சைவ சமய வேத நிரூபணம்! (Post No.10,279)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,279

Date uploaded in London – 31 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சைவ சமய வேதநிரூபணம்! : ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு!!

ச.நாகராஜன்

‘சைவசமய வேதநிரூபணம்’ என்ற சுவையான நூலை 28-8-2020 அன்று கள்ளக்குறிச்சி, ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியிட்டுத் தமிழுக்கும் சைவத்திற்கும், இந்திய நாட்டிற்கும் அரும் சேவையைச் செய்துள்ளது.

‘கலியின் வலி மிக்க’ இந்தக் காலத்திலே நிஜமான சைவ நூல்களைப் பழிப்பதும், திரிப்பதும், மாற்றுவதும், திருக்குறள் உள்ளிட்ட நூல்களில் காழ்ப்புணர்ச்சி கொண்ட வஞ்சக மனத்துடன் எழுத்துக்களை மாற்றுதலும் கண்டு சைவப் பெரியோர்கள் மனம் வருந்தி ‘அரவின் குட்டி சிறிதாயினும் பெருங்கோல் கொண்டு அடித்தல் வேண்டும்’ என்னும் பழமொழிப்படி அந்தப் பொய்களைக் களைய எண்ணம் கொண்டனர். அதன் விளைவாக அற்புதமான இந்த நூல் எழுந்தது.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் சைவ சமயத்தில் வேதம் பற்றிய ஒரு கலகமானது, வடமொழி, பிராமண வெறுப்பு  காரணமாக ஏற்படுத்தப்பட்டது. அதன் விளைவை, இந்த 2021 ஆம் ஆண்டிலும் கூட, அது விசுவரூபம் எடுத்து ஏராளமான சேதத்தை விளைவித்து பாரத தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கே ஊறு விளைவிக்கும் போக்கைக் கண்டு திகைத்து நிற்கிறோம். ஆக இப்படிப்பட்ட நிலை இந்த வஞ்சக உள்ளங்களால் ஏற்படப் போகிறது என்பதை தம் உண்மை அறிவினால் உணர்ந்த, காழ்ப்புணர்ச்சி அற்ற சைவப் பெரியோர்களில் ஒருவரான மா.சாம்பசிவம் பிள்ளை 1926ஆம் ஆண்டு ‘திருநான்மறை விளக்க ஆராய்ச்சி’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். அவர் எழுதிய நூலுக்கு 27 சைவப் பெரியோர்கள் வித்வத் அபிப்ராயம் தர அது முகவுரையாக வெளியிடப்பட்டது. அவற்றில் ஒன்றான யாழ்ப்பாணம் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத பண்டிதர் அவர்கள் வழங்கிய முன்னுரையானது அற்புதமான ஒன்று.

     அந்த முன்னுரை காலவெள்ளத்தால் அழிந்து போகாமல் இருக்கவும், அந்த அற்புதமான நூலில் இருக்கும் உண்மைகள் தமிழக மக்கள் அனைவரின் உள்ளத்திலும் இடம் பெற வேண்டும் என்றும் எண்ணிய ஆதிசைவர்கள் நலவாழ்வு மையத்தின் நிறுவனர் சிவஸ்ரீ எஸ்.கார்த்திகேய தத்புருஷ சிவம் அதன் மறுபதிப்பைப் பெருமுயற்சி செய்து வெளியிட்டுள்ளார்.

திருக்குறளை எடுத்துக் கொண்டால், சென்னை சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகமானது ‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் என்பதை வேண்டுமென்றே ‘ஆபயன் குன்றும் அறிதொழிலோர் நூல் மறப்பர் என்று வழுவுறத் திருத்தி அச்சிட்டனர். இது எவ்வளவு பெரிய அநியாயம்?! இப்படி மனம் போன மாதிரி திருத்தியது தப்பு என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்த நூல்.

இன்னொரு உதாரணம், ‘தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழையாக இருக்க வேண்டும்என்று கருதி தன் மூக்கை அரிந்து கொண்டது போல ஔவையார் திரு நான்மறை என்று கூறியதில் நான்மறை என்பது வேதம் அல்ல என்று கூறியதைச் சொல்லலாம்.

மகேந்திர மலை என்பது கைலாய மலை அல்ல என்பது இன்னொரு பொய்க் கூற்று.

இப்படிப்பட்ட ஏராளமான பொய்யுரைகளை எல்லாம் ஆதாரங்களுடன் மறுத்து தக்க விளக்கம் தந்து சைவசமயம் போற்றும் வேதத்தின் பெருமையை நிலை நாட்டுகிறது இந்த நூல். சுமார் 47 அரும் தமிழ் நூல்களிலிருந்து ‘போதும், போதும் என்று சொல்லும் அளவு மேற்கொள் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. நான்மறை என்ற ஒரு சொல்லுக்கு மட்டும், சிலப்பதிகாரம்,சீவகசிந்தாமணி, மணிமேகலை, புறநானூறு, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை உள்ளிட்ட பல நூல்களிலிருந்து மறுக்க முடியாத ஆதாரங்களுடன் விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

சில அந்தணர் மீது கொண்ட கோபமானது வடமொழி மீது வெறுப்பாக மாறியது; தேவார முதலிய தெய்வ நூல்களைத் திரிக்கவும் அவற்றிற்குத் திரிவுப் பொருள் தரவும் முற்பட்டது.

இதைச் சுட்டிக் காட்டி அப்படிச் செய்வது தவறு என்பதை நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.

இதில் ஆச்சரியம் என்னவெனில் ‘மேன்மை கொள் சைவ நீதிபற்றி நன்கு அறிந்த அறிஞர்தவறாக எழுதியவர் முன்னிலையில் சபையில் தைரியமாக அதைக் கண்டிக்கும் போது அதை சிரம் தாழ்த்தி தவறாக எழுதியவர் உள்ளிட்ட அவையினர் அதை ஏற்றுக் கொண்ட செய்தி தான்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைய கால கட்டத்தில் அன்று இடப்பட்ட துவேஷம் என்னும் விதை இன்று விஷ விருக்ஷமாக வளர்ந்து மக்களை வேறு படுத்தி அனைவரின் மனதிலும் நஞ்சைப் புகுத்தியுள்ளது.

முதலில் இந்த நிலையைத் தமிழக மக்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டும் என்ற சரியான முனைப்புடன் சிவத்தொண்டில் சிறந்து விளங்கும் துடிதுடிப்பு மிக்க அன்பர் – கள்ளக்குறிச்சி, ஆதிசைவர்கள் நலவாழ்வு சங்கத்தின் நிறுவனர் – தில்லை சிவஸ்ரீ எஸ்.கார்த்திகேய தத்புருஷ சிவம். 94 ஆண்டுகளுக்குப் பின்னர் அதை மறு பதிப்பு செய்ய பெரு முயற்சி எடுத்து இதை வெளியிட்டுள்ளார்.

இந்த நூலுக்கு தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துகுமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், சிவபுரம் வேத சிவாகம் பாடசாலை நிறுவனரும் முதல்வருமான மயிலாடுதுறை  ஸ்ரீ ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியார் ஆகியோர் ஆசியுரையும் அருளுரையும் பாராட்டுரையும் தந்து ஸ்ரீ எஸ்.கார்த்திகேய தத்புருஷ சிவம் அவர்களைப் பாராட்டியுள்ளனர்.

    இப்படிப்பட்ட அரிய நூல்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கும் திரு கார்த்திகேய சிவம் அவர்களைப் பாராட்டுகிறோம்.

தமிழ் உலகம் வரவேற்க வேண்டிய காலத்திற்கேற்ற நூல் இது.

நூலின் மொத்தப் பக்கங்கள் 92. அச்சுப் பதிப்பு வழக்கம் போல சிறப்புற அமைந்துள்ளது. வடிவமைப்பு சிறப்புற இருக்க, நூல் தரம் வாய்ந்த தாளில் அச்சிடப்பட்டுள்ளது. நூலின் விலை ரூபாய் ஐம்பது மட்டுமே.

நூல் கிடைக்குமிடம் : ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம், 27,             ஸ்ரீராமச்சந்திரா நகர், கள்ளக்குறிச்சி, 606202.

***

PEASE JOIN US TODAY SUNDAY 31 OCTOBER 2021

USUAL TIME- LONDON TIME 1 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

Duration- approximately one hour

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer –  MRS RANJANI DASARATHY, CHENNAI

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN DWARAKA TEMPLE- 10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP10 mts

xxx

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS NITHYA SOWMY

AND

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–25 MINUTES

SONGS

XXXX

APPR. 60 MINUTES

tags–  publicity31102021

MORE QUOTATIONS FROM PANCHATANTRA-NOVEMBER 2021 CALENDAR (Post.10,278)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,278

Date uploaded in London – 30 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FESTIVAL DAYS-  4 DEEPAVALI, AMAVASYA, LAKSHMI PUJA; 5- GOVARDHAN PUJA, GUJARATI NEW YEAR; 9 SOORA SAMHARAM, SKANDA SHASTI ; 14 CHILDRENS DAY; 19-KARTIK PURNIMA, CHANDRA GRAHANA/LUNAR ECLIPSE; 23 SRI SATHYA SAI BABA

NEWMOON DAY/AMAVASYA- NOVEMBER 4, FULL MOON – 19, EKADASI DAYS 1, 15, 30 ; AUSPICIOUS DAYS- 8, 11, 21, 24, 25, 29

NOVEMBER 1 MONDAY

Rulers live off their lands

Physicians off the sick

Merchants live off their consumers

The learned off fools

Xxx

NOVEMBER 2 TUESDAY

Thieves live off the unwary

Almsman off householders

Harlots off pleasure seekers

And workers off the whole world

Xxx

NOVEMBER 3 WEDNESDAY

The king incarnates all the gods

So sing the sages old

Then treat him like gods,to him

Let nothing false be told

Xxx

NOVEMBER 4 THURSDAY

King pays for good or ill at once

The Gods, a lifetime hence

Xxx

NOVEMBER 5 FRIDAY

There is no toy,called easy joy

But man must strain, to body s pain

Xxx

NOVEMBER 6 SATURDAY

To what good purpose can a cow

That brings no calf nor milk,be lent

Or why beget a son who proves

A dunce and disobedient

Xxx

NOVEMBER 7 SUNDAY

It is better to be dead than to be poor

Xxx

NOVEMBER 8 MONDAY

One without ambition does not hold office

And fallen out of love does not care to adorn himself

And one who lacks learning displays no eloquence

And one who is blunt in speech is never a cheat

Xxx

NOVEMBER 9 TUESDAY

The hurricane innocuous passes

Over feeble,lowly bending grasses

But tears at lofty trees, the great

Their prowess greatly demonstrate

Xxx

NOVEMBER 10 WEDNESDAY

With fields ever changing rivers

With wife on flirting bent

Or in a house with serpents

No man can be content

Xxx

NOVEMBER 11 THURSDAY

Slay not a woman, Brahmin, child

An invalid or hermit mild

In case of major dereliction

Disfigurement is the infliction

Xxx

NOVEMBER 12 FRIDAY

A king though proud and pure of birth

Will see his servants flee

A court where no rewards are won

As birds a withered tree

Xxx

NOVEMBER 13 SATURDAY

No stranger may be turned aside

who seeks your door at even tide

Nay,honour him and you shall be

Transmuted into deity

Xxx

NOVEMBER 14 SUNDAY

Indulge no anger,shameless wish

To hurt, unless you can

The chickpea hopping up and down

Will crack no frying pan

Xxx

NOVEMBER 15 MONDAY

Unceasing effort brings success

Fate, fate is all let dastards wail

Smite fate and prove yourself a man

What fault if bold endeavour fail

Xxx

NOVEMBER 16 TUESDAY

The gods befriend a man who climbs

Determination s height

So Vishnu, discuss, bird sustained

The weaker in the fight

Xxx

NOVEMBER 17 WEDNESDAY

Let resolution guide the Great

However desperate his state

However grim his hostile fate

Xxx

NOVEMBER 18 THURSDAY

By resolution lifted high

With shrewd decision as ally

He grimly sees troubles fly

Xxx

NOVEMBER 19 FRIDAY

Educating minds unfit

Cannot rescue sluggish Wit

Just as house lamps wasted are

Set within a covered

Xxx

NOVEMBER 20 SATURDAY

The great are firm, though battered

Great ocean is not fouled by caring shore

Xxx

NOVEMBER 21 SUNDAY

No rouge asks reason for his wrath

Nor saint,to travel in kindness path

By nature power the sweet or sour

In sugar dwells or neem trees flower

Xxx.

NOVEMBER 22 MONDAY

A man might confide somethings to his wife

Some to his close friends, and some to his son

These deserve his trust, but not reveal

All matters to everyone in sight

Xxx

NOVEMBER 23 TUESDAY

The wise do not care to serve the king

who cannot recognise each one’s merit

Such service is wholly barren of all fruit

Like the tillage of a salt meadow

Xxx

NOVEMBER 24 WEDNESDAY

Servants and ornaments are to be placed

Each in the position right fo them

Xxx

NOVEMBER 25 THURSDAY

The wiseman puts one foot forward

While he stands firm on the other

He will not foresake his former home

Until he finds another

xxx

NOVEMBER 26 FRIDAY

Slight kindness shown to lofty souls

A strange enlargement seeks

The moon s beam glean with white r light

On Himalayas peak

Xxx

NOVEMBER 27 SATURDAY

Does a scoundrel require provocation to fly into a great rage?

Or a saint needs kindness to make him calm?

It is the inherent nature each

To produce its own flavour distinctive.

NOVEMBER 28 SUNDAY

By no man’s smile is any man raised high

By no man s frown is any man cast down

Up or down, a man rises or falls in life

By the true worth of his actions and conduct

Xxx

NOVEMBER 29 MONDAY

The firefly seems a fire, the sky looks flat

Yet sky and fly are neither this nor that

The true seem often false, the false seem true

Appearance s deceive, so think it through

Xxx

NOVEMBER 30 TUESDAY

Where the tongue is double

You may look for trouble

–SUBHAM–

tags –Diwali, Pattas, Panchatantra, quotations, November 2021, calendar 

6000 ஆண்டுக்கு முன் M.B.B.S. LESSON! ஆறே வரிகளில் மருத்துவப் பாடம்! (Post No.10,277)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,277

Date uploaded in London – 30 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதம் 6000 ஆண்டுகளுக்கு முந்தியது என்பது ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபி HERMAN JACOBI , இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் B G TILAK போன்றோரின் கருத்து .

‘இல்லை, இல்லை நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது’– என்பது பேராசிரியர் வில்ஸன் PROFESSOR WILSON போன்றோரின் கருத்து; இந்துக்களோவெனில் இதை வியாசர் என்னும் உலக மஹா ஜீனியஸ் GREATEST GENIUS  நான்காகப் பிரித்ததே கி.மு 3150ல் , அதாவது இற்றைக்கு சற்றேரக் குறைய 5170 ஆண்டுகளுக்கு முன்னர்; அதற்கு காலம் என்பதே இல்லை. ஏனெனில் ரேடியோ அலைகள் போல எப்போதும் காற்றில் உள்ள சப்தங்களை கண்டவர்கள் ரிஷிகள்; கே ட்டவர்கள் ரிஷிகள்– என்று நம்புகின்றனர். சங்கத் தமிழர்களும் இதன் ரகசியத்தை அறிந்து ‘நான் மறை’ (THAT WHICH IS  SECRET) என்றும் ‘கேள்வி’ (THAT WHICH IS HEARD) என்றும் , எழுதாக் கிளவி (THAT WHICH IS NEVER WRITTEN) என்றும் அற்புதமாக மொழிந்தார்கள்

இதில் பத்தாவது மண்டலத்தில் 163-வது துதியில் அதிபயங்கர , அதி அற்புத, உலக மகா அதிசயம் ஒன்று உள்ளது. ரிஷி விவிரிஹனன் – கஸ்யபன் என்ற புலவன் ஆறே வரிகளில் நமது உடலில் உள்ள 28 உறுப்புகளின் பெயரை அழகாக அடுக்கி ஒரு துதி செய்துவிட்டான்.

xxx

இதிலுள்ள அதிசயங்களை ஒவ்வொன்றாகக் காண்போம்:

சங்க இலக்கியத்தின் அதிகமாகப் பாடிய புலவன் ஒரு பார்ப்பான். அவன் பெயர் கபிலர். சங்கப் புலவர்கள் பெயர் சொல்லி அதிகம் பாராட்டிய ஒரே ஆள் அந்தப் பிராமணன்தான் . அதுமட்டுமல்ல அவரை ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்றும் பாராட்டிவிட்டனர். அவர் ஒரே மூச்சில் 99 மலர்களின் பெயர்களை சொல்லி, குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலை யாத்து,  பிருஹத் தத்தன் என்ற வடக்கத்தி ஆளை அசத்தி, அவனுக்கு தமிழும் கற்பித்து , அவனை ஒரு பாடலும் எழுத வைத்து அதை சங்கப் பாடல்களில் சேர்த்துப்  புகழ் பெற்றார் . அவர் 99 மலர்களை அடுக்கியது கின்னஸ் புஸ்தக சாதனை என்பத்தில் இரு வேறு கருத்ததுக்கு இடமே இல்லை

ஆனால் அவருக்கு 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புலவன், காஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவன் ஒரு ரிக் வேத துதியை 12 வரிகளில் சொன்னான். அதில் ஆறு வரிகள் பல்லவி. அதைக் கழித்து விட்டால் 6 வரிகள்தான் புதிய செய்தி. இதிலுள்ள செய்தி 27+1 உடல் உறுப்புகள் இன்று சம்ஸ்க்ருதத்தில் எம். பி. பி. எஸ். படிப்பு இருந்தால் மாணவர்களுக்கு உதவும் பாடல் இது.

xxxx

முதலில் பாடலைப் படியுங்கள். பின்னர் என் வியாக்கியானத்தைப் படியுங்கள்:–

ஜம்புநாதன் மொழிபெயர்ப்பு

1.நான் உன் கண்களிலிருந்தும் , நாசியிலிருந்தும், உன் செவியிலிருந்தும், உன் மோவாயிலிருந்தும் , உன் தலையிலிருந்தும், மோவாயிலிருந்தும் , உன் மூளையிலிருந்தும் , உன் நாக்கிலிருந்தும் யட்சமத்தை/க்ஷயத்தை /நோயை   நீக்குகிறேன் .

2.நான் உன் கழுத்திலிருந்தும் , உன் தசை நார்களிலிருந்தும் , உன் சந்திகளிலிருந்தும் , உன் மேற் கைகளிலிருந்தும், உன் தோள்களிலிருந்தும், உன் முன் கைகளிலிருந்தும் யட்சமத்தை/க்ஷயத்தை /நோயை   நீக்குகிறேன்

3.. நான் உன் அந்திரங்களில், உன் குதங்களில் , உன் இருதயத்தில் , உன் சிறுநீரகங்களில் , உன் கல்லீரலில் , உன் ஈரல்களில் இருந்தும் யட்சமத்தை/க்ஷயத்தை /நோயை   நீக்குகிறேன்.

4.நான் உன் தொடைகளில் , முழந்தாள்  குதிகால், விரல்களில், உன் இடைகளில், உன் நிதம்பத்தில், உன் மர்ம அங்கங்க ளில் இருந்தும் யட்சமத்தை/க்ஷயத்தை /நோயை   நீக்குகிறேன்.

5.நான் உன் நீர் கக்கும் வழியிலிருந்தும் , உன் கலாசயத்திலிருந்தும்  உன் ரோமத் திலிருந்தும், உன் நகங்களிலிருந்தும் ,  உன் முழு தேகத்திலிருந்தும் யட்சமத்தை/க்ஷயத்தை /நோயை   நீக்குகிறேன்.

6. நான் ஒவ்வொரு அங்கத்தில் இருந்தும் , உன் ஒவ்வொரு ரோமத்திலிருந்தும் , அது தோன்றும் ஒவ்வொரு சந்தியிலிருந்தும் யட்சமத்தை நீக்குகிறேன் .

xxxx

यक्ष्मं शीर्षण्यं मस्तिष्काज्जिह्वाया वि वर्हामि ते ||

     From all thyself, from top to toe, I drive thy malady away.

ஆறு மந்திரங்களிலும் கடைசி வரி ஒன்றேதான்.

அதாவது ‘முடி முதல் அடிவரை , உன் னிடமுள்ள நோயை நான் விரட்டுகிறேன்’ என்பதாகும். ஆக இந்த ஆறு வரிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சிய ஆறு வரிகளில் 25-க்கும் மேலான உறுப்புகள் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதைக் காணலாம்

XXXX

என் கருத்துக்கள்

1. இது கவசம் என்னும் பாடல் வகைக்கு முன்னோடி; பிற்காலத்தில் சம்ஸ்க்ருதத்தில் சிவ கவசம், இந்திராக்ஷி கவசம், தமிழில் கந்த சஷ்டிக் கவசம், விநாயக கவசம் முதலியன தோன்ற இதுவே மூலம். ஆக, கவசத்தை உருவாக்கியோர் வேத கால முனிவர்கள். அதை நாமும் பின்பற்றி இன்று வரை கவசங்களைப்  படித்து வருகிறோம் ஆகையால் ரிக் வேத முனிவர்களுக்கு நன்றி சொல்வதோடு 6000 ஆண்டுப் பழமையான விஷயத்தைப் பின்பற்றுகிறேன் என்று பெருமைப்பட்டுக்  கொள்ளலாம். .

2. தற்காலத்தில் பஜனைகளிலும், கச்சேரி களிலும் பாடும் பல பாடல்களிலும் கடைசி வரி ஒன்றாக இருக்கும்; அதாவது பல்லவி திரும்பத் திரும்ப வரும்; இதை லகிற்குச் சொல்லிக் கொடுத்தவர்களும் நாம்தான் . ரிக் வேதத்தில் இது போலப் பல பாடல்கள் இருக்கின்றன.

3. சம்ஸ்க்ருதத்தில் உள்ள பல உறுப்புகளின் பெயர்கள் இன்றும்  இந்திய மொழிகளில் உள்ளது. இருதயம், நகம், ரோமம், முதலியன சில எடுத்துக் காட்டுகள்

4.உலகின் எந்த ஒரு பழைய கலாசா ரத்திலும் இப்படியான பழைய பாடல் கிடையாது .

5.இதை, துதிகளில் ஒன்றாக வியாசர் சேர்த்ததும், அதை பிராமணர்கள் அப்படியே நினைப்பில் வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

6. இது மன ரீதியில் ஒருவரின் நோயைப் போக்கித் தெம்பைக் கொடுக்கும். இப்போது மருத்துவர்களும் கூட இது போன்ற மந்திரங்கள் உளவியல் ரீதியில் உதவும் என்று கருத்துக் கொண்டுள்ளனர்

7. இது அக்கால மக்களின் மருத்துவ ஆர்வத்தையும், ஆயுர்வேத படிப்பின் source of Ayurveda மூலமாகவும் விளங்குகிறது

8.நமக்கு வேதகால சம்ஸ்க்ருதம் கற்க வழி செய்கிறது.

9. இறுதியாக ப்ளாசிபோ Placebo  என்ற ‘நம்பிக்கை மருந்து’  பறி நிறைய ஆராய்ச்சிக்கு கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவையும் ‘நம்பினார் கெடுவதில்லை’ என்றே தீர்ப்புச் சொல்லிவி ட்டன!

இதோ உடல் உறுப்புகளை நன்கு அடையாளம் காண உதவும் ஆங்கில மொழிபெயர்ப்பு

In this short hymn with 12 lines one comes across 27 ++ body parts; if you delete the repeated last line in every mantra it is only a SIX line mantra!

1.Nostrils ,2.Eyes, 3.Ears, 4.Chin, 5.Head, 6.Brain,7.Tongue, 8.Neck tendons

8.a.Neck, 9.Breast bones, 10.Spine, 11.Shoulders, 12.Arms, 13.Viscera, 14.Rectum, 15.Heart, 16.Kidneys, 17.Liver, 18.Spleen 19.Thighs, 20.Knee caps, 21.Heels, 22.Feet, 23.Stomach, 24.Groin, 25.Hair, 26.Nails,

27.Top to Toe

अक्षीभ्यां ते नासिकाभ्यां कर्णाभ्यां छुबुकादधि |
यक्ष्मं शीर्षण्यं मस्तिष्काज्जिह्वाया वि वर्हामि ते ||


गरीवाभ्यस्त उष्णिहाभ्यः कीकसाभ्यो अनूक्यात |
यक्ष्मं दोषण्यमंसाभ्यां बाहुभ्यां वि वर्हामि ते ||


आन्त्रेभ्यस्ते गुदाभ्यो वनिष्ठोर्ह्र्दयादधि |
यक्ष्मम्मतस्नाभ्यां यक्नः पलाशिभ्यो वि वर्हामि ते ||
ऊरुभ्यां ते अष्ठीवद्भ्यां पार्ष्णिभ्यां परपदाभ्याम |
यक्ष्मं शरोणिभ्यां भासदाद भंससो वि वर्हामि ते ||


मेहनाद वनंकरणाल लोमभ्यस्ते नखेभ्यः |
यक्ष्मंसर्वस्मादात्मनस्तमिदं वि वर्हामि ते ||


अङगाद-अङगाल लोम्नो-लोम्नो जातं पर्वणि-पर्वणि |
यक्ष्मंसर्वस्मादात्मनस्तमिदं वि वर्हामि ते ||

Xxxx SUBHAM XXX

ரிக்வேதம், உடல் உறுப்புகள், மருத்துவப் படிப்பு, RV.10-163

காடுகள் பற்றி ரிக் வேத கவிதை — பகுதி 3 (Post No.10,276)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,276

Date uploaded in London – 30 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘காடுகள் வாழ்க ! இந்துக்களின் அற்புத வாழ்க்கை முறை’ என்ற தலைப்பில் இரண்டாவது பகுதி நேற்று வெளியானது. இன்று இறுதி பகுதியில் ரிக் வேத துதி 10-146 ல் கடைசி மூன்று மந்திரங்களைக் காண்போம்.

நேற்று இறங்கு வரிசையில் மந்திரம் 6, 5, 4 பற்றி எனது விளக்க உரையைத் தந்தேன். ஆறு மந்திரங்களின் முழு மொழிபெயர்ப்பை முதல் பகுதியிலேயே தந்து விட்டேன்.

இதோ மூன்றாவது மந்திரம் ரிக்.10-146-3

இங்கும் புலவர் ஒரு கற்பனைக் காட்சியை புலவர்  நம் முன்னே வைக்கிறார்.

புலவர் சொன்ன வார்த்தைகள் – “அங்கு பசுக்கள் மேய்வது போலத் தோன்றுகிறது. அதனால் வீடுகள் இருப்பது போலவும் தோன்றுகிறது மாலை நேரத்தில் அரண்யானி  தன்  வண்டிச் சக்கரங்களைக் கழற்றி வைத்திருக்கிறாள் போலும்!”

இதற்கு விளக்கம் எழுதியோர் உண்மையில் புலவர் பார்ப்பது மான்கள், அங்கும் இங்கும் புல் மேய்வதாகும்; வீடு என்பது  மரங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து, செடி கொடிகளால் கூரை வேயப்பட்டது போலத் தோன்றுவதே என்றும் எழுதியுள்ளனர்.

வண்டிச் சக்கரம் கழற்றி விட்டது என்பது மாலை நேரத்தில் வண்டிக்காரர்கள்  காளைகளை வண்டியிலிருந்து அகற்றி இளைப்பாற விட்டுவதாகும். இங்கே காட்டில் மான்கள் சுதந்திரமாக புல் மேய்வதைக் கண்ட புலவர் அப்படிப் பாடுகிறார் .

நல்ல ஒரு காட்சியை புலவர் நம் முன்னே கொண்டுவருகிறார்.

காளிதாசன், இமய மலை அடிவாரம் பற்றி குமார சம்பவத்தில் சொல்லும் காட்சி இது. அதை அப்படியே புறநானூற்றுப் புலவர் முரஞ்சியூர் முடி நாகராயர் பாடல் 2-ல் வருணிக்கிறார்:-

சிறுதலை நவ்வி பெருங்கண் மாப்பிணை

அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்

முத்தீ விளக்கின் துஞ்சும்

பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே “

இது சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனைப் பாடிய பாடலால் மிகப் பழைய பாடல் ஆகும் .

MR NAGARAJAN’S POEM IN PURA NANURU

பிராமணர்கள் இமயமலை அடிவாரத்தில் மாலை நேரத்தில் சந்தியா வந்தனம் செய்து, யாகம் செய்வதைக் காட்டுகிறது .இன்று தேசப்படத்தில் ‘கஞ்சன் ஜங்கா’ என்று போட்டிருக்கும் சிகரத்தின் உண்மைப் பெயர் ‘காஞ்சன சிருங்கம்’; அதை அப்படியே ‘பொற்கோடு’ golden peak  என்று அழகுற மொழிபெயர்க்கிறார் புறநானூற்றுப்  புலவர் மிஸ்டர் நாகராஜன் (ராய= ராஜ என்பது இன்று ஆங்கிலத்திலும்  Royal ராயல் என்று இருப்பதை தமிழ் -சம்ஸ்கிருதம் தொடர்பு பற்றிய 150 கட்டுரைகளில் விளக்கியுள்ளேன்)

xxx

ரிக்.10-146-2

இரண்டாவது மந்திரத்துக்கு வருவோம். ரிக் வேதம் எவ்வளவு பழமையானது; அதற்குப் பொருள் காண்பது எவ்வளவு கடிது என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது

காட்டில் நடக்கும் Orchestra ஆர்கெஸ்ட்ரா பற்றிப் புலவர் பாடுகிறார். இது போன்ற அருமையான இயற்கை வருணனை மலைபடுகடாம் முதலிய சங்க இலக்கியப் பனுவல்களில் நிறைய உள .

கிரீச் என்று சப்திக்கும் விருஷாவரத்துக்கு சிச்சிகம் பதில் அளிக்கிறது. அங்கே பின்புறத்தில் யாரோ தாளம் போடுகிறார்கள். யாரோ சுருதி பாடுகின்றனர் . அவைகள் எல்லாம் அரண்யானி தேவியைக் குறித்து துதி பாடுகின்றன” –

இதன் பொருள் காட்டில் பல்வேறு ஒலிகள் கேட்கின்றன.அவற்றின் ஒலிகள் ‘பாடுவது’ போலவும் பின்னாலுள்ள வண்டுகளின் தொடர்ந்த ரீங்காரம் ‘சுருதி’ போலவும் உள்ளதாம். இதைப் புரிந்துகொள்ள இரண்டு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

ஒன்று, இந்துக்களின் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில்  பாடகர் அல்லது வாத்தியம் வாசிப்போருக்கு தம்பூராவில் சுருதி மீட்டும் ஒரு பெண்மணி அமர்ந்து 3, 4 மணி நேரத்துக்கு சுருதி போட்டுக்கொண்டு இருப்பார் . 

இரண்டு , காடுகளுக்குச்  சென்ற அனுபவம் உடையோருக்கு அங்கு எப்போதும் இதே போல வண்டுகளின் ரீங்காரம் இசைப்பதை கேட்டிருப்பார்கள். கொடைக்கானல் போன்ற மலைகளில் ஏறும்போது காரை நிறுத்திவிட்டு வெளியே வந்தோருக்கு இது தெரிந்திருக்கும். இதே போல காடுகளில் தொடர்ந்து ஒலி . ஆனால் இப்படி ஆர்க்கெஸ்ட்ரா Orchestra வாசித்த பூச்சிகள் , பறவைகள் பற்றி உரைகாரர் இடையே கருத்தொற்றுமை இல்லை. ஏனெனில் வேதம் அவ்வளவு பழமையானது  அந்தப் பறவைகளை இன்று அடையாளம் காணமுடியவில்லை. சிச்சிக ,வ்ருஷாவர என்பதை வெட்டுக்கிளி, மீன் கொத்திப் பறவை என்பர் சிலர். எல்லாமே பூச்சி வகை, எல்லாமே பறவை வகை என்றும் உரைகாரர் செப்புவர் .

நமக்குத் புரிவது பறவைகளின் பாடல்; பின்னணியில் சிற்றோடை, நீர்வீழ்ச்சிகள் தாளம், வண்டுகளின் ரீங்காரம்  என்னும் சுருதி. இது தமிழ் இலக்கியத்திலும் உளது. ஆனால் அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புலவன் அதை சம்ஸ்கிருதத்தில் பாடியதும் அதை பிராமண சமூகம் வாய் மொழியாகவே பரப்பி வருவதும் உலக அதிசயம்!!!

xxx

10-146-1

முதல் மந்திரத்தைக் காண்போம் . அரண்யானி!  அரண்யானி! என்று இரு முறை அழைத்து புலவர் பாட்டைத் துவங்குகிறார் . இது போல பல பாடல்கள் சங்க இலக்கியத்திலும் உண்டு ‘பல் சான்றீரே , பல் சான்றீரே!!’ ‘கலம் செய் கோவே,  கலம் செய் கோவே !!’ என்றெல்லாம் இரு முறை அழைக்கும் பாடல்களை புற நானூற்றிலும் காணலாம்.

ரிக் வேதத்தில் உள்ள நிறைய சொற்களை தமிழர்களாகிய நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம் ; இந்தக் கவியில் உள்ள ‘அரண்யானி’ என்பது ஆரண்யம், அரண்யம் = காடு என்பதாகும். இன்றும் கூட வேதாரண்யம் = திருமறைக்காடு என்பதெல்லாம் தமிழர் வாயில் சர்வ சாதாரணாமாகப் புழங்கும் சொற்கள் ஆகும் .

இப்படி காட்டு ராணியை அழைக்கும் புலவர் ஒரு வியப்பான கேள்வியைக் கேட்கிறார். “ஒய் அம்மணி! உனக்கு பயமே இல்லையா? மாலை நேரம் வந்துவிட்டால் தோன்றியும் தோன்றாமலும் மறைந்து போகிறாய். நீ ஏன் அருகிலுள்ள கிராமத்துக்கு வரக்கூடாது? உனக்கு பயம் என்பதே இல்லையா என்று வியக்கிறேன்”.

xxx

6000 ஆண்டுகளுக்கு முன்னர், இப்படிப் பாடிய கற்பனை மிகு கவிகள் ரிக் வேதத்தில் நிறைய உள்ளன. BIG BANG ‘பிக் பாங்’ என்று அழைக்கப்படும்  மாபெரும் பிரபஞ்சத் தோற்றம் CREATION பற்றிய கவிதையைக் கண்டு உலகமே வியக்கிறது அதர்வண வேதத்தில் உள்ள பூமி சூக்தத்தைக் கண்டு உலகமே ஆச்சர்யப்படுகிறது.

ரிக்வேதத்தின் கடைசி கவிதை வியாசரின் மஹா ஜீனியஸைக் காட்டுகிறது. ‘’உலகம் முழுதும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற உலக மஹா தேசீய கீதத்தை கடைசி பாடலாக வியாசர் வைத்திருப்பது இந்துக்களின் நல்லெண்ணத்துக்கு உதாரணம்ஆகத் திகழ்கிறது. ரிக் வேதத்தை எல்லோரும் படிக்க வேண்டும். அஸ்வினி தேவர்கள், விச்வே தேவர்கள் பற்றிய கவிதைகளை முதலில் படியுங்கள். அற்புதங்களும் வரலாறும் அதில் உள .

இதனால்தான் வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே என்று பாரதியும் பாடிவைத்தான்.

—SUBHAM—

tags- காடுகள் , ரிக் வேத,  கவிதை-3

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 64 (Post No.10,275)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,275

Date uploaded in London – 30 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘பாரதியின் அறிவியல் பார்வை’  8- வா.செ.குழந்தைசாமி

      மஹாகவி பாரதியாரை அறிவியல் பார்வையில் பார்க்கும் நூல் இது. எழுதியவர் டாக்டர் திரு வா.செ.குழந்தைசாமி. (பிறப்பு 14-7-1929 மறைவு: 10-12-2016) அறிவியல் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர்.2002ஆம் ஆண்டு நமது மத்திய அரசின் பத்ம பூஷண் விருதைப் பெற்றவர். பல்வேறு நூல்களை எழுதியவர்.

இவர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த போது நான் தினமணி கதிர் இதழுக்காக இவரை நேரில் சென்று பேட்டி கண்டேன். அந்தப் பேட்டிக் கட்டுரை ‘அறிஞர்கள் போற்றும் குழந்தை’ என்ற தலைப்பில் 3-11-1978 தேதியிட்ட தினமணி கதிர் இதழில் வெளியானது. (அப்போது எனது புனைப் பெயர் ‘கிருஷ்ணபிரகாஷ்.)

      சிறந்த அறிஞரான இவர் எழுதியுள்ள இந்த ‘பாரதியின் அறிவியல் பார்வை’ என்ற நூல் மார்ச் 1983இல் வெளியிடப்பட்டது. 124 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 1) அறிவியல் பார்வை 2) பாரதியின் அறிவியல் பார்வை 3) புதுமைப் பெண்கள் 4) ஆயிரம் தொழில் செய்குவீர் 5) பல கல்வி தந்து பாரை உயர்த்துவோம் 6) மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை 7) ஒப்பிலாத சமுதாயம் 8) மனிதர் தம்மை அமரர்களாக்குவோம் ஆகிய எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

முதல் அத்தியாயத்தில் (அறிவியல் பார்வை) நமது சமுதாயத்தில் அறிவியல் மனப்பான்மை இன்னும் பரவலாக உருவாகவில்லை, அறிவியல் அணுகுமுறை இயற்கையான ஒரு கூறுபாடாக இன்னும் இடம் பெறவில்லை என்று குறிப்பிடும் இந்த நூலாசிரியர், முதிர்ந்த தெளிவோடும், முறையான வழியோடும் ஒரு மறுமலர்ச்சியை மாற்றத்தை உருவாக்கும் வழிகாட்டிகளின் வரிசையில் முன் நிற்பவர் பாரதி என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

இரண்டாம் அத்தியாயத்தில் (பாரதியின் அறிவியல் பார்வை),

பாரதியார், “காலத்துக் கேற்ற வகைகள் – அவ்வக்

காலத்துக் கேற்ற ஒழுக்கமும் நூலும்

ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் – எந்த

நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை” என்று அறுதியிட்டு உறுதியாய்க் கூறியதைச் சுட்டிக் காட்டி, பாரதியாரின் ‘பழம் பெரும் நூல்கள் பயன்படக் கூடிய அளவிலே இடம் பெற வேண்டும்’ என்ற கருத்தை முன் வைக்கிறார். அவரது பயணத்திலே அறிவியல் பார்வை அணையா விளக்காகப் பயன்பட்டது என்கிறார்.

மூன்றாவது அத்தியாயத்தில் (புதுமைப் பெண்கள்) மிளகாய்ப் பழச் சாமியார் என்ற கதையில் சாமியார் வாயிலாகப் பாரதியார் கூறும் பின் வரும் வரிகளைச் சுட்டிக் காட்டுகிறார் திரு வா.செ.குழந்தைசாமி.

“ உலக முழுமைக்கும் நான் சொல்லுகிறேன். ஆண் பெண்ணுக்கு நடத்தும் அநியாயம் சொல்லுக்கடங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை. அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை”

“மாதர்கள் தாமே முற்பட்டுத் தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களைத் தேடிக் கொள்வதே நன்றாகும்” என்பதை பாரதியார் வலியுறுத்துகிறார். ‘பட்டங்கள் ஆளவதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று அவர்களாகவே அறிவித்துக் கொண்டதையும் பாரதியார் மகிழ்ச்சியோடு பதிவிடுகிறார். ‘கற்பு நிலை என்று சொல்ல வந்தார் – இரு

கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்பது அவர்கள் சட்டம்.

‘புதுமை எனில் இது புதுமை; புரட்சி எனில் இது புரட்சி’.

 நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்ட பெண்களுக்கு அப்படிப்பட்ட புதிய நிலையை உருவாக்குவது கல்வியே என்பது பாரதியாரின் முடிவு. ‘ சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே’ என்ற புதுமைப் பெண்ணின் முழக்கத்தையும் அதற்கான அடிப்படை – ‘அறிவு நிலை’ என்ற உண்மையையும் நூலாசிரியர் இங்கு விளக்குகிறார்.

அடுத்து நான்காம் அத்தியாயமான ஆயிரம் தொழில் செய்குவீர் என்ற அத்தியாயத்தில்

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் – வெறும்

சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்

என்று பாரதியின் நெஞ்சம் புழுங்குவதையும் அந்தப் பஞ்சத்தை நீக்க செல்வநிலை உயர வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டுவதையும் நூலாசிரியர் நிலை நிறுத்துகிறார். பாரதியாரது அறிவியல் அணுகுமுறை தொழில் வளர்ச்சி ஏற்படுவது இயல்பானதே என்பதைக் கொள்வதால், “இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே

இயந்திரங்கள் வகுத்திடுவீ ரே “ என்று அவரை வேண்டுகொள் விடுக்கச் செய்கிறது என்றும், ‘அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே’ என்றும் அவரைப் பாட வைக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

அடுத்த ஐந்தாம் அத்தியாயத்தில் (பல கல்வி தந்து பாரை உயர்த்துவோம்)

‘மாற்றி வையம் புதுமையுறச் செய்து மனிதர் தம்மை அமரர்களாக்க’ விழைந்தவர் பாரதி என்று கூறும் நூலாசிரியர் அதற்கு அடிப்படைத் தேவையாக, ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும்’ ‘பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திடல் வேண்டும்” என்று கூறுவதைச் சுட்டிக் காட்டுகிறார். கல்வி பெற்ற மக்களே தான் இனிச் செல்வம் பெற முடியும் என்பது இன்றைய காலகட்டத்தின் நிலை.

ஆகவே தான் அவர் “அறிவே வலிமை – கல்வியே செல்வத்தின் தாய்” என்று முழங்கினார்.

‘மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை’ என்பது அடுத்த அத்தியாயம். சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்று முழங்கியவர் பாரதியார்.

‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் அதே சமயம் தமிழின் இன்றைய குறைபாடுகளைப் பற்றியும் அவர் எண்ணுகிறார். ஆகவே “புதிய செய்தி, புதிய புதிய யோசனை; புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக் கொண்டே போக வேண்டும்” என்று அவர் வலியுறுத்துகிறார்.

“புதிய நுட்பங்கள் கூறும் கலைகள் தமிழினில் இல்லை; அவற்றைச் சொல்லும் திறமை தமிழ் மொழிக்கு இல்லை; மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்று கூறிய ஒருவனை “என்று அந்தப் பேதை உரைத்தான்” என்று கூறிச் சாடுகிறார்.

“இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்” என்று வானம் அளந்தது அனைத்தும் அளந்த வண் மொழி வாழ வழி கூறுகிறார் அவர்.

இன்றைய உலகில் 100,000 பத்திரிகைகள் பல மொழிகளில் வருகின்றன. இன்று ஆண்டு தோறும் 12,00,000 ஆய்வுக் கட்டுரைகள் உலகில் வெளியாகின்றன. எல்லா வகையான துறைகளையும் சேர்த்துப் பார்த்தால் அமெரிக்காவில் 80,000 தலைப்புகள் உள்ளன. சோவியத் ஒன்றியம் 85000 தலைப்புகளை வெளியிடுகிறது. ஆகவே தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற பாரதியின் கனவு இன்னும் நனவாகவில்லை என்பதை நூலாசிரியர் மிகச் சரியாக இப்படி ஆதாரங்களுடன் விளக்குகிறார்.

ஏழாவது அத்தியாயத்தில் (ஒப்பிலாத சமுதாயம்) – எப்போதுமே புதுமை, புதிய உலகு, புதிய சமுதாயம் ஆகியவை பற்றிய எண்ணங்களை பாரதியார் வெளியிடுகிறார். அவர் சொற்களில் இந்தக் கனவுகளே ஒளி விடுகின்றன என்பதை நூலாசிரியர் ஆதாரங்களுடன் கூறுகிறார். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்பது தான் பாரதியின் நிலைப்பாடு.

இறுதி அத்தியாயத்தில் (மனிதர் தம்மை அமரர்களாக்குவோம்) பாரதியின் பாடல்களில்

1) பாரதிக்கு மனிதனின் ஆற்றலில் அளவு கடந்த நம்பிக்கை

2) மனிதன் உயர்ந்து தானே அமர நிலை அடையக்கூடியவன்

என்ற எண்ணம் ஆகிய இரண்டையும் காணலாம் என்பதை திரு குழந்தைசாமி சுட்டிக் காட்டுகிறார்.

‘மாற்றி வையம் புதுமையுறச் செய்து

மனிதர் தம்மை அமரர்களாக்க” என்று இப்படி மகத்தான கனவைக் கண்டவன் பாரதி. அவர் பார்வையின் உயரத்தை அவரது சொற்களிலேயே காணலாம் என பல சான்றுகளைக் காட்டி நிறுவி நூலை முடிக்கிறார் நூலாசிரியர்.

பாரதியாரின் அறிவியல் பார்வையைத் தெள்ளத் தெளிவாக அலசி ஆராயும் இந்த நூல் அறிவியல் நோக்கில் அமைந்துள்ள நல்ல ஒரு நூல்.

இந்த நூலுக்கு பாரதி பக்தர் ம.ப.பெரியசாமித் தூரன் அழகிய  முன்னுரை ஒன்றைத் தந்துள்ளார்.

அறிவியலிலும் பாரதி முன் நிற்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டி விளக்கும் இந்த நூல் பாரதி அன்பர்கள் படிக்க வேண்டிய நூல்.

tags- பாரதி, அறிவியல் பார்வை, வா.செ.குழந்தைசாமி,

பகவத்கீதை சொற்கள் Index 15 ; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -15 (Post.10,274)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,274

Date uploaded in London – 29 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண்  பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்

XXXXX

அஸ்வானாம் 10-27  குதிரைகளில்

அஸ்வினவ்  11-6 அஸ்வினி தேவர்கள் இருவர்

அஷ்டதா 7-4 எட்டு விதமாக

அஸக்த புத்தி: (புதிதிஹி) 18-49  பற்றற்ற புத்தியுடையவனாய்

அஸக்தம்  9-9 பற்றற்றவனை

அஸக்த: 3-7 பற்றற்று

அஸக்தாத்மா  5-21  மனப்பற்று இல்லாதவன்

அஸக்தி: 13-9  பற்றின்மை

அஸங்க சஸ்த்ரேன 15-3  திடமான பற்றின்மை என்னும் வாளால்

அஸத  9-19 அசத்தும் / இல்லாமையும்

அஸத்க்ருதம் 17-22 பூஜையின்றி

அஸத்க்ருத: 11-42 அவமதிக்கப்பட்டனையோ

அஸத்யம் 16-8 பொய் நிறைந்தது

அஸத்க்ராஹான் 16-10  கெட்ட எண்ணங்களை

அஸபத்னம் 2-8 எதிர்ப்பில்லாத

அஸமர்த்த: 12-10  திறமை இல்லையாயின்

அஸந்த்யஸ்த சங்கல்ப: 6-2  சங்கல்பத்தைத் துறவாத

அஸம்மூட: 5-20 மனக் குழப்பம் அடையாதவன்

அஸம்மோஹ: 10-4  மோஹமின்மை

அஸம்யதாத்மனா 6-36  மனத்தை அடக்க முடியாதவனால்

அஸம்சயம்  6-35  சந்தேகமில்லை

அஸம்சய: 8-7  சந்தேகமின்றி

அசி 4-3  இருக்கிறாய்

அசித : 10-13 அசிதர்

tags -gita word index 15

To be continued……………………………………….

WONDER IN RIG VEDA 27 BODY PARTS IN ONE HYMN 10-163 (Post No.10,273)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,273

Date uploaded in London – 29 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

What is here is found elsewhere – What is not here is nowhere”

This is what Veda Vyasa said about Mahabharata. Now after reading all the 10,552 mantras of Rig Veda, the oldest book in the world, I can say the same about Rig Veda.

Physiology lesson is taught in One Hymn! I have never found such a poem in Tamil in Sangam literature, so called secular poems! But many thousand years ago one seer by name VIVIRIHANAN named nearly 27 body parts and tried to keep them healthy.

I see many significant points here:

Western ‘scholars’ called Hippocrates the ‘Father of Medicine’. Now those people themselves corrected their own old encyclopaedias and said neither he wrote all that is attributed to him, nor he is the first one to talk about medicine.  Even Susruta and Charaka never claimed themselves as Father of Medicine. They lived well before Hippocrates of Fourth century BCE. All our people were honest to recall the names of their predecessors as well.

Next point is I still wonder how come they recited all the body parts and kept it intact for thousands of years by word of mouth.

Even the 2000 year old Sangam Tamil poem Kurinjippattau sung by a Brahmin poet by name Kabila, where we find 99 flower names at one go was ‘written’ at least 1500 years ago. But this poem was not written until recently. That too written things are not used by brahmins. They still memorise it from their Gurus. I met one such great man Sri Singara Subrahmanya Sastrigal of Kuthanoor who memorised full Rig Veda and received honours from Kanchi Shankaracharya.

The next point is many of the body parts are used by many language speakers even today including European languages. Heart, Nose are a few examples.

The fourth point is it belongs to Kavacham (armour/shield) genre. It acts as body armour and protect one from all sickness. We see such Kavasams in Tamil, but yet they do not recite all the parts found here.

There are many kavasams available in Sanskrit such as Indrakshi Kavasam, Sivakavasam etc. they are of very late compositions and very long compared to this six mantras of RV10-163

And this has a refrain at the end ‘yakṣmaṃ śīrṣaṇyaṃ mastiṣkājjihvāyā vi vṛhāmi te’ from all thyself, from top to toe, I drive thy malady away. ||

. We see such poems in Rig Veda where the last line is repeated. Now this is followed in popular Bhajans and Carnatic and Hindustani music compositions. That means the Vedic custom is continued.

Xxx

Placebos work for believers

Latest research shows that placebos do beneficial things for a patient. It helps one psychologically and keeps one’s mental health in good condition. Real medicines may help you physically. Again unless you believe, placebos wont work . These mantras boost the confidence of the patients. And ancient doctors gave the patients actual medicine along with such mantras.

We have enough evidence in Rig Veda and Atharva Veda for the herbal treatment. Moreover Hanuman’s bringing Sanjeevani Parvata shows that they believed in herbal treatment.

Dictionary says

Placebo

Placebo is a medicine or procedure prescribed for the psychological benefit to the patient rather than for any physiological effect..

placebo effect

a beneficial effect produced by a placebo drug or treatment, which cannot be attributed to the properties of the placebo itself, and must therefore be due to the patient’s belief in that treatment.

xxx

Now to the hymn

In this short hymn with 12 lines one comes across 27 ++ body parts; if you delete the repeated last line in every mantra it is only a SIX line mantra!

1.Nostrils

2.Eyes

3.Ears

4.Chin

5.Head

6.Brain

7.Tongue

8.Neck tendons

8.a.Neck

9.Breast bones

10.Spine

11.Shoulders

12.Arms

13.Viscera

14.Rectum

15.Heart

16.Kidneys

17.Liver

18.Spleen

19.Thighs

20.Knee caps

21.Heels

22.Feet

23.Stomach

24.Groin

25.Hair

26.Nails

27.Top to Toe

xxxx

Following is Griffith’s translation

1. FROM both thy nostrils, from thine eyes, from both thine ears and from thy chin,

     Forth from thy head and brain and tongue I drive thy malady away.

2. From the neck-tendons and the neck, from the breast-bones and from the spine,

     From shoulders, upper, lower arms, I drive thy malady away.

3. From viscera and all within, forth from the rectum, from the heart,

     From kidneys, liver, and from spleen, I drive thy malady away.

4. From thighs, from knee-caps, and from heels, and from the forepart of the feet,

     From hips from stomach, and from groin I drive thy malady away.

5. From what is voided from within, and from thy hair, and from they nails,

     From all thyself from top to toe, I drive thy malady away.

6. From every member, every hair, disease that comes in every joint,

     From all thyself, from top to toe, I drive thy malady away.

Rig Veda Mandala 10 Hymn 163

अक्षीभ्यां ते नासिकाभ्यां कर्णाभ्यां छुबुकादधि |
यक्ष्मं शीर्षण्यं मस्तिष्काज्जिह्वाया वि वर्हामि ते ||


गरीवाभ्यस्त उष्णिहाभ्यः कीकसाभ्यो अनूक्यात |
यक्ष्मं दोषण्यमंसाभ्यां बाहुभ्यां वि वर्हामि ते ||


आन्त्रेभ्यस्ते गुदाभ्यो वनिष्ठोर्ह्र्दयादधि |
यक्ष्मम्मतस्नाभ्यां यक्नः पलाशिभ्यो वि वर्हामि ते ||
ऊरुभ्यां ते अष्ठीवद्भ्यां पार्ष्णिभ्यां परपदाभ्याम |
यक्ष्मं शरोणिभ्यां भासदाद भंससो वि वर्हामि ते ||


मेहनाद वनंकरणाल लोमभ्यस्ते नखेभ्यः |
यक्ष्मंसर्वस्मादात्मनस्तमिदं वि वर्हामि ते ||


अङगाद-अङगाल लोम्नो-लोम्नो जातं पर्वणि-पर्वणि |
यक्ष्मंसर्वस्मादात्मनस्तमिदं वि वर्हामि ते ||

akṣībhyāṃ te nāsikābhyāṃ karṇābhyāṃ chubukādadhi |
yakṣmaṃ śīrṣaṇyaṃ mastiṣkājjihvāyā vi vṛhāmi te ||


ghrīvābhyasta uṣṇihābhyaḥ kīkasābhyo anūkyāt |
yakṣmaṃ doṣaṇyamaṃsābhyāṃ bāhubhyāṃ vi vṛhāmi te ||


āntrebhyaste ghudābhyo vaniṣṭhorhṛdayādadhi |
yakṣmammatasnābhyāṃ yaknaḥ plāśibhyo vi vṛhāmi te ||


ūrubhyāṃ te aṣṭhīvadbhyāṃ pārṣṇibhyāṃ prapadābhyām |
yakṣmaṃ śroṇibhyāṃ bhāsadād bhaṃsaso vi vṛhāmi te ||


mehanād vanaṃkaraṇāl lomabhyaste nakhebhyaḥ |
yakṣmaṃsarigvedaasmādātmanastamidaṃ vi vṛhāmi te ||


aṅghād-aṅghāl lomno-lomno jātaṃ parigvedaaṇi-parigvedaaṇi |
yakṣmaṃsarigvedaasmādātmanastamidaṃ vi vṛhāmi te ||

    

27 Similes in One Vedic Hymn! | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/08/18 › 27-similes-o…

18 Aug 2012 — 27 Similes in One Vedic Hymn! · 1.Sing like the two press-stones for this same purpose; come like two misers to the tree of treasure; · 2. Moving …



27 Similes in One Vedic Hymn! | Swami’s Indology Blog

https://swamiindology.blogspot.com › …

· Translate this page

27 Similes in One Vedic Hymn! By London Swaminathan. Rig Veda, the oldest religious book in the world, has beautiful poetry in it. The Vedas are records of ..

—subham—

tags- body parts, RV 10-163, malady, Yakshmam, Human body, Physiology, Rig Veda

காடுகள் வாழ்க ! இந்துக்களின் அற்புத வாழ்க்கை! (Post No.10,272)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,272

Date uploaded in London – 29 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காடுகள் பற்றி ரிக் வேத கவிதை — பகுதி 2

உலகில் வேறு எங்கும்  காணாத புதுமை இந்துமதத்தில் மட்டுமே உண்டு. இந்துக்களின் வாழ்க்கையை நான்கு கட்டங்களாக முன்னோர்கள் பிரித்தார்கள். அவை

1.பிரம்மச்சர்யம்/மாணவர் வாழ்க்கை;

2.கிருஹஸ்தாஸ்ரமம் / குடும்ப வாழ்க்கை;

3.வானப்ரஸ்தம் / காட்டு வாழ்க்கை ;

4.சன்யாசம் துறவு வாழ்க்கை

இவற்றில் கானக வாழ்க்கையைத் தவிர மற்ற மூன்றும் பல மதங்களில் உண்டு. ஆனால் பிள்ளை, பேரன்கள் பிறந்த பின்னர் அவர்களை சுதந்திரமாக வாழவிட்டு  காட்டுக்குப் போ; அதுவும் மனைவியோடு ! ஏனெனில் அவளுக்குத் தான் பாசம் எளிதில் விடாது, என்று சொல்லி காட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணவனும் மனைவியும் துறவறம் ஏற்பது அவர்களுடைய மனப்பக்குவத்தைப் பொறுத்து நிகழ்ந்தது.

ஐயா, இதெல்லாம் புஸ்தகத்தில் உள்ளது உண்மையில் நடந்ததா? என்று கேட்டால் ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

திருதராஷ்டிரனும் காந்தாரியும் திடீரென்று ஒரு அறிவிப்பு வெளியிட்டனர். அவர்களுடைய சொற்பொழிவைக் கேட்க தலைநகர மக்கள் அனைவரும் ஒன்று கூடினர். ஒரே பரபரப்பு; ஏதேனும் பாண்டவர் ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு போடப்போகிறார்களோ என்று உலக மஹா டெலிவிஷன் ஸ்டேஷன்களும் வானொலி நிலையங்களும் நான் முந்தி, நீ முந்தி என்று மைக்  MIKES குகளை முன்னே நீட்ட அவர்கள் இருவரும் சொன்னார்கள்:_

“மன்னிப்போம், மறந்து விடுவோம்; குட் பை ! நாங்கள் காட்டுக்குப் போகிறோம்” என்று. ஊரே கண்ணீர் விட்டு அவர்களை வழி  அனுப்பிவைத்தது. இது அப்படியே மஹாபாரதத்தில் உள்ளது. (முன்னரே அவர்களுடைய உரையை இங்கே வெளியிட்டுள்ளேன்)

பாண்டவர்களை மன்னித்து சமரச உணர்வோடு அவர்கள் கானகம் சென்றவுடன் ஒரு நாள்  காடு தீப்பிடித்து எரிந்தது. அவர்கள் ஓடவில்லை. ஆனந்தமாக கருகி அழிந்தனர். இதே கதைதான் பாண்டு, மாத்ரிக்கும். பாண்டவர்களோவெனில் பேரன் பிள்ளைகளிடம்  ஆட்சியை ஒப்படைத்துவிட்டு காட்டு வழியே — இமயமலைக்காட்டு வழியே — நடந்தார்கள், நடந்தார்கள்; ஒவ்வொருவராக செத்து விழுந்தார்கள். இறுதியில் தருமனும் நாயும் மட்டும் முன்னே சென்ற கதை எல்லாம் உபன்யாசங்களில் கேட்டிருப்பீர்கள்.

ராமாயணத்தில் ராமனும் சீதையும் கான க வாழ்க்கை வாழ்ந்ததை  உலகமே அறியும். சீதைக்கு 14 ஆண்டுக்கு மேலும் வனவாசம்; ராமன் காரணமாக கிடைத்தது; அங்கேதான் லவனும் குசனும் பிறந்தார்கள்

மஹாபாரத வன பருவத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் நிறைய காடுகளின் வருணனை வருகிறது. குறிப்பாக பேயின் கேள்விகள்/ யக்ஷப் ரஸ்னம் , நள  உபாக்கியானம் பகுதிகளில் காடுகள் பற்றி உள்ளது ; வால் மீகியோ  காட்டிலேயே பிறந்த வேடன்; அவர் வருணனை எளிய, அழகான சம்ஸ்க்ருதத்தில் உள்ளது. இதையெல்லாம் கம்பனும் ஆங்காங்கே அள்ளித் தெளித்து இருக்கிறான்.

இதற்கெ ல்லாம் மேலாக  உலகமே புகமும் உபநிஷதங்கள்

பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே

பார்மீது ஏதொரு நூல் இது போலே –

என்று பாரதியால் பாடப்பட்ட உபநிடதங்கள் காடுகளில் உதயமாயின.

வானளாவிய மரங்களையும், ஆகாயத்தைத் துளைக்கும் அற்புத சிகரங்களையும், இனிய மண், மலர் வாசனையையும் , கொட்டும் நீர்வீழ்ச்சிகளையும் , துள்ளிக் குதிக்கும் மான் குட்டிகளையும் கண்ட  முனிவர்கள் உலகின் உயர்ந்த கருத்துக்களை மொழிந்தார்கள் ; பொழிந்தார்கள் .

இதற்கெல்லாம் மூல காரணம் இந்துக்களுக்கு ‘வானப்ரஸ்தம்’ என்ற மூன்றாவது கட்ட வன/ காட்டு /கானக (Forest/ Jungle) வாழக்கை முறையே.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் காளிதாசன் என்ற உலகப் புகழ் கவிஞன் எழுதிய ‘குமார சம்பவ’ காவியத்தில் முதல் பத்துப் பாடல்களில்  இமய மலை வருணனை இருக்கிறது . அதை அப்படியே சங்கத் தமிழ் புலவர்கள் ஆங்காங்கே  எடுத்தாண்டனர். (இதை என் ஆராய்ச் சிக்கட்டுரைகளில் விளக்கி, காளிதாசன், சங்க காலத்துக்கு  முந்தியவர் என்று நிரூபித்துள்ளேன்- 200 உவமைகள் மூலமாக)

xxx

இப்போது கட்டுரையின் முதல் பகுதியில் காட்டிய ரிக்வேத துதியில் உள்ள ஆறு மந்திரங்களுக்கு வருவோம்.

இந்த மந்திரத்தின் முழு வீச்சையும் புரிந்துகொள்ள காட்டுக்குள் ஒரு முறையாவது சென்றிருக்க வேண்டும். நான் பல முறை காட்டுக்குள், காலை முதல் மலை வரை, சுற்றியவன். குற்றாலக்  காடுகளில் தேன் அருவி வரையும். கர்நாடக ஆகும்பே காடுகளிலும், கொடைக்கானல் காடுகளிலும், ஏற்காடு மலைகளிலும் தாவரங்களைச் (Botanical Plant Collection trips)  சேகரிக்க கல்லூரி மாணவர், பேராசிரியர் குழுவுடன் சென்றேன். தனிப்பட்ட முறையில் கொடைக்கானல், கூனூர் , உதகை சென்று வந்தேன். ஆயிரத்துக்கும் மேலான பூக்கள், மலர்கள், தாவரங்கள் தபால் தலைகளை ஆல்பத்தில் பார்த்துக்கொண்டே தூங்குவது வழக்கம்

ரிக்வேதத்தை ‘கன்னா பின்னா மன்னார்கோவில்’ என்று மொழிபெயர்த்த 30 வெள்ளைக்காரப் பயல்களுக்கு காடு என்றால் தெரியுமா, புரியுமா என்பதே

கேள்விக்குறி!  Ralph T H Griffith கிரிப்பித் மட்டும் நீலகிரி மலையில் வாழ்ந்ததால் , கொஞ்சம் தெரிந்திருக்கலாம். மற்றவர்கள் Concrete Jungle கான்கிரீட் ஜங்கிள் என்று சொல்லப்படும் கட்டிடங்களைப்  புகழ்வோர் ஆவர். இதனால் இந்த அரண்யானி கவிதை, காட்டுத்தீ பற்றிய கவிதைகள், மூலிகை பற்றிய கவிதைகளை அதிகம் பிரஸ்தாபிக்கவில்லை; மழுப்பிவிட்டனர்.

மேலும் 40 ஆண்டுகளாக சங்க இலக்கிய 18 நூல்கள். அதற்குப்பின்னர் வந்த 18 கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பன்னிரு திருமுறை, திவ்விய பிரபந்தம் அத்தனையையும் ஒரு முறையாவது படித்து இருக்கிறேன். படித்து என்பதை அடிக்கோடு இடவும்; அதாவது கற்கவில்லை; நானும் படித்துவிட்டேன் என்ற வேகத்தில் 40 ஆண்டுகள் போய்விட்டன. கற்கத்துவங்கினால் 10 அல்லது 15 பிறவிகள் தேவை!! இப்படிப் படித்து மார்ஜினில் கிறுக்கி வைத்ததாலும் , கொஞ்சம் பாட்டனி/ Botany தாவர  இயல் ஆர்வம் இருந்ததாலும் இதோ என் கருத்துக்கள் :–

அடடா ! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தேவ முனி என்ற புலவன் காடு பாற்றிப் பாடினான்! என்ன அதிசயம் ! அதைவித அதிசயம் ரிக்  வேதம் உள்பட 4 வேதங்களையும், மகாபாரதத்தையும் நமக்கு அளித்தானே அந்த வேத வியாசன், அவனுக்கு எப்படி நன்றி சொல்வது!!

ரிக் வேதத்தை எல்லோரும் படிக்க வேண்டும்; பாரதி பாடல்கள் போல மிகவும் POSITIVE THOUGHTS பாசிட்டிவ் எண்ணங்கள் ! ஒளிபடைத்த கண்கள்; உறுதி கொண்ட நெஞ்சம் , களி படைத்த மொழி  இவற்றை எல்லாம் பாரதி ‘களவாண்டது’ ரிக் வேதத்தில் இருந்துதான்!

XXX

கானகம் பற்றிய கவிதை RV.10-146-6

ஆறாவது மந்திரத்தை முதலில் எடுத்கொள்வோம் (ரிக் 10-146-6)

என்ன அற்புதமான சொல் வீச்சு!

காட்டு ராணியே ! இனிய , சுகந்த மணம் வீசுபவளே! என்று உன்னைப் புகழ்ந்துவிட்டேன் அடடா அற்புதமே, நீ உழுதல் என்னும் தொழில் செய்யாமலேயே இப்படி கொட்டிக் கிடக்கிறதே! ஆரோக்கியம் தரும் வனத்தின் தாயே ! காடுகளில் உறையும் எல்லா உயிரினங்களுக்குத் தாயாக இருக்கிறாயே !

இதைப்படிக்கும்போது பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய இந்தியாவின் இரண்டாவது தேசீய கீதமான வந்தேமாதரம் நினைவுக்கு வரும் . அதன் இரண்டு மொழி பெயர்ப்புகள், பாரதியார் பாடல்களில் உள்ளன.

அதுமட்டுமல்ல. நியாயமான ஆட்சி நடக்கும் நாட்டில், உழவர்கள் பயிரிடாமலே நிலம் விளையும் என்ற வள்ளுவன் குறளும் நினைவுக்கு வரும்

ரிக் 10-146-5

இறங்கு வரிசையில் ஐந்தாவது மந்திரத்தை எடுத்துக்கொள்வோம்.

காடுகள் எவனையும் துன்புறுத்தாது. ஆனால் அங்கு துன்புறுத்துவோர் உண்டு. அன்பே வடிவான கானகத்  தாய் எவரையும் துன்புறுத்தமாட்டாள் ஆயினும் அங்கு புலி, சிங்கம் போன்ற கொடிய மிருகங்களும் வழிப்போக்கரைத் தாக்கும் மறவர்களும் உண்டு. அங்கு வசிப்போருக்கு எல்லாம் இலவசம். இஷ்டம்போல பழங்களைப் பறித்து உண்ணலாம்.

இதை எழுதிய வேத காலத்திலும் நகரங்களில் கடைகள் இருந்திருக்கும். ஆயினும் கானக மக்களோ விலங்குகளோ எதையும் விலை கொடுத்து வாங்க வேண்டியது இல்லை .

அது மட்டுமல்ல; இந்துக்கள் மட்டுமே இன்று வரை பெண்களுக்கு மதிப்பு தருகிறார்கள். அத்தனை , நதி கள், மலைகள், காடுகள், நல்ல குணங்கள் அனைத்தையும் பெண் பாலில் சொல்லிவிட்டனர். பூமியை தாய் என்று அழைத்தவர்களும் இந்துக்களே. பின்னர் இதை உலகமே பின்பற்றியது. இங்கு காட்டுக்கு பெண் பால் கொடுத்து, தாயே, பெண்ணே என்று அ ழைக்கும் அழகையும் காணவேண்டும். இந்துக்களின் பெண்கள் பெயர்களை அந்தந்த மொழியில் மொழிபெயர்த்தால் எல்லாம் பாசிட்டிவ் பொருள் ஆக இருக்கும்!

XXX

நாலாவது மந்திரம் 10-146-4

வனத்தின் தேவியே ! உன் கட்டுக்குள் ஒருவன் பசுவை அழைக்கிறான்; அந்த சப்தமும் கேட்கிறது ; இன்னும் ஒருவன் மரத்தை வெட்டும் ஒலி எழுகிறது மாலையில் (சூரியன் மலை வாயில் விழுந்தபின்னர்) பறவைகள், விலங்குகள் எழுப்பும் ஒளியைக் கேட்டவுடன் வயிற்றில் புளி கரைக்கிறது ; எதோ திருடர்கள் வந்துவிட்டார்களோ என்று பயம் வந்துவிட்டது.

மேற்கூறிய ஒவ்வொரு மந்திரத்துக்கும் வெவ்வேறு ஆட்கள் வெவ்வேறு வியாக்கியானம் தருகின்றனர். இந் த மந்திரத்தில் உண்மையில் பசு மேய்ச்சலோ மரம் வெட்டலோ நடக்கவில்லை. அங்கு எழும் ஒலிகள் இப்படி ஒரு பிரமையை உண்டாக்குகிறது என்பது ஒரு விளக்கம்.

இதை எழுதும்போது ,  தினமணிக்கு கதைகள் கொடுப்பதற்காக எங்கள் வீட்டுக்கு வரும் ஜியாவுதீன் என்ற பாரஸ்ட் ரேஞ்ச்சர் கானகம் பற்றிச் சொன்னது நினைவுக்கு வருகிறது.  கழுதைப்புலிகளின் ஒலி , யாரோ கதவு அருகில் வந்து சிரிப்பது போலக் கேட்குமாம்; முன் பின் காடுகளை அறியாதோருக்கு ஏதோ பேய் பிசாசு வந்துவிட்டது என்று நினைப்பார்கள் !

காடுகளில் உள்ள மறவர்கள் கூட்டம் மிகப்பெரிய டமாரங்களை முழக்குவர் . இதைக் கேட்டவுடனேயே காடுகளின் வழியே செல்லும் வணிகக் குழு பயந்து, நடுங்கி, சிதறி ஓடுவர். அவர்கள், கொஞ்சமும் கூசாமல் ஆட்களைக் கொன்று குவித்து பொருள்களை எடுத்துக் கொள்ளுவார்கள்; காட்டு வழியே மன்னருக்கு தூது சென்ற ஒரு பிராமணன் கையில் தங்கம் இருக்கும் என்று கருதி கொன்ற மறவர்கள், ‘அடப்பாவமே ஒன்றுமில்லாத பார்ப்பனனைக் கொன்றுவிட்டோ மே என்று கையை சொடக்குப் போட்டுக்கொள்ளும் காட்சி புறநானூற்றில் உள்ளது. வணிகள் கூட்டத்துடன் சென்ற தமயந்தி என்னும் பேரழகி , நளனைப் பிரிந்து காட்டு வழியே சென்றபோது, நடந்த தாக்குதல் பற்றி மஹாபாரதம் விரிவாக ஸ்லோகங்களில் எழுதியுள்ளது . இங்கே வேதத்தில் ‘திருடர்கள் பயம்’ என்றவுடன் என் நினைவுக்கு வந்த காட்சி இது.

காட்டு வழிதனிலே-அண்ணே!

கள்ளர் பயமிருந்தால்?”-எங்கள்

வீட்டுக் குலதெய்வம்-தம்பி

வீரம்மை காக்குமடா!”

நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்

நெருக்கிக் கேட்கையிலே?’-“எங்கள்

கறுத்த மாரியின் பேர்-சொன்னால்

காலனும் அஞ்சுமடா!

என்ற பாரதியின் பாட்டு, காட்டுக்குள் நடக்கும் தாக்குதலை விளக்குகிறது.

திரைப்படம்: வீரபாண்டிய கட்டபொம்மன் 

பாடலாசிரியர்: கு.மா. பாலசுப்பிரமணியம் 

இசை: ஜி. ராமநாதன் 

பாடியோர்: :டி.எம். சௌந்தரராஜன், டி.வி. ரத்தினம்

ஆண்டு: 1959 

மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு

மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு

காட்டுவழி போறவளே ஏஏஏஏ ஏஏஏ ஏஏஏ ஏஏஏ ஏ

காட்டுவழி போறவளே கன்னியம்மா உன்

காசுமால பத்திரமாப் பாத்துக்கம்மா

நல்லவரைப் போல சில கள்ளரும் இருப்பாங்க

நம்பிவரும் பாதையிலே கொள்ளையும் அடிப்பாங்க

நல்லவரைப் போல சில கள்ளரும் இருப்பாங்க

நம்பிவரும் பாதையிலே கொள்ளையும் அடிப்பாங்க

மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு  – என்ற வீர  பாண்டிய கட்ட பொம்மன் திரைப்படப் பாடலும் ஒப்பிடத்தக்கது 

முதல் மூன்று மந்திரங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்

TO BE CONTINUED……………………………………

tags– வானப்ரஸ்தம், காடுகள் , ரிக் வேதம், அரண்யானி கவிதை — 2

கச்சியப்பரைத் தந்தப் பல்லக்கில் ஏற்றி நகர் வலம் வந்தவர் யார்? (Post.10,271)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,271

Date uploaded in London – 29 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கச்சியப்பரைத் தந்தப் பல்லக்கில் ஏற்றி நகர் வலம் வந்தவர் யார்?

ச.நாகராஜன்

தொண்டை மண்டல சதகம் தொண்டை நாட்டின் ஏராளமான சிறப்புக்களை நூறு பாடல்களில் தரும் அற்புத நூல். காஞ்சிபுரத்தில் கச்சியப்ப சிவாசாரியார்  தாம் இயற்றிய கந்த புராணத்தை அரங்கேற்றினார்.

திகடச் சக்கரம் என்று முருகனே அடி எடுத்துக் கொடுக்க கச்சியப்பர் இதை இயற்றி அருளினார்.

இது பற்றிய கட்டுரையை ஏற்கனவே பிரசுரித்திருப்பதால் அதை மீண்டும் இங்கு தரவில்லை (கட்டுரை எண் 10200 வெளியிட்ட தேதி 12-10-2021 மற்றும் கட்டுரை எண் 10205 வெளியிட்ட தேதி 13-10-2021 பார்க்கவும்)

தொண்டை மண்டலச் சிறப்பைச் சொல்ல வந்த சொக்கநாதப் புலவர் கச்சியப்பர் கந்தபுராணத்தை அரங்கேற்றியது தொண்டை மண்டலத்தில் தான் என்று கூறிச் சிறப்பிக்கிறார்.

கச்சியப்பர் கந்தனின் மஹிமையைக் கூறும் புராணத்தை இயற்றியதால் இருபத்துநான்கு கோட்டத்து வாழ் வேளாளர்களும் மனம் மிக மகிழ்ந்தனர். கச்சியப்பர் ஒரு வருடம் இந்தப் புராணச் செய்யுள்களை விவரித்துத் தினமும் கூறி வந்தார். 24 நான்கு கோட்டத்தைச் சேர்ந்த வேளாளர்களும் இறுதி நாளன்று அவரை ஒரு தந்தப் பல்லக்கில் ஏற்றி திருமுறையையும் வைத்து தாமே சுமந்து நகர் வலம் வந்தனர். பின்னர் அதைக் கோவிலில் முறையாக பூஜை செய்து அரங்கேற்றினர்.

இந்தப் பெருமையை புலவர் 27ஆம் பாடலில் தருகிறார் இப்படி:-

அந்தப்புரமு மறுநான்குகோட்டகத் தாருமொன்றாய்க்

கந்தப்புராணம்பன் னீராயிரஞ்சொன்ன கச்சியப்பர்

தந்தப் பல்லக்கையுந் தாங்கிக் குமரர் பொற் சந்நிதிக்கே

வந்தப் புராண மரங்கேற்றினார் தொண்டை மண்டலமே (பாடல் 27)

பாடலின் பொருள் :- கந்தனின் சரித்திரமாகிய கந்தப்புராணத்தைப் பன்னீராயிரம் செய்யுள்களால் செய்தவர் கச்சியப்ப சிவாசாரியர். அந்தப் புராணத் திருமுறையோடு தந்தப் பல்லக்கின் மீது அவரை ஏற்றி தாமே சுமந்து நகர் வலம் வந்து, குமர கோட்டத்தில் அரங்கேற்றுவித்தவர் தொண்டை மண்லத்தைச் சேர்ந்த இருபத்து நான்கு கோட்டத்தும் காஞ்சீபுரத்தும் வாழ்ந்த வேளாளரே தாம்!

கடவுள் வாழ்த்து, நூல் பெயர், அவையடக்கம், சிறப்புப் பாயிரம் ஆகிய நூலுக்குரிய அம்சங்களைப் பெற்றுள்ள கந்த புராணமானது உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தக்ஷ காண்டம் ஆகிய ஆறு காண்டங்கள் (‘குற்றமில்லாத அருட்குரவராகிய கச்சியப்ப சிவாசாரியர் சகாத்தம் எழுநூற்றில்”) கச்சியப்ப சிவாசாரியரால் கச்சி குமரகோட்டத்தில் அரங்கேற்றப்பட்டது. இதில்  மொத்தம்  10346 பாடல்கள் உள்ளன.

***

tags – கச்சியப்பர், தந்தப் பல்லக்கு, நகர் வலம் ,