வணக்கம்! 

–SUBHAM—

TAGS- ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்

தந்த உலக்கையும், உரலில் ரத்தினைக் கற்களும்! அருணகிரிநாதர் காட்டும் காட்சி!! (Post.15,272)

ஸ்ரீரங்கம் தந்த சிற்பம் , பதினேழாம் நூற்றாண்டு 

Written by London Swaminathan

Post No. 15,272

Date uploaded in London –  14 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழ்நாட்டின் செல்வவளத்தைக் காட்டும் காட்சி ஒன்றினை சங்க காலம் முதல் தற்காலம் வரை காண்பது மகிழ்ச்சி தரும். கலித்தொகையில் கபிலர் வருணித்த காட்சியை அருணகிரிநாதர் திருப்புகழில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் சித்தரித்துள்ளார்.

குருடனைப்  பார்த்து ராஜ முழி முழி’ என்றால் செய்ய முடியாது. அதே போல பிச்சைக்காரனிடம் போய் உனக்கு எவ்வளவு வேண்டும்? என்று கேட்டால் நம்முடைய சக்தியைக் குறைவாக மதிப்பிட்டு, ‘100 ரூபாய் அல்லது ஆயிரம் ரூபாய் தாங்க சாமி’ என்பான். அதாவது மனம் போல மாங்கல்யம். ஆனால் முத்தும் யானைத் தந்தமும் கொழித்த தமிழ் நாட்டில், அந்தக்காலத்தில், தந்த உலக்கையையும் சந்தன மரத்தினால் ஆன உலக்கையையும் பயன்படுத்தினர். கபிலர் கூட குறிஞ்சிக் கலியில் அந்தப் பெண்கள் தானியத்தைக் குத்தத்தான் பயன்படுத்தினர் என்றார். அருணகிரியோ ஒரு படி மேலே சென்று வள்ளி குத்திய உரலில் ரத்தினக் கற்களும் முத்துக்களும் இருந்தன என்கிறார் ; கற்பனை என்று எண்ணி இதை ஒதுக்காமல் அதற்குப் பின்னுள்ள செல்வக் கொழிப்பினை, ஆக்கபூர்வ மனநிலையைக் காண வேண்டும்; முத்தும் தந்தமும் ரத்தினக் கற்களும் இல்லாத நாட்டில் டாffபோடில்ஸ் DAFFODILS போன்ற மலர்களின் அழகினைத்தான் வோர்ட்ஸ்வொர்த் WORDSWORTH போன்ற கவிஞர்கள் பாட இயலும். நாமோ சந்திரனையும் பாடுவோம்; இந்திரனையும் பாடுவோம்; தங்கத்தையும் பாடுவோம் வயிரத்தையும் பாடுவோம்;  அந்த அளவுக்குச் செல்வச் செழிப்பு ! இதோ ஒரு திருப்புகழ்

பாடல், 

இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற்

     றெனக்கியலுக் கிசைக்கெதிரெப் …… புலவோரென்

றெடுத்துமுடித் தடக்கைமுடித் திரட்டையுடுத் திலச்சினையிட்

     டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற் …… றியல்மாதர்

குரக்குமுகத் தினைக்குழலைப் பனிப்பிறையொப் பெனப்புயலொப்

     பெனக்குறுகிக் கலைக்குள்மறைத் …… திடுமானின்

குளப்படியிற் சளப்படுமிப் பவக்கடலைக் கடக்கஇனிக்

     குறித்திருபொற் கழற்புணையைத் …… தருவாயே

அரக்கரடற் கடக்கஅமர்க் களத்தடையப் புடைத்துலகுக்

     கலக்கணறக் குலக்கிரிபொட் …… டெழவாரி

அனைத்தும்வறப் புறச்சுரர்கற் பகப்புரியிற் புகக்கமலத்

     தனைச்சிறையிட் டிடைக்கழியிற் …… பயில்வோனே

கரக்கரடக் களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்தமணிக்

     கழைத்தரளத் தினைத்தினையிற் …… குறுவாளைக்

கணிக்குறவக் குறிச்சியினிற் சிலைக்குறவர்க் கிலச்சைவரக்

     கயத்தொடுகைப் பிடித்தமணப் …… பெருமாளே.

****

திருப்புகழ் விளக்கம் (தமிழிலும் ஆங்கிலத்திலும்    பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம்; கெளமரம்.காம் )

இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன

சொப்பனத்திலும் அற்ற எனக்கு … யாசிப்பவர்களுக்கு மிக்க

இரக்கம் கொண்டு கொடுப்பன என்பது கனவிலும் இல்லை என்று

சொல்லும்படியான எனக்கு,

இயலுக்கு இசைக்கு எதிர் எப் புலவோர் என்று எடுத்து முடித்

தடக் கை முடித்து இரட்டை உடுத்து இலைச்சினை இட்டு …

இயற்றமிழிலோ, இசைத்தமிழிலோ எதிர் நிற்கக் கூடிய எந்தப் புலவர் உள்ளார் என்று மமதையுடன் பாடல்கள் அமைத்து, தலையையும் பெரிய கைகளையும் அலங்கரித்து, ஆடம்பரமான அரை ஆடை, மேல் ஆடைகளை உடுத்து, முத்திரை மோதிரம் அணிந்து,

அடைப்பை இடப் ப்ரபுத்துவம் உற்று இயல் மாதர் குரக்கு

முகத்தினைக் குழலைப் பனிப் பிறை ஒப்பு எனப் புயல் ஒப்பு

எனக் குறுகி … ஒருவர் வெற்றிலைப் பை ஏந்தி வரபெரிய தலைவனின் ஆடம்பரங்களை மேற்கொண்டு, அங்கு வந்து பொருந்திய மாதர்களின்  குரங்கு போன்ற முகத்தை குளிர்ந்த நிலவுக்கு ஒப்பென்றும், கூந்தலை மேகத்துக்கு ஒப்பென்றும் சொல்லி, அணைந்து,

கலைக்குள் மறைத்திடு மானின் குளப்பு அடியில் சளப்பம்

இடும் இப் பவக் கடலைக் கடக்க இனிக் குறித்து இரு பொன்

கழல் புணையைத் தருவாயே … ஆடைக்குள் மறைத்து

வைக்கப்பட்டிருக்கும் மானின் குளம்படி போன்ற பெண்குறியில்

துன்பப்படும் பிறப்பு என்ற கடலை (பவ சாகரம்)  நான் தாண்டி உய்யஇனி

அடியேனாகிய என்னைக் கண் பார்தது, உனது அழகிய திருவடி என்னும் தெப்பத்தைத் தந்தருளுக.

அரக்கர் அடல் கடக்க அமர்க் களத்து அடையப் புடைத்து

உலகுக்கு அலக்கண் அறக் குலக் கிரி பொட்டு எழ …

அசுரர்களின் வலிமையைத் தொலைக்க, போர்க் களத்தில் நன்றாக

அலைத்து அடித்து உலகின் துன்பம் நீங்க, உயரிய கிரெளஞ்ச மலை

பொடிபட்டு உதிர,

வாரி அனைத்தும் வறப்புறச் சுரர் கற்பகப் புரியில் புகக்

கமலத்தனைச் சிறையிட்டு இடைக்கழியில் பயில்வோனே …

எல்லாக் கடல்களும் வற்றிப் போக, தேவர்கள் கற்பக லோகமாகிய

பொன்னுலகில் குடியேற, தாமரையில் வீற்றிருக்கும் பிரமனைச் சிறையில் அடைத்து, திருவிடைக்கழி* என்னும் தலத்தில் பொருந்தி இருப்பவனே,

கரக் கரடக் களிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த

மணிக் கழைத் தரளத்தினைத் தினையில் குறுவாளை …

துதிக்கையையும், மதநீர் பாய்ந்த சுவட்டையும் உடைய யானையின் தந்தமாகிய உலக்கையைக் கொண்டு, தேர்ந்து எடுக்கப்பட்ட ரத்தினங்களையும் மூங்கில் முத்தையும் தினை குத்துவது போல இடித்து விளையாடுபவளான வள்ளியை,

கணிக் குறவக் குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வரக்

கயத்தொடு கைப் பிடித்த மணப் பெருமாளே. … வேங்கை

மரங்கள் உள்ள குறிஞ்சி மலை நில ஊரில் வில்லை ஏந்தும் குறவர்களுக்கு வெட்கம் உண்டாகும்படிகணபதியாகிய யானையின் உதவியோடு கைப்பிடித்த மணவாளப் பெருமாளே.

***

* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது. இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.

***

ஸ்ரீரங்கம் தந்த சிற்பம் , பதினேழாம் நூற்றாண்டு ;Sriranagm Ivory Carving

இந்தப்பாடலில் மேலும் சில சுவையான விஷயங்களை கவனித்து இருப்பீர்கள் ; அதாவது, அந்தக் காலத்தில் பிச்சை எடுக்கும் புலவர்களும் கூட படாடோப ஆடைகளுடன் கையில் கங்கணம் மோதிரத்துடனும் சென்றார்கள் அவர்களுக்கு கூஜா தூக்கும் ஒருவன் வெற்றிலை ப்பெட்டியைச் சுமந்து வருவான் இன்னும் ஒருவன் அவர் துப்பும் வெற்றிலை பாக்கு எச்சிலைப் பெறுவதற்கு ஒரு சட்டியை ஏந்தி வருவான் .

அதற்குப்பின்னர், பணக்காரன் வீட்டுப் பெண்களை ரம்பா ஊர்வசி மேனகா என்று புகழவேண்டும் அதுகளுக்கோ குரங்கு மூஞ்சி !

இன்னும் ஒரு உருவகம்! உனது மரத்தால்ஆன காலணிகளைத் தா ; அவைகளை நான் தெப்பம் போலப் பயன்படுத்தி பிறப்பு இறப்பு என்னும் பவ சாகரத்தைக் கடக்கிறேன் என்கிறார் புலவர்.

***

OLD ARTICLE ON IVORY FIGURES IN INDIA

கேரள யானைத் தந்த சிம்மாசனம் லண்டனுக்கு வந்த கதை! (Post No.5399)

Research article written by by London Swaminathan 

swami_48@yahoo.com

Date: 6 September 2018 

Time uploaded in London – 18-55  (British Summer Time) 

Post No. 5399

—Subham—

Tags- தந்த உலக்கை, உரலில் ரத்தினைக் கற்களும்:, அருணகிரிநாதர், காட்சி, திருப்புகழ் ,பவ சாகரம் 

விண்வெளி அதிர்ச்சியும் அதிசயமும்! (Post No.15,271)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,271

Date uploaded in London –   14 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

27-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

விண்வெளி அதிர்ச்சியும் அதிசயமும்! 

ரஷிய ரேடியோ டெலஸ்கோப்பை உக்ரேன் அழித்ததுஜப்பான் தனது விண்கலத்தைக் குறுங்கோளில் இறக்குவதற்கு முயற்சிக்கிறது! 

ச. நாகராஜன் 

க்ரிமியாவில் ரஷிய ரேடியோ டெலஸ்கோப் அழிந்தது 

க்ரிமியா என்ற தீபகற்பம் உக்ரேனுக்குத் தெற்குப் பகுதியில் உள்ளது.

மலைகள் அடங்கிய இந்த தீபகற்பத்திற்கு உல்லாசப் பயணிகள் வந்து குவிவது வழக்கம். அழகான இயற்கைச் சூழலில் மணல் பரப்புடன் கூடிய இதன் வெப்பநிலை அனைவரையும் ஈர்க்கும் ஒன்று. 

இது 1954ம் ஆண்டில் உக்ரேனுக்கு ரஷியாவால் வழங்கப்பட்டது. ஆனால் 2014ம் ஆண்டு இதை ரஷியா தன் வசம் கைப்பற்றியது.

க்ரிமியாவில் (Crimea)  ரஷியா தனது மாபெரும் ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை அமைத்தது. இது செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களை ஆராயப் பெரிதும் பயன்படுத்தப்பட்டது.

இரண்டாயிரமாவது ஆண்டில் இது அயல்கிரக வாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய முற்பட்டது.  20 தகவல் பாக்கேஜுகள் நான்கு கிரகங்களை நோக்கி அனுப்பப்பட்டன. இந்த இடங்களில் அயல்கிரகவாசிகள் இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டு இவை தேர்ந்தெடுக்கப்பட்டன.

 இந்த தகவல்கள் இன்னும் குறிப்பிட்ட கிரகங்களை அடையவில்லை. ஏனெனில் இவை 20.5 ஒளியாண்டுகள் தள்ளி உள்ள கிரகங்களாகும். க்ளையிஸ் 581 (Gliese 581) என்ற கிரகத்திற்கு பூமியிலிருந்து அனுப்பப்பட்ட செய்தி 2029ம் ஆண்டு தான் சென்று சேரும். ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இது வெனிரா திட்டம் என்ற திட்டத்தின் கீழ் வீனஸ் என்ற சுக்கிர கிரகத்தைப் பற்றி ஆராய பலவேறு திட்டங்களைச் செயல் படுத்தியது.

 230 அடி குறுக்களவு உள்ள RT 70 என்ற இந்த மாபெரும் ரேடியோ டெலஸ்கோப்பை இப்போது உக்ரேன் அழித்து விட்டது. இந்த டெலஸ்கோப்பின் ஆண்டெனா ரஷிய ராணுவத் துருப்புகளுக்கு உதவியாக இப்போது இருந்து வந்தது. எங்கே எப்படி தாக்குதல்களை நடத்தலாம் என்பதற்கு இது தான் வழிகாட்டும். 5000 மெட்ரிக் டன் எடை உடைய இந்த டெலஸ்கோப்பை ராணுவத்திற்கு உதவுமாறு பல மேம்பாடுகளை ரஷியர்கள் செய்தனர்.

 அமெரிக்காவின் ஜிபிஎஸ்-ஸுக்குப் பதிலாக ரஷியாவின் க்ளோநாஸ் (GLONASS) சாடலைட் நாவிகேஷன் அமைப்பு இயங்கி வந்தது. இந்த க்ளோநாஸின் துல்லியத்தை 30 சதவிகிதம் கூடுத\லாக இந்த ரஷிய ரேடியோ டெலஸ்கோப் கூட்டியது.

 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு ட்ரோன் இந்த 50 ஆண்டுக் கால ஆண்டெனா மீது மோதியது. 200 கிலோவாட் ரேடியோ ரிஸீவரின் மீது அது குறி வைத்து மோதவே அது அழிந்தது. இதை 2011ம் ஆண்டு மாஸ்கோ உருவாக்கி மேம்படுத்தியது.

போரின் கொடுமைகளில் இந்த ஆண்டெனா அழிவும் ஒன்று என்பது வெளி உலகம் பரவலாக அறியாத செய்தி!

 ஜப்பானின் புதிய முயற்சி

அடுத்து ஜப்பான் நாட்டின் ஒரு புதிய முயற்சியை விண்வெளி ஆர்வலர்கள் வெகுவாக வரவேற்கின்றனர்.

அது தனது ஹயாபுஸா 2 என்ற விண்கலத்தை ஒரு புது ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியுள்ளது.

அஸ்ட்ராய்ட் KY26 என்பது ஒரு சிறிய குறுங்கோள். இது பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை சுழன்று கொண்டிருக்கிறது இதன் குறுக்களவு 98 அடி மட்டுமே தான் என்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இது 36 அடி குறுக்களவைக் கொண்ட மிகச் சிறிய கோள் என்பது நிர்ணயிக்கப்பட்டு விட்டது.

சிறிய குறுக்களவு, வேகமான சுழற்சி – அடடா, இது தான் ஹயாபுஸா 2 – ஐ இறக்கிப் பார்க்க உகந்த இடம் என்று ஜப்பானிய விஞ்ஞானிகள் சந்தோஷப்படுகின்றனர்.

2031ம் ஆண்டு இந்த முயற்சி வெற்றி பெறும் என்பது விஞ்ஞானிகளின் இப்போதைய கணிப்பு.

சின்னச் சின்ன வெற்றிகளே பெரிய சாதனைக்கு வழி வகுக்கும் என்பது உலகத்தினருக்குத் தெரியாதா என்ன?

ஜப்பானின் முயற்சிக்கு நமது வாழ்த்துக்கள்!

**

Purananuru (Tamil Sangam Book) Wonders- 1 (Post No.15,270)

Written by London Swaminathan

Post No. 15,270

Date uploaded in London –  13 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Tamil Sangam Book Purananuru Wonders- 1

Ancient Tamil Encyclopaedia -41; One Thousand Interesting Facts -Part 41

Item 254

(in the first forty parts we saw many wonders from 30 poems from Akananuru. Let us now look at some poems from Purananuru)

Purananuru (pura naanuuru) is one of the Eight Anthologies, part of Sangam Tamil Literature. It is the most important anthology of Sangam Age. It covers mainly the period between 2nd century BCE and 3rd Century CE. In the Akananuru, we see repeated themes regarding love and family life but in Puranauru we see a great variety of information about Tamil life, which is predominantly Hindu.

புறநானூறு பாடல் 1

The very first poem in the collection is in praise of God added by a later poet. He praised Lord Shiva in the invocation poem and the poet’s name itself is Mahadevan, Lord Shiva’s name! Like Kalidasa, he also added more hymns in praise of Lord Shiva in other Sangam books. This poet also wrote the invocation poems for Natrinai, Ainkurunūru, Akanānūru, and Kurunthokai.

***

255

The wonder is that Lord Shiva’s appearance is described in detail which is used by later poets for another 1500 years!

Shiva wears Kondrai flowers on his head;

He is wearing a Kondrai flower garland as well;

His vahana is white Bull (Rishaba vahana);

His flag is also Bull Flag ( it is seen in all Tamil temples during festive days)

He has blue throat (Neela kantan) which is praised by Brahmins; it is in the Vedas.

256 Man and Woman are equal

He shares half his body with his wife (Ardhanari Concept; Hindus only declared that man and woman are equal)

He has crescent on his forehead;(the worship of crescent moon is seen in several poems of Sangam Age)

Ever flowing water pot is held by him (water is the source of life; he is associated with the River Ganga)

He is doing penance.

Eighteen Types of Ganas/followers praise him

***

257

He is a shelter for ALL living beings (எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,)

The very important line in the poem is Lord (Shiva) is the protector of all living beings; Hindus used to use the cliché from ant to elephant.

The Tamil word is Emam is related to Sanskrit word Kshemam.

***

258

Who are the 18 Ganas? (பதினெண் கணனும் ஏத்தவும் படுமே)
it is very important that Indians should know how the society was classified before foreigners invaded India. Those who came to occupy India and divide Hindu society wrote that this is a land of Aryas, Dravidas and Mundas. Some gangs added the words aborigines, tribes etc. But the original classification is 18 groups and they were

Devas

Asuras

Munis

Kinnaras

Kimpurushas

Garudas

Yakshas

Rakshasas

Gandharvas

Siddhas

Saranas / saarana

Vidhyadharas

Nagas

Bhutas

Vetals

Tara ganas (stars)

Bhogabhumi residents (Heaven)

***

The last two are living in the sky/heaven

‘கின்னரர் கிம்புருடர் விச்சா தரர்கருடர்,

பொன்னமர் பூதர் புகழியக்கர் – மன்னும்,

உரகர் சுரர்சா ரணர்முனிவர் மேலாம்.

பரகதியோர் சித்தர் பலர்;

காந்தருவர் தாரகைகள் காணாப் பசாசகணம்,

ஏந்து புகழ் மேய விராக்கதரோ – டாய்ந்ததிறற்,

போகா வியல்புடைய போகபுவி யோருடனே,

ஆகாச வாசிகாள வார்”

259

The last two groups are very interesting !

They are part of Astronomy and Cosmology.

In the Vana Parva of Mahabharata when Arjuna was taken into a space shuttle to heaven he saw stars and asked the pilot Matali who they were. He replied that they were the holy ones. Hindus believe that holy souls become light and you can travel at the speed of light or faster than light (My apologies to Einstein! ). We see inter galactic travellers like Narada and they are classified as Deva Rishis; Deva= Light.

In Indus Valley/ Harappan symbols we see Fish representing Devas.

***

Tamil original is given below

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்றுஅவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறைநுதல் வண்ணம் ஆகின்றுஅப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே. –புறநானூறு பாடல் 1

–Subham—-

Tags- Purananuru, Poem 1, wonders-1, Ancient Tamil Encyclopaedia -41, One Thousand Interesting Facts -Part 41  , item 259

Vaishnavite Saint’s Warning about Naming Children!(Post No.15,269)

Written by London Swaminathan

Post No. 15,269

Date uploaded in London –  13 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Periyalvar is one of the 12 famous Tamil Vaishnavite saints known as Alvars (aalvaar). He lived in Sri Villipputtur in Tamil Nadu about 1200 years ago. He is advising Hindus about naming children.  He is against using meaningless words in the names just for the sake of rhyme and rhythm. He is also warning us about using names of living human beings just to get some money and garments. He says that if we name our children after God Vishnu, that will prevent us from falling into hell. He also assures us that such naming will take us to Vaikunda, the abode of Lord Vishnu. Another famous poetess and saint Andal (aandaal) was his foster daughter.

(Translation was done by Mrs Kausalya Hart; For more poems, please go to Project Madurai website)

Advising the devotees about naming children with the names of God.

****

381. O poor ones!

You gave your children mean names of the rich

because you wanted to get money,

clothes with decorations and other things from them.

If you give the name of Kesavan and live worshipping him,

the god Nāraṇan will not send

the mothers of your children to hell.

382. O poor ones!

You name your children the names of people

even if they are not good,

because you wish them to give you some clothes.

If you call your children,

“O lovely-eyed Neḍumāl, O Sridhara,”

Nāraṇan will not send

the mothers of your children to hell.

383. Why did you name your children

with the names of those who give you oil

to put on your children’s hair, and give ornaments

and bracelets to decorate them?

Even if you have to live by begging,

you should give your children the divine name of our god Nārāṇan.

If you do, Nāraṇan will not send

the mothers of your children to hell.

384. You will not be blessed in your next birth

if you give that child the name of another person than god.

If you call your child,

“O Madhava, king of heaven, Govinda,”

Naraṇan who is in all hearts will not send

the mothers of your children to hell.

385. You will not be blessed in your next birth

if you give the name of another human

born from an unclean womb.

If you call him, saying, “O Govinda, Govinda!

You have been born in a good family!”

Nāraṇan who does only good things for all

will not send the mothers of your children to hell.

386. Do not give human names to your children

like others joining with the people

of your country and town and celebrating with them

the name ceremony for their children.

Do not fall in the ditch like them.

If you approach the god and worship him saying,

“O Nāraṇa, you destroyed the Asuran when he came as a cart.

You are our chief, O Damodara!”

he will not send the mothers of your children to hell.

387. O, ignorant ones!

Your children are human

and they were born from unclean bodies

and will return to the earth.

You gave them the name of people

and do not realize what you have done is not good.

Think of giving the name of the dark cloud-colored one

who is sweet to the eyes.

Approach Nāraṇan.

He will not send the mothers of your children to hell.

388. If you give your children the names of village people

such as “nambi, pimbi,” those “manbu, pimbu”

will be forgotten in a few days.

If you give them the name of the lovely lotus-eyed lord,

O friends, Nāraṇan will not send the mothers of your children to hell.

389. Giving the name of the dark cloud-colored god

to your children born in an unclean body

is like pouring nectar into a dirty ditch.

But if you wear the nāmam

and dance and sing the praise of Nāraṇan

who is never false to his promises,

he will not send the mothers of your children to hell.

390. Vishṇuchithan from the ancient village of Veeraṇai,

is praised by all, always,

and he worshipped the divine name of Thirumāl.

He composed ten beautiful Tamil pāsurams about how people

should name their children with the names of the god.

If devotees recite these ten beautiful pāsurams

they will go to the divine splendid Vaikuṇṭam

and stay there happily forever.

–suham—

Tags- Perialvar, naming, children, Hell, Vaikund, Vishnu , Vaishnavite

கண்ட பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டாதீர்கள்: பெரியாழ்வார் எச்சரிக்கை (Post.15,268)

Written by London Swaminathan

Post No. 15,268

Date uploaded in London –  13 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பிள்ளைகளுக்கு ,குழந்தைகளுக்கு, அரசியல் தலைவர்களின் பெயர்களையோ, நடிகர், நடிகையர் பெயர்களையோ சூட்டக்கூடாது. இறக்கும் தருணத்தில் இறைவன் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடும் வகையில், தெய்வீகப் பெயர்களை வைக்கவேண்டும் என்கிறார் பெரியாழ்வார்

இதோ சில சுவையான பாசுரங்கள்:

1

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -4-6—

காசும் கறை யுடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்

ஆசையினால் அங் கவத்தப் பேரிடும் ஆதர்காள்

கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ

நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்.

பதவுரை

காசுக்காகவும் பார்டர் BORDER  போட்ட ஆடைகளுக்காவும் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் அறிவிலிகளே! கேசவன், நாராயணன் பெயர்களை சூட்டினால் நீங்கள் நரகத்துக்குள் விழமாட்டீர்கள் .

ஆதர்= குருடர்க்கும், அறிவில்லாதார்க்கும் பெயர்:

(இக்காலம் போலவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் ஒரு கூலிப்பட்டாளம் இருந்ததை அறிய முடிகிறது)

****

2

அங்கொரு கூறை அரைக்குடுப்ப தனாசையால்

மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள்

செங்க ணெடு மால் சிரீதரா என்று அழைத்தக்கால்

நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-2-

மானிட சாதி பேர் இடும் ஆதர்காள் (குருடர்களே)!

ஒரு உடுப்புக்காக பெயர் வைக்காதீர்கள்

ஸ்ரீதரனே! என்று பெயர் வைத்து அழைத்தீர்களாகில்

நாராயண நாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய

தாயானவள் நரகம் புகார்

***

3

உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து

எச்சம் பொலிந்தீர்காள் எஞ்செய்வான் பிறர் பேரிட்டீர்

பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே

நச்சுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-3-

தலையிலும் கையிலும் அணியும் ஆபிராணங்களுக்காக பெயர் வைக்காதீர்கள்; பிச்சை எடுக்க நேரிட்டாலும்

பெருமாளின் திரு நாமத்தையே சூட்டுங்கள்

***

4

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை

மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக் கில்லை

வானுடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால்

நானுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-4-6-4-

மானிட சாதியில் உண்டான ஒரு மனிதனின் பெயரைச் சூட்டினால் மறுமைக்குப் பலனில்லை;மாதவா, கோவிந்தா என்று பெயர் வைத்தால் அவனுடைய அன்னை, நரகத்துக்குப்  போகமாட்டாள்

***

5

மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல வூத்தையை

மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கில்லை

குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்

நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-5-

நம்முடைய சரீரம் அழுக்குடைய ஊத்தை ; அந்த ஊத்தைக்கு இன்னுமொரு ஊத்தையின் பெயரை வைக்காதீர்கள் .கோவிந்தா கோவிந்தா என்று பெயர் சூட்டி அழைத்தால் அவனுடைய அன்னைக்கு நற்கதி கிட்டும்

****

6

நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு

கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே

சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று

நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-6-

மானிடர் பேர் இட்டு ஒளி மழுங்கி குழியிலே வழுக்கி விழாதீர்கள் . சகடாசுரனை  அழித்த தலைவா, தாமோதரா என்று கூப்பிடுங்கள்  ; தாய்க்கு நரகம் வராது

***

7

மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு அங்கு

எண்ண மொன் றின்றி யிருக்கும் ஏழை மனிசர்காள்

கண்ணுக் கினிய கரு முகில் வண்ணன் நாமமே

நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-7-

மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டுத் திரியும் அறிவு குறைந்தவர்களே  ,கண்ணன் நாமத்தையேயிடுங்கள்

***

8

நம்பி பிம்பி யென்று நாட்டு மானிடப் பேரிட்டால்

நம்பும் பிம்பு மெல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம்

செம் பெருந் தாமரைக் கண்ணன் பேரிட்டழைத் தக்கால்

நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-8-

நம்பி என்றும் பிம்பி என்றும் பொருளற்ற பெயர்கள் வேண்டாம்; கண்ணன் நாமத்தை இட்டு

அழைத்தால் அவன் தாய்க்கு நரகம் கிடைக்காது (ஸ்ரீவைகுண்டமே புகுவாள்)

***

9

ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள்

மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேரிட்டு

கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ

நாத்தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-9-

அசுத்தமானதொரு குழியிலே அம்ருதம் பாய்ந்தாற்போலே

உங்களுடைய அசுத்தனான பிள்ளைக்கு, எம்பெருமானுடைய திருநாமத்தை நாமகரணம் பண்ணி, அதனாலுண்டாகும் ஆநந்தத்  தோடு கூத்தாடிக் கொண்டு திரியுங்கள்

****

10

சீரணி மால் திரு நாமமே யிடத் தேற்றிய

வீரணி தொல் புகழ் விட்டு சித்தன் விரித்த

ஓரணி யொண் தமிழ் ஒன்பதோடொன்றும் வல்லவர்

பேரணி வைகுந்தத்து என்றும் பேணி யிருப்பரே–4-6-10-

கல்யாண குணங்களை ஆபரணமாகவுடைய திருநாமத்தையே இந்திரியங்களை வெல்லும்  வீரப் பாட்டை ஆபரணமாக வுடைய,  சாச்வதமான கீர்த்தியை யுடைய , பெரியாழ்வார் விரிவாக அருளிச் செய்தார்.    கற்பார்க்கு ஒப்பற்ற ஆபரணம் போன்றவையும், அழகிய தமிழ்ப்மொழியிலுமுள்ளவையும் ஆன இப் பத்துப் பாட்டுக்களையும் துதிப்போர் ஸ்ரீவைகுண்டத்தில்  எந்நாளும்  வாழ்வார்கள்.

–SUBHAM—

TAGS- பிள்ளைகளுக்கு , குழந்தை , பெயர், நாமகரணம் ,பெரியாழ்வார், எச்சரிக்கை, நரகம்

சமீபத்திலே ஏதாவது டீ கேட்டயா? க்ளாக் இட்! (Post.15,267)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,267

Date uploaded in London –   13 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

19-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

சமீபத்திலே ஏதாவது டீ கேட்டயாக்ளாக் இட்!

ச. நாகராஜன்

அமெரிக்காவில் இந்த வாரம் (2025 செப்டம்பர் மூன்றாம் வாரம்) அல்லோலகல்லோலப்பட்ட விஷயம் என்ன தெரியுமா?

நீ சமீபத்திலே ஏதாவது டீ கேட்டயா? (HAVE YOU HEARD ANY GOOD TEA LATELY)

டீயைக் குடிப்பது நமக்குத் தெரியும். அது என்ன டீயைக் கேட்பது? மண்டை குழம்புகிறதில்லையா?

இதே போலத் தான் ஆயிரக்கணக்கான அமெரிக்க பெற்றோர்களின் மண்டை குழம்பியது.

தங்களது டீன் ஏஜ் பெண்களும் வாலிபர்களும் ரகசியமாகப் பேசுவதை (ஒட்டுக்) கேட்ட பெற்றோர்கள் கவலை அடைந்தது நியாயம் தானே!

அவர்கள் கூகிளை அலசினார்கள்;  விவரம் தெரிந்த பலருடன் பேசினார்கள்.

அப்புறம் தான் தெரிந்தது. டீ என்றால் வம்பு வதந்தி என்றும் ஒருவரைப் பற்றிய அந்தரங்க விஷயம் என்றும் இந்தக் காலத்தில் அர்த்தமாம்.

இன்ஸ்டாகிராம், ஸ்நாப்ஷாட், டிக்டாக்கிலிருந்து எல்லா சோஷியல் மீடியாக்களிலும் அந்தரங்கமாகப் பேசும் போதும் அவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தை டீ!

டீ என்பது கொச்சை மொழியில் வழக்கில் வந்து விட்ட வார்த்தை!

வம்பு பேசும் அந்தரங்கத் தோழிகள் சுவாரசியமான வம்பு பற்றி இந்த டீ வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்!

“அடீ! ஏதாவது டீ உண்டா?

“உண்டுடீ! சாராவும் ஜானும் ப்ரோக் அப். அவன் அவளை ஏமாத்திட்டான்.

“ஐயோ! அப்ப எல்லார்கிட்டயும் இந்த டீயைச் சொல்லிடு”

“இதை விட வேறென்ன வேலை எனக்கு. நீயும் பத்து பேர் கிட்ட உடனே சொல்லிடு”

இது தாங்க உதாரணம்!

2016 வாக்கில் இது வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இப்போது முழு வேகத்தில் டீயை எங்கும் ‘குடிக்க’ ஆரம்பித்தார்கள். சாரி, டீயை எங்கும் கேட்க ஆரம்பித்தார்கள்.

அது சரி அது என்ன க்ளாக் இட்!

இதையும் சின்னக் குழந்தைகள் முதற்கொண்டு தங்கள் நண்பர்களிடையே பேசுவதைக் கேட்டு பெற்றோர்கள் பயந்து போனார்கள்.

க்ளாக் இட் என்றால் உடனே சொல் என்று அர்த்தம்; அதாவது கொச்சையாக சொல்லப் போனால் “கக்கிடு”.

டிக்டாக்கில் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தை இது.

யாராவது உண்மையை மறைத்தாலோ, பொய் சொன்னாலோ உடனே சொல்லப்படும் வார்த்தை தான் க்ளாக் இட்.

க்ளாக் தட் டீ என்றாலும் அதே அர்த்தம் தான்!

“சாரா சொன்னாள் அவளோட ஆளோட அவள் பாரிஸ் போகப் போறாளாம். செலவெல்லாம் அவனோடதுதானாம்”

“அட சே,  க்ளாக் இட். ஏன் அவள் இப்படியெல்லாம் பொய் சொல்றா?!”

இது ஒரு உதாரணம் தான்! இன்னும் பல விதங்களில்  ஜென் ஆல்ஃபா குழந்தைகள் இதைத் தங்கள் வார்த்தையாகவே ஆக்கிக் கொண்டார்கள்.

இதையெல்லாம் இந்த வாரம் தெரிந்து கொண்ட பின்னர் தான் இளம் தாய்மார்களும் அப்பாமார்களும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.

காலம் மாறுகிறது. நாமும் அவர்களோடு மாறி பலவற்றைக் கற்க வேண்டியது தான்!

நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் (What are you doing) என்பதை WYD என்று இவர்கள் சொல்கிறார்கள்.

அதாவது இந்த WYD பல அர்த்தங்களில் இவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

சில உதாரணங்கள் கொச்சை மொழியில் இதோ:

என்ன நடக்குது அங்கே?

என்ன வேலைல நீ இப்ப இறங்கி இருக்க?

உன்  மனசிலே நீ என்ன தான் நினைச்சுகிட்டு இருக்க?

தன் மனதில் இருக்கும் திகைப்பையும் பயங்கரத்தையும் நம்பமுடியாமல் இருப்பதையும் வெளிப்படுத்தவும் இந்த

WYDயை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்!

இப்படியே போனால் இன்னும் பல புதிய வார்த்தைகளின் அர்த்தங்களை நாம் உள்ளது உள்ளபடி தெரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் உள்ள பெற்றோர்கள் இவற்றை எல்லாம் இந்த வாரம் அறிந்து கொண்டு புன்முறுவல் பூக்கிறார்கள் – தங்கள் வாரிசுகளின் புதிய மொழிப்புலமையை அறிந்து!

உலகம் முழுவதுமுள்ள பெற்றோர்களும் இதை அறிந்து கொள்ள வேண்டியது நியாயம் தானே!

அட, இதப் படிச்சீங்களே!   “ஏதாவது டீ உண்டா?, க்ளாக் இட்!

***

GNANAMAYAM 14 December 2025 BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer – Mrs Jayanthi Sundar Team

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND and LATHA YOGESH from London present World Hindu News in Tamil

****

Alayam Arivom presented by Brahannayaki Sathyanarayanan from Bangalore

Topic- Madurai Koodal Azakar Temple

****

SPECIAL EVENT-

INTERVIEW WITH MRS BHANUMATHI RAVI, 

AUTHOR, WRITER FROM SINGAPORE.

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 14th December 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் —  திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும்  லதா யோகேஷும் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் — சொற்பொழிவு—

பிரஹந்நாயகி சத்தியநாராயணன்- பெங்களுர்

தலைப்பு — மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவில்

****

சொற்பொழிவு : திரு எஸ் நாகராஜன்

தலைப்பு : ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

சிங்கப்பூர் கவிஞருடன் பேட்டி

திருமதி பானுமதி ரவி , சிங்கப்பூர் எழுத்தாளர், கவிஞர், நூலாசிரியர்,

—subham—

Tags-Gnanamayam Broadcast, 14-12- 2025, programme,

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-25; இந்துமத கலைச்சொல் அகராதி-25 (Post.15,266)

Written by London Swaminathan

Post No. 15,266

Date uploaded in London –  12 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Part 25 (given in English Alphabetical order- A,B,C,D…….)

Dh words

தனுர் வேதம் இது ஆயுதக் கல்வி இராணுவ பயிற்சி துரோணர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இத்தகைய பயிற்சியை தந்தார்.

Dhanur Veda

Ancient military training given to Kshatrias, warrior class in Hindu community. Drona was one of the famous teachers.

***

தாரணம் மனதை ஒருமுகப்படுத்தல்; எட்டு வித நியமங்களில் இதுவும் ஒன்று மனத்தை உள்முகமாக திருப்பி இறைவனை நினைப்பது.

Dharana

Concentrating mind on a particular thing, particularly God. It is one of the Eight Yoga practices called Ashtanga Yoga ( eight limbs of Yoga)

***

தர்மம் ஒருவர் பின்பற்றப்பட வேண்டிய விதிகள் குறிப்பாக சமய சம்பந்தமான விதிகள் அதை பின்பற்றுவது தர்மம் நியாயத்திற்கு எதிரான எந்த செயலும் அதர்மம். இதை கடமைகள் என்றும் சொல்லலாம். தர்மம் என்பது கால, தேச, வர்த்தமானத்துக்கு ஏற்ப மாறும் என்று இந்துக்கள் கூறுகிறார்கள்; ஸ்ம்ருதி என்னும் சட்டத்துக்கு கீழ்ப்படி ; அதற்கடுத்தபடியாக அக்காலத்தில் வசிக்கும் பெரியோர்களின் சொற்களைக் கேள் ; அவை இல்லாத இடத்தில் மனச் சாட்சிக்குக்  கீழ்ப்படி என்பது இந்து தர்மம் .

Dharma

In short virtue, law, religious duty, moral truth according to Hindu scriptures.

There is equivalent word in Western culture. Tamils translated it as Aram. It is the Dos and Don’ts in Hinduism. No one should violate the accepted rules. Hindus agree that it can change according to location/geography, time/period, caste and circumstances. First rule is to follow the Smritis/Hindu law books; second rule is to seek the advice of elders in that period. In the absence of the above obey your conscience. These are the duties.

***

தன்வந்திரி

மருத்துவத்தின் தந்தை ; கடல் கடைந்தபோது அமிர்த பானத்துடன் உதித்தவர்; விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார்; ஆயுர்வேத நூல்களை அளித்தவர். இவர் பெயரில் பல நூல்கள் உள்ளன. தமிழ் நாட்டில் பல கோவில்களில் இவருக்கு தனி சந்நிதி உண்டு; குறிப்பாக வைத்தீஸ்வரன்  கோவிலிலுள்ள சிலைக்குப் பக்தர்கள் அர்ச்சனை செய்கிறார்கள். உடலில் வரும் நோய்களைத் தீர்க்க இவரைக் குறித்த மந்திரங்களும் இருக்கின்றன; நான்கு கைகளுடன் வடிக்கப்படும் இவருடைய சிற்பங்களில் சங்கு , அமிர்த கலசம், ஆயுர்வேத நூல், மூலிகை காணப்படும். சில இடங்களில் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை அல்லது சக்கரமும் காணப்படுகின்றன. விஷ ரத்தத்தை அகற்ற இந்திய மருத்துவர்கள் அட்டைப்பூச்சியைப் பயன்படுத்தியதை மருத்துவ நூல்களில் காணலாம் .

Dhanwantri or Dhanwantari

Father of medicine. He came from the milky ocean when Devas and Asuras churned it to bring out amrita. Dhanwantri appeared there bearing in his hand the cup of Amrita. Dhanvantari revealed Aayurveda to Susruta which he learnt from Brahma. He is a form of Vishnu and is found generally in the company of Asvins. He holds a pot of nectar/ amrita in his hands.

***

திருதராஷ்டிரன்

சங்க இலக்கியத்தில் இவர் பெயர் உள்ளது; வியாசருக்கும்  அம்பிகாவுக்கும் பிறந்தவர்; ஹஸ்தினாபுர மன்னன்; துரியோதனன் மற்றும் 99 சகோதரர்களின் தந்தை;  காந்தாரி என்பவளை மணந்தார்; கணவர் பிறவிக் குருடர் என்பதால் அவளும் வாழ்நாள் முழுதும் கண்களைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தாள். அந்தகர் ஆனதால் துரியோதனன் சொல்வதைக் கேட்டு பாண்டவர்களைக் காட்டுக்கு அனுப்பினார்; மஹாபாரத யுத்தம் நடந்தபோது, தேரோட்டி சஞ்சயன், அவருக்குப்  போர்க்கள நிகழ்ச்சிகளை  உரைத்தான்; அதன் மூலம் நமக்குப் பகவத் கீதை நூலும் கிடைத்தது; போருக்குப்  பின்னர் யுதிஷ்டிரர்  ஆண்டபோதும் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டது; மிகவும் வயதானபோது வானப்பிரஸ்த ஆஸ்ரமத்தை அனுஷ்டிக்க வனத்துக்குச் சென்றனர். அங்கு காந்தாரியும் திருதராஷ்டிரனும் காட்டுத் தீயில் கருகி  மாண்டனர் 

DHRTARASHTRA

King of Hastinapura, father of Duryodhana and 99 brothers. He was born blind and so his wife Gandhari also remained blind folded throughout her life. His father was Krishna Dwaipayana  Vyasa and his mother was Ambika.

He acted through the sceptre of Duryodhana and banished Pandavas to the forest. During the Mahabharata war, Sanjaya , his charioteer, related the happenings on the battlefield. Through Sanjaya, we got Bhagavad Gita , the conversation between Arjuna and Krishna. After the war Yudhisthira ruled but all respects were shown to him. When they were too old both Dhritarashtra and Gandhari went to the forest where they perished in a forest fire.

***

தூம கேது

வால் நட்சத்திரம்;  தூமகேது என்றால் புகைக் கொடி; இது தோன்றினால் மன்னருக்கு ஆபத்து என்று அக்கால மக்கள் நம்பினார்கள்; சங்க இலக்கியம் முதல் ஷேக்ஸ்பியர் கால நாடகங்கள் வரை இந்த நம்பிக்கை இருந்தது.

DHUMAKETU

Comet is called Smoke flag in Sanskrit. People believed that its appearance in the sky will cause harm to the king. We see this belief from Sangam Tamil literature to Shakespearean plays.

***

தனஞ்செயன்

அர்ஜுனனின் பெயர் ; அவன் யதிஷ்திரரின் ராஜ சூய யாகத்துக்காக பல நாடுகளை வென்று தனத்தை ஜெயித்துக் கொண்டு வந்தான்.

DHANANJAYA

Arjuna’s another name. He won lot of wealth from the northern countries during Yudhishthira’s Raja Suya Yagam Dhanam means wealth Jeyam means Victory or conquering

***

துருவன்

வடக்கிலுள்ள துருவ நட்சத்திரத்துக்கு ஒரு சிறுவனின் பெயரை இந்துக்கள் சூட்டினார்கள். இதன் பின்னால் ஒரு கதைஉண்டு உத்தானபாதனனுக்கு இரண்டு மனைவிகள். ஒருவள் சுருசி, இன்னும் ஓருத்தி சுநீதி;  மன்னனுக்கு சுருசியின் மேல் ‘ருசி’ அதிகம் அதனால்  அவளுக்குப் பிறந்த உத்தமனை மட்டும் கொஞ்சினான்; அரசுக்கட்டிலில் ஏறி விளையாட அனுமதித்தான்.  சுநீதிக்குப் பிறந்த துருவனைக் கொஞ்சவில்லை  ; அவனை சிம்மாசனத்தில் ஏறி விளையாடவும் அனுமதிக்கவில்லை; அவன் சொன்னான், நான் இறைவனைத் துதித்து இதைவிட உயரத்தில் இருப்பேன் என்று; அவனது தவத்தை மெச்சிய விஷ்ணு அவனை துருவ நட்சத்திரமாக மாற்றினார் காம்பஸ் என்னும் திசை காட்டும் கருவி இல்லாத காலத்தில் இந்த துருவ நட்சத்திரம்தான் மாலுமிகளுக்குக் கடலில் வழிகாட்டும் அடையாளமாகத் திகழ்ந்தது. 

DHRUVA

It is pole star. The star is named after the boy Dhruva who was the son of uttanapada and suniti. Uttanapada’s favourite wife was Suruchi. Her son uttama had favourable treatment in the palace and so Dhruva went away and prayed to Lord Narayana. He raised him to the sky and made him the pole star. In the olden days, pole star helped the sailors to find the direction.

***

DI words

திக் கஜங்கள்

எட்டு திசைகளைக் காக்கும் யானைகளுக்கு அஷ்ட திக் கஜ ங்கள் என்று பெயர்; அவை :ஐராவத,  புண்டரிக, வாமன, குமுத, அஞ்சன, புஷ்பதந்த, ஸர்வபெளம,  சுப்ரதீக.

Dig gajas

The elephants who protect the eight points of the compass; they are

Airavata ,Pundarika, Vamana, Kumuda, Anjana, Pushpadanta, Sarvabhauma,

Supratika,

***

திக் விஜயம்

எட்டு திசைகளிலும் உள்ள எதிரிகளை வெல்வதற்காக எட்டு திசைகளுக்கும் செல்வது திக்விஜயம். அதில் வெற்றி பெறுவது முக்கியம். ஆதி சங்கரர் இந்தியாவின் நாலு மூலைகளுக்கும் சென்று பிற சமயத்தினரை வாதில் வென்றார் இதை சங்கர திக்விஜயம் என்று  நூலாகத் தொகுத்துள்ளனர். மதுரையை ஆண்ட மீனாட்சி, சிவபெருமானை வெல்லும் நிகழ்ச்சியில் தோல்வியுற்று இறுதியில் அவரைக் கல்யாணம் செய்துகொண்டார் . இந்த மீனாட்சி கல்யாணத்துக்கு முன்னர், மதுரையில் மீனாட்சியின் திக் விஜயம் சிறப்பாக நடைபெறும்.

Dig Vijaya

Conquest of the regions of the world. Four of the five, Pandavas did this and made his eldest brother Yudhishthira a universal king. Adi Sankara did visit four corners of India and won scholars of other faiths in debates. His travels and conquests are under Sankara dig Vijaya. Madurai temple conducts Meenakshi Dig Vijaya event  just before Meenakshi’s wedding with Lord Siva.

***

திக் பாலகர்கள்

ஏற்க்கனவே அஷ்ட திக் பாலகர்கள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது

Dik palaka – please see under ashta dik palaka.

***

Diwali / deepaavali

தீபாவளி

தீபாவளி என்றவுடன் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல்இனிப்புப் பலகாரங்கள் விநியோகம் பட்டாசு மத்தாப்பு வெடித்தல்புத்தாடை அணிதல் கோவிலுக்குப் போதல்  நினைவுக்கு வரும்

தீபாவளி பண்டிகையைக்  கொண்டாடுவதற்கான்  காரணங்கள்

1.கிருஷ்ண பரமாத்மா, நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற நாளை நினைவுபடுத்தி தீபாவளையைக் கொண்டாடுகிறோம்.

2.தீபம் என்றால் ஒளி விளக்கு, ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்துக் கொண்டாடுவதால் தீபாவளி.

3.தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது லெட்சுமி தேவி வெளிவந்த நாள் இது.

4.ராமபிரான், ராவணனைக் கொன்று சீதையை மீட்டு அயோத்திக்குத் திரும்பிய நாள் இது.

5.பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசத்தை முடித்த நாள் இது.

6.சமண தீர்த்தங்கரில் ஒருவரான வர்த்தமான மஹாவீரர் நிர்வாணம் எய்திய நாள். ஆகையால் சமணர்களுக்கும் புனித நாள் இது.7.சீக்கியர்களின் பொற்கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் இது. அனைவரும் குருவின் ஆசிர்வாதம் பெற வருமாறு குரு அமர்தாஸ் அறைகூவல் விடுத்த நாள் இது. ஆகையால் சீக்கியர்களுக்கும் புனித நாள்.

8.ஆர்ய சமாஜ ஸ்தாபகர் சுவாமி தயானந்த சரஸ்வதி சமாதி எய்திய நாள் இது.

9. இந்து மன்னர்களில் மிகவும் புகழ்பெற்ற விக்ரமாதித்தன் சிம்மாசனம் ஏறிய நாள் இது.

10.குஜராத்திகளுக்கும் வணிக சமூகத்தினருக்கும் புத்தாண்டும் புதுக் கணக்கு துவங்கும் நாளும் இது.

11. லெட்சுமி பூஜை குபேர பூஜை நடக்கும் நாள் இது.

கடின உழைப்பின் மூலமே இருள் அகன்று ஒளி தோன்றும் என்பதே தீபாவளியின் கருத்து.

வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை நான்கு நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. தன திரயோதசி முதல் பலி ப்ரதிபதா என்ற நிகழ்வு வரை 4 நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள்.

இது தவிர மேலும் இரண்டு நாட்களும் முக்கியத்துவம் பெறுகிறது. அவை கோவத்ஸ துவாதசி,  யமத்விதீயா என்ற 2  நாட்கள் ஆகும்.

வட இந்தியர் கணக்குப்படி ஐப்பசி மாதத்தின் (கிருஷ்ண பக்ஷம்) இருண்ட பகுதியும், கார்த்திகை மாதத்தின் ஒளிமிக்க பகுதியும் (சுக்ல பக்ஷமும்) தீபாவளிப் பண்டிகை ஆகும் .

நாட்டின் பல பகுதிகளில் அமாவாசை முதல் அடுத்த மாதம் துவங்கிவிடுவதால் ஐப்பசி-கார்த்திகை தீபாவளி மாதம் ஆகும்..

***

DIWALI/ DEEPAVALI (deepaavali) ‘Deepa’ means light or lamp, ‘aavali’ means a row. Deepavali means a ROW OF LIGHTS. It is Festival of Lights. Diwali is the spoken form of the word Deepavali.

We celebrate the Victory of Good over Evil. Good is light and Evil is darkness. It is the most famous festivals of the Hindu festivals. In some parts of India, they celebrate it for four days.

 The reasons for celebrating Deepavali.

1.        Lord Krishna Killed a demon called Narakasura. So we call that day Naraka Chathurdasi, literally Naraka’s 14th day.

2.        Goddess Lakshmi came out of the Milky ocean when Devas and Asuras churned the ocean for Amrutha, i.e. ambrosia

3.        Rama returned to Ayodhya after defeating Ravana of Sri Lanka who abducted Rama’s wife Sita.

4.        Pandavas came out of the forest after their 12 year banishment. So to celebrate all these things they decorated the houses and streets with row of lamps. The reason being, it was Amavasya-new moon day where there was no light. Most of other Hindu festivals fall on Full Moon day, so there is natural moon light. We have to remember there was no electric light thousands of years ago.

5.        Jains also celebrate Diwali, because one of the greatest Thirthankaras, Mahavira, a contemporary of Buddha, attained Niravana- equivalent to Hidnu Yogi’s Samadhi on a Diwali day.

6.Sikhs also celebrate Diwali because the foundation for Golden Temple in Amritsar was laid on the day. Guru Amardas called all Sikhs to get Gurus’s blessings on that day, like Hindu’s Vyasa Purnima. One of the ten Sikh gurus Hari  Govinda Sing was released from imprisonment by Mughal emperor Jehangir on that day.

7.Arya Samaj followers consider it a holy day because its founder Dayananda Sarswati attained Samadhi on that day.

8.There are many more reasons. Greatest of the Hindu Kings Vikramaditya was crowned on a Diwali day.

9.For Gujaratis and other business men it is a NEW YEAR DAY. They start their Financial year on that day.

Lakshmi Puja and Kubra Puja are conducted during the four day celebrations. Gujaratis heap food and sweets like mountains in a festival called Annakut festival.

Most of the Hindu festivals are based on Lunar Calendar. That is, they are based on the movements of Moon. Diwali is one of them.

AIPPASI is the seventh month in Tamil calendar. When sun enters zodiac sign Tulaa Raasi (Libra), Aippai begins. Asweena is the Sanskrit  name. Since Hindu month begins on New Moon day/Amavasyai for people living in the north, sometimes it is written as Kartikai  month, which comes next to Asweena/Aippasi. Deepavali  is celebrated in this month.

Next day of Deepavali is new moon day Amavasai. Tamils celebrate it only for two days: Diwali day and the previous night. But in North India it is celebrated for five days.

Hindus celebrate it with doing fire works and wearing new clothes after oil bath in the very early morning. They distribute sweets and visit elders. They worship god at home or go to temples. New year starts for Gujaratis; Kethaara Gowri Vratham is observed by some people. North Indians arrange row of lights during Diwali, but Tamils do the same thing during the next month Karthikai (kaartigai)

—Subham—

Tags- Hindu Dictionary, Part 25, Deepavali, Diwali, Dhanvantri இந்துமத கலைச்சொல் அகராதி-25, தன்வந்திரி ,தூம கேது ,துருவன்

பதினோரு குண்டர்கள் யார்? அருணகிரி நாதர் பட்டியல் !! (Post .15,265)

Written by London Swaminathan

Post No. 15,265

Date uploaded in London –  12 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழ் நாட்டில்  குண்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை சிறையில் அடைக்க முடியும் .கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசைப் பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகள் என்று சமுக விரோத செயல்களில் ஈடுபடுவோரை சிறைக்குள் தள்ள இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

நகர்ப்புறங்களில் காவல் துறை ஆணையரும் கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்கள்.

இது சமீப காலத்திய சட்டம். ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன்னரே குண்டர்கள் யார் என்று அருணகிரிநாதர்  திருப்புகழில் பாடிவிட்டார்; .அவருக்கு அதிகாரிகளைவிட கடவுள் மீது நம்பிக்கை அதிகம் ;  ஆகையால் அவர்களை நரகத்துக்குள் விழுவோர் பட்டியலில் அவர் சேர்த்துவிட்டார் ; சிறைக்குள்ளிருந்து ஒருவர் தப்புவது  எளிது; ஆனால் நரகத்திலிருந்து தப்பிக்க முடியுமா? சிந்தித்துப் பாருங்கள்.

இதோ அருணகிரி நாதரின் திருப்புகழைப் படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்

……… பாடல் ………

தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்

     ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்

          சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் …… பெரியோரைத்

தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள்

     ஈவது கண்டுத கைந்த குண்டர்கள்

          சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் …… தொலையாமல்

வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள்

     நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள்

          மானவ கந்தைமி குந்த குண்டர்கள் …… வலையாலே

மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்

     தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்

          வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி …… விழுவாரே

ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும்

     வாலியு மம்பர மும்ப ரம்பரை

          ராவண னுஞ்சது ரங்க லங்கையு …… மடைவேமுன்

ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ

     சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற

          ராம சரந்தொடு புங்க வன்திரு …… மருகோனே

கோழி சிலம்பந லம்ப யின்றக

     லாப நடஞ்செய மஞ்சு தங்கிய

          கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல …… வயலூரா

கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்

     வேல னெனும்பெய ரன்பு டன்புகழ்

          கோடை யெனும்பதி வந்த இந்திரர் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

பொருளுரை – திரு கோபால சுந்தரம் ; கெளமாரம் இணையதளம

1

தோழமை கொண்டுசலஞ்செய் குண்டர்கள் … நட்பைக் காட்டிப்

பினனர் நண்பருக்கு வஞ்சகம் செய்யும் கீழோர்,

2

ஓதிய நன்றிம றந்த குண்டர்கள் … போதித்த நன்றியை மறந்த

கீழோர்,

3

சூழ்விரதங்கள் கடிந்த குண்டர்கள் … அநுஷ்டிக்க வேண்டிய

விரதங்களை விலக்கிய கீழோர்,

4

பெரியோரைத் தூஷண நிந்தைபகர்ந்த குண்டர்கள் …

பெரியோரை வைது நிந்தித்துப் பேசிய கீழோர்,

5

ஈவது கண்டு தகைந்த குண்டர்கள் … மற்றவர்க்குக் கொடுப்பதைக்

கண்டு அதைத் தடுத்த கீழோர்,

6

சூளுற வென்பதொழிந்த குண்டர்கள் … சத்திய வார்த்தை

என்பதையே ஒழித்த கீழோர்,

7

தொலையாமல் வாழநினைந்து வருந்து குண்டர்கள் …

எப்போதும் தாம் அழியாமல் வாழ நினைத்து அதற்காகவே வருந்தும்

கீழோர்,

8

நீதியறங்கள்சிதைந்த குண்டர்கள் … நீதியையும், தர்மத்தையும்

அழித்த கீழோர்,

9

மானவகந்தைமிகுந்த குண்டர்கள் … குற்றமும், ஆணவமும்

மிகுந்துள்ள கீழோர்,

10

வலையாலே மாயையில் நின்றுவருந்து குண்டர்கள் …

பாசவலையால் உலகமாயையில் சிக்கி வருந்தும் கீழோர்,

11

தேவர்கள் சொங்கள்கவர்ந்த குண்டர்கள் … தெய்வச் சொத்தை

அபகரித்த கீழோர், இவர்கள் யாவரும்

வாதை நமன்றன்வருந்திடுங்குழி விழுவாரே … வேதனைக்கு

இடமாகிய, யமனது நரகக் குழியில் வீழ்வர்.

ஏழு மரங்களும் வன்குரங்கெனும் வாலியும் … மராமரம் ஏழும்,

வலிய குரங்காகிய வாலியும்,

அம்பரமும்பரம்பரை ராவணனுஞ்சதுரங்க லங்கையும் … கடலும்,

அசுர பரம்பரையில் வந்த ராவணனும், அவனது நால்வகைப் படையும்

(யானை, தேர், குதிரை, காலாட்படை) இருந்த இலங்கையும்,

அடைவேமுன்ஈடழியும்படி … யாவுமே முன்பே வலிமை குன்றி

அழியும்படியும்,

சந்த்ரனுஞ் சிவசூரிய னுஞ்சுரரும் பதம்பெற … சந்திரனும், சிவ

சூரியனும், தேவர்களும் தமது பதவியிலே நிலைபெறவும்,

ராம சரந்தொடு புங்கவன்திரு மருகோனே … ராமசரம் என்ற

ராமநாமம் கொண்ட அம்பைச் செலுத்திய சிறப்பான ராமச்சந்திர

மூர்த்தியின் அழகிய மருகனே,

கோழி சிலம்ப நலம்ப யின்ற கலாப நடஞ்செய … சேவல்

கொடியில் இருந்து ஒலிசெய்ய, அழகிய தோகையை உடைய மயில்

நடனம் செய்ய,

மஞ்சு தங்கிய கோபுர மெங்கும்விளங்கு மங்கல வயலூரா …

மேகங்கள் தங்கும் உயரமான கோபுரங்கள் எங்கும் விளங்கும்

மங்களகரமான வயலூர் வாசனே,

கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் … அழகிய தேவர்களும்,

தொண்டர்களும், மண்டலாதிபர்களும்,

வேல னெனும்பெய ரன்புடன்புகழ் … வேலன் என்ற பெயரை

அன்புடன் புகழ்கின்ற பெருமாளே,

கோடை யெனும்பதி வந்த இந்திரர் பெருமாளே. … கோடைநகர்*

என்ற பதியில் வந்துள்ள பெருமாளே, இந்திரர்களுக்குப் பெருமாளே.

****

* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது.

சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.

***

இதில் எல்லா தீய சக்திகளையும் அவர் சேர்த்து இருப்பது ஒரு சிறப்பு; அவர்களுக்கு குண்டர்கள் என்ற பொதுப்பெயரை வழங்கி, முதல் முதலில் பாடியவர் அருணகிரிநாதர் என்பது இன்னும் ஒரு சிறப்பு !

–subham—

Tags- பதினோரு குண்டர்கள், யார்? ,அருணகிரி நாதர், பட்டியல் , திருப்புகழ்