தாவர நோய்கள்: இந்துக்களின் அற்புத மூலிகை  அறிவு – Part 2 (Post No.11,441)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,441

Date uploaded in London – 13 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

விருட்ச ஆயுர்வேதம் எனப்படும் துறையில் இந்தியா 1500 ஆண்டுகளுக்கு முன்னரே நூல்கள் எழுதி உலகில் புதுமை செய்ததை முந்தைய கட்டுரையில் கண்டோம். உலகிலேயே பிராணிகளுக்கு தனி மருத்துவ மனைகளை நிறுவி இலவச சிகிச்சை அளித்ததும் இந்தியாதான். குறிப்பாக சமண மதத்தினருக்கு அஹிம்சை மிகப் பெரிய கொள்கை என்பதால் மெளரியர் காலத்திலேயே இப்படி ஆஸ்பத்திரிகள் வைத்து இலவச சிகிச்சை செய்தனர். பிற் காலத்தில் மேலை நாட்டினர் இதையே வெடினரி சயின்ஸ் (Veterinary Science) என்று வைத்து நாய் ,பூனை வளர்ப்பவர்களிடம் கொள்ளை அடிப்பதை இன்றும் லண்டனில் காணலாம்.

என் நண்பரின் பெண்ணுக்கு குழந்தை இல்லை. அவள்  ஆயிரம் பவுண்டுக்கு மேல் விலை உள்ள ஒரு நாய்க்குட்டியை  வாங்கி வளக்கிறார். அது தும்மல் போட்டால் இவருக்கு ஜலதோஷம் பிடித்துவிடும் நாய், பூனை மருத்துவரிடம் சென்றால் வகையா கத் தீட்டி பர்ஸை காலி செய்து வீட்டுக்கு அனுப்புவார். அதில் வியப்பில்லை,

ஆனால் நாமோ வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய  அருட் பிரகாச வள்ளலாரைக் கண்ட நாட்டினர். செடி கொடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி, அவைகளுக்கு அன்பான பெயரையும் சூட்டி, செடி கொடிகளைச் சுற்றியுள்ள பாத்தியில் பறவைகள் தண்ணீர் குடிப்பதைக் கண்டு  மகிழ்ந்த  சகுந்தலை வளர்ந்த நாட்டினர். அதை சாகுந்தல காவியத்தில் வடித்த காளிதாசனை இன்று உலகமே போற்றுகிறது  இந்த சூழ்நிலையில் வ்ருக்ஷ ஆயூர் வேதம் வளர்ந்ததில் வியப்பில்லை.

மேலும் சில விஷயங்களைக் காண்போம்.

வராஹமிகிஹிரர் (505- 587 CE ) எழுதிய பிருஹத் ஸம்ஹிதாவில் ஒரு அத்தியாயம் முழுதும் தாவர நோய்களுக்கு ஒத்துக்கப்ப்பட்ட போதும் சுரபால எழுதிய நூல்தான் முழுக்க முழுக்க தாவர நோய்கள், சிகிச்சை,ஆரோக்கியமான தாவர வளர்ச்சி பற்றி விவாதிக்கிறது

இவைகளைப் படிக்கையில் அவர் சொல்லும் சில விஷயங்கள் நமக்கு நகைப்பை ஏற்படுத்தலாம். ஆயினும் அந்தக் காலத்தில் இவை பற்றி மக்கள் கவலைப்பட்டதையும், நோய்களைத் தடுக்க முயன்றதையும், விஷயங்களை அறிவியல் முறையில் அணுகியதையும் காண முடிகிறது.

நோய்களில் இருந்து தாவரங்களைக் குறிப்பாக, மரங்களை, பாதுகாக்க எல்லா திசைகளிலும் லோத்ரா மரங்களை நடச் சொல்கிறார். இதை தமிழில் வெள்ளை அத்தி என்பர்.சுரபால பயன்படுத்திய சொல் பில்லோட(bhillota) மரம். மேலும் பனியால் வரக் கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, புல்லை எரித்து அதன் சாம்பலை துணியில் கட்டி மரங்களுக்கு டியில் வைக்கச் சொல்கிறார்.

பூச்சிகள், எலிகள், புழுக்களால் ஏற்படும் தாக்குதலைச் சமாளிக்க மந்திரங்களை இலைகளில் எழுதி தாவரத்துக்கு (ஸ்லோகம் 160-163)   அ டியில் புதைக்கச் சொல்கிறார். இது நமக்கு விநோதமாகத் தோன்றும்

ஆயினும் அவருடைய அறிவியல் அணுகுமுறையைப் பிற பாடல்களில் காணமுடிகிறது. உதாரணமாக தாவரங்களுக்கு வரும் நோய்களை அவற்றின் உடலில் இருந்து வரும் நோய்கள் என்றும் வெளித் தாக்குதலில் இருந்து வரும் நோய்கள் என்றும் பிரித்துப் பேசுகிறார்.

தாவரங்களுக்கு உள்ளிருந்து வரும் நோய்களை வாதம், பித்தம், கபம் என்று மனிதர்களுக்கு உள்ளது போலவே பி ரிக்கிறார். திருவள்ளுவரும் குறள் 941ல் வளி முதலா எண்ணிய மூன்று என்ற சொற்றொடரில் இதை அப்படியே சொல்கிறார்.

வெளியிலிருந்து வரும் தாக்குதல் பற்றிக் கதைக்கையில் புழுப்  பூச்சிகள் , பனி முதலியவற்றைக் குறிப்பிடுகிறார்.

1.வாத பாதிப்பு ஏற்படக்கூடிய தாவரங்கள் :-

ஒல்லியாக, உயரமாக வளரும்; சொர சொர பட்டை இருக்கும் ; கொஞ்சம் வெய்யில் அதிகமானாலும் இலைகள் உதிரும்

2.பித்த தோஷமுள்ள தாவரங்கள்:

வெய்யிலைத் தாங்கி நிற்கும்; கிளைகள் பலமற்று இருக்கும் ; எளிதில் ஒடிந்து விழும்; பூக்களும் பழங்களும் காய்த்துக் குலுங்கும்; பருவமில்லாத காலங்களிலும் பழங்களைக் கொடுக்கும் .

உதாரணம் – கொய்யா, முருங்கை மரங்கள்

3.கப தோஷமுள்ள தாவரங்கள் :-

தடித்த அடிப்பகுதியுள்ள மரங்கள்.தடித்த இலைகள் இருக்கும் ; பூக்களும்  பழங்களும் காய்த்துக்கு குலுங்கும்;

அவற்றைச் சுற்றி கொடிகள் படரும்; மேலே ஏறும் .

உதாரணம் – பலா, நாகப்பழ , மா மரங்கள்

(இவைகளை படிக்கையில் அவருடைய அறிவியல் அணுகுமுறையைக் காண முடிகிறது. மரங்களை எவ்வளவு உன்னிப்பாகக் கவனித்து இருக்கிறார் என்பதும் புரிகிறது.)

வாத ரோக நோய்கள் வந்தால் தாவரங்களில் சுருக்கங்கள், முடிச்சுகள் காணப்படும். பழங்களில் சாறு இல்லாமல் வறட்சியாக இருக்கும். இதைக் குணப்படுத்த மாமிசம், கொழுப்பு, நெய் அடங்கிய நீர்ப்பாசனத்தை செய்யவும் . சில குறிப்பிட்ட பொருட்களை எரித்து புகை அடிக்கவும். என்ன பொருட்கள் என்பதையும் சுரபால பட்டியல் இட்டுள்ளார்

பித்த ரோகம் வந்தால் இலைகள் மஞ்சள்  நிறம் ஆகும். பழங்கள் முன்கூட்டியே உதிரும்   இதைக் குணப்படுத்துவதற்கு, பாலும் தேனும்கலந்த தண்ணீரைப் பயன்படுத்தவும்.. த்ரிபலா கஷாயத்துடன் நெய்கலந்து தெளிக்கவும் சர்க்கரை, தேனை எரித்து புகை அடிக்கவும்.

தாவரங்களுக்கு கப ரோகங்கள் வந்தால் இலைகள் சுருங்கும்; தாமதமாகப் பழங்கள் கொடுக்கும். இதைக் குணப்படுத்த காரமான கஷாயங்களைக் கொண்டு சிகிச்சை தரலாம். கடுகு சர்க்கரைக்கு களிம்பு உண்டாக்கி தடவலாம்; பின்னர் எள்ளுப்பொடி கலந்த நீர்ப்பஸனம் செய்யலாம்.அத்தி, வேம்பு முதலிய மரங்களின் கஷாயத்தை ஊற்றவும் .வேர்களில் வெள்ளைக்கடுகு பிண்ணாக்கை வைக்கவும்.

பருவ நிலைக் கோளாறுகளும் , பூச்சிகள் பிராணிகளின் தொல்லையும்

தாவரங்களுக்கு வரும் வெளிப்புறத் தாக்குதல்கள் என்பதை எல்லோரும் அறிவர் இவைகளுக்கும் சிகிச்சைகளை பட்டியல் இட்டுள்ள சுரபால, மரங்களுக்கு வரும் மஞ்சள் காமாலை, அஜீரணக் கோளாறுகள் பற்றிக் கூட பேசுகிறார். பல விஷயங்கள் இன்று பயன்படாமல் போகலாம். ஆயினும் சில விஷயங்களை அதிக பொருட்செலவின்றி பயன்படுத்தலாம்.

சுரபால, எழுத்துக்களில் பாராட்டப்பட வேண்டிய அம்சங்கள,  அவர் தாவரங்களைக் கவனித்த விதம். நோயின் குறிகளை பட்டியலிட்ட விதம், மனிதர்களுக்குள்ளது போலவே வாத, பித்த, கப தோஷங்களுக்கு பரிகாரம் சொல்லும் முறை ஆகியன ஆகும். இவை அவரை ஒரு தாவர வியல் விஞ்ஞானியாகவே காட்டுகிறது

சம்ஸ்க்ருதத்தில் இந்த நூலைப் பயிலுவோர் மேலும் பல அறிய விஷயங்களைக் காணலாம்.

— subham —-

ஆகவராமன் என்ற பட்டத்தைப் பெற்ற சூரிய காங்கேயன்! ( Post No.11,440)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,440

Date uploaded in London – –   13 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் 88

 ஆகவராமன் என்ற பட்டத்தைப் பெற்ற சூரிய காங்கேயன்!

 ச. நாகராஜன்

பாண்டிய நாடு செழிப்போடு பாண்டிய மன்னனால் ஆண்டு கொண்டிருந்த காலம் அது.

பாண்டி மண்டலத்தில் ஆறகழூர் வாணன் என்பவன் பாண்டியனை மதிக்காமல் கொட்டம் அடித்துக் கொண்டிருந்தான். அவனை அடக்குவார் யாரும் இல்லை.

இந்தச் சமயத்தில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சூரிய காங்கேயன் என்னும் வீரன் அவனைத் தந்திரமாகப் பிடித்தான். அவனைக் கொண்டு வந்து நேராக பாண்டிய மன்னனுக்கு முன்னால் நிறுத்தினான்.

பாண்டியன் அடைந்த  மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அவனது வலிமையை அறிந்து அவனுக்கு ஆகவராம பாண்டியன் என்ற சிறப்புப் பட்டத்தைப் பாண்டியன் தந்தான்.

இந்த விருதுப் பெயரோடு, வேப்ப மாலை, மீனக் கொடி மற்றும் தனக்குள்ள விருதுகளையும் ஏழுகரை நாட்டின் ஆதிக்கமும் கௌரவமாக அளித்து அவனை உபசரித்து அனுப்பினான் பாண்டிய மன்னன்.

அவற்றைப் பெற்ற ஆகவராம பாண்டியன் கம்பீரமாக வாழ்ந்து வரலானான்.

இந்த வரலாற்றை கொங்குமண்டல சதகம் தனது 88வது பாடலில் பதிவு செய்து சூரிய காங்கேயனைப் பாராட்டுகிறது.

பாடல் இதோ:

ஏய்ப்பொடு மீறு மொருவாணன் கொட்ட மெலாமடக்கக்

கோப்பெரு மானா கவராம பாண்டியக் கோனெனவே

வெப்பலர் மாலையு மீனப் பதாகை விருதுமற்றும்

வாய்ப்புட னீயப் பெறுசூ ரியன்கொங்கு மண்டலமே  (பாடல் 88)

பாடலின் பொருள் : ஆறகழூர் வாணன் கொட்டத்தை அடக்கக் கண்டு மகிழ்ந்த பாண்டிய மன்னன், ஆகவராம பாண்டியன் என்னும் விருதுப் பெயரும், வேப்ப மாலையும், மீனக் கொடியும், இன்னும் தனக்குள்ள விருதுகளையும் மகிழ்ந்து அளிக்க அவற்றை ஏற்றுக் கொண்ட சூரிய காங்கேயனும் கொங்கு  மண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாம்.

இந்த வரலாற்றை தக்கை ராமாயணப் பாயிரம் கீழ்க்கண்ட பாடல் மூலம் தெரிவிக்கிறது:

அவனுஞ் சடையன் காராளனவன்றனூரும் வெண்ணெய் நல்லூர்

இவனு நலதம்பிக் காங்கேயனிவன்ற னூருமோ ரூராம்

அவனுங்கண்ணன் சரராம னாகவராம னிவனுங் கண்ணன்

இவனு மவனைப்போ லுலகுதனில் ராமகதைதனைப் பாடுவித்தான்

இந்த ஆகவராம பாண்டியன் என்னும் பட்டம் பெற்றுள்ளதற்கு ஏற்ப ஆகவராம பட்டம் என்னும் குடிப்பெயரோடு புலவர் குடும்பம் இருக்கிறது.

ஆண்டுக்கான ஆண்டு சன்மானமும், கல்யாணம் முதலில் நாட்களில் உரிமையான வரியையும் இந்தக் காங்கேயர்கள் சந்ததியாரிடமிருந்து பெற்று வருகின்றார்கள்.

ஏழுகரை நாட்டதிகாரம் உடையார் என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் இது:

உரமன் எழுகரை நாடன் கண்ணன் உபயகுல சுத்தவேளாளன்

திரமன் புகழ்மோரூ ரத்தப்பன்சொல் செஞ்சோனலதம்பிக் காங்கேயன்

வரமன் புலியாளத் தென்னவர்க்கு மகுடஞ்சூட்டுகை க்குவமை சொல்லப்

பரமன் றிருமுன்னே பரதன் பின்னோன் பரிதிபுதல்வற்கு மௌலி வைத்தான்  

     (அரசியற் படலம் தக்கை ராமாயணம்)

இந்த வரலாற்றை மோரூர்ப் பள்ளு இப்படிக் குறிப்பிடுகிறது:

மன்னனாகவராமன் வடகொங்கு மன்னியர்தினம் வாழ்ந்திடு நாடு

தென்னவன்றரு மெழுபது தண்டிகை சேரும் பூந்துறை நாடெங்கள் நாடே         (மோரூர்ப் பள்ளு)

கொங்குமண்டலச் சிறப்பைச் சேர்க்கும் ஆகவராம பாண்டியனின் வரலாறு இப்படி சுவை மிக்கதாய் இருக்கிறது! 

***

புத்தக அறிமுகம் – 112

அறிவியல் நோக்கில் ஆன்மீக அதிசயங்கள் 

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1. நாமங்கள் ஆயிரம்! நலங்கள் பல்லாயிரம்!!    

2. சப்த சக்தி என்ன செய்யும்?  

3. ஒலிக்குச் சக்தி உண்டோ?.   

4. பிரார்த்தனை என்ன தரும்?  

5. எண்ண சக்தி என்ன செய்யும்?

6. காயத்ரி மந்திரம் பெண்களும் கூறலாம்! 

7. உதவத் துடிக்கும் தேவதைகள்

8. அமெரிக்க டாலரின் மர்மங்கள்!

9. ருத்ராக்ஷம் பெண்களும் அணியலாம்!   

10. ஜபமாலை ரகசியம்!   

11. தீபமங்கள ஜோதி நமோ நம!

12. அஷ்டநிதிகளை அள்ளித் தரும் பத்மினி வித்யா!  

13. அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்! 

14. யுகாவதாரம் ஸ்ரீகிருஷ்ணன் 

15. அறிவியல் வியக்கும் கங்கை!    

16. அறிவியல் பார்வையில் புராண, இதிஹாஸங்கள் பொய்மூட்டையா

   பொக்கிஷமா?    

17. அறிவியல் வியக்கும் அற்புத ஆலயங்கள்!   

18. ஆயுள் நீடிக்க ரத்தினங்களை அணிக!  

19. வெற்றி தரும் ஆசிர்வாதம்!  

20. மேலை நாட்டு விஞ்ஞானிகள் வியக்கும் தியான பலன்கள்!  

21. தற்செயலா? இறைவன் விளையாட்டா?

22. மனமே எல்லாம்!

23. நமக்கு நாமே நல்ல நேரம் அறியலாம்! 

24. உலகம் வியக்கும் உயர்ந்த வேத சிந்தனைகள்!    

25. அறிவியல் வியக்கும் ஜோதிடம்!  

26. சந்திரனுக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டா?  

27. ஆண்டுகள் அறுபது ஏன்?    

*

இந்த நூலுக்கு முன்னாள் தமிழ் நாட்டுக் காவல்துறைத் தலைமை இயக்குநரும் தமிழறிஞருமான திரு சு. ஶ்ரீபால் அவர்கள் அளித்துள்ள அணிந்துரை.

அணிந்துரை

அன்பிற்குரிய நண்பர் திரு ச.நாகராஜன் அவர்கள் எழுதியுள்ள இருபத்தேழு கட்டுரைகள் இருபத்தேழு நட்சத்திரங்களைப் போல ஜொலிக்கின்றன. ஒரு கட்டுரையைப் படித்தால் அது முன்பு படித்த கட்டுரையை விட சிறந்தது என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த நூல் நமக்கு எடுத்து இயம்புகின்ற பாடம் இது தான்:

“மனிதனின் அறிவியலும் ஆராய்ச்சியும் மனிதனே. மனித இனம் ஆராய்வதற்கு மிகுந்த தகுதி வாய்ந்த பொருள் மனிதனே. மண்ணுலகில் தொன்றுதொட்டு பார்க்கும் போது மனிதனை விட சிறந்த பொருள் இல்லை. மனிதனில் மனத்தைத் தவிர சிறந்தது ஒன்றுமில்லை.”

சுவாமி விவேகானந்தர் சொன்னார் – “வேதங்களிலும் உபநிடதங்களிலும், பெண்கள் உண்மைகளைப் போதித்து, ஆண்களைப் போலவே போற்றி வணங்கப்பட்டனர்.”

இந்த வரலாற்று உண்மையைப் பெண்கள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரைகளில் படிக்கிறோம். காயத்ரி மந்திரத்தைப் பெண்களும் ஜெபம் செய்யலாம், உருத்திராட்சம் பெண்களும் அணியலாம் என்ற கருத்துக்கள் அழகாக எடுத்துச் சொல்லப்படுகின்றன.

மனிதனின் வரலாறு பல்வேறு கால கட்டங்களில் அவன் புரிந்த சாதனைகளை, உருவாக்கிய படைப்புகளை, வாழ்க்கை முறையை, பழக்க வழக்கங்களை, பண்புகளை, நம்பிக்கைகளை எடுத்துச் சொல்கிறது. ஆசிரியர்  மனித வரலாற்றை நன்கு படித்து உள்ளார். மேலை நாடுகளில் செய்த ஆராய்ச்சிகளை அறிந்து உள்ளார். இவற்றையெல்லாம் பல கட்டுரைகளில் எடுத்து உரைக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.

ஒரு இடத்தில் அமெரிக்க வரலாற்றில் எப்படி ‘13’ என்ற எண் நல்ல பிணைப்புகளுடன் இருக்கிறது என்று விளக்குகிறார். இது ஒரு நல்ல தகவல் ஆகும். அமெரிக்க சுதந்திரம் அடைந்த நாள் 4-7-1716.

4 என்ற எண் 1 + 3 = 4 என்று 13இன் கூட்டுத்தொகையே ஆகும். எண் கணிதத்தில் ‘4’ என்ற எண் ராகு கிரகத்துக்கு உரிய எண்.

பண்டைய காலத்தில் முன்னோர் வகுத்த நெறிகளுக்கும், நியதிகளுக்கும் காரணங்கள் உண்டு. சில காரணங்கள் இப்போதும் நமக்கு விளங்குகின்றன. சில நமக்கு விளங்குவது இல்லை. ஆனால் அதற்காக அவற்றை ஒதுக்கி விடுவது நல்லது என்று கூற முடியாது. இந்தக் கருத்தைப் பல இடங்களில் ஆசிரியர் உரைப்பது பொருத்தமாகும்.

குளிர்காலத்தில் சூட்டை உண்டாக்க மரக்கட்டைகளை எரித்து நெருப்பில் குளிர் காய்வோம். சூடு என்ற சூழ்நிலையை நெருப்பு உண்டாக்குகிறது. அதைப் போல ஆன்மீகச் சூழ்நிலையை உண்டாக்குவது எப்படி என்ற வழிமுறையை ‘பிரார்த்தனை’ பற்றி எழுதியுள்ள கட்டுரையில் படித்து மகிழ்ந்தேன்.

நம்முடைய வீட்டில் பூட்டி வைத்து இருக்கும் காசு பணத்தை எண்ண முற்படும் போது வெளிக் கதவுகளை மூடி விடுகிறோம். அது போல ஆன்மாவில் புதைந்து கிடக்கும் பொக்கிஷத்தைக் காண வெளிக்கதவுகளாகிய புலன்களை மூட வேண்டும். ‘தியானம்’, ‘எண்ணங்கள்’ பற்றிய கட்டுரைகளில் வெளிக்கதவுகளாகிய புலன்களை எப்படி மூடுவது என்பது குறித்த வழி முறைகளைப் படிக்கின்றோம்.

மனத்தை ஈர்த்து சிக்க வைத்து சுயமாகச் சிந்திக்கத் தூண்டுவதே புத்தகங்களின் உண்மையான நோக்கம். அந்த நோக்கத்தை இந்த நூல் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறது.

“சில புத்தகங்கள் சுவைக்க வேண்டியவை; வேறு சில விழுங்க வேண்டியவை; ஒரு சில புத்தகங்களே சுவைத்து உண்டு சீரணிக்க வேண்டியவை:

சுவைத்து உண்டு சீரணிக்க வேண்டிய இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கும் திரு ச.நாகராஜன் அவர்களுகு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

வளர்க அவர் தம் எழுத்துப் பணி!

                                  சு.ஶ்ரீபால்

*

நூலில் இடம் பெறும் முன்னுரை இது:

ஹிந்து மதம் ஒரு மதம் மட்டுமல்ல; ஒரு தத்துவமும் கூட, ஒரு மதமும், தத்துவமும் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை என்று மேலை நாட்டு அறிஞர்களில் ஆரம்பித்து உலகின் பெரும் சிந்தனையாளர்கள் கிழக்கு, மேற்கு என்ற பாகுபாடின்றிப் போற்றிப் புகழ்கிறார்கள்.

இந்த வாழ்க்கை முறையில் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை, காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்கப் போகும் வரை மனிதராய்ப் பிறந்தோர் என்னென்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நலம் பயக்கும் இந்த வாழ்க்கை  முறையை முரட்டுத்தனமான பல்வேறு படையெடுப்புகள் தாக்கிப் பார்த்தன; ஆங்கில ஆதிக்கம் துளைத்துப் பார்த்தது. ஆனால் காலத்தை வென்ற ஹிந்து வாழ்க்கை முறை நில குலையவில்லை! என்றாலும் அறிவியல் உரைகல்லில் உரசிப் பார்த்தால் என்ன விடை கிடைக்கும் என்பதைப் பல விஞ்ஞானிகளும், சிந்தனையாளர்களும், இலக்கியவாதிகளும், பக்தர்களும், தொழில்நுட்ப நிபுணர்களும் முயன்று பார்த்துள்ளனர்.

அவற்றை எல்லாம் ஒருங்கே திரட்டி மாபெரும் கலைக் களஞ்சியமாக வெளியிட அதிகம் பொருட்செலவு ஆகும். ஏராளமான அறிஞர் பெருமக்கள் அந்தப் பெரும் பணியில் தம்மை அர்ப்பணித்து ஈடுபட வேண்டியிருக்கும். இந்தச் சூழ்நிலையில் சிறு வயது முதலே இந்தத் துறையில் என்னை சுதந்திரப் போராட்ட வீரரும் தினமணி பொறுப்பாசிரியருமான எனது தந்தையார் திரு வெ.சந்தானம் அவர்கள் ஊக்கி விட்ட காரணத்தால், ஏராளமான நூல்களைப் படித்ததோடு அவற்றிலிருந்து குறிப்புகள் எடுத்து வந்தேன். முடிந்த போதெல்லாம் புத்தகங்களை வாங்கிச் சேகரிக்க ஆரம்பித்தேன். படித்ததைப் பகிர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கை முறை அறிவியல் வியக்கும் ஒன்று என்பதை இளைய சமுதாயத்தினரும் ஏனையோரும் அறிந்து மகிழ உதவியாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியதால் சிறு சிறு கட்டுரைகளாக மங்கையர் மலர், தின பூமி, கலை மகள், மஞ்சரி, ஞான ஆலயம், வாஸ்து, பெங்சுயி, ஜெம்மாலஜியும் ஜோதிடமும், கோகுலம் கதிர் போன்ற தமிழ் வார, மாத இதழ்களில் எழுதி வந்தேன்.

ஹிந்து வாழ்க்கை முறை மீதான அறிவியல் சோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் மாபெரும் கலைக்களஞ்சியமாக இன்னும் உருவாகாத சூழ்நிலையில் இந்தக் கட்டுரைகள் சேதுவில் அணை கட்ட அணில் செய்த சேவை போல இருக்கும் என்பது என் நம்பிக்கை.

இந்தக் கட்டுரைகளைத் தொகுப்பு நூலாக வெளியிட வேண்டுமென்று நண்பர்கள் தூண்டினர். எனவே இந்த நூல் உங்கள் கரங்களில் இப்போது மலர்ந்துள்ளது. இதற்கு நல்லதோரு அணிந்துரை நல்கிய  முன்னாள் தமிழ்நாட்டுக் காவ்பல்துறைத் தலைமை இயக்குநரும் பல்துறை வித்தகருமான திரு சு.ஶ்ரீபால் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

என் கட்டுரைகளைப் பிரசுரித்து ஊக்கிய பல்வேறு இதழ்களின் ஆசிரியப் பெருமக்களுக்கும், படித்து நேரிலும், தொலைபேசியிலும், கடித மூலமாகவும் பாராட்டிய வாசகர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல வழிகளிலும் உதவி செய்த என் மனைவி மற்றும்  மகன்களுக்கும் என் நன்றி உரித்தாகுக.

அறிவியல் வியக்கும் ஹிந்து வாழ்க்கை முறை பற்றி அதிக நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு அதைக் கடைப்பிடிக்க அதிக ஆர்வத்தையும் இந்த நூல் படிப்பவரைத் தூண்டுமானால் அதை விட மகிழ்ச்சி எனக்கு வேறில்லை!

நன்றி

சென்னை                                        ச. நாகராஜன்

3-8-2005

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

Hinduism is not just a religion; it is a way of living. Today’s science astonishes at the hidden marvels of its principles. This book reveals the secret chambers of Hinduism to the readers. Former Inspector General and Elite Tamil writer Mr. S. Sribal has praised this work that the twentyseven chapter glitter like the twenty even starts. Every chapter seems better than the previous one in this book.

இந்து மதம் வெறும் மதம் மட்டுமில்லை, ஒரு வாழ்க்கை முறை! அதில் அடங்கியுள்ள ஏராளமான ரகசியங்களை இன்றைய நவீன அறிவியல் ஆராய்ந்து வியக்கிறது. இப்படிப்பட்ட ரகசியங்களைத் தெளிவாக அறியத் தரும் நூல் இது! இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள தமிழ்நாட்டுக் காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநரும், தமிழறிஞருமான திரு சு.ஸ்ரீபால் அவர்கள், “இதிலுள்ள இருபத்தேழு கட்டுரைகள் இருபத்தேழு நட்சத்திரங்களைப் போல ஜொலிக்கின்றன. ஒரு கட்டுரையைப் படித்தால் அது முன்பு படித்த கட்டுரையை விடச் சிறந்தது என்று எண்ணத் தோன்றுகிறது” எனப் பாராட்டியுள்ளார்.

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘அறிவியல் நோக்கில் ஆன்மீக அதிசயங்கள்!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Learn Tamil Verbs -23 விடு /VIDU verbs (Post No.11,439)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,439

Date uploaded in London – 12 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

We will learn one more compound verb today.

Vidu விடு ending verbs mean some definite action or completed action.

It is conjugated like PADU verbs.

We have seen following PADU verbs already:

ஆசைப்படு , வருத்தப்படு, கவலைப்படு, கோபப்படு , சந்தோஷப்படு

Xxx

WE HAVE ALREADY SEEN  (padu ending verbs)

To say this, I will use

நாம் = Naam =we

ஏற்கனவே = Erkanave= Already

பார்த்துவிட்டோம்= Paarththuvittom= have seen, had seen.

The action is definite, complete.

How do we form these Definite verbs?

You simply add VIDU to the converbial form of the verb

விடு = vidu added to படித்து, வந்து, சாப்பிட்டு, போய் , தூங்கி, பார்த்து

படித்தேன் = படித்துவிட்டேன் = padiththen is I read; if I say Padiththuvitten that means I have read it completely or finished reading.

Depending upon the context, it gives a different shades of meanings

சாப்பிட்டேன்= சாப்பிட்டுவிட்டேன் = sappiiten = I ate= saappittuvitten is I had already eaten or it may even mean I ate everything leaving nothing  for you.

வந்தான்= வந்துவிட்டான் = vanthaan = he came= vanthuvittaan= he has come; here he is

வந்தார்= வந்துவிட்டார் = people are waiting for a VIP in a meeting for long. When the leader or VIP is about to come to the stage, they announce our leader has come= He has  finally arrived

பார்ப்பார்= பார்த்துவிடுவார் = paarththuviduvaar= he will see you; please hide yourself.

தூங்கிவிட்டேன்= Thuungivitten=I had slept (too long); Sorry, I am late I had slept too long= naan thoongkivitten.

xxx

NEW VERBS

xxx

NEW VERBS

Purappdu= starting a journey, leaving a place, setting out, departing புறப்படு,

Kumbidu= worship (God), salute a person or saying Namaste கும்பிடு

See attachments

 Tags- Compound Verbs, Tamil, Definite, Vidu ending

தாவர நோய்கள்: இந்துக்களின் அற்புத மூலிகை அறிவு (Post.11,438)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,438

Date uploaded in London – 12 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்துக்கள் வேத காலம் முதற்கொண்டு எல்லா அறிவியல் துறைகளிலும் கவனம் செலுத்தியுள்ளனர். அவைகளை சம்ஸ்க்ருதத்தில் எழுதியும் வைத்துள்ளதால் நமக்கு  குறைந்தது 3000, 4000 ஆண்டு அறிவியல் வளர்ச்சி பற்றி அறிய முடிகிறது.

உலகிலேயே பழமையான நூலான ரிக் வேதத்தில் மூலிகைகளுக்காகவே  ஒரு சூக்தம் ஒதுக்கியிருப்பதால் (ஓஷதி சூக்தம் , ரிக் 10-97) எந்த அளவுக்கு அவர்களுக்கு மூலிகையின் பெருமை தெரிந்திருந்தது என்பதை றிய முடிகிறது .. முதல் மந் திரத்திலேயே 107 மூலிகைகள் பற்றிச் சொல்கிறார் ரிக் வேத கால டாக்டர். ஆயினும் அவரோ உரைகாரர்களோ நமக்கு 107 மூலிகைகளின் பெயர்களை சொல்லவில்லை. ஏனெனில் அக்காலத்தில் எல்லோருக்கும் அவை பற்றித் தெரியும். ஆனால் பிற்கால நூல்களான சுஸ்ருத சம்ஹிதா, சரக சம்ஹிதை  பிருஹத் சம்ஹிதா முதலிய புஸ்தகங்கள் நமக்கு நிறைய மூலிகைகளின் பெயர்களை சொல்லி பயன்பாடுகளையும் அறிவிக்கின்றன.

அதர்வண வேத சூக்தங்களில் தாவரங்களை பல வகைகளாகப் பிரித்துப் பேசுவதால் அத்தகைய படிப்புகள் இருந்ததும் தெரிகிறது. பழம் கொடுக்கும் தாவரங்களை பலினி என்றும், பழம் தராத தாவரங்களை அபலா என்றும், பூக்கும் தாவரங்களை புஷ்பினி என்றும் , பூவாத தாவரங்களை அபுஷ்பா  என்றும், எப்போதும் பூத்துக் குலுங்கும் தாவரங்களை ப்ரஸூவரி  என்றும் அழைத்தனர்

OLDEST BOTANICAL CLASSIFICATION (AV.8-7-26)

அதர்வ வேதத்தில் 8-7-26ல் ஒரே பாடலில் புஷ்பவதிப்ரஸூவதி, பலினீ , அபலா என்று வருவதால் உலகில் முதல் முதலில் தாவரங்களை வகைப்படுத்தியது இந்துக்கள்தான் என்பதும் தெளிவாகிறது.

தைத்ரீய சம்ஹிதையில் (யஜுர் வேதம் ) மூல (வேர் )துல (பூங்கிளைகள்)காண்ட  (தண்டு), வலச (மரக் கிளை )சாகா (பெரிய கிளைகள் ) புஷ்ப, பல(பழம் ) பர்ண (இலை) என்ற தனித்தனி சொற்கள் கையாளப் படுகின்றன. ஸதபதப் பிராஹ்மணம் மேலும் பல சொற்களை எடுத்தாளுகிறது. இவ்வளவுக்கும் இவை எதுவும் தாவரவியல் (Botany) நூல்  அல்ல.  மதம் தொடர்பான நூல்களே .

முதல்முதலில் வ்ருக்ஷ ஆயூர்வேத என்ற சொல்லை 2300 ஆண்டுகளுக்கு முந்தைய கௌடில்யரின் (சாணக்கியரின்) அர்த்த சாஸ்திரத்தில் (2-24-1) காண்கிறோம். மரங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் அற்புத துறை அது. விவசாய டைரக்டருக்கு (Director of Agriculture in Arthasasatra) க்ருஷி தந்த்ர/விவசாயம் , சுல்வ , வ்ருக்ஷ ஆயுர்வேத தெரிந்திருக்கவேண்டும் அல்லது இவைகளை அறிந்த ஒருவரை உதவியாளராக வைத்திருக்கவேண்டும் என்று சாணக்கியர் சொல்கிறார். அந்தந்த பருவத்தில் விதைகளைச் சேகரித்து வைக்கவேண்டும் என்றும் விளம்புகிறார். ஆகவே 2300 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் துறையும் அதற்கான அதிகாரிகளும் இருந்தது தெரிகிறது . முக்கியமான விஷயம் மரங்களுக்கான  ஆயூர் வேதம் என்பதாகும்.

பின்னர் கஸ்யப சம்ஹிதா, வராகமிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா, விஷ்ணு தர்மோத்தர புராணம் (இரண்டாவது காண்டம்- அத்தியாயம் 300), அக்கினி புராணம் (282 ஆவது அத்தியாயம்) சுர பால எழுதிய வ்ருக்ஷ ஆயூர்வேத நூல்களில் மேல் விவரங்களை அறிகிறோம். தாவரவியல் தொடர்பான அபூர்வ விஷயங்களை இவை, போகிற போக்கில், சொல்கின்றன. ஆயினும் மரங்களுக்கு வரும் நோய்களை விவாதித்து குணப்படுத்துவது எப்படி என்பதை சுர பால எழுதிய வ்ருக்ஷ ஆயூர்வேத புஸ்தகத்தில் மட்டுமே காண முடிகிறது

மரங்களுக்கு ஏற்படும் கெடுதிகளை ஆறுகாரணங்களாகப் பிரிக்கிறது கஸ்யப சம்ஹிதா.

1.கடுங்குளிர்; 2.கடும் வெப்பம் ; 3.கன  மழை 4.சூறாவளிப் புயல் ; 5.மரங்களின் வேர்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைதல் ; 6.யானைகள் உராய்தல் .

சீதோஷ்ண வர்ஷ வாதாதைர்மூலே வ்யாமிஸ்ரிதை ரபி

சாகினாம் து பவேத் ரோகோ த்விபானாம் லேகனேன ச – கஸ்யப சம்ஹிதா , பாடல் 71

இன்று நாம் பத்திரிக்கைகளைத் திறந்தால் இவற்றில் முதல் 4 காரணங்களால் பயிர்கள் அழி வதைப் படிக்கிறோம். ஐந்தாவது காரணம் நெருக்கமாகத் தாவரங்கள் வாழ்ந்தால் வரும் கேடுகள் பற்றிப் பேசுகிறது. யானைகள்  உராய்தல்  பற்றி சங்க இலக்கியப் பாடல்களில் காண்கிறோம். தமிழ்ப் புலவர்களும் சங்க காலத்திலேயே இதைக் கண்டு பாடலில் சேர்த்துள்ளனர்.

தாவரங்களுக்குக் கீழே வேர்கள் பின்னிப் பிணைந்தால் அவைகள் நன்றாகக் காய்க்காது என்று விஷ்ணு தர்மோத்தர புராணம் செப்புகிறது

அப்யாஸ ஜாதா தரவஹ ஸம் ஸ் ப்ருச ன்தஹ பரஸ்பரம்

அவ்யக்த மிஸ்ர மூலத்வாப வந்தி விபலா த்விஜ

தேஷாம் வ்யாதி ஸமுத்பதெள ச்ருணு  ராம சிகித்ஸதம்

வராஹ மிஹிரர் எழுதிய ப்ருஹத் சம்ஹிதா ஒரு கலைக்களஞ்சியம். அவர் 54 ஆவது அத்தியாயத்தில் 31 ஸ்லோகங்களில் விருட்ச (வ்ருக்ஷ) ஆயுர்வேதம் பற்றிப் பாடுகிறார். இலைகள் உதிர்தல், , கிளைகள் காய்ந்து போதல், வளர்ச்சி தடைப்படுதல்  முதலியவற்றை பருவ நிலை எப்படி உண்டாக்குகிறது என்று வராஹ மிஹிரர் விளக்குகிறார். மரங்களின் இலைகள்  பச்சையத்தை இழந்து பாண்டுபத்ரதா (வெண்மை ) ஆவதையும்  கதைக்கிறார்.

நோய்கள் பற்றிச் சொல்வதோடு சிகிச்சை பற்றியும் சொல்கிறார்.

மரங்களின் கிளைகள் பாதிக்கப்பட்டால் அவைகளை வெட்டி , அந்த இடத்தில் களிம்பு தடவ வேண்டும் என்றும் பாலையும் தண்ணீரையும் கலந்து தெளிக்க வேண்டும் என்றும் கூறுகிறார் நூலாசிரியர் வராகமிஹிரர். பழங்கள் காய்க்காவிட்டால் ஆட்டுப் புழுக்கை, எள் , பார்லி மாவு, மாட்டு மாமிசம் ஆகியவற்றைக் கலந்து 7 நாட்களுக்கு  சிகிச்சை தர வேண்டும் என்பார். இன்று எவ்வளவோ நல்ல உரங்கள் வந்திருக்கலாம். 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இதன் துவக்கத்தை அவர் எழுத்தில் வடித்தது ஆய்வு மனப்பாண்மையைக் காட்டுகிறது

 தொடரும்……………………………

 tags– தாவர நோய்கள், அற்புத மூலிகை , வராஹமிஹிரர், வ்ருக்ஷ ஆயூர்வேதம்

பாரேன், படைத்தவனின் புத்திசாலித்தனத்தை, தூ! (Post.11,437)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,437

Date uploaded in London – –   12 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷித செல்வம்

பாரேன், படைத்தவனின் புத்திசாலித்தனத்தை, தூ!

ச.நாகராஜன்

புலவர் ஒருவர் முத்தைப் பார்க்கிறார், தாமரையைப் பார்க்கிறார், மணமணக்கும் கஸ்தூரி எங்கிருந்து கிடைக்கிறது என்று பார்க்கிறார். அட, முத்து கிளிஞ்சலில், தாமரையோ சகதியில், மணமணக்கும் கஸ்தூரியோ மானிடம்!

இது என்ன படைப்பு விசித்திரம்! தூ , படைத்தவனின் புத்திசாலித்தனத்தைப் பாரேன் என்று நகையாடுகிறார்.

பாடல் இதோ:

க்வ ஷுக்தய்: க்வ முக்தா வா   க்வ பங்க: க்வ ச பங்கஜம் !

க்வ ம்ருக: க்வ ச கஸ்தூரி    திக் வித்யாதுர்விதக்ததாம் ||

சிப்பி எங்கே, முத்து எங்கே? சகதி எங்கே, தாமரை எங்கே? மான் எங்கே கஸ்தூரி எங்கே? தூ! பாரேன், படைத்தவனின் புத்திசாலித்தனத்தை! – தூ!!

Where are the oysters and where the pearls?  Where is the. Mud and where the lotus? Where is the deer and where the. Musk? Ah, fie upon the (wretched) cleverness of the Creator! (Translation by S.B. Nair)

*

க்வ வஸந்தி ஸ்ரேயோ நித்யம் பூம்ருதாம் வத கோவித |

அஸாவதிஷய: கோபி யுதுக்தமபி நோஹ்ருதே ||

ஓ, புத்திசாலியே கொஞ்சம் சொல்லேன்! ஒரு அரசனின் செழுமை எங்கே உள்ளது? இதற்கான பதில் இந்தச் செய்யுளிலேயே இருக்கின்ற போதும் கூட அதை உணராமல் இருப்பது ஆச்சரியம் தான்! (விடை அசா – அசா என்றால் வாள் என்று பொருள். ஆகவே ஒரு அரசனின் செழுமை அவன் வாளில் அதாவது அவனுக்கு வெற்றி தந்து வலிமையூட்டும் வாளில் தான் உள்ளது)

Tell me O wise man,Where does the properity of a king reside? This is, indeed, wonderful that though the answer is mentioned (in the verse itself), it is not recognized.   (Translation by S.B. Nair)

*

க்ரோதோ ஹி சத்ரு: ப்ரதமோ நராணாம்

                தேஹஸ்திதோ தேஹவிநாஷானாம்

யதா ஸ்தித: காஷ்டகதோ ஹி வஹ்னி:

    ஸ ஏவ வஹ்னிர் தஹதே சரீரம் ||

கோபமே மனிதனின் தலையாய எதிரி. அது உடலை அழிப்பதற்காக உடலிலேயே உள்ளது. எப்படி காய்ந்த விறகில் தீ இருந்து அதன் ஆதாரத்தையே (விறகையே) அழிக்கிறதோ அது போலத் தான்!

Anger is the foremost enemy od men, it remains in the body for the destruction of body itself; just as fire, that remains in dry wood itself, burns its own substratum (wood)  (Translation by S.B. Nair)

*

க்ரோதோ வைவஸ்வதோ ராஜா  த்ருஷ்ணா வைதரணீ நதி |

வித்யா காம துகா தேனு: சந்தோஷோ நந்தனம் வனம் ||

கோபம் என்பது எமன். ஆசை என்பது வைதரிணி நதி.

வித்யை என்பதை அனைத்தையும் தரும் காமதேனு. சந்தோஷம் அதாவது திருப்தி என்பது நந்தன வனம்.

எமன் – மரண தேவதை; வைதரிணி – நரகத்தில் இருப்பது. நந்தன வனம் – இந்திரனுடைய வனம்.

Anger is King Yama (god of death); greed is Vaitarani (river of hell);  correct knowledge is all giving Kamadenu (and) contentment is Nandana – garden (of Indra).        Translation by S.B. Nair)

***

 ***

புத்தக அறிமுகம் – 111 

ஆஹா! அப்படியா!!

(விஞ்ஞான கேள்வி பதில்கள்)

பொருளடக்கம் 

இந்த நூலில் இருநூறுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு விடைகள் அளிக்கப்பட்டுள்ளன.

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது: 

This book answers various questions about science and general knowledge! Approximately two hundred questions have been answers in a detailed manner in this book! Don’t miss to read this book to know answers to many of your longing questions like The Secret Smile of Mona Lisa, Gnome Project and acid rain and so on.

வாசகர்களின் அறிவியல், பொது அறிவு சார்ந்த நுணுக்கமான கேள்விகளுக்கு விடை தரும் நூல் இது! சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு விரிவான விடைகள் தரப்பட்டுள்ளன! மோனாலிஸா புன்னகையின் மர்மம், ஜெனோம் ப்ராஜெக்ட், அமில மழை என நீங்கள் வெகு நாட்களாக விடை தேடிக் கொண்டிருந்த பல கேள்விகளுக்கு விடையளிக்கும் இந்நூலைப் படிக்கத் தவறாதீர்கள்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ஆஹா! அப்படியா!!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Tamil Hindu Encyclopaedia 23 (Havis =ஹவிஸ், ஆவுதி; Yupa யூபம்)—Post 11,436


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,436

Date uploaded in London – 11 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

We have already seen the Yagas and Yagnas (Also written Yajna) performed by the Sangam Age Tamil Kings.  Of the Yagas, Rajasuya Yaga done by the Choza king Peru Nar Killi is very significant one. The other two Tamil Kings Cheara and Pandya came in person and acknowledged the superiority and seniority of the  Choza. When the great Tamil poetess Avvaaiyar saw them on the same stage together for the first time in her life she was wonder struck. Tamils are notorious for fighting with each other, killing each other, setting fire to others’ towns. Tamils were the longest fighting ethnic group in the world. They fought among themselves for at least 1500 years non stop. When Sundara pandya did the historic blunder of inviting Muslim invaders into Tamil Nadu, Tamil Kingdoms heard the death knell. Then they had to wait until the great Vijaya Nagara Empire rise and save them. Avvaiyaar praised Tamil Unity and wished them to live ever united .

Those who read the Rajasuya performed by Yudhisthra in Mahabharata would understand the significance of the great Yaga.

In Puram 367 Miss Avvaiyaar gives rare information about Brahmins as well in addition to the above compliments.

They/Brahmins are ONE Principled- always trying to see Brahman/God (Brahmana in Sanskrit)

They have TWO Births= Dwija in Sanskrit; Iru Pirappalar in this poem)

They hold THREE Agnis= The fires were known as Dakshinagniyam (Semi Circular altar), Garhapatyam (Circular altar) and Ahavaneeyam (Square altar). In Vedic yajna all these three types of fire are needed. After erecting the yajna hall, the three fires are installed on its three sides. On the west was placed the Garhapatyam/ domestic fire, on the east the Aahavaniya fire (invokable), and on the south the daksinagni /southside fire.

Brahmins carry fire creating Arani Wood equipment. When one wood churns the other wood fire is created. That is what they called invokable fire. They do it while reciting the relevant Mantras.

Since Ms Avvaiyaar saw with her own eyes she described Brahmins with numbers ONE, TWO, THREE.

The second thing Avvaiyar saw on that day was the Brahmins were given Golden Flowers and Gold Coins as Dakshina (fees for performing). While the king was giving, he has to pour water on it to show that as donation. Avvaiyaar described it as well.

The poem in Tamil is given below.

புற நானூறு 367

நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்

தமவே ஆயினும் தம்மொடு செல்லா;

வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;

ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப்

பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து,           5

பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய

நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,

இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி,

வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;

வாழச் செய்த நல்வினை அல்லது        10

ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை;

ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்

முத்தீப் புரையக் காண்தக இருந்த

கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்!

யான் அறி அளவையோ இதுவே: வானத்து      15

வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்

பரந்து இயங்கு மா மழை உறையினும்,

உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் நாளே!

திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.

சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், ஒருங்கு இருந்தாரை ஒளவையார் பாடியது.

Xx

AAHUTHI (Offering)

In Many Sangam poems we come across the word AAKUTHI (also aaVuthi). Every Yaga or Yagna is concluded with Puurna ahuthi. Ghee, cooked rice and Gold coins and silk clothes were placed in the Fire/ Agni by reciting the final mantras. Aahuthi is the offering of Ghee and Food and Valuables to God. Agni as a messenger of God carries them to heaven.

Here are some lines with Aavuthi/ Aakuthi:

Puram 15-19;99-1; Pathitru.21-5/7 also21- 13;

Madu – line 494;Paati. Lines 55, 200.

xxx

Havis

Havis is also used to specify the offering, which is usually ghee+ cooked  rice. It is tamilized as AVI. ஹவிஸ் = அவி =நெய்யும் சோறும் கலந்த உருண்டை

Puram 377/5; 363-12;

Pari .5-40/41; 6-11; 8-80; 10-84; 16-53

All these poems and later Tirukkural show that Brahmins in Tamil country and the Kings did offer to Gods regularly.

Xxx

Strict Rules

When the Fire ceremonies were performed Brahmins followed strict rules. Nakkirar in Murugu confirms it in lines 95-96

Those who perform Vedic Fire Rituals have to observe vow (vrata, fasting) which is detailed in Pathitru. Verse 74

Tamils believed that by performing Yagas and Yagnas one would go to Heaven (Madurai. Lines 494-495).

We have already seen how the poet Paalai Gauthamanar disappeared with his wife during the tenth Yaga when the Chera King organised ten Yagas according to poet’s wish. It is a great miracle reported in Pathitruppaththu.

Xxx

YUPA= யூபம் Tall Post or Pillar in the Fire Place.

The Rig Vedic Sanskrit word was used verbatim by Tamil poets. I have written 3 articles on YUPA pillar. Please see the links below:

·         AMAZING RIG VEDIC YUPA IN SANGAM … – Tamil and Vedas

·         https://tamilandvedas.com › 2018/07/05 › amazing-rig-…

·          

·         5 Jul 2018 — 2000-year-old Tamil Literature used the same Sanskrit word in several places in two meanings; sacrificial pot or just a post.

Yupa Post in Sangam Tamil Literature and Rig Veda (Post No …

https://tamilandvedas.com › 2018/04/23 › yupa-post-in…

23 Apr 2018 — The Rig Vedic Sanskrit word YUPA is used in 2000 year old Sangam Tamil literature without any change i.e. same Sanskrit word Yupa is used.

List of Yupa Inscriptions – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › list-of-yupa-inscriptions

5 Jul 2018 — Posts about List of Yupa Inscriptions written by Tamil and Vedas.

Missing: Hari ‎| Must include: Hari

Tamil References:

ஆவுதி மண்ணி மா விசும்பு வழங்கும் பெரியோர் போல- மதுரைக் . 494/95

xxx

கேள்வி கேட்டுப் படிவம் ஓடியாது வேள்வி வேட்டனை – பதிற்று

xxx

மந்திர விதியின் மரபுரி வழா அந்தணர் வேள்வி – முருகு 95/96

Xxx

நற்பனுவல் நால்வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பலகொல்?

Xxx

—subham—-

Tags- Ahuti, Avuthi, Havis, Three Fires, Rajasuya, Yupa pillar, ஆவுதி, ஆகுதி, ஹவிஸ், யூபம், யாகம், யக்ஞம், ராஜசூயம்

தாவரங்களிலும் நைட்ரஜன்- பகுதி 3 (LAST PART)- Post No.11,435

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,435

Date uploaded in London – 11 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Part 3 of Nitrogen (last part)

நைட்ரஜனை யாரும் மறக்க  முடியாது ; வயாக்ராவுக்கும் நைட்ரஜன்; நோபல் பரிசுக்கும் நைட்ரஜன்; ரத்தம், ஆண்களின் விந்து , பெண்களின் கரு /முட்டையைக் பாதுகாக்கவும் நைட்ரஜன், பெட் PET என்னும் உடல் ஸ்கானிங் விஷயத்திலும் நைட்ரஜன் என்று கடந்த இரண்டு பகுதிகளில் கண்டோம்.

இப்போது ‘அவரை’ முதலிய தானியங்களின் வேர்களில் முடிச்சுகளாக இருந்து பலன் தரும் நைட்ரஜன் பற்றிக் காண்போம்.

நைட்ரஜன் முடிச்சு (NODULES)

காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை நிலைப்படுத்த பூமியில் உள்ள பாக்டீரியாக்களும் (CYANO BACTERIA) கடலில் உள்ள (ALGAE) பாசிகளும்  உதவுகின்றன.அவரை, மொச்சை, சோயா பீன்ஸ் போன்ற பயறு வகைத் தாவரங்களின் (LEGUMES) வேர்களில் முடிச்சுக்களைப் (NODULES) பார்க்கலாம். சில வகை பாக்டீரியாக்கள் தாவரங்களுடன் கூட்டுறவு வைத்துக் கொள்கின்றன அதாவது கார்போஹைட்ரேட்டைத் தாவரங்களில் இருந்து பெற்றுக்கொண்டு அம்மோனியா வாயுவை வெளியிடுகின்றன. இவற்றால் மண்வளம் பெருகும். நைட்ரஜன் மெதுவாக காற்றுமண்டலத்தில் கலக்கும். இவ்வாறு செய்வதை நைட்ரஜன் சுழற்சி (NITROGEN CYCLE) என்பர். இதே போல அழுகிய தாவரங்கள், இலை  மக்கு ஆகியனவும் நைட்ரேட்டைஉண்டாகி பின்னர் அது காற்று மண்டலத்திற்குச் செல்ல உதவுகின்றன.

நைட்ரேட்டுகள்(NITRATES) மனித உடலில் புற்றுநோயை உண்டாக்குவதாக சில காலத்துக்கு அச்சம். நிலவியது. இதனால் குடிநீரில் இந்த அளவுக்குத்தான் நைட்ரேட் இருக்கலாம் என்ற கட்டுப்பாடுகளையும் அரசு விதித்தது. மனிதர்களின் குடலில் உள்ள பாக்டீரியாக்களும் நைட்ரேட்  உப்பை உருவாக்குகின்றன. ஆயினும் குடிநீரிலிருந்து உடலில் சேரும் நைட்ரேட் மிகவும் குறைவு. கீரைவகைத் தாவரங்கள், சாலட் SALAD டில் பயன்படும் லெட்டஸ் (LETTUCE) ஆகியவற்றிலும் நைட்ரஜன் உப்புகள் இருக்கின்றன.

எரிமலை கக்கும்  நைட்ரஜன்

பூமிக்கு நடுவில் உள்ள கருப் பகுதியில் கொதி நிலையில் குழம்பு போல மூலகங்கள் இருக்கின்றன. இவை வெளியே வந்து வளி  மண்டல நைட்ரஜனை உற்பத்தி செய்தது. இப்போதும் எரிமலைகள் வெடித்து தீக்குழம்பு வெளிவரும்போது நைட்ரஜன் வாயுவும் வெளிவருகிறது.இது நைட்ரஜன் உப்புக்களாக மாறி பல வகையில் உதவுகிறது .ஏனெனில் நைட்ரஜன் எதனுடனும்  நேரடியாக வினை ஆற்ற முடியாது. இதற்கு மின்னலும், பூமியில் உள்ள கண்ணுக்குத்  தெரியாத பாக்டீரியா உயிரினங்களும் உதவுகின்றன மனிதர்கள் உண்டாக்கும் நைட்ரஜன், வண்டி வாகனங்களின் புகை, விவசாய உரங்கள் ஆகியவற்றிலிருந்து காற்றில் கலக்கின்றன.

உயிர் காக்கும் காற்றுப் பைகள் (LIFE SAVING AIR BAGS IN CARS)

வெளிநாடுகளில் கார் சீட்டுகளில் காற்றுப் பைகளை (AIR BAGS)பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. ஒரு வண்டி மற்றொரு வண்டி மீது மோதினால்  அப்போது ஏற்படும் அதிர்ச்சியில் அனைவரும் முன் புறம் பாய்ந்து நசுங்கிப் போகிறார்கள் ; இதைத் தடுக்க, அதிர்ச்சி ஏற்பட்ட ஒரு சில வினாடிகளில் பலூன் போல் விரிவடையும் பைகள் பொருத்தப்படுகின்றன . சாதாரண நிலையில் அவை காற்று இல்லாமல் இருக்கும். அதில் 200 கிராம் சோடியம் அசைட் SODIUM AZIDE என்னும் உப்பை வைக்கின்றனர். இது நைட்ரஜன், சோடியம் கலந்த ரசாயனப்பொருள்.. பத்து மைல் வேகத்தில் வரும் கார் மோதினாலும் கூட, எலெக்ட்ரானிக் சென்ஸார் காற்றுப்பையை இயக்குவிக்கும். அப்போது 300 டிகிரி C -யில் (SODIUM AZIDE) சோடியம் அசைட் நைட்ரஜன் வாயுவை உண்டாக்கி காற்றுப்பையை(Air Bags) பெரிய பலூன் ஆக்கி நம் உடலை முன் புறம் மோதாமல் தடுக்கும். ஆக உயிர் காக்கும் தோழனாக நம்முடன் காரில் பவனி வருவதும் நைட்ரஜன் தான்..

நைட்ரஜனால் கிடைத்த நோபல் பரிசு 

நோபல் பரிசு உண்டாக ஆல்ப்ரெட் நோபல் எப்படி நைட்ரஜன் வெடிமருந்தினால் கிடைத்த  பணத்தை ஒதுக்கினார் என்று முன்னர் பார்த்தோம் . ரசாயன நோபல் பரிசு கிடைக்க நைட்ரஜன் உதைவிய செய்தியும் உண்டு; நைட்ரஜனையும் ஹைட்ரஜனையும் குறிப்பிட்ட வெப்பத்தில் குறிப்பிட்ட அழுத்தத்தில் கலந்தால் அம்மோனியா வாயுவை உண்டாக்கலாம் என்பதை ஜெர்மன் ரசாயன நிபுணர் பிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) கண்டுபிடித்தார். பின்னர் இதை, குறைவான வெப்பத்தில், அழுத்தத்தில் உருவாக்கலாம் என்று அவரே அறிவித்தார். இதைக் கண்டு பிடித்ததற்காக அவருக்கு 1918ம் ஆண்டு ரசாயன /வேதி இயல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

எலியைக் கொன்ற நைட்ரஜன்

ஆரம்பகாலத்தில் நைட்ரஜன் வாயு ஒரு தனிப்பட்ட மூலகமே என்று கண்டுபிடிக்க பல காலம் ஆயிற்று.

முதலில் சால் அம்மோனியாக் (Sal ammoniac) என்ற உப்பை நூற்றாண்டுக் கணக்கில் பயன்படுத்தி வந்தனர். அப்போது அதில் நைட்ரஜன் என்னும் வாயு இருப்பதை எவரும் அறியார்.1760 ஆம் ஆண்டில் ஹென்றி காண்வென்டிஷ், ஜோசப் ப்ரீஸ்ட்லி (Henry Cavendish, Joseph Priestly) ஆகியோர் காற்றில் உள்ள ஆக்சிஜனை அகற்றினால் என்ன கிடைக்கும், என்ன மிஞ்சும் என்று தனித் தனியே,  ஆராய்ந்தனர். குடுவையில் ஆக்சிஜன் போக மிஞ்சிய காற்றில் மெழுகு வர்த்தியை ஏற்றிவைத்தால் அது அணைந்து போயிற்று. அந்தக் குடுவையில் ஒரு உயிருள்ள எலியைப் போட்டனர். அது செத்து மடிந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதி வியந்துகொண்டனர். அதற்கு முன்னர் கிறிஸ்தவ பாதிரியும் ஆராய்ச்சி ஆர்வலருமான ஸ்டீபன் ஹெல்ஸ் என்பாரும் இப்படிப் பல ஆராய்ச்சி செய்தார் . ஆயினும் இறுதியில் டேனியல் ரூதர்போர்ட் (Daniel Rutherford) என்ற மாணவர்தான்  இதை நைட்ரஜன் என்று அறிவித்து எடின்பர்க் நகரில் டாக்டர் பட்டமும் வாங்கினார். அதற்குப் பின்னர் பிரீஸ்ட்லீ இதை எழுத்தில் வடித்தார்.

அமெரிக்க விஞ்ஞான கூடங்களில் புதுவகை நைட்ரஜன் மூலக்கூறுகள் (Atomic Nitrogen and N5+ion) உண்டாக்கப்படுகின்றன . அவை விஞ்ஞானிகளுக்கு மட்டுமே பயன்தரக்கூடிய தகவல்கள். ஒரு காலத்தில் பல புதுமைகளை உண்டாக்க அவை உதவலாம். யாரே அறிவார்!!

Tags- நைட்ரஜன் சுழற்சி ,காற்றுப் பைகள், Air bags, நைட்ரஜன் முடிச்சு,

தன்னேர் இலாத தமிழின் பெருமை! (Post No.11,434)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,434

Date uploaded in London – –   11 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தன்னேர் இலாத தமிழின் பெருமை!

ச.நாகராஜன்

இறைவனே தந்த தமிழ் மொழியின் பெருமையை முற்றிலுமாக யாராலும் உரைக்க முடியாது.

சங்க காலத்தில் இருந்து தற்காலம் வரை தமிழின் புகழைச் சொல்லி வந்திருக்கின்றனர் ஆன்றோர்.

அவற்றில் மிக முக்கியமான ஐந்து பாடல்களை பெருந்தொகை திரட்டில் பார்க்க முடிகிறது.

பொருளியல் பகுதியில் 2157, 2158, 2159, 2160, 2161 என்ற வரிசையில் இந்தப் பாடல்கள் தரப்பட்டுள்ளன.

பாடல்கள் இதோ:

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத் திருள்கடியு – மாங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது

தன்னே ரிலாத தமிழ்.

இந்தப் பாடலின் பெருமையை முற்றிலுமாக யாராலும் உரைக்க முடியாது. அப்படிப்பட்ட அற்புதமான பாடல் இது.

இருள் கடியும் என்பதற்கு பதிலாக இருள் அகற்றும் என்றும் ஒரு பாடம் உண்டு. (நான் இருள் அகற்றும் என்பதையே பயன்படுத்தி வருகிறேன்._

ஓங்கல் என்றால் உதயகிரி, பொதியமலை என்று கூறலாம்.

இந்தப் பாடல் தண்டியலங்காரத்தில் காணப்படுகிறது,

அடுத்த பாடல்:

பைங்க ணிளம்பகட்டின் மேலானைப் பான்மதிபோற்

றிங்க ணெடுங்குடையின் கீழானை – யங்கிரந்து

நாம் வேண்ட நன்னெஞ்சே நாடுதிபோய் நானிலத்தோர்

தாம்வேண்டுங் கூடற் றமிழ்

பாடபேதம் – ணிளம்பகட்டின்  என்பதற்கு பதிலாக ணிளம்பகட்டு,

யங்கிரந்து என்பதற்கு பதிலாக தங்காது

நாம் வேண்ட என்பதற்கு பதிலாக நாம் வேண்டு

பத்துப்பாட்டு நூலில் மதுரைக் காஞ்சியில் இறுதியில் இது தரப்பட்டுள்ளது.

மேலானை, கீழானை ‘இரந்து தமிழ் வேண்டுதி’ என்றது பாண்டிய மன்னனின் தமிழ்த் தலைமையைக் குறிக்க வந்தது. கூடல் தமிழால் வேண்டுதி என்றும் கொள்ளலாம்.

அடுத்து ஒரு அருமையான பாடல்:

சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும்

நல்லிருந் தீதாது நாறுதலான் – மல்லிகையின்

வண்டார் கமழ்தாம மன்றே மலையாத

தண்டாரான் கூடற் றமிழ்

இதுவும் பத்துப் பாட்டு நூலில் காணப்படும் ஒரு பாடலாகும்.

தீதாது என்ற சொல்லை தீந்தாது என்று திருத்திக் கொள்ளல் வேண்டும்.

மலையாத தண்டாரான் – “ஏனையோரால் அணியப்படாத ஆரத்தைப் பூண்டவன். இதன் பொருள் : இந்திரனால தரப்பட்ட ஆரத்தை (மாலையை) அணிந்தவன் என்று பொருள். பாண்டியனின் பெருமை இதனால் புகழப் படுகிறது.

அடுத்த பாடல்:

மாவடு வென்ன்னு மலர்புரை கண்ணினாய்

பாவெடுத்துப் பாடும் பயனோக்கி – மேவி

எடுத்த வினத்தினா லின்பஞ்சொற் சேரத்

தொடுத்து மொழிவ தமிழ்

யாப்பருங்கல விருத்தியில் காணப்படும் பாடல் இது.

அடுத்த பாடல்:

செந்தமிழ்ச் செய்யுட் டிறந்தெரிந்து செந்தமிழ்க்கண்

வந்த வடமொழியு மாற்றாதே – சந்தம்

வழுவாமற் கொண்டியற்று மாண்பினார்க் குண்டே

தழுவாமை நிற்குந் தமிழ்

 இதுவும் யாப்பருங்கல விருத்தியில் காணப்படும் பாடலாகும்.

அடுத்து சமீப காலத்தில் தோன்றிய கவியோகி சுத்தானந்த பாரதியார் அழகுற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் ஒன்றைத் தந்துள்ளார்:

காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்
போதொளிர் பூந்தாமரையும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய் திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழ்க!

இந்தப் பாடலில் குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் என்னும் அற்புதமான ஐந்து காப்பியங்களை ஆபரணமாகத் தமிழ்த் தாய்க்குச் சொல்லி வாழ்த்து கூறுவதைப் பார்த்து வியக்க முடிகிறது.

குண்டலம் என்பது காதில் அணியும் ஆபரணம். அதுவே குண்டலகேசி.

வளையல் என்பது கைகளில் மகளிர் அணியும் ஆபரணம். அது வளையாபதியாகத் திகழ்கிறது.

மாணிக்கப் பதக்கங்கள் மணி மாலைகளுடன் மார்பில் அணியப்படும் ஒரு ஆபரணம். அதுவே சீவக சிந்தாமணியாக அமைகிறது.

மேகலை மகளிரால் இடுப்பில் அணியப்படும் ஒரு ஆபரணம். அதுவே மணிமேகலையாகத் திகழ்கிறது.

காலில் அணிவது சிலம்பு. அதுவே அன்னையின் பாதங்களில் சிலப்பதிகாரம் என்ற காப்பியமாக ஒலி செய்து விளங்குகிறது.

அற்புதமான கவினுறு கற்பனையைக் கைக் கொண்டு தமிழ் அன்னையை வாழ்த்துகிறார் கவியோகி.

இந்தப் பாடல்களை அனைத்து மாணவ மாணவியரும் கற்றுத் தெளிய இவற்றைப் பாட புத்தகங்களில் சேர்க்க வேண்டும்.

தமிழின் பெருமையை இளம் உள்ளங்களில் பதிய வைக்க வேண்டும்.

செய்வோமா?

***

TAGS- தமிழின் பெருமை, யாப்பருங்கல விருத்தி

புத்தக அறிமுகம் – 110

ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள்

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

 1. வானத்தை வசமாக்கும் புதிய பயணங்கள்!   

 2. பூமியின் வெப்பம் அதிகமாகிறது! 

 3. கவா… கவா!

 4. விண்வெளிக் குப்பை!  

 5. விலங்குகளின்மீது வியப்பூட்டும் அறிவியல் சோதனைகள்!   

 6. உலகை மாற்றிய தாவரங்கள்!    

 7. புதிய கிரகம் கண்டுபிடிப்பு!  

 8. நீலத் திமிங்கிலங்களின் தகவல் பரிமாற்றமுறை! 

 9. தேவை புத்துணர்ச்சி தரும் தூக்கம்!    

10. சிகரெட்டும் அபாயகரமான போதைப் பொருளே!   

11. வால் நட்சத்திரத்தில் இறங்கத் திட்டம்! 

12. சாட்லைட் கண்டுபிடித்த பழைய நகரம்!

13. வயர்லெஸ் பல்ப் எரிய விட்ரிசிடி!

14. அருகி வரும் அரிய விலங்கு வகைகள்!

15. என்றுமே இளமையாக இருப்பது பற்றிய அறிவியல் ஆய்வு!  

16. நவீன ரொபாட்!  

17. நீடித்த மகிழ்ச்சிக்கு அறிவியல் காட்டும் வழி!

18. மீன்வளம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்? 

19. சும்மா இருக்குமா மூளை?  

20. முகபாவமே அனைத்தும் சொல்லும்    

21. நீர் நிறைந்த புதிய பூமி கண்டுபிடிப்பு!  

22. மாறப் போகும் தொழிலகங்கள்!   

23. புதிய தொழில் முறை! 

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

This is a collection of 23 science articles written by the famous author

S. Nagarajan. Besides being amazing in the essence, every article is really precise not more than two pages. Thus makes the book not only suitable for elders but also serves as a good gift for the children. Simply the names of the articles are astounding such as Transporting anywhere in the world within two hours, Laser broomstick for the galaxial garbage, the communication of Blue Whales and the replacement of Electricity by Vitricity and so on.

பிரபல எழுத்தாளர் ச.நாகராஜன் எழுதியிருக்கும் 23 அறிவியல் செய்திக் கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகள் ஒவ்வொன்றும் சுவையாகவும் புதுமையான தகவல்களைக் கொண்டதாகவும் இருப்பது மட்டுமல்லாமல் எளிமையாகவும் ஓரிரு பக்கங்களிலேயே அடங்குபவையாகவும் இருக்கின்றன. இதனால் பெரியவர்கள், தாங்கள் படிப்பதோடு நில்லாமல் குழந்தைகளுக்கும் இந்நூலைப் பரிசளிக்கலாம். இரண்டு மணி நேரத்திற்குள் உலகின் எந்த மூலைக்கும் சென்று விடக் கூடிய அளவுக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பம், விண்வெளிக் குப்பைகளுக்கான லேசர் விளக்குமாறு, நீலத் திமிங்கலங்களின் தகவல் பரிமாற்ற முறை, எலக்ட்ரிசிடிக்கு மாற்றாக வரவிருக்கும் விட்ரிசிடி என நூலில் இடம் பெற்றிருக்கும் சில அத்தியாயங்களின் பெயர்களே வியப்பூட்டுகின்றன.

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள்’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Learn Tamil Verbs (Lesson 22)- ‘PADU படு’ ending Verbs (Post No.11,433)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,433

Date uploaded in London – 10 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Tamils use many verbs often which end with the sound or suffix PADU and they are all conjugated in the same way. It is classified as Fourth Class verb in the Seven Verb classification of Tamil Language.

கவலைப்படு = Kavalai= worry (noun)

Kavalaip padu (verb)= worrying

வெட்கப்படு = Vetkam = shyness, shame (noun)

Vetkap padu (verb) = feel ashamed, feeling shy

சந்தோஷப்படு = Santhosham= Happiness (noun)

It is a Sanskrit word, commonly used by the Tamils

Santhoshap padu (verb)= feel happy, becoming happy

வருத்தப்படு = Varuththam = Sorrow, Grief

Varuththap padu (verb) = feel sorry, regret

கோபப்படு = Kobap padu= angry about…….கோபம் = Anger

ஆசைப்படு = Aasaip padu=  desiring or wishing, wanting ஆசை = Desire

Once you one conjugation of the above you can use a lot other similar verbs in the same way. We have already seen Saappidu (eat). These PADU verbs are in the same class. Look at the charts below:

Download them and print them in larger font or save them on Desktop and enlarge them

Also look at Studytamil.wordpress.com for my old lessons posted ten years ago.

Lesson 11

December 3, 2011

Tamil and Vedas Uncategorized 4 Comments [Edit]

Click below for Lesson 11

Lesson 11

Lesson 10

December 3, 2011

Tamil and Vedas Uncategorized Leave a comment [Edit]

Click below for Lesson 10

Lesson 10-Case Suffix chart

Lesson 9

December 3, 2011

Tamil and Vedas Uncategorized Leave a comment [Edit]

Click below for Lesson 9

LESSON 9

Lesson 8

December 3, 2011

Tamil and Vedas Uncategorized Leave a comment [Edit]

Click below for Lesson 8

Lesson 8

Lesson 7

November 22, 2011

Tamil and Vedas Uncategorized Leave a comment [Edit]

Click below to see the Lesson 7 PDF

Lesson 7 sentences 283 -331

Lesson 6

November 21, 2011

Tamil and Vedas Uncategorized Leave a comment [Edit]

Click below to download the next lesson:

Lesson 6 _sentences 214-282_

Lesson 5

November 17, 2011

Tamil and Vedas Uncategorized 4 Comments [Edit]

Click to see the third part of the lesson plan below.

Lesson 5

Lesson 4

November 7, 2011

Tamil and Vedas Uncategorized 1 Comment [Edit]

The file below contains up to sentence number 165.

This covers up to YouTube lesson number 10.

பழக்கடை pazakkadai

Lesson videos now uploaded to YouTube!

October 29, 2011

Tamil and Vedas Uncategorized Leave a comment [Edit]

Click here to view my Free YouTube lessons on Tamil!

Lessons 1 to 8 have been uploaded with more to come!

S Swaminathan

Lesson 3: 1000 Tamil sentences

October 19, 2011

Tamil and Vedas Uncategorized Leave a comment [Edit]

Please find the link to the second part of 1000 Tamil sentences below.

SECOND PART OF 1000 SENTENCES

Lesson 2 : 1000 Tamil sentences

October 9, 2011

Tamil and Vedas Uncategorized 1 Comment [Edit]

Here is the SECOND LESSON

1000 வாக்கியங்கள் THOUSAND SENTENCES

60 sentences are given in this part.

Lesson 1: Learn Tamil Quickly and Easily!

October 6, 2011

Tamil and Vedas Uncategorized 4 Comments [Edit]

See the attached PDF (by clicking on the link below) for the first lesson!

LESSON 1 and INTRO

FOUR HUNDRED WORDSTags- Tamil verbs, Fourth class, PADU verbs, 

இதாலியில் அதிசய கண்டுபிடிப்பு! வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்!!(11,432)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,432

Date uploaded in London – 10 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

இதாலியில் அதிசய கண்டுபிடிப்பு– வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்

அதிசயங்களுக்குக்  குறைவே இல்லை; விஞ்ஞானிகள் மட்டும்தான் வாரம்தோறும் அதிசயக் கண்டுபிடிப்புகளை சொல்லுவார்கள் என்று நாம் நினைக்கலாம். வரலாற்று அறிஞர்களும் வாரம்தோறும் புதிய செய்திகளை அளித்த வண்ணம் இருக்கின்றனர். மேலை நாடுகளில் இதற்காக பல மாதப்பத்திரிக்கைகள் விற்பனை ஆகின்றன. அதில் யார்  எங்கே என்ன புதையலைக் கண்டுபிடித்தார்கள், எந்த வரலாற்று ஆவணத்தை, கலைப் பொருளை  என்ன விலைக்கு ஏல நிறுவனங்கள் விற்றன என்ற புதிய செய்திகள் நூற்றுக் கணக்கில் வெளியாகின்றன. ஆனால் 8-11-2022 அன்று எல்லா முக்கிய நாளேடுகளும் வெளியிட்ட செய்தி இத்தாலியின் வரலாற்றையே மாற்றி எழுதும் அளவுக்கு முக்கியமானவை என்று பத்திரிக்கைகள் கொட்டை எழுத்தில் செய்திகளை வெளியிட்டன.. அப்படி என்ன அதிசயம் ?

முதலில் எட்ருஸ்கன் நாகரீகத்துக்கும் , இந்துக்களுக்கும் உள்ள தொடர்பை  அறிந்தால் இதன் முக்கியத்துவம் இன்னும் அதிகம் ஆகும்

இந்துக்களைப்  போல அவர்களும் ‘சுவஸ்திகா’ சின்னத்தை அதிக அளவு பயன்படுத்தினர்.

அவர்களும் பறவை சகுனத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர் ;

அவர்கள் பாபிலோனியர் போல கல்லீரல் ஜோதிடம், ஆரூடத்தில் நம்பிக்கை உடையவர்கள் ;

இந்துக்களைப் போலவே தாயத்துக்கள் , காணிக்கைகள் செய்தனர்; குழந்தையின் ஆரோக்கியத்துக்காக குழந்தை உருவம் செய்து காணிக்கையாகக் கொடுத்தல் முதலியன குறிப்பிட்டத்  தக்கவை.

ETRUSCAN- HINDU/ TAMIL LINK – Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/07/28 › etruscan-hin… 

28 Jul 2012 — Etruria is the modern day Tuscany and part of Umbrian Italy. They ruled Rome from 616-509 BC. Roman civilization was greatly influenced by …

DIVINATION in The Vedas, Babylonian and Etruscan

https://tamilandvedas.com › 2015/04/10 › divination-in…

10 Apr 2015 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. DIVINATION in The Vedas, Babylonian and Etruscan.

ஆரூடம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஆ… 

·Translate this page

இதாலி நாட்டில் இருந்த எட்ருஸ்கன் நாகரீகம் இந்துக்கள் போலவே பறவைகள் சகுனத்தில் .. 

எனக்கு இந்த ஆராய்ச்சியில் மிகவும் ஈடுபாடு இருப்பதால் இத்தாலிக்கு இரு முறை சென்றபோது ரோம் நகரின் ஒதுக்குப் புறத்திலுள்ள எட்ருஸ்கன் மியூசியத்துக்குச் (ETRUSCAN MUSEUMIN ROME) சென்று வரலாற்று கலைப் பொருட்கள் சின்னங்களை நேரில் கண்டேன்.

புதிய செய்தி இதோ :

இதாலியில் ஒரு ஊற்றுக்கு அடியில் 24 சிலைகளைக் கண்டுபிடித்துள்ளனர். அவைகளில் எட்ரூஸ்கன் மற்றும் லத்தீன் மொழியில் பெயர்களும் வேறு சில குறிப்புகளும் காணப்படுகின்றன . இவைகளை கிறிஸ்தவர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்னாள் கற்களைப் போட்டு அடைத்துவைத்தனர். அதற்கு முன்னர் அகஸ்டஸ் ஸீஸர் முதலிய புகழ்பெற்ற மன்னர்கள் அங்கே வந்து பழைய தெய்வங்களை வழிபட்டனர் . பழைய தெய்வங்களை வழிபடக்கூடாதென்பதற்காக பெரிய கற்களைப் போட்டு அந்த இடங்களை கிறிஸ்தவ வெறியர்கள் மூடிவைத்தனர். இப்பொழுது பெரிய கற்களை அகற்றியபோது 24 உலோக விக்ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது இயற்கையான வெந்நீர் ஊற்று. மக்கள் அங்கே வந்து குளித்துவிட்டு கிறிஸ்துவுக்கு முந்தைய ரோமானிய தெய்வங்களை வழிபட்டனர். அப்படிச் செய்கையில் நல்ல அதிர்ஷ்டம் அடிப்பதற்காக காசுகளை ஊற்றில் எறிவார்கள். குழந்தைகளுக்காக  வேண்டிக்கொண்டு உருவங்களையும் தண்ணீரில் எறிவார்கள் ; அப்படிப்பட்ட 5000 நாணயங்களும் கலைப்பொருட்களும் 2019 முதல் கிடைத்துவந்தன. இப்பொழுது கிறிஸ்தவர்கள் அடைத்துவைத்த கற்களை அகற்றியபோது பெரிய அதிசயம் காத்திருந்தது 24 உலோக விக்ரகங்கள் கிடைத்தன. அவற்றில் ஐந்து, ஆள் உயரம் உடையவை. எட்ருஸ்கன்கள் வழிபட்ட தெய்வங்கள் அவை.

டஸ்கனி பிரதேசத்தில் சியெனா பகுதியில் சான் காசியானோ என்ற சிறிய ஊர் உள்ளது அங்குள்ள இயற்கையான வெந்நீர் ஊற்று 2500 ஆண்டுகளாக பயன்படுகிறது அதிலுள்ள உப்புகள் , உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பதால் அகஸ்டஸ் சீசர் என்ற புகழ்பெற்ற மன்னர் முதல் பாமரர் வரை அங்கே வந்து குளித்தனர்.(a thermal bath in San Casciano, a small town in the province of Siena, Tuscany.). கிறிஸ்தவ மதம் பரவியவுடன் பழைய தெய்வங்கள் இருந்த பகுதிகளை கிறிஸ்தவ வெறியர்கள் அடைத்துவிட்டு புதிய ஊற்றுப் பகுதியை உண்டாக்கினர் ; காலப்போக்கில் அது சகதி நிறைந்த பகுதியாகி கேட்பாறற்றுக் கிடந்தது. 2019 முதல் அங்குள்ள பல்கலைக்  கழகப் பேராசிரியர் தலைமையில் ஆராய்ச்சி துவங்கியது .  நவம்பர் எட்டாம் தேதி (2022) முக்கிய அறிவிப்பு வெளியிட்டு என்ன என்ன கிடைத்தன, அதன் முக்கியத்துவம் என்ன என்பதை தொல்பொருட் துறையினர் அறிவித்தனர்.

பல காலத்துக்கு கிறிஸ்தவர்களும் எட்ருஸ்கன்க்ளும் இங்கே கூட்டாக வந்து வழிபட்டது தெரிகிறது ஆனால் வெளியே அவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் குடுமி பிடிச்சண்டைகள் நடந்தன. பிறமத வழிபாட் டை  அழிக்க முடியாததால் பெரும் கற்களால் அப்பகுதியை கிறிஸ்தவர்கள் மூடினர்.

இப்போது கண்டெடுக்கப்பட்ட சிலைகள் விவரம் வருமாறு:-

இவை 2300 ஆண்டுகளுக்கு முன்னர் படைக்கப்பட்டவை .

Hindu Swastika in Etruscan

ரோமானியர்களும் கிரேக்கர்களும் ஆரோக்கிய தேவதையாக வழிபட்ட தேவியின் பெயர் ஹைஜியா ; அவள் கையில் ஒரு பாம்பு சுற்றியிருக்கும். அவனுடைய சிலை அருகில் படுத்திருக்கும் இளைஞனுடன் கிடைத்திருக்கிறது sleeping ephebe lying next to Hygeia, the goddess of health, with a snake wrapped around her arm.

அப்பாலோ (APOLLO) சிலை மற்றும் குழந்தைகள் விக்ரகங்கள், மன்னர்கள் என்று கருதப்படும் விக்ரகங்களும் கிடைத்துள்ளன. 1972-ம் ஆண்டில் தாடியுடன் கூடிய இரண்டு கிரேக்க உருவங்கள் கிடைத்தன. அதற்குப்பின்னர் கிடைத்த பொக்கிஷம் இவை என்று இதாலிய மியூசிய டைரக்டர் மாஸிமோ ஓசன்னா கூறினார்.

தொல் பொருட் துறை அறிஞரும் அங்குள்ள பல்கலைக்கழகப் பேராசிரியுமான ஜாகோபோ தபோல்லி இந்த ஆராய்ச்சிகளை 4 ஆண்டுகளாக நடத்திவருகிறார்.. எட்ரூஸ்கன்கள் கி.மு 900 முதல் டஸ்கனி அம்ப்ரியா பகுதியில் வாழ்ந்தனர். முதல் நூற்றாண்டில் ரோமானிய பேரரசு ஸ்தாபிக்கப்படும் வரையில் அவர்கள் கொடிகட்டிப் பறந்தனர். பின்னர் அது கிறிஸ்தவ மதத்தில் கரைந்துபோய்விட்டது.

காணிக்கையாக செலுத்தப்பட்ட ரோமானிய தெய்வங்களின் சிலைகளும் இளையோர் முதியோர் உருவங்களும் பெயர்களுடன் காணப்படுகின்றன. அவை லத்தீன் மற்றும் எட்ருஸ்கன் பெயர்களாக இருப்பதால் இரு பிரிவினரும் முதல் 500 ஆண்டுகளுக்கு கூட்டாக வழிபாடுசெய்ததும்  தெரிகிறது.

–SUBHAM—

Tags- எட்ருஸ்கன் , இதாலி , புதிய விக்ரககங்கள், சிலைகள், வெந்நீர் ஊற்று