Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஜாக்கிரதை! பரபரப்புச் செய்திகள் செய்யும் மாய வேலைகள்!!
ச. நாகராஜன்
நாம் வாழும் இந்த செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
பொய்யான செய்திகளும், பரபரப்புச் செய்திகளும் பல்வேறு காரணங்களுக்காக சோஷியல் ஊடகங்களில் பரப்பி விடப்படுகின்றன.
இதனால் விளையும் சேதங்கள் சொல்ல முடியாத அளவு துயரங்களை ஏற்படுத்துகின்றன.
பல்வேறு அரசுகள் தவறான செய்திகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றன.
ஒன்று – DISINFORMATION.
இன்னொன்று – MISINFORMATION
DISINFORMATION என்பது வேண்டுமென்றே பரப்பிவிடப்படும் தவறான செய்திகள்.
இது மதக்கலவரங்களைத் தூண்டி விடும். அரசியல் ஆதாயங்களுக்காக பிரிவுகளை ஏற்படுத்தி சண்டைகளை மூட்டி விடும்.
வணிக நோக்கத்திற்காக செய்திகள் உண்மை போல தரப்படும்.
இந்த வகைச் செய்திகள் சமுதாயத்திற்கே மிக ஆபத்தானவை.
அடுத்தது MISINFORMATION.
அவசரம் அவசரமாக செய்திகளைச் சரிபார்க்காமல் வெளியிடுவது இந்த வகையில் சேரும்.
இன்று சோஷியல் மீடியாக்கள் தரும் செய்திகள் நொடிக்கு நொடி நூற்றுக்கணக்கில் வெளியாவதால் அவற்றை நமது பங்கிற்கு பரப்பாமல் இருப்பதே நாம் சமுதாயத்திற்குச் செய்யக் கூடிய முதல் சேவையாகும்.
இன்று ஒவ்வொரு மனிதனும் ஒரு செய்தி தரும் “சிறந்த செய்தியாளனாக” ஆகிவிட்டான். பெரும்பாலானோரது முக்கிய நோக்கம் அதிகம் பேர் தங்கள் தளத்தை நாட வேண்டும் என்பது தான்.
ஆகவே செய்திகளை சரிபார்க்காதபோது இன்னொருவரிடம் அவற்றை சொல்லாமல் இருப்பதே சமுதாயத்திற்கு நாம் செய்யும் சேவையாகும்.
கோவிட் காலத்தில் பரப்பிவிடப்பட்ட செய்திகள் எவ்வளவு பெரிய சேதத்தை விளைவித்தது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
நமக்கு வரும் செய்திகளை எப்படி செக் செய்வது?
முதலில் செய்தி வெளியிடும் ஆதாரத்தை சரி பார்க்க வேண்டும். ஆதாரமான செய்தி தளங்கள் போன்ற அடையாளத்தைக் கொண்டுள்ள இவற்றில் ஒரே ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் மட்டும் இருக்கும். உஷாராக இருப்பவர்கள் இதைப் பார்த்து பொய்ச் செய்தி பரப்புபவரை இனம் காணலாம்.
யார் இதைத் தருகிறார் என்பதை சரி பார்க்க வேண்டும். வம்புக்காரர்களும், தற்பெருமை கொண்டு அதிகம் பேர் தங்கள் தளத்திற்கு வருகிறார்கள் என்று சொல்பவர்களும் பொழுதுபோகாமல் இருப்பவர்களும் தரும் செய்திகளைப் பார்க்கவே கூடாது. இப்படிப்பட்ட நபர்களை ஒதுக்கி ஓரம் கட்டினாலேயே போதும், இவர்கள் அடங்கி விடுவர்.
ஒரு செய்தி நமக்கு வரும்போது அது சரிதானா என்பதை இன்னொரு Source மூலமாக சரிபார்ப்பது இன்னொரு வழி. இதன் மூலம் முதலில் இதைத் தருபவரின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடும்.
ஒரு செய்திக்கு கீழே உள்ள விமரிசனங்களைப் பார்ப்பது இன்னொரு வழி.
ஒரு செய்தி செய்தியாக தரபப்டுகிறதா, அல்லது ஜோக் என்ற ரகத்தில் சேர்க்கப்பட வேண்டுமா என்பதையும் பார்க்க வேண்டும்.
நாம் ஒரு தலைப்பட்சமாக ஒரு அரசியல்வாதியையோ அல்லது நமக்குப் பிடித்தவரையோ சார்ந்து இருந்தால் நமது பார்வையும் மஞ்சள் காமாலை பார்வையாகவே இருக்கும். ஆகவே நடுநிலையுடன் நாம் இருக்க வேண்டியது அவசியம்.
செய்திகளோடு தரப்படும் படங்கள் நம்மை மயக்கும்.
உண்மை போல செய்தியை நம்ப வைக்கும் தந்திரப் படங்களாக இவை இருக்கக் கூடும். ஒரு நொடியில் ஒருவரை படங்கள் இறந்தவராகக் காட்டும். இன்னொரு நொடியில் செய்திக்கு வலுவூட்டும் பல போஸ்களைத் தரும். ஆர்டிபிஷயல் இண்டெலிஜென்ஸ் யுகம் இது.
உண்மையை சரிபார்க்கும் இணைய தளங்கள் பல உண்டு. அவற்றில் செய்திகளைச் சரி பார்க்கலாம்.
அமெரிக்க தேர்தலிலிருந்து அடுப்பங்கரை சமையல் உணவு தயாரிப்பு வரை வரும் செய்திகளை நம்புவதும் நம்பாததும் நமது இயற்கையான அறிவிலேயே உள்ளது.
இதை உடனடியாக ஆயிரம் பேருக்கு அனுப்புங்கள் என்று சொல்லும் போதே உடனடியாக நம் மனதில் அடிப்படையான ஒரு சந்தேகம் அனுப்புபவரைப் பற்றி எழ வேண்டும்.
சமுதாய சேவைக்கான முதல் படி எந்த ஒரு செய்தியையும் நமது பக்கத்திலிருந்து பரப்ப வேண்டாம் – அது உண்மையா என்று சரிபார்க்காத வரை!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திலீபன்
முதலாவது திலீபன் கங்கையை பூமிக்கு கொண்டுவந்த பகீரதனின் தந்தை . இரண்டாவது திலீபன் காளிதாசன் எழுதிய ரகுவம்சத்தில் வரும் முதல் மன்னன் ; அவன் ரகுவின் தந்தை; தசரதனின் கொள்ளுத்தாத்தாதா ; சுரபி என்ற தெய்வீகப் பசுவினை அவமதித்ததால் அவனுக்கு குழந்தை பிறக்காமல் இருந்தது. பின்னர் ரிஷிகளின் போதனைப்பாடி நந்தினி என்ற பசுவினைப் போற்றி பூஜித்தவுடன் ரகு பிறந்தான் ; அவர்களின் வம்சத்தினைப் போற்றுவது ரகுவம்ச காவியம் அவர்கள் அனைவரும் ராம பிரானின் மூதாதையர்கள்.
DILIPA
He was one of the ancestors of Rama. On one occasion he failed to show respect to Surabhi, the divine cow who cursed him. He was without children. Then he carefully tended Nandini, Surabhi’s daughter as advised by the seers. Raghu was born to him. Kalidasa in his famous Kavya, Raghuvamsa gives his story.
Another Dilipa earlier to him was the father of Bhagiratha, who brought River Ganga to earth after a long penance(the meaning is he diverted Ganges into the present course; he channelised it)
***
தீர்க்கதமஸ்
ரிக்வேதத்தில், இந்த ரிஷி பல துதிகளைப் பாடியுள்ளார்; பிறவிக்குருடர்; பின்னர் அக்கினிதேவனை வழிபட்டு கண்பாவையைப் பெற்றார். உஸாத்யர் – மமதா ஆகியோருக்குப் பிறந்த இவருக்கு கக்ஷிவத் என்ற மகன் பிறந்தார் . இவருடைய பெயருக்குப் பொருள்- நீண்ட இருள் . இதே பெயரில் வேறு சிலரும் இருந்திருக்கலாம்
DIRGHATAMAS
A great rishi of rig veda .
He was born blind but said to have obtained sight by worshipping Agni. RV 3-128. He was father of Kakshivat. There may be more than one person with this name. Long darkness is the meaning of his name. Son of Uchaathya and Mamata.
***
திதி
ரிக்வேதத்தில் வரும் பெண் தெய்வம். இவருக்கும் காஸ்யப மகரிஷிக்கும் பிறந்தவர்கள் தைத்யர்கள் . அவர்களும் தானவர்களும் தேவர்களுக்கு எதிரான அசுர வம்சத்தினர் ஆவர் . அதிதி என்பவருக்குப் பிறந்தவர்கள் தேவர்கள் ஆவர்.
DITI
Goddess in Rig Veda, associated with Aditi.
Daityas were born to Diti and KashyapaRrishi.
***
திவோதசன்
இவன் தெய்வபக்தி மிகுந்த மன்னன்; ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் மன்னன் . இவனுக்காக இந்திரன், நூறு கோட்டைகளை அழித்தான் . இதே பெயரில் காசியில் மன்னர்கள் ஆண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
DIVODASA
A pious and liberal king mentioned in the Rig Veda. Indra demolished a hundred stone cities for him.
***
தீட்சை ஒருவர் சமயச்சடங்குகளில் பங்கு பெற தகுதி பெறுதல் இவ்வாறு தீட்சை வாங்கியவுடன் அவர்களும் சடங்குகளை செய்யும் தகுதி பெறுவார்கள் இதை பெற்றோர் தீட்சிதர் எனப்படுவர். எடுத்துக்காட்டகத் தமிழ் நாட்டில் தீட்சை பெற்ற 3000 தீட்சிதர்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்கு மட்டும் அந்தக் கோவிலில் பூஜை செய்யும் உரிமை உண்டு.
DIKSA, DIKSHITAR
Diksha (dhiikshaa) is initiation ceremony. One is initiated into certain religious practice which gives the person authority or permission to practise it.
In Tamil Tempe at Chidambaram 3000 Dikshitars are in the temple. They have the right to perform Puja there. When Yagas or Yajnas are performed, this practise is followed.
***
DO words
டோலோத்ஸவம்
இது ஊஞ்சல் திருவிழாவின் பெயர்; வசந்த காலத்திலும் நவராத்திரியின் போதும் சுவாமி அல்லது அம்மனை ஊஞ்சலில் வாய்ஹ்ஹ்த்துப் பாடுவார்கள் அந்த நேரத்தில் இருபுறமும் தொண்டர்கள் நின்று இறைவனுக்கு சாமரம் , விசிறிகள் வீசி கெளரிவிப்பார்கள். பெண்கள் பக்தி கீதம் இசைப்பார்கள்.
DOLOTSAVA
Dol is a swing; during the Swing Festival god or goddess is placed in a swing and gently moved /rocked. During the swinging , devotees show chauri and fans on either side of the swing. Women sing songs on such occasion . It is held during different Navaratris. Main Navaratri is celebrated just before Diwali, mostly in October every year.
*****
DR words
திரெளபதி
பாஞ்சால தேச த்ருபத மன்னனுக்குப் பிறந்த இளவரசி. சகோதரன் த்ருஷ்டத்யும்னனுடன் யாக குண்டத்தில் தோன்றினாள் . ஸ்வயம்வரத்தில், அர்ஜுனன் இவளை வென்றான் ஆயினும்; பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவி ஆனாள் ; பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரன் சூதாட்டம் விளையாடி, கெளரவர்களிடம் நாட்டை இழந்த பின்னர், திரௌபதியையும் இழந்தான் ; அவளை அடிமை என்று சொல்லி பொதுச் சபையில் ஆடையை அகற்ற துர்யோதனன் உத்தரவிடவே அவனது சகோதரன் துச்சாதனன் அதைச் செய்தான்; ஆனால் கிருஷ்ண பரமாத்மா ஒரு அற்புதத்தின் மூலம் மேலாடைகளை வளரச் செய்து அவளது மானத்தைக் காப்பாற்றினார். அப்போது அவள் ஒரு சபதம் செய்தாள்; துர்யோதனனின் தொடைகளைக் கீறி அந்த ரத்தத்தைக் கூந்தலில் தடவும் வரை தலைமுடியை அலங்கரிக்க மாட்டேன் என்று சபதம் செய்தாள்; அந்த சபதத்தை பீமன், மஹாபாரதப்போரின் இறுதி நாளன்று நிறைவேற்றினான்.
கானக வாழ்வின்போது , விராட தேசத்தில் மறைந்து இருந்து, சைலந்த்ரி என்ற பெயரில் வாழ்ந்தாள்; அப்போது கீசகன் என்பவன் அவளுக்குத் தொல்லை கொடுக்கவே, பீமன் அந்த கீசகனை வதம் செய்தான்; இவ்வாறு பல தருணங்களில் வெற்றி பெற்ற போதும் மாபாரதப் போர் முடிந்த அன்று இரவில், அஸ்வத்தாமன் வந்து அவளுடைய குழந்தைகள் இருந்த கூடாரத்துக்குத் தீ வைத்ததால், அவள் பிள்ளைகள் அனைவரையும் இழந்தாள்; கானகத்தில் தங்கி இருந்த காலத்தில் கிருஷ்ண பரமாத்மா வழங்கிய வற்றாத அட்சய பாத்திரம் மூலம் ரிஷி முனிவர்களுக்கு உணவு படைத்தாள் .
DRAUPADI
Other names Panchali,yagnaseni, krishnaa
She was black and beautiful and so she was called blacky/ krishnaa.
Krishna with double aa is a feminine name
Daughter of Drupada, king of Panchala/ modern Punjab.
Along with her brother Dhrishtadyumna she was born out of a holy fire on the occasion of a Yagna (fire sacrifice) performed by her father.
She married five Pandava brothers through a Swayamvara ceremony. Yuthisthira , eldest of the Pandava brothers lost all his kingdom and later Draupadi too. Dubbing her as a slave, Duryodhana, chief of Kauravas, ordered to disrobe her. His bother did this. But when she prayed to lord Krishna, he saved her. She vowed that she wont dress her hair until Duryodhana’s blood was used as hair oil. Bhima killed him and fulfilled her vow. But after the war was over all her children were killed in an arson attack . Earlier during 13 year exile in the forest, she got Akshaya Paatra , a bowl of never diminishing supply of food, and fed the seers. During incognito period she disguised herself as Sairandhri and worked in the palace of Vrata. When Keechaka tried to molest her, Bima killed Keechaka.
***
திராவிட
தென் பகுதி என்ற பொருளில் வழங்கப்பட்ட சொல். தமிழ்- த்ரமிள- திராவிட ஆனதாகவும் ஒரு வாதம் உண்டு; பழங்கால பாரத வரை படங்களிலும் 56 தேச வருணனையிலும் இது தமிழ் நாட்டுக்கு வெளியே , சேர சோழ, பாண்டிய நாடுகளுக்குப் புறம்பாகவே, சித்தரிக்கப்பட்டுள்ளது நாடு பிடிக்கவும் மதத்ததைப் பரப்பவும் வந்தவர்கள் இதை ஒரு இனத்துக்குப் பெயராக சூட்டினர். தமிழ் இலக்கியத்தில் ஆரிய (பண்பாடு உடையோர், ரிஷி முனிவர்கள்) என்ற சொல் உண்டு. ஆனால் திராவிட என்ற சொல் கிடையாது.
Dravida
It meant the southern part of India in the Middle Ages. Tamil literature has not used this word until modern times. Foreigners have given the word a racial connotation which is also not found in Hindu literature. Old maps and the description of 56 ancient divisions of India show this area outside Tamil Nadu. Arya is used with good connotation in ancient Tamil literature but, not Dravida. There is a theory about the origin of this word. Tamil- Dramila- Dravida or vice verse is the etymology given by some people. Of late politicians use it with racial connotation.
***
துரோணர்
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் வில் வித்தை அஸ்திர, சஸ்த்ர பயிற்சிகளை கற்றுத் தந்த பிராமண குரு. மாணவர்களில் சிறந்து விளங்கிய அர்ஜுனன், இவரது அன்பிற்கும் அபிமானத்துக்கும் உரியவராக இருந்தார். ஆயினும் மாபாரதப்போரில் கெளரவர்கள் தரப்பிலேயே இருந்தார். அந்தப் போரில் த்ருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார். இவர் கிருபை என்பவளை மணந்தார்; அஸ்வத்தாமன் இவருடைய ஒரே புதல்வன் .
Drona acharya
Teacher of weaponry in the Mahabharata times. He taught both Pandavas and Kauravas the archery and other Astras. Arjuna was his favourite student. But yet he sided with Kauravas in the Mahabharata war and was killed by Dhrishtadhyumna. His wife was Kripi and his son was Ashwathama.
To be continued…………………………
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-26; இந்துமத கலைச்சொல் அகராதி-26, Draupadi, Drona, Dravida, Diksha
காணி நிலம் வேண்டும் – பராசக்தி காணி நிலம் வேண்டும், – அங்கு தூணில் அழகியதாய் – நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் – அந்தக் காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும் – அங்கு கேணியருகினிலே – தென்னைமரம் கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம் பக்கத்திலே வேணும் – நல்ல முத்துச் சுடர்போலே – நிலாவொளி முன்பு வரவேணும், அங்கு கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும், – என்றன் சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந் தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும் – எங்கள் கூட்டுக் களியினிலே – கவிதைகள் கொண்டுதர வேணும் – அந்தக் காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன் காவலுற வேணும், – என்றன் பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப் பாலித்திட வேணும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
7-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
சுனேய் பூலோ சதுப்பு நிலம் (SUNGEI BULOH WETLAND RESERVE)– சிங்கப்பூர் அதிசயம்!
ச. நாகராஜன்
சுனேய் பூலோ சதுப்பு நிலம் (SUNGEI BULOH WETLAND RESERVE) என்று ஒரு அழகிய இயற்கை வளம் இருக்கிறது என்பதையே அறியாமல் இருந்தது சிங்கப்பூர்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளில் இயற்கை ஆர்வலர்கள் கூக்குரலிடவே இதைப் பற்றிய முக்கியத்துவம் உலகினருக்குத் தெரிய வந்தது.
2002ம் ஆண்டு சிங்கப்பூர் இந்த இயற்கை வளச் சதுப்புநிலத்தைப் பாதுகாப்புப் பகுதியாக அறிவித்தது.
130 ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்த நிலமானது ஏஷியன் பாரம்பரியப் பூங்காவாக/ 2003ம் ஆண்டு பட்டியலிடப்பட்டது.
அப்படி என்ன விசேஷம் இந்தப் பகுதியில் என்று கேள்வி கேட்பவர்களுக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான பறவைகள் இனிய குரலில் ஓசை எழுப்பும்.
சைபீரியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு குடும் குளிரிலிருந்து தப்புவதற்காக இடம் பெயர்ந்து செல்லும் பறவைக் கூட்டங்கள் வழியில் தங்குமிடமாக இதைத் தேர்ந்தெடுத்து இங்கு வரும்.
1989ல் இங்கு ஒரு பூங்கா அமைக்கப்பட்டது. நாளுக்கு நாள் இதன் அருமை தெரிய வரவே இதன் பெருமை பரவியது.
சுனேய் பூலோ சதுப்பு நிலம் அதிகாரபூர்வமாக சிங்கப்பூர் பிரதம மந்திரி கோ சோக் டாங்கால் 1993ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
சுனேய் பூலோ என்றால் மூங்கில் நதி என்று மலேசிய மொழியில் பொருள். ஒரு காலத்தில் இங்கு மூங்கில் மரங்கள் மிக அதிகமாக இருந்ததை இந்தப் பெயர் மூலம் அறியலாம். 5.2 மைல் நீளமுள்ள இந்தப் பகுதி தரைமட்டத்திலிருந்து 357 அடி உயரத்தில் இருக்கிறது.
இரண்டரை மணி நேரத்தில் இந்தப் பகுதியை முற்றிலுமாகச் சுற்றிப் பார்த்து விட முடியும்.
யூரேசியன் விம்ப்ரெல், காமன் க்ரீன்ஷாங்க், ரெட் ஷாங்க், மங்கோலியன் ப்லோவர், உள்ளிட்ட ஏராளமான பறவை இனங்களை இங்கு பறவை ஆர்வலர்கள் கண்டு மகிழ்கின்றனர். இவர்கள் ஒளிந்திருந்து பறவைகளைத் தொந்தரவு செய்யாமல் பார்க்க இடங்கள் உள்ளன.
உப்புநீர் முதலைகளையும் இங்கு காண முடியும். ஜெல்லி மீன்கள், ஈல் உள்ளிட்டவற்றையும் இங்கு காணலாம்.
அத்தோடு அரிய வகை பாம்புகள் இங்கு உள்ளன. நாய் முக நீர்ப் பாம்புகள், கட்டுவிரியன், நாகப்பாம்பு உள்ளிட்ட பலவகையான நாகங்கள் இங்கு உள்ளன.
இங்கு 500 அரிய வகைத் தாவர இனங்கள் அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றன. சதுப்புநிலக் காடுகளில் மட்டுமே காணப்படும் மரங்களும் இங்கு ஏராளமாக உள்ளன.
வருடம் 365 நாளும் இங்குள்ள பூங்கா திறந்து வைக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருக்கும்.
மாணவர்களுக்கு இயற்கை வளம் பற்றித் தெரிவிக்கும் பல்வகைத் திட்டங்களை இந்த சதுப்புநில மையம் உருவாக்கி நடத்தி வருகிறது.
சிங்கப்பூர் சுனேய் பூலோ சதுப்பு நிலத்தில் அரிய பறவை இனங்கள், தாவர வகைகள், சதுப்புநில அதிசயங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டு மகிழலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விண்வெளிப்பயணம் “ஸ்பேஸ் டிராவல்” பற்றி நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் பாடினார்கள். ஒரு முகூர்த்தம் என்பது இரண்டு நாழிகை , அதாவது 48 நிமிடங்கள் என்று எழுதியிருந்தேன் ஆனால் பெரியாழ்வார் பாடலில் ஒரு நொடிப்பொழுதில் விண்வெளிப்பயணம் முடிந்ததாக ஒரு பாடலில் கண்டவுடன் மீண்டும் சம்ஸ்க்ருத அகராதியை ஆராய்ந்தேன். புதிய உண்மை புலப்பட்டது; ரிக்வேதத்தில் முகூர்த்தம் என்பதை ஒரு நொடி என்றே ரிஷிகள் பாடியுள்ளனர் ஆகவே பெரியாழ்வார் சொன்னதும் சரி; நம்மாழ்வார் சொன்னதும் சரி. அதாவது ஒரு நொடிப்பொழுதில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் Space Shuttle ஸ்பேஸ் ஷட்டில் விண்கலத்தில் யமலோகத்துக்குப் போய் இறந்த பிராமணச் சிறுவர்களை உயிரோடு பூமிக்குத் திரும்பி அழைத்து வந்துவிட்டனர் ஆகையால் ஐன்ஸ்டைன் மற்றும் நாசா விஞ்ஞானிகள் சொன்னது எல்லாம் தப்பு !
(ஜெர்மன் மொழியில் அய்ன்- என்றால் ஒன்று ; ஸ்டைன் என்றால் ஸ்டோன் ; ஆக அவர் பெயர் ஒற்றைக் கல் !)
இறை = அணு , அற்பம், சிறுமை ; இன்னும் பல பொருள்களை அகராதி தருகிறது
403. The Thiruppadi of the lord
who brought the four children of his guru
back to life quickly
(Tamil Word IRAIP POZUTHU)
when they could not be alive as soon as they were born
is Srirangam where good Vediyars
skilled the Vedas live,
making sacrifices with fire
and receiving guests happily.
***
Muhurta in Sanskrit dictionary
[«previous (M) next»] — Muhurta in Sanskrit glossary
Muhūrta (मुहूर्त).—[hurch-kta dhātoḥ pūrvaṃ muṭ ca Tv.]
1) A moment, any short portion of time, an instant; नवाम्बुदानीकमुहूर्त– लाञ्छने (navāmbudānīkamuhūrta- lāñchane) R.3.53; संध्याभ्ररेखेवमुहूर्तरागाः (saṃdhyābhrarekheva muhūrtarāgāḥ) Pañcatantra (Bombay) 1.194; Me-ghadūta 19; Kumārasambhava 7.5.
2) A period, time (auspicious or otherwise).
3) A period of 48 minutes.
Muhūrta (मुहूर्त).—[masculine] [neuter] moment, instant; hour ( = 1/30 day); [instrumental] & [ablative] in a moment, after a little while, immediately, di-rectly.
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dic-tionary
Muhūrta (मुहूर्त) as mentioned in Aufrecht’s Catalogus Catalogorum:—jy. See Matsyendramuhūrta.
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Aufrecht Catalogus Catalogorum
1) Muhūrta (मुहूर्त):—[from muh] a m. n. a moment, instant, any short space of time, [Ṛg-veda] etc. etc. ([in the beginning of a compound], in a mo-ment; tena ind. after an instant, presently)
***
ஒருவரை ஒளி வடிவில் மாற்றி ‘மனோ வேக’த்தில் அனுப்ப முடியும்
. இதை சோம ரசம் பற்றிய பாடல்களிலும் காண முடிகிறது. தேவ என்ற சொல்லுக்கே ஒளி என்றுதான் பொருள். அதீத சக்தி படைத்தோர் இப்படி ஒளியாக மாறி, ‘மனோ வேக’த்தில் செல்லலாம். த்ரி லோக சஞ்சாரியான நாரதர் இப்படிச் செல்லுவதை பழைய திரைப்படங்களில் காட்டுகிறார்கள். இப்போது மேலை நாடுகளில் விஞ்ஞான புனைக்கதை படங்களிலும் வெளிக் கிரஹ வாசிகள் இப்படி திடீரென்று ஒளி ரூபத்தில் வந்து செல்வதைக் காட்டுகிறார்கள். இது வெள்ளைக்காரன் நம்மைக் ‘காப்பி’ (COPY CAT) அடித்து செய்யும் பல செயல்களில் ஒன்று.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஐன்ஸ்டைன் சொன்ன ஒளியின் வேகம் சரியே. அதை மிஞ்ச மனத்தால் முடியும். இதனால்தான் ராமாயண மஹாபாரதத்திலும் அதற்கு பல ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ரிக் வேதத்திலும் மனோ வேகம் (SPEED OF MIND) என்ற சொல் வருகிறது. இதனால் எங்கும் நொடிப் பொழுதில் செல்ல முடியும்; நமக்கு அருகிலுள்ள நட்சத்திரம் பிராக்சிமா செண்டாரை (PROXIMA CENTAURI) . 4.25 ஒளி ஆண்டு தொலைவில் (LIGHT YEAR) உளது. இதற்குப் போய்வர 9 ஒளி ஆண்டுகள் தேவை. அதாவது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் சென்றால் !
மனிதன் ஏறிய விண் கலமோ இதுவரை மணிக்கு 26000 மைல்கள்தான் சென்றுள்ளது. ஆனால் மனோ சக்தி உடையோர் ஒரு நொடிப்பொழுதில் சென்று திரும்பி விடலாம். அங்கு ஏதெனும் செய்ய நினைத்தால் ஒளி ரூபத்தில் சென்று செய்யலாம். இப்படி ஒளி ரூபத்தில் மாறும் கடவுளர், சோமம் என்னும் மூலிகை முதலியன பற்றி ரிக் வேதம் நெடுகிலும் காணலாம்.
அர்ஜுனனையும் வைதீக அந்தணனையும் கண்ணன் தன்னுடைய தேரில் ஏற்றிக்கொண்டு வைகுண்டம் சென்றான்.. ஒரு நாளில், ஒரு முகூர்த்த நேரத்துக்குள்ளாகவே தேரைச் செலுத்தி பரமபதம் சென்று , அங்குள்ள அந்தணன் பிள்ளைகளை உடலோடு பூமிக்கு கொண்டுவந்து கொடுத்தான் . இப்படிப்பட்ட ஆற்றல் படைத்த எம்பெருமானை நான் அடைக்கலமாகப் பற்றிவிட்டதால் எனக்கு கொஞ்சமும் துயர் இல்லை — என்று நம்மாழ்வார் பாடுகிறார்.
தேவ என்ற சொல்லுக்கே ஒளி என்று பொருள்.ஆகவே நாம் ஒளி ரூபத்தில் ஒளி வேகத்தில் அல்லது அதற்கும் மேல், மனோ வேகத்தில் பயணம் செய்யலாம் என்பது இந்தப்பாடலிலிருந்து விளங்குகின்றது
*****
நம்மாழ்வார் திருவாய் மொழியில் அற்புதமான கதை சொல்கிறார்
என்ன கதை ?
YOU CAN TRAVEL BACK AND FORTH IN TIME; YOU CAN INTERFERE IN THE PAST EPISODES
நம்மாழ்வார் நமக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். இந்த சம்பவம் நடந்ததோ 5125 ஆண்டுகளுக்கு முன்னர். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் தெளிவான அண்ட வெளிப் பயணம் – பற்றி விவரம் உளது
இது பாகவத புராணத்தில் தசமஸ்கந்தத்திலும், மஹாபாரத பிற்சேர்க்கையான ஹரி வம்சத்திலும் உளது
ஒரு நல்ல பிராமணனின் 10 குழந்தைகளும் அகால மரணம் (UNTIMELY DEATH OF TEN CHILDREN) அடைந்தன. அவரை ஏற்றிக்கொண்டு ,அர்ஜுனனை துணைக்கு அழைத்துக் கொண்டு கண்ணன் ஸ்பேஸ் ஷட்டிலில் SPACE SHUTTLE — விண்வெளி ஓடத்தில் – புறப்படுகிறார். ஒரே முகூர்த்தத்துக்குள் — அதாவது 48 நிமிடத்துக்குள் பரமபதம் சென்று ஜோதி ரூபத்தில் இருந்த விஷ்ணுவை தரிசித்து அங்கு இருந்த பத்து பிள்ளைகளையும் உடலோடு பூமிக்கு கொண்டு வந்து கொடுத்தார்.
இதில் ஐன்ஸ்டைன் சித்தாந்தத்தைப் பொடிப்பொடியாக்கும் பல சொற்கள் உள்ளன 48 நிமிடங்களுக்குள் பரம பதம் சென்று மதியத்துக்குள் திரும்பி பூமிக்கு வந்தனர். உடலோடு பத்து பிள்ளைகளும் பூமிக்கு வந்தனர். பரமபதத்தில் ஜோதி ரூபமாக கடவுள் இருந்தார்.
ஸ்பேஸ் ஷாட்டிலில் 13 பேர் திரும்பி வந்தனர் .
பரம பதம் எங்கே உள்ளது?
திருவோண நட்சத்திரம் முதல் வேகா என்னும் அபிஜித் நட்சத்திரம் வரை பல நட்சத்திரங்கள் விஷ்ணுவுடன் தொடர்பு படுத்தப் படுகின்றன. அவை அனைத்தும் 25 ஒளி ஆண்டு முதல் 50 ஆண்டு (Light years) தொலைவில் உள்ளன. ஐன்ஸ்டன் சொல்லும் ஒளிவேகத்தில் சென்றாலே 25 முதல் 50 ஆண்டுகள் பிடிக்கும். இவர்களோ 48 நிமிடத்துக்குள் போய்விட்டனர்.
முடிவுரை என்ன?
YOU CAN TRAVEL FASTER THAN LIGHT !
ஒளியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஸ்பேஸ் ஷட்டில்களை இந்துக்கள் அறிவர்.
அதில் 13 பேர் வரை செல்லலாம்.
உடலுடன் பூமிக்குத் திரும்பிவரலாம்.
இறந்த பிள்ளைகள் பூமியில் இறந்தார்களே தவிர வேறு இடத்தில் உடலுடன் வசித்தனர் .
இந்தக் கதை எப்படி முடிகிறதென்றால் வைகுண்டத்தைக் காணட்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே பிள்ளைகளின் உயிரை வாங்கியதாக விஷ்ணு சொல்கிறார்.
இனி இதன் பின்னுள்ள சித்தாந்தங்களை மீண்டும் காண்போம்
ஐன்ஸ்டைன் (Albert Einstein) என்னும் விஞ்ஞானி சில புதிய தத்துவங்களை உலகிற்கு உரைத்தார். இவற்றை சார்பியல் கொள்கை (THEORY OF RELATIVITY) என்பர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்தப் பிரபஞ்ச்சத்தில் ஒளிதான் அதிக வேகத்தில் செல்கிறது. அதாவது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல்கள் . இந்த வேகத்தில் செல்லவும் முடியாது. இதை மிஞ்சவும் முடியாது என்பது அவர்தம் கொள்கை . இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்த விண்கலம் கூட மணிக்கு 2 லட்சம் மைல் வேகத்தில் தான் செல்கிறது. இது சூரியனை நோக்கிச் செல்லும் அமெரிக்க விண்கலம் . ஒரு மணி என்பதில் 3600 நொடிகள் இருப்பதை நம் நினைத்துப் பார்த்தால் மணிக்கு 2 லட்சம் மைல் என்பது இமயமலைக்கும் கொசுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பது புலப்படும் .
ஆக அறிவியல் சொல்லும் விஷயங்களுக்கு மேலே, நாம் பல படிகள் நம் மேலே ஏறிவிட்டோம்.
*****
ஐன்ஸ்டைன் இன்னும் இரண்டு வியப்பான விஷயங்களையும் சொன்னார்.
ஒளிவேகத்தில் செல்லும் ராக்கெட்டைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதில் உங்கள் வீட்டுக் கடிகாரத்தை வையுங்கள் . அதை விட மிகவும் மெதுவாகச் செல்லும் இன்னொரு ராக்கெட்டில் உங்கள் வீட்டிலுள்ள இன்னொரு கடிகாரத்தை வையுங்கள் . காலை 10 மணி காட்டும் பொழுது இரண்டு விண்கலத்தையும் ஏவினால் ஒளிவேக ராக்கெட்டில் கடிகாரம் அதே மணியைக் காட்டும். ஆனால் இன்னொரு ராக்கெட்டில் கடிகாரம் வேகமாகச் செல்லும் (TIME DILATION) . அதாவது ஒளிவேக ராக்கெட்டில் போனால் நீங்கள் என்றும் 16. மார்க்கண்டேயன் போல எப்போதும் வாழலாம்.
ஐன்ஸ்டைன் கொள்கையை விவாதிப்போர் இன்று வரை ஒளிவேகத்தில் செல்ல முடியுமா அல்லது சுருக்கப் பாதை ஏதேனும் உண்ட என்று சொல்ல முடியவில்லை. சுவையான அறிவியல் புனைக்கதைகளை SCIENCE FICTION NOVELS மட்டும் எழுதி வருகின்றனர்.
ஐன்ஸ்டைன் மறறொரு சார்பியல் கொள்கையையும் வெளியிட்டார். ஈர்ப்பு விசையானது ஒளியையும் பாதிக்கும் அதிக ஈர்ப்பு விசை இருந்தால் அது ஒளியைக்கூட வெளியே செல்லவிடாமல் பிடித்துவிடும் என்றார். இதை வைத்து இப்பொழுது கருந்துளைகள்B LACK HOLE SECRETS ரகசியங்களை ஆராய்ந்துவருகிறார்கள்
இந்துக்களின் நூல்களில் ஐன்ஸ்டைன் கொள்கைப் பிடிப்பாளர்களின் வாதங்களைத் தகர்க்கின்றனர்.
அது எப்படி?
ஐன்ஸ்டைன் ஆதரவாளர் கூற்றுப்படி “காலத்தில் பின்னோக்கி வேண்டுமானால் செல்லலாம். ஆனால் அதில் தலையிட முடியாது.”
என்ன அர்த்தம்?
நான் வேகமாகச் செல்லும் கால யந்திரத்தைக் கண்டுபிடித்து அதில் போய் என் நண்பனின் தாத்தாவைக் கொன்றுவிடுகிறேன் என்று கற்பனை செய்யுங்கள் அப்படிச் செய்யமுடியுமானால் எனக்கு முன்னே நிற்கும் என் நண்பன் எப்படிப் பிறக்க முடியும்? நான்தான் அவனது தாத்தா எல்லோரும் இல்லாமல் செய்துவிட்டடேனே !!!.
ஆனால் இந்துக்கள் சொல்கிறார்கள் ; காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கவும் முடியும். அதில் தலையிடவும் முடியும் . நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இரண்டு சைவப் பெரியார்கள் காலப்பயணம் செய்ததைக் காட்டினேன் TIME TRAVEL BY TWO TAMIL SAINTS IN 2012 IN THIS BLOG.
இறந்துபோன ஒருவரை, திரு ஞான சம்பந்தர், கொண்டுவந்தபோது அவர் இன்று எந்த வயதில் இருப்பாரோ அதே வயதில் கொண்டுவருகிறார். பூம்பாவை என்னும் சென்னை நகரச் சிறுமி இறந்து போன சாம்பலை அவர் தந்தை கொண்டுவந்து காட்ட , அதன் மீது சம்பந்தர் ஒரு பதிகம் பாட , அந்தப் பெண் உயிருடன் வந்தாள் .
எப்படி வந்தாள் ?
13 ஆண்டுக்கு முன்னர் செத்துப் போன சிறுமியாக வரவில்லை. டீன் ஏஜ் கேர்ளாக TEEN AGE GIRL — பருவக் குமரியாக வந்தாள் .
இதில் காலப் பயணம் பற்றிய இரண்டு விஷயங்கள் தவிடு பொடியாகின்றன .
1.காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்ய முடியும் ; ஓளியின் வேகத்தை மிஞ்சி எங்கோ மேலுலகத்தில் இருந்த ஒருவரைக் கொண்டுவரமுடியும்.
2.முன்னர் நடந்த மரணத்தில் தலையிடவும், அதை மாற்றவும் முடியும்.
ஆக விஞ்ஞானிகளின் கொள்கை தவிடு பொடி!!! . இது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது!!!
இதே போல சுந்தர மூர்த்தி நாயனார் செய்த அற்புதத்தையும் விளக்கி இருந்தேன் . அவர் என்ன செய்தார?. ஒரு தெரு வழியாக நடந்து போனார். ஒரு வீட்டில் மேளதாள முழக்கம். எதிர் வீட்டில் ஒரே அழுகை. என்னப்பா இது அநியாயம்? என்று அவர் கேட்க ஒரு வீட்டில் ஒரு பிராமணப் பையனுக்கு பூணுல் கல்யாணம் என்றும் அவனுடைய நண்பன் இதே வயது என்றும் ஆனால் இதே பையனுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நதியில் குளி க்கச் சென்ற போது அவனை முதலை விழுங்கி விட்டதாகவும் அதை நினைத்து அவன் தாயார் அழு வதாகவும் மக்கள் சொன்னார்கள். உடனே சுந்தர மூர்த்தி சுவாமிகள் , நதிக்கரைக்குச் சென்று பதிகம் பாடவும் முதலை அந்தப் பையனை கொண்டு வந்து கொடுத்தது என்றும் அவன் வளர்ச்ச்சி இரண்டு ஆண்டுக்கான வளர்ச்சி அடைந்திருந்தது என்றும் கதை போகிறது!
இந்த இரண்டு சம்பவங்கள் இதைக் காட்டுகின்றன?
காலத்தில் பின்னோக்கிச் செல்லலாம். முன்பு நடந்ததை மாற்றலாம். அப்படியானால் நம் உயிர்கள் வேறு ஒரு இடத்தில் உருப்படியாக இருக்கின்றன. இங்கு நாம் கண்டதெல்லாம் காலம் என்னும் மாயப் (TIME IS AN ILLUSION ) புகைதான்.
இதோ இன்னொரு கொள்கை தவிடு பொடியாவதைக் காண்போம்
அர்ஜுனன் போர் செய்ய மறுக்கிறான். என் குருவையும் உறவினர்களையும் எப்படிக்கொல்லுவேன் என்று மயக்கம் உறுகிறான்.
“டேய் மச்சான!!! ; நீ ஒன்றும் அவர்களைக் கொல்லப்போவத்தில்லை. இதோ பார் ! என்று விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார் . அதில் ஏற்கனவே துர்யோதனாதிகள் கொல்லப்பட்டதை காண்கிறான் அர்ஜுனன். அந்த உருவத்தில் இறந்த, நிகழ், வருங்காலம் ஆகிய மூன்று நிலைகளையும் காட்டுகிறான் ஆக கண்ணன் போன்றோர் வருங்காலத்துக்கும் செல்ல முடியும் என்று காட்டுகின்றனர்.(YOU CAN TRAVEL TO FUTURE AND SEE THE PAST)
இதிலும் அறிவியல் கொள்கை தவிடு பொடியாகிறது. இது போன்றதே நம்மாழ்வார் சொல்லும் கதையும்.
இந்துக்களின் கொள்கைப்படி வேகமான வஸ்து ஒளி அல்ல . மனம்தான் வேகமானது. மனோ வேகமே பெரிது என்று மஹாபாரத எக்ஸப் ப்ரச்னத்தில் காண்கிறோம்.
இது தவிர நாரதர் நொடிப்பொழுதில் மூன்று உலகங்களுக்கும் சஞ்சரிப்பதையும் INTER GALACTIC TRAVEL OF NARADA , வன பர்வத்தில் அர்ஜுனன் , மாதலி செலுத்தும் –ஸ்பேஸ் ஷட்டிலில் — இந்திர லோகம் சென்று வந்ததையும் அறிகிறோம்.
******
TIME DILATION IS HOUSEHOLD STORY IN INDIA
ஐன்ஸ்டைன் சித்தாந்தம் அத்தைப் பாட்டி கதை
இந்து மதத்தில் ஐன்ஸ்டைன் சித்தாந்தம் ஒரு அத்தைப் பாட்டி கதை யாகும்!! சின்னப் பேரப்பிள்ளைகளுக்கு , பள்ளிக்கூடமே போகாத பாட்டி சொல்லும் கதையில் ஐன்ஸ்டைனின் YHEORY OF TIME DILATION டைம் டைலேஷன் தியரி உள்ளது. நமக்கும் தேவர்களுக்கும் காலம் வேறு. பிரம்மாவுக்கு அதை வீட வேறு. நம்மைப் பொறுத்த வரை அவர்கள் காலம் பெரிய எண் . விரிவடைந்த எண் DILATED . அவர்களுக்கு அது ஒரு சாதாரண நாள். ஒரு பொருள் வேகமாகச் செல்லச் செல்ல அது குறைவான காலத்தைக் காட்டும் நமக்கு அது பெரிதாகிக் கொண்டே போகும்.
எல்லாப் புராணங்களிலும் உள்ள இந்தக்கதையை, பாட்டிமார்களும் பவுராணிகர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சொல்லி வருகின்றனர்.
60 விநாழிகை = 1 நாழிகை
60 நாழிகை (24 மணி நேரம்) = 1 நாள்
30 நாள் = 1 மாதம்
12 மாதங்கள் = 1வருடம்
60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
3000 சுழற்சிகள் = 1 யுகம்
4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்
43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம்
18 சதுர் யுகம் = 1 மனு
இந்த பிளாக்கிலுள்ள ரேவதி நட்சத்திரக் கதை இதை உண்மை என்றும் காட்டுகிறது. கீழே LINK லிங்க் கொடுத்துள்ளேன்.
*******
ENERGY CAN NEITHER BE CREATED NOR DESTROYED
பெரிய பெரிய கொள்கைகளை எல்லாம் 100 ஆண்டு பழமையான பழமொழி அகராதி புத்தகத்திலும் காணலாம்
உள்ளது போகாது, இல்லது வாராது .
அதாவது சக்தி, ஆன்மா போன்றன எ போதும் உள்ளன. அவை அழியாது. தோற்றத்தில் வேண்டுமானால் மாறுபடலாம். மெய்கண்ட சிவனாரின் சிவ ஞான போதத்தின் மூன்றாவது சூத்திரமும் இதை விளக்கும்.
பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயம் இதை விரிவாக விளக்கும்.
–subham–
உலகத்தை முதலில் வலம் வந்தவர் யார்? கந்தனா? யூரி ககாரினா?
tamilandvedas.com › 2013/02/14உலகத்தை முதலில் வலம் வந்தவர் யார்? கந்தனா? யூரி ககாரினா?
Feb 14, 2013 · அவர் ஒரு நொடிப் பொழுதில் உலகை வலம் வந்ததை அருமையாகப் பாடி இருக்கிறார்.
உலகத்தை முதலில் வலம் வந்தவர் யார்? கந்தனா? யூரி ககாரினா?
முதல் முதலில் ஒரு விண்கலத்தில் இந்தப் பூமியை வலம் வந்தவர் யார்? என்று கேட்டால் பலரும் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின் என்றே சொல்லுவார்கள். கலைக் களஞ்சியங்களும் அப்படியே சொல்லும். அது சரியல்ல. த்ரிலோக சஞ்சரியான நாரதர் கிரஹங்களுக்கிடையே பயணம் செய்ய வல்லவர். ஆயினும் பூமியை வலம் வந்ததாக தெளிவான குறிப்புகள் இல்லை. ஆனால் முருகப் பெருமான பூமியை வலம் வந்த குறிப்பை அருணகிரிநாதர் எழுதிய திருவகுப்பில் தெளிவாகக் காணலாம். அவர் ஒரு நொடிப் பொழுதில் உலகை வலம் வந்ததை அருமையாகப் பாடி இருக்கிறார். இதை கற்பனை என்று யாராவது கருதுவார்களானால் குறைந்தது இந்தக் கொள்கையை முதலில் சொன்ன பெருமையையாவது அவருக்குக் கொடுக்க வேண்டும்.
அருணகிரிநாதர் 500 அண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அப்போது உலகம் உருண்டை என்பது கூட மேலை நாட்டினருக்குத் தெரியாது. நாமோ வட மொழியிலும் தமிழிலும் பூகோளம் முதலிய சொற்கள் மூலம் துவக்க காலத்திலிருந்தே இதை உருண்டையானது என்று சொல்லிவருகிறோம்.
இதோ திருவகுப்பு பாடல்:
“ ஆகமம் விளைத்து அகில லோகமும் நொடிப்பொழுதில்
ஆசையொடு சுற்றும் அதிவேகக் காரனும்
இலகு கனி கடலை பயறொடியல் பொரி அமுது செயும்
இலகு வெகுகட விகட தட பார மேருவுடன்
இகலி முது திகிரி கிரி நெரிய வளை கடல் கதற
எழு புவியை ஒரு நொடியில் வலமாக ஓடுவதும்” (திருவகுப்பு)
ஒரே நொடியில் உலகம் முழுதையும் சுற்றி வந்தார் முருகன். 1961 ஆம் ஆண்டில் ககாரின் ஒரு முறை பூமியை வலம் வர ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆயிற்று!!
***
இசைகேட்கும் ‘ஐ பாட்’ கருவியும் சிவபெருமானும்
ஐபாட் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் எல்லோரும் காதுகளில் இயர்போனை (ear phone) வைத்துக் கொண்டு இசை கேட்பது சர்வ சாதாரணமாகி விட்டது. அந்தக் காலத்தில் விமானத்தை ஓட்டும் பைலட்டுகள் இசைத்துறை இயக்குனர்கள் அல்லது டெலிபோன் துறையினர் பெரிய இயர் போன்களை காதுகளில் வைத்திருப்பதை பழைய திரைப்படங்களில் பார்த்தோம். இன்றோ இசைக் கருவி காதில் சொருகாத இளஞர்களே இல்லை.
சோனி நிறுவனத்தார் (Sony’s Walkman) வாக்மேன் கண்டுபிடித்த பின்னர் இப்படி எல்லோரும் இசைகருவியும் இயர் போனும் வாங்கினர். பின்னர் எம் பி 3 கருவிகள் ஐ-பாடுகள் வந்தன. உண்மையில் இந்தக் காதில் இசை கேட்கும் வழக்கத்தை உலகுக்குச் சொல்லிக் கொடுத்தவர் சிவபெருமான் தான். சம்பந்தர் தேவாரத்தின் முதல் பாடலான ‘தோடுடைய செவியன்’ பாடல் உரையில் இச் செய்தி உள்ளது.
கிருபானந்தவாரியார் ஒரு கதையை அடிக்கடி சொல்லுவார்.: அஸ்வதரன், கம்பதரன் என்ற இரண்டு கந்தர்வர்கள் மிக அழகாகப் பாடுவர். ஆனால் அவர்களுக்கு ரசிகர்களே இல்லை. இதனால் மிகவும் வருத்தம் அடைந்து சிவ பெருமானை நோக்கி தவம் செய்தனர். சிவனோ வீணை வாசிப்பதிலும் சாம கானம் கேட்பதிலும் அதி சமர்த்தர். ஆகவே கந்தர்வர்கள் முன் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க அவர்கள் 24 மணி நேரமும் 365 நாட்களும் எங்கள் இசையை நீங்கள் கேட்க வேண்டும் என்றனர். சிவன் அதற்கு இசைந்தார். ஆனால் நடை முறையில் இவர்களோடு எப்போதும் இருக்க முடியாதே!
சிவனுக்கு ஒரு யோசனை உதித்தது. உங்கள் இருவரையும் தோடுகளாகச் செய்து காதில் அணிந்து கொள்கிறேன். பாடிக்கொண்டே இருங்கள் என்றார். அவர்களுக்கு எல்லை இலா மகிழ்ச்சி. இப்போதும் பாடிக்கொண்டே இருக்கிறார்கள். எந்த எம் பி-3 பிளேயரையும் விட அதிக பேட்டரி அந்த தோடுகளில் இருக்கிறது. ஆண்டு முழுதும் சிவன் பாட்டுக் கேட்கிறார். இந்த ‘ஐடியா’தான் வாக் மேனாகவும் ஐ பாடாகவும் பிற்காலத்தில் பரிணமித்தது என்றால் பிழை ஏதும் இல்லையே!
உலக வலம் பேடண்ட் உரிமையும் எம்பி 3 இசைக் கருவி, இயர் போன் (காது ஒலிக் கருவி) பேடண்ட் உரிமையும் கந்தனுக்கும் அவன் தந்தை முக் கண்ணனுக்குமே உரித்தானவை.
வாழ்க கந்தன்! வாழ்க சிவன்!
முந்தைய கட்டுரைகளில் லேசர் ஆயுதம் கண்டு பிடித்த பெருமையும் ஸ்டார் வார் ஆயுதங்கள் கண்டு பிடித்த பெருமையும் சிவனுக்கே உரித்தானவை என்று நிலை நாட்டி இருக்கிறேன். பறக்கும் செம்பு, வெள்ளி தங்கம் கோட்டைகளை நெற்றிக் கண்ணில் உள்ள லேசர் ஆயுதம் மூலம் தகர்த்தவர் சிவன்.. இதே போல பூமராங் ஐடியாவும் விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தில் இருந்தே வந்தது என்பதையும் நிலை நாட்டி இருக்கிறேன். ஆங்கிலக் கட்டுரைகளில் முழு விவரமும் காண்க.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ENGLISH VERSION WAS POSTED YESTERDAY (17-12-2025)
துர்கா தேவி ( என் சுய புராணமும் உள்ளது)
சிற்ப சாஸ்திரத்தில் துர்க்கையின் வடிவம்
துர்க் என்றால் கோட்டை ; துர்க்கையை வழிபடுவோரை அவள், அரண் போல வளைத்துக் காப்பாள் ;
தேவி வடிவங்களில் மிகவும் நம்பிக்கையையும் தைரியத்தையும் வெற்றி உணர்வினையும் ஊட்டக்கூடிய தோற்றம் துர்கா தேவி . அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி / ஆக்க பூர்வ சக்தி வந்துவிடும் !
****
துர்கா தேவியின் மகிஷாசுர மார்த்தனி சிற்பம்தான் மிகவும் மனதில் பதியும் வடிவம். மகாபலிபுரத்தில் உள்ள இந்த மஹிஷாசுரமர்தனியின் சிலையைப் புகைப்படம் எடுக்காத வெளி நாட்டுக்காரர் எவருமில்லை! யார் யாரெல்லாம் மாமல்லபுரத்துக்கு வந்தார்களோ அவர்கள் எல்லோரும் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எருமை முக அசுரனை தேவி வதம் செய்த காட்சியை படம்பிடித்து புஸ்தகங்களில் வெளியிட்டுள்ளனர்; அவ்வளவு அற்புதமான சிலை!
மஹிஷ – எருமை.
மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி சிற்பம்
துர்க்கையின் உருவான மகிஷாசுரமர்த்தினி பத்து கரங்களைக் கொண்டவர். மூன்று கண்களை உடையவர். தலையில் ஜடா மகுடம் தரித்தவர். சந்திரகலாவைத் தலையில் சூடியவர். கண்கள் நீலோத் பல மலரினை ஒத்ததாக அமைந்திருக்கும். பருத்த உடலினையும், மெலிந்த இடையினையும் பெற்றவர். அடசி மலரின் நிறத்தினை உடையவர். உடலில் மூன்று வளைவுகளை /நெளிவுளைக் (திரிபங்கம்) கொண்டவர். வலது கரங்களில் திரிசூலம், கத்தி /கட்கம், சக்தி ஆயுதம், சக்கரம் அம்பு ஆகியவையும் இடது கரங்களில் பாசம் அங்குசம். கேடயம், பரசு, மணி ஆகியவற்றைத் தரித்திருப்பார். இவளின் காலடியில் துண்டிக்கப்பட்ட மகிஷனின் கழுத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருப்பது போல் அமைந்திருக்கும். எருமைத் தலையின் மீது தமது இடது காலினையும், தமது வாகனமாகிய சிங்கத்தின் மீது காலை ஊன்றியவாறும் அமைந்திருப்பார் என்று சிற்பரத்தினம் குறிப்பிடுகின்றன.
விஷ்ணுதர்மோத்திரம், மகிஷாசுரமர்த்தினியைச் சண்டிகா என்று அழைக்கின்றது. இவர் இருபது கரங்கள் பெற்றவளாகக் கூறுகிறது. பொன் நிறத்தில் ஒளிருபவளாகவும் சிங்கத்தின் மீது கோபத்துடன் அமர்ந்திருப்பவளாகவும் குறிப்பிடுகிறது. இவளது கைகளில் சூலம், கட்கம், சங்கு, சக்கரம், பாணம், சக்தி, வஜ்ரம், அபயம், டமரு, குடை ஆகியவைகளை வலது கரங்களில் தரித்தும், இடது கரங்களில் நாகபாசம், கேடயம், பரசு, அங்குசம், தனுஷ், கந்தம் (மணி) துவஜம் (கொடி) கதை, கண்ணாடி மற்றும் முத்காரம் (கள்ளி) ஆகியவைகளைத் தரித்திருப்பாள். வலது கையில் ஏந்திய திரிசூலம் மகிஷனின் கழுத்தில் பதித்திருப்பது போல அமைந்திருக்கும். மகிஷனின் விழி பிதுங்கி, புருவங்கள் இரத்தத்தில் நனைவது போலிருக்கும்.
மாமல்லபுரத்தில் இச்சிற்பம் அமைந்துள்ளது.
Durga at Gangakondacholeeswaram
மாசிமகத்தன்று கடற்கரையில் குவியும் பழங்குடி இருளர் இனமக்கள் அப்போது காலநிலை மாறி, கடல் நீரால் சூழப்பட்டு இருக்கும் இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலில் முழங்கால் கடல் நீரில் நடந்து சென்று அங்கு உள்ள துர்கா சிற்பத்திற்கு பூஜை செய்து வணங்குவர்.
காஞ்சி கைலாசநாதர் கோயிலில் மற்றும் தமிழகமெங்கும் பரவலாக இடம்பெற்றுள்ளது. சிவன் கோவில்களில் வடபுறச் சுவர்களில் உள்ள மாடங்களில் துர்க்கையைக் காணலாம் ; சில இடங்களில் எருமைத் தலை மீது அவள் காட்சி அளிக்கிறாள்.
மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அனைத்து கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்று வணங்கப்பட்டாள். சிவபெருமான் திரிசூலத்தையும் விஷ்ணு சுதர்சன சக்கரத்தையும் பிரம்மா தனது சக்தியையும் அளித்தார்கள்.
***
லலிதா சஹஸ்ரநாமம் முழுதும் பண்டாசுரனை வதம் செய்த கதை வருகிறது .
தேவி மஹாத்ம்யம் என்னும் 700 ஸ்லோககங்களில் அவள் கதை முழுதும் சுருக்கமாக வருகிறது வங்காளி மக்களுக்கு இந்தத் துதி அத்துப்படி;.கோவில்களில் தினசரி பாராயணமும் நடக்கும்; காளி, துர்கா என்ற வடிவங்களில் அவளை ராம கிருஷ்ண பரமஹம்சர் முதல் பல்லாயிரக்கணக்கானோர் வணங்கி அருள்பெற்றனர் .
சம்ஸ்கிருதத்தில் ‘நவ’ என்றால் ஒன்பது என பொருள். மந்திர சாஸ்திர நூல்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. சைலபுத்ரி, பிரம் மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மஹா கௌரி, சித்திதாத்திரி என ஒன்பது வடிவம் .
1: First is Shailaputri (Daughter of the Mountain), Second is Brahmacarini (Who wanders in Brahman, a Tapasyi, performer of Penance),
2: Third is Chandraghanta (Bell of Moon), Kushmanda (Glowing substratum of Universal Egg) is Fourth,
3: Fifth is Skandamata (Mother of Skanda), Sixth is Katyayani (Daughter of Katyayana Rishi),
4: Seventh is Kalaratri (Dark Night of Destruction), Mahagauri (Great Shining White Form) is Eighth,
5: And Nighth is Siddhidatri (Bestower of Siddhis or Accomplishments); These are eulogized as Nava Durga (Names of Nine Durgas),
6: These Names were indeed uttered by (none other than) the great-souled Brahma.
Mahisasuramardini drawing
1.சைலபுத்ரி
துர்க்கை அம்மனின் முதல் வடிவம் சைலபுத்ரி. நவராத்திரி முதல் நாளில் சைலபுத்ரி துர்க்கையை வழிபடுவது வழக்கம். சைலபுத்ரி என்பது ‘மலைமகள்’ என்று பொருள். மலை அரசனான இமவானின் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன.
இவர் தனது முன் அவதாரத்தின் தட்சனின் மகளாக பிறந்ததால் ‘தாட்சாயினி’ என்றும் கூறுவர். இவர் தான் சிவனை திருமணம் பார்வதி தேவி ஆவார்.
2.பிரம்மசாரிணி
‘பிரம்ம’ என்றால் தபஸ் அதாவது தவம் செய்தல் என்று பொருள். மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது.
சிவ பெருமானை திருமணம் செய்யும் பொருட்டு கடும் தவம் புரிந்தார்.
3. சந்திரகண்டா
நவராத்திரியின் மூன்றாம் நாளில் சந்திர காண்டா அன்னையை வணங்கப்படுகிறார். இவர் அன்னையின் மூன்றாவது வடிவமாவார். நீதியை நிலை நாட்டி சந்திர பிறையை அணிந்தவள். ‘சந்திர’ என்றால் நிலவு. ‘கண்டா’ என்றால் மணி என்று பொருள்.
பத்து கைகளை கொண்டு சிங்க வாகனத்துடன் காட்சி தருகின்றார்.
Durga statue
4. கூஷ்மாண்டா:
கு, உஷ்மா, ஆண்டா என்ற மூன்று சொற்கள் உள்ள பெயரின் முறையே சிறிய, வெப்பமான, உருண்டை என்ற பொருள் கொண்டது.கூஷ்மாண்டா என்பவர் ஆதிசக்தி துர்கா தேவியின் படைத்தல் உருவம் ஆகும்.
5. ஸ்கந்த மாதா
ஸ்கந்த என்றால் முருகனை குறிக்கும். மாதா என்றால் அன்னை அதாவது முருகனின் தாய் ஆவார்
நான்கு கரங்களை உடைய ஸ்கந்த மாதா இரண்டு கரங்களில் தாமரையும், ஒரு கரம் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போன்றும், மற்றொரு கரம் மடியில் குழந்தை முருகனை ஆறுமுகத்துடன் அரவணைத்து காட்சி தருகின்றாள். இவர் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக விளங்குகின்றார்.
6. காத்யாயனி
முற்காலத்தில் காதா என்ற முனிவர் இருந்தார். அவருக்கு காதயா என்ற மகன் இருந்தார். காதா கடும் தவம் செய்து துர்க்கையை மகளாக பெற்றார். இதனால் இவருக்கு ‘காத்யாயனி’ என்ற பெயர் வந்தது. இவருக்கு மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரும் உண்டு.
7. காளராத்திரி
அன்னையின் ஒன்பது ரூபங்களில் மிக பயங்கரமான ரூபம் இந்த காளராத்திரி எனும் காளி ரூபம்.
கால என்றால் நேரத்தையும், மரணத்தையும் குறிக்கும். ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும்.
இந்த துர்க்கை வடிவம் எதிரிக்கும் அச்சத்தைத் தரக்கூடியது.இவளின் நான்கு கைகளின், ஒன்றில் கரத்தில் வஜ்ராயுதமும், மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருவதாக உள்ளது. இந்த அன்னைக்கு கழுதை வாகனமாக உள்ளது.
8. மகாகௌரி
மகா என்றால் பெரிய என்றும், கௌரி என்றால் தூய்மையானவள் என்றும் பொருள்படும். இவரின் பால் போல் வெண்மையாகக் காட்சி தருகின்றார்.
நான்கு கரம் கொண்ட மகாகௌரி, ஒரு கரத்தில் சூலம், மறு கரத்தில் மணியையும் தங்கி நிற்கிறாள். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருகிறார். இவருக்கு காளை வாகனமாக இருக்கின்றது.
9. சித்திதாத்ரி
நவராத்திரி விழாவின் கடைசி நாளான மகா நவமி தினத்தில் ‘சித்தி தாத்ரி’ துர்க்கை வழிபாடு செய்வர். ‘சித்தி’ என்றால் சக்தி என்றும், தாத்ரி என்றாள் அருள்பவள், அதாவது சக்தியை அருள்பவள் என்று பொருள்.
மார்கண்டேய புராணத்தில் பக்தர்களுக்கு அன்னை அருளிய எட்டு விதமான சித்திகள் -குறிப்பிடப்பட்டுள்ளது.
தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சித்திதாத்ரி, நான்கு கரங்களில், இடது கரத்தில் கதை, சக்கரத்துடனும், வலக் கரத்தில் தாமரை, சங்கு ஏந்தியும் அருள்பவள். சித்திதாத்ரி அன்னையின் வாகனம் சிங்கம்.
***
விஷ்ணு துர்க்கை
மேல்மா கிராமத்தில் விஷ்ணு துர்க்கை புடைப்புச்சிற்பம் கண்ெடடுக்கப்பட்டது. பாலை நில கடவுளாகவும், வேட்டைக்கு செல்வோர், போருக்கு செல்வோர் கடவுளாகவும் துர்க்கை வழிபாடு பழக்கத்தில் உள்ளது. புடைப்பு சிற்பம் வடக்கு திசை நோக்கி உள்ளது.
கரண்ட மகுடம், காதுகளில் பத்திர குண்டலங்களுடன், கழுத்தில் சரபலி, மார்பு கச்சை, தோள்பட்டையுடன், இடுப்பில் அரையாடை முடிச்சுடன் உள்ளது. 4 கரங்களில் சங்கு, சக்கரம், அபயம், கடிஹஸ்தங்கள் காட்டப்பட்டுள்ளது. பல்லவர் காலமான , 7ம் நூற்றாண்டைச் சேர்ந்தது இது
******
சுய புராணம் MY STORYALLOT LOT LUCKY PRIZE JOURNALIST QUOTA
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு முதல் ‘லாட்’டிலேயே மதுரை எல்லிஸ் நகரில் ஒரு வீடு அல்லாட் ஆகியது ஏனெனில் ஜர்னலிஸ்ட் கோட்டாவில் நானும்தினமணி எடிட்டர் ஏ என் சிவராமன் மகனும் மனுப்போட்டோம்; இரண்டே பேர்தான் மனு! இருவருக்கும் அடித்தது லக்கி பிரைஸ் ; ஆனால் என் வீட்டுக்கு எதிர்த்தாற்போல் சுடுகாடு!
நான் கிரஹப்பிரவேசம் செய்த நாளில் ஹோ வென்று ஒரு சடலம் எரிந்து கொ ண்டிருந்தது என் அம்மா கேட்டாள். என்னடா இது? என்று; அதெல்லாம் அப்புறம் சொல்றேன். முதலில் பூஜைக்கு வேண்டியதைஎடுத்து வைப்போம் என்றேன்.
பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், பெரும் ரகளை, கிளர்ச்சிக்குப் பின்னர் சுடுகாடு மூடப்பட்டது . நிற்க
சொல்ல வந்த விஷயம் வேறு; அந்த வீட்டில் குடிபுகுந்த பின்னர் என் மகனுக்கு நிற்காத வயிற்றுப்போக்கு ஏற்பட்டது சீர் அடித்தது என்று சொன்னார்கள் மதுரை பழங்காநத்தத்தில் போய் மந்திரித்தும் நிற்கவில்லை.
எங்கள் எல்லோருக்கும் கணபதி மந்திரத்தை தென்காசி ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா உபதேசம் செய்தார்; கணபதி ஹோமத்தை மட்டும் எனது தந்தை மதுரை தினமணி பொறுப்பாசிரியர் வெ.சந்தானம், எனது பெரிய அண்ணன் ஸ்ரீநிவாஸன், தினமணி சீனியர் சப் எடிட்டர் வெங்கடராமனுக்கு உபதேசம் செய்தார்; அவரை தினமும் சந்திப்பதால் அவர் வீட்டுக்குப் போய் பிரச்சனையையும் கவலையையும் கொட்டித் தீர்த்தேன்; அவர் அலட்சியமாக
இதெல்லாம் புது வீட்டுக்குப்போனால் வரும் சாதாரண பிரச்சனை இதற்குப் போய் கவலைப்படாதே என்றார்
எனக்குப் பெரிய ஏமாற்றம். என்ன சார் ? உங்களிடம் வந்தால் நீங்கள் ஏதோ மந்திரம் போட்டு பிரச்சனையை முடித்து வைப்பீர்கள் என்று வந்தேன். நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே? என்றேன் . சிறிது மெளனம் .
பின்னர், சரி ஒரு மந்திரத்தை சொல்லித் தருகிறேன்; கை, கால்களை அலம்பிக் கொண்டு (கழுவிக்கொண்டு) வா என்றார் . பெரும்பாலோருக்குத் தெரிந்த துர்கா சூக்தத்தின் முதல் மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் அவர் சொன்னபடி 13 ஆவ்ருத்தி /தடவை சொல்லி வருகிறேன். துர்கா தேவி பல ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியிருக்கிறாள்.
–subham —
Tags- விஷ்ணு துர்க்கை ,மாமல்லபுரம் ,மகிஷாசுரமர்த்தினி ,சிற்பம் , துர்கா தேவி, என் சுய புராணம், படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-32 , Hinduism through 500 Pictures in Tamil and English-32
உலகின் மிக மிக மோசமான கப்பல் விபத்து என்று கூறப்படுவது டைட்டானிக் என்ற கப்பல் கடலில் மூழ்கியது தான்!
உலகின் பிரம்மாண்டமான இந்தக் கப்பலின் எடை 46328 டன்கள். இதன் நீளம் 269 மீட்டர் அதாவது 882.5 அடி. 28.2 அடி அகலம் (92.5 அடி)
மிகுந்த ஆரவாரத்துடன் கடலில் பயணித்த டைட்டானிக் 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி ஒரு பனிப்பாறையில் மோதி மூன்று மணி நேரத்தில் முற்றிலுமாக மூழ்கி விட்டது. சவுத் ஆம்ப்டனிலிருந்து கிளம்பிய இந்தக் கப்பல் நியூயார்க் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
2224 பயணிகளில் 1500 பேர்கள் இறந்தனர். ஆகவே உலகின் மிக மோசமான கப்பல் விபத்து என்ற பெயரைப் பெற்றது இது.
இந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்களுள் ஒருவர் டோராதி ஜிப்ஸன் (DOROTHY GIBSON) என்ற இருபத்தியிரண்டே வயதான திரைப்பட நடிகை ஆவார்.
1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி நியூயார்க் செல்வதற்காக இவர் டைட்டானிக் கப்பலில் ஏறினார்.
கப்பல் பனிப்பாறையின் மீது மோதுகின்ற சமயத்தில் இவர் பிரிட்ஜ் விளையாடிக் கொண்டிருந்தார்.
அவசரம் அவசரமாக லைஃப் போட்டுகள் கீழே இறக்கப்பட அதில் முதல் படகில் ஏறி இவர் உயிர் தப்பினார்.
நியூயார்க்கிற்கு வந்த டோராதியை எக்லேர் பிலிம் கம்பெனியை நடத்தி வந்த அவரது முதலாளி உயிர் பிழைத்தமைக்காகப் பாராட்டினார். உடனடியாக ஒரு சின்ன படம் தயாரிக்க முடியுமா என்று கேட்டார் அவர். என்ன நடந்தது என்று டோராதி சொல்ல அவர் உதவியுடன் கதை வசனம் தயாரிக்கப்பட்டது.
தனது பெற்றோருக்கும் காதலனுக்கும் நடந்ததைச் சொல்வது போல கதை அமைக்கப்பட்டது.
தான் விபத்து நடந்த சமயத்தில் என்ன ஆடை அணிந்திருந்தாரோ அதே ஆடையை டோராதி அணிந்து படத்தில் நடித்தார்.
படத்தின் பெயர் ‘ஸேவ்ட் ஃப்ரம் தி டைட்டானிக்” (SAVED FROM THE TITANIC)
படம் ஓடிய மொத்த நேரம் பத்து நிமிடங்கள் தான். அந்தக் காலத்தில் தியேட்டர்களீல் இப்படி ‘ஒரு ரீல்’ படங்கள் ஏராளமாக ஓடிக் கொண்டிருந்தன.
பனிப்பாறைகளைப் பற்றிய பல போட்டோ படங்களுடன் இந்தப் படம் திரையிடப்படவே திரையரங்குகளில் கூட்டம் ஏராளமாக வந்து குவிந்தது.
நியூ ஜெர்ஸியில் ஒரு ஸ்டுடியோவிலும் நியூயார்க் துறைமுகத்திலும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன.
கடைசியில் டைட்டானிக் கப்பலுக்கு நேர்ந்த கதி தான் இந்தப் படத்திற்கும் நேர்ந்தது.
பாதுகாப்பாக ஒரு ஸ்டுடியோவில் வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் ஒரே ஒரு பிலிம் காப்பி அந்த ஸ்டுடியோ 1914ல் தீப்பற்றி எரிய அதில் அழிந்தது!
டைட்டானிக் பற்றி இதுவரை 20 திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வெற்றியைக் கண்டிருக்கின்றன.
28 டாகுமெண்டரி படங்கள் இந்த விபத்தைப் பற்றி விளக்கமாகக் கூறுகின்றன.
இன்னும் சுமார் 31 தொலைக்காட்சித் தொடர்கள் இந்த விபத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளன!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
A history-sheeter is a person with a long criminal record in India, often subject to police surveillance and restrictions. Arunagirinathar used this word.
Of late we find the word History sheeter in Indian English Newspapers almost every day. We have the headlines like
Interestingly Tamil poet Arunagirinathar used the word in one of his Tiruppugaz songs about 500 years ago. He composed thousands of poems on Lord Skanda/Kartikeya/ Muruga in Tamil; we are fortunate to recover over 1300 of his pomes sung in 200 Muruga shrines in South India. A few are composed in Sri Lanka and North India. He even sang about the unknown Bhairavi Vana on the banks of Sarswati River. He also made a controversial statement that Tirupati Balaji is Lord Subrahmanya!
In the following song composed near Kumabakonam in Tamil Nadu, he listed 11 types of wicked people who will be reborn as low lives like dogs or worse than dogs.
AvEsa neeRaik kudiththa dhuttargaL: those immoral people getting intoxicated by cosuming alcohol;
thamiyOrsong kUsAdhu sErap paRiththa dhuttargaL: those thieves who usurp, without compunction, the entire wealth of helpless people;
UrArgaL Asaip pidhatru dhuttargaL: those blabbermouths who go on prattling that they possess all the avarices of the entire town;
kOlAla vALviR serukku dhuttargaL: those arrogant rogues brandishing swords and bows stridently;
gurusEvai kUdAdha pAvath thavaththa dhuttargaL: those sinful people who had not deserved to do any service to their masters and kept piling up sins and vices; and
eeyAdhu thEdip pudhaiththa dhuttargaL: those stingy people who amass wealth and hide it away. – all those wretched people
kOmALa nAyiR kadaip piRappinil uzhalvArE: will take a birth baser than that of a boisterous mad dog and suffer in that birth miserably.
………………………………………..
It was in praise of Shiva temple at Tiru Nageswaram.
* NagEsan is Lord SivA’s name in ThirunAgEswaram, 3 miles east of KumbakONam.
–Subham—
Tags. History sheeter, Tiruppugaz, Arunagirinathar , Journalist cliché, 11 types, wicked people, dog life
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முன்னர் ஒரு கட்டுரையில் நரகத்தில் விழும் 11 குண்டர்கள் யார் என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பட்டியலிட்டத்தைக் கண்டோம் இன்னும் ஒரு பாடலில் 11 துஷ்டர்கள் நாயாகப் பிறப்பார்கள் என்று அவர் சபிக்கிறார்.
A history-sheeter is a person with a long criminal record in India, often subject to police surveillance and restrictions. Arunagirinathar used this word.
ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்
மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள்
ஆமாவி னூனைச் செகுத்த துட்டர்கள் …… பரதாரம்
ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள்
நானாவு பாயச் சரித்ர துட்டர்கள்
A history-sheeter is a person with a long criminal record in India, often subject to police surveillance and restrictions.
செய்த சரித்திரம் உடைய துஷ்டர்கள், A history-sheeter is a person with a long criminal record in India, often subject to police surveillance and restrictions.