Ornaments in Buddha Charita,Rajatarangini:Ancient Hindu Jewellery! You can get Ph.D.- Part 5 (Post15,885)

Hindu Mather Goddess in Harappan Civilization

Written by London Swaminathan

Post No. 15,885

Date uploaded in London –18 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Research article- Part 5

Madurai Menakshi (Wife of Siva).

We get interesting information about jewels and ornaments from Sangam Tamil literature, Rajatarangini of Kalhana and Buddha Charita of Asvaghosa.

Tamil Sangam literature has many Sanskrit words like Valaya (bangles, bracelets) Nupura (anklet), Mani (gem stones) and Mukta (Muthu,Pearl). Mukta may be taken from Tamil. Pravala is used as Pavalam in Tamil.

Tamils wore ornaments from head to foot like their north Indian counterparts.  Only later epic Silappadikaram has full details. Sangam Tamils wore bangles made up of seashells a lot. Both men and women had anklets (Kazal for men; Silambu for women). Children had foot ornaments as well; later literature mentioned Kolusu; but Sanskrit word Kinkini is in Sangam poems. As I mentioned earlier all the Five Tamil Epics are named with ornaments, but with Sanskrit words!

Most interesting thing is the mention of Makara rings (shark shaped) worn by the Sangam Tamils. We find such rings until today.

Kalhana who wrote the history of Kashmir in Sanskrit says in his work Rajataarangini,

“Now, gentle friend! Drink freely, your ears serving the mother of pearl glasses, of this River of Kings (raajatarangini) delightful with the flow of its sustained sentiment- 1-24”.

For this sloka R S Pandit (India’s first Prime Minister Jawaharlal Nehru’s brother-in-law) has given the following detail in the footnote:

Kalhana hoped his poem would be recited like the great epics in time to come. Mother of pearl glasses for drinking wine must have been in use among the people in his day. In Taranga V verse 169, there is a reference to jewelled glasses for liqueur which were used by the nobility.

Bernier speaks of Tibetan jade presented to Aurangazeb in Kashmir, which was “in great estimation in the court of the Mogol; its colour is greenish, with white veins, and it is hard to be wrought only with diamond powder. Cups and vases were made of this stone. I have some of the most exquisite workmanship, inlaid with strings of gold, and enriched with precious stones”– Bernier

***

Hindu woman in Ashmolean Museum, Oxford, UK.

Asvaghosha wrote four books Saundarananda, Buddha Carita, Vajrasuci and Sraddotpada  Sastra.

Jewellery is mentioned as

Bhuushana,

Aabharana ,

Mandana

It included the following ornaments: various kinds of necklaces called Mala (maalaa), Hara(haara), which sometimes were long enough to dangle up to breasts, special necklaces called Yoktraka, Suvarna Suutra and Kantha suutra.

Dangling earrings-Kundala and Mani kundala (studded with precious jewels);

Anklets (Nuupura), bracelets or armlets called Keyuura, Bhujapaasha;

Valaya- bangles and Angad;

Girdle called Mekhalaa, Kaanchi and Jhaghana Vibhuushana. Some of them had jingling bells.

Mahaavastu also mentioned these ornaments.

While ladies of high pedigree used gold, silver studded jewellery, common people used white shell ornaments.

From Begran in Gandhara region a beautiful collection of fragments of ivory toilet boxes have been found from the ruins of Kanishka’s palace.

The kings and princes used a large number of ornaments. Royal tiara with strings of pearls hanging over their shoulders, armlets in the arms, diadem with blazing jewels and necklaces.

Q.Curtius Rufus (First century CE) writes:

“Indians hang precious stones as pendants from their ears, and persons of high social rank or of great wealth, deck their wrist and upper arm with bracelets of gold…. The luxury of their kings or they call it, their magnificence is carried to a vicious excess without a parallel in the world”.

***

Yakshi with head to foot ornaments

Some important Sanskrit Words in modern usage:

Angada- armlet like a coiled snake;

Anguliyaka- finger ring;

Arsi- thumb ring set with mirror;

Baahu- armlet;

Bali- ring type earring with pearl strung on it;

Bina- star shaped forehead ornament;

Bindi -forehead ornament;

Chaulari- four stringed necklace;

Chuudaamani- ornament for hair, lotus shaped, its petals ornamented with pearls and precious stones;

Ekavali- single strand pearl necklace;

Chungru- anklet with small bells (kinkini)

Hamsa mithuna- decorative motif consisting of a pair of swans;

Hiranya- gold;

Hirnyasraj- gold garlands;

Kaksha- red seeds for making ornaments;

Kanaka kamala – a full blown lotus design earring set in rubies, still used in South India;

Kancala- elaborate earrings with pendants;

Kaachis- hip girdle with bells;

Kangan- bracelet;

male and female jewellery;  Ashmolean Museum, Oxford, UK.

Kanta- short necklace broad and flat;

Karnika- earring;

Karnphul-flower shaped earring;

Kinkini- anklet with small bells suspended;

Kirita- crown;

Kundela- simple earring or circular;

Maangaa maalaai- gold coin necklace of south Indians;

Manjira- hollw anklets;

Mekhalaa- hip belt or girdle;

Mukta – pearl; muktavali-pearl necklace;

Nishka- necklace of gold coins;

Pattabandha- ornamented gold strip for holding the turban in position;

Phalaka- slab like gems;

Phalaka haara- necklace with slab like gems at intervals;

Phalaka valaya – bracelet with slab like gems set into it;

Rasana-girdle;

Ratnajali- a net of braid and pearls worn around chignon by women ;

Ratnanguliya- finger ringsl studded with gems; one of them is NAVA RATNA RING;

Satlar- seven stringed necklace;

Tilari- three  stringed necklace;

Tulakoti- heavy anklets with two ends enlarges at their meeting point;

Valaya- bracelet; bangles;

Yashti- necklace of gems and gold beads with large central head.

Tamils of later days also had a long list of ornaments but not found in ancient literature. The sculptures and paintings show this jewellery.

–subham—

Tags- Ornaments, Buddha Charita, Rajatarangin, :Ancient Hindu Jewellery,  You can get Ph.D., Part 5, Research article

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 53; இந்து மத கலைச்சொல் அகராதி-53 (Post No.15,634)

Written by London Swaminathan

Post No. 15,634

Date uploaded in London –19 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Tamil Version is posted here; English version was posted yesterday.

More  K  words

கண்ணப்பன்  – கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். திருக்காளத்தியில் வேடர் குலத்தில் பிறந்து, திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், தன் கண்னையே சிவலிங்கத்திற்குக் கொடுத்து, அவருடைய அருளைப்பெற்று  பின்னர் சிவனுடன் கலந்தார் . பக்திக்கு இலக்கணமாகத் திகழந்த இவரது வரலாறு பெரிய புராணத்தில்   உள்ளது. இந்நாயனார் வரலாற்றைச் சேக்கிழார், 186 விருத்தப் பாக்களினால் பாடியுள்ளார்.

திண்ணனார் சிவலிங்கத் திருவுருவத்தின் கண்ணிலிருந்து இரத்தம் கசிந்ததைக் கண்டு, தன் கண்ணைத் தோண்டி அப்ப இறைவனால் கண்ணப்பன் என்று அழைக்கப்பட்ட செய்தியினை இக்கதை விளக்குகின்றது. இக்கதை நிகழ்ந்த இடம் இன்று காளத்தி என வழங்கும் திருக்காளத்தி மலையாகும் (பொத்தப்பி நாடு).

சுந்தரமூர்த்தி சுவாமிகளால் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்றும், பட்டினத்தாரால் நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என்றும், திருநாவுக்கரசரால் திண்ணன்கண்ணப்பன்வேடன் என்றும் சான்றோர்கள் கண்ணப்ப நாயனாரைப் போற்றியுள்ளனர் .

***

கோச்செங்கட் சோழன்

கோச்செங்கட் சோழ நாயனார் சோழ மன்னர்களில் ஒரு சிறந்த மன்னர். இவர் முற்பிறவியில் சிலந்தியாகப் பிறந்து சிவபெருமானுக்குத் தொண்டு செய்தவர்; பெரிய புராணத்தில் இவர் வரலாறு உள்ளது.

 கோச்செங்கணான் என்ற பெயரும் உண்டு. 63 நாயன்மார்களில் ஒருவர்; மாடக்கோயில்கள், எனப்படும் உயர்ந்த தளங்களைக் கொண்ட 70-க்கும் மேற்பட்ட சிவன் கோயில்களைக் கட்டினார் ; பூர்வ ஜென்மத்தில் யானையால் பாதிக்கப்பட்டதால் , யானைகள் புக முடியாத கோவில்கள் இவை ; இவர் சிலந்தியாகப் பிறந்து சிவன் மீது வலை பரப்பி வழிபட்டபோது, மற்றோரு சிவ பக்தனான யானை அந்த வலையைக் கலைத்தது . யானை தன்னுடைய துதிக்கையால் அதை  ஓங்கி அடித்துக் கலைக்கவே அதன் துதிக்கையில் சிலந்தி புகுந்து தொல்லை கொடுத்தது; இருவரும் இறந்து  சிவனடியைச் சேர்ந்தனர். கண் சிவந்து பிறந்த சோழனை செங்கண்ணான் என்று அழைத்தனர்.

***

குறள் — திருக்குறள்

திருவள்ளுவர் எழுதிய இந்த நூலில் 1330 குறள் வடிவப் பாக்கள் உள்ளன ; அவை ஈரடிச் செய்யுட்கள் ; தர்ம அர்த்த காம – அறம் பொருள் இன்பம் – என்ற இந்துமதக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் விளக்கியதால் முப்பால் என்றும் பெயர் ; சுருங்கச் சொல்லி விளங்க வைத்ததும் எல்லா விஷயங்களையும் தொகுத்து அளித்ததும் இதன் பெருமையைப் பரப்பியது; திருவள்ளுவர் எழுதிய இந்த நூல் தமிழ் மொழி உலகுக்கு அளித்த பெரிய கொடை ஆகும் ; இவருடைய  காலத்தை  BCE 31 என்று தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டாலும் பழந்தமிழர்கள் இவரை சங்க காலத்துக்குப் பின்னரே வைத்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இவரைச் சேர்த்தனர் ; மேலும் மொழியியல் ரீதியாக இவரை ஐந்தாம் நூற்றா ண்டில்தான் (CE)  வைக்க முடிகிறது  ; இதைப் பல அறிஞர்கள் சுட்டிக் காட்டிவிட்டனர்; திருவள்ளுவரின் பிறப்பு பற்றியும் சர்ச்சை உள்ளது; நூறு ஆண்டுகளுக்கு முன்னர்  வெளியான எல்லா நூட்களிலும் உள்ள இந்த வரலாற்றினை இப்போது மறைத்து எழுதிவருகின்றனர். ஆதி – பகவன் என்ற கலப்பின தம்பதியருக்கு இவர் ஏழு சகோதர சகோதரிகளுடன் பிறந்தார்.

***

குஷிக

விச்வாமித்ர மாஹரிஷியின் தாத்தா குஷிக ஆவார் ; காதி என்பவர் குஷிகவின் மகன்; சியவன ரிஷிக்கு குஷிக மிகவும் சிரமப்பட்டு சேவை செய்தார் ; அவர் மகிழ்ச்சி அடைந்து உன்னுடைய சந்ததியினர் பிராமணத்துவம் பெறுவார் என்று ஆசீர்வதித்தார் . விச்வாமித்திரரும் பிற்காலத்தில் பிரம்மரிஷி பட்டம் பெற்றார்.

***

L WORDS ; LA words 

லக்னம் 

ஒரு ஜாதகர் பூமியில் ஜனனம் ஆகும் போது கிழக்கு திசை அடிவானத்தில் எந்த ராசி உதயம் ஆகிறதோ அதுதான் அவருடைய லக்கினம் எனப்படும்; லக்னம் என்று குறிப்பிடப்பட்ட அதே கட்டத்தில் சந்திரனும் இருக்கும் ; ராசிச் சக்கரத்தில் “ல” என்று குறிப்பிடப்பட்டு குறுக்கு வாக்கில் ஒரு கோடு போட்டிருப்பார்கள். அவர்களுக்கு ராசி லக்னமும் ஒன்றாகவே இருக்கும்; சுப வேளை  என்பதையும் லக்கினம் என்று சொல்வார்கள் .அந்த ஜாதகத்திற்கு நடந்து கொண்டிருக்கும். திசை மற்றும் புத்தி கொண்டு பலன்களை கணக்கிடுவதற்கு லக்னம் மிக அவசியமாகும்.

****

லக்ன பத்திரிகை

லக்கின பத்திரிகை (அல்லது லக்ன பத்திரிகை) என்பது தமிழ் இந்து திருமணங்களில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் திருமணத்தை உறுதி செய்த பிறகு, நல்ல நேரத்தில் பரிமாறிக்கொள்ளும் முறையான திருமண அழைப்பிதழ் ஆகும். இது பெரும்பாலும் குடும்பப் பெரியவர்களால், மஞ்சள்/ பிங்க் நிறத் தாள்களில், மணமக்களின் ஜாதக விவரங்கள், திருமண நேரம் மற்றும் இடத்துடன் எழுதப்படும்.

நிச்சயதார்த்தம்: திருமணத்திற்கு முன் நடத்தப்படும் மிக முக்கியமான சடங்கு.

பரிமாற்றம்: லக்னப் பத்திரிகை வாசித்த பின், இரு வீட்டாரும் பத்திரிகைகளை மாற்றிக்கொள்வர்.

இதில் திருமண நாள், லக்னம், முகூர்த்த நேரம், மணமக்களின் பெயர் மற்றும் பெற்றோரின் விவரங்கள் இடம் பெறும்.

***

லெட்சுமி/ லக்ஷ்மி

லட்சுமி (அல்லது லக்ஷ்மி) செல்வச் செழிப்பு, அதிர்ஷ்டம், அழகு மற்றும் தூய்மையின் தெய்வமாக வழிபடப்படும் தேவி ஆவார்; திருமால் அல்லது விஷ்ணுவின் மனைவி; மன்மதனின் தாய் ; அலைமகள், மலர்மகள், மகாலட்சுமி என்பன ஏனைய பெயர்கள்; எட்டு முக்கிய வடிவங்களில் (அஷ்டலட்சுமி) இவளை வணங்கலாம்

தாமரையில் வீற்றிருப்பவர், இரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியிருப்பார்.

அஷ்டலட்சுமி (ஆதி, தன, தான்ய, கஜ, சந்தான, வீர, விஜய, வித்யா லட்சுமிகள்)

யத் க்ருஹம் ராஜதே நித்யம் மங்களைரனுலேபனைஹி

தத் க்ருஹே வசதே லக்ஷ்மீ: நித்யம் பூர்ணகலான்விதா

எவள் வீட்டைப் பெருக்கி மெழுகி,  கோலமிட்டு  அலங்கரிக்கிறாளோ அங்கே லக்ஷ்மீ பூரண கலைகளுடன் வசிக்கிறாள்.

அது என்ன பூரண கலை?

நாம் அஷ்ட லக்ஷ்மீ என்று சொல்லும்போது தனம், தான்யம், வீரம், ஸந்தானம் (மகப்பேறு), ஐஸ்வர்யம், சௌபாக்கியம் என்று எல்லாம் வளத்தை பிரித்துப் பார்க்கிறோம். இவை அனைத்தும் இருந்தால் அது லக்ஷ்மீயின் பூரண அம்சம் ஆகும்.

சத்வ குணத்தில் கருட வாகனத்திலும், ரஜோ குணத்தில் யானை அல்லது தாமரை மீதும், தமோகுணத்தில் ஆந்தை மீதும் வருபவள் .

அஷ்டலக்ஷ்மி:  தனலக்ஷ்மி, தானிய  லக்ஷ்மி, தைரிய  லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, வித்தியா லக்ஷ்மி, கீர்த்திலக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, ராஜ்ய லக்ஷ்மி என்று  தமிழ் நாட்டுக் கோவில்களில் காட்சி தருகிறாள்.

***

இலங்கை

லங்காபுரி என்றும் சிலோன் என்றும் ஸ்ரீ லங்கா என்றும் அழைக்கப்படும் பொன்மயமான தீவு பற்றிய அழகான வருணனை வால்மீகி ராமாயணத்தில் உள்ளது; குபேரனுக்காக விஸ்வகர்மன் என்னும் தேவலோக சிற்பி உருவாக்கிய இலங்கையை ராவணன்  பிடுங்கிக்கொண்டான்; யக்ஷர்கள், நாகர்களுக்குச் சொந்தமான தீவாக தமிழ் இலக்கியமும், பாலி மொழி நூல்களும் வருணிக்கின்றன ; இந்து மதம் தழைத்த– சைவம் தழைத்த நாடு — பிற் காலத்தில் அசோகர் மகன், மகளால் பெளத்த மத நாடாக மாற்றப்பட்டது; சீதையை ராவணன்  கவர்ந்து சென்ற பின்னர் ராம பிரான் அனுமன் படையின் உதவியுடன் சேது/ பாலம் அமைத்து இலங்கை மீது படை எடுத்தான். ராவணன்  கொல்லப்பட்ட பின்னர் அவனுடைய தம்பி விபீஷணன் இலங்கையை ஆண்டான்  .

***

லவணன்

மதுவுக்கும் கும்பி நாசிக்கும் பிறந்த ராக்ஷஸன்; சிவ பெருமான் கொடுத்த திரிசூலத்தை அவனுடைய தந்தையிடமிருந்து பெற்றான்; ஆயினும் ஆயுதம் இல்லாத தருணத்தில் அவனை ராமனின் சகோதரனானான சத்ருக்கனன் கொன்றான். அதன் பிறகு அவன் ஆண்ட மதுராவை சத்ருக்கனன் ஆண்டான்.

***

லக்ஷ்மணன்

ராமனின் தம்பி ; சுமித்ராவுக்கு இரட்டையர்களாக சத்ருகுணனுடன் பிறந்த போதிலும் கோசலை மகனான ராமனுடன் அல்லும் பகலும் அனவரதமும் இருந்தான்; ராமனுடன் 14 ஆண்டுகளுக்கு கானகம் ஏகினான்; ராம-ராவண யுத்தத்தில் பெரும்பங்காற்றினான் ; சீதையின் காலணிகளைத் தவிர நிமிர்ந்தும் பார் க்காதவன்; ஊர்மிளாவை மணந்தான்தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தான்.

****

லக்ஷ்மண / லக்ஷ்மணா

துரியோதனன் – பானுமதி தம்பதியருக்குப் பிறந்த சகோதர சகோதரி ஆவார்கள் . லக்ஷ்மணா என்ற பெண்ணை கிருஷ்ணின் மகன் சம்பா கடத்திச் செல்லவே, அவனை துரியோதனன் பிடித்துச் சிறையிலிட்டான்; பின்னர் பலராமன் தலையீட்டின் பேரில் அவனை விடுதலை செய்து லக்ஷ்மணாவைத் திருமணம் செய்து கொடுத்தான்; அவன் அஞ்சாத வீரன்; ஆயினும் மஹாபாரதப்போரில் அபிமன்யு கையில் மரணம் அடைந்தான்

.***

 லக்ஷம்

இந்திய மொழிகளில் உள்ள  சம்ஸ்கிருதச்  சொல்; தமிழில் நூறாயிரம் என்பர்

***

லவ, குசன்

குசன் என்ற தலைப்பில் ஏற்கனவே உளது

***

லாட தேசம்

புராதன இந்தியாவின் 56 தேசங்களில் ஒன்று ; குஜராத்தின் ஒரு பகுதி இது ; டாலமி போன்ற வெளிநாட்டு யாத்ரீகர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

LaataDesam, part of Kurjara/ Gujarat Desa

—subham—

Tags HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 53; இந்து மத கலைச்சொல் அகராதி-53 கண்ணப்பன் , திருக்குறள் , லாட தேசம், லக்கினம்

நோய்கள், காசு பறிக்கும்  டாக்டர்கள் பற்றி அருணகிரிநாதர்!-9 (Post.15,388)


Written by London Swaminathan

Post No. 15,388

Date uploaded in Sydney, Australia –  3 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அரிய செய்திகள்- 9

அருணகிரி நாதர் சொல் அழகும்பொருள் வளமும்- Part 9

அறமும் நிறமும் அயிலும் மயிலும் … தர்மமும், செந்நிறமும்,

வேலும், மயிலும்,

அழகும் உடைய பெருமாளே. … அழகும் உடைய பெருமாளே.

***

நோய்கள், டாக்டர்கள் பற்றி

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்

     விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு

          சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி …… யணுகாதே

தலமிசை யதற்கான பேரோடு கூறியிது

     பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்

          சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் …… விதியாதே

உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்

     வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண

          முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க …… ளிருபாதம்

உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்

     வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ

          உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை …… வரவேணும்

அலைகட லடைத்தேம காகோர ராவணனை

     மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை

          அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு …… மருகோனே

அறுகினை முடித்தோனை யாதார மானவனை

     மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்

          அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் …… வருவோனே

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை

     யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்

          பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு …… மணவாளா

பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்

     வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்

          பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

டயாபடீஸ் நோய் வரக்கூடாது

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் … தலைவலிவசிய

மருந்தால் வரும் நோய், மஞ்சட்காமாலை, ரத்தசோகை, ஜுரம்,

விழிவலி வறட்சூலை காயாசு வாசம் … கண்வலிவறள் என்ற

வயிற்றுவலி, காசநோய், மூச்சுப்பிடிப்பு,

வெகுசலமிகு விஷப்பாக மாயாவி காரபிணியணுகாதே …

நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், உலகமாயையால் வரும்

விகாரமான பிணிகள் முதலியவை என்னை அணுகாதவண்ணம்,

காசு பறிக்கும் டாக்டர்கள்

தலமிசை யதற்கான பேரோடு கூறி … பூமியில் அந்த நோய்கள்

நீங்குவதற்காக சில வைத்தியர்களிடம் சொல்லி,

யிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் … இது

நீங்குவதற்குப் பரிகாரம் யாதெனக் கேட்டால், காது கேளாததுபோலச் செல்பவர் சிலர்,

சரியும் வயதுக்கேது தாரீர்சொலீரெனவும் விதியாதே …

சாகப்போகும் வயதாகிவிட்டதே உமக்கு, எவ்வளவு பணம் தருவீரெனக் கேட்பவர் சிலர் என்று பிறர் கூறும்படியான விதியை என் தலையில் எழுதாமல்,

****

உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் … ஊக்கக்குறைவு

இன்றி, விருப்பமுடன் பெரிய பூந்தோட்டத்தில் பூத்த மணமுள்ள

மலர்களை,

வகைவகை யெடுத்தே தொடா மாலிகாபரணம் … விதவிதமாகப்

பறித்துத் தொடுத்து மாலை வகைகளில் ஆபரணங்கள் போல் அமைத்து

உனதடியி னிற்சூடவேநாடு மாதவர்கள் இருபாதம் …

உன்னடியில் சூட்டுதற்கு விரும்பும் சிறந்த தவசிரேஷ்டர்களின் இரு

பாதங்களையும்

உளமது தரித்தே வினாவோடு பாடியருள் … மனத்தினில்

தரித்தே, ஆய்ந்த அறிவுடன் பாடி, உன்னருளால்

வழிபட எனக்கே தயாவோடு தாளுதவ … உன்னை

வழிபடுவதற்கு, என்மீது அன்பு கூர்ந்து, உன் திருவடிகளைத் தந்துதவ

உரகமது எடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும் …

பாம்பைத் தூக்கி எறிந்து ஆடும் மயிலின் மீது வந்தருள வேண்டும்.

*****

மஹா கோர ராவணன்

அலைகடல் அடைத்தே மகாகோர ராவணனை … அலைகடலை

அணையிட்டு அடைத்து, மகா கோரமான ராவவணனுடைய

மணிமுடி துணித்து ஆவியேயான ஜானகியை … மணிமுடிகளை

அறுத்துத்தள்ளி, உயிருக்கு ஒப்பான சீதாதேவியை

அடலுடன் அழைத்தேகொள் மாயோனை மாமனெனு

மருகோனே … தன் தோள்வலியால் அழைத்துக்கொண்ட மாயவனான திருமாலை மாமன் என்று அழைக்கும் மருகனே,

****

அறுகினை முடித்தோனை யாதார மானவனை … அறுகம்புல்லை

சடையில் முடித்தவனும், உயிர்கட்கெல்லாம் ஆதாரமானவனும்,

மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் … மழு, மான்

இவைகளை ஏந்தியவனும், மகா காளி வெட்கும்படியாக முன்னர்

அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும்

வருவோனே … சபைதனிலே நடனம் ஆடியவனான சிவபிரானை,

சிறந்த தந்தையே என்றழைக்கவும் வந்தவனே,

****

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை … பல கலைகளைப்

படித்து ஓதும் கவிஞர்களின் நாவிலே வாசம் செய்கின்ற

இருசரண வித்தார வேலாயுதா … இரு திருவடிகளை உடைய

வித்தகனே, வேலாயுதனே,

உயர்செய் பரண்மிசை குறப்பாவை … உயரத்தில் கட்டப்பட்ட

பரணின் மீது இருந்த குறப்பெண் வள்ளியின்

தோள்மேவ மோகமுறு மணவாளா … தோள்களைத் தழுவ மிக்க

ஆசை கொண்ட மணவாளனே,

பதுமவயலிற் பூகமீதே வரால்கள் துயில் வருபுனல்

பெருக்காறு … தாமரை மலர்கின்ற வயலிலும், பாக்கு மரங்களின் மீதும், வரால் மீன்கள் உறங்கும்படி வரும் நீர்ப்பெருக்கை உடைய ஆறாகிய

திருப்புகழில் பூகோள பாடம்

காவேரி சூழவளர் பழநிவரு … காவேரி சூழ விளங்கும் பழநியில் எழுந்தருளிய,

****

பழனி மலையைச் சுற்றி ஓடும் நதி

பழனி மலையைச் சுற்றி ஓடும் முக்கிய நதி சண்முக நதி ஆகும். இது அமராவதி ஆற்றின் துணையாறாகும், மேலும் இந்த நதி பழனி மலைச் சரிவுகளில் உற்பத்தியாகி, பழனி நகரத்திற்கு அருகில் உள்ள சக்தி கிரி மற்றும் சிவகிரி மலைகளுக்கு அருகில் பாய்கிறது.

நதியின் பெயர்: சண்முக நதி (Shanmuganathi).

உற்பத்தி: பழனி மலைச் சரிவுகள் (Palani Hills).

இது அமராவதி ஆற்றின் ஒரு துணையாறு அது  இறுதியில் காவிரியில் கலக்கிறது.

பாயும் இடம்: பழனி முருகர் கோயில் அமைந்துள்ள அடிவாரத்தில் இந்த நதி பாய்கிறது.

மேலும், பழனி மலைப்பகுதிகள் Vaigai மற்றும் Amaravathi ஆறுகளின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாகவும் விளங்குகிறது

****

கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே. … பச்சைக் கற்பூர மணம்

கமழும் அலங்கார ஆடம்பரனே, தேவர்களின் பெருமாளே.

***

பெரிய புராணக் கதை , சோழநாட்டின் பெருமை

நாத விந்து கலாதீ நமோநம … லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய

தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி,

வேத மந்த்ர சொரூபா நமோநம … வேதங்கள், மந்திரங்கள்,

இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி,

ஞான பண்டித ஸாமீ நமோநம … பேரறிவுக்குத் தலைவனான

தெய்வமே, போற்றி, போற்றி,வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம … பல கோடிக்கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி

போக அந்தரி பாலா நமோநம … (அனைத்து உயிர்களுக்கெல்லாம்)

இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி

நாக பந்த மயூரா நமோநம … தன் காலினால் பாம்பை அடக்கிக்

கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி,

பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம … எதிரிகளான

சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி, போற்றி,

கீத கிண்கிணி பாதா நமோநம … இசை ஒலி எழுப்பும்

சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி,

போற்றி

தீர சம்ப்ரம வீரா நமோநம … மிகவும் பராக்ரமசாலியான

போர்வீரனே, போற்றி, போற்றி,

கிரிராஜ … மலைகளுக்கெல்லாம் அரசனே,

தீப மங்கள ஜோதீ நமோநம … திருவிளக்குகளின் மங்களகரமான

ஒளியேபோற்றிபோற்றி,

தூய அம்பல லீலா நமோநம … பரிசுத்தமான பரவெளியில் லீலைகள்புரிபவனே, போற்றி, போற்றி,

தேவ குஞ்சரி பாகா நமோநம … தேவயானையை மணாட்டியாகப்

பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி,

அருள்தாராய் … உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக.

சோழநாட்டின் பெருமை

ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார

நீதியும் … தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப் படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம்,

ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத … கருணை, குருவின்

திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும் (சோழமண்டலத்தில்),

ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை … ஏழு உலகங்களில்

உள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும்

சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளும்

நாயக … சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்

ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே,

வயலூரா … வயலூருக்குத் தலைவா,

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை … தன்மீது அன்புவைத்த

திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை

சேர்தல் கொண்டவரோடே முனாளினில் … நாடியவராய்,

அவருடன் முன்பொருநாள்,

ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி … ஆடலில் சிறந்த,

விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே)

ஆதி அந்தவுலாவாசு பாடிய … ஆதி உலா எனப்படும் அழகிய

(கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய

சேரர் கொங்குவை காவூர் நனாடதில் … சேரர் பெருமானாம்

சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து

வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும்

ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. … திரு

ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு

கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.

இது திருக்கற்குடி‘ அல்லது உய்யக்கொண்டான்‘ என்று வழங்கப்படும். திருச்சிக்கு அருகில் வயலூருக்குப் போகும் வழியில் உள்ளது.

** கொங்கு நாட்டின் மன்னனாக 1,150 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் ஆண்டார். அவர் சைவக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின் நண்பர். சிவபிரான் சுந்தரரை கயிலைக்கு அழைத்தபோதுசுந்தரர் தமது நண்பரும் உடன்வர வேண்டுமென விரும்பினார். சேரமான் குதிரையில் ஏறி கயிலைக்கு விரைந்து சென்றார். சுந்தரர் இன்னும் வராததால் கயிலையின் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது சேரமான் ஆதி உலா‘ என்ற பாடலைப் பாடகயிலையின் கதவுகள் திறந்தன. சுந்தரருடன் சேரமான் கயிலைப் பதம் சேர்ந்தார். – பெரிய புராணம்.

***

பல்லக்கில் பவனி வரும் போலிப் புலவர்களின் தோற்றம் !

நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு(ம்) நெருடு கவி

கொண்டு வித்தை பேசிய … வேதப் பொருள் என்றால் ஒரு சிறிதும்

தெரியாமல், தினமும் (அங்குமிங்கும் கற்ற) மொழிகளைத் திரித்து இயற்றிய

நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா … போலிக்

கவிகள் சில அற்பச் சொற்களைக் கற்று, ஆடம்பரமான பட்டப் பெயர்களை வைத்துக்கொண்டு,

நெளிய முது தண்டு சத்ர(ம்) சாமர(ம்) நிபிடம் இட வந்து …

(தூக்குவோர்களுடைய முதுகு) நெளியத் தக்கக் கனத்த பல்லக்கு, குடை, சாமரம் (இவைகள் பரிசாகப் பெற்று) நெருங்கும்படியாக (உலவிக் கொண்டு) வந்து,

கைக்கு மோதிர நெடுகி அதி குண்டல ப்ரதாபமும்

உடையோராய் … கையில் மோதிரமும், (காதில்) நீண்டு தொங்கும் ஒளி மிக்க குண்டலங்களைத் தாங்கிய சிறப்பும் உடையவர்களாய்,

முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து

இருக்குமோ எனில் … அவர்களது முகமானதுஒரு செய்யுளும்

வசனமும் கலந்த நூல்களும், திருக்குறள் போன்ற பழைய நூல்களும் விளக்கக் கூடுமோ என்று கேட்டால்,

முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி முறியும்

அவர் தங்கள் வித்தை தான் இது … அவை ஒன்றும் தெரியாததால்

வெட்கத்தால் (முகம்) வெளுத்து, இறுதியில் மனம் குலைந்து

போனவர்களுடைய வித்தைதான் இக்கல்வி எல்லாம்.

முடியவு(ம்) உனை நின்று பத்தியால் மிக மொழியும் வளர்

செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே … (இத்தகைய கல்வி

போதும்,) இது முடிவதாக (இனியேனும்) உன்னை மனம் ஒரு வழியில்நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்ற செவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வரும்படி அருள்வாயாக.

To be continued……………………………

Tags- திருப்புகழில் ,அருணகிரி நாதர், சொல் அழகும்பொருள் வளமும்- Part 9, அரிய செய்திகள்-டாக்டர்கள்நோய்கள்காவேரிசோழநாடுபோலிப்  புலவர்கள்

Purananuru (Tamil Sangam Book) Wonders- 1 (Post No.15,270)

Written by London Swaminathan

Post No. 15,270

Date uploaded in London –  13 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Tamil Sangam Book Purananuru Wonders- 1

Ancient Tamil Encyclopaedia -41; One Thousand Interesting Facts -Part 41

Item 254

(in the first forty parts we saw many wonders from 30 poems from Akananuru. Let us now look at some poems from Purananuru)

Purananuru (pura naanuuru) is one of the Eight Anthologies, part of Sangam Tamil Literature. It is the most important anthology of Sangam Age. It covers mainly the period between 2nd century BCE and 3rd Century CE. In the Akananuru, we see repeated themes regarding love and family life but in Puranauru we see a great variety of information about Tamil life, which is predominantly Hindu.

புறநானூறு பாடல் 1

The very first poem in the collection is in praise of God added by a later poet. He praised Lord Shiva in the invocation poem and the poet’s name itself is Mahadevan, Lord Shiva’s name! Like Kalidasa, he also added more hymns in praise of Lord Shiva in other Sangam books. This poet also wrote the invocation poems for Natrinai, Ainkurunūru, Akanānūru, and Kurunthokai.

***

255

The wonder is that Lord Shiva’s appearance is described in detail which is used by later poets for another 1500 years!

Shiva wears Kondrai flowers on his head;

He is wearing a Kondrai flower garland as well;

His vahana is white Bull (Rishaba vahana);

His flag is also Bull Flag ( it is seen in all Tamil temples during festive days)

He has blue throat (Neela kantan) which is praised by Brahmins; it is in the Vedas.

256 Man and Woman are equal

He shares half his body with his wife (Ardhanari Concept; Hindus only declared that man and woman are equal)

He has crescent on his forehead;(the worship of crescent moon is seen in several poems of Sangam Age)

Ever flowing water pot is held by him (water is the source of life; he is associated with the River Ganga)

He is doing penance.

Eighteen Types of Ganas/followers praise him

***

257

He is a shelter for ALL living beings (எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,)

The very important line in the poem is Lord (Shiva) is the protector of all living beings; Hindus used to use the cliché from ant to elephant.

The Tamil word is Emam is related to Sanskrit word Kshemam.

***

258

Who are the 18 Ganas? (பதினெண் கணனும் ஏத்தவும் படுமே)
it is very important that Indians should know how the society was classified before foreigners invaded India. Those who came to occupy India and divide Hindu society wrote that this is a land of Aryas, Dravidas and Mundas. Some gangs added the words aborigines, tribes etc. But the original classification is 18 groups and they were

Devas

Asuras

Munis

Kinnaras

Kimpurushas

Garudas

Yakshas

Rakshasas

Gandharvas

Siddhas

Saranas / saarana

Vidhyadharas

Nagas

Bhutas

Vetals

Tara ganas (stars)

Bhogabhumi residents (Heaven)

***

The last two are living in the sky/heaven

‘கின்னரர் கிம்புருடர் விச்சா தரர்கருடர்,

பொன்னமர் பூதர் புகழியக்கர் – மன்னும்,

உரகர் சுரர்சா ரணர்முனிவர் மேலாம்.

பரகதியோர் சித்தர் பலர்;

காந்தருவர் தாரகைகள் காணாப் பசாசகணம்,

ஏந்து புகழ் மேய விராக்கதரோ – டாய்ந்ததிறற்,

போகா வியல்புடைய போகபுவி யோருடனே,

ஆகாச வாசிகாள வார்”

259

The last two groups are very interesting !

They are part of Astronomy and Cosmology.

In the Vana Parva of Mahabharata when Arjuna was taken into a space shuttle to heaven he saw stars and asked the pilot Matali who they were. He replied that they were the holy ones. Hindus believe that holy souls become light and you can travel at the speed of light or faster than light (My apologies to Einstein! ). We see inter galactic travellers like Narada and they are classified as Deva Rishis; Deva= Light.

In Indus Valley/ Harappan symbols we see Fish representing Devas.

***

Tamil original is given below

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்றுஅவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறைநுதல் வண்ணம் ஆகின்றுஅப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே. –புறநானூறு பாடல் 1

–Subham—-

Tags- Purananuru, Poem 1, wonders-1, Ancient Tamil Encyclopaedia -41, One Thousand Interesting Facts -Part 41  , item 259

Hinduism through 500 Pictures in Tamil and English-27 படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்- 27 (Post.15,200)

Written by London Swaminathan

Post No. 15,200

Date uploaded in London –  19 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சிவபெருமானின் இரண்டு வடிவங்கள்: அர்த்தநாரீஸ்வரர், சங்கர நாராயணன்

Ardhanarishwara: 

Long before feminist movements arose in the West to advocate for equality, Hindu philosophy had already acknowledged that man and woman share a deeply interdependent relationship, each fulfilling a vital role. Just as a balance scale is steady only when both sides are equal in weight, life attains balance when both genders enjoy equal respect and rights.

This truth was embodied by none other than Mahadev Himself when He manifested as Ardhanarishwara — one half Shiva and the other Devi Parvati (or Adi Shakti). Yet, this form represents far more than external gender equality. It teaches the importance of harmonizing the masculine and feminine energies within ourselves — not in the physical sense, but as spiritual and psychological principles that dwell in every being.

***

Harihar in Karnataka , Sankaranarayanan in Tamil Nadu

The god Harihareshwara is a combination of the gods Shiva and Vishnu. There is a story behind the avatar of this god. In ancient days this place was known as “Guharanya”, a dense jungle and habitat of a demon Guhasura. He had a gift that no human or Rakshasa or god can kill him. And he started harassing people around this place. Then Vishnu and Shiva came together in a new avatara called Hari – Hara (Harihara) – and killed demon Guhasura

Harihara is situated on the banks of the Tungabhadra River, 275 kilometres North of Bengaluru. Harihar and Davangere (14 km away) are referred as “twin cities”.

***

Tiruupaarkatal near Kanchipuram

Similar stories are behind two more famous temples.

Full name of Sankarankoil in Tirunelveli region is Sankara Narayanan Koil, where Shiva appeared as Sankara+Narayanan at the request of his wife Parvati.

In Tirupparkatal, we have slightly a  different story. An ardent Vishnu devotee had a vow of having his food only after visiting a Vishnu temple every day. When he came to Tiruupaarkatal, he could not see any Vishnu temple. When he was starving and praying, an old man came and told that there was a Vishnu temple. When he took him into a Shiva temple, despite his protest, Lord Shiva appeared as Sankara and Narayana .

In many Tevara and Divya Prabantha poems we see verses in praise of this Hari Hara form. Several centuries ago, there was a conflict between Saivites and Vaishnavites and God himself settled that conflict by appearing in this combined form.

***

சிவபெருமானுடைய வடிவங்கள்

சிவபுராணத்தில் சிவனுக்கு 64 வடிவங்கள் கூறப்படுகின்றன அவற்றின் உருவமற்ற வழிபாட்டை குறிக்கும் சிவலிங்கத்தை காண்கிறோம் ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தினை விளக்கும் அர்த்தநாரீஸ்வரர் உருவத்தையும் காண்கிறோம் மே லை  உலகத்தில் பெண்களுக்கு சம உரிமைகள் கேட்டு இயக்கம்  நடத்துவதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆண்களும் பெண்களும் சரி என்ற கருத்தினை விளக்கும் உருவம் அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகும் இதில் சிவனையும் சக்தியையும் பாதி பாதியாக காண்கின்றோம் ஆண்களோடு பெண்களும் சரி நிக்ர் சமானமாக வாழ்வோம்  இந்த நாட்டிலே இன்று பாரதியார் பாடினார். அந்த பாட்டிற்கு காரணமே இந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம் தான்! சிவன்  இல்லாமல் சக்தி இல்லை, சக்தி இல்லாமல் சிவன் இல்லை. இரண்டு சக்தி களும் கூடினால் தான் உலகம் நடைபெறும் என்ற பெரிய கருத்தினை இந்த வடிவம் காட்டுகிறது.

இதையே இன்னொரு விதமாகச் சொல்வது சங்கர நாராயணன் வடிவம் ஆகும்.

***

சங்கர நாராயணன் , ஹரிஹரன்

அர்த்த நாரீஸ்வரனில் பாதி சக்தி; அதே போல சங்கர நாராயணன் என்றா சிவனின் வடிவத்தில் பாதி நாராயணன் ; இதன் தத்துவம் என்னெவென்றால் சிவா சக்தி வடிவமே சங்கர நாராயணன் 

நாராயணன்= சக்தி

சிவன் என்பது தேக்கி வைக்கப்பட்ட ஆற்றல்

சக்தி என்பது செயல்படும்/ பயன்படும் ஆற்றல்.

****

Tirupparkadal story as told by Sri Kanchi Paramacharya  (1894-1994)

சிவ – விஷ்ணு அபேதத்தைக் காட்டும் ஸ்தலங்கள் பல உள்ளன. திருநெல்வேலிச் சீமையில் சங்கர நாராயணன் கோவிலும், (‘சங்கர நயினார் கோயில்’ என்று தப்பாகச் சொல்கிறார்கள்.) மேற்கே ஹரிஹர க்ஷேத்திரத்திலும் இவ்விரண்டு மூர்த்திகளும் ஒன்றாக இணைந்த பிம்பங்கள் உள்ளன. குற்றாலத்தில் விஷ்ணு மூர்த்தியையே அகஸ்திய மஹரிஷி சிவலிங்கமாக மாற்றியிருக்கிறார். இவை பிரபலமான ஸ்தலங்கள். இவ்வளவு பிரபலமில்லாத ஒரு க்ஷேத்திரத்தைப் பற்றிச் சொல்கிறேன்:

திருப்பாற்கடல் என்று ஒரு ஊர் இருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து வேலூருக்குப் போகிற வழியில் இருபது மைலில் இருக்கிறது. முதலில் அந்த க்ஷேத்திரத்தில் ஒரு பெருமாள் கோயில்கூடக் கிடையாதாம். ஈசுவரன் கோயில்தான் இருந்ததாம். ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அநேக க்ஷேத்திரங்களுக்குச் சென்று விஷ்ணு தரிசனம் பண்ணிக் கொண்டு வருகிற காலத்தில் அந்த ஊருக்கு வந்தாராம். ஒவ்வொரு நாளும் ஊருக்குப் போகிற போது விஷ்ணு தரிசனம் பண்ணாமல், அவர் ஆகாரம் பண்ணுவதில்லை என்ற நியமத்தை வைத்துக் கொண்டிருந்தார்.

அவர் திருப்பாற்கடலுக்கு வந்து “எங்கே விஷ்ணு ஆலயம் இருக்கிறது? என்று ஒவ்வொரு கோயிலாகப் போனார். எல்லாம் சிவன் கோயிலாகவே இருந்தன. கடைசியில் விஷ்ணு ஆலயமாகத்தான் இருக்கும் என்று நினைத்து ஒரு கோவிலுக்குள் நுழைந்தார். உள்ளே போனால் ஈசுவரன் இருந்தார். உடனே வெளியே ஓடிவந்து விட்டார். ஆகாரம் பண்ணவில்லை. வயிறு பசியில் துடித்தது. அதைவிட மனஸிலே ‘இன்றைக்கு விஷ்ணு தரிசனம் பண்ணவில்லையே!’ என்று துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கிழவர் அவருக்கு முன்னால் வந்து “என்ன ஸ்வாமி! விஷ்ணு தரிசனம் பண்ண வருகிறீர்களா?” என்று கேட்டார்.

“இந்தப் பிரயோஜனமில்லாத ஊரில் எங்கே ஐயா விஷ்ணு கோயில் இருக்கிறது?” என்று அவர் கோபமாகச் சொன்னாராம்.

“அதோ தெரிகிறதே, அது சாக்ஷாத் விஷ்ணு கோயில்தான்” என்று கிழவர் சொன்னார்.

“நான் அந்த கோயிலுக்குள் நுழையமாட்டேன்” என்று விஷ்ணு பக்தர் சொன்னாராம்.

கடைசியில், ஊர் மத்தியஸ்தத்தின் பேரில் இவர்கள் எல்லோரும் கோவிலுக்குள் சென்றார்கள்

வாஸ்தவத்தில் அங்கே போய்ப் பார்த்தால் சிவலிங்கம் மாதிரி இருந்தது. கீழ் பிரம்ம பீடமாகிய ஆவுடையார் இருந்தது. ஆவுடையாருக்கு நடுவிலிருந்து ஒரு மூர்த்தி எழும்பியதால் அசப்பில் சிவலிங்கமாதிரியே தோன்றிற்று. ஆனால் வாஸ்தவத்திலோ ஆவுடையாருக்கு மேலே தெரிந்தது லிங்கமல்ல. லிங்கத்தின் ஸ்தானத்தில் பெருமாள் நின்று கொண்டிருந்தார்.

அதைப் பார்த்தவுடன், ‘அடடா! நாம் ஏமாந்து போய்விட்டோமே – மஹாவிஷ்ணு அல்லவா இங்கே இருக்கிறார்? என்று அந்த விஷ்ணு பக்தர் மிகவும் மனம் உருகி, அநேக ஸ்தோத்திரங்கள் பண்ணினாராம்.

கிழவரிடம் மன்னிப்புக் கேட்கத் திரும்பினால், அந்தக் கிழவரே விஷ்ணு மூர்த்திக்குள் கலந்து விட்டார். பெருமாளே கிழவராய் வந்திருக்கிறார்!

திருப்பாற்கடல் என்னும் ஊருக்குப் போனால் இப்போதும் பார்க்கலாம். ஆவுடையார் இருக்கும்; அதற்கு மேல் லிங்கம் இருக்கிற இடத்தில் பெருமாள் நின்றுகொண்டிருக்கிறார். இந்த க்ஷேத்திரமும் நமக்கு ஈசுவரன் வேறு மஹா விஷ்ணு வேறு இல்லை என்ற தத்துவத்தை விளக்குகிறது.

****

சங்கரன் கோவில் ,கர்நாடகத்தில் உள்ள ஹரிஹர் (ஹரிஹரன்) நகராக கோவில்களிலும் கதைகள் உண்டு.

சங்கரன்கோவிலில் உமையம்மையின் நீண்ட தவத்துக்கு பின்னர் சிவபெருமானே ஹரி ஹரன் என்ற உருவத்தில் தோன்றினார் என்பது ஸ்தல புராணம்

ஹரிஹர் என்னுமிடத்தில் ஒரு அசுரன் மனிதனாலும் தெய்வத்தாலும் அசுரனாலும் சாகாமல் இருக்க வரம் பெற்றான் அவனது வரத்துக்கு அப்பாற்பட்டதே அரனும் அரியும் ஒன்றுபட்ட வடிவம். இந்த ஹரிஹர உருவத்தினால்   குஹ்யாசுரன் என்ற அசு சுரன் கொல்லப்பட்டான்

–subham—

Tags– சங்கரன் கோவில், ஹரிஹர் , அர்த்த நாரீஸ்வரன், அரன், அரி, திருப்பாற்கடல் Harihar, Sankara Narayanan , Tirupparkatal, Ardhanareesvar, Combined form Siva Sakti, Hinduism through 500 Pictures in Tamil and English-27 படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்- 27