It is very interesting to see that Tamils knew many Avaratas of Lord Vishnu even before 2000 years ago. We have very clear evidence of Tri Vikrama Avatar in the Rig Veda. We have references to Matsya and Varaha Avataras as well in the Vedas. But Tri Vikrama (Vamana became Tri Vikrama ) measuring the Universe with His Three Steps captivated everyone and Andal of Tiruppavai, Tiru Valluvar of Tirukkural too sang about it. So do Krishna – Balarama Avatara. We find them in Sangam and later literature like Tiruk Kural.
Let us go into Sangam Literature:
Lord Vishnu is blue in colour; but he sleeps in milky ocean giving a beautiful contrast. He is on the Snake Bed which has 1000 heads with jewels. They are shining like flames; he is wearing Tulsi garland. He is having Yoga Nitra/ conscious sleep / அறிதுயில்.
Tamil Reference: Kali.105-71/72; 123-4; Perum.-lines 372/3; Pari.13-26/29
Xxx
Pari 3-68-72 repeats what Bhagavad Gita says
He is all; all is in him. He is born again and again (AVATARS); but no one make him born. He himself is born/ self born
Pari 15- 49/52 says he is born to help the living beings.
xxx
Boar Avatar- Varaha Avataraவராஹஅவதாரம்
Pari 2-16/19 describes Varaaha Avataara:
The earth was in water. Just to make the living beings appear on earth he took the earth out from the water. He did it by taking the shape of a boar. And so the era was called Varaaha Karpam. He brought the Bhuumaa Devi out on his horn so that the world would never suffer- Pari 2-32/33; 3-21/23; Pari.3-34/36
The task is similar to Meru Mountain – pari.4-22/24
Xxx
Swan Avatar, அன்னம்அவதாரம்
Once upon a time the Seven Clouds poured down heavily and tried to destroy the world. Lord Vishnu took the shape of a giant Swan and dried them by fanning with its wings (Pari.3-25/26)
Xxx
Tri Vikrama- Vaamana Avataara
வாமன / த்ரிவிக்ரமஅவதாரம்
To control the arrogance of the demon king Mahaa Bali, Lord Vishnu became a short Brahmin boy and went begging to King Bali. When the short Brahmin boy asked for three feet of Land the king laughed and said ‘granted’. But Lord Vishnu became A giant figure and measured the earth and sky with two steps and when he waited for the third step, King Bali himself offered his head. He pushed him down with his foot and King Bali went to Paataala Loka (may be South America or South East Asia). He was allowed to return once a year during Onam season.
This is mentioned in
Mullai 3; Perum. 29-30 and Kali.124-1; Pari. 3-20
When he did the demons went and jumped into sea (Pari.3-54/56
All the Avatara stories are symbolic and they are talking about geological changes that happened millions of years ago. Mahabali story may be about Hindu migration to South East Asia or Mayan/Aztec South America
Xxx
Tamil references
பரிபாடல் 13 VISHU IN MILKY OCEAN
தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்,
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த
கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத்
துளவம் சூடிய அறிதுயிலோனும்
மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால், 30
XXXX
பரிபாடல் 3 YOU ARE IN ALL; ALL ARE IN YOU; SELF BORN
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,
உறைவும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே:
XXX
பரிபாடல் 15 YOU REMOVE THE DIFFICULTIES BY APPEARING; INCARNATING YOURSELF
புவ்வத் தாமரை புரையும் கண்ணன்,
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன், 50
எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்
அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்.
கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை;
XXXX
பரிபாடல் 3 SWAN INCARNATION
‘மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் 25
சேவலாய் சிறகர்ப் புலர்த்தியோய்’ எனவும்,
XXX
கலித்தொகை 124 Kalitogai 124 TRIVIKRAMA AVATARA
ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப்
பால் அன்ன மேனியான் அணி பெறத் தைஇய
நீல நீர் உடை போல, தகை பெற்ற வெண் திரை
வால் எக்கர்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப!
XXX
பெரும்பாணாற்றுப்படை TRI VIKRAMA AVATAR- VAMANA AVATAR
இப்போதே செய் (இப்போது+ ஏ = இப்போதே)- Ippothe Sey- Now Do- Do Now (“IT” is not in Tamil; The AE sound makes it emphatic)—Do it Now
XXX
Sey செய் – Do, Manufacture, Produce
Tamils use this Sey செய் as a suffix with many nouns to make a compound verb. About thirty examples are given here.
போன் செய் – pon sey – make a call- make a phone call
Avan netru pon seythaan அவன் நேற்று போன் செய்தான்
xxxx
கற்பனை செய் Karpanai sey- அவள் லாட்டரிப் பரிசு கிடைத்ததாக கற்பனை செய்துகொண்டாள் Aval Lottery Parisu Kitaiththathaaka Karpanai seythukontaal- She — lottery prize— got– imagined herself.
xxx
பயணம் செய் – Payanam Sey- Travel (verb)
அவர்கள் நாளை லண்டனுக்குப் பயணம் செய்வார்கள்
Avargal Naalai Londonukkup Payanam Seyvaarkal— They –Tomorrow—To London— will travel.
xxxx
ஆட்சி செய் – aatchi sey – Rule (verb)
இப்போது இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்கிறது- Ippothu Inthiyaavil Bharateeya janathaa Katchi aatchi seykirathu — Now—in India—BJP — ruling
xxxxx
தயார் செய் — Thayaar Sey — Prepare
பறிமுதல் செய் – Parimuthal sey– Confiscate
சதி செய் – sathi sey–Conspire
கைது செய் – kaithu sey —arrest
புகார் செய் — Pukaar Sey—complain—lodge a complaint (10)
வம்பு செய் – Vambu sey—Pick up a quarrel—make/ give nuisance
ஆராய்ச்சி செய் – Aaaraaychi Sey—Do research
பதிவு செய் – Pathivu sey- register, Record
சுத்தம் செய் – Suththam sey- Clean (verb)
சவரம் செய் – Savaram sey—Shave (Verb)
கேலி செய் – Keli sey- tease, mock at
தெரிவு செய் – Therivu sey– select
சத்தியம் செய் – Saththiyam sey—promise, do promise
சட்டை செய் – Sattai sey—take notice of
ஊகம் / யூகம் (20)- Uukam or Yuukam sey- guess (verb)
சரி செய் – Sari sey- correct, make amends, repair (verb)
முடிவு செய் – Mudivu sey- Decide
தவறு செய் – Thavaru sey- commit mistake, do wrong things
தானம் செய் – Dhaanam sey- donate, do charity
பாசாங்கு செய்- Paasaangu Sey- Pretend
தடை செய் – Thadai Sey- Ban, Prohibit
உதவி செய் – Uthavi sey- Help (verb), render assistance, assist
முயற்சி செய் – Muyarchi sey- Attempt, make an effort, endeavour (verb)
கல்யாணம் செய் – Kalyaanam sey- Marry
ஒழுங்கு செய் (30) – Ozungu sey- Arrange, place them in order
ஏற்பாடு செய்—Erpaadu sey—Make arrangements
There are number of combinations like this. But the above verbs are commonly used by the Tamils in their day to day conversation.
{திருக்குடந்தை தேசிகர், அபரதேசிகர் என்று அறியப்படும் கோபாலதேசிகர்
இயற்றிய வேதாந்த தேசிகர் சஹஸ்ரநாமம் (706)}
தென்னிந்தியாவின் இந்து சமஸ்தான மன்னர்கள் தங்கள் அரசவையில் தமிழ்ப் புலவர்கள், கவிஞர்களை ஆதரித்து வந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். அர சாங்க அலுவல்களுக்கு அப்பாற்பட்டு ஒதுக்கப்படும் ‘கேளிக்கை’ இடைநேரத்தில் புதிய நூல் அரங்கேற்றம், புலவர்களுக்குள் சூடான வாத,பிரதிவாதம், கிளுகிளுக்க வைக்கும் தற்புகழ்ச்சி விவாதங்கள் நடந்தேறுவதுண்டு. அவற்றில் நாட்டின் பிற பிர தேசங்களைச் சேர்ந்த அறிஞர்களும் அவ்வப்போது உற்சாகமுடன் பங்கேற்பர்.நக்கீரர்- தருமி, ஒட்டக்கூத்தர்-புகழேந்தி, அருணகிரிநாதர்-வில்லிபுத்தூரர் சம்வாதங்கள்,மதுரை
மாம்பழக் கவிசிங்க நாவலர்- வடநாட்டுக் கவிஞன் விஸ்வநாத பாரதி, நைஷதசரித் திரம் இயற்றிய ஶ்ரீஹர்ஷர்- கன்னோஜ் மன்னன் ஜெயச்சந்திரன், வசிஷ்ட ஶ்ரீகணபதி சாஸ்திரி- அம்பிகாதத்தா, வேதாந்த தேசிகர்-சமண முனிகள், ஆதிசங்கரர்-மண்டன மிஸ்ரர் ஆகியோரது விவாதங்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவற்றுள் சிலவற்று டன் பங்கேற்று இதுவரை அறியாத வேறு சில முக்கியமானச் சம்பவங்களைப் பற்றி யும் இப்போது பார்ப்போம்.
முதலில் பிரபல வைணவ ஆச்சாரியார் ஶ்ரீவேங்கடநாதா எனும் ஶ்ரீவேதாந்த தேசிக ரின் வாழ்வில் நடந்த நிகழ்வு ஒன்றைக் கவனிப்போம்….
ஶ்ரீதேசிகரின் வாழ்வில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. பல வாதப் பிரதிவாதங்களில் கலந்துகொண்டு வெற்றிவாகையும் சூடியுள்ளார். அதனா லேயே “கவி தார்க்கிக சிங்கம்” என்ற விருதையும் பெற்றுள்ளார். சுவாமி தேசிகர்-டிண்டிமா பட்டா (திண்டிமா என்றும் மருவி அழைக்கப்படுகிறது) கவி இடையே
அவர்களின் புத்திசாதுரியத்தை வெளிப்படுத்தும் விதமாக, அழகானக் கவிதை வாயி லாக நடந்ததாகக் கூறப்படும் அருமையான விவாதமும் இதில் ஒன்றாகும். யார் இந்த டிண்டிமா கவி?
டிண்டிமா கவி என்பது ஒருவரது பெயரைக் குறிக்கவில்லை. மாறாக ஒரு குறிப்பிட் டப் புலவர்கள் குலத்தை அடையாளம் காட்டுவதாக அமைந்துள்ளது. விஜயநகர அர சர்கள் அவர்களுக்கு ஒரு சிறப்பான அந்தஸ்தத்தையும் அளித்தனர்.அவர்களின் வரு கையைத் தெரிவிக்க “டிண்டிம்” என்று முரசில் ஒலி எழுப்புவார்களாம்,அதனால்தான்
தங்கள் பெயரின் பின்னொட்டாக (SUFFIX) “டிண்டிமா கவி” என்ற பட்டப் பெயரையும் இணைத்துக் கொண்டார்கள்.
இவர்கள் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டு, தற்போதைய வட ஆற்காடு பிரதே சத்தில் விஜயநகரப் பேரரசர்களின் ஆதரவில் 14-16ம் நூற்றாண்டு வரை மிக்கப் புக ழுடன் விளங்கினார்கள். இரண்டாம் ராஜநாதா டிண்டிமா மன்னன் சாளுவ நரசிம்ம னின் போர்க்களத் தீரச் செயல்களைப் பற்றியும், ராஜநாதா டிண்டிமா(3) ராஜா அச்சு தராயர் பிரபாவங்கள் பற்றியும் காவியங்கள் இயற்றியுள்ளனர். கௌடா டிண்டிமா என்பவரும் இக்காலத்தைச் சேர்ந்த ஒரு சிறந்த புலவர் ஆவார். எந்த முரண்பட்டச் சச்சரவுக்குள்ளும் சிக்காமல் இவர்களுள் ஒரு டிண்டிமா பட்டா தான் தர்க்க சாஸ் திர கவிசிம்மத்துடன் வாதித்தார் என்பதாக எடுத்துக் கொள்வோம். மேலே கட்டுரைத் தலைப்பில் கொடுத்துள்ள ஶ்ரீதேசிகர் சஹஸ்ரநாமம் 706-ம் துதியே இதற்குச் சான்று! மேலும், வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் இந்த டிண்டிமா பட்டா, சுவாமி தேசிகர் காலத்துக்கு இரு நூற்றாண்டுகள் பிற்பட்டவர். மன்னன் சாளுவ நரசிம்மனு டன் தொடர்புடையவர் என்றும் அறியப்படுகிறார்.
இந்த டிண்டிமா புலவர், தான் இயற்றிய ஶ்ரீராமர் சரிதத்தை கூறும் அபிநவராமாப் யுதயம் என்ற காவியமே மிகச் சிறந்தது எனத் தற்பெருமை அடித்துக் கொண்டு, அகங்காரத்துடன் நடந்து கொண்டார். ஒருமுறை ஶ்ரீரங்கம் சென்றவர் சுவாமி தேசி கரிடம் தனது நூலைக் காட்டிப் பீற்றிக் கொண்டார். சூடான வாதப் பிரதிவாதமும் நடந்தது. நூலை முழுதும் ஆராய்ந்துவிட்டுத் தன் அபிப்பிராயத்தைச் சொல்வதாகத் தேசிகர் கூறிவிட்டார். அந்தப் புலவர் திரேதாயுத நாயகன் ஶ்ரீராமனின் மீது காவியம் இயற்றியிருந்தார் என்றால், தேசிகரோ, துவாபரயுக நாயகன் ஶ்ரீகிருஷ்ணனின் லீலை களைச் சுவைபடக் கூறும், 24சர்க்கங்கள் கொண்ட யாதவாப்யுதயம் கிரந்தத்தை ஒரே இரவில் இயற்றிக் காட்டினார்.
கிரந்தத்தின் ஆரம்பமே அவரைப் புரட்டிப் போட்டுவிட்டது என்றால் அது மிகையா காது மங்கல ஸ்லோகத்தைப் படித்து, அதில் அடங்கியுள்ளத் தத்துவப் பொருளைப் புரிந்து கொண்டதும் அவரது சப்தநாடிகளும் ஒடுங்கி விட்டன. மேலும், ஆறாவது அத்தியாயம், சித்திரக் கவிப் பாடல்கள் அடங்கிய கோவர்தனக் கிரி அருமைப் பெரு மைகளைக் கூறும் சித்திரச் சர்க்கத்தைப் படித்ததும் அவரது தலைக் கனம் சிதறுக் காயைப் போல் சுக்குநூறாகத் தெறித்து விழுந்து விட்டது. அதன் நடையழகை முற் றிலும் உணர்ச்சிபூர்வமாக ரசித்துப் படித்தவர், அதுவே ஒரு தலைசிறந்த காவியம் என்று தீர்மானித்து மேலே என்ன சொல்வது எனப்புரியாமல் வாயடைத்துப் போனார் வீராவேசமெல்லாம் காற்றிழந்தப் பலூன் மாதிரி ஆகி, கூனிக்குறுகி, பெட்டிப்பாம்பாக மாறிவிட்டார். தேசிகரின் கிரந்தத்துக்கு முன் தனது காவியம் ஒரு பொருட்டேஅல்ல என்பதை நன்கு புரிந்து கொண்டவர், சுவாமிகளைச் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து, தன்னை மன்னித்தருளுமாறு வேண்டினார்………
அவர் தேசிகரிடம் செருக்குடன் சொல்கிறார்-அடர்ந்தக் காட்டுப் பாதையில், வெகு வேகமாக வழியில் குறுக்கிடும் மரம், முள் செடிகொடிகளை அகற்றியபடிவந்திருக்கி றேன். நடுவே, ஒரு புலையன் வீட்டைக் காவல் காக்கும் நாய் வடித்த சோற்றை வயிறு முட்டச் சாப்பிட்ட பிறகும், அதன் மீது பச்சாதாபப்படும் என்னைப் பார்த்துக் குரைக்கிறது. மதம் பிடித்த யானைகளின் மத்தகத்தை இந்தக் கூரிய நகங்களால் அனாயாசமாகக் கிழித்துச் சாகடித்திருக்கிறேன். இப்போது அதே நகங்களால் அல்ப சுவானம் ஒன்றைச் சிறிது கேலியாகக் காயப்படுத்தித் துவம்சம் செய்ய வெட்கப்படு கிறேன். ஐயகோ, என்ன செய்வேன் யாரிடம் போய் முறையிடுவேன்!
இங்கு,அவருடன் வாதிட்ட அதிமேதாவி, இறுமாப்பு மிக்கப் புலவர்களை மதம் கொண்ட யானைக்கு ஒப்பிடுகிறார். கூரிய நகங்கள் அவரது வாதத்திறமை, இலக்கி யப் புலமைக்கு உவமையாகச் சொல்லப்படுகின்றன. தேசிகரை மிகவும் மட்டம் தட் டிப் பேசுகிறார்.
பண்டிதர்கள் நிரம்பிய ராஜசபையில் தங்களை அதிமேதாவிகள், எல்லாம் அறிந்த சூரர்கள் என்று எண்ணிக்கொண்டு, பலதரப்பட்ட அர்த்தமற்ற முட்டாள்தனமான வாதங்களை வாய்க்கு வந்தபடி உளறி வைப்பவர்களின் நடத்தையைக் கவிசாம்ராட் டிண்டிமா என்கிற இந்தப் புலவன் சும்மா பார்த்துக் கொண்டு செவிடன் போலிருக்க மாட்டான்,சிறிதும் பொறுத்துக்கொள்ளவும் மாட்டான். சாமானிய மனிதர்கள் என்மீது வைக்கும் விமரிசனங்களுக்கு நான் ஏன் செவிசாய்க்கவேண்டும்? அழகிய பள பளக் கும் இறக்கைகளையுடைய சுபர்ணா (கருடன்) பெரிய பேட்டைகளுடைய அநேக பயங்கரப் பாம்புகள் மற்றும் அதன் கருமுட்டைகளை வயிறுமுட்டமுழுங்கியுள்ளான். அப்படிப்பட்டவன், வட்டமிடும் வண்டுபோல் குழப்பத்தில் மெய்மறந்துத் தவளையை உண்ணும் தண்ணீர்ப் பாம்பைக் கொல்வதில் நேர்மையாகப் பெருமைப் படுவானா?
என்று மேலும் இகழ்ந்து பேசுகிறான்.தன்னைப் பெரியதிருவடிக்கும், தேசிகரைத் தண் ணீர்ப் பாம்புக்கும் ஒப்பிடுவதைப் பாருங்கள்!
எவ்விதச் சலனமுமின்றி அவ்வளவையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஶ்ரீதேசிகர், பழத்தில் ஊசியேற்றுவது போல் புலவனுக்குத் தக்கப் பதிலடியும் கொடுத் தார்…. அவர் காட்டும் உவமையைப் பாருங்கள்!
பட்டணத்தில் வாழும் பழக்கப் படுத்தப்பட்டப் பிராணியானாலும், காட்டில் வெறியு டன் அலையும் அபாயகரமான மிருகமானாலும் தங்களை மதம் பிடித்த,நெற்றியில் வியர்வை ஒழுகும் பலம் வாய்ந்த வேழம் என்று பீற்றிக் கொள்ளட்டும்; எண் திசை களைக் காக்கும் குஞ்சரங்களுடன் போட்டியிடட்டுமே! ஆனால் காலம் செய்யும் கோலத்தைக் கேள், தோழா! கிராமத்துக் கழிவுநீர் ஓடைச் சகதியில் சாவகாசமாக, உற்சாகமாய்த் தலை மூழ்கித் திளைத்துக் கும்மாளமிடும் வராஹங்கள் கூடதிக்கஜங் களுடன் போட்டிபோடத் துடிக்கின்றனவே, என்ன செய்வது?
அறப்பணிகள் அனைத்துக்கும் வேர் போன்றவர் நல்ல மனைவிமார்களே.
Xxxx
பெண்களின் அழகு எது?
“குயிலின் அழகு இனிமையாகக் கூவுதலில் இருக்கிறது;
பெண்களின் அழகு கற்பில் உள்ளது (கணவனைத் தவிர யாரிடமும் விருப்பமின்மை);
அவலட்சணமான தோற்றம் உள்ளவரிடத்தில் அழகு என்பது அவருடைய அறிவுதான்;யோகிகளுக்கு அழகு மன்னிப்பதில் உள்ளது”.
கோகிலானாம் ஸ்வரோ ரூபம் ஸ்த்ரீணாம் ரூபம் பதிவ்ரதம்
வித்யா ரூபம் குருபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம்
–சாணக்கிய நீதி, அத்தியாயம் 3, ஸ்லோகம் 9
Xxxx
EDUCATION IS THE BEST ORNAMENT
எது அழகு? நான்கு கவிஞர்கள் கருத்து (Post No.2787)
Date: 6 May 2016; Post No. 2787
கல்வி அழகு
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம் யாமென்னு நடுவு நிலைமையால்
கல்வியழகே அழகு – நாலடியார் 131
சிகை அலங்காரமும், ஆடையினது கரை அழகும், மஞ்சள் பொடி பூசியதால் ஏற்படும் அழகும் அழகல்ல. மனத்தினால் நாம் நல்லவர் என்று எண்ணும் நடுநிலைமையால் கல்வியால் உண்டாகும் அழகே அழகு. (கல்விகற்றால், நல்லவர் ஆவர். அதுவே அழகு)
நாலடியார் என்பது பல கவிஞர்கள் சேர்ந்து படிய 400 பாடல்களைக் கொண்ட நூல்.
சொல் அழகு
மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு
–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)
பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்ரமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.
இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்
நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ
டெழுத்தின் வனப்பே வனப்பு
–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)
பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.
வள்ளுவன் கூறுகிறான்
சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.
பொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனிது. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே! அதாவது அவர்களைப் பின்பற்றுவதே!
இதையே வாக்குண்டாம் என்ற பாடலில் மேலும் தெளிவாகச் சொல்கிறார்:
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 85
படிக்காசுப் புலவரை வாதில் வென்ற கொங்குமண்டலப் புலவர்கள்!
ச,நாகராஜன்
தமிழகப் புலவர்களில் தனி இடத்தைப் பெறுபவர் படிக்காசுப் புலவர். அவர் ராமநாதபுர சமஸ்தானத்தில் இரகுநாத சேதுபதியின் சமஸ்தான வித்வானாக இருந்து பெரும் புகழ் பெற்றார்.
ஒரு சமயம் தல யாத்திரையை மேற்கொண்ட அவர் கொங்கு மண்டலம் வந்தார்.
அந்தக் காலத்தில் கவசை ஆறை நாட்டில் கவசை நகரில் கல்வி கேள்விகளில் வல்லவராயும் வள்ளன்மையில் சிறந்தவராயும் இருந்த மசக்காளி மன்றாடி என்பவர் புகழுடன் வாழ்ந்து வந்தார்.
அவரது சமூகத்தில் தமிழ்ப் புலவர் சபை ஒன்று கூடிற்று.
அதில் வண்ணப் பாக்கள் சொல்வது பற்றிய வாதம் ஒன்று நடந்தது.
அதில் படிக்காசுப் புலவர் எடுத்துக் கொடுத்தபடி முடிக்கவில்லை என்று சொல்லி அவர் கொண்டு வந்த பல்லக்கு முதலியவற்றை கொங்கு மண்டலப் புலவர்கள் எடுத்துக் கொண்டனர்.
படிக்காசுப் புலவர் தனது ஆடை முதலியவற்றைச் சுமந்து கொண்டு,
“அஞ்சாலி மக்களுஞ் சாணாகும் பாணரு மம்பட்டருஞ்
செஞ்சாயக் காரரும் வேசையர் மக்களுஞ் செந்தமிழைப்
பஞ்சாகப் பன்னி யொருகாசுக் கோர்வண்ணம் பாடலுற்றார்
நஞ்சாகப் போச்சுதை யோவென் றமிழ்கொங்கு நாடெங்குமே”
என்று மனம் நொந்து மிக்க வருத்தத்துடன் பாடினார். பிறகு மனதைச் சமாதானம் செய்து கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.
கவசையில் நடந்த கவி வாத சம்பந்தமான பகைமையால் கொங்குப் புலவர்கள் வைத்த சூனிய வித்தைத் தீமையில் வருந்தி, திருச்செங்கோட்டுக்கு அவர் வந்து சேர்ந்தார். ஶ்ரீ அர்த்த நாரீஸ்வரர் மீது வருகைப் பதிகம் பாடி, பின்னர் தேக சுகத்தை அடைந்து உமைபாகப் பதிகம் பாடினார். பின்னர் சமீபத்தில் உள்ள மோரூர்க்குச் சென்று பாம்பலங்காரர் மீது வருக்கக் கோவை பாடி அரங்கேற்றினார்.
அதற்காகக் குமாரசாமிக் காங்கேயன் சன்மானம் தர அதை ஏற்றார்.
கொங்குமண்டல சதகத்தில் வருகின்ற 54, 64-ஆம் செய்யுட்கள் குறித்த மோரூர்க் காங்கேயர்களுக்கும், 69-ஆம் செய்யுட் கூறும் கோபண மன்றாடிக்கும், 75-ஆம் பாட்டுக் குறிப்பிடும் காடையூர்க் காங்கேயர்க்கும், 76ஆம் செய்யுள் விளக்கும் அல்லாளனிளை யானுக்கும் இம்முடி என்ற பட்டப்பெயருண்டு.
இம்மடி என்று கூறுவதையுங் காணலாம். தேச மன்னர் குறுநில மன்னர், நாடு, ஊர் அதிகாரிகள், சில குருக்கள்களும் இம்முடி என்று பெயர்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்பெயரை மிகு மேன்மையாகப் பாராட்டுகிறார்கள். இம்மடி (இம்முடி) என்பதன் பொருள் இரட்டை அதாவது இரண்டாவதான். எனவே, இம்முடிக் குமார காங்கேயன் என்றால் குமார காங்கேயன் என்பவன் ஒருவன் இருக்க, அவனுக்குப் பின் மற்றொரு குமார காங்கேயன் வந்தால் அவன் இம்மடி (இரண்டாவது) குமார காங்கேயனாகிறான். இன்னுமொருவன் தோன்றினால் மும்மடி (மூன்றாம்) குமார காங்கேயனாகிறான்.
இந்த வரலாறை கொங்குமண்டல சதகம் தனது 85ஆம் பாடலில் பதிவு செய்கிறது.
நல்லார் புகழ்மசக் காளி கவசையி னாவினிசை
யெல்லாஞ் சொலிநிலை நிலாமற் பல்லக் கிரவைபற்றிச்
சொல்லா லுயர்ந்த படிக்காசன் கட்டிச் சுமக்கக்கவி
வல்லா ரடித்துத் துறத்திய துங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் :
மசக்காளி மன்றாடியின் கவசை (ஆறை நாட்டில் உள்ள சர்க்கார் சாமக்குளம் அதாவது கோவில்பாளையம்) நகரில் நடந்த பா இயற்று வாதப் போரில் நிற்கவில்லை என்று பல்லக்கும் சன்மானப் பொருள்களையும் பற்றிக் கொண்டு, மற்ற எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு படிக்காசுப் புலவர் நடந்து போகும்படி ஊரை விட்டு அகற்றிய கவி சொல்லும் திறமை உடையவர் இருப்பதும் கொங்கு மண்டலமே என்பதாம்.
***
புத்தக அறிமுகம் 129
இலக்கிய உலகில் கம்பரின் காட்சி, வில்லியின் மாட்சி,
சங்கப் புலவர்களின் ஆட்சி!
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயங்கள்
1. எது கவிதை? 2. காவியத்தின் நோக்கம் 3. கவிதையை ரஸிப்போமா?4. கம்பன் காட்டும் புதிய கவிதை உத்தி! 5. கவிதையில் சித்திரங்களைக் காண்பிக்கும் கம்பன்! 6. இந்திரன் இராமனைத் துதித்தல்! – கம்பன் தரும் அதிசயம்! 7. கவிகள் திலகம் கம்பன் கண்ட திலகம்! 8. வர பலம் தவறினாலும் சர பலம் தவறாது! 9. இலங்கை மங்கையின் லிப்ஸ்டிக்! அயோத்தி மங்கையின் ஸ்டிரா!! –
கம்பன் தரும் வியப்பூட்டும் சித்திரங்கள்! 10. எது வினை? இடர் இலை? 11. மாளிகைக் கவியை விலைமகளிர்க்கும் பொருந்த அமைத்த சிலேடை சிரேஷ்டன் கம்பன்! 12. கம்பன் தரும் சித்திரம்: இந்திரஜித்தின் வீட்டைக் காவல் காத்த லட்சணம்! 13. இராவணனின் சிறப்பு பற்றிக் கம்பர் கூறும் ஒரு பாடலின் இரு வடிவங்கள்! – அவன் தரும் அரிய செய்தி! 14. இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன்: கம்பர் காட்டும் இரகசிய குறிப்பு 15. கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! – 1. 16. கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! – 2 17. கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! – 3 18. கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! – 4. 19. உவமைகளை அடுக்கும் உன்னதக் கவிஞர்! 20. கவிஞன் தன் குறிப்பைச் சொல்லும் தற்குறிப்பேற்ற அணி! 21.வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்! – 1 22.வில்லிப்புத்தூராரின் மடக்கணி பாடல்! – 2 23. இரண்டு பாடல்களில் மட்டுமே வரும் ஒரு அபூர்வ அணி – ஒற்றைமணி மாலை அணி! 24. தங்கத் தமிழாம் சங்கத் தமிழ் தெய்வத் தமிழே! 25.ஒப்பற்ற தமிழின் உயர்வு! 26. தமிழில் அலங்காரம்! 27. தமிழில் உள்ள யமகப் பாடல்கள்! 28. யமகவந்தாதியின் பட்டியல்! 29. புலவர்களின் தமிழைப் பார்த்தார்கள்; ஜாதியைப் பார்க்கவில்லை! 30. ஜாதி பேதமற்ற சங்க இலக்கியப் புலவர்களுள் நால்வர்! 31. எந்தப் புலவருக்கு என்ன சிறப்பு! இதோ பட்டியல்! 32. தனிப்பாடல்களில் புலவர்கள், புலவர்கள் பல விதம்! 33. ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய பாடல்கள்! – 1 34. ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய பாடல்கள்! – 2
*
நூலில் இடம் பெறும் முன்னுரை இது:
முன்னுரை
உலகில் உள்ள மொழிகளில் எல்லாம் பழமையானதும், அழகியதும், இலக்கிய வளம் வாய்ந்ததும், இறைவனால் உருவாக்கப்பட்டு புலவர்களின் தலைவனாக அவனே அமர்ந்து வளர்த்த மொழி ஒன்றே. அது தமிழ் தான்!
இதைப் பற்றி எத்தனை ஆயிரம் நூல்கள் வேண்டுமானாலும் எழுதலாம். எழுதினாலும் தமிழின் சிறப்பை முற்றிலுமாக ஒருவர் சொல்லி விட்டதாக ஆகாது.
தமிழின் புதுப் புது பரிமாணங்களையும், வடிவங்களையும், ஆழத்தையும், அகலத்தையும் காட்டுவதற்கென்றே உதித்த தெய்வப் புலவர்கள் பலர்.
தெய்வப் புலவர் திருவள்ளுவர், சங்க காலப் புலவர்கள், திரு ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர், 12 ஆழ்வார்கள், கவிச் சக்கரவர்த்தி கம்பன், வில்லிப்புத்தூரார், மஹாகவி பாரதியார் என்ற கவிஞர்களின் இந்தப் பட்டியல் மிக நீண்ட ஒன்று.
இந்தக் கவிஞர்களில் கம்பன் காட்டும் வண்ணக் காட்சிகள் பல. மகாபாரதத்தைத் தமிழில் தந்த வில்லிப்புத்தூராரின் மாட்சியோ தனி.
சங்க காலத்தில் தமிழ்ப் புலவர்களின் ஆட்சியோ அதிசயிக்கத் தக்க ஒன்று.
இவை பற்றி அவ்வப்பொழுது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இது.
இதை தமிழ் நெஞ்சங்களிடம் நூல் வடிவில் தருவதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.
நிலாச்சாரல் மின்னிதழ், www.tamilandvedas.comப்ளாக் உள்ளிட்டவற்றில் வெளியான கட்டுரைகள் இவை.
இதை வெளியிட்ட திருமதி நிர்மலா ராஜு மற்றும் லண்டன் திரு ச.சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி உரித்தாகுக்.
அழகிய முறையில்இதை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
நன்றி.
சான்பிரான்ஸிஸ்கோச.நாகராஜன் 15–10-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
கூடாது அறிவு இலா மடையர்முன் நிற்க ஒணாது – அறிவு இல்லாத
பேதைகளின் எதிரிலும் செல்லக் கூடாது, கொஞ்சமேனும் தீது செய்ய
ஒணாது – சிறிதாகினும் தீய செயலைச் செய்தல் ஒவ்வாது, ஒருவர் மேல் குற்றம் சொலஒண்ணாது – ஒருவர்மேல் குறைகூறல் கூடாது, அயல் கோதையர்களோடு பரிகாசம் செய ஒண்ணாது – பிற மங்கையருடன்நகைத்துப் பேசுதல் கூடாது, கோள் உரைகள் பேச ஒணாது – கோள்மொழிகள் கூறல் கூடாது, நஞ்சு தரும் அரவொடும் பழக ஒணாது – நஞ்சைத்தரும் பாம்பொடு பழகல்கூடாது, இருள்வழி நடந்து தனி ஏக ஒணாது –
இருண்ட நெறியிலே தனியே நடந்து செல்லல் கூடாது, நதி பெருக்கு ஆகின்
அதில் நீஞ்சல் செய்ய ஒண்ணாது – ஆறு பெருகிச்சென்றால் அதை நீந்திச்செல்லுதல் கூடாது, நல்வழி மறக்க ஒணாது – நன்னெறியை மறத்தல் கூடாதுஅஞ்சாமல் அரசர்முன் பேச ஒணாது – அரசரிடம் அச்சமின்றிப் பேசுதல்கூடாது.
(க-து.) இங்குக் கூறப்பட்டவை செய்ய ஒண்ணாதவை.
Xxx
London swaminathan’s commentary on verse 9
இவை அனைத்தும் ஆத்திச் சூடி , உலக நீதி, நீதி வெண்பா முதலிய நூல்களில் கண்ட விஷயங்களே .
நாள்தோறும் பத்திரிகைகளில் வரும் கொலை, களவு, விபத்து பற்றிய செய்திகளைப் படிக்கையில் இவை அனைத்தும் இன்றும் தேவைப்படும் அறிவுரைகளே என்பதை உறுதியிட்டுச் சொல்ல முடியும்
–சுபம்–
உலக நாதர் இயற்றிய உலக நீதியில் கண்டவற்றை ஒப்பிட்டுப் பார்ப்போம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
Never play around with poison
ஒப்பிடு: தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும் –(குறள் 202)
Xxxx
வஞ்சனைகள்செய்வாரோடுஇணங்கவேண்டாம்
ஒப்பிடு: நல்லினத்தி னூங்குத் துணை யில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல் — (குறள் 460)
Neverever associate with fraudulent people
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
ஒப்பிடு: சிற்றினம் அஞ்சும் பெருமை–(குறள் 451)
Don’t move with people of who are not at your wavelength
xxx
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
Never go alone to places you don’t know.
Xxx
போகாதஇடந்தனிலேபோகவேண்டாம்
Don’t go to places that should be avoided
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல் பதாகும் அறிவு — (குறள் 451)
Xxx
ஒருவரையும்பொல்லாங்குசொல்லவேண்டாம்
Don’t talk ill of others
ஒப்பிடுக: இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று —(குறள் 100)
Xxxx
போகவிட்டுப்புறம்சொல்லித்திரியவேண்டாம்
ஒப்பிடு: அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது — (குறள் 181)
Don’t talk behind anyone’s back.
Xxx
கற்புடையமங்கையரைக்கருதவேண்டாம்
Never covet another’s wife
ஒப்பிடு: பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (குறள் 148)
Xxx
மதியாதார்தலைவாசல்மிதிக்கவேண்டாம்
Never step into a house where you are not respected
Xxx
புண்படவேவார்த்தைகளைச்சொல்லவேண்டாம்
Don’t use harsh words
ஒப்பிடு: இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது (குறள் 99)
xxx
—subham—
Tags- உலக நாதர் ,உலக நீதி, செய்யக்கூடாத செயல்கள் ,ஒண்ணாது, எவை எவை? –அறப்பளீச்சுர சதகம்
பிராக்ருத மொழியில் ஒரு பிரபல நூல் இருக்கிறது. அதன் பெயர் காதா சப்த சதி (GSS- GATHA SAPTA SATI) அதன் பொருள் 700 கவிதைகள் என்பதாகும். ஸம்ஸ்க்ருத்தின் பேச்சு வழக்கு பிராகிருதம்; அதாவது கொச்சை மொழி. தமிழில் உள்ள நாட்டுப்புற பாடல்கள் அல்லது இப் போதுள்ள தமிழ்த் திரைப்படப் பாடல்களுக்கு ஒப்பிடலாம். இதன் உள்ளடக்கம் கிராமப்புற காதல் ஓவியங்கள் (Love and Sex in Villages) ஆகும். தமிழில் உள்ள அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை நூல்களுடன் ஒப்பிடலாம். இதை தமிழில் ஜெகந்நாத ராஜா ஓரளவுக்கு மொழிபெயர்த்தார். இது பற்றி உண்மைகளை யாரு ம் சொல்வதில்லை வெறும் புகழுரைகளை மட்டும் சொல்லுவார்கள். அது மட்டுமல்ல;காளிதாசன் இதிலிருந்து காப்பி அடித்தானா? தமிழ்ப் புலவர்களை இந்த பிராக்ருதக் கவிஞர்கள் காப்பி அடித்தார்களா என்று அரை வேக்காட்டுத் தனமான கட்டுரைகளையும் எழு துவர் .
3 உண்மைகளை முதலில் அலசி ஆராய்வோம்
1. இதை ஹாலன் என்ற முதல் நூற்றாண்டு மன்னன் தொகுத்ததாகச் சொல்லுவார்கள். அது தவறு; ஏனெனில் பிற்காலத்தவர், குறிப்பாக பிற்கால மன்னர்களின் கவிதைகளும் இதில் உள்ளன
2. இந்த நூலின் பெயர் 700 கவிதைகள். ஆனால் இதை முதல் முதலில் உலகின் பார்வைக்குக் கொ ண்டுவந்த ஜெர்மானிய அறிஞர் வீபர் (ALBRECHT WEBER IN 1881) பதிப்பில் 964 பாடல்கள் உள்ளன . அவர் 17 பதிப்புகளை — ஓலைச் சுவடிகைளை– ஒப்பிட்டு அதைக் கொணர்ந்தார் . அவரும் பிறரும் கண்ட பதிப்புகளில் உள்ள பொதுவான கவிதைகள் 430 மட்டுமே. ஆகையால் இதை 700 கவிதை — காதா சப்தசதி என்று அழைப்பது நாலும் நாலும் பத்து (4+4=10) என்று சொல்வது போல ஆகும். வீபர் (ALBRECHT WEBER IN 1881) ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். ஆக, 150 ஆண்டுகளா கத்தான் உலகிற்கு இந்தக் கவிதைகள் தெரியும். ஸம்ஸ்க்ருத்த்தில் கவிகள் புனைந்த காளிதாசன் முதலிய கவிஞர்களையும் 650 நாடகங்கள் இயற்றிய நாடக ஆசிரியர்களையும் அதற்கு முன்னரே உலகம் அறியும்.
XXX
3.இந்த நூல் பற்றி இந்திய அறிஞர்களுக்கும் அதிகம் தெரியாது. பாண என்ற ஏழாம் நூற்றாண்டு அறிஞர்தான் (Bana, author of Harsha Saritha) முதலில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.ஆகையால் இதை எவரும் காப்பி (Copy) அடித்திருக்க முடியாது. காளிதாசனுடைய காலமோ கி.மு (BCE) முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை சங்க இலக்கியத்திலுள்ள 200 க்கும் மேலான உவமைகள் காட்டுகின்றன.
xxxx
இந்தக் கவிதைகள் அனைத்தும் மஹாராஷ்டிர பிராகிருத வழக்கில் இருக்கின்றன. மேலும் கோதாவரி அல்லது அதற்கு அப்பாற்பட்ட பிரதேசம் தொடர்பான பின்னணி உடையவை. ஆகையால் தமிழர்களை அவர்கள் பார்த்து எழுதினர் என்பதும் சரியல்ல.
பாரதியார் சொல்கிறார்- சொல்லித் தருவது அல்ல மன்மதக் கலை – என்று; காதல், காமம் தொடர்பான உணர்ச்சிகள் பொதுவானவை. அதை எவரும் அவரவர் முறையில் கவிதையில் வடிக்கலாம். எடுத்துக் காட்டு-இக்கால திரைப்படப் பாடல்கள் .
XXX
இனி மேற்கூறிய தகவல்களுக்கு ஆதாரம் என்ன என்பதைக் காண்போம்.:
ஹாலன் (HALAN of SATAVAHANA DYNASTY)
ஹாலன் என்ற சாத வாஹன மன்னன் குறுகிய காலமே ஆண்டான். அவனுக்கு கவிதை என்றால் உயிர் மூச்சு. தானும் கவி இயற்றி மற்றவர்களையும் ஊக்குவித்தான். இவை அனைத்தும் உண்மையே; அவன் இயற்றிய 44 கவிகள் நூலில் உள்ளன. ஆயினும் அவனுக்குப் பின்னர் ஆட்சி புரிந்த வாகடக, ராஷ்டிரகூட மன்னர்கள் பெயர்களிலும் கவிதைகள் உள்ளன. ஹாலன் என்பவன் எவ்வளவோ பாடல்களுக்கு இடையே 700 கவிதைகளைத் தெரிந்தெடுத்தான் என்ற பாடலும் நூலின் மூன்றாவது கவிதையாக வருகிறது . ஆயினும் இதிலுள்ள கவிகளின் பெயர்களை வைத்து காலத்தைக் கணக்கிட்டால் அது ஏழாம் நூற்றாண்டு வரை செல்கிறது
நூலிலுள்ள பெரும்பாலான கவிஞர்கள் ஊர் பேர் தெரியாதவர்கள் மட்டுமல்ல. கவிதைகளின் வரிசையும் பதிப்புக்கு பதிப்பு மாறியுள்ளது. அப்படியி ருக்கையில் இதை ஒரு ஒட்டு மொத்த நூலாகவும் கருத முடியவில்லை.
XXX
முட்டாள் மன்னர்கள்
துவக்க கால சாதவாஹன மன்னர்களுக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது ; அவர்களை முட்டாள்களாகக் காட்டும் கதைகளும் உள்ளன . இ ந்த நூலின் கவிதைகளில் கூட ஏ முட்டாளே , ஏ அறிவிலியே என்ற பேச்சுக்கள் அதிகம் உள.
மா உதக = மோதக கதையை முன்னரே ஒரு கட்டுரையில் கொடுத்துள்ளேன்; இதோ சுருக்கம்:
சம்ஸ்க்ருதம் தெரிந்த பேரழகியை- ராஜகுமாரியை- ஒரு சாதவாகன மன்னன் கல்யாணம் கட்டுகிறான் ; ஒரு நாள் இருவரும் நீரில் குடைந்து விளையாட ஆற்றுக்குச் செல்கின்றனர். விளையாட்டுக்காக சாதவாகன மன்னன் அவள் மீது தண்ணீரைப் பீச்சி அடிக்கிறான். அவள் சம்ஸ்க்ருதத்தில் மா உதக= தண்ணீரை அடிக்காதே என்று கெஞ்சுகிறாள் – கொஞ்சுகிறாள் ; அவள் கொஞ்சல் மொழிகளை தவறாகப் புரிந்து கொண்ட மன்னன், அவள் மோதகம்/ கொழுக்கட்டை கேட்கிறாள் என்று எண்ணி சேவகர்களுக்கு உத்தரவிடுகிறான் – உடனே மகாராணிக்கு கொழுக்கட்டை/ மோதகம் கொண்டுவாருங்கள் என்று. மஹாராணியும், தோழிகளும் சிரி சிரி என்று சிரிக்கின்றனர். மன்னன் அறியாமைக்கு வெட்கித்து தலை குனிந்து சம்ஸ்க்ருதம் கற்கிறான்; இயற்கையிலேயே கவிதைகளில் ஆர்வம் பிறக்கிறது.
முதல் இரு நூற்றாண் டுகளுக்குள் ருத்ர தாமன் கல்வெட்டு, காம சூத்திரம், காளிதாசனின் கவிதைகள் , பாஷா ,சூத்ரகன் நாடகங்களைக் கண்ட நாட்டில் காதா சப்த சதி உதயமானதில் அதிசயம் ஒன்றுமில்லை
XXXX
காமச் சுவை
காமச் சுவையை ரசிப்பவர்களுக்கு இதில் நிறைய விஷயங்கள் உண்டு. பெரும்பாலும் பெண்களின் பேச்சுக்களாக அமைந்த —ஆர்யா அணி – இரண்டுவரிக் கவிகளுக்கு அவரவர் இஷ்டம் போல பொருள் கொள்ளலாம்
தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இலந்தப் பழம் இலந்தப் பழம் போன்ற பாட்டுகளுக்கும் காட்டுராணி கோட்டையிலே கதவுகள் இல்லை போன்ற பாட்டுகளுக்கும் செக்சி SEXYஉரை எழுதுவது போல விமர்சகர்கள் எழுதித் தள்ளியுள்ளனர் ; ஆகையால் இளம் உள்ளங்களுக்கு கவிதை விருந்தாக இந்த நூல் அமைந்ததில் வியப்பொன்றுமில்லை
வாத்ஸ்யாயன மகரிஷி (KAMASUTRA OF VATSYAYANA) சம்ஸ்க்ருதத்தில் எழுதிய முதல் செக்ஸ் SEX புஸ்தகத்தை ஆராய்ச்சி நூல் என்றும் இதை கிராமப்புற பிராக்டிகல் கைடு என்றும் ஒப்பிடலாம்.
XXXX
ஒரு சில எடுத்துக் காட்டுகள்
கணவனிடம் கடிபட்ட இலந்தைப் பழத்தை ஒரு பெண் காட்டுகிறாள் ;
பழைய கோட்டை பட்டக்காரர்கள் உத்தமச் சோழன் என்னும் பட்டப் பெயர் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். தமிழ் வேந்தர்கள் தன் கீழுள்ள சிற்றரசர்களுக்கும் மந்திரி தந்திரிகளுக்கும் தம் பெயரை விருதுப் பெயராகக் கொடுப்பது வழக்கம். (பழைய கோட்டை என்பது நாட்டு வழக்காகும்)
சைவம் வளர்த்த சேக்கிழார் புராணச் செய்யுள் ஒன்றைக் காணலாம் :
அத்தகைய புகழ்வேளாண் மரபிற்சேக்கி ழார்குடியில்
வந்தவருண் மொழித்தே வர்க்குத்
தந்துபரி வளவனுந்தன் செங்லோ லோச்சுந்
தலைமையளித்தவர் தமக்குத் தனது பேறு
முத்தமச்சோ ழப்பல்ல வன்றா னென்று
முயர்பட்டங் கொடுத்திடவாங் கவர்நீர் நாட்டு
நித்தனுறை திருநாகே சுரத்திலன்பு நிறைதலினான்
மறவாத நிலைமை மிக்கார்
என்று சொல்லவவர் தமையழைத்தரச னிவரமைச்சரிவர் பட்டமும்
அன்றுவற்கம்வர வந்தடைந்தவரை யாற்றல் செய்து தொண்டை மண்டலம்
நின்று காத்தபெரு மானெனத் தமது பெயரை யெங்கும் நிறுத்தினார்
இன்னன வகையிற் கூறி யினப்படை முற்றுங் காட்ட
மன்னனிவ் வீரனைப் போற் கண்டிலே மெனமகிழ்ந்து
கொன்னுற வழைத்து நாமங் கொந்தகப் பெருமானென்றே
நன்னெறிப் பட்டங் கட்டி நல்கினான் பரிவட்டங்கள்
– மெய்காட்டிட்ட திருவிளையாடல்
இங்கு ‘கொந்தகப் பெருமான்’ என்ற சொற்றொடர் வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கொந்தகை வேளாளர் என ஒரு வகுப்பினர் உள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.
மேற்கூறியவற்றால் அரசர் மகிழ்ச்சி அடையும் போது அதற்குக் காரணமாக அமைந்தவர்களுக்கு தனது பெயர் அல்லது கொள்வோரின் இனம் பற்றிய பெயர், காரணமான பெயர் முதலியவற்றைப் பட்டமாகக் கொடுத்து வந்திருக்கின்றனர் என்பது விளங்குகிறது.
வேளாளர்கள் மந்திரி, தந்திரி, சேனாதிபதிகளாக இருந்து வந்ததை மானக்கஞ்சாற நாயனார் புராணத்தில் “அரசர் சேனாபதியாம் விழுமிய வேளாண் குடி’ என்றும் ‘வளவர் சேனாபதிக் குடியாம் பொன்னி நாட்டு வேளாண்மையிலுயர்ந்த பொற்பினது” எனக் கூறப்பட்டமையாலும் காணலாம்.
இந்த வரலாற்றை கொங்கு மண்டல சதகம் தனது 87வது பாடலில் பெருமையாக் குறிப்பிடுகிறது.
பாடல்:
இத்தரை மீதினிற் சேன பதியா யிருந்து வெற்றி
யொத்து வரப்பெற்ற தற்காத் தனக்கிங் குறுபெயராம்
உத்தமச் சோழனென் றன்பாத் தாப் பெறு மோங்குபட்ட
வர்த்தனன் வாழ்வுறு மாணூர் திகழ்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் :
இந்த உலகத்தில் சேனாபதியாக இருந்து, சென்ற போர்களில் வெற்றி பெற்று வருவதைக் கண்ட உத்தமச் சோழன் என்னும் மன்னன், தன் பெயரான உத்தமச் சோழன் என்னும் பெயரைப் பட்டப் பெயராகக் கொடுக்கப் பெற்று (சர்க்கரை) வாழும் ஆணூர் கொங்குமண்டலம் என்பதாம்.
கொங்குமண்டல சதகத்தில் பல பாடல்கள் ஆணூர்ச் சர்க்கரையின் மரபினரைக் குறித்துப் பாடப்பட்டவையாகும்.
51, 52, 53, 57, 66, 67 ஆகிய பாடல்கள் சர்க்கரை மரபினர் பற்றியதாகும்.
இவர்களின் குல முதல்வன் அல்லது மூல புருஷன், சர்க்கரை என்னும் பெயரை உடையவனாதலின் பட்டத்துக்கு வருபவர்கள் ஒவ்வொருவரும் இப்பெயரை உத்தமச் சோழன் – காமிண்டன் – மன்றாடி என்று தனித் தனியாகத் தம் முன்னோர் பெற்ற விருதுப் பெயர்களையும் இணைத்து இட்டு வழங்கி வருகின்றனர்.
இப்படிப்பட்ட பட்டங்கள் ஒரு காலத்தினதோ அல்லது ஒருவருடையதோ அல்ல. வேறு வேறு காலத்தில் அந்தக் குடியில் உதித்தவர் எனக் கொள்ளலாம்.
***
புத்தக அறிமுகம் 128
WHO IS MORE INTELLIGENT, MALE OR FEMALE?
CONTENTS
Foreword
Chapters
I LITERATURE
1. Journalist V.Santhanam: an inspiration to the young! 2. Who Is More Intelligent and Clever? Male or Female?
3. Sex – Hinduism shows the scientific way! 4. No Divorce! Secrets to have a Happy Relationship! 5. Who is a Poet? Hundreds of Definitions! All are beautiful! 6. Love Poems in Sanskrit Literature7. Satiric Verses in Sanskrit Language 8. Pun in Sanskrit Literature. 9. Wonderful Inspirational Sanskrit Subhasita Verses 10. Let Us Salute the Great American, Sanskrit Scholar Ludwik Sternbach 11. Number One to Ten : Sayings of the Wise 12. The Poetical Works of Tiruloka Sitaram With Translation and Notes. 13.The Poetical Works of Tiruloka Sitaram With Translation and Notes – Part II.
II HINDU GLORY
14. Wit and Wisdom of Bhagavan Ramana maharishi! 15. Paul Brunton – by Annie Cahn Fung 16. If You Want to Know India, Read Swami Vivekananda!17. Forgotten Arts in India 18. What you have learnt is Handful, what you haven’t learnt is…. 19. Swami Ramathirtha’s Notes 20. Taj Mahal is a Hindu Temple reveals the book ‘World Vedic Heritage’ 21. Hindu Destiny in Nostradamus by G.S.Hiranyappa 22. Jesus Christ Visited India and Died in Kashmir
III SELF IMPROVEMENT
23. Napoleon’s Leadership Qualities 24. Miraculous Incidents Due to Positive Emotions From Day to Day Life and History 25. Confidence: The Key to Success. 26. Secrets to Success27. Be A Tough Minded Optimist! 28. Thinking for Results 29. Management Stories which you must definitely read! – 1 30. Management Stories which you must definitely read! – 2 31. LAWYERS JOKES 32. Adam and Eve: Jokes. 33. Nature’s Numbers by Ian Stewart 34. The Power of Subconscious Mind
IV BOOKS TO READ
35. ‘Awaken the Giant Within’
36. God Is Not Dead 37. Damn Good Advice. 38. Voice of Senses 39. A Journey Towards the Infinite Absolute 40. 1001 Movies You Must See Before You Die by Steven Jay Schneider. 41. Life And Contribution of Mridanga Vidwans By Dr Madurai K. Thiagarajan
*
நூலில் இடம் பெற்றுள்ள என்னுரை :
Foreword
It is with great pleasure I am presenting this book to the learned readers.
The book has been divided into Four parts.
In the first part we are coming into contact with the vast literature of India.
Interesting verses are quoted so that one may get inspiration to explore the treasure that India offers to the world!
In the second part the never-ending glory of the great nation Bharat that is India is highlighted.
The third part is devoted to self- improvement. Along with the secrets to success, in a lighter vein we may enjoy some management stories and jokes also!
The fourth part is a Book review section in which some good books are recommended for reading.
These articles have been published in www.ezinearticles.com and attracted more than one lakh eighteen thousand readers all over the world. These articles have been reprinted in around 1900 + magazines around the world.
Readers are requested to have a glimpse at the vast literature of India, the glory of Bharat and principles of Self- Improvement which may be applied to lead a meaningful life.
Good Luck to all.
Sanfrancisco S.Nagarajan
4th October 2022
VIJAYA DASAMI
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
These are third class verbs, conjugated in the same way. Look at தேடு- search, மூடு- close, ஆடு dance, பாடு- sing, விளையாடு- paly etc. they are useful Tamil verbs
After the root of the verb, I have given infinitive for each verb.
தேடு- THEDU – SEARCH, GO IN SEARCH OF தேட- THEDA/ INFINITIVE- TO SEARCH ,