There are over 200 pictures in this YEAR 1928 book. I will post them batch by batch. I remember posting pictures from two other German books in the past. This is the third German book, I am using.
Title -Der Indische Kulturkreis
By H G VON
K DOHRING
Title – Heilige Statten Indiens
By H V GLASENAPP
YEAR 1928, MUNCHEN
–subham—
Tags-German book, year 1928, rare pictures, part 1, masks, Lakshmi
4. மஹாவீரருக்கு தாய், தந்தை இட்ட பெயர் என்ன ? அவர் ஏன் வர்த்தமான மஹாவீரர் என்று அழைக்கப்பட்டடார் ?
xxxx
5. மஹாவீரர் இறந்தது எங்கே?
xxxx
6. தீர்த்தங்கரரில் இவருக்கு ஏன் அதிகப் புகழ்?
xxxx
7. புத்தர் கடவுள் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை; மஹாவீரர் கடவுள் பற்றி என்ன சொன்னார் ?
xxxx
8. சமணர்களின் கொள்கை என்ன ?சமணர்கள் சூரிய அஸ்தமனத்துக்குப்பின்னர் சாப்பிட மாட்டார்கள்; பல் தேய்க்கமாட்டார்கள் என்பதெல்லாம் சரியா?
xxxxx
9.சமணர்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
xxxx
10.சமணர்களின் புனிதத் தலங்கள் எவை ? புனித நூல் எது?
Xxxx
Gomateswara Monolith Statue in Sravana belagola, Karnataka; saint who controled sex desires.
விடைகள்
1. மஹாவீரர் பிறந்த இடம் குண்டல்பூர் அல்லது குண்டலகிராமம் எனப்படும். வைசாலி அல்லது ஜமுயி குன்றுகள் என்றும் சிலர் சொல்வர். மூன்று இடங்களும் பீஹார் மாநிலத்தில்தான் உள்ளன.
இவர் சரியாக 2600 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார்; புத்தருக்கு முன்னர் பிறந்தவர்.
xxxx
2.அவர் சமண மதத்தை ஸ்தாபிக்கவில்லை.; தீர்த்தங்கரரர்கள் என்னும் 24 வழிகாட்டிகளில் அவர் கடைசியாக வந்தவர்.
xxxx
3.தாயின் பெயர் த்ரிசலா தேவி ; தந்தையின் பெயர் தந்தையின் பெயர் சித்தார்த்தன் ; அவர் ஒரு சிற்றரசர்
Xxxx
4.அவருடைய பெயர் வர்த்தமானர் ; வளங் கொழிக்கச் செய்ப்பவர் என்று பொருள்; அவர் தாயின் கருவில் இருந்தபோதே வளர்ச்சி ஏற்பட்டது ; ஏராளமான மலர்கள் பூத்துக்குலுங்கின’ இவர் பிரம்மசர்யத்தைக் கடைப்பிடித்ததால் மகாவீர் எனப்பட்டார்; புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம் என்பது அவ்வையார் வாக்கு; புலனை வென்ற வர்த்தமானரும் , ஆஞ்சநேயரும் மட்டுமே இந்தியாவில் மாவீரர் பட்டம் பெற்றவர்கள் .
xxxx
5.பீஹார் மாநிலத்தில் உள்ள பாவாபுரி என்னும் இடத்தில் அவர் முக்தி அடைந்தார்; அப்போது அவருக்கு வயது 72..அவர் தகனம் செய்த இடத்தில் கோவில் எழுப்பப்பட்டது
xxxx
6.மஹாவீரருக்கு முன்னர் 23 தீர்த்தங்கரர்கள் இருந்தாலும் இவரைத்தான் கடைசி தீர்த்தங்கரர் என்பார்கள்; அதனாலும் அவரது போதனைகளே நமக்குக் கிடைத்திருப்பதாலும், வரலாற்றுச் சான்றுகள் கிடைப்பதாலும் இவரே புகழ் பெற்றவர்; மேலும் புத்தர் போல மக்களிடையே உரையாற்றி தனது போதனைகளைப் பரப்பினார் ; புத்தரை க்ஷத்ரிய மன்னர்கள் ஆதரித்தது போல இவரை வைஸ்யர் எனப்படும் வணிகர்கள் ஆதரித்தனர் .xxxxxx
7. சமணர்கள் அல்லது மஹாவீரர் கடவுள் என்று படைப்போன் ஒருவன் உளான் என்று நம்புவதில்லை தாய்ப்பசுவை ஒவ்வொரு கன்றும் எப்படி அடையாளம் காண்கிறதோ, அவ்வாறே அவரவர் வினைகள் அவரவரை அடையாளம் கண்டு ஒட்டிக்கொள்ளும்; அதற்கேற்ப பலனும் கிட்டும். என்பது அவர் கொள்கை; ஆகையால் இதை நாஸ்தீக மதம் என்றே சொல்லவேண்டும் .எங்கும் நிறைந்த தூய ஆன்மாக்களே வழிகாட்டிகள்; அவர்கள் நிலையை எல்லோரும் எய்தலாம்.ஜனன- மரண வட்டத்திலிருந்து மீள்வதே வாழ்க்கையின் குறிக்கோள்; இந்துக்களைப் போலவே கர்மவினை, மறுபிறப்பு, மோட்சம் ஆகியவற்றில் நம்பிக்கை உண்டு .ஆனால் அவைகளை நிர்வகிக்கும் ஒருவன் இல்லை; கடவுள் இல்லை.
xxxx
8.நல்ல பேச்சு, நல்ல செய்கை, நல்ல சிந்தனை இருந்தால் பிறப்பு- இறப்புச் சுழலிலிருந்து விடுபடலாம் (இந்துக்கள் இதையே த்ரி கரண சுத்தி என்பர் ; தமிழ் இந்துக்கள் இதையே வாய்மை, உண்மை, மெய்மை என்பர்); இவை தவிர அஹிம்சை, திருடாமை , பற்றின்மை, உண்மை பேசுதல், புலன் இன்பம் தவிர்த்தல் ஆகிய குணங்களையும் சமணர்கள் வலியுறுத்துவார்கள்.
இரவு நேரத்தில் சாப்பிட்டால் புழுப் பூச்சிகள் உணவில் இருந்தாலும் திரியாது என்பதால் இருட்டில் சாப்பிட மாட்டார்கள்; பல் தேய்த்தால் புழுப் பூச்சிக இறக்க நேரிடும் என்பதால் தேய்க்கமாட்டார்கள் ; ஆயினும் இக்காலத்தில் சமணத்துறவிகள் மட்டுமே இதைக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் குளிப்பதும் இல்லை.
Xxxxx
9.இரண்டு பிரிவுகள் – திகம்பரர் (உடைகளை அணியமாட்டார்கள்); ஸ்வேதாம்பரர் (வெள்ளை உடை தரிப்போர்).
xxxxxx
10.புனிதத் தலங்கள்
வைசாலி, மகாவீரர் பிறந்த இடம், பீஹார்
பாவாபுரி, மகாவீரர் மறைந்த இடம்,பீஹார்
தேவ்கர் சமணர் கோயில்கள், உத்தரப் பிரதேசம்
சிகார்ஜி சமணக் கோயில்கள், ஜார்க்கண்டு
சத்ருஞ்ஜெய மலை. குஜராத்
பாலிதானா கோயில்கள், குஜராத்
கிர்நார் சமணக் கோயில்கள், (நேமிநாதர் முக்தி அடைந்த இடம்), குஜராத்
தில்வாரா கோயில், இராஜஸ்தான்
கோமடேஸ்வரர், சிரவண பெலகோலா , கர்நாடகம்
ஜைன காஞ்சி, தமிழ்நாடு
மஹாவீரர் போதனைகளை பலர் தொகுத்து அளித்துள்ளனர்; இவை ஒரே புஸ்தகத்தில் இல்லை; இவைகளை ஆகம சூத்திரங்கள் என்பர்
—subham —-
TAGS- மஹாவீரர், சமண மதம், கடவுள் இல்லை, கர்மா வினை , பீஹார், போதனைகள், தாய், தந்தை, வர்த்தமான
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 34
கோவில் எண்–33
33.சபரிமலை சாஸ்தா / ஐயப்பன் கோவில்
சபரிமலை எங்கே இருக்கிறது?
கேரளத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கிறது; செங்கன்னூர் ரயில் நிலயத்தில் இறங்கி பக்தர்கள் செல்வர். எருமேலியிலிருந்து காட்டு வழியாகச் சென்றால் 61 கி.மீ ; வண்டிப்பெரியாரிலிருந்து சென்றால் 13 கிமீ. சாலக்காயத்திலிருந்து 8 கி.மீ; தற்போது பம்பா நதி வரை சாலை வசதிகள் இருப்பதால் பலரும் அதுவரை சென்று பின்னர் மலையில் ஏறி ஐயப்பனை தரிசிக்கின்றார்கள் .
சிறப்பு அம்சங்கள்
கேரளத்தில் அதிகம் பேர் விஜயம் செய்யும் கோவில் இது ; ஆண்டுக்கு 2 கோடி பக்தர்கள் வருவதால் உலகிலேயே அதிகம் பக்தர்கள் வரும் பட்டியலில் இருக்கிறது.
ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் வரலாம்; ஆனால் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் செல்ல முடியாது .
41 நாள் விரதம் அனுஷ்டித்து மாலை அணிந்து இரு முடி தாங்கி பக்தர்கள் செல்கிறார்கள்.
ஐயப்பன் யார் ?
பெரிய தத்துவத்தை பாமர மக்களுக்குப் புரிய வைக்க வேடிக்கையாக கதை சொல்லுவார்கள்; விஷ்ணு மோகினி வடிவம் எடுத்துக்கொண்ட காலத்தில் சிவ பெருமான் அவளைக் காதலித்து பெற்ற பிள்ளை என்பது பாமர மக்கள் சொல்லும் கதை; ஆனால் காஞ்சி மஹா சுவாமிகள் போன்றோர் உண்மைப் பொருளை விளக்கியுள்ளனர் ; நாராயணனின் வசீகர கருணா சக்தியும் சிவனின் ஞான சக்தியும் இணைந்து ஏற்பட்ட தேஜோ மய ஒளியில் தோன்றியது ஹரி ஹர புத்ரன் ; அதாவது இரண்டு சக்திகளின் இணைப்பு .
மணிகண்டன் கதை
இன்னும் ஒரு கதையும் உண்டு ; பந்தள மகாராஜா பம்பா நதிக்கரைக்குச் சென்றபோது கழுத்தில் மணி கட்டப்பட்ட (மணிகண்டன் ) குழந்தையைக் கண்டு அரண்மனைக்குக் கொண்டுவந்தார் ; அதற்குப் பின்னர் மகாராணிக்கு ஒரு குழந்தை பிறந்தது; இருவரும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தனர்.யாருக்கு அடுத்த பட்டம் சூட்டுவது என்ற பிரச்சனை வந்தபோது ராணி ஒரு தந்திரம் செய்தாள் ; தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும் புலிப்பால் கொண்டு வந்தால் அதைச் சாப்பிட்டு நோயைத் தீர்க்க முடியும் என்றும் சொன்னாள் ; முதல் பிள்ளையான மணிகண்டன், கானகம் ஏகினார்; புலிப்பாலை எடுத்துக்கொண்டு புலி மீது சவாரி செய்து பந்தளத்தில் நுழைந்தார்; அவர் தெய்வீக சக்தியை அறிந்த மக்களும் மன்னரும் என்றும் அருள் பாலிக்க வேண்டியதால் நீலி மலையில் அமர்ந்து தவம் செய்தார்.
அந்தக் காலத்தில் உதயணன் என்ற மலைக்கள்ளன் ஒவ்வொரு ஊரையும் கொள்ளையடித்து மக்களை அச்சுறுத்தவே எல்லோரும் ஊர்தோறும் ஐயப்பனை — ஐயனாரை — ஆர்யனை — காவல் தெய்வமாக நிறுவினார்கள் . தர்ம சாஸ்தா என்பவர் தருமத்தை நிலைநாட்டி ,உதயணனை கொன்றுவிட்டு சபரிமலையில் சென்று மறைந்தார்;அந்த இடத்தில் தான் தற்போதைய கோவில் இருக்கிறது .
ஐயப்பன் என்னும் தர்ம சாஸ்தா புலி மீது வந்தபோது இருமுடி தாங்கி வந்தார்; அதை நினைவுபடுத்தும் வகையில் இன்றும் தோளில் அல்லது தலையில் இரு முடி தாங்கிச் செல்கிறார்கள் ; ஒரு பக்கம் அய்யப்பன் மீது அபிஷேகம் செய்வதற்கு தேங்காயில் நெய்யும் மறு பக்க முடிச்சில் வழிநடைக்குத் தேவையான உணவுப் பண்டங்களும் இருக்கும் .
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
அந்தக் காலத்தில் காட்டு வழியாக நடந்த வந்த பக்தர்கள் கோவிலுக்குச் செல்லுகையில் காலணி அணிய மாட்டார்கள்; ஆகையால் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்ததை ; சாமி சரணம், ஐயப்ப சரணம், சாமியே ஐயப்பா என்று ஆடியும் பாடியும் செல்லுவார்கள்.
18 படிகள்
தங்கத்தால் மூடப்பட்ட சாஸ்தா கோவிலை நெருங்கியவுடன் 41 நாள் விரதம் இருந்தோர் மட்டும் 18 படிகளில் ஏறி சந்நிதியை அடைவார்கள் . இந்த 18 படிகளுக்கும் தத்துவ விளக்கங்கள் உண்டு.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இறைவனை அடைய ஆத்மா செய்யும் பயணத்தை விளக்க வந்தது சபரிமலை யாத்திரை; அப்படி இறைவனை அடைய 41 நாள் விரத காலத்தில் எப்படி தூயவர்களாக இருந்தார்களோ அப்படி தினமும் இருக்க வேண்டும் ; இரு முடிகளில் ஒன்று பிராரப்த கர்மா ; அதாவது நாம் செய்த வினை; அதை அழித்தால் முன் முடியிலுள்ள தேங்காயை கழற்றி எறிவது போல உடலையும் நீக்கிவிடலாம்..
XXXXX
பக்தர்கள் பயன்படுத்தும் முக்கிய சொற்களின் பொருள்
ஆர்ய = பண்பாடு மிக்கவன்; அஜ்ஜ = பிராகிருத திரிபு= ஐயர் / ஐயன் = தமிழ் வடிவம் ;
அவனே எனது அப்பன்/ குரு = ஐயப்பன்
XXXX
ஐயப்பனின் உருவம்
அமர்ந்த நிலையில் ஐயப்பன் காட்சி தருகிறார் அவரது முழங் கால்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும் ; இரவில் சந்நிதியை மூடுகையில் ஹரிவராசனம் என்னும் தாலாட்டுப் பாடலைப் பாடுவார்கள் . இது சம்ஸ்க்ருத மொழியில் உள்ளது
xxxxx
5 முக்கிய ஐயப்பன் கோவில்கள்
குளத்துப்புழையில் பாலன் வடிவம்
ஆரியங்காவில் பிரம்மசாரி வடிவம்
அச்சன்கோவிலில் கிரஹஸ்த வடிவம் ; பூர்ணா, புஷ்கலா தேவியருடன்
சபரிமலையில் வானப் பிரஸ்த வடிவம்
பொன்னம்பல மேடு என்னும் காந்த மலையில் யோகி வடிவம்
XXXX
மகர ஜோதி
கார்த்திகை மாதம் விரதத்தை துவங்குவோர் மகர சங்கராந்தி அன்று மகர ஜோதியைத் தரிசித்துவிட்டு விரதத்தை முடிப்பர்; இப்போது கோடிக்கணக்கானோர் வருவதால், 41 நாள் முழுதும் தர்சனம் நடைபெறுகிறது.
மகர ஜோதி ஒரு காலத்தில் இயற்கையாக சூரியன் மறையும் போது ஏற்பட்டது; தற்போது பழங்குடி மக்கள் தீ மூட்டி ஜோதியை உண்டாக்கி பழைய வழக்கத்தைக் காப்பாற்றி வருகின்றனர் .
Xxxx
மாளிகைபுரத்து அம்மன்
சபரிமலை ஐயப்பனின் கோயிலில் தரிசனம் செய்த பின்னர் மாளிகைபுரத்தம்மன் கோயிலுக்குச் சென்று பக்தர்கள் வணங்குவார்கள். 100 மீட்டர் தூரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. மஞ்சள் மாதா என்பது இன்னும் ஒரு பெயர்..பந்தளம் அரச குடும்பத்தின் குல தெய்வம் ஆவார்.
கன்னி அய்யப்பன், குருசாமி
முதல் தடவை விரதம் இருந்து செல்லும் ஐயப்ப பக்தரை கன்னி ஐயாப்பன் என்பர் ; அதிக காலம் சபரிமலைக்குச் சென்றுவரும் முதிர்ந்த பக்தரை குரு வாக ஈற்றுஞ் அவர் கையில் மாலை, ஆடைகளை வாங்கி அணிவர். குரு சாமி தனது அனுபவத்தாலும், பக்தி முதிர்ச்சியினாலும் கன்னி ஐயப்பனை வழிநடத்துவார் ; பொதுவாக அவர் ஒழுக்கம் உடையவராக இருப்பார் .
–SUBHAM—
TAGS- கன்னி அய்யப்பன், குருசாமி ,மாளிகைபுரத்து அம்மன் ,மகர ஜோதி ,
5 முக்கிய ஐயப்பன் கோவில்கள் ,18 படிகள் மணிகண்டன், ஐயப்பன் கதை , சபரிமலை, சாஸ்தா
ஶ்ரீ சுகதேவர் கூறியருளுவது : தகுதியுள்ள ஒரு மனிதன் தனது வயதான பெற்றோர்களையும், கற்புள்ள மனைவியையும், குழந்தைகளையும், பிராமணர்களையும், தன்னிடம் அடைக்கலம் புகுந்துள்ளவர்களையும் ஆதரிக்காவிடில் அவனை ஜீவன்ம்ருத (நடமாடும் பிணம்) என்றே சொல்லலாம்.
ஓ, மன்னா! (யயாதி). இந்தப் பரந்த உலகில் எந்த ஒருவனேனும் தனது தகப்பனுக்கு கைம்மாறு செய்ய முடியுமா? (அவன் ஆற்றிய செயல்களுக்காக என்பது பொருள்). அவனுடைய கருணையினாலேயே முக்தி கிடைக்கப்பெறும். அவனாலேயே உடலானது உருவாக்கப்பட்டது. அதற்கு பதிலாக எதையும் செய்ய முடியுமா?
முடியாது என்பது பொருள். அப்படி கைம்மாறைச் யாராலும் உலகத்தில் செய்ய முடியாது.
தந்தையின் எண்ணத்தை எவன் ஒருவன் அறிந்து அவன் சொல்லாமலேயே அதன்படி செயலாற்றுகிறனோ அவனே மகன்களில் உத்தமன். தந்தை சொல்வதைச் செய்பவம் மத்தியமானவன். தந்தை கூறியதை அசிரத்தையுடன் செய்பவன் அதமன். எவன் ஒருவன் தந்தை கூறியதைச் செய்யாமல் விட்டு விடுகிறானோ அவன் மகனே அல்ல; வெறும் மலமே!
சகோதரி அன்பின் திருவுருவம் (மூர்த்தி); வந்திருக்கும் விருந்தாளியோ (அதிதி) தர்மத்தின் திருவுருவம்; ஒரு வருகையாளரோ அக்னியின் திருவுருவம்; எல்லா உயிர்களும் இறைவனின் திருவுருவமே.
1.புத்தர் பிறந்த இடம்எது ? அது எந்த நாட்டில் உள்ளது ?
xxxx
2.புத்தரின் முதல் பெயர் என்ன? புத்தரின்மனைவி, மகன் பெயர் என்ன ?
xxxxx
3.புத்தர் எத்தனை வயதுவரை வாழ்ந்தார்? எவ்வாறு , எங்கே இறந்தார் ?
xxxx
4.அவர் முதலில் உரையாற்றிய இடம் எது?அவர் என்ன போதித்தார் ?
xxxxx
5.புத்தர் உபதேசம் உள்ள நூலின் பெயர் என்ன?எண்வகை மார்க்கம் என்பது என்ன ?
xxxxx
6.அவர் மனம் மாற காரணமாக இருந்த விஷயங்கள் என்ன ?
xxxxx
7.அவருடைய அப்பா, அம்மா பெயர்கள் என்ன ?
xxxxx
8.புத்தர் இறந்த பின்னர் என்ன நடந்தது ? புத்தரையும் தசாவதாரத்தில் சேர்த்தவர் யார்
xxxxx
9.பெண்களை சேர்க்க புத்தர் ஏன்மறுத்தார்? பின்னர் அவர் மனதை மாற்றியது யார்?
xxxxx
10. புத்தர் பிறப்பதற்கு முன்னர் அவருடைய தாயார் கண்ட கனவு என்ன ?
xxxxx
விடைகள்
1.புத்தர் பிறந்த இடம் கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினி.; அது நேபாளம் என்னும் நாட்டில் உள்ளது 2500 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பிறந்தார் என்றாலும் அவர் பிறந்த ஆண்டு பற்றிய சர்ச்சை இன்றுவரை ஓயவில்லை . நமக்கு 2900 ஆண்டுகள் முன்னர் முதல் 2500 ஆண்டுகள் வரையுள்ள காலத்தில் அவர் பிறந்த தேதி வைக்கப்படுகிறது . புத்தர் வைகாசி பெளர்ணமியில் விசாக நட்சத்திரத்தில் பிறந்தார்; இதை வெசாக் (வைசாக்) என்பர்.
xxxx
2.புத்தருக்கு அம்மா, அப்பா சூட்டிய பெயர் சித்தார்த்தன் புத்தரின் மனைவி பெயர் யசோதரா , மகன் பெயர் ராகுலன். புத்தர் என்ற அடைமொழிக்கு ஞானோதயம் கண்டவர் என்று பொருள்.
xxxx
3.அவர் 80 வயது வரை வாழ்ந்தார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள குஷி நகரில் இறந்தார் ஒருவன் கெட்டுப்போன பன்றி மாமிசத்தைக் கொடுத்தான்; ஆ பன்றி இறைச்சியா என்று கதறிய அவர், அது தொண்டையில் சிக்கவே மரணம் சம்பவித்தது ; இன்னும் சிலர் , அதனால் நோயுற்று அவர் இறந்தார் என்பர்.
xxxxx
4.புத்த கயாவில் போதி மரம் என்னும் அரசமரத்தின் கீழ் புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்டபோது அவருக்கு வயது 35. காசிக்கு ஆறு மைல் தூரத்தில் கங்கையும் வருணாவும் கலக்கும் இடத்தில் சாரநாத் மான்கள் பூங்கா இருக்கிறது ; அந்த ஊரில்தான் புத்தர் முதல் சொற்பொழிவினை நிகழ்த்தி நான்கு போதனைகளை அளித்தார் .
1.நாம் அனுபவிக்கும் துன்பம் 2 அதன் காரணம் 3.துன்பத்தின் முடிவு 4. அதிலிருந்து விடுபடும் வழிகள்
xxxx
5. புத்தரின் உபதேசம் அடங்கிய நூல் தம்ம பதம் எனப்படும். இதில் 26 அத்தியாயங்களில் பாலி மொழியில் புத்தர் சொன்ன பாடல்கள் இருக்கின்றன. இது பெளத்தர்கள் வேதப் புஸ்தகம் ; அவர் கடவுள் பற்றி ஒன்றும் போதிக்கவில்லை; எந்த சடங்குகளையும் விதிக்கவில்லை ; ஆனால் எண்வகை மார்க்கத்தை ஒருவன் பின்பற்றினால் போதும் என்றார் ; அவர் போதித்த 8 கொள்கைகள் — 1.நல்ல நோக்கு; 2.நல்ல தீர்மானம்; 3.நல்ல பேச்சு; 4. நல்ல செயல்கள் ; 5. நல்ல வாழ்க்கை ; 6. நல்ல முயற்சி ; 7.நல்ல எண்ணம் ; 8. நல்ல ஆழ்ந்த சிந்தனை . முதல் 7 இருந்தால் மனம் ஒரே இடத்தில் நிற்கும்.
xxxx
6.புத்தர் கண்ட நான்கு காட்சிகள் -வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார்.; இவை அவருடைய சிந்தனையைத் தூண்டிவிட்டன ; பலரிடமும் கேள்வி கேட்டு விட்டு, திருப்தி அடையாததால், அரச மரத்துக்கு அடியில் தியானத்தில் அமர்ந்தார் ; மறுபிறப்பு, கர்ம வினை , பாவ புண்ணியம் என்பதை அவரும் ஒப்புக்கொண்டார்
xxxx
7.புத்தரின் அப்பா பெயர் சுத்தோதனர்; சாக்கிய வம்சத்து சிற்றரசர்; அவருடைய மனைவி மாயாதேவி புத்தரின் அம்மா .
xxxxx
8.புத்தர் இறந்த பின்னர் அவரை தகனம் செய்தனர்; அந்த அஸ்திக்கும் (சாம்பல்) எலும்புகளுக்கும் போட்டாபோட்டி ஏற்பட்டது; ஆளாளுக்கு கிடைத்தை எடுத்துக் கொண்டுசென்றனர்; பலர் அதன் மீது ஸ்தூபி எழுப்பினர்; புத்த ஜாதகக்கதைகளை 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியோர் இந்து மதக் கதைகளை புத்தரின் பூர்வ ஜென்மத்தில் போதி சத்துவராக இருந்தபோது நடந்ததாக சித்தரித்தனர்; இதே தந்திரத்தைப் பின்பற்றி ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த ஜெயதேவர் என்ற கவிஞர் தான் எழுதிய கீத கோவிந்தம் பாடல்களில் புத்தரை ஒன்பதாவது அவதாரமாக சேர்த்தது அஷ்டபதி பாடல் இயற்றினார் ; ஏற்கனவே பாரத நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட புத்த மதத்துக்கு அத்தோடு முடிவு ஏற்பட்டது ; இதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னரே புத்த பிட்சுக்களின் ஒழுக்கமற்ற வாழ்வைக் கிண்டலடித்து மஹேந்திர பல்லவன் மத்த விலாஸப் பிரஹசணம் என்ற சம்ஸ்க்ருத நாடகத்தை இயற்றினார் .
xxxx
9. பெண்களை புத்த பிட்சுணிகளாக ஏற்றால் தனது மார்க்கத்தில் ஒழுக்கச் சிதைவு ஏற்படும் என்று அஞ்சினார்; ஆயினும் அவரது பிரதம சீடனும் உறவினனும் ஆன ஆனந்தன் என்பவன் மன்றாடிய பின்னர் பெண்களையும் அனுமத்தித்தார்; இப்படிப்பெண்களை அனுமத்தித்தால் 500 ஆண்டுகள் மட்டுமே இந்த மதம் இருக்கும் என்றார் . அவர் அஞ்சியபடியே புத்த மதம் சுருங்கியது; ஆயினும் புத்தர், சம்ஸ்க்ருத மொழியைப் புறக்கணித்ததால் இந்தியாவில் புத்தமதம் அழிந்தது என்பது விவேகானந்தரின் கருத்து
xxxx
10. புத்தரின் தாய் மாயா தேவி பிரசவ வேதனையில் துடித்தபோது அவரது கனவில் 6 தந்தங்கள் உடைய வெள்ளை யானை தோன்றி அவருடைய வயிற்றில் புகுந்தது. இந்தக் கனவு, பல இடங்களிலும் சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளது .
— subham —
Tags- கெளதம புத்தர், க்விஸ் , பிறப்பு, இறப்பு, எண்வகை மார்க்கம், அவதாரம், பெண்கள் , அப்பா, அம்மா, மனைவி, மகன், பெயர், Quiz 87
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 33
கோவில் எண்–32
32.கொடுங்கல்லூர் பகவதி கோவில்
கொடுங்கல்லூர் எங்கே இருக்கிறது?
திருச்சூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. மத்திய கேரளம் என்று சொல்லவேண்டும். கேரளத்தின் தென் கோடியில் திருவனந்தபுரமும் வட கோடியில் காஸர்கோடும் இருக்கின்றன. மத்தியில் திருச்சூர் இருக்கிறது. கொச்சியிலிருந்து 50.கி.மீ. ஒரு தீவின் நடுவில் 7 ஏக்கர் பரப்பில் கோவில் வியாபித்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்
கொடுங்கல்லூர் பகவதி என்றே அழைக்கப்பட்டாலும் இதையும் திருச்செ
ங்குன்றூர் போல கண்ணகி கோவில் என்று சொல்லுவார்கள்; ஆயினும் இதற்கு ஆதாரம் ஏதுமில்லை .
இங்கு முதலில் இருந்தது சிவன் கோவில்; பின்னர் பகவதி சிலையும் வந்தது என்பார்கள்.
இங்கு தமிழ்நாட்டில் நடக்கும் காமன் பண்டிகை போலவே ஆபாச பாடல்களுடன் நடந்து வந்த பரணி விழாவில் இப்போது ஆபாச அம்சங்கள் தடை செய்யப்பட்டுவிட்டன .
அதே போல ஏராளமான கோழிகளைப் பலியிட்டு வந்ததும் தடுக்கப்பட்டுவிட்டன.
கோவில் வரலாறு
சிவன் கோவில் உள்ள திருவஞ்சிக்குளம் அருகில் உள்ளது; இதைத்தான் கிரேக்கர்கள் முசிரிஸ் என்று அழைத்த னராம் . ஆங்கிலத்தில் கிராங்கனூர் Cranganore என்றே எழுதுவார்கள். ஆயினும் சேரர் தலைநகர் வஞ்சி என்பது கரூர் என்று பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி போன்றோர் எழுதியதையும் மறந்துவிடக்கூடாது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் முசிரிஸ், வஞ்சி, கொடுங்கல்லூர் , திருச்செங்குன்றூர் , கண்ணகி கோவில் என்பதெல்லாம் முடிவில்லா வாதப் பிரதிவாதங்களில் சிக்கித் தவி க்கின்றன.
கொடுங்கல்லூர் பகவதி தோற்றம்
இங்கு சிவன் சந்நிதி கிழக்கு நோக்கியும் காளி ரூபத்திலுள்ள பகவதி வடக்கு நோக்கியும் உள்ளன. கேரள கோவில்களில் பக்தர்கள் அமரும் மேடையும் மண்டபமும் சிவனுக்கு முன்னால் இருப்பதால் அதுதான் முதல் கோவில் என்பது ஒரு கருத்து. மேலும் இதை உறுதி செய்யும் வகையில் முதல் அபிஷேகமும் நைவேத்தியமும் சிவ பெருமானுக்கே செய்கின்றனர்.
குரம்ப காவு என்பது கோவிலின் வட்டாரப் பெயர்.
தேவியின் உயரம் 6 அடி ; அவளுக்கு 8 கரங்கள்.இந்த உருவம் பலா மரத்தால் செய்யப்பட்டது; எட்டு கரங்களிலும் ஆயுதங்கள்; உடல் முழுதும் தங்க, இரத்தின நகைகள் தேவியை அலங்கரிக்கின்றன.அமர்ந்த நிலையில் உள்ள தேவியின் உருவம் அச்சத்தையும் பக்தியையும் ஒருங்கே தோற்றுவிக்கும்.
ஒரு கதை
தாருகன் என்ற அசுரனையும் அவனது கும்பலையும் தேவி அழித்தாள் ;
இது பற்றிய கதை பின்வருமாறு
அசுர அணியில் தனமதி , தாருமதி என்ற இரண்டு பெண்மணிகள் மட்டும் எஞ்சினர்; அவர்கள் வம்சம் தழைக்க பிரம்மாவின் அருளை வேண்டவே அவர் கயிலாயம் செல்லும்படி கட்டளையிட்டார் இரு பெண்களும் சிவ லோகத்தில் இருந்த இருவரை மணந்து காரகன் , தாருகன் என்ற இருவரைப் பெற்றனர். அவர்களில் தாருகன் பெண்களைத் தவிர வேறு எவரும் கொல்ல முடியாத வரத்தை வாங்கிக்கொண்டான்.
தாருகன் ஆணவம் பெருகவே, அவனை ஒடுக்க 6 தேவிகள் படைக்கப்பட்டனர் . அவர்களுடன் சிவன் நெற்றிக் கண்ணில் உதித்த காளி / பகவதியும் சேர்ந்து தாருகனை அழித்தார்கள். தற்போது கர்ப்பகிரகம் அருகில் சப்த மாத்ரிகா உருவங்கள் 4 கைகளுடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்கள் .
ரகசிய அறை
இந்தக் கோவிலுக்கு சிறப்பூட்டும் இன்னும் ஒரு அம்சம் ரகசிய அறைSECRET CHAMBER ஆகும். இங்கு ஒரு அறையும் அதன் கீழ் சுரங்கமும் உள்ளன. அதைக் கருங்கல் சுவர், கூரை மூலம் பாதுகாக்கின்றனர் ; சுரங்கப் பாதையின் முடிவு 100 கஜ தூரத்தில் முடிவடைகிறது அந்த இடத்தையும் கருங்கல் பலகைகளால் மூடியுள்ளனர். யானைகள் அணிவகுப்பு வரும்போதும் கூட இதைத்தாண்டிச் செல்லாமல் திரும்பிவிடும். நிலத்தடி அறைக்கு சேதம் ஏற்படாமலிருக்க இப்படிச் செய்கிறார்கள் இது இறந்தோர் புதைக்கப்பட்ட பெருங் கற்காலச் சின்னம் என்பது சிலர் கருத்து . உள்ளே மந்திர சக்கரங்கள் இருப்பதாக மேலும் சிலர் கூறுவார்கள் .
கோவிலைக் காக்கும் க்ஷேத்ர பாலர் உருவம் 12 அடி உயரம் கொண்டது இது தவிர நோய் தீர்க்கும் வைசூரிமாலை சிலையும் இருக்கிறது; ஒவ்வொரு சிலை பற்றியும் கதைகள் இருக்கின்றன.
XXXX
இரண்டு திருவிழாக்கள்
தால பொலி , பரணி ஆகிய இரண்டு திருவிழாக்களும் மிகவும் பிரபலமானவை .
தால பொலி திருவிழா மகர சங்கராந்தி அன்று துவங்கி 4 நாட்களுக்கு நடக்கும் ஜனவரியில் நடக்கும் இந்த விழா தமிழ் நாட்டின் பொங்கல் பண்டிகை போன்றதே ; போகிப் பண்டிகையில் இந்துக்கள் பழையானவற்றை எரிப்பது போல எரிப்பார்கள்; புத்தரிசியை இறைவனுக்குப் படைப்பார்கள்
மகர சங்கராந்தி அன்று, கொங்கணி பேசும் குடுமி ஜாதியினர் ஒன்று கூடி வாண வேடிக்கைகளுடன் 4 நாள் விழாவினைத் தொடங்குவர். பின்னர் ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் யானை ஊரவலங்கள் நடக்கும்
அரை கி.மீ தொலைவிலுள்ள குரும்பயம்மா கோவிலில் துவங்கும் ஊர்வலத்தில் தாலம் (தட்டு) ஏந்தி பெண்கள் வருவர். ஒரு யானையின் மீது குடை ஏந்திய தாலம் /தட்டு இருக்கும் .
திகைப்பூட்டும் பரணி விழா
பிப்ரவரி- மார்ச்சில் நடக்கும் பரணி திருவிழா மூலமாகத்தான் இந்தக் கோவில் பிரசித்தமானது. இதே காலத்தில் வடக்கில் ஹோலி பண்டிகை, தமிழ் நாட்டில் காமன் பண்டிகைகள் நடக்கின்றன ; தமிழ் நாட்டில் காமன் பண்டிகையின்போது காம சம்பந்தமான நடனங்கள் ஆடல், பாடல்கள் நடக்கும்; இறுதியில் சிவன் எல்லோருடைய காம வெறியை அடக்க மன்மதனை எரிப்பார் .. அது போல இங்கும் பரணி விழாவில் பலர் குடிபோதையில் கும்மாளம் அடித்து காமக் காட்சிகளை அரங்கேற்றுவர் ; இப்பொழுது இந்துக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டு இவைகளை அடக்கிவிட்டனர்; அதே போல எண்ணற்ற கோழிகளை பலியிடுவதும் தடுக்கப்பட்டுவிட்டன இது சம்பந்தமான சடங்குகள் மிகவும் விரிவானவை. பலிகளுக்கு மறுநாள் கோவில் சுத்தம் செய்யப்பட்டவுடன் நம்பூதிரிகள் மீண்டும் கோவிலுக்குள் வருவார்கள்.
பரணி விழாவில் பழங்குடி மக்களும் கலந்துகொண்டு மஞ்சள் உடை அணிந்து மஞ்சள் பொடி பூசி ஊர்வலமாகச் செல்லுவார்கள் . இடுப்பில் மணிகள் கட்டிய பெரிய பெல்ட்டுகள் இருக்கும். கையில் வாளேந்தி தலை முடியை பறக்கவிட்டு ஆக்ரோஷமாக வருவார்கள்.; வெளிச்சப்பாடு என்னும் ஆருடங்களை சிலர் மொழிவர் ; தேவியின் மீது தங்களுக்குள்ள அசைக்க முடியாத பக்தியைக் காட்ட, பலரும் வாளால் நெற்றியில் காயம் ஏற்படுத்தி ரத்தத்தை தேவிக்கு அர்ப்பணிப்பார்கள்.லட்சக் கணக்கானோர் விழாக் காலங்களில் இங்கே கூடுவர்; இந்தக் காட்சிகளைக் காண்போர் வியப்பிலும் பிரமிப்பிலும் திகைப்பிலும் மூழ்கிவிடுவார்கள்
–subham—
Tags- பரணி விழா, தாலப்பொலி , கொடுங்கல்லூர், பகவதி, கண்ணகி , கோவில்,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தேவாரச் செல்வம்
அப்பர் கூறும் நரிவிருத்தக் கதை!
ச.நாகராஜன்
அப்பர் பிரான் சிறந்த உவமைகள் மூலமும் கதைகள் மூலமும் ஆன்மீக உயர் சிந்தனைகளைத் தருபவர்.
ஐந்தாம் திருமுறையில் அவர் பாடிய ஆதிபுராணத்
திருக்குறுந்தொகையில் ‘வேதநாயகன்’ என்று தொடங்கும் திருப்பதிகத்தில் ஏழாவது பாடலாக அமைகிறது இந்தப் பாடல்:
எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன
துருவ ருக்கம தாவ துணர்கிலார்
அரிய யற்கரி யானை அயர்த்துப்போய்
நரிவி ருத்தம தாகுவர் நாடரே
எரி என்பது வேள்வித் தீ. இறைவனது அட்டமூர்த்த வர்க்கங்களில் தீயும் ஒன்று.
வேள்விகளில் அக்கினி வளர்ப்பார்கள். அந்த அக்கினி இறைவன் திருமேனி வகையாவது என்பதை உணராதவர்கள் அல்லது உணரும் ஆற்றல் இல்லாதவர்கள் திருமாலுக்கும் பிரமனுக்கும் அரிய கடவுளான சிவபிரானைக் காண்பதற்கு அயர்த்து நரி விருத்தம் ஆகுவர்.
அது என்ன நரிவிருத்தம்?
இதில் தான் அப்பர் ஒரு கதையையே விதைக்கிறார்.
கதையோ பழம் பெரும் கதை!
காட்டில் வேடன் ஒருவன் யானையைக் கொல்ல ஒரு அம்பை எய்து விட்டு மற்றொரு அம்பை வில்லில் பூட்டிக் கொண்டிருந்தான். அந்த வேளையில் பாம்பு ஒன்று அவனைக் கடித்தது. தன்னைக் கடித்த பாம்பை அவன் வாளால் வெட்டிக் கொன்றான். அதே நேரத்தில் பாம்பு விஷம் ஏற அவனும் மூர்ச்சித்து கீழே விழுந்து இறந்தான். ஒரே நேரத்தில் யானையும் பாம்பும் இறந்தன. அதே நேரத்தில் வேடனும் இறந்தான்.
நரி ஒன்று அவ்வழியே வந்தது. நடந்தைப் பார்த்த நரிக்கு அளவற்ற மகிழ்ச்சி. ஒரே நேரத்தில் இறந்து கிடந்த யானை, வேடன்,பாம்பு!
யானையின் உடல் ஆறு மாதத்திற்கு உணவாகும்.
வேடனின் உடல் ஒரு வாரத்திற்கு உணவாகும்.
பாம்பு ஒரு நாளைக்கு உணவாகும்.
இப்படி எண்ணிய நரி, இப்போதைய பசிக்கு இந்த வேடனின் கையில் உள்ள வில்லில் உள்ள நரம்பாலாகிய நாண் போதும்; அதைக் கடித்துச் சுவைத்து உண்ணலாம் என்ற எண்ணத்துடன் வில்லில் பூட்டியிருந்த நாணை ஆவலோடு கடித்தது. உடனே வில்லில் இழுத்துக் கட்டப்பட்டிருந்த நாண் அறுந்து வில் திடீரென நிமிர்ந்த வேகத்தில் நரியின் வாயைக் கிழித்தது. நரியும் இறந்தது. அதன் எண்ணக் கோட்டைகள் தகர்ந்தன.
ஒவ்வொரு மனிதனும் மனதில் பல கோட்டைகள் கட்டுகிறான். ஒன்று நினைக்க ஒன்றாக முடிகிறது.
பழங்காலத்திலிருந்து இந்தக் கதை வழங்கி வருகிறது.
இந்தக் கதையை அப்பர் இங்கு நன்கு கூறி ஒரு அரிய உண்மையை விளக்குகிறார்.
இதே கதையை திருத்தக்கதேவரும் ஒரு விருத்தப் பாடலால் பின்னால் பாடியுள்ளார்.
திருவதிகை வீரட்டானத்தில் இன்னொரு பாடலிலும் நரியை அவர் உவமையாகக் கூறுகிறார்.
நரி வரால் கவ்வ சென்று நல் தசை இழந்தது ஒத்த
தெரிவரால் மால் கொள் சிந்தை தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார் வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி அரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகைவீரட்டனாரே
நரி ஒன்று வாயில் கவ்விய ஊனுடன் ஒரு நீர் நிலையைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு வரால் மீனைக் கண்டது. உடனே பேராசை கொண்டது. அதைக் கவ்வ விரும்பிய அது தனது வாயில் இருந்த ஊனையும் இழந்தது. அது போல மக்கள் கிட்டாத பொருள் செல்வத்திற்கு ஆசைப்பட்டு எளிதில் கிடைக்காத சிவச் செல்வத்தை – சிவ பக்தியை இழந்து விடுகின்றனர். சிவபிரான் அத்தகையோருக்கும் அருள் புரிவார்.
எரியினாரிரையார் என்ற பாடலில் ‘நரியினார் பரியா மகிழ்கின்றதோர் பெரியனார்’ என்று நரியினைப் பரியாக்கி மகிழும் பெரியவர் என்று மாணிக்கவாசகரைக் கூறுகிறார் அவர். (திருவீழிமலை – கரைந்து எனத் தொடங்கும் பதிகம்)
நரி பிரியாததோர் சுடலையானை என்று நரிகள் சூழ்ந்திருக்கும் சுடுகாட்டில் இருப்பவன் என்று சிவபிரானை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். (தொழற்பாலதே என்னும் திருக்குறுந்தொகையில் விடலையானை எனத் தொடங்கும் பாடலில் காண்க)
நரியை வைத்து அப்பர் நமக்குக் கூறும் கதையும் உவமையும் சுவை படைத்தவை என்பதில் ஐயமில்லை.