HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-25; இந்துமத கலைச்சொல் அகராதி-25 (Post.15,266)

Written by London Swaminathan

Post No. 15,266

Date uploaded in London –  12 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Part 25 (given in English Alphabetical order- A,B,C,D…….)

Dh words

தனுர் வேதம் இது ஆயுதக் கல்வி இராணுவ பயிற்சி துரோணர் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இத்தகைய பயிற்சியை தந்தார்.

Dhanur Veda

Ancient military training given to Kshatrias, warrior class in Hindu community. Drona was one of the famous teachers.

***

தாரணம் மனதை ஒருமுகப்படுத்தல்; எட்டு வித நியமங்களில் இதுவும் ஒன்று மனத்தை உள்முகமாக திருப்பி இறைவனை நினைப்பது.

Dharana

Concentrating mind on a particular thing, particularly God. It is one of the Eight Yoga practices called Ashtanga Yoga ( eight limbs of Yoga)

***

தர்மம் ஒருவர் பின்பற்றப்பட வேண்டிய விதிகள் குறிப்பாக சமய சம்பந்தமான விதிகள் அதை பின்பற்றுவது தர்மம் நியாயத்திற்கு எதிரான எந்த செயலும் அதர்மம். இதை கடமைகள் என்றும் சொல்லலாம். தர்மம் என்பது கால, தேச, வர்த்தமானத்துக்கு ஏற்ப மாறும் என்று இந்துக்கள் கூறுகிறார்கள்; ஸ்ம்ருதி என்னும் சட்டத்துக்கு கீழ்ப்படி ; அதற்கடுத்தபடியாக அக்காலத்தில் வசிக்கும் பெரியோர்களின் சொற்களைக் கேள் ; அவை இல்லாத இடத்தில் மனச் சாட்சிக்குக்  கீழ்ப்படி என்பது இந்து தர்மம் .

Dharma

In short virtue, law, religious duty, moral truth according to Hindu scriptures.

There is equivalent word in Western culture. Tamils translated it as Aram. It is the Dos and Don’ts in Hinduism. No one should violate the accepted rules. Hindus agree that it can change according to location/geography, time/period, caste and circumstances. First rule is to follow the Smritis/Hindu law books; second rule is to seek the advice of elders in that period. In the absence of the above obey your conscience. These are the duties.

***

தன்வந்திரி

மருத்துவத்தின் தந்தை ; கடல் கடைந்தபோது அமிர்த பானத்துடன் உதித்தவர்; விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார்; ஆயுர்வேத நூல்களை அளித்தவர். இவர் பெயரில் பல நூல்கள் உள்ளன. தமிழ் நாட்டில் பல கோவில்களில் இவருக்கு தனி சந்நிதி உண்டு; குறிப்பாக வைத்தீஸ்வரன்  கோவிலிலுள்ள சிலைக்குப் பக்தர்கள் அர்ச்சனை செய்கிறார்கள். உடலில் வரும் நோய்களைத் தீர்க்க இவரைக் குறித்த மந்திரங்களும் இருக்கின்றன; நான்கு கைகளுடன் வடிக்கப்படும் இவருடைய சிற்பங்களில் சங்கு , அமிர்த கலசம், ஆயுர்வேத நூல், மூலிகை காணப்படும். சில இடங்களில் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை அல்லது சக்கரமும் காணப்படுகின்றன. விஷ ரத்தத்தை அகற்ற இந்திய மருத்துவர்கள் அட்டைப்பூச்சியைப் பயன்படுத்தியதை மருத்துவ நூல்களில் காணலாம் .

Dhanwantri or Dhanwantari

Father of medicine. He came from the milky ocean when Devas and Asuras churned it to bring out amrita. Dhanwantri appeared there bearing in his hand the cup of Amrita. Dhanvantari revealed Aayurveda to Susruta which he learnt from Brahma. He is a form of Vishnu and is found generally in the company of Asvins. He holds a pot of nectar/ amrita in his hands.

***

திருதராஷ்டிரன்

சங்க இலக்கியத்தில் இவர் பெயர் உள்ளது; வியாசருக்கும்  அம்பிகாவுக்கும் பிறந்தவர்; ஹஸ்தினாபுர மன்னன்; துரியோதனன் மற்றும் 99 சகோதரர்களின் தந்தை;  காந்தாரி என்பவளை மணந்தார்; கணவர் பிறவிக் குருடர் என்பதால் அவளும் வாழ்நாள் முழுதும் கண்களைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தாள். அந்தகர் ஆனதால் துரியோதனன் சொல்வதைக் கேட்டு பாண்டவர்களைக் காட்டுக்கு அனுப்பினார்; மஹாபாரத யுத்தம் நடந்தபோது, தேரோட்டி சஞ்சயன், அவருக்குப்  போர்க்கள நிகழ்ச்சிகளை  உரைத்தான்; அதன் மூலம் நமக்குப் பகவத் கீதை நூலும் கிடைத்தது; போருக்குப்  பின்னர் யுதிஷ்டிரர்  ஆண்டபோதும் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டது; மிகவும் வயதானபோது வானப்பிரஸ்த ஆஸ்ரமத்தை அனுஷ்டிக்க வனத்துக்குச் சென்றனர். அங்கு காந்தாரியும் திருதராஷ்டிரனும் காட்டுத் தீயில் கருகி  மாண்டனர் 

DHRTARASHTRA

King of Hastinapura, father of Duryodhana and 99 brothers. He was born blind and so his wife Gandhari also remained blind folded throughout her life. His father was Krishna Dwaipayana  Vyasa and his mother was Ambika.

He acted through the sceptre of Duryodhana and banished Pandavas to the forest. During the Mahabharata war, Sanjaya , his charioteer, related the happenings on the battlefield. Through Sanjaya, we got Bhagavad Gita , the conversation between Arjuna and Krishna. After the war Yudhisthira ruled but all respects were shown to him. When they were too old both Dhritarashtra and Gandhari went to the forest where they perished in a forest fire.

***

தூம கேது

வால் நட்சத்திரம்;  தூமகேது என்றால் புகைக் கொடி; இது தோன்றினால் மன்னருக்கு ஆபத்து என்று அக்கால மக்கள் நம்பினார்கள்; சங்க இலக்கியம் முதல் ஷேக்ஸ்பியர் கால நாடகங்கள் வரை இந்த நம்பிக்கை இருந்தது.

DHUMAKETU

Comet is called Smoke flag in Sanskrit. People believed that its appearance in the sky will cause harm to the king. We see this belief from Sangam Tamil literature to Shakespearean plays.

***

தனஞ்செயன்

அர்ஜுனனின் பெயர் ; அவன் யதிஷ்திரரின் ராஜ சூய யாகத்துக்காக பல நாடுகளை வென்று தனத்தை ஜெயித்துக் கொண்டு வந்தான்.

DHANANJAYA

Arjuna’s another name. He won lot of wealth from the northern countries during Yudhishthira’s Raja Suya Yagam Dhanam means wealth Jeyam means Victory or conquering

***

துருவன்

வடக்கிலுள்ள துருவ நட்சத்திரத்துக்கு ஒரு சிறுவனின் பெயரை இந்துக்கள் சூட்டினார்கள். இதன் பின்னால் ஒரு கதைஉண்டு உத்தானபாதனனுக்கு இரண்டு மனைவிகள். ஒருவள் சுருசி, இன்னும் ஓருத்தி சுநீதி;  மன்னனுக்கு சுருசியின் மேல் ‘ருசி’ அதிகம் அதனால்  அவளுக்குப் பிறந்த உத்தமனை மட்டும் கொஞ்சினான்; அரசுக்கட்டிலில் ஏறி விளையாட அனுமதித்தான்.  சுநீதிக்குப் பிறந்த துருவனைக் கொஞ்சவில்லை  ; அவனை சிம்மாசனத்தில் ஏறி விளையாடவும் அனுமதிக்கவில்லை; அவன் சொன்னான், நான் இறைவனைத் துதித்து இதைவிட உயரத்தில் இருப்பேன் என்று; அவனது தவத்தை மெச்சிய விஷ்ணு அவனை துருவ நட்சத்திரமாக மாற்றினார் காம்பஸ் என்னும் திசை காட்டும் கருவி இல்லாத காலத்தில் இந்த துருவ நட்சத்திரம்தான் மாலுமிகளுக்குக் கடலில் வழிகாட்டும் அடையாளமாகத் திகழ்ந்தது. 

DHRUVA

It is pole star. The star is named after the boy Dhruva who was the son of uttanapada and suniti. Uttanapada’s favourite wife was Suruchi. Her son uttama had favourable treatment in the palace and so Dhruva went away and prayed to Lord Narayana. He raised him to the sky and made him the pole star. In the olden days, pole star helped the sailors to find the direction.

***

DI words

திக் கஜங்கள்

எட்டு திசைகளைக் காக்கும் யானைகளுக்கு அஷ்ட திக் கஜ ங்கள் என்று பெயர்; அவை :ஐராவத,  புண்டரிக, வாமன, குமுத, அஞ்சன, புஷ்பதந்த, ஸர்வபெளம,  சுப்ரதீக.

Dig gajas

The elephants who protect the eight points of the compass; they are

Airavata ,Pundarika, Vamana, Kumuda, Anjana, Pushpadanta, Sarvabhauma,

Supratika,

***

திக் விஜயம்

எட்டு திசைகளிலும் உள்ள எதிரிகளை வெல்வதற்காக எட்டு திசைகளுக்கும் செல்வது திக்விஜயம். அதில் வெற்றி பெறுவது முக்கியம். ஆதி சங்கரர் இந்தியாவின் நாலு மூலைகளுக்கும் சென்று பிற சமயத்தினரை வாதில் வென்றார் இதை சங்கர திக்விஜயம் என்று  நூலாகத் தொகுத்துள்ளனர். மதுரையை ஆண்ட மீனாட்சி, சிவபெருமானை வெல்லும் நிகழ்ச்சியில் தோல்வியுற்று இறுதியில் அவரைக் கல்யாணம் செய்துகொண்டார் . இந்த மீனாட்சி கல்யாணத்துக்கு முன்னர், மதுரையில் மீனாட்சியின் திக் விஜயம் சிறப்பாக நடைபெறும்.

Dig Vijaya

Conquest of the regions of the world. Four of the five, Pandavas did this and made his eldest brother Yudhishthira a universal king. Adi Sankara did visit four corners of India and won scholars of other faiths in debates. His travels and conquests are under Sankara dig Vijaya. Madurai temple conducts Meenakshi Dig Vijaya event  just before Meenakshi’s wedding with Lord Siva.

***

திக் பாலகர்கள்

ஏற்க்கனவே அஷ்ட திக் பாலகர்கள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது

Dik palaka – please see under ashta dik palaka.

***

Diwali / deepaavali

தீபாவளி

தீபாவளி என்றவுடன் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல்இனிப்புப் பலகாரங்கள் விநியோகம் பட்டாசு மத்தாப்பு வெடித்தல்புத்தாடை அணிதல் கோவிலுக்குப் போதல்  நினைவுக்கு வரும்

தீபாவளி பண்டிகையைக்  கொண்டாடுவதற்கான்  காரணங்கள்

1.கிருஷ்ண பரமாத்மா, நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற நாளை நினைவுபடுத்தி தீபாவளையைக் கொண்டாடுகிறோம்.

2.தீபம் என்றால் ஒளி விளக்கு, ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்துக் கொண்டாடுவதால் தீபாவளி.

3.தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது லெட்சுமி தேவி வெளிவந்த நாள் இது.

4.ராமபிரான், ராவணனைக் கொன்று சீதையை மீட்டு அயோத்திக்குத் திரும்பிய நாள் இது.

5.பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசத்தை முடித்த நாள் இது.

6.சமண தீர்த்தங்கரில் ஒருவரான வர்த்தமான மஹாவீரர் நிர்வாணம் எய்திய நாள். ஆகையால் சமணர்களுக்கும் புனித நாள் இது.7.சீக்கியர்களின் பொற்கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நாள் இது. அனைவரும் குருவின் ஆசிர்வாதம் பெற வருமாறு குரு அமர்தாஸ் அறைகூவல் விடுத்த நாள் இது. ஆகையால் சீக்கியர்களுக்கும் புனித நாள்.

8.ஆர்ய சமாஜ ஸ்தாபகர் சுவாமி தயானந்த சரஸ்வதி சமாதி எய்திய நாள் இது.

9. இந்து மன்னர்களில் மிகவும் புகழ்பெற்ற விக்ரமாதித்தன் சிம்மாசனம் ஏறிய நாள் இது.

10.குஜராத்திகளுக்கும் வணிக சமூகத்தினருக்கும் புத்தாண்டும் புதுக் கணக்கு துவங்கும் நாளும் இது.

11. லெட்சுமி பூஜை குபேர பூஜை நடக்கும் நாள் இது.

கடின உழைப்பின் மூலமே இருள் அகன்று ஒளி தோன்றும் என்பதே தீபாவளியின் கருத்து.

வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை நான்கு நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. தன திரயோதசி முதல் பலி ப்ரதிபதா என்ற நிகழ்வு வரை 4 நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள்.

இது தவிர மேலும் இரண்டு நாட்களும் முக்கியத்துவம் பெறுகிறது. அவை கோவத்ஸ துவாதசி,  யமத்விதீயா என்ற 2  நாட்கள் ஆகும்.

வட இந்தியர் கணக்குப்படி ஐப்பசி மாதத்தின் (கிருஷ்ண பக்ஷம்) இருண்ட பகுதியும், கார்த்திகை மாதத்தின் ஒளிமிக்க பகுதியும் (சுக்ல பக்ஷமும்) தீபாவளிப் பண்டிகை ஆகும் .

நாட்டின் பல பகுதிகளில் அமாவாசை முதல் அடுத்த மாதம் துவங்கிவிடுவதால் ஐப்பசி-கார்த்திகை தீபாவளி மாதம் ஆகும்..

***

DIWALI/ DEEPAVALI (deepaavali) ‘Deepa’ means light or lamp, ‘aavali’ means a row. Deepavali means a ROW OF LIGHTS. It is Festival of Lights. Diwali is the spoken form of the word Deepavali.

We celebrate the Victory of Good over Evil. Good is light and Evil is darkness. It is the most famous festivals of the Hindu festivals. In some parts of India, they celebrate it for four days.

 The reasons for celebrating Deepavali.

1.        Lord Krishna Killed a demon called Narakasura. So we call that day Naraka Chathurdasi, literally Naraka’s 14th day.

2.        Goddess Lakshmi came out of the Milky ocean when Devas and Asuras churned the ocean for Amrutha, i.e. ambrosia

3.        Rama returned to Ayodhya after defeating Ravana of Sri Lanka who abducted Rama’s wife Sita.

4.        Pandavas came out of the forest after their 12 year banishment. So to celebrate all these things they decorated the houses and streets with row of lamps. The reason being, it was Amavasya-new moon day where there was no light. Most of other Hindu festivals fall on Full Moon day, so there is natural moon light. We have to remember there was no electric light thousands of years ago.

5.        Jains also celebrate Diwali, because one of the greatest Thirthankaras, Mahavira, a contemporary of Buddha, attained Niravana- equivalent to Hidnu Yogi’s Samadhi on a Diwali day.

6.Sikhs also celebrate Diwali because the foundation for Golden Temple in Amritsar was laid on the day. Guru Amardas called all Sikhs to get Gurus’s blessings on that day, like Hindu’s Vyasa Purnima. One of the ten Sikh gurus Hari  Govinda Sing was released from imprisonment by Mughal emperor Jehangir on that day.

7.Arya Samaj followers consider it a holy day because its founder Dayananda Sarswati attained Samadhi on that day.

8.There are many more reasons. Greatest of the Hindu Kings Vikramaditya was crowned on a Diwali day.

9.For Gujaratis and other business men it is a NEW YEAR DAY. They start their Financial year on that day.

Lakshmi Puja and Kubra Puja are conducted during the four day celebrations. Gujaratis heap food and sweets like mountains in a festival called Annakut festival.

Most of the Hindu festivals are based on Lunar Calendar. That is, they are based on the movements of Moon. Diwali is one of them.

AIPPASI is the seventh month in Tamil calendar. When sun enters zodiac sign Tulaa Raasi (Libra), Aippai begins. Asweena is the Sanskrit  name. Since Hindu month begins on New Moon day/Amavasyai for people living in the north, sometimes it is written as Kartikai  month, which comes next to Asweena/Aippasi. Deepavali  is celebrated in this month.

Next day of Deepavali is new moon day Amavasai. Tamils celebrate it only for two days: Diwali day and the previous night. But in North India it is celebrated for five days.

Hindus celebrate it with doing fire works and wearing new clothes after oil bath in the very early morning. They distribute sweets and visit elders. They worship god at home or go to temples. New year starts for Gujaratis; Kethaara Gowri Vratham is observed by some people. North Indians arrange row of lights during Diwali, but Tamils do the same thing during the next month Karthikai (kaartigai)

—Subham—

Tags- Hindu Dictionary, Part 25, Deepavali, Diwali, Dhanvantri இந்துமத கலைச்சொல் அகராதி-25, தன்வந்திரி ,தூம கேது ,துருவன்

Leave a comment

Leave a comment