.jpg)
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,500
Date uploaded in London – 3 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
SNR Article Index : November 2022
NOVEMBER 2022
1-11-2022 11402 அருணகிரிநாதரும் தமிழும் – 6 புத்தக அறிமுகம் 100 :
விண்வெளியில் மனித சாதனைகள் பாகம் 3
2-11-2022 11406 அருணகிரிநாதரும் தமிழும் – 7 புத்தக அறிமுகம் 101 :
அறிவியல் துளிகள் பாகம் 1
3-11-2022 11409 அருணகிரிநாதரும் தமிழும் – 8 புத்தக அறிமுகம் 102 :
அறிவியல் துளிகள் பாகம் 2
4-11-2022 11411 அருணகிரிநாதரும் தமிழும் – 9 புத்தக அறிமுகம் 103 :
அறிவியல் துளிகள் பாகம் 3
5-11-2022 11414 எஸ்.நாகராஜன் அக்டோபர் 2022 கட்டுரைகள் இண்டெக்ஸ்
புத்தக அறிமுகம் 104 : அறிவியல் துளிகள் பாகம் 4
6-11-2022 11417 Hindu Dharma – A Way of Life புத்தக அறிமுகம் 105 : அறிவியல்
துளிகள் பாகம் 5
7-11-2022 11420 நீடித்த ஆரோக்கிய வாழ்விற்கு ஆயுர்வேதம் தரும்
அன்புரை – புத்தக அறிமுகம் 106 : அறிவியல் துளிகள்
பாகம் 6
8-11-2022 11423 அருணகிரிநாதருக்கு என்ன ‘வேணும்?’ -1 – புத்தக
அறிமுகம் 107 – அறிவியல் வியக்கும் ஆன்மீகம்!
9-11-2022 11426 அருணகிரிநாரிநாதருக்கு என்ன ‘வேணும்?’ -2 புத்தக
அறிமுகம் 108 – திறன் கூட்டும் தியானம்
10-11-2022 11429 அருணகிரிநாதர் போற்றும் ‘ வேண்ட அரிய
பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாள்’! –
புத்தக அறிமுகம் 109 – நவ கிரகங்கள்
11-11-2022 11434 தன்னேர் இலாத தமிழின் பெருமை! புத்தக அறிமுகம்
110 – ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள்!
12-11-2022 11437 பாரேன், படைத்தவனின் புத்திசாலித்தனத்தை, தூ! –
புத்தக அறிமுகம் -111 – ஆஹா! அப்படியா!! (விஞ்ஞான
கேள்வி-பதில்கள்)
13-11-2022 11440 ஆகவராமன் என்ற பட்டத்தைப் பெற்ற சூரிய காங்கேயன்!
-கொங்குமண்டல சதகம் பாடல் 88 -புத்தக அறிமுகம் -112
– அறிவியல் நோக்கில் ஆன்மீக ரகசியங்கள்!
14-11-2022 11442 திருப்புகழில் ராமாயணம்! – புத்தக அறிமுகம் 113 –
வருவார் காந்திஜி!
15-11-2022 11444 திருப்புகழில் கணபதி! புத்தக அறிமுகம் 114 – விலங்கு
உலகப் புதுமைகள்!
16-11-2022 11447 ஆஹா! அதிரடிச் செய்திகள்! – புத்தக அறிமுகம் 115 –
டயானாவின் கதை
17-11-2022 11450 சேவையே பிரார்த்தனை! – புத்தக அறிமுகம் 116 –
நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்!
18-11-2022 11452 அருள்வாயே – 1 – புத்தக அறிமுகம் 117 – ஜோதிடம்
உண்மையா?
19-11-2022 11454 அருள்வாயே – 2 – புத்தக அறிமுகம் 118 – பார்த்ததில்
ரசித்தது படித்ததில் பிடித்தது – 1
20-11-2022 11457 அருள்வாயே – 3 – புத்தக அறிமுகம் 119 திரைப்படப்
பாடல்களோடு ஒரு பயணம் – 1
21-11-2022 11459 அருள்வாயே – 4 – புத்தக அறிமுகம் 119 திரைப்படப்
பாடல்களோடு ஒரு பயணம் – 2
22-11-2022 11462 முயற்சியே வெற்றி தரும் – புத்தக அறிமுகம் 120
அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா!
23-11-2022 11464 கலியுக அவதாரம் ஶ்ரீ சத்ய சாயிபாபா – புத்தக
அறிமுகம் 121/1 அற்புத அவதாரம் சத்யசாயிபாபா
(அம்ருத சாகரம் இணைப்பு)
24-11-2022 11467 ராமாயணத்தில் வரும் நதிகள் – 1 – கலியுக அவதாரம்
ஶ்ரீ சத்ய சாயிபாபா – புத்தக அறிமுகம் 121/2 அற்புத
அவதாரம் சத்யசாயிபாபா (அம்ருத சாகரம் இணைப்பு)
25-11-2022 11471 ராமாயணத்தில் வரும் நதிகள் – 2 – புத்தக
அறிமுகம் 122 – பறக்கும் தட்டுகளும்
அயல்கிரகவாசிகளும்
26-11-2022 11475 அருள்வாயே – 5 – புத்தக அறிமுகம் 123 ஆன்மீக
ரகசியங்கள்!
27-11-2022 11479 வாழ்க்கையின் ஒரு கணத்தைக் கூட கோடி
ரத்னங்களாலும் பெற முடியாது (சுபாஷிதம்) – –
புத்தக அறிமுகம் 124 அறிவியல் வியக்கும் மந்திர
மஹிமை, மனோசக்தி, மறுபிறப்பு, காலம் பற்றிய
உண்மைகள்!
28-11-2022 11481 ராமாயணத்தில் வரும் நதிகள் – 3 – புத்தக அறிமுகம்
125 முன்னேறவும் முன்னேற்றவும் சில கதைகள்,
சம்பவங்கள், கருத்துக்கள்!
29-11-2022 11483 ராமாயணத்தில் வரும் நதிகள் – 4 – புத்தக அறிமுகம்
126 அறிவியல் துளிகள் 18ஆம் பாகம்
30-11-2022 11487 காம கீதா – ஆசை வெல்லுதற்கரியது, அதை
வெல்லும் உபாயம் என்ன? புத்தக அறிமுகம் 127
கடவுளைக் காட்டு!
***
புத்தக அறிமுகம் 130
இத்துடன் எனது 130 புத்தகங்களைப் பற்றிய அறிமுகம் நிறைவடைகிறது. அன்பர்கள் இவற்றை pustaka, amazon, overdrive, scribd, google, storytel ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கலாம்.
புஸ்தகா மூலமாகப் படிக்கலாம், டிஜிடல் புத்தகமாகவும் , அச்சிட்ட புத்தகமாகவும் வாங்கலாம்.
புதிய புத்தகங்கள் பற்றிய அறிமுகம் அவ்வப்பொழுது தொடரும். நன்றி.
ச.நாகராஜன்
வாக்கிற்கு அருணகிரி!
பாகம் 1
பொருளடக்கம்
என்னுரை
அத்தியாயங்கள்
1. திருப்புகழ் ஓதல் ஒரு வழிகாட்டி!
2. மந்திரத் திருப்புகழ்
3. 100 திருப்புகழ் பாடல் பட்டியல்
4. ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள் – 1
5. ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள் – 2
6. ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள் – 3
7. 1324 திருப்புகழ்பாடல்களில் 857 சந்தங்கள்! 178 தாள அமைப்புகள்!
8. சகல கலா வல்லவன் யார்? – பார்வதியின் தீர்ப்பு! 9. முருகனே திருஞான சம்பந்தர் – அருணகிரிநாதர் அருளுரை! 10. கலாப மயில் பெருமை!
11. அனைத்துப் பதமும் அருளும் மயில் விருத்தம்!
12. அருணகிரிநாதர் போற்றும் முருகன்! – 1
13. அருணகிரிநாதர் போற்றும் முருகன்! – 2
14. தித்திக்கும் திருப்புகழ் எத்திக்கும் பரவட்டும்!
15. அருணகிரிநாதரும் தமிழும் – 1
16. அருணகிரிநாதரும் தமிழும் – 2
17. அருணகிரிநாதரும் தமிழும் – 3
18. அருணகிரிநாதரும் தமிழும் – 4
19. அருணகிரிநாதரும் தமிழும் – 5
20. அருணகிரிநாதரும் தமிழும் – 6
21. அருணகிரிநாதரும் தமிழும் – 7
22. அருணகிரிநாதரும் தமிழும் – 8
23. அருணகிரிநாதரும் தமிழும் – 9
24. உடல் ஒரு மரம்? அருணகிரிநாதரின் வர்ணனை! உடலே கோயில் –
அப்பரின் சிந்தனை!!
25. அருணகிரிநாதரும் மகாத்மா காந்திஜியும்
26. மதுரகவி திருப்புகழ்
*
நூலில் உள்ள என்னுரை இது:
என்னுரை
தெய்வ மொழியான தமிழின் தெய்வீக ஆற்றலைப் புலப்படுத்த அவதரித்த அருளாளர் அருணகிரிநாதர்.
தமிழின் மூலம் எளிதாக முருகனை அடைய வழி வகுத்தவர் அவர்.
தமிழுக்குப் புதிய சந்த வகையைக் காட்ட முருகனே அருள் புரிய அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களை உலகிற்குத் தந்தார்.
வாக்கிற் கருணகிரி வாதவூ ரர்கனிவில்
தாக்கிற் றிருஞான சம்பந்தர் – நோக்கிற்கு
நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்
சொற்குறுதிக் கப்பரெனச் சொல்
என்ற பாடல் மூலம் ‘வாக்கிற்கு அருணகிரி’ எனப் புலவோர் உச்சி மேல் வைத்துக் கொண்டாடிய அருளாளர் அருணகிரிநாதர் என்பது தெளிவாகிறது.
‘யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்’ என்ற அவரது வாக்கு திருப்புகழை மெய்யாக இயற்றியது யார் என்பதைத் தெரிவிக்கிறது.
அனைத்து வேதம், இதிஹாஸம், சாஸ்திரங்கள் ஆகியவற்றின் சாரமாகத் திகழ்வது திருப்புகழ்.
தமிழின் பெருமையை அருணகிரிநாதர் ஆங்காங்கே சொல்லிக் கொண்டே போவது தமிழர்கள் செய்த பெரும் பாக்கியமே.
‘முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்/ என்று தமிழ் முருகனின் ரகசியத்தை அவர் உரைக்கக் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது.
திருப்புகழ் அமிர்தத்தின் பெருமையை திருமுருக கிருபானந்த வாரியார், தணிகைமணி திரு வ. சு. செங்கல்வராய பிள்ளை, கௌமாரம் ஶ்ரீ கோபாலசுந்தரம்உள்ளிட்டோர் மிக அழகுற விளக்கி வந்துள்ளனர்.
இந்த நூல் நான் அவ்வப்பொழுது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.
திருப்புகழின் பெருமையை உரைக்கும் இன்னும் பல கட்டுரைகள் அடுத்த பாகமாக மலரும்.
இதை அவ்வப்பொழுது www.tamilandvedas.com இல் வெளியிட்டு வந்த லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
கட்டுரைகளைப் படித்து அவ்வப்பொழுது பாராட்டி ஊக்கமூட்டிய அனைத்து மெய்யன்பர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக.
இதை நூல் வடிவில் அழகுற வெளியிட முன் வந்த pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
திருப்புகழை தினமும் ஓதுவோம். முருகனின் திருவருளைப் பெறுவோம்.
நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோ ச.நாகராஜன்
24-10-2022
தீபாவளித் திருநாள்
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**