ராமாயணத்தில் வரங்கள் (17) ஒரு சாது கேகய ராஜனுக்குக் கொடுத்த வரம்! (Post No.13,884)

Putrakameshti Yagam performed by Dasaratha

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.884

Date uploaded in London – –14 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (17)

ராமாயணத்தில் வரங்கள் (17) ஒரு சாது கேகய ராஜனுக்குக் கொடுத்த வரம்!

ச. நாகராஜன்

அயோத்யா காண்டத்தில் முப்பத்தைந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘ ஸுமந்திரர் கைகேயியை நிந்திப்பது’ என்ற ஸர்க்கம்.

ஶ்ரீ ராமரை வனம் அனுப்பச் சொல்லிய கைகேயியை சுமந்திரர் பார்த்து பெருமூச்சு விட்டு இரு கண்களும் கோபத்தால் சிவக்க பின்வரும் சொற்களைக் கூறலானார்:

“தேவியே! உங்களை உங்களின் கணவரின் உயிரை அழிக்கின்றவராக எண்ணுகிறேன். தங்களின் குமாரர் பரதன் சக்கரவர்த்தியாக ஆகட்டும். நாங்கள் ராமர் எவ்விடத்திற்குச் செல்கிறாரோ அங்கே கூடச் சென்று விடுகின்றோம். மாமரம் ஒன்றை வெட்டி விட்டு அதற்கு பதிலாக வேப்பமரத்தை ஒருவன் வளர்த்தால் அதற்கு மதுர ரஸம் உண்டாகமாட்டாது. ஒரு வேப்ப மரத்திலிருந்து தேன் ஒழுகாது என்பது தான் உலகில் வழங்கி வரும் பழமொழி.

உங்கள் தந்தையாருக்கு ஒரு புண்யாத்மா ஒப்புயர்வில்லாத ஒரு வரத்தை அளித்திருந்தார். அதனால் உங்கள் தந்தையார் சகல பிராணிகள் சொல்லிக் கொள்ளும் த்வனியின் அர்த்தத்தை நன்கு அறிவார். அதனால் ஈ, எறும்பு முதலிய உயிர்களின் தொனிகளின் அர்த்தமும் அவருக்கு விளங்கிற்று.” – இவ்வாறு ஸுமந்திரர் கைகேயிடம் கூறுகிறார்.

பிதுஸ்தே வரத: கச்சித்ததௌ வரமனுத்தமம் |

ஸர்வபூதருதம் தஸ்மாத் சஞ்ஞஞே வஸுதாதிப: ||

தேன திர்யக்கதானாம் ச பூதானாம் விதிதம் வச: |

அயோத்யா காண்டம், 35ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 18 & 19

தே – தேவரீரது

பிது: – தந்தைக்கு

கச்சித் – ஒரு

வரத: – புண்யாத்மா

அனுத்தமம் – ஒப்புயர்வில்லாத

வரம் – ஒரு வரத்தை

ததௌ – அளித்திருந்தனர்.

தஸ்மாத் – அதனால்

வஸுதாதிப: – பூபாலகர்

சர்வ பூதருதம் – சகல பிராணிகள் சொல்லிக் கொள்ளும் த்வனியின் அர்த்தத்தை

சஞ்ஞஞே – நன்கு அறிவார்

தேன – அதனால்

திர்யக்கதானாம் – ஈ, எறும்பு முதலிய

பூதானாம் – உயிர்களின்

வச: ச – தொனியின் அர்த்தமும்

விதிதம் –  (அவருக்கு) விளங்கிற்று

இவ்வாறாக ஒரு புண்யாத்மா தந்த வரத்தால் அபூர்வமான அனைத்து பிராணிகள் பேசிக்கொள்ளும் த்வனியின் அர்த்தத்தை உணர்பவராக கேகய ராஜன் ஆனார்.

ஒரு சமயம் ‘ஜிரும்பம்’ என்னும் ஒரு எறும்பினது ஒலியைக் கேட்டு அதன் உட்கருத்தை அறிந்து அவர் நகைத்தார்.

உடனடியாக அவர் மனைவி, “ஏன் சிரித்தீர்” என்று கேட்க, “அதை உனக்குச் சொன்னால் எனக்கு மரணம் சம்பவிக்கும்” என்று கேகயராஜன் கூறினார்.

அதற்கு கேகயராஜனின் மனைவி, “நீர் உயிருடன் தான் இரும். அல்லது இல்லாமல் தான் போம். எனக்கு நீர் இதை விளங்கச் சொல்ல வேண்டும்” என்றாள்.

இதைக் கேட்ட கேகயராஜன் தனக்கு வரம் அளித்தவரிடம் சென்று அனைத்தையும் கூறி என்ன செய்வது என்று கேட்டார். உடனே அவர், “இவள் விஷபானம் அருந்தி மாண்டாலும் மாளட்டும்; அல்லது குத்திக் கொண்டு இறந்தாலும் சரி; அதை வெளியிடாதே” என்றார்.

அதன் படி கேகயராஜன் தனது மனைவியை தக்ஷணமே ஒதுக்கி விட்டு குபேரன் போல வாழலானார்.

இதைக் கூறிய ஸுமந்திரர், கைகேயியிடம், “உமது தாயைப் போலவே விளையும் தீங்கை எண்ணாமல் தசரதரிடம் தீங்கைக் காட்டுகின்றீர்”

என்கிறார்.

இந்த ஸர்க்கத்தில் ஒரு தபஸ்வி மூலம் கேகயராஜன் பெற்ற வரத்தை அறிவதோடு கைகேயின் தாயாரின் துர் ஆசையையும் அதனால் விளையும் தீங்கையும் எண்ணாமல் அவள் இருந்ததையும் உணர்கிறோம்.

***

Dreams in Tamil Veda Tirukkural and Tamil Proverbs (Post No.13,883)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,883

Date uploaded in London – 13 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Tamil Veda Tirukkural is the greatest literary piece in Tamil language. Linguists dated it around fifth century CE. Tiruvalluvar, author of Tirukkural, was a great Sanskrit scholar; he not only began his work with Sanskrit words, but also finished his work with Sanskrit words. Moreover, he used Sanskrit words in over 600 couplets. Such a great scholar used dream in over 13 couplets. Tamil proverbs also show the Tamil views on dreams. What one sees in dreams is useless and not practical. it is like building castles in the air. Hindus believe that what we see in dreams in the very early morning may come true. So, there is an idiom Day Dreaming. They used to say don’t day dream பகற் கனவு காணாதே!  another interpretation is also available for day dreaming. It is like building castles in the air; just thinking about impractical things.

Here is what Tiruvalluvar says about dreams

Dreams in Tamil Veda Tirukkural

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.—819

The fellowship of men whose actions are different fromtheir words willlead to evil, even in dreams

***

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு.—1054

Even asking is as good as giving, from the generous who hide noteven in the dream.

****

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து–.குறள் 1211:

This dream vision serves as a messenger from my beloved how shall I feast it?

***

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு

உயலுண்மை சாற்றுவேன் மன்.—1212

Should my fish shaped eyes close in sleep at my request. I would meet me beloved in a dream and pour out to him that I have endured

***

நனவினால் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டென் உயிர்.–1213

Him, who in waking hour no kindness shows,

In dreams I see; and so my lifetime goes!

My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.

****

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

நல்காரை நாடித் தரற்கு.-1214

He does not come in wakeful hours; but dream finds him out and I enjoy his love- bliss–1214

****

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே இனிது.-1215

Dream is a joy for it brings him to my sight. How then to tell about the joy of seeing him while awake

***.

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்

காதலர் நீங்கலர் மன்.-1216

And if there were no waking hour, my love

In d reams would never from my side remove.

****

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்

என்எம்மைப் பீழிப் பது.–1217

The cruel one, in waking hour, who all ungracious seems,

Why should he thus torment my soul in nightly dreams?

****

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து-1218

When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul. 1218

****


நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்–1219

In dreams who ne’er their lover’s form perceive,

For those in waking hours who show no love will grieve.

They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.

****

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.-1220

They say, that he in waking hours has left me lone;

In dreams they surely see him not,- these people of the town;

The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams.

———-

Dreams in Tamil Proverbs

1004. இராக் கண்ட சனி மிடாப்போல வீங்கின கதை.
The story of one who in a dream of the night saw Saturn swelling as a large pot.

1430. ஊமை கண்ட கனாப்போல் இருக்கிறது.
It is like the dream of the dumb.
He is unable to relate his dream and therefore cannot obtain its interpretation.

1687. எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனாப்போல் ஆயின.
My days are like the dream of the dumb.

2347. கனவிலும் காக்கைக்கு மலம் தின்கிறதே நினைவு.
Even in its dreams, the crow’s thoughts turn on eating filth.

2348. கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
Will the money seen in a dream meet one’s expenses?

2349. கனவில் கண்ட பொருள் கானலில் கண்ட புனல்.
The wealth seen in a dream, the water observed in a mirage.

2350. கனவில் உண்ட சோறு பசி தீர்க்குமா?
Will the rice consumed in a dream appease hunger ?

2351. கனவிலே கண்டவனுக்குப் பெண் கொடுத்த கதை.
The story of a woman given in marriage to a man seen in a dream.

2492. காலை மோட்சமும் வாலை ஞானமும் நிலைக்காது.
Dreams of bliss and premature wisdom are not lasting.

2517. கிடக்கிறது குட்டிச்சுவர் கனாக் காண்கிறது மச்சுவீடு.
Dwelling in a ruinous hut and dreaming of a palace.

2584. குடி இருப்பது குச்சுவீடு, கனாக் கண்டது மச்சுமாளிகை.
He who dwells ina humble cottage dreams ofceiled apartments.

4468. படையாது படைத்த மருமகளே உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன்.
O, my daughter-in-law, who art – entertaining me sumptuously, I dreamt that thou wast being dissected by a pariah.

—Subham—

Tags- Dreams, Tamil Veda, Tirukkural, Proverbs

தொல்காப்பியத்தில் கனவுகள் (Post No.13,882)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,882

Date uploaded in London – 13 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சங்க இலக்கியத்திலும் பழந்தமிழ் நூலான தொல்காப்பியத்திலும் நாற்பதுக்கும் மேலான கனவுகள் பற்றிய குறிப்புகள் உள. உலகில் கனவுகள் பற்றி இந்துக்கள் சொன்ன அளவுக்கு வேறு யாரும் சொன்னதில்லை. காளிதாசன் சுபசகுனங்கள் பற்றி கனவில் கண்டதை எழுதியுள்ளான். பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளிலும் செய்யும் சந்தியாவந்தனத்தில் கெட்ட கனவுகள் வரக்கூடாது என்று மந்திரம் சொல்கின்றனர்  ஒருகாலத்தில் மதுரை ஆதீனகர்த்தராக இருந்தவர் பெரிய அறிஞர். அவர் எழுதிய இறந்தவர்கள் வாழும் நிலையும் பேசும் முறையும் என்ற நூலில் கனவுகளில் முன்னோர்கள் தோன்றி எச்சரித்தது அப்படியே நடந்தது என்று தக்க உதாரணங்களுடன் எடுத்துக்காட்டியுள்ளார்.

மேலை நாட்டினர் கனவுகள் என்பது நம் வாழ்வில் ஏற்பட்ட அவியல் காட்சிகள் , குழம்பிப் போன காட்சிகள் என்று மட்டும் சொல்கின்றனர். ஆனால் அவர்கள் இப்போது விலங்குகளும் கனவு காண்கின்றன என்று   நாம் சொன்னதை ஒப்புக்கொள்கிறார்கள்; இன்னும் கொஞ்ச காலம் கழித்து நாம் சொல்லும் அனைத்தையும் சொல்லி ஏதோ அவர்கள் கண்டுபிடித்ததாகவும் எழுதப்போகிறார்கள். சில அறிஞர்கள் மட்டும் கணித மேதை ராமானுஜம் போல கனவுகளை ஒப்புக்கொண்டு, கதை, கட்டுரைகள், அறிவியல் உண்மைகள் கூட கனவில் கண்டதாக எழுதி இருக்கிறார்கள்

மனிதர்கள் கனவு காணாமல் தூங்கவே முடியாது என்பதை முதலில் கண்டுபிடித்தவர்களும் இந்துக்களே. இப்பொழுது நம்முடைய பெயரைச் சொல்லாமல் அதை எல்லா என்சைக்ளோபீடியாக்களிலும் காணலாம். ஆனால் மேலை நாட்டினருக்கு கிரேக்கர்கப் பற்றி மட்டுமே தெரியும் ஏனெனில் அது அண்டை நாடு. வேறு உலகம் பற்றி அவர்களுக்குத் தெரியாது ஆகையால் கிரேக்கர் என்ன புலம்பினார்களோ அது பற்றி மட்டுமே எழுதி இருக்கிறார்கள் ;நிற்க.

****

காளிதாசன் சொன்னதை தொல்காப்பியரும் சொன்னதை முதலில் காண்போம்

காதல் நோய் வயப்பட்டவர்கள் கனவில் புலம்புபவதையும்  தூக்கம் வராமல் தவிப்பதையும் தொல்காப்பியரும் அவருக்கு முன்னால் வாழ்ந்த காளிதாசனும் பாடி இருக்கிறார்கள். தொல்காப்பிய பொருள் அதிகாரத்திலும் காளிதாசனின் மேக தூதம், ரகுவம்ச காவியத்திலும் இதைக் காண்கிறோம்.

ராமபிரான் தோன்றிய ரகுவம்சத்தில் காம வெறிபிடித்த சில மன்னர்களும் பிற்காலத்தில் தோன்றினர்; அவர்களில் ஒருவன் இரவில் காமக்கிழத்திகள் பற்றி அவர்களின் பெயர்களைக் கூப்பிட்டுப் புலம்பியதையும் அவனது மனைவியர் அதைக் கண்டித்ததையும் ரகு வம்சத்தில் காளிதாசன் பாடியுள்ளான். அதே போல கனவில் மனைவி அல்லது கணவரைக் காண்பது அல்லது தூக்கம் வராமல் தவிப்பது ஆகியவற்றை மேக தூதத்தில் காண்கிறோம்.

கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல்  — தொல்.1216

காதல் கைம்மிகக் கனவில் அரற்றலும் – தொல்.1061

स्वप्नकीर्तितविपक्षमङ्गनाः
प्रत्यभैत्सुरवदन्त्य एव तम्।
प्रच्छदान्तगलिताश्रुबिन्दुभिः
क्रोधभिन्नवलयैर्विवर्तनैः॥ 19-22

svapnakīrtitavipakṣamaṅganāḥ
pratyabhaitsuravadantya eva tam |
pracchadāntagalitāśrubindubhiḥ
krodhabhinnavalayairvivartanaiḥ || 19-22

****

இன்னும் ஒரு குறிப்பு

கனவும் உரித்தால் அவ்விடத்தானே- — தொல்.1143

***

சங்கத் தமிழ் நூல்களில் கனவுகள் இடம்பெறும் நூல்களும் பாடல்களின் எண்களும்

குறுந் தொகை   – 148, 30

நற்றிணை  – 87, 175

ஐங் குறுநூறு  – 234

அகநானுறு  – 141; 303; 353; 379; 132; 170

பதிற்றுப்பத்து  – 19; 20; 44; 79; 89; 98; 11

புறநானுறு  – 377; 387; 390

பரிபாடல் –   8-77; 8-103

கலித் தொகை – 90-22; 144-5; 147-57;

பொருநர்  ஆற்றுப்படை – line 98

****

இவைகளில் சில சுவையான விஷயங்களை மட்டும் காண்போம்.

கனவிற் காணும் இவளே

நனவிற் காணாள் நின் மார்பே

ஐங் குறு நூற்றில் (234) வரும் இந்தப் பாடலில் ஒரு கனவுக்காட்சி வருகிறது ;பெண் ஒருத்தி காதலை எண்ணி எண்ணி தூங்குவதே இல்லையாம்; அப்படித் தூங்கினாலும் கொஞ்ச நேரம் மட்டும் தூங்குகிறாளாம் ; அதிலும் கணவன் வருகிறான்; ஆயினும் அவன் மார்பைத் தழுவும் நேரம் குறைவு ;உடனே விழித்தெழுந்து மேலும் கஷ்டப்படுகிறான்; உடல் மெலிந்து வளையல் கழன்று விடுகிறது  .

***** 

புறநானூறு Purananuru 377

தமிழ் மன்னர்கள் மகத்தான இந்துத்வா ஆர்வலர்கள்; முதுகுடுமி பெருவழுதி செய்த யாகங்களைக் காளிதாசனும் ரகு வம்சத்தில் பாடுகிறான். அவர்கள் யாகத்திற்காக செய்த அவப்ருத  ஸ்நானத்தால் எப்போதும் நனைந்த ஆடைகளுடன் காட்சி தருவதாக பாண்டிய மன்னர்களையும் அகஸ்திய முனிவரையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறான் காளிதாசன்; சோழ மன்னர்களும் அதில் சளைக்கவில்லை. அவன் ராஜ சூய யாகம் செய்து பாண்டிய , சேர மன்னர்களையும் அழைத்து அவ்வையாரையும் அழைக்கிறான் என்கிறது புறநானூறு.

சோழன் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளி வழங்கிய கொடை

கனவில் கண்டாங்கு, வருந்தாது நிற்ப,

நனவின் நல்கியோன், நசைசால் தோன்றல்;

கனவில் மட்டுமே ஏழைகள் காணும் தங்க இரத்தின நகைகளை அவன் வாரி வழங்கினானாம்

****

புறநானூறு Purananuru 387

சேர் மன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பவனும் கொடை யில் சிறந்து விளங்கினான் ; அவனும் கனவில் மட்டுமே காணக்கூடிய செல்வத்தை அள்ளிதந்தான் என்கிறார் புலவர் ;

யானை குதிரை பசுமாடுகள் பெருமளவு தானியக் குவியல்களை  அவன் தருகிறான்

என் சிறுமையின், இழித்து நோக்கான்,              20

தன் பெருமையின் தகவு நோக்கி,

குன்று உறழ்ந்த களிறு என்கோ?

கொய் உளைய மா என்கோ?

மன்று நிறையும் நிரை என்கோ?

மனைக் களமரொடு களம் என்கோ?     25

ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின்

நல்கியோனே, நசைசால் தோன்றல்,

****

புறநானூறு Purananuru 390

அதியமான் நெடுமான் அஞ்சி என்ற குறுநில மன்னனின் அரண்மனையின் பாதுகாப்பு அரணை எண்ணி வியக்கிறார் புகழ்பெற்ற சங்க கால அவ்வையார் ; அவனைப் போற்றுவோர் மட்டுமே உள்ளே வரமுடியுமாம் ; எதிரிகளோ அந்தக் கோட்டைக்குள் நுழைவதை கனவிலும் எண்ண முடியாதாம்

ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர்    5

கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர்,

****

தமிழில் ஒரு பழமொழி உண்டு – திருடனுக்குத் தேள் கொட்டியது போல  என்று

அவன் கத்தவும் முடியாது உதவிக்கு யாரையும் அழைக்கவும் முடியாது இது போல கனவில் பேயைக் கண்டவன் அது பற்றி சொல்லவும் முடியாது அதை மறக்கவும் முடியாது சொன்னால் பயம் அதிகரிக்கும் ; மற்றவர்கள் நகைப்பார்கள் இதோ அந்தப்பாடல்

பேய் கண்ட கனவில்- அகம் 303

****

செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிப் பாடாத தமிழ்ப் புலவர் இல்லை; கனவு போல செல்வம் வ ந்து  போகிறது என்பது புலவரின் துணிபு

நனவில் இயன்றதாயினும்  கங்குல்

கனவின் அற்று அதன் கழிவே – அகம் 379

****

கனவுகள் நனனாவாவது இல்லையே என்று புலம்புகிறார் இன்னுமொரு புலவர்

கனவு அழிந்தனையவாகி  நனவின்

நாளது செலவும் மூப்பின் வரவும் – அகம்353

இவ்வாறு நிறைய சுவையான விஷயங்களைக் காணலாம்

சங்க காலத்துக்குப் பின்னர் எழுந்த திருக்குறளிலும் காலம் சொல்ல இயலாத தமிழ்ப் பழமொழிகளிலும் கனவு பற்றி நிறையவே உள்ளன; அவைகளையும் காண்போம்

To be continued………………………………………

TAGS- தொல்காப்பிம்,கனவுகள், சங்க இலக்கியம், பெண்கள் , புலம்பல், காதல் நோய் , கொடை , அவ்வையார் 

ராமாயணத்தில் வரங்கள் (16)  கைகேயி  தசரதனுக்கு கூறியது! (Post No.13,881)

PICTURE OF KAIKEYI ND DASARATHA

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.881

Date uploaded in London – –13 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (16) 

ராமாயணத்தில் வரங்கள் (16) கைகேயி  தசரதனுக்கு அலர்க்கன் என்னும் ராஜரிஷி தனது கண்களைத் தந்தது பற்றிக் கூறியது!

ச. நாகராஜன்

அயோத்யா காண்டத்தில் பன்னிரண்டாவது ஸர்க்கமாக அமைவது ‘ கைகேயியை நிந்திப்பது’ என்ற ஸர்க்கம்.

ராமனுக்கு வனவாசம்; பரதனுக்கு பட்டாபிஷேகம் என்ற கைகேயியின் இருவரங்களையும் கேட்ட தசரத மன்னன் மனக்கலக்கம் அடைந்து ஒரு முகூர்த்த காலம் சுயநினைவற்று மயங்கிக் கிடந்தார்.

பின்னர் ஒருவாறு தன்னறிவை அடைந்து கடும் சினம் கொண்டு கைகேயியைப் பலவாறாக நிந்திக்கிறார்.

“கொடிய விஷமுள்ள பாம்பு போல எனக்கே அழிவைத் தருவாய் என்பதை தெரியாமல் என்னால் எனது மாளிகையில் வைக்கப்பட்டாய். ராமனை எப்படி நான் பிரிவேன்” என்று இப்படிப் பலவாறாகப் புலம்புகிறார்.

கைகேயியைக் கடும் வார்த்தைகளால் நிந்திக்கிறார்.

கைகேயியோ மனம் மாறவில்லை. தனது வரங்களை ராஜா தசரதன் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்துகிறாள்.

ஒருவன் வாக்தத்தம் செய்து விட்டால் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக மிகப் பெரும் தியாகங்களையும் செய்வான் என்பதை கைகேயி ராஜா தசரதனுக்கு எடுத்துரைத்து அவன் தனக்குத் தந்த இரு வரங்களையும் வாக்குதத்தம் மீறாமல் நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்துகிறாள்.

“சக்ரவர்த்தியாரே! ஏதோ ஒரு வரத்தை வாக்தத்தம் செய்து விட்டு இப்பொழுது மாறான மொழிகளை உரைக்கின்றீர். மன்னவர்களுக்கே ஒரு குறையை விளைவிக்கப் போகின்றீரா என்ன?”

“சிபி சக்ரவர்த்தி இந்திரன் பருந்தாகவும் அக்னி பகவான் புறாவாகவும் உருவம் தரித்து சண்டை போடுவதாய் நடனம் செய்து கொண்டு வந்த போது தனது மாமிசத்தை பருந்நாயிருந்த இந்திரனுக்குக் கொடுத்தருளினார். (அவர் புறாவாக இருந்த அக்னிதேவனுக்கு வாக்தத்தம் முன்னமேயே பண்ணியிருந்ததனால்!)

 அலர்க்கன் என்னும் ஓர் ராஜரிஷி தனது இரு கண்களையும் பிடுங்கிக் கொடுத்து விட்டு உத்தம கதியை அடைந்தார்.”

என்று இவ்வாறாக தனது வாதத்தை கைகேயி முன் வைக்கிறாள்.

ஷைப்ய ஷ்யேனகபோதீயே ச்வமாம்சம் பக்ஷிணே ததௌ |

அலர்கஸ்சக்ஷுஷீ தத்த்வா ஜகாம கதிமுத்தமாம் ||

    அயோத்யா காண்டம், 12-ம் ஸர்க்கம் ஸ்லோகம் 43

ஷைப்ய: –  சிபி சக்ரவர்த்தியானவர்

ஷ்யேன கபோதீயே – இந்திரன் பருந்தாகவும் அக்னி பகவான் புறாவாகவும் உருவம் தரித்து சண்டை போடுவதாய் நடனம் செய்து கொண்டு வந்த போது

ஸ்வமாம்சம் – தனது மாமிசத்தை

பக்ஷிணே – பருந்தாயிருந்த இந்திரனுக்கு

ததௌ – கொடுத்தருளினார் (புறாவாய் இருந்த அக்னி தேவனுக்கு அவர் முன்னமேயே வாக்தத்தம் செய்திருந்தமையால்)

அலர்க: – அலர்க்கனெனும் ஓர் ராஜரிஷி

சக்ஷுஷி – தனது இரு கண்களையும்

தத்த்வா – பிடுங்கிக் கொடுத்துவிட்டு (ஒரு பிராம்மணனுக்கு முன்னமே வாக்குக் கொடுத்தமையால் அவருக்குக் கொடுத்து)

உத்தமாம் – உத்தம

கதிம் ஜகாம – கதியை அடைந்தார்

இவ்வாறாக கைகேயி தசரதனிடம் முன்னர் நடந்த இரு சம்பவங்களைச் சுட்டிக் காட்டி நினைவூட்டி கொடுத்த வாக்கை மீறக் கூடாது என்கிறாள்.

சமுத்திரமானது தேவர்கள் கரையைத் தாண்டி வராமல் இருக்க வேண்டுமென பிரார்த்தித்தபோது அப்படியே செய்வதாய் ஏற்றுக் கொண்டு விட்டு கரையைக் கடக்காமல் இருக்கிறது.

இதுவரையில் இருக்கின்ற தர்ம நெறியை மனதில் வாங்கிக் கொண்டு வாக்குதத்தத்தைப் பொய்யாகச் செய்யாதேயும்” என்கிறாள் கைகேயி.

இங்கு அலர்க்கன் என்ற ராஜரிஷி பற்றிய விவரத்தையும் அவன் தான் கொடுத்த வாக்கின் படி ஒரு  பிராமணனுக்குத் தன் இரு கண்களை ஈந்தது பற்றியும் வான்மீகி விளக்குகிறார்.

***

Dreams in Kalidasa Kavyas and Sangam Tamil Literature- Part 2 (Post No.13,880)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,880

Date uploaded in London – 12 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

First part was posted yesterday with Kalidasa’s dream references.

Dance dramas were enacted during Vedic Days. About twenty dialogue poems in the Rig Veda, the oldest book in the world, are a summary of those dance dramas. And 2000 years ago, Bharata Muni created the science of dance drama, and he put his treatise in 6000 Sanskrit slokas.

Kalidasa and his predecessors have dealt with dreams in their dramas. Tamil references are available from the oldest Tamil book Tolkappiam. He refers to dreams at least in three places in the third chapter or section called Porul Adhikaram. This section is considered a later addition. But one interesting comparison with Kalidasa is available.

Tolkappiyar says that a love sick lady talks in sleep dreaming about her lover.it is in Sutra 1061. காதல் கைம்மிகக் கனவில் அரற்றலும் – தொல்.1061

Kalidasa in his Raghuvamsa Kavya says a lovesick husband who has many concubines also do the same.

स्वप्नकीर्तितविपक्षमङ्गनाः
प्रत्यभैत्सुरवदन्त्य एव तम्।
प्रच्छदान्तगलिताश्रुबिन्दुभिः
क्रोधभिन्नवलयैर्विवर्तनैः॥ १९-२२

svapnakīrtitavipakṣamaṅganāḥ
pratyabhaitsuravadantya eva tam |
pracchadāntagalitāśrubindubhiḥ
krodhabhinnavalayairvivartanaiḥ || 19-22


His mistresses even without uttering a word severely rebuked him who called out the names of their rivals in dream, by rolling away from him in the bed on which they shed tears on the coverlet, and smashed their bracelets in anger. [19-22]

He named and called them in his dreams. His wives rebuked him.

கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல்  — தொல்.1216

Tolkappiam sutra 1216 may also be compared with Megaduta of Kalidasa. The lovesick lady is sleepless and bemoans she couldn’t even see her lover in the dream because of no sleep.

Sangam Tamil books which are nearly 2000 years old have got about 40 references to dreams; following are the books and the verses where we come across dreams:

Kuruntokai – 148, 30

Natrinai – 87, 175

Ainkurunuru – 234

Akananuru – 141; 303; 353; 379; 132; 170

Pathitruppathu – 19; 20; 44; 79; 89; 98; 11

Purananuru – 377; 387; 390

Paripatal- 8-77; 8-103

Kalittokai- 90-22; 144-5; 147-57;

Porunar atruppadai- line 98

I will give you only the interesting points:

In Ainkurunuru verse 234 we see a woman sleeps very little; if at all she sleeps she sees her husband in the dream; when she wakes up after a short while she suffers more because her lover is not nearby. She becomes thinner and thinner in course of time.

கனவிற் காணும் இவளே

நனவிற் காணாள் நின் மார்பே 

****

Purananuru poet sings about the generousness of the Choza king who performed Rajasuya Yagna in verse 377. One of the compliments is that the king gave gold and gems which one sees only in dreams.

புறநானூறு Purananuru 377

சோழன் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளி நள்ளிரவில் கொடை வழங்கிப் பாதுகாத்தான்.

கனவில் கண்டாங்குவருந்தாது நிற்ப,

நனவின் நல்கியோன்நசைசால் தோன்றல்;

****

Verse 387 in praise of Chera king is also in the same tone. Whatever one dreams such as elephant, horse, cows, huge quantity of grains – all was given to the poor by the king.

    புறநானூறு Purananuru 387

செல்வக்கடுங்கோ வாழியாதன்

திறை கொடுக்கும் மன்னர்கள் தம் மன்னனை வாழ்த்த வேண்டும் என்று புலவர் வாழ்த்துகிறார்.

ஆங்கு அவைகனவு என மருளவல்லேநனவின்

நல்கியோனேநசைசால் தோன்றல்,

****

Famous Tamil poetess Avvaiyar sings about the tight security in the palace of Athiyaman Neduman Anji, a famous chieftain. Only his supporters can enter the palace compound. His enemies can never reach it even in their dreams (Puram 390).

புறநானூறு Purananuru 390

அதியமான் நெடுமான் அஞ்சி

பொருநன் ஒருவன் அதியமானைப் பாடித் தன் வறுமையைத் தீர்த்துக்கொண்டதைக் கூறுவதாக ஔவையாரின் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர்    5

கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர்,

****

We see the same approach in other poems as well.

But there are some verses where we see rare things about dreams.

If one sees a ghost in the dream that person hides it from others and never talk about it -Akam 303

பேய் கண்ட கனவில்

****

Wealth never stays with a person for ever. It comes and goes like one sees it in dreams- Akam 379

நனவில் இயன்றதாயினும்  கங்குல்

கனவின் அற்று அதன் கழிவே – அகம் 379

****

Another poet bemoans that whatever good we see in dreams never comes true

கனவு அழிந்தனையவாகி  நனவின்

நாளது செலவும் மூப்பின் வரவும் – அகம்353

****

There are more references in Post Sangam books like Tirukkural and Silappadikaram. Let us look at them.

To be continued…………………………..

Tags- Sangam Tamil, Literature, Dreams, Tolkappiam, comparison, with Kalidasa, Raghuvamsa, Meghadutam

South Indian Society’s Drama in London! Let us Celebrate its 30th Anniversary!! (Post No.13,879)

London Swaminathan as Saitji with Sivasankaran and Dr Ramdas

SaitjiLondon Swaminathan with Mrs  Chitra Iyengar

Sixth Year Committee of SIS

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,879

Date uploaded in London – 12 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  


With Mrs Kalpana Murthy as Jil Jil Mataji

South Indian Society (SIS) was started in London in 1988. It organised a drama to celebrate its sixth anniversary on 5th of November 1994. Dr Iyengar who got it registered in that year organised a drama to raise funds for it. I (Swaminathan), Siva Sankaran and Dr Ramdas played the main roles. Mr Jagannathan, Mrs Chitra Iyengar, Mrs Mangalam Mathrubootham, Mrs Kalpana Murthy, playwright and London poet Giridhar and Ravichandra Rao did other roles brilliantly. To represent the cultural milieu of South India Tamil, Kannada, Telugu, Malayalam dialogues were used in the play.

Our comedy drama was titled Humpty Dumpty (Dillu Mullu in Tamil)

சவுத் இந்தியன் சொஸைட்டி நாடகம் 5-11-1994

ஹம்டி டட்டி (தில்லுமுல்லு / கோல்மால்

சுவாமிநாதன்  நடித்த பாத்திரம் – சேட்ஜி

கிரிதர் எழுதிய நாடகம்

Most of the rehearsals were held at Mrs Murthy’s residence. Mrs Latha Iyer of Eastham collected advertisements with Iyengar and prepared a brochure. The drama raised around £.1500 for the society.

My association with the SIS began in 1990 when Mrs Kalpana Murthy rang me about a SIS coach trip to Weymouth, Bournemouth via Stonehenge. Since my brother came from India in August 1990, we three (myself, my wife, my brother) took part in that memorable trip. Later when I was the chairman of SIS, we organised a trip to Brighton, which is also ever green in my mind.

Though thirty long years have passed since I acted, still we discuss about the plus and minus points of the day. The drama itself was a comedy, and the collapse of the dais made for Gill Gill Mataji (Mrs Kalpana Murthy) collapsed during the play, which added more comedy to the play.

 I have attached a few pictures and the list of committee members during its sixth year. The brochure pages show the full cast of the play. The members who attended the play on that day are still coming to SIS events.

***

It is very sad that we lost Mrs Mathrubootham and Dr Ramdas during this period. They took part in it with great enthusiasm.

The success of this drama inspired me to take part in another drama titled Kidnap in Kelambakkam organised by Mrs Maithreyi Ganesan to raise funds for the Bharatiya Vidya Bhavan in London. I and Mrs Jayashri Lakshmikanth took the main roles. That play was also a big success and raised a good amount for the Bhavan in London. All the rehearsals were held at Mr Manian’s house in Acton town.

Before us and later also, South Indians showed very keen interest in developing drama in London. I have mentioned those good old days in my old article titled “All Credits go to Sita Mami”. You may find in it who pioneered drama in London.

(If you have pictures of those dramas , please send them to me. I want to create a proper record. I have already posted the pictures given by Mrs Sita Venkatraman (Sita Mami).

Let us support SIS’ new actors and the drama in London

—Subham—-

Tags- SIS, drama, 1994, 30th Anniversary, Humpty Dumpty, Kidnap in Kelambakkam, Dr Iyengar, brochure, South Indian Society

கனவில் கண்ட சுப சகுனங்கள்:   காளிதாசன் சொல்கிறான் (Post.13,878)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,878

Date uploaded in London – 12 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கனவில் எதைக் கண்டால் சுபச் செய்திகள் வரும்?  புத்தர் பிறப்பதற்கு முன்னர் மாயாதேவி கனவில் இந்திரனின் வெள்ளை   யானை வந்தது ; சித்தார்த்தன் பிறந்து கெளதம புத்தன் ஆனான் . அவருக்கு முன்னால் பிறந்தவர் மஹாவீரர்.; அவ்வையார் வாக்கின் படி புலன் ஐந்தையும் வென்ற மாவீரன் ; உலகில் இரண்டு பேருக்கு மட்டுமே மாவீரன் பட்டம்; ஒன்று வர்த்தமான மஹாவீரர்; அவருக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த ஆஞ்சனேயன்; ஏனென்றால் இவர்கள் இருவரும் ஐம்புலன்களை வென்றவர்கள்.

மஹாவீரர் பிறப்பதற்கு முன்னர், அவரது தாயாருக்கு 14 சுப சகுனங்கள் கனவில் வந்தன ; அவையாவன:– மகாவீரரின் அன்னையின் பெயர் த்ரிசலா தேவி ; அவருடைய கனவில் யானை, காளை மாடு, சிங்கம் ,மகா லெட்சுமி, மாலைகள் , சந்திரன், சூரியன், பறக்கும் கொடி, தங்கக்குடம் , தாமரைத் தடாகம்,  அலைகடல், விண்ணில் பறக்கும் விமானம் ,இரத்தின நகைகள் , புகையற்ற தீ  ஆகியன தோன்றின.

காளிதாசன்  ரகுவம்ச காவியத்தில் தசரதன் மனைவியர் மூவரும்  கண்ட கனவில் தோன்றிய சுப சகுனங்களை வருணிக்கிறான் :

गुप्तम् ददृशुरात्मानम् सर्वाः स्वप्नेषु वामनैः।
जलजासिकदाशार्ङ्गचक्रलाञ्छितमूर्तिभिः॥ 10-60

சங்கு , சக்கரம் , கத்தி , கதை , வில்  ஆகியவற்றை ஏந்திய ஒரு குள்ளமான மனிதர் தங்களைப் பாதுகாப்பதாகக் கனவு கண்டனர்- 10-60 ரகுவம்சம்

இதற்கு உரை எழுதியோர் இவை விஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்கள் என்று கூறுகின்றனர் அவை பாஞ்சஜன்யம், நந்தகம், கெளமோதகி, சார்ங்கம், சுதர்சனம் எனப்படும். விஷ்ணு பெரிய உருவத்தில் தோன்றினால் கர்ப்பிணிகள் பயந்து விடுவார்கள் என்பதால் குள்ள வடிவு என்று காளிதாசன் எழுதியதாகவும் வியாக்கியானம் போகிறது!

हेमपक्षप्रभाजालम् गगने च वितन्वता।
उह्यन्ते स्म सुपर्णेन वेगाकृष्टपयोमुचा॥ 10-61

விஷ்ணுவின் வாகனமாகிய கருடன் பொன்மயமான மேகத் திரளிடையே தங்களை அழைத்துச் செல்வதாகவும் கனவு கண்டனர்.

बिभ्रत्या कौस्तुभन्यासम् स्तनान्तरविलम्बितम्।
पर्युपास्यन्त लक्ष्म्या च पद्मव्यजनहस्तया॥ 10-62

அடுத்த கனவில் விஷ்ணுவின் கவுஸ்துப மணியை அணிந்த  லெட்சுமி தாமரை மலர் என்னும் விசிறியால் வீசி, தங்களை உபசரிப்பதையும் பார்த்தனர் .

कृताभिषेकैर्दिव्यायाम् त्रिस्रोतसि च सप्तभिः।
ब्रह्मर्षिभिः परम् ब्रह्म गृणद्भिरुपतस्थिरे॥ 10-63

இன்னும் ஒரு கனவில் ஏழு ரிஷிகளும் ஆகாச கங்கையில் குளித்துவிட்டு வந்து தங்களை உபசரிப்பதாகவும் பார்த்தனர்.

विभक्त आत्मा विभुस्तासामेकः कुक्षिष्वनेकधा।
उवास प्रतिमाचन्द्रः प्रसन्नानामपामिव॥ 10-65

சந்திரன் எப்படி 3 நீர்நிலைகளில் பிரதிபலிக்கிறானோ அப்படி கடவுள் 3 வடிவங்களில் வந்தார் என்றும் கவி பாடுகிறார் .

இவையெல்லாம் பத்தாம் சர்க்கத்தில் வரும் பாடல்கள்

****

இதற்கு முன்னர் எட்டாவது சர்க்கத்தில் அஜன் கண்ட கனவு வருகிறது  அவன் தசரதனுக்கு முந்திய சூர்ய வம்ச அரசன் .

மகன் தசரதன் சிறுவனாக இருந்ததால் மனைவி இந்துமதி இறந்த பின்னரும் அஜன் எட்டு வருடங்கள் உயிர் வாழ்ந்தான் எப்படியென்றால் அவளது படத்தைப் பார்த்தும் கனவில் அவளை சந்தித்து ஆனந்தம் அடைந்தும் உயிரைத் தக்கவைத்துக் கொண்டான். .

तेनाष्टौ परिगमिताः समाः कथंचिद्बालत्वादवितथसूनृतेन सूनोः|
सादृश्यप्रतिकृतिदर्शनैः प्रियायाः स्वप्नेषु क्षणिकसमागमोत्सवैश्च॥ 8-92

****

சில நேரங்களில் நமக்கு கெட்ட கனவுகள் வரும்; விழித்தவுடன் அப்பாடா , இது சொப்பனம்தானே என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவோம். இந்த மனித அனுபவத்தையும் காளிதாசன் பயன்படுத்துகிறான்.

ராம-ராவண யுத்தத்தில் இந்திரஜித் நாக பாசங்களால் ராம லெட்சுமணர்களைக் கட்டினான் ; ஆனால் கருடன் வந்தவுடன் அவை அவிழ்ந்தன; அதாவது கனவில் தோன்றிய கஷ்டம்போல சிறிது நேரமே நாகபாசம் இருந்தது  

गरुडापातविश्लिष्टमेघनादास्त्रबन्धनः।
दाशरथ्योः क्षणक्लेशः स्वप्नवृत्त इवाभवत्॥ 12-76

****

ஏண்டி, ராத்திரி தூக்கத்தில் அழுகிறாய்? சிரித்தாய் ?

மேகதூத காவியத்தில் உள்ள எல்லாப் பாடல்களின் கருத்தும் உவமையும் தமிழ் இலக்கியத்தில் இருக்கின்றன.

காளிதாசன் ஒரு சுவையான செய்தியை (பாடல் 111) அதில் கூறுகிறான்

கணவன் மனைவி இருவரும் சுகமாகத் தூங்கிக் கொண்டு இருந்தனர்; அவள் கணவனின் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கினாள் ; திடீரென்று மனைவி தூக்கத்தில் அழுகிறாள்  ; கணவன் அவளை எழுப்பி என்ன ஆயிற்று? ஏன் இப்படி அழகிறாய்? என்று கேட்டவுடன் அவள் சிரிக்கிறாள் ; கணவன் என்னடீ?  ஏன் இப்படிச் சிரிக்கிறாய்? என்று கேட்கிறான் .

அவள் சிரித்துக்கொண்டே “கள்ளப்பயலே! நீ இன்னொரு பெண்ணுடன் விளையாடுவதாகக்  கனவு கண்டேன்” என்னு சொல்லி சிரிக்கிறாள் .

பெண்களுக்குத் தங்கள் கணவன் மீது எப்போதும் சந்தேகம் ஏற்படும். இதைத் திருவள்ளுவர் கணவன் தும்மல் போட்டால்  கூட மனைவி சந்தேகப்படுவதாகக் காட்டுகிறார். இந்த உள்ளவியல் (Psychological)  உண்மையை அழகாகப் படம்பிடித்துக் காட்டிவிட்டான் காளிதாசன்.

****

இன்னும் ஒரு பாடலில் நிலவு ஒளியில் அவள் தூங்க முடியாமல் விரக தாபத்தில் தவிப்பதைச் சொல்லிவிட்டு, கனவில் கூட என் கணவனைக் காண முடியவில்லையே என்று வருந்துவதைப் பாடுகிறான். தூக்கம் வந்தால்தானே  கனவுகள் வரும்!

****

இன்னும் ஒரு பாடலில் ஏ  மேகமே ! நீ உன் இடியை அடக்கி வாசி ; அவள் ஒருவேளை என்னை அணைத்துக் கொண்டு தூங்குவதாக கனவு கண்டு கொண்டிருப்பாள் நீ இடி, இடித்தால் அவள் எழுந்துவிடுவாள் என்று மேகத்தை எச்சரிக்கிறான் காளிதாசன்

****

இதே போல அவளது அணைப்புக்காக  கனவில் கைகளை அகல விரித்து ஆகாயத்தை நோக்கி நிற்பதாகவும் , அப்போது முத்துக்களைப் போன்ற பெரிய கண்ணீர் துளிகள் வழிந்து ஓடுவதையும் பாடுகிறான் —subham —

Tags — கனவு , மேக தூதம் ரகுவம்சம் , மனைவி , கணவன் அஜன், தசரதன் ஏன் சிரிக்கிறாய், ஏன் அழுகிறாய்  மனைவி பதில், சுப சகுனங்கள் , panchayudha

ராகுல் காந்திக்கு மஹாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் அனுப்பிய கடிதம்! (Post.13.877)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.877

Date uploaded in London – –12 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திஜிக்கு மஹாத்மா காந்திஜியின் கொள்ளுப் பேரன் அனுப்பிய கடிதம்!

 ச. நாகராஜன்

 அன்புள்ள ராகுல் காந்திஜி, 

மோஹன் தாஸ் கரம் சந்த் காந்தி எனது கொள்ளுத்தாத்தா. அவர் நாதுராம் கோட்ஸேயால் கொலை செய்யப்பட்டார். பல்வேறு கமிஷன்களும் புலனாய்வுகளும் இந்தக் கொலை பற்றிய ஆய்வுகளை நடத்தி உள்ளன.யாரும் இதில் ஆர் எஸ் எஸ். சம்பந்தப்பட்டதாகவோ அல்லது ஆர் எஸ் எஸ் தான் இதற்குப் பொறுப்பு என்றோ கூறவில்லை.

எனது தாத்தா காலஞ்சென்ற ராம்தாஸ் காந்தி மதிப்பிற்குரிய உள்துறைமந்திரி சர்தார் படேல்ஜிக்கு நாதுராஸ் கோட்ஸேயை மரணதண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கடிதம் ஒன்றை எழுதினார்.

உங்களது தகவலுக்காக, நான் சொல்ல விரும்புவது இது – 1969-ல் ராம்தாஸ் காந்தி மும்பையில் உயிரை விடும் தருணத்தில் நாதுராம் கோட்ஸேயின் தம்பி ஶ்ரீ கோபால் கோட்ஸே அவரைச் சந்தித்தார்.

இந்தப் பிரச்சினை கடந்த காலத்தியது. எனது குடும்பம் இதிலிருந்து மீண்டு சென்று விட்டது.

உங்களைப் போன்ற ஆட்களுக்கெல்லாம், எனது எளிமையான யோசனை என்னவெனில் காங்கிரஸ் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் காந்தியின் பெயரைத் தங்கள் சுயலாபத்திற்காக பான்படுத்துவதை நிறுத்திவிட்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பது தான்.

வெவ்வேறு பல கமிஷன்களின் முடிவுகளை ஏற்றுக் கொண்டு தயவுசெய்து பெருந்தன்மையுடன் இருங்கள்.

ஆர் எஸ் எஸ் காந்தியைக் கொன்றது என்று சொல்வதானது சீக்கியர்கள் உங்கள் பாட்டியைக் கொன்றனர் என்று சொல்வது போலத் தான். அது பொய், ஏனெனில் எல்லா சீக்கியர்களும் அதில் ஈடுபட்டிருக்கவில்லை.

நீங்கள் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை. நீங்களும் உங்கள் குடும்பமும் இந்தியாவில் காந்தியின் பெயரை பயன்படுத்தி அனைவரையும் முட்டாளாக்குவது நெடுங்காலமாக நடை பெற்று வருகிறது. நாட்டை எழுபது ஆண்டுகள் முட்டாளாக்கிவிட்டீர்கள்.

உங்கள் குடும்பம் எனது கொள்ளுத்தாத்தாவின் குடும்பப் பெயரை தங்கள் சந்தர்ப்பவாத கொள்கைக்காக தவறாகப் பயன்படுத்தி வந்திருக்கிறது. இப்போது இந்த தேசத்திற்கு உங்களது உண்மையான ஸ்வரூபத்தைக் காண்பிக்க வேண்டும்; காந்தியின் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

உங்களது தாத்தா காந்தி இல்லை. அவர் பெரோஸ் கான். அவர் குஜராத்திய பதானான ஜுனாகத்தைச் சேர்ந்த நவாப் கானின் மகன். நவாப் கானின் மனைவி ஒரு பார்ஸி. அவர் இஸ்லாமிற்கு மதம் மாற்றப்பட்டார்.

உங்கள் பாட்டி இந்திராஜியும் ஒரு முஸ்லீம் தான். ஏனெனில் அவர் இஸ்லாமுக்கு மதம் மாறியே பெரோஸ் கானை மணம் செய்து கொண்டார்.

நீங்கள் இஸ்லாமும் கிறிஸ்தவமும் கலந்த ஒரு கலவை. ஒரு சிறிதளவு கூட ராகுலோ அல்லது காந்தியோ உங்களிடத்தில் இல்லை.

ஹிந்துவாக கிஞ்சித்தும் கூட இருக்க முடியாதவர் நீங்கள்.  இஸ்லாம். கதோலிக்க டிஎன் ஏ-யின் ஒரு சேர்க்கை தான் நீங்கள்.

நான் இதை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்கிறேன். இதனால் எங்கள் உண்மையான காந்தி குடும்பத்தைச் சொல்லி யாரையும் இனி முட்டாளாக்க முடியாது.

எங்கள் குடும்பப் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டு,

உங்களது உண்மையான மதம்/ ஜாதி அடையாளத்தை ஒப்புக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

தேசத்தை முட்டாளாக்குவதை நிறுத்தி விட்டு மன்னிப்புக் கேட்டு உங்கள் பெரிய மனதைக் காட்டுங்கள்.

ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்                ஶ்ரீ கிருஷ்ணா குல்கர்ணி    

நன்றி : ஆங்கில வார இதழ் TRUTH Vol 92 No 26. Dated 25th October 2024

ஆங்கில மூலத்தின் தமிழாக்கம் இது.

Dreams in Kalidasa Kavyas and Sangam Tamil Literature- Part 1 (Post No.13,876)

Mayadevi dreamt of white elephant before the birth of Buddh

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,876

Date uploaded in London – 11 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Dreams in Kalidasa Kavyas and Sangam Tamil Literature- Part 1

Kalidasa is the greatest Indian poet. He became famous because of his 1500 similes and imageries. Sangam Tamil poets copied at least 200 similes from him and proved that he lived in first or second century BCE. The first ten stanzas of Kumara Sambhava of Kalidasa are used to describe Himalayas in Tamil literature.

Here is the comparison of dreams in both the literature.

We find dreams in Kalidasa in the following books:

Raghuvamsam 8-92 Momentary pleasure in dream

Ajan’s dream 10-61 to 10-64 ;Auspicious dreams in the dreams of Dasaratha’s wives.

12-76 It was like the difficulty that came in the dream

19-22 Saying names of women in the dream

These are only a few dreams from the above work. In his Meghadutam we find four more references to dreams.

 Following slokas are taken from Sanskrit documents.org. Thanks

तेनाष्टौ परिगमिताः समाः कथंचिद्बालत्वादवितथसूनृतेन सूनोः|
सादृश्यप्रतिकृतिदर्शनैः प्रियायाः स्वप्नेषु क्षणिकसमागमोत्सवैश्च॥ ८-९२

tenāṣṭau parigamitāḥ samāḥ kathaṁcid
bālatvādavitathasūnṛtena sūnoḥ|
sādṛśyapratikṛtidarśanaiḥ priyāyāḥ
svapneṣu kṣaṇikasamāgamotsavaiśca || 8-92

By him of true and courteous language eight years were made to roll with some difficulty especially) on account of the tender age of his son, by looking at the pictures and statues of  his wife and by means of the pleasure derived from her momentary company in dreams. [8-92]

गुप्तम् ददृशुरात्मानम् सर्वाः स्वप्नेषु वामनैः।
जलजासिकदाशार्ङ्गचक्रलाञ्छितमूर्तिभिः॥ १०-६०

guptam dadṛśurātmānam sarvāḥ svapneṣu vāmanaiḥ।
jalajāsikadāśārṅgacakralāñchitamūrtibhiḥ || 10-60

All of the queens respectively saw in their dreams that they were being protected by young lads adorning conch, sword, mace, bow and a disc in their hands. [10-60]

Because the queens have partaken in the Vaishnava dessert they dreamt of Vishnu’s arrival in their wombs.

हेमपक्षप्रभाजालम् गगने च वितन्वता।
उह्यन्ते स्म सुपर्णेन वेगाकृष्टपयोमुचा॥ १०-६१

hemapakṣaprabhājālam gagane ca vitanvatā।
uhyante sma suparṇena vegākṛṣṭapayomucā || 10-61

Further the queens dreamt that garuDa, the Divine Eagle, shedding multitudinous resplendence of his golden wings and strewing away thick masses of rainclouds owing to his speed, is carrying them aloft on skyway. [10-64]

बिभ्रत्या कौस्तुभन्यासम् स्तनान्तरविलम्बितम्।
पर्युपास्यन्त लक्ष्म्या च पद्मव्यजनहस्तया॥ १०-६२

bibhratyā kaustubhanyāsam stanāntaravilambitam।
paryupāsyanta lakṣmyā ca padmavyajanahastayā || 10-62

Further they dreamt that their daughter-in-law goddess Lakshmi wearing the Kaustubha jewel pendant on her cleavage is now fanning them with her handheld lotus, as is usual with any daughter-in-law. [10-62]

While coming to earth Vishnu kept the Kaustubha jewel with Lakshmi as a trust, hence she is wearing it now.

कृताभिषेकैर्दिव्यायाम् त्रिस्रोतसि च सप्तभिः।
ब्रह्मर्षिभिः परम् ब्रह्म गृणद्भिरुपतस्थिरे॥ १०-६३

kṛtābhiṣekairdivyāyām trisrotasi ca saptabhiḥ।
brahmarṣibhiḥ param brahma gṛṇadbhirupatasthire || 10-63

Further they dreamt that they were worshipped by the seven Brahma-sages who on taking bath in the heavenly tri-streamed river Ganga will start chanting the Vedantic hymns that quest after the Ultimate Being. [10-63]

ताभ्यस्तथाविधान्स्वप्नाञ्छ्रुत्वा प्रीतो हि पार्थिवः।
मेने परार्ध्यमात्मानम् गुरुत्वेन जगद्गुरोः॥ १०-६४

tābhyastathāvidhānsvapnāñchrutvā prīto hi pārthivaḥ।
mene parārdhyamātmānam gurutvena jagadguroḥ || 10-64

On learning the above said particulars of their dreams from the queens the king Dasharatha is highly gratified, and considered himself nonpareil on account of his being the sire of the sire of universe. [10-64]

विभक्त आत्मा विभुस्तासामेकः कुक्षिष्वनेकधा।
उवास प्रतिमाचन्द्रः प्रसन्नानामपामिव॥ १०-६५

vibhakta ātmā vibhustāsāmekaḥ kukṣiṣvanekadhā।
uvāsa pratimācandraḥ prasannānāmapāmiva || 10-65

The Lord though himself one, having his form diversely distributed, reposed in the wombs of three queens, as one moon manifoldly reflects in manifoldtranquil waters. [10-65]

These couplets/ slokas describe that all the three queens saw Garuda, Conch and Wheel, Kaustubha jewel, the Seven Holy Sages and Lakshmi. All these are associated with Lord Vishnu and shows Ramavatar is the incarnation of Vishnu.

*******

गरुडापातविश्लिष्टमेघनादास्त्रबन्धनः।
दाशरथ्योः क्षणक्लेशः स्वप्नवृत्त इवाभवत्॥ १२-७६

garuḍāpātaviśliṣṭameghanādāstrabandhanaḥ|
dāśarathyoḥ kṣaṇakleśaḥ svapnavṛtta ivābhavat || 12-76

  The captivity with the serpent-missile hurled by meghanAda being loosened by the sudden swoop of the divine eagle garuDa, became to both the sons of Dasharatha a momentary painful event, as if, befallen in a dream. [12-76]

*****

–o)0(o–

स्वप्नकीर्तितविपक्षमङ्गनाः
प्रत्यभैत्सुरवदन्त्य एव तम्।
प्रच्छदान्तगलिताश्रुबिन्दुभिः
क्रोधभिन्नवलयैर्विवर्तनैः॥ १९-२२

svapnakīrtitavipakṣamaṅganāḥ
pratyabhaitsuravadantya eva tam |
pracchadāntagalitāśrubindubhiḥ
krodhabhinnavalayairvivartanaiḥ || 19-22


His mistresses even without uttering a word severely rebuked him who called out the names of their rivals in dream, by rolling away from him in the bed on which they shed tears on the coverlet, and smashed their bracelets in anger. [19-22]

****

when Queen Trishla conceived Bhagwan, she saw 14 auspicious dreams – 1) an elephant, 2) a bull 3) a lion, 4) Lakshmi, the goddess of wealth, 5) a garland of flowers, 6) the moon, 7) the sun, 8) a flag, 9) a jar filled with water, 10) a lotus-lake, 11) an ocean, 12) a celestial, aerial car, 13) a heap of jewels, 14) smokeless fire

Megadutam – Dreams

Thin with worry,
Stretched out on her side in her bed of separation,
Her body like the waning moon on the eastern horizon,
She longs for sleep,
But even this is interrupted by her flowing tears—
“He cannot even join me in a dream!” She despairs.

*****

If my lover is engulfed in sleep upon your arrival,
You should wait for only the length of the night-watch
Attending her,
Holding back your thunder.
While my beloved is engrossed in dreams of me,
Do not shake the tight embrace of her vine arms from my neck.

****

Teardrops as big as pearls
Fall without fail on the roots of trees,
From the local deities who see me,
My arms stretched out into empty space
As if reaching for a tight embrace,
As I picture you in my dreams.

****

Once, having gone to sleep,
Clinging to my neck in bed,
You awoke.
Crying loudly for some reason,
I repeatedly asked you why.
You said to me with a smirk—
“You rascal! I saw you in my dream, loving another!”

To be continued……………………………

Tags- Dreams, Kalidasa, auspicious signs, Sangam literature, Raghuvamsam, Meghadutam , Kalidasa, part 1, Birth of Buddh, Mahavir

விலங்குகள் கனவு காணும்! தமிழர்கள் கண்டுபிடிப்பு! (Post No.13,875)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,875

Date uploaded in London – 11 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

விலங்குகள் கனவு காணும்; தமிழர்கள் கண்டுபிடிப்பு

விலங்குகள் கனவு காணுமா ? என்று கூகுள் google  செய்து பார்த்தீர்களானால் கடந்த ஐந்து ஆண்டுகளில் விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளியான பல கட்டுரைகளைக் காண்பீர்கள். அவர்கள் ஏதோ புதிதாகக் கண்டுபிடித்தது போல அதை எழுதி இருக்கிறார்கள். சம்ஸ்க்ருத நூல்களில் கூட இல்லாத விலங்குகளின் கனவுகள், சங்க கால இலக்கியத்தில் உளது; பிற்காலத்தில் இதை ஏனைய தமிழ் நூல்களிலும் காணலாம்.

கனவுகள் பற்றி பிராமணர் கண்டுபிடிப்பு  

உலகில்  கனவுகளின் உண்மை நிலையினைக் கண்டுபிடித்தவர்கள் வேத காலப் பிராமணர்கள்; மனிதர்களோ உயிரினங்களோ கனவு காணாமல் தூங்க முடியாது என்று கண்டு பிடித்ததால் இன்றும் கூட தினமும் முக்காலம் செய்யும் சந்தியாவந்தன கிரியையில் கெட்டகனவு  வரக்கூடாது என்று மந்திரம் சொல்கிறார்கள். இப்போது விஞ்ஞானிகளும் எல்லோரும் தினமும் கனவு காண்பதை ஒப்புக்கொள்கிறார்கள்

கனவுகள் பற்றி கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வளவோ கட்டுரைகளை எழுதிவிட்டேன் (அடியிலுள்ள இணைப்புகளைக் காண்க)

வேதகால கனவுகள் முதல் கிரேக்கர், சுமேரியர், எகிப்தியர் கனவுகள் பற்றி இதுவரை கண்டுவிட்டோம். ஆயினும் ஒரு வியப்பான விஷயம், தமிழர்கள் மட்டுமே விலங்குகள் காணும் கனவுகள் பற்றி விரிவாகப் பாடியுள்ளனர்.

பழந்தமிழ் நூலான தொல்காப்பியத்தில் துவங்கும் மனிதர்களின் கனவுகள் திருக்குறள், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் பெரிய புராணம் ஆண்டாளின் நாச்சியார் திருமொழி, தேவாரம் என்று பல நூல்களில் பல்கிப் பெருகி பழமொழிகளையும் ஆக்ரமித்து ஆயிரத்துக்கு மேலான்  இடங்களில் பரிணமிக்கிறது.  சங்க இலக்கியங்களில் மட்டுமே நாற்பதுக்கும் மேலான கனவுகள் காணப்படுகின்றன. 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காளிதாசன் (Second Century BCE) பாடிய கவிதைகளிலும் கனவுகள் இருந்தாலும் அவன் கூட விலங்குகள், பறவைகள்  கனவு கண்டதாகப் பாடவில்லை. ஆயினும் பஞ்சதந்திரக் கதைகளிலும் அதற்கு முன்னர் காளிதாசன் எழுதிய காவியங்களிலும் விலங்குகளும் பறவைகளும் நம்மைப் போன்ற உணர்ச்சியும் அறிவும் உடையன  என்பதை தெளிவாகவே — மிகத் தெளிவாகவே – வருணித்துள்ளனர். காளிதாசனின் உலகப் புகழ்பெற்ற நாடகம்– சாகுந்தலம் — என்பதன் பொருளே பறவைப் பெண்; சகுந்தலாவை வளர்த்தது பறவைகள் என்பதால் இப்படி பெயரிட்டார் கவிஞர். அந்த சம்ஸ்க்ருத சொல்லில் இருந்துதான் சகுனம் / ஆரூடம் என்பனவற்றை நாம் பயன்படுத்துகிறோம் சகுன= பறவை;

ஷேக்ஸ்பியரும் கூட கானகப் பெண் சகுந்தலாவைப் பார்த்து Tempest டெம்ப்ஸ்ட் நாடகத்தில் மிராண்டா என்ற அப்பாவிப் பெண் கதாபாத்திரத்தைப் படைத்தார். இரண்டு நாடகங்களையும் படிப்போருக்கு ஒற்றுமைகள் உள்ளங்கை நெல்லிக்கனி என புலப்படும்.

****

இதோ விலங்குகளின் கனவுகள்

1.கனவு நற்றிணை பாடல் 87; வௌவால் கனவு

நற்றிணை 87, நக்கண்ணையார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்

ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,

வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங்காட்டு

நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,

அது கழிந்தன்றே தோழி, அவர் நாட்டுப்  5

பனி அரும்பு உடைந்த பெருந்தாட் புன்னை

துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்

சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,

பெருந்தண் கானலும் நினைந்த அப் பகலே.

பொருள்

முள் போன்ற பற்களையுடைய வௌவால் உயர்ந்த ஒரு கிளையில் தொங்கியபடி தூங்கும் பொழுதிலே, போர்களில் வெற்றி அடையும் சோழ மன்னனான ஆற்காட்டில் உள்ள அழிசியின் பெரிய காட்டில் உள்ள நெல்லிக்கனியின் இனிய புளிச்சுவையைத் தான் பெற்றதாகக் கனவு கண்டாற்போல்…….

****

2.யானையின் மதநீரை வண்டு/ தேனீ கனவு காண்டல்அகநானூறு 132

அகநானூறு 132தாயங்கண்ணனார்குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

ஏனலும் இறங்கு குரல் இறுத்தன, நோய் மலிந்து,

ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி

ஏதில மொழியும் இவ்வூரும், ஆகலின்,

களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி,

வால் நிணப் புகவின், கானவர் தங்கை  5

அம் பணை மென்தோள் ஆய் இதழ் மழைக்கண்

ஒல்கு இயல் கொடிச்சியை நல்கினை ஆயின்,

கொண்டனை சென்மோ, நுண் பூண் மார்ப,

துளி தலைத் தலைஇய சாரல் நளி சுனைக்

கூம்பு முகை அவிழ்த்த குறுஞ்சிறைப் பறவை  10

வேங்கை விரி இணர் ஊதிக் காந்தள்

தேனுடைக் குவி குலைத் துஞ்சி யானை

இருங்கவுள் கடாஅம் கனவும்

பெருங்கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே.

தேனீயானது யானையின் மத நீரைக் கனவு கண்டது

****

3.கடற்காக்கை இறால் மீனை கனவு காண்டல்அகநானூறு 170

அகநானூறு 170, மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார், நெய்தற் திணை – தலைவி நண்டிடம் சொன்னது

கானலும் கழறாது கழியும் கூறாது,

தேன் இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது

ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே,

இருங்கழி மலர்ந்த கண் போல் நெய்தல்

கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇத்,  5

தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து

பறைஇய தளரும் துறைவனை, நீயே,

சொல்லல் வேண்டுமால் அலவ பல் கால்

கைதையம் படுசினை எவ்வமொடு அசாஅம்

கடல் சிறு காக்கை காமர் பெடையொடு  10

கோட்டு மீன் வழங்கும் வேட்ட மடி பரப்பின்

வெள்ளிறாக் கனவும் நள்ளென் யாமத்து,

நின்னுறு விழுமம் களைந்தோள்

தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே.

கடற்காக்கைகள் அவற்றின் பெட்டைகளுடன் சுறாமீன் வழங்கும் கடலில் இறால் மீன்களை (ருசிக்காக) கனவு கண்டன.

****

4.கவரிமான் நரந்தம் புல்லைப் பற்றி கனவு காணல் – பதிற்றுப் பத்து 11

பொலன் அணி எருத்த மேல்கொண்டு பொலிந்த நின்

பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே,  20

கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி

பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்,

ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்

தென்னங் குமரியொடு ஆயிடை

மன் மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.  25

(ஆரியர் – கற்றுணர்ந்த ரிஷி முனிவர்கள் தவம் செய்யும் இமயமலை. காளிதாசன் எழுதிய குமார சம்பவத்தில் உள்ள  இந்த வரிகள் புறநானூற்றின் இரண்டாவது பாடலிலும் உளது ).

கவரிமான்கள் நல்ல சுவையான நரந்தம் புல்லினை மேயும் கனவுடன் தூங்குகின்றன.

****

My Old Articles on Dream கனவு

வேதத்தில் கனவு

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

கனவுகளின் பொருள் என்ன (Dream Interpretation) என்ற ஆராய்ச்சியும் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது.

விநோதக் கனவுகள்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

4 Aug 2015 — ஒரு ஜெர்மன் இளவரசனுக்கு எலிக் கனவு வந்தது. அந்தக் கனவில் மூன்று எலிகள் வந்தன.


கிரேக்கர் கனவுகள்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

எகிப்திய, சுமேரிய கனவுகளும் இந்துமத கனவுகளும் … இந்து மதத்தில் உள்ளது போலவே, …


Dreams in Vedas

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › dreams-in-vedas

31 Jul 2015 — … வேதம் ரிக்வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர். Blog Stats. 15,489,852 hits. Follow …

அதிசயக் கனவுகள் -2 (Post No.9673)

Tamil and Vedas

https://tamilandvedas.com › அத…

·

1 Jun 2021 — அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். கனவு பற்றிய அருட் … By S Nagarajan

அதிசயக் கனவுகள் (Post No.9645)

May 25, 2021 By S Nagarajan

Tamil Discovery! Do Animals Dream? (Post No.13872)

Tamil and Vedas

https://tamilandvedas.com › tamil-…

22 hours ago — Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. https://www.pustaka.co.in/home/author/london-swaminathan.

Do our Dreams Have Meaning?

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2011/12/29 › do-our-drea…

29 Dec 2011 — For instance, the Chandogya Upanishad (V 2-8-9) says seeing a woman in a dream means a previous sacrifice (fire ceremony) was successful. But it … 

—subham—

Tags -விலங்குகள், கனவு, காணும், தமிழர்கள் கண்டுபிடிப்பு ,