Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
28-6-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
விண்வெளி விந்தை – லேடஸ்ட்!!
இரண்டு சீன விண்கலங்கள் விண்வெளியில் சந்திப்பு!
ச. நாகராஜன்
(Image credit: CASC)
இரண்டு சீன விண்கலங்கள் விண்வெளியில் சந்தித்திருக்கின்றன. இதை வேவு பார்த்த ஒரு நிறுவனம் செய்திகளை இப்போது வெளி உலகிற்குத் தெரிவித்து விட்டது,
சீனாவைச்சேர்ந்த லாங் மார்ச் 3பி(Long March 3B)என்ற ராக்கட் ஜிஜாங் ஏவுதளத்திலிருந்துஷிஜான் – 21 சாடலைட்டை 2021 அக்டோபர் 24ம் தேதி விண்ணில் ஏவியது. இந்த சாடலைட் சீனா 2025 ஜூன் மாதம் ஏவிய இன்னொரு சாடலைட்டான ஷிஜான் – 25ஐச் சந்தித்திருக்கிறது! 22236 மைல் உயரத்தில் இந்த விசித்திர சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது!
பூமிக்கு மேலே இவை நெருக்கமானது எதற்காக? அங்கு கூட எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும் என்று காட்டுவதற்காக!
ஷிஜான் – 21 மற்றும் ஷிஜான் – 25 ஆகிய இரண்டு துணைக்கோள்களும் ஜியோசிங்க்ரொனஸ் சுற்றுப் பாதையில் (geosynchronous orbit) ஈக்வேடருக்கு மேலே 22236 மைல் உயரத்தில் அருகருகே சுற்றிக் கொண்டிருந்தன. இப்போது இந்த இரண்டு துணைக்கோள்களும் சந்தித்திருக்கின்றன என்ற செய்தி வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளது. 2025, ஜூன் 14ம் தேதி இது நிகழ்ந்திருக்கிறது.
இதன் மூலம் நமக்குத் தெரிய வருவது ஷிஜான் – 21 மற்றும் ஷிஜான் – 25 ஆகிய இரண்டும் சோதனை ஓட்டத்திற்குப் பின்னர் இணைவது மற்றும் பிரிவது (a docking and undocking test) ஆகிய சோதனைகளையும் மேற்கொண்டிருக்கக்கூடும் என்பது தான்!
ஜூன் 13 மற்றும் 14ம் தேதிகளில் இவை நெருங்கி இருந்தன என்று கீழிருந்து கண்காணித்தவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.
விண்வெளிப் பயணத்தை நீட்டிக்க வேண்டி எரிபொருளை விண்ணிலேயே நிரப்ப முடியுமா என்ற பெரிய சோதனை நிகழ்ந்திருக்கிறது.
இரண்டு துணைக்கோள்களில், ஷிஜான் – 25 எரிபொருளை விண்ணில் நிரப்ப முடியும் என்ற சோதனையை நிகழ்த்தியுள்ளது. ஷிஜான் – 21 ஒரு செயலற்ற, ‘இறந்து போன’ துணைக்கோளை அதன் ‘கல்லறைச் சுற்றுப்பாதையிலிருந்து’ கட்டி இழுத்து வந்திருக்கிறது!
இந்த இரண்டுமே சீனாவில் உள்ள ஷாங்காய் அகாடமி ஆஃப் ஸ்பேஸ் ஃப்ளைட் டெக்னாலஜி (Shanghai Academy of Spaceflight Technology (SAST)நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவையாகும்.
அமெரிக்க கண்காணிப்பு சாடலைட்டுகளான யுஎஸ்ஏ 270 மற்றும் யுஎஸ்ஏ 271 ஆகிய இரண்டும் இதன் கிழக்குப் பக்கத்திலும் மேற்குப் பக்கத்திலும் மிக அருகில் இருந்து கண்காணிக்க இருக்கின்றன!
SabA global Ayyappa conference took place on September 20th at Pamba, near Sabarimala. Did you hear about it? Most people didn’t. The event was organized by the Communist-led Kerala state government, a move that raised eyebrows across the political and spiritual spectrum. After all, this is the same government that, in 2019, facilitated the entry of two leftist women into the sanctum of Sabarimala, violating centuries-old traditions and sparking nationwide outrage. The Chief Minister’s decision to project that act as a progressive victory only deepened the wounds of millions of devotees. So why this sudden change of heart?
According to the state government, the objective of the conference was to spread the message of “Tatvamasi” (“That you are”) across the globe and position Sabarimala as a divine, traditional, and sustainable global pilgrimage destination. Noble words, no doubt. Strip away the rhetoric, and what remains is their claim: to “market Ayyappa around the world.”
Ayyappan is already revered globally. Our culture has never relied on branding, promotion, or conversion to spread its spiritual essence. Devotion flows organically, through experience, not campaigns. In any case, why this sudden love for Swami Ayyappan and Sabarimala?
The event was expected to feature academic discussions on the development of the temple area, aligned with the ₹1,300 crore Sabarimala Master Plan, focusing on spiritual tourism and crowd control. Now that makes some sense, doesn’t it? Terms like “Sabarimala Master Plan” and “spiritual tourism” give you a glimpse of what their real “master plan” behind the summit might have been. If that’s not clear enough, let me remind you: Sabarimala’s annual revenue is around ₹440 crore. Kerala’s temples collectively generate over ₹1,000 crores a year. They’re a cash cow for the state government, and everyone knows it.
I must say, the ways of Ayyappa are strange. Can you imagine a Communist Chief Minister quoting from the Bhagavad Gita? Well, Pinarayi Vijayan did, stumbling through a shloka from Chapter 12 with great difficulty. And if that wasn’t awkward enough, he went on to misquote a popular Ayyappa chant, embarrassing himself beyond redemption in front of the very devotees he was trying to impress. The icing on the cake was provided by Devaswom President who chanted Swamiye Saranama with clenched fists.
So once again, why this sudden affection for Hindu temples? With Kerala and Tamil Nadu heading into elections in eight months, the Kerala government seems desperate to win back its alienated Hindu voter base. This was, at best, a damage-control exercise, and it has fallen flat on their face.
The government had invited over 3,000 guests from around the world. The event was originally supposed to be inaugurated by M.K. Stalin, the Chief Minister of Tamil Nadu and head of a party that openly advocates for the “eradication of Sanatana Dharma.” But for reasons unknown, he backed out at the last moment. In his place, DMK minister Palanivel Thiagarajan, known for his hostility toward Hindu gurus like Sadhguru, was nominated instead.
To cut a long story short: the event turned into a major embarrassment. Barely 600 people attended. Images of empty chairs during the Chief Minister’s speech have gone viral on social media. And the cost? ₹7 crores. (See the below image)
Let’s hope the devotees of Ayyappa won’t be fooled by such theatrics anymore.
*****
HINDU ORGANISATIONS ORGANISED A RIVAL CONFERENCE WHERE BJP LEADER ANNAMALAI SPOKE. HUGE CROWD ATTENDED
Adding to the humiliation, a spontaneous event organized by a Hindu organization the very next day in Pandalam, home of Swami Ayyappan, drew thousands of devotees from across the globe (see the below image). The total expense for that event? Less than ₹10 lakhs.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part three
அதர்வண வேத மருத்துவ அகராதியைத் தொடர்ந்து காண்போம்
சர்ஜரி/ அறுவைச் சிகிச்சை தொடர்பான சொற்கள்
அஸ்திய்வந்தவ் – மூட்டு 10-2-2
உச்சலங்கவ் – கணுக்கால்- குதிங்காலுக்கு இடைப்பட்ட பகுதி 10-2-1;
ககாடிக – வாய்ப்பு பகுதி எலும்புகள் 10-2-8
வ்கபந்த – தலைக்கு கீழுள்ள பகுதி 10-2-3;
கபால – மண்டை ஓடு 10-2-8
இப்போதும் உலகம் முழுதும் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லை பயன்படுத்துகிறோம் ; மருத்துவ அகராதியில் கபால என்பதை செபாலஸ் cephalas என்று எழுதுவார்கள் க — என்பதை ச — என்று தவறாறாக உச்சரிப்பார்கள்
சித்ய ஹனோவ்- மோவாய், முகவாய் (முகரகட்டை பேச்சுவழக்கு) தாவாய் கீழ் தாடை 10-2-8;
ஜங்கா – தொடை 10-2-1
ஜராயு – கருவினை மூடியுள்ள ஜவ்வு 1-27-1;
பர்ஸு – விலா 9-7-6;
பார்ஸ்னி – குதிங்கால் 10-2-1;
ப்ரதிஷ்ட – பாதம் 10-2-1;
லலாட – நெற்றி 10-2-8;
வீர்ய – விந்து 10-2-5;
சிதிர – குருத்தெலும்பு – 10-2-3;
சப்த கனி சீர்சானி – தலையிலுள்ள ஏழு ஓட்டைகள் 10-2-5;
சுரோணி – ஆசனவாய், குதம் 10-2-3;
பகவான் சிங் எழுதியTHE VEDIC HARAPPANS தி வேதிக் ஹரப்பன்ஸ் என்ற நூலில் மிகவும் பிரயாசை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு துறையிலும் நீண்ட பட்டியலை வேதங்களிலிருந்து மட்டும் கொடுத்துள்ளார் ; அதைக் காணும்போது வேத கால இந்துக்கள் அறியாத விஷயமே இல்லை என்று தெரிகிறது . மிகவும் முன்னேறிய சமுதாயமாக இருப்பதை அறியலாம்; அனைவரும் அந்த நூலைப் படித்து அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாக்ஸ் முல்லர் கும்பல்களிலிருந்தும் கால்டுவெல் கும்பல்களிலிருந்தும் விடுபட வேண்டும்.
நான் NUMBER / எண் கொடுத்துள்ள ஒவ்வொரு துதிக்கும் சென்றால் பல ரகசியங்களை அறியலாம் . அதர்வண வேத பத்தாவது காண்டத்தில் நிறைய மருத்துவச் செய்திகள் உள்ளன. இவைகளை சரக, சுஸ்ருத சம்ஹிதைகளோடு ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்ய வேண்டும்; அதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது
எல்லோரும் முன்னரே அறிந்த வேத கால அதிசயங்களை மீண்டும் ரிக் வேதத்திலிருந்து தருகிறேன்; வேத கால அதிசய டாக்டர்கள் அஸ்வினி தேவர்கள் ; கன்னா பின்னா என்று எழுதும் வெளிநாட்டுக் கழிசடைகளும் கூட இந்த அஸ்வினி தேவர்களை எங்களால் யார் என்று சொல்ல முடியவில்லை. இவர்கள் தெய்வங்களா அல்லது மாஜிக் செய்த மானுடர்களா என்று வியந்துள்ளனர்! இதோ அவர் கள் செய்த முன்னேறிய மருத்துவ சிகிச்சைகள் :–
ஸ்யவனருக்கும் பு ரந்தியின் கணவருக்கும் மீண்டும் இளமையை மீட்டுத் தந்தது ;
விஸ்பலாவுக்குச் செயற்கைக் கால்களை பொருத்தியது ;
ரிஜஸ்வனின் குருட்டுத் தன்மையை நீக்கியது
போன்ற பல அற்புதங்கள் !
Rejuvenation of Cyavana (RV 10-39-4) and Purandhi’s husband (RV 1-116-13), setting the fractured thigh of Vispala through support (RV 1-116-13) and curing of the blindness of Rjrsva (RV 1-116-17).
இப்போது நாம் விநாயக கவசம், கந்த சஷ்டிக் கவசம் போன்ற எண்ணற்ற கவசங்களைப் படிக்கிறோம் இதற்கெல்லாம் மூலம் ரிக் வேதமாகும் . முன்னர் குறிப்பிட்ட ரிக்வேத 1-163 துதியில் 25-க்கும் மேலான உடல் உறுப்புகளைக் கண்டோம்; அதுவும் ஒரு கவசம் ஆகும்.
இன்னொரு துதிப் பாடல் என்னுடைய விரல்களால் தொட்டு நோயை நீக்குகிறேன் என்று முடிகிறது; சிலருக்கு உடலில் நோயுள்ள பாகங்களைத் தொட்டு நோயை நீக்கும் அபூர்வ சக்தி உண்டு. இதை HEALING TOUCH ஹீலிங் டச் என்பார்கள். நோயை நீக்கும் கைராசியான பேர்வவழிகள் அவர்கள்! இதையும் ரிக்வேதத்தில் காண்கிறோம்.
எல்லா வேதங்களும் ஆங்கிலத்தில் வெப்ஸைட்டில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவைகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஆராய்ச்சிகளைத் தொடங்கலாம். ஆயினும் வேதத்தை முழுக்கப் படிக்காமல் ஆராய்ச்சியில் இறங்கிவிடாதீர்கள்.
நான் அதர்வ வேதத்தையும் ரிக் வேதத்தையும் முழுக்க தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்தேன்; பக்கத்திற்குப் பக்கம் மார்ஜின் முழுவதும் நோட்ஸ்களை/ குறிப்புகள் எழுதுவதோடு கடைசி பக்கத்தில் நானாக இன்டெக்ஸ்சும் தயார் செயதேன் . மருத்துவக் குறிப்புகளை எழுத மட்டுமே தனி புஸ்தகம் தேவைப்படும்! அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன!
–subham—
Tags- ரிக், அதர்வண வேதங்களில் மருத்துவ சொற்கள்! அபூர்வ தகவல்கள்!!- 3
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் என்று மஹா கவி பாரதியார் ஏன் சொன்னார்? இது பலரது அனுபவத்தில் கண்ட உண்மை என்பது பாரதியாருக்குத் தெரியும். முதலில் ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு ஷெல்லி தாசன் என்ற புனைப்பெயரில் பாடிய பாரதி, பின்னர் சக்திதாசன் என்ற பெயரில் எழுதினார். இதனால் இன்றளவும் அவரை மிஞ்சும் கவிஞன் பிறக்கவில்லை.
சக்தியைப் பாடிப் பயன் அடைந்தவர்களின் பட்டியல் மிகவும் நீண்டது ஆதி சங்கரர்,மூக கவி, காளிதாசன், தெனாலி ராமன், வித்யாரண்ய சுவாமிகள், லலிதா சஹஸ்ரநாமத்துக்கு உரை எழுதிய பாஸ்கர ராயர், நமது காலத்தில் வாழ்ந்த காஞ்சி, சிருங்கேரி மடாதிபதிகள் , புதுக்கோட்டை சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் தினமும் சக்தியை- தேவியை – வழிபட்டுப் புகழ் அடைந்தனர். ஒரு சில விஷயங்களை நவராத்ரி காலத்தில் நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.
ஆதிசங்கரர் அம்பிகையின் அருள்பெற்று நாடு முழுதும் பல கோவில்களில் ஸ்ரீ சுக்ர யந்திரத்தை ஸ்தாபித்து எல்லோருக்கும் தேவியின் அருள் கிடைக்க வழி செய்தார் ஸ்ரீநகர் முதல் கன்யாகுமரி வரை அவருடைய காலடிபட்டு புனிதம் பெற்றது காஷ்மீரின் தலைநகருக்கே ஸ்ரீ நகர் என்று தேவியின் பெயரைச் சூட்டினார்.
ஆட்டிடையனாகப் பிறந்த காளிதாசனை திமிரு பிடித்த மஹாராணிக்குஅந்த நாட்டு மந்திரிகள் மனம் புரிவித்தனர்; முதல் நாள் இரவிலேயே அவன் ஆட்டிடையன் என்று கண்டு கொண்ட ராணி அவனை விரட்டவே, ஊர்க்கோடியில் உள்ள காளிகோவிலுக்குச் சென்று பிரார் த்தனை செய்தான் காளி அவன் முன் தோன்றி அவன் நாவில் மந்திர அட்சரத்தினை எழுதவே உலகப் புகழ் பெற்ற கவிஞன் ஆனான் .ஏழு அற்புத நூல்களை நமக்குத் தந்தான்
இதே போல தெனாலி ராமனுக்கும் காளியின் அருள் கிடைக்கவே அவன் விஜய நகர சாம்ராஜ்யத்தில் ஆஸ்தான விகட கவியாக உயர்ந்து நமக்கு நகைச் சுவைக்கதைகளை விட்டுச் சென்றான்
மூக கவி என்பவர் குமர குருபரர் போல ஊமையாகப் பிறந்து , இறைவியின் அருள் பெற்று நமக்கு அருட்கவிகளை மழை யெனப் பொழிந்து சென்றார்.
நமது தாத்தா , கொள்ளுத் தாத்தா காலத்தில் வாழ்ந்த அப்பய்ய தீட்சிதர் பாஸ்கர ராயர், முத்து சுவாமி தீட்சிதர் , நீல கண்ட தீட்சிதர் முதலிய எண்ணற்ற கவிஞர்கள் நமக்கு துதிகளை உரைகளையும் நல்கினர் .
வீர சிவாஜியோ பவானி தேவியின் வாளினைப் பெற்று முஸ்லீம் படைகளை நிர்மூலமாக்கி ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். குமார கம்பன்னன், மஹா ராணி கங்கா தேவி, திருமலை நாயக்கர் முதலிய மன்னர்களை வானுயரும் கோபுரங்களை அன்னைக்கு எழுப்பி அழியாத புகழ் பெற்றனர்.
இவர்களுக்கு முன்னோடியாக இருந்த வித்யாரண்யர் இறைவியை வேண்டி டன் கணக்கில் தங்கம் கேட்கவே அவளும் தந்தாள்; ஆனால் அதை அடுத்த பிறவியில்தான் அனு பவிக்க முடியும் என்றாள், அவரும் அடுத்த பிறவிக்காக ஸந்யாஸத்தை ஏற்றவுடன் ஞானம் பிறந்தது; தங்கத்தை தொடாமல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஹரிஹரன் ,புக்கன் என்ற இடையர்களை அழைத்துப் பயிற்றுவித்து மாபெரும் விஜயநகர சாம்ராஜ்யததை நிறுவி முஸ்லீம் ஆட்சிக்கு சாவு மணி அடித்தார்.
இதற்கெல்லாம் முன்னோடியாக சங்க இலக்கியத்திலே உமா என்ற ஸம்ஸ்க்ருதப் பெயரைச் சொல்லி தமிழ்ச் சங்கப்புலவர்களும் தேவியின் பெருமையைப் பாடினர்.
தமிழ்ச் சங்கப்புலவர்களில் உண்மையான புலவர் யார்? போலிகள் யார்? என்பதைத் தீர்மானித்தது மதுரை அன்னை மீனாட்சி கோவில் பொற்றாமரைக்குளத்தில் மிதந்த சங்கப்பலகையே!
அங்கையற்கண்ணியையும் ஆலவாய் உறை அப்பனையும் பாடி கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக மாற்றிய திரு ஞான சமப்ந்தர் சைவத்தை மீண்டும் தமிழ் நாட்டில் நிலைநாட்டினார். அவர் பயன்படுத்திய அங்கையற்கண்ணி என்ற மீனாட்சியின் தமிழ்ப்பெயர் இன்று வரை பெயர் சூட்டலில் இடம்பெறுகிறது.
இவ்வளவு கதைகளையும் அறிந்த பாரதியார் அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் என்றார். அதில் வியப்பதற்கொன்றுமில்லை
—subham—
Tags–அம்பிகையைச் சரண், புகுந்தால், அதிக வரம், பெறலாம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
11-7-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
உலகின் அதிசய இடங்கள்
உலகின் பழமை வாய்ந்த அஜந்தா எல்லோரா குகைச் சிற்பங்கள்!
ச. நாகராஜன்
உலகின் பழமை வாய்ந்த குகைச் சிற்பங்களைக் கொண்டிருக்கும் அஜந்தா மற்றும் எல்லோரா மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள குகைகளாகும். அஜந்தா-எல்லோரா என்று சேர்த்தே சொல்வது பழக்கமாகி விட்டது என்றாலும் இவற்றிற்கு இடையே உள்ள தூரம் சுமார் நூறு கிலோமீட்டராகும்.
யாருமே பார்த்தறியாமல் பல நூற்றாண்டுகளாக இருந்த அஜந்தா குகைகளைக் கண்டு பிடித்தவர் ஒரு பிரிட்டன் அதிகாரி. 1819ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் வாழ்ந்து வந்த ஜான் ஸ்மித் என்ற பிரிட்டிஷ்காரர் வேட்டையாடுவதற்காக அஜந்தா காட்டிற்குள் சென்றார். ஒரு புலியை அவர் துரத்திச் சென்றார். அப்போது அங்கு மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் புலிகள் தங்குமிடம் என்று சில குகைகளைக் காட்ட, அப்போது தான் அஜந்தா குகைகளைப் பற்றிய விவரத்தை முதன் முதலாக வெளி உலகம் அறிந்து கொண்டது.
குகைகளுக்கு அடியில் ஒரு நதி ஓடுகிறது. காலப் போக்கில் இது பெரும் காடாக மாறி விடவே யாரும் இங்கே வரவில்லை.
ஒரு குதிரைக் குளம்பு போன்ற வடிவத்தில் நீண்டு கிடக்கும் குகைகளின் உயரம் சுமார் 250 அடியாகும். 30 குகைகள் அஜந்தாவில் கண்டுபிடிக்கப்பட்டன. இது வரை இத்தாலிய சிற்பங்களே மிகவும் தொன்மை வாய்ந்தது என்று எண்ணியிருந்த உலக மக்களுக்கு மிக மிகப் பழமையான் அற்புதமான சிற்பங்கள் இந்திய சிற்பிகளால் கி.மு. 2 முதல் 6 நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை என்ற செய்தி தெரியவே அவர்கள் பிரமித்தனர்.
இந்தக் குகைகள் அனைத்தும் மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டவை என்பது பிரமிக்க வைக்கும் ஒரு விஷயமாகும்.
மேலிருந்து தொடங்கி கீழ் வரை வந்து அழகுற அமைக்கப்பட்ட இந்தக் குகைகள் ஆயிரக்கணக்கானோர் பல்லாண்டு காலம் வேலை பார்த்து உருவாக்கியவை என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
இந்த 30 குகைகளில் 9,19,26,29 ஆகிய குகைகள் பௌத்தர்களின் வழிப்பாட்டிடங்களாகவும் எஞ்சியவை பௌத்த பிக்ஷுக்கள் தங்கும் விகாரங்களாகவும் இருந்தவையாகும்.
அஜந்தாவில் உள்ள ஓவியங்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகியும் வர்ணம் மங்காமல் இருப்பது மாபெரும் அதிசயமே.
சரணந்திரி குன்றுகளில் அமைந்துள்ள 34 குகைகள் எல்லோராவில் உள்ளன. இக்குகைகளில் பௌத்த, இந்து மற்றும் சமணர்களது கோவில்களும், மடாலயங்களும் அமைந்துள்ளன. இவை 5ஆம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும். இவற்றில் 12 பௌத்தர்களது குகைகளாகவும் 17 இந்துக்களின் குகைகளாகவும் ஐந்து சமணர்களின் குகைகளாகவும் அமைந்துள்ளன.
பல அடுக்குகளைக் கொண்டதாக இந்த மடங்கள் உள்ளன.
16ம் எண்ணுள்ள குகை கைலாசநாதரது கோவிலாகும். இங்குள்ள முற்றம் 276 அடி நீளமாகவும் 154 அடி அகலமாகவும் உள்ளது. இது பல மாடிகளைக் கொண்ட கோவில் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. கைலாசநாதர் கோவிலை அமைக்க 107 அடி மலைப் பாறைகளைக் குடைய வேண்டி இருந்திருக்கிறது.
இந்த கோவில்களை யானை, சிங்கம் மற்றும் புலி உள்ளிட்டவைகள் தாங்குவது போல சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஹிந்து மதத்தின் தேவதைகள் சிறப்பாக இங்கு செதுக்கப்பட்டுள்ளன.
ராமாயணத்திலிருந்து முக்கிய காட்சிகள் மையத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அஜந்தா எல்லோரா குகைகளை உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
இந்தியப் பண்பாட்டின் முக்கிய அம்சமாகவும் பௌத்த மதத்தின் சிறப்பான வரலாற்றையும் சுட்டிக் காட்டுவதாகவும் விளங்கும் இந்தக் குகைகளைப் பார்க்க ஏராளமானோர் வருகின்றனர்; இவற்றைப் பார்த்து பிரமிக்கின்றனர்!
Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .
London Time 1 PM (British Summer Time)
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.
****
Prayer -Mrs. Jayanthi Sundar Team
***
NEWS BULLETIN
Vaishnavi Anand from London present World Hindu News in Tamil
****
Brhannayaki Sathyanarayanan from Bengaluru speaks on
Koothanur Saraswathi Temple
****
PROFESSOR S SURYANARAYANAN SPEAKS ON
NUMBERS GIVE INTERESTING INFORMATION
***
SPECIAL EVENT-
TALK ON NAVARATRI FESTIVAL
By MAYILADUTHURAI SRI RAGHAVAN
MAYILADUTHURAI RAGHAVAN
Mayiladuthurai Raghavan, is a dedicated professional in the IT sector.
For the past 16 years, he has been delivering Upanyasams (discourses), Pravachanams (lectures), and devotional discourses in Tamil at various venues, covering a wide range of topics on a particular focus on Parashakti Sri Lalita Ambika Kamakshi.
His expertise has been recognized, and he had the privilege of presenting on Sri Sankara TV during numerous auspicious occasions. Two of his programs, each spanning over 10 months, have been particularly well-received.
“Sri Thyagaraja Vaibhavam” delved into the divine leelas (divine plays) of Sri Parameswara, who resides in Thiruvarur as Sri Thyagaraja’s Uttarayana and Dakshinayana.
“AcharyalumAmbikaiyum” provided insightful explanations of Devi Stotras (hymns to the Divine Mother) composed by the revered Adi Shankaracharya.
Furthermore, he has delivered Pravachanams on a wide array of subjects in various locations, Some of the most significant among these include:
1. Devi BhagavathaNavaham: A nine-day discourse on the Devi Bhagavata Purana
2. Sri Kamakshi Vaibhavam: Anine-day discourse on the glories of Sri Kamakshi Ambal
3. Sri Rajarajeshwari Vaibhavam: A nine-day discourse on the divine leelas of Sri Lalita Rajarajeshwari
4. Sri Lalitopakhyanam: A complete discourse on the Sri Lalitopakhyana for 28 days
5. Shiva Leelarnavam: Afive-day discourse on the divine leelas of Sri Parameswara
My Upanyasams have been presented in various cities across India, including New Delhi, Kolkata, Palakkad, Mumbai, Bangalore, and numerous locations in Tamil Nadu.
Additionally, he has regularly conducted Pravachanams at the branches of the Kanchi Kamakoti Sri Mutt in New Delhi and Bangalore.
Mayiladuthurai Raghavan, is a dedicated professional in the IT sector.
For the past 16 years, he has been delivering Upanyasams (discourses), Pravachanams (lectures), and devotional discourses in Tamil at various venues, covering a wide range of topics on a particular focus on Parashakti Sri Lalita Ambika Kamakshi.
His expertise has been recognized, and he had the privilege of presenting on Sri Sankara TV during numerous auspicious occasions. Two of his programs, each spanning over 10 months, have been particularly well-received.
“Sri Thyagaraja Vaibhavam” delved into the divine leelas (divine plays) of Sri Parameswara, who resides in Thiruvarur as Sri Thyagaraja’s Uttarayana and Dakshinayana.
“AcharyalumAmbikaiyum” provided insightful explanations of Devi Stotras (hymns to the Divine Mother) composed by the revered Adi Shankaracharya.
Furthermore, he has delivered Pravachanams on a wide array of subjects in various locations, Some of the most significant among these include:
1. Devi BhagavathaNavaham: A nine-day discourse on the Devi Bhagavata Purana
2. Sri Kamakshi Vaibhavam: Anine-day discourse on the glories of Sri Kamakshi Ambal
3. Sri Rajarajeshwari Vaibhavam: A nine-day discourse on the divine leelas of Sri Lalita Rajarajeshwari
4. Sri Lalitopakhyanam: A complete discourse on the Sri Lalitopakhyana for 28 days
5. Shiva Leelarnavam: Afive-day discourse on the divine leelas of Sri Parameswara
My Upanyasams have been presented in various cities across India, including New Delhi, Kolkata, Palakkad, Mumbai, Bangalore, and numerous locations in Tamil Nadu.
Additionally, he has regularly conducted Pravachanams at the branches of the Kanchi Kamakoti Sri Mutt in New Delhi and Bangalore.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லலிதா சஹஸ்ர நாமத்தை நவராத்ரி காலத்தில் பாராயணம் செய்வது சம்பிரதாயமாக உள்ளது. இதற்குப் பலர் உரை எழுதியபோதும் பாஸ்கர ராயர் எழுதிய உரையே சிறந்தது . அதை கணேச அய்யர் என்பவர் நீண்ட விளக்கவுரையுடன் பதிப்பித்துள்ளார் . அதில் உள்ள பல சுவையான செய்திகளில் ஒன்று மனைவியின் பெருமையை பேசுகிறது சகல கலா வல்லுனரான அகஸ்தியருக்கு லலிதா சஹஸ்ர நாமத்தின் பெருமையைத் லலிதா தேவி தெரிவித்ததற்கு காரணம் அவருடைய மனைவியான லோபா முத்திரை என்று சொல்கிறது. வெற்றி அடைந்த ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் இருப்பது ஒரு பெண்தான்“Behind every successful man, there is a woman” என்ற ஆன்றோர் பொன்மொழிக்கு உதாரணமாக அமைகிறது இந்தக் கதை.
லலிதா சஹஸ்ர நாமத்திலுள்ள ஆயிரம் நாமங்களையும்
ஹயக்ரீவர் (குதிரைக் கழுத்துடைய விஷ்ணு ரூபம் ), அகஸ்தியருக்கு உபதேசம் செய்தார்.
அகஸ்தியரின் மனைவி லோபாமுத்ரா மஹா பதிவிரதை; அதாவது கற்புக்கரசி; தேவிக்கு பன்னிரு பக்தைகள், சீடர்கள் உண்டு. அவர்களில் ஒருவர் லோபாமுத்ரா .
லலிதா த்ரிசதியின் அவதாரிகையில் அம்பாள் ஹயக்ரீவரைப் பார்த்து த்ரிசதியை அகஸ்தியருக்கு உபதேசிக்கும்படி ஆக்ஞா பிக்கையில் அதற்கு லோபாமுத்ரையின் கணவராக இருப்பது ஒரு காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது
பத்ன்யஸ்ய லோபமுத்ராக்யா மாமுபாசுதேதி பக்திதஹ
அயம் ச னிதராம் பக்தஹ தஸ்மாத் அஸ்ய வதஸ்ய தத்
பொருள்
இவருடைய மனைவியான லோபாமுத்திரை என்னை விசேஷமான பக்தியுடன் வழிப்படுகிறாள் ; இவரும் என்னுடைய பரம பக்தர் ஆகையால் நீர் அதை இவருக்குச் சொல்லும்..
இதிலிருந்து அகஸ்தியரும் கு சத்யவான், நளன் போல மனைவியால் பயன்பெற்றது தெரிகிறது. அம்பாளை அடைவதற்கான 15 உத்திகளில் ஹாதி வித்யையில் சிறந்தவள் லோபாமுத்ரா.
அகஸ்தியரின் பெருமையை நாம் எல்லோரும் அறிவோம் ; புராதன இந்தியாவின் மாபெரும் என்ஜினீயர் ; பல் மொழி வித்தகன் ; மனு ஸ்ம்ருதி சொன்னதையும் மீறி கடல்கடந்து சென்று ஏழு தென் கிழக்காசிய நாடுகளில் இந்து கலாசாரத்தையும் மொழியையும் பரப்பியவர்
கங்கை நதியைப் பயனுள்ள பாதையில் திருப்பிவிடுவதற்குப் பல மன்னர்கள் முயன்றும் பலனளிக்க வில்லை அதே வம்சத்தில் வந்த பகீரதன் கடும் தவம் இயற்றி கங்கையை பாக்கித்தான் பக்கம் போகாமல் இந்தியாவுக்குள் திரும்பிவிட்டார். அதே போல காவிரி நதி கேரளா பக்கம் சென்று கடலில் விழுந்து வீணாகியது . அதைத்தடுத்து காவிரியைத் தமிழ் நாட்டின் பக்கம் திருப்பினார் அகஸ்தியர் . ராமபிரான் போன்றோர் அக்காலத்தில் தென் இந்தியாவுக்கு வருவத கு சாலை போட்ட முதல் என்ஜினீயர் அகஸ்தியர் விந்திய மலை வழியாகச் சாலை அமைத்து அதன் கர்வத்தைப் பங்கம் செயதார் என்று இதை புராணங்கள் வருணிக்கின்றன
அதுமட்டுமால்லாமல் பாப்புலேலேஷன் பிராப்ளம் POPULATION PROBLEM லாங்குவேஜ் பிராப்ளம் LANGUAGE PROBLEM போன்ற பிரச்சினைகள் சிவபெருமானை வாட்டி வதைத்தது உடனே அவரை சிவன் தென் திசைக்கு அனுப்பினார் அவர் பதினெட்டு ஜாதிகளைச் சேர்ந்தோரை தென்னாட்டிற்கு அழைத்து வந்ததாக நச்சினார்க்கினியர் உரையில் கூறுகிறார் அதற்கு முன்னர் வடக்கு உயர்ந்து தென் திசை தாழ்ந்து இருந்தது ஏனெனில் வடக்கே ஜனத்தொகை பெருகியது.
அப்போது அகஸ்தியருக்கு மன உளைச்சல்கள் ஏற்பட்டது உங்களுக்கும் உமா தேவியாருக்கும் கல்யாணம் நடக்க விருக்கும்போது என்னை இப்படி தென்திசைக்கு ணைப்புவது நியாயமா? என்று கேட்க “கவலைப்படாதே மதுரையில் மீனாட்சி கல்யாணம் நக்கும்போது நீவீர் இதே காட்சியைக் காண்பீர் என்றார் சிவன். அது சரி, தமிழ் மொழிக்கு இலக்கணம் செய்ய்யுங்கள் என்றும் சொன்னீர்களே ; எனக்கு சம்ஸ்க்ருதம் மட்டும்தானே தெரியும் என்றார்
சிவன் சொன்னார் : இரு மொழிகளும் என்னிடமிருந்தே வந்தன; ஒரே அமைப்புடையவை. நீ எளிதில் கற்றுக்கொள்ளலாம் மேலும் என் மகன் முருகன் அங்கே இருக்கிறான் அவன் உனக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பான் என்றார் சிவன். இதை அருணகிரிநாதர், பரஞ்சோதிமுனிவர், சிவஞான முனிவர், பாரதியார் ஆகியோர் பாடியதிலிருந்தும் அதற்கு முன்னால் காளிதாசன் பாடிய ராகு வம்சம் மூலமும் நாம் அறிகிறோம்.
பாண்டிய மன்னன் திருமாறனை வியட்நாகுக்கு அழைத்துச் சென்று இந்து சாம்ராஜ்யத்தை நிறுவினார் வியட்நாமில் உள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழமையானது ஸ்ரீமாறன் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுதான்.
இவ்வளவு பெருமைபெற்ற அகஸ்த்தியர் மிகவும் குட்டை; ஆனால் அவர் மணந்ததோ மத்தியப்பிரதேச மஹாராணி , பேரழகி லோபாமுத்ரா. அவள் பல கண்டிஷன்களைப் போட்டாள்; அதையெல்லாம் நிறைவேற்றிய பின்னர் அகத்தியரை மணந்து கொண்டாள். அவளைத் தென்னாட்டிற்கு அழைத்து வர அகஸ்தியர் த்ருண தூமாக்னி என்ற தொல்காப்பியனை மத்திய பிரதேச விதர்ப்ப தேசத்துக்கு அனுப்பினார் அவர்கள் மதுரையை நெருங்கி வருகையில் வைகை நதி வெள்ளப்பெருக்கு எடுத்ததால் அத்தொல்காப்பியர் என்னும் த்ருண துமாக்கினி ஒரு கம்பினைப் பிடித்துக் கண்டு RIVER CROSSING ரிவரை க்ராஸ் பண்ணலாம் என்றார்; அதில் அகஸ்தியர் குற்றம் கண்டு பிடித்ததால் தொல்காப்பியம் எழுதிய த்ருண தூமாக்கினியும் அகஸ்தியரும் ஒருவரை ஒருவர் சபிக்கவே அகஸ்தியம் அழிந்தது; இது புகழ்பெற்ற நச்சினார்க்கினியர் நமக்குத் தந்த தகவல்.
இவ்வளவு பின்னணி உடைய அகஸ்தியருக்குப் பல நூல்கள்களை உபதேசித்த ஹயக்ரீவர் லலிதா சஹஸ்ர நாமத்தை உபதேசிக்கவில்லை அகஸ்தியர் வியந்தார் என்னிடம் குறையுளதோ; அல்லது குரு மறந்து விட்டாரோ அல்லது என்னுடைய பெயரில் அவளவு அலட்சியமா அல்லது உபதேசத்துக்குக் காலம் கனியவில்லையோ என்று எண்ணி எண்ணி பரிதவித்தார் .
அப்போது குரு ஹயக்ரீவர் சொல்கிறார்
லோபாமுத்திர பத்தேகஸ்த்ய
சாவதானமானா ஹா ச்ருணு
நாம்நாம் சஹஸ்ரம் யான்நோக்தம்
காரணம் தத் வாதாமி தே
லோபாமுத்ரையின் கணவனான அகஸ்தியனே கேள் ! கவனமாகக் கேள். இதுவரை சஹஸ்ர நாமத்தை உனக்கு நான் என் சொல்லவில்லை என்று சொல்கிறேன்
இதில்தான் முக்கிய விளக்கத்தைத் தருகிறார் உரைகாரர் ; அகஸ்தியரை அழைத்த ஹயக்ரீவர் “ஏ லோபமுத்ராவின் கணவரான அகஸ்தியனே கேள் என்று ஏன் சொன்னார் ? .
தேவியின் பன்னிரு சீடர்களில் ஒருவரான லோபாமுத்ரை என்பதால் உனக்கு ரஹஸ்யத்தைச் சொல்லப்போகிறேன் என்ற தொனி இதில் உள்ளது
அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறார்
ரஹஸ்யமிதி மத்வாஹம்
நோக்தவாம்ஸ்தே ந சான்யதா
புனச்ச பிருச்சஸே பக்த்யா
தஸ்மாத் தத் தே வதாம்யஹம்
அது ரஹஸ்யமென்று நினைத்துதான் நான் உனக்குச் சொல்லாமல் இருந்தேன். திரும்பவும் நீ பக்தியுடன் கேட்பதால் இதைச் சொல்கிறேன் என்கிறார் ஹயக்ரீவர்.
ஸ்ரீ வித்யை என்பது தேவியின் ரகசிய சக்திகளை விளக்கும் சாஸ்திரம் ஆகும்; இதை பன்னிரண்டு பேர் மட்டுமே விளக்கினார்கள் அவர்களில் அகஸ்தியரும் அவர் மனைவி லோபாமுத்ராவும் அடக்கம்.யார் அந்த 12 பேர்?
மனு: சந்த்ர குபேரச்ச லோபாமுத்ரா மன்மத
அக்ஸ்திரக்னி ஸூர்யச்ச இந்திர: ஸ்கந்த: சிவஸ்ததா
க்ரோத பட்டாராகோ திவ்யா துவாதசாமீ உபாசகாஹா
மனு, சந்திரன் குபேரன், லோபாமுத்ரா, மன்மதன், அகஸ்தியன், அக்கினி, சூர்யன், இந்திரன் ஸ்கந்தன், சிவபெருமான் , க்ரோத பட்டராகன் (துர்வாசர்); இவர்கள் அனைவரும் ஸ்ரீவித்யை எனப்படும் தேவி ரஹஸ்யங்களை அறிந்து உபாசித்து வருகிறார்கள்.
லோபாமுத்ரா லலிதா தேவியினுடைய சிஷ்யை, மஹா பக்தை ஆகையால் உனக்குச் சொல்லிக்கொடுக்கிறேன் என்று லலிதா சஹஸ்ரநாமத்தைச் சொல்லிக்கொடுத்தார் போலும்.
நமது காலத்தில் இதை ஆங்கிலத்தில் விளக்கியவர் ஆர்தர் ஏவலன் எனப்படும் சார் ஜான் வுட்றாப் ARTHUR AVALON ALIAS SIR JOHN WOODROFFE ஆவார் ; அவருக்கு முன்னர் பாஸ்கர ராயர் (1690-1785) சம்ஸ்க்ருதத்தில் உரை எழுதினார்
அவர் நாற்பதுக்கும் மேலான நூல்களை மேற்கோள் காட்டி உரை எழுதியுள்ளார்
அவருடைய உரையில் அகண்ட பாரத ஸ்லோகம் வருகிறது:
ஆ ப்ராஸ: காமரூபாத் த்ருஹிண சூதநத:
ப்லாவிதாத் ஆப்ரதீ சோ
காந்தாராத் ஸிந்து சாரத்ராத் ரகுவரசரிதாத்
ஆ ச சேதோ:ரவாசு:
ஆகேதாராத் உதீஸஹ துசின கஹிந்த::
சந்தி வித்வத் சமாஜா:
யே யே தான் ஏஷ யத்ன: சுகயது ஸமஜான்
கச்சமத் கர்த்து மீஷ்டே
கிழக்கில் பிரம்மபுத்ரா நதி காமரூப (Assam ) தேசம் வரையிலும் , மேற்கில் ஸிந்து நதி ஓடும் காந்தார (Afghanistan/Iran) தேசம் வரையிலும் தெற்கில் ஸ்ரீ ராமரால் கட்டப்பட்ட சேது (Rameswaram) வரையிலும் வடக்கில் பனி மூடிய கேதாரம் (Himalya) வரையிலும் எந்தெந்த வித்வத் சமாஜங்கள் இருக்கின்றனவோ அவைகளை என்னுடைய இந்த முயற்சியானது சுகம் அடைய செய்யட்டும் . மந்த புத்தியுள்ளவர்களைத் திருப்தி செய்ய யாரால்தான் முடியும்?
***
குரு/Sun சூரியன்; சீடன் Lotus தாமரை
தமிழில் உரை எழுதிய கணேச அய்யர் வேறு எங்குமில்லாத ஒரு உவமையை நமக்குச் சொல்கிறார். குரு என்பவர் சூரியன் போன்றவர் என்றும் அவருடைய உபதேசத்தினால் மொட்டு போல இருந்த சீடநின் அறிவு சூரியனைக் கண்ட தாமரை போல மலரும் என்றும் போதசாரம் நூலிலுள்ள ஒரு ஸ்லோகத்தை மேற்கோள் காட்டுகிறார்..
தொடரும்
TAGS- மனைவியின் பெருமை, லலிதா சஹஸ்ர நாமம், மனு, லோபாமுத்ரா, அகஸ்தியன்,