பேசத் தெரியாதவன் பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post No.11,508)

WORLD LEADERS FELL ASLEEP WHEN SOME SPEAKER WAS DELIVERING A BORING SPEECH.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,508

Date uploaded in London – 5 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே

     வாயிலா தவனொரு பதர்;

  வாள்பிடித் தெதிரிவரின் ஓடிப் பதுங்கிடும்

     மனக்கோழை தானொரு பதர்;

ஏறா வழக்குரைத் தனைவருஞ் சீசியென்

     றிகழநிற் பானொரு பதர்;

  இல்லாள் புறஞ்செலச் சம்மதித்தவளோ

     டிணங்கிவாழ் பவனொரு பதர்;

வேறொருவர் மெச்சாது தன்னையே தான்மெச்சி

     வீண்பேசு வானொரு பதர்;

  வேசையர்க ளாசைகொண் டுள்ளளவும் மனையாளை

     விட்டுவிடு வானொரு பதர்;

ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்தருள்செய்

     அமல! எமதருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்து அருள்செய் அமல!

– தணியாத துயரத்தையும் வறுமையையும் போக்கி அருள்புரியும் தூயவனே!

‘எமது ……. தேவனே!’ மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே வாய்

இலாதவன் ஒரு பதர் – திரிபு இல்லாத நூல்களையறிந்தும் நிலைபெற்ற அவையிலே (கற்றதைக்) கூறுந்திறமையற்றவன் ஒரு மக்கட்பதர்,

வாள்பிடித்து எதிரிவரின் ஓடிப் பதுங்கிடும் மனக்கோழைதான் ஒரு பதர் –

எதிரி வாளேந்திப் போருக்கு வந்தால் அஞ்சியோடி மறைந்திடும்

மனவுறுதியற்றவன் ஒரு பதர்,

ஏறா வழக்கு உரைத்து அனைவரும் சீசி!

என்று இகழ நிற்பான் ஒரு பதர் –

செல்லாத வழக்கைச் செப்பியாவரும்

சீசி! எனப்பழிக்கும்படி நிற்பவன் ஒரு பதர்,

இல்லாள் புறம்செலச்

சம்மதித்து அவளோடு இணங்கி வாழ்பவன் ஒரு பதர் –

தன் மனையாள் அயலானிடத்திற்போக மனம் ஒப்பிஅவளுடன் கூடிவாழ்வான் ஒரு பதர்,
தன்னை வேறொருவர் மெச்சாது தானே மெச்சி வீண் பேசுவான் ஒரு பதர்
– தன்னை மற்றவர் புகழாமல்தானே புகழ்ந்துகொண்டு
வெற்றுரையாடுவான் ஒரு பதர்,

வேசையர்கள் ஆசை கொண்டு
உள்ளளவும் மனையாளை விட்டுவிடுவான் ஒரு பதர் 

பரத்தையரிடங் காமுற்றுக்காலமெல்லாம் இல்லாளைப் பிரிந்திருப்பவன் ஒரு பதர்.

     (க-து.) இங்குக் கூறப்பட்டவர்கள் மக்களுக்கு இழிவையுண்டாக்கத்
தக்கவர்கள்.

நெற்பயிரில் பதர் என்பதன் உள்ளே ஒன்றுமிராது. காலியாக இருக்கும். ஆயினும் வெளியே அது தெரியாது. இது போல மனிதர்கள் போல தோற்றம் தரும் ‘காலி’  கள் , வெற்று வேட்டுக்கள் உண்டு. அவை வெடிக்காத புஸ் வாணங்கள்  ; அவர் யாவர்?

1.பேசத் தெரியாதவன்

2.போரில் புறமுதுகு காட்டுவோன்

3.பொய் வழக்கு /பொய் சாட்சியப் பேர்வழிகள்

4.மனைவியை வாடகைக்கு விடுவோன்

5.தன்னைத்தானே புகழ்பவன்

6.பிற பெண்களை நாடுவோன்

XXX

1.பேசத் தெரியாதவன்

நன்கு படித்து என்ன பயன்? அதைப் பிறருக்கு சொல்லத் தெரியவேண்டும். அதை வள்ளுவர் அழகாக ஒரே குறளில் சொல்கிறார்; பேசத் தெரியாதவர்களை மலர்ந்தும் மணம் வீசாத மலர்கள் என்கிறார்

இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார் —குறள் 650

நன்றாக விரிந்திருந்தும் மணமில்லாத பூப் பயன்படாததுபோல் விரிவாகக் கற்றிருந்தும் விளக்கிச் சொல்லும் திறமையில்லார் பிறர்க்குப் பயன்படார் .

XXX

“எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந்

துய்த்துணர் வில்லெனி னில்லாகும் – உய்த்துணர்ந்துஞ்

சொல்வன்மை யின்றெனின் என்னாம் அஃதுண்டேல்

பொன்மலர் நாற்ற முடைத்து. (நீதிநெறி. 5)

XXX

பல சொல்லக் காமுறுவர் மன்றமாசற்ற

சில சொல்லல் தேற்றாதவர் (குறள்  649)

சில சொற்களால் சொல்ல முடியாதோர், பல சொற்களைச் சொல்வர் (நேரத்தை வீணடிப்பர்)

XXX

கல்விக்கு அழகு கசடற மொழிதல் — வெற்றிவேற்கை

மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையினால்

பொய் போலும்மே பொய் போலும்மே – வெற்றிவேற்கை

பேசத்தெரியாதவன் உண்மை பேசினாலும் அது பொய் போலத் தோன்றிவிடும்.

XXX

பேச்சுக் கலை பற்றி சாணக்கிய நீதி

அனவசரே யதுக்தம் சுபாஷிதம் தச்ச பவதி ஹாஸ்யாய

நல்ல விஷயங்களைச் சொல்பவரும் கேட்பவரும் அரிது.

XXX

சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மான்பினிது – இனியவை நாற்பது

XXXX

2.போரில் புறமுதுகு காட்டுவோன்

புற முதுகு காட்டாமல் போரிட வேண்டும் என்பது இந்து மரபு; அப்படி நெஞ்சில் புண்படாமல் முதுகில் புண்பட்டுவிட்டால் அவர்கள் வடக்கிருந்து உயிர் துறப்பர் ; புனிதமான இமயமலை, மேரு மலை, கயிலாயம் உள்ள வடதிசை நோக்கி உண்ணாவிரதமிருந்து  கோப்பெ ருஞ்சோழன் சொர்க்கம் சென்றதை புறநானூறு காட்டும்.

வீரத்தாய் பற்றி ரிக் வேதம் முதல் பாரதி வரை பலரும் பாடியுள்ளனர். அவர்கள் புறமுதுகு காட்டாமல் போரிட்டவர்கள்.

புறநானூற்றில் ஒரு அழகான பாட்டு:

புறம் 86 (காவற்பெண்டு)

சிற்றில் நற்றூண் பற்றி, ‘நின் மகன்

யாண்டுள்ளனோ? என வினவுதி; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்;ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!

பொருள்: என் மகன் எங்கே என்று கேட்கிறீர்களா? எனக்குத் தெரியாது. ஆனால் இந்த வயிறு புலிகளின் உறைவிடமான குகை போன்றது. ஆகவே அவன் போர்க்களத்தில்தான் இருப்பான்.

ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் வரும் பாடல் (10-85-44), நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது.

காளிதாசனின் காவியங்களில் எண்ணற்ற இடங்களில் வீரத் தாய் பற்றி வருகிறது. குமார சம்பவத்தில் (7-87) உமை அன்னையை வாழ்த்தும் பிரம்மா, நீ வீரர்களின் தாயாக விளங்கவேண்டும் (வீரப் ப்ரசவா பவேதி) என்று வாழ்த்துவதாகக் கூறுகிறான்.

ரகுவம்சத்தில் (2-64;14-4) வீர என்ற சப்ததைப் பெறும் முறைகளை விளக்குகிறார். தமிழ் இலக்கியம் போலவே மார்பில் விழுப்புண் தாங்குவதைப் போற்றுகிறார் (3-68).

உலகப் புகழ்பெற்ற சாகுந்தலம் காவியத்தில் சகுந்தலையை வாழ்த்தும் துறவிகளும் முனிவர்களும் வீரப்ரசவினீ பவ= வீரர்களின் தாயாக விளங்குவாயாக என்று வாழ்த்துகின்றனர்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் லலிதாம்பிகையைப் போற்றும் 1008 நாமங்களில் ஒன்று வீர மாதா என்னும் போற்றி ஆகும்:

“ப்ராணேச்வரி ப்ராணதாத்ரீ பஞ்சாசத்பீடரூபினி

விஸ்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ:”

பாரதி இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ‘மலடி’ என்பதற்குப் புதிய விளக்கமே கொடுக்கிறார்:

வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை

ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”

Xxx

3.பொய் வழக்கு /பொய் சாட்சியப் பேர்வழிகள்

பொய் சாட்சியம்

பொய் சொல்வோரைக் கண்டுபிடிக்கும் முறை பற்றி உபநிஷதம் மற்றும் கலித்தொகை நூல்கள் பல அதிசயச் செய்திகளை உரைக்கின்றன .பாலைபாடிய பெருங் கடுங்கோ கலித்தொகையில் ஒரு உவமை சொல்கிறார்.

கரிபொய்த்தான் கீழ் இருந்த  மரம்போல கவின்வாடி — என்பது அது. அதாவது பொய் சொன்னவன் கீழே நின்றால் அந்த மரமும் வாடிவிடுமாம் இதை ஆதி சங்கரர்- மண்டனமிஸ்ரர் சம்வாதத்தில் முதல் மாலை வாடுபவரே தோற்றார் என்று சரசவாணி சொன்ன சம்பவத்திலும் எடுத்துக் காட்டியுள்ளேன் 

Xxxx

4.மனைவியை வாடகைக்கு விடுவோன்

13: காமம் வலியது

உணங்கி யொருகால் முடமாகி ஒருகண் ணிழந்து செவியின்றி,

வணங்கு நெடுவால் அறுப்புண்டு வயிறும் பசியால் முதுகொட்டி,

அணங்கு நலிய மூப்பெய்தி அகல்வாயோடு கழுத்தேந்திச்,

சுணங்கன் முடுவல் பின் சென்றால் யாரைக் காமன் துயர் செய்யான்.

—–விவேக சிந்தாமணி

ஒரு கால் ஊனம், ஒரு கண்ணில் பார்வையில்லை, ஒரு காது இல்லை, வளைந்த வாலும் அறுபட்டுள்ளது, வயிறு உணவின்றி முதுகோடு ஒட்டி உள்ளது, முதுமை அடைந்த நிலையில் அதன் கழுத்தில் ஒரு ஓடும் வலயமாக மாட்டியுள்ளது, அதை வெளியே தள்ளுவதற்கும் சக்தி இல்லை, இப்படிப்பட்ட ஒரு ஆண் நாய் ஒரு பெண்ணாயைக் கண்டதும் காமவயப்பட்டு அதனைச் சுற்றி வர தலைப்பட்டால் யாரைத்தான் காமன்(ம்) துன்புறுத்த மாட்டான்.(ஆகவே எச்சரிக்கையாயிரு.)

சிறைகாக்கும் காப்பென் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை —குறள் 57

”நிறையான் மிகுகில்லா நேரிழை யாரைச்

சிறையான் அகப்படுத்த லாகா”— (பழமொழி 30)

“உண்டியுட் காப்புண் டுறுபொருள் காப்புண்டு

கண்ட விழப்பொருள் கல்விக்குக் காப்புண்டு

பெண்டிரைக் காப்ப திலமென்று ஞாலத்துக்

கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே” —-(வளையாபதி)

xxxxx

6.பிற பெண்களை நாடுவோன்

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற வொழுக்கு—குறள் 148

மார்க்சீயவாதிகளும் பயங்கரவாதிகளும் யார் யாரை எல்லாமோ மாவீரர் என்று புகழ்வர். ஆனால் இந்தியாவில் இரண்டு மாவீரர்தான் உண்டு. புலன்களை வென்று நிமிர்ந்த பார்வையுடன் நிற்கும் சமண மத தீர்த்தங்கரர் மஹாவீரர், ஜிதேந்த்ரியன் என்று புகழப்படும் அனுமன் ஆகிய இருவர்தான் மாவீரர். புலன்களை வெல்லா தோர்  செய்யும் இழி செயல் பிறர் மனை நாடுதல் . ராவணன் பட்ட கஷ்டத்தை ராமாயணம் புகலும் . கோவலன் பட்ட கஷ்டத்தைச் சிலப்பதிகாரம் புகலும்; அவன் மாதவியிடம் போகாமல் இருந்தால் சிலம்பு விற்கப் போய் கொலையுண்டு இருக்கமாட்டான் .

திருவள்ளுவரும் ஆடவர்களைச் சுண்டி இழுக்கும் பெண்களைத் தாக்கி பாடுகிறார்.

தினசரி  நாளேடுகளில் வரும் கிரைம் CRIME //குற்றச் செய்திகளில் இதுவே முதலிடம் வகிப்பதால் நான் விளக்கத் தேவையே  இல்லை

கீழ்மக்கள் யார் ? என்று விவேக சிந்தாமணியும் விளக்கும்

தன்னைத்தான் புகழ்வோரும் தன்குலமே பெரிதெனவே தான் சொல் வோரும், பொன்னைத்தான் தேடியறம் புரியாமல் அவை காத்துப் பொன்றி னோரும், மின்னைப் போல் மனையாளை வீட்டில் வைத்து வேசை சுகம் விரும்பு வோரும், அன்னை பிதா பாவலரைப் பகைப் போரும் அறமில்லாக் கசட ராமே,

தன் பெருமைகளை தானே புகழ்ந்து பேசுபவரும், தன் குலமே மிக உயர்ந்தது என்று சொல்லி திரிபவரும், பொருளைத் தேடி அறத்திற்குப் பயன்படுத்தாமல் சேர்த்துவைப்பவரும், அழகிய குணமுள்ள மனைவி இருக்க விலை மகளிரை உடலின்பத்திற்காகச் சேருவோரும், தாய், தந்தை, அறிஞர் ஆகியோரை பகையாகப் பார்ப்போரும், அறம் அறியா கீழ்மக்கள் ஆவர்.

5.தன்னைத்தானே புகழ்பவன்

உடையது விளம்பேல் ( உனக்குள்ள சிறப்பினை நீயே புகழ்ந்து கூறாதே)

வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்று ஆத்திச் சூடியில் அழகுபடப் பகர்ந்தார்.

வள்ளுவனும் சொன்னான்:

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை (குறள் 439)

 பொருள்: தன்னையே புகழாதே; பயனில்லாத செயலைச் செய்யாதே என்பது வள்ளுவன் வாக்கு

மனு நீதி நவில்வது 

மனு, தனது மானவ தர்ம சாஸ்திரத்தில், இதைவிட அழகாகாக, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே செப்பிவிட்டார்:- 

“யாராவது உன்னைப் புகழ்ந்தால் அதை விஷம் போல ஒதுக்கு; யாராவது உன்னைக் குறைகூறினால் அதை அமிர்தம் போலக் கருது (மனு நீதி 2-162) 

யாராவது குறைகூறி அதை நீ கேட்டால் சந்தோஷமாக உறங்கலாம்; சந்தோஷமாக விழித் தெழலாம்; சந்தோஷமாக நடமாடலாம்; குறை சொன்னவனுக்குத்தான் அழிவு (உனக்கல்ல)- மனு நீதி நூல் 2-163

Xxxx  subham xxxxxxxx 

 tags-பேசத் தெரியாதவன், புறமுதுகு காட்டுவோன், பொய் வழக்கு ,பொய் சாட்சிய, மனைவி வாடகை,தன்னைத்தானே புகழ்பவன், பிற பெண்களை நாடுவோன்

அருள்வாயே! – 6 (Post No.11,507)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,507

Date uploaded in London – 5 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 அருணகிரிநாதர் தொடர்! 

அருள்வாயே! – 6

ச.நாகராஜன் 

அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:

படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!

46) திருத்தணிகை

    வரிய பதத்தினி னருவி யிருப்பிடம்

      அமையு மெனக்கிட முனது பதச்சரண்

        மருவு திருப்புக ழருள எனக்கினி   யருள்வாயே

பாடல் எண் 263 –   ‘குருவி என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : இசைப் பாக்களோடு கூடிய என் சொற்களின் ஊற்றுப் பெருக்கு பெருகும் இடமாக அமைய வேண்டிய இடம் அடைக்கலம் தரும் உன் திருவடியே ஆகும். ஆகவே அந்தத் திருவடியைச் சேருதற்குரிய திருப்புகழ்ப் பாக்களை நான் பாட எனக்குத் தந்தருள்வாயாக!

47) திருத்தணிகை

    பொருள் தீரில்

  ஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர்

     பாங்கக லக்கரு ணைக்கழல் பெற்றிட

       ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிட லருள்வாயே

பாடல் எண் 266 –   ‘கூந்தல் அவிழ்த்து’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : கையில் கொடுப்பதற்குப் பொருள் தீர்ந்து போனால் மனம் வாடுமாறு வீட்டின் வெளிப்புறத்தில் வந்தவரைத் தள்ளி வைப்பவர்களான பொது மகளிருடைய நட்பு ஒழிந்து நீங்கவும், உனது கருணைக் கழலை நான் பெற்றிடவும் நீ அருளவில்லையே! எப்படி நான் நல்ல கதியில் புகுதல் என்று அருள்வாயாக!

48) திருத்தணிகை

   கனத்த தத்துவமுற் றழியாமற்

     கதித்த நித்தியசித் தருள்வாயே 

பாடல் எண் 278 –   ‘நினைத்தது எத்தனை’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : பெருமை வாய்ந்த தத்துவங்களைக் கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழியாமல் இருக்கவும், வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்த நிலையை நீ அருள்வாயாக.

49) திருத்தணிகை

   பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்

      குறிக்கருத் தெனக்களித் தருள்வாயே 

பாடல் எண் 280 –   ‘பருத்தபற் சிரத்தினை’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : கட்டுப்பட்ட இந்த நோய்ப் பையை, வாழும் போது தாங்குவதும், சாவில் ஆழ்த்துவதுமான இந்தப் பிறப்பு ஒழிந்து போவதற்கான நோக்கத்தைக் கொண்ட கருத்தை எனக்குத் தந்தருள்வாயாக!

50) திருத்தணிகை

   ஆரணத் துக்க ணத்து னான்மலர்ப் பொற்ப தத்தை

     யான்வழுத் திச்சு கிக்க அருள்வாயே

பாடல் எண் 283 –   ‘பூசலிட்டு’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் : வேதத்தின் கண் விரும்பிப் போற்றும் புது மலர் அணிந்துள்ள அழகிய திருவடியை நான் போற்றிச் சுகம் பெற அருள்வாயாக!

51) திருத்தணிகை

 கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும் 

  கழற்புணை நீதந் தருள்வாயே

பாடல் எண் 284 –   ‘பெருக்க உபாயம்’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  (ஆசை, பிறவி, நூல் ஆகிய) கடல்களைக் கடக்க, கடப்ப மலர் சேர்ந்துள்ள, கிண்கிணியின் ஒளி வீசும், திருவடியாகிய தெப்பத்தை நீ கொடுத்து அருள்வாயாக!

52) திருத்தணிகை

    அற்பர மட்டைகள் பால்சென்

றக்கண்வ லைக்குள கப்படு புத்தியை

  அற்றிட வைத் தருள்வாயே

பாடல் எண் 287 –   ‘பொற்குடம் ஒத்த’ என’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  அற்பர்கள், அந்தப் பயனற்றவர்களாகிய பொதுமகளிரிடம் போய், அவர்களுடைய கண் வலைக்குள் அகப்படுகின்ற கெட்ட புத்தியை நீங்கச் செது அருள்வாயாக!

53) திருத்தணிகை

    பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன

        பதத்து மலரினை யருள்வாயே

பாடல் எண் 293 –   ‘முடித்த’குழலினர்’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  பருமையான மயில் மேல் நினைத்த அந்தப் பொழுதிலேயே

வந்து உனது பாத மலரடி இணைகளைத் தந்தருள்வாயாக!

54) திருத்தணிகை

அவரோடே

உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட  

   உயர்ச்சிபெறு குணசீல மருள்வாயே

பாடல் எண் 299 –   ‘வரிக்கலையின்’ எனத் தொடங்கும் பாடல்

பொருள் :  ஒருவருடன் பகை, வேறு ஒருவரிடம் விருப்பம் என அவர்களோடு  சேர்ந்து வாட்டத்தை அடையும் படுபாவியாகிய எனக்கு உன் திருவடிகளைப் பாட உயர்வு பெற்ற நற்குண நல்லொழுக்கத்தைத் தந்தருள்வாயாக!

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம்.

                                             ***.                                  தொடரும்

November 2022 London Swaminathan Article (INDEX No.120) – Post No.11,506

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,506

Date uploaded in London – 4 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

October 2022 London Swaminathan Article (INDEX No.119) – Post No.11,419 (6/11)

RSS Zindabad : Kanchi Shankaracharya (Post No.11,403) 1/11/2022

Tamil Hindu Encyclopaedia – 16 (Manmatha மன்மதன், காமன்) -Post 11,407

Tamil Hindu Encyclopaedia – 17 (Tamil Lovers= Rathi+ Manmatha காதல் ஓவியங்கள்) Post.11,410

Tamil Hindu Encyclopaedia – 18 (Vedas & Brahmins வேதங்களும் பிராமணர்களும்) -Post No.11,412(4/11)

Tamil Hindu Encyclopaedia – 20 ( Brahmins பார்ப்பான், பார்ப்பன மகன், பார்ப்பனி) – Post No.11,418 (6/11)

Tamil Hindu Encyclopaedia 23 (Havis =ஹவிஸ், ஆவுதி; Yupa யூபம்)—Post 11,436 (11/11)

Tamil Hindu Encyclopaedia :24 (Yaga Smoke, Brahmin Murder யாகப் புகை,  ஐயர் கொலை)- Post.11,443 (14/11)

Tamil Hindu Encyclopaedia 25 ( Thirty Three Devas and Yama- தேவர்கள், யமன்) in Sangam Tamil Poems (11,451) 17/11

Tamil Hindu Encyclopaedia 27: Mr Blue, Mr Tall/ Vishnu , நீல நிற வண்ணன், நெடியோன் (Post.11,460)

21/11

Tamil Hindu Encyclopaedia 28: Garuda Flag, Lotus from Belly with Brahma, Source of Universe/Vishnu (11,463)22/11

Tamil Hindu Encyclopaedia 26: Vishnu/ Maal/ மால் (Post No.11,458)

Tamil Hindu Encyclopaedia – 21 (Yaga, Yagnas, Gotras யாக, யக்ஞங்கள், கோத்ரங்கள்) – Post 11,421 (7/11)

Tamil Hindu Encyclopaedia – 22 (தமிழ் மன்னர் செய்த யாகங்கள் Yagas by Tamil Kings)- Post 11,428 (9/11)

Tamil Hindu Encyclopaedia 29: Garuda Purana in Sangam Tamil Books (Post.11,465) 23/11

Tamil Hindu Encyclopaedia 30: Lakshmi and 1000 headed Snake in Sangam Tamil Books (11,474)25/11

Tamil Hindu Encyclopaedia 31 Brahma / பிரம்மா Post No.11,489) 30/11

HISTORY FLASH :NEW ETRUSCAN DISCOVERY IN ITALY (Post No.11,431) 10/11

History Flash; Hindus must learn from Today’s Roman Coin Story (Post No.11,470) 24/11

Sita’s Famous Quotes: I would Follow Eleven Women (Post No.11,469) 24/11

GURU NANAK  QUOTES : DECEMBER 2022 ‘GOOD THOUGHTS’ CALENDAR (Post No.11,486); 29/11

Learn Tamil Verbs ( Open, Forget, Fly, Milk)– Tamil Lesson 17 (Post.11,405) 1 November 2022

Learn Tamil Verbs ( See, Die)– Tamil Lesson 18 (Post.11,408)

Learn Tamil Verbs – (add ஆ aa, ஓ oo, ஏ ee

to change meaning) Lesson 19- Post.11,413 (4/11)

Learn Tamil Verbs Lesson 20 :Negative Converbial (Post.11,416); 20/12

Learn Tamil Verbs : Lesson 21 :Reflexive Compound Verb கொள் (Post No.11,422)7/11

Learn Tamil Verbs (Lesson 22)- ‘PADU படு’ ending Verbs (Post No.11,433)10/11

Learn Tamil Verbs -23 விடு /VIDU verbs (Post No.11,439)

Learn Tamil Verbs -24 Prohibitive, Permissive and Potential (Impersonal Verbs)—Post.11,446 (15/11)

Learn Tamil Verbs 25 Pugaz -Praise Makiz- Feel Happy (Post No.11,456) 19/11

Learn Tamil Verbs 26 : Adai/Reach/Get/Obtain (Post.11,478)

Learn Tamil Verbs 27 தேடு ,மூடு ,ஆடு, (Post.11,490)

xxx

TAMIL ARTICLES 

வியன்னா நகர ஓவிய மியூசியங்கள் (Post.11,404) 1/11/22

கைகண்ட மருந்து/ மந்திரம் ! (Post No.11,424)8/11

சத் குரு பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post No.11,480)27/11

சீதை வணங்கும் 11 பெண்கள் ! (Post No.11,472)25/11

செல்வம் தேடும் வழி பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post no.11,488) 30/11/22

தமிழில் 1030 சம்ஸ்க்ருத பொன்மொழிகள் (Post No.11,449) 16/11

தாவர நோய்கள்: இந்துக்களின் அற்புத மூலிகை  அறிவு (Post.11,438)12/11

மருத்துவத்தில் (வயாக்ரா மர்மம்) நைட்ரஜன்! (Post No.11,427) (9/11)

போர்க்களத்தில் நைட்ரஜன்– நோபல் பரிசின் கதை (Post No.11,430) 10/11

மனிதப் பிறவி அரிது -அறப்பளீச்சுர சதகம் (Post No.11,466) 23/11

மனைவி பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post.11,468) 24/11

யுதிஷ்டிரன்-மரம், அர்ஜுனன்- பெரிய கிளை,  கிருஷ்ணன்- வேர் (Post.11,455)19/11

மகன் பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post No.11,473) 25/11

மரங்களை வளர்த்தால் சொர்க்கம் கிடைக்கும் (Post No.11,453) 18/11

ஒரு மரம் = பத்து மகன்கள் ; மரங்கள் நோய்களைப் போக்கும் (Post.11,448)

தாவரங்களிலும் நைட்ரஜன்- பகுதி 3 (LAST PART)- Post No.11,435 (11/11)

நல்ல மாணவர் பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post No.11,482)28/11

நெல்லிக்காய், இலந்தைப் பழ மகிமை: மருத்துவப் பொன்மொழிகள் (Post.11,425)

புறச் சூழல் விஷயத்தில் இந்துக்களின் அபார முன்னேற்றம் (Post No.11,445) 15/11

பெண்களை நம்புவதா? புலவர்களை நம்புவதா ? (Post No.11,461)21/11

கழுத்தில் சங்கிலி பெண்ணுக்கு! காலில் சங்கிலி ஆணுக்கு!! (Post.11476)26/11

—subham—

 tags- November 2022 Index, Index No.120, London swaminathan, Articles

இந்திய கோஹினூர் வைரத்தைக் கமில்லா அணிவாரா ? (Post No.11,505)

St Edwards Crown (Not Kohinoor Crown)

WRITTEN BY LONDON SWAMINATHAN 

Post No. 11,505

Date uploaded in London – 4 December 2022                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge. 

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

பிரிட்டிஷ் பத்திரிகைகள் மஹாராஜா (Coronation) பட்டமேற்பு விழா பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எலிசபெத் மஹாராணி செப்டம்பர் 8- ஆம் தேதி (2022) இறந்தார். இதைத் தொடர்ந்து  அவரது மகன் சார்ல்ஸ் மூன்றாவது சார்ல்ஸ் (Charles III) என்ற பெயரில் அடுத்த ஆண்டு 2023 மே 6-ஆம் தேதி (2023) பதவி ஏற்கப்போகிறார். பின்னர் பிரிட்டனின் தபால்தலை, கரன்ஸி , காசுகளில் அவரது உருவப்படம் இருக்கும். பிரிட்டிஷ் அரசன் அல்லது அரசி படங்களுடன் தபால்தலை வெளியிடும் நாடுகளும் அவரது படத்தை வெளியிடலாம்.

செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம்

நேற்றைய செய்தி என்னவென்றால் ராணி அணிந்த பட்டமேற்பு செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் St Edward’s Crown லண்டனிலுள்ள டவர் ஆப் லண்டன் மியூசியத்திலிருந்தது (Tower of London Museum) அகற்றப்பட்டுவிட்டது என்பதாகும். அவருடைய (Charles) தலை அளவுக்குப் பொருந்துமாறு செய்ய இப்படி அகற்றப்பட்டது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

இதில் இந்தியர்களுக்கு  சுவையான செய்தியையும் பத்திரிகைகள் கிளப்பிவிட்டுள்ளன . இளவரசி டயானா இறந்தபின்னர் கமில்லா (Camilla) என்ற பெண்மணியுடன் சார்ல்ஸ் வசித்து வருகிறார். அவர் துணைவி என்ற முறையில் அவருடன் அமரும்போது கோஹினூர் வைரம் பிரகாசிக்கும் கிரீடத்தை அணிவாரா? என்பதே கேள்வி. இது பற்றி அரண்மனை வட்டாரம் எதையும் சொல்ல மறுத்துவிட்டதாகப் பிரிட்டிஷ் பத்திரிகைகள் எழுதியுள்ளன . கோஹினூர் வைரம் கடைசியாக பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங்கிடமிருந்து கைமாறியது. அதை பிரிட்டிஷார் கவர்ந்து சென்றனர் என்ற செய்தியும், ‘இல்லை இல்லை அதை ரஞ்சித் சிங்கே பரிசாககக் கொடுத்தார் என்ற செய்தியும் அனைவரும் அறிந்ததே. பிரிட்டிஷாரே  மற்ற  சில நாடுகளைத் தூண்டிவிட்டு எங்களுடையது என்று நீங்களும் சொல்லுங்கள் என்று ஏவி விட்டதையும் நாம் அறிவோம்.

105 காரட் எடை யுள்ள கோஹினூர் வைரம் தாங்கிய கிரீடத்தை மகாராணியின் அன்னை (Queen Mother) அணிந்து வந்தார் .

இப்போது மஹாராஜா  CHARLES பதவி ஏற்கும் நாளன்று அணியப்போகும் செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் St Edward’s Crown வெள்ளிக்கிழமை இரவில் , அதி பயங்கர செக்யூரிட்டியுடன் ஒரு ரகசிய இடத்துக்கு அகற்றப்பட்டது. இது நடந்த பின்னரே இதை பக்கிங்ஹாம் அரண்மனை, அறிவித்தது . அது வரைக்கும் பரம ரஹசியம் 

2017 ஆம் ஆண்டு முதல் Mark Appleby, of Mappin and Webb மார்க் ஆப்பிள் பி நிறுவனம்தான் ராஜ கிரீடங்களைப் பராமரித்து வருகிறது. அவர்கள்தான் ரஹசிய இடத்தில் கிரீடத்தை பெரிதாக்கப் போகிறார்கள். மன்னரின் தலை , ராணி எலிசபெத்தின் தலையைவிடப் பெரியது.

செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் St Edward’s Crown

 1661ம் ஆண்டில் இரண்டாவது சார்ல்ஸ் மன்னருக்காக செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் செய்யப்பட்டது 1649-ம் ஆண்டில் உருக்கப்பட்டுவிட்ட முந்தைய கிரீடத்தைப் போல அது வடிவமைக்கப்பட்டது. ஒரிஜினல் கிரீடம் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த , ஜனக மஹாராராஜா போன்ற ஞானி/ அரசர் எட்வர்ட் (royal saint, Edward the Confessor, the last Anglo-Saxon King of England). உடையது  

பின்னர் செய்த புதிய கிரீடத்தில் சிலுவையும் பூக்களும் இருக்கின்றன. இந்த கிரீடம் தங்கக் கட்டிக்களால் ஆனது (தங்கத்தகடு அல்ல ; கட்டித்தங்கம்)அதில் மாணிக்கம், நீலம் , புஷ்பராகம் மற்றும் (Semi Precious Stones) அமெதிஸ்ட் கார்னெட் , டோர்மலின் போன்ற நவரத்னங்களுக்கு நிகரான கற்களும் இருக்கின்றன . அதை வெல்வெட் துணியால் up of a solid gold frame set with rubies, amethysts, sapphires, garnet, topazes and tourmalines) போர்த்தியிருப்பார்கள் .

St Edwards Crown (Not Kohinoor Crown)

அண்மையில் மஹாராணி இறுதி ஊர்வலத்தைக் கண்ட கோடிக் கணக்கானோர் இதை டெலிவிஷனில் பார்த்திருப்பார்கள்  (made

— subham —

tags–கோஹினூர், கிரீடம், செயின்ட் எட்வர்ட்ஸ், மஹாராஜா , சார்ல்ஸ் 

tags- கோஹினூர், கிரீடம், மகாராஜா , செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம்

சூடான ஐஸ் க்ரீம் , பேய், பூதம் பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post.11,504)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,504

Date uploaded in London – 4 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

சூடான ஐஸ்க்ரீம் (Hot Ice Cream) இருக்க முடியாது, கோகுலாஷ்டமியும் குலாம்காதரும், அப்துல்காதரும் அமாவாசையும்  என்று தலைப்பிட்டாலும் பொருத்தம் இராது .முஸ்லீம் வெஜிட்டேரியன் என்று சொன்னாலும் ஆச்சர்யத்துடன் புருவத்தை உயர்த்துவார்கள் ; சுருங்கச் சொல்லின் பொருத்த மற்ற இரண்டு விஷயங்கள். இதை அறப்பளீச்சுர சதகம் பல எடுத்துக்கட்டுகளால் விளக்குகிறது

LONDON SWAMINATHAN’S NEW COMMENTARY ON VERSE 11 OF ARAPPALEECHURA SATAKAM

 11. தகாத சேர்க்கை

பூததயை இல்லாத லோபிய ரிடத்திலே

     பொருளைஅரு ளிச்செய் தனை!

  புண்ணியம் செய்கின்ற சற்சன ரிடத்திலே

     பொல்லாத மிடிவைத் தனை!

நீதியகல் மூடர்க் கருந்ததி யெனத்தக்க

     நெறிமாத ரைத்தந் தன்னை!

  நிதானம்உள உத்தமர்க் கிங்கிதம் இலாதகொடு

     நீலியைச் சோவித் தனை!

சாதியில் உயர்ந்தபேர் ஈனர்பின் னேசென்று

     தாழ்ந்துபர வச்செய் தனை!

  தமிழருமை யறியாத புல்லர்மேற் கவிவாணர்

     தாம்பாட வேசெய் தனை!

ஆதரவிலாமல்இப் படிசெய்ததென் சொலாய்?

     அமல! எமதருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

(இ-ள்.) அமல – குற்றம் அற்றவனே! எமது ……… தேவனே!, பூத

தயை இல்லாத லோபிய ரிடத்திலே பொருளை அருளிச் செய்தனை –

உயிர்களிடம் இரக்கம் காட்டாத கஞ்சரிடத்திலே செல்வத்தைக்

கொடுத்தருனினைபுண்ணியம் செய்கின்ற சற்சனரிடத்திலே பொல்லாத

மிடி வைத்தனை – நன்மை புரிகின்ற நல்லோரிடம் கொடிய வறுமையைக் குடியாக்கினாய், நீதி அகல் மூடர்க்கு அருந்ததி எனத்தக்க நெறி

மாதரைத் தந்தனை – அறத்தின் நீங்கிய அறிவிலிகளிடம் அருந்ததி

போன்ற கற்புடைய காரிகையரைச் சேர்த்தாய், நிதானம் உள உத்தமர்க்கு இங்கிதம் இலாத கொடு நீலியைச் சேர்வித்தனை – அமைதியான நல்லோர்களுக்குக் குறிப்பறிந்து நடவாத கொடிய புரட்டியைக் (GHOST WOMAN NEELI) கூட்டிவிட்டாய், சாதியில் உயர்ந்த பேர் ஈனர் பின்னே சென்று தாழ்ந்து பரவச் செய்தனை – உயர்குடியிலே தோன்றியவர்கள் இழிந்தவரின் பின்போய் வணங்கிப் போற்றப் புரிந்தாய், தமிழ் அருமை அறியாத

புல்லர்மேல் கவிவாணர் தாம் பாடவே செய்தனை – தமிழின் இனிமையைக் காணாத கயவரைக் கவிஞர்கள் பாடுமாறு புரிந்தாய், இப்படி ஆதரவு இல்லாமல் செய்தது ஏன்? சொலாய்! – இவ்வாறு ஒருவர்க்கொருவர்

பற்றில்லாமற் பண்ணினது ஏன்கூறுவாயாக.

XXX

 . அருந்ததி -வசிட்டரின் மனைவி. கற்புக்கரசி. சங்க இலக்கியத்தில் பலமுறை குறிப்பிடப்படும் கற்புக்கரசி. வானத்தில் மீனாக/ நட்சத்திரமாகக் காட்சி (Northern Star) தருபவள்; அம்மி மிதித்தல் ,அருந்ததி காட்டல் என்ற இந்து மதத் திருமணச் சடங்கின் கதாநாயகி.

xxx

நீலி – வஞ்சகி. நீலியென்பவள் பழையனூரில் ஒரு

வணிகன் மனைவி. இவள் இறந்தபின் பேயானாள். கணவன் காஞ்சிபுரம்

செல்கையில் ஒரு கள்ளிக்கட்டையைக் குழவியாக்கிக்கொண்டு அவன்

மறுமண மனைவியைப்போல் வடிவமெடுத்துப் பின்தொடர்ந்தாள். அவன்

பேயென அஞ்சினான். காஞ்சியிற் சபையோர்முன் தான் அவன்

மனைவியென நம்பச்செய்தாள். அவர்கள் வணிகனுடன் அவளையும்

ஒருவீட்டில் இருத்தினர் கதவைத் தாழிட்டு அவனைக் கொன்று மறைந்தாள். இவளைப்பற்றிய முழுகே கதையையும் என்னுடைய கட்டுரையையிலும் தமிழ்நாட்டை உலுக்கிய பேய் என்ற என் புஸ்தகத்திலும்  காணலாம் .

   நல்ல குடியில் பிறந்தவர்கள் அரசியல் லாபத்துக்காகவோ பணத்துக்காகவோ ஆட்சியாளர்களுக்குத் துணை போவதை அறிவோம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இப்படி உயர் ஜாதியினர் அவர்களுடைய ஆட்சிக்கு உதவினார்கள் .

கவிஞர்களும் அறிஞர்களும் திடீரென்று சில அரசியல் தலைவர்களை புகழ்ந்து சர்ச்சைக்குள்ளாகின்றனர்.; அண்மைக்கலாத்தில் வாலி (TAMILPOET போன்றோர் மக்களின் நம்பிக்க்கையை இழந்ததைக் கண்டோம்

சில கவிஞர்கள் பொன்னாடைக்கும் அரசாங்க விருதுக்காகவும் ஆட்சியாளருக்கு ஜால்ரா போடுவதையும் இன்னும் பலர் VTICAN MONEY வாடிகன் தரும் கிறிஸ்தவ பணத்துக்காக கர்நாடக இசையை சீர்குலைத்ததையும் , சில பேச்சாளர்கள் இந்து மதத்தை இழித்தும் பழித்தும் பேசியதையும் பத்திரிக்கையில் படித்தோம். இதுகள் மேற்கூறிய பொருத்தமில்லாத சூடான ஐஸ்க்ரீம்கள் தகாத சேர்க்கை

பாரதி போன்ற உலகப் புகழ்பெற்ற கவிஞர்களை வறுமையில் வாடவிட்டு , எச்சிற் கையாலும்  காகத்தை ஓட்டாத மக்களிடம் பணத்தைக் கோடிகோடியாக  (கடவுள்??பூர்வ ஜென்ம புண்யம் ???) சேர்த்து வைத்ததையும் கண்டோம் .

இவ்வாறு பொருத்தமில்லாத விஷயங்களை இணைத்துப் பாடும் பாடல் ஒன்று விவேக சிந்தாமணியில் உண்டு

68. அறியமுடியாதது 

அத்தியின் மலரும் வெள்ளை யாக்கை கொள் காக்கை தானும்,

பித்தர் தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதந்தானும்

அத்தன் மால் பிரம தேவ னாலள விடப்பட் டாலும்,

சித்திர விழியார் நெஞ்சம் தெளிந்தவர் இல்லை கண்டீர்.

அத்தி மரத்தில் மலரையும், வெள்ளை உடலை உடைய காக்கையும், பித்தர்களுடைய மனதையும், நீரில் வாடுகின்ற மீனின் பாதச்சுவடையும், பிரம்மாவும் பெருமாளும் காணமுடியாத சிவபெருமானின் முடியையும் அடியையும், காணமுடியாது. இவைகளை காண முடிந்தாலும் பெண்களின் மனதில் உள்ளதை அறிபவர் யாருமில்லை..

https://www.purnayogam.org/2020/05/blog-post.html

XXXX

.    69. பயனில்லாதன 

திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி,

இரப்பர்க்கு ஈயாக்கைகள் இனிய சொல் கேளாக்காது,

புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத்தேகம்,

இருப்பினும் பயனென் காட்டில் எரிப்பினும் பயனில்தானே.

https://www.purnayogam.org/2020/05/blog-post.html

XXXX

இறைவன் வாழும் திருத்தலங்களை – திருக்கோயில்களை – மிதிக்காத கால்கள், சிவனின் திருவடிவணங்காத தலை, இல்லையென்று கேட்பவர்க்குக் கொடாத கைகள்பெரியோர்களின் அன்பான இனிய சொற்களைக் கேளாத காதுகள், தன்னைக் காப்பவர்களுக்கு ஓர் ஆபத்து வந்து கண் கலங்கும் போது உயிரைக் கொடுத்தாவது காக்காத உடல், இருந்தாலும் சுடுகாட்டில் எரித்தாலும் பயனொன்றுமில்லை.

XXX


அற்பரின் இயல்பு பற்றி ஒரு பாடல்:

கதிர்பெறு செந்நெல் வாடக்

கார்குலம் கண்டு சென்று
கொதிதிரைக் கடலில் பெய்யும்
கொள்கைபோல், குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
வாடினோர் முகத்தைப் பாரார்;
நிதிமிகப் படைத்தோர்க்கு ஈவார்;
நிலை இலார்க்கு ஈயமாட்டார்.

மேகக் கூட்டம் நெற்பயிர்கள் வாடுவதைக் கண்டும் அப்பயிரிடையே மழையைப் பொழியாமல், அலைகள் வீசும் சமுத்திரத்தில் சென்று பெய்யும். அது போல நிறைந்த செல்வம் படைத்த செல்வந்தர், வறுமையால் வாடுபவர் முகத்தைப் பார்த்தும் அவருக்கு உதவமாட்டார். மிகுதியாகச் செல்வம் படைத்தவர்க்கே அளிப்பார்கள். இது அற்பர் இயல்பு.

இப்படிப் பட்டவரை மாற்றுவது சாத்யமா? இவர்க்கு எடுத்துச் சொன்னால் கேட்டுத் த்¢ருந்துவாரா? மாட்டார். திருத்த முடியாத ஈன ஜென்மங்கள் அவர்கள்.

நாய்வாலை அளவெடுத்து பெருக்கித் தீட்டின்
நற்றமிழை எழுத எழுத்தாணியாமோ?
பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்
பெரிய விளக்கேற்றி வைத்தால் வீடதாமோ?
தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்
சாற்ற்¢டினும் உலுத்தகுணம் தவிர மட்டான்;
ஈவாரை ஈயவொட்டான் இவனும் ஈயான்;
எழுபிறப்பினும் கடையனாம் இவன் பிறப்பே.

நாய்¢னது வாலை எழுத்தாணிக்குரிய இலக்கணப்படி அளந்து நீட்டித் தீட்டினாலும் நல்ல தமிழை எழுதவல்ல எழுத்தாணியாக ஆகுமோ? பேய்கள் வாழும் சுடுகாட்டைப் பெருக்கிச் சுத்தப் படுத்தி, அங்கு பெரிய விளக்கொன்றினை ஏற்றி வைத்தாலும் அது வாழ்வதற்குரிய வீடாகி விடுமோ? தாயின் சொல்லைக் கேளாத சண்டிக் குணம் படைத்தவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தன் உலோப குணத்தைக் கைவிட
மாட்டான்; தானும் கொடுக்க மாட்டான்; கொடுக்கும் குணம் உடையவரையும் கொடுக்க விடமாட்டான். இவனது பிறப்பு எழுவகைப் பிறப்புகளிலும் கீழானது என்று சாடுகிறது பாடல்.

http://ninaivu.blogspot.com/2005/03/17.html

XXXX SUBHAM XXXX

 tags- சூடான ஐஸ் க்ரீம் , பேய், பூதம் , அறப்பளீச்சுர சதகம்

27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்

CONTENTS

1.பேய்களை விரட்ட வெண் கடுகு!!

2.திருக்குறளில் பேய் நட்சத்திரம்! ஒரு அதிசயத் தகவல்!

3.சங்கத் தமிழ் இலக்கியத்தில் யக்ஷிணி, அணங்குகள்

4.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்!

5.புளியமரத்தை ஒடித்துவிட்டு ஓடிப்போன பேய் !

6.ஔவையாரை மிரட்டிய பேய் !

7.தமிழில் பூதம்! பேய்!! பிசாசு!!!

8.அதர்வண வேதத்தில் பேய்கள் பட்டியல்

9.சிந்து சமவெளியில் பேய் முத்திரை

10.ராக்பெல்லரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும்

11.பூதம் உருவாக்கிய பயங்கர எழுத்தாளி மேரி ஷெல்லி

12.பிரிட்டனின் பேய்க்கதை மன்னன் எம்.ஆர். ஜேம்ஸ்

13.யக்ஷப் ப்ரஸ்னம்:123 கேள்விகள்- பகுதி-1

14.யக்ஷப் ப்ரஸ்னம்–பகுதி-2

15.யக்ஷப் ப்ரஸ்னம் பகுதி- 3

16.யார் இந்த மர்ம தூதர்கள் ?

17.யோகிகள் தீப் பிழம்பாக மாறும் அதிசயம்!

18.பேய்கள் பற்றி பாரதி & விவேகானந்தர்

19.புளியமரத்தில் பேய்கள் வசிப்பது ஏன்? ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

XXXX

வாச பஜனம்! (Post No.11,503)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,503

Date uploaded in London – 4 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாச பஜனம்! 

ச. நாகராஜன் 

1) வாச பஜனம்

வாக்கினால் செய்யப்படும் வழிபாடு வாச பஜனம் எனப்படும்.

இது நான்கு வகைப்படும்.  1) சத்யம் 2) ஹிதம் 3) ப்ரியம்

4) ஸ்வாத்யாயா

சத்யம் ப்ரியம் ஹிதம் ஸ்வாத்யாய: |

                          சர்வதர்சன சஹஸ்ரக:

உண்மை பேசுதல், இதமாகப் பேசுதல், ப்ரியமாகப் பேசுதல், சாஸ்திரங்களைக் கற்றுணர்தல்

இந்த நான்கும் வாக்கினால் செய்யப்படும் வழிபாடு எனப்படும்.

2) வானப்ரஸ்தம்

முதுமையில் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒதுங்குதல் வானப்ரஸ்தாஸ்ரமம் எனப்படும்.  இது மனித வாழ்க்கையில் மூன்றாவது ஆஸ்ரமம் ஆகும்.

இது நான்கு வகைப்படும். 1) வைகானஸம் 2) ஔதும்பரம் 3) வாலகில்யம் 4) பேனபா

வனஸ்தா அபி சதுர்விதா: – வைகானஸ- ஔதும்பரோ – வாலகில்ய: பேனபாஸ்சேதி |

–    நாரதபரிவ்ராஜகோபநிஷத்

ஒய்வு பெற்ற முது நிலையில் வானப்ரஸ்தம் விதிக்கப்பட்டுள்ளது. 50 முதல் 75 வயது வரை எப்போது வேண்டுமானாலும் ஒருவர் இந்த ஆஸ்ரமத்தை மேற்கொள்ளலாம். வானப்ரஸ்தம் என்றால் வனத்தில் அல்லது காட்டில் வசிப்பது என்று பொருள் படும்.

இதைப் பற்றி விரிவாக ஶ்ரீமத் பாகவதத்தில் காணலாம். (3.12.43)

இதை மேற்கொண்டவர்கள் பின்னர், நான்காவது ஆஸ்ரமமான சந்யாஸ ஆஸ்ரமத்தை மேற்கொள்வர்.

முதலில் இந்த வானப்ரஸ்தம் மனைவியுடன் தொடங்குகிறது. இருவரும் சேர்ந்தே வனத்தில் பயணிப்பர். ஒரு சிறிய குடிசையில் வசிப்பர். புனித தலங்களுக்கு யாத்திரை செய்வர். செக்ஸ் என்பது இருக்காது. பின்னால் மனைவி தனது இல்லம் திரும்புவார். தனது புத்திரர்களின் பராமரிப்பில் வசிப்பார்.

இதைப் பற்றிய நீண்ட விவரணத்தை ஶ்ரீமத் பாகவதத்தில் காணலாம்.

3) கலியுகத்தில் வெற்றி யாருக்கு?

அதர்மம் ஓங்கி இருக்கும் யுகம் கலி யுகம்.

இதில் தர்மத்தை அதர்மம் ஜெயிக்கும்.

சத்யத்தை அஸத்யம் வெல்லும்.

ராஜாவானவன் வேலைக்காரனால் வெல்லப்படுவான்.

ஆண்களை பெண்கள் வெல்வார்கள்.

தர்மோ ஜிதோ ஹ்ராதர்மேண ஜித: சத்யோன்ருதேன ச |

ஜிதா ப்ருத்யைஸ்து  ராஜான: ஸ்தீரிபிஸ்ச புருஷா ஜிதா: ||

4) செல்வத்தின் வகைகள்

செல்வம் நான்கு வகைப்படும்.

1) ஸ்வார்ஜிதம் 2) பிதுரார்ஜிதம் 3) ப்ராத்ருவித்தம் 4) ஸ்தீரிவித்தம்

உத்தமம் ஸ்வார்ஜிதம் வித்தம் மத்யமம் பிதுரார்ஜிதம் |

கனிஷ்டம் ப்ராத்ருவித்தம் ச ஸ்தீரிவித்தம் மத்யமாத்யமம் ||

–    சுபாஷிதரத்னபாண்டாகாரம் 160/319

–     

இதில் தானாக சம்பாதிக்கும் செல்வம் ஸ்வார்ஜிதம். இது உத்தமம் எனப்படுகிறது. அடுத்து தந்தை வழியே வருவது மத்யமம் எனப்படுகிறது. அடுத்து சகோதரனின் செல்வத்தை அடைவது அதமம். ஸ்தீரி மூலமாகப் பெறப்படும் செல்வம் எல்லாவற்றையும் விட அதமம் ஆகும்.

5) வித்தை நான்கு வகைப்படும்

வித்தையானது நான்கு வகைப்படும்.

1) ஆன்விக்ஷ்கி   2) த்ரயீ 3) வார்த்தா 4) தண்டநீதி என்று இவ்வாறு அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

ஆன்விக்ஷ்கி என்றால் தத்துவம் என்று பொருள்

த்ரயீ என்றால் மூன்று வேதங்கள் என்று பொருள். ரிக், யஜுர், சாம வேதம் ஆகிய மூன்றையும் கற்று உணர்தல்.

வார்த்தா என்றால் பொருளாதாரம் – Economicis

தண்ட நீதி என்றால் அரசியல் –    Politics – என்று பொருள்.

ஆன்வீக்ஷிகீ த்ரயீ வார்த்தா தண்டநீதிஸ்சேதி வித்யா:

                        அர்த்த சாஸ்திரம் 1.2.1

6) வீணாகப் போகின்றவை நான்கு

சமுத்ரேஷு வ்ருஷ்டி:

கடலில் மழை : கடலில் மழை பெய்து யாருக்கு லாபம்? அது வீண் தான். நிலத்தில் பெய்தால் விளைச்சல் உண்டாகும்.

த்ருப்தஸ்ய போஜனம்

ஏற்கனவே நன்கு சாப்பிட்ட ஒருவருக்கு உணவு அளிப்பது.

சமர்தஸ்ய தானம்

நல்ல திறமை உள்ள ஒருவனுக்குக் கொடுக்கப்படும் தானம்.

திவா தீபா

விளக்கை பகல் நேரத்தில் எரிப்பது.

இந்த நான்கும் வீணே.

வ்ருதா வ்ருஷ்டி: சமுத்ரேஷு வ்ருதா த்ருப்தஸ்ய போஜனம் |

வ்ருதா தானம் சமர்தஸ்ய வ்ருதா தீபோ திவாபி ச ||

இப்படி நான்கு நான்காக உணர்ந்து கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன.

***

நூல் பல கல்: ஆத்திச் சூடி!(Post.11,502)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,502

Date uploaded in London – 3 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

நான் எழுதிய 85 நூல்களில் கம்பன் படைப்புகள் பற்றிய இரண்டு நூல்கள் இதோ:

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

1.அருந்தவத்து அரசி சபரி; ராமாயண இன்பம்

2.ஒரே துறையில் மானும் புலியும்

3.கம்ப ராமாயணத்தில் அதிசயச் சங்கு

4.சாமுத்ரிகா லட்சணம் பற்றி கம்பன் தகவல்

5.அகஸ்தியர் கொடுத்த அற்புத ஆயுதங்கள் : கம்பன்,

வால்மீகி தரும் தகவல்கள்

6.கங்கை பாவம் எப்படிப் போகும்? கம்பன்,

தரும் அதிசயத்  தகவல்

7.கம்பன் கவிதையில் எட்டெழுத்து மந்திரம்

8.கம்ப ராமாயண யுத்த காண்ட பொன்மொழிகள்

9.கம்பன் காலத்தில் ‘கமாண்டோ’ படை இருந்ததா?

10. கம்பன் கவிதையில் உபநிஷத், ஓம்

11.ராமன் குறித்து ராவணன் பரிகாசம், கிண்டல்

12.சீதையைப் பார்த்து சிரித்த குரங்குகள்!

13.கம்பராமாயணத்தில் கண்ணாமூச்சி

14.கம்பராமாயணத்தில் ‘காஸ்மாலஜி’

15.இராமபிரானுக்கு கம்பனும், காந்தியும், சுவாமி

விவேகானந்தரும் சூட்டும் புகழ்மாலை

16.தோள் கண்டார் தோளே கண்டார் – கம்பனுக்குப்  போட்டி

17.குரங்கு அணிந்த நகைகள் – கம்பனும் புறநானூற்றுப் புலவனும்

18.பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?

19.வெள்ளை வேண்டாம் – கம்பன், வள்ளுவன் போர்க்கொடி

20.கம்பன் பாடல்களில் அதிசய ரத்தினக் கற்கள்

21. அரக்கர்கள் யார்? கம்பன் தரும் உண்மைத் தகவல்!

22. ஆரியம் முதல் பதினெண் பாடையில்…….. கம்பன் மொழி

23.உன்னம், புதா, உளில், குரண்டம், கிலுக்கம், சென்னம் குணாலம்—கம்பன் தரும் பறவை லிஸ்ட்

24.கம்பனில்,திருவாசகத்தில் ‘இயம் சீதா மம சுதா’!

25.சூர் அறுத்தவனும் ஊர் அறுத்தவனும்! கம்ப ராமாயண இன்பம்

Xxxx

20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்

பொருளடக்கம்

1. ரிக்வேதத்திலும் கம்ப ராமாயணத்திலும் தவளைப்பாட்டு!

2. 9000 கோடி படை வீரர்! கம்பன் சொன்ன பொய்!!

3. அறம் வெல்லும், பாவம் தோற்கும்: கம்பன் பொ ன்மொ ழி

4. அனுமனுக்கு அயிந்திரம் தெரியும்! கம்பன் தகவல்

5. அனுமன் தோல்வி ! ஆனை க்கும் கூட அடி சறுக்கும்!

6.அனுமாருக்கு இரண்டு இறக்கை ! கம்பன் புதுத் தகவல்!

7. அனுமார் பற்றிய விநோதக் கதை

8. இடிதாங்கிக் கருவி பற்றி கம்பன் தரும் தகவல்

9. இலங்கையைப் பாதுகாக்கும் பஞ்சவர்ணக்கிளி

10. கம்ப ராமாயணத்தில் பரத நூலும் சுரத நூலும்

11. கம்பனின் அதிசய உவமை ! புறச் சூழல் உண்மை

12. கம்பன் கவிதையில் உபநிஷதம், ஓம்

13. கம்பன், சாக்ரடீஸ், திருமூலர் சொன்ன ஒரே கருத்து !

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள் ; உபநிஷத அற்புதங்கள்

14. கற்பணம் , முசுண்டி , பிண்டிபாலம் கம்பன் தரும் ஆயுதப் பட்டியல்

15. குடிகாரர்கள் பற்றி கம்பன் எச்சரிக்கை

16. சச்சரி , குச்சரி , பிச்சரி ன் பிதற்றல் — கம்பனின் சங்கீத அறிவு இசைத் தமிழ் அதிசயங்கள்

17. சம்பாதி செய்த அற்புதம்: கம்பன் கூறும் செய்தி !!

18. சூரியனிடம் பாடம் கற்றான் அனுமன்

19. தாய் தன்னை அறியாத கன்று இல்லை ! கம்பன் உவமை நயம்!!

20. துணை இலா தவரும், புணை இலா தவரும்– கம்ப ராமாயணச் சுவை

21. துன்பங்கள் நீங்க வழி ; அனுமன் கண்டுபி டிப்பு

22. நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனி னும் நல்லது உண்டோ

23. மனு நீதியைக் கம்பன் புகழ்வது ஏன்?

24. ராமனின் கலர் என்ன? அனுமனின் கலர் என்ன?

25. ராமன்-சுக்ரீவன் நட்புறவு ஒப்பந்தம்! கம்பன் தரும் சுவை மிகு தகவல்

26.ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்?

27. ராமாயணத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’!

உலகின் முதல் வெளி நாட்டு தற்காலிக அரசு!

28. ராவணன் கிரீடம் பற்றி கம்பன் தரும் அதிசயத் தகவல்

29. லெட்சுமணன் படித்த ‘ஸ்கூல்’ பற்றி கம்பன் தகவல்

30. வள்ளுவனுக்கும் கம்பனுக்கும் பிடித்த அவதாரம்!

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

  1. You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

—–subham—

Tags -என் புஸ்தகம், கம்ப ராமாயணம்

பிரபல இலக்கிய  சம்வாதங்கள்-1 கவி தார்த்திக சிங்கமும்…….!- Part 2 (Post.11,502)


WRITTEN BY B. KANNAN, Delhi

Post No. 11,502

Date uploaded in London – 3 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Part Two

மேலும் தொடர்கிறார் 

बाह्यैर्वर्णाडम्बरैर्मा भ्रमन्तु
च्छित्वा गर्भाभ्यन्तरं शोधयन्तु ।
निर्णेतारो नीरसत्वेन को  
डिण्डीराणां डिण्डिमानां च भेदः ।४।

பாஹ்யை வர்ணாடம்ப ரைர்மா ப்ரமந்து

ச்சித்வா கர்பாப்யந்தரம் ஷோதயந்து |

நிர்ணேதாரோ நீரசத்வேன கோ வா

டிண்டிராணாம்  டிண்டிமாநாம் ச பேத: || (4)

(பாஹ்யைவெளிப்பாடுஅந்நியம்வர்ணாடம்ப=தரம் பொருந்தியரைர்மா=பண்புஇயல்புப்ரமந்து=மயங்கிச்சித்வா=பரிசீலனைஷோதயந்து=விளக்கம்நிர்ணே தாரோதீர்மானித்தல்நீரசத்வேன=குறைகளின்றி, டிண்டிராணாம்=நீர்க்குமிழிடிண்டிமாநாம்மத்தளம் பேத:= (இரண்டுக்குமுள்ள) வித்தியாசம்

(ஓரு பொருளின் புறத் தோற்றத்தைக் கண்டு மயங்கிவிடுதல் போற்றுதற்குரிய விஷயமல்லவே) ஒரு கிரந்தத்தை ஆராயும் விமர்சகர்கள் அது எடுத்துக் காட்டும் வெளிப்படையான இயல்பு, பண்புகளால் மட்டும் ஈர்க்கப்படாமல் அதில் அடங்கியி ருக்கும் சாராம்சம் எந்தக் குறைபாடு இன்றிச் சொல்லப் பட்டிருக்கிறதா என்பதையே தேட வேண்டும்- தொட்டால் உடையும் நீர்க்குமிழியா, தொடுவதால் நாதமெழுப்பும் மத்தளமா என அப்போதுதானே தெரியும்?

இப்படியாகத்தானே அவர்களிடையே கடுமையானச் சொற்போர் விவாதம் நடந்தது. சிங்கத்தின் முன் குள்ளநரி எதிர்த்துப் போராட முடியுமா? சுவாமிதேசிகரே முடிவில் வெற்றிவாகைச் சூட, தவறை உணர்ந்த டிண்டிமா கவி அவரிடம் சரணடைந்து, சுவா மியைப் போற்றிப் புகழ்ந்தார், இதோ இப்படித்தான்……

घोटीधाटीकठोरस्फुटविकटकथाटोपवाचाटकोटी- 

कोटीराघाटपेटीपुटघटितमणीसङ्घसङ्घट्टिताङ्घ्रिः ।   
खर्वीकुर्वन् सगर्वं जयति कविततेस्सर्वतन्त्रस्वतन्त्रो        
वेदान्ताचार्यवर्यो विघटितजडधीसङ्कटो वेङ्कटेशः ।५।

கோடீதாடீ கடோரஸ்ஃபுடவிகடகதாடோப வாசாடகோடீ

கோடீராகாடபேடீ புடகடிதமணீ சங்கசங்கடிட தாங்க்ரி:|  

கர்வீகுர்வந் சகர்வம் ஜயதி கவிததேஸ சர்வதந்த்ர ஸ்வதந்த்ரோ

வேதாந்தசார்யவர்யோ விகடித ஜடதீ சங்கடோ வேங்கடேச: ||

இப்பாடலில் புலவர் செய்யும் வார்த்தைஜாலம் நம்மை வியக்க வைக்கிறது! அவர் பயன்படுத்தியுள்ள மோனை அலங்கார அணி(ALLITERATION) செய்யுளைத் திரும்பத் திரும்பப் படிக்க வைக்கிறது என்பது என்னவோ, உண்மையே!

(கோடீதாடீ=குதிரைப் பந்தய சூதாட்டம், கடோர்=மும்முறம், ஸ்ஃபுட=தீவிரத்தைக் குறைக்க, விகடகதாடோப= சமாளிக்க முடியாத வாதாடுபவர், வாசாட=பேச்சுப் போட்டி,

கோடீ=மகுடம்,ராகாடபேடீ=பொருள் வைக்கும் பெட்டி, புடகடிதமணீ= பளபளக்கும்மணி, சங்கசங்கடிட=பிறருடன் மோதுதல், கர்வீகுர்வந்=காயப்படுத்தும் செயலை அகற்றுதல், சகர்வம்=மிகப்படுத்திய தற்பெருமை, கவிததேஸ=எல்லாம் அறிந்த, விகடித=பயமுறுத்தும், ஜடதீ =மந்தம்,முட்டாள்தனம்)

ஶ்ரீவேங்கடேச தவச்சீலரே! தாங்கள் பங்கேற்ற தர்க்க விவாத நிகழ்ச்சிகள் யாவும் குதிரைப் பந்தயத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பணயம் வைத்து விளையாடுவது போல் நீண்டுப் போய்க் கொண்டிருக்கும், அல்லவா! மும்முறமாய் கடுமையாக வாதம் செய்வோர் பலர் அதிமேதாவிகள், சமாளிக்க முடியாத அளவுக்கு விதண்டா  வாதமிடுபவர்கள், சிலர் மந்தபுத்தியுடையோர், இவர்கள் அனைவரும்  தற்பெருமை எனும் மின்னும் மகுடத்தைத் தங்கள் ”தலைப் பெட்டி” மேல் சூடியிருப்பதாகப் பீற்றிக் கொள்வர். இவர்களை வாதத்தில் வென்று, அவர்கள் அணிந்திருக்கும் செருக்குஎன்ற மகுடத்தை வீழ்த்தி, ஆணவம், ஆடம்பரம் மற்றும் வீண் கர்வத்தை அடக்கியுள்ளீர்! தாங்கள் கவிஞர்களுள் தலை சிறந்தவர். இதை அறிந்துகொள்ளாத இச்சிறியோனை மன்னித்து அருள்வீராக!” — எனக் கூறித் தன் கன்னங்களில் “பளார்பளார்” என்று அறைந்து கொண்டு சுவாமி தேசிகரைத் தண்டனிட்டார். பின்பு கீழ்கண்டவாறு போற்றித் துதித்தார்…..

द्विचतुष्पदपरिवर्तन-
गर्वितकविशरभगण्डभेरुण्डः ।
खण्डनखण्डनकविरिह
डिण्डिमकविगण्डडिण्डिमो जयति ।६।

த்வி சதுஷ்பத பரிவர்தன

கர்வித கவிஷரப கண்டபேருண்ட: |

கண்டந கண்டந கவிரிஹ

டிண்டிமகவி கண்ட டிண்டிமோ ஜயதி ||

(த்வி சதுஷ்பத=2 அல்லதுசொற்களை மட்டும்பரிவர்தனகையாண்டுகர்வித கவிஷரபகர்வமிக்க கவிகுஞ்சரம்,

கண்டபேருண்ட:=கண்டபேருண்ட விலங்கு*

கண்டந கண்டந=கன்னத்தில் போட்டுக் கொண்டுகண்ட டிண்டிமோமத்தளம் தட்டுவது )

ஸ்வாமி! டிண்டிமா என்கிற இந்தப் புலவன் தன் அடாதசெயலுக்கு வருந்தி, மத்தளத் தைத் தட்டுவது போல் கன்னத்தில் அறைந்துகொண்டு தங்களிடம் மன்னிப்பு கோரு கிறான். நீங்கள் அதிசயக் கண்டபேருண்டா விலங்குப் பறவை(!) போன்றவர். தங்க ளுக்குத் தெரிந்த இரண்டு (அ) நான்குச் சொற்களை வைத்துக் கொண்டு கவிதையில் வார்த்தை ஜாலம் காட்டித் தங்களைப் பலமிக்கக் குட்டிச் சிங்கம், யானைக்குட்டி என இறுமாப்புடன் சுற்றி வரும் போலி கவிஞர்களின் மமதையை  அடக்கி ஆளுபவர், நீங்கள்! உங்களுக்கு முன் நான் எம்மாத்திரம்?” எனக் கூறி சரணடைகிறான்.

*கண்டபேருண்ட=பயங்கர முகத்தையுடைய மகத்தான மந்திர தந்திரப் பலம் வாய்ந்த இரட்டைத் தலைக் கழுகு. மகேசன் கோபாவேச நரசிம்மரைச் சாந்தப்படுத்த எடுத்த ஷரபேஸ்வரர் வடிவம். தனது கூரிய வளைந்த நகத்தாலும்,அலகாலும் யானையைத் தூக்கிப் பிடித்திருக்கும். சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத் தைப் போல் நீண்ட மயிலிறகு போன்ற முடி கொண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப்பற்களும், யாளியைப் போன்ற உரு வமும் உடையவராகச் சித்தரிக்கப்படுகிறார்.

ஹோய்சால சாம்ராஜ்ஜியத்தின் அரசு சின்னமாக இருந்துள்ளது.

டிண்டிமா சர்வபௌமா அத்துடன் நிற்காமல் தேசிகர் மீது ஒருமங்கல ஸ்லோகத்தை யும் உடனுக்குடன் இயற்றி வணங்கினார். மிகவும் எளிமையான, விரைவில் புரிந்து கொள்ளக் கூடியச் சொற்களையே இங்குப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.  தினமும் ஶ்ரீவேதாந்த தேசிகர் சஹஸ்ர நாமாவளியைச் சொல்லுகையில் இந்த ஸ்லோகத்தைக் கூறி முடிப்பது ஒவ்வொரு வைணவரின் கடமையில்ஒன்றாக விளங்குகிறது. 

वेदेसन्जत खेदे मुनि  जन वचने प्राप्त नित्यावमाने
संकीर्णे  सर्व वर्णे सति तदनुगुन्णे निश्प्रमणे  पुराणे |
मायावादे समोदे कलि कलुस वसत सुन्य वादे विवादे
धर्म त्राणाय यो भूत स जयति भगवान विष्णु घंटावतार !”||

வேதே சந்ஜத கேதே முனி ஜன வசனே ப்ராப்த நித்யாவமானே

சங்கீர்ணே சர்வவர்ணே சதி தத அநுகுன்ணே நிஷ்ப்ரமணே  புராணே |

மாயாவாதே சமோதே கலி கலுச வசத சுன்ய வாதே விவாதே

தர்ம த்ராணாய யோ பூதஸ ஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார! ||

கேதே=தளர்வு,நலிவுஅநுகுன்ணேபரிவர்த்தனைநிஷ்ப்ரமணே=குழப்ப நிலை,

கலுச=திறமையற்றத்ராணாய =ரட்சிக்ககாப்பாற்ற

(எங்கு பார்த்தாலும் கொந்தளிப்பு, கொடுமை,திறமையற்றப் போக்கு என கலிகாலத்து இலட்சணங்கள் தெரிகின்றன.தவறான முறையில் வேதநெறிகள் விளக்கப்படுவதால் அவை தளர்வடைந்து அவதிக்கு உள்ளாகின்றன;அறிஞர்களின் அறிவுரைகள் புறக்க ணிக்கப் படுகின்றன; அனைத்து வகுப்புகளிலும் புனிதமற்றக் கலாச்சார பரிவர்த்த னைக் காணப்படுகிறது; இந்தக் குழப்பமானப் பின்னணியில் நமது  புராண-இதிகாசங் கள் அதன் மகத்துவத்தைச் சிறிது  சிறிதாக இழக்க ஆரம்பிக்கின்றன; வஞ்சகமும், சூழ்ச்சியும் தலைவிரித்து ஆடுகின்றன; ஆன்மிகம், ஒழுக்கநெறிகள் பின்னடைவைச் சந்திக்கின்றன; நாத்திகவாதம் தலைத்தூக்குவதைக் காணமுடிகிறது; இந்த இக்கட்டா னத் தருணத்தில் தான் ஶ்ரீவேதாந்த தேசிகர், தர்மத்தை நிலைநாட்டவும், தர்மசிந்த னையை ரட்சிப்பதற்காகவும் ஶ்ரீமந்நாராயணனின் ஓங்கி நாதமெழுப்பும் கண்டாமணி யின் மறுபதிப்பாய் இப்பூவுலகில் அவதரித்தார்; அதில் அவர் அடையும் வெற்றியின் பிரகாசத்தில்  பிரமாதமாய் ஒளிர்கிறார். அப்படிப்பட்ட அவருக்கு நமது அநேக நமஸ் காரங்கள் உரித்தாகட்டும்! )  

டிண்டிமாகவியின் ராகவாப்யுதயம் காவியத்தை விடச்சிறந்த  யாதவாப்யுதயம் காப் பியத்தை நமக்கு அருளிய ஆச்சாரியன் வேதாந்ததேசிகரை வணங்கித் துதிப்போம்.

அடுத்து மற்றொரு விவாத நிகழ்வைக் காண்போம்.

        —————————————————————————————————–

 tags- டிண்டிமாகவி, ராகவாப்யுதயம் , யாதவாப்யுதயம், வேதாந்ததேசிக

கோயில் இல்லாத ஊர், அறிஞர் இல்லாத சபை பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post.11,501)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,501

Date uploaded in London – 3 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PART TEN OF ARAPPALEECHURA SATAKAM WITH LONDON SWAMINATHAN’S COMMENTARY

ஒன்று இல்லாமற் பயன்படாதவை

10.கோவில் இல் லாதவூர், நாசியில் லாமுகம்,

     கொழுநன் இல் லாத மடவார்,

  குணமதில் லாவித்தை, மணமதில் லாதமலர்,

     குஞ்சரம் இலாத சேனை,

காவல்இல் லாதபயிர், பாலர்இல் லாதமனை,

     கதிர்மதி யிலாத வானம்,

  கவிஞர்இல் லாதசபை, சுதிலயை இலாதபண்,

     காவலர் இலாத தேசம்,

ஈவதில் லாததனம் நியமம்இல் லாதசெபம்,

     இசை லவணம் இல்லா தவூண்,

  இச்சையில் லாதபெண் போகநலம், இவை தம்மின்

     ஏதுபலன் உண்டு? கண்டாய்!

ஆவியனை யாட்கிடம் தந்தவா! கற்பதரு

     ஆகும்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

      (இ-ள்.) ஆவி அனையாட்கு இடம் தந்தவர் – உயிரனைய

உமையம்மைக்கு மெய்யில் இடப்பங்கை அருளியவனே!, கற்ப தரு ஆகும்

– கற்ப தரு என உலகிற்குப் பயன்படுகிற எமது ……. தேவனே!. கோவில்

இல்லாதவூர் – திருக்கோயில் இல்லாத ஊரும், நாசி இல்லா முகம் – மூக்கு இல்லாத முகமும், கொழுநன் இல்லாத மடவார் – கணவன் இல்லாத பெண்களும், குணமது இல்லா வித்தை – நற்பண்பையூட்டாத கல்வியும்,

மணமது இல்லாத மலர் – நறுமணம் இல்லாத பூவும், குஞ்சரம் இல்லாத

சேனை – யானை இல்லாத படையும், காவல் இல்லாத பயிர் –

வேலியில்லாத பயிரும், பாலர் இல்லாத மனை – மழலைச் சிறுவர் இல்லாத இல்லமும், கதிர்மதி இல்லாத வானம் – ஞாயிறுந் திங்களும் உலவாத வானமும்கவிஞர் இல்லாத சபை –புலவர்கள் இல்லாத அவையும், சுதி லயை இலாத பண் – இசையுந் தாள

அளவும் இல்லாத சங்கீதமும், காவலர் இலாத தேசம் – அரசன் இல்லாத  நாடும்ஈவது இல்லாத தனம் – கொடையில்லாத பொருளும், நியமம் இல்லாத செபம் – ஒழுங்கு இல்லாத வழிபாடும், இசை லவணம் இல்லாத

வூண் – ஏற்ற அளவு உப்பில்லாத உண்டியும், இச்சை யில்லாத பெண்

போகம் – விருப்பமற்ற மங்கையின் இன்பமும், இவை தம்மின் – ஆகிய இவற்றால், ஏது பலன் உண்டு – என்ன நன்மை யுண்டு? கண்டாய்

     (க-து.) கோயில் இல்லாத வூர் முதலானவை பயனற்றவை.

xxxx

கோவில்கள்

தமிழர்களைப் போல கோவில்களைப் போற்றியோர் வேறு எவருமிலர் .

ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோபுர தரிசனம் கோடி புண்ணியம்கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற ஆன்றோர் மொழிகளைத் தமிழ் சிறுவர்களும் அறிவார்கள். அதை எல்லாம் வீட தமிழ் நாட்டில்தான் 40, 000 கோவில்கள் உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கானவை வானளாவிய கோபுரங்களை உடையன . பன்னிரு திருமுறைகளும் திவ்வியப் பிரபந்தமும்  கோவில்களால்  எழுந்த பாடல்களே . இன்று கோவில்கள் மூலம் பிழைப்போர் தொகையும் கோடி கோடியாகும் .

அச்சன்கோவில், நாகர்கோவில், வைத்தீஸ்வரன்கோயில், திருமலைக் கோயில்  என்று கோவில் பெயர்களிலேயே ஊர்கள் இருப்பதும் தென்னாட்டில்தான் .

xxxx

கணவன் இல்லாத பெண்கள்

இந்த வகைப் பெண்கள் முதலில் மேலை நாட்டில் மட்டுமே அதிகமாக இருந்தனர் . ஏனெனில் அ ங்கு விவாக ரத்து செய்து / divorce வாழும் பெண்களுக்கு அரசாங்கம் பணத்தை வாரி வழங்குகிறது. மேலும் பணக்காரர்களைக் கல்யாணம் கட்டி ,எட்டி உதைந்தால், ஜீவனாம்சம் alimony என்ற பெயரில், வேலை செய்யாமலே காசு பெற முடிகிறது . பல ஆண்கள் அவர்களைச் சுற்றி வட்டமிட்டு ஏமாறுவதில், அவர்கள் பல காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். இவ்வளவு இருந்தாலும் அவர்களுக்குப் பின்னால், முதுகுக்குப் பின்புறத்தில், ஆண்களும் பெண்களும் பேசும் ஏச்சுப் பேச்சுக்களால் அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் முகம் காட்ட முடிவதில்லை.

Xxxxx

நற்பண்பையூட்டாத கல்வி

அந்தக் காலத்தில் ஒருவரை மெத்தப் படித்தவர் என்று அறிமுகப் படுத்தினால் அவர்கள் அந்தக் கல்விக்கு ஏற்ற ஒழுக்கம் உடையவர் என்று அர்த்தம் . இதனால்தான் வள்ளுவனும்

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக. — குறள் 391  என்றான் .

மேலும் இப்போதெல்லாம் அறநெறிக் கல்வி moral education மிகவும் குறைந்துவிட்டது . கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்வதால் பிள்ளைகள் வன்முறை மற்றும், ஆபாச வீ டியோக்களில் நேரத்தைச் செலவிடுகின்றனர். ஆசிரியர்களின் ஒழுக்கமோ பத்திரிகைகளில் வரும் கைது செய்திகளில் news about arrests of teachers பிரதிபலிக்கிறது . இதையெல்லாம் எண்ணித்தானோ   குணமதில் லாவித்தை என்று அம்பலவாணர் இந்த சதகத்தில் கூறினார் போலும் !

Xxx

சந்திரன் இல்லா வானம், தாமரை இல்லாப் பொய்கை,

மந்திரி இல்லா வேந்தன், மதகரி இல்லாச் சேனை,

சுந்தரப் புலவர் இல்லாத் தொல்சபைசுதர்இல் வாழ்வு,

தந்திகள் இல்லா வீணைதனம் இலா மங்கை போல் ஆம்.

என்று விவேகசிந்தாமணியில் ஒரு அருமையான பாடல் உள்ளது. இந்த சதகத்தில் உள்ள. குழந்தைகள் இல்லாத வீடு, இன்பம் தராத மங்கை. முறையற்ற இசை, நிலவு இல்லாத வானம் ஆகியன இதிலும் உளது.

மதகரி இல்லாச் சேனை — மதம் பொருந்திய யானைகள் இல்லாத சேனையும்,     சுந்தரப் புலவர் இல்லாத் தொல்சபை — சிறந்த புலவர்கள் இல்லாத பழமையான சபையும்,     சுதர் இல் வாழ்வு — நல்ல மக்கள் பேறு இல்லாத வாழ்வும்,

Xxx

குறள் 66

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்

மழலைச் சொல் கேளாதவர்

[அறத்துப்பால்இல்லறவியல்மக்கட்பேறு]

என்று சொல்லும் வள்ளுவன் பத்து குறட்பாக்களில்  புத்திரப் பெரு பற்றி விளக்கிவிட்டான். இதே கருத்தைப் புறநானூற்றிலும் (168) காணலாம்

படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்

உடைப் பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்

குறுகுறு நடந்துசிறுகை நீட்டி,

இட்டும்தொட்டும்கவ்வியும்துழந்தும்,

நெய்உடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,

மயக்கு உறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே.

—-புறநானூற்றுப் பாடல் 168 . பாண்டியன் அறிவுடை நம்பி பாட்டு.

Xxxx

வள்ளுவனின் செக்சி Sexy  உவமை

இன்பம் தர முடியாத மங்கைகள் பற்றி வள்ளுவனும் அறிவான் ; அவன் பயன்படுத்தும் Sexy உவமையில் அது வருகிறது

குறள் 402

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று

[பொருட்பால், அரசியல், கல்லாமை]

Xxx

சூரிய சந்திரர்கள்

சூரியனும் சந்திரனும் எவ்வளவு முக்கியம் என்பதை சிலப்பதிகாரக்

கடவுள் வாழ்த்திலும் காண்கிறோம்

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-

கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்

அம் கண் உலகு அளித்தலான்.

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-

காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு

மேரு வலம் திரிதலான்.

Xxxx

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே  என்ற பழமொழி உப்பின் அவசியத்தைக் காட்டும் (லவணம் = உப்பு)

xxx

நேற்று வெளியிட்ட விளக்க உரையில் பர்த்ருஹரி நீதி சதகப் பாடல்களையும் கருத்திற்கொள்க

 –subham—

tags-கோவில், இல்லாத, கல்வி, சபை , புலவர் 

S Nagaraajan Article Index : November 2022 (Post No.11,500)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,500

Date uploaded in London – 3 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

SNR Article Index : November 2022

 NOVEMBER 2022 

1-11-2022 11402        அருணகிரிநாதரும் தமிழும் – 6 புத்தக அறிமுகம் 100 : 

               விண்வெளியில் மனித சாதனைகள் பாகம் 3

2-11-2022 11406        அருணகிரிநாதரும் தமிழும் – 7 புத்தக அறிமுகம் 101 : 

               அறிவியல் துளிகள் பாகம் 1

3-11-2022 11409        அருணகிரிநாதரும் தமிழும் – 8 புத்தக அறிமுகம் 102 : 

               அறிவியல் துளிகள் பாகம் 2

4-11-2022 11411        அருணகிரிநாதரும் தமிழும் – 9 புத்தக அறிமுகம் 103 : 

               அறிவியல் துளிகள் பாகம் 3

5-11-2022 11414        எஸ்.நாகராஜன் அக்டோபர் 2022 கட்டுரைகள் இண்டெக்ஸ்

              புத்தக அறிமுகம் 104 : அறிவியல் துளிகள் பாகம் 4

6-11-2022 11417       Hindu Dharma – A Way of Life புத்தக அறிமுகம் 105 : அறிவியல்

               துளிகள் பாகம் 5

7-11-2022 11420       நீடித்த ஆரோக்கிய வாழ்விற்கு ஆயுர்வேதம் தரும்

               அன்புரை – புத்தக அறிமுகம் 106 : அறிவியல் துளிகள்   

               பாகம் 6

8-11-2022 11423         அருணகிரிநாதருக்கு என்ன ‘வேணும்?’ -1 – புத்தக

                அறிமுகம் 107 – அறிவியல் வியக்கும் ஆன்மீகம்!

9-11-2022 11426        அருணகிரிநாரிநாதருக்கு என்ன ‘வேணும்?’ -2 புத்தக   

                அறிமுகம் 108 – திறன் கூட்டும் தியானம்

10-11-2022 11429  அருணகிரிநாதர் போற்றும் ‘ வேண்ட அரிய

               பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாள்’!  –

               புத்தக அறிமுகம் 109 – நவ கிரகங்கள்

11-11-2022 11434     தன்னேர் இலாத தமிழின் பெருமை!  புத்தக அறிமுகம்

               110 – ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள்!

12-11-2022 11437      பாரேன், படைத்தவனின் புத்திசாலித்தனத்தை, தூ! –

                புத்தக அறிமுகம் -111 – ஆஹா! அப்படியா!! (விஞ்ஞான

                கேள்வி-பதில்கள்)

13-11-2022 11440     ஆகவராமன் என்ற பட்டத்தைப் பெற்ற சூரிய காங்கேயன்!

              -கொங்குமண்டல சதகம் பாடல் 88 -புத்தக அறிமுகம் -112

              – அறிவியல் நோக்கில் ஆன்மீக ரகசியங்கள்!

14-11-2022 11442    திருப்புகழில் ராமாயணம்! – புத்தக அறிமுகம் 113 –

               வருவார் காந்திஜி!   

15-11-2022 11444     திருப்புகழில் கணபதி! புத்தக அறிமுகம் 114 – விலங்கு

               உலகப் புதுமைகள்!

16-11-2022 11447    ஆஹா! அதிரடிச் செய்திகள்! –  புத்தக அறிமுகம் 115 –

               டயானாவின் கதை

17-11-2022 11450      சேவையே பிரார்த்தனை!  –  புத்தக அறிமுகம் 116 –  

               நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்!

18-11-2022 11452    அருள்வாயே – 1  –  புத்தக அறிமுகம் 117 – ஜோதிடம்

               உண்மையா?

19-11-2022 11454     அருள்வாயே – 2 –   புத்தக அறிமுகம் 118 – பார்த்ததில்

               ரசித்தது படித்ததில் பிடித்தது – 1

20-11-2022 11457      அருள்வாயே – 3 –    புத்தக அறிமுகம் 119 திரைப்படப்

                                        பாடல்களோடு ஒரு பயணம் – 1             

21-11-2022 11459       அருள்வாயே – 4 –    புத்தக அறிமுகம் 119 திரைப்படப்

                                        பாடல்களோடு ஒரு பயணம் – 2

22-11-2022 11462      முயற்சியே வெற்றி தரும் – புத்தக அறிமுகம் 120

               அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா! 

23-11-2022 11464       கலியுக அவதாரம் ஶ்ரீ சத்ய சாயிபாபா  – புத்தக

               அறிமுகம் 121/1 அற்புத அவதாரம் சத்யசாயிபாபா

               (அம்ருத சாகரம் இணைப்பு)

24-11-2022 11467       ராமாயணத்தில் வரும் நதிகள் – 1 – கலியுக அவதாரம்  

                 ஶ்ரீ சத்ய சாயிபாபா  – புத்தக அறிமுகம் 121/2 அற்புத

                அவதாரம் சத்யசாயிபாபா (அம்ருத சாகரம் இணைப்பு)

25-11-2022 11471          ராமாயணத்தில் வரும் நதிகள் – 2  – புத்தக

                 அறிமுகம் 122 – பறக்கும் தட்டுகளும்

                    அயல்கிரகவாசிகளும்     

26-11-2022 11475            அருள்வாயே – 5 –    புத்தக அறிமுகம் 123 ஆன்மீக

                  ரகசியங்கள்!

27-11-2022 11479      வாழ்க்கையின் ஒரு கணத்தைக் கூட கோடி

                ரத்னங்களாலும் பெற முடியாது (சுபாஷிதம்) – –   

                புத்தக அறிமுகம் 124 அறிவியல் வியக்கும் மந்திர

                மஹிமை, மனோசக்தி, மறுபிறப்பு, காலம் பற்றிய

                உண்மைகள்!

28-11-2022 11481       ராமாயணத்தில் வரும் நதிகள் – 3    – புத்தக அறிமுகம்

                125 முன்னேறவும் முன்னேற்றவும் சில கதைகள்,

                சம்பவங்கள், கருத்துக்கள்!

29-11-2022 11483       ராமாயணத்தில் வரும் நதிகள் – 4    – புத்தக அறிமுகம்

                                        126 அறிவியல் துளிகள் 18ஆம் பாகம்

30-11-2022 11487        காம கீதா – ஆசை வெல்லுதற்கரியது, அதை

                வெல்லும் உபாயம் என்ன? புத்தக அறிமுகம்  127

                கடவுளைக் காட்டு!

***                            

புத்தக அறிமுகம் 130 

இத்துடன் எனது 130 புத்தகங்களைப் பற்றிய அறிமுகம் நிறைவடைகிறது. அன்பர்கள் இவற்றை pustaka, amazon, overdrive, scribd, google, storytel ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கலாம்.

புஸ்தகா மூலமாகப் படிக்கலாம்டிஜிடல் புத்தகமாகவும் அச்சிட்ட புத்தகமாகவும் வாங்கலாம்.

புதிய புத்தகங்கள் பற்றிய அறிமுகம் அவ்வப்பொழுது தொடரும். நன்றி.

           ச.நாகராஜன்

வாக்கிற்கு அருணகிரி!

பாகம் 1 

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1. திருப்புகழ் ஓதல் ஒரு வழிகாட்டி!

2. மந்திரத் திருப்புகழ்

3. 100 திருப்புகழ் பாடல் பட்டியல்

4. ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள் – 1

5. ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள் – 2

6. ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள் – 3

7. 1324 திருப்புகழ்பாடல்களில் 857 சந்தங்கள்! 178 தாள அமைப்புகள்! 

8. சகல கலா வல்லவன் யார்? – பார்வதியின் தீர்ப்பு!                   9. முருகனே திருஞான சம்பந்தர் – அருணகிரிநாதர் அருளுரை!         10. கலாப மயில் பெருமை!

11. அனைத்துப் பதமும் அருளும் மயில் விருத்தம்!

12. அருணகிரிநாதர் போற்றும் முருகன்! – 1

13. அருணகிரிநாதர் போற்றும் முருகன்! – 2

14. தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும்!

15. அருணகிரிநாதரும் தமிழும் – 1

16. அருணகிரிநாதரும் தமிழும் – 2

17. அருணகிரிநாதரும் தமிழும் – 3

18. அருணகிரிநாதரும் தமிழும் – 4

19. அருணகிரிநாதரும் தமிழும் – 5

20. அருணகிரிநாதரும் தமிழும் – 6

21. அருணகிரிநாதரும் தமிழும் – 7

22. அருணகிரிநாதரும் தமிழும் – 8

23. அருணகிரிநாதரும் தமிழும் – 9

24. உடல் ஒரு மரம்? அருணகிரிநாதரின் வர்ணனை! உடலே கோயில் –

   அப்பரின் சிந்தனை!!

25. அருணகிரிநாதரும் மகாத்மா காந்திஜியும்

26. மதுரகவி திருப்புகழ்

*

நூலில் உள்ள என்னுரை இது:

என்னுரை

தெய்வ மொழியான தமிழின் தெய்வீக ஆற்றலைப் புலப்படுத்த அவதரித்த அருளாளர் அருணகிரிநாதர்.

 தமிழின் மூலம் எளிதாக முருகனை அடைய வழி வகுத்தவர் அவர்.

தமிழுக்குப் புதிய சந்த வகையைக் காட்ட முருகனே அருள் புரிய அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களை உலகிற்குத் தந்தார்.

வாக்கிற் கருணகிரி வாதவூ ரர்கனிவில்

தாக்கிற் றிருஞான சம்பந்தர் – நோக்கிற்கு

நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்

சொற்குறுதிக் கப்பரெனச் சொல்

என்ற பாடல் மூலம் ‘வாக்கிற்கு அருணகிரி’ எனப் புலவோர் உச்சி மேல் வைத்துக் கொண்டாடிய அருளாளர் அருணகிரிநாதர் என்பது தெளிவாகிறது.

‘யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்’ என்ற அவரது வாக்கு திருப்புகழை மெய்யாக இயற்றியது யார் என்பதைத் தெரிவிக்கிறது.

அனைத்து வேதம், இதிஹாஸம், சாஸ்திரங்கள் ஆகியவற்றின் சாரமாகத் திகழ்வது திருப்புகழ்.

தமிழின் பெருமையை அருணகிரிநாதர் ஆங்காங்கே சொல்லிக் கொண்டே போவது தமிழர்கள் செய்த பெரும் பாக்கியமே.

‘முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்/ என்று தமிழ் முருகனின் ரகசியத்தை அவர் உரைக்கக் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது.

திருப்புகழ் அமிர்தத்தின் பெருமையை திருமுருக கிருபானந்த வாரியார், தணிகைமணி திரு வ. சு. செங்கல்வராய பிள்ளை, கௌமாரம் ஶ்ரீ கோபாலசுந்தரம்உள்ளிட்டோர் மிக அழகுற விளக்கி வந்துள்ளனர்.

இந்த நூல் நான் அவ்வப்பொழுது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.

திருப்புகழின் பெருமையை உரைக்கும் இன்னும் பல கட்டுரைகள் அடுத்த பாகமாக மலரும்.

இதை அவ்வப்பொழுது www.tamilandvedas.com இல் வெளியிட்டு வந்த லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

கட்டுரைகளைப் படித்து அவ்வப்பொழுது பாராட்டி ஊக்கமூட்டிய அனைத்து மெய்யன்பர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.

இதை நூல் வடிவில் அழகுற வெளியிட முன் வந்த pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

திருப்புகழை தினமும் ஓதுவோம். முருகனின் திருவருளைப் பெறுவோம்.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                ச.நாகராஜன்

24-10-2022

தீபாவளித் திருநாள்

 நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**