List of Eleven Gundas/ Rowdies who fall into Hell: Arunagirinathar (Post.15,263)

Written by London Swaminathan

Post No. 15,263

Date uploaded in London –  11 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Goonda” is a term used in the Indian subcontinent for hired criminals and gangsters. It is both a colloquial term and defined and used in laws, generally referred to as Goonda Acts.

Now and then newspapers publish the names of criminals arrested under Goonda act.

Alternate spelling is Gundar.

Tamil Saint Arunagirinathar who lived 500 years ago use the term Gundar for sinners. gundaR means plural of gunda.

He says that those sinners will fall into hell. He composed over 1300 beautiful poems in a particular genre and he is the only poet remembered for that particular style. Here is one of his Tamil poems with meaning in English:

Translation by Sri Gopalasundaram in Kaumaram.com

***

thOzhamai koNdu chalamsey guNdargaL

     Odhiya nandri maRandha guNdargaL

          sUzh viradhangaL kadindha guNdargaL …… periyOraith

dhUshaNa nindhai pagarndha guNdargaL

     eevadhu kaNdu thagaindha guNdargaL

          sULuRa venbadho zhindha guNdargaL …… tholaiyAmal

vAzha ninaindhu varundhu guNdargaL

     needhi aRangaL sidhaindha guNdargaL

          mAna agandhai migundha guNdargaL …… valaiyAlE

mAyaiyil nindru varundhu guNdargaL

     dhEvargaL songaL kavarndha guNdargaL

          vAdhai namandran varundhidung kuzhi …… vizhuvArE

Ezhu marangaLum van kurangenum

     vAliyum ambaramum parambarai

          rAvaNanum chathuranga lankaiyum …… adaivEmun

eedazhi yumpadi chandhranum siva

     sUriyanum surarum padham peRa

          rAma saran thodu pungavan thiru …… marugOnE

kOzhi silamba nalam payindra ka

     lApa natam seya manju thangiya

          gOpuram engum viLangu mangala …… vayalUrA

kOmaLa andargaL thoNdar maNdalar

     vElan enum peyar anbudan pugazh

          kOdai enum padhi vandha indhirar …… perumALE.

……… Meaning ………

thOzhamai koNdu chalamsey guNdargaL: Those despicable people who befriend first and stab in the back later;

Odhiya nandri maRandha guNdargaL: those base people who forget all the good deeds done to them;

sUzh viradhangaL kadindha guNdargaL: those ignoble people who forsake all the essential rites;

periyOraith dhUshaNa nindhai pagarndha guNdargaL: those worthless people who insult the elders and call them names;

eevadhu kaNdu thagaindha guNdargaL: those debased people who cannot stand the sight of anyone being given alms;

sULuRa venbadho zhindha guNdargaL: those lowly people who have given up speaking the truth;

tholaiyAmal vAzha ninaindhu varundhu guNdargaL: those selfish people who alone want to flourish and brood only about their survival;

needhi aRangaL sidhaindha guNdargaL: those immoral people who destroy all codes of justice and righteousness;

mAna agandhai migundha guNdargaL: those vile people who are full of blemishes and arrogance;

valaiyAlE mAyaiyil nindru varundhu guNdargaL: those mean people who fall victim to attachment and suffer in delusion;

dhEvargaL songaL kavarndha guNdargaL: and those depraved people who steal the property belonging to the place of worship;

vAdhai namandran varundhidung kuzhi vizhuvArE: will all fall into the miserable and torturous pit of hell, controlled by the God of Death.

Ezhu marangaLum van kurangenum vAliyum: The seven marAmarA trees, the strong monkey called VAli,

ambaramum parambarai rAvaNanum: the ocean, King RAvaNA belonging to the dynasty of asuras,

chathuranga lankaiyum: his country LankA noted for its four divisions of armies (elephants, chariots, horses and soldiers) –

adaivEmun eedazhi yumpadi: were all rendered powerless and destroyed;

chandhranum siva sUriyanum surarum padham peRa: The Moon, the Sun, SivA, and all the celestials were all re-established in Heaven;

rAma saran thodu pungavan thiru marugOnE: when Rama sent out His arrow with His name branded on it. You are the beloved nephew of that great Rama!

kOzhi silamba nalam payindra kalApa natam seya: The rooster crows (from Your staff); the peacock dances gracefully;

manju thangiya gOpuram engum viLangu mangala vayalUrA: and the clouds settle on the tall towers of the temples in the sacred town VayalUr, Your favourite abode!

ANDAR, TONDAR,

kOmaLa andargaL thoNdar maNdalar: The handsome celestials, Your devotees, several kings and emperors

vElan enum peyar anbudan pugazh: have all been praising Your name VElan (the God with the spear) in

kOdai enum padhi vandha indhirar perumALE.: KOdainagar,* where You are seated with relish! You are worshipped by all IndrAs of the Celestial land, Oh Great One!

* KOdainagar is now known as VallakkOttai which is 6 miles south of SriperumputhUr near Chennai.

The poet is famous for his outburst against prostitutes. All his poems are condemning them because he himself was a victim  before he became a saint.

The saying that Every saint has a past and Every sinner has a future has come true I his life.

–Subham—

Tags- Gunda, Goonda, Arunagirinathar, sinner, rowdies, Tiruppugz

பாரதியும், லலிதா சஹஸ்ர நாமமும்! (Post No.15,262)

Written by London Swaminathan

Post No. 15,262

Date uploaded in London –  11 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தேச முத்துமாரி–பாரதியார் பாடல்

தேடியுனைச் சரணடைந்தேன்,தேச முத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்

பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்;
கோடிநலஞ் செய்திடுவாய்,குறைகளெல்லாந் தீர்ப்பாய்

எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி;
ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்

சக்தி யென்று நேர மெல்லாந் தமிழ்க் கவிதை பாடி,
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும்

ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம்;யாதுமவள் தொழி
லாம்

துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்;யாவுமவள் தருவாள்

நம்பினார் கெடுவ தில்லை;நான்கு மறைத் தீர்ப்பு;
அம்பி கையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.

***

ஷெல்லி தாசன் என்ற பெயரில் கவிதைகளை எழுதிய பாரதியார் பின்னர் சக்திதாசன் என்று ஏன் பெயரை மாற்றிக்கொண்டு எழுதினார் என்பதைக் காண்போம்.

பாரதியார் ஒரு காளி மாதா பிரியர் ; அவர் பாடிய பக்திப் பாடல்களில் நாற்பதுக்கும் மேலான கவிதைகள், தேவி மீதான துதிகள் ; அது மட்டுமல்ல. வேறு பல பாடல்களிலும் தேவியை , சக்தியைக் குறிப்பிடத் தவற வில்லை . சக்தியை வேண்டினால் எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிகையில் அவர் காணி நிலத்துக்கு கூட சக்தியைத் தான் வேண்டினார் . அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம் என்ற அவருடைய வரிகள் இந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது .

அவர் பாடிய துவக்க காலப் பாடல்களில் ஒன்று உஜ்ஜயினீ மாகாளி பற்றிய பாடல்; அது மட்டுமல்ல; காளியின் நடனத்தை, வெடிபடு மண்டலத் திடிப்பல தாளம் போட என்ற கவிதையில், தான் கண்ட காளி தேவி நடனத்தை நமக்கும் காட்டுகிறார்

ஊழிக் கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்
தாடுங் காளீ!சாமுண்டீ! கங் காளீ!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

ஐந்துறு பூதம் சிந்திப் போயொன் றாகப்-பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக-அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்-தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச்-சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கே
ஊழாம் பேய்தான்”ஓஹோ ஹோ”வென் றலைய;-வெறித்
துறுமித் திரிவாய்,செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்
சடசட சட்டெனுடைபடு தாளங்கொட்டி-அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல் போய் எட்டித்-தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்.
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

காலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும்-அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

***

 நவராத்திரிப் பாட்டு

(உஜ்ஜயினீ)

உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ!
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி (உஜ்ஜயினீ)

உஜ்ஜய காரண சங்கர தேவீ
உமா ஸரஸ்வதீ ஸ்ரீ மாதா ஸா. (உஜ்ஜயினீ)

வாழி புனைந்து மஹேசுவர தேவன்,
தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம், (உஜ்ஜயினீ)

சத்ய யுகத்தை அகத்தி லிருத்தி,
திறத்தை நமக்கரு ளிச்செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ)

***

 காளிப் பாட்டு

யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மை யெல்லாம்-காளி!-தெய்வ லீலை யன்றோ;
பூத மைந்தும் ஆனாய்-காளி!-பொறிக ளைந்தும் ஆனாய்;
போத மாகி நின்றாய்-காளி!-பொறியை விஞ்சி நின்றாய்
இன்ப மாகி விட்டாய்-காளி!-என்னு ளேபு குந்தாய்
பின்பு நின்னை யல்லால்-காளி!-பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய்-காளி!-ஆண்மை தந்து விட்டாய்;
துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!-தொல்லை போக்கிவிட்டாய்

***

கஷ்டம் வந்தாலும் அது அவளது அருளே!

இவ்வளவு கேட்டாரே, சக்தி தேவி செவி சாய்த்தாளா ? அதைப் பற்றி அவரே கவலைப் படவில்லை ; ஏனெனில் இந்துக்களின் நம்பிக்கை முன்னை வினை. ஆகையால் கொடுத்ததை ஏற்றுக் கொள் என்று அவரே சக்தி பற்றிய பாடலில் பாடிவிடுகிறார்  :

ஓம், சக்தியரு ளாலுலகில் ஏறு-ஒரு
சங்கடம்வந் தாலிரண்டு கூறு;
சக்திசில சோதனைகள் செய்தால்-அவள்
தண்ணருளென் றேமனது தேறு.

ஓம்,சக்திதுணை என்று நம்பி வாழ்த்து-சிவ
சக்திதனையே அகத்தில் ஆழ்த்து;
சக்தியும் சிறப்பும் மிகப் பெறுவாய்-சிவ
சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து!

****

தான் மட்டும் சக்தியை வணங்கினால் போதாது என்று கருதி ஓம் சக்தி கவிதையில் எல்லோரையும் சக்தியை வணங்கி கல்வியும் செல்வமும் பெற வாழ்த்துகிறார்

சொல்லுக் கடங்காவே-பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி
வாழியென்றேதுதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

***

தாமரைப் பூவினிலே-சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

****

செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்;
செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி
திக்க னைத்தும் பரவும். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

****

சக்தி தேவி, அவருக்கு சக்தியைக் கொடுத்ததை அவரது பாடல்களிலிருந்து அறிய முடிகிறது ஏனெனில் அவைகளைப் படிக்கையில் நமக்கே சக்தி பிறக்கிறது . மேலும் அவர் கேட்ட ஒன்றினை தேவியானவள் கொடுத்தாள் என்பதை யாரும் மறுக்க முடியாது கோடி கவிதைகளை வெள்ளமெனப் பொழிய வேண்டினார் ; வாணியும் செவி சாய்த்தாள் ; அதையும் காலத்தால் அழியாத அவரது கவிதைகளில் காண முடிகிறது; அவருக்கு செல்வம் எவ்வளவு கிடைத்திருந்தாலும் நாம் அதை அப்படியே காண முடியாது; காரணம் காலத்தால் அவை தேயக்கூடியவை மறையக் கூடியவை; அவர் பெற்ற கவிதைச் செல்வமோ காலத்தால் அழியாதவை; தேயாதவை; புதுக்கருக்கு அழியாதவை பட்டை தீட்டப்பட்ட வைரம் போலவும், பத்தரை மாத்துத் தங்கம் போலவும் ஜொலித்துக்கொண்டு இருக்கும்

***

சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் என்ற பாடலில் 46  கண்ணிகள் உள்ளன. சக்தியை வணங்கினால் கிடைக்கும் பலன்களின் மிக நீண்ட பட்டியலை அதில் காணலாம்.

*****

லலிதா சஹஸ்ரநாமத்தில் தேவியின் நாமங்களை விளக்கிய டாக்டர் சுதா சேஷய்யன் போன்றோர் முன்னரே பாரதியைப் பல நாமங்களுக்கு மேற்கோள் காட்டியுள்ளனர் ; இதோ சில நாமங்களை நாமும் ஒப்பிட்டு மகிழ்வோம் ; தேவியின் கடாக்ஷத்தைப் பெறுவோம்

உமா ஸரஸ்வதீ ஸ்ரீ மாதா ஸா. (உஜ்ஜயினீ) என்று உஜ்ஜயினீ நவராத்திரிப் பாட்டைத் துவக்குகிறார் .

அதில் வரும் ஸ்ரீ மாதா,  லலிதா சஹஸ்ரநாமத்தின் முதல் வரி யாகும்!

அம்பிகை-295; லலிதா சஹஸ்ர நாமத்தின் எண் ;

ஆதி சக்தி – 615

உமா -633;

கல்யாணீ – 324;

சண்டிகா – 755 ;

துர்கா – 190 ;

நித்யா -136 ;

பகவதி-279 ;

பராசக்தி -572 ;

பவானி- 112 ;

மஹா காளீ – 751 ;

மஹா சக்தி – 217 ;

மஹாலக்ஷ்மீ – 210 ;

மாதா – 457 ;

வாக்வாதினி -350;

சரஸ்வதி – 704 ;

மாதா / அன்னை என்பதை பாரதியார் நூற்றுக்கணக்கான இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.

பல இடங்களில் சம்ஸ்க்ருத நாமாவளிகளின் தமிழாக்கத்தைக் காணலாம் ; வெள்ளைக் கமலம், ; வெள்ளைத் தாமரை என்பார் பாரதியார். அதற்கு கமலம் என்றும்  போன்ற  சொற்களையும் லட்சுமிக்கு செல்வத் திருமகள் என்றும், வாக் தேவதைக்கு வாணீ என்றும் பாரதியார் பாடுகிறார் ; ஜெய ஜெய பவானீ என்று துவங்கும் அவருடைய சத்ரபதி சிவாஜி கவிதை முதிலியனவும் தேவியைப் போற்றியே துவங்குகிறது ; இவ்வாறு நோக்கினால் நூற்றுக்கணக்கான இடங்களில் சஹஸ்ரநாமத்தின் தாக்கத்தைக் காணலாம்.

***

பாரதியார் வேண்டுகோள் பலித்தது!

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடு வேன்;
எள்ளத் தனைப் பொழு தும்பய னின்றி
இராதென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல்சக்தி
வேல்சக்தி வேல்,சக்தி வேல்!

***

காணி நிலம் வேண்டும் பாடலை இப்படி முடிக்கிறார் :

காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்

காவலுற வேணும்;என்தன்

பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்

பாலித்திட வேணும்.

எவ்வளவு உண்மை ! இன்று வரை பாரதிக்குப் பின்னர், அவருக்கு இணையான கவிஞன் தோன்றவில்லையே ! அவருடைய பாடல்தானே  தமிழுக்கு உயிர் மூச்சாய், பிரணவ மந்திரமாக விளங்குகிறது !

–subham—

Tags- பாரதியார் , லலிதா சாஸ்ரநாமம் , சக்தி, காளி,

மஹாகவி பாரதியார் : சில கருத்துக்கள்!(Post No.15,261) Bharati’s Birth Day Article

மகாகவி பாரதியின் கவிதைகள் துணிவைத் தூண்டின: தமிழில் பிரதமர் மோடி பதிவு; அமித்ஷாவும் தமிழில் வாழ்த்து !

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,261

Date uploaded in London –   11 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மஹாகவி பாரதியார் : சில கருத்துக்கள்! 

ச. நாகராஜன் 

காலத்தை வென்ற மகாகவிகளுள் மகாகவி பாரதியாரும் ஒருவர். 

அவரது கவிதை நயம் பற்றிப் பல நூல்கள் வெளி வந்து விட்டன. 

ஆனால் அவரைப் பற்றிய முழுத் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட வேண்டும்.

 காலவரிசைப் படுத்தப்பட்ட மகாகவியின் படைப்புகள் – கவிதைகள், கட்டுரைகள், கதைகள், அவர் நடத்திய இதழ்களில் அவர் எழுதிய செய்திகள் ஆகியவை முறையாகத் தொகுக்கப்பட வேண்டும். 

இந்த முயற்சியை மேற்கொண்டவர்கள் பலர்.

 அவர்களாலும் முழுமையாக அனைத்து படைப்புகளும் தொகுக்கப்படவில்லை.

 தற்போதைய தமிழக அரசு இதை நிச்சயம் செய்யாது. ஏனெனில் இதனால் ஓட்டு அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. 

ஆகவே பாரதி சிந்தனையாளர்கள் இணைய வேண்டும். 

சமீபத்தில் வெளியான ஒரு புத்தகத்தில் பாரதியார் ராமரைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை என்ற குறிப்பைக் கண்டு சிரித்தேன். அவர் பாரதியாரைச் சரியாகவும் படிக்கவில்லை; மற்றவர்களுக்கு உண்மையையும் எடுத்துச் சொல்லவில்லை. 

ஆகவே சரியாக பாரதியைப் படித்தவர்கள், புரிந்து கொண்டவர்கள் மட்டுமே இணைந்த குழு ஒன்று உருவாகுமா? 

வருடவாரியாக அவரது படைப்புகள் உரிய ஆவணங்களைச் சரி பார்த்த பின் அதிகாரபூர்வமான தொகுப்பு வெளி வருமா? 

பல பாரதி ஆர்வலர்கள் வெளி நாடுகளில் உள்ள நூலகங்களுக்கும் சென்று ஆவணங்களைச் சரி பார்த்து புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். 

இந்த வகையில் ஏராளமான பாரதி நூல்களின் தொகுப்புகள்

சேகரிக்கப்பட்டபோதிலும் அது போதுமானதாக இல்லை. 

திரு ரா.அ.பத்மநாபனில் ஆரம்பித்து இன்று வரை பலரும் எழுதியுள்ள நூல்களை ஆய்வு செய்து பல தலைப்புகளில் நூல்களை வெளியிடலாம். 

பாரதியாரும் குடும்பமும்

பாரதியாரும் நண்பர்களும்

பாரதியாரின் முற்பகுதி வாழ்க்கை (எட்டயபுரம், காசி)

பாரதியாரின் புதுவை வாழ்க்கை

பாரதியாரின் சென்னை வாழ்க்கை

பாரதியாரும் பல்வேறு தலைவர்களும் (மகாத்மா காந்தி, திலகர் உள்ளிட்டோர்)

பாரதியாரும் அரவிந்தரும்

பாரதியாரின் கவிதைகள்

பாரதியாரின் கட்டுரைகள்

பாரதியாரின் கதைகள்

பாரதியாரின் நாடகங்கள்

பாரதியாரின் பத்திரிகைகள்

பாரதியாரின் பத்திரிகை மொழி பெயர்ப்புகள்

பாரதியாரின் இசை ஞானம்

பாரதியாரின் தமிழ் வளர்ச்சி பற்றிய முயற்சி

பாரதியாரின் பல்வேறு மொழிகளில் மொழிப் புலமை

பாரதியாரும் பாரதக் கவிஞர்களும்

பாரதியாரும் உலகக் கவிஞர்களும்

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

மகாகவி பாரதியார் தோற்றம் 11 டிசம்பர் 1882

மறைவு 11 செப்டம்பர் 1921.

ஆண்டுகள் நூறுக்கும் மேலாக ஓடி விட்டன.

நல்ல குழு ஒன்று அமைந்து எதிர்கால சந்ததியினருக்கு அதிகாரபூர்வமான படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டால் அதுவே அவருக்கு நாம் செலுத்தும் மகத்தான அஞ்சலியாக அமையும்.

வாழ்க பாரதி நாமம். வெல்க பாரத தேசம்!

**

Who coined the words, Bhava Sagaram? and Samsara Sagaram? (Post No.15,260)


Indian Prime Minister Modi Unveils 800 Kg Gita at Delhi Temple, year 2019.

Written by London Swaminathan

Post No. 15,260

Date uploaded in London –  10 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

We come across these words of Birth and Death as ocean and crossing it to attain liberation, in the Bhagavad Gita for the first time which is over 5000 years old.

Then Kalidasa used this as a simile in the Raghuvamsa which is from the Sunga Vamsa period , first century BCE. Later Tiru Valluvar used this word in his Tirukkural; Valluvar not only used this, but also copied more things from the Gita. Then we hear it in Tiruupugaz of Arunagirinatha and composition of Saint Tyagaraja.  There may be many more saints and poets who have used these words.

Samsarasagara in Hinduism symbolizes the endless cycle of birth and rebirth within the illusionary realm, portrayed as an expansive sea, representing the ongoing journey of the soul through various existences.

***

Pronunciation guide sagaram= saagaram; samsara=samsaara.

Here is the Bhagavad Gita verse

तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् ।

भवामि नचिरात्पार्थ मय्यावेशितचेतसाम् ॥ १२-७॥

teṣāmahaṃ samuddhartā mṛtyusaṃsārasāgarāt

bhavāmi nacirātpārtha mayyāveśitacetasām 12-7

Meaning

These whose thoughts are set on me , I straightaway  deliver from the ocean of death bound existence, O Patha – 12-7

Another translation

O son of Prthaa, for them who have  their minds absorbed in Me , I become, without delay, the Deliverer from the sea of the world which is fraught with death.

***

Kalidasa says in Raghuvamsa

प्रवृत्तावुपलब्धायाम् तस्याः संपातिदर्शनात्।

मारुतिः सागरम् तीर्णः संसारमिव निर्ममः॥ १२-६०

pravṛttāvupalabdhāyām tasyāḥ saṁpātidarśanāt|

mārutiḥ sāgaram tīrṇaḥ saṁsāramiva nirmamaḥ || 12-60

On meeting SampAti, the elder brother of slain jaTAyu, Hanuma gained the news of Seetha’s whereabouts, whereby he crossed the ocean, just as one having no attachment for worldly objects crosses the ocean of this worldly existence. [12-60]

***

Tiru Valluvar says in Tirukkural

The sea of births they alone swim

Who clench His feet and cleave to Him– Kural 10

Another translation

They swim the sea of births, the ‘Monarch’s’ foot who gain;

None others reach the shore of being’s mighty main.

(None can swim the great sea of births but those who are united to the feet of God.)

***

From Arunagirinathar’s Tiruupugaz

……… Meaning ……… by Sri Gopalasundaram from kaumaram.com

nilaiyAdha samudhdhiramAna samusAra thuRaikkaNin mUzhgi: I was drowned in the ocean of family life; an ocean whose vastness and depth can never be measured.

nijamAna dhenap pala pEsi: I used to make a lot of false statements which sounded like truth.

adhanUdE nedu nALum uzhaippuLa dhAgi: In the meantime, I put in long hours of physical labour for many days.

periyOrgaL idaik karavAgi: I used to hide myself from the company of respectable elders.

ninaivAl nin adith thozhil pENi thudhiyAmal: I never used to think of serving You or seeking Your feet.

thalaiyAna udaR piNi URi: Many major diseases attacked my body.

bava nOyin alaip palavEgi: (As I said about the ocean of family life), several waves of illnesses called the disease of birth swayed me!

chalamAna payiththiyam Agi thadumARi: I became an angry mad man and lost my balance.

thaviyAmal: I do not want to suffer like that any more.

piRappaiyu nAdi adhu vErai aRuththu: I want to contemplate on the origin of birth and to destroy its root cause, namely, desire.

unai Odhi thalameedhil pizhaiththidavE nin aruL thArAy: I want to sing Your glory and survive in this world by Your grace.

kaliyANa supuththiran Aga: You are always the great bridegroom

kuRamAdhu thanakku vinOdha: to VaLLi, the damsel of the KuravAs, in whose company You revel!

kavin Aru buyaththil ulAvi viLaiyAdi: You embrace her lovely shoulders and play with her romantically!

kaLi kUrum unaith thuNai thEdum adiyEnai: I seek the Your closeness as You rejoice in the company of VaLLi!

sukappada vEvai kadan Agum idhuk ganamAgu murugOnE: You have to make me experience happiness. It is not only Your duty but would also add to Your dignity, Oh MurugA!

palakAlum unaith thozhuvOrgaL maRavAmal thiruppugazh kURi: Those devotees of Yours, who sing Your glory without fail several times a day,

padimeedhu thudhith thudan vAzha aruLvELE: are blessed by You to live in Your company forever worshipping You!

sivalOkam enappari vERu padhiyAna thiruththaNi mEvu: People love to deem this place, ThiruththaNigai, to be the land of SivA in this world;

bavarOga vayidhdhiya nAtha perumALE.: and You have Your abode here, standing as the Curer of the disease of birth, Oh Great One!

***

Tyagaraja Kriti

raghu nāyaka, nī pāda yuga

rājīvamula nē viḍa-jāla śrī

O best among Raghus! Your pair of

lotus-feet, I cannot let go of.

Anupallavi

agha jālamula pāra tōli nannu

ādarimpa nīvē gati kādā śrī

To drive afar my accumulated sins

And care for me, aren’t you the only refuge?

Charanam

bhavasāgaramu dāṭalēkanē

palu gāsibaḍi nī marugu jēriti

avanijādhipa, śritarakṣaka,

ānandakara, śrī tyāgarājanuta

Unable to cross the worldly ocean,

After much pain, your shelter did I reach,

Husband of Earth’s daughter, Protector of those approaching you!

Maker of joy, Praised by Tyagaraja!

–subham—

Tags- Bhava sagaram, Samsara sagaram, Bhagavad Gita, Tirukkural, Raghuvamsam, Tiruppugaz, Saint Tyagaraja,

பகவத் கீதையிலிருந்து உத்வேகம் பெற்ற வள்ளுவர்!பிறவிப் பெருங்கடல்/சம்சார சாகரம்!! (Post.15,259)


Written by London Swaminathan

Post No. 15,259

Date uploaded in London –  10 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சம்சார சாகரம்/ பிறவிப் பெருங்கடல்  என்று ஏன் பெயர்வந்தது ?

SAMSAARA

சம்சார சாகரம் என்ற சொற்களை முதலில் பயன்படுத்தியவர் கிருஷ்ண பரமாத்மா. பகவத் கீதையில் 12-7 அவர் இதை 5000  ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார். பின்னர் காளிதாசன் ரகு வம்ச 12-60 காவியத்தில் 2000  ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார். அதற்குப்பின்னர் வள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் பிறவிப் பெருங்கடல் என்று அதைத் தமிழாக்கி நமக்குச் சொன்னார் வள்ளுவர் பகவத் கீதையை மனப்பாடம் செய்து அப்படியே சொன்னதை பல குறள்களில் காண்கிறோம் தானம் தவம் என்று வார்த்தைகளை வரிசை பிசகாமல் கீதையிலிருந்து நமக்குத் தருகிறார் வள்ளுவர் .

குடும்ப வாழ்வினை சம்சார சாகரம்- பிறவிப் பெருங்கடல் என்று இந்துக்கள் ஏன் சொன்னார்கள்?

1. இகலோக வாழ்வும் எப்போதும் அலை வீசும் இடம்- அதாவது துன்பமும் இன்பமும் மாறி மாறி வரும்

2. கடல் போலவே குடும்ப வாழ்வு – ஆழம் தெரியாதது ; கங்கு கரை காண முடியாதது .

3. கடல் போல பயங்கர சுறாமீன்கள் நிறைந்தது

4.எளிதில் கடக்க முடியாதது; ஞானப்படகு (பகவத் கீதை 4-36) வேண்டும் அல்லது நீந்தத் தெரிய வேண்டும்;  இது குறுகிய கடல் பகுதியில் மட்டுமே சாத்தியம்!

5. ஐந்தாவது, அலை ஓய்ந்து எப்படி சமுத்திர ஸ்நானம் செய்ய முடியாதோ அதுபோலத்தான் குடும்ப வாழ்வும்! அதை உணர்ந்து பக்தி மார்க்கத்தில்- நாம சங்கீர்த்தனத்தில்- ஈடுபட வேண்டும். அது கடல் போல இரைச்சலாகத்தான் இருக்கும் ; பரவாயில்லை

6. கடைசியாக கடலின் அழகினை அதற்கு வெளியே இருந்து ரசிப்பது போல ரசிக்கவும் செய்யலாம்; எப்போது?

சம்சாரக் கடலிலிருந்து வெளியே வந்தபோது!

7. விவேக சூடாமணியில், கடலினை ஆனந்த சாகரத்துக்கும் , கருணைக் கடலுக்கும் ஆதி சங்கரர் ஒப்பிடுகிறார் சந்நியாசியின் ஆசைகளாலாகிய நதிகள், கடலிலே ஐக்கியமாகிவிடும் கடலில் லிழுந்த ஆலங்கட்டி மழைபோல அது தனது தனித்தன்மையை இழந்து விடும் என்கிறார்

****

சம்சாரம் என்றால் என்ன ?

Sanskrit dictionary

[«previous (S) next»] — Samsara in Sanskrit glossary

Saṃsāra (संसार).—

1) Course, passage. வழி, பாதை

2) The course or circuit of worldly life, secular life, mundane existence, the world; 

உலக வாழ்வு न स तत् पदमाप्नोति संसारं चाधिगन्छति (na sa tat padamāpnoti saṃsāraṃ cādhiganchati) Kath. 3.7; असासः संसारः (asāsaḥ saṃsāraḥ) Uttararāmacarita 1; Mālatīmādhava (Bombay) 5.3; संसारधन्वभुवि किं सारमामृशसि शंसाधुना शुभमते (saṃsāradhanvabhuvi kiṃ sāramāmṛśasi śaṃsādhunā śubhamate) Aśvad.22; or परिवर्तिनि संसारे मृतः को वा न जायते (parivartini saṃsāre mṛtaḥ ko vā na jāyate) Pañcatantra (Bombay) 1.27.

3) Transmigration, metempsychosis, succession of births. பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருதல் 

4) Worldly illusion. நிச்சயமற்ற வாழ்வு

Samsarasagara in Hinduism symbolizes the endless cycle of birth and rebirth within the illusionary realm, portrayed as an expansive sea, representing the ongoing journey of the soul through various existences.

***

பகவத் கீதை என்ன சொல்கிறது?

तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् ।

भवामि नचिरात्पार्थ मय्यावेशितचेतसाम् ॥ १२-७॥

teṣāmahaṃ samuddhartā mṛtyusaṃsārasāgarāt

bhavāmi nacirātpārtha mayyāveśitacetasām 12-7

என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரண சம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன். பகவத் கீதை 12-7

***

ரகுவம்ச காவியத்தில், காளிதாசன் என்ன சொல்கிறான் ?

ப்ரவ்ர்த்தா உபலப்தாயாம் தஸ்யாஹா சம்பாதி தர்சநாத்

மாருதி: சாகரம் தீர்ண: சம்சாரமிவ நிர்மம:

சம்பாதியைக் கண்டவுடன், சீதாதேவி பற்றிய செய்தியைக் கேட்டவுடன் அநுமன் , உலகப் பற்றில்லாத ஒருவன் சம்சாரக்  கடலினை எவ்வாறு தாண்டுவானோ அப்படித் தாண்டினான்

प्रवृत्तावुपलब्धायाम् तस्याः संपातिदर्शनात्।

मारुतिः सागरम् तीर्णः संसारमिव निर्ममः॥ १२-६०

pravṛttāvupalabdhāyām tasyāḥ saṁpātidarśanāt|

mārutiḥ sāgaram tīrṇaḥ saṁsāramiva nirmamaḥ || 12-60

On meeting sampAti, the elder brother of slain jaTAyu, Hanuma gained the news of Seetha’s whereabouts, whereby he crossed the ocean, just as one having no attachment for worldly objects crosses the ocean of this worldly existence. [12-60]

****

வள்ளுவர் செப்புவது என்ன?

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார் -குறள் 10

இறைவனுடைய திருவடிகளை  நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

***

அருணகிரிநாதர் உரைப்பது என்ன?

திருத்தணிகை திருப்புகழ்

நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி

     நிசமான தெனப்பல பேசி …… யதனூடே

நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி

     நினைவால்நி னடித்தொழில் பேணி …… துதியாமல்

தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி

     சலமான பயித்திய மாகி …… தடுமாறித்

தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி

     தலைமீதில் பிழைத்திட வேநி …… னருள்தாராய்

கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத

     கவினாரு புயத்திலு லாவி …… விளையாடிக்

களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை

     கடனாகு மிதுக்கன மாகு …… முருகோனே

பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி

     படிமீது துதித்துடன் வாழ …… அருள்வேளே

பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு

     பவரோக வயித்திய நாத …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

நிலையாத சமுத்திரமான … அகலம், ஆழம் இவ்வளவு என்று

காணமுடியாத பெரும் சமுத்திரம் போன்ற

சமுசார துறைக்கணின் மூழ்கி … சம்சாரம் ஆகிய நீர்த்துறையிலே

மூழ்கி,

நிசமானதெனப் பல பேசி … மெய் போன்ற பல பொய்களைப் பேசி,

அதனூடே நெடுநாளும் உழைப்புளதாகி … அந்த சம்சாரக்

கடலிலே, நீண்ட காலமாக உழைப்புள்ளவன் ஆகி,

பெரியோர்களிடைக் கரவாகி … பெரியோர்களின் கூட்டத்தில்

சேராமல் ஒளிந்து மறைந்து ஒதுங்கி,

நினைவால்நி னடித்தொழில் பேணி துதியாமல் … நல்ல

நினைவோடு நின்னடிக்கான தொண்டுகளை விரும்பிப் போற்றாமல்,

தலையான வுடற்பிணி யூறி … உடலில் முதன்மையான நோய்கள்

வந்து தாக்கவும்,

பவநோயின் அலைப்பல வேகி … இந்த சம்சார சாகரத்தில் பிறவி

நோய் என்னும் பல அலைகள் வீசவும்,

சலமான பயித்திய மாகி தடுமாறித் தவியாமல் … கோபம்

கொண்ட பைத்தியக்காரனாக மாறி, யான் தடுமாறித் தவிக்காமல்,

பிறப்பையு நாடி யதுவேரை யறுத்து … பிறவியின் மூல காரணத்தை

ஆராய்ந்து, அதன் ஆணிவேராகிய ஆசையை அறுத்து,

உனையோதி தலைமீதில் பிழைத்திடவே … உன் புகழ் ஓதி

இவ்வுலகில் உய்யுமாறு

நினருள்தாராய் … உன் திருவருள் புரிந்து ஆட்கொள்வாயாக.

கலியாண சுபுத்திரனாக … மேன்மை தங்கிய கல்யாண

மாப்பிள்ளையாகவே

குறமாது தனக்கு விநோத … குறக் குல வள்ளி தேவியிடத்தில்

என்றும் விளங்கி உல்லாசமாக,

கவினாரு புயத்தில் உலாவி விளையாடி … அழகு நிறைந்த

அவளது திருப் புயத்தில் தழுவி உலாவி லீலைகள் புரிந்து

களிகூரும் உனைத்துணை தேடும் அடியேனை … மகிழும்

உன்னை உற்றதுணையெனத் தேடுகின்ற என்னை

சுகப்பட வேவை கடனாகும் … இன்பம் அடையும்படியாகவே

வைத்தருள்க. இது உனக்குக் கடமையாகும்.

இதுக்கன மாகு முருகோனே … அவ்வாறு என்னை அருளினால்

அது உனக்குப் பெருமையும் ஆகும், முருகனே.

பலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ்

கூறி … பன்முறையும் உன்னை வணங்குபவர்கள், மறக்காமல் உன்

திருப்புகழைப் பாடி

படிமீது துதித்து உடன் வாழ அருள்வேளே … இவ்வுலகிலே

உன்னைத் துதிசெய்து உன்னுடனேயே எப்போதும் இருந்து

வாழும்படியாக அருளும் செவ்வேளே,

சிவலோக மெனப்பரி வேறு … இதுவே பூலோகத்தில் உள்ள

சிவலோகம் என்ற அன்பை உண்டாக்கத்தக்க

பதியான திருத்தணி மேவு … திருத்தலமாகிய

திருத்தணிகையில் வாழ்கின்ற,

பவரோக வயித்திய நாத பெருமாளே. … பிறவிப் பெரு

நோயைத் தீர்க்கவல்ல, வைத்தியநாதப் பெருமாளே.

*****

அப்பர் அருளிய தேவாரம்

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப்

பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை

மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்

திரிபுரங்கள் தீ எழத் திண் சிலை கைக் கொண்ட
பேரானை புள்ளிருக்கு வேளூரானைப்

போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே(6-548)

புள்ளிருக்கு வேளூர் = வைத்தீஸ்வரன்கோயில் 

***

ரகுநாயகா நீ பாத – தியாகராஜர் கிருதி

பல்லவி

ரகு நாயக நீ பாத யுக

ராஜீவமுல நே விட ஜால ஸ்ரீ (ரகு)

அனுபல்லவி

அக ஜாலமுல பார-தோலி

நன்னாதரிம்ப நீவே கதி காத ஸ்ரீ (ரகு)

சரணம்

பவ ஸாகரமு தாட லேக நே

பலு காஸி-படி நீ மருகு ஜேரிதினி

அவனிஜாதிபாஸ்ரித ரக்ஷக

ஆனந்த-கர ஸ்ரீ த்யாகராஜ நுத (ரகு)

raghu nāyaka, nī pāda yuga

rājīvamula nē viḍa-jāla śrī

O best among Raghus! Your pair of

lotus-feet, I cannot let go of.

Anupallavi

agha jālamula pāra tōli nannu

ādarimpa nīvē gati kādā śrī

To drive afar my accumulated sins

And care for me, aren’t you the only refuge?

Charanam

bhavasāgaramu dāṭalēkanē

palu gāsibaḍi nī marugu jēriti

avanijādhipa, śritarakṣaka,

ānandakara, śrī tyāgarājanuta

Unable to cross the worldly ocean,

After much pain, your shelter did I reach,

Husband of Earth’s daughter, Protector of those approaching you!

Maker of joy, Praised by Tyagaraja!

–subham—-

Tags– பகவத் கீதை,  வள்ளுவர் பிறவிப் பெருங்கடல், சம்சார சாகரம்,  ஏன் பெயர் வந்தது ? தியாகராஜர், அருணகிரிநாதர்

அமரர் திரு சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி! (Post No.15,258)

Santanam  Srinivasan doing Ganapati Homa 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,258

Date uploaded in London –   10 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

10-12-2025 அஞ்சலி

அமரர் திரு சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி!

ச. நாகராஜன்

திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் 29-3-1944 அன்று பிறந்தார்.

10-12-2023 அன்று மறைந்தார்.

அவரது நினைவு நாளையொட்டி அவரைப் பற்றி இங்கு நினைவுகூரலாம்.

எளிமைஇனிமைஆன்மீக சேவை

திரு சீனிவாசன் அவர்களுடன் பழகியோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்கள் அனைவரும் கூறுவது அவரது எளிமை, இனிமை, ஆன்மீக சேவை என்பதைத் தான்.

படாடோபமான, ஆடம்பரமான வாழ்க்கையை விரும்பாமல் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர்.

விளம்பரத்தை விரும்பாவதர்.

அவரைச் சந்தித்த நூற்றுக்கணக்கானோரும் ஒருவர் இன்னொருவரிடம் கூறிய வாய்மொழி வார்த்தையாலேயே அவர் பால் ஈர்க்கப்பட்டனர்.

டெக்ஸ்டைல் பொறியாளராக மதுரை கோட்ஸில் பல வருட காலம் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் அவர்.

அதே சமயம் தினமும் கணபதி ஹோமத்தை காலையில் செய்து குருநாதர் ஆய்க்குடி ஸ்வாமிஜி கிருஷ்ணா அவர்களின் அருளையும், மஹாகணபதி அருளையும் பரிபூரணமாகப் பெற்றவர் அவர்.

இந்த தெய்வீக ஆற்றலால் ஒருவரைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றிய அனைத்தும் அவருக்குத் தெரிந்தது; வருங்காலமும் புரிந்தது.

ஆகவே தினமும் மதுரையிலும் சரி, பின்னால் அவர் சென்னையி குடியேறி வாழ்ந்தபோதும் சரி பலரும் அவர் வீட்டில் கூட்டமாகக் கூடி தங்கள் பிரச்சினைகளைக் கூறி தீர்வைக் கண்டு மகிழ்ந்தனர்.

வருவோருக்கு அவரது இல்லத்தினரின் உபசரிப்பும் காப்பியும் கிடைக்குமே தவிர அவர்களிடம் ஒரு பைசா கூட அவர் வாங்கியதில்லை.

ஆகவே இன்னும் அதிகமதிகக் கூட்டம் கூடலாயிற்று.

பன்முகப் பரிமாணம் கொண்ட அவர் திரு என்.சி. ஶ்ரீதரனுடன் இணைந்து பல்லாண்டு காலம் பல்வேறு நிறுவனங்கள், கல்லூரிகள், தனியார் சங்கங்கள் ஆகியவற்றிற்கு அழைப்பின் பேரில் சென்று உணர்வூக்கம் என்னும் மோடிவேஷன் உரைகளை ஆற்றினார்.

இதில் பயிற்சி பெற்றோரின் எண்ணிக்கை சுலபமாக ஒரு லட்சத்தைத் தாண்டும் எனலாம்.

ஜோதிடம், வாஸ்து ஆகிய துறைகளில் நிபுணர் என்பதால் அவரைத் தங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் செல்ல வருவோர் ஏராளம்.

அரசியல்வாதிகள், தலைவர்கள், திரைபப்ட நடிகர்கள், நடிகையர், கலைஞர்கள், பல்துறை நிபுணர்கள், சாமானியர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரை நாடிப் பயன் பெற்றனர்.

துபாய், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அவரைப் பார்க்க ஏராளமானோர் குழுமியது குறிப்பிடத் தகுந்தது.

அவரது ஹாஸ்ய உணர்ச்சி அனைவரும் போற்றும் ஒன்று.

ஜோக் அடிப்பதில் வல்லவர். தினமும் சுமார் ஐம்பது ஆண்டுகளில் அவர் சேகரித்த ஜோக் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளிலிருந்து எடுத்த கட்டிங்ஸ் பல பீரோக்களில் அடுக்கி வைக்கப்பட்டன. இதை கட்டிங் அண்ட் ஒட்டிங் (CUTTING AND PASTING) என்று கேலியாகச் சொல்வது வழக்கம்.

லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் பல முறை அவர் பங்கேற்றுள்ளார். அவரது புத்தகங்கள் http://www.Pustaka.co.in பதிப்பகம் மூலம் பிரசுரமாகியுள்ளன.

 Srinivasan with his wife Rajalakshmi with Daffodils.

அனைவரது நட்சத்திரங்களையும் கேட்டு அவர்கள் நலனுக்காக விநாயக சதுர்த்தி அன்று அவர் பெரும் கணபதி ஹோமம் செய்வது வழக்கம்.

அவரைப் பற்றி நிறையக் கூறிக் கொண்டே போகலாம்.

இன்று அவரது நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்கி அஞ்சலி செய்வோமாக!

**

SIXTEEN CARTOONS FROM DECCAN CHRONICLE NEWSPAPER UP TO 9-12-2025

Sixteen Beautiful and meaningful  cartoons fro DECCAN CHRONICLE up to 9-12-2025.

subham–

tags- Cartoons, Deccan Chronicle, 9-12-2025

திருப்புகழில் மெட்றாஸ்காரன் வசவு- கஸ்மாலம் (Post No.15,257)

Written by London Swaminathan

Post No. 15,257

Date uploaded in London –  9 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கஸ்மாலம்- பகவத் கீதையில் அர்ஜுனனைத் திட்டும்போது, கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பயன்படுத்திய சொல்; சென்னை ஆட்டோக்காரர்களின் வாயில் சர்வ சாதாரணமாகப் புழங்கும் ஸம்ஸ்கிருதச் சொல்; பொருள் :கஸ்மலம் = அழுக்கான, தூய்மையற்ற,பலவீனமான

Date: 29 December 2018: Post No. 5852

****

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கஸ்மாலம் வசவு பற்றி எழுதினேன் ; நேற்றிரவு அருணகிரிநாதரின் திருப்  புகழைப் படித்த பொழுது அவர்தான் சென்னைக்காரர்களுக்கு இந்த வசை மொழியைச் சொல்லிக் கொடுத்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது .

கண்ண பரமாத்மா 5000  ஆண்டுகளுக்கு முன்னர் இதை ஸம்ஸ்க்ருதத்தில்தான் சொன்னார். மதராஸ்/ சென்னை காய்கறி வியாபாரிகள்,  ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் , பிச்சைக்காரர்கள் வாயில் புழங்க யாரோ ஒருவர் தமிழில் சொல்லியிருக்க வேண்டும் இதோ அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலில் வரும் சொற்கள்:

தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம்

கனவாலங் கூர்விழி மாதர்கள்

     மனசாலஞ் சால்பழி காரிகள்

          கனபோகம் போருக மாமிணை …… முலைமீதே

கசிவாருங் கீறுகி ளாலுறு

     வசைகாணுங் காளிம வீணிகள்

          களிகூரும் பேயமு தூணிடு …… கசுமாலர்

மனவேலங் கீலக லாவிகள்

     மயமாயங் கீதவி நோதிகள்

          மருளாருங் காதலர் மேல்விழு …… மகளீர்வில்

மதிமாடம் வானிகழ் வார்மிசை

     மகிழ்கூரும் பாழ்மன மாமுன

          மலர்பேணுந் தாளுன வேயரு …… ளருளாயோ

தனதானந் தானன தானன

     எனவேதங் கூறுசொல் மீறளி

          ததைசேர்தண் பூமண மாலிகை …… யணிமார்பா

தகரேறங் காரச மேவிய

     குகவீரம் பாகும ராமிகு

          தகைசாலன் பாரடி யார்மகிழ் …… பெருவாழ்வே

தினமாமன் பாபுன மேவிய

     தனிமானின் தோளுட னாடிய

          தினைமாவின் பாவுயர் தேவர்கள் …… தலைவாமா

திகழ்வேடங் காளியொ டாடிய

     ஜெகதீசங் கேசந டேசுரர்

          திருவாலங் காடினில் வீறிய …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

கன ஆலம் கூர் விழி மாதர்கள் மன சாலம் சால் பழிகாரிகள் …

பெருத்த, கொடிய விஷம் மிக்குள்ள கண்களை உடைய விலைமாதர்கள்,

மனத்தில் வஞ்சனையுடன் பசப்பி நடிப்பு வண்ணம் மிகுந்த பழிகாரிகள்.

கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே கசிவு

ஆரும் கீறுகி(ள்)ளால் உறு வசை காணும் காளிம வீணிகள் …

மிகுந்த போக சுகத்தைத் தரக் கூடியதும், தாமரை மொட்டுக்கு

ஒப்பதானதுமான மார்பின் மீதே அன்பு மிகுதிக்கு அடையாளமாக

கீறல்களாலும் கிள்ளுதலின் குறிகளாலும் பழிப்புக்கு இடம் தரும்

களிம்பைத் தடவும் வீணிகள்.

களி கூறும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் மனம் ஏல் அம்

கீல(க) கலாவிகள் மயமாயம் கீத விநோதிகள் … ஆவேசத்தைத்

தருகின்ற, தீய வெறித் தன்மையைக் கொடுக்கும் மாமிச உணவைத்

தருகின்றஅசுத்தர்கள். மனத்தில் பொருந்திய சூழ்ச்சி நிறைந்த அழகிய

தந்திரவாதிகள், மாயம் நிறைந்த இசையில் இன்பம் கொள்பவர்கள்.

மருள் ஆரும் காதலர் மேல் விழு(ம்) மகளீர் வில் மதி மாடம்

வான் நிகழ்வார் மிசை மகிழ் கூரும் பாழ் மனமாம் … காம

மயக்கம் நிறைந்த காதல் செய்பவர்கள். தம் மீது மோகம் கொண்டு

வந்தவர்கள் மேலே விழுகின்ற பொது மகளிர். ஒளி பொருந்திய மேல்

மாடம் உள்ள (உப்பரிகை உள்ள) வீடுகளில் நிலவையும் வானத்தையும்

அளாவி விளங்க இருப்பவர்கள் மீது மகிழ்ச்சி நிரம்பக் கொள்ளும்

பாழான மனம் இது.

உன மலர் பேணும் தாள் உ(ன்)னவே அருள் அருளாயோ …

உன்னுடைய தாமரை மலரை ஒத்த திருவடியை தியானிக்கவே உனது திருவருளைப் பாலிக்க மாட்டாயோ?

தனதானந் தானன தானன என வேதம் கூறு சொல் மீறு

அளி ததை சேர் தண் பூ மண மாலிகை அணி மார்பா …

தனதானந் தானன தானன என்று வேதம் ஓதுவோரது

சொல்லொலியினும் மிகுந்ததான ஒலியுடன் வண்டுகள் நிறைந்து

சேர்ந்துள்ள குளிர்ந்த பூக்களாலான நறு மணம் கொண்ட மாலைகளை அணிந்த மார்பனே,

தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா

மிகு தகை சால் அன்பார் அடியார் மகிழ் பெரு வாழ்வே …

நொறுங்குதலும் அழிவும் அப்போது நிறையச் செய்த ஆட்டின் மேல்

வாகனமாக ஏறி அமர்ந்த குக வீரனே, தேவி பார்வதியின் குமாரனே,

மிக்க மேம்பாடு நிறைந்த அடியார்கள் மகிழ்கின்ற பெரும் செல்வமே,

தினம் ஆம் அன்பா(ய்) புன(ம்) மேவிய தனி மானின் தோள்

உடன் ஆடிய தினை மா இன்பா உயர் தேவர்கள் தலை

வாமா … தினந்தோறும் உன் மீது கொண்ட அன்புடன் தினைப்

புனத்தில் இருந்த ஒப்பற்ற மான் போன்ற (வள்ளியின்) தோளுடன்

விளையாடியவனே, தினை மாவில் விருப்பம் உள்ளவனே, தேவர்களின் தலைவனான அழகனே,

திகழ் வேடம் காளியொடு ஆடிய ஜெகதீச சங்க(மே)ச

நடேசுரர் திருவாலங்காடினில் வீறிய பெருமாளே. … திகழ்கின்ற

வேடத்துடன் காளியுடன் நடனம் ஆடின உலகத்துக்கு ஈசனும் சங்க

மேசனும் ஆகிய நடேசப் பெருமானுடைய தலமாகிய திருவாலங்காட்டில்* விளங்கி நிற்கும் பெருமாளே.

****

* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர்

தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று – ரத்னசபை.

***

ஒரிஜினல் கஸ்மலம்

श्रीभगवानुवाच |

कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम् |

अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन || 2||

ஸ்ரீ பகவான் உவாச

குதஸ்த்வா கச்மலமிதம் விஷமே சமுபஸ்த்திதம்

அனார்யஜுஷ்ட  மஸ்வர்க்ய மகீர்த்திகா மர்ஜுன 2-2

கச்மலம் = மனத்தில் கலக்கம் ; மனக் களங்கம்

śhrī bhagavān uvācha

kutastvā kaśhmalamidaṁ viṣhame samupasthitam

anārya-juṣhṭamaswargyam akīrti-karam arjuna

 பகவத் கீதை 2.2 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதருமை அர்ஜுனனே, உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன? வாழ்வின் மதிப்பை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்வதில்லை, அவமானத்தை கொடுக்கின்றன.

–subham—

Tags- கச்மலம், பகவத் கீதை, 2.2, திருப்புகழில், மெட்றாஸ்காரன், வசவு, கஸ்மாலம்

Ancient Tamil Encyclopaedia -Part 40; One Thousand Interesting Facts -Part 40 (Post.15,256)

Written by London Swaminathan

Post No. 15,256

Date uploaded in London –  9 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

part 40

item 246

Akanānūru verse 26 by Pāndiyan Kānapēreyil Thantha Ukkira Peruvazhuthi  is the king who compiled Aka naanuuru . That means he was one of the last kings of Sangam Age. He has a Sanskrit name UGRA which is found in Tiru Vilaiyaadal Puranam as well. He is a contemporary of Rajasuyam Yaga performer ; also contemporary of Avvaiyar who was also present in the Rajasuyam Yaga. This king’s name helps us to calculate the periods of other kings.

247

Verse 26 has the usual stuff of Tamil men visiting prostitutes and the wives getting angry and then reaching a compromise through their children.

Pandyan king used one notable simile in the poem:

I softened like fine soil

which had been rained on heavily and ploughed

many times.

***

248

Akanānūru verse 27 by  Mathurai Kanakkāyanār compares the pearls from Korkai with the teeth of a heroine/ woman in the poem. Whenever Pandyas are or their country are mentioned, poets always add pearls from the Pandya country. And there is some colour contrast in the poem too. Woman’s lips are coral red, teeth are like shining white pearls, her eyes with kohl have black lining, the elephants of Pandya king have white tusk and her eyes are like blue lily flowers.

…. your smile with bright teeth

in your coral-coloured mouth,

resembling pearls from the wide

shores of Korkai town that is

protected well by brave battling

Pandiyans who got white-tusked

elephants from the northern

Vēnkadam Hills.

How will they let him go?  Your

kohl-lined eyes, that have ruined

the beauty of blue waterlily flowers

வெண்கோட்டு யானை – elephant with white tusks, அறத்தின் காக்கும் கொற்கை – Korkai city that they protect with justice, அம் பெருந்துறை முத்தின் அன்ன – like the pearls from its wide shores teeth ,இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – red mouth with bright teeth, coral-like red mouth with bright teeth, the beauty of (eyes) blue waterlily flowers

***

249

Akanānūru verse 28 composed by Pandiyan king Arivudainampi shows that Pandya kings were also good poets. Among the kings mentioned in the Sangam age , Pandya kings composed more poems than Chera and Choza kings. One must remember Pandyas were the kings who patronised the Tamil language in Madurai Academy. More poets have Madurai as prefix than any other town.

***

250

Akanānūru 29 composed by Vellādiyanār has two notable similes

Eyes like cut tiny mango
eyes that bring happiness when seen,
……….beautiful like the two pieces of a
……….fragrant tiny mango cut with a knife,

***

251

Elephant- Mirage- Boat on ground without water

……..where an elephant
that became thin, not knowing where to
find water to drink, runs to a mirage only
to find no water and lies down with sorrow,
looking like a boat on land without water

……………….

***

252

Akanānūru 30 by Mudangik  Kidantha Neduncheralāthan has some interesting lines that are appreciated by Tamil scholars

Will your pride be ruined if you come to the
fragrant seashore grove where punnai tree
buds look like unwashed pearls and ask us
about our beauty and then leave?

பெருமை என்பது கெடுமோ, ஒரு நாள்

மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்

தண் நறுங்கானல் வந்து, நும்

வண்ணம் எவனோ என்றனிர் செலினே?

***

253

Mystery about name! முடங்கிக் கிடந்த 

Neduncheralāthan is one of the most famous Chera kings. We don’t know why he was given an epithet Mudangi Kidantha! It is a strange epithet. In other places he was praised as one who had conquered lands up to Himalaya.

The meaning of Mudangi Kidantha முடங்கிக் கிடந்த  is “lie with knees drawn up and arms close to the body”. Did he compose this at the ripe old age? Or was he afflicted with rheumatism? No one has explained it properly as far as I know. Maybe it is a different Neduncheralathan.

To be continued………………………………..

Tags- Ancient Tamil Encyclopaedia ,Part 40, One Thousand Interesting Facts, item 253, Neduncheralathan, Pearl, Korkai, Ugra, Sanskrit word

அஷ்டமா சித்திகள்!  பிரெஞ்சுக்காரர் கண்ட அற்புதம்! (Post.15,255)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,255

Date uploaded in London –   9 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

3-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

சித்தர்களின் அஷ்டமா சித்திகள்! நிஜமாகவே சாத்தியமாபிரெஞ்சுக்காரர் நேரில் கண்ட அற்புதம்! 

ச. நாகராஜன் 

ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் மஹரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானம் உலகெங்கும் ஒரு பெரிய பேசு பொருளானது.

அவரது தியான முறை மூலம் தரையிலிருந்து எழும்பி மேலே சென்றதாகப் பலரும் கூறினர். ஆனால் இதற்கான வலுவான ஆதாரங்கள் தாம் இல்லை.

 ஆனால் பாரத தேசத்தின் சித்தர்களுக்கோ இது ஒரு எளிய கை வந்த கலையாகும்.

இதை நேரில் பார்த்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், பேச்சாளரும், பாரிஸ்டரும் நீதிபதியுமான லூயிஸ் ஜாகொல்லியட் (LOUIS JACOLLIOT) என்பவர் அந்தச் சம்பவத்தைத் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

சாரொல்லஸ் என்ற பிரான்ஸ் நாட்டு நகரில் 1837ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதியன்று ஜாகொல்லியட் பிறந்தார். பிரெஞ்சு காலனிகளில் மாஜிஸ்ட்ரேட்டாகப் பணியாற்றினார்.

வேதம்,உபநிடதம் ஆகிய எல்லாவற்றையும் படித்த அவருக்கு யோகா மீதும் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. சம்ஸ்கிருதத்தைப் படிக்க ஆரம்பித்தார். இந்தியாவின் மீது பெரும் மதிப்பைக் கொண்ட அவருக்கு

இந்தியா வர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. 1865 முதல் 1869 முடிய அவர் இந்தியாவில் இருந்தார்.

 1866ம் ஆண்டு இந்தியாவில் அவருக்கு ஒரு நூதன அனுபவம் ஏற்பட்டது.

 கோவிந்தசாமி என்ற ஒரு சித்தரை அவர் சந்தித்தார். இருவரும் யோகா சம்பந்தமாக பேசுவது வழக்கமானது.

ஒரு நாள் கோவிந்தசாமி ஜாகொல்லியட் உட்கார்ந்திருந்த வாரந்தாவிற்கு வந்தார். அப்போது வாயில் கதவுக்கு அருகே வந்து நின்றார் அவர்.

கைகளை மடித்து வைத்துக் கொண்ட அவர் ஒரு நிமிடம் யோசித்தார். பின்னர் மெதுவாக அவர் மேலே எழும்பினார். ஒரு அடி தூரம் அவர் மேலே எழும்பியதை ஜாகொல்லியட்டால் சரியாக அளக்க முடிந்தது.

கோவிந்தசாமிக்குப் பின்னால் பட்டு ரிப்பன்கள் சிவப்பு, தங்க நிறம்,  வெள்ளை நிறத்துடன் தொங்கிக் கொண்டிருந்தன.  அவர் ரிப்பன்களில் ஆறாவது ரிப்பன் அளவு உயர்ந்தார். ஆகவே சரியாக ஒரு அடி என்பதை ஜாகொல்லியட்டால் நிர்ணயிக்க முடிந்தது.

 கோவிந்தசாமி மேலே எழும்ப ஆரம்பித்தவுடன் சரியாக தனது கடிகாரத்தில் மணியைப் பார்த்தார் ஜாகொல்லியட். அந்தரத்தில் பத்து நிமிடம் நின்று கொண்டிருந்தார் கோவிந்தசாமி.  ஐந்து நிமிடங்கள் அவர் அசைவற்று சிலை போல இருந்தார்.

பிறகு கீழே மெதுவாக இறங்கினார் அவர்.

 இதை அகல்ட் ஸயின்ஸ் இன் இந்தியா (OCCULT SCINCE IN INDIA) என்ற தனது நூலில் எழுதியுள்ளார் ஜாகொல்லியட். இவர் பிரெஞ்சு மொழியில் எழுதிய ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. உலகில் ஏராளமானோர் விரும்பிப் படிக்கும் நூல்களாக விற்பனையில் சக்கை போடு போட்டன.

 ரஷியாவில் இவரது நூல்கள் பிரபலமாயின. இவரது நூல்கள் 18 தொகுதிகளாக ரஷியாவில் 1910ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டன. ஆனால் கம்யூனிஸ அரசு ரஷியாவில் அமைந்ததிலிருந்து இவை தடை செய்யப்பட்டன. 1928 முதல் 1989 முடிய இவரது நூல்கள் அங்கு கிடைக்கவில்லை.

சம்ஸ்கிருத ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட ஜாகொல்லியட் கிருஷ்ணாவுக்கும் ஏசுவுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை எடுத்துக் காட்டினார்.

‘கிறிஸ்ணா’ என்பது கிறிஸ்து என்பதாக மாறியது. ‘கிறிஸ்னா’ என்பது கிருஷ்ணர் என்ற வார்த்தையை ஒட்டிப் பிறந்த சொல் தான் என்றார் இவர். பைபிளுக்கும் இந்திய புராண இதிஹாஸங்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை இவர் விவரித்தார்.

 மனு ஸ்மிருதியை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இவரது குறிப்பிடத்தகுந்த நூல்களில் முக்கியமான ஒன்று திருக்குறள். பல முக்கியமான குறள்களை இவர் மொழிபெயத்து வெளியிட்டார்.

 1890ம் ஆண்டு அக்டோபர் 30ம் நாளன்று அவர் பிரான்ஸில் உள்ள செயின்ட் திபால்ட் – டெஸ்- விக்னஸ் என்ற இடத்தில் மறைந்தார்.

 இந்திய யோகிகளைப் பற்றி அதிகார பூர்வமாக ஆவணப்படுத்திய மேலை நாட்டோரில் குறிப்பிடத் தகுந்தவர் ஜாகொல்லியட்!

**