More Stars in Shakespeare and Hindu Literature (Post.13,767)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,767

Date uploaded in London – 10 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

These blessed candles of the night

Pardon me, good lady,

For by these blessèd candles of the night,

Had you been there I think you would have begged

The ring of me to give the worthy doctor.

–Merchant of Venice

((My honour would not let me show such ingratitude to the man. Pardon me, good lady. I swear by these blessed stars that if you were there you yourself would have begged me to give the ring to the worthy lawyer.))

Here the commentators are dodgy and evasive about the  word ‘BLESSED’ . Some even interpreted CANDLES as candles quoting Jesua and the Bible. Others interpreted as STARS.

Stars in Mahabharata

Matali, the space man and the pilot of the Inter Galactic Space Shuttle, took Arjuna to Indra Loka to get ultra modern weapons of war. It is in the Vanaparava of Mahabharata . Arjuna was wonderstruck when he saw thousands of stars outside and asked Matali what they were. Matali told him that these are the holy souls from the earth, who came here after death.

Hindus believed stars are souls of the holy people and named many stars after Agastya, Tri Sankhu, Dhruva, Sapta Rishis, Arndhati, Arudra etc.

So the Shakespearean word Blessed candles of the night mean only holy stars.

****

I am constant as the northern star

I could be well moved, if I were as you;

If I could pray to move, prayers would move me.

But I am constant as the northern star,

Of whose true-fixed and resting quality

There is no fellow in the firmament.

The skies are painted with unnumbered sparks,

They are all fire and every one doth shine;

But there’s but one in all doth hold his place.

–Julius Caesar

These lines come from Caesar’s speech in Act III, scene i, just before his assassination. The conspirators have come to Caesar in the Senate under the preteens of pleading for amnesty for Metellus’s banished brother, Publius Cimber. Caesar replies that he will adhere to his word and not change his earlier decision.

Comparing himself to the North Star, Caesar boasts of his constancy, his commitment to the law, and his refusal to waver under any persuasion. This comparison implies more than steadfastness, however: the North Star is the star by which sailors have navigated since ancient times, the star that guides them in their voyages, just as Caesar leads the Roman people.

Northern Star in Hindu Literature

Dhruva does find a mention in the Rgveda but there is no reference to the pole star. It is in the Taittiriya Aranyaka of the Krishna Yajurveda (Prapathaka 2, Anuvaka 19) that we find a clear reference to the fourteen stars in the constellation of Sisumara (whale or porpoise) which is seen in the northern sky, according to Prof. R N Iyengar who delivered a lecture in 2016. He also answered the following questions.

17 Mar 2016, 10:11:50

to bvpar…@googlegroups.com

a) Which polestar was visible during the Mahabharat war?

This question indirectly presupposes a period for the MB War!  Whatever may be the period of MB several stars which have had the potential to be at the North Celestial Pole must have been visible. Hence alfa-draconis, k-draconis, i-draconis, kochab, alfa-U.minor (the current Pole Star), Vega etc must have been visible.

 b) Does Mahabharat tell us about the change in the pole star?

Yes, it does. MB mentions that the star named Dhruva was moving.

dhruvah prajvalito ghoram apasavyam pravartate|| (Bhi.Parvan 3.17)

c) If so does this information help us in dating the war?

It provides information on when MB war could not have occurred. The default option for calling a star “dhruva” should have been that it was “fixed” being too close to the North Celestial Pole so as to look fixed in naked eye observations. This was possible for only alfa-Draconis which was only seven minutes away from the Pole in 2830 BC. The name for this star originally was Abhaya as per Tai.Ara. We have to infer that the fixed nature of the star was observed, and it acquired the name Dhruva during 2800-2900 BC. Once the star had such a special quality, the adjective became the name itself. So MB statement (Bh.P 3.17) above could not have been valid before 2830 BC. The Vedic tradition of Dhruva was never isolated from the constellation Shishumaara. MB is no exception.

The archery competition for Draupadis’ marriage was held in a town specially built in the north-eastern direction of the capital and it was named  shishumaarapura, figuratively indicating that the constellation had changed its orientation as seen from earth, due to Dhruva moving away.

tataḥ purajanāssarve sāgaroddhūta nissvanāḥ|

śiśumārapuram prāpya nyaviśan teca pārthivāḥ||

   prāguttareṇa nagarād bhūmibhāge same śubhe|

 samājavāṭaḥ śuśubhe bhavanaiḥ sarvato vṛtaḥ||   MB Ādi Parvan ( Ch 176 v 15,16)

Dhruva is Sangam Tamil Literature

Uploading: 2511021 of 2511021 bytes uploaded.

Sangam Tamil literature which is at least 2000 year old, mentioned the Sapta Rishi / Ursa Major/ Great Dipper Constellation and Arundhati star six times. It also mentioned both the Seven Star Constellation (Sapta Rishi) and Arundhati are worshipped by the Tamils. Dhruva is in straight line from two stars of Sapta Rishi Constellation. Hindus knew that.

The very word Dhruva means Firm, Constant. It is used in Tamil as Uruthi and Thurban in Arabic. One can notice the sound Druv in both.

When Caesar mentioned I am CONSTANT as Northern Star, he mentioned only the Hindu View. How the little boy Dhruva became Dhruva star is known to all Hindus.

*****

BANQUO

Hold, take my sword. There’s husbandry in heaven;

Their candles are all out. Take thee that too.

A heavy summons lies like lead upon me,

And yet I would not sleep: merciful powers,

Restrain in me the cursed thoughts that nature

Gives way to in repose!– Macbeth

When Banquo says, ‘There’s husbandry in heaven; Their candles are all out’ in Macbeth, he means that the angels are illuminating few stars in order to economise. There’s Ulysses and old Nestor, whose wit was mouldy ere your grandsires had nails on their toes, yoke you like draught-oxen, and make you plough up the wars.

Hindu Views

Stars and angel link shows that it is echo of Mahabharata where Matali said to Arjuna the stars are holy souls. Egyptians also built Pyramids with a hole linking the stars in the heaven ( It is in my article THUBAN IS WRONG, DHRUVA IS RIGHT! (Post.8934) posted on 15 Nov 2020.

****

Romeo must become a Star ; Juliet’s Wish

“When he shall die,

Take him and cut him out in little stars,

And he will make the face of heaven so fine

That all the world will be in love with night

And pay no worship to the garish sun.”

― William Shakespeare, Romeo and Juliet

((And when I die, take him and cut him into stars that will make the night sky so beautiful that the entire world will fall in love with the night and forget about the tasteless sun. Oh, I have bought the mansion of love, but not yet possessed it. I belong to Romeo, but have not yet been enjoyed by him.))

What does Juliet mean when she says “take him and cut him out in Little Stars”?

Here, Juliet expresses her deep love for Romeo, wishing for him to become a constellation upon his death so that his beauty can be admired forever. This metaphorically shows Juliet’s commitment and admiration for Romeo, while foreshadowing his death and its impact.13 Sept 2011

Great people become stars is confirmed once again by Shakespeare here.

—subham—

Tags- More stars, Shakespeare, Dhruva star, Northern Star, Julius Caesar, Juliet, Macbeth, blessed candles, Romeo

ஜப்பானிய பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்- 5 (Post.13,766)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,766

Date uploaded in London – 10 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

உலகம் முழுதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள் -5

தென்கிழக்காசிய நாடுகளிலும் தூரக்கிழக்கு நாடுகளிலும் முழங்கும்  பழமொழிகள்,  தமிழ்ப் பழமொழிகளை  ஒத்து இருக்கின்றன ; ஒவ்வொரு பழமொழிக்குப் பின்னால், சீனர்கள் ஒரு கதையையும் சொல்கிறார்கள்

இதோ இரண்டு பழமொழிகள்,

ஊருக்குத்தாண்டி உபதேசம் உனக்கல்ல .

உருத்திராக்ஷப் பூனை உபதேசம் பண்ணினதுபோல.

 உடும்புக்கு இரண்டு நாக்கு உண்டு, மனிதனுக்கு இரண்டு நாக்கு உண்டா ?

துவி நாக்கு இடரும்

மாமியார் உடைத்தால் மண்கலம் மருமகள் உடைத்தால் பொன்கலம்  போன்ற தமிழ்ப் பழமொழிகள், மனிதனின் இரட்டை வேடத்தைக் காட்டுகின்றன . இது போன்ற பழமொழி ஜப்பான் சீனா போன்ற நாடுகளிலும் உண்டு .

ஜப்பானில் க்யூட்டோ வோ கக்கட்ட பா நிக்கோ வோ ஊரு

Gyuuto wo kakete ba niku wo ru  meaning to hang up a cow’s head and sell horse meat  என்பார்கள் ; இதன் பொருள்  கடையின் போர்டில் இங்கே மாட்டுத் தலை விற்கப்படும் என்று எழுதிவிட்டு குதிரை மாமிசத்தை விற்கிறான் என்பதாகும்

எதெல்லாம் நகருக்கிறதோ அதையெல்லாம் சாப்பிடலாம் என்ற பாலிசி சீனர்களிடையே இருப்பதால் தேள், பாம்பு, எல்லாவற்   யும் கடைகளிலும் ஹோட்டலகளிலும் காணலாம்.

சீனர்களும் கொரியர்களும் நாய் மாமிசப் பிரியர்கள் ;கொரியாவில் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான நாய்களைக் கொன்று சாப்பிடுகிறார்கள்.

இதைப் பற்றிய சீனக் கதை பின்வருமாறு

எனது அரசவையிலுள்ள பெண்கள் எல்லோரும் இனிமேல் ஆண்கள் உடைகளையே அணிய வேண்டும் என்று  சீனாவின் கீ மாகாண ஆளுநர் தூக்கே ஜிங்காங் உததரவு போட்டான் ; செய்தி அந்த வட்டாரம் முழுதும் பரவியது ; எல்லாப் பெண்களும் ஆண்கள் உடைதரித்து வலம் வரத் தொடங்கினார்கள்;  உடனே மற்ற பெண்கள் இப்படி உடை அணியக் கூடாது என்று மன்னன் தடை போட்டான்;  பிரதம அமைச்சர் யான் யின்னுக்கு இது பிடிக்கவில்லை; அவர் சொன்னார் , அன்பரே நீர் செய்வது கடையில் மாட்டுத் தலையத் தொங்கவிட்டு குதிரை மாமிசத்தை விற்பது போல இருக்கிறது என்று இடித்துரைத்தார்  உடனே அவர் எல்லாவற்றையும் நிறுத்தினார். பின்னர் இதுவே ஆட்டுத்தலையைத் தொங்கவிட்டு நாய் மாமிசம் விற்பது போல என்று மாறியது . காரணம் சீனர்களும் கொரியர்களும் லட்சக்கணக்கில் நாய்களை அடித்துச் சாப்பிடத் துவங்கி விட்டார்கள் .

நான் மதுரையில் மாணவனாக இருந்தபோதும் இப்படி ஏமாற்று வேலைகளைக் கண்டு இருக்கிறேன். இந்த ஹோட்டல்களில் செய்யப்பட  பட்சணங்கள் நெய்யினால் செய்யப்பட்டதல்ல என்று போர்டு இருக்கும் அதில் நெய் என்பது வரை கொட்டை எழுத்துக்களில் இருக்கும்.

இன்று மேலை நாடுகளில் இன்ஸ்யூரன்ஸ் ஏஜெண்டுகளும் இதையே செய்கின்றனர். சேதம் அல்லது நஷ்டம் ஏற்பட்டபோது பணம் கேட்டால் பொடி எழுத்துக்களில் அச்சிட விஷயங்களைக் காட்டி உங்களுக்கு பணம் தர முடியாது என்கிறார்கள் இது நவீன கொள்ளை !

அந்தக் காலத்தில் மேலை நாட்டில் கிறிஸ்தவ பாதிரிகளின் உபன்யாசம் பற்றி ஒரு கதை சொல்லுவார்கள்; கிறிஸ்துவ எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்று உபதேசம் செய்துவிட்டு வீட்டிலுள்ள மாட்டை அடித்து மாட்டுக்கறி சமைக்கச் சொன்னவுடன் மனைவி கேட்டாளாம் “என்ன ஓய், இவ்வளவு நேரம் அன்பு பற்றி உபதேசம் செய்துவிட்டு நம் அன்புக்குரிய பசுமாட்டினைக் கொல்லச் சொல்கிறீர்களே” என்று.

அடிப்போடி பைத்தியக்காரி! ஊருக்குத்தாண்டி உபதேசம் உனக்கல்ல என்றாராம் பாதிரியார்

*****

பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும் என்ன ஆகும் மண்ணின் குடம் உடைந்தாக்கால் ?

மாமி ஒட்டினாலும் பானை ஒட்டாது.

கண்ணாடியோ பானையோ  உடைந்த பின்னர் ஓட்டினாலும்  விரிசல் தெரியும்; அது முழு வடிவம் பெறாது

ஜப்பானில் உள்ள பழமொழி

Fukusui bon ni kaerazu meaning spilt water does not return to tray.

புகுசுய் போன் நீ கயிராசு –என்பார்கள்; இதன் பொருள் கீழே சிந்திய நீர் மீண்டும் தாம்பாளத்துக்கு வராது .

இதையே பலரும் கீழே சிந்திய பாலை எடுக்க முடியாது என்றும் சொல்லுவார்கள்.

இதன் பின்னால் ஒரு சீனக்கதை இருக்கிறது

ஜியாங் பிரபு வறுமையானவுடன் அவனுடைய மனைவி ஓடிவிட்டாள்;  சூ Zhou Dynasty வம்ச மன்னன் வென்வாங், அந்தப் பிரபுவை பிரதம அமைச்சராக நியமித்தான்; பணமு புகழும் உச்சத்துக்கு ஏறின ; உட மனைவி நைசாக ஓட்ட வந்தாள்; அவர் ஒரு கோப்பையில் தண்ணீரைக் கொடுத்து இதைக் கீழே கொட்டு என்கிறார் அவளுமப்படியே செய்தாள்; இப்போது அதை எடுத்து கோப்பையை நிரப்பு என்கிறார் அவள் முழி முழி என்று முழி த்தாள்; இது போலத்தான் நானும் நீயும் என்றார். அவளும் திரும்பிச் சென்றாள் .

–subham—

Tags — ஜப்பானிய , உலகம் முழுதும், தமிழ்ப் ,பழமொழிகள் -5

ஆழ்நிலை தியானம் மற்றும் யோகாவை உலகெங்கும் பரப்பிய மகேஷ் யோகி! – 1 (Post.13,765)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.765

Date uploaded in London – 10 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 மாலைமலர் 4-9-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது. 

ஆழ்நிலை தியானம் மற்றும் யோகாவை உலகெங்கும் பரப்பிய  மகேஷ் யோகி! – 1

ச. நாகராஜன் 

உலகெங்கும் யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை அறியச் செய்தவர்களுள் மிக முக்கியமானவரும் பல லட்சம் பேர்களை ஆன்மீகத்தில் உயர ஏற்றியவருமான ஒருவர் மகேஷ் யோகி!

 டிஎம் அல்லது ட்ரான்ஸிடெண்டல் மெடிடேஷன் எனப்படும் ஆழ்நிலை தியானம் பற்றி இன்று அறியாதோர் இல்லை. அதை உருவாக்கி உலகம் முழுவதும் உள்ள ஏராளமானோரை பயனடையச் செய்தவர் அவரே.

பிறப்பும் இளமையும்!

பின்னால் மஹரிஷி மகேஷ் யோகி என்று அறியப்பட்ட மகேஷ் ப்ரசாத் வர்மா 1917-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு அருகே உள்ள சிச்லி என்ற கிராமத்தில் காயஸ்த வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார்.

1942-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்ற அவர் சிறிது காலம் தொழிற்சாலைகளில் வேலை பார்த்தார். ஆன்மீக ஈர்ப்பால் ஒரு குருவைத் தேடத் தொடங்கிய அவர் ப்ரஹ்மானந்த சரஸ்வதியை தரிசித்தார்.

.

குரு ப்ரஹ்மானந்த சரஸ்வதி

ஜோதிர் மடம் சங்கராசார்யரான ப்ரஹ்மானந்த சரஸ்வதி என்ற மகானைக் குருவாகக் கொண்டதோடு அவரது செயலாளராகவும் பணி புரிந்தார் மகேஷ் யோகி. ‘முதலில் பட்டப் படிப்பை முடி; பெற்றோரிடமிருந்து அனுமதி பெற்று இங்கு வா’ என்றார் குரு. இரண்டரை வருட காலம் அவரது வழிமுறைகளுக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்ட மகேஷ் யோகி, அவரிடம் அனைத்து யோகா மற்றும் தியான முறைகளை நன்கு கற்றுக் கொண்டார்.

1953-ல் அவரது குரு இறைவனடி சேரவே இமயமலையில் உள்ள உத்தர்காண்ட் சென்றார் அவர்.

இமயமலைக் காடுகளில் தவம் புரிந்த அவர்  1955ல் ஆழ்நிலை தியானத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஆழ்நிலை தியானம் என்பது ஒரு நாளைக்கு இரு முறை செய்யப்பட வேண்டிய தியானமாகும். இதற்கு விசேஷ மந்திரமும் உண்டு. இது சாதகரை உயர் பிரக்ஞை நிலைக்கு முன்னேற்றி விடும்.

இரு வருடங்கள் இந்தியா முழுவதும் பயணப்பட்ட பின்,

1958-ல் அவர் தனது முதல் உலகப் பயணத்தை மேற்கொண்டார். ஐந்து முறை உலகப் பயணத்தை மேற்கொண்ட அவர் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் சென்றார்.

40000 ஆழ்நிலை தியான பயிற்சியாளர்களை உருவாக்கினார்.  50 லட்சம் பேர்களுக்கு இவர்கள் ஆழ்நிலை தியான முறையைக் கற்பித்தனர். இத்தோடு டி எம் சித்தி புரோகிராம் மற்றும் யோகா ஃப்ளையிங் பயிற்சிகள் அவரை உலகிற்கு புதிய குருவாகக் காட்டின.

இத்துடன் மட்டுமல்லாமல் மஹரிஷி வித்யா மந்திர் உள்ளிட்ட அவரது கல்விக் கூடங்கள் 118 நகர்களில் உருவாகின. 5500 ஆசிரியர்கள் சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்குப் புதிய கல்வித் திட்டம் மூலம் நல்ல பயிற்சியை வழங்கினர்;

ரோல்ஸ்ராய்ஸ் காரில் பயணம், தனி ஹெலிகாப்டரில் பயணம் என்ற அவரது பயண நிகழ்வுகள் உலக பத்திரிகைகளின் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களாக ஆகி விட்டன!

2008ல் அவரது சொத்தின் மதிப்பு 300 கோடி அமெரிக்க டாலர் என்ற அளவில் பெருகியது.

அவரது மருத்துவ மனைகள், ஆரோக்கியத்தை மேம்படுத்த உலக மக்களுக்கு உதவின.

பீட்டில்ஸ் இசைக்குழு

1962 முதல் உலகின் ஆகப்பெரும் இசைக்குழுவாக பீட்டில்ஸ் குழு திகழ்ந்தது. ஜான் லெனான், பௌல் மக்கார்ட்டினி, ஜார்ஜ் ஹாரிஸன், ரிங்கோ ஸ்டோர் ஆகிய நால்வர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களது இசையால் உலகப் புகழ் பெற்றது பீட்டில்ஸ் இசைக் குழு.

இக்குழுவில் இருந்தோர் அனைவருக்கும் ஒரு ஆன்மீக தாகம் ஏற்பட்டது. “அதிகப் புகழை அடைந்து விட்டோம். ஆனால் இதெல்லாம் எதற்காக” என்ற ஒரு தேடல் உணர்வு குழுவினரிடையே ஏற்பட்டது. 1967 பிப்ரவரியில் ஜார்ஜ் ஹாரிஸனின் மனைவி பாட்டி பாய்ட் ஆழ்நிலை தியானம் பற்றி அறிந்து தன் கணவரிடம் சொல்ல அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனில் நிகழ்ந்த மஹரிஷியின் உரைக்கு இருவரும் சென்றனர். பின்னர் வேல்ஸில் நடந்த பத்து நாள் முகாமிற்கு பீட்டில்ஸ் குழுவினர் சென்று அதில் கலந்து கொண்டனர்.

தங்களின் ஆன்மீகத் தேடலுக்கு விடை காண குழுவினர் அனைவரும் 1968 பிப்ரவரி மாதம் ரிஷிகேசம் வந்து சேர்ந்தனர்.

உலகெங்குமுள்ள பத்திரிகைகள் இதைப் பெரிய நிகழ்வாகக் கொண்டு செய்திகளைச் சேகரிக்க ஆரம்பித்தன. ஆன்மீக எழுச்சிக்காக அவர்கள் ரிஷிகேசத்தில் உள்ள மஹரிஷியின் ஆசிரமத்திற்கு வந்தது அவர்களது படைப்பாற்றல் திறனை வெகுவாகத் தூண்டிவிட்டது. எப்போதுமில்லாத விதமாக அற்புதமான 48 பாடல்களை அவர்கள் உருவாக்கினர். இவற்றில் பெரும்பாலானவை மிகவும் பிரபலமான ‘வொய்ட் ஆல்பம்’ என்ற அந்த வருடத்திய வெளியீட்டில் சேர்க்கப்பட்டிருந்தன. பீட்டில்ஸ் குரு என்ற பெயரை மஹரிஷி பெற்றார்.

ஆனால் மஹரிஷியைப் பற்றிய சில புரளிகளால் மூன்று மாதம் தங்க திட்டமிட்ட அவர்களது ரிஷிகேச வாசம் பாதியிலேயே முடிந்தது. ஆனால் பின்னால் பலவருடங்களுக்குப் பிறகு அவர்களில் சிலர் மீண்டும் மஹரிஷியைச் சந்தித்தனர். தங்களது தவறான புரிதலுக்கு அவர்கள் பெரிதும் வருந்தினர்.

ஆனால் மஹரிஷியோ அவர்கள் வந்ததையும் பெரிது படுத்தவில்லை; அவர்கள் சென்றதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.

அறிவியல் சோதனைகள் மூலம் நிரூபணம்!

ஒரு சமுதாயம் நலமுற இருக்கவேண்டுமெனில் அந்த சமுதாயத்தில் வாழும் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் மனநலத்துடனும் இருத்தல் வேண்டும்.

இதற்கு ஆழ்நிலை தியானம் உதவுகிறது என்பதை அறிவியல் சோதனைகள் நிரூபித்துள்ளன.

ஆழ்நிலை தியானத்தினால் என்ன பயன் என்று கேட்கும் சில பகுத்தறிவுவாதிகளுக்குப் பதில் சொல்லும் விதமாக ஏராளமான அறிவியல் சோதனைகளின் முடிவுகளை வரைபடங்களுடன் 1977-ல் ‘‘க்ரியேடிங் அன் ஐடியல் சொஸைடி – மஹரிஷி எஃபெக்ட்’ என்ற  170 பக்கங்கள் அடங்கிய ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. ஆழ்நிலை தியானத்தைப் பற்றி நூற்றுக்கும் மேலான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. என்ற போதிலும் இது குறிப்பிடத்தக்க புத்தகமாக அமைகிறது.

இதிலுள்ள அறிவியல் சோதனை முடிவுகள் விவரிக்கும் வரைபடங்களின் சுருக்கத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.

1)       உயிர்ப்பொருள் மாறுபாடு என்னும் மெடபாலிக் ரேட், ஆக்ஸிஜன் அளவை அளப்பதன் மூலம் பெறப்பட்டது. ஆழ்நிலை தியானத்தின் போது ஆக்ஸிஜனை உட்கொள்ளும் அளவு வியக்கத்தக்க அளவில் குறைவாக இருந்தது. இது ஒரு ஆழ்ந்த ஓய்வை உடலுக்குத் தருகிறது.

2)       எலக்ட்ரோ கார்டியோ கிராம் மூலமாக  ஆழ்நிலை தியானத்தில் தேர்ந்த 11பயிற்சியாளர்கள் மூலமாக அவர்களது இதயத் துடிப்பின் அளவு ரிகார்ட் செய்யப்பட்டது.  இதன் மூலம் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடும் போது இதயத்துடிப்பின் அளவு நிமிடத்திற்கு ஐந்து துடிப்புகள் குறைவது தெரிய வந்தது.

3)       முன்கையில் ஏற்படும் ரத்த ஓட்டத்தை ஐந்து பேரிடம் ஆழ்நிலை தியானத்திற்கு முன்னர், தியானம் செய்யப்படும் நிலையில் மற்றும் ஆழ்நிலை தியானம் முடிந்த பின்னர் அமைதியாக உட்காரும் நிலையில் 180 முறை அளவுகள் எடுக்கப்பட்டன.  இந்த முன்கை ரத்த ஓட்ட அளவு தானியங்கி நரம்பு மண்டலத்தின் நிலையைத் தெளிவாகக் காட்டும் ஒன்று. 32 சதவிகித முன்கை ரத்த ஓட்ட அளவு அதிகரிப்பு  தானியங்கி மண்டலத்தின்  அதிக அளவு சமச்சீர் நிலை பெறுவதைத் தெளிவாகக் காட்டியது.

4)       ப்ளாஸ்மா கார்டிஸாலின் அளவு வெகுவாகக் குறைவது காணப்பட்டது.  அதிக அளவு கார்டிஸால் அளவு அதிக அளவு கவலையையும், மனநிம்மதி அற்ற தன்மையையும் கொண்டதைக் காட்டும். ஆனால் ஆழ்நிலை தியானத்தால் கவலை, மன அழுத்தம் குறைந்து எப்போதும் சமச்சீருடனான சாந்தமான மனநிலையைக் கொண்டிருப்பதைக் காட்டியது.

5)       தோலின் எதிர்ப்புத் தன்மை கூடுகிறது.

6)       படைப்பாற்றல் திறன் கூடுகிறது

7)       நுண்ணறிவுத் திறன் கூடுகிறது.

8)       மதுப் பழக்கம் போன்றவற்றைத் தடுக்கிறது

இது போன்ற இன்னும் ஏராளமான நலன்களை அறிவியல் சோதனைகள் நிரூபிப்பதைக் காண்கிறோம்.

மாலைமலர் 4-9-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.

Japanese Proverbs and Chinese Stories (Post No.13,764)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,764

Date uploaded in London – 9 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Japanese Proverbs and Chinese Stories (Post No.13,764)

Southeast Asian countries and Far Eastern countries share the same proverbs with slight changes.

He hangs up a cow’s head and sells horse meat is known to many in those countries

Chinse and Koreans are eating dog’s meat. As of today, Koreans eat ten lakhs dogs every year. Chinese eat anything that moves including scorpions, lizards and snakes.

So they change the proverb as He hangs up a sheep’s head and sells dog meat.

In Japanese it is

Gyuuto wo kakete ba niku wo ru  meaning to hang up a cow’s head and sell horse meat

The story behind this proverb comes from China :

Duke Jinggong of Qi ordered the woman in his court to wear men’s clothes. This was then imitated in the state, although he prohibited it. Yan Yin, his prime minister tod him, You encourage women to war men’s clothes at the court but prohibit other women doing the same. This is just like hanging up an ox head as a sign and actually selling horse meat. The warning was accepted, and the unwanted practice stopped. Later hanging up a sheep’s head and selling dog meat became an idiom.

Nowadays the insurance companies and travel agents do the same. They get all the money for a number of years from the customers and when one claims money they show the small print matter and say they can’t provide the money

When I was a school boy in Madurai, Tamil Nadu we used to see similar cheating advertisements in the Tamil restaurants. The board said GHEE is not used to make the food stuff in this hotel, is not will be in smallest letters

Tamil Proverbs on Cheating and Double Standards

ஊருக்குத்தாண்டி உபதேசம் உனக்கல்ல .

1314. உருத்திராக்ஷப் பூனை உபதேசம் பண்ணினதுபோல.

As a beaded cat gave divine instruction.

1206. உடும்புக்கு இரண்டு நாக்கு உண்டு, மனிதனுக்கு இரண்டு நாக்கு உண்டா ?

The guana has a double tongue, has man the same?

3896.தூவி நாக்கு இடரும்

A double tongue will slip.

மாமியார் உடைத்தால் மண்கலம் மருமகள் உடைத்தால் பொன்கலம் 

****

Dogs transported for Chinese Dog Meat Festival

Story of Separated Wife

It is no use of crying over spilt milk

Or spilt water cannot be gathered

In Japanese they say,

Fukusui bon ni kaerazu meaning spilt water does not return to tray.

In tamil they say broken glass or broken pot cannot be fixed

5026. பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும் என்ன ஆகும் மண்ணின் குடம் உடைந்தாக்கால் ?

Though broken to pieces a golden pot will still be gold, of what use is an earthen pot when broken?

5224. மாமி ஒட்டினாலும் பானை ஒட்டாது.

Though a mother-in-law may be reconciled, the broken pieces of any earthen pot cannot be reunited.

The story for this proverb is as follows,

Lord Jiang was left by his wife due to his poverty. Later he was appointed Prime Minister by king Wenwang of  Zhou dynasty and then she wanted to reunite with him. Jiang spilt a basin full of water on the ground and asked his wife to recover it. Of course she failed and then he said, As you left me it is impossible for us to make it up. It is like spilt water that cannot be recovered.

The Japanese proverb is used in the cases of divorces.  In Japan persons separated rarely come together again.

–subham—

Tags- Tamil, Japanese proverbs, Chinese stories, spilt milk, cow’s head, horse meat, sheep’s head, dogs meat.

‘எகிப்திய நாகரீகம் இந்திய நாகரீகமே’ என்று சொன்ன ஜெர்மானியர்! ( Post .13,763)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,763

Date uploaded in London – 9 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 ‘எகிப்திய நாகரீகம் இந்திய நாகரீகமே’ என்று சொன்ன ஜெர்மானியர்! ( Post .13,763)

available from pustaka.co.in

available from pustaka.co.in

பீட்டர் வான் போலன் (1796-1840),  நமக்கு பல அதிசய செய்திகளை விட்டுச் சென்றுள்ளார் அராபிய , பாரசீக, சம்ஸ்க்ருத மொழிகளைக் கற்ற இந்த ஜெர்மானியர் எகிப்திய நாகரீகம் , இந்தியாவிலிருந்து கடன் வாங்கியதே என்று இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டார். இன்றைய ஆய்வுகள் அதை உண்மையென்று காட்டுகின்றன

(முழு ஆதாரங்களும் என்னுடைய தமிழ் ஆங்கிலப் புஸ்தகங்களில் உள்ளன.)

பீட்டர் போலனின் மிகப் பெரிய சாதனை –  எகிப்து தொடர்பான புராதன இந்தியா . பல தொகுதிகளாக வெளியான இந்த பிரம்மாண்டமான புஸ்தகத்தில் இந்தியாவிலிருநு சென்ற பண்பாடுதான் எகிப்திய நாகரீகமாக பரிணமித்தது என்று காட்டியுள்ளார்.

ANCIENT INDIA WITH SPECIAL REFERENCE TO INDIA = DAS ALTE INDIEN MIT BESONDERER BERUKSCICHITGUNG AEGYPTIANS

PETER VON BOHLEN  1796 -1840

பிறந்த தேதி -13-3-1796

பிறந்த  ஊர் FRISIA VILLAGE பிரிசியா

இறந்த தேதி 6-2-1840

கல்வி கற்ற இடம் HAMBURG, BONN ஹாம்பர்க்பான் நகரங்கள்

அவரது குரு  FRANZ  BOPP பிரான்ஸ் பாப்

பார்த்த வேலைகள் – LECTURER IN SANSKRIT, ARABIC, PERSIAN AT KOENIGSBERG சம்ஸ்க்ருத விரிவுரையாளர். பின்னர் பேராசிரியர்.

எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள் –

NITI SATAKA OF BHARTRUHARI, RITU SAMHARA OF KALIDASA

காளிதாசனின் ரிது சம்ஹாரம் பர்த்ருஹரியின் நீதி சதகம் இவைகளை ஜெர்மன் மொழியில் ஆக்கினார் .

****

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

பீட்டர் போலன் பிரிசியா என்னும் ஒரு சின்னக் கிராமத்தில் ஏழைக் கு டியானவர் குடும்பத்தில் பிறந்தார் . அவருடைய  புத்திசாலித்தனத்தைக் கவனித்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் அவர் கல்வி கற்க உதவி செய்தார். ஆயினும் சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்து அநாதை ஆனார்; .அதற்குப்பிறகு வாழ்க்கையே போராட்டமானது. அவர் பார்த்த வேலைகள் — பண்ணைக் கூலியாள், ஒரு பிரெஞ்சு தளபதியின் எடுபிடி ஆள், படகோட்டி, கடைக்கார வேலையாள் !

இதற்குப்பின்னர் ஹாம்பர்க் நகர பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார் . எபிரேயம் /ஹீப்ரு, அராபிய, பாரசீகம் முதலிய மொழிகளைக் கற்று ஹாம்பர்க் நகர நூலகத்தில் இருந்த  அந்த மொழி நூல்களுக்கு அட்டவணை தயாரித்தார்.

இதற்குப் பின்னர் பான் நகருக்குச் சென்று வில்லியம் , ஸ்லெகல் , பாப் ஆகியோருடன் சேர்ந்து சம்ஸ்க்ருத மொழியைப் பயின்றார். பிரான்ஸ் பாப், இவரருக்கு சம்ஸ்க்ருத இலக்கணத்தைப் போதித்தார்  பின்னர் கோநிஸ்பர்க்கில் மூன்று மொழிகளுக்கு ஆசிரியர் ஆகி மூன்றே ஆண்டுகளில் பேராசிரியர் பதவிக்கு உயர்ந்தார்  பிற மொழிகளை ஒதுக்கி விட்டு சம்ஸ்க்ருத மொழிக்கடலில் மூழ்கினார்  எகிப்திய இந்திய ஆராய்ச்சிக்கு கிரேக்க ஆசிரியர்கள், பயணிகள் எழுதிய விஷயங்களைப் படித்தார் .

மனு ஸ்ம்ருதியை ஆதாரமாக வைத்து இந்திய சட்டம் பற்றிய அத்தியாயத்தை எழுதினார் .

போலன் இறந்த பின்னர்தான் முழு அளவுக்கு சம்ஸ்க்ருத நூல்கள் ஜெர்மனியில் கிடைத்தன. அப்போது அவர் இருந்திருந்தால் இன்னும் எழுதிக்குவித்து இருப்பார்.

இவர் பர்ஹருஹரியின் நீதிசதகம், காளிதாசனின் ருது சம்ஹாரம் ஆகியவற்றை முறையாகத் தொகுத்து வெளியிட்டார். சிலர் இவரது அணுகுமுறையை விமர்சித்தபோதும் லாசன் என்ற அறிஞர் இவருடைய நூல்களைப்   பயனுள்ளவை என்று புகழ்ந்தார்

இங்கிலாந்துக்குச் சென்ற போலனை நோய் தொற்றிக்கொண்டது; இரண்டு ஆண்டுகளுக்கு பென்ஷன் உதவித்    தொகை பெற்ற அவர், ஹால் HALLE  நகரில் இறந்தார்.

போலன் எழுதிய சுயசரிதை நூல் அவர் இறந்த பின்னர் வெளியானது

என் கருத்து

130 சம்ஸ்க்ருத அறிஞர்களின் வாழக்கை வரலாற்றினையும் சாதனைகளையும் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வியப்பு !

எதற்காக இவர்கள் பல சம்ஸ்க்ருத சுவடிகளை ஜெர்மனிக்கு எடுத்துச் சென்றார்கள்?

பல கீழ்த்திசை மொழிகளைக் கற்றும் ஏன் சுமக்கிருதக் கடலில் மூழ்கி வேறு மொழிகளை ஒதுக்கினர்?

கடல் போல ஜெர்மன் மொழியில் இவர்கள் எழுதியதை நம்மவர்கள் ஏன் ஆங்கிலத்திலோ இந்திய மொழிகளிலோ வெளியிடவில்லை ?

இனிமேலாவது அதைச் செய்வார்களா? அந்தக் கடலில் உள்ள முத்து பவளங்களையாவது நமக்கு எடுத்து வழங்குவார்களா ?.

ஜெர்மன் மொழியும் ஆங்கிலமும் தெரிந்தவர்களை அழைத்து மாக்ஸ்முல்லர் பவன்களில் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தால்கூட பலன் தரும்.

—SUBHAM—

TAGS- பீட்டர் வான் போலன், PETER VON BOHLEN , ‘எகிப்திய நாகரீகம் இந்திய நாகரீகமே’

ஜோதிடம்: தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-13 (Post No.13,762)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,762

Date uploaded in London – 9 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஜோதிடம்:  பற்றிய நம்பிக்கையில் இரண்டாவது பகுதி

 நட்சத்திரங்களே !  உங்களை நான் பொய்யாக்குவேன்

–ரோமியோ ஜூலியட் வசனம்

****

என்னுடைய நட்சத்திரங்கள் இருண்டவானத்தைக் காட்டுகின்றன

ட்வெல்த் நைட் வசனம்

****

சுப நட்சத்திரத்தை நம்பி நான் இருக்கிறேன்

டெம்ப்ஸ்ட்  நாடகம்

****

அடக்க கடவுளே

தலைவிதி புஸ்தகத்தைப் படித்து

புரட்சிமிக்க எதிர்காலத்தை  அறியமுடிகிறதே

நாலாவது ஹென்றி நாடகம்

*****

என்ன அறிகுறி / சகுனம் வந்தாலும்

அதைத் தோற்கடிப்போம் .

ஹாம்லெட்

****

மேற்கூறிய வசனங்கள் ஒரு ‘சாம்பிள்’தான். இன்னும் அவர் சகுனங்கள் பற்றிச் சொல்லும் வசனங்களையும் தருகிறேன். இது இந்துக்களுக்குப் புரியும் அளவுக்கு வேறு எவருக்கும் புரியாது. ஏனெனில் ஷேக்ஸ்பியர் எழுதிய காலத்தில் ஐரோப்பா முழுதும் நமது நம்பிக்கைகள்   ஆழ வேரூன்றி இருந்தன. கிறிஸ்தவ மதம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவுடன் இவற்றை அதிகம்   பிரசாரம் செய்யவில்லை. அது மட்டுமல்ல; யார் எல்லாம் இது பற்றிப்   பேசினார்களோ   அவர்களையெல்லாம் தீயில் எரித்து கொளுத்திவிட்டனர். பல லட்சம் பெண்களை இப்படி எரித்தனர். நமது நாட்டிலேயே கோவா மாநிலத்தில் போர்ச்சுகீசியர் செயின்ட் சேவியர் தலைமையில் இப்படி அட்டூழியம் செய்தனர்.

இன்றுவரை கிறிஸ்தவ மதத்துக்குக்குப் புறம்பாக விமர்சனம் எழுதினால் தன்னை மதிக்க மாட்டார்களே என்று விமர்சகர்களும் சுப நட்சத்திரம் என்பதைக்கூட விதி என்று மொழிபெயர்க்கின்றனர்.

இந்துக்களில் படிப்பு அறிவில்லாத கிராமத்தானுக்குக் கூட பிரம்மா எழுதிய தலைவிதிப்படி நாம் குறிப்பிட்ட ராசியில் பிறக்கிறோம் அதன்படி நம்முடைய வாழ்க்கை நடக்கும் என்பது தெரியும். திருவள்ளுவரும் இளங்கோவும் விதியை/ ஊழ்வினையை வலியுறு த்தியபோதும் மனிதன் முயற்சியினால் விதியை வெல்லலாம் என்று காட்டியுள்ளனர். கண்ணகி அப்படி தெய்வம் ஆனாள்.  மார்க்கண்டேயன் எமனை வென்றான்; அதை திருக்குறளுக்கு பழைய உரை எழுதிய உரைகார்களும் குறிப்பிட்டுள்ளனர். ஞானிகள் முன்னை விதியை முறியடித்ததை திமூலரும் ஆதி சங்கரரும் பாடலில் சொல்கின்றனர் . மாணிக்க வாசகரும் சிவபுராணம் பாடி முன்னை வினையைக் களைவதாகப் பாடுகிறார். இந்த நம்பிக்கை எல்லாம் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா முழுதும் இருந்ததை ஷேக்சபி யார்  400 இடங்களில் கூறுகிறார் .இந்துக்கள் கோவிலுக்குப் போனாலும் வீட்டில் பூஜை நடத்தினாலும் பிறந்த நட்சத்திரத்தைச் சொன்னவுடன், அர்ச்சகரோ புரோகிதரோ பலத்த குரலில் சங்கல்பம் செய்து நம்மை இறைவனுக்கு அறிமுகப்படுத்தி நமக்காக பூஜை செய்கிறார். பிறந்த நட்சத்திரத்தின்படி நமது ஜாதகம் கணிக்கப்படுகிறது இவை  எல்லாம் இந்துக்களுக்கு அரிச்சுவடி. இதையெல்லாம் மறைக்கும் வகையில் இன்றைய ஆங்கில விமர்சகர்கள்  பூசி மெழுகி உரை எழுதுகின்றனர் ஆனால் சுப நட்சத்திரம், இருண்ட நட்சத்திரம் என்று அப்படியே மொழிபெயர்த்தால் அவர்கள் சாயம் வெளுத்துவிடுகிறது.

வள்ளுவர் குறளில் ,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.-620

முயற்சியின் மூலம் விதியை முறியடிக்கலாம் என்று கூறுகிறார் வள்ளுவர் ; இதை ரோமி ஜுலியட் வசனத்தில் காண்கிறோம்.

இது மார்க்கண்டேயன் கதை என்று பழைய உரைகாரர் சொல்கிறார்

நசிகேதன், சாவித்ரி, மார்க்கண்டேயன் ஆகியோர் தன் முயற்சியால் எமனை /சாவினை வென்றதைக் காண்கிறோம்

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.-1023

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவன் அருளாலன்றே

— திருமந்திரத்தில் திருமூலர்

  . தன்னுடைய குடியை உயர்த்த வருவோனுக்கு தெய்வமே வரிந்துக்கட்டிக்கொண்டு வந்து உதவும் என்றும் கூறுகிறார்.

தமிழில் உள்ள பழமொழிகள் ஒரு மனிதனைக் கிரகங்கள், குறிப்பாக சனிக்கிரகம், எப்படியெல்லாம் படுத்தும்  என்பதைக் காட்டுகின்றன.

12. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்து ராஜா.

ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு என்றும் சொல்லுவர்.

எனக்கு அட்டமத்துச் சனி.

எல்லாருக்கும் சனி துரும்பு போல, எனக்குச் சனி மலைபோல.

ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன்  விடாது

And by my prescience find my zenith doth depend upon

A most auspicious star,

whose influence now I court not but omit, my fortunes

எனக்கு இப்போது அதிர்ஷ்ட காலம் . என் எதிரிகள் என்னை இந்தத் தீவுக்கு நாடு கடத்தியது என் சுப நட்சத்திரத்தைக் காட்டுகிறது என்ற டெம்ப்ஸ்ட் நாடக வசனம் நமக்கு சம்பந்தரின் கோளறு திருப்பதிகத்தை நினைவு படுத்தும் அப்பர் பெருமான் சமணர்களின் மந்திர தந்திரம் பற்றி எச்சரித்த பொது அவர் கோளறுபதிகம் பாடி கெட்ட நட்சத்திரங்களும் நன்மையே செய்யும் என்கிறார்

கோளறு திருப்பதிகம்  

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழை உடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்

ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடன் ஆய நாள்கள் அவைதாம்

அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

பொருள் விளக்கம் :

ஊமத்தை மலர்மாலை, கங்கை ஆகியனவற்றை முடிமேல் சூடி உமையம்மையாரோடு எருதேறி வந்து என் உளம் புகுந்து எழுந்தருளியிருத்தலால், அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும்

முதல் பாடலில் ஒன்பது கிரகங்களின் பெயரையும் சொல்லி அவைகளும் தீங்கு செய்யாது என்கிறார் சமபந்தர் அதே வரிசையில் இன்று ஆங்கிலேயர்களும் கிழமைகளை வைத்துள்ளனர் (SUNDAY TO  SATURDAY)

****Not a whit. We defy augury

Hamlet

Augury is a Tamil word borrowed by the European languages அறிகுறி/ சகுனம்; குறி சொல்லுதல்

ஹாம்லெட் நாடகத்தில் வரும் அறிகுறி என்பதே தமிழ்ச் சொல் அறிகுறியை அப்படி உச்சரிக்கின்றனர் நல்ல சகுனம் இன்பத்தை நாம் நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன என்று இன்றும் சொல்கிறோம்.

அடுத்த கட்டுரையில் சகுனங்கள் பற்றிய ஷேக்ஸ்பியர் வசனங்களைக் காண்போம்

*****

—Subham—

Tags-ஜோதிடம்: தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-13, ஜோதிடம்:, நம்பிக்கை, இரண்டாவது பகுதி

தேவார பதிகங்கள் பற்றிய ஆய்வு! (Post No.13,761)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.761

Date uploaded in London – 9 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

தேவார பதிகங்கள் பற்றிய ஆய்வு!

ச. நாகராஜன் 

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடிய தேவாரப் பதிகங்கள் எத்தனை என்பது பற்றிய ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

திருஞானசம்பந்தர்

திரு தி.வே.கோபாலையர் ஆய்வு

திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் 383.

பாடல்கள் மொத்தம்: 4080

திருவிடைவாய்த்தலம் பற்றிய அவ்வூர் கோவில் கல்வெட்டில் ஒரு தேவாரப் பதிகம் உள்ளது. அந்தப் பதிகம் 384-ம் பதிகம் என்பர்.

திரு பாண்டியராஜா ஆய்வு

திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் 385

4169 பாடல்கள் இதில் உள்ளன.

16501 அடிகள் உள்ளன.

இவற்றில் வரும் மொத்த சொற்களின் எண்ணிக்கை 1,08,252

சதுரா ஜீ.ச. முரளி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பன்னிரு திருமுறை என்ற நூல்கள் சதுரா பதிப்பகம், சென்னை-109 சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி:

திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் 385

பாடல்கள் 4169

திருநாவுக்கரசர்

Shaivam.org ஆய்வின் படி

திருநாவுக்கரசர் அருளிய பாடல்கள் 49000-ல் நமக்குக் கிடைத்துள்ளவை சுமார் 3000 பாடல்கள். பதிகங்களின் எண்ணிக்கை 312. தலங்கள் 126.

சதுரா ஜீ.ச. முரளி ஆய்வின் படி:=

திருநாவுக்கரசர் அருளிய பதிகங்கள் : 312

அருளிய பாடல்கள் : 3066

சுந்தரர்

திரு தி.வே.கோபாலையர் ஆய்வு

சுந்தரர் அருளிய பதிகங்கள் 100

திரு பாண்டியராஜா ஆய்வு

சுந்தரர் அருளிய பதிகங்கள் 101

1037 பாடல்கள் இதில் உள்ளன.

4146 அடிகள் உள்ளன.

இவற்றில் வரும் மொத்த சொற்களின் எண்ணிக்கை 30,322

சதுரா ஜீ.ச. முரளி ஆய்வின் படி:=

சுந்தரர் அருளிய பதிகங்கள் : 100

அருளிய பாடல்கள் : 1026.

திருநாகைக்காரோணம் பற்றிய ‘பொன்னாம் இதழி விரைமந்தம்’ என்ற சுந்தரர் பதிகம் 101-ம் பதிகமாகக் குறிப்பிடப்படுகிறது. இதை வெள்ளிப்பாட்டு என்பர் . (தி.வே.கோபாலையர் குறிப்பு)

மேலும் சில குறிப்புகள்:

திருஞானசம்பந்தர் 276 தலங்களில் 225 தலங்களில் பாடியுள்ளார்.

பாடாத தலங்கள் 51.

சம்பந்தர் அருளியவை முதல் மூன்று திருமுறைகள்.

அப்பர் அருளியவை நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள்

சுந்தரர் அருளியது: ஏழாம் திருமுறை.

இந்த ஏழு திருமுறைகளும் தேவாரம் என வழங்கப்படும்.

திருவாசகம் –  எட்டாம் திருமுறை

எட்டாம் திருமுறை மாணிக்கவாசகர் அருளியது. இது திருவாசகம் என வழங்கப்படும்.

இதில் திருவாசகம் 858 பாடல்கள்

திருக்கோவையார் பாடல்கள் 400

திரு பாண்டிய ராஜா : திருவாசகத்தில் 51 அதிகாரங்கள் உள்ளன. இதில் 3438 அடிகள் உள்ளன. 21798 சொற்கள் உள்ளன.

ஒன்பது முதல் 12 திருமுறைகள் வரை

ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு – 301 பாடல்கள்

பத்தாம் திருமுறை திருமந்திரம் 3000 பாடல்கள்.

திரு பாண்டிய ராஜா : பத்தாம் திருமுறை 3047 பாடல்கள். இதில் 12188 அடிகள் உள்ளன. 58225 சொற்கள் உள்ளன.

11-ம் திருமுறை  40 பிரபந்தங்கள்.

12-ம் திருமுறை சேக்கிழார் அருளிய பெரியபுராணம் – இதில் 4286 பாடல்கள் உள்ளன.

ஆக பன்னிரு திருமுறைகளில் நமக்குக் கிடைத்துள்ள பாடல்கள் 18179 ஆகும். (சதுரா ஜீ.ச.முரளி)

தேவாரத் தலங்கள் 276

தேவாரத் தலங்கள் மொத்தம் 276.

தேவார வைப்புத் தலங்கள் மொத்தம் 283

காவிரியின் தென்கரைத் தலங்கள் மொத்தம் 128

காவிரியின் வடகரைத் தலங்கள் மொத்தம் 63

ஈழ நாட்டுத் தலங்கள் 2

கொங்கு நாட்டுத் தலங்கள் 7

துளுநாட்டுத் தலம் 1

தொண்டைநாட்டுத் தலங்கள் 33

நடுநாட்டுத்தலங்கள் 22

பாண்டிநாட்டுத்தலங்கள் 14

மலைநாட்டுத் தலம் 1

வடநாட்டுத் தலங்கள் 5

ஆக மொத்தம் தலங்கள் : 276 (தி.வே.கோபாலையர் குறிப்பு)

பொதுப்பதிகங்கள் 48-ல்

திருஞானசம்பந்தர் அருளியவை 7

திருநாவுக்கரசர் அருளியவை 37

சுந்தரர் அருளியவை 4

ஆக மொத்தம் 48 (தி.வே.கோபாலையர் குறிப்பு)

இப்படி இன்னும் பல ஆய்வுகள் உள்ளன.

அவையும் ஏறத்தாழ இதே எண்ணிக்கைகளையே குறிப்பிடுகின்றன.

Chinese stories and Tamil Proverbs (Post No.13,760)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,760

Date uploaded in London – 8 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

There are more interesting stories from China that can be compared with Tamil or Marathi proverbs.

To break a butterfly upon a wheel .

Or

To kill a bird with ox butchering knife

is the proverb in far eastern and South East Asian countries. The equivalent Tamil proverb is

கோழி அடிக்கிறதற்குக் குறுந்தடி வேண்டுமா?

Is a club needed to kill a fowl?

In Japanese they say,

Gyuuto wo motte niwatori wo  saku meaning

Taking an ox butchering knife to kill a chicken.

There is an interesting story from Confucius’ life

Confucius asked his former disciple  Zi  You,

Do you need rites and music to rule over a small place like Wu Cheng? Why use an ox cleaver to kill a chicken?

Zi You answered, you told once that when the people rites and music they will live in peace and harmony. I have been following your instructions.

I was only joking, answered Confucius.

This reminds us of another story from the Teachings of Sri Ramakrishna Paramahamsa.

“A serpent dwelt in a certain locality. No one dared to pass by that way; for whoever did so was instantaneously bitten to death by the serpent.

 Once a holy man passed by. As usual the serpent pursued the sage with a view to biting him, but when it approached the holy man, it lost all kits ferocity and was overpowered by his gentleness. Seeing the snake, the holy man said,

‘Well, friend! Do you want to bite me?’ The snake was abashed and did not reply. At this the sage said again, ‘hearken friend, do not injure anyone in future’. The snake bowed and nodded assent.

 After the sage, had hone his own way, the entered its hole, and began to live a life of innocence and purity without even wishing to harm anyone. In a few days, it became a common belief in the neighbourhood that the snake had lost all its venom and was no more dangerous, and so people began to tease it. Some pelted stones at it., and others dragged it mercilessly by the tail. Thus there was no end to its troubles.

Fortunately, sometime after, the sage again passed that way seeing the bruised and battered condition of the poor snake, was very much moved to pity and inquired about the cause of its distress.

At this the snake replied, Sir, I have been reduced to this state, because I Have not been injuring anyone since I received your instruction. But alas! they are so merciless!

The sage smilingly said, ‘Dear friend, I only advised you not to bite anyone, but I never asked you not to hiss and frighten others. Although you should not bite any creature, still you should keep everyone at a considerable distance from you by hissing’.

 Similarly, if you live in this world, make yourself feared and respected. Do not injure anyone, but do not at the same time let others injure you.

Source:

Sayings of Sri Ramakrishna, Sri Ramakrishna Math, Mylapore, Chennai 600004

Chanakya says,

“Even a snake with no poison should raise its hood. Be there poison or not, the raising of the hood instils fear”—Chanakya Niti, Chapter 9, sloka/verse 10

 Here is the verse in Sanskrit:-

nirvishenaani sarpena karthavyaa mahati fanaa

vishamastu na chaapyastu fanaayopo bhayankarah

Canakyaniti, Satya Vrat Shastri, Bharatiya Vidya Mandir, Kolkata

****

Cat and Bird Stories

A bird once wounded is afraid of a bow.

or

A bird  wounded by an arrow will fall from a bang.

In Japanese hey say,

Shokyuu no tori wa kyokuboku ni odoroku meaning 

A bird hurt by an arrow is frightened even by a crooked twig.

The Chinese story behind this proverb is

Gang Lei, a famous archer of the state of Wei, on an excursion noticed a wounded wild goose flying in the sky. He just twanged the string of his bow. The goose, hearing it, thought that it was again hit by an arrow and fell to the ground in front of them.

This reminds us of another story from the life of Tenali Rama.

சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது .


The cat that has got fire burns will never go near the kitchen.

Tenali Ramakrishna was minister to a great king Krishna Deva Raya. Once in that city there was lot of problems due to rats.  The ministers took the decision to provide one cat to every house and milk allowance to raise the cat . All people were happy and used to give cats lot of milk to drink.

Tenali Ramakrishna was a clever man. He decided not to give milk to cat. So the first day he boiled the milk and poured it in a pan. He gave the piping hot milk to the cat. The cat, which was hungry came and sipped the milk from the pan. Since the milk was hot it burnt its mouth. The cat ran away. Tenali Ramakrishna’s cat became skinny, and all other cats were fat and happy.

After a few months, the king wanted to see all the cats maintained properly. When the king saw Tenali’s cat, he was very angry with Tenali Ramakrishna for not raising his cat properly. Then Tenali Ramakrishna told the king that he was not lucky since his cat did not drink any milk. The king wanted to put Tenali Ramakrishna in Jail for telling a lie and wanted him to prove what he said.

Then Tenali Ramakrishna brought the pan of milk and his cat. The cat on seeing the milk ran away. It thought that it was being given again hot milk. The king pitied Tenali Ramakrishna and let him away. This is the story behind the proverb about cat that burnt its mouth.

*****

Thirsty Man digging a well

Must one dig a well to quench his thirst?

or

Have not your cloak to make when it begins to rain

or

Do not wait till you are thirsty to dig a well

0r

A thirsty man digs a well.  

கிணறு வெட்டித் தாகம் தீர்க்கலாமா is the equivalent Tamil proverb.

In Marathi they say, Tahaana laagalyaavar vihiira khananen तहान लागल्‍यावर विहीर खणणें.

In Japanese they say,

Katsu ni nozomiteido wo horu meaning in the presence of thirst, one digs a well.

Chinese story for this proverb is

During the Spring and Autumn period (770-476 BCE) Duke Zao gang made grave mistakes, lost the confidence of the people of Lu and flee the country. He settled in Qi. After some time, he thought of returning to his country and rule. He consulted his minister, and he said, I don’t think so. Many people lost their way because they did not bother to ask their way or drowned while wading across the river because they did not ask about the depth of the river beforehand. This is like making weapons when the war has broken out and sinking a well when one is thirsty.

–subham—

Tags- Tamil, Japanese, Chinese, Proverbs, stories, Tenali cate, digging well, to kill a chicken, Marathi

காக்கிநாடா கோவில்கள்- PART 37 (Post  No.13,759)

Annnavaram Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,759

Date uploaded in London – 8 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

37ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் Part-37

ஆந்திர  பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் பல புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன . அவைகளாவன :

அன்னவரம் சத்ய நாராயண கோவில் Annavaram Satyanarayana Temple, கொல்லால மாமிததா கோதண்டராமசுவாமி கோவில் Kodandarama Temple,, Gollala Mamidada,; கொல்லால மாமிததா சூர்யா நாராயண சுவாமி கோவில் Suryanarayana Swamy Temple, Gollala Mamidada; குக்குடேஸ்வரர் கோவில் Kukkuteswara Temple,; குமாரராமா கோவில் Kumararama; தளும்புலம்மா லோவா கோவில் Talupulamma Lova.

ஒவ்வொன்றாக தரிசிப்போம்  

****

கொல்லால மாமிதாத சூர்ய நாராயண சுவாமி கோவில்

Suryanarayana Swamy Temple

இந்த சூர்யநாராயண சுவாமி கோவில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லால மாமதாத ஜமீன்தாரால் கட்டப்பட்டது. பதினாறு ஏக்கர் ரப்பில் புல்வெளி, தென்னந்தோப்புக்கு இடையே ஜமீன்தார் கொவ்வுரி பசவ ரெட்டி இதைக் கட்டினார். அருகில் அந்தர்வாஹினி நதியும் அழகு சேர்க்கிறது .கோபுரத்தின் உயரம்  210 அடி. காக்கிநாடாவிலிருந்து இருபது கி.மீ தொலைவு.

வைஷ்ணவ ஆகமப்படி அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ரத சப்தமி , பீஷ்ம ஏகாதசிகள் முக்கிய விழாக்கள் . தென்னந்தோப்பில் கணபதி சந்நிதியும் உளது.

கிழக்கு கோபுர உயரம் -170 ; 9 நிலைக் கோபுரம், 5 கலசங்கள்

மேற்கு உயரம் -210; 11  நிலைக் கோபுரம், 5 கலசங்கள்

நடுவிலுள்ள ஒரு மண்டபத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு (1975) முன்னர் கண்ணாடி மண்டபத்தையும் கட்டியுள்ளனர்

இந்த ஆலயத்தை கோபுரல மாமிதாத என்றும் அழைப்பார்கள் ; கோபுரம் அவ்வளவு உயரம்!

கர்ப்பக்கிரகத்துக்கு மேலே இரண்டாவது அடுக்கிலுள்ள கண்ணாடி மண்டபத்தில் கண்ணாடி ஓவியங்கள் உள்ளன; அங்கு ராம பட்டாபிஷேகக் காட்சிகளையும் காணலாம். கோபுரத்துக்கு மேலேயும் செல்லலாம். அங்கிருந்து கோபுரத்திலுள்ள ராமாயணக் காட்சிகளையும் பார்க்கலாம்

  இவையெல்லாம் வேறு எங்கும் காண முடியாத விஷயங்கள்.  தனி மனிதர் ஒருவர் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வளவு உயர கோபுரத்தை எழுப்பி சோழ , பாண்டிய, நாயக்க மன்னர்களைத் தோற்கடித்துவிட்டார் என்று சொன்னால் மிகையாகாது.

*****

பித்தாபுரம் குக்குடேஸ்வர சுவாமி கோவில்

குக்குடேஸ்வர சுவாமி கோவில் ஆந்திர பிரதேசத்தில் காகிநாடா மாவட்டத்தில் இருக்கிறது. காகிநாடாவிலிருந்து இருபது  கி.மீ தொலைவு.  இது சைவர்களுக்கும் சாகத்தர்களுக்கும் முக்கியமான் ஸ்தலம்.

குக்குடம் என்றால் கோழி/ சேவல்

இங்குள்ள ஸ்வயம்பு லிங்கத்தின் வடிவம்  மேல் பகுதியில் அந்த வடிவத்தில் இருப்பதால் குக்குடேஸ்வர சுவாமி என்று பெயர்.

தேவியின் பெயர் ராஜ ராஜேஸ்வரி .

இது பதினெட்டு சக்தி பீடங்களில் ஒன்று . சமுத்திர குப்தனின் அலகாபாத் கல்வெட்டிலும் இந்த ஸ்தலம் குறிப்பிடப்படுகிறது

இந்த ஆலய  வளாகத்தில் குந்திமாதவ சுவாமி கோவில், ஸ்ரீ ஸ்ரீ பாத வல்லப க்ஷேத்ரம், வேணுகோபால சுவாமி கோவில் ஆகியனவும் இருக்கின்றன  லெபாக்ஷி போல பெரிய ஒற்றைக் கல்  நந்தியும் த்வஜ ஸ்தமபம் அருகில் உள்ளது.. சிவராத்ரி காலத்தில் நிறைய கூட்டம் வருகிறது’

இந்தக் கோவிலுக்கு வேறு சில சிறப்புகளும் உண்டு பித்ருக்களின் அருளைப் பெறும் கயா க்ஷேத்ரமாகவும், தத்தாத்ரேயர் அவதார ஸ்தலமாகவும் கருதப்படுகிறது

கோவில் புஷ்காரிணியின் நடுவிலுள்ள பெரிய மணடபத்தில் கயாசுரன் சிலை இருக்கிறது.

*****

அன்னாவரம் வீர வெங்கட சத்யநாராயணா கோவில்

அன்னாவரம் வீர வெங்கட சத்யநாராயணா கோவில் ஒரு விஷ்ணு கோவில் . இது ரத்தினகிரி மலையில் பம்பா நதிக்கரையில் அமைந்துள்ளது.

ஆலயத்துக்குப் படிகளில் ஏறியோ சாலை மார்க்கமாகவோ போக முடியும் . கோவிலுக்குச் செல்ல 460  படிகள் உள்ளன.

கோவில் இரண்டு அடுக்குகளில்  அமைந்துள்ளது  கோவில் ஒரு ரதம் போல நான்கு மூலைகளில் நான்கு சக்கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது  முக்கிய நுழைவாயில் தங்கத் தகடுகளால் வேயப்பட்டிருக்கிறது.

காக்கிநாடாவிலிருந்து 40  கி.மீ,ராஜமுந்திரியிலிருந்து 80 கி.மீ ; விசாகையிலிருந்து மூன்று மணி நேரத்தில் காரில் செல்லலாம்.

அருகிலேயே ராமர் கோவில், வனதுர்கா, கனக துர்கா கோவில்களும் இருக்கின்றன.

கோவிலின் முன் பகுதி ரத வடிவில் சூர்ய சந்திரர்கள் ரத சக்கரங்கள் என்றும் சொல்லப்படுகிறது உயரத்தில் இறைவன் சிலைகள் இருப்பது அவரே பிரபஞ்சத்தை காலச் சக்கரம் வழியே இழுத்துச் செல்கிறார் என்ற அர்த்தத்தில் சிற்பிகள் வைத்துள்ளனர். அனந்த லக்ஷ்மி சத்யவதி என்பது தேவியின் திருநாமம்

****

குமாரராமா கோவில்

காகிநாடாவிலிருந்து12 கி.மீ தொலைவில் சாமல்கோட் இருக்கிறது இது பஞ்சராம ஸ்தலங்களில் ஒன்றாகும் SRI CHALUKYA KUMARARAMA SRI BHIMESWARASWAMY  TEMPLE  ஸ்ரீ பீமேஸ்வர சுவாமி  ஒரே கல் சிவலிங்கமாக காட்சி தருகிறார்  அங்கே ஒரே கல்லிலான நந்தியும் இருக்கிறது சிவன் கோவில் மேல் அடுக்கில் இருக்கிறது. பாலா திரிபுர சுந்தரி இங்குள்ள அம்மன் ஆகும். அழகான புஷ்கரிணியும் (குளம்) ஆலய வளாகத்தில் இருக்கிறது இது சாளுக்கியர் கால ஒன்பதாம் நூற்றாண்டுக் கோவில்.

இங்குள்ள லிங்கம் 16 அடி உயரமானது. முதல் அடுக்கில் இதன் பீடம் இருக்கிறது . லிங்கம் இரண்டாவது அடுக்கு வரை செல்கிறது நூறு தூன்க்கள் உள்ள மண்டபத்தில் நிறைய சிற்பங்களும் அலங்கார வேலைப்பாடுகளும் கண்ணுக்கு விருந்து அளிக்கின்றன.

த்ரராக்ஷரம கோவில் போலவே இது உள்ளது

கோவிலைக்கட்டி முடிக்க மன்னன் பிடிமானுக்கு முப்பது ஆண்டுகள் ஆயின. மன்னனின் பெயரில் லகோவில் அழைக்கப்படுகிறது  சாளுக்கியருக்குப் பின்னர் வந்த காகதீயர்கள் கோவிலை மேலும் அழகுபடுத்தினர்

அண்மைக்கால கல்வாராய்ச்சியில் மேலும் பல சிலைகளை இங்கே கிடைத்தன. கார்த்திகை மார்கழி மாத உற்சவங்கள் சிறப்பான முறையில்கொண்டாடப்படுகின்றன

மாண்டவ்ய நாராயண சுவாமி கோவிலும் அருகில் இருக்கிறது. இது மாண்டவ்ய மகரிஷி வழிபட்ட ஆலயம்  அருகில் த்ரி முக லிங்கம் கோவிலும் இருக்கிறது 14அடி உயரமுள்ள லிங்கத்தின் மேல்பகுதியை மட்டுமே காணமுடியும், ஏனைய பகுதிகள் மண் மூடிவிட்டு பிரம்மா விஷ்ணு சிவனுடைய மூன்று முகங்கள் லிங்கத்தில் இருப்பதால் திருமுக  த்ரி முக்கலும் என்பது இறைவனின் பெயர்

–SUBHAM—

ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் Part-37

குமாரராமா , கொல்லால மாமிதாத, சூர்ய நாராயண சுவாமி கோவில் ,அன்னாவரம் ,பித்தாபுரம், குக்குடேஸ்வர

ராமாயணத்தில் வரங்கள் (12) திதியின் கோரிக்கைக்கு  இந்திரன் சமமதித்துக் கூறியது! (Post No.13,758)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13 758

Date uploaded in London – 8 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயணத்தில் வரங்கள் (12)

ராமாயணத்தில் வரங்கள் (12) திதியின் கோரிக்கைக்கு  இந்திரன் சமமதித்துக் கூறியது!

ச. நாகராஜன்

பாலகாண்டத்தின் நாற்பத்தேழாவது ஸர்க்கமாக அமைவது ‘விசாலா நகரத்தின் வரலாற்றைச் சொல்வது”  என்ற ஸர்க்கம்.

திதியின் கர்ப்பம் ஏழு துண்டுகளாக ஆனவுடன் மனம் நொந்து போய் அவள் இந்திரனை நோக்கி மனத்துணிவுடையவளாக பின்வருமாறு சொன்னாள்:

மமாபராதாகர்போத்யம் சப்ததா விபலிக்ருத: |

நாபராதோஸ்தி தேவேஷ தவாத்ர பலசூதன |\

பலசூதன – பலன் என்ற அசுரனைக் கொன்ற

தேவேஷ – தேவராஜனே

அயம் – இந்த

கர்ப: – கர்ப்பம்

மம – என்னுடைய

அபராதாத் – குற்றத்தாலேயே

சப்ததா – ஏழு துண்டங்களாய்

விபலீக்ருத: – பயனற்று விட்டது

அத்ர – இந்த விஷயத்தில்

தவ – உன்னிடம்

அபராத: – குற்றமொன்றும்

ந அஸ்தி – இல்லை

ப்ரியம் த்வத்க்ருதமிச்சாமி மம கர்பவிபர்யயே |

மருதாம் சப்த சப்தானாம் ஸ்தானபாலா பவன்னித்வமே ||

மம – என்னுடைய

கர்பவிபர்யயே – கர்ப்பத்திற்கு உண்டான இந்தக் கெடுதியிலுமே

ப்ரியம் – ஒரு நன்மை

த்வத்க்ருதம் – உன்னால் செய்யப்படுவதை

இச்சாமி – வேண்டுகிறேன்

இமே – இவைகள் (இந்தக் கர்ப்பத் துண்டுகள்)

சப்த – எழுவர்களும்

சப்தானாம் – ஏழு

மருதாம் – மருத்துக்களுடைய

ஸ்தானபாலா – பதவிபரிபாலக தேவதைகளாய்

பவந்து – ஆகட்டும்

வாதஸ்கந்தா இமே சப்த சரந்து திவி புத்ரகா: |

மாருதா இதி விக்யாதா திவ்யரூபா மமாத்மஜா: ||

மம – என்

ஆத்மஜா – சரீரத்திலிருந்து உண்டான

இமே – இந்த

புத்ரகா: – பிள்ளைகள்

வாதஸ்கந்தா: – வாயுக்களுக்கு அதிஷ்டானங்களாய்

சப்த – ஏழு (ஸப்த)

மாருதா: – மருத்துக்கள்

இதி – என்று

விக்யாதா: – பிரசித்தி அடைந்தவர்களாய்

திவ்யரூபா: – தேவதாரூபிகளாய்

திவி – தேவலோகத்தில்

சரந்து – சஞ்சரிக்கட்டும்

பாலகாண்டம், 47-ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 2,3,4

இவ்வாறாக திதி இந்திரனிடம் கூறினாள்.

உடனே இந்திரன் பின்வருமாறு கூறினான்:

சர்வமேதத்யதோக்தம் தே பவிஷ்யதி ந சம்சய: |

விசரிஷ்யந்தி பத்ரம் தே தேவபூதாஸ்தவாத்மஜா: |\

–    பாலகாண்டம், 47-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 8

–     

தே – தேவரீருக்கு

பத்ரம் – சுபமே

ஏதத் சர்வம் – இதெல்லாம்

தே – உம்மால்

யதா உக்தம் – சொல்லப்பட்டபடியே

பவிஷ்யதி – நடக்கும்

சம்சய:  – சந்தேகம்

ந – இல்லை

ஆத்மஜா: – பிள்ளைகள்

தேவபூதா: – தேவதாரூபிகளாய்

விசரிஷ்யந்தி – சஞ்சரிப்பார்கள்

இப்படியாக இந்திரன் திதியின் கோரிக்கையை நிறைவேற்ற உறுதி அளித்தான். இது வரம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட, வரம் அளித்தது போல இருப்பதைக் காண முடிகிறது.

இவ்வாறாக மருத்துக்களின் சரித்திரத்தை விஸ்வாமித்திர் மஹரிஷி ஶ்ரீ ராமருக்கு எடுத்துரைத்தார்.

**