அதிவீர ராம பாண்டியன் நூல்கள் பற்றி 10 கேள்விகள்(Post.16,164)

Written by London Swaminathan

Post No. 16,164

Date uploaded in London – 4 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Source:
வெற்றிவேற்கை
(ஆசிரியர் : அதிவீரராம பாண்டியன்)
உரையும் கதைக்குறிப்பும்

வாழ்குடை, சுப்பிரமணிய சர்மா
மூன்றாவது பதிப்பு
ஆர். கணபதி அண்டு கம்பெனி,
பிரம்பூர், சென்னை.
1919 , 3rd edition
All Rights Reserved.)
(விலை அணா 5.
P.R. Rama Iyar and Co, Printers, Madras
————–

PROJECT MADURAI WEBSITE HAS THE FULL BOOK WITH NOTES AND 100 STORIES.

வெற்றிவேற்கை

1

அதி வீர ராம பாண்டியன்  யார் ?

2

அவர் எத்தனை நூல்களை எழுதினார் ?

3

வெற்றிவேற்கை’ நூலில் அவர் பெண்களுக்கு கூறும் புத்திமதிகள் என்ன  ?

4

66. முதலுள பண்டம் கொண்டுவாணிபம் செய்து

அதன்பயன் உண்ணா வணிகனும் பதரே.– இதன் பொருள் என்ன? நூலாசிரியர் நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா சொல்லும் கதை என்ன ?

5

உபநிஷத்தில் ஆலமரத்தின் விதையை வைத்து போதிக்கிறார் ஒரு ரிஷி; பஞ்ச  தந்திரக் கதையில் ஆலமரத்தின் அழகான  வருணனை வருகிறது; நமது புலவர் அதி வீர ராம பாண்டியன்  என்ன சொல்கிறார் ?

6

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்- என்பது சம்ஸ்க்ருதத்தில் மாதா பிதா குரு தெய்வம் என்ற வாக்கியத்திலும் ஆசார்ய தேவோ பவ என்ற  வேத வாக்கியத்திலும் வருகிறது . ஆனால் எழுத்து அறிவித்தவன் சிவன் என்ற புதிய விளக்கம் தருகிறார் 1919 ஆம்1919 ஆண்டு நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா அது என்ன விளக்கம் ?

7

பயணிகளுக்கு அதி வீர ராம பாண்டியன்  சொல்லும் அறிவுரைகள் என்ன ?

8

வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்

சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.

பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்

மெய்போ லும்மே! மெய்போ லும்மே!- இதற்கு நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா சொல்லும் கதை என்ன ?

9

தறுகண் யானை தான் பெரி தாயினும்

சிறுகண் மூங்கில் கோற்கஞ் சும்மே.- இதற்கு என்ன பொருள் ?

10

பெற்றமும் கழுதையும் மேய்ந்த வப்பாழ்

பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து

நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.– இதற்கு என்ன பொருள் ?

*********************************

விடைகள்

1.இவர் பாண்டி நாட்டிலுள்ள தென்காசியில் அரசு செலுத்தினவர். சந்திரவம்சத்துச் சிற்றரசர். சைவ சமயத்தினர். இவர் சகோதரர் வரதுங்கராம பாண்டியன். தென்காசியின் சிலாசாசனத்தினால் இவர் காலம் சாலிவாகன சகம் 1485 (1564–1604 ce)  என்று தெரியவருகிறது. கொற்கை யென்னும் பட்டணத்தில் இவரிருந்து அரசு நடத்தவில்லை. அஃது ஒருசமயம் இவரைச் சேர்ந்ததாக விருந்திருக்கலாம்.

***

2.’வெற்றிவேற்கை’, புத்தகத்துக்கு ‘நறுந்தொகை’ என்ற பெயருமு ண்டு. வெற்றிவேற்கை யென்பது புத்தகத்திலுள்ள தொடர்மொழி.  அதிவீரராம பாண்டியன்  செய்த வேறு நூல்கள் நைடதம், கூர்ம புராணம், காசிகாண்டம் என்பன. இவா சகோதரர் செய்த நூல் பிரமோத்தரகாண்டம். சிலர், கருவை வெண்பவந்தாதி கருவைக் கலித்துறையந்தாதி, கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி யென்ற மூன்று அந்தாதிகளை யும் இவர் செய்தாரென்று சொல்லுகின்றனர்.

***

3.பெண்களுக்கு கூறும் புத்திமதிகள்

12. பெண்டிர்க் கழகெதிர் பேராதருத்தல்.

பெண்டிர்க்கு – பெண்களுக்கு, அழகு – அழகாவது ஏன், எதிர் பேசாது – (கணவர் மொழிக்கு) எதிர்த்துப் பேசாமல், ஒருத்தல் – அடங்கியிருத்தலாம்.

14. குலமகட் கழகு தன் கொழுநனைப் பேணுதல்.

குலமகட்கு – நற்குலத்தில் ( உசித்த) பெண்களுக்கு, அழகு – அழகாவது, தன் – தன்னுடைய, கொழுநனை – நாயகனை, பேணுதல் – காப்பாற்றுதலாம்.

23. கொண்டோ ரெல்லாம் பெண்டிரும் அல்லர்.

கொண்டோர் எல்லாம் – (மணஞ் செய்து) கொண்ட மனைவிகள் யாவரும், பெண்டிரும் அல்லர் – நன்மனைவிகள் ஆகமாட்டார்கள்.

****

4.  முதலுள பண்டம் கொண்டுவாணிபம் செய்து

அதன்பயன் உண்ணா வணிகனும் பதரே.– இதன் பொருள் – நூலாசிரியர் சொல்லும் கதை :

உள் முதல் – தன்னிடத்துள்ள முதலால், பண்டம் – பொருள்களை, கொண்டு – வாங்கி வைத்துக்கொண்டு, வாணிபம் செய்து – வர்த்தகம் செய்து, அதன் பயன் – அதனால் வரும் லாபத்தை, உண்ணா – அநுபவியாத, வணிகனும் – வைசியனும், பதர்-பதராவான். எ – அசை .

 மைசூரில் சங்கரராவ் என்று ஒருவர் இருந்தார். அவருக்குப் பிதிரார்ஜிதமாக நாற்பது ஏகர் நிலம் இருந்தது. அவர் காலமறிந்து பயிர் செய்யத் தெரியாமல் வீண் செலவு செய்து கடன் பட்டுப் பாதி நிலத்தை விற்றுவிட்டார். மற்ற நிலங்கள் குத்தகையில் இருந்தன. தாசப்பா என்றவன் அவற்றை வைத்துக் கொண்டிருந்தான். ஒருநாள் தாசப்பா சங்கரராவைக் கண்டு ‘ஐயா! தாங்கள் நிலங்களை விற்கப்போவதாகச் சொல்கிறார்கள்; அது மெய்யாயின் அவற்றை எனக்கு விலைப்படுத்துங்கள் ! நான் பணம் கொடுக்கிறேன்’ என்றான். அவர் ஆச்சரியப் பட்டுத் தாசப்பா! எனக்கு எல்லா நிலங்களும் இருந்தும் செலவுக்குப் பற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை விற்றுக்கொண்டு வருகிறேன். நீ பாதி நிலத்தைக் குத்தகை யெடுத்து கொண்டு நிலம் வாங்குவதற்குப் பணம் சம்பாதித்திருக்கிறாய்; பணம் எப்படிச் சேர்த்தாய்? அதனை எனக்குச் சொல் ‘ என்று கேட்டார்.

அவன் ‘ஐயா! நீங்கள் எல்லாவற்றிற்கும் போ! போ!’ என்கிறீர்கள். நான் ஒவ்வொன்றுக்கும் ‘வா! வா!’ என்கிறேன். இதுதான் வித்தியாசம். அதாவது, நீங்கள் வேலையாட்களைப் போய் வேலை செய்யுங்கள்!’ என்கிறீர்கள். நான் ‘வாருங்கள்! வேலைக்குப் போகலாம்’ என்று அவர்களை அழைத்துக்கொண்டு போய் அவர்களோடு வேலை செய்து வருகிறேன். அதனால், எனக்கு அதிக லாபம் கிடைக்கின்றது’ என்று சொல்லி அந்நிலங்களை விலைக்குப் பெற்றுக்கொண்டான். ஆதலால், காலத்தில் பயிர் செய்து லாபம் சம்பாதிக்கத் தெரியாதவன் நெற்பதர் போலப் பயன்பட மாட்டான்.

— கதாவாசகம்.

***

5. தெள்ளிய வாலின் சிறுபழத் தொருவிதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயினும், அண்ணல் யானை

அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு

மன்னர்க் கிருக்க நிழலா கும்மே. 

தெள்ளிய – தெள்ளி யெடுக்கத்தக்க, ஆலின் – ஆலமரத்தின், சிறுபழத்து – சிறிய பழத்தினுடைய, ஒருவிதை – ஒருவிதையானது, தெள் – தெளிந்த, நீர் – நீரையுடைய, கயத்து – குளத்திலுள்ள, சிறு மீன் – சிறிய மீனின், சினையினும் – முட்டையைக் காட்டிலும், நுண்ணிதே – சிறியதே. ஆயினும் – ஆனாலும், அண்ணல் – பெருமை பொருந்திய, யானை – யானையும், அணி – அழகிய, தேர் – தேரும், புரவி – குதிரையும், ஆள் – காலாள்களுமாகிய, பெரும் – பெரிய, படையொடு – சேனைகளோடு, மன்னர்க்கு- அரசருக்கும், இருக்க (வெயிலில்) தங்கியிருக்க, நிழல் ஆகும் – நிழலைத் தரும். ஏ- அசை.

 நெடுங்காலத்துக்கு முன்னர்க் காசிபர் என்ற முனிவருக்கு இரணியகசிபு என்று ஒரு புத்திரன் பிறந்தான். அவன் மிகவும் பெரிய வடிவத்தைக் கொண்டவன். உதயகிரி அஸ்தமனகிரி என்ற இரண்டு மலைகளையும் அவன் தன் காதுக்குக் குண்டலங்களாக அணிந்து திரிந்ததுவே அவன் பெரிய வடிவத்தைப் பிரசித்தியாக்கும். அவன் ஒருவரும் பெறமுடியாத உயர்ந்த வரத்தைப் பிரமதேவரிடத்தில் பெற்றிருந்தான். அவன் வரம் இது:- ‘ இரவிலும், பகலிலும், உயிருள்ளவற்றிலும், உயிரில்லாதவற்றிலும், உள்ளிலும் வெளியிலும், தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன நிற்பன என்ற எழுவகைத தோற்றத்திலும் தான் இறக்கலாகாது’ என்பதாம். அவனைப்போல யோசித்து வரம் பெற்றவர் ஒருவரும் இல்லை. பெரும்பாலும் அவன் வரமடைந்ததற்கு இறவாமலேயே இருந்திருக்கவேண்டும். அவனுக்குப் பிடிவாதமும் பெருங்கோபமும் அதிகம். கருவம் அவன் நெஞ்சத்தில் குடி புகுந்தது. அதனால், அவன் கடைசியில் கொஞ்சமும் அறிவில்லாமல் எல்லாரும் தன்னையே கடவுள் என்று கொண்டாடும் வண்ணம் கட்டாயப்படுத்தத் தொடங்கினான். அறிவுள்ளவர் பலரும் அதனைச் சிறிதும் அங்கீகரிக்க வில்லை. உலகத்தில் அவன் உபத்திரவமும் பயமும் அதிகமாக வளரத்தொடங்கின. அப்புறம் ஸ்ரீ மகாவிஷ்ணு நரசிங் காவதாரம் செய்து அவனை உபாயமாகக் கொன்று உலகத்தின் பயத்தை நீக்கினார். ஆதலால், உருவத்தில் பெரியவர்களான அனைவரும் அறிவிலும் பெரியவர்களாக முடியாது.

— பாகவதம்.

*****

6.எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

a. எழுத்து – இலக்கண இலக்கிய நூல்களை, அறிவித்தவன் – (நமக்குக்) கற்பித்தவன், இறைவன் – கடவுளுக்குச் சமானமாக, ஆகும் – (வணங்கத்தக்கவன்) ஆவான்.

b. முற்காலத்தில் பாணினி என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் வடமொழியில் நிகரற்ற பண்டிதர். அவர் அப்பாஷைக்குத் தாம் ஓரிலக்கணம் செய்யவேண்டும் என்று பனிமலைச் சாரலில் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யத் தொடங்கினார். அப்பொழுது சிவபெருமான் அவருக்குத் தரிசனம் கொடுத்துத் தமது இடக் காத்திலிருந்த டமருகம் என்ற வாத்தியத்தை ஒலிக்கப் பண்ணினார். அவ்வாத்தியத்திலிருந்து பதினான்கு வகையான அக்ஷா சப்தங்கள் உண்டாயின. பாணினி முனிவர் அச்சப்தங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு இலக்கண சூத்திரங்களை உண்டு பண்ணினார். அதற்குப் பாணினி வியாகர்ணம் என்று பெயர். அப்புறம் பதஞ்சலி என்ற வேறொரு முனிவர் அதற்குப் பாஷியம் (உரை) எழுதி விளக்கினார்.

முன்பு இமயவரசன் புத்திரியான பார்வதிதேவிக்குப் பனிமலையில் திருக்கலியாணம் நடந்தது. அதற்கு உலகத்திலுள்ள எல்லாத் தேவர்களும் எல்லா முனிவர்களும் ஒன்றாகத் திரண்டு வந்திருந்தார்கள். அதனால், உலகத்தின் வடக்குத் திசையில் பளு அதிகமாயிற்று. அந்தப் பாரத்தைத் தாங்கமாட்டாமல் அத்திசை தாழ்ந்து தெற்குத் திசை உயர்ந்து போயிற்று. சிவபெருமான் அதன் காரணத்தை உணர்ந்து தெற்கில் சென்று உலகத்தின் பளுவைச் சமன் செய்யும்படி முனிவரிற் சிறந்த அகஸ்தியருக்குக் கட்டளை யிட்டனர்.

அம்முனிவர் கடவுளை வணங்கித் ’தலைவரே! தங்கள் திருக்கலியாணம் காண உலகத்தில் உள்ள அனைவரும் வந்து ஒன்றாகத் திரண்டிருக்கின்றனர். நான் மாத்திரம் அதனைக் காணாமல் அகல்வது நியாயமாகுமா? அதனுடன் தெற்குத்திக்கு திராவிட தேசம். எனக்கு அந்தப் பாஷை கொஞ்சமும் தெரியமாட்டாது. நான் சென்று அங்கு எப்படியிருப்பேன் ?’ என்று சொன்னார். சிவபெருமான் ’அன்பனே! கவலையுறாதே ; எமது திருமணக்கோலத்தை நீ விரும்பும் ஒவ்வொரு சிவதலந்தோறும் உனக்குக் காண்பிக்கிறோம். திராவிட பாஷையில் உனக்குச் சிறந்த ஞானம் உண்டாகும் வண்ணம் அநுக்கிரகம் செய்கிறோம். உன் பெயரால் இலக்கணமியற்றி நீ அந்தப் புராதன பாஷைக்குத் தலைவனாக விளங்கிவா!’ என்று திருவாய்மலர்ந்து,

அவருக்குத் தமிழ்ப்பாஷையையும் அதன் இலக்கணத்தையும் உபதேசம் செய்தனர். உடனே முனிவர் கடவுளிடம் விடை பெற்றுக்கொண்டு தென் திக்கை அடைந்து பொதிகை மலையில் தங்கித் தமது பெயரால் அகத்தியம் என்று ஒரு பெரிய இலக்கணமியற்றித் தமிழ்ப் பயிரை வளர்த்தார். ஆதலால், வடமொழி தென்மொழி யென்ற இரண்டு பாஷைகளுக்கும் முதலில் இலக்கணத்தை அறிய வித்தவர் சிவபெருமானே யாவர்.

— திருவிளையாடற் புராணம்.

———-

 எழுத்தறிவித்தவன் இறைவ னாகும்.

b. எழுத்து – இலக்கண இலக்கிய நூல்களை, அறிவித்தவன் – (உலகத்துக்கு) முதலில் கற்பித்தவன், இறைவன் ஆகும் – கடவுள் ஆவார்.

2. முன்னர்ச் சொன்ன பட்டணத்தைச் சார்ந்த மைலாப்பூரில் திருவள்ளுவர் என்று ஒரு தமிழ்ப்புலவர் இருந்தார். அவர் தமிழ்ப்பாஷையைத் தெளிவாகக் கற்றவர். நல்லொழுக்கம் நிறைந்தவர். இல்வாழ்க்கையில் இயைந்தவர். முனிவர்களைப்போல முக்காலத்தையும் அறிந்து சொல்கின்ற ஞானக்கண் பெற்றவர். அவர் திருக்குறள் என்று மிகவும் சிறந்த நீதி நூலொன்று இயற்றி அதனை மதுரைப் பட்டணத்துக்கு எடுத்துக் கொண்டு சென்று அங்கிருந்த தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார். அதன் பொருள் இணையற்றதென்று எல்லா மதத்தவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மிகவும் சிறிய வாக்கியங்களில் பெரிய விஷயங்களை அடக்கித் தெளிவாகச் சொல்லியிருக்கும் நீதி நூல் தமிழ்ப்பாஷையில் அஃதொன்றேயாகும் அந் நூல் அவர்கள் திறமையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல உணர்த்துவது மல்லாமல், படிப்பவர் மனத்தைப் பாகுபோல வுருக்கிப் பயன் பெறவும் செய்கின்றது. ஆதலால், திருவள்ளுவரைப் போலக் குற்றமும் சந்தேகமும் இல்லாமற் சொல்வது தான் ஒருவன் கற்ற கல்விக்கு அழகாகும்.

— புலவர் புராணம்.

****

7.பயணிகளுக்கு அவர் சொல்லும் அறிவுரைகள் :

76. சுழியா வருபுனல் இழியா தொழிவது.

சுழியா – சுழித்துக்கொண்டு, வரு – வருகின்ற, புனல் – வெள்ளத்தில், இழியாது- இறங்காமல், ஒழிவது – நீங்கவேண்டும்.

76. துணையோ டல்லது நெடுவழி போகேல்.

துணையோடு – துணையினோடு, அல்லது – அல்லாமல், நெடுவழி – தூரமான வழியில், போகேல் – (நீ செல்லாதே.

77. புணைமீதல்லது நெடும்புனல் ஏகேல்.

புணைமீது- தெப்பத்தின்மேல், அல்லது-அல்லாமல், நெடும் புனல் – பெரிய நீரில், ஏகேல்- (நீ ) நீந்திச் செல்லாதே.

79. வழியே யோக வழியே மீளுக.

வழியே – (ஒருவன் இல்லற) வழியிலே, ஏகுக – செல்லக் கடவன்; வழியே – (பின்னர் ) அவ்வழியிலிருந்து, மீளுக – (துறவற வழியில்) திரும்பக்கடவன். இன்னுமொரு பொருள் : போன வழியை நினைவு வைத்துக்கொண்டு அதே வழியில் திரும்புக. பலரும் சுற்றுலா செல்கையில் வழித்தவருவது இயற்கை.

***

8. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்

சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.

பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்

மெய்போ லும்மே! மெய்போ லும்மே!

வாய் – வாயானது, பறை ஆகவும் – தம்பட்டம் என்ற பறை வாத்தியமாகவும், நா – நாவானது, கடிப்பு ஆகவும் – அடிக்கும் கோலாகவும் கொண்டு, சாற்றுவது – கொட்டித் தெரிவிப்பதாகிய, ஒன்றை – ஒரு காரியத்தை, போற்றி – ஆதரவுடன், கேண்மின் – கேளுங்கள். பொய் உடை – பொய் பேசுதலையுடைய, ஒருவன் – ஒருமனிதன், சொல் பேசுகின்ற, வன்மையினால் உறுதிப்பாட்டினால், மெய்போலும் – (அவன் பேசிய பொய்ச் சொற்கள் ) மெய்யே போலத்தோன் றும்; மெய்போலும் – மெய்யேபோலத் தோன்றும். ஏ – இரண்டும் அசைகள்.

71. முன்னொரு காலத்தில் சத்திராஜித்து என்று ஒரு உயர்ந்த அரசன் இருந்தான். அவன் சூரியனைக் குறித்துத் தவம் செய்து ஸ்யமந்தகமணி யென்ற ஒரு சிறந்த இரத்தினத்தைப் பெற்றான். அம்மணி நாள் தோறும் ஒரு பாரம் எடையுள்ள தங்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரு சமயத்தில் கிருஷ்ணன் என்பவன் தனக்கு அந்த மணியைத் தரும்படி கேட்டதற்குச் சத்திராஜித்து மன்னவன் கொடுக்கமுடியாதென்று சொல்லிவிட்டான். பிற்பாடு அவன் தம்பி பிரேசனன் அம்மணியைக் கழுத்தில் தரித்துக்கொண்டு ஒருநாள் காட் டில் வேட்டையாடப் போனான். அவனை ஒரு சிங்கம் கொன்றுவிட்டு அத்தெய்வ மணியை எடுத்துக்கொண்டு போயிற்று. அதனைக்கண்ட ஜாம்பவான் என்னும் கரடி அச்சிங்கத்தைக் கொன்று தான் அம்மணியை அடைந்தது.

சத்திராஜித்து தம்பியும் மணியும் காணாமற்போன தனால் கிருஷ்ணன் தன் தம்பியைக் கொன்று ஒருவருமறியாமல் மணியை அபகரித்துக் கொண்டு விட்டான்’ என்று பலரும் கேட்க அவதூறு பேசத்தொடங்கினான். கிருஷ்ணன் அத்தெய்வமணியைத்தான் அப்கரிக்க வில்லையென்று பலர் முன்னிலையில் பலவிதமாகச் சொல்லியுங்கூட அவன் நம்பவில்லை. சத்திராஜித்து மன்னவனைச் சாந்தவர்களும் அவனைப் போலவே அவதூறு சொல்லிக் கிருஷ்ணனைத் தூற்றத் தலைப்பட்டார்கள். பின்பு கிருஷ்ணன் ஜாம்பவானைத் தேடிச் சென்று அவனோடு சண்டை செய்து ரணகளத்தில் அவனை வென்று அம்மணியைக் கொண்டுவந்து சத்திராஜித்து மன்னவனிடம் கொடுத்த பிற்பாடுதான் அவன் சொல் உண்மையாயிற்று. ஆதலால், சில சமயங்களில் மெய்ச் சொற்களும் பொய்ச் சொற்களாக மாறிப் போகின்றன.

— பாகவதம்.

***

9. தறுகண் யானை தான் பெரி தாயினும்

சிறுகண் மூங்கில் கோற்கஞ் சும்மே.- இதற்கு பொருள்:

தறுகண் – அஞ்சாமையை உடைய, யானை – யானையானது, தான் பெரிது ஆயினும் – தான் (எல்லா மிருகங்களையும் விட உருவத்தால்) பெரியதா யிருந்தாலும், சிறுகண் – சிறிய கணுக்கள் (உள்ள), மூங்கில் கோல்கு – மூங்கிற் கோலுக்கு, அஞ்சும் – பயப்படும்.

முன்னாளில் சூரியன் புத்திரனாகிய சுக்கிரீவன் என்ற குரங்குத்தலைவன் ரிசிய மூக மலையில் வாசம் செய்து வந்தான். அநுமான் முதலான அறிவில் மிகுந்த வாநரர்கள் அவனுக்கு மந்திரிகளாகி அப்பொழு தப்பொழுது ஆகுங் காரியங்களை அறிந்து சொல்லிவந்தார்கள். வாலி அவ்விடத்துக்கு வந்தால் இறந்து போவான் என்பதை அவன் அறியாமலிருக்கவில்லை. மதங்கர் என்ற முனிவர் வாலிக்கு அவ்வாறு சாபமிட்டிருந்தார். ஆனாலும், சுக்கிரீவன் இரவும் பகலும் வாலியை நினைந்து பயந்து நடுங்கிக் கொண்டேயிருந்தான். இராமன் வந்த பிற்பாடுதான் அவ னுக்கு அந்தப்பயம் நீங்கிற்று. ஆதலால், எவ்வளவு பத்திரமான இடத்திலிருந்தாலும் பெரிய சத்துருக்களுக்கு அனைவரும் பயப்படுவார்கள்.

— இராமாயணம்.

***

10. பெற்றமும் கழுதையும் மேய்ந்த வப்பாழ்

பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து

நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.– இதற்கு பொருள்:

பெற்றமும் – பசுக்களும், கழுதையும் – கழுதைகளும், மேய்ந்த – மேய்ந்து கொண்டிருந்த, அ பாழ் – அந்தப் பாழ் (நிலமானது), பொன் தொடி – பொன்னாலாகிய வளையல்களை (யணிந்த), மகளி ரும் – பெண்களும், மைந்தரும் -புருஷர்களும், செறிந்து – நிறைந்து, நெல் பொலி – நெல்லின் (குதிர்கள் ) விளங்குகின்ற, நெடுநகர் – பெரிய பட்டணம், ஆயினும் – ஆகும், ஆனாலும் – ஆகும்.

நெடுநாளைக்கு முன்பு கவுதமா என்ற முனிவர் தம் மனைவி அநசூயையோடு நைமிச வனத்தில் தவம் செய்துவந்தார். அப்பொழுது உலகத்தில் பன்னிரண்டு வருஷம் வரையில் மழை பொழியாமல் பெரும் பஞ்சம் பாவிப் பீடித்து வந்தது. வனத்திலிருந்த முனிவர்களும் நாட்டிலுள்ள அந்தணர்களும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வகையில்லாமல் கவுதமாச்சிரமத்துக்கு வந்து அவரைத் தஞ்சமடைந்தார்கள். கவுதம முனிவர் தமது உயர்ந்த வேத பாராயணத்தினாலும், சிறந்த தவவொழுக்கத்தினாலும் கோதுமைப் பயிர் செய்து அதிகமான தானியங்களை விளைத்து அத்தனை பெயரையும் குறைவில்லாமல் காப்பாற்றி வந்தார். பின்னர் இரண்டாவது தடவை நேர்ந்த அவ்விதமான மற்றொரு பஞ்சத்திலும் அவர் திரியம்பகம் என்றவிடத்தில் இருந்து கொண்டு தமது வேத பாராயண மகிமையினால் பிடி நெல்லை விதைத்துப் பயிர் செய்து விளைத்து எல்லாம் அந்தணர்களையும் பஞ்சம் தெளியும் வரையில் காப்பாற்றி வந்திருக்கிறார். அம்முனிவரைப்போல வேதமோதுவதும் அடுத்தவர்களை ஆதரிப்பதும் அந்தணர்களுக்குச் சிறந்த தருமமாகும்.– சிவபுராணம்.

–subham—

Tags- அதிவீர ராம பாண்டியன் நூல்கள், 10 கேள்விகள், வெற்றிவேற்கை, கதைகள் , சுப்பிரமணிய சர்மா

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 108; இந்து மத கலைச்சொல் அகராதி-108 (Post16,158)

Written by London Swaminathan

Post No. 16,158

Date uploaded in London – 3 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted already.

துளசிதாஸ்

கோஸ்வாமி துளசிதாஸ் இயற்றிய Tulsidas (1543?–1623) ஹிந்தி மொழி ராமாயணம் வட இந்தியா முழுதும் பிரபலமான புனித நூலாகும்; அதன் பெயர் ராம சரித மானஸ் (Devanagari: रामचरितमानस rāmacaritamānasa),  துளசிதாஸ், உத்தர பிரதேசத்தில் ராஜாப்பூரில் பிறந்து காசியில் முக்தி அடைந்தார் அவர் இயற்றிய ஹனுமான் சாலிசா துதியை வட இந்தியக் குழந்தைகள் மனப்பாடமாகச்  சொல்லுவார்கள். எழுத்தறிவு இல்லா தோ ருக்கும் துளசிதாஸரின் இராமாயண வசனங்கள் அத்துபடி. அவர் வாழ்வும் தியாகராஜ சுவாமிகள் வாழ்வினைப்போல அற்புதங்கள் நிறைந்தது ; கம்ப ராமாயணப் பாடல் தெரியாத தமிழர் உண்டு; ஆனால் துளசி ராமாயணம் தெரியாதோர் வடக்கில் இல்லை.

***

தொல்காப்பியர்


(இவரைப் பற்றி இதே பிளாக்கில் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி அதைப் புஸ்தகமாகவும் வெளியிட்டுவிட்டேன்; ஆகையால் புல்லட் பாயிண்டில் சொல்கிறேன் ).

தமிழில் கிடைக்கும் நூல்களில் இவர் எழுதிய தொல்காப்பியமே மிகவும் பழமையானது என்று பெரும்பாலோர் நம்புகிறார்கள். இவரைப் பற்றியோ நூல் பற்றியோ சங்க இலக்கியத்தில் 30,000 வரிகளில் ஒரு வார்த்தையும் இல்லை. ஆனால் இரண்டு தகவல்களை  இலக்கிய முன்னோர்கள் விட்டுச் சென்றனர் . இவருடைய வகுப்பறை மாணவர் பனம்பாரனார் ,தொல்காப்பிய நூலுக்கு பாயிரம் (முன்னுரை) வழங்கியுள்ளார்; அதில் இந்த தொல்காப்பியர் அதங்கோடு என்னும் ஊரிலுள்ள நான்கு வேதம் படித்த (பார்ப்பன) ஆசார்யாரிடம் சர்ட்டிபிகேட் வாங்கினார், நிலந்தரு திருவில் பாண்டியன் அவையில் அரங்கேற்றினார் என்று எழுதியுள்ளார் இன்னொரு தகவலை மதுரை பாரத்வாஜக் கோத்திர பார்ப்பான் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர், 700 ஆண்டுகளுக்கு  முன்னர் எழுதிவைத்துள்ளார் தொல்காப்பியரின் பெயர் த்ருணதூமாக்கினி என்றும் அவர் அகஸ்தியரின் மாணாக்கர் என்றும் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் சாபமிடும் அளவுக்கு மோதல் ஏற்பட்டது என்றும் எழுதியுள்ளார் . இது ஒரு சில்லறை விஷயத்தில் நடந்த தகராறு ! அகஸ்தியரின் மனைவி லோபாமுத்ரா; அவர் மத்தியப்பிரதேச இளவரஸி ; அவரை அழைத்துவரத் தொல்காப்பியரை அனுப்பினார்; மதுரைக்கு அருகில் வந்தபோது வைகை நதி வெள்ளப்பெருக்கோடு ஓடியது. மாற்றான் மனைவியைத் தொடவும் கூடாது, பக்கத்தில் நெருங்கவும் கூடாது என்பதால் ஒரு கம்பினை எடுத்து நீ ஒரு பக்கம் பிடி; நான் எதிர்ப்புறத்தைப் பிடிக்கிறேன் என்று கடந்து வந்தனர். இதை அகஸ்தியர் அறிந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது ; சாபத்தில் முடிந்தது என்பது நச்சினார்க்கினியர் சொல்லும் கதை . இதை நம்புவோருக்கு ஒரு நற்செய்தியும் உள்ளது அகஸ்தியர்- லோபாமுத்ரா தம்பதிகளை ரிக்வேதம் சொல்லுவதால் தமிழும் ரிக்வேதம் போல 6000 ஆண்டுப் பழமை உடைத்து . உண்மையில் அதைப் பார்ப்பான் நச்சினார்க்கினியர் அப்படியே நம்பியது ராவணன் – பாண்டியன் சமாதான உடன்படிக்கைக் கதையிலும் உறுதியாகிறது; ராமன் எவ்வளவு பழமையோ பாண்டியர்களும் அவ்வளவு பழமை உடையவர்கள் என்பது நச்சி. யின் நம்பிக்கை. தொல்காப்பியர் காப்பியக்குடி என்னும் கோத்திரத்தில் தோன்றியவர்; இவர் பிராமணர் அல்ல என்று காட்டும்வகையில், இந்து விரோத திராவிடர்கள், இவருக்கு மீசை வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்னர் புதிய படமும் வரைந்து, வெளியிட்டுப் பரப்பி வருகின்றனர் ! காப்பியக்குடி உசனஸ் கவி என்பவர்தான் கவிகளின் மூல கர்த்தா. அதிலிருந்துதான் கவிகவிதைகாவ்யம் என்ற சொற்கள் பிறந்தன; பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் கவிகளில் நான் உசனஸ் என்று சொல்கிறார் அந்தக் கவி, ரிக் வேத காலத்தின் மிக மூத்த கவிஞன்.

தொல்காப்பிய பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

அறங்கறை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி

மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

தொல்காப்பியம் எழுத்துசொல்பொருள் என்ற மூன்று அதிகாரங்களை உடைத்து ; ஒவ்வொன்றிலும் ஒன்பது அத்தியாயங்கள் (இயல்கள்) . சுமார் 1612 சூத்திரங்கள் உள்ளன

இதன் காலமும் நூலாசிரியர் காலமும் பெரும் வாதப்பிரதிவாதங்களில் சிக்கியுள்ளது. தமிழ் வெறியர்கள் இதை 20,000 ஆண்டுப் பழையது என்றும் தமிழ்ப்  பிரியர்கள்  இது  2000 அல்லது 2300 ஆண்டு பழமையானது என்றும் கருதுகிறார்கள். மொழியியல் ஆய்வின்படி பொருள் அதிகாரம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது தெரிகிறது; மனு தர்மம் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள், பரத முனி சொல்லும் எட்டு வகை ரசங்களை இவர் கிளிப்பிள்ளை போல் சொல்வதும் வேத கால வருணனையும் இந்திரனையும் தமிழர் தெய்வங்கள் என்று சொல்லிவிட்டு சிவ பெருமானை அடியோடு மறந்ததும்  (மறைத்ததும்) பலருடைய புருவங்களை உயர்த்துகின்றன . (என்னுடைய கருத்து:– அதிகாரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் இருப்பதால் திருக்குறள், சிலப்பதிகாரம், பொருள் அதிகாரம் ஆகியன ஐந்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவை; தொல்காப்பியத்தில் என்மனார் புலவர் என்ற தொனி  200, 300 இடங்களில் வருவதால் தொல்காப்பியர் காலம் வேறு,  நூலின் காலம் வேறு என்பது தெரிகிறது- இது என் கருத்து )

***

திருவாசகம்

நால்வரில் – அதாவது நான்கு பெரியார்களின் ஒருவரான மாணிக்கவாசகர் பாடி அருளிய நூல்; இதைத் தவிர திருக்கோவையார் என்ற நூலினையும் யாத்தார் .திருவாசகம் நூலிலுள்ள சிவபுராணம் பகுதியும்  திருவெம்பாவைப் பகுதியும் மிகவும் பயிலப்படுபவை.  இவைகளோடு 51 தலைப்புகளில் 658 பாடல்கள் உள்ளன. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது ஆன்றோர் வாக்கு. பன்னிரு திருமுறைகள் என்ற 12 நூல் தொகுப்பில், இது எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது . மாணிக்கவாசகர் என்ற தலைப்பில் மேல் விவரம் காண்க .

***

திருமுறை – தேவாரம் என்ற தலைப்பில் விவரம் காண்க ; முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும் .

பன்னிரு திருமுறைகள் விவரம்

1, 2, 3 திருமுறைகள்: திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள்.

4, 5, 6 திருமுறைகள்: திருநாவுக்கரசர் (அப்பர்) தேவாரப் பாடல்கள்.

7ஆம் திருமுறை: சுந்தரர் தேவாரப் பாடல்கள்.

8ஆம் திருமுறை: மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவையார்.

9ஆம் திருமுறை: திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு (ஒன்பது புலவர்கள்).

10ஆம் திருமுறை: திருமூலரின் திருமந்திரம்.

11ஆம் திருமுறை: காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல புலவர்களின் பிரபந்தங்கள்.

12ஆம் திருமுறை: சேக்கிழாரின் பெரியபுராணம்.

***

திருமூலர் – திருமந்திரம்

திருமூலர் என்ற பெரிய சித்தர் எழுதிய நூல் திருமந்திரம். பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் 18 சித்தர்களில் ஒருவராகவும் இடம்பெறுகிறார் இவர் காஷ்மீர் மாநிலத்திலிருந்து வந்த சைவர் என்று கருதப்படுகிறது . இவருடைய தமிழ் நடையும் 3000 பாடல்களில் உள்ள விஷயங்களும் இவரை வெளி மாநிலத்தவர் என்பதையும் காலத்தால் பிந்தியவர் என்றும் சைவ – சாக்த- வேதாந்த கலப்பட நம்பிக்கையை உள்ளவர் என்பதையும் காட்டுகிறது . திருவாவடுதுறை என்ற ஊருக்கு வந்த பொழுது ஒரு பசுமாட்டு இடையன் திடீரென்று இறந்தவுடன், அஷ்ட மா சித்திகளில் பரகாயப்ரவேசம் என்ற சித்தியைப் பயன்படுத்தி இடையன் உடலில் புகுந்து பசுக்களை மகிழ்வித்தார் . பின்னர் அந்த ஊரிலேயே சமாதி அடைந்தார் . திருவாவடுதுறை சிவன் கோவிலில் அவருடைய சமாதி உள்ளது .

திருமந்திரப் பாடல்களில் சக்தி வழிபாடு, அஹம் பிராம்மாஸ்மி போன்ற வேதாந்தக் கருத்துக்கள், பசு-பதி- பாசம் என்ற சைவ சித்தாந்த கருத்துக்கள் , மந்திரம், தந்திரம், யந்திரம் என்ற சுவையான அவியலைக் காணலாம் ( என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள்  இதே பிளாக்கில் உள்ளன ; புஸ்தகமாகவும் கிடைக்கும்). யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது இவருடைய பாலிசி . தேவாரம் திருவாசகம் சொல்லாத சிவலிங்கம் போன்ற விஷயங்கள் இருப்பதால் இவரை எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாராண்டில் வைக்கலாம்.

***

திரு வள்ளுவர் – திருக்குறள்

திரு வள்ளுவர் எழுதிய  திருக்குறள் பாரத நாடு உலகிற்கு  வழங்கிய நன்கொடைகளில் ஒன்றாகும் . இரண்டே வரிகளில் அரிய, பெரிய இந்து மதக் கருத்துக்களை ஜூஸ் பிழிந்து தருகிறார். இந்து மத நூல்களில் அடிக்கடி கூறப்படும் தர்ம அர்த்த காமம் என்பதையே தன் நூலுக்கும் பெயர் சூட்டினார் அறம், பொருள், இன்பம் என்று அவற்றை மொழிபெயர்த்து மூன்று பிரிவுகளில் 1330 குறட்பாக்களாக உலகத்துக்கு வழங்கினார் .

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு — என்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடியது எவ்வளவு பெரிய உண்மை என்பது திருக்குறளை படிப்போருக்கு விளங்கும்

இந்திரன், கிருஷ்ணன், வாமனாவதாரம், லெட்சுமி, யமன், பிரம்மா,  சிவபெருமான் விஷம் குடித்தது முதலிய இந்து தெய்வங்களை மட்டும் பயன்படுத்துகிறார். பஞ்ச தந்திரக்கதைகள் , மனு ஸ்ம்ருதி, பகவத் கீதை அர்த்த சாஸ்திரம் முதலிய நூல்களின் முக்கிய பாக்களைக் கையாண்டுள்ளார் முதல் பத்து கடவுள் வாழ்த்துப் பாடல்களிலேயே ஏழு குறள்களில் இறைவனின் உருவத்தைக் குறிப்பிடுவதாலும் கொல்லாமையை அழுத்தம் திருத்தமாகவும் வலியுறுத்துவதாலும் இந்துக்களைத் தவிர வேறு எவருக்கும் பயன்படாத நூல் இது . நாஸ்தீகர்களை பேய் என்று திட்டுவதும், கஞ்சப்பயல்களின் கையை முறுக்கி குத்து, கரும்பு போலப்  பிழி என்று சொல்வதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் இந்த நூலின் காமத்துப் பால் பகுதியைக் கண்டு கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர்கள் பயந்து போய்விட்டனர் அதை வெளிப்படுத்தினால் வள்ளுவன் பெயர்  ரிப்ப்பேர் ஆகி விடும்மானம் விமானத்தில் பறந்துவிடும்,  திருக்குறளின் கதி சகதி ஆகிவிடும் என்று எண்ணி அதை மொழிபெயர்க்கவில்லை ; உலகில் இந்து மதம் ஒன்று மட்டுமே காமத்தையும் தர்ம -அர்த்த- காம- மோட்சம் என்ற நான்கில் வை த்திருப்பது அவர்களுக்குப் புரியாது; சுமார் 600 குறள்களில் ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள் இருப்பதால் இவர் தமிழையும்  ஸம்ஸ்க்ருதத்தையும் இரண்டு  கண்களாகப் போற்றிய பேரறிஞர் என்பதும் தெரிகிறது; நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எல்லா புஸ்தகங்களிலும் இவர் உயர் வகுப்பு- கீழ்ஜாதி தம்பதியருக்கு அவ்வையாரோடு ஏழு சகோததர சகோதரிகளுடன் அவதரித்த கதை சுவையாக வருணிக்கப்பட்டுள்ளது இவருடைய காலம் மொழி இயல் ரீதியில் ஐந்தாம் நூற்றாண்டு என்று தெரியவருகிறது; ஆனால் தமிழ் நாடு அரசு கி.மு 31 என்பதை ஒப்புக்கொண்டுள்ளது கிறிஸ்துவுடன் இவரைத் தொடர்பு படுத்தி கிறிஸ்தவப் பிரச்சாரகர்கள் பேசத் துவங்கியவுடன் அவர்களுக்கு ஆப்புவைக்க இந்த புதிய ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்து விரோத திராவிடர்கள் , வள்ளுவர் முகத்தில் இருந்த விபூதியை அழித்துப் புதிய படம் வெளியிட்டுள்ளனர் ; குறள்களுக்குப் புதிய வியாக்கியானமும் செய்துவருகின்றனர் ; பழங்காலத்தில் பத்துப் பேர் எழுதிய உரையில் ஐந்து உரைகள் மட்டுமே இப்பொழுது கிடைக்கிறது; அவர்களில் காஞ்சிபுர விஷ்ணு கோவில் பட்டர் பரிமேல் அழகர், 800 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய உரையே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது .

***

திரயம்பகேஸ்வரர்

சிவபெருமானின் பெயர்களில் ஒன்று; முக்கண்ணன் என்பது இதன் பொருள். புறநானூறு முதலிய நூல்களில் முக்கண்ணன் பற்றிய குறிப்புகள் உள்ளன . இதே பெயரில் சிவபெருமான், மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் கோயில் கொண்டுள்ளார். அந்தத் தலம், ராமேஸ்வரம் முதல் இமயமலை வரை  இடம்பெற்றுள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று  .

***

துருக்கி – துரகம்

சம்ஸ்க்ருத மொழியில் துரகம் என்றால் குதிரை. இது நிறைந்த நாடு என்பதால் அந்த நாட்டுக்குத் துருக்கி என்ற பெயர் ஏற்பட்டது . 3000  ஆண்டுகளுக்கு முன்னர் இந்துக்கள் நல்ல ஜாதிக் குதிரைகளைக் கொண்டுவந்து அந்த நாட்டில் பயிற்சி அளித்தனர். இபோது துலுக்க நாடாகத் திகழும் அந்த இடம் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்து பூமியாகத் திகழ்ந்தது. துருக்கியிலுள்ள போகஸ்கொய் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கியூனிபார்ம் எழுத்துள்ள கல்வெட்டுகள் சம்ஸ்க்ருத மொழியில் உள்ள கட்டளைகளைக் குறிப்பிடுகிறது; அதை எழுதியவர் கிக்கூலி என்பவர் ஆவார் ; கல்வெட்டின் தேதி கி.மு.BCE 1350 . அவன், அருகிலுள்ள மிட்டன்னி  சாம்ராஜ்யத்திலிருந்து வந்தவன் ; இராக், சிரியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் உள்ளடக்கிய பகுதிகளை மிட்டன்னி அரசர்கள் ஆண்டார்கள். தசரதன், பிரதஸ்தனன்  முதலிய இந்து மன்னர்கள் ஆண்டதையும் கல்வெட்டு காட்டுகிறது. அத்தோடு வேதகாலத் தெய்வங்களை சொல்லி உடன்படிக்கை செய்த கல்வெட்டும் கிடைத்தது. இவையெல்லாம் மாக்ஸ்முல்லர் (1823-1900) செத்துப்போன பின்னர் கிடைத்தது. அவர் சொன்ன வேத காலம் தப்பு என்பதையும் நிரூபித்தது.

To be continued…………………

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 108; இந்து மத கலைச்சொல் அகராதி-108, துருக்கி, துரகம், துளசிதாஸ் திரு வள்ளுவர் ,திருக்குறள்,  தொல்காப்பியம் , தொல்காப்பியர்

முத்துத் தாண்டவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,134)

Written by London Swaminathan

Post No. 16,134

Date uploaded in London – 27 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சீர்காழியில் கி.பி. 1525-1625 க்கும் இடைப்பட்ட காலத்தில் இசை வேளாளர் குடியில் முத்துத்தாண்டவர் பிறந்தார். இவரது இயற்பெயர் தாண்டவர் என்பதாகும். தமிழ் இசையை வளர்த்தவர்களில் இவர் பங்கு முக்கியமானது

1

முத்துத் தாண்டவரின் முதல் பாடல் தோன்றியது எப்படி ?

2

அப்பர், சம்பந்தர் ஆகியோருக்கு மக்களின் பசிப்பிணியை நீக்க, இறைவன் சிவ பெருமான் படிக்காசு வழங்கினார் என்பதை நாம் அறிவோம். இவருக்கும் பொற்காசுகள் கிடைத்ததா ?

3

இவர் பாடல்களுக்கு முதல் அடி எங்கிருந்து கிடைத்தது ?

4

பிரபல பாடகர்கள் கச்சேரிகளில் பாடும் அருமருந்தொரு தனிமருந்து

அம்பலத்தே கண்டேன் —  என்ற பாடலின் சிறப்பு என்ன ?

 5

முத்துத் தாண்டவரின் பாடல்கள்  நடன நிகழ்ச்சிகளிலும் பயன்படுகின்றன : அவைகளில் மிகவும் பிரபலமானவை எவை?

6

நடராஜர் ஆடியதை அப்படியே தாள நயத்துடன் நம்முடைய மனக்கண் முன்னே கொண்டுவரும் ஆட்டுக் காலைத் தாரும்

பாடலின் வரிகள் என்ன ?

7

கொள்ளிடம் ஆறு வெள்ளப்பெருக்கு எடுத்தபோது இவர் பாடியவுடம் வெள்ளம் தணிந்தது என்பார்கள் அந்தப்பாடல் என்ன பாடல் ?

8

இவருடைய எத்தனை கீர்த்தனைகள் நமக்கு கிடைத்தன ?

9

இவருடைய எல்லா பாடல்களையும் எழுத்து வடிவில் எங்கே பெறலாம் ?

சைவம்.ஆர்க் 85 பாடல்களை பதிவு செய்துள்ளது

10

மேலும் சில பு கழ்பெற்ற பாட்டுக்கள் களின் முதல் வரிகள் என்ன ?

*******************************

விடைகள்

1.இவர் தீராத வெப்பு நோயைத் தீர்த்துவைக்கும் இறைவனை நாடி சிதம்பரத்திற்குச் சென்றார். அங்கு ஆடல் வல்லானை வழிபட்டுக் கொண்டிருந்த போது, அடியவர் கூட்டத்திலிருந்து “பூலோக கயிலாச கிரி சிதம்பரம்” என்ற சொல் ஒலித்தது. அதனையே முதற்சொல்லாகக் கொண்டு, “பூலோக கைலாச கிரி சிதம்பரம் அல்லால் புவனத்தில் வேறு உண்டோ?” எனத் தொடங்கும் கீர்த்தனையைப் பாடினார். இதுவே இவரின் முதல் பாடலாக விளங்கியது. இப்பாடலைப் பாடி முடித்ததும் இவரைப் பிடித்திருந்த வெப்பு நோயும் நீங்கியது.

***

2.முத்துத்தாண்டவர் முதல் கீர்த்தனையைப் பாடி முடித்ததும் திருக்களிற்றுப் படியில் ஐந்து பொற்காசுகளை இறைவன் வழங்கினார். அதேபோல் நாள்தோறும் இறைவன் இவருக்குப் படிக்காசு வழங்கினார் என்று செவி வளை செய்திகள் கூறுகின்றன .

***

3.பக்தர்களின் உரையாடல்களில் கேட்கும் நல்ல சொற்களையே பாடலுக்கு முதல் அடியாக வைத்துப் பாடும் ஒரு கொள்கையை இவர் பின்பற்றினார்.

***

4.இவரை ஒரு முறை பாம்பு தீண்டியது. இந்தப்பாடலைப் பாடியவுடன் விஷம் நீங்கி குணம் அடைந்தார் என்பது வரலாறு

இராகம் : காம்போதி       தாளம் : ரூபகம்

பல்லவி

அருமருந்தொரு தனிமருந்து

அம்பலத்தே கண்டேன்     (அருமருந்)

அநுபல்லவி

திரும ருந்துடன் பாடும் மருந்து

தில்லை யம்பலத் தாடும் மருந்து

இருவி னைகள் அறுக்கு மருந்து

ஏழை யடியார்க் கிரங்கும் மருந்து     (அருமருந்)

சரணம்

கொன்றை தும்பை அணிந்த மருந்து

கோதை மீதில் படர்ந்த மருந்து

மன்று ளேநின் றாடும் மருந்து

மாணிக்க வாசகர் கண்ட மருந்து     (அருமருந்)

இந்திர ரானவர் வானவர் போற்றும்

இருடி கள்தமக் கெட்டா மருந்து

சந்திரர் சூரியர் காணா மருந்து

தானே முளைத்துத் தழைத்த மருந்து     (அருமருந்)

திரித்தி தித்தியென் றாடும் மருந்து

தேவாதி மூவர்கள் காணா மருந்து

கருத்தைத் திருத்தி இருத்தும் மருந்து

காலனைக் காலால் உதைத்த மருந்து     (அருமருந்)

***

5.நாட்டிய உருப்படிகளில் வர்ணத்திற்குப் பிறகு ஆடப்படும் உருப்படியாகப் பதம் விளங்குகிறது. இது சிருங்காரச் சுவையை மையமிட்டு படைக்கப்பட்ட உருப்படியாகும். முத்துத்தாண்டவர் ஆடல்வல்லான் மீது காதல் கொண்ட நிலையில் தலைவி கூற்றாகவும், தோழிக்கூற்றாகவும் பல பதங்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் 25 பதங்கள் மட்டுமே தற்காலத்தில் கிடைத்துள்ளன. அவற்றில் சில,

1. அப்படி இப்படி செய்ததற்கு ஒப்பினன் – கல்யாணி – ஆதி

2. தெருவில் வாரானோ – கமாசு – ஆதி (திச்ரநடை)

***

6.இராகம் : சுவர்ணாங்கி       தாளம் : ரூபகம்

பல்லவி

ஆட்டுக் காலைத்தாரும் என்சாமிவா தாட்டுக் காலைத்தாரும்     (ஆட்டுக்)

அநுபல்லவி

ஆட்டுக் காலைத் தாரும் அம்பல வாணரே

காட்டுப் புலியும் பாம்பும் காத்துக்கொண் டிருக்கின்ற     (ஆட்டுக்)

கின்னரர் கிம்புருடர் ஆதியர் வீணையர்

      கெருட காந்தருவர் சித்தர் வித்தியாதரர்

தன்னிகர் இல்லாத தந்திரர் மந்திரர்

      சரணஞ் சரணமென் றிருகை கூப்பிநிற்கப்

பொன்னின் விமானத்தர் சிவிகை வாகனத்தர்

      பூதகணாதிபர் போற்றி யடிவிரும்ப

அன்ன வாகனத்தன் விண்ணில்ஏற அயன்

      ஆட்டுக் காலைத்தேடிக் கோட்டுப்பன்றி ஆனான்     (ஆட்டுக்)

முப்பத்து முக்கோடி தேவர் குழாங்களும்

      முனிவர் ஆனவரும் இருடிகள் அனைவோரும்

செப்ப மான சந்திராதித்த ருங்கூடிச்

      செயசெய என்று பாதந்தமைத் தேடுகின்றனர்

ஒப்பில்லாத காளி அம்பலத்தே நின்று

      உன்றாளைக் கண்டுதொந் தோமென் றாடுகிறாள்

மெய்ப்பதமாகும் அந்தக் காலைஎனக்குத் தந்தால்

      வேண்டும் அறுபத்தைந்தாம் விளையாட்டாகுஞ் சாமி     (ஆட்டுக்)

ஆக்கிய திசைவளர் திக்குப் பாலகரும்

      ஆதி வைரவரும் நாரணர் அனைவரும்

தாக்கிய தாவர சங்கம கோடியுஞ்

      சந்தித்துப் பாதத்தைக் காத்துக்கொண் டிருக்கவே

பாக்கியஞ் செய்தவன் முயலகன் ஒருகாலைப்

      பற்றி முதுகணையில் வைத்துச் சுமந்துகொண்டான்

தூக்கிய பொற்றாளை எனக்குத்தந்தால் தலைசுமக்கும்

      சுமக்கும்போதும் போதும் போதுஞ்சாமி இந்த     (ஆட்டுக்)

***

7.பல்லவி

காணாமல் வீணிலே காலம் கழித்தோமே

அனுபல்லவி:

சேடனார் போற்றும் தில்லை சிதம்பர ஸ்தலத்தை

சரணம்1:

சேரன் சோழன் பாண்டியன் ஹிரண்யவர்மன் கோபுரமும்                                

சூர வீரப்ப பூபன் செய்த திருமதில்களும்                                             

பாருலகும் (பாருளரும்??) போற்றுகின்ற  பஞ்சாக்ஷரப்  படிகளும்         

ஹாரங்கள்  சூழ்ந்த திருவாயிரங்கால்  மண்டபமும்

 சரணம் 2:

கங்கையும் நிறைந்த சிவகங்கையும் படித்துறையும்                  மங்கை சிவகாமி  அம்மை வாசல் மணி மண்டபமும்                திங்களணி திருமூல நாதர் அருட் சன்னிதியும்                              பொங்கு செல்வம் போலுயர்ந்த தங்கப் பேரம்பலமும்

 சரணம்3:

நிர்த்த சபை கனக சபை சிற்சபையின் தரிஸனமும்

முக்தி பெறலாம் எனவே முழங்கும் சின்ன த்வனியும்            

பக்தர்குட் சிறந்த கோவிந்தராஜர் சுற்றிலும் துலங்க                  

ரத்ன ஸ்வர்ணக் கொடி  மரங்களும்

 சரணம்4:

தில்லை மூவாயிரவர் முனிவர் பெரு வீதிகளும்                        அல்லும் பகலும் அளிக்கும் அன்னதான சிறப்பும்                          சொல்லறியா  மாடங்களும் சோலைகளும் வாவிகளும்           நல்ல திருக் கூட்டங்களும் நாலு  திருவீதிகளும்

காணாமல் வீணிலே காலம் கழித்தோமே.

***

8. முத்துத் தாண்டவர் நிறைய கீர்த்தனைகளை எழுதியபோதும் நமக்கு 85 கீர்த்தனைகளே கிடைத்தன.

***

9.இவருடைய எல்லா பாடல்களையும் எழுத்து வடிவில் எங்கே பெறலாம் ?

சைவம்.ஆர்க் 85 பாடல்களை பதிவு செய்துள்ளது. Please go to shaivam. org website

***

10.இயற்றிய பாடல்களில் புகழ்பெற்ற சில:

பூலோக கயிலாசகிரி[2] சிதம்பரம் அல்லாற், புவனத்தில் வேறுமுண்டோ – ராகம் – கல்யாணி, தாளம் – ஜம்பை தாளம்

சேவிக்க வேண்டுமையா[3] – ராகம் -ஆந்தோளிகா, தாளம் – ஆதி தாளம்

சிற்சபைதனிலே கண்டு கொண்டேனென்றும் – ராகம் – நீலாம்பரி, தாளம் – திரிபுட தாளம்

நடனங்கண்ட போதே என்றன் சடலஞ்செய் – ராகம் – ஆகிரி, தாளம் – ஆதி தாளம்

பேசாதே நெஞ்சமே பேசாதே – ராகம்-சூரிய காந்தம், தாளம்- மிஸ்ர சம்ப தாளம்

காணாமல் வீணிலே காலங் கழித்தோமே[4] – ராகம் – தன்யாசி, தாளம் – மிஸ்ர சாபு

தரிசனம் செய்வேனே முக்தி கொடுக்கும்[5] – ராகம்- வசந்தா, தாளம்-ஆதி

தெண்டனிட்டே னென்று சொல்லுவீர், நடேசர்க்கு நான் – ராகம் – யமுனாகல்யாணி, தாளம் – ஆதி

***

ராகம் -யமுனாகல்யாணி, தாளம் – ஆதி

பல்லவி

தெண்டனிட்டேனென்று சொல்வீர் – நடேசர்க்கு நான்

தெண்டனிட்டேனென்று சொல்வீர்

அனுபல்லவி

அண்டமெல்லாம் பரவுங் கொண்டல் காள் கும்பிட்டேன்

ஆண்டவரெனும் தில்லைத் தாண்டவராயர் முன்போய்த்(தெண்டனிட்டேனென்று)

சரணங்கள்

1. பொருந்தும் காதல்கொண்டு பொன்னிதழ்த் தேனுண்டு

இருந்தோம் சொல்லவோ விண்டு ஏகாந்தம் தனிற்கண்டு(தெண்டனிட்டேனென்று)

2. கண்டால் வரும் அப்பேச்சு கன்னிவயதில் ஏச்சு

பண்டு சொன்னதும்போச்சு பார்வையவன் மேலாச்சு(தெண்டனிட்டேனென்று)

3. மன்னும் நாணம்போக்கி மனதைத் தாள் மலர்க்காக்கிச்

சென்னிமேற்கரங்கள் தூக்கித் தில்லைப்பதியை நோக்கித் (தெண்டனிட்டேனென்று)

–subham—

tags- முத்துத் தாண்டவர் பாடல்கள் ,10 கேள்விகள் ,அருமருந்தொரு தனிமருந்து அம்பலத்தே கண்டேன்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 96; இந்து மத கலைச்சொல் அகராதி-96 (Post.16,075)

Written by London Swaminathan

Post No. 16,075

Date uploaded in London – 10 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

எஸ் என்ற ஆங்கில எழுத்தின் கீழ் உள்ள சொற்கள் தொடர்ச்சிEnglish version posted yesterday.

XXX

சரயு

ராமாயணம் மூலம் புகழ்பெற்ற புனித நதி; சரயு நதிக்கரையில் அயோத்தி நகரம் அமைந்துள்ளது ; உத்தரப்பிரதேச யோகிஜி அரசு லட் சக்கணக்கான தீபங்களை ஏற்றி கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் பதிவாகிவருவதால் மேலும் புகழ் கூடி வருகிறது

இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை நதியின் ஏழு உபநதிகளில் சரயு நதி ஒன்று. பெண்களின் பெயராகவும் இன்றுவரை நிலவிவருகிறது ;மகாபாரதத்திலும் பல பருவங்களில் குறிப்பிடப்படுகிறது; பஞ்ச பாண்டவர்கள் தரிசித்த நதி இது . பீஹார் மாநிலத்தில் ரேவல்கஞ்ச் என்னுமிடத்தில் கங்கை நதியுடன் சங்கமிக்கிறது.

***

சங்கரதேவ

சங்கரதேவ (1449-1568 CE), அஸ்ஸாம் மாநிலத்திலும் வடகிழக்கு இந்தியாவிலும் புகழ்பெற்ற ஞானி; சரண நாம தர்மவாஸ் என்னும் வைஷ்ணவ இயக்கத்தை நிறுவினார் ; கிருஷ்ணன் ஒருவனே கடவுள் என்று போதித்தார் ; சகல கலா வல்லுநர்; புதிய இசைப் பாணியை உருவாக்கினார் ; புதிய நடன முறையை உண்டாக்கினார்; ஓவியங்களை வரைந்து இந்துமதத்தைப் பரப்பினார்; இவருடைய ஓவியங்கள் லண்டனில் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் உள்ளன .சமயம் மட்டுமின்றி கலைகளின் கர்த்தாகவும் விளளங்கினார்

 25 ராகங்களைப் படைத்தார். ஏக சரண நாம தர்மா ,  என்பது கிருஷ்ண பக்தியைப் பரப்பி வருகிறது; நாடு முழுதும் பலமுறை யாத்திரை செய்தார் . அஹொம் அரசு பின்பற்றிவந்த மிருக பலியை நிறுத்தி உண்மையான இந்து மதத்தை பின்பற்றுவோராக்கினார் ; இந்தியாவில் இவரைப் போல பன்முக சமயப்பிரசாரகர் வேறு எவருமில்லை.

QUIZ சங்கரதேவ் பத்து QUIZ (Post No.14,334)

Written by London Swaminathan

Post No. 14,334

Date uploaded in London –  1 April 2025

xxxx 

சங்கரதேவ் 1449–1568

1.சங்கரதேவ் எங்கே, எப்போது பிறந்தார் ?

சங்கரதேவ் ஆலிபுகரி என்னும் அஸ்ஸாமிய கிராமத்தில் 1449-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர்- குசும்பர்  சிரோமணி  பூயன் ; தாயின் பெய- சத்தியசந்த்யா

****

2.அவருடைய மனைவி பெயர் என்ன ?

அவர்  ஆம் வயதில் சூர்யபரீயைத் திருமணம் செய்துகொண்டார் . அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள்.

****

3.அவர் போதித்த கொள்கை என்ன?

அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில்  பின்பற்றப்படும் அவருடைய கொள்கை ஏக சரண தர்மம் எனப்படும்; இதன் பொருள் – கிருஷ்ணன் ஒருவரையே சரணம் அடைய வேண்டும் என்பதாகும்.

****

4.அவர் உருவாக்கிய கலைகள் சம்பிரதாயங்கள் என்ன ?

சத்ரியா – நடனக்கலை

சங்கீதம் – போர் கீத்

நாடகம் – அங்கியா நாட், பவோனா

****

5.அவர் என்ன நூல்களை எழுதினார்

பாகவதத்தை அஸ்ஸாமிய மொழியில் எழுதினார்.

சிறு வயதிலேயே செய்யுட்களை எழுதி குரு தேவரை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தினார்;

அவர் எழுதிய நாடகங்கள், செய்யுட்கள் நூல்கள் –

ருக்மிணி ஹரணம்

ராம விஜயம்

கேலி கோபாலன்

காளீய தமனம்

அஜாமிள உபாக்கியானம்

கஜேந்திர பக்திப் ப்ரதீபம்

****

6.வர கீதம் என்பது என்ன?

அஸ்ஸாமிய மொழியில் அவர் பாடிய நாட்டுப் பாடல்கள் வர கீதம் எனப்படும். வர  கீதத்தின், மொழி, லயம், பாவம் சாதாரண மொழியிலிருந்து வேறுபட்டது; நீதிகள் நிறைந்தது; சங்கரதேவர் 249 சுமார் கீதங்கள் இயற்றினார்.

***

7. சங்கராதேவின் குரு யார் ? சங்கரதேவர் செய்த சாதனைகள் என்ன?

குரு– மஹேந்திர கண்டலி.

வெள்ளைப் பெருக்கெடுத்தோடும் பிரம்மபுத்ரா நதியைக் கடந்தது;

ஆசிரியர் சொன்னவுடன் கவி மழை பொழிந்தது ;

படகினை ஓங்கி கைகளால் குத்தி உடைத்தது;

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு தீர்த்த யாத்திரை செய்தது;

புதிய நாட்டிய, நாடக, இலக்கிய உத்திகளை உருவாக்கியது.

****

8.சங்கர தேவரின் சீடர் யார் ?

மாதவ தேவர் என்பவர் முக்கிய சீடர். ஒரு முறை சங்கர தேவரை கமலன் என்ற சிஷ்யன் வீட்டுக்கு அழைத்தான். அப்போது அவனது குடிசை தீப்பற்றி எரியவே சங்கர தேவர் கொண்டு சென்ற வர கீதச் சுவடிகளும் எரிந்து சாம்பலாயின உடனே மாதவ தேவரைப் பார்த்து நீ இயற்று என்றவுடன் அவர் பாடத் துவங்கினார் அந்த வகையில் மேலும் 189 வரகீதங்கள் உருவாயின.

****

9..ராமாயணத்தை அவர் பரப்பியது எப்படி?

ஸ்ரீ ராமனின் பாதங்களில் என் மனம் லயித்துவிட்டது என்ற சிறந்த பாடலை இயற்றினார். ராமாயணத்தையும் அவர் பாடல்களாகப்  பாடினார்.

****

10.அவர் எப்போது இறந்தார் ?

அவர் 120-ஆவது வயதில் பைலாதோவா என்னும் கிராமத்தில் புரட்டாசி மாதம் சுக்கில பட்ச துவிதீயை அன்று அமரர் ஆனார்.

***

சர்ப்ப

ரிக் வேதம் முதல் காணப்படும் இந்தச் சொல்லிலிருந்து சர்பண்ட் SERPENT என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது; நாகம் என்னும் சொல்லிலிருந்து ஸ்நேக் SNAKE (ஸ்னாக்க) என்ற ஆங்கிலச் சொல் உருவானது. ரிக்வேதத்திலும், சிந்துவெளி முத்திரையிலும் சர்ப்ப ராணி இருக்கிறாள். கேரளம் முழுதும் பாம்புகளை வழிபடும் காவுகள்/ கோவில்கள் உள்ளன . கர்நாடகத்தில் குக்கே சுப்ரமண்ய சுவாமி கோவிலில்,  கல்லினால் ஆன, ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளைக் காணலாம் ; தமிழ் நாட்டில் நாகர் சிலை இல்லாத கோவில் இல்லை என்றே சொல்லலாம்; குமரி மாவட்ட நாகர் கோவில், மஹாராஷ்டிரா நாகபுரி, காஷ்மீர் அனந்த  நாக் வரை பாம்பு வழிபாடு உள்ளது. குழந்தை பிறக்காவிடில் பூர்வ ஜென்மத்தில் பாம்புகளைக் கொன்றதால் நாக தோஷம் வந்ததாக கருதுவதால் எங்கும் நாகர் சிலைகள் காணப்படுகிறது ; உயிருள்ள பாம்புகளை வழிபடும் நாக பஞ்சமி பண்டிகை மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

***

சதக்ரது

சதக்ரது(शतक्रतु).— இந்தி ரனின் பெயர் ; நூறு அஸ்வமேத யா கங்களை செய்தவன் என்பது அர்த்தம்; யார் நூறு அஸ்வமேத யாகங்களை செய்த்தாலும் இந்திரன் பதவியை அடையலாம்; ரிக்வேதத்திலேயே சதக்ரது (शतक्रतु)—    என்ற சொல் பயிலப்படுகிறது

***

சதருத்ரிய

 (शतरुद्रीय):—ருத்திரன் என்னும் சிவபெருமானை நூற்றுக்கணக்கான பெயர்களில் போற்றும் நமகம்-சமகம் என்னும் துதி யஜுர்வேதத்தில் உள்ளது ; சத ருத்ரீய என்றால் 100 ருத்திரன் நாமங்கள் என்று பொருள்; சிவன் என்பது சாந்தமான மங்களமயமான உருவம்; ருத்ரன் என்பது அவரே அழிக்கும் தொழிலை எடுப்பதற்கான உருவம் ; இந்த துதியில் சிவனின் நேர்மறையான குணங்களும் எதிர்மறையான குணங்களும் மாறி மாறி வரும் ; கடவுளின் இருவேறு அம்சங்கள் இவை (முன்னர் ருத்ரன் என்ற தலைப்பில் மேல் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன)).

***

சதி

சதி என்பது  பார்வதியின் பெயர்; அவளது தந்தை தட்சன், அவளது கணவன் சிவனை அவமத்தித்ததால் யாகத் தீயில் விழுந்து உயிர்துறந்தாள்;  கணவன் சிதைத் தீயில் ஏறி அவளைப்போலவே உடலைத் தியாகம் செய்யும் பெண்களையும் சதி என்பர்; இந்த முறை புறநானூற்றில் உள்ளது; ஆனால் ரிக் வேதத்திலோ மனு ஸ்ம்ருதியிலோ இல்லை; ராமாயண மஹாபார தப் பெண்மணிகள், கண்வன்  இறந்த பின்னரும் வாழ்ந்ததைக் காண்கிறோம்; ஆகையால் இது கட்டாயமில்லை ; விருப்பட்டவர்கள் அப்படிச் செய்தனர் ஆனால்வங்காளத்தில் சொத்துக்களைப்பெறுவதற்காக பலரைக் கட்டாயப்படுத்தி சிதைத்தீயில் ஏற்றியதால் பிரம்ம சமாஜம் இந்த வழக்கத்தைத் தடை  செய்ய உதவியது .வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள் JOAN OF ARC ஜோன் ஆப் ஆர்க் போன்ற லட்சக்கணக்கான பெண்களை விட்ச் / சூன்யக்காரி என்று சொல்லி தீயில் உயிருடன் எரித்துக் கொன்றனர் ; அந்த அட்டூழியங்களை மறைப்பதற்கு, வெளிநாட்டில், சதி படங்களை வெளியிட்டுக் கிறிஸ்தவப் பிரசாரம் செய்தனர். அதற்கு நிதியும் வசூலித்தனர்.

***

சத்வ குணம்

சத்வம் என்பது முக்குணங்களில் ஒன்று ; பெரியோர்களின், முனிவர்களின் சாந்த குணம் இது ; இதற்கு அடுத்தபடியாக ராஜஸ குணமும் கீழ்மட்டத்தில் தாமச குணமும் வருகிறது .உடலின் , உள்ளத்தின் தூய்மை, மனதின் சமநிலை, மரக் கறி  உணவு, கோபம் இல்லாமை, கருணை   ஆகியவற்றைப் போற்றும் குணம்; இன்பமும் துன்பமும்  ஒன்று ;பொன்னும் ஓடும் ஒன்று என்னும் உயர்ந்த குணம் ; பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா மூன்று குணங்களின் தன்மைகளையும் விரிவாக விளக்கியுள்ளார் ; காண்க – பகவத் கீதை அத்தியாயங்கள் 14; 17. Chapter 14 (verses 5–18) and Chapter 17.

***

சத்யம் சிவம் சுந்தரம் s s s

சத்யம் என்பதைத் தமிழில் வாய்மை , உண்மை, மெய்மை என்று மொழிபெயர்த்துள்ளனர்; சம்ஸ்க்ருதத்தில் இதை மனோ வாக் காயம் என்ற மூண்டிலும் தூய்மை என்பர் ; உலகில் சத்தியத்தை கடவுளாக அவனகக ஒரே மதம் இந்து மதம்; மூன்று ஜாதிக்காரர்களும் வேத பாட சாலையில் நுழைந்தவுடன் ஆசிரியர் கற்பிக்கும் முதல் வரி சத்யம் வத = உண்மையே பேசு ; உபநிஷத ம் முழுதும் சத்யம் போர்ராப்படுகிறது இந்தியாவின் குறிக்கோள் வாசகமே உண்மைதான் ; சத்யமேவ ஜெயதே= வாய்மையே வெல்லும் என்பது இந்தியாவின் தேசீய சின்னத்திலும் தமிழ்நாட்டின் அரசு சின்னத்திலும் உளது . இது முண்டகோபநிஷத் வாசகம்.

சத்யம் சிவம் சுந்தரம் என்பது உபநிஷத உரைகளில்/[பாஷ்யங்களில் போற்றப்படுகிறது ; உண்மை, மங்கள ம் , அழகு என்பது இதன் பொருள் ; இதை ஸ்வேதாஸ்வதர உபநிஷத் சிவனே உண்மை; சிவனே மங்களம் ; சிவனே அழகு என்று விளக்குகிறது

சத்யா சாயிபாபாவின் வாழக்கை வரலாற்றையும் உபநிஷதங்களையும் கூறும்நூலி ன் தலைப்பு- சத்யம் சிவம் சுந்தரம் ; இதனால் இது கோடிக்கணக்காகனோருக்குத் தெரிய வந்தது ; அதற்கு முன்னர் ஆன்மீக நாட்டம் உடையோர் மட்டுமே அறிந்த சொல் இது ; அவர் பஜனைகளில் அவரே சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம்மா என்ற உபநிஷத வாக்கியத்தை பஜனை ஆக்கியதால் கோடிக்கு கணக்கானோரின்  வாய்கள் இதை முணுமுக்கத் துவங்கின. அதுவும் புகழ்பெற்ற உபநிஷத வாக்கியம்

தைத்திரீய உபநிஷத் (2.1.1):  “சத்யம் ஞானம்  அனந்தம் பிரம்மா”— Brahman is Truth, Knowledge, and Infinite.

பிருஹதாரண்யக உபநிஷத் (2.3.6):  “சத்தியஸ்ய சத்யம்”—பிரம்மன்  என்று இறைவனை சத்யம் என்று வழிபடுகிறது

முண்டக உபநிஷத் (3.1.6):  “சத்யம் ஏவ ஜயதே நான்ருதம் “—வாய்மையே வெல்லும் ; பொய்மை வெல்லாது என்கிறது

ரிக் வேதம் முதல், பர்த்ருஹரியின் நீதி சதகம் முதல், வள்ளுவனின் திருக்குறள் வரை பல நூறு பாடல்களில் சத்யம் போற்றப்படுகிறது; இது இந்துக்களின் தனிச் சொத்து; தனிச் சிறப்பு ; பரிபாடல் என்னும் சங்க நூலில் மனைவியிடம் கணவன் எப்படியெல்லாம் சத்தியம் செய் கிறான் என்ற பட்டியலே உள்ளது.

***

ஷ்யமந்தக

சியமந்தக வைரத்தின் நீண்ட கதை பாகவதத்தில் உள்ளது ; டைமண்ட் DIAMON என்ற சொல்லே ஷ்யமந்தக என்பதிலிருந்து வந்தது என்று என்னுடைய ஆராய்ச்சி காட்டுகிறது ; கெட்ட ஜாதி வைரம் வந்தால் அந்தக் குடும்பத்தில் கொலை, கொள்ளை , திருட்டு, அநீதி நடக்கும் என்பதை பாகவத புராணம் அழகாக விளக்குகிறது; கிருஷ்ணன் கூட இதன் தாக்கத்திலிருந்து தப்ப முடியாததால் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்ற பழமொழிக்கேற்ப இதைத் துறந்துவிட்டார்; ஐரோப்பா முழுதும் கொலைகளைச் செய்த இந்த வைரம் இப்போது ஹோப் டயமண்ட் HOPE DIAMOND என்ற பெயரில் அமெரிக்காவில் மியூஸியத்தில் உள்ளது.

வஜ்ரம் என்ற சொல்லும் சம்ஸ்க்ருத மொழியில் வைரத்தைக்குறிக்கும் ; தமிழ்ச் சொல் வைரம், வஜ்ரத்தின் திரிபே.

ஸ்யமந்த = டயமண்ட ஆன மொழியியலை ஆங்கிலத்தில் விளக்கியுள்ளேன்

S=T interchangeability is seen in hundreds of English words that we use everyday

Some examples :

condition, education, ambition- in hundreds of words with TION, the pronunciation is SION.

So Syamantaka + Tiamanthaka= DIAMOND is linguistically possible.

சியமந்தக வைரத்தின் கதை

கொலவெறி வைரம்!!!!!

(தமிழ்நாட்டில் பல குடும்பங்களில், குறிப்பாக பிராமண மற்றும் செட்டியார் குடும்பங்களில் வைரம் வாங்குவதற்கு முன் அதை வீட்ல் சில நாள் வைத்து நல்ல செய்திகள் வருமா என்று பார்த்தே வாங்குவார்கள். ஏனெனில் சில வைரங்களில் குறைகள் இருக்கும். இதோ, கிருஷ்ண பரமாத்மாவை படாத பாடு படுத்திய வைரம் பற்றிப் படியுங்கள்)

வைரங்கள் பெண்களின் சிறந்த நண்பர்கள் என்று ஆங்கிலத்தில் சொல்லுவதுண்டு. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் கட்டாயம் கடவுளுக்கும் வைரத்துக்கும் ரொம்ப தூரம்!! சியமந்தக மணி எனப்படும் வைரம் கண்ண பிரான் காலத்தில் இருந்தது. அது யாதவ குலத்தில் மூன்று கொலைகளுக்கும் பல சண்டைகளுக்கும் காரணமாகிவிட்டது பின்னர் இது பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கும் பல சாவுகளுக்கும் சண்டைகளுக்கும் வித்திட்டது. இதை இப்போது வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் மியூசியத்தில் பார்க்கலாம். ஆனால் அவர்களுக்கே இது கண்ணனின் வைரம் என்று தெரியாது

சத்ரஜித் என்பவர் ஒரு யாதவர் தலைவர். அவர் சூரிய தேவனை வழிபடுவார். ஒரு நாள் சூரிய தேவனே அவருக்கு ஒரு பெரிய வைரத்தைக் கொடுத்தார். (அதாவது அவர் கோவிலுக்குச் சென்றபோது அது பூமியிலிருந்து கிடைத்தது.) அது பள பள என்று ஜொலித்தவுடன் கிருஷ்ணருக்கும் கூட பொறுக்கவிலை. அதை உக்ரசேனன் என்பவனிடம் கொடு என்றார். ஆனால் சத்ரஜித் அதற்கு மறுத்துவிட்டார்.

சத்ரஜித் அவருடைய தம்பி ப்ரசேனன் என்பவரிடம் கொடுத்துவைத்தார். அவன் அதை எடுத்துக் கொண்டு வேட்டை ஆடப்போனான். அவனை ஒரு சிங்கம் அடித்துக் கொன்றது. இந்த வைரத்தை கரடி இனத் தலைவர் ஜாம்பவான் எடுத்துச் சென்றார். முன் காலத்தில் மக்கள் தங்களை அடையாளம் கூற ஒரு பறவை அல்லது மிருகம் பெயரைச் சொல்லுவார்கள். ஜம்பவான் கரடி இனம் எனப்படும்  மலை ஜாதி இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பிள்ளைகள் அந்த வைரத்தை வைத்து விளையாடத் துவங்கினர்.

எல்லோரும் கண்ண பிரானைச் சந்தேகப் பட்டனர். உடனே அவர்ப்ரசேனனைத் தேடிச் சென்றார். காட்டில் அவனது சடலத்தையும் மற்ற அடிச் சுவடுகளையும் கண்டு அதைப் பின்பற்றினான். ஒரு மாதம் சண்டை போட்ட பின்னர் ஜாம்பவானுடன் ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. அவருடைய பெண் ஜாம்பவதியைக் கல்யாணம் செய்து கொண்டால் சியமந்தக மணியைத் திருப்பித் தருவதாகச் சொன்னார். கண்ணனுக்கு அடித்தது யோகம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரு பெண்+ ஒரு வைரம்!!

துவாரகைக்குத் திரும்பிவந்தார். வைரத்தை சத்ரஜித்திடமே திருப்பித் தந்தார். அவருக்கு ஏக சந்தோஷம். அவருடைய பெண் சத்யபாமாவையும் கண்ணனுக்கு மணம் முடித்தார். சியமந்தக வைரத்தால் இரண்டு பெண்கள் லாபம் !! இந்த நேரத்தில் ஹஸ்தினாபுரத்திலிருந்து எஸ்.ஓ.எஸ். (அவசர உதவி தேவை என்று) செய்தி வந்தது. பாண்டவர்கள் அனைவரும் அரக்கு மாளிகை தீ விபத்தில் இறந்துவிட்டதாக வந்தது செய்தி. அங்கே சென்றால் எல்லோரும் சுபம்.

இதற்குள் சத்ரஜித் வீட்டில் சததன்வா என்பவன் புகுந்து சத்ரஜித்தைக் கொன்றான். வைரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். சத்யபாமாவுக்கு ஒரே துக்கம். துவாரகைக்குத் திரும்பி வந்த கண்ணனிடம் கதறி அழுதாள். கண்ணனும் பலராமனும் சததன்வாவைத் தேடினர். அவன் பீஹாருக்கு ஓடிவிட்டான். குஜராத்திலிருந்து ஆயிரம் மைல் துரத்திச் சென்று அவனைக் கண்ணன் கொன்றான். பின்னர்தான் தெரிந்தது. அதை அவன் அக்ரூரன் என்பவனிடம் கொடுத்து வைத்தான் என்பது. கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பி வருவதற்குள் அவன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிக்கு ஓடிவிட்டான். ஆட்களை அனுப்பி அவனை கண்ணன் அழைத்து வந்தார். மீண்டும் ஒரு சமரச ஒப்பந்தம். அக்ரூரனே அதை வைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் துவாரகையை விட்டு வெளியே போகக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். இதற்குப் பின் அந்த வைரத்தின் கதை தெரியவில்லை.

ஹோப் வைரம்

சியமந்தக மணியை ஒரு கோவில் அம்மனின்  நெற்றியில் பதித்து வைத்தனர். அதைத் திருடிய அர்ச்சகருக்கு மரண தண்டனை கிடைத்தது. அதைத் திருட்டுத்தனமாக வாங்கிய பிரெஞ்சுக்காரர் ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர் வெறி நாய்கள் கடித்து இறந்தார். இதற்கு ஹோப் வைரம் என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டது!

இந்தியாவிலிருந்து பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா சென்ற ஹோப் வைரம் இதே போல படுகொலைகள், வழக்கு வாய்தாக்கள், சண்டை சச்சரவுகள், கடன் திவாலாக்கள் எல்லாவற்றையும் உண்டாக்கியது. மேலும் ஹோப் வைரம் புற ஊதா கதிர்களில் தக தக என்று சிவப்பாக ஜொலிக்கிறது. இதைத்தான் பாகவதமும் சூரியன் போல ஜொலித்த வைரம் என்று சியமந்தக மணி பற்றியும் கூறுகிறது. பலரும் அதை மாணிக்கம் என்று நம்பினர். ஆனால் அது வைர வகைகளில் ஒரு அபூர்வ வைரம். இப்போது அது அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் ஸ்மித்சோனியம் மியூசியத்தில் உள்ளது.

இது மனிதர் கையில் இருந்தால் பல துரதிருஷ்டங்கள் ஏற்படுவதால் கடைசியாக இதை வைத்திருந்த வாட்சன் என்பவரிடமிருந்து இதை அந்த மியூசியத்துக்கு நன்கொடையாக வாங்கிவிட்டனர். அவரும் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவருக்கு முன் ஹோப் என்பவர் வைத்திருந்ததால் இதற்கு ஹோப் வைரம் என்று பெயர். உண்மையில் இது ஹோப்லெஸ் (அவ நம்பிக்கை) வைரம்!!!

முதலில் இது லாம்பெல் இளவரசி கைக்குப் போனது. அவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. அதன் பின்னர் ஜாக்ஸ் செலோட் என்பவர் கைக்குப் போனது. அவர் புத்தி சுவாதினம் இழந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பின்னர் ரஷிய இளவரசர் கனிடொவ்ஸ்கியை அடந்தது. அவர் தனது காதலிக்குக் கொடுத்துவிட்டு பின்னர் அவளை கொலையும் செய்தார். பிறகுதான் ஹென்ரி தாமஸ் ஹோப் வாங்கினார்.

பிரெஞ்சுப் புரட்சியில் லூயி மன்னரையும் அவருடைய மனைவி மேரி அன்டாய்னெட்டையும் கில்லட்டின் எந்திரத்தில் வைத்து பகிரங்கமாக கொடூரமாகக் கொன்றதைப் படித்திருப்பீர்கள். அப்போது இந்த ஹோப் வைரம் (கண்ண பிரானின் சியமந்தகம்) அவர்கள் கையில் இருந்த்தது. உலக வரலாற்றில் ஒரு மன்னரும் ராணியும் இவ்வளவு பரிதாபமாக இறந்தது கிடையாது. அதற்குப் பின் வேறு ஒருவர் கைக்குப் போய் அவர்கள் குடும்பத்தில் பெரிய சண்டை ஏற்பட்டு பல ஆண்டுகள் வழக்கு நடந்தது. இதை வாங்கிய ஒருவர் பணம் எல்லாம் இழந்து திவால் ஆனார்.

To be continued……………………

Tags- சரயு, சங்கரதேவ, சதி, சதரூன்றிய, சத்யம், சியமந்தக, டைமண்ட், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 96; இந்து மத கலைச்சொல் அகராதி-96 ,சியமந்தகம், ஹோப் வைரம்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 93; இந்து மத கலைச்சொல் அகராதி-93 (Post.16,058)

Written by London Swaminathan

Post No. 16,058

Date uploaded in London – 6 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version was posted on 5-8-26

சந்தியா வந்தனம்

பிராமணர்கள் தினமும் மூன்று காலம் சந்திக்கும் நேரங்களில் — அதாவது இரவும் காலையும், காலையும் பகலும், பகலும் மாலையும் சந்திக்கும் மூன்று நேரங்களில் செய்யும் சூரிய வழிபாடு இது. காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பது இதன் முக்கிய உபாசனை. முன் காலத்தில் ஏனைய  ஜாதியினரும், பெண்களும் சந்திரா வந்தனம் செய்ததை வாலமீகி ராமாயணம் முதலிய நூல்கள் செப்புகின்றன. ஒருவேளை அதிலுள்ள மந்திரங்கள் வேறு பட்டிருக்கலாம்.இந்த வழிபாட்டுக்கு தண்ணீர் வேண்டும். ஆரியர்கள் குளிர் பிரதேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொல்லும் அரைவேக்காடுகளுக்கு இந்து மதச்சடங்குகள் வேட்டு வைக்கின்றன .

***

சாந்திபனி

கிருஷ்ணர் காலத்தில் வாழ்ந்த குரு/ ஆசிரியரின் பெயர்.  மகரிஷி சாந்திபனியிடம் கிருஷ்ணர், பலராமன், குசேலர் என்னும் சுதாமா முதலியோர் சகல சாஸ்திரங்களையும் கற்றனர் . உஜ்ஜயினி நகரில் இப்படி ஒரு ஆஸ்ரமம் இருந்தது .

***

சங்கம்  /குழு , கூட்டம்

இந்த ஸம்ஸ்க்ருதச் சொல் தமிழ் வரலாற்றில் முக்கிய இடம்பெறுகிறது ; தமிழ் மொழியை வளர்க்க பாண்டிய மன்னர்கள் மூன்று இதனங்களில் முதல், இதை, கட்டைச் சங்கங்களை நிறுவியதாக பிற்கால உரைநடை  நூல்கள்   கூறுகின்றன . அதில் கூறப்படும் பத்தாயிரம் ஆண்டுக்காலம் முதலியன நமப்புக்கொட்டியதாக இல்லை . தொல்காப்பியரின் விதிப்படி ச என்னும் எழுத்தில் சொற்கள் துவங்க முடியாது . 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகப்புகளைப்பெற்ற இலக்கண வித்தகன் பாணினி எழுதிய அஷ்டாத்யாயி நூலில் சங்கம் என்னும் சொல் வருகிறது அவர் இதற்கான பல பொருள்களை இலக்கண விதிகளுக்கு உதாரணமாகக் காட்டியுள்ளார் ; அதில் ஒரு பொருள் குழு, பலர் இருக்கும் அமைப்பு என்பதாகும் ; ஆயத்தங்களை விருப் பிழைக்கும் ஆயுதஜீவி சங்கத்தையும் குறிப்பிட்டுள்ளார் . ப்புத்தர் இறந்த பின்னர் , பிட்சுக்கள் சங்கங்களை ஏற்படுத்தினார் கள். அவர்களைப்போலவே சமணர்களும் சங்கத்தை ஏற்படுத்தினார்கள் ; அவை எல்லாம் சமய அமைப்புகள் ; மொழியுடன் தொடர்புடையவை அல்ல 

தமிழ்ச் சங்கப்புலவர்களிடையே நடந்த கோஷ்டி ஓதல்களைத் திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களில் காணலாம் .

சத்சங்கம் என்ற சொல்லை ஆதிசங்கரரின் பஜ கோவிந்தம் முதலிய திதிகளில் காணலாம்.

***

சனி- சனைச்சரன் — சனிக் கிரகம்

சனீஸ்வரன்

பெயர்கள் – மந்தன்,சாயாபுத்திரன்,சூர்யபுத்திரன்,காரி,அனிலன்,முதுமகன்,

முடவன், ஊனன், பாவணன்,சஞ்சலன்,செனரி,நீலன்,கரியவன்,

மனைவிகள் –நீளா தேவி; இவளுக்கு பிறந்த குழந்தையே “குளிகன் “.

எந்த நல்ல காரியங்களும், குளிகன்”நேரத்தில் செய்ய வேண்டும் .அந்த காரியங்களைத் திரும்பத் திரும்ப செய்ய நேரிடும்

ஜேஷ்டா தேவி- இவள் மகன் “தரித்திரன்” .

மந்தா தேவி-

பூமியிலிருந்து சனி இருக்கும் அதிக பட்ச தூரம்- 88,லட்சத்து 66 ஆயிரம்மைல்கள்

குறைந்த பட்ச தூரம் – 74 லட்சத்து 66ஆயிரம்மைல்கள்

சூரியனை ஒருமுறை சுற்றி வர – 30 வருடங்கள்!!!!

நிறம் – கறுப்பு.ஆகையினால்தான் கறுப்பாக இருக்கும் எந்தப்

பொருளையும் அவருக்குப் பிடிக்கிறது.

வாகனம் – காகம் – கறுப்பு; தானியம் – எள் – கறுப்பு; உலோகம் – கறுப்பாயுள்ள இரும்பு; வஸ்திரம் – கரு நீலப் பட்டு அல்லது கறுப்புத் துணி; புஷ்பம் – கருங் குவளை. இஷ்ட காலம் – சாயும்காலம், பிரதோஷ வேளை

குணம் – தாமசம்; உத்யோகம் – அடிமை;  அதிதேவதை – யமன்;  பிரத்யதி தேவதை- பிரஜாபதி; ஜாதி – சண்டாளர்/ கலப்பு இனம்;

திசை – மேற்கு;  பூதம் – காற்று; தன்மை – ஆண் அலி;  மொழி – நீச பாஷை;  உடல் அதிபதி -நரம்புக்கு;

அவஸ்தை – விருத்தர் அல்லது வயதானவர்; சுவை – துவர்ப்பு; சமித்து – வன்னி; ரத்தினம் – நீலம்; சுபாபவம் – குரூரம்;

குணம் – பாவி; நாடி – வாத நாடி; ஆசனம் – வில்; தேசம் – சௌராஷ்டிரம்; கண்டம்- ஆப்ரிக்கா; கோத்திரம் – காஸ்யபம்;

ருது- வஸந்த ருது; காரகன்- ஆயுள் காரகன்;  உச்சம் – துலா ராசியில்; நீசம் – மேஷ ராசியில்;  சொந்த வீடுகள் – மகரம், கும்பம்;

பார்வை – 3, 7, 10;  நண்பர்கள் – புதன், சுக்கிரன்; எதிரிகள் – சூரியன், சந்திரன், செவ்வாய்; சமமானவர் – குரு; ஆதிக்கம் உள்ள நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்ரட்டாதி; தைலம் – நல்லெண்ணெய்; ப்ரீதி செய்ய தானம் – காராம் பசு, நல்லெண்ணெய், இரும்பு;  ப்ரியமான பலகாரம்- வெல்லம் கலந்த எள் உருண்டை, எள்ளும்,உளுந்தும் கலந்த சாதம்.

கோவில்கள் – திரு நள்ளாறு, கொள்ளிக்காடு,திருநெல்வேலி அருகில் உள்ள ஸ்தலங்களான,குன்னத்தூர் என்ற திரு வேங்கடநாதபுரம் , திருக்குளந்தை என்ற பெருங்குளம், சென்னையில் உள்ள பொழிச்சலூர், மதுரை அருகில் உள்ள குச்சனூர், சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சனீஸ்வரன் கோவில்.

கன்னி மாதம் என்ற புரட்டாசி மாதம் விஷ்ணுவிற்கு விசேஷமான மாதம்.அதே மாதத்தில் முதல் சனிக்கிழமையன்று ரோகிணி

நடசத்திரத்தில் பிறந்தவரே சனீஸ்வரன்!!! ஆகையால், புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்தவர்களையும், ரோகிணி நட்சத்திரத்தில்

பிறந்தவர்களையும் அவர் ஒன்றும் செய்ய மாட்டார்!!!

ஏழரை நாட்டு சனி

ஏழரை நாட்டு சனி, முதல் இரண்டரை வருடம், மங்கு சனி, இரண்டாவது இரண்டரை வருடம்;

பொங்கு சனி, மூன்றாவது இரண்டரை வருடம் இறுதிச்சனி- நடுங்க வைத்துவிடும்.

சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்ததினால், தண்டிப்பதில்

கடுமையான நீதிபதி!!! தண்டிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான்,,அவர் சிவனாக இருந்தாலும்

சரி, சொந்த சகோதரன் யமனாக இருந்தாலும்சரி……விடமாட்டார்!!!

அவர் அள்ளிக் கொடுப்பதில் வள்ளல், பிடிக்காதவர்க்கு கொள்ளி வைக்கும் சூரர்!!!

அஸ்வ ரகசியத்தை தெரிந்தவன், சிறந்த ஆட்சியாளன்,அழகான ராஜ குமாரன், சமையல் கலை வல்லுனன், நளன்!!!

காலை சரியாக கழுவ வில்லை என்ற ஒரே காரணத்திற்காக, நாட்டை விட்டு ஓட்டி, மனைவியைப் பிரிந்து, தனது ஆடையை இழந்து ,

மனைவியின் புடவைத் தலைப்பில் அலைய விட்டு, கடைசியில் தனது க்ஷேத்திரமான திருநள்ளாறுக்கு வந்து தன்னை வழிபட்ட பின்னரே

அவனுக்கு விடுதலை அளித்தார் சனீஸ்வர பகவான்!!!

கறுப்பு ஆடை

சனீஸ்வர பகவானுக்குப் பிடித்த கறுப்பு ஆடை அணிந்து, அல்லது கரு நீல ஆடை

அணிந்து 45 நாட்கள் விரதம் இருந்து, தரையில் படுத்து, உயரமான மலையிலேற்றி ஐயப்ப பக்தர்களுக்கு திருப்திகரமாக தரிசனம்

செய்வித்து திருப்பி அனுப்புகிறார்.

சனீஸ்வர பகவான் !!!

சிறை வாசம், தீராத நோய், கடும் கடன், அவமானம், ஆயுளுக்கு

அதிபதி இத்தனை அதிகாரமும் கொண்டவர் சனி!!!

நமது உடல் முழுவதும் பரவி இருக்கும் நரம்புக்கு அதிபதி சனி!!.,

சனியில் பலமில்லாததினால் வரும் வியாதியே காக்காய் வலிப்பு!!!

கர்ம வியாதி என்றும், தீராத நோய் என்று ஜோதிடர்களினால் வரணிக்கப் படுகிறது இது ……

சனியின் உலோகமான இரும்பைக் கொடுத்தவுடன் நிற்கிறது……

இவ்வளவு பெருமையும், கடூரமான, கண்டிப்பான, தலைவிதிப்படி

தண்டிப்பதில் தனக்கு நிகரற்ற அனைவரையும் நடுநடுங்க

வைக்கும் சனீஸ்வரரை பணியவைக்கும் தெய்வம் ஆஞ்சனேயர்!!!

சனிக்கிழமை சனிஸ்வரனை எள் விளக்கேற்றி வணங்கி வழிபட்டாலும் சரி ஆஞ்சனேயரை

வடைமாலை அணிவித்து வழிபட்டாலும் சரி , கருணை வைத்து அருள்புரிவார்!!!

அனைவரும் சனீஸ்வரனை வணங்கி அவனருள் பெறுமாறு வேண்டி

விடை பெறுகிறேன் சீனிவாசன்!!! நன்றி , வணக்கம்!!! (From Gnanamayam Broadcast from London; Speaker Santanam Srinivasan)

XXXX

ஶ்ரீ சனீஸ்வர காயத்ரி

ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயா புத்ராய தீமஹி

தன்னோ சனி: ப்ரசோயதயாத்

XXXX

ச்லோகம்

நீலாஞ்சன சமாபாசம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா

மார்த்தாண்ட சம்பூதம் தம் நமாமி சனைச்சரம்.

****

சஞ்சயன் 

மஹாபாரதத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ; பெயரின் பொருள்- வெற்றி  ; திருதராஷ்டிரனின் ஆலோ சகர்; தேரோட்டி;  வியாசரின் சீடர்; அவர் கொடுத்த வரத்தால் இருந்த இடத்திலிருந்தே மஹாபாரதப் போர் முழுதையும் நேரடி ஒளிபரப்பு செய்தவர் ; இந்த பூர்வ சக்தி துரியோதனன் இறந்த நாளில் கதறிக்கொண்டு யுத்தகாலத்துக்குச் சென்றவுடன் மறைந்துவிட்டது ; பகவத் கீதையில் சஞ்சயர் சொன்னார் என்று அடி கடி வரும்; இவர் மூலமே நமக்கு பகவத் கீதை கிடைத்தது ; ஒரு காலத்தில் பாணடவர்களிடத்தில் சமாதானத் தூதும் சென்றார் ; நடுநிலைவாதி ; உள்ளதை உள்ளபடியே உரைத்தவர் .

***

சங்கரர் – ஆதிசங்கரர்

அத்வைத தத்துவத்தைப் பரப்பிய மிகப்பெரிய ஞானி. காலடியில் அவதரித்து 32 ஆண்டுகளே வாழ்ந்த இவர் இயற்றிய நூல்கள் கணக்கற்றவை;.ஜீவாத்மாவானது ப்ரஹ்மத்திலிருந்து பிரிந்த ஆத்மனே தவிர வேறல்ல; அது பரப்ரஹ்மத்துடன் சேர்தல் வேண்டும், அதுவே மோட்சம் என்று போதித்தார் . இந்தியா முழுதும் வலம் வந்து பல தத்துவ ஞானிகளை வாதத்தில் வென்று பெரும் பக்தர் கூட்டத்தை உருவாக்கினார் நாட்டின் நான்கு மூலைகளில் — ஜோஷிமத், பூரி, துவாரகா, சிருங்கேரி – மடங்களை நிறுவி காஞ்சீபுரத்தில் முக்தி அடைந்தார் ; சிலர் இவர் இமயமலையில் முக்தி அடைந்ததாகவும் சொல்வர் ; சென்ற இடமெல்லாம் சக்தி வாய்ந்த லிங்கங்களையும் யந்திரங்களையும் அமைத்து கோவில்களுக்கு சக்தி ஊட்டினார் . இவர் பெயரில் உள்ள சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் இன்றும் பல லட்சக் கணக்கானோரால் பாடப்படுகின்றன ; விவேக சூடாமணி, செளந்தர்ய லஹரி, பஜகோவிந்தம்,  கனகதாரா ஸ்தோத்திரம் முதலிய ஒவ்வொன்றின் பின்னாலும் கதைகளும் அற்புதங்களும் உள்ளன ;  இவர் பகவத் கீதைவிஷ்னு சஹஸ்ரநாமம் , முக்கிய உபநிஷதங்களுக்கு எழுதிய உரைகளே இவரது புலமைக்குச் சான்று பகரும் ; சிறுவயதிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றார் ; இவரது காலம் எடடாம் நூற்றாண்டு என்றும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர் என்றும் இரண்டு கருத்துக்கள் உள்ளன ; இவரைப் போலவே பிற்காலத்தில் வாழ்ந்த அபிநவ சங்கரரின் வாழ்வும் ஆதி சங்கரர் வாழ்வும் அதிசயங்கள்  நிறைந்தவை; ஆகையால் காலத்தைத்  தெளிவாகச் சொல்லமுடியவில்லை . இவரது சீடர்கள் பரம்பரை, இன்றும் சங்கராசார்யார் என்ற பெயரில் இந்துமதத்தைப்  பரப்பிவருகின்றனர்.

***

சனத் குமாரர்

இந்து புராணங்களின் படி, படைப்புக் கடவுளான பிரம்மாவின் மனத்திலிருந்து தோன்றிய முதல் நான்கு ஞானிகளில் (மானச புத்திரர்களில்) சனத்குமாரரும் ஒருவர். ஏனைய மூவர் சனகர், சனாதனர், சனந்தனர் ஆவர். எப்போதுமே ஐந்த வயதுடைய குழந்தைப் பருவத் தோற்றத்துடன் இருக்கக்கூடிய இவர்கள், பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து மெய்ஞானம் பெற்ற ரிஷிகள் ஆவர்.

காஞ்சி  மஹாசுவாமிகள் (1894-1994) உரையில் சொல்வதாவது: ONLY SUMMARY IS GIVEN BELOW

பிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர். இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வபப்னம் வந்தது. ஸ்வப்பனத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.

விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ஸ்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.

“குழந்தை! நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்து ஆழ்ந்த பிடிமானத்தால், “அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?’ என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது” என்றார் பிரம்மா.

ஸனத்குமாரரிடம் பிரம்மா, “உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய். இந்த ஜன்மாவில் நீ, ‘தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்” என்றார்.

………………………..

ஸனத்குமாரர் அடுத்த ஜெனமாவில் பரமேசுவர தேஜஸாக ஜனித்து விடுவதென்றும், பிறகு அதை அம்பாள் சரவணம் என்ற தன் சரீரத்தில் தாங்கி ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்.

இதன்படியே பிற்பாடு ஈசுவரன் தன் நெற்றிக் கண்களிலிருந்து பொறிகளை வெளியிட்டார். ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர். அந்தத் தேஜசின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை.

அப்போது பிரம்மா அவளிடம், “இதைக் கொண்டுபோய் சரவணத்தில் சேர்த்துவிடு” என்றார்.

“……………………………..

ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. அதில் அவரே ஞான பண்டிதர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனானப்பட்ட நாரத மகரிஷி ஸனத்குமாரரிடம்தான் ஞானோபதேசத்துக்காக வருகிறார். ………..

‘இப்படியாக பகவான் ஸனத்குமாரர், இருள் கடந்த நிலையைக் காட்டினார். ‘அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்; அவருக்குத்தான் ஸ்கந்தன் என்ற பேர்’ என்று உபநிஷத்து இரண்டு தடவை முத்தாய்ப்பு வைக்கிறது.இருள் கடந்த ஒளி, ஞானாக்னி முருகன்தான். அதைத்தான் சாந்தோக்யம் சொல்கிறது.

TO BE CONTINUED…………….

TAGS- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 93; இந்து மத கலைச்சொல் அகராதி-93 , சனத் குமாரர் , ஏழரை நாட்டு சனி, சந்தியா வந்தனம்

Ashtavakra Gita Quotes in August 2026 Calendar (Post No.16,035)

Written by London Swaminathan

Post No. 16,035

Date uploaded in London – 30 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Festival days Adipperukku 3, Monday ;Adi amavasai 12,Wednesday ;Adip puram 14, Friday ; Independence Day, 15,Saturday ;Naga Panchami:  17 (Monday); Onam:  26, (Wednesday) – And Rik Upakarma; Yajur Upakarma 27 Thursday ; Raksha Bandhan:  28, (Friday) – Celebration of the bond between brothers and sisters; Gayatri japa ; Varalakshmi Vrat: 28, (Friday) – Fasting and prayer dedicated to Goddess Lakshmi.

Amavasya / new moon day 12; Purnima/ full moon day 28.

Ekadasi Fasting Days- 9; 23Auspicious days – 30, 31.

Ashtavakra Gita (or ‘Ashtavakra Samhita’) is a dialogue between Ashtavakra and Janaka (king of Mithila) on the nature of soul, reality and bondage. It is in Mahabharata. It teaches Advaita Vedanta. Chapters one, five and thirteen are used. Following is taken from wisdomlib.org

***********

August 1 Saturday

Janaka: (CHAPTER 1)

1 How is knowledge to be acquired? How is liberation to be attained? And how is dispassion to be reached? Tell me this, sir.

***

August 2 Sunday 

Ashtavakra:

2 If you are seeking liberation, my son, shun the objects of the senses like poison. Practise tolerance, sincerity, compassion, contentment and truthfulness like nectar.

***

August 3 Monday 

3 You are neither earth, water, fire, air or even ether. For liberation know yourself as consisting of consciousness, the witness of these.

***

August 4 Tuesday 

4 If only you will remain resting in consciousness, seeing yourself as distinct from the body, then even now you will become happy, peaceful and free from bonds.

***

August 5 Wednesday  .

5 You do not belong to the brahmin or any other caste, you are not at any stage, nor are you anything that the eye can see. You are unattached and formless, the witness of everything – so be happy.

***

August 6 Thursday 

6 Righteousness and unrighteousness, pleasure and pain are purely of the mind and are no concern of yours. You are neither the doer nor the reaper of the consequences, so you are always free.

***

August 7 Friday 

7 You are the one witness of everything, and are always totally free. The cause of your bondage is that you see the witness as something other than this.

***

August 8 Saturday

8 Since you have been bitten by the black snake of the self-opinion that ‘I am the doer’, drink the nectar of faith in the fact that ‘I am not the doer’, and be happy.

***

August 9 Sunday 

9 Burn down the forest of ignorance with the fire of the understanding that ‘I am the one pure awareness’, and be happy and free from distress.

***

August 10 Monday 

10 That in which all this appears – imagined like the snake in a rope, that joy, supreme joy and awareness is what you are, so be happy.

***

August 11 Tuesday 

11 If one thinks of oneself as free, one is free, and if one thinks of oneself as bound, one is bound. Here this saying is true, “Thinking makes it so”.

***

August 12 Wednesday 

12 Your real nature is as the one perfect, free, and actionless consciousness, the all-pervading witness – unattached to anything, desireless and at peace. It is from illusion that you seem to be involved in samsara.

***

August 13 Thursday 

13 Meditate on yourself as motionless awareness, free from any dualism, giving up the mistaken idea that you are just a derivative consciousness, or anything external or internal.

***

August 14 Friday 

14 You have long been trapped in the snare of identification with the body. Sever it with the knife of knowledge that ‘I am awareness’, and be happy, my son.

***

August 15 Saturday .

15 You are really unbound and actionless, self-illuminating and spotless already. The cause of your bondage is that you are still resorting to stilling the mind.

***

August 16 Sunday 

16 All of this is really filled by you and strung out in you, for what you consist of is pure awareness – so don’t be small minded.

***

August 17 Monday 

17 You are unconditioned and changeless, formless and immovable, unfathomable awareness and unperturbable, so hold to nothing but consciousness.

***

August 18 Tuesday 

18 Recognise that the apparent is unreal, while the unmanifest is abiding. Through this initiation into truth you will escape falling into unreality again.

***

August 19 Wednesday 

19 Just as a mirror exists everywhere both within and apart from its reflected images, so the Supreme Lord exists everywhere within and apart from this body.

***

August 20 Thursday 

20 Just as one and the same all-pervading space exists within and without a jar, so the eternal, everlasting God exists in the totality of things.

***

August 21 Friday 

Janaka: (CHAPTER 13)

1 The inner freedom of having nothing is hard to achieve, even with just a loin-cloth, but I live as I please abandoning both renunciation and acquisition. (This way I live happily)

***

August 22 Saturday

2 Sometimes one experiences distress because of one’s body, sometimes because of one’s tongue, and sometimes because of one’s mind. Abandoning all of these, I live as I please in the goal of human existence. (This way I live happily)

***

August 23 Sunday 

3 Recognising that in reality no action is ever committed, I live as I please, just doing what presents itself to be done. (This way I live happily)

***

August 24 Monday 

4 Yogis who identify themselves with their bodies are insistent on fulfilling and avoiding certain actions, but I live as I please abandoning attachment and rejection. (This way I live happily)

***

August 25 Tuesday 

5 No benefit or loss comes to me by standing, walking or lying down, so consequently I live as I please whether standing, walking or sleeping. (This way I live happily)

***

August 26 Wednesday 

6 I lose nothing by sleeping and gain nothing by effort, so consequently I live as I please, abandoning loss and success. (This way I live happily).

***

August 27 Thursday 

7 Frequently observing the drawbacks of such things as pleasant objects, I live as I please, abandoning the pleasant and unpleasant. (This way I live happily).

***

August 28 Friday 

Ashtavakra: (CHAPTER 5)

1 You are not bound by anything. What does a pure person like you need to renounce? Putting the complex organism to rest, you can go to your rest.

***

August 29 Saturday

2 All this arises out of you, like a bubble out of the sea. Knowing yourself like this to be but one, you can go to your rest.

***

August 30 Sunday 

3 In spite of being in front of your eyes, all this, being insubstantial, does not exist in you, spotless as you are. It is an appearance like the snake in a rope, so you can go to your rest.

***

August 31 Monday 

4 Equal in pain and in pleasure, equal in hope and in disappointment, equal in life and in death, and complete as you are, you can go to your rest.

–subham—

Tags- Ashtavakra Gita, Quotes,   August 2026 Calendar, Advaita, Mahabharata

“திராவிடர்”!? ! ? களை மணந்த “ஆரியர்”!?!? கள்(Post.15,843)

Written by London Swaminathan

Post No. 15,843

Date uploaded in London –7 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நான் கொடுத்த தலைப்பு பொய்யான தலைப்பு.

ஏனெனில் சங்க இலக்கியத்திலோ  பிறகால தமிழ் இலக்கியத்திலோ பாரதி பாடல்களிலோ தேவாரம் திருவாசகத்திலோ திராவிட என்ற  சொல் கிடையாது . ஆயினும் சங்க இலக்கியம் முதல் பாரதி பாடல் வரை ஆரிய ARYA என்ற சொல் உண்டு. தேவார,  திருவாசககங்களில் ஆரியன் என்றால் சிவ பெருமான்!  சங்க இலக்கியத்திலும் ஆரிய என்றல் வடக்கில் இமய மலையில் வாழும் முனிவர்கள் அல்லது பண்பாடுமிக்க மனிதர்கள்; ஆங்கிலத்தில் CULTURED, EDUCATED என்று சொல்வதற்கு சமம் ; இதனால் அந்த திசையிலிருந்து வந்த கூத்தாடிக்கும், பயில்வான்களுக்கும் ஆரிய மல்லன், ஆரிய கூத்தாடி என்று சொல்லத் துவங்கினர்; ஆனால்  திராவிட என்ற சொல்லை எங்குமே தமிழிலோ ஸம்ஸ்க்ருதத்திலோ காண முடியாது; இது வெள்ளைக்காரன் கட்டிவிட்ட கதை ; இப்படிச் சொன்னால் தென்னாட்டில் கிறிஸ்தவ மதத்தை பரப்பலாம் என்று கனக்குப் போட்டனர்; அது ஓரளவுக்குப் பலித்தது. மீனவர்களையும் பனை ஏறிகளையும் மலையாள ஈழவாக்களையும் மாற்றினார்கள்

பிற்காலத்தில் தென் பகுதியையும் அங்கு பேசப்பட்ட மொழிகளையும் குமாரில பட்டர் (EIGTH CENTURY CE ) போன்றோர் திராவிட பாஷை என்று அழைத்தனர்; அதற்கு முன்னர் சமணர்கள் ஸ்தாபித்த சங்கத்தை திராவிட சங்கம் (FIFTH EIGTH CENTURY CE) என்றனர் ; இரண்டும் ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள்; அதற்கும் முன்னதாக ஒரிஸ்ஸா என்னும் கலிங்கத்தை ஆண்ட காரவேலன் த்ரமிள என்ற சொல்லை பயன்படுத்தினான்; சிலர் தமிழ் – த்ரமிள- திராவிட என்று விளக்கினர் இன்னும் சிலர் இல்லை திராவிட- த்ரமிள- என்பது தமிழ் ஆயிற்று என்று REVERSE GEAR  ரிவர்ஸ் கியரில் பயணம் செய்தனர் . 56 தேச வரைபடங்களிலும் விளக்கங்களிலும் திராவிடம் என்பதைத் தமிழ் நாட்டுக்கு மேலே ஆந்திரப் பகுதியைக் காட்டியுள்ளார்கள்;  ஆக இது தமிழ் நாடோ சேர, சோழ, பாண்டிய நாடோ இல்லை!

****

கணவன்மாரும் மனைவியரும்

“திராவிடர்”!? ! ? களை மணந்த “ஆரியர்”!?!? கள்!

ரிக்வேத ரிஷி தீர்க்கதமஸ் – தாசர் குலப் பெண் மமதா ;

கவச ஐலுசர் – தாசர் குலப் பெண்;

உபநிஷத பெண்மணி ஜாபாலா- பணிப்பெண் ; மகன் சத்யகாம ஜாபாலன்  ;

பிராமண ராவணன் – அசுரர் மகள் மண்டோதரி ;

பீமன் – அரக்கி ஹிடிம்பா; பீமன் மற்றும் அரக்கி இடும்பி ஆகியோரின் மகன் கடோத்கஜன்.

அர்ஜுனன் – நாக கன்னிகை உலூபி , மணலூர் சித்ராங்கதா ; அல்லி ராணி ; அர்ஜுனனுக்கும் நாக இளவரசி உலூபிக்கும் பிறந்தவன் அரவான்.

முருகபப்பெருமான் – வேடுவச்சி வள்ளி ;

யயாதி – பிராமண தேவயானி

உதயணன் – நடன மாது வாசவத்தா

சந்தனு – மீனவப் பெண் மத்ஸ்யகந்தி; அவள் மகள் வேத வியாசர்

கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னன் – அசுரர் இளவரசி பிரபாவதி

ராமனின் மகன் குசன் – நாக இளவரசி- குமுதவதி; அவர்கள் மகன் அதிதி

ராமன் மகன் லவன் – நாக இளவரசி கஞ்சசனா

நரகாசுரன் -மனைவி மாயா ; விதர்ப்ப நாட்டு இளவரசி; மகன் பகதத்தன்

முறைப்பெண்ணை மணப்பது தமிழ்நாடு மட்டுமின்றி ஒரிஸ்ஸா, குஜராத், மகாராஷ்டிரத்தில் உண்டு ; அவர்களுக்கு முன்னால் அர்ஜுனன்  முறைப்பெண் சுபத்ராவையும் , கிருஷ்ணன் மகன் பிரத்யும்னன் முறைப்பெண், ருக்மவதியையும் மணந்தனர்.

***

வெள்ளைக்காரன் வந்து ஆரிய திராவிட என்று பிரிப்பதற்கு முன்னர் நச்சினார்க்கினியர் முதலியோர் 18 குடிகள் அல்லது 18 பிரிவுகள் பற்றிப் பேசினார்கள். அதிலும் ஆரியர் திராவிடர் கிடையாது இவைகளுக்கு எல்லாம் இனவாதப் பொருளை கற்பித்தோர் பட்டியலில்  முதலிடம் பிடிப்பவர்கள் மாக்ஸ் முல்லர் ஜான் மார்ஷல், மார்ட்டிமர் வீலர் , ஜான் மக்கே ஆவர். இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது ; நாலு பேரைக் குறிப்பிட்டதற்கு காரணம் இவர்கள் எல்லோரும் சிந்து வெளி எழுத்துக்களை படிக்க முடியாமல் திசை திருப்பியதோடு வேதத்தையும் நேற்று வந்தது, அதாவது பைபிளின் பழைய ஏற்பாடு, யூத மதம் ஆகியவற்றுக்குப் பிற்பாடு வந்தது என்று பொய்யுரை பரப்பினர்நான் சொல்வதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் (1894-1994) மிக அழகாக, பாலீஷாக, திட்டாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சொல்லி இருக்கிறார்  (காண்க தெய்வத்தின் குரல்).

இந்தக் கொள்ளைக்காரர்கள் ஸாரி, ஸாரி SORRY,  SORRY  வெள்ளைக்காரர்கள் ஆங்கிலத்தில் பல விஷயங்களை எழுதினாலும் அது யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல மறைக்க முயன்றனர்.  

ஆயினும் கம்பனும் மில்டனும் எழுதி டாக்டர் பட்டம் பெற்ற எஸ் ஆர் கே ( எங்கள் வீட்டுக்கு நாலு வீடுக்கு தள்ளி மதுரையில் வசித்த பேராசிரியர்; சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி பரப்புரையாளர் எஸ் ராம கிருஷ்ணன் ) போன்றோர் சில விஷயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். (காண்க – இந்திய பண்பாடும் தமிழரும் , எஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தகநிலையம், மதுரை , 1971).அவைகளைக் காண்போம் .

எந்தெந்த ஜாதிக்காரரை மணந்து பெற்ற பிள்ளைகளுக்கு என்ன பெயர் என்பதை மனு ஸ்ம்ருதியும் கூறுவதால் அப்படி நிகழ்ந்தது தெரிகிறது ஆனால் உதாரணங்களைக் காண்போம். 

மஹாபாரதம் சொல்லும் கதையில் சந்தனு மகாராஜன் மீனவப் பெண்ணான மத்ஸ்ய கந்தியை மணந்தது வருகிறது; மத்திய கந்தி என்றால் மீன் நாற்றம் என்று பொருள் ;அவர்களுக்குப் பிறந்தவர்தான் வியாசர்- வேத வியாசர் இல்லாவிடில் மஹாபாரதமும் கிடையாது, புராணங்களும் கிடையாது, நான்கு வேதங்களும் கிடையாது; ஆகையால் இன்றுவரை குருபூர்ணிமா தினத்தன்று அவரைக் குருவாக எல்லா இந்துக்களும் வணங்குகின்றனர் அவர் நிறமோ கருப்பு ; காக்காக் கருப்பு! UTTER BLACK!

இங்கு இன்னுமொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்; திராவிடர்கள் கோழி முட்டைக் கண்களும், போண்டா மூக்கும், சுருட்டை முடியும், குட்டையான தோற்றமும் உடையவர்கள் என்று வெள்ளைக்காரர்கள் எழுதிவைத்தார்கள். ஆரியர்கள் இதற்கு நேர் மாறாக கூரிய மூக்கும், நல்ல உயரமும், வெள்ளைத் தோலும்  தாமரைக் கண்களும் உடையவர்கள் என்றும் வருணித்தார்கள் !

ஆனால் வியாசர் கருப்பு! திரவுபதி கருப்பு! கிருஷ்ணன் கருப்பு! ரிக் வேத அகஸ்தியர் குட்டை !

இதிலும் வெள்ளைக்காரன் புளுகு அம்பலமாகிறது (ஹரப்பாவில் குட்டையான திராவிடர் எலும்புக்கூடு எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை !!!) ராமன் வேடர் குலத் தலைவன் குகனைத் தழுவிக்கொண்டு யூ ஆர் மை பிரதர் YOU ARE MY BROTHER TOO   என்று சொன்னதெல்லாம் நமக்குத் தெரியும்.

திருவிளையாடல் புராணக் கதைப்படி மதுரை மீனாட்சி கூட வடக்கத்திப் பெண்தான் ! சூரசேன மஹாராஜாவின்  பெண்ணான  காஞ்சன மாலாவுக்குப் பிறந்தவள் மீனாட்சி . 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மெகஸ்த்னீஸ் கூட அவளைக் குறிப்பிட்டான் .ஆனால் அவளை திருஞான சம்பந்தர் அழகான தமிழ்ப்பெயர் சொல்லி — அங்கயற்கண்ணி என்று சொல்லித் –தேவாரம் பாடினார்; 1400 ஆண்டுகளுக்கு முன்னர் !

அசுரர்கள் என்றால் திராவிடர்கள், தேவர்கள் என்றால் ஆரியர்கள் என்றும் வெள்ளைக்கார கிறிஸ்தவன் கதை கட்டி விட்டான் ; விருத்திராசுரன் என்ற பிராமணனைக் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதை ரிக் வேதம் முதல்  நம்ம ஊர் தல புராணங்கள் வரை ஆயிரம் முறையாவது சொல்லி இருக்கும்;

ராவணன் என்ற 50% பிராமணனைக் கொன்றதற்காக ராம பிரானையும் பிரமஹத்தி பிடித்ததை ராமேஸ்வரம் முதலிய தல புராணங்களில் காண்கிறோம் ராவணனும் ஒரு அசுரன்!

பெண்கள் வசப்பட்ட க்ஷத்ரிய விசுவாமித்திர பின்னர் பிராமணனாக மாறியதும் நந்தனார் கதையும் எவரும் பிராமணன் ஆக முடியும் என்றும் காட்டுகிறது

நமுசி என்ற அரக்கனை இந்திரன் கொன்றான் என்ற ரிக் வேதக் கதையிலும் நமுசியை பிராமணன் என்றே காட்டுகிறது; நமுசியின் சகோதரன்தான் அசுரத் தச்சனான மயன்.

நேபாளம் பூட்டானில் இப்போதும் நமுசி என்ற பெயரை வைத்துக் கொள்கின்றனர்.

ரிக்வேதத்தில் வேறு ஒரு கிருஷ்ணன் உள்ளான்; அவனுக்கும் இந்திரனுக்கும் மோதல்! த்வஷ்டா மகனும் தேவர்களின் புரோகிதனுமான பிராமணன் திரிசரஸின் மூன்றுதலைகளையும் இந்திரன் துண்டித்தான் என்றும் ரிக் வேதம் 10-8 கூறுகிறது ; திரிசிரசும் ஒரு அசுரன் என்கிறது ! ஆகவே அசுரர் என்பது குணத்தால் வந்த அடைமொழிதான்பிறப்பால் அல்ல. வெள்ளைக்காரன் கணக்குப்படி இவை எல்லாம் இன மோதல்கள் .

இப்படி ஏனைய மத நூ ல்களில் ஆயிரம் விஷயம் இருந்தும் அவைகளுக்கு வெள்ளைக்காரன் இன வேற்றுமை கற்பிக்கவில்லை;

ஆக பிராமணர்களையும் அசுரர்கள் அல்லது  ராக்ஷஸர்கள் என்று வருணித்ததை ரிக் வேதத்திலும் ராமாயணத்திலும் காண்கிறோம் ; அவ்வளவு அசுரர்களும் ராக்ஷஸர்களும் பிரம்மா அல்லது சிவ பெருமானை நோக்கித் தவம் செய்து ஏராளமான வரங்களை பெற்றதையும் புராண, இதிகாசங்களில் படிக்கிறோம்;  இவர்கள் திராவிடர்கள் என்றால் எப்படி ஆரிய தெய்வங்களை வழிபட்டு வரங்களை பெற்றார்கள் ? இவைகளை எல்லாம்  மறைத்ததால்தான் வெள்ளைக்கார்களை  அயோக்கியர்கள் என்று குறிப்பிடுகிறேன் .

இந்திரன் என்பது பட்டம்; ஒரே ஆள் அல்ல; ராஜா, தலைவன் என்று பொருள்;

ரிக்வேதத்தில் கீழ் ஜாதி முனிவர் தீர்க்கதமஸ் என்ற ரிஷி, தாசர் குல மமதாவின் புதல்வர் . வெள்ளைக்காரன் கணக்குப்படி மமதா திராவிடப் பெண் .

கவச ஐலுசர் என்ற ரிக்வேத ரிஷியும் கிழ்ஜாதி தாசர் மகன்தான் .

சுதாஸ் என்ற ரிக்வேத கால மன்னனும் தாசன் என்பதை பெயரே காட்டிவிடுகிறது

உபநிஷத்தில் வரும் ஜாபாலா வேலைக்காரப்பெண் ; அவளுக்குப் பிறந்தவன் ரிஷியிடம் போய் “என் அப்பா யார் என்று தெரியாது என்று அம்மா சொல்லிவிட்டாள் என்றான்.  அப்படியானால் நீ பிராமணன்தான் ஏனெனில் பிராமணன் உண்மையே பேசுவான் உன் பெயர் இன்றுமுதல் உண்மை விளம்பி — அதாவது சத்யா காமன்- வா, வா! வேத வகுப்பில் உட்கார்! என்கிறார் வண்டிக்காரன் ரைவக் , ஜானுசுருதி என்ற மன்னனுக்கு ஆத்ம ஞானம் போதித்ததை சாந்தோக்கிய உபநிடதம் சொல்கிறது .

ஒரே வேதம் பயிலும் வெள்ளை நிறத்தவன் , இரு வேதம் பயிலும் மாநிறத்தவன் மூன்று வேதம் பயிலும் கருப்பு நிறத்தவன் பற்றி உபநிஷத்துக்களிலேயே பழமையான பிருஹத் ஆரண்யக உபநிஷத் குறிப்பிடுகிறது. வெள்ளைக்காரன் சொல்லுவதை ஒப்புக்கொண்டால் கருப்பு நிற திராவிடன்மட்டும்தான்  3 வேதங்களையும் படித்தான் என்று எழுதவேண்டி வரும்!

கசாப்புக் கடை வைத்திருந்த தர்மவியாதனிடம் கெளசிக முனிவர் அறிவுபெறச் சென்ற செய்தி மஹாபாரதத்தில் உள்ளது.   

இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகும் ; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆரியன், திராவிடன் என்ற பிரிவினைக்கு வேதங்களிலும் சங்க கால இலக்கியங்களிலும் ஆதாரம் இல்லை ; ஆரிய, திராவிடச் சொற்களுக்கு இனவாத அர்த்தம் நம்முடைய நூல்களில் இல்லை ; குணத்தால் ஒருவன் தேவன் ஆகலாம் அல்லது அசுரன் ஆகலாம் ஆரியன்  என்றால் படித்தவன், நாகரீகம் உடையவன்; திராவிடன் என்றால் தென் இந்தியாவில் வசிப்பவன் என்பதே உண்மைப்பொருள்.

–Subham—

Tags- ஆரியன், திராவிடன், கலப்பு மணம், திருமணம் 

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 68; இந்து மத கலைச்சொல் அகராதி-68 (Post No.15,821)

MEGADUTA OF KALIDASA 

Written by London Swaminathan

Post No. 15,821

Date uploaded in London –2 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாதங்க

ஸம்ஸ்க்ருத்தில் யானை என்று பொருள்; ஒரு சுவையான கதை இதோ:

இந்தக் கதை மஹாபாரதத்தில் உள்ளது. ராமாயணத்திலும் கூட இவர் பெயர் வருகிறது ;ரிஷ்யமுக மலைக்கு அருகிலுள்ள இவருடைய ஆஸ்ரமத்துக்கு ராமனும் சீதையும் விஜயம் செய்தார்கள். சண்டாளனுக்குப் பிறந்த ஒருவன் பிராமணனாக வளர்க்கப்பட்டான்;அவன் ஒரு பெரிய கழுதைக் கும்பலை முரட்டுத்தனமாக மேய்த்துக் கொண்டிருந்தான்.  அப்போது தாய்க் கழுதை சொன்னது ; ஏய் கழுதைகளே; இதைவிட அதிகம் எதிர்பார்க்காதீர்கள்; ஏனெனில் நம்மை ஓட்டுபவன் பிராமணன் அல்ல; அவன் ஒரு சண்டாளனுக்குப் பிறந்தவன். இதைக் கேட்ட கழுதை ஒட்டி புத்திசாலிக் கழுதையே உனக்கு இது எப்படித் தெரியும்? என்று  கேட்டான் ; கழுதை சொன்னது : உன்னுடைய தாயார் போதையில் இருந்த போது ஒரு கீழ்ஜாதி அம்பட்டன் உன்னுடைய தாயைக் கட்டித் தழுவினான்; அதனால் பிறந்தவன்தான் நீ ; இதைக் கேட்ட சண்டாளன் பிராமணன்  ஆக மாறுவதற்கு நீண்ட காலம் தவம் செய்தான் அவனது தவத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சினர்; ஆயினும் இந்திரன் அவனுக்கு அனுமதி மறுத்தான். அவன் மீண்டும் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தான் ; 1000 ஆண்டுகள் உருண்டோடின அவன் எலும்பும் தோலுமாக ஆனான். இந்திரனே வந்து அவனைத் தாங்கி நின்றான்; அப்போது அவனுக்கு சில வரங்களை அளித்தான்; “நீ பறவையாகப் பறக்கலாம்; நினைத்த வடிவத்தை எடுக்கலாம்; எங்கு சென்றாலும் உனக்கு மரியாதையும் கெளரவமும் கிடைக்கும்” என்றான் அவர்தான் மாதங்க முனிவர்.  

***

மேதாதிதி

காண்வ மகரிஷி குலத்தில் உதித்த வேத ரிஷி இவர். உபநிஷத்தில் இவரைப் பற்றிய கதை வருகிறது ; இவரது தவத்தைக் கண்டு மெச்சிய இந்திரன் இவரை தேவலோகத்துக்குக் கடத்திச் சென்றான் ; அப்போது அவரை செம்மறியாட்டு வடிவத்தில் கொண்டு சென்றான் (இதே போல கழுகு வந்து கனிமேட் GANYMEDE என்பவனைத் தேவலோகத்துக்குக் கடத்திச் சென்றதாக கிரேக்க புராணக் கதை ஒன்றும்  இருக்கிறது.

***

மேதாவி

பாலாதி என்ற ரிஷியின் புதல்வர் இவர்; தந்தை இயற்றிய கடும் தவத்தால் இவருக்கு ஒரு வரம் கிடைத்தது; அருகிலுள்ள மலை இருக்கும் வரை யாரும் இவரை வெல்லவோ கொல்லவோ முடியாது என்பது அந்த வரம்; மேதாவிக்கு அகந்தை அதிகரித்தது ; உடனிருந்த பிரமணர்களைக் கொடுமைப் படுத்தினான் ; அதைக் கண்ட தனுசக்ஷா என்ற பிராமணர், பலத்த கொம்புள்ள ஒரு செம்மறி ஆட்டினை உருவாக்கினார் அது அந்த மலையை முட்டி முட்டி மோதிச் சிதற அடித்தது ; மேதாவிக்கும் மரணம் சம்பவித்தது; மஹாபாரதத்தில் இந்தக் கதை உள்ளது.  பரத்வாஜ முனிவர் இந்த விஷயத்தை அவருடைய மகன் யவக்ரீடனுக்குச் சொல்லி, அகந்தை ஆளையே அழித்துவிடும் என்று அறிவுறுத்தினார்.

***

மேனகா

தேவலோகத்தில் வசிக்கும் அப்சரஸ் என்னும் அழகிகளில் ஒருவர் மேனகா; விச்வாமித்திரர் என்னும் க்ஷத்ரிய மன்னன், பிராமணன் ஆகி பிரம்ம ரிஷி பட்டம் பெறுவதற்கு கடும் தவம் இயற்றிக் கொண்டிருந்தார் ; அவருடைய தவத்தைக் கலைக்க இந்திரன் மேனகாவை அனுப்பினான் ; அவளும் வாயுதேவனிடம் பேசி ஒரு உடன்படிக்கை செய்தாள்; விசுவாமித்திர முனிவருக்கு முன்னால், சேட்டைகள் செய்தபோது வாயு தேவன் அவளுடைய ஆடைகளை அகற்றினான்; உடனே முனிவர் தவம் கலைந்து மேனகாவின் வலையில் விழுந்தார்; அவர்கள் இருவரும் குடும்பம் நடத்திய காலத்தில் பிறந்தவள்தான் சகுந்தலா என்ற பெண்;  பாரத நாட்டினை ஆண்டு பாரத நாடு என்ற பெயரினை நல்கிய பரதனின் தாயார் சகுந்தலை.

***

மேனா

ரிக்வேதத்தில் வரும் மேனா என்ற பெண், வ்ரிஷனஸ்வாவின் புதல்வி ஆவார் ;இந்திரன் அவளை விரும்பினான்; புராணத்தில் ஹிமவத்தின் மனைவி ; அவர்களுக்குப் பிறந்தவள் உமா , மற்றும் கங்கா ; மகன் பெயர் மைனாகம் (இந்திரன் என்பது ஒருவரைக் குறிக்கும் பெயர் அல்ல; மன்னன் என்ற பொதுப் பெயரில் வேத, இதிஹாச புராணங்களில் வருகிறது ; இமயமலையில் கங்கை நதி பிறக்கிறது என்பதை ஹிமவத்தின் மகள் கங்கை என்று புராணம் சொல்கிறது)

****

மேரு

பூமியின் நடுவிலுள்ள உயரமான மலை மேரு ஆகும் ; வட துருவத்தையும் மேரு என்று புராணங்கள் வருணிக்கின்றன;  மேரு மலையின் உச்சியில் ஸ்வர்கம் இருப்பதாகவும் சொல்லும்; இமயமலைக்கு அப்பால் இது இருக்கிறது ; சுமேரு , ஹேமாத்ரி /பொன்மயமான மலை, ரத்னசானு /நவரத்தின சிகரம், கர்ணிகாசலம்/ தாமரை மலை , அமராத்ரி /தேவர்கள் மலை, தேவ பர்வதம் என்ற பெயர்கள் மேருவுக்கு உள்ளன .

***

மிதிலை

ஜனகர் ஆட்சி செய்த விதேஹ நாட்டின் தலை நகரம் மிதிலாபுரி; இப்போதைய வடக்கு பீஹாருக்கு, வேத காலத்தில்  விதேஹம் என்ற பெயர்  இருந்தது மிதிலையில் பிறந்ததால் சீதா தேவிக்கு  மைதிலி என்று பெயர் ; இப்போதும் ஜனகரின் பெயரில் ஜனக்பூர் என்று இந்த ஊரினை அழைக்கிறார்கள் ; வேதாந்த விஷயங்களுக்குப் பெயர் பெற்ற நாடு விதேஹம்.

***

மிலேச்சர்

மிலேச்ச’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப் பாட்டில் வருகிறது. மகாபாரதம் முதல் பல சம்ஸ்கிருத நூல்களிலும் கல்வெட்டுகளிலும் வருகிறது. எல்லா இடங்களிலும் பாரத நாட்டைச் சாராத ‘அந்நியன்’ அல்லது ‘அந்நிய மொழி’ யைப் பேசுவோன் என்ற சொல்லிலேயே புழங்கியிருக்கிறது. யவனர்கள் எனப்படும் கிரேக்கர்கள் அல்லது ரோமானியர்களை இப்படி அழைத்தனர். படை எடுத்து வந்த முஸ்லீம்களையும் பிரிட்டிஷ்காரர்களையும் இப்படி அழைத்தனர்.

பலுச்சிஸ்தான் என்ற பகுதியில் வசித்தவர்களையும் இப்படி அழைத்தனர். பலுச்சி என்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’BARBARIANS (  காட்டுமிராண்டி ,நாகரிகமற்றவர், முரட்டுத்தனமானவர்,  அநாகரிகர்,  பண்பற்றவர்)  என்று அழைத்தனர். பிற்காலத்தில் இந்தச் சொல் அர்த்தம் மாறி தீய (காட்டுமிராண்டி) அர்த்தத்தில் மட்டும் வழக்கத்தில் வந்தது.

யாராவது ஏதாவது புரியாத விஷயத்தைச் சொன்னால் ஆங்கிலத்தில் “இட் இஸ் கிரீக் டு மீ” IT IS GREEK TO ME என்று சொல்லுவார்கள். இதற்கு கிரேக்க மொழி என்று பொருள் அல்ல. எனக்குப் புரியவில்லை என்று பொருள். ஆக இந்த இடங்களில் கிரீக், பார்பேரியன்ஸ் என்ற சொற்களை எப்படி அர்த்தம் செய்துகொள்கிறோமோ அப்படித்தான் நாமும் ‘மிலேச்ச’ என்ற சொல்லுக்குப் பொருள் காண வேண்டும்.சி ந்து சமவெளியை மிளக்கா என்று பாபிலோனியர்கள் அழைத்தனர் என்றும் களிமண் ஏடுகளில் மிளக்கா என்பது உள்ளது என்றும் சொல்லி சிந்து வெளி ஆய்வை திசை திருப்பிய அறிஞர்களும் உண்டு. முன் கூறியது போல இது பலுச்சிஸ்தான் என்னும் குறுகிய நிலப்பரப்பில் வாழ்ந்த ஒரு இனத்தை மட்டும் குறித்திருக்கலாம். ஆனால் பாரத நாடு முழுதையும் குறித்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

முல்லைப் பாட்டில் ரோமானிய மக்களைக் குறிக்கையில் வாய் பேசாதோர், ஊமை போன்று சைகை மொழியில் பேசுவோர் என்று மிலேச்ச என்ற சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டிருக்கிறது. ரிக் வேதத்திலும் கூட சிலரை வாய் பேசாதோர், மொழியே இல்லாதோர் என்றும் கூறியிருக்கின்றனர். இதன் பொருள் ‘நம் மொழியைப் பேசாதவர்’ என்பதே.

ஆனால் வெளிநாட்டு அறிஞர்கள் இது திராவிடர்களை வசை பாடியது என்றும் மிலேச்சர்கள் என்பவர்கள் திராவிடர்கள் என்றும் எழுதி குழப்பி இருக்கின்றனர்; மாபாரத ஆதி பர்வத்தில் அரக்கு மாளிகை கட்டிய எஞ்சினீயரை மிலேச்சன் என்றும் மாபாரத யுத்தத்தில் பங்குகொண்ட பல மன்னர்களை மிலேச்சர்கள் என்றும் சொல்லியிருக்கிறது. சேரன் செங்குட்டுவன் யவனர்களைப் பிடித்து மொட்டை அடித்து அவர்கள் தலையில் எண்ணை ஊற்றி அவமானம் செய்ததை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரத்தில் காணலாம். சகரர், ஹூணர், கிரேக்கர்கள் ஆகியோரை வட மொழிக் கல்வெட்டுகளும் நூல்களும் மிலேச்சர்கள் என்று கொச்சையாகத் திட்டுவதையும் காணலாம்.

சுருக்கமாகச் சொன்னால் மிலேச்சர்கள் தமிழோ சம்ஸ்கிருதமோ பேசாதவர்கள், இந்து மத நம்பிக்கைகளுக்குப் புறம்பானவர்கள்  என்பதை 3000 ஆண்டு சொல் பிறப்பியல் ETYMOLOGY வரலாறு காட்டும்.

***

மேகநாதன்

ராவணனின் மூத்த மகன்.

ராமாயணத்தில் வரும் மேகநாதன், இலங்கையின் அரசனான ராவணன் -மண்டோதரி ஆகியோரின் மூத்த மகன் ஆவார். இவருக்கு இன்னொரு பெயர் இந்திரஜித். இவர் பிறந்தபோது இடியும் மின்னலும் முழங்கியதால் ‘மேகநாதன்’ என்ற பெயரும் , தேவர்களின் தலைவனான இந்திரனைப் போரில் வென்ற காரணத்தினால்  ‘இந்திரஜித்’ என்ற பெயரும் ஏற்பட்டன; இவருடைய வீர தீர போர்ச் செயல்களை கம்பனும் வால்மீகியும் வருணித்துள்ளார்கள்.

***

மேக தூதம்

காளிதாசன் உலகின் முதல்Tourist Guide டூரிஸ்ட் கைடு ; போகும் வழியில் உள்ள நகரங்களையும் காடு மலைகளையும் வருணித்து படிப்போருக்கு பூகோள, வரலாற்றுச் செய்திகளை  அளிக்கிறான்

மேலும் அவன்தான் முதல் பயணக்கட்டுரை (Travelogue Writer) எழுதியவன் என்றும் சொல்லலாம். மஹாபாரதம், ராமாயணத்தில் இது போன்ற வருணனைகள் இருந்தாலும் புராணக்கதைகளும் நம்ப முடியாத விஷயங்களும் இருக்கும்.

காளிதாசன் வானிலை இயல் மன்னன் (Meteorologist) . முதல் முதலில் (Mapped South West Monsoon) தென் மேற்குப் பருவக்காற்று விந்திய மலை முதல் இமய மலை வரையே எந்தப் பாதையில் செல்கிறது என்பதையும் காட்டுகிறான். பறவைகள் குடியேற்றம் (Bird Migration) பற்றியும் காளிதாசன் செல்கிறான் . பிற் காலத்தில் புறநானூற்றுப் புலவர் முதல் சத்திமுற்றத்துப் புலவர் வரை “நாராய், நாராய், செங்கால் நாராய்” (Northward Return Journey of MigratoryBirds) என்று பாட வழிவகுத்தார் இவ்வகையில் காளிதாசனின் மேக விடு தூது சிறப்புடைத்து. மேகம் மூலம் ஒரு யக்ஷன் தனது காதலிக்கு அனுப்பிய செய்தியைக் கொண்டது ஆகும்.

காளிதாசரின் ‘ஒரிஜினல் ஐடியா’ Original Idea வா  இந்த தூதுக் கவிதை; இல்லை. காளிதாசரின் நூல்களுக்கு பழங்காலத்தில்  75 பேருக்கும் மேலானோர் உரை எழுதினார்கள். அவர்களில் மிகவும் பிரசித்தமானவர் மல்லிநாதர். வால்மீகி முனிவரின் ராமாயணம்தான் காளிதாசருக்கு ஊற்றுணர்ச்சி தந்தது என்கிறார். ராமாயணத்தில் நாம் குரங்கு/ அனுமன் விடு தூதுக் கவிதையைக் காண்கிறோம். ராமன் அனுப்பிய செய்தியுடன் சீதையைச் சந்தித்து மோதிரத்தையம் கொடுத்து, மீண்டும் ‘குட் நியூஸ்’ Good News  கொண்டுவந்து ராமனிடம் சபாஷ் வாங்குகிறார் அனுமன். இந்த அனுமன் தூது – குரங்கு விடு தூதுதான் காளிதாஸருக்கு ஐடியா Idea கொடுத்தது என்பதற்கு மற்றும் ஒரு சான்று வால்மீகி ராமாயண கணையாழி போல காளிதாசரின் ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு மோதிரம் அல்லது நகை முக்கிய இடம் பெறும் . ஆக அவர் வால்மீகி தாசர் என்பது வெள்ளிடை மலை.

அப்படியானால் ராமாயணத்தில் வரும் அனுமன் தூது விடு தூதுதான் உலகின் முதல் தூதுக் கவிதையா? இல்லை .

ரிக் வேதத்தில் வரும் ‘நாய் விடு தூது’தான் உலகின் முதல் தூதுக் கவிதை. தூது என்பது ஸம்ஸ்க்ருதச் சொல். இதுபற்றி திருவள்ளுவரும் ஒரு அதிகாரம் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் நிறைய தூதுக் கவிதைகள் (Messenger Poems)  உள்ளன; தமிழர்களுக்கும் முன்னதாக இந்தத்துறையில் காளிதாசன் எழுதிய நூல் மேக தூதம் என்ற பெயரில் உலகப் புகழ் பெற்றது; இலக்கிய உலகத்தில் அந்த நூல் பெரும் புரட்சியை உருவாக்கியது. அவரைத் தொடர்ந்து பலரும் இப்படி முழு நீள தூதுக் கவிதை நூல்களை எழுதத் துவங்கினர்.

***

மித்ரன்

சூரியனின் பெயர்; ஒளி , நேர்மறை சக்தி, பகல்பொழுது என்று பொருள் .

வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். உலகம் என்பது நேர்மறை, எதிர்மறை சக்திகளையுடையது. பூமி என்னும் காந்த மண்டலத்திலும் வட துருவம், தென் துருவம் என்று இருக்கும். மின்சாரத்திலும் பாஸிட்டிவ், நெகடிவ் அம்சங்கள் உண்டு. அப்பொழுதுதான் அது பூர்த்தியாகும். வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும்.

மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம்.

சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.

அர்த்த நாரீஸ்வர உருவத்திலும் உமையை கருப்பாகவும் சிவனை சிவப்பாகவும் காட்டுவர். சங்கர நாராயண உருவத்திலும் சிவனை சிவப்பாகவும் விஷ்ணுவை கார்மேனி வண்ணனாகவும் காட்டுவர். இவை அனைத்திலும் உள்ள பொருள் ஒன்றுதான். ஆக்க சக்தி அழிவு சக்தி இரண்டும் நிறைந்ததே இயற்கை. சிவனின்றி சக்தி இல்லை; சக்தி இன்றி சிவனில்லை.என்ன அதிசயம் என்றால் கி.மு.1400 வாக்கில் கையெழுத்திடப்பட்ட துருக்கி-சிரியா (Mitanni Treaty) பகுதி ஒப்பந்தத்திலும் மித்ர-வருணர்கள் உள்ளனர். இதனால் வேதங்களை எவரும் கி.மு 1400-க்கும் முன்னர்தான் வைக்க முடியும். வியப்பான விஷயம் என்ன வென்றால் இன்றும் பிராமணர்கள் நாள்தோறும் செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த தெய்வத்தை வழிபடுகின்றனர்.

பாரசீக நாட்டிலிருந்து இதை பெற்ற ரோமானியர்கள் இதை ஒரு ரகசிய தெய்வமாக குகைகளில் வைத்து தவறான லீலைகளில் ஈடுபட துவங்கினர் பின்னர் புதிய கதைகளையும் உருவாக்கினர் ஐரோப்பா முழுதும் புதுப்புது மித்ரன் கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன ரோம் நகரில் மட்டுமே 700 மித்ரன் கோவில்கள்! இருக்கின்றன .

TO BE CONTINUED……………………….

TAGS- மித்ரன், மேக தூதம், மிலேச்சர், மாதங்க, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 68; இந்து மத கலைச்சொல் அகராதி-68, மேனகா

India’s Contribution to the World in Mathematics! (Post No.15,751)

Written by London Swaminathan

Post No. 15,751

Date uploaded in London –17 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Recently Organiser weekly magazine has quoted some lines from this film song in an article about mathematics. Then I listened to the song on You Tube. This is an echo of Bharatiyar’s songs. Almost all lines are in Bharatiyar poems. All Indian children must be taught it at school. When a song comes though films, it gets more attraction. Moreover, the video, audio and lyrics are available to all. Easily accessible, free of cost too!

Here is the Hindi and English version; don’t forget to listen to the song on You Tube.

Song- Hai preet jahan ki reet sada…..Bharat ka rahne waala hoon (Purab aur Paschhim) (1970) Singer-Mahendra Kapoor, Lyrics-Indeewar, MD-Kalyanji Anandji

Chorus

Lyrics

When my india gave zero

India my india

Then the world learned to count .

India taught the world the language of the stars first

F india has not given decimal, it was difficult to go to the moon like this

It was difficult to estimate the distance between the earth and the moon

Where civilization came first, where art was born first,

Our india is that india after which the world followed

The world went on and on , went on like this, kept on growing

God bless it grow more, keep on growing and flourish.

Where love is the tradition since always, I sing songs of there

I am a resident of India, I speak about India

Where love is the tradition

There is no difference between the black and white,

we have a relation with every heart

we don’t know anything else, we know how to live with love

what the whole world has accepted, I repeat the same thing

I am a resident of India

Someone might have won Someone’s country, we have won hearts

Where still ram is in the male,  goddess Sita still in the female

People are so pure  that I always bow my head

I am a resident of India

So much maternal love for even rivers, here they are called mother

So much respect for human beings, even stones are worshipped

I was born on this earth, I feel proud thinking about it

I am a resident of India.

***

Here is the Hindi Song from the film

Jab zero diya mere Bhaarat ne

Bhaarat ne mere Bhaarat ne

duniya ko tab ginti aayi

taaron ki bhaasha Bhaarat ne

duniya ko pehle sikhlaayi

deta na dashamlav Bhaarat to

Yoon chaand pe jaana mushkil thha

dharti aur Chaand ki doori ka

andaaza lagaana mushkil thha

Sabhyata jahaan pehle aayi

Sabhyata jahaan pehle aayi

pehle janmi hai jahaan pe kala

Apna Bhaarat wo Bhaarat hai

jiske peechhe sansaar chala

Sansaar chala aur aage badha

Yoon aage badha badhta hi gaya

Bhagwaan kare ye aur badhe

Badhta hi rahe aur phhoole phhale

Badhta hi rahe aur phhoole phhale

hmm hmm, hmm hmmm, ho ho ho ho ho ho ho ho

Hai preet jahan ki reet sada

hai preet jahaan ki reet sada aa aa

hai preet jahaan ki reet sada

main geet wahaan ke gaata hoon

Bhaarat ka rehne waala hoon

Bhaarat ki baat sunaata hoon

Hai preet jahaan ki reet sada

ho ho ho ho ho ho ho ho

kaale gore ka bhed nahin

har dil se hamaara naata hai

ae ae ae ae ae ae

kuchh aur na aata ho hamko

hamen pyaar nibhaana aata hai

ae ae ae ae ae ae ae

Jise maan chuki saari duniya

ho Jise maan chuki saari duniya

main baat

main baat wohi dohraata hoon

Bhaarat ka rehne waala hoon

Bhaarat ki baat sunaata hoon

hai preet jahaan ki reet sadaa

Jeete hon kisi ne desh to kya

hamne to dilon ko jeeta hai

ae ae ae ae ae ae ae

Jahaan Raam abhi tak hain nar mein

Nari mein abhi tak Seeta hai

ae ae ae ae ae ae ae

Itne paawan hain log jahan

ho itne paawan hain log jahan

main nit nit

main nit nit sheesh jhukaata hoon

Bhaarat ka rehne waala hoon

Bhaarat ki baat sunaata hoon

ho ho,ho ho,ho ho

itni mamta nadiyon ko bhi

jahaan maata kehke bulaate hain

aen aen aen aen aen

ho ho

Itna aadar insaan to kya

patthar bhi poojee jaate hain

aen aen aen aen

Uss dharti pe maine janam liya

ho Uss dharti pe maine janam liya

Ye soch

Ye soch ke main itraata hoon

Bhaarat ka rehne waala hoon

Bhaarat ki baat sunaata hoon

Hai preet jahaan ki reet sada

ho ho ho ho  ho ho ho ho ho ho ho ho

(Both English and Hindi versions are  taken from the websites;thanks)

–subham—

Tags- patriotic Hindi film song, India’s contribution, to the world , in mathematics , Hai preet jahan ki reet sada

சங்க காலத்தில் விலைமாதர்களும் விபச்சாரமும் (Post No.15,666)

Written by London Swaminathan

Post No. 15,666

Date uploaded in London –28 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(ENGLISH VERSION OF Prostitution in Ancient Tamil Nadu; Parattaiyar or public women in Narrinai (Post No.15,663) WAS POSTED YESTERDAY)

உலகில் விபச்சாரமும் விலை மகள்களும் இல்லாத எந்த சமுதாயமும் இல்லை; கலாசாரமும் இல்லை ; எல்லா மத நூல்களிலும் இது குறித்த எச்சரிக்கைகள் உள்ளன . எனினும் சங்கத் தமிழ் பாடல்களிலும் அருணகிரிநாதர் யாத்த திருப்புகழ் பாடல்களிலும் இது சற்று தூக்கலாகக் காணப்படுகிறது . இதனால் இது குறித்து தமிழ் அறிஞர்கள் கதைக்கவே பயப்படுகிறார்கள் ; கே கே பிள்ளை எழுதிய ஆங்கில நூலில் நற்றிணையில் உள்ள விலைமாதர்கள் பாடல்களை எழுதி இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்கிறார் . எங்கள் குடும்ப நண்பரும் மதுரை வடக்கு மாசிவீதியில் எங்கள் வீட்டுக்கு அடுத்து வசித்தவரும் கம்பனும் மில்டனும் எழுதி டாக்டர் பட்டம் பெற்றவருமான டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன் (எஸ் ஆர் கே ) இது குறித்து மிக அருமையான விளக்கம் கொடுத்துள்ளார் :

“அகத்தினை இலக்கியம் உலக இயல் வாழ்வின் படப்பிடிப்பு இல்லை என்பதை இன்னும் ஒரு வகையிலும் ஊகிக்கலாம். சங்க காலத்தில் பரத்தையர் இருந்தனர் என்பதும் , மேல்வருக்க இளைஞர் பலர் பரத்தையர்களை நாடி இழிவுற்றனர் என்பதும் மதுரைக் காஞ்சிசிலப்பதிகாரம் முதலியவற்றால்  விளங்குவது மெய்யே . ஆனால் பரத்தைமை என்பது சிறுபான்மையோரைப் பிடித்த நோயே. மக்கட் தொகையுடன் ஒப்பிடும்போது விலைமகளிர் சிலரே . அவர்களும் பெரும்பாலும் புகார், மதுரை முதலிய பெரு நகரங்களிலே வாழ்ந்தனர் . ஆனால் அகத்திணை இலக்கியத் தலைவர்கள் மனைவியரை நீங்கி பரத்தையரை நாடிச் செல்வோராகக் காட்சி தருகின்றனர் . 966 கற்பியர் பாக்களில் 279 பரத்தையர் பிரிவுக்குரியனவாக உள்ளன. இது உண்மை வாழ்வின் வெளியீடு எனில் , குல மகளிர் பாதி, விலை மகளிர் பாதியாகப் பெண்குலம் அமைந்திருந்தது என்று தோன்றும். அத்தகைய இழிநிலை சமுதாயத்துக்கு ஒருபோதும் வாய்க்கவில்லை என்பது வெளிப்படை . எனவே அகத்திணை கற்பனையை சமுதாய வாழ்வின் சித்திரமாகக் கொள்வது பிழையே “.

— இந்தியப்  பண்பாடும் தமிழரும் – எஸ் இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை , 1971

தொல்காப்பியரும் திருவள்ளுவரும் கூட இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தமிழர்களை எச்சரிக்கின்றனர் .

***

இனி நற்றிணையில் வரும் பாடல்களில் விலைமகளிர் பற்றி வரும் இடங்களைக் காண்போம்.

எல்லாப் பாடல்களும் மருதத் திணையில் உள்ளவை  ;  அந்த திணையில் இப்படிப்படுவது ஒரு மரபு; ஒரு பாணி ; அதிலும் குறிப்பாக பரணர் பாடல்கள் மிகுந்திருப்பதையும் கவனிக்க வேண்டும் . இவை தவிர ஒரே ஆணுக்குப் பல விலைமாதர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவனை இழுத்த விஷயமும் , விபச்சகாரிகளிடையே ஆட்களை பிடிக்க நடந்த சண்டைகளும் ஒரு விலைமாதர் சேரி க்குள்  வேறு ஒருவள் வாடிக்கையாளரைப் பிடிக்க வந்த போது விரட்டிய செய்திகளும் ஏனைய அகப்பாடல்களில் கிடைக்கின்றன

***

நற்றிணை 30 ஒரே ஆண்மகனைச் சுற்றி பல விலைமாதர்கள் இழுபறி

கடலில் செல்லும் பாய்மரக் கப்பல் கவிழ்ந்ததால் மனம் கலங்கி, அதிலிருந்த ஒரே ஒரு மிதக்கும் பலகையைப் பலர் அவரவர் பக்கம் இழுப்பது போல உன்னை பரத்தையர் பலர் அவரவர் அணைப்புக்கு இழுத்துத் துன்புறுவதைப் பார்த்தேன்.

30. மருதம்

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், ”யாரையும் அறியேன்” என்றாற்குத் தோழி சொல்லியது.கொற்றனார் பாடல்

கண்டனென் மகிழ்ந! கண்டு எவன்செய்கோ?

பாணன் கையது பண்புடைச் சீறியாழ்

யாணர் வண்டின் இம்மென இமிரும்,

ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின்

மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்  5

கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி

கால் ஏமுற்ற பைதரு காலை,

கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு,

பலர் கொள் பலகை போல

வாங்க வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே.      

***

நற்றிணை Natrinai 100

பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச் சொல்லியது. பரணர் பாடல்.

பரத்தை சொல்கிறாள்: அவன் என் கூந்தலையும் கையையும் பிடித்து இழுத்தான். உன் மனைவியிடம் சொல்லிவிடுவேன் என்றேன். அவன் நடுங்கிப் போனான். அதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது.

பாடல் 100. மருதம்

உள்ளுதொறும் நகுவேன் தோழி! வள்உகிர்

மாரிக் கொக்கின் கூரல் அன்ன

குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்

தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்

வான் கோல் எல் வளை வௌவிய பூசல்   5

சினவிய முகத்து, ”சினவாது சென்று, நின்

மனையோட்கு உரைப்பல்” என்றலின், முனை ஊர்ப்

பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்

தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்

புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்    10

மண் ஆர் கண்ணின் அதிரும்,

நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.

***

நற்றிணை 20 பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன், ”யாரையும் அறியேன்” என்றாற்குத் தலைவி சொல்லியதுஓரம்போகியார் பாடல்.

மனைவி சொல்கிறாள் ,“ஐய, நீயா ஒன்றும் தெரியாதவர்?

அவளா ஒன்றும் தெரியாத மடந்தை? அவளை நான் என் கண்ணால் பார்த்தேனே.உன்னுடைய மார்பிலே அவள் படுத்துக்கிடந்தாள். அதனால் உன்னுடைய பூ மாலையின் மணம் அவள் கூந்தலில் கமழ்ந்தது.

அந்தக் கூந்தலை அவள் உலர்த்திக்கொண்டு ஆடையையும் ஆட்டிக்கொண்டு ,.வளையல் ஓசை கேட்கும்படி கையை வீசிக்கொண்டு தெருவில் நடந்துவந்தாள். கண்களை விரித்து அங்குமிங்கும் (உன்னைத்) தேடிக்கொண்டு வந்தாள்.

ஆமாம். அவள் உன்னைத் தழுவவே இல்லை?  (தழுவியவள் என்னும் ஏளனக் குறிப்பு).

மருதம்

ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,

மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்

தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்

துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,

செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகில்,     5

பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,

சென்றனள் வாழிய, மடந்தை! நுண் பல்

சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்;

மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை,

பழம் பிணி வைகிய தோள் இணைக்    10

குழைந்த கோதை, கொடி முயங்கலளே.

***

நற்றிணை 380 Natrinai 380பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.;கூடலூர்ப் பல்கண்ணனார் பாடல்

பரத்தை வீட்டிலிருந்து மீளும் தலைவன் ,தன் வீட்டிற்குள் நுழைய முனைகிறான். பாணன் அவனுக்கு ஆதரவாகப் பேசுகிறான் அப்போது தோழி சொல்கிறாள்  “பயன் இல்லாத சொற்களைப் பேச வேண்டாம். சமையல் செய்த எண்ணெய் (தாளிக்கும்போது சிதறிய) பட்டு என் தலைவியின் ஆடை அழுக்காக உள்ளது. பால்

பருகும் குழந்தையின் வாயும் பட்டு,  நாற்றம் வீசுகிறது. தேரில் சென்று சிறந்த அணிகலன்களுடன் சேரியில் பகட்டும் மகளிருடன் வாழும் உன் தலைவனுக்கு என் தலைவி தகுந்தவள் இல்லை. அவனைக் கூட்டிக்கொண்டு ஒடி விடு” .

திணை மருதம்

நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு

மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும்,

திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற,

புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;

வால் இழை மகளிர் சேரித் தோன்றும்     5

தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்

பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்

எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்;

கொண்டு செல் பாண! நின் தண் துறை ஊரனை,

பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப்  10

புரவியும் பூண் நிலை முனிகுவ;

விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே!

***

உன்னைத் தொட்டால் எச்சில்கலையைத் தொட்டதற்குச் சமம்இங்கிருந்து ஒடு

நற்றிணை 350 Natrinai 350தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது.பரணர் பாடல்

நீ என்னை அணைக்காமையால் என் நலம் தொலையும்.

அப்படித் தொலைந்தாலும் தொலைந்துவிட்டுப் போகட்டும்.

நீ என்னை நெருங்க விடமாட்டேன். அப்படி உன்னை என்னிடம் நெருங்க விட்டால்,  என் கை என்னை அறியாமல் உன்னைத் தழுவிவிடும். அதனைத் தடுக்கும் வலிமை எனக்கு இல்லை.

உன் மார்போ, பரத்தை முலையைத் தழுவிய சந்தனத்தையும்,

தழுவியதால் வாடிய மாலையையும் உடையது. அது

பரத்தை உணவு உண்ட எச்சில் வட்டி போன்றது. என்னிடம் வராதே.

அவளைத் தழுவிய தோளுடன் என்னிடம் வராதே.

திணை மருதம்

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,

பழனப் பல் புள் இரிய, கழனி

வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்

தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்

தொல் கவின் தொலையினும் தொலைக! சார   5

விடேஎன்: விடுக்குவென் ஆயின், கடைஇக்

கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை

சாடிய சாந்தினை; வாடிய கோதையை;

ஆசு இல் கலம் தழீஇயற்று;

வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே!              

***

பக்கத்தில் வராதேபோபோ !

நற்றிணை Natrinai 260 ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.பரணர் பாடல்

என்னை விரும்புபவன் போல நடித்துக்கொண்டு என்னை அணைத்துக்கொண்டு உறங்கும் பகைவன் நீ.

நான் உன் பழைய செயலை மறக்கமாட்டேன்;

அரசன் வயவன், பகைவர்களைப் போர்முனையில் அழித்தவன்.

அவன் தலைநகரம் இரும்பை. அது நீர்வளம் மிக்க ஊர்.

அந்த ஊர் போலத் தழைத்த என் கூந்தலில் சூடிய பூக்களை வாடச்செய்த பகைவன் நீ. அதனை நான் மறக்கமாட்டேன்.

இவ்வாறு பரத்தையிடம் சென்று வந்த தலைவனிடம் தலைவி கூறுகிறாள்.     

திணை மருதம்

கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை

பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,

தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது

குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர!

வெய்யை போல முயங்குதி: முனை எழத் 5

தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன்

மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என்

ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த

முகை அவிழ் கோதை வாட்டிய

பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே!                               

***

நற்றிணை Natrinai 225 பரத்தை தலைமகள் கேட்கும்படி சொல்லியது;  கபிலர் பாடல்

முருகக் கடவுள் போன்ற வலிமையோடு தன் சினத்தால் போரிட்ட யானையின் வெள்ளைக் கொம்பு கரை படிந்து சிவப்பாக காணப்படுவது போலவும், வாழைப்பூ மொட்டு போலவும், மகளிரின் ஓதிக் கொண்டை போலவும், தோன்றும் முலை உடையவர் யாரேனும் ஆசைதீரத் தழுவியவர் உண்டோ,  தோழி! என்னிடம் அன்பு இல்லாதவனாக அவன் இருக்கிறானே, என்று காமக்கிழத்தி தன் தோழியிடம் கலங்கிக் கூறுகிறாள்.

திணை குறிஞ்சி

முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்

பொருத யானை வெண் கோடு கடுப்ப,

வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,

மெல் இயல் மகளிர் ஓதி அன்ன

பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை     5

இரந்தோர் உளர்கொல் தோழி! திருந்து இழைத்

தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்

பயந்து எழு பருவரல் தீர,

நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?

வன்புறை எதிர் அழிந்தது;

***

நற்றிணை 320 Natrinai 320 தெருவில் பொது மகளிர் நடமாட்டம்;  குடும்ப்பப்பெண்கள் அச்சம்

பரத்தையின் காதில் விழும்படி  சொல்லியது. கபிலர் பாடல்

துணங்கை விழா முற்றுப்பெற்றது. விழாவில் முழக்கிய முழவு மாட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது. என்ன நோக்கத்தோடு இவள் தன்னை அழகு படுத்திக்கொள்கிறாள், என்று கேட்கிறாயா?  (தலைவனுக்குத் தோழி சொல்கிறாள்)

தழை அணிந்த அல்குலை உடைய ஒருத்தி (பரத்தை)

தெருவில் நடந்து சென்றாள். அதற்காக, ஊரில் உள்ள மகளிர் அனைவரும் தன் கணவனுக்கு வைத்திருக்கும் காவலை

அதிகப்படுத்தினர். அவர்கள் நல்ல அழகிகள் தான் என்றாலும் தம் கணவன்மாரின் கவனம் தம்மிடம் திரும்புமாறு தம்மை அழகுபடுத்திக் கொள்கின்றனர்.

காரி அரசன் ஓரி அரசனைக் கொன்றுவிட்டு

தன் பகையாளி ஓரி நகரில் நடந்துசென்றபோது

ஊரே ‘கல்’ என்று ஆள் நடமாட்டம் இல்லாமல் கிடந்தது போல்

இந்த ஊரின் நிலைமை ஆயிற்று.

திணை மருதம்

”விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;

எவன் குறித்தனள்கொல்?” என்றி ஆயின்

தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,

இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்

ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில்,                5

காரி புக்க நேரார் புலம்போல்,

கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,

காவல் செறிய மாட்டி, ஆய்தொடி

எழில் மா மேனி மகளிர்

விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே.   

***

நற்றிணை 340 Natrinai 340 பரத்தை வீட்டிலிருந்து திரும்பிய  தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.நக்கீரர் பாடல்

மகிழ்ந! நீ உன் உடலுறவுக்காரி வீட்டிலிருந்து வந்துள்ளாய்.

அதனால் உன்னை நான் தழுவமாட்டேன். அதற்காக உன்னை நான் சினந்துகொள்ளவும் மாட்டேன். செழியன் ஊர் போல் வளமுடன் திகழ்பவள் நான். என் வளையல்களைக் கழலச் செய்தவன் நீ  .என்னைப் பிரிந்து உன் பரத்தையோடு வாழுங்காலத்து என் வளையல்கள் உன்னை நினைந்து கழன்றன.அப்படிப்பட்ட உன்மீது சினம் கொள்வேனா? மனைவி தன் கணவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.

திணை மருதம்

புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்

கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்

படை மாண் பெருங்குள மடை நீர் விட்டென,

கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை

அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி,        5

பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,

செஞ் சால் உழவர் கோல் புடை மதரி,

பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்

வாணன் சிறுகுடி அன்ன, என்

கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே!     

***

போ போ நீ யார்கிட்ட வேணுமானாலும் போ !

நற்றிணை 360 Natrinai 360

விழாவில்,  விறலிப் பெண்பாவை ஆடுவாள். அவள் போன்ற ஒருத்தியை, நேற்று இழுத்துப் புணர்ந்து  அவளது புத்தழகைத் துய்த்தாய். இன்று  இன்பம் தரும் மெல்லிய தோள் கொண்ட மகளிரைப் பெறுவதற்காகச் சென்றுகொண்டிருக்கிறாய். பெருமானே!

உன் பரத்தைமை சிறக்கட்டும்.

அங்குசத்தால் குத்தி யானைக் குருதியைப் பலக்குவோர் சோறு கொடுத்தால் அது அதைத் திண்ணாமல் வாரி இறைக்கும்; அந்தச் சோற்றுக் கவளம் பயனற்றுப் போவது கண்டு பாகர் வருந்துவது போல, நீ சில பெண்களுக்கு கொடுத்த  செல்வம் பயன் இல்லாமல் போவது கண்டு நீ வருந்துகிறாய். அது எனக்கு மகிழ்வாக இருக்கிறது.இந்த இல்லத்தில் இன்பத்தை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.இப்போது நீ விரும்பியவளிடம் செல். உன் பரத்தமை வாழ்க.

(தலைவி சொல்வது போலத்

தோழி தலைவனிடம் சொல்கிறாள்.)

திணை மருதம்

முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய

விழவு ஒழி களத்த பாவை போல,

நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வௌவி,

இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்,

சென்றீ பெரும! சிறக்க, நின் பரத்தை!               5

பல்லோர் பழித்தல் நாணி, வல்லே

காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப,

கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும்

முனியுடைக் கவளம் போல, நனி பெரிது

உற்ற நின் விழுமம் உவப்பென்;               10

மற்றும் கூடும், மனை மடி துயிலே.

பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப்பறிந்து, வாயில் மறுத்தது; ஓரம்போகியார் பாடல்

***

பொது மகளிர் பற்றித் திருக்குறள்

வரைவின் மகளிர்

அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.1

கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனியசொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.2

பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவுதல், இருட்டறையில், தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.3

பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்தமாட்டார்.4

இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.5

அழகு முதலியவற்றால் செருக்குக்கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை, தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.6

நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறு பொருள்களை விரும்பிக் கூடும் பொதுமகளிரின் தோளைப் பொருந்துவர்.7

வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவர்க்கு அணங்கு தாக்கு (மோகினி மயக்கு) என்று கூறுவர்.8

ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.9

இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரும் கள்ளும் சூதுமாகிய இம் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.10

–subham—

Tags-

சங்க காலத்தில், விலைமாதர்களும் விபச்சாரமும் , பொது மகளிர் , நற்றிணைப் பாடல்கள் , உண்மை நிலை என்ன? பொது மகளிர் பற்றித் திருக்குறள்