நிறைகுடம் தளும்பாது! (Post No.12,792)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,792

Date uploaded in London –  –  3 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

நிறைகுடம் தளும்பாது!

ச.நாகராஜன் 

நிறைகுடம் தளும்பாது! 

நிறைகுடம் தளும்பாது. ஆனால் அரைகுறையாக நிரப்பப்பட்ட குடமோ கடகடவென சத்தமிட்டுக் கொண்டே இருக்கும்.

இது எதைக் குறிக்கிறது. நன்கு படித்த ஒருவன் அதிகம் படிக்காதவரைப் பார்த்து கர்வப்பட மாட்டான். ஆனால் அரைகுறையாகப் படித்தவனோ தன்னைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்வான். (தனக்குத் தெரியாததே இல்லை என்பான்.)

சம்பூர்ண கும்போ ந கரோதி சப்தமர்தோ கடோ

கோஷமுபைதி நூனம் |

வித்வான்குலீனோ ந கரோதி கர்வம்

குணைர்விஹீனா  பஹூ ஜல்பயந்தி ||

பாம்பைக் காட்டிலும் கொடியவன் வில்லன்! 

ஒரு அழகிய சுபாஷிதம். பாம்பையும் வில்லனையும் ஒப்பிடுகிறது.

பாம்பு கொடியது. வில்லனும் கொடியவன். ஆனால் வில்லனோ பாம்பை விட சற்று அதிகம் கொடியவன். எப்படி? பாம்போ ஒருவனை மட்டுமே கொல்கிறது. ஆனால் வில்லனோ அநேகம் பேரைக் கொல்கிறான்.

இதை விளக்கும் சுபாஷித ஸ்லோகம் இது:

சர்ப: க்ரூர: கல: க்ரூர: சர்பாத் க்ரூரதர: கல: |

சர்ப ஏகாகினம் ஹந்தி கல: சர்வவிசாஷக: ||

வீடு வீடாவது இல்லத்தரசியாலேயே!

 ஒரு வீடை வீடு என்று எப்போது சொல்ல முடியும். அது வெறும் கட்டிடமாக இருக்கும் போது அதை வீடு என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த வீட்டில் இருக்கும் இல்லத்தரசியே அதை வீடாக ஆக்குகிறாள். அப்படி ஒரு இல்லத்தரசி இல்லாத வீடு காட்டிற்குச் சமானம்.

ந க்ருஹம் க்ருஹமித்யாஹ்ர்க்ருஹிணி க்ருஹமுச்யதே |

க்ருஹம் து க்ருஹிணிஹீனம் காந்தாரமிதி மன்யதே ||

வளத்திற்கான எரிபொருள்கள் ஏழு

 வளத்தை ஊக்குவிக்கும் எரிபொருள்கள் ஏழு.

அவையாவன : 1) உறுதி 2) பொறுமை 3) தயை 4) சுத்தம் 5) காருண்யம் 6) மிருதுவான பேச்சு 7) நண்பர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருக்கும் தன்மை

இந்த ஏழும் வளத்தை ஊக்குவிக்கும் எரிபொருள்களாகும்.

த்ருதி: க்ஷமா தயா சௌசம் காருண்யம் வாக்நிஷ்டூரா |

மித்ராணாம் சானபித்ரோஹ: சப்தைதா: சமித: ச்ரிய: ||

 மனிதனை உயர்த்தும் எட்டு குணங்கள் 

மனிதர்களின் குணாதிசயத்தை உயர்த்த எட்டு குணங்கள் உள்ளன.

அவையாவன: அறிவு, உயர்ந்த குலம், கட்டுப்பாடு, கல்வி, வீரம்,

வார்த்தையில் கட்டுப்பாடு, தனது தகுதிக்குத் தக்கபடி தானம், நன்றி.

ஆக இந்த எட்டுக் குணங்கள் இருந்தால் ஒரு மனிதன் உயர்ந்தவனாக ஆகி விடலாம்.

 அஷ்டௌ குணா: புருஷம் தீபயந்தி ப்ரக்ஞா ச

கௌல்யம் ச தப:  ச்ருதம் ச |

பராக்ரமச்சாபஹுபாஷிதா ச தானம் யதாசக்தி

க்ருதக்ஞதா ச ||

ரகசியமாகக் காக்க வேண்டிய விஷயங்கள் ஒன்பது

 ஆயுர்வித்தம் க்ருஹசித்ரம் ரஹஸ்யம் மந்த்ரமோஷதம் |

தபோ தானாவமானௌ ச நவ கோப்யானி காரயேத் ||

ஒன்பது விஷயங்களை ஒருவன் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவையாவன : 1) ஒருவனின் ஆயுள் 2) செல்வம் 3) வீட்டின் நிலைமை (ஏதேனும் சொல்லக்கூடியதாக இல்லாமல் இருந்தால் சொல்லக் கூடாது) 4) ரகசியம் 5) மந்த்ர (உபதேசம்)

6) மருந்து (எடுத்துக் கொள்ளும் சிகிச்சை மற்றும் மருந்து) 7) தவம் 8) தானம் 9) தான் பட்ட அவமானம்

***

Gandhiji on Temple Visits and Women (Post No.12,791)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,791

Date uploaded in London – –  –  2 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Kottayam , 19-1-1937

Speaking in Hindi Gandhiji said,

I am delighted to address for the first time in during my pilgrimage a women’s meeting. I should therefore have given you much longer time and tried to make fuller acquaintance  of you who have gathered together in such a large number, and , where for the first time a sister has made her reception speech in Hindi. I thank you both for the welcome and for the Hindi address.

I have often said that untouchability is a great blot on Hinduism and it threatened the very life of Hinduism. The Proclamation (allowing all Hindus into temples) has come in very good time to enable us to wipe out the blot. But by itself it cannot do so. The Maharajah’s work was finished with the proclamation. It is for you to root out untouchability by carrying the proclamation in full effect. This work of carrying through the process of purification devolves principally on Savarna Hindus (caste Hindus). I have often said that it is women alone who can be protectors of religion inasmuch as they are the custodians of the purity of the people. It is particularly women’s work, because the purification of religion is ultimately a matter purification of ones heart.

Gandhiji took inspiration from the fact that Travancore Maharaj goes to the Thiruvananthapuram Anatha Padmanabha Swami temple before leaving the state and comes to the temple on return, before taking up his work again.

Gandhiji praised King Marthanda Varma and said that the idea  of dedication did not originate with Marthanda Varma. Lithic records show as early as 14th century the Maharajhs of Travancore called themselves,

Shri Padmanabha- Padakamala- Paramaradhaks.

Padmanabadas is only a beautiful abbreviation of this older appellation.

xxxx

Gandhiji after returning from Travancore answered a believer in an interview,

“I certainly left Travancore with spiritual treasures that I had newly discovered. For what I saw there was beyond my expectations and more than delighted my hear . the temples gave me a loftier and nobler idea of temples and temple worship. I had visited temples before in North India but I had not done so in devout spirit, and they had failed to stir me. But the majestic Travancore temples spoke to me. Every carving, every little image, every little oil lamp had a meaning for me. But that does not mean that I am satisfied with everything. I put my revolutionary plan before His Highness in my last speech, for I took upon the Proclamation itself as revolutionary”.

xxx

Temples  – Link with Gods (13-1-1937 Trivandrum Speech)

I must mention what I saw  at the great Padmanabha Temple. It will perhaps best illustrate what I am saying about the purely religious and spiritual revival. In the days of my youth, I went to many temples with the faith and devotion with which my parents had fired me. I have refrained from going to temples unless they were opened to everyone called untouchables.

In the Trivandrum temple there were thousands awaiting arrival of my party . but there was no noise no bustle. Untouchables of yesterday were in the silent concourse, perhaps equal numbers. I could not distinguish between the two. All had almost the same caste marks on their bodies, all had the same kind of garments.

Priest was interpreting each figure in his own choice. But without giving me that particular interpretation he made me realise that these temples were so many bridges between the Unseen,, Invisible and Indefinable God and ourselves who were infinitesimal drops in the Infinite Ocean. we the human family are not all philosophers we are of the earth very earthy, and we have not satisfied with contemplating on the Invisible God. Somehow or other we want something which we want to touch, something which we can see, something before which we can kneel down. It does not matter whether it is a book , or an empty stone building or a stone building inhabited  by numerous figures. A book will satisfy some, an empty building will satisfy some, an empty building will satisfy others and many others will not be satisfied unless they see something inhabiting these empty buildings. Then I ask you to approach these temples not as if they represented a body of superstitions. If you will approach these temples with faith in them, you will know each time you visit them you will come away from them purified, and with faith more and more in the living god.

In another address Gandhiji said that he had never visited so many temples in his life. It was a pilgrimage.

–subham—

Tags- Temples, women, link with gods, untouchability , abolished, Kerala

வைணவ திருச்செங்குன்றூர், திருப்புலியூர் கோவில்கள் -21 (Post.12,790)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,790

Date uploaded in London – –  –  2 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx 

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 21

PICTURES ARE TAKEN  FROM WEBSITES; THANKS FOR UR GREAT PICTURES.

கோவில் எண்கள்- 20, 21

திருப்புலியூர்,  திருச்செங்குன்றூர் கோவில்கள் 

மலை நாட்டு 13 விஷ்ணு தலங்களில் திருப்புலியூரும் திருச்செங்குன்றூரும் பாடல் பெற்ற (மங்களாசாசனம் செய்த) தலங்கள் ஆகும்.

108 வைணவ தலங்களில் ஒன்று

செங்கன்னூர்தான்  திருச்செங்குன்றூர் என்ற கருத்தும் உள்ளது. ஆயினும் வைணவ நூல்களில் காணப்படும் விஷயங்கள் பெருமாளைப் பற்றி மட்டுமே பேசுகின்றன; கண்ணகியோ பகவதியோ, சிவனோ அங்கு பேசப்படுவதில்லை.

திருவல்லாவிலிருந்து 10 கிலோ மீட்டர் .

திருச்செங்குன்றூர்  சிறப்புகள்

திருச் சிற்றாறு என்ற பெயரும் உண்டு .

மூலவர் – இமையவரப்பன், நின்ற திருக்கோலம்,மேற்கே திருமுக மண்டலம்

தாயார்- செங்கமலவல்லி

தீர்த்தம் – சங்க தீர்த்தம் , திருச் சிற்றாறு

விமானம் – ஜகஜ்ஜோதி விமானம்

ப்ரத்தியட்சம் ஆனது – ருத்த்ரன்/ சிவன் முன்னால் .

நான்கு அடி உயர பெருமாளின் நான்கு கைகளில் சங்கு, சக்கரம், தாமரை உளது; ஒரு கையில் ஒன்றும் இல்லை.

திருவோணம், வைகுண்ட ஏகாதசி ஆகியன முக்கிய பண்டிகைகளாக கொண்டாடப்படுகின்றன .

கேரள பாணியில் அமைந்த கோவில் இது.

கோவிலின் பிற சந்நிதிகளில் சாஸ்தா, நாகர், யக்ஷி, பகவதி ஆகியோரை தரிசிக்கலாம்

கோவிலில் பிற்கால சேர மன்னர் கல்வெட்டு உளது

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாடிய 108 திருப்பதி அந்தாதியிலும் இந்த ஸ்தலம் இடம்பெறுகிறது .

கோவிலின் தோற்றம்

இதை தர்மபுத்திரர் பிரபலப்படுத்தியதாக ஐதீகம் . தருமன், மஹாபாரத யுத்தத்தில் , ஒரு பொய் சொன்னார்; கிருஷ்ணன் சொன்னபடி, அஸ்வத்தாமா ஹதஹ என்று உரத்த குரலில் சொல்லிவிட்டு, குஞ்சரஹ (யானை) என்பதை தாழ்ந்த குரலில் சொன்னார். உண்மையில் அஸ்வத்தாமா என்ற பெயர் யானைக்கும் உண்டு; துரோணர் மகனுக்கும் அதே பெயர்; மகன் மீது பேரன்பு கொண்ட துரோணருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு வில்லைக் கீழே போட்டார் ; தர்மன், அந்த பிராமணனைக் கொன்றார். இது தர்மரின் மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. ஆகையால் வனவாச காலத்தில் இங்கு வந்து ஆலயத்துக்கு திருப்பணி செய்து , நதியில் குளித்து பூஜைகளையும் செய்தார் என்பது நம்பிக்கை.

பெருமாளை  தேவாதி தேவன் என்பர்; அதாவது கண் இமைக்காத தேவர்களுக்கு இறைவன் என்பதால் இமையவர் அப்பன் என்று பெருமாளுக்குத் திருநாமம்.

நம்மாழ்வார் பாடிய கோவில் என்பதால் இது 1200 ஆண்டுகளுக்கு முன்னரே புகழ்பெற்று விளங்கியதை அறிய முடிகிறது

கேரளத்தில் செங்கன்னூரிலும் அருகிலும் நிறைய புகழ்பெற்ற கோவில்கள் இருப்பதால் அது புண்யபூமி என்பதை விளக்கத் தேவை இல்லை .

நம்மாழ்வார் பாடிய பாசுரத்திலிருந்து சில பாடல்கள்

3596.  

வார்கடா அருவி யானை மாமலையின்*  மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி*

ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து*  அரங்கின்  மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*

போர்கடா அரசர் புறக்கிட*  மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த*

சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே 

3597.  

எங்கள் செல்சார்வு யாமுடைஅமுதம்*   இமையவர் அப்பன் என்அப்பன்*

பொங்குமூவுலகும் படைத்துஅளித்துஅழிக்கும்*   பொருந்துமூவுருவன் எம்அருவன்*

செங்கயல் உகளும் தேம்பணைபுடைசூழ்*   திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு

அங்கு அமர்கின்ற*  ஆதியான் அல்லால்*   யாவர்மற்றுஎன்அமர் துணையே? 

3605.  

அமர்ந்த நாதனை அவர்அவர்ஆகி*  அவர்க்குஅருள் அருளும் அம்மானை*

அமர்ந்ததண்பழனத் திருச்செங்குன்றூரில்*  திருச்சிற்றாற்றங்கரையானை*

அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள்*   தம்பதி அவனிதேவர் வாழ்வு*

அமர்ந்தமாயோனை முக்கண்அம்மானை*   நான்முகனை அமர்ந்தேனே.

XXXX

திருப்புலியூர்

குட்ட நாட்டில் உள்ள தலம்

செங்கன்னூரிலிருந்து 5 கிலோமீட்டர்.

108 வைணவ தலங்களில் ஒன்று

நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் பாடிப்பரவிய (மங்களாசாசனம் செய்த) கோவில் இது.

மூலவர் – மாயப்பிரான் , நின்ற திருக்கோலம், கிழக்கு நோக்கிய கர்ப்பக்கிரகம்

தாயார் – பொற்கொடி  நாச்சியார் (ஸ்வர்ணலதா என்பதன் அருமையான தமிழ் மொழிபெயர்ப்பு)

தீர்த்தம் – பூஞ்சுனை தீர்த்தம், ப்ராக்ஞா சரஸ்

விமானம் – புருஷோத்தம விமானம்

பிரத்தியட்ச மானது – சப்த ரிஷிகள் முன்னால்

கோவிலின் வரலாறு

கேரளத்தில் உள்ள ஐந்து தலங்கள் பஞ்ச (5) பாண்டவர்களால்  திருப்பணி செய்யப்பட்டதை அறிகிறோம். அவ்வகையில் இது பீம சேனனால் திருப்பணி செய்யப்பட இடம் ஆகும்.

சிபி என்ற மன்னனின் மகன் பெயரை விருஷாதர்பி.அவன் அரசா ண்டபோது  பஞ்சம் ஏற்பட்டது அப்போது அங்கு வந்த சப்த ரிஷிகளுக்கு அவன் தானம் செய்ய வந்த போது அவர்கள் அதை ஏற்க மறுத்தனர். கோணல் புத்திகொண்ட மந்திரிகள் , பழங்களுக்குள் தங்க காசுகளை வைத்து ரிஷிகளிடம் கொடுக்க, அதை ரிஷிகள் ஞான திருஷ்டியால் அறிந்தனர். அவர்கள் அதை ஏற்கவில்லை.

பின்னர் மன்னன் ஒரு யாகம் செய்து க்ருத்யை என்ற மாயப்பெண்ணை உண்டாக்கி முனிவர்களை அழிக்க ஏவினான். அவர்களை இந்திரன் புலி உருவத்தில் வந்து  வீழ்த்தினான் . அப்போது 7  ரிஷிகளும் இறைவனைப் பாடித் துதித்தனர்  நாராயணனும் மாயப்பிரானாக வந்து காட்சி கொடுத்தார்.

xxxx

மங்களா சாசனம் – நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்

3651.  

கருமாணிக்க மலைமேல்*  மணித்தடம் தாமரைக் காடுகள்போல்*

திருமார்வு வாய்கண்கை*  உந்திகால்உடை  ஆடைகள் செய்யபிரான்*

திருமால் எம்மான் செழுநீர்வயல்*  குட்டநாட்டுத் திருப்புலியூர்*

அருமாயன் பேர்அன்றிப் பேச்சுஇலள்*  அன்னைமீர்!  இதற்கு என்செய்கேனோ.   (2)

3661.  

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்*  நாயகன் தன்அடிமை*

நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்*  தொண்டன் சடகோபன் சொல்*

நேர்பட்ட தமிழ்மாலை*  ஆயிரத்துள் இவை பத்தும்

நேர்பட்டார்*  அவர் நேர்பட்டார்*  நெடுமாற்கு அடிமை செய்யவே.   (2)

—சுபம்—

TAGS -கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 21திருப்புலியூர் திருச்செங்குன்றூர்  , கோவில்கள் , தர்மன், பீமன், திருப்பணி

S Nagarajan’s November 2023 Articles Index (Post No.12,789)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,789

Date uploaded in London –  –  2 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

SNR Article Index : NOVEMBER  2023

NOVEMBER  2023

1-11-23 12661 சமநீதி பேசி சனாதனத்தை ஒழிப்பேன் என்னும்

                         அரசியல்வாதிகள் அறிவார்களா?                                                           2-11-23 12664  ஆர்டிகிள் 370 என்ன சொல்கிறது?                                                          3-11-23 12668  புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய

            இராமாயணம் – அயோத்தியா காண்டம் – கம்பர்- பாகம் 2 4-11-23 12671 புத்தக அறிமுகம் : ஆர் சேஷாத்ரிநாதன் எழுதிய

                            அயோத்தியா காண்டம் -கம்பர் – பாகம் 3                                                

5-11-23 12674 சம்ஸ்கிருத மொழியின் பெருமை! – 1.                                               6-11-23 12677 SNR Article Index : OCTOBER  2023                                                         7-11-23 12681 நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம்            8 -11-2312686  இரண்டாம் உலகப் போர் – யுத்தத் துளிகள்! –  அத்தியாயம்         17 – ஹிட்லர் அழைத்த விஸ்வநாத சாஸ்திரி!                         9-11-23 12690 சுபாஷித செல்வம் – விதி குறி வைத்து விட்டால் விடாது!̀̀̀̀ 10-11-23 12693 30 நிமிடத்தில் மூட்டையைக் கட்டு! மோடிஜியின் அதிரடி நடவடிக்கை! `                                                                                                               11-11-23 12699 இதுபோல் ஏதொரு நாள் புவி மேலே! (முதல் பகுதி)   மாலைமலர்  இதழில் 10-11-23 அன்று வெளியான கட்டுரை           12-11-23 12703 இதுபோல் ஏதொரு நாள் புவி மேலே! (இரண்டாம் பகுதி)   மாலைமலர்  இதழில் 10-11-23 அன்று வெளியான கட்டுரை             13-11-23 12709 புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்யா காண்டம்- வால்மீகி – பாகம்-1          

14-11-23 12714 நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 10 – 

             சிறுவனின் தர்மம்!                                     15-11-23 12718 பாவசுத்தி: பராத் பரம்! – சுபாஷித செல்வம்                         16-11-23 12722 ஆயுர்வேதம் : வாழ்க்கைக்குத் தேவையான ஒரு அறிவு!                   –              ஹெல்த்கேர் நவம்பர் 2023 இதழில் வெளியாகியுள்ள  –  –              கட்டுரை.                                               17-11-23 12727 Forgotten Arts of India!                                                                                             18-11-23 12731 பவணந்தி முனிவரை நன்னூல் இயற்ற வேண்டிய சீயகங்கன்! – கொங்குமண்டல சதகம் பாடல் 46                                                  19-11-23 12735 சோழனை விரட்டிய வாலிப வீரன் மன்றாடி! –     கொங்குமண்டல சதகம் பாடல் 57                                                                                 20-11-23 12739 கொங்குப் புலவர் சபை! – கொங்குமண்டல சதகம்

                             பாடல் 31     

21-11-23 12744 விதியை வெல்ல முடியாது என்றாலும் முயற்சியும்   

                                தேவையே!  – சுபாஷிதம்                                 22-11-23 12748 நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 11 

23-11-23 12752 எங்கும் நிறைந்திருக்கும் ஶ்ரீ சத்யசாயிபாபா !                             24-11-23 12759 தவம் நிதம் நோற்கும், அவநிதன் முதலிய அரசர் ஆளும்     கொங்கு மண்டலம்! – கொங்குமண்டல சதகம் பாடல் 100                            25-11-23 12760  கீர்த்தி மிக்க திருக்கார்த்திகை தீபம்! முதல் பகுதி – மாலைமலர்  22-11-2023      இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.                                       26-11-23 12765 கீர்த்தி மிக்க திருக்கார்த்திகை தீபம்! இரண்டாம் பகுதி  –     மாலைமலர்  22-11-2023      இதழில் வெளியாகியுள்ள கட்டுரை                          27-11-23 12770  அதீத உளவியலும் அதிசயங்கள் கண்ட அறிஞர்களும்! – 1   – இமானுவேல் ஸ்வீடன்பர்க்                                                                                  28-11-23 12773 ஆதி சங்கரரின் 108 அடி உயரமுள்ள சிலை திறப்பு!             29-11-23 12777  அஹிம்சையே உயர்ந்த தர்மம்! – ஒரு வரி சுபாஷிதங்கள் 30-11-23 12781 கொங்குமண்டல சதகம் – முதல் ஐந்து பாடல்கள்

***

டில்லி கோவில் அதிசயம்: பாதரசம் தங்கம் ஆனது!(Post No.12,788)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,788

Date uploaded in London – –  –  1 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

செம்பு பொன்னாகும் சிவாயநம வெனில்

செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்

செம்பு பொன்னாகும் ஸ்ரீயும் கிரியும் எனச்

செம்பு பொன்னான திருவம்பலவே.

-திருமூலர்

உலகெங்கிலும் ரசவாத ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இரும்பையும் ஈயத்தையும் தங்கமாக மாற்ற முடியுமா என்று சென்ற நூற்றாண்ட்டில்  பிரபல விஞ்ஞானிகள் ரகசியமாக ஆராய்ச்சி செய்துவந்தனர். தமிழ் சித்தர்களும், சைவ அடியார்களும் இது பற்றி  நிறைய பாடியுள்ளனர்.

தற்கால விஞ்ஞானிகள்  கூற்றுப்படி ஈயத்தையோ இரும்பையோ தங்கமாக மாற்ற முடியாது. யுரேனியம் போ ன்ற கதிரியக்க மூலகங்கள் மட்டும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் வேறு வேறு மூலகமாக மாறி ஈயத்தில் முடியும்.

சூப்பர் நோவா போன்ற நட்சத்திரங்களில் மூலகங்கள் உருவாகின்றன என்பது அவர்களின் கண்டுபிடிப்பு. இதற்கு கற்பனைக்கெட்டாத வெப்பமும் அணுப்பிளப்பும் அவசியம். பூமியில் அதைச் செய்யமுடியாது என்பது அவர்கள் கருத்து.

இந்துக்கள் இந்த விஷயத்தில் எல்லோரையும் முந்திவிட்டனர். ரஷ்ய விஞ்ஞானி மெண்டலிவ்   Periodic Table மூலக அட்டவணை வெளியிட்ட பின்னர்தான் மெர்குரி mercury என்னும் பாதரசமும்  தங்கமும் அடுத்தடுத்த அணு  எண் உடைய மூலகங்கள் என்பது  உலகிற்குத் தெரியும். ஆனால் இந்துக்கள் இதை ஞான திருஷ்டியில் கண்டுபிடித்து ரசவாத நூல்களில் பாதரசத்தையே அதிகம் குறிப்பிடுகின்றனர். நாகார்ஜுனர் என்னும் புத்தமத  துறவி 2800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கனாதர் ஆகியோர் இதில் வல்லவர்கள். கெளடில்யர் ஈழுதிய அர்த்த சாஸ்திர நூலும் இதைக் குறிப்பிடுகிறது . துரதிருஷ்ட வசமாக அவ்வளவு ரசவாத நூல்களும் அழிந்துவிட்டன. நூல்களின் பட்டியல் மட்டும் கிடைக்கிறது.

ஆயினும் டில்லியில் ஒருவர் இதை செய்துகாட்டி காந்திஜி முதலியோரை வியப்பில்  ஆழ்த்தியுள்ளார். டில்லியில் மிகவும் புகழ்பெற்ற பழைய கோவில் லெட்சம்சுமி நாராயணர் கோவில்; பிர்லா நன்கொடையால் கட்டப்பட்டதால் பிர்லா மந்திர்  Birla Mandir என்பார்கள். அங்கே இரண்டு கற்களில் ரசவாத வைபவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதை பகவான்தாஸ் என்பவர் 2007ல் எழுதிய நூலில் அப்படியே வெளியிட்டார். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பத்திரிகைகள் அதைக் காப்பி அடித்தன. இதோ பகவான்தாஸ்   எழுதிய விஞ்ஞான என்சைக்ளோபீடியாவில்  தரும்  தகவல்::-

Soapnut Tree

1941 மே மாதம் 27ம் தேதி பண்டிட் கிருஷ்ண லாலா சர்மா எங்கள் முன்னிலையில் செய்தது இது. டில்லி பிர்லா மாளிகையில் நடந்தது; அவர் ஒரு தோலா (சுமார் 12 கிராம்) பாதரசத்தை 45 நிமிடங்களில் ஒரு தோலா தங்கமாக மாற்றினார்.அவர் சீயக்காய் மரக் காய் ஒன்றுக்குள் பாதரசத்தை விட்டார். பின்னர் அத்தோடு மூலிகைப்பொடி, மஞ்சள்  நிறமுள்ள பொடிகளை கொஞ்சம சேர்த்தார். அதன் மீது களிமண்ணைப்பூசி கரி அடுப்பில் 45 நிமிடங்களுக்கு வைத்தார். கரி எரிந்து சாம்பலானாவுடன் அதன் மீது தண்ணீரைத் தெளித்தார். பாதரசம் இருந்த இடத்தில் தங்கக்கட்டி இருந்தது. ஒரு தோலாவை விட கொஞ்சம் எடை குறைவு என்ன பொடிகளை சேர்த்தார் என்பதையும் அவர் சொல்லவில்லை. இந்த பரிசோதனைக் காலம் முழுதும் அவர் 15 அடிகள் விலகியே நின்றார். அடுப்பு பக்கம் போகவே இல்லை . நாங்கள் எல்லோரும் வியப்படைந்தோம்

அதே கோவிலில் இன்னும் ஒரு கல்வெட்டுப் பலகை உள்ளது அதில் அவர் 1942ம் ஆண்டு செய்த அதிசயம் உள்ளது அப்போது அவர் ஒரு மருந்துச் சரக்கை பாதரசத்துடன் சேர்த்து அரை மணி நேரத்தில் தங்கத்தை உற்பத்தி செய்தார்

இது போல 1943ம் ஆண்டில் ரிஷிகேஸ் முதலிய இடங்களிலும் நடந்தது. கிருஷ்ண லாலா ரசவைத்யா என்பவர்  மஹாத்மா காந்தி முதலியோர் முன்னிலையில் தங்கம் செய்து காட்டினார். அப்போது  உருவாக்கப்பட்ட தங்கம் காங்கிரஸ் கட்சியின் சுதந்திரப் போராட்டத்துக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டது

விக்கிப்பீடியாவில் ரசவாதத்தில் ஈடுபட்ட அல்லது அதுபற்றிப்  பாடியவர்களின் பட்டியல் உள்ளது சம்பந்தர், சுந்தரர் முதலியோர் மர்மமான முறையில் தங்கம் பெற்ற செய்திகளும் பெரிய புராணத்தில் வருகிறது.

ரசவாத நூல்களின் பட்டியல் (ஆங்கிலத்தில்)

–subham—

Tags- ரசவாத நூல், தங்கம் பாதரசம், டில்லி கோவில் கல்வெட்டு, மூலகம் , திருமூலர்

வைக்கம் போராட்டமும் திராவிட பித்தலாட்டமும்-Part 2 (Post.12,787)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,787

Date uploaded in London – –  –  1 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

திருவநந்தபுரத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் மஹாத்மா காந்தி, வைக்கம் போராட்ட வீரர்கள் யார் யார் என்று பட்டியல் இடுகிறார்.:

13-1-1937

“உங்கள் தாய்மொழியில் பேச வேண்டும் என்று எனக்கு ஆசை; அருமையான இசை போலக் கேட்கும் உங்கள் (மலையாள) மொழியை இன்னும் கற்றுக்கொள்ள முடியாதது வருத்தமாக இருக்கிறது;   அதே நேரத்தில் தேசீய மொழியான ஹிந்துஸ்தானியை நீங்கள் அறியாததும் வருத்தம் அளிக்கிறது. ஆகையால் மொழிபெயர்ப்பினை நாட வேண்டி இருக்கிறது.

விழாக் கொண்டாட்டக் கூட்டத்துக்கு தலைமை தாங்க என்னை அழைத்தமைக்கு நன்றி நீங்கள் கொடுத்த வரவேற்பு பத்திரத்துக்கு நன்றி. நீங்கள் உங்கள் மனமார்ந்த நன்றி.யை ஏற்கனவே திருவாங்கூர் மஹாராஜாவுக்கும் மஹாராணிக்கும் சசிவோத்தம ஸர் சி பி ராமசுவாமி அய்யருக்கும் தெரிவித்துவிட்டீர்கள் அதிலும் உங்கள் சந்தோஷத்திலும் பங்குகொள்ள எனக்கும் ஆசை. உங்கள் முகங்களில் அந்த சந்தோஷம் தெரிகிறது. ஏதோ ஒரு  காலத்தில் உங்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை ( கோவிலுக்குள் எல்லா ஜாதியினரும் செல்லும் உரிமை) இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. யார் எப்பொழுது இந்த உரிமையைப் பறித்தார்கள் என்று  நமக்குத் தெரியாது. ஆனால் வைக்கம் போராட்ட வரலாற்றினை நீங்கள் அழகாக பட்டியலிட்டுவிட்டீர்கள் .

காலஞ் சென்ற புனிதர் நாராயண குருவுக்கு நீங்கள் நன்றி சொன்னீர்கள்; துணிச்சல் மிக்க மாதவனுக்கு நன்றி சொன்னீர்கள் இந்த நேரத்தில் மேலும் இரண்டு பேரை நினைவு கூறுவோம்; .காலஞ் சென்ற கிருஷ்ண சுவாமி (அய்யர்) ,அவருக்கே உரித்தான பாணியில், கீத  கோவிந்தத்திலிருந்து பிராரத்தனை பாடுவார் (காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களில் ) . அவர் தீவிர பிராமணன்; சமயப்பற்றுமிக்கவர்; ஆயினும் எல்லா ஜாதி இந்துக்களும் கோவிலுக்குள் வரவேண்டும் என்று அவர் போராடினார் . இப்போது நம்மிடையே இருக்கும் கேளப்பன் நாயரையும் நான் மறக்கவில்லை. இன்று நாம் காணும் வைபவத்துக்கு இவர்கள்தான் வித்திட்டார்கள் .

நம்பூதிரி  பிராமணர்கள்

நமக்கு உதவிய பழைய சம்பிரதாயக்காரர்களையும் நாம் மறக்கக்கூடாது அவர்களை நம் பக்கம் இழுப்பதுதான் எனக்கு கஷ்டமாக இருந்தது.அவர்களும் மற்ற பழம் சம்பிரதாயக்காரர்களும்  காலத்தின் உண்மை நிலையை அறிந்திராவிடில் மகாராஜாவின் பணி நடந்திராது.

இந்த நேரத்தில் மூத்த மஹாராணியையும் நான் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவரை பல ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தேன். வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கு அவரும் அவருடைய கணவரும் ஆதரவு தெரிவித்தனர். இன்று அவரும் மகிழ்ச்சிக்கடலில் மிதக்கிறார் என்று நம்புகிறேன்.

Xxxx

எட்டமானூர் சொற்பொழிவு 19-1-1937

அழகான வாசகம் அடங்கிய  சம்ஸ்க்ருத மொழி வரவேற்பினையும் வற்கலை  உடையையும் அளித்தமைக்கு மிக்க நன்றி ; இந்த  மரவுரி(வற்கலை) ஆடையை நான் அணிவேன் என்று சொல்லமாட்டேன். ஏனெனில் இது மிகவும் மதிப்புடையது . ஆகையால் இதை மகன்வாடி கிராமத்தில் அமையும் கிராம கைவினைப் பொருட்கள் கண்காட்சியில்  வைக்கப்போகிறேன். அந்த மியூசியத்தை இது அலங்கரிக்கும்

(வற்கலை என்னும் மரவுரியை காட்டிற்குச் சென்ற ராம லட்சுமணர்கள் அணிந்தனர்; பரதனும் அதே உடையில் வந்ததை கம்பன் அழகாக பாடுகிறான்)

இங்குள்ள ஆலயத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள்; என்னுடன் ஒரு புலைய ஜாதிப்பையனும் துணிச்க்கலாக கோவிலுக்கு வந்தான் . இப்படி ஒரு காட்சியை நான் காண்பேன் என்று சில மாதங்களுக்கு  முன்னர் நான் நினைத்தும் பார்த்திருக்கமுடியாது.

இதில் கடவுளின் கைவண்ணத்தை நான் காண்கிறேன் பல பொதுக்கூட்டங்களில் சொல்லி வருவதை இங்கும் சொல்கிறேன் ; கோவிலுக்குள் எல்லா ஜாதியினரும் நுழைந்து கும்பிடலாம் என்ற மகாராஜாவின் பிரகடனத்துக்கு இறைவனே காரணம்! கடவுள் தான் மஹாராஜா கைகள் மூலம் பிரகடனத்தில் கை எழுத்திட்டுள்ளார்.

xxxxx

பந்தளத்தில் காந்திஜி சொற்பொழிவு 20-1-1937

கேரளத்தில் நான் ஒப்பற்ற ஒரு விஷயத்தைக் காண்கிறேன்  எங்கும் ஊசி விழுந்தாலும் கேட்கும் Pin Drop Silence  அளவுக்கு அமைதி காக்கிறார்கள் கட்டுக்கோப்புடன் இருக்கிறார்கள்   என்னுடைய கேரள விஜயத்தை நான் மத சமபந்தமான யாத்திரையாகவே கருதுகிறேன் .

நேற்று இதே நேரத்தில் நான் கோட்டயத்தில் சொற்பொழிவாற்றினேன்; கடல் போலக் கூட்டம் ; நான் பயந்து கொண்டு நடுங்கிக்கொண்டே மேடை ஏறினேன்; ஏனெனில் மைக் Microphone  இல்லாத கூட்டம் அது. கூட்டத்தினை ஏற்பாடு செய்தோர் எவ்வளவோ முயன்றும் மைக் வரவில்லை. கூட்டத்தினர் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அமைதி காத்தனர். இதை நான் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் இந்தக்கூட்டங்கள் எல்லா வற்றிலும் மதம் சமபந்தப்பட்டிருக்கிறது எல்லோரும் கோவிலுக்குள் வரலாம் என்று மன்னர் வெளியிட்ட பிரகடனமே தெய்வீக செயல் என்றே கருதுகிறேன். இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டால் என்ன நிகழுமோ ஏது நடக்குமோ என்று பயப்பட்டிருப்பார்கள். இங்குள்ள இளம் வயது மஹாராஜா துணிச்சலாக பிரகடனம் செய்தார்.

xxxx

வீரர்கள் பட்டியல்

காந்தி நிறுவனமான நவஜீவன் காரியாலயம் மூலம் மஹாதேவ் தேசாய், வெளியிட் ட   புஸ்தகத்தில் திராவிட கன்னட ராமசாமி நாயக்கர் பெயர் எங்குமே இல்லை; அனால் தமிழ்நாட்டில் , திராவிட பித்தலாட்டக்காரர்கள்  ஏதோதோ சொல்லி ஊரை ஏமாற்றி வருகிறார்கள். கூட்டத்தை வேடிக்கைபார்க்கப்  போனவன் எல்லாரும் புரட்சி வீரர் என்று சொன்னால்,   உண்மையான புரட்சி வீரர்கள் உலகை விட்டே ஓடிப்போய் விடுவார்கள் . இந்தப் புஸ்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும். முழுவதும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் ..

வீரர்கள் பட்டியல்

T K Madhavan டி .கே மாதவன்

T R Krishnaswami Iyer டி .ஆர் .கிருஷ்ணசுவாமி ஐயர்

Kelappan Nair கேளப்பன்  நாயர்

C K Parameswaram Pillai சி. கே. பரமேஸ்வரன் பிள்ளை

M Govindan எம் .கோவிந்தன்

Ramachandran  ராமசந்திரன்

Aiyyan Kali அய்யன் காளி

Raman Pillai ராமன் பிள்ளை

Padmanabha Pillai பத்மநாப பிள்ளை

Yogakshema Sabha of  Malayali  Brahmins – Nambudiris மலையாளி நம்பூதிரி பிராமணர்களின் யோக க்ஷேம சபை

Kshatriya Mahasabha க்ஷத்ரிய மகாசபை

Nair Service Society நாயர் சர்வீஸ் சொசைட்டி NSS

Kesava Menon  கேசவ மேனன்

C Rajagopalachari சி ராஜ கோபாலாச்சாரி  (ராஜாஜி)

C P Ramaswami aiyyar சி.பி ராமசுவாமி ஐயர்

S N D P Yogam with Shri Narayan Guru எஸ். என். டி .பி .யோகம், நாராயண குரு அமைப்பு

Dr M E Naidu , Nagerkoil டாக்டர் எம்.இ . நாயுடு , நாகர்கோவில்

இவர்களில் நம்பூதிரி பிராமணரின் Nambudiri Yogakshema Sabha யோக க்ஷேம சபை, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது எல்லோருக்கும் வியப்பைத் தந்தது என்று மகாதேவ தேசாய் முன்னுரையில் குறிப்பிடுகிறார்

இவர்கள் எல்லோரும் கிளர்ச்சியைத் துவங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, பாரதி இதே கருத்தைப் பாடி தூங்கிக்கொண்டிருந்தவர்களை உசுப்பிவிட்டதை இந்துக்கள் நன்றியுடன் நினைவு கூறவேண்டும் .

விடுதலை விடுதலை விடுதலை ! பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை.

—SUBHAM—

TAGS- வைக்கம் போராட்டம், திராவிட பித்தலாட்டம், வைக்கம் வீரர்கள், ஐயர் பங்கு

குமாரநல்லூர் பகவதி,  உதயணபுரம் முருகன் கோவில்கள்- 20 (Post.12,786)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,786

Date uploaded in London – –  –  1 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 20 

கோவில் எண்கள்- 17 & 18 தொடர்ச்சி

குமாரநல்லூர் பகவதி கோவில்,  உதயணபுரம் முருகன் கோவில்

இரண்டு கோவில்களின் சிறப்பு அம்சங்கள்

உதயண புரத்திலுள்ள சுப்பிரமணிய சுவாமி, வைக்கத்திலுள்ள தந்தையை – மகாதேவனை– சந்திக்க ஆண்டு தோறும் வைக்கத்து அஷ்டமி உற்சவத்தின் போது வருகிறார் ; மதுரை சித்திரைத் திருவிழாவின் போது அருகிலுள்ள திருப்பரங்குன்ற முருகன், மதுரை பஸ் நிலையம் அருகிலுள்ள பெருமாள், அழகர் கோவிலில் உள்ள பெருமாள் எல்லோரும் வருவதைப் போல இது ஒரு பெரிய வைபவமாக நடக்கிறது. முருகன் வரும்போதும் திரும்பிச் செல்லும்போதும் நாடகம் போல காட்சிகளைக் காணலாம் .

வைக்கத்திலிருந்து 3 கிலோ மீட்டரில் இருப்பதால் இரண்டு தலங்களையும் சேர்த்து தரிசிப்பது ஒரு சம்பிரதாயம்.

வைக்கம் போலவே வட்ட வடிவ கருவறை; கனத்த மதில் சுவர்கள். பழனி சுப்பிரமணிய சுவாமி போலவே இவருக்கும் கேரள மக்கள் முக்கியம் தருகிறார்கள்; கார்த்திகை நாள், சஷ்டி திதி ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள் உண்டு .

மகர மாத (ஜனவரி) தைப்பூச திருவிழாவில் ஏராளமான காவடிகள் அணிவகுத்து வரும்.; 7 நாள் விரதம் இருக்கும் பக்தர்கள், முதலில் வைக்கத்துக்கு சென்று சிவனை தரிசித்துவிட்டு இங்கு வந்து, காவடியில் கொண்டுவந்த அபிஷேகப் பொருட்களால் கார்த்திகேயனனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

உதயண புரத்தின் அழகான சிற்பங்களையும் ஓவியங்களையும் பார்த்தால் இதன் பழமை புரியும். மண்டபத்தில் ராமாயணக் காட்சிகள் நிறைந்திருப்பதால் கலை ரசிகர்கள் அவைகளைக் காண வருகின்றனர்  இந்தக் கோவில் பகவதிக்காக அமைக்கப்பட்டு, பின்னர் மன்னரின் கனவால் குமார நல்லூருக்கு மாற்றப்பட்டதால் இன்றும் பகவதி சேவை இந்த முருகன் கோவிலில் நடக்கிறது.

xxxx

குமாரநல்லூர் பகவதி கோவில்

கோட்டயத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் பகவதி கோவில் இருக்கிறது

சேரமான் பெருமாள் கனவில் கண்டபடி,  முந்திய திட்டத்தை மாற்றி , குமரநல்லூரில் பகவதியையும் உதயணபுரத்தில் சுப்பிரமணியனையும் பிரதிஷ்டை செய்தார். இதில் 1000 நாயர் குடும்பங்களையும் 28 நம்பூதிரி குடும்பங்களையும் ஈடுபடுத்தினார்.

இந்த ஊருக்கு மஞ்சூர் என்ற பெயரும் வந்தது; மஞ்சு என்றால் மேகம். சேரமன்னனின்  முதல் திட்டத்தை தேவி ஏற்காததால், அதைக் காண்பிக்க தேவியே மூடு பனியால் இந்த ஊரை மூடவே சேராமானும் தேவியின் மஹிமையை உணர்ந்தான்.

மதுரை மீனாட்சியுடன் (மூக்குத்தி கதை) தொடர்பு கொண்டதாலோ என்னவோ தெரியவில்லை, இந்தக் கோவில் தமிழ்நாட்டுக் கோவில்கள் போல வடிவமைக்கப்பட்டுள்ளது

பொதுவாக விக்கிரகங்களைச் செய்வதற்கு கிருஷ்ண சிலா என்னும் கருப்பு நிறக் கல்லை பயன்படுத்துவார்கள். இங்குள்ள சிலை அஞ்சனக் கல்லால் (ஆன்டிமணி சல்பேட்) ஆக்கப்பட்டுள்ளது . சங்கு சக்கரத்துடன் அழகே உருவெடுத்து வந்தாற்போல இறைவி காட்சி தருகிறாள்.

விருச்சிக மாதத்தில் (நவம்பர்- டிசம்பர்) கொண்டாடப்படும் த்ரி கார்த்திகா உற்சவம், இந்தக் கோவிலின் முக்கிய திருவிழா ஆகும். அந்த உற்சவத்தில் வடக்குநாதன் கோவில் மதில் சுவருக்கும் உதயண புரம் கோவில் மதில் சுவருக்கும் பூஜையும் நைவேத்தியமும் படைக்கப்படும் . இதற்கு ஒரு விநோதக்  காரணத்தையும்  சொல்கிறார்கள் .

கார்த்திகை  மாத குளியலை  முடித்துவிட்டு,  அம்மன் திரும்பி வருகையில் மிகவும் அழகாக காட்சி தருவாளாம் . இந்தக் காண்பதற் காக  கோவிலில் குடிகொண்டுள்ள கடவுளர், மதில் மேல் ஏறி காத்திருப்பார்களாம்.. சந்நிதிகளில் இறைவனைக் காணவில்லையே என்று தேடிய அர்ச்சகர்கள், அந்த தெய்வங்கள் மதில் சுவரில் நிற்பதைக் கண்டு  சுவர்களுக்கே வழிபாடு  செய்தனராம் .

இவ்வாறு இரண்டு கோவில்களையும் சுற்றி பல கதைகள்   இருப்பது, கோவிலை நினைவு வைத்துக்கொள்ள பேருதவி செய்கிறது. 

xxxx

கோவில் எண் 19 பெருவனம் இரட்டையப்பன் கோவில்

பூரம் ஆறாட்டுப்புழா ,108 இறைவன்கள் மகாநாடு

திருச்சூர் நகரிலிருந்து திருப்பிரையார் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தாயம்குளங்கரா எனும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இரட்டையப்பன் கோவிலை அடையலாம் . ஒரு காலத்தில் இங்கு நடந்த ஆறாட்டுப்புழா பூரம் விழாதான் எல்லா பூரம் விழாக்களுக்கும் தோற்றுவாயாக இருந்தது. 108 தேவ, தேவியர் யானை மீதேறி இங்கு பவனி வந்து ஆற்றின் இருபுறங்களிலும் அணிவகுத்து நிற்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.  ஒரு சமயம் மழை  வெள்ளம்  காரணமாக திருச்சூர் வடக்குநாதன் வர முடியாமல் பாதி வழியில் திரும்பிச் செல்ல நேரிட்டது பின்னர் திருச்சூரிலும் தனி பூரம் விழா துவங்கியது.

பெருவனம் கோவிலின் சிறப்பு அம்சங்கள்

இங்கு இரண்டு சிவன் சந்நிதிகள் இருப்பதால் இரட்டையப்பன் கோவில் என்று பெயர் ஏற்பட்டது .

ஏன் இரண்டு கருவறைகள்? என்ற கேள்வி எழும் .

பரசுராமர், கேரளத்தில் மக்கள் வாழாததைக் கண்டு பிடித்தார். மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் அரபிக்க கடலுக்கும் இடைப்பட்ட பூமியில் மக்களைக் குடியே ற்ற  திருவுளம்  கொண்டு 64 கிராமங்களை அமைத்தார் ; இதில் பெருவனம் என்னும் இடமே தலைமைப் பதவி வகித்தது. தமிழ் நாட்டில் பிராமணர் ஊர்களை மங்கலம் என்ற பெயரால் அழைப்பர்; கேரளத்தில் கிராமம் என்று அழைப்பர்

பூரு முனிவர் என்பவர் அடர்ந்த காட்டுக்குள்  — அதாவது பெரிய வனத்துக்குள் – தவம் செய்தவுடன் சிவனும் பார்வத்தியும் தோன்றி அருள்  செய்தனர் இருவரையும் இறைவன் பாதி இறைவி பாதி என்னும் அர்த்தநாரி  கோலத்தில் தரிசிப்பதே தனக்கு பிடித்தது என்று சொல்லவே சிவனும் ஒரு லிங்கத்தைக் கொடுத்து அவ்வாறே காண்பாய் என்கிறார். பின்னர் அவர் லிங்கத்தை ஒரு ஆலமரத்துக்கு அடியில் பிரதிஷ்டை செய்தார். அபிஷேகம் செய்வதற்காக நிலத்தில்  மூன்று கோடு போட்டு ஒரு குளத்தை வெட்டினார். அதை தொடு குளம் என்பார்கள் அர்த்த நாரீ  சொரூபத்தையும் கோவிலில் நிறுவினார். இவ்வாறு லிங்கமும் அர்த்த நாரீ யும் இரண்டு சந்நிதிகளில் இருந்து அருள் பாலிப்பதால் இரட்டையப்பன் என்று அழைக்கப்பட்டனர்.

108 கோவில் யானைகள்  பவனி

மார்ச்- ஏப்ரலில் 28 நாள் உற்சவம் நடக்கும் ; உற்சவத்துக்கு 108 கோவில்களின் இறைவன்கள் 108 யானைகள் மீது  பவனி வந்த காலம் உண்டு . பின்னர் காட்டுக்குள்  வருவதை விட ஆங்காங்கு பூரம் ஆராட்டு விழாவினை நடத்த தொடங்கினர். பெருவனம் பெயர் மங்கி, திருச்சூர் பூரம் பெயர் பெற்றது இப்போது பெருவனம் ஆராட்டுக்கு 23 கோவில் தேவ தேவியர் மட்டுமே வருகின்றனர் சாஸ்தா கோவில் அருகில் இருக்கும் பரந்த வயல் வெளியில் இந்த கடவுளர் சந்திப்பு– மகாநாடு நடக்கும். திருப்பரையார் ராம பிரான் தலைமை வகிப்பார்.

பார்வதி தேவி, கணபதி,, தட்சிணாமூர்த்தி சந்நிதிகளும்  இருக்கின்றன. கோவிலின் சுற்றுப் பகுதியில் கோசாலை கிருஷ்ணன் சந்நிதி இருக்கிறது . நான்கு புறங்களில் நாங்கு சாஸ்தா கோவில்கள் காவல் தெய்வங்களாக இருக்கின்றனர் குதிரை மலை, அக மலை , எடத்துருத்தி , வழுத்துக் காவு என்பன நான்கு சாஸ்தா கோவில்கள் ஆகும் .

—–SUBHAM—

TAGS- கேரள மாநில கோவில்கள், PART 20, குமாரநல்லூர் பகவதி உதயணபுரம் முருகன், கோவில், பெரு வனம் , இரட்டையப்பன் , விழா,

கொங்குமண்டல சதகம் – பாடல்கள் 6 & 7 (Post No.12,785)



WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,785

Date uploaded in London –  –  1 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

கொங்குமண்டல சதகம் –  பாடல்கள் 6 & 7

ச.நாகராஜன்

கொங்கு மண்டல சதகத்தில் ஆறு மற்றும் ஏழாம் பாடல்களைப் பார்ப்போம்:

நதி 

திருமணி தொப்பைபூங் காவேரி வானியுஞ் செய்யநதி

தருமணி காஞ்சி பொருனைநள் ளாறொடு சண்முகமுங்

குருமணி பாலை நதிவாழை காரி குடவனதி

வருமணி சண்பகஞ் சிற்றாறு சூழ்கொங்கு மண்டலமே.

–    பாடல் 6

  (க-ரை) திருமணிமுத்தாறு – தொப்பையாறு – பவானியாறு -
செய்யாறு – நொய்யலாறு – ஆம்பிராவதி – நள்ளாறு – சண்முக நதி -
பாலையாறு – வாழையாறு +பாரத்துவாசநதி – குடவனாறு – சண்பக நதி -
சிற்றாறு சூழ்ந்துள்ளது கொங்குமண்டலம் என்பதாம்.

குடிவளம்

நீடுந் தமிழ்மன்னர் மூவர்க்கு மம்பொனெடு மகுடஞ்

சூடும் பெருமை படைத்துயர் மக்களின் சோர் வகற்றிக்

கூடும் பலவுண வூட்டுவே ளாளக் குடிசிறந்து

மாடும் பெருகி வளர்வதன் றோகொங்கு மண்டலமே.

                                         –    பாடல் 7

 (க-ரை) சேர சோழ பாண்டியர் என்னும் தமிழ் வேந்தர்
மூவர்க்கு மகுடஞ் சூடும் பெருமையை அடைந்து, எல்லா உயிர்க்கும்
உழவுத்தொழிலாற் பல உணவுப்பொருள்களை யுண்டாக்கி ஊட்டி
வளர்க்கும், வேளாண்மைக்குடிச் சிறப்புற்றுப் பசு முதலியன நன்கு
வளர்ச்சியுறுவது கொங்குமண்டலம் என்பதாம்.

வேளான்மாக்கள் எந்தெந்த பெயர் கொண்டு விளங்கினர் என்பதைக் கீழ்க்கண்ட பாடல்கள் விளக்குகின்றன:

புலிக்கொடி கயற்கொடி பொருவிற் கொடியுடை


வேந்தர் நாட்டுறை வேளாண் மாக்கள்


சோழிய ரென்றும் பாண்டிய ரென்றுங்


கொங்கரென் றும்பெயர் கொண்டன ரவருள்

முன்னமுரைத்த முத்தமிழ் வேந்தரும்


எங்கள்மூ வருக்கு மியன்முடி சூட்டுதற்


குங்களை யமைத்தன முயர்ந்து கொள்வீரெனக்


கொண்டு மகிழ்ந் தனையர் கோத்தன்மையரே

                                      (நீதிநூற் சிறப்புப்பாயிரம் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை)

இது வரை கொங்குமண்டல சதகத்தில் உள்ள நூறு பாடல்களையும் அதில் கூறப்பட்டுள்ள சரிதங்களையும் விளக்கமாக இந்தத் தொடரில் பார்த்தோம்.

www.tamilandvedas.com -இல் கொங்குமண்டல சதகத்தில் உள்ள பாடல்களும் விளக்கங்களும் கட்டுரையாக வெளியிடப்பட்டு வந்துள்ளன. இவற்றை  www.pustaka.co.in நிறுவனம்

இரு பாகங்களாக வெளியிட்டுள்ளது.

மூன்றாம் பாகம் விரைவில் வெளி வரும்.

அன்பர்கள் இந்த மூன்று பாகங்களையும் படித்தால் கொங்கு மண்டலப் பெருமை பற்றி நன்கு அறிந்தவர்களாவோம்.

இந்த நூலின் சிறப்பைப் பற்றி அதிகம் விளக்கத் தேவையில்லை.

வெறும் கட்டுக்கதையாகவோ, புனைந்து புகழ் ஏற்றியோ  கொங்குமண்டலத்தின் பெருமை இதில் நிறுவப்படவில்லை.

அனைத்து சரிதங்களும் ஆதாரபூர்வமானவை; அற்புதமானவை.

சரிதங்களில் கூறப்பட்டுள்ள பரம்பரையினர் இன்றும் அதே நல்ல குணங்களோடு கொங்குமண்டலத்தில் வாழ்ந்து வருவது கண்கூடு.

‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்ற பழைய காலத்துப் பழமொழி இன்றளவும் உயிர்த்துடிப்போடு இலங்கும் படி கொங்கு மண்டல மக்கள் வாழ்ந்து வருவது அற்புதமானது.

இந்த நூலை கொங்குமண்டலம் மட்டுமல்லாது தமிழ் தெரிந்த அனைவரும் படித்து மகிழலாம்.

 நூலுக்கு இதுவரை ஆதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

***

Mercury turned into Gold!  Delhi Temple Wonder! (Post No.12,784)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,784

Date uploaded in London – –  –  30 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx

For thousands of years there has been a craze about the transmutation of lead and iron into gold. Hindu saints and researchers sang about it. Even the famous western scientists believed in the transmutation of metals and were frantically trying to find the secret.

This branch of science or pseudo-science is called Alchemy.

xxxx

What does science say about alchemy or transmutation of base metals into gold?

Scientists believe it is not possible to change iron into gold. But the radio active elements such as Uranium and Plutonium

What does uranium finally become?

Uranium eventually decays to radium. Radium decays to release a radioactive gas called radon. Radon in underground uranium mines is a greater radiation hazard to miners than uranium.

Three stable lead nuclides are the end products of radioactive decay in the three natural decay series: uranium (decays to lead-206), thorium (decays to lead-208), and actinium (decays to lead-207)

xxxx

Wikipedia gives the list of Hindu alchemists:

Kanada, sage and philosopher (6th century BC)

Nagarjuna (born 931)- Buddhist philosopher

Yogi Vemana

Siddhar Tamil sage and philosophers

Nayanmars Tamil sage and philosophers

Alvars Tamil sage and philosophers

Vallalar, Tamil 18th Century sage and philosopher

Arunagirinathar Tamil 15th Century sage and philosopher

Agastiyar Tamil Sage

Korakkar Tamil Sage

Thirumoolar Tamil Sage

Bogar Tamil Sage

Kagapujandar Tamil Sage

Vaalmiki Tamil Sage

Pattinathar Tamil Sage

Kalangi Nathar Tamil Sage

Pathanjali Tamil Sage

Avvaiyar Tamil Sage

Naradhar

We also read about Tamil saints Sambandar and Sundarar getting gold mysteriously.

But one person turned mercury into gold in the famous Hindu Temple in Delhi in the recent times.

On one of the walls of the Birla temple in New Delhi is engraved an unusual inscription . Delhi Birla Mandir is Lakshmi Narayan Temple and it is called Birla Mandir due to the big donationsto the temple.

Here’s a translation of how the inscription, in Hindi, described the incident.

The matter was published in Times of India newspaper in 2008 and in the Encyclopaedia of Indian Sciences in 2007 (for more on the subject Bhagwan Dash article in the book).

Mercury converted to gold in 1942 in India- proof

Inscription on Birla Mandir-Delhi

On 27/5/1942 in Birla House in presence of Shri A B Thakkar (PM, All India Hindu Sevak Sangh), Sri Duttji, secretary-Birla Mills, Delhi, Sri Khemka-Chief Engineer Sri Wilson etc, Pandit Krishnalala Sharma converted one tola mercury into 1 tola gold. It was done in Birla house, New Delhi

One Tola is approximately 12 grams.

Reetha fruit is Sapindus trifoliatus Linn (Soapnut)

He put mercury inside a shell of reetha fruit (soapnut) with some white and yellow powder (Jadi-booti) and it was closed with clay and this was put in hollow of earthen lamp and burnt for 45 minutes. On cooling and opening it, Gold was found! Similar inscription on Birla mandir-Varanasi:

In 1943, pandit Krishnapal Rasavaidya did it in Rishikesh in presence of Mahatma Gandhi’s P.A. Mahadev Desai, G.K Birla and others.

Mercury provided by Desai was converted into 18 KG of Gold!. This was donated to a trust which fetched Rs 72000! This experiment was repeated in presence of Pratap Singh of BHU.

Was this an example of alchemy or cold fusion and if yes, our ancestors knew more science than all world put together!

BARC former associate Mahadeva Srinivasan believes in this possibility and stated there was good work done at BARC on this till 1994 and then senior scientists killed this research! Cold fusion research is not getting funds in India but China, Russia and Japan are doing it. This process can mean one can create electricity in their homes and clean fuel will be produced without hazardous wastes.

According to Modern Science Mercury is the closest metal of Gold . Mercury’s atomic number is 80 and Gold’s atomic number is 79 .if we can remove only one atom from Mercury , scientifically Mercury will turn into Gold. Though it is not that simple I still wonder how did Hindus find out mercury and gold are so close thousands of year before Mendeleev’s Periodic Table.

Pandit Krishnalala Sharma learnt it from a saint in Haridwar named Narayana swami.

Even Kautilya’s Arthasastra which is 2400 year old says about gold produced by transmutation.

My mother told me an incident where a lightning strike made the cow dung into gold.at that time I was laughing as a science student. But the latest science talks about metals are created by transmutation in extreme hot supernova in the universe. So my mother may be right in her belief!

Picture of Soapnut tree (Reetha)

This is what Wikipedia says,

Most stars carry out transmutation through fusion reactions involving hydrogen and helium, while much larger stars are also capable of fusing heavier elements up to iron late in their evolution.

Elements heavier than iron, such as gold or lead, are created through elemental transmutations that can naturally occur in supernovae. One goal of alchemy, the transmutation of base substances into gold, is now known to be impossible by chemical means but possible by physical means. As stars begin to fuse heavier elements, substantially less energy is released from each fusion reaction. This continues until it reaches iron which is produced by an endothermic reaction consuming energy. No heavier element can be produced in such conditions.

—subham—

Tags- Mercury, gold, alchemy, transmutation, Delhi Birla Mandir, Krishnalala Sarma.

வைக்கம் போராட்டமும் திராவிட பித்தலாட்டமும் (Post No.12,783)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,783

Date uploaded in London – –  –  30 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

வைக்கம் என்ற ஊரின் பெயரைச் சொன்னவுடன் அங்கேயுள்ள மஹாதேவர் கோவில் எல்லோருக்கும் நினைவில் வந்து வைக்கதாப்பா காப்பாத்தப்பா என்பார்கள்; தேச பக்தர்களும் மலையாளிகளும் மஹாத்தமா  காந்தியையும் திருவாங்கூர் மஹாராஜாவையும் கேள ப்பனையும்மாதவன் பிள்ளையையும்  கிருஷ்ண சுவாமி ஐயரையும் வாழ்த்துவார்கள்; விஷயம் தெரியாத அரை வேக்காடுகள் நம்ம ஊரு நாயக்கர் போய் புரட்சி செய்துவிட்டார் என்று நினைப்பார்கள்; திராவிட பித்தலாட்டக்காரர் பிரசாரம் மூலம் நானும் நம்ம ஊரு  கன்னட தாய் மொழி ராமசாமி நாயக்கருக்கும் வைக்கத்துக்கும் சம்மபந்தம் உண்டுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். காந்திஜியின் சொற்பொழிவுகளைப்  படித்த பின்னர், அவ்ருடன் வந்த மஹாதேவ் தேசாய் 1937ல் எழுதிய அருமையான புஸ்தகத்தைப் பிடித்த பின்னர்,  அயோக்கியர்களின் மூகத்திரை கிழிந்தது  என்று சந்தோஷப்பட்டேன்

BOOK DETAILS

THE EPIC OF TRAVANCORE, MAHADEV DESAI, NAVAJIVAN KARYALAYA, AHMEDABAD, 1937

251 பக்கங்ககளை உடைய திருவாங்கூர் இதிகாசம் என்ற ஆங்கிலப் புத்தக த்தைப் படித்தபின்னர் நாயக்கர் பெயரை எங்குமே காணாதது கண்டு வியந்தேன். அந்தப் புத்தகத்தை மறு பதிப்பு செய்ய வேண்டும். புத்தகத்துக்குப் பெயர் வைத்தவர் புகழ் பெற்ற கவிஞர் சரோஜினி நாயுடு. எழுதியவரோ தேசம் முழுதும் அறிந்த சுதந்திரப் போராட்டத் தியாகி மஹாதேவ தேசாய்.

திராவிட விஷமிகளும் அவர்களோடு கூட்டுச் சேரும்போது மட்டும் கம்யூனிஸ்டுகளும் விஷம பிரசாரத்தைக் கட்டவிழ்த்துள்ளனர். அங்கு நாயக்கருக்கு சிலை வைத்ததும் நம்ம ஊரு திராவிட விஷம்தான் ; ஆனால் மலையாளி களைக் கண்டு அந்தக் கோழைகளுக்கு பயம்; ஆகையால் கடவுள் காட்டுமிராண்டி அவனைக் கும்பிடறவன் அயோக்கியன் என்ற வாசகங்களை திராவிட வா(ந்)திகள் எழுத முடியவில்லை ;அப்படி எழுதினால்  மலையாளி இந்துக்கள் சிலையை நீடிக்க விடமாட்டார்கள் என்பது நம்ம திராவிட மோசடிகளுக்குத் தெரியும்

நம்ம கன்னட நாயக்கர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருந்ததால் போயிருப்பாரு; ஆனால் நூத்தோட ஒன்னு நூத்தி ஒன்னு கணக்குதான். . ராஜாஜி பெயர் கூட புஸ்தகத்தில் இருக்கு !

xxxxxx

வைக்கம் சத்தியாகிரகம் என்றால் என்ன?

வைக்கத்தில் புகழ்பெற்ற மஹாதேவர் கோவிலிச் சுற்றியுள்ள தெருக்களில் கீழ் ஜாதி மக்கள் நடமாடவோ கோவிலுக்குள் வரவோ திருவாங்கூர் மகாராஜா தடை வித்தித்திருந்தார்; தீண்டாமை நீடித்தால் கிறிஸ்தவ முதலைகள்  இந்துக்களை விழுங்கிவிடும் என்று அஞ்சிய காந்திஜியும் ஈழவா ஜாதி தலைவர் நாராயண குருவும் இந்து ஹரிஜனங்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கோரி சத்தியாகிரகம் செய்தனர்; நாட்டின் வடபகுதியில் இதே ஹரிஜனங்களுக்கு உரிமை கோரிய காந்திஜி வந்தவுடன் மகாராஜா மனம் மாறியது .

இதற்கெல்லாம் மூல காரணம்  மஹாகவி பாரதியார் ; வைக்கம் கிராம போராட்டம் துவங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பறையர் தீயர் (ஈழவா) புலையர் ஆகியோருக்கு விடுதலை ஈன்று பாடினார்  ( எனது தந்தைக்குப் பிடித்த பாட்டும் அதுதான் ; காமராஜுடன் சிறையில் இருந்த என் தந்தை, சென்னை மவுண்ட் ரோடில் விடுதலை, விடுதலை என்ற பாரதி பாட்டினைப்  பாடிக்கொண்டு ஊர்வலம் போவார்களாம்; இதை அவர் என்றும் சொன்னதில்லை; என் அம்மா, என் தந்தை கைதான விஷயங்களை அடுக்கடுக்காகச் சொல்லுவார் )

விடுதலை! விடுதலை! விடுதலை!

பறையருக்கும் இங்கு தீயர்

புலைய ருக்கும் விடுதலை

பரவ ரோடு குறவருக்கும்

மறவ ருக்கும் விடுதலை!

திறமை கொண்டதீமை யற்ற

தொழில் புரிந்து யாவரும்

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி

வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)

ஏழை யென்றும் அடிமையென்றும்

எவனும் இல்லை ஜாதியில்,

இழிவு கொண்ட மனித ரென்பது

இந்தி யாவில் இல்லையே  — பாரதியார்

நம்முடைய தீர்க்கதரிசி புலவர் சுப்பிரமணிய பாரதி 1921ல் இறந்துவிட்டார். ஆக காந்திஜி, வைக்கம் வீரர்களுக்கு எல்லாம் பாடம் சொல்லிக்கொடுத்தவர் பாரதி.

ஆங்கில நாளேடுகளில் வைக்கம்பற்றிய கட்டுரைகளைப் படித்தேன் ; விக்கிப்பீடியாவிலும் படித்தேன் எல்லாம் அரை வேக்காடுகள் எழுதிய அரைகுறைக் கட்டுரைகள் ; போராட்டத்தைப் பற்றிய முழுச் சித்திரம் இல்லாதபடி எல்லோரும் திரும்பத் திரும்பச் சொன்ன பொய்களை எழுதியுள்ளனர். இதனால் மஹாதேவ தேசாய் எழுதிய புஸ்தகம் தமிழில் வந்தே ஆக வேண்டும்.

எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம் என்று சில விஷமிகள் காத்திருந்தனர். காந்திஜிக்கு அவர்களின் விஷமம் புரிந்தது ; டேய் பசங்களா; இது இந்துக்களின் சொந்தப பிரச்சினை; நீங்கள் போராட்டத்தில் பங்கேற்கத் தேவை இல்லை என்று சொல்லி சீக்கியர்களையும்  கிறிஸ்தவர்களையும் விரட்டி விட்டார்; அமிர்தசரஸிலிருந்து இலவச உணவு கொடுக்க வந்த சீக்கியர்கள்  மூட்டி முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஓ ட்டம் பிடித்தனர் இது நான் சொல்லும் புஸ்தகத்திலும் உளது; விக்கிப்பீடியாவிலும்  உளது

The local Christian leadership was alienated by a statement by Gandhi asking them to keep clear from ‘a Hindu affair’ (April, 1924).[4][17] Sikh Akali activists from Amritsar had also arrived at Vaikom to establish free food kitchens to the satyagrahis (April, 1924).[17] Gandhi called for the closure of the Sikh kitchens (from Wikipedia).

எல்லோரும் கோவிலுக்குள் சம உரிமையுடன் சென்று வழிபடலாம் என்ற பிரகடனத்தை திருவாங்கூர் மகா ராஜா 1936ம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியிட்டார்காந்திஜிக்கும் நாயர் சங்கத்துக்கும்நாராயண குரு  சங்கத்துக்கும் நம்பூதிரிகளின் யோகஷேம டிரஸ்டுக்கும் ஏக மகிழ்ச்சி

காந்திஜிக்கும் மஹாராஜாவுக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. நாயர் சங்கத்தலைவர் மற்றும் கிருஷ்ணசாமி ஐயர் போன்றோர் தங்கள் பெயர்களின் பின்னால் ஜாதிப் பெயரை சேர்க்கவே இல்லை ( எனது தந்தை வெ .சந்தானமும் தன்  பெயரின் பின்னால் ஜாதிப் பெயரை சேர்த்ததே இல்லை.)

XXXXX

வைக்கத்தில் காந்திஜி சொற்பொழிவு

இப்போது உண்மையான  வைக்கம் வீரர்கள் யார் என்பதை காந்திஜி வாய்மொழி மூலமாகவே கேட்போம்:-

வைக்கத்தில் சத்தியாகி கிரக மைதானத்தில் 18-1-1937ல் சொற்பொழிவு ஆற்றினார்; 25000 பேர் அவரது உரையை க்கேட்டனர்

” உங்கள் நடுவில் நான் இரண்டாவது முறையாக நிற்கிறேன் .என்னுடைய அளவற்ற மகிழ்ச்சியை நான் சொல்லுவதை வீட நீங்களே உணர  முடியும் என்ன அருமையான சுப வேளை !

சில ஆண்டுகளுக்கு முன்னர்கோவிலை நோக்கிச் செல்லும் சாலைகளை அவர்ண ஹிந்துக்களுக்கும் (ஜாதியில் தாழ்ந்த) திறந்துவிட வேண்டும் என்பதற்காக போராடுவதே கஷ்டமாக இருந்தது  நல்ல மனிதன் மாதவன் (பிள்ளை)கிருஷ்ணசாமி (அய்யர்) உதவியுடன் போராடினார்கள் கேளப்பன் (நாயர்) இந்தப் போராட்ட த்துக்கான வித்துக்களை ஊன்றினார் ;மிகவும் சோகமான விஷயம் மாதவனோ கிருஸ்ணசாமியோ இன்று நம்மிடையே இல்லை நம்முடைய சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் அவர்களுக்கு இல்லை.

பந்தளம்,எட்டுமானூர், முதலிய ஊர்களில் அவர் என்னே சொன்னார் என்பதையும் காண்போம் .

old spelling VAIKAM; new spelling VAIKOM (just above Kottayam)

தொடரும்………………………………………..

Tags- வைக்கம் சத்தியாக்கிரகம்ஈ வே ரா ராமசாமி நாயக்கர்திராவிடபித்தலாட்டம்வீரர்கள்