ஒரு நல்ல மருத்துவ நூல் அறிமுகம் (Post No.11,315)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,315

Date uploaded in London – 2 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

நூல்களை சேகரித்து, தேவையானவர்களுக்கு அவற்றை விநியோகிக்கும் ஒரு நல்ல வழக்கத்தைக் கொண்டவர் லண்டன் பத்மநாப ஐயர் . இலங்கைத் தமிழர் வட்டாரத்தில் இவர் பெயரை அறியாதவர்கள் குறைவு. வீட்டிற்குள் நுழையமுடியாத அளவுக்குப் புஸ்தகங்கள் இருக்கும் அவைகளை நீந்திக் கடந்தால் ஒரே ஒரு நாற்காலி மட்டும் இருக்கும். அவர் எழுந்திருந்து நின்றுகொண்டு நம்மை உட்காரச் சொல்லி (இலங்கை த் தமிழ் பாஷையில் நம்மை இருக்கச்சொல்லி ) இந்தப் புஸ்தகங்களைப் பாருங்கள் என்று அடுக்கு அடுக்காக நம் முன்னேவைப்பார் . இடையிலே தேநீரும்  கிடைக்கும் .

நான் எழுதிய 59 புஸ்தகங்களில் ஒரு பதினைந்து புஸ்தகங்களை அவருக்கு கொடுக்கச் சென்றபோது வழக்கம்போல புஸ்தகங்களை என் முன்னே அடுக்கினார். அவைகளில் நான் எடுத்த ஒரு நல்ல மருத்துவ புஸ்தகம் பற்றிய மதிப்புரை இதோ:-

நூலின் பெயர் தமிழர் மருத்துவம்

ஒரு வரலாற்றுப் பார்வை

ஆசிரியர் -முனைவர் பால .சிவ கடாட்சம்

முதல் பதிப்பு – டிசம்பர் 2021

பக்கங்கள் 224

விலை 250 ரூபாய்

வெளியீட்டாளர் – பட்டினம்

SALES OFFICE

AAZHI PUBLISHERS,

5, K K SALAI, KAVERI RANGAN NAGAR,

SALIGRAMAM , CHENNAI 600 093

aazhipublishers@gmail.com

கனடாவிலுள்ள டொரண்டோ நகரிலிருந்து அவர் எழுதிய புஸ்தக முன்னுரையில் பணிவோடு சொல்கிறார் —

“தமிழ் மக்களின் மருத்துவப் பாரம்பரியம் பற்றிய வரலாற்றை எழுதுவதற்குத் தகுதியான பலர் இருத்தல் கூடும் . எனினும் அவர்கள் இத்துறையில் பெரிதும் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை மருத்துவம், தமிழ், வரலாறு ஆகிய பல துறைகளில் பரிச்சயம் உடைய வர்கள் மட்டுமே இது தொடர்பான முயற்ச்சியில் இறங்க முடியும் . இத்துறைகளில் எனக்குள்ள ஆர்வம் மட்டுமே எனது இம்முயற்சிக்கு உந்து கோலாய் இருந்தது .கடந்த 40 வருடங்களாக எனது தேடுதலில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இச்சிறிய நூலை எழுதியுள்ளேன் இது தமிழர் மருத்துவத்தின் முழுமையானதோர் வரலாற்று நூலாக இல்லாவிடினும் வருங்கலத்தில் இது தொடர்பான விரிவான நூல்களுக்கு இந்நூல் அனுசரணையாக இருக்கும் என்பது என து நம்பிக்கையாகும்” 

முன்னுரையில் கிடைக்கும் இன்னும் ஒரு தகவல்- கனடாவில் இருந்து வெளிவரும் தாய்வீடு என்னும் பத்திரிக்கையில் 2016 முதல் 2018 வரையான கட்டுரைகள் அடங்கியது இந்நூல்.

யாழ்ப்பாண பல்கலைக் கழக தகைசார் வாழ்நாட் பேராசிரியர் முதுமுனைவர் அ . சண்முகதாஸ் அணிந்துரையில் இந்த நூலின் சிறப்பு அம்சங்களை எடுத்துக் காட்டியுள்ளார்.

xxx

என் கருத்துக்கள்

தமிழர்களுக்கு உயர்வு நவிற்சி அணியில் ஆர்வம் அதிகம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நாங்கள் என்று எல்லாவற்றையும் சூப்பர்லேட்டிவ் டிகிரியில்(Superlative Degree) எழுதுவார்கள் . அப்படி யில்லாமல் நிதானமாக உள்ளது உள்ளபடி எழுதியுள்ளார் ஆசிரியர்.

அஸ்வினி தேவர்கள் செயற்கை கால் பொருத்திய செய்தி,  ருக்கு வேதத்திலேயே இடம்பெறுவதைக் குறிப்பிட்டு, அதர்வண வேதத்தின் உப வேதமாகக் கருதப்படுவது ஆயுர்வேதம் என்று கூறி இந்திய மருத்துவத்தின் துவக்கத்தை முதல் அத்தியாயத்தில் காட்டுகிறார்.

முன்னர் ஒரு காலத்தில் ஒரு லட்சம் சுலோகங்களுடன் இருந்த ஆயுர்வேத நூல் பின்னர் 10,000 சுலோகங்களைக் கொண்ட எட்டுப் பாடங்களாக தொகுக்கப்பட்டது . இதனை ஈழத்தில் எழுந்த ஆயுள்வேத பரராசசேகரம் பின்வருமாறு கூறுகிறது

உன்னரும் கிரந்தம் எட்டிலக்கம் உள்ளதாம்

அன்ன நூல் முழுவது,ம் அறிந்து கற்றிட

உன்னருங் கலியுகத்து உணர்வின்றாதலிற்

பின்னதிற் சுருக்கமாய்ப் பிரித்துக்காட்டினான்

— பரராசசேகரம் , முதலாம் பாகம், பாடல் எண்  18

எட்டு பாடங்கள்

1.காயசிகிச்சா தந்திரம் (பொது மருத்துவம்) General Medicine

2.கெளமாரப்ரிய தந்திரம்  (குழந்தை மருத்துவம் ) Paediatrics

3.பூதவிதிய தந்திரம் (மனநலக் கோளாறு மற்றும் தொற்றுவியாதி மருத்துவம் ) -the disease caused by evil spirits (psychiatry and infectious diseases

4.அ கத தந்திரம் (நஞ்சுமுறிப்பு) மருத்துவம் Toxicology

5.இரசாயன தந்திரம்( ஆயுள் நீட்டிப்பு மற்றும் உடல்வலு மேம்பாட்டு மருத்துவம் ) promoting longevity and stregth

6.வஜீகரண தந்திரம் (மலட்டுத் தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு மருத்துவம் ) sterility and aphrodisiacs

7.சலாக்கிய தந்திரம் (கண் மற்றும் தொண்டை , மூக்கு, காது நோய் மருத்துவம் )  Ophthalmology and the diseases of ear, nose and throat

8.சல்லிய தந்திரம் (அறுவை மருத்துவம் ) surgery

பின்னர் சரகர், தன்வந்திரி ஆத்ரேய புனர்வசு பற்றிய, நாம் அறியாத பல புதிய செய்திகளைத் தருகிறார் நூலாசிரியர்

நான் தினசரி சொல்லும் தன்வந்திரி மந்திரத்தையும் ஆசிரியர் முதல் அத்தியாயத்திலேயே கொடுத்திருப்பது என்னைக்கவர்ந்து இழுத்தது – (புஸ்தகத்தை நோக்கி.)

இது அனைவரும் சொல்ல வேண்டிய மந்திரம். இதைச் சொன்னால் நோய்கள் வாரா ; வந்த நோய்களும் அகலும்

ஓம் நமோ பகவதே  வாசுதேவாய

தன்வந்த்ரயே  அம்ருத கலச ஹஸ்தாய

சர்வ ஆமய விநாசாய

த்ரை லோக்ய நாதாய

மஹா விஷ்ணவே நமஹ

பொருள்

எல்லோர்க்கும் வரம் தருபவரும் வாசுதேவராக இருப்பவரும், அமிர்த கலசத்தைக் கையில் ஏந்தியிருப்பவரும் , சகல வித நோய்களைத் தீர்க்க மூவுலகத்தைக் காண்பவரும், மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்திரிக் கடவுளே உன்னை வணங்குகிறேன்.

ஒவ்வொரு அத்தியாய இறுதியிலும் அவர் எடுத்தாண்ட நூல்களின் பெயர்களையும் சேர்த்துள்ளார். நூலாசிரியர் . 40 ஆண்டுக்காலத்தில் சேர்த்த தகவல்கள்  என்பதற்கு இது சான்று பகரும்.

மதிப்புரையை முடிப்பதற்கு முன்னர் 20 அத்தியாயங்களில் என்ன இருக்கிறது என்பதைச் சொல்லி விடுகிறேன் :-

1. இந்திய துணைக்கண்டத்தில் தோன்றி வளர்ந்த மருத்துவக் கலை

2.ஆயுள்வேத மருத்துவத்தின் வளர்ச்சியில் பெளத்தத்தர்களின் பங்கு

3.சங்க கால தமிழகத்தில் மருத்துவக் கலை

4.பழந்தமிழ் இலக்கியத்தில் அறுவைச் சிகிச்சை பற்றிய குறிப்புகள்

5.வள்ளுவர் காலத்து மருத்துவ மரபு

6.ஆயுள்வேத மருத்துவப் பெயர்களில் அறநூல்கள்

7.ஆயுள்வேத மருத்துவத் துறையில் சம்ஸ்கிருத மொழி ஆதிக்கம்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இயங்கிய ஒரு

ஆயுள்வேத ஆஸ்பத்திரி

8.ஆயுள்வேத மருத்துவத்தின் வளர்ச்சியில் தென்னிந்தியரின் பங்களிப்பு

9.தீதிலா வாகடம் செந்தமிழ் செய்திட

10. தமிழ் மக்களின் பாரம்பரிய மருத்துவம்

11.நோய்களைத் தோற்றுவிக்கும் காரணிகள்

12. நோய்களும் அவற்றின் குறிகுணங்களும்

13.இரசாயன தந்திரமும் இரச சாஸ்திரமும்

14. சித்தர்களின் சீனத் தொடர்பு

15.திருமூலரின் இரச சித்த பாரம்பரியம்

16. சித்த மருத்துவத்தின் தோற்றமும் அடையாளமும்

17. போகர் ஏழாயிரம்

18. வித்தியாசமான சித்தர்கள் சிலர்

19.பிற நாட்டவர்கள் பார்வையில் சித்தர்கள்

20.ஆயுள்வேதமும் சித்த மருத்துவமும்

ஒரு கலைக் களஞ்சியம் அளவுக்குத் தகவல் தரும் இந்த நூல், மருத்துவத்தில் – குறிப்பாக மருத்துவ வரலாற்றில் – ஆர்வம்கொண்ட  அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல் ஆகும் 

-சுபம்–

 tags- ஆயுள்வேதம் , சித்த மருத்துவம், தமிழர் மருத்துவம், தன்வந்திரி, மருத்துவ நூல்

மஹாத்மாவின் இறுதி நாள் : ஜனவரி 30, 1948! (Pot No.11,314)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,314

Date uploaded in London – –    2 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 அக்டோபர் 2. காந்தி ஜெயந்தி!

மஹாத்மாவிற்கு அஞ்சலி!

மஹாத்மாவின் இறுதி நாள் : ஜனவரி 30, 1948!

ச. நாகராஜன்

ஜனவரி 30, 1948. வெள்ளிக்கிழமை.

வழக்கம் போல அதிகாலை மூன்று முப்பது மணிக்கு காந்திஜி விழித்தெழுந்தார். வேப்பங்குச்சியால் பல் துலக்கினார்.

தனது அறையில் தனது பணியைத் துவக்கினார். காங்கிரஸுக்கு ஒரு புதிய சட்டத்தை வகுக்க ஆரம்பித்தார். அது தான் அவரது தேசத்திற்கான கடைசி உயில்.

மணி 4.45 வெந்நீரில் எலுமிச்சை சாறை தேனுடன் கலந்து அருந்தினார்.

அரை மணி நேர நடைப் பயிற்சி! தனது கடிதத் தொடர்பு ஃபைலைப் பார்க்க ஆரம்பித்தார்.

அன்று கிராம்பு பொடி தீர்ந்து விட்டது. ஆகவே அதை மனு தயாரிக்க ஆரம்பித்தார். “நான் சீக்கிரமே இதை முடித்து விட்டு காலை நடைப் பயிற்சியில் கலந்து கொள்கிறேன். இது இரவில் தேவைப்படும் போது இல்லாமல் போய் விடும்” என்றார் அவர். காந்திஜி உடனே, “இரவுக்குள் என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்குத் தெரியும்? நான் உயிரோடு இருப்பேனோ இல்லையோ! நான் இரவு உயிரோடிருந்தால் அப்போது சுலபமாக இன்னும் கொஞ்சம் தயார் செய்து விடலாம்!” என்றார்.

காலை 7 மணி. ரஜன் நேரு என்ற பெண்மணி அமெரிக்கா செல்லவிருந்தார். அவருடன் பேசினார் காந்திஜி.

காலை 8 மணி. வழக்கம் போல மசாஜுக்கு ரெடியானார். பியாரிலாலிடம் காங்கிரஸ் புதிய சட்டத்தைப் பார்த்து ஏதேனும் சேர்க்கத் தேவை என்றால் அதைச் சேர்க்கச் சொன்னார்.

பிறகு குளியல். மனு காந்திஜியின் எடையை எடுத்தார். 109 ½ பவுண்டுகள். உண்ணாவிரதம் இருந்தால் அவர் இழந்த எடை இப்போது சீராகிக் கொண்டிருந்தது.

மணி 9.30 காலை உணவு. பின்னர் வங்காள மொழி பயிற்சி. அதில், “பைரபின் வீடு நைஹாதியில் இருக்கிறது. ஷைலா அவரது மூத்த மகள். இன்று ஷைலாவிற்கு கைலாஷுடன் கல்யாணம்” என்று எழுதினார்.

12 அவுன்ஸ் ஆட்டுப் பால். சற்று சமைக்கப்பட்ட கறிகாய். ஆரஞ்சு, 4 தக்காளி, காரட் ஜூஸ். இஞ்சி ரஸம். எலுமிச்சை. உணவு முடிந்தது.

பியாரிலால் காங்கிரஸ் சட்டத்தை அவரிடம் காண்பிக்க அவர் அதில் சில திருத்தங்களைச் செய்யலானார்.

மதியத்தில் சிறிய தூக்கம். சில முஸ்லீம் முல்லாக்கள் டில்லியிலிருந்து அவரைப் பார்க்க வந்தனர். வார்தாவுக்கு அவர் செல்லலாம் என்று அவர்கள் கூறவே, காந்திஜி, “கொஞ்ச நாள் தான் அங்கு இருக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு “கடவுள் வேறு மாதிரியாக நினைத்தாலோ அல்லது வேறு ஏதேனும் நிகழ்ந்தாலோ அன்றி” என்பதைச் சேர்த்துக் கூறினார்.

பின்னர் பிஷனைப் பார்த்து முக்கிய கடிதங்களைக் கொண்டு வரச் சொன்னார். “இன்றே நான் பதில் எழுத வேண்டும். நாளை இருப்பேனோ, மாட்டேனோ” என்று கூறினார்.

அவரது உதவியாளர் மஹாதேவ் தேசாயின் வாழ்க்கைச் சரிதம் எழுதப்பட வேண்டி இருந்தது. ஆனால் நிதி பற்றி சிக்கல். அதில் தனது ஏமாற்றத்தைக் காட்டினார் அவர். அதை யார் எழுதலாம் என்பதைப் பற்றிப் பேசினார்.

ஜவஹர்லால் நேருவிற்கும் சர்தார் வல்லப பாய் படேலுக்கும் இடையே சற்று மனக் கசப்பு ஏற்பட்டிருந்தது. ஆகவே அதை மதியம் படேலுடனும் ப்ரேயர் கூட்டம் முடிந்தவுடன் நேருவுடனும் பேச அவர் திட்டமிட்டிருந்தார்.

சிந்தி குழு ஒன்று அவரைச் சந்தித்தது.

மணி 2.15  இரு பஞ்சாபிகள் அவரைச் சந்திதனர். இரு சிந்திகள், சிலோனிலிருந்து ஒரு பிரதிநிதி. சிலோனிலிருந்து வந்தவரது மகள் காந்திஜியிடம் ஆடோகிராப் கேட்க அவர் கையெழுத்திட்டார். அது தான் அவர் இட்ட கடைசி கையெழுத்து!

3 மணி. ஒரு பேராசிரியர் அவரைச் சந்தித்தார். அவரது உபதேசம் புத்தருடையது போலவே இருக்கிரது என்றார்.

3.15. பிரான்ஸை சேர்ந்த போட்டோகிராபரான ஹென்றி கார்டியர் ப்ரெஸன் தனது போட்டோ ஆல்பத்தை காந்திஜியிடம் அளித்தார்.

4 மணிக்கு சர்தார் படேலுடனான சந்திப்பு. அவர் மனிபென் மற்றும் தனது மகளுடன் வந்தார்.

4.30.காந்திஜி தனது கடைசி உணவை எடுத்துக் கொண்டார்.

சில பார்வையாளர்கள் அவரைப் பார்க்க விருப்பப்பட்டனர். படேலின் முன்னிலையில் காந்திஜி, “ப்ரேயர் முடிந்தவுடன் நான் பார்க்கிறேன். அதுவும் நான் உயிரோடு இருந்தால்” என்றார்.

தனது சர்க்காவைக் கேட்டார். அதை ஆசையோடு (கடைசிமுறையாக) பார்த்தார்.

மணி 5. தனது சப்பலை மாட்டிக் கொண்டார். “நான் 10 நிமிடம் லேட்” என்றவர் மனுவை வலது பக்கமும் ஆபாவை இடது பக்கமும் அணைத்துக் கொண்டு குறுகலான குறுக்கு வழியில் நடக்கலானார்.

200 கஜ தூரம் நடக்க வேண்டும் – ப்ரேயர் மேடைக்கு.

20 போலீஸ்காரர்கள் சாதாரண உடையில் காவல் காக்க இருந்தனர்.

கூட்டம் கூடி இருந்தது.

கோட்ஸே எதிரில் வந்தான். அவன் தனது திட்டத்தை திடீரென்று (நேருக்கு நேராகச் சுடுவது என்று) மாற்றிக் கொண்டான் போலும். மஹாத்மா வழக்கம் போல இரு கரம் கூப்பி கும்பிட்டவாறே செல்ல எதிரில் வந்த அவன் இரு கரமும் குவித்துக் கும்பிட்டான். நமஸ்தே காந்திஜி என்றான். காந்திஜியும் கரத்தைக் குவித்தார்.

மனு அவன் எங்கே காந்திஜியின் காலில் விழுந்து கும்பிடப்பார்க்கிறானோ என்று நினத்தவர், “பையா! (சகோதரர் என்று அர்த்தம்) பாபுஜி ஏற்கனவே கொஞ்சம் லேட். ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்” என்றார்.

மனுவை ஒரு புறமாகத் தள்ளிய கோட்ஸே மறைத்து வைத்திருந்த தனது இத்தாலிய பிஸ்டலை எடுத்தான். சுட்டான்.

5.17.

காந்திஜி மார்பில் குண்டுகளை ஏந்தினார். ஹே ராம், ஹே ராம் என்றார்.

ஒரு வினாடி நின்றவர் அப்படியே விழுந்தார்.

கூட்டம் ஸ்தம்பித்தது.

ஒரே குழப்பம். மஹாத்மா சில விநாடிகளில் அமரர் ஆனார்.

மருத்துவர்கள் வந்து அவரது நாடியைப் பார்த்தனர்.

அவர் அமரர் ஆனதை உறுதிப் படுத்தினர்.

தேசமே சோகக் குரலில் அழுதது!

அவரது மெசேஸ் என்ன?

MY LIFE IS MY MESSAGE என்றார் அவர்.

அவரது வாழ்க்கையை – சத்திய சோதனையை – ஆழ்ந்து படிப்போம், கவனிப்போம், உணர்வோம்.

அப்போது தான் அவரது செய்தி என்ன என்பதை உணர முடியும்!

இந்த வையத்து நாட்டில் எல்லாம் விடுதலை தவறிக் கெட்டு, பாழ்பட்டு நின்ற பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த மகான் காந்திஜி!

வாழ்க நீ எம்மான்! நீவீர் காட்டிய வழி நடப்போம்.

உன்னத பாரதத்தைப் படைப்போம்!

உங்களுக்கு எமது சிரம் தாழ்ந்த உளமார்ந்த அஞ்சலி!

***

புத்தக அறிமுகம் – 74

BREAKTHROUGH TO SUCCESS

                                    நூலில் உள்ள அத்தியாயங்கள்

                                          CONTENTS 
 
I SELF IMPROVEMENT 
1. Thoughts Determine Your Success 
2.Think Positively to Get Whatever You Want 
3.Power of Positive Thought Energy 
4.Auto Suggestion for Achievement 
5.Every Little Helps! 
6.Formula Thirteen for Success 
7.Success in your Pocket 
8. Success Techniques 
9.The One Word That Makes The Difference Between Success And Failure! 
10.In Praise of ‘If’ 
11.Power of Words-Use it to Make You or Mar You 
12. Serendipity And How Could You Make It Work For You                        13.Power of Pyramid – Use it For Your Success Part 1 
14.Power of Pyramid – Use it For Your Success – Part 2 
 
 
II Spiritual Growth 

15. The Mind Body Connection                                                                                             16. Fate and Free will 
17.Power Bead That Beats Failure and Gives Wealth, Health, Success.      18.Meditation: The Power that Lifts                                                                              19.The Benefits of Meditation                                                                                         20.Power of Prayer 
21.God Has Never Broken Any Promise Ever Spoken! 
22.Greatest Secret Of Life 
23.How to Make Your Aura Bright and Divine? 
24.Hypnosis Works! 
25.Intuitive power of Maharishi Aurobindo 
26.Intuition Through Yoga 
27.Yoga for Mind Development 
28.The Secret of Karma Yoga 
29.The Story of the Mind                                                                                                     30.Zen Way For Perfect Peace and Harmony 
 
III CREATIVITY AND INTELLIGENCE 
31. Can IQ be Increased? 
32.Dreams and Creativity 
33.How to Unlock Your Creativity? 
34.What is Memory and How You Can Increase Your Memory Power – Part I 
35.What is Memory and How You Can Increase Your Memory Power – Part II

36. The wonderful and complicated organ called Brain
 
!V. Success tools 
37. Power of Mantras 
38.Power of Gayatri Mantra to Achieve All Round Success 
39.The Power of Gayatri Mantra – Part II – Power of Each Syllable 
40.The Power of Sound                                                                                                        41.Power of Music 
42.Thousand names of God – The secrets of  Vishnu Sahasranama Part I 
43.Thousand names of God – The secrets of  Vishnu Sahasranama Part II 
44.Get Feng Shui – Vastu Combined Benefits! 

 
V Book Reviews 
45.Puranic Encyclopaedia by Vettam Mani 
46.Gayatri Rahasya By His Holiness Shri Prabhu Ashrit Swamiji 
47.Hinduism and Modernity by David Smith 
48.Master Your Memory by Tony Buzan; Book Review 
49.Thinking for Results 
 
vi.REFERENCE BOOKS

*

இந்த நூலுக்குத் தக்கதொரு முன்னுரையை பாரிஸ் வாழ் அறிஞரான பேராசிரியர் பெஞ்ஜமின் லீ பா அவர்கள் தந்து கௌரவித்துள்ளார்.

அதைக் கீழே காணலாம் :

FOREWORD  

You believe in positive thinking? Then this e-book will enhance your beliefs. You are a skeptic? This will convince you and convert you to positive thinking. Sure, positive thinking and optimism go hand  in hand ; deeds without (positive) thoughts are seeds without life – they do not grow to bear fruits. If we think that ‘positive thinking’ is a product of the 20th century (thanks to Dale Carnegie, James Allen and or Norman Vincent Peale…), then Mr.S.Nagarajan, the author of  ‘BREAKTHROUGH TO SUCCESS’ has aptly proved that it is an Indian product that existed  ever since thousands and thousands of years.   Saint Thiruvalluvar, the greatest Tamil poet and philosopher has allotted a chapter (Cf;fKilik) for the ‘positive thinking’. For example, in Thirukural N° 596 – Chapter 60: ‘Enthusiasm’) Saint Thiruvalluvar says, 

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்று அது    தள்ளினும்

தள்ளாமை நீர்த்து

 (‘Let thoughts be always great and grand

Though they fail, their virtues stand’ – Translation: Yogi Suddhanantha Barathiar).

So, Mr.S.Nagarajan in the first chapter of his book ‘SELF IMPROVEMENT’, insists upon the importance of ‘positive thinking’ quoting Swami Vivekananda, James Allen and Buddha. The latter declared ‘We are what we think with our thoughts we make the world’. It is exactly the same kind of thinking that made René DESCARTES, the  famous French mathematician and father of modern philosophy,  declare ‘Cogito, ergo sum’. ( ‘Je pense, donc je suis’  French ; ‘ I think, therefore I am’ – English).

Having shown the importance of ‘positive thinking’ the ‘Breakthrough to Success’ proceeds to other related topics such as ‘Think Positively to Get Whatever You Want’, ‘Power of Positive Thought Energy’ and so on. All the fourteen chapters in this first chapter deal with ideas that help improve oneself. Here and there, the author gives great maxims in a single sentence with few and simple words. Just to quote a few:

‘…the mind can both create and cure disease’,

‘Noble thought will bring happiness’,

‘Every great journey starts with a small step’

(This can be compared to Shakespeare’s – Julius Ceasar Act I Sc III

‘Those that …make a mighty fire

begin it with weak straws’ )

Progressively Mr.S.Nagarajan develops the ways of achieving success and in chapter No. 9, he gives the one word that makes the difference between success and failure. And that word is nothing but the title – name of the 60th Chapter in Thirukural! Yes, that word is ‘enthusiasm’. That chapter ends with a quote from Emerson: “Nothing great was ever achieved without enthusiasm’. He closes the Part No. 10 with the following words: ‘Every fall is to rise again with some gain’ which reminds the famous quote from Confucius : ‘Our greatest glory is not in never fallingbut in rising every time we fall‘. In the 11th chapter, the author shows that…’correct words at the right moment’ will bring success! Here what Jonathan Swift said of a true style ‘Proper words in proper places make the true definition of style’ is true and applicable to success also!

The next chapter deals with spiritual growth. The author praises the virtues of ‘rudraksha’. Though many may not agree with him but all will concord with his point of view that meditation helps improve the health both mental and physical.  

The third chapter is allotted to creativity and intelligence. Here the 32nd chapter ‘Dreams and Creativity’ is interesting and instructive. To the incidents cited by the author can be added the discovery of the structure of benzene. The German scientist Friedrich August von Stradonitz, Kekulé,in 1866 tried hard but in vain to figure out the benzene structure. One night he dreamt of ‘Ouroboros’ – the serpents which bite their own tails – and solved the problem by proposing ‘hexogonal structure’. However, the scientific world had to wait Linus Pauling, the double laureate of the Nobel Prize, whose orbital hybrides theory explained in full and justified once for all, the hexagonal structure. In the light of this and other incidents cited, one has to agree with the author when he says that ‘Each and every one of us …is creative. We have to unlock the creativity hidden within ourselves’. To attain this we have to obtain self realization. This is achieved by meditation, yoga…The 34th chapter is dedicated to memory and the techniques to improve it.

The fourth chapter speaks about Success Tools – Mantras, Feng Shui and Vastu. Feng Shui and Vastu are exactly like astrology, numerology, palmistry…certain people have faith in them; others, discard them as spurious sciences or irrational. More over the informations the author gives are not at all convincing. The author exalts prayer and explains in detail its mystical power quoting from the Book of aphorisms by Narada Munivar, a well known but fictive character from the Puranas. Then he quotes Alexis Carrel, a real character, the famous French doctor and Nobel laureate: ‘Prayer generates miracles’ (The excat French version is  ‘La prière est la forme d’énergie la plus puissante que l’on puisse susciter’ i.e Prayer is the most powerful form of energy one can generate). Thus Mr. Nagarajan unites the two extremes by concluding that ‘Narada explains the ultime benefits of prayer. Dr Alexis Carrel explains the power of prayer’. Just to add more value he could have quoted the poem of Lord Alfred Tennyson: “More things are wrought by prayer than this world dreams of ‘  So, no doubt prayer is the most important one to develop one’s self improvement. But alas, the author gives neither the definition of prayer nor the mode of praying! He then passes on to other less important articles such as Aura, Hypnosis… which may or may not help improve one’s self-improvement.. However, no one can deny his ascertainment that “Yoga increases the creative capacity of man in all spheres and domains of life, gives him the possibility of direct penetration into the mysteries of nature, discloses to him the secret of eternity and the enigmas of existence.” Sure, prayer and yoga will certainly boost the morale and help the self improvement.

Another chapter talks about chanting the ‘mantras’ which are to be initiated properly by a genuine Guru. Who is genuine guru? How to find him? Such questions arise but nowhere in the book the answers peep! The author then goes on to explain the power of Gayatri mantra which’ is proclaimed in the Gita as a Universal Prayer, irrespective of a person’s caste, creed or sex. It is a prayer meant to protect every individual and when uttered with immense devotion and concentration will protect the person. However proper pronunciation is a must and the person is expected to be a strict vegetarian’ (http://en.wikipedia.org/wiki/Gayatri_Mantra). How many will be eligible to fulfill these conditions? How many recite this enchanting mantra twice a day during the ‘sandhya vandhanam’? Such questions arise regarding another mantra ‘Vishnu Sahasranama’ : this being a vaishnava mantra, no saivte will recite it. How then one could expect the faithfuls of other religions to recite these mantras?

In short, the book seems to be a cocktail of many individual articles previously published in ezines of the internet. The author certainly armed with patience collected quite a number of quotations & citations and skillfully used them to support his points of view.  In many places Mr. Nagarajan gives the gist of the articles in a sentence with simple words and that is his plus point.  On the other hand, as the proverb says ‘too many cooks spoil the broth’, so do his innumerous lists (Formula thirteen, Frank Bettger’s list, 5o virtues/skills, 5o or more catch words … and so on!). And this is his weak point. The author, perhaps a bibliophil merits applauses because he has imbibed in so many books.  Bravo!

by

(Paris)                                                                             Professor Benjamin LE BEAU

*

இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

Success has innumerable definitions. It is a basic human instinct to desire success. But what does success mean? People have divergent views on success, some see success as an index of material growth and others as inner peace, Strength and values. But success is a balanced blend of both. They are not mutually exclusive. The e book by Mr S. Nagarajan, on Breakthrough to success combines both the spiritual wisdom of great eastern seers like Vivekananda and the thoughts on material advancement by westerners like M. R. Kopmayer. Articles in this book are beautifully arranged in 4 chapters – Self improvement, Spiritual growth, Creativity and Iintelligence and Success tools – are a harmonious package deal for leading a successful life, both materially and spiritually. It is a ready reckoner reference book for everyone who craves to move up on the success ladder.

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். BREAKTHROUGH TO SUCCESS நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள் -4 (Last Part)- Post No.11,313

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,313

Date uploaded in London – 1 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பகுதி 4

ஒரே பாடலில் 4 கடவுள்கள்

சங்க இலக்கியத்தில் உள்ள 18 மேல் கணக்கு நூல்களில் புறநானூறுதான் பழமையான பகுதி. அதில் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாடிய ஒரே பாடலில் (புறம் 56) நான்கு கடவுளரும், அவர்தம் வாகனங்களும் , அவர்தம் கொடிகளும் வருவதால் சங்கத் தமிழர்கள் இந்து சமய புராணங்களை முற்றும் கற்று உணர்ந்தவர்கள் என்பது தெரிகிறது. மேலும் இவற்றை மன்னர்களுக்கு உவமையாகப் பயன்படுத்துவதால் பொது மக்களுக்கும் இந்தக் கதைகள் நன்கு தெரியும் என்பதைக் காட்டுகிறது. சம்ஸ்க்ருத நூல்களிலும் கல்வெட்டுகளிலும் ஒருவரை வாழ்த்திடும்போது சூரிய சந்திரர் உள்ள வரை என்று வாழ்த்துவது மரபு. அதையும் இப்பாடலில் காண்கிறோம்.

சிவன்பலராமன்கிருஷ்ணன்முருகன் என்ற வரிசையில் நக்கீரனார் பாடுகிறார். பலராமனின் கொடி  பனை மரக்கொடி என்றும் கிருஷ்ணனின் கொடி கருடக்  கொடி என்றும் , முருகனின் வாகனம் /கொடி மயில் என்றும், சிவனின் வாகனம்  ரிஷப/ காளை என்றும் பாடுகிறார்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தென் கோடியிலுள்ள மதுரையில் ஆண்ட பாண்டிய மன்னன் இளவந்திகை பள்ளித் துஞ்சிய நன் மாறனை போற்றுகையில் இந்தச் செய்திகள் அனைத்தும் நமக்குக் கிடைத்துள்ளன. ஆக நக்கீரனார்க்கு சிவ புராணம்கந்த புராணம், பாகவத புராணம் ஆகியன எல்லாம் மனப்படமாகத் தெரியும் என்பதையும் நாம் அறிய முடிகிறது

இதுமட்டுமல்லாமல் வேத காலக் கடவுளான யமனையும் ஒப்பிடுகிறார்.

,

வாகனங்கள் , கொடிகள் இவை எல்லாம் அக்காலத்தில் கோவில்களில் படங்களாகாவோ சிலைகளாகவோ இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஏறத்தாழ இதே காலத்தில் உருவான சிலப்பதிகாரத்தில் இத்தனை கடவுளரையும் குறிப்பிட்டு கோவில்களையும் குறிப்பிடுகிறார் இளங்கோ  அடிகள்.

சிசுபாலவதம்

கிருஷ்ணனைக் குறிப்பிடுகையில் ‘இகழுநர் அடுநன்’ என்ற அடை  மொழியைப் போடுகிறார் நக்கீரர்.

இதன் பொருள் – கேலி, கிண்டல், பகடி செய்வோரை தீர்த்துக் கட்டுபவன் என்பதாகும்; கிருஷ்ணனால் தீர்த்துக் கட்டப்பட்டவர்களில் கம்சன், சிசுபாலன், ஜயத்ரதன் துரியோதனன் முக்கியமானவர்கள்; இவர்களிலும் கிருஷ்ணனால் கொல்லப்பட்டவர்கள் கம்சன், சிசுபாலன் ஆவர் .

சிசுபாலன் எப்போது பார்த்தாலும் கண்ணனை ஏசியும் பேசியும் வந்தான். 99 முறை உனக்கு மன்னிப்பு வழங்குவேன். நூறாவது முறை நீ கேலி செய்யும்போது இருக்க மாட்டாய் என்கிறார். அப்படியே பூமெராங் வடிவத்தில் செயல்படும் சுதர்சன சக்கரத்தை ஏவினார் அவன் தலை துண்டாயிற்று. இதை மாக என்னும் கவி சிசுபாலவதம் என்ற நூலாக சம்ஸ்க்ருதத்தில் பாடி வைத்தார். அதையும் நக்கீரர் படித்திருப்பார் போலும். ஆகையால்தான்  இகழுநர் அடுநன்’ என்ற சொற்றொடரைக்  கையாளுகிறார்.

இப்போது பாடலைப் படியுங்கள் ; நன்றாகப் புரியும்

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,

மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;

கடல் வளர் புரி வளை புரையும் மேனி,

அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;

5

மண்ணுறு திரு மணி புரையும் மேனி,

விண் உயர் புள் கொடிவிறல் வெய்யோனும்,

மணி மயில் உயரிய மாறா வென்றி,

பிணிமுக ஊர்திஒண் செய்யோனும் என

ஞாலம் காக்கும் கால முன்பின்,

10

தோலா நல் இசை, நால்வருள்ளும்,

கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;

வலி ஒத்தீயே, வாலியோனை;

புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;

முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;

15

ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும்

அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,

இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா,

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்

பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்

20

ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,

ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!

அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்

வெங் கதிர்ச் செல்வன் போலவும்குட திசைத்

தண் கதிர் மதியம் போலவும்,

25

நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!

திணை அது; துறை பூவை நிலை.

—மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், புறநானூறு 56

சிவனுக்கு திருநீலகண்டன் என்ற பெயரும் உண்டு. சங்க காலத்திலேயே இது பிரபலமாகிவிட்டது. பிற்கால நாயன்மார் பட்டியலிலும் இதைப் படிக்கிறோம். அவ்வையார் இன்னும் தெளிவாக நீல மணிமிடற்றோன் (புறம் 91) என்றே சிவனைப் போற்றுகிறார்.

முப்புரம் எரிசெய்த சிவனை (திரிபுராந்தகன்) முன்னொரு கட்டுரையில் குறிப்பிட்டேன்.

இன்று தசாவதார சிலைகளிலும் பொம்மைகளிலும் பலராமனின் கலப்பையை பார்க்கிறோம் ; அதையும் நக்கீரர் நாஞ்சில் என்கிறார். சிவனுடைய ஆயுதமான மழுவை கணிச்சி என்கிறார். ஆக , அந்தக் காலத்தில் எல்லார் வீட்டுச் சுவர்களிலும் இந்த ஓவியங்கள் இருந்திருக்க வேவேண்டும்; கோவில்களில் விக்கிரகங்களும் இருந்திருக்கலாம்.

ஒரே பாட்டில் நக்கீரர் நமக்கு ஏராளமான புராணச் செய்திகளைக் கொட்டித் தீர்த்துவிட்டார்.. தமிழ்ச் சங்கத்தை தலைவராக இருந்து  நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சிவனுக்கே சவால் விட்டவர் இவ்வளவையும் அறிந்ததில் வியப்பில்லை.

XXXX

கலர்களும் கடவுள்களும்

எப்போதெல்லாம் பல நிறங்களைக் காண்கிறார்களோ அப்போதெல்லாம்  கடவுள் நிறங்கள்தான் தமிழர்களுக்குத் தோன்றும். அவ்வளவு பக்திமான்கள் தமிழர்கள்.

முல்லைக்கலி பாடிய நல்லுருத்திரன் மஞ்சுவிரட்டு என்னும் ஜல்லிக் கட்டு நிகழ்ச்சியைக்  காணப்போகிறார். அங்கு யாதவ குலப்  பெண்கள் வளர்த்த காளைகளை அவிழ்த்துவிடவும் அவைகளை அடக்க ஆயர்குடி இளைஞர்கள் பாய்ந்து வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு பாகவத புராணத்திலும் உளது; கிருஷ்ணன் ஏழு காளைகளை அடக்கிய செய்தி அது. இப்போது கலித்தொகையில் வரும் கலர்களை/ வண் ணங்களைப்  பார்ப்போம் :

இந்தப் பாட்டில் பாண்டிய நாட்டைக் கடல் கொண்ட செய்தியும், யாதவ குலம் மிகப் பழமையான குலம் என்பதையும் நல்லுருத்திரன் சுட்டிக்காட்டுகிறார்

மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்மெலிவு இன்றி மேல் சென்று, மேவார் நாடு இடம்படப்,
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு, எல்லாரும்-
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக் கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்
திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும்,
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,
மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும், ஆங்கு அப்
பொரு வரும் பண்பினவ்வையும், பிறவும்
உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போலப்,
புரிபு புரிபு புகுத்தனர், தொழூஉ.
அவ் வழி, முள் எயிற்று ஏஎர் இவளை பெறும், இது ஓர்
வெள் ஏற்று எருத்து அடங்குவான்.

—–கலித்தொகை 104

சுருக்கமான பொருள்

பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது. ஆகையால் அவன் சேர சோழ நாடுகளை வென்று அவர்களுடைய கொடிகளை அகற்றினான். பழமையான யாதவர் இனம் காளை பிடிக்கும் ஏறு தழுவும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர் ;அங்கே வந்த மாடுகளின் நிறங்கள் :

பனைக்கொடி பலராமன் போல வெள்ளை மாடு ;

திருமாலைப் போல கருப்பு நிறம் உடைய மாடு ;

முக்கண்ணன் / த்ரயம்பகன் போல செக்கப் செவேல் காளை ;

சூரனை வென்ற முருகன் போல இளம் சிவப்பு நிற எருது .

இதில் இன்னும் குறிப்பிடத்தக்க விஷயங்கள் : திரு மறு மார்பன் = ஸ்ரீவத்சன் ;பிறைநுதல் = நெற்றிக் கண் கொண்ட சிவன் ;தாழ் சடை = விரி சடை சிவன்; இதை நடராஜர் திரு மேனிகளில் காணலாம் ; முக்கண்ணான் – திரயம்பகன் ; வேல் வல்லான் = வேலாயுதன் முருகன்

தமிழர்களுக்கு எங்கும் எப்போதும் சிவன், விஷ்ணு, கந்தன் நினைப்புதான் !

வாழ்க தமிழர்[ வளர்க பக்தி!

.—subham—

Tags- சிவன்பலராமன்கிருஷ்ணன்முருகன், மஞ்சுவிரட்டு ,ஜல்லிக் கட்டு, ஏறு தழுவும், முல்லைக்கலி , நல்லுருத்திரன்

திருலோகம் கவி ஆவணப் படம்(Post.11,312)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,312

Date uploaded in London – –    1 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருலோகம் என்றொரு கவி ஆளுமை : ரவி சுப்ரமணியன் இயக்கத்தில் அற்புத ஆவணப் படம்!

ச.நாகராஜன்

காலம் சற்று கடந்து விட்ட போதும் கூட, ‘திருலோகம் என்றொரு கவி ஆளுமை’ படத்தைப் பார்க்கும் வாய்ப்பு திடீரென்று கிடைத்தது.

வாழ்கின்ற காலத்திலே உரிய விதத்தில் தமிழகத்தில் தமிழக மக்கள் கவிஞர்களையும் அறிஞர்களையும் மதித்துக் கொண்டாடுவதில்லை என்பது பெரிய உண்மை.

மஹாகவி பாரதியாரில் ஆரம்பித்து இன்று வரை ஆங்காங்கு உள்ள பல்வேறு அறிஞர்களை எளிதில் சுட்டிக் காட்டி விடலாம்.

இவர்களில் பெரும்பாலானோருக்கு அரசியல் பின்புலம் இருப்பதில்லை. பெயரையும் புகழையும் விலைக்கு வாங்கவோ வேறு விதத்திலோ அவர்கள் முயல்வதுமில்லை.

இப்படிப்பட்ட பெரும் கவிஞர்கள் கூட்டத்தில் ஒருவராக அமைபவர் திருலோக சீதாராம்.

அவரைப் பற்றிய ஆவணப் படம் :திரிலோகம் என்றொரு கவி ஆளுமை!

மறைந்து விட்ட ஒருவரைப் பற்றிய ஆவணப் படம் என்றால் முதலில் உண்மைகள் அனைத்தையும் சேகரிக்க வேண்டும்.

அவரைப் பற்றி நன்கு அறிந்த அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும், ரசிகர்களையும் தொடர்பு கொள்ள வேண்டும்.

ஆதார பூர்வமாக உள்ள உரிய ஆவணங்களை பல்வேறு இடங்களிலிருந்து கஷ்டப்பட்டு ஒருங்கு திரட்ட வேண்டும்.

பின்னர் தான் அவற்றை ஒரு படமாக உருவாக்கத் தன் திறமையைக் காட்ட வேண்டும்.

இதில் சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கிறார் திரு ரவி சுப்பிரமணியன் என்று தயங்காமல் கூறலாம்.

சிறந்த கவிஞர், சொற்பொழிவாளர், பல்துறை வித்தகர்களை வியக்க வைத்தவர், பத்திரிகை ஆசிரியர், நூல்களை இயற்றிய ஆசிரியர், புதிய எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தியவர், இயற்கையை ரசித்தவர், பெயர் புகழைத் தேடிப் போகாதவர், எளிமையாக வாழ்ந்தவர் என்று இப்படி பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட திருலோக சீதாராம் அவர்களை படம் மூலமாகப் பார்க்கும் போது பிரமிக்கிறோம்.

தனது குரலால் (மென்மையான, கம்பீரமான குரல்) நீண்ட நெடிய ஒரு வரலாற்றை சுமார் 73 நிமிடங்களில் சித்தரிக்கிறார்  ரவி சுப்பிரமணியன்- பல்வேறு உத்திகளால்.

சிறந்த எழுத்து, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, தொகுப்பு, இயக்கம் கொண்ட படம் இது.

இதில் சேக்கிழார் அடிப்பொடி திரு டி.என்.ராமச்சந்திரன், திரு. சோ.சத்தியசீலன். திரு எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்களின் நேரடி அனுபவங்களைக் கேட்கிறோம்.

மூன்று பாடகர்களின் பாடல்களும், குறும்படத்தில் நடிக்கும் நடிகர்களும் நம்மைக் கவர்கின்றனர்.

மகாகவி பாரதியாரின் குடும்பத்தோடு நல்லதொரு உறவைக் கொண்ட கவிஞரின் பாசம், பாரதியிலேயே அவர் வாழ்ந்த பாங்கு – இவை நம்மை பிரமிக்க வைக்கிறது!

இறுதியில் கவிஞர் பேசிய பேச்சை கனத்த குரலில் திரு ராமச்சந்திரன் குறிப்பிட்டுக் கண்களைத் துடைத்துக் கொள்ளும் போது மனம் உருகுகிறது.

பாவேந்தர் பாரதிதாசன் (நிதி அளிப்பு) ,  தொழில் மேதை ஜி.டி. நாயுடு (எதற்காக சந்திக்க வேண்டும்? பதில் “சும்மா”) என பல சந்திப்புகளைப் பார்க்கிறோம்.

இயக்குநர் ரவி சுப்பிரமணியத்தின் தனிச் சிறப்பு அவர் உருவாக்கும் படங்களில் பார்க்கும் ஆயிரக்கணக்கானோரின் மனம், அனுபவத்திற்குத் தக்க வகையில் ஒரு நீட்சியைத் தருவது தான்!

இது சிறந்த கலைஞர்களுக்கு மட்டுமே வரும் ஒரு அரிய திறன்.

(இந்த நீட்சியின் வீச்சை தாமரை படத்திலும் பார்க்கலாம்!)

ரவி சுப்பிரமணியன் தனது சொற்பொழிவில் தான் சேர்க்க முடியாமல் விடுபட்டுப் போனவற்றையும் சொல்கிறார்.

தொய்வின்றி ஒரு படத்தை, பார்ப்பவர்களின் ஆவலைத் தூண்டும் வகையில் ஒரு ஆவணப் படத்தைப் படைப்பது சிரமமான காரியமே.

மூலக் கனல் பாடல், கோவிலில் படப்பிடிப்பு, கணினி உத்திகள், வரைகலை கார்ட்டூன் உத்திகள் என எதைச் சொல்ல, எதை விட?!

சிவாஜி என்றொரு பத்திரிகையை அற்புதமாக நடத்தியதோடு மாற்றுக் கருத்துக்களைக் கொண்டோரும் மதிக்கும் படி நடந்து கொண்ட கவிஞரின் வாழ்க்கையை தமிழ் மக்கள் அறிதல் வேண்டும்.

அவரது புதல்வர் சுப்ரமணியன் சீதாராம் இதைப் படைப்பதற்கான பணத்தை வேண்டும் போதெல்லாம் கொடுத்ததை ரவி சுப்பிரமணியன் குறிப்பிட்டு தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் அபூர்வமாக ஏற்படும் அற்புதமான உறவையும் குறிப்பிட்டு நெகிழ்கிறார்.

தயாரிப்பாளர் சுப்ரமணியன் சீதாராம், நல்ல திறன் கொண்டுள்ள ரவி சுப்பிரமணியன் மற்றும் அவரது குழுவினருக்குப் பாராட்டுகள்.

இந்தப் படத்தை YOUTUBE இல் https://www.youtube.com/watch?v=m9u2KOygB3g

என்ற தொடுப்பில் பார்த்து மகிழலாம்; பாராட்டலாம்!

***

புத்தக அறிமுகம் – 73

ஹா! ஹா! ஹாலிவுட்!

 நூலில் உள்ள அத்தியாயங்கள்

01) ஹா! ஹா! ஹாலிவுட்!!                      

02) ஹாலிவுட் பா(ர்)வை-ஜூலியா ராபர்ட்ஸ்     

03) ஹாலிவுட் பா(ர்)வை-நிகோல் கிட்மேன்       

04) ஹாலிவுட் பார்(ர்)வை-கேதி நோயல்     

05) ஹாலிவுட் பா(ர்)வை- காதரீன் ஜீடா ஜோன்ஸ்                    

06) மர்லின் மன்ரோவைக் கொன்றது யார்?  

 07) மர்ம மன்னன் வாழ்வில் மர்மங்கள்      

 08) புதிய ஜேம்ஸ் பாண்ட் யார்?        

 09) நிர்வாணம் பெறத் துடிக்கும் ஹாலிவுட் நடிகைகள்                          

 10) மாறுகின்ற உலகில் இனி ஹாலிவுட் படங்களும் மாறுமா?                 

 11) பிரிட்னி பெற்ற அதிர்ஷ்டக் குழந்தை    

  12) கவர்னரான நடிகரின் கவலை           

  13) புகை பிடிக்காத புதிய ஜேம்ஸ் பாண்ட்   

  14) ஜாக்கிசான் கடந்து வந்த பாதை         

  15) கிசுகிசுக்கள்                          

  16) உலகைக் கலக்க வரும் கிங்காங்         

  17) பாட்டர்ஜுரம் பரவுகிறது                                                                           18) ஹாலிவுட்டில் ஒரு மாயாஜால மாளிகை   

 19) கலக்கப் போவது யாரு?                

 20) 2005ல் கலக்கியது யார்?                

 21) வியர்வை ஊசி                                                                                  

  22) சார்லி சாப்ளின்                      

 23) ஹிட்ச்காக்

 24) எலிசபத் டெய்லர்

 25) ஜேம்ஸ் பாண்டி

  26)  ஜேம்ஸ்பாண்டுக்கு வந்த சோதனை

  27) ஏழு பேரில் எஞ்சியுள்ள ஒருவர்!

*

இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

உலகின் மிகப் பெரிய கனவுத் தொழிற்சாலையான ஹாலிவுட் பற்றிய நூல். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் உருவான வரலாறு, எலிஸபத் டெய்லர், மர்லின் மன்ரோ போன்ற அந்நாளைய கனவுக் கன்னிகள், ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் முதலான திரை மேதைகள் போன்ற ஹாலிவுட் பிரபலங்கள் பலரைப் பற்றிப் பல விவரங்கள் அடங்கிய நூல். ஆங்கிலத் திரையுலக ரசிகர்களுக்கு ஒரு விருந்து! திரைப்பட விரும்பிகளுக்குப் பரிசளிக்க ஏற்ற நூல்!

This is a book on the world’s biggest dream industry – HOLLYWOOD. A book that carries a lot of information about the history of the making of James Bond movies, on Yesteryears dream girls such as Elizabeth Taylor and Marlin Monroe, and movie legends like Alfred Hitchcock, this book is a feast for all Hollywood movie fans and is an amazing gift to movie lovers!

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ஹா! ஹா! ஹாலிவுட் நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

31 திருக்குறளில் இந்துமதம்: அக்டோபர் 2022 ‘நற்சிந்தனை’ காலண்டர் (Post.11,311)

Picture line- London University Tiru Valluvar Statue Installation- Right extreme-London Swaminatha, Left extreme Dr Sighvi, High Commissioner of India in Britain

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,311

Date uploaded in London – 30 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

31 திருக்குறளில் இந்துமதம்: அக்டோபர் 2022 ‘நற்சிந்தனை’ காலண்டர்

திருக்குறளில் உள்ள 31 இந்துமத செய்திகள் – இந்த மாத காலண்டரில் இடம்பெறுகின்றன.

பண்டிகை நாட்கள்: 2- காந்தி ஜயந்தி 3-துர்காஷ்டமி 4- ஸரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை5-விஜயதசமி /தசரா 24- தீபாவளி பண்டிகைலெட்சுமி குபேர பூஜை 25-சூரிய கிரஹணம் 25/26 கந்த சஷ்டி விரதம் ஆரம்பம் 30- கந்த சஷ்டிசூர சம்ஹாரம்

அமாவாசை – 24/25பெளர்ணமி – 9ஏகாதஸி விரத நாட்கள் – 621

சுபமுஹுர்த்த நாட்கள் –  2830

அக்டோபர்  1 சனிக்கிழமை

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்-குறள் 1; அக்ஷரானாம் அகாரோஸ்மி – பகவத் கீதையில் (10-33) கண்ணன் ; ஸம்ஸ்க்ருத சொல்லான அகார — என்பதை வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

xxx

அக்டோபர்  2 ஞாயிற்றுக் கிழமை

இந்திரன் பற்றி

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி. –குறள் எண் – 25

xxx

அக்டோபர்  3 திங்கட் கிழமை

மோக்ஷம் அடைய வழி –

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்–  குறள் எண்:38

xxx

அக்டோபர்  4 செவ்வாய்க் கிழமை

குறள் 580ல் சிவன் மகிழ்ச்சியோடு விஷம் குடித்த கதையைப் பாடுகிறார்- 

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்– குறள் 580

நஞ்சுண்ட கண்டன் = சிவன்.

xxx

அக்டோபர்  5 புதன் கிழமை

தானம்தவம் என்ற பகவத் கீதையின் ஸம்ஸ்ருதச் சொற்களை அப்படியே எடுத்தாண்டு இந்துமதத்தின் உயர்வினைக் காட்டுகிறார் -குறள்கள் 19, 295

xxx

அக்டோபர்  6 வியாழக் கிழமை

முதல் அதிகாரத்தில் இறைவனின் பாத கமலங்களை தாள்அடி என்று 7 குறள்களில் சொல்லி வள்ளுவர்,  தான் ஒரு தூய ஹிந்து என்பதை சத்தியம் செய்கிறார்; மற்ற மதங்களில் இறைவனுக்கு உருவம் இல்லை

xxx

அக்டோபர்  7  வெள்ளிக் கிழமை

நூலின் பெயர் முப்பால் -தர்ம, அர்த்த, காம – ஆறாம், பொருள், இன்பத்துப் பால் ; குறள்கள் 754, 760, 501 ஆகியவற்றில் தர்மஅர்த்தகாம என்பதைத் திரும்ப வலியுறுத் துகிறார்.

xxx

அக்டோபர்  8 சனிக்கிழமை

இந்துக்கள் செய்யும் பஞ்ச யக்ஞம் ; யமனுடைய திக்கு- தெற்கு
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை -குறள் 43

xxx

அக்டோபர்  9 ஞாயிற்றுக் கிழமை

ராமனும் கிருஷ்ணனும் , காஞ்சி பரமாசார்யாளும், ரமணரும் கடவுளே!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்–குறள் 50

xxx

அக்டோபர்  10 திங்கட் கிழமை

இந்து மதக் கருத்து- 7 பிறவிகள்

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்-குறள் 62, also 107

xxxx

அக்டோபர்  11 செவ்வாய்க் கிழமை

இந்திரர் அமிழ்தம் (புறநானூற்றிலும் உள்ளது ; பாடல் 182

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்–குறள் 64 ; ALSO 82, 720, 1106

xxx

அக்டோபர்  12 புதன் கிழமை

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்–குறள் : 70, also 160

இந்துமதம் தவிர வேறு எதிலும் ‘தவம் செய்து பிள்ளை’ பெறும் வழக்கம் இல்லை

xxx

அக்டோபர்  13 வியாழக் கிழமை

லக்ஷ்மி , அவளுடைய அக்காள் மூதேவி பற்றி

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்-குறள் 179, Also 617, 519, 920,936

xxx

அக்டோபர்  14 வெள்ளிக் கிழமை

ஈசாவாஸ்யோபநிஷத் கருத்து

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு– குறள் எண்:180

அசையும் உலகனைத்தும் ஈசனால் நிரம்பியுள்ளது;

அதைத் துறந்து நீ இன்பம் துய்த்திடுக;பிறர் பொருளை விரும்பற்க.  

ஈஷாவாஸ்யமிதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் .

தேந த்யக்தேந புஞ்ஜீதா மா கரிதஃ கஸ்ய ஸ்வித்தநம் ৷৷ 1.1.1 ৷৷

xxx

அக்டோபர்  15 சனிக்கிழமை

தீதும் நன்றும் பிறர்தர வாரா- புறநானூறு 192; கர்மா வினை கருத்து

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடி உரைந்தற்று (குறள் 208)

ஒருவன் தீங்கு செய்தால் அவன் அதனால் கெட்டுப்போவது நிச்சயம். எப்படி ஒருவனுடைய நிழல் அவன் கூடவே வந்து அவனடியில் தங்குமோ, அது போலத் தீமையும் அவனை நிழல்போலத் தொடரும்.

xxx

அக்டோபர்  16 ஞாயிற்றுக் கிழமை

பகவத் கீதை 2-47

கருமம் செய்வதற்கே உனக்கு அதிகாரம். அதன் பற்றில் அல்ல(2-47)

கர்மண்யேவ அதிகாரஸ்தே மா பலேஷு கதாசன (2-47)

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றுங் கொல்லோ உலகு–குறள் 211

xxx

அக்டோபர்  17 திங்கட் கிழமை

உத்திஷ்ட! யசோ லப !! எழுந்திரு, புகழ்  அடை (பகவத் கீதா 11-33)

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று-  குறள்:236

xxx

அக்டோபர்  18 செவ்வாய்க் கிழமை

வாமன/ த்ரிவிக்ரம அவதாரம்

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு–குறள் 610

XXX

அக்டோபர்  19 புதன் கிழமை

உலகைப் படைத்த பிரம்மா பற்றி

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்–குறள் 1062

XXX

அக்டோபர்  20 வியாழக் கிழமை

யமன் பற்றி – மார்க்கண்டேயர் கதை

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு- குறள் 269 ALSO 326, 765, 1083, 1085

XXX

அக்டோபர்  21 வெள்ளிக் கிழமை

தேவலோகம், இந்திரலோகம் பற்றி

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு.–குறள் 58 ALSO  213, 222, 234, 290

XXX

அக்டோபர்  22 சனிக்கிழமை

அரவிந்தாக்ஷன், கமலநயனன் , தாமரைக்கண்ணன் – விஷ்ணு பற்றி

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு—குறள் 1103

தாமரைக் கண்ணான் உலகு= வைகுந்தம்

XXX

அக்டோபர்  23 ஞாயிற்றுக் கிழமை

பன்மாயக் கள்வன் – மாய கிருஷ்ணன் ; கோபி கிருஷ்ணா

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்

பெண்மை உடைக்கும் படை–குறள் 1258

XXX

அக்டோபர்  24 திங்கட் கிழமை

அகஸ்தியர்- நகுஷன் கதை, பரசுராமன், சாணக்கியன் கதைகள்

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்–குறள் 899

XXX

அக்டோபர்  25 செவ்வாய்க் கிழமை

யமனைக் கைதட்டி அழைத்தல் -தக்ஷன் கதை

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல்–குறள் 894

XXX

அக்டோபர்  26 புதன் கிழமை

பிராமணர் வேதம், கோ மாதா பற்றி

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்- குறள் 560 ALSO 134,543, 8, 30

XXX

அக்டோபர்  27 வியாழக் கிழமை

குருகுலத்தில் முதல் பாடம் – தர்மம் சர ; அது மட்டுமே செத்த பிறகும் கூட வரும் . மஹாபாரதக் கதை – தருமனுடன் கடைசி வரை வந்த நாய்.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை–குறள் 36

அக்டோபர்  28  வெள்ளிக் கிழமை

நல்லோரை வாழ்த்திட தீயோரை வீழ்த்திட; பரித்ராணாய ஸாதூனாம் –கீதை 4-8

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்–குறள் 550

XXX

அக்டோபர்  29 சனிக்கிழமை

ஆசாரம் பற்றி

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது–குறள் 1075

XXX

அக்டோபர்  30 ஞாயிற்றுக் கிழமை

அஸ்வத்தாமா தீ வைத்த மஹாபாரத/ பஞ்ச தந்திரக்  கதை

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது–குறள் 481

Other Pancha tantra stories in Tirukkural  – 273, 274, 277, 481, 500, 495, 633, 1087,

XXX

அக்டோபர்  31 திங்கட் கிழமை

ஆண்டவன், கடவுள், இறைவன் என்ற தமிழ்ச் சொற்கள் இருந்தும் தெய்வம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையே வள்ளுவர் போற்றினார்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை– குறள் 55

‘கணவனே கண்கண்ட தெய்வம்’; ‘பத்தினிப் பெண்கள் அற்புதம் செய்ய முடியும்’ என்பது இந்து மதத்தில் மட்டுமே உண்டு

தெய்வம் Deiva / divine – 43, 50, 55, 619, 702, 1023

–SUBHAM–

tags-  திருக்குறளில், இந்துமதம், அக்டோபர் 2022 ,காலண்டர், குறள்

மத்தவிலாச பிரஹசனம் (Post No.11,310)

WRITTEN BY B. Kannan, Delhi

Post No. 11,310

Date uploaded in London – –    30 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிறமொழி நையாண்டிக் காவியம்                                        

                      மத்தவிலாச பிரஹசனம்

                      Written By B.Kannan, New Delhi

மத்தவிலாசம் என்கிற மத்தவிலாச பிரஹசனம்‎ கி.பி 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர் முதலாம் மகேந்திரவர்மரால் இயற்றப்பட்ட ஒரு சம்ஸ்கிருத அங்கத நாடகம். இதைத் தவிர பகவதஜ்ஜூகம் என்ற நாடகத்தையும் மகேந்திரவர்ம பல்லவன் இயற் றியுள்ளார்.

ஒரு பகுதி நாடகமான மத்தவிலாசம் சைவப் பிரிவுகளான கபாலிகம், பாசுபதம் ஆகியவற்றின் பழக்க வழக்கங்களையும் புத்த துறவிகளையும் பகடி செய்கிறது. பல்லவப் பேரரசின் தலைநகரான காஞ்சிபுரத்தில் மது போதையில் நிதானமிழந்தி ருக்கும் கபாலிகன் சத்யசோமன் அவனது மனைவி தேவசோமா ஆகியோரின் செய் கைகளை விவரிக்கிறது. புத்த துறவி நாகசேனன், பாசுபத பிரிவைச் சேர்ந்த பாசுப தன் ஆகியோர் இந்நாடகத்தின் பிற முக்கிய கதை மாந்தர். சைவ, புத்த மதங்களை நையாண்டி செய்வதோடு, 7-ஆம் நூற்றாண்டு காஞ்சிபுரத்தின் தோற்றத்தைப் பற்றி யும் இந்நாடகம் விரிவாகப் பேசுகிறது.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் இயற்றப்பட்ட மத்தவிலாசம், பகவதஜ்ஜுகம் என்ற இரண்டு அங்கத நாடகங்களும் இந்திய இலக்கிய வரலாற்றில் ஓர் உன்னத மான காலகட்டத்தின் சான்றுகளாகும். இந்திய அங்கத இலக்கியத்திற்கு மிகப் பழ மையான எடுத்துக்காட்டுகளாகும் இவை. இவையிரண்டும் மகேந்திரன் காலத்தி லேயே முன்னோடிகளாக எண்ணப்பட்டன. இந்த நாடகங்களின் முன்னுரைகளே இந்த உண்மையினை எடுத்துக்காட்டுகின்றன. பகவதஜ்ஜுகத்தின் முன்னுரையில் அரங்கப் பொறுப்பாளி சூத்திரதாரி தனது நண்பனிடம் நகைச்சுவை சிறந்து தோன்று கிற அங்கத நாடகம் போடவேண்டும் என்று கேட்டுக்கொள்ள, நண்பன் விதூஷகன் அந்தவிதமான நாடகத்தைப் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்கிறான்.

மத்தவிலா¡ச அங்கதத்தில் போதைக் களிப்பு நிறைந்த அங்கத நாடகம் போடப்போவ தாக சூத்திரதாரி சொல்லும்போது, அவனது மனைவி நடீ, அந்தவிதமான நாடகம் புது முயற்சி என்கிறாள். குடவரைக் கோயிலமைப்பு மற்றும் இசை இவைகளுக்கு மட்டுமின்றி நாடகக் கலைக்கும் மகேந்திரன் முன்னோடி என்பதை இக்குறிப்புகள் வெளிப் படுத்துகின்றன. இசை நயம் இந்த நாடகங்களின் மற்றுமொரு சிறப்பு அம்ச மாகும். எடுத்துக்காட்டாக, மத்தவிலாச நாடகத்தின் வசனத்துள் இருபத்துமூன்று பாடல்கள் இணைந்துள்ளன. இந்த இசைநய அங்கதங்கள் ஷேக்ஸ்பியர் காலத்திற் கும் ஆயிரம் ஆண்டுகள் முந்தியவையாகும்.

பல்லவ அரசின் தலைநகரான காஞ்சிபுரம் மத்தவிலாச நாடகத்தின் பின்னணியாக அமைந்துள்ளது. சத்தியசோமன் என்னும் கபாலிகன், அவனுடைய துணைவி தேவ சோமா இவர்களின் குடிக்களியாட்டத்தை மையமாகக் கொண்டு நாடகம் இயங்குகி றது. கபாலிகர் என்பவர்கள் புரட்சிக்கார சைவர்கள். மதுவுண்ணல், மயங்கியாடல், கூடவே துணைவியரோடு யோகபோகம் செய்தல் முதலியவை இவர்களுடைய வேள்விகள் ஆகும். மயானக் காடுதான் கபாலிகர்களின் உறைவிடம். பாத்திரம் போன்ற கபால வோட்டின் மேல் பாகத்தைத் தானவோடாகப் பயன்படுத்துவர். இதன் காரணமாகத்தான் இவர்கள் கபாலிகர் எனப்பட்டார்கள். பிரமனின் சிரம் அறுத்து வேள்வி செய்த சிவ பெருமான் பற்றிய புராண நிகழ்ச்சியைக் குறிப்பாக உணர்த்து வது இது.

சத்தியசோமனாகிய கபாலியின் தானக் கபாலம் காணாமல் போகிறது. அதைத்தேடிக் கண்டெடுத்துக் கொள்வதே நாடகத்தின் கருப்பொருள். குடித்துவிட்டு அரங்கில் நுழை கிறார்கள் கபாலியும் தேவசோமாவும். மதுவுண்ணும் பெருஞ் சபதத்தில் நிலைத்து நிற்பதால் அவளிடம் தோன்றியப் பெரிய மாற்றத்தை கபாலி பாராட்டுகிறான்.

முத்தென வியர்வை சொரிந்திடும் எழில் முகம்
முழுவதும் அழகுற நெளிந்திடும் புருவம்
மத்த நடை ஒரு பொருளற்ற முறுவல்
முறையறு அசையொடு முழங்கிய வாய்மொழி
மருங்கினில் தொங்கியே சுழல் இருவிழிகள்
மேல் இளஞ்சாயச் செந்நிறத் தேமல்
நறுமலர் மாலை ஊடறுந் தளர்ந்திட
தடந்தோள் விளிம்பினில் விழுந்திடும் குழைகள். என அவளிடம் குழைகிறான்

பேச்சின் போக்கிலேயே கபாலி போதை மயக்கத்தில் அவளது பெயரை சோமதேவா என மாற்றிச் சொல்லிவிடுகிறான். அவன் வேறு பெண்ணிடம் சகவாசம் வைத்தி ருக்கிறான் என்று பொறாமை கொள்கிறாள் தேவசோமா. அதைப் போதை மயக்கத் தால் வந்த நா பிசகு எனக் கூறி மன்னிப்பும் கேட்கிறான் சத்தியசோமன். இனி குடிப் பதில்லை என்று சபதமும் செய்கிறான். தனது காரணமாக சபதத்தை முறித்து அழிந்து போக வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறாள் தேவசோமா!

இருவரும் வேறு மதுக்கடைக்குப் போகிறார்கள். (அன்றைய ‘டாஸ்மாக் கடை, அமர்ந்து குடிக்குமிடம் ஆகியவற்றைக் கபாலிகன் வர்ணிப்பதைப் பாருங்கள்)

அன்பே, பார்! பார்! இந்த மதுக்கடை வேள்விக் கூடத்தை ஒத்து விளங்குகிறது. இங்கிருக்கும் அடையாளக் கொடிக் கம்பத்தைப் பார். அதுதான் வேள்விக் குண்டத் துக் கம்பம். மதுதான் சோமரசம். ஜாடிகள் புண்ணியப் பாத்திரங்கள். பொரித்த கறி யும் மற்ற பொருட்களும் சுவைக்கும் நைவேத்தியங்கள். போதைப் பிதற்றல்கள் யஜூர்வேத மந்திரங்கள். பாடல்கள் சாமவேத கீதங்கள். தோல் பைதான் வேள்வி அகப்பை. தவிப்பே தீ. கடைக்காரர்கள் வேள்வி நேர்ந்தவர்கள்… ஆகவே தாராளமாகக்

குடிப்போம். ‘

மதுவைக்குடி காதல் முகத்தை ரசி
தன்னுணர்வின்றியே திகிலுடை தரி
முத்திப் பாதையை இப்படி விதித்த
சூலப் படைச்சிவன் அ(ரு)ளுக என்றும் (நம்மை) எனப் பாடியவாறே கடைக்குள் போகிறார்கள்.

அங்கே தானமாக மதுவைப் பெறப் போகும் போது தனது தானவோடு காணாமல் போனதை அறிகிறான் சத்தியசோமன். நிலைமையைக் கருதி தேவசோமா மாட்டுக் கொம்பில் மதுவை வாங்குகிறாள். சத்தியசோமா கபாலவோட்டுக்காக ஏங்கித் தவிக் கிறான். பழைய இடத்துக்கே வந்து தேடுகிறார்கள். அங்கும் கபாலவோட்டைக் காண வில்லை. தானக் கபாலத்தில் சிறிது பொரித்த மாமிசக் கறி இருந்ததால் அதை ஒரு நாய் அல்லது புத்த துறவிதான் எடுத்திருக்க வேண்டும் என்று சத்தியசோமன் நிர்ண யம் செய்கிறான். அப்போது அங்கு ஒரு புத்த துறவி வருகிறார். கபாலிகர் ஜோடி, தான வோட்டைத் திருடிக்கொண்டது அவர்தான் என்று முடிவு கட்டுகிறது. சண்டை மூளுகிறது. இப்பொழுது சத்தியசோமனுக்கு அறிமுகமான பாசுபதன் என்று பெயர் கொண்ட துறவி வந்து மத்தியஸ்தம் செய்கிறான். முடிவற்ற தர்க்கத்தின் இறுதியில் புத்த துறவி சோர்வடைந்து தனது கபால வோட்டை ஒப்படைக்கவே தயாராகிறான். உண்மையான கபாலவோட்டை அதிலிருந்த மாமிசத்துக்காக ஒரு நாய் எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறது. ஒரு பைத்தியக்காரன் அதைத் துரத்திச் சென்று திருவோ டைப் பறிக்கிறான் இதோ அவன் தனக்குத் தானே பேசிக் கொள்வதைக் கேளுங்கள்.

அதோ, அதோ இருக்கிறது அந்தப் பொல்லாத நாய். பொரித்த கறியுடைய கபால வோட்டை எடுத்துக்கொண்டு ஓடுகிறாய். அயோக்கியனே, எங்கே போவாய்? இப் பொழுது மண்டையோட்டைக் கீழே போட்டுவிட்டு என்னை நோக்கி ஓடி வருகிறது. (சுற்றிப் பார்த்து) நான் அதனுடைய பற்களை இந்தக் கல்லால் பொடியாக்கி விடு வேன். கேடு கெட்ட பைத்தியக்கார நாயே, ஏன் கபாலவோட்டைப் போட்டு விட்டு ஓடுகிறாய்? இந்த வீரத்தனத்தில் என்னிடத்தில் ஏன் கோபப்படுகிறாய்? நாட்டுப்புறப் பன்றியின் முதுகின்மீது ஏறி உயரே ஆகாயத்தில் குதித்தேன். சமுத்திரத்தை ஆயுத மாக்கி ஐராவத யானையை வீழ்த்தினேன். இந்திரனின் பிள்ளை மிருக ஜந்து அந்தத் திமிங்கிலத்தையும் பிடித்தேன். ஓய் ஆமணக்கு மரமே, நீ என்ன சொல்லுகிறாய்? அது பொய், பொய் என்றா சொல்லுகிறாய்? இதனால் கொழுத்த குளவி போன்ற கையுடைய இந்தச் சொறித் தவளை இருக்கிறானே அவன் தான் நமக்குச் சாட்சி. ஏன்? மூன்று உலகத்திற்கும் வீரத்திற்குப் பெயர் பெற்ற ஒருவனுக்குச் சாட்சிக்கு என்ன தேவை இருக்கிறது? நான் இப்படிச் செய்கிறேன். நாய் விட்டுப் போன கறித் துண்டை உண்ணுகிறேன். (சாப்பிட,காரக் கறியினால் பைத்தியம் தலைக்கேறுகிறது)…. பலத்த வாக்குவாதத்துக்குப் பின்னர், பாசுபதனின் உதவியுடன் கபாலவோடு உரியவ னானக் கபாலிகனிடம் ஒப்படைக்கப்படுகிறது.

கபாலவோட்டை அரவணைத்துக்கொண்டு, மதுவருந்தியத் தள்ளலுடன் துள்ளிக் குதித்துப் பாடிக் கொண்டுச் செல்கிறான் கபாலிகன் தன் துணையோடு

காலம் பலவும் பல கலையாத் தவமியற்றி
மகேசுரனுக்கு என்னை நான் கொடுத்திருந்தேன்
புனித கபாலமுனைக் கண்ட இக்கணமே,
இமைத்தக் களிப்பினிலே எந்தனுள்ளம் விட்டு
அமலன் அவனுமுடன் ஏகிவிட்டனே! 
இவ்வாறு முடிவில் மகிழ்ச்சியுடன் எல்லோரும் நண்பர்களாகப் பிரிந்து செல்கி றார்கள்.
இந்தக் கபாலி மற்றும் பாசுபதப் பிரிவினர் மகேந்திரன் காலத்தில் சீர்குலைந்த நிலையில் இருந்திருக்கவேண்டும். இதனை நாடகத்தில் மன்னர் எள்ளி நகையாடு கிறார். இவர்கள் இந்த நிலையில் இருந்தாலும் இந்தியாவில் கபாலிகர் பின்பற்றும் தாந்திரீகத் தத்துவம் ஒரு முக்கியத் தத்துவமாக இருந்தது. புராதன சைவர்கள் ஏற் றுக்கொள்ளாத ஐந்து செய்திகள் தாந்திரீகத்தின்படி முக்தி வழிகளாகும். அவை பஞ்ச மகரங்கள் எனப்படும். 1. மத்தியம் (மது), 2. மாமிசம் (புலால்), 3. மத்சியம் (மீன்), 4. மதுரம், 5. மைதுனம் (யோகபோகம்) என்பன அவை. நாடகத்தில் ஆசிரியர் இவற்றை யெல்லாம் குறிப்பாக எடுத்தாளுகிறார்.



மத்தவிலாசம் ஏழாம் நூற்றாண்டின் காஞ்சிபுரத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஏகாம்பரநாதர் கோயில் நேரடியாகவே குறிக்கப்படுகிறது. கோவிலின் மத்தள ஓசை, பூக்கடைகள், எழிலுடைய இளமங்கையர் – இவை போன்ற குறிப்புகளும் காணப்படு கின்றன. ஆண்டவனே, காஞ்சி இந்த தெய்வீக மதுவைப் போலவே அப்பழுக்கற்றுச் சுவைக்கிறது, என்கிறாள் தேவசோமா மகேந்திரவர்மனின் பல பட்டப்பெயர்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன. சூத்திரதாரி என்பவனால் நாடகம் தொடங்கி வைக்கப்படு கிறது. முன்னுரைக்குப்பின் நாடகம் இயல்பாக இணைக்கப்படுகிறது. சூத்திரதாரி ஆசிரியருடைய புகழைப் பாடியே பழகிவிட்டது என்று சொல்லுகிற உரையாடலின் தொடர்ச்சியாக, நாடகப் பாத்திரமான கபாலிகன் சொல்லுகிற மதுவருந்தியே பழகி விட்டது என்ற உரையாடல் அமைகிறது. சமணர்கள் நாத்திகர்கள்,அவர்களைப் பற் றிச் சொன்ன வாயை மதுவைக் கொண்டு கொப்புளிக்க வேண்டும் என்று வேறொரு இடத்தில் கூறுகிறான் கபாலிகன்!

மகேந்திரவர்மனின் மற்றொரு நாடகமான பகவதஜ்ஜுகத்திலும் இது போன்ற உத்தி பயன்படுத்தப்படுகிறது. ஆனந்தமுடன் ரசித்துப் படிக்கலாம்.

 

நகைச்சுவை மன்னன் மஹேந்திர பல்லவன் (Post …

https://tamilandvedas.com › நகை…

Written by London Swaminathan. Date: 26 NOVEMBER 2017. Time uploaded in London- 9-09 am. Post No4434. Pictures shown here are taken from various sources …

கடவுளைக் காட்டு என்போருக்கு பதில் கேள்வி (Post No.11,309)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,309

Date uploaded in London – –    30 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கடவுளைக் காட்டு என்போருக்கு பதில் கேள்வி: கடவுள் இல்லை என்பதை நிரூபி!

ச.நாகராஜன்

கடவுளைக் காட்டு என்போருக்கு ஆன்மீக அருளாளர்களும், அறிஞர்களும், அறிவியல் மேதைகளும் பலவாறாக பதில் கூறி விட்டார்கள்; இன்னும் அவர்களுக்குப் புரியும் வண்ணம் பதில் சொல்லி வருகின்றனர்.

ஆனால் நீ சொல்லப் போவது எதுவும் எனக்குப் புரியப் போவதில்லை என்ற நிலையை முதலிலேயே எடுத்துக் கொண்டவர்களிடம் எதைச் சொல்வது? அவர்களுக்குத் தான் எது சொன்னாலும் புரியப் போவதில்லையே.

என்றாலும் கூட இறை நம்பிக்கை பற்றித் தங்களை மேம்படுத்திக் கொள்ள விழைவோருக்கு கடவுளைப் பற்றி விளக்க வேண்டியது சமூகம் சார்ந்த ஒரு கடமையாக ஆகிறது.

விஞ்ஞான பூர்வமாக விளக்கம் கேட்போருக்கு அறிவியலை வைத்தே ஆதாரம் காட்ட வேண்டி இருக்கிறது.

கணிதத்தை எடுத்துக் கொண்டால் உலகில் நாம் காணும் எதிலும் ஒரு கணித அமைப்பு இருக்கிறது.

ஒன்றை 137 என்ற எண்ணால் வகுத்தால் வரும் விடை பிரமிக்க வைக்கும் ஒன்று. அது பூஜ்யம். வகுத்து வரும் மீதமோ 1.

1 divided by 137 = 0. The remainder is 1.

1/137 is 0.007299270072992700729927007299270072992700729927007299270072992701 (in the set of reals).

இது ஏன் இப்படி வருகிறது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை.

137 என்ற எண்ணின் மகத்துவத்தை அறிவியல் அறிஞர்களே அதிசயத்துடன் பார்க்கின்றனர்.

கடவுள் இல்லை என்று சொல்வோருக்கு பதில் கேள்வியாக இப்போது பலரும் கேட்பது : “ நாங்கள் சொல்வதைச் சொல்லி விட்டோம்; இப்போது உங்களைக் கேட்கிறோம். கடவுள் இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபியுங்கள்” என்பது தான்.

இதற்கு பதிலைச் சொல்ல யாராலும் முடியவில்லை.

கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்றால் அவரைப் படைத்தவர் யார் என்பது நாத்திகவாதிகளின் கேள்வி.

மண்ணால் ஆன குடம் என்று ஒன்றைப் பார்த்தால் அதை உருவாக்கியவன் என்று ஒருவன் இருக்கத் தானே வேண்டும்.

இல்லை, தானாக அனைத்தும் உருவாகியது என்பது புது நாத்திகவாதிகளின் வாதம்!

பிரபஞ்சம் பெரு வெடிப்பு என்ற நிகழ்வால் ஏற்பட்டது. சரி, ஒப்புக் கொள்கிறோம். அதற்கு முன்னால் என்ன இருந்தது? அந்தப் பெருவெடிப்பு ஏன் ஏற்பட்டது? யாரால் ஏற்பட்டது.

பதிலைக் காணோம்.

மனம் என்றால் என்ன, மனச்சாட்சி எங்கு எப்படி உருவாகிறது?

பதிலைக் காணோம்.

உயிர் எப்படி எப்போது எதற்காக ஒரு உடலில் சேர்கிறது, அது எப்படி எப்போது எதற்காக நீங்குகிறது. உயிரைக் கொஞ்சம் காட்டுங்கள்.

பதிலைக் காணோம்.

இயற்பியல் என்று எடுத்துக் கொண்டால் க்வாண்டம் மெகானிக்ஸ் என்ற புதிய கிளை வந்த பின்னர் ஹிந்து மதம் கூறும் கொள்கை அதனுடன் ஒத்திருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து பிரமிக்கின்றனர்.

ஒரு துகளானது ஒரே சமயத்தில் ஒரு இடத்திலும் பல இடத்திலும் இருக்க முடியும் என்பதை தர்க்கவாதத்தால் அனுமதிக்க முடியவில்லை என்றாலும் க்வாண்டம் பிஸிக்ஸ் அதை வற்புறுத்துகிறது.

அறிவியல் சொல்வதால் அதை ஒப்புக் கொள்கிறோம்.

இதையே தான் இறைவன் எங்கும் பரவியுள்ளான் என்பதை ஆன்மீகம் வற்புறுத்துகிறது.

தி காட் டெலூஷன் (The God Delusion) என்ற தனது புத்தகத்தில் புதிய நாத்திகத்தைத் தீவிரமாகப் பரப்பி வரும் ரிச்சர்ட் டாகின்ஸ் (Richard Dawkins) கடவுள் நம்பிக்கைக்கான ஒரு அளவு கோலைத் தருகிறார்.

அந்த அளவுகோலில் 7 நிலைகள் உள்ளது!

யாராலும் மாற்றவே முடியாத தீவிர ஆன்மீகவாதி

100 விழுக்காடிற்கு நெருங்கி வரும் இறை பக்தர்

50 விழுக்காடிற்கு மேல் உள்ளவர். எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால் கடவுளை நம்புகிறேன் என்பவர்.

எந்த ஒரு நிலையையும் எடுக்காத நடுநிலையாளர். எனக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாது. நான் சந்தேகப்படுபவன் தான் என்று கூறுபவர்.

நாத்திகவாதியாக ஆகி வருபவர். 50 விழுக்காடிற்கும் கீழாக இருப்பவர். கடவுள் இருக்கிறாரா என்பது தெரியாது. ஆனால் நாத்திகவாதி தான் நான்!

எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால் கடவுள் என்பவர் இருக்கவே முடியாது எனது வாழ்க்கையை அவர் இல்லை என்பதை வைத்துத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நிச்சயமாக கடவுள் இல்லை; இல்லவே இல்லை!

(Richard Dawkins Seven-Point Scale:

  • Strong Theist: 100 per cent probability of God. In the words of C.G. Jung: “I do not believe, I know.”
  • De facto Theist: Very high probability but short of 100 per cent. “I don’t know for certain, but I strongly believe in God and live my life on the assumption that he is there.”
  • Leaning towards Theism: Higher than 50 per cent but not very high. “I am very uncertain, but I am inclined to believe in God.”
  • Completely Impartial: Exactly 50 per cent. “God’s existence and non-existence are exactly equiprobable.”
  • Leaning towards Atheism: Lower than 50 per cent but not very low. “I do not know whether God exists but I’m inclined to be skeptical.”
  • De facto Atheist: Very low probability, but short of zero. “I don’t know for certain but I think God is very improbable, and I live my life on the assumption that he is not there.”
  • Strong Atheist: “I know there is no God, with the same conviction as Jung knows there is one.”)

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் ரிச்சர்ட் டாகின்ஸே தன்னை ஆறாவது நிலையில் இருப்பதாகச் சொல்லிக் கொள்வது தான்.

ஒரு வேளை கடவுள் அவர் முன் வந்து நேரில் தோன்றி. “நான் இல்லை; நிச்சயமாக இல்லை” என்று உறுதி மொழி அளித்தவுடன் அவர் ஏழாவது நிலையான தீவிர நாத்திகர் என்ற நிலைக்குத் தாவி கடவுள் இல்லவே இல்லை; அவரே என்னிடம் சொன்னார் என்று சொல்லி விடுவாரோ என்னவோ!

கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ்,(Christopher Hitchens)  சாம் ஹாரிஸ் (Sam Harris) உள்ளிட்டவர்கள் தங்களின் தீவிர நாத்திக வாதங்களை முன் வைக்கின்றனர்.

 அதே சமயம் பிரபல விஞ்ஞானியான ஃபிரான்ஸிஸ் எஸ். காலின்ஸ் (Francis S. Collins) எழுதியுள்ள ‘தி லாங்வேஜ் ஆஃப் காட்” (The Language of God) பிரபல ஆன்மீகவாதியான டீன் எல்.ஓவர்மேன் (Dean L. Overman) எழுதியுள்ள ‘எ கேஸ் ஃபார் தி எக்ஸிஸ்டென்ஸ் ஆஃப் காட் (A Case For The Existence of God), பிரபல அறிவியல் எழுத்தாளரான அமிர் டி. அக்ஸெல் (Amir D.Aczel) எழுதியுள்ள ‘ஒய் ஸயின்ஸ் டஸ் நாட் டிஸ்ப்ரூவ் காட்’ (Why Science Does not Disprove God) உள்ளிட்ட நூல்கள் பல அருமையான எடுத்துக்காட்டுகளுடன் நீக்கமற நிறைந்து இருக்கும் இறைவனைப் பற்றிக் கூறுவதைப் படித்து மகிழலாம்.

இதே போல அறிவியல் உலகில் மேதைகளால் எழுதப்படும் நூற்றுக்கணக்கான நூல்கள் உள்ளன.

இவற்றைப் படிப்பதோடு, படிக்கும் நல்ல கருத்துக்களை இறைவனைப் பற்றி அறியத் துடிக்கும் இளைய வயதினருக்கும் சொல்லலாம்.

அருணகிரிநாதர் சொல்வதை மறக்கமுடியுமா என்ன?

“அறிவால் அறிந்து உன் இரு தாள் இறைஞ்சும்               

     அடியார் இடைஞ்சல் களைவோனே”

–    அருணகிரிநாதர் (விறல் மாரனைந்து எனத் தொடங்கும் திருப்புகழ்)

—  subham—

Tags- கடவுளைக் காட்டு,  பதில் கேள்வி,: கடவுள்

புத்தக அறிமுகம் – 72

நாக நங்கை!

நாவலில் உள்ள அத்தியாயங்கள்

1. மூலிகை எங்கே?

2. நாட்டு மிருகங்களும் காட்டு மிருகங்களும்

3. நாக நங்கை

4. அமாவின் சபதம்

5. சிற்றருவியில்!

6. ஜைன சித்தர் 

7. ஈட்டி பாய்ந்தது!

8. கடமையும் காதலும்

9. ராட்சஸ ஆசை!

10. நகர் பவனி

11. குரு தக்ஷிணை!

12 வாளின் மீது ஆணை

13. காதல் உஷ்ணம்!

14. மங்கையின் ரகசியம்!

15. உஜ்ஜயினிக்கு ஆபத்தா!

16. சத்திரத்துச் செய்தி

17. போர்த் திட்டம்!

18. தந்தையும் மகனும்!

19. கொலைகாரனின் ஈட்டி

20. நங்கைக்கும் நாகமணிக்கும் ஆபத்து!

21. மன்னர் எங்கே!

22. கௌடவஹோ

23. நாகாவலோகா

24. முடிவுரை

இந்த நாவலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

அயோத்தியில் ஒரே நாளில் ராமருக்குக் கோவில் கட்டிய மன்னன் யசோவர்மன் காலத்தைக் களமாகக் கொண்டு புனையப்பட்ட வரலாற்றுப் புதினம். யசோவர்மன் புதல்வனான சோம்பேறி இளவரசன் அமா ஒரு நாகத்தின் உதவியால் எப்படிப் பெரும் வீரனானான் என்பதைச் சித்தரிக்கும் இந்தப் புதினம், உண்மையான வரலாற்று நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டுள்ளது. கதையின் இயல்பான போக்கு ஒரு மகோன்னதமான காலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கதை நிகழும் களங்களான கன்யாகுப்ஜம், உஜ்ஜயினி, மோதரகபுரம் ஆகியவை மத்திய பாரதத்துக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. இளவரசன் வாழ்வில் குறுக்கிட்ட நாகநங்கை முதலான கற்பனைக் கதாபாத்திரங்களுடன், யசோவர்மன், சுயஜாதேவி, பவபூதி, வாக்பதி, முகம்மது இபின் காசிம் ஆகிய உண்மையான வரலாற்று மாந்தர்களையும் இந்தக் கதை நம் கண் முன்னே கொண்டு வருகிறது! பக்கத்துக்குப் பக்கம் ஆவலைத் தூண்டும் காவியம்!

*

இந்தச் சரித்திர நாவலின் முன்னுரையில் பாரத தேசத்தின் வரலாற்றில் மாமன்னர்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் பிரமிப்பூட்டுகின்றன என்றும் அவற்றில் தன்னைக் கவர்ந்த ஒன்றை வாசகர்களுக்கு அளிப்பதாகவும் நாவல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். நாக நங்கை என்ற சரித்திர நாவலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

**

Sadhu Vaswani Quotations – OCTOBER 2022 CALENDAR (Post No.11,308)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,308

Date uploaded in London – 29 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

In September 2022 ‘Good Thoughts’ calendar I gave 30 quotations of Sri Vaswani; More Quotations from Sadhu Vaswani are given below.

Festival Days- October 2- Gandhi Jayanthi, 3-Durgashtami, 4- Sarasvati Puja/ Aayudha Puja, 5-Vijaya Dasami, Dasarah, 24- Deepavali/ Diwali, Laksmi Kubera Puja, 25- Solar Eclipse/ Surya Grahana, 25/26 Skanda Shashti Vrata begins, 30- Soora Samharam/ Skanda Shasti

Newmoon day/ Amavasyai- 24/25;Fullmoon day- 9

Ekadasi Fasting Days- 6, 21

Auspicious days- 28, 30

OCTOBER 1 Saturday

“The universe works like an echo: Whatever thoughts you think, will rebound on you. Therefore, be careful of the thoughts you think.”

OCTOBER 2 Sunday

“The secret of relaxation is in these three words: ‘Let it go”!”

OCTOBER 3 Monday

Time belongs to God.
He has loaned it to us for use.
Let us use every minute, – every moment, – in the best way we can.

OCTOBER 4 Tuesday

If there is a language which the deaf can hear and the blind can see, it is the language of love!

OCTOBER 5 Wednesday

“Love can keep you healthy and happy, and help you face the problems of daily life in the right spirit.”

OCTOBER 6 Thursday

“With a healthy sense of humour you can confront the most difficult of situations and come out unscathed.”

OCTOBER 7 Friday

Peace has three dimensions. Peace within ourselves, peace among nations and peace with nature.

OCTOBER 8 Saturday

Refuse to be disturbed by anything. Refuse to be resentful or unhappy. And you will always feel on top of the world.

OCTOBER 9 Sunday

Problems and challenges are not a dead end; they are only a bend in the road.

OCTOBER 10 Monday

Problems are not stumbling blocks; they are stepping stones to a better, richer, more radiant life.

OCTOBER 11 Tuesday

Life is too short to be spent in fault-finding, holding grudges, or keeping memory of wrongs done to us. Forgive even before forgiveness is asked. Forgive and forget.

OCTOBER 12 Wednesday

Time belongs to God.
He has loaned it to us for use.
Let us use every minute, – every moment, – in the best way we can.

OCTOBER 13 Thursday

The test of character is –

  • Do you have the courage to stand up for truth even though the heavens fall?
  • Can you smile in trouble?
  • Can you say “No” when evil tempts?

OCTOBER 14 Friday

It is not outer conditions that need to be changed. The change has to be brought within me to be able to see things as they are.

OCTOBER 15 Saturday

Be not afraid of life, but believe that every experience life brings to you is for your good. Move on in faith. Believe and achieve.

OCTOBER 16 Sunday

You may write wonderful commentaries on the Bhagavad Gita or any other world scriptures, but if you do not reflect the wisdom of these scriptures in word and action, how are you any better than a desktop printer?

OCTOBER 17 Monday

The stars can only indicate. They cannot compel. Man is the maker of his own destiny.

OCTOBER 18 Tuesday

We must build bridges between hearts, for building bridges of brotherhood is the price of a man’s survival.

OCTOBER 19 Wednesday

Selfless service equals meditation.

OCTOBER 20 Thursday

“We would miss some of the best lessons of life, if suffering did not come to us. Suffering is a great teacher.”

OCTOBER 21 Friday

Both rain and sunshine are needed to make a rainbow. Both joy and sorrow are needed to make a life truly beautiful and colorful.

OCTOBER 22 Saturday

The food of the soul is silence. If we don’t practice silence, we are starving ourselves.

OCTOBER 23 Sunday

Teach me O Lord! To observe all the rules of the game of life, never to lose my sense of humor, and always to hold my tongue when it is so difficult to hold it!

OCTOBER 24 Monday

Always look at the bright side of things and you will be happy and will make others happy.

OCTOBER 25 Tuesday

It is good to know many things, but it is always better to make good use of whatever little we know.

OCTOBER 26 Wednesday

What we give to this world comes back to us. Therefore, let us give love, kindness, help, sympathy and service and they will return to us, and we will stand strong as a towering lighthouse amidst the stormy waves of this world.

OCTOBER 27 Thursday

Every time you are irritated, you are burning up valuable emotional energy, which can be used constructively.

OCTOBER 28 Friday

Patience brings rhythm and harmony into our chaotic lives.

OCTOBER 29 Saturday

With faith we can achieve the impossible. Without faith we cannot cross the threshold.

OCTOBER 30 Sunday

The present system trains only the head. It produces sharp brains, not illuminated hearts. Education can only be complete when it trains the head, the hands (to serve) and the heart. It is the emotional quotient that leads to the sacrifice quotient, which in turn binds humanity.

OCTOBER 31 Monday

“The Guru is one who dwells in the Light and the Light dwells in him.”

–subham—

Tags–Sadhu Vaswani , Quotations , OCTOBER 2022 , CALENDAR,  Diwali

சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள்- Part 3 (Post No.11,307)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,307

Date uploaded in London – 29 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இது மூன்றாம் பகுதி

மதுரை வைகை நதி ஒரு காலத்தில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. அ தன் அழகை சங்க காலத்துக்குப் பின்ன எழுந்த சிலப்பதிகார காவியத்திலும் காணலாம். சங்க கால நூல்களில் எட்டுத் தொகையில் ஒன்று கலித்தொகை என்னும் நூல்;. வைகை நதியின் கரைகளில் உள்ள ஐந்து வினோத உருவம் கொண்ட மரங்கள்  இருந்தன.அவைகளின் பூக்களும் வெவ்வேறு நிறத்தில் பூத்துக் குலுங்கின இதைக்க கண்டவுடன் கலித்தொகை புலவருக்கு புராணம்தான் நினைவுக்கு வருகிறது. அவர் சொல்கிறார் :-

5 மரம் 5 கடவுள்

கலித்தொகை 26, பாலை பாடிய பெருங்கடுங்கோ

ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும்,

பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும்,

மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்,

ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்,

ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்குத்

தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போலப்,

போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற,

நோதக வந்தன்றால், இளவேனில் மேதக;

(FROM PROJECT MADURAI WEBSITE)

பொருள்

ஒப்பற்ற குழைகளை அணிந்த பலதேவனைப் போல வெண்ணிற பூங்கொத்துக்களைக்  கொண்ட மராமரம் , பருதியஞ் செல்வனான கதிரவனைப் போல , விரிந்த இதழ்களைக் கொண்ட செருந்தி, சுறாமீனைக் கொடியாக உடைய மன்மதனைப்  போலக்  கரிய வண்டுகள் ஆர்க்கும் காஞ்சி, காமனின் தம்பியான சாமனைப்போல  நிறம் மாறுபட்டு, பசலை பாய்ந்து, தோன்றும் ஞாலல் , இடபக் கொடியை உடைய சிவனைப் போல சிவந்து தோன்றும் இலவம் — இவ்வாறு கரை அழகுடன் விளங்கியது .

என்ன ஆச்சரியம் பாருங்கள் ; மரங்களைக் கண்டாலும் கடவுள் நினைப்பேதான் ! அதுவும் காதல் கவிதை நிறைந்த நூலில். இந்தக்  கடவுளரும், அவர்களுடைய  கொடிகளும் தமிழர்களுக்குப் புதிதும் அல்ல.. ஏற்கனவே நக்கீரர் பாடிய புற நானூற்றுப் (56) பாடலிலும் இவைகளைக் காண்கிறோம். தமிழர்களுக்குத் தெரியாத வாகனங்களோ, புராணக் கதைகளோ கிடையாது!

Xxxx

திரிபுராந்தகன் (சிவன்)

கலித்தொகை நூலில் ஒரு விசித்திரமான ஒற்றுமையையும் காணலாம். உலகைத் தோற்றுவித்தவர் பிரம்மா.  பாலைக் கலியைத் துவங்கும்  பாலை பாடிய பெருங்கடுங்கோவும் அவர் பெயரைச் சொல்லி தொடங்குகிறார் அதுதான் நூலின் முதல் பாடல் !

முப்புரங்களை சிவன் எரித்த காட்சியை பல சங்கப்  புலவர்கள் உவமையாகப் பயன்படுத்துவர். பாலை பாடிய பெருங்கடுங்கோவும் அதை வருணிக்கிறார். அருணகிரி நாதரின் முதல் திருப்புகழிலேயே  நாம் ‘முப்புரம் எரிசெய்த அச்சிவனுறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா’- என்பதைக் காண்கிறோம்

கலித்தொகை 2

தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதலாக,           

 அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,          

 மடங்கல் போல் சினைஇ, மாயம் செய் அவுணரைக்        

 கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூவெயிலும்      

 உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்          

 சீறு அரும் கணிச்சியோன் சினவலின், அவ்வெயில்         

 ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர்  

 ஆறு கெட விலங்கிய அழல் அவிர் அரிடை –        

 மறப்பு அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய,        

 இறப்பத் துணிந்தனிர், 2-9

பொருள்:

உலகம் தோன்றிய காலத்தே தோன்றிய முதியவனான நான்முகன் முதலாக, அடங்காதவர்களின் (அரக்கர்) வலிமை

தேவர் பலரும் வந்து முறையிட,சிங்கம் போல் சினத்துடன் சென்று ,மாய வேலை செய்யும் அரக்கர்களை வென்று எரிக்கும் வலிமையொடு,முக்கண்ணனான சிவன் முப்புரங்களையும் எரிக்க சினந்து நோக்கிய போது தோன்றிய அவன் முகம்போல,ஒளிரும் கதிரவன் (தீப்பிழம்பாக) சுடுகின்றான்.

சீறுகின்ற கணிச்சி படையை உடைய அந்த சிவன் சினந்து நோக்கியதால் அந்த மதில் சுவர்கள் படைகளால் தாக்கு பெற்று உதிர்வனபோல் (அக் கதிரவனின் வெம்மையால்) மலை வெடித்துச் சிதறி வழியை அடைத்து கிடக்கும். அரிய அவ்வழியாக -நீயும் கடந்து செல்ல நினைக்கிறாய்.

XXX

மஹாபாரதக் கதை

முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செத்து,

மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்

குறங்கு அறுத்திடுவான் போல்கூர் நுதி மடுத்துஅதன்

நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை,

மல்லரை மறம் சாய்த்த மால் போல், தன் கிளை நாப்பண்,

கல் உயர் நனம் சாரல்கலந்து இயலும் நாட! கேள்;

பொருள்

அறம்  மறந்து , அதர்மத்தையே கொண்டவனாயிருந்தான் நூற்றுவர்  தலைவனான துரியோதனன்  அவனது தொடையை முறித்து பீம சேனன் அவனைக் கொன்றான். அது போல முறம் போன்ற காதுகளைக்கொண்ட யானை, தன் தந்தங்களால் புலியைக் குத்திக் கொன்றது . அதன்பிறகு அந்த யானை, மல்லரை வீழ்த்திய திருமாலைப்போல கம்பீரமாய் யானைக் கூட்டத்தில் உலவியது

திரு முருகாற்றுப்படை, பரிபாடல், கலித்தொகை ஆகிய மூன்று சங்கத்தமிழ் நூல்களிலும்  நூற்றுக் கணக்கான புராண இதிஹாஸக் கதைகள் உள்ளன.

தொடரும்tags-  மஹாபாரதக் கதை, கலித்தொகை , 5 மரம் 5 கடவுள்,  பாலை பாடிய பெருங்கடுங்கோ

விநோத விடு(டி)கவிப் பொக்கிஷம்! -Part 2 (Post No.11,306) 

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 11,306

Date uploaded in London – 29 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 Part Two

 மின்சாரப் பம்ப் செட் புழக்கத்தில் வருவதற்கு முன் கிராமங்களில் வயலுக்கு நீர் பாய்ச்ச ‘ஏத்தம்’ உபயோகப்பட்டது. இளங்காலையில் விவசாயி “மூங்கில் இலை மேலே, தூங்கும் பனிநீரே! தூங்கு பனிநீரை வாங்கு கதிரோனே!” என உல்லாசமாகப் பாடியவாறே ஏற்றம் இறைப்பர். அதை விளக்கும் ‘விடி’ ஒன்றை ஆசிரியர் தரும் அழகே, அழகு!

சீருண்ட மங்கையர்க்கு வளையல் விற்ற

   செம்மலுறை திருமதுரா புரிநன்னாட்டில்

நீரேறத் தலையாகும் வாலுங்கூழை

   நிற்பதுகீ ழிருகாலு மொருகான்மேலே

சீருடனே ஒருகாலில் நடக்கும்போது

திடமாக மெலிரண்டாட் சுமைசுமக்கும்

வாரணியுங் கொம்புமுள தோடிப்பாயும்

வண்மையுள விக்கதையை வழுத்துவீரே!

{ இறைவன் சொக்கநாதர் வளையல் வியாபாரியாகத் தோன்றி, அழகிய வணிகர் மகளிருக்கு வளையல்கள் விற்று, அணிவித்து, அவர்களின் சாபத்தைப் போக்கிய கூடல்மாநகரில் நடப்பதைப் பாருங்கள்! நீர் நிரப்பத் தலையாகும், குட்டை வாலு முண்டு,கீழே நிற்பதோ இருகால்,ஒருகால் மேலே, ஒழுங்காக அந்த ஒரு காலில் நடக்கும் போது, உறுதியுடன் எளிதாக இரண்டு ஆள் பாரம் சுமக்கும், தோல்பையி லிருக்கும் நீரும் செடிகளின் வேர் நோக்கிப் பாயும்!}

 அடுத்து நாம் பார்க்கப் போவது ஒரு சாதாரண சின்னப் ‘பொடி’ விஷயமே! ஆம், ‘ஸ்நஃப் பவுடர்’, நுகட்காரம், நாசிப்பொடி, மூக்குப் பொடி என்றழைக்கப்படும் விநோதப் பழக்க வழக்கத்தைப் பற்றிதான். இது பரவலாக மேட்டுக்குடி மக்களி டமும், புலவர்கள், கலஞர்களிடமும் அவர்களின் அந்தஸ்துக்கு ஒரு முக்கிய அடையாளமாக 70, 80-ம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. டி.ஏ.எஸ்.ரத்தினம் பட்டணம் பொடியை மூக்கில் ஏற்றிக் கொள்ளாவிட்டால் மற்ற காரியம் எதுவும் சுமுகமாக நடந்தேறாது என்ற நிலை! அருகில் இருப்பவருக்குச் சங்கடம் கலந்த அருவருப்பு, துணி துவைப்போர்க்கு அவஸ்தை என்பதை இப்பிரியர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். கடைக்காரர் பிரத்தியேகமான பொடி ஜாடியிலிருந்து சன்ன மானத் துகளை, மிகவும் மெலிதான, நீண்ட, தலைப் பகுதியில் சின்னக் குழியுடனி ருக்கும் கரண்டியால் தட்டித்தட்டி (விழும் ஆனால் அதிகம் விழாத மாதிரியும் இருக் கும்!) மட்டைநார் இலையில் போடும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

“பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன், ஐயகோ!” என்கிறார் வள்ள லார் (திரு அருட்பா,அவா அறுத்தல், பாடல் 12). “சோமசுந்தரன் கடையில் செய்த பொடியினைப் போடா மூக்குப் புண்ணியம் செய்யா மூக்கு” என்று தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள் ஒரு கவிதையே பாடியுள்ளார். சாதாரணமானவர்களுக்குத் தும் மலைத் தரும்பொடி இங்கு புலவர் மூலம் புதிர் வெண்பாவைக் கொடுத்துள்ளதை ரசிக்கலாம்….

கிள்ளிக்கை பார்ப்பதுவுந் தேய்ப்பதுவு முண்டும்

கெம்பீர மாய்வறுத்து இடிப்பதுவுமுண்டும்

அள்ளிநறு நெய்சுண்ணஞ் சேர்ந்தாடலுண்டும்

     அதற்கான ஜாடியதி லடைப்பதுண்டும்

கள்ளருந்துங் காளைடைப்போற் றிரிவதுண்டும்

     கருதிமரி யாதைகெட்டு நடப்பதுண்டும்

புள்ளிமயிற் சாயலென்றும் நடையினாளே

     பொற்கொடியே இக்கதையைப் புகலுவாயே!

{ ஒரு சிட்டிகைக் கையிலெடுத்துப் பார்த்துத் தேய்ப்பது உண்டாம், நன்றாக வறுத்து சன்னமாய் இடிப்பதுமுண்டாம், நறுமணமிக்க நெய், சுண்ணாம்பு சேர்ப்பது உண்டு, அதற்கான ஜாடியில் வைப்பதுண்டாம், கள் குடித்த காளையைப் போல் திரிந்துப் பிறரிடம் மரியாதைக் கெட்டு நடப்பது உண்டாம். மயில் போல் ஒய்யாரநடை பயி லும் பொற்கொடியே இதற்குப் பதில் என்ன?}

இதோ பொம்மலாட்ட நாட்டுப்புறக் கலைக்கு வீரவணக்கம் செலுத்துகிறார் புலவர்….

குலுக்குண்டு வலுக்கொண்டு குதிப்பதுண்டு

கொத்துமணி முத்துவடங் கொள்வதுண்டு

வலிப்புண்டு, சிரிப்புண்டு வாட்டமுண்டு

மருங்கிலுடை யணியொட்டி யாணமுண்டு

கலுக்குண்டு, பிலுக்குண்டு அலைப்புமுண்டு

     கணிக்கவல்ல வேசியுங்கூத் தாடியல்ல

சிலைக்குநிகர்வடிவழகி தேவமாதே

     தெளிவாயிக் கதைப்பயனைச் செப்புவாயே!

{ குலுக்கி-மினுக்கி, பலம் கொண்டுக் குதிக்கும், பல சாரம் கொண்ட மணிமாலை, முத்துச் சங்கிலி அணிந்திருக்கும், அழகு காட்டும்,சிரிக்கும், வாடும்,இடையில் ஒட்டியாணம் தரித்திருக்கும், பகட்டு-ஆடம்பரம் காட்டி வருந்தவும் செய்யும், கணிகை, வேசி, கூத்தாடியுமல்ல, அழகியத் தெய்வப் பெண்ணே, விடை பகருவாய்!}

படித்து, ரசிக்க இன்னும் பல புதிர் வெண்பாக்கள் உண்டு. கடைசியாக ஒரு விடு(டி) கதையுடன் முடிவு செய்வோம்…காஞ்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஒருகள ஆய்வு ஆராய்ச்சியில் கிராம மக்கள் சொன்ன ஒரு விடு(டி)கதை……

ஊருக்கு ஒதுக்குப்புரமாக மாடு மேய்த்துக் கொண்டிருந்தப் பையன் அவ்வழியே சென்ற ஒரு பைராகியைப் பார்த்துக் கேட்கிறான்:

“அய்யா, புல்லாங்குழலாம் ,புலித்தோலாம்! பூரண புஸ்தகமாம்,

போறதோர் பண்டாரமே, நாளை இதே வழி வருவியா?” (குழலூதி,புலித்தோல் அணிந்து ஊர் சுற்றும் எல்லாம் அறிந்த ஞானியே, நாளையும் இவ்வூர்ப் பக்கம் வருவீரா?)

அதுக்கு அந்தப் பைராகி அளிக்கும் சொல்லாடல் பதிலைப் பாருங்கள்!

“அப்பனே! வெள்ளி வேர் கடந்து, வேங்கணம் பொய்மாரி, கள்ளிப் பால் வத்தி

,கடலும் திசைமாறி, பம்பையாடு குட்டியிட்டு, வறட்டாடு பால் கறந்து,

செத்தாடு குட்டியிட்டு,, செனையாடு பால் கறந்து, ஒலக்கைத் துளுத்து,

ஒரலேறிப் பூப்பூத்து,அம்மி பழஞ்சாறாம், நார்த்தங்கா(ய்) ஊறுகாயாம்,

எருது பசுவாகி, பசுவும் ஈனும் காலத்தில் வருவேன்! என்றாராம்.

 {பொருள்–நான் நிச்சயம் இவ்வழி வருவேன். அதற்குரியச் சாத்தியக் கூறுகளைச் சொல்கிறேன், கேள் அப்பனே!  வெள்ளியாகிய நிலா சாய்ந்து,இருள் பொய்யாக மாறி, வெளுத்தவுடன் வருவேன்,

கள்ளிப்பால் வத்தி=  வெட்டுண்டக் கள்ளிச் செடியிலிருந்து வடியும் பால் வற்றிக் காயும் போது வருவேன்,

கடலும் திசை மாறி= கட்டுடலாய் இருந்தாலும் உட்கார்ந்து எழும்போது உண்டாகும் தடுமாற்றம் நிற்கையில் வருவேன்,

பம்பையாடு குட்டியிட்டு….செனையாடு பால் கறந்து= முல்லை நில ஆடு வயதுக்கு வந்து, குட்டிபோட்டு, பால் வற்றிவிட்ட ஆடு பால் சுரக்க,செனை ஆடு குட்டிப் போட் டுப் பால் கொடுக்கும் சமயம் வருவேன்,

ஒலக்கை துளுத்து= இப்போது நட்ட தென்னம்பிள்ளை வளர்ந்து,

ஒரலேறிப் பூப்பூத்து= உலக்கை மாதிரி உயர்ந்து நின்று, பூப்பூத்து காய்க்கும் போது,

அம்மி பழஞ்சாறாம்….ஊறுகாயாம்=உச்சி வெயிலில் உடல் காக்க, அம்மியில் அறைத் தக் கூழும், பழஞ்சாறும், தொட்டுக்க நார்த்தங்காய் ஊறுகாயும் கொண்டு வாரேன்,

எருது பசுவாகி= காளை, பசுவைச் சினையாக்கி,

பசுவும் ஈனும் காலத்தில் வருவேன்= அந்தப் பசுவும் கன்று போடும் போது நிச்சயம் நான் வருவேன் எனச் சாதுரியமாகவும், நக்கலாகவும் பதிலளித்துச் சென்றாராம்!}

 அக்காலத்தில் சாதாரணமானவர்களிடம் கூட தமிழ் எப்படியெல்லாம் செழித்து வளர்ந்துள்ளது என்பதை நினைக்கும் போது நமக்குப் பெருமை பிடிபடவில்லையே!

       வாழ்க தமிழ், வளர்க தமிழ் மொழி!

  Tags- மூக்குப் பொடி, பைராகி, சொக்கநாதர் ,வளையல் வியாபாரி,  ‘ஏத்தம்’