முதல் ‘சீட்’ SEAT யாருக்கு? அறப்பளீசுர சதகம் (Post No.11,528)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,528

Date uploaded in London – 10 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

மஹா வீரன் யார் , மஹா தியாகி யார், மஹா வள்ளல் யார், மஹா நண் பன்  யார் என்று  புதிய விளக்கம் தருகிறார் அம்பலவாணர்.

முதல் வரிசையில் எந்த ‘சீட்’?

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹ்யூஜஸ் என்பவரை நியூயார்க் நகர பத்திரிகையாளர்கள் ஒரு விருந்துக்கு அழைத்திருந்தனர். அதே விருந்துக்கு பல வெளிநாட்டு ராஜ தந்திரிகளும் அழைக்கப்பட்டி ருந்தனர். மந்திரியை எந்த இடத்தில் உட்கார வைப்பது என்பது அறியாது அவர்கள் திகைத்தனர். இதற்கு நல்ல தீர்வு, அவரிடமே கேட்பதுதான் என்று எண்ணி, தயங்கித் தயங்கி, அவரிடமே போய்க் கேட்டும் விட்டனர். இதற்குக் காரணம் அப்போதுதான் பத்திரிக்கைகளில், இடம் பற்றிய சர்ச்சை, வரிசை அறிந்து ஒழுகாமை என்பதெல்லாம் காரசாரமாக விவாதிக்கப்பட்டன.

சங்க காலப் புலவர்களில் பலர், மன்னர்கள் தங்களுக்கு முதல் மரியாதை செய்ய வில்லை என்று கோபித்துக்கொண்டு பாடிய பாடல்கள் புற நானூற்றில் உள்ளன. வரிசை அறிந்து ஒழுகல் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்தது.

“மாண்புமிகு அமைச்சரே! உங்களுக்கு முதல் வரிசையில் இடம் போடுகிறோம். எந்த இடத்தில், யாருக்கு அருகில் உங்களுக்கு இடம்போடுவதை நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று பத்திரிக்கையாளர்கள், மரியாதை கலந்த தொனியில், கேட்டனர்.

அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்:

“நான் முதலில் இருக்க விரும்புவது ஒரே இடத்தில்தான்; தீவிபத்து ஏற்பாட்டால், முதலில் நிற்க (வெளியே ஓடுவதற்காக) விரும்புவது நான்தான். மற்ற இடங்களில் எங்கே இடமிருந்தாலும் பரவாயில்லை.”

வரிசை அறிதல்  என்பதன் முக்கியத்துவத்தையும் புலவர் பாடுகிறார். கிராமப்புற கோவில்களில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் நடக்கும் மோதல்கள் பற்றி நாம் அடிக்கடி நாளேடுகளில் படிக்கிறோம். சங்க காலத்தில் மஹாசித்ரன் / பெருஞ்சித்திரனார் என்று ஒரு புலவர் இருந்தார். அவர் தன்னை மதிக்காத வள்ளலை ஏசிவிட்டுப் பாரிஸில் பெறாமலே சென்றார். உரிய மரியாதை கொடுக்காவிடில் தமிழர்கள் சீறி ப் பாய்வார்கள்..

வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்

      மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்

மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்

      முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்

வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்

      வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்

சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்

      திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே. 

என்று உலகநீதி எழுதிய உலகநாதர் கூறுவார்.

XXXX

இப்போது சதகப்பாடலைக் காண்போம்

17. நல்லோர் – 2

அடைக்கலம் எனத்தேடி வருவோர் தமைக்காக்கும்

     அவனே மகாபுரு டனாம்;

  அஞ்சாமல் எதுவரினும் எதுபோ கினும்சித்தம்

     அசைவிலன் மகாதீ ரனாம்;

தொடுத்தொன்று சொன்னசொல் தப்பாது செய்கின்ற

     தோன்றலே மகரா சனாம்;

  தூறிக் கலைக்கின்ற பேர்வார்த்தை கேளாத

     துரையே மகாமே ருவாம்!

அடுக்கின்ற பேர்க்குவரும் இடர்தீர்த் திரட்சிக்கும்

     அவனே மகாதியா கியாம்;

  அவரவர் தராதரம் அறிந்துமரி யாதைசெயும்

     அவனே மகாஉசி தன்ஆம்;

அடர்க்கின்ற முத்தலைச் சூலனே! லோலனே!

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

xxxx

     (இ-ள்.) அடர்க்கின்ற முத்தலைச் சூலனே – (பகைவரைக்)

கொல்லுகின்ற முத்தலைச் சூலம் ஏந்தியவனே!, லோலனே – திருவிளையாடல்

புரிகின்றவனே!, அமலனே – குற்றம் அற்றவனே!, அருமை ………. தேவனே!,

அடைக்கலம் எனத் தேடிவருவோர் தமைக் காக்கும் அவனே மகாபுருடன்

ஆம் – அடைக்கலம் என்று தேடிவருவோர்களைக் காப்பாற்றுவோன் மக்களிற் சிறந்தவன், அஞ்சாமல் எதுவரினும் எதுபோகினும் சித்தம்

அசைவு இலன் மகாதீரன் ஆம் – எது வந்தாலும் எதுபோனாலும் அச்சம் இன்றி உள்ள உறுதியுடன் இருப்பவன் பெருவீரன், என்று தொடுத்துச் சொன்ன சொல் தப்பாது செய்கின்ற தோன்றலே மகராசன் ஆம் –

ஒன்றைப்பற்றிக் கூறிய சொல்லை நழுவவிடாமல் செய்கின்ற தலைவனே பேரரசன், தூறிக் கலைக்கின்ற பேர் வார்த்தை கேளாத துரையே மகாமேருஆம் – வீண்பழி தூற்றி மனத்தைக் கலைப்பவரின் சொல்லை நம்பாத செல்வனே மாமேரு மலை, அடுக்கின்ற பேர்க்குவரும் இடர்தீர்த்து இரட்சிக்கும் அவனே மகா தியாகி ஆம் – தன்னைச் சார்ந்தோர்க்கு வருந் துன்பத்தை நீக்கிக் காப்பவனே பெரிய வள்ளல், அவரவர் தராதரம் அறிந்து மரியாதை செயும் அவனே மகா உசிதன்ஆம் – ஒவ்வொருவருடைய தகுதியையும் பார்த்து மதிப்புக் கொடுக்கின்றவனே சிறந்த தகவாளன்.

xxxx

அடைக்கலம் நாடி வந்தவர்களைக் காப்போரும் , என்ன நேரிட்டாலும், என்ன கஷ்டம் வந்தாலும், மனம் கலங் காதவர்களும் மகா தீரர்கள் ஆவர்.

ஒரு விஷயத்தை ஆரம்பித்தபின்னர் அதன்படியே, சொன்ன சொல் தவறாமல் நடப்பவனே மகாராஜா என்று உலகோரால் போற்றப்படுவான். அதாவது முதலில் சொன்னதைச் செய்யாமல் தப்பிக்க சாக்குப்போக்கு தேடாமல் சத்தியத்தைக் கடைபிடிப்பவனை ‘ராஜா’வே என்று உலகம் பாராட்டும்.

பிறர் பேச்சைக் கேட்டு தவறு செய்யாதவர்கள் மேரு மலை போன்று உயர்ந்தோர் ஆவர் . குன்றிலிட்ட விளக்கு போல பிரகாசிப்பர்.

தன்னை அடுத்து வாழ்பவர்கள் , தனக்குத் தெரிந்தவர்கள் ஆகியோர் கஷ்டப்படுகையில் வலியச் சென்று உதவி செய்து அவர்களைக் காப்பாற்றுபவன் தியாகி ஆவான் .

ஒவ்வொருவருடைய தகுதி, தரம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு அவர்களுக்குரிய மரியாதை செய்பவன் எல்லோருக்கும் நண்பன் ஆவான்.

XXX

ராமாயணத்தில் சரணாகதி /அடைக்கலம்  தத்துவம்

என்னைச் சரணடைந்தவனைக் காப்பேன்; இது என் கொள்கை என்கிறான் ராமன் . யுத்த காண்டப் பாடல் இதோ :

सकृद् एव प्रपन्नाय तव अस्मि इति च याचते ||६-१८-३३

अभयम् सर्व भूतेभ्यो ददामि एतद् व्रतम् मम |

ஸக்ருத் ஏவ பிரபன்னாய தவ அஸ்மி இதி ச யாசதே

அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் விரதம் மம -6-18-33

அடைக்கலம் கொடு என்று ஒரே ஒரு முறை இறைஞ்சி என்னை அணுகினாலும் அவருக்கு எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு வழங்குவேன் இது என்னுடைய விரதம் 

XXX

கம்பனும் இதை அப்படியே கூறுவான் ; அடைக்கலம் தராதோனுக்கு நரகம்தான் கிடைக்கும் என்று ராமபிரான் வாய்மொழியாக கம்பன் உரைக்கிறான்

வீ டணன் அடைக்கலப் படலம்

6478.

உய்ய, ‘நிற்கு அபயம்!” என்றான் உயிரைத் தன்உயிரின் ஓம்பாக்

கய்யனும்ஒருவன் செய்த உதவியில் கருத்திலானும்,

மய் அறநெறியின் நோக்கிமா மறை நெறியில்நின்ற

மெய்யினைப் பொய் என்றானும்மீள்கிலா நரகில்வீழ்வார்.

 நான் உய்யுமாறு உன்னைச்சரண்புகுந்தேன்   என்று   வந்த ஒருவனுடைய; உயிரினைத்

தன்னுயிராகக் கருதிப் பேணிக்காப்பாற்றாத கீழ்மகனும்;  ஒருவன் செய்த உதவியில்  கருத்தில்லாது

மறந்தவனும்;    குற்றம் நீங்க  சிறந்த வேதநெறிப்படி நின்றொழுகும்; உண்மை நெறியைப்

பொய் என்று கூறுபவனும்; மீண்டு   வரமுடியாத   கொடிய நரகத்திலே வீழ்ந்துதுன்புறுவார்.

xxx

6609. ஆதலான்,”அபயம்” என்ற போதத்தே அபய தானம்

ஈதலே கடப்பாடு என்பது; இயம்பினீர் என்பால் வைத்த

காதலான்; இனி வேறு எண்ணக் கடவது என்? கதிரோன் மைந்த!

கோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி’என்றான்.         6.4.118

ஆதலால் ஒருவன் அடைக்கலம் என்று வந்து அடைந்தபோதே அடைக்கலம் அளிப்பதே என் கடமை — என்று ராமன் திட்டவட்டமாக  அ றிவிக்கிறான்

1800 ஆண்டுகளுக்கு முன்னரே   யூதர்களுக்கும் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே  பார்ஸி இனத்தவருக்கும் அடைக்கலம் கொடுத்த நாடு இந்தியா.

—subham—-

Tags- வரிசை அறிதல் , அடைக்கலம், சரணாகதி, ராமன், வீடணன் , விபீஷணன் , மரியாதை

ராமாயணத்தில் நதிகள் – 6 (Post.11527)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,527

Date uploaded in London – 10 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயண வழிகாட்டி

 ராமாயணத்தில் நதிகள் – 6

ச.நாகராஜன்

கம்ப ராமாயணத்தில் கம்பன் காட்டும் நதிகளைப் பார்க்க அவன் பின் தொடர்வோம்:

 3. கங்கை (தொடர்ச்சி)

கங்கைக்கு நிகரான நதிகள் ஐந்து என ஏராளமான ஸ்லோகங்கள் வெவ்வேறு நதிகளைக் கூறுகின்றன.

காவேரிதுங்கபத்ரா,க்ருஷ்ணா,கௌதமிபாகீரதி ஆகியவை பஞ்ச கங்கா ஆகும்.

பாகீரதிகோதாவரிக்ருஷ்ணாபினாகினிகாவேரி

ஆகியவை பஞ்ச கங்கா ஆகும்.

பாகீரதிஅலக்நந்தாமந்தாகினிஆஹ்னவிவிஷ்ணுகங்கா ஆகியவை பஞ்ச கங்கா ஆகும்.

இப்படி இன்னும் பல ஐந்து நதிகளை பஞ்ச கங்கா என்று அழைப்பதைப் பார்க்கிறோம்.

இதிலிருந்தே கங்கையின் மகத்தான புனிதம் நன்கு வெளிப்படுகிறது.

4. கோதாவரி

ஆரணிய காண்டத்தில் ஐந்தாவது படலமாக அமைவது சூர்ப்பணகைப் படலம்.

இதில் முதல் பாடலே கோதாவரியின் பெருமையைப் பேசுகிறது.

கோதாவரி நதியை கவிச் சக்கரவர்த்தி கம்பன், சான்றோர் கவிக்கு ஒப்பிட்டுக் கூறும் ஒப்பற்ற பாடல் இது.

புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்றாகி

அவியகத்துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவிச்

சவியுறத் தெளிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர்

கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.

பாடலின் பொருள் ;

பூமிக்கு ஓர் அலங்காரமாய், சிறந்த பொருள்களைக் கொடுத்து, அறிவினிடத்ததாய் (வயல்களுக்கு உரியதாய்), அமைந்த அகப்பொருளிலக்கணத் துறைவகைகளை உடையதாய், (வெப்பந்தணியத் தக்க இடத்தை உடைய நீராடு துறைகளை உடையதாய்) ஐந்திணை நெறி அளாவி – ஐந்து திணைகளின் இலக்கணத்தைத் தழுவி  (ஐவகைகளின் நிலங்களின் வழியைச் சேர்ந்து), சவி உற தெளிந்து – செவ்வையாகத் தெளிந்து தண் என்ற ஒழுக்கமும் தழுவி – குளிர்ச்சியான நல்லொழுக்கத்தையும் கொண்டு, (குளிர்ச்சியாயப் பெருகும் தன்மையை உடையதாய்) சான்றோர் கவி என கிடந்த – சான்றோர் செய்த கவி போலப் பொருந்தி உள்ள கோதாவரியினை – கோதாவரி நதியை வீரர் கண்டனர்.

பலவகை அலங்காரம் கொண்டிருத்தல், உலகில் உயர்ந்தோரால் கொண்டாடப்படுதல், சிறந்த அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருளை உணர்த்துதல், தன்னைக் கற்போர்க்கு நுண்ணறிவை விளைத்தல், அறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்யச் செய்ய நன்கு புலப்படும் ஆன்ற பொருளை அறிவுக்கு உரியதாதல், எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்னும் தமிழ் இலக்கணம் ஐந்தினுள் பொருளின் பகுதியாகிய அகம், புறம் என்ற இரண்டில் அகத்தில் களவு கற்பு என்னும் ஒழுக்கங்களைக் கூறுதல்,குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்தின் ஒழுக்கங்களைக் கூறுதல், விளங்க வைத்தல் என்னும் அழகை முழுதுமாகத் தருதல், தண் என்று நல்லொழுக்கத்தை உணர்த்துதல் என இப்படி கவிதையின் சிறப்பைக் கூறி அது அப்படியே பெருகி ஓடும் கோதாவரி நதிக்கு ஒப்பிடுவது  மிக்க சிறப்புடையதாகும்.

கோதாவரி நங்கை இராமன் முதலியோர் வருவதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி கொண்டாள். தெய்வ நதியான அவள் தனது தாமரை போன்ற முகம் மலர தனது அலைகளான கைகளால் பூக்களை வாரித் தூவி அவர்களை வணங்குகிறாள்.

இதை இரண்டாம் பாடல் விவரிக்கிறது:

“வண்டுறை கமலச் செவ்வி வாண்முகம் பொலிய வாசம்

உண்டுறை குவளை யொண்கணொருங்குற நோக்கி ஊழின்

தெண்டிரைக் கரத்தின் வாரித் திருமலர் தூவி”

என்று கூறுகிறான் கம்பன்.

இராவணன் சீதையைத் தூக்கிச் செல்ல, சீதை பல பொருள்களைப் பார்த்து இரங்கிப் புலம்புகிறாள்.

சீதை கோதாவரியைப் பார்த்து

‘கோதாவரியே குளிர்வாய் குழைவாய்

மாதாவனையாய் மனனே தெளிவாய்

ஓதாதுணர்வாருழையோடினை போய்

நீதான் வினையேனிலை சொல்லலையோ

என்கிறாள்.

கோதாவரி நதி இயல்பாகக் குளிர்ந்துள்ளது.

உள் நெகிழ்ச்சி உடையது. ஆகவே அன்னை போன்றது. அகம் தெளிந்துள்ளது.

இப்படிப்பட்ட அரும் நதியிடம் தன் நிலைமையைப் பற்றிக் கூறுமாறு சீதை வேண்டுகிறாள்.

ஆக கம்பனின் கவித் திறம் கோதாவரியை வர்ணிக்கும் போது உச்சகட்டத்தை அடைகிறது.

ஏனெனில் கவிதையின் இலக்கணத்தையும் கோதாவரியை காரணமாக வைத்துச் சொல்லி விடுகிறான் இல்லையா?!

***

பெண்களை நம்பலாம்: என்னுடைய 3 புஸ்தகங்கள் சொல்கின்றன (Post.11,526)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,526

Date uploaded in London – 9 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

நான் வெளியிட்ட 56 தமிழ் புஸ்தகங்களில் மூன்று புஸ்தகங்கள்,   பெண்கள் பற்றியன.

பெண்களை நம்பாதே, கண்களே பெண்களை நம்பாதே —என்பது திரைப்படப் பாடல் .

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் —என்பது மற்றொரு  திரைப்படப் பாடல் .

இவையெல்லாம் சரிதானா என்பதைப் புஸ்தகங்ககளைப் படித்துப் பார்த்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

புது விஷயம் இருந்தால் எனக்கு எழுதுங்கள்.

XXXX

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

பெண்கள் வாழ்க !

பொருளடக்கம்

1.பெண்கள் வாழ்க – நூல் எழுதக்  காரணம்

2.பெண் புலவர்கள் பற்றி ஆராய்ச்சி – சங்கப் புலவர் பட்டியல்

3.ரிக் வேத பெண் கவிஞர்களின் பட்டியல் பெண் கவிஞர்களின் அறிவு சம்பாஷனைக் கவிதைகள்

4.சாதனை புரிந்த இந்துப் பெண்கள்

5.பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ -பாரதி

பெண்கள் பற்றி மநு தர்ம சாஸ்திரம்

 6. புத்திசாலி தமிழ்ப் பெண்கள்!

7.பெண்களின் வியத்தகு அறிவு

8. உலகிலேயே அதிர்ஷ்டசாலிப் பெண்கள்!

9.அதிர்ஷ்டசாலிகள்- திறமைசாலிகள் என்பதற்கு 33 காரணங்கள்

10.  33 காரணங்கள் நிறைவுரை!

11 . இம்மையிலும் மறுமையிலும் ஒரே கணவன்

12.காதல் திருமணம் தோல்வியே!

13.பெண்கள் பற்றி வராஹமிஹிரர் !

14.போர்க் காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு

பெண்கள் தொடர்பான பழமொழிகள்

15. ‘பெண் கொலை’ பெரிய பாவம்

16.ராமாயண காலத்தில் ஒரு பெண்துறவி

17.வரதட்சிணை முறை தலைகீழாக மாறியது எப்படிபெண் ஆட்சியாளர்கள்;

18.பெண்கள் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள்கற்பிற்கு எடுத்துக்காட்டு அருந்ததி;

19. பூமி எனது தாய்நான் அவள் மகன் ;சுயம்வரம் ;பெண் தெய்வ வழிபாடு;;

நதிகளுக்கும் நல்ல குணங்களுக்கும் பெண்களின் பெயர்களே!

20.பெண்களைப் பற்றி பாரதி 

21 .மனைவி பெயரே முதலில் வரும்

22 .பெண்கள் எட்டு வகை அறிந்து கொள்க

 23.பொம்பளை சிரிச்சாஉதைச்சாபார்த்தா போச்சு!

XXXX

மனைவி ஒரு மருந்து !!

பொருளடக்கம்

1.மனைவி ஒரு மருந்து- மஹாபாரதப் பொன்மொழி

2.மனைவி- குடும்ப விளக்கு, மகன் -குல விளக்கு!!

3.சீமந்தத்தின் விஞ்ஞான ரகசியம்! அக்கு பங்சர்!!

4.அறுபத்து நான்கு கலைகள் — உலகம் வியக்கும் பெண்கள் பாட திட்டம் !!

5.இரண்டாயிரம்  ஆண்டுகளாக பெண்கள் செய்யும் வியாபாரம்

6.அகநானூற்றில் MISS GOOD FRIDAY! ‘மிஸ் குட்Fரைடே’

7.அற்புதப் பெண்மணி அருந்ததி!

8.புத்திசாலிப் பெண்களின் சைகை மொழிகள்!

9.பெண்கள் பேசினால்………… தமிழ்ப் புலவர் கதறல்!

10.கணவன் தெய்வமாம்! பெயரை சொல்லக் கூடாதாம்!!

அடுத்த ஜன்மத்திலும் அவரே…. !!!

11.பாண்டிய மஹாராணி தீயில் குதித்ததற்கு தொல்காப்பியமே காரணம்?

12.பாரி மகள் போட்ட தங்க சோறு! தமிழர் வளம்!!

13.கற்பு பற்றி வள்ளுவர், வால்மீகி , கம்பர், ஷேக்ஸ்பியர், மநு!

14.இந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 1

15.இந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 2

16.தமிழ் இலக்கியத்தில் ஐம்பால் கூந்தல் – வேதத்தில் சிகை அலங்காரம்

17.தாலியை வைத்து கம்பன் சொன்ன கடும் வசவு

18.பெண்களிடம் ரஹஸியம் சொல்லக்கூடாது; ஏன்?

19.பெண்கள் குரங்குகள்! மஹாபாரதம் விசித்திர தகவல்

20.பெண்கள் மீது கை வைத்தால்………. கம்பன் எச்சரிக்கை!

21.பெண்கள் அழிவது எதனாலே? பிராமணர் அழிவது எதனாலே?

22.பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- Part 1

23.பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- Part 2

24.பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- இறுதிப் பகுதி

25.ஐயர்கள் உஷார்! பெண்களும் போட்டிக்கு வருகிறார்கள்!!

26.பெண்கள் வாழ்க

27.கெட்டிக்காரி யார்? ஒரு சமண மதக் கதை

28.உப்பு விற்கும் பெண் பாடிய கவிதை!

29.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த பரிசு!

30..மூன்றும் கிடைக்காது! வேடிக்கைக் கவிதை

XXX

தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்

பெண்கள் !!!

பொருளடக்கம்

1.பங்குனி உத்திரத்தில் ராமன், சிவன் கல்யாணம் ஏன்?

2.ராமாயணம் படித்தால் சாபம் தீரும்! ராமாயண அதிசயங்கள்!

3.வால்மீகி ராமாயணத்தில் 3462 உவமைகள்!

4.பதஞ்சலி நூலில் கிஷ்கிந்தா மர்மம்

5.அனுமன் பிறப்பிடம் விவாதம்

6.நாலு குணங்கள் பற்றி வள்ளுவனும் வால்மீகியும்

7.வீணைக் கொடியுடைய வேந்தனே!

8.கம்பனின் அதிசயத் தமிழ் சிலம்பம்!

(9). 300 ராமாயணமா? 3000 ராமாயணமா?

10.அதிசயத் தமிழ் முனிவர் ‘புலவர் வால்மீகி’

11.வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்-1

12.கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் – 2

13.‘இதை உனக்காக நான் செய்யவில்லை’–

 வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் – 3

14.‘வாழ்நாள் முழுதும் கணவனுக்கு பணிவிடை’-

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -4

15.பெண் சந்யாசிகள்- வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -5

16.விலை மாதரும் ஆடல் அழகிகளும் —

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்- 6

17.அஹல்யா மானபங்கம் –வால்மீகி

 ராமாயணத்தில் பெண்கள் -7 (இறுதிப் பகுதி)

 18.சீதையிடம் அனுமன் கண்ட இரண்டு அதிசயங்கள்!

19.வாயு பகவான் சொன்ன ரகசியம்: கம்பன் தகவல்

20..இலங்கைத் தீவு உண்டானது எப்படி?

வாயு பகவான் பற்றிய அதிசயச் செய்திகள்

21.சிந்து சமவெளியில் ராமாயண முத்திரை!!

22.இலக்கியத்தில் 51 வகை  பெண்மணிகள்!

23.அதிசயப்  பெண்கள்- எட்டு மொழிகளில் 100 கவிகள் – 24 நிமிடங்களில்!

24.கணவனுக்காகப் போராடிய தமயந்தி, சாவித்திரி

25.வேதத்தில் இரண்டு வகைப் பெண்கள்

26.பெண்கள், ரத்தினம், கல்வி: எங்கிந்தாலும் பெறுக!

27.கணவனுடன் எரிந்து கருகிய தமிழ்ப் பெண்கள் பட்டியல்-1

28.கணவனுடன் எரிந்து கருகிய தமிழ்ப் பெண்கள் பட்டியல்-2 

29.இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள்! – பகுதி-1

30.இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள்- பகுதி 2

31.ஒரு தாய், ஆயிரம் தந்தைகளை விடப் பெரியவள்

32.கர்ப்பிணிப் பெண்களைப் பார்க்கப் போகும்போது

33.யமன் (எமன்) போல வந்த 3 பெண்கள்!

34.இந்து மதத்தில் காதல், கடத்தல் கல்யாணங்கள்!!

35.தமிழனுக்கு முத்தம் கொடுக்கத் தெரியாது? -1

36.தமிழர்களுக்கு முத்தம் இடத் தெரியாது? -2

****************

—Subham—

Tags-பெண்கள், இலக்கியத்தில், மனைவி, மருந்து, வாழ்க , என் புஸ்தகங்கள் தமிழ்

Tamil Hindu Encyclopaedia 35: திரிபுரம் எரித்தவன்- Tripurantaka in Sangam Tamil Corpus (Post No.11,525)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,525

Date uploaded in London – 9 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Let us continue with Lord Siva in Tamil Sangam Literature.

More Tamil references are given below with brief notes;

கலித்தொகை-1 Kalittokai Prayer Song

1. கடவுள்வாழ்த்து

ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,

தேறு நீர் சடைக் கரந்துதிரிபுரம் தீ மடுத்து,

கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி;

மாறாப் போர், மணி மிடற்றுஎண் கையாய்! கேள், இனி;

படு பறை பல இயம்பப், பல் உருவம் பெயர்த்து நீ, 5

கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல்,

கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?

மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,

பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள்,

வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ? 10

கொலை உழுவைத் தோல் அசைஇக், கொன்றைத் தார் சுவல் புரள,

தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,

முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?

      என வாங்கு;

பாணியும், தூக்கும், சீரும், என்று இவை 15

மாண் இழை அரிவை காப்ப,

வாணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி.

This prayer song was composed by Tamil Sangam poet Nallanthuvanar, who is praised by another famous Sangam poet Maruthan Ilanagan. This gives a full description of Lord Siva and his great actions.

1.Brahmins who study six subjects are taught Vedas by you.

2.You took the Ganges water in your hair to control its tremendous speed.

3.You burnt down the three flying metal forts (TRI PURA) in the sky (what I guess as Space Stations in orbit built by demons/Asuras where shiva used his laser weapon).

4.You are capable waging war where you never show your back- don’t run away—

5.You have blue throat– see the previous part about Siva drinking poison to save humanity

6.You have eight hands – such sculptures are seen in South East Asian temples

7.You did a dance called KODUKOTTI  to the accompaniment of kettle drum where you took different postures. Kotti is the Armageddon dance at the end of the world. Hindus believe in cyclical yugas unlike Abrahamic religions.

8.You did Pandarangam dance to burn down the flying castles and smeared the ash in your forehead of the burnt down demons.

9.You also did another dance with the skull of brahma. He plucked out one of the five heads of brahma to control his arrogance.

10. Siva wears Tiger skin and Kondrai Flower garland.

No one can reject this prayer song because all that is said here is confirmed by Sangam poets elsewhere. On the basis of  which voluminous devotional literature called Tevaram and Tiruvasagam came out from the great Four Saivite saints.

Xxx

நீ சிவபெருமானைப் போல வாழ்க.Long Live like Lord Siva

புறநானூறு 91 Pura Nanuru Verse 91

பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி  5

நீலமணி மிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும! நீயே, தொல் நிலைப்

 By Poetess Avvaiyaar on Athiyaman Anji

Whitish (with holy ash) forehead with crescent moon and sapphire colour throat Siva).

Xxx

புறநானூறு 55 Purananuru 55

பாடல்

ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,

ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி,

பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த

கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்

பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல,                              5

Tamil poet Maruthan Ilanagan compared Pandya Nanmaran to the Third Eye of Lord Siva. Siva is unique in having Third Eye. Poet says the other two Tamil Kings Chera and Choza are like two normal eyes; but you are unique like the Third Eye of the Spot Necked God who with one arrow shot destroyed the Three Forts for saving Devas and he did it by using the snake as the bow string.

All the Puranic lore are known to every Tamil in ancient Tamil Nadu.

Xxx

Ravana lifting Kailash

கலித்தொகை 38

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்

உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,

ஐ இரு தலையின் அரக்கர் கோமான்

தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்துஅம் மலை

எடுக்கல் செல்லாது உழப்பவன் போல    5            

உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்

கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை

நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்

கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்:

Venkai in Tamil has two different meanings: Tiger and a  particular tree. Since it has got yellow flowers it looked like tiger, particularly when it sheds its flowrers on a rockunder the tree. So all Tamil poets punned on this word Venkai. The most celebrated poet Kabilar sings in Kalittokai (38):

An elephant in rut mistakes a Venkai tree fully in blossom to a tiger and in great anger it gores into its trunk with its tusks but the poor animal was unable to take off its tusks from it like Ravana who attempted to lift up the Kailas mountain with his arms but shrieked and suffered, when caught under pressure.

To be continued……………………………..Tags- Ravana, Kailash, Siva, Tripurantaka, Blue throat, Siva Dance

2 சம்பவங்கள் – செய்நன்றி, நேர்மை பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post No.11524)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,524

Date uploaded in London – 9 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 எங்கோ கிடைத்த பொருளை அதை உரியவரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கவிபாடிய ஒரே புலவர் அம்பலவாண கவிராயர் ஒருவர்தான் 

இரண்டு சம்பவங்கள்  நேர்மைக்குப் பரிசு

1,000 வெள்ளியுடன் பணப்பையைத் தொலைத்த வெளிநாட்டு ஊழியரிடம் அதைப் பத்திரமாக ஒப்படைத்த மற்றொரு ஊழியர் (பிப்ரவரி 2022 செய்தி)

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் ஹபிப் கான், இந்த மாதம் 14ஆம் தேதி, தமது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதில் 1,000 வெள்ளி ரொக்கம், வங்கி அட்டை, வேலை அனுமதி அட்டை அனைத்தும் இருந்தன.

உடனடியாக தமது Facebook பக்கத்தில் பதிவு ஒன்றைச் வெளியிட்டார்.

பணப்பையைக் கண்டால் தம்மை உடனே தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

அவரது பதிவைப் பார்த்த பலர், உடனடியாக அதைப் பகிர்ந்தனர்.

பதிவு கிட்டத்தட்ட ஆயிரம் முறை பகிரப்பட்டது.

பணப்பையைக் கண்டெடுத்த ஜாகிர் ஹுசைன் எனும் மற்றொரு வெளிநாட்டு ஊழியரையும் அந்தப் பதிவு எட்டியது.

உடனே ஹபிபைத் தொடர்பு கொண்டு அவரிடம் பணப்பையைத் திருப்பிக் கொடுத்தார் ஜாகிர்.

பணப்பையில் அனைத்தும் பத்திரமாக இருந்ததைக் கண்டு ஹபிப் நெகிழ்ந்துபோனார்.

ஹுசைனை மனமாரப் பாராட்டி அவர் வெளியிட்ட பதிவும் இணையவாசிகளிடையே பரவியது.

“உழைத்து ஈட்டிய பணம் நிச்சயம் பத்திரமாக இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டேன். எனக்கு இவ்வளவு பேர் மனமுவந்து உதவுவர் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.”

என்று நெகிழ்ச்சியுடன் பதிவில் குறிப்பிட்டார் ஹபிப். 

XXXX

நேர்மைக்குப் பரிசு

நேர்மைக்கு கிடைத்த பரிசு” – வீதியில் கிடந்த நகையை போலீசிடம் ஒப்படைத்த பெண் JANUARY 2022 NEWS

ஈரோட்டில் வீதியில் கிடந்த நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர். கோகிலா என்பவர் காடையாம்பட்டி பகுதியில் மூன்றே முக்கால் சவரன் தாலிக்கொடியை தவறவிட்டுள்ளார். இந்த நகையை அதே பகுதியை சேர்ந்த ருக்மணி என்பவர் கண்டெடுத்து பவானி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ருக்மணியின் செயலை பாராட்டும் விதமாக காவல்துறையினர் பரிசு வழங்கி கவுரவித்தனர். 

இப்படி வாரம் தோறும் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டவண்ணம் உள்ளன .கண்டெடுத்த பொருளைத் திருப்பிக்கொடுக்க பெரிய மனது இருக்க வேண்டும் .அம்பலராயக் கவிராயர் தவிர யாரும் இதைப் பாடலில் எவரேனும் வடித்திருப்பார்களா என்பது சந்தேகமே .

 XXX

 உண்மை என்பதை மதிக்கும் ஒரே நாடு பாரதம் தான். சத்யமேவ ஜயதே என்ற உபநிஷத வாக்கியத்தை நாட்டின் சின்னத்தில் பொறித்த நாடு இந்தியா . இதைத் தமிழில் மொழிபெயர்த்து, வாய்மையே வெல்லும் என்ற வாசகத்தை தமிழ்நாடு அரசும் பொறித்துள்ளது தாயார் சொன்ன ஹரிச்சந்திரன் கதை மஹாத்மா காந்திஜியின் வாழ்வை எப்படி மாற்றி, உலகப் புகழ்பெற வைத்தது என்பதை நாம் அறிவோம்.

 வேத பாட சாலைக்குள் சிறுவன் நுழைந்த வயதில் முதல் பாடம் சத்யம் வத / உண்மையே பேசு என்பதாகும். 

குலம் கோத்திரம் தெரியாத சத்யகாம ஜாபாலா என்ற சிறுவன் கதை உபநிஷதத்தில் உள்ளது. எனக்கு அம்மா பெயர் மட்டுமே தெரியும்; அப்பா பெயர் தெரியாது; இதை அம்மாவே சொன்னாள் என்று சிறுவன் ஜாபாலா சொன்னதைக் கேட்ட குரு நெகிழ்ந்து போனார். நீ உண்மை பேசுவதால் வேதம் பயில அருகதை உடையவன் நீ என்று அவர் அறிவிக்கிறார்.

XXX

வி ஜி எஸ்  என்ற வி ஜி சீனிவாசன் எங்களுக்கு மதுரை சேதுபதி உயர்நிலைப்பலள்ளியில் தமிழ் மொழி மீது ஆர்வம் ஏற்படுத்திய குருநாதர் ஆவார். அவர் சொல்லிக்கொடுத்த நேர்மைக்கான வழி ஒன்றையும் நினைவு கூறுதல் பொருத்தம். யாராவது கள்ள நாணாயம் அல்லது கள்ள ரூபாய் கொடுத்து உங்களை ஏமாற்றினால் நீங்கள் அதை நைஸாக வேறு ஒருவரிடம் கொடுத்து ஏமாற்றாதீர்கள் ; அதை இரண்டு துண்டாக வெட்டிப் போடுங்கள் என்றார் . இதன் மூலம் ஏமாற்றும் சுழற்சியை நாம் வெட்டிவிடுகிறோம்

ரோட்டில் பணம் கிடைத்தால், அதை இழந்தவரிடம் சேர்ப்பிக்க முடியாவிட்டால், ஏழைகளுக்குக் கொடுக்கலாம் அல்லது கோவில் உண்டியலில் போட்டுவிடலாம். பணத்தை இழந்தவரிடம் கடவுளே  சேர்ப்பித்து விடுவார்.

செய்நன்றி

மேற் கூறிய இரண்டு பணம், நகை கண்டெடுப்பு சம்பவங்களிலும் அவர்கள் செய்த உதவிக்கு உடனே நன்றி மறக்காமல் பதில் உதவியும், நன்றி யும் கிடைப்பதை பார்க்கலாம். 

வள்ளுவனும் 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு –குறள் 110

xxxx

 புறநானூறு

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்

மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்

பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

வழுவாய் மருங்கிற் கழுவாயும் உளவென

நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்

செய்தி கொன்றோர்க்குய்தி இல்லென

அறம்பா டிற்றே ஆயிழை கணவ” (புறநா 34:1-7) என்று புறநானூறு இயம்பும். இது வால்மீகி  இராமாயண சுலோகத்தின் மொழிபெயர்ப்பு (See my earlier article)

Xxxx

அறப்பளீச்சுர சதகம்-16

செய்ந்நன்றி மறவாத பேர்களும், ஒருவர்செய்

     தீமையை மறந்த பேரும்,

  திரவியம் தரவரினும் ஒருவர்மனை யாட்டிமேற்

     சித்தம்வை யாத பேரும்,

கைகண் டெடுத்தபொருள் கொண்டுபோய்ப் பொருளாளர்

     கையிற்கொ டுத்த பேரும்,

  காசினியில் ஒருவர்செய் தருமம்கெ டாதபடி

     காத்தருள்செய் கின்ற பேரும்,

பொய்யொன்று நிதிகோடி வரினும் வழக்கழிவு

     புகலாத நிலைகொள் பேரும்.

  புவிமீது தலைபோகும் என்னினும் கனவிலும்

     பொய்ம்மையுரை யாத பேரும்,

ஐயஇங் கிவரெலாம் சற்புருட ரென்றுலகர்

     அகமகிழ்வர்! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருமை……….தேவனே!, செய்ந்நன்றி மறவாத பேர்களும் –

(ஒருவர்) செய்த உதவியை மறவாதவரும், ஒருவர் செய் தீமையை

மறந்தபேரும் – ஒருவர் செய்த கெடுதியை மறந்தவர்களும், திரவியம்

தரவரினும் ஒருவர் மனையாட்டிமேல் சித்தம் வையாத பேரும் –

பொருளைக் கொடுக்கவந்தாலும் பிறர் மனைவியின்பால் மனத்தைச்

செலுத்தாதவர்களும், கை கண்டு எடுத்த பொருள் கொண்டுபோய்ப்

பொருளாளர் கையில் கொடுத்தபேரும் – கையினாலே கண்டெடுத்த

பொருளைப் பொருளுக்கு உரியவரிடம் கொண்டுபோய்க்

கொடுத்தவர்களும், காசினியில் ஒருவர் செய் தருமம் கெடாதபடி

காத்தருள் செய்கின்ற பேரும் – உலகில் ஒருவர் செய்த அறம்

கெடுதலுறாமற் காப்பாற்றுகின்றவரும், பொய் ஒன்று நிதி கோடிவரினும்வழக்கு அழிவு புகலாத நிலைகொள் பேரும் – நிலையற்ற செல்வத்தைக்

கோடிக்கணக்காக ஒருவர் கொடுத்தாலும் அழிவழக்குக் கூறாத

நிலையுடையவரும், புவிமீது தலைபோகும் எனினும் கனவிலும் பொய்ம்மை

உரையாத பேரும் – உலகத்திலே தலைபோகும் என்றாலும் கனவிலேயும்

பொய் புகலாதவரும், இங்கு இவரெலாம் ஐய சற்புருடர் என்று உலகர்

அகம் மகிழ்வர் – இவ் வுலகில் இத்தகையோர்கள் யாவரையும் அழகாகிய

நன்மக்கள் என்று உலகமாந்தர் மனம் களிப்பார்கள்.

இந்தப் பாடலில் உள்ள ஏனைய கருத்துக்களை முன்னரே விளக்கியுள்ளேன். பிறன்மனை நோக்காதவரை பேராண்மை — மஹா வீரம் — உடையவர் என்றான் வள்ளுவன். இந்தியாவில் இருவருக்கு மட்டுமே இந்த மாவீரர் பட்டம்; ஜிதேந்திரியர்களான — ஐம்புலன் வென்ற — சமண தீர்த்தங்கரர் மஹாவீரர் — அனுமன் — ஆகிய இருவருக்கு மட்டுமே மாவீரர் பட்டம் கிடைத்தது என்பதை முன்னேரே சொன்னேன்.

— சுபம் —-

tags- செய் நன்றி, நேர்மைக்கு பரிசு, உண்மை, பிறர் பொருள்

அருள்வாயே! – 7(Post No.11523)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,523

Date uploaded in London – 9 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதர் தொடர்! 

அருள்வாயே! – 7

ச.நாகராஜன் 

அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:

படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!

55) திருத்தணிகை 

  சேவற்கொடி யொடுசி கண்டியின்

    மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கிய

      தேசுக்கதிர் கோடியெ னும்பத மருள்வாயே

பாடல் எண் 300 –   ‘வார் உற்று எழும்’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  சேவல் கொடியோடு, மயிலின் மீது நீ ஆரோகணித்து, அறிஞர்கள் பாடிய உனது திருப்புகழ் நிறைந்துள்ள ஒளி ஜோதி கோடி என்னும்படி வீசுகின்ற திருவடியை அருள்வாயாக!

56) குன்றுதோறாடல்

  உன்

   அபயம் புகுவ தென்று நிலைகாண 

இதயந் தனிலி ருந்து க்ருபையாகி

   இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே

பாடல் எண் 303 –   ‘அதிருங் கழல் பணிந்து’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  நீயே புகலிடம் என்று மெய் நிலையைக் காணுமாறு எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து துன்பங்களும், சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக!

57) குன்றுதோறாடல்

  செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞானமூறு

    செங்கனி வாயி லோர்சொ லருள்வாயே

பாடல் எண் 306 –   ‘வஞ்சக லோப மூடர்’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  செழுமையான தமிழ்ப் பாட்டுக்களால் தினமும் பாடி வாழ்வுற ஞானம் சுரக்கும் சிவந்த கோவைக்கனி போன்ற திருவாயால் ஒரு திருமொழியை அருள்வாயாக!

58) ஆறு திருப்பதி

   கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை

     கழலிணை பெறவேயினி யருள்வாயே

பாடல் எண் 307 –   ‘அலைகடல் நிகராகிய’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  பொதுமகளிருடன் இன்பமாகக் கூடி அவர்களுடைய பாரமான மார்பங்கங்கள் மேல் விழும் வஞ்சகனும் முழு மூடனுமான  என்னை உனது திருவடி இணையினைப் பெறுமாறு இனி அருள்வாயாக!

59) காஞ்சீபுரம்

 திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்

  திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்

    சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் றருள்வாயே

பாடல் எண் 314 –   ‘புன மடந்தைக்கு’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  திக்குகள் தோறும் உள்ள யாவருக்கும் எடுத்து உபதேசிக்க, இனிமேல் நீ சற்று தயை கூர்ந்து வெட்சி மாலை மணம் வீசும் சிறிய சதங்கை அணிந்துள்ல உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து அருள்வாய்?

60) காஞ்சீபுரம்

 பெருமானென்

றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்

 செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்

   றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென் றருள்வாயே

பாடல் எண் 316 –   ‘செறி தரும் செப்பத்து’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  காஞ்சீபுரத்தில் நின்று அருளும் பெருமா  நீ என்றும், நெகிழ்ந்து உருகும் அன்பின் வசமாகி, திருவருள் நெறியைப் பயின்று மனத்தின் செயல் எல்லாம் நீங்கப் பெற்று அந்த நிலையில் எட்டப்படுவதான பொருளைச் சென்று அடைகின்ற மனப் பக்குவத்தை அடியேனுக்கு என்றைக்குத் தந்தருள்வாயோ?!

61) காஞ்சீபுரம்

 மற்றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்

   கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்

     டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் றருள்வாயே

பாடல் எண் 319 –   ‘தசைதுறுந் தொக்கு’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  பிறர் யாவரும் இகழும் படியான இந்தப் பிறப்பு இங்கு போதும் போதும். வெட்சி மலர் அணிந்ததும் அழகிய ரத்தின மணிகள் அணிந்ததும், தாமரை போன்றதுமான உன் திருவடியைப் பற்றிச் சேர்வதற்கு எப்போது எனக்கு அருள்வாய்?!

62) காஞ்சீபுரம்

இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்

  இதவிய பாதாம்புய மருள்வாயே

பாடல் எண் 338 –   ‘கமலரு சோகாம்பர’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  (பெண் மீது மோகம் மிக்கு எழும் இன்ப நுகர்ச்சியை) இனி விட்டு ஒழிப்பதற்கு  வேத முடிவான, பரம சுகம் தருவதான, முக்திப் பொருளாகிய, இன்பம் தருவதான பாதத் தாமரைகளைத் தந்து அருள்வாயாக!

63) காஞ்சீபுரம்

பார டைக்கலக் கோல மாமெனத்

 தாப ரித்துநித் தார மீதெனப்

  பாத பத்மநற் போதை யே தருத் தருள்வாயே

பாடல் எண் 343 –   ‘சீசி முப்புரக் காடு’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  உலகில் எனக்குப் புகலிடமாக இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து, ஆதரவுடன் யான் நித்தியமான ஓர் ஆபரணத்தை அணிவதற்காக உன் திருவடியாகிய நற் கமல மலரை என் மீது தரிக்கச் செய்து அருள்வாயாக!

64) காஞ்சீபுரம்

விரகு கெட்டரு நரகு விட்டிரு

  வினைய றப்பத மருள்வாயே

பாடல் எண் 345 –   ‘படிறொழுக்கமும்’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  (அந்த) கேவலமான வாழ்வு நீங்கி, அரிய நரகத்தில் நான் விழுவது விலகி, நல்வினை, தீவினை என்ற எனது இரு வினைகளும் ஒழிய, உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக!

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

                                             ***.                                  தொடரும்

இந்துமதம் உலகம் முழுதும் இருந்ததற்குச் சான்றுகள் (Post.11,522)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,522

Date uploaded in London – 8 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

இந்துமதம் உலகம் முழுதும் இருந்ததற்குச்  சான்றுகள்

நான் எழுதிய கீழ்கண்ட புஸ்தகங்களில் இந்துமதம் உலகம் முழுதும் இருந்தததற்கான வரலாற்று, இலக்கிய , தொல்பொருட் துறைச் சான்றுகளை கொடுத்துள்ளேன் ; படித்து மகிழுங்கள்

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு

1.சுமேரிய கல்யாணம்- இந்து திருமணம் ஒப்பீடு

2.சுமேரியாவில் கல்லீரல் ஜோதிடம்

3. கல்லீரல் மூலம் ஹிட்டைட்ஸ், எட்ருஸ்கன் ஜோதிடம்

4.பாபிலோனிய எல்லைக் கற்களும் இந்தியக் கல்வெட்டுகளும் 

5. பேயை விரட்ட எலியே போதும்! ஹிட்டைட்ஸ் கண்டுபிடிப்பு!

6. மெசபொடோமியாவில், எகிப்தில் நாய் தெய்வம்! 1000 நாய்கள் கல்லறை!

7. சிந்து சமவெளி,  கில்காமேஷ் காவியம், உத்தர குரு தொடர்பு!!

8.‘மூன்றில் இரண்டு பங்கு இறைவன்; ஒரு பங்கு மனிதன்’- கில்காமேஷ்

9. கில்காமேஷ்- இந்துசமய தொடர்பு பற்றி மேலும் சில தகவல்கள்

10.சுமேரியாவை இந்திரன் தாக்கியது ஏன்?

11.சுமேரியாவில் சம்ஸ்கிருத சொற்கள்!!

12. மிட்டன்னி மர்மம் நீடிக்கிறது- இந்துக்கள் உடனே செயல்படவேண்டும்

13. சுமேரு, குமேரு, பாமேரு, மேரு

14.சுமேரிய இந்திய ஒற்றுமைகள்

15. இராக்கில் 3000 கடவுள்: இந்துக்கள் போல சிலைக்கு ‘கண் திறக்கும்’ அதிசயம்!

16. சுமேரியாவில் இந்து புராணக் கதை!

17. சுமேரியாவில் தமிழ் பறவை

19. பஹ்ரைன் அதிசயங்கள்

19. தேள் — ஒரு மர்ம தெய்வம்!

20. சிரியா நாட்டில் இந்துக் கோவில்!

21.சுமேரிய மருத்துவமும், அதர்வண வேத கால மருத்துவமும்

22.குரீர, வடு, திமில் – சொல்  ஆராய்ச்சிக் கட்டுரை -1

23.AKKADIAN-SUMERIAN LINK குரீர, வடு, திமில் – சொல் ஆராய்ச்சிக் கட்டுரை -2

24.AKKADIAN-SUMERIAN LINK குரீர, வடு, திமில் – சொல் ஆராய்ச்சிக் கட்டுரை -3 

******

16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!

கிரேக்க நாட்டில் இந்துமத  சடங்குகள்கதைகள்!!

CONTENTS

1.கிரேக்க – தமிழ் மொழி தொடர்பு

2.கிரேக்க – தமிழ் மொழி தொடர்பு -பகுதி 2

3.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்- பகுதி 3

4.ரிக் வேத சரமாகிரீஸ் நாட்டுக்கு போனது எப்படி?

5.இந்திய ‘ரிஷி’ கிரீஸில் ‘கரடி’ ஆன கதை!- Part 1 (Post No.10,724)

6.இந்திய ரிஷி கிரீஸில் கரடி ஆன கதை!- Part 2 (Post No.10,728)

7.டெல்பி ஆரூடமும் குறி சொல்வோரும்

8.தமிழ் பூதமும் கிரேக்க பூதமும்

9.அரிஸ்டாடிலும் இந்திய யானையும்

10.சாக்ரடீஸ்பிளாட்டோ பற்றி எழுதிய லூசியஸ் அப்யூலியஸ்

11.கிரீஸ் நாட்டின் புலவர் ஹோமர்

12.பெரியது கேட்கின்….. ஏனிட் பெரிது,

அதனினும் பெரிது இலியட்அதனினும் பெரிது… 

13.நகைச்சுவை நாடக மன்னன் அரிஸ்டோபனிஸ்

14.எண்பது  நாடகம் எழுதிய ஏஸ்கைலஸ்!

15.சோக நாடக மன்னன் யுரிபிடீஸ்

16. குழந்தை பெறுவதைவிட 3 முறை போர்க்களம் செல்வேன் –

கிரேக்க பெண் புலம்பல்

17.பெண்கள் மீது காதல் கொண்ட பெண் கவிஞர் Lesbian சாஃப்போ

18.பேனா முனையும்கத்தி முனையும்!

சொல் வீச்சும் வாள் வீச்சும்! 2 சம்பவங்கள்

XXX

19.நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர்

20.அலெக்ஸாண்டர் பாதி! ஆல்கஹால் பாதி!

21.அலெக்ஸாண்டர் ‘புராண’மும்ஜொராஸ்டர் அதிசயமும்

22.கிரேக்க நாட்டில்  இந்துமத ஞானி பிதகோரஸ்- 1

23.கிரேக்க நாட்டில்  இந்து மத ஞானி பிதகோரஸ்- 2;

ஒற்றைப்படை எண்கள் பெண்கள்!  இரட்டைப் படை எண்கள் ஆண்கள்!!

24.கிரேக்க நாட்டுப் புலவர் பிண்டார் (கி.மு.2500)

25.சாக்ரடீசும் அவ்வையாரும்!

26.சாக்ரடீஸுக்கு வேதம் கூட தெரியும்!

27.சாக்ரடீஸுடன் 60 வினாடி பேட்டி

28.யவனர்கள் கிரேக்கர்களா ஆமாம் / இல்லை

29.கிரேக்க புலவர் ஹெசியாட்

30.கிரேக்க நாட்டிலும் யூத மதத்திலும் பெண்கள்

31.கிரேக்கர்கள் இந்துக்களே! நப்பின்னை கதை!!

32.ரிக்வேதத்தில் கிரேக்க விடுகதை

33.எரிமலைத் தீயில் நுழைந்த அதிசய ஞானி

34.கிருஷ்ணா’தான் கிரேக்க நாட்டு ஹெர்குலிஸ் ஆனாரா?

35.தமிழ் நாட்டு பிசிராந்தையாரும் கிரேக்க நாட்டு பிதியாஸும்

36.கிரேக்க நாட்டில் தீக்குளித்த தமிழ் சந்யாஸி

37.சாக்ரடீஸை கிண்டல் அடிக்கும் கிரேக்கர்கள்!

38.கிரேக்கர்கள் நாடகப் பித்தர்கள்

39.கிரேக்க நாட்டில் இந்துச் சடங்கு!

40.கிரேக்க நாட்டுத் தீவில் இன்பச் சுற்றுலா

41.பாரதியும் கிரேக்க மன்னன் பிர்ரஸும்

********

22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

பொருளடக்கம்

1.எகிப்திய அதிசயங்கள்-1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்?

2.எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள்-2

3.எகிப்தில் இந்தியப் பண்பாட்டின் தாக்கம் -3

4. எகிப்தில் சூர்ய வம்சம்: 4

5.ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; -5

6.எகிப்தில் நரபலி -பகுதி 6

7.எகிப்தில் இந்திய நீலக்கல்! – பகுதி 7

8.மனித முகம்; சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! பகுதி 8

9.எகிப்தில் 30 வம்சங்கள்: அதிசய தகவல்கள்-பகுதி 9

10.பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி : -10

நட்சத்திர வழிபாடு; அதிசய சிரியஸ் (SIRIUS) நட்சத்தி ரம்

11.பெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11

நாம் எல்லோரும் நட்சத்திரங்கள் ! அர்ஜு னனி ன்

விண்வெளிப் பயணம்; இந்துக்களி ன் நட்சத்தி ர வழி பா டு

12.வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- -12

13.சுவர்களில் எழுதப்பட்ட சமயச் சடங்குகள்- -13

14.மன்னர்களுடன் படகுகளை புதை த்தது ஏன்? -14

15.சித்திர எழுத்துக்கள் – எகிப்திய அதி சயங்கள் -15

16.விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்-16

17.எகிப்தில் இந்து தெய்வங்களின் வழிபாடு- பகுதி 17

18.எகிப்து மீது படை எடுத்தவர்கள் இந்திய யக்ஷர்களா ?- 18

19.சொந்த தங்கையை மணந்த மன்னர்கள்- 19

20.மன்னர் படுகொலைகள்! -20 உலகின் முதல் ஸ்டிரைக்!

21.இறந்து போனவர்களுக்கு எழுதிய கடிதங்கள்! -21

22.எகிப்தில் பேய் விரட்டல் -22

23.எகிப்திய மன்னன் 94 ஆண்டுகள் ஆண்டா னா ? – பகுதி 23

24.தற்பெருமை பேசிய ராம்செஸ் மன்னர்கள்! -பகுதி 24

25.ராணி ! மஹாராணி !! எகிப்திய அதிசயங்கள் – 25

26.ஒரே நாளில் விவாகரத்து செய்த ராணி — 26

27.எகிப்திய, சுமேரிய, இந்திய நாகரீகத்தில் காளை மாடு -27

28.எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்- 28

29.எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!- 29

30.கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி எகிப்து அதிசய ஒற்றுமை !- 30

XXX

Tags- My Tamil books, எகிப்து, கிரீஸ், சுமேரியா

 — subham—

புலியைக் கட்டித் தழுவலாம்; முட்டாளைத் திருத்த முடியாது- அறப்பளீசுர சதகம் (Post.11,521)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,521

Date uploaded in London – 8 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

முட்டாள்கள் பற்றி வள்ளுவன்பர்த்ருஹரி- ஒரு குட்டிக் கதை :

வள்ளுவன் 1330 அருங் குறள்களை யாத்தான்;பர்த்ருஹரி 300 பாக்களில் வரிக்கு வரி குறள் போலவே பேசுகிறார். பஞ்சதந்திரம் இயற்றிய பிராஹ்மணன் விஷ்ணுசர்மனோவெனில் கதைக்குள் பொன் மொழிகளைப் பொழிகிறார். நாம் எல்லோரும் பஞ்சதந்திரம் என்றால், ஏதோ மிட்டாய், சாக்லெட் சாப்பிடும் சின்னப் பயல்களுகான கதை என்று நினைப்போம். ஆனால் அதில் திருக்குறளையும் பர்த்ருஹரியையும் விடக் கூடுதல் அறிவுரை உளது. நிற்க. 

பர்த்ருஹரியின் நீதி சதகத்தில் என்ன செப்பினார்? 

प्रसह्य मणिम् उद्धरेन्मकरवक्त्रदंष्ट्रान्तरात्
समुद्रम् अपि सन्तरेत्प्रचलदूर्मिमालाकुलम् ।
भुजङ्गम् अपि कोपितं शिरसि पुष्पवद्धारयेत्
न तु प्रतिनिविष्टमू‌ऋखजनचित्तम् आराधयेथ् ॥ 1.4 ॥ 

ப்ரசஹ்ய மணிம் உத்தரேத் மகர வக்த்ர தம்ஷ்ட்ராந்தராத்

ஸமுத்ரமபி ஸந்தரேத் ப்ரசலதூர்மி மாலாகுலம்

புஜங்கம் அபி கோபிதம் சிரஸி புஷ்பவததாரயேத்

ந து ப்ரதிநிவிஷ்ட மூர்க்ருகஜனசித்தம் ஆராதயேத் -1-4

ஒரு முதலையின் வாயிலிருந்து ஒரு ரத்தினத்தை எடுத்துவிடலாம்,

ஒருவன் ஸமுத்திரத்தைக் கூட நீந்திக் கடந்துவிடலாம்,

ஒரு பூவை அணிவது போல ஒரு பாம்பைக்கூட தலையில் சூடலாம்,

ஆனால் பிடிவாதமான முட்டாளின் மனதை மாற்ற முடியாது 1-4

लभेत सिकतासु तैलम् अपि यत्नतः पीडयन्
पिबेच्च मृगतृष्णिकासु सलिलं पिपासार्दितः ।
क्वचिदपि पर्यटन्शशविषाणम् आसादयेत्
न तु प्रतिनिविष्टमूर्खचित्तम् आराधयेथ् ॥ 1.5 ॥

லபேத் ஸிகதாசு தைலம் அபி யத்னதஹ பீடயன்

பிபேஸ்ச ம்ருக த்ருஷ்ணிகாஸு ஸலிலம் பிபாஸார்திதஹ

க்வசிதபி பர்யதந் சசவிஷாணம் ஆஸாதயேத்

ந து ப்ரதிநிவிஷ்ட மூர்க்கசித்தம் ஆராதயேத் -1-5

மணலைக் கடைந்து எண்ணை எடுத்துவிடலாம்,

கானல் நீரிலிருந்து குடித்து தாகத்தைத் தீர்த்து விடலாம்

காட்டில் முயல் கொம்பைக் கூடக்கண்டு எடுத்து விடலாம்,

ஆனால் ஒரு முட்டாளின் மனதை மாற்ற முடியாது 1-5

व्यालं बालमृणालतन्तुभिरसौ रोद्धुं समुज्जृम्भते
छेत्तुं वज्रमणिं शिरीषकुसुमप्रान्तेन सन्नह्यति ।
माधुर्यं मधुबिन्दुना रचयितुं क्षारामुधेरीहते
नेतुं वाञ्छन्ति यः खलान्पथि सतां सूक्तैः सुधास्यन्दिभिः ॥ 1.6 ॥

வ்யாலம் பால ம்ருணால தந்து பிரஸௌ ரோததும் ஸமுஜ்ரும்பதே

சேதும் வஜ்ரமணிம் சிரீஷ குஸுமப்ராந்தேன ஸன்னஹயதி

மாதுர்யம் மதுபிந்துனா ரசயிதும்  க்ஷாராமுதேரீஹதே

நேதும் வாஞ்சயந்தி யஹ கலான்பதி ஸதாம் ஸூக்தைஹி

ஸுதாஸ்யந்திபிஹி 1-6

முட்டாளுக்கு வலியப் போய் நல்ல வார்த்தை சொல்லி மாற்றிவிட முயலுவோர்

தாமரை மலர்த் தண்டுகளால் ஒரு யானையைக் கட்டிப்போட நினைப்பவரே,

சீரிஷ/அனிச்ச மலரின் காம்பை வைத்து வைரத்தைத் துளை போட நினைப்பவரே

ஒரு சொட்டுத் தேன் துளி விட்டு கடலின் உப்புத்தன்மையை நீக்க விரும்புபவரே (ஆவர்)- 1-6

xxx

முட்டாள்கள் பற்றி வள்ளுவர் சுமார் 20 குறள்களில் கொட்டித் தீர்த்துவிட்டார்,

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

கையொன்று உடைமை பெறின் (குறள் 838)

முட்டாள் கையில் ஒரு பொருள் கிடைத்து விட்டால் ஏற்கனவே பைத்தியம் பிடித்த ஒருவன் கள்ளையும் குடித்துவிட்டால் என்ன ஆகுமோ அப்படி ஆட்டம் போடுவான்.

குரங்கு கையில் பூமாலை, அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்ரியில் குடை பிடிப்பான், இஞ்சி தின்ன குரங்கு போல- பழமொழிகள் நம் நினைவுக்கு வரும்.

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன்று இல் (குறள் 839)

முட்டாளுடன் தொடர்பு கொள்வதும் இனிதே; ஏனெனில் அவன் பிரிந்து செல்லும்போது கொஞ்சமும் வருந்தமாட்டோம்.

போனான்டா சனியன் என்று கொண்டாடுவோம்

 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய் – குறள் 848

 சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் கற்க மாட்டான்; அவன் சாகும் வரைக்கும் நம்மைப் பிடித்த நோய் போன்றவன்

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தன்கண்டவாறு –  குறள் 849

 முட்டாளுக்குக் கற்பிக்கப் போனவன் முட்டாள் ஆகிவிடுவான்; முட்டாளோ பிறர் சொல்லுவதைக் கேட்காமல் அறிவாளிபோலத் தோன்றுவான்.

 அவன் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று வாதிடுவான்.

இதற்கு பஞ்ச தந்திரம் எழுதிய விஷ்ணு ஸர்மா ஒரு நல்ல கதை சொல்லுவார்.

ஒரு காட்டில் குளிர்காலம் வந்தது; குரங்குகள் வாடைக் காற்றில் வாடின. மாலை நேரம் வந்தது; அப்பொழுது மின்மினிப் பூச்சிகள் ‘பளிச் பளிச்’ சென்று ஒளி உமிழ்ந்து பறந்தன. ஒரு குரங்குக்கு நல்ல யோஜனை பிறந்தது. ஒரு மின்மினிப் பூச்சியைப் பிடித்து, காய்ந்த இலை, சருகுகளுக்கு அடியில் வைத்து தீ எரிவதாகக் கற்பனை செய்து கொண்டு கை,கால்களைத் தடவி சூடு உண்டாக்கின. குளிரால் மிகவும் வாடிய ஒரு குண்டுக் குரங்கு வாயால் ஊதி மேலும் தீயை எழுப்ப முயன்றது. இதையெல்லாம் மரத்தின் மீதிருந்து பார்த்துக் கொண்டிருந்த தூக்கணங் குருவிக்கு ஒரே சிரிப்பு. இந்த முட்டாள் குரங்குகளுக்கு கொஞ்சம் நல்ல வார்த்தை சொல்லுவோம் என்று மரத்தின் மேலிருந்து சொன்னது:

ஓ, குரங்குகளே! அது தீப்பொறி அன்று; வெறும் பூச்சிதான்; அதனால் தீ உண்டாகாது- என்று. 

குரங்குகளோ இதை செவிமடுக்கவில்லை. அது அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலாயிற்று. 

குருவிக்கு வருத்தம்; கொஞ்சம் நன்றாகக் காதில் ஓதுவோம் என்று பறந்து வந்து ஒரு குரங்கின் காதில் முன் சொன்னதை ஓதியது. கோபம் அடைந்த அந்தக் குரங்கு குருவியைப் பிடித்து, ஒரு பாறையில் மோதிக் கொன்றது.

 இது போலப் பஞ்சதந்திரக் கதைகளில் நிறைய கதைகள் முட்டாளின் சிறுமைதனைப் பேசும்

விஷ்ணு ஸர்மா சொல்கிறார்,

பெரியதொரு மரத்தை வாளால் வெட்டமுடியாது;

பெரியதொரு பாறையை வாளால் பிளக்கமுடியாது;

குருவியின் புத்திமதி, வாழ்க்கையை எளிதானது

என்ற கொள்கையுடைய குரங்குகளுக்குப் பயன் தராது;

மேலும் ஒரு ஸ்லாகத்தில் சொல்கிறார்,

தகுதியற்றவனுக்குச் சொல்லும் புத்திமதி

வீட்டில் ஏற்றிய ஒளிமிக்க விளக்கை

குடத்திலிட்டு மூடி வைப்பதை ஒக்கும் 

இவ்வாறு ஒவ்வொரு கதையின் துவக்கத்திலும் இடையிலும் முடிவிலும் விஷ்ணுஸர்மா பாடிக்கொண்டே கதை சொல்லுவார்.

Date: 21  September 2018

xxx

Here is verse 15 of Arappalichura Sataka by Ambalavana Kavirayar

15. செயற்கருஞ் செயல்; அறப்பளீசுர சதகம்

நீர்மேல் நடக்கலாம்! எட்டியும் தின்னலாம்!

     நெருப்பைநீர் போற்செய் யலாம்!

  நெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்!

     நீள்அர வினைப்பூ ணலாம்!

பார்மீது மணலைச் சமைக்கலாம் சோறெனப்

     பட்சமுட னேஉண்ண லாம்!

  பாணமொடு குண்டுவில கச்செய்ய லாம்! மரப்

     பாவைபே சப்பண் ணலாம்!

ஏர்மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்

     எடுக்கலாம்! புத்தி சற்றும்

  இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே

     எவருக்கும் முடியா துகாண்!

ஆர்மேவு கொன்றைபுனை வேணியா! சுரர்பரவும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) மேவுஆர் கொன்றைபுனை வேணியா – விரும்பிய

ஆத்தியையும் கொன்றையையும் புனைந்த சடைமுடியுடையவனே!, சுரர்பரவும் அமலனே – வானவர் வாழ்த்தும் தூயவனே!,

அருமை………தேவனே!, நீர் மேல் நடக்கலாம் – தண்ணீரின்மேல் நடந்து

செல்லலாம், எட்டியும் தின்னலாம் – (கசப்பையுடைய) எட்டிக்காயையும் தின்னலாம், நெருப்பை நீர்போல் செய்யலாம் – (வெப்பமுடைய) தீயை

(குளிர்ந்த) நீரைப்போல் ஆக்கலாம், நெடிய பெருவேங்கையைக் கட்டியே

தழுவலாம் – நீண்ட பெரிய வேங்கையைக் கட்டித் தழுவலாம்

நீள்அரவினைப் பூணலாம் – (நஞ்சுடைய) நீண்ட பாம்பை (அது கடிக்காமல்) மேலே அணிந்துகொள்ளலாம், பார்மீது மணலைச் சோறு எனச் சமைக்கலாம்

– உலகத்திலே மணலைச் சோறாகச் சமைக்கலாம் பட்சமுடனே

உண்ணலாம் – அன்புடன் (அந்த மணற்சோற்றை) உண்ணலாம், பாணமொடு

குண்டு விலகச் செய்யலாம் – அம்பையும் துப்பாக்கிபீரங்கி ஆகியவற்றின்

குண்டுகளையும் (நம்மீது படாமல்) விலகும்வண்ணம் புரியலாம், மரப்பாவை பேசப்பண்ணலாம் – மரப் பதுமையைப் பேசும்படி செய்யலாம், ஏர் மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும் எடுக்கலாம் – அழகிய காடியையும் கடைந்து வெண்ணெயையும் எடுக்கலாம், புத்தி சற்றும் இல்லாத மூடர்தம்

மனத்தைத் திருப்பவே எவருக்கும் முடியாது – சிறிதும்

அறிவற்றபேதையரின் உள்ளத்தைச் சீர்திருத்த யாவருக்கும் இயலாது, காண் :

Xxx

My Commentary

சில புலவர்கள் மனதை  அடக்குவது எவ்வளவு கடினம் என்பதற்கு செய்ய முடியாத விஷயங்களின் பட்டியலைத் தருகிறார்கள் ; இன்னும் சிலர் பெண்களை நம்பக்கூடாது என்பதற்கு ஒரு பட்டியலைத்

தருகிறார்கள். அவைகளை ஒப்பிடும்போது அம்பலவாண கவிராயர் சொல்லுவது நன்றாகப் புரியும். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று வாதிடும் முட்டாள்களை பிடிவாதக்காரர்களையும் நாம் தினசரி வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறோம்.முட்டாள்களுக்கு அறிவுரையும் வழங்கக்கூடாது . தமிழிலும் ஒரு சொல் வழக்கு உண்டு. தூங்குபவனை எழுப்பலாம். தூங்குபவனைப் போல பாசாங்கு செய்வோரோனை எழுப்பமுடியாது ; முட்டாள்களைத் திருத்த முடியாது

वरं पर्वतदुर्गेषु

भ्रान्तं वनचरैः सह

न मूर्खजनसम्पर्कः

सुरेन्द्रभवनेष्वपि ॥ 1.14 ॥

வரம் பர்வத துர்கேஷு

ப்ராந்தம் வனசரை ஸஹ

ந மூர்க்க ஜன ஸம்பர்க்கஹ

ஸுரேந்த்ர பவனேஸ்வபி- நீதி சதகம்

பொருள்

முட்டாள்களுடன் மன்னனின் அரண்மனையில் வாழ்வதைவிட

காடுகளில் குகைகளில் வன விலங்குகளுடன் வாழ்வதே மேல்..

வள்ளுவனும் பர்த்ருஹரியும் ஒரே பார்வையுடையவர்கள்:-

குறள் 834, 835

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்- 834

நூல்களைக் கற்றும், அதிலுள்ள விஷயங்களை அறிந்தும், அதைப் பிறருக்கு எடுத்துரைத்தும் தான் மட்டும் பின்பற்றாத  முட்டாள் போல வேறு முட்டாள் உலகில் இல்லை.

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான் புக்கழுந்தும் அளறு-835

ஏழு பிறவிகளில் செய்யும் தவறுகளைச் செய்தால் கிடைக்கும் நரகத்தை, முட்டாளானவன் ஒரு பிறவியிலேயே செய்ய வல்லவன்.

நாமும் முட்டாள்களைக் கண்டால் ஒடி ஒளிந்து கொள்ளுவோம்.

xxx

He who knows not and knows not………………………

An ancient saying from the Middle East says:

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows , is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

—subham—

Tags- முட்டாள், அறப்பளீசுர சதகம், பர்த்ருஹரி, பஞ்ச்ச தந்திரம், குறள் , திருத்த முடியாது , அம்பலவாணர், செயற்கருஞ் செயல்

Tamil Hindu Encyclopaedia 34- Siva, ருத்ர Rudra,  Tryambaka In Sangam Tamil Corpus (Post No.11520)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,520

Date uploaded in London – 8 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Lord Siva has been a very popular God among Tamils for over 2000 years. Two things are noticeable in Sangam Tamil books. His name SIVA did not appear anywhere in Sangam books. Like Rig Veda other names of him such as Rudra, Neelakanta, Tri Purantaka, Trayambaka, Crescent moon Bearer etc are used by Sangam Tamil poets. Another noticeable feature is his full appearance is described. This confirms that his paintings or idols or statues were there in nook and corner of Tamil Nadu. Later Tamil epic Silappadikaram confirmed the existence of temples of gods in Tamil Nadu.

Except Prof. Wilson, all others argued that the name SIVA சிவ did not find a place in the Rigveda. Sivaya Namah appeared first in the Yajur Veda (Rudram -Chamakam). In the same way Sivaya Namah appeared in Tamil only from sixth century CE only. Tamil saints Appar, Sambandar and Manikaavasagar spread it from the devotional period. No where in Sangam poems the name Siva occurred.

xxx

MR RUDRAKSHA

Another interesting feature is Tamils translated the Sanskrit names of SIVA verbatim.

ருத்ர- Rudra

Mr  Rudraksha of Kadiyalur கடியலூர் உருத்திரங்கண்ணனார்- Kadiyalur Uruththirankannanar is the author of Sangam Poems Perumpaanaatruppadai and Pattinappaalai. His name is the exact translation of RUDRAKSHA- Rudra+ Aksha.

கண் /அக்ஷ Kan= Aksha= Eye MR RUDRAKSHA

This is confirmed by the doyen of Tamil literature U Ve Sa and Kanchi Paramacharya (1894-1994). They translated Kamak Kanniyar (kaamakkanniyaar) as Kamakshi. Aksha= Eye.

So Sangam Tamil poets had the name of Kamakshi and Rudraksha

XXX

NEELAKANTA நீலகண்ட/ நீலமணிமிடற்று- Tamils were great masters of Hindu Puranas. When the Milky Ocean was churned by the Devas and Asuras, poison and Amrita came out. Lord Siva drank the poison to save the humanity, but Uma, his wife, got shocked and stopped it halfway through his throat. So he is called Blue Necked or Sapphire Necked.

xxx

TRI PURA ANTAKA த்ரிபுராந்தக- Lord Siva destroyed Three Space Stations of demons that were flying in the orbit . So he is known as the Destroyer of Three Forts

TRAYAMBAKA த்ரயம்பக- Lord Siva is famous for his Third Eye-  The Eye of Wisdom. When Manmata came to give him the sexual desire , he was burnt alive with his Wisdom Eye. This is called Third Eye. Tamils sang about it whenever they mentioned Manmata (Churner of Mind). So siva was called Three Eyed= TRAYAMBAKA= Three Eyed. Sangam poets translated it verbatim as முக்கண்ணான்.

xxx

ஈர்சடை அந்தணன்/ பிறைநுதல் Wet Hair and Crescent Moon

Sangam Tamils knew the story of Descent of Holy River Ganga from the sky . To  control its tremendous force Siva took it in his hair and let it in manageable speed on land and so his hair is always wet/ ஈர்சடை அந்தணன்.

Even today in Tamil Nadu temples, the Abisheka of Siva is very popular. He is called Abhisheka Priya while Vishnu is called Alankara Priya

Siva likes bathing and Vishnu likes decorations (with dress and jewels).

Siva  is sporting the crescent moon on his forehead பிறைநுதல்.

Since Sangam Tamils described all these minute details, we are certain that they were seeing it in various places in pictures and idols.

xxx

MR RED

Red colour signifies auspiciousness and perfection.

Siva, Sivaniya (Tolkappiyar’s favourite word) ,Sivappu in Tamil are synonyms for red and perfection செம்மை, செந்தமிழ்.

Rudra is   also   Red, Red Faced in Sanskrit. The famous mantra Rudra and Chamaka of  Yajur Veda shows both these (auspiciousness, perfection) aspects. All orthodox Brahmins recite it every day and the bathing of God is done with this mantra in all Siva temples many times a day.

Tamil poets of Sangam Age never missed a chance in mentioning this RED colour of Siva. They called him Mr Red or Mr Red Body. Because of his rosy red body, his hair also is portrayed reddish in colour. They compared it with flame.

Two thousand years ago, Tamil poets described all Hindu gods in colourful pictures  which shows they were deep into Puranic lore. If one reads all these descriptions in Tamil one will date all the Sanskrit  Puranas in BCE period. Sanskrit Puranas must be very popular in BCE. All the Gods’ descriptions in Tamil are nothing but verbatim translations of those works.

TAMIL REFERENCES

Now I will give all Tamil references from Sangam Literature:

Lord Siva is RED like dusk

வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து

உரு உடன் இயைந்த தோற்றம் போல,

அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ,

வந்த மாலை பெயரின், மற்று இவள்

அகநானூறு Akananuru 360

The sky in dusk looked like two great gods (Red like Siva, and dark like Vishnu)

In the payer verse of Akananuru also, the poet said செவ்வான் அன்ன  மேனி– body like dusky red sky

Purananuru 56 portrayed him as one with flame coloured and loose/ untied hair புறநானூறு 56 எரி மருள் அவிர்சடை

Xxx

பிறைநுதல்

மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்

முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,

கலித்தொகை 104-11

In these two short sentences Siva is shown with crescent moon sporting ,  three eyed, shiny ,light emitting , lowered/untied hair.

Xxxx

ARUDRA STAR GOD

Lord Siva is associated with the star Betelgeuse in the Orion constellation and so Siva is called Mr Arudra Star; the Kalittokai poet also says he is( golden red) like Shanbaga flower

அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த  20

பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர்

பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்

மை ஈர் ஓதி மட மொழியோயே! –கலித்தொகை 150

To be continued…………………………….

 tags-siva, rudra, trayambaka, சிவன், ருத்ரன், முக்கண்ணான் , செம்மேனி அம்மான், உருத்திரங் கண்ணனார் , 

எந்த தேசத்தில் வசிக்க வேண்டும்? (Post No.11,519)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,519

Date uploaded in London – 8 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

மஹாபாரத வழிகாட்டி

எந்த தேசத்தில் வசிக்க வேண்டும்? 

ச.நாகராஜன்

எந்த தேசத்தில் வசிக்க விரும்ப வேண்டும் என்பதைப் பற்றி நாரத மஹரிஷி காலவருக்குக் கூறுகிறார்.

இந்த சம்வாதம் சாந்தி பர்வத்தில் 293வது அத்தியாயத்தில் காணலாம்.

அவற்றில் சில முக்கிய கருத்துக்களைக் கீழே காணலாம்:

சிஷ்யோபாத்யாயிகாவ்ருத்திர்யத்ர ஸ்யாத் சுசமாஹிதா |

யதாவச்சஸ்த்ரசம்பன்னா கஸ்தம் தேஷம் பரித்யஜேத்  ||

எந்த தேசத்தில் குரு சிஷ்யர்களுடைய செய்கையானது சாஸ்திரப்படி ஏற்பட்டதும் நன்றாக ஸ்தாபிக்கப்பட்டதுமாய் இருக்கிறதோ அந்த தேசத்தை எவன் தள்ளுவான்?

ஆகாஷஸ்தா த்ருவம் யத்ர தோஷம் பூயுவிபஸ்சிதாம் |

ஆத்மபூஜார்பிகாமோ வை கோ வஸேத் தத்ர பண்டித: ||

எந்த இடத்தில் வெளியிலுள்ளவர்கள் வித்வான்களுக்கு நிச்சயமாக தோஷத்தைச் சொல்லுவார்களோ அந்த தேசத்தில் தனக்கு கௌரவத்தை விரும்பும் எந்தப் பண்டிதன் தான் வசிப்பான்?

 யத்ர சம்லோடிதா லுப்தை: ப்ராயஷோ தர்மசேதவ: |

ப்ரதீப்தமிவ சைலாந்தம் கஸ்தம் தேசம் ந சம்த்யஜேத் ||

எந்த தேசத்தில் லோபிகளாலே தர்மத்தின் அணைகள் பெரும்பாலும் உடைக்கப்பட்டிருக்கின்றனவோ, அந்த தேசத்தை, முந்தானை பற்றி எரிகின்ற ஆடையைப் போல யார் தான் விடமாட்டான்?

 யத்ர தர்மமநாஷங்காச்சரேயுர்வீதமத்ஸரா: |

பவேத் தத்ர வஸேஸ்ஸைவ புண்யஷீலேஷு சாதுஷு ||

எந்த தேசத்தில் பயமும் மத்ஸரமுமின்றி ஜனங்கள் தர்மத்தைப் பின்பற்றுகின்றார்களோ அங்கே பிறக்க வேண்டும். புண்ணியசீலர்களான சாதுக்களிடத்தில் வசிக்க வேண்டும்.

தர்மமர்தோநிமித்தம் ச சரேயுர்யத்ர மானவா: |

ந த்ஜாமமிசேவேஜ்ஜாது தே ஹி பாபக்ருதோ ஜனா: ||

எந்த தேசத்தில் பணத்தை அடைவதற்காக தர்மத்தைக் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களிருக்கும் இடத்தின் அருகே ஒரு போதும் வசிக்கக் கூடாது. அவர்கள் பாவத்தை அல்லவா செய்கின்றனர்!

எந்த இடத்தில் ஜனங்கள் பாவத் தொழிலால் உயிர் வாழ விரும்புகிறார்களோ அந்த இடத்திலிருந்து பாம்பு இருக்கும் வீட்டை விட்டு ஓடுவது போல  வேகமாக ஓட வேண்டும்.

யத்ர ராஜா தர்மநித்யோ ராஜ்ய தர்மேண பாலயேத் |

அபாஸ்ய காமான் காமேஷோ வஸேத் தத்ரவிசாரயன் ||

எந்த நாட்டில் எல்லா செல்வங்களும் உள்ள அரசன் காமங்களை விலக்கி தர்மத்தை நித்தியமாகக் கொண்டு தர்மத்துடன் நாட்டை பரிபாலனம் செய்வானோ அந்த நாட்டில் விசாரிக்காமல் வசிக்க வேண்டும்.

யதாஷீலதா ஹி ராஜான்: சர்வான் விஷயவாஸின: |

ஸ்ரேயஸா யோஜயத்யாஷு ஸ்ரேயஸி ப்ரத்யுபஸ்திதே ||

அரசர்களின் சீலத்துக்கும் ஸ்வபாவத்திற்கும் தக்கபடி மக்களும் இருப்பார்கள் அல்லவா? தமக்கு நன்மை ஏற்பட்ட போது தேசவாசிகளான அனைவரையும்  சீக்கிரம் ச்ரேயஸோடு சேர்ப்பிப்பார்கள்.

இப்படி ஒரு நீண்ட உரையை நாரதர் காலவரிடம் நிகழ்த்தினார்.

(அதன் சாரம் மேலே தரப்பட்டுள்ளது.)

தர்மத்துடன் வாழும் அரசன் இருக்கும் இடத்தைச் சேர்.

வித்வான்கள் மதிக்கப்படும் இடத்தைச் சேர்.

எங்கே சாதுக்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கே சேர்.

தர்மத்தை தர்மத்திற்காகச் செய்ய வேண்டுமே அல்லாது பணம் சம்பாதிப்பதற்காகச் செய்யக் கூடாது.

அரசன் தர்மத்துடன் நாட்டை அரசாண்டால் அவனிடமிருக்கும் அனைத்து நலன்களும் மக்களையும் சேரும்.

எந்த நாடு மேன்மையை அடையும் என்பதற்கான காரணங்களை தேவரிஷி நாரதர் கூறுவது பொருள் படைத்த ஒன்றாக அமைகிறது.

***