Post No. 13,766
Date uploaded in London – 10 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உலகம் முழுதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள் -5
தென்கிழக்காசிய நாடுகளிலும் தூரக்கிழக்கு நாடுகளிலும் முழங்கும் பழமொழிகள், தமிழ்ப் பழமொழிகளை ஒத்து இருக்கின்றன ; ஒவ்வொரு பழமொழிக்குப் பின்னால், சீனர்கள் ஒரு கதையையும் சொல்கிறார்கள்
இதோ இரண்டு பழமொழிகள்,
ஊருக்குத்தாண்டி உபதேசம் உனக்கல்ல .
உருத்திராக்ஷப் பூனை உபதேசம் பண்ணினதுபோல.
உடும்புக்கு இரண்டு நாக்கு உண்டு, மனிதனுக்கு இரண்டு நாக்கு உண்டா ?
துவி நாக்கு இடரும்
மாமியார் உடைத்தால் மண்கலம் மருமகள் உடைத்தால் பொன்கலம் போன்ற தமிழ்ப் பழமொழிகள், மனிதனின் இரட்டை வேடத்தைக் காட்டுகின்றன . இது போன்ற பழமொழி ஜப்பான் சீனா போன்ற நாடுகளிலும் உண்டு .
ஜப்பானில் க்யூட்டோ வோ கக்கட்ட பா நிக்கோ வோ ஊரு
Gyuuto wo kakete ba niku wo ru meaning to hang up a cow’s head and sell horse meat என்பார்கள் ; இதன் பொருள் கடையின் போர்டில் இங்கே மாட்டுத் தலை விற்கப்படும் என்று எழுதிவிட்டு குதிரை மாமிசத்தை விற்கிறான் என்பதாகும்
எதெல்லாம் நகருக்கிறதோ அதையெல்லாம் சாப்பிடலாம் என்ற பாலிசி சீனர்களிடையே இருப்பதால் தேள், பாம்பு, எல்லாவற் யும் கடைகளிலும் ஹோட்டலகளிலும் காணலாம்.
சீனர்களும் கொரியர்களும் நாய் மாமிசப் பிரியர்கள் ;கொரியாவில் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான நாய்களைக் கொன்று சாப்பிடுகிறார்கள்.
இதைப் பற்றிய சீனக் கதை பின்வருமாறு
எனது அரசவையிலுள்ள பெண்கள் எல்லோரும் இனிமேல் ஆண்கள் உடைகளையே அணிய வேண்டும் என்று சீனாவின் கீ மாகாண ஆளுநர் தூக்கே ஜிங்காங் உததரவு போட்டான் ; செய்தி அந்த வட்டாரம் முழுதும் பரவியது ; எல்லாப் பெண்களும் ஆண்கள் உடைதரித்து வலம் வரத் தொடங்கினார்கள்; உடனே மற்ற பெண்கள் இப்படி உடை அணியக் கூடாது என்று மன்னன் தடை போட்டான்; பிரதம அமைச்சர் யான் யின்னுக்கு இது பிடிக்கவில்லை; அவர் சொன்னார் , அன்பரே நீர் செய்வது கடையில் மாட்டுத் தலையத் தொங்கவிட்டு குதிரை மாமிசத்தை விற்பது போல இருக்கிறது என்று இடித்துரைத்தார் உடனே அவர் எல்லாவற்றையும் நிறுத்தினார். பின்னர் இதுவே ஆட்டுத்தலையைத் தொங்கவிட்டு நாய் மாமிசம் விற்பது போல என்று மாறியது . காரணம் சீனர்களும் கொரியர்களும் லட்சக்கணக்கில் நாய்களை அடித்துச் சாப்பிடத் துவங்கி விட்டார்கள் .
நான் மதுரையில் மாணவனாக இருந்தபோதும் இப்படி ஏமாற்று வேலைகளைக் கண்டு இருக்கிறேன். இந்த ஹோட்டல்களில் செய்யப்பட பட்சணங்கள் நெய்யினால் செய்யப்பட்டதல்ல என்று போர்டு இருக்கும் அதில் நெய் என்பது வரை கொட்டை எழுத்துக்களில் இருக்கும்.
இன்று மேலை நாடுகளில் இன்ஸ்யூரன்ஸ் ஏஜெண்டுகளும் இதையே செய்கின்றனர். சேதம் அல்லது நஷ்டம் ஏற்பட்டபோது பணம் கேட்டால் பொடி எழுத்துக்களில் அச்சிட விஷயங்களைக் காட்டி உங்களுக்கு பணம் தர முடியாது என்கிறார்கள் இது நவீன கொள்ளை !
அந்தக் காலத்தில் மேலை நாட்டில் கிறிஸ்தவ பாதிரிகளின் உபன்யாசம் பற்றி ஒரு கதை சொல்லுவார்கள்; கிறிஸ்துவ எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்று உபதேசம் செய்துவிட்டு வீட்டிலுள்ள மாட்டை அடித்து மாட்டுக்கறி சமைக்கச் சொன்னவுடன் மனைவி கேட்டாளாம் “என்ன ஓய், இவ்வளவு நேரம் அன்பு பற்றி உபதேசம் செய்துவிட்டு நம் அன்புக்குரிய பசுமாட்டினைக் கொல்லச் சொல்கிறீர்களே” என்று.
அடிப்போடி பைத்தியக்காரி! ஊருக்குத்தாண்டி உபதேசம் உனக்கல்ல என்றாராம் பாதிரியார்
*****
பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும் என்ன ஆகும் மண்ணின் குடம் உடைந்தாக்கால் ?
மாமி ஒட்டினாலும் பானை ஒட்டாது.
கண்ணாடியோ பானையோ உடைந்த பின்னர் ஓட்டினாலும் விரிசல் தெரியும்; அது முழு வடிவம் பெறாது
ஜப்பானில் உள்ள பழமொழி
Fukusui bon ni kaerazu meaning spilt water does not return to tray.
புகுசுய் போன் நீ கயிராசு –என்பார்கள்; இதன் பொருள் கீழே சிந்திய நீர் மீண்டும் தாம்பாளத்துக்கு வராது .
இதையே பலரும் கீழே சிந்திய பாலை எடுக்க முடியாது என்றும் சொல்லுவார்கள்.
இதன் பின்னால் ஒரு சீனக்கதை இருக்கிறது
ஜியாங் பிரபு வறுமையானவுடன் அவனுடைய மனைவி ஓடிவிட்டாள்; சூ Zhou Dynasty வம்ச மன்னன் வென்வாங், அந்தப் பிரபுவை பிரதம அமைச்சராக நியமித்தான்; பணமு புகழும் உச்சத்துக்கு ஏறின ; உட மனைவி நைசாக ஓட்ட வந்தாள்; அவர் ஒரு கோப்பையில் தண்ணீரைக் கொடுத்து இதைக் கீழே கொட்டு என்கிறார் அவளுமப்படியே செய்தாள்; இப்போது அதை எடுத்து கோப்பையை நிரப்பு என்கிறார் அவள் முழி முழி என்று முழி த்தாள்; இது போலத்தான் நானும் நீயும் என்றார். அவளும் திரும்பிச் சென்றாள் .
–subham—
Tags — ஜப்பானிய , உலகம் முழுதும், தமிழ்ப் ,பழமொழிகள் -5